பசு ஹிந்துக்களுக்கு தெய்வம்(Post No.5420)

Written by S NAGARAJAN

Date: 12 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 8-08 AM (British Summer Time)

 

Post No. 5420

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பசு ஹிந்துக்களுக்கு தெய்வம்; அதை வதை செய்யாதே!

 

ச.நாகராஜன்

 

பசு ஹிந்துக்களுக்கு வெறும் மிருகம் அல்ல; அது தெய்வம்.

ஆகவே தான் அதை வதை செய்யக்கூடாது என்கின்றனர் ஹிந்துக்கள்.

பசுவின் பெருமையையும் முக்கியத்துவத்தையும் பொருளாதார ரீதியாக வல்லுநர்கள் சொல்லுவது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, தார்மீக ரீதியாக நமது இதிஹாஸ புராணங்கள் பசுவின் மேன்மையைப் பற்றிக் கூறுவதை நாம் முதலில் ஏற்கிறோம்.

பத்ம புராணத்தில் பாதாள காண்டத்தில் 18 மற்றும் 19 அத்தியாயங்களில் வரும் ஒரு சம்பவம் பசுவின் பெருமையைக் கூறுகிறது.

ஜனக மஹாராஜா தனது புவி வாழ்வை விட்ட உடனேயே, அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தேவர்களுடன் கூடிய ஒரு அழகிய விமானம் வந்தது.

அதில் ஏறிச் சென்ற ஜனகர் சொர்க்கத்திற்குச் செல்லும் வழியில் யமபுரியைக் கடக்க நேர்ந்தது.

அது யமபுரியைக் கடக்கும் போது தீனமான குரல் ஒன்று எழுந்தது.”ஓ ! ஜனக மன்னரே! தர்மவானே! இந்த இடத்தை விட்டுப் போகாதீர்கள். உங்கள் உடலைத் தொட்டுச் செல்லும் காற்று இந்தப் பக்கம் வீசும் போது எங்களது துன்பத்தை அது வெகுவாகக் குறைக்கிறது.”

இந்தக் குரலைக் கேட்ட ஜனகமன்னர் உடனே, “ஓ, அப்படியானால் நான் இங்கேயே இருக்கிறேன்” என்றார்.

அவரது இந்த முடிவைக் கேட்ட யமதர்ம ராஜன், “மன்னரே! இங்கு இருக்க வேண்டாம்.இது பாவிகள் இருக்கும் இடம். நாம் மேலே செல்வோம்” என்றான்.

ஆனால் ஜனகரோ, “ முதலில் இந்த துன்பத்திலிருந்து இவர்களை மீட்போம். அப்புறம் தான் என்னால் நிம்மதியாக சொர்க்கத்திற்குச்  செல்ல முடியும்” என்றார்.

உடனே யமதர்மன், “ மன்னரே! இவர்கள் அனைவரும் பொய்யர்கள். கொள்ளையடித்தவர்கள். கற்பழித்தவர்கள். இவர்களை நிச்சயமாக நீங்கள் மீட்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் மர்யாதா புருஷோத்தமனான ராமனின் ராம நாமத்தை உச்சரித்ததால் கிடைத்த புண்ணியத்தை இவர்களுக்குத் தாருங்கள்” என்றான்.

உடனடியாக தனது புண்ய பலனை ஜனக மன்னர் அவர்களுக்கு அளித்தார். அவர்கள் துன்பம் தீர்ந்தது.

இப்போது ஜனகருக்கு ஒரு சந்தேகம் உதித்தது.

அவர் யமனை நோக்கி  தான் ஏன் இந்த நரகத்தின் அருகில் வந்து இந்தக் குரலைக் கேட்க நேர்ந்தது என்று கேட்டார்.

அதற்கு யமன், “ ஜனகரே! ஒரு சமயம் ஒரு பசு புல்லை மேய்ந்து கொண்டிருந்த சமயம் அதை நீங்கள் தடுத்து விட்டீர்கள். இந்தச் செயல் தான் உங்களை நரகத்தைப் பார்க்கச் செய்து விட்டது” என்று பதில் கூறினான்.

பசு எவ்வளவு புனிதமானது என்பதை உணர்த்த பத்ம புராணம் இந்தச் சம்பவத்தை இப்படி விளக்குகிறது.

*

மஹாபாரதத்தில் ஒரு சம்பவம்.

திரௌபதி தனது ஐந்து கணவர்களில் ஒருவர் வீட்டில் வசிக்கும் போது மற்ற நால்வரும் அந்த வீட்டிற்குள் நுழைவது தடுக்கப்பட்டிருந்தது.

இந்த விதியை யாரேனும் ஒருவர் மீறி விட்டால் அவர் 12 வருடம் வனவாசம் செய்ய வேண்டும் என்பதும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஒருமுறை திரௌபதி தர்மரின் இல்லத்தில் இருந்தாள். அப்போது ஒரு பிராமணன் அர்ஜுனனிடம் வந்து தனது பசுவை திருடர்கள் திருடிச் செல்வதாகச் சொல்லி அதைக் காக்க வேண்டும் என்று வேண்டினான்.

உடனே பிராமணனின் பசுவை எப்படியேனும் காக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தர்மபுத்திரரின் இல்லத்தில் இருந்த தனது காண்டீவத்தை எடுக்க அர்ஜுனன் அங்கு நுழைந்தான்.

பசு காப்பாற்றப்ப்பட்டது.

 

 

ஆனால் விதியை மீறிய செயலுக்காக அர்ஜுனன் 12 வருடம் வனவாசம் மேற்கொள்ள வேண்டி வந்தது.

ஆனாலும் கூட இந்த 12 வருடங்களில் அர்ஜுனன் பெறுதற்கரிய பல அஸ்திரங்களையும் பேரறிவையும் பெற்றான்.

பசுவைக் காத்த தர்மம் அவனைப் பின் தொடர்ந்தது.

இந்த அஸ்திரங்களின் உதவியாலேயே குருக்ஷேத்திரத்தில் கௌரவர்களை பாண்டவர்கள் வெல்ல  முடிந்தது.

பசு தெய்வம். அதைக் காப்பது ஹிந்துக்களின் கடமை.

அதை வதை செய்வதைத் தடுப்பது நமது கடமையே!

***

Mark Twain, Coleridge, Boswell, Dr Johnson Books Anecdotes (Post No.5419)

 

Mark Twain, Coleridge, Boswell, Dr Johnson Books Anecdotes (Post No.5419)

 

Compiled by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 11 September 2018

 

Time uploaded in London – 18-28  (British Summer Time)

 

Post No. 5419

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

     
Mark Twain Startled!

 

It was an English man, met somewhere in Europe, who startled Mark Twain by saying abruptly, Mr Clemens, I would give ten pounds not to have read your Huckleberry Finn! And when Mark looked up awaiting an explanation of this extraordinary remark, the English man smiled and added
“So that I could have again the great pleasure of reading it for the first time.”

Xxx

‘Life of Johnson’ Book!

Sir John Malcolm once asked Warren Hastings, who was a contemporary and a companion of DrJohnson and Boswell, what was his real estimation of Boswell’s Life of Johnson?

Sir, replied Hastings, ‘it is the dirtiest book in my library’.
Then proceeding he added,
‘’I knew Boswell intimately; and I well remember when his book made its first appearance. Boswell was full of it that he could neither think nor talk of anything else; so much so, that meeting Lord Thurlow hurrying through parliament street to get to the House of Lords, where an important debate was expected, for which he was already too late, Boswell has the temerity to stop and accost him with,
‘Have you read my book?’
‘Yes, damn you! replied Lord Thurlow, ‘every word of it; I could not help myself’.

Xxx

‘Thief’ Coleridge

Coleridge was always a tremendous reader. While he was a student at Christ’s Hospital he used to spend his free time wandering aimlessly about London, shivering in front of the window s of book shops and print shops. Once, while so standing, he got, in his own words, ‘absent mindedly involved with the coat tail pocket of a stranger, who at first took him for a thief, then was so charmed by his conversation that he made him free of a library’ in Cheapside . Thenceforth he would run all risks in skulking out to get the two volumes to which he was entitled daily.

Xxx

 

Rousseau

When Dr Johnson was told that Rousseau’s ‘Confessions’ would contain every motive that had induced him to act in every situation— ‘Then’, replied he, ‘if he was an honest man, his book will not be worth a farthing’.

Xxx Subham xxx

பாரதியாரும் ஆதி சங்கரரும்! (Post No.5418)

WRITTEN by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 11 September 2018

 

Time uploaded in London – 8-15 am (British Summer Time)

 

Post No. 5418

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பாரதி ‘தேச விடுதலை’க்குப் போரடினார். ஆதி சங்கரரோ மனிதர்களின் மோட்சம், முக்தி எனப்படும் ‘ஆன்ம விடுதலை’க்குப் போரடினார். ஆதி சங்கரரின் விவேக சூடாமணி ஒரு அற்புதமான கவிதை நூல். பாரதியாரோ 300 க்கும் மேலான கவிதைகளைப் பாடிய பெருங் கவிஞன்.

இருவர் பாட்டிலும் ‘விடுதலை’ பற்றிய பாடல்களில் ஒரே சிந்தனை ஓட்டமும், ஒருமித்த உவமைகளும் இருப்பது, கற்றோருக்கு இன்பம் தரும்.

 

முதலில் பாரதியாரின் வீர சுதந்திரம் வேண்டி நின்றார் கவிதையை ஒப்பிட்டு ஆராய்வோம்.

 

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்

 

வேறொன்று கொள்வாரோ? – என்றும்

 

ஆரமுது உண்ண ஆசை கொண்டார் கள்ளில்

 

அறிவைச் செலுத்துவாரோ? (பாரதியார்)

 

மானுட ஜன்மம் பற்றி பாரதியார் சொல்லும் கருத்து ஆதி சங்கரரும் போற்றிய கருத்து. ‘அரிது, அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது’- என்பது அவ்வையின் வாக்கு.

 

இதோ ஆதி சங்கரரின் விவேக சூடாமணியின் இரண்டாவது ஸ்லோகம்:-

 

‘ஜந்தூனாம் நரஜன்ம துர்லபதஹ’. மனிதனாய் பிறப்பது அரிது என்கிறார்.

மானுட ஜன்மம் பெறுவதற்கு அரிது’– என்பது இந்தப் பாட்டில் பாரதியின் வரிகள்

XXX

சூரியனை விட்டு விட்டு எவரும் மின்மினிப் பூச்சியை நாடுவரோ என்பது பாரதியின் வாக்கு. ஆதி சங்கரர் சொல்வார்,

சூரியனும் மின்மினியும் போல, அரசனும் சேவகனும் போல, கிணற்று நீரும் கடல் நீரும் போல என்று முரண்பாடுகள் உள்ளன (241).

 

இந்த ஸ்லோகத்திலும்  பாரதி- சங்கரர் ஒரே அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதைப் பார்க்கிறோம்.

XXXX

கண்கள் இரண்டையும் விற்றுவிட்டுச் சித்திரப் படம் வாங்கினால் சிரிக்க மாட்டார்களா என்பது பாரதியின் கேள்வி.

 

நிலவொளி பிரகாஸிக்கும்போது, சித்திரத்திலெழுதிய நிலவை எந்த புத்திசாலியாவது நாடுவானா என்கிறார் சங்கரர் (522)

 

XXXX

 

பொய்மை எனும் பாம்பு கடித்தவகுக்கு ஒரே மருந்து, பிரம்ம ஞானமே என்பது சங்கரரின் வாதம் (ஸ்லோகம் 61)

 

பாரதி ஒரு பாட்டில் பாடுகிறார்,

‘பயமென்னும் பேய்தனை யடித்தோம்- பொய்மைப்

பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்

வியனுலகனைத்தையும் அமுதென நுகரும்

வேத வாழ்வினைக் கடைப் பிடித்தோம்

 

-என்று ஜயபேரிகை கொட்டுகிறார்.

 

இங்கு இருவர் படியதும் பிரம்ம ஞானம், மாயப் பாம்பு பற்றியே.

XXXX

 

குருவின் பெருமையைப் போற்றும் சங்கர்,

குருவின் சொற்களைக் கேட்ட சீடன் எல்லா பந்தங்களிலிருந்தும் விடுபட்டுச் சென்றான்; குரு என்பவர் சதானந்தத்தில் திளைத்து உலகையே  தூய்மையாக்குகிறார். அப்போது வேறுபாடுகள் மறையும்; இப்படிப்பட்ட ஆசார்ய- சிஷ்ய ஸம்வாதம் ஐயங்களுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் என்று மூன்று ஸ்லோகங்களில் பாடுகிறார் (576-578)

 

பாரதியும் சுயசரிதையில்,

‘ஞானகுரு தேசிகனைப் போற்றுகின்றேன்

நாடனைத்துந்தானாவான் நலிவிலாதான்

மோனகுரு திருவருளால் பிறப்புமாறி

முற்றிலும் நாம் அமரநிலை சூழ்ந்துவிட்டோம்’

 

என்று ஆனந்தக் கூத்தாடுகிறான்.

 

சங்கரர் தனது 580 ஸ்லோகங்களில் பலமுறை சொல்லும் தத்வமஸி (நீயே அது/கடவுள்) என்ற உபநிஷத வாக்கியத்தையும் பாரதி பாடுகிறான்.

‘சாமி நீ சாமி நீ கடவுள் நீயே

தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம்’ என்று பாடுகிறான்.

XXXX

 

ஆதிசங்கரர் போன்றோர் ஞானம் எனும் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட போதும் பக்தி மார்க்கம் மூலமே கடவுளை அடைய முடியும் என்பதற்காக விவேக சூடாமணி, சௌந்தர்ய லஹரி, பஜ கோவிந்தம் போல 120க்-கும் மேலான துதிகளைப் பாடி வைத்தார். பாரதியும் பக்தியின் பெருமைதனைப் பாடுவான்,

 

பக்தியினாலே, தெய்வ பக்தியினாலே

 

பக்தியினாலே – இந்தப்

பாரிலெய்திடும் மேன்மைகள் கேளடீ

சித்தந்தெளியும்- இங்கு

செய்கையனைத்திலும் செம்மை பிறந்திடும்

வித்தைகள் சேரும்-நல்ல

வீரருறவு கிடைக்கும், மனத்திடைத்

தத்துவமுண்டாம், நெஞ்சிற்

சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்

 

ஆசையைக்கொல்வோம்- புலை

அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட பாசமறுப்போம்……

என்று நீண்டதொருபாடலைப் பாடுகிறார்.

XXXX

எண்ணிய முடிதல் வேண்டும் என்ற பாட்டில், பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போல, நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்’- என்கிறார்.

 

இதே உவமையை ஆதி சங்கரர்,

சூரியனைக் கண்ட இருள் விலகுவது போல, ஞானம் எய்தியவுடன் எல்லாம் பிரம்மத்தில் கரைந்து விடும் என்பார் (ஸ்லோகம் 564). அதாவது எல்லாம் ஒன்றே என்ற உணர்வு பிறக்கும்.

XXX

பாரதியின் வேதாந்தப் பாடல்கள் அனைத்திலும் சங்கரரின் அத்வைதக் கருத்துகளைக் காணலாம். பாரதப் புதல்வர்களின்- தவ சீலர்களின்- கருத்து ஒன்றே என்பதற்கு இது எடுத்துக் காட்டு.

 

வாழ்க பாரதி- வளர்க அத்வைதம்

 

–SUBHAM-

 

 

 

பாதிரிகளின் சூழ்ச்சியும் விவேகானந்தரின் வெற்றியும்! (Post No.5417)

WRITTEN BY S NAGARAJAN

Date: 11 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-24 AM (British Summer Time)

 

Post No. 5417

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

சிறப்புக் கட்டுரை

செப்டம்பர் 11. விவேகானந்தர் தனது உரையால் அமெரிக்காவை வெற்றி கொண்ட நன்னாள்!

 

பாதிரிகளின் சூழ்ச்சியும் விவேகானந்தரின் வெற்றியும்!

 

ச.நாகராஜன்

 

1

செப்டம்பர் 11. இன்று (11-9-2018) ஸ்வாமி விவேகானந்தர் சிகாகோவில் சர்வமத மகாசபையில் வெற்றிகரமான உரையாற்றிய 125 ஆண்டு விழா நாளாகும்.

அந்த மகத்தான வெற்றி ஹிந்து மதத்தின் வெற்றி. கூடியிருந்த அவையினர் அனைவரும் ஸ்வாமிஜி உரை முடித்தவுடன் இரு நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அன்றிலிருந்து தொடங்கி அவரது பெயர் அமெரிக்கா முழுவதும் பிரபலமானது.

ஸ்வாமிஜியை இறுதிப் பேச்சாளராக அறிவிக்கும் பழக்கமும் ஏற்பட்டது. ஏனெனில் அவரது பேச்சைக் கேட்க விரும்பி வரும் மக்கள் அதுவரை காத்திருப்பர் என்பதால் தான்.

 

2

மன்மத நாத் கங்குலி என்பவர் ஸ்வாமிஜியின் பால் அத்யந்த பக்தி கொண்டவர். அவர் தனது நினைவலைகளைப் பின்னால் பகிர்ந்து கொண்டார்.அவரது அனுபவங்கள் வேதாந்த கேசரி இதழில் 1960ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாத இதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு சுவாரசியமான சம்பவம் இது.

கங்குலி 1897ஆம் ஆண்டு ஸ்வாமிஜியை கல்கத்தாவில் தரிசித்தார்.பின்னர் அடுத்த முறை டிசம்பர் கடைசி வாரத்தில் சந்தித்தார்.

ஸ்வாமிஜியைக் கண்டவுடன் கங்குலி விரைந்து சென்று அவர் பாதங்களைக் கையால் தொட்டு வணங்கினார். அருகில் இருந்த ஒரு சிறு கூடாரத்தின் பக்கத்தில் ஒரு  டீ மேஜை இருந்தது. உட்காருவதற்கு சில ஸ்டூல்களும் இருந்தன. ஸ்வாமிஜி பிரம்மானந்தரிடம் கங்குலி அருந்துவதற்கு டீ கொண்டு வருமாறு கூறினார். டீயும் பிரசாதமும் வந்து சேர ஸ்வாமிஜி தனது சம்பாஷணையைத் துவக்கினார்.

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி ஸ்வாமிஜி தன் நினைவுகளைச் சொல்லலானார்.

அவரது வார்த்தைகளிலேயே அதைப் பார்ப்போம்:

 

“சிகாகோவில் ஹிந்து மதம் தான் உலகிலேயே மிகப் பெரிய மதம் என்பது நிரூபிக்கப்பட்டது. இதைப் பாதிரிகளால் பொறுக்க முடியவில்லை. அவர்கள் கோபத்தால் கொதித்தனர். பிரான்ஸில் இன்னொரு சர்வமத மகாசபையைக் கூட்ட அவர்கள் விரும்பினர். பாரிஸில் அதை நடத்த எண்ணிய அவர்கள் அதில் பேசும் அனைவரும் பிரெஞ்சு மொழியிலேயே பேசுவதைக் கட்டாயமாக்கலாம் என முடிவு செய்தனர். அப்போது எனக்கு பிரெஞ்சு மொழி தெரியாது. அதனால் என்னை அந்த சர்வமத மாநாட்டில் கலந்து கொள்ளாமல் செய்து விட முடியும் என்று அவர்கள் எண்ணினர். ஆனால் நான் பிரான்ஸுக்கு சென்று பிரெஞ்சு மொழியை ஆறு மாதங்களில் நன்றாகக் கற்றுக் கொண்டு விட்டேன். பிரெஞ்சு மொழியிலேயே பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினேன். இதைப் பார்த்த மிஷனரிகள் தங்கள் உற்சாகத்தை இழந்தனர். இன்னொரு மாநாட்டை நடத்துவது என்ற அவர்களது எண்ணமே கிடப்பில் போடப்பட்டது.”

ஸ்வாமிஜியை புறந்தள்ளி ஓரங்கட்ட நினைத்த பாதிரிகளின் சூழ்ச்சியை மிக சுலபமாக அவர் முறியடித்து விட்டார். பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றதால் அதிலேயே பேசி பிரான்ஸ் மக்களை அவரால் கவர்ந்து ஈர்க்க முடிந்தது.

ஸ்வாமிஜி தங்கியிருந்த அறைக்கு வெளியே ஒரு பிரைவேட் லெட்டர் பாக்ஸ் இருந்தது. அதில் அவருக்கு வரும் தபால்கள் போடப்படும்.

அதில் அவருக்கு மிரட்டல் கடிதங்கள் ஏராளம் வந்தன. ஹிந்து மதம் பற்றிப் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற மிரட்டல் அந்தக் கடிதங்களில் இருக்கும்.

அஞ்சா நெஞ்சரான ஸ்வாமிஜி அதைச் சற்றும் பொருட்படுத்தவே இல்லை.

ஸ்வாமிஜி ராபர்ட் க்ரீன் இங்கர்சாலைச் சந்தித்த சமயத்தில் இங்கர்சால் அவரிடம், “நல்ல வேளை, நீங்கள் இப்போது வந்தீர்கள். சிறிது காலம் முன்னர் வந்திருந்தால் உங்களைக் கொன்றே இருப்பார்கள்” என்றார்.

ஹிந்து மதம் பற்றிய ஸ்வாமிஜியில் அரிய உரைகளால் பாதிரிகள் திடுக்கிட்டனர். பதில் சொல்ல முடியாமல் திணறினர்.

இதற்காக அவர்கள் செய்த சூழ்ச்சிகள் பல.

அவற்றில் ஒன்று தான் பிரான்ஸில் நடத்த திட்டமிட்ட அடுத்த மாநாடு.

அதை சுலபமாக உடைத்து எறிந்தார் அவர். ஒருவேளை பிரான்ஸில் மாநாடு நடந்திருந்தால் அமெரிக்காவை வெற்றி கொண்டது போல பிரான்ஸையும் அவர் வெற்றி கொண்டிருப்பார்.

 

3

இந்த 125வது ஆண்டு தினத்தில் ஹிந்து மதத்தின் பெருமையை உலகளாவிய விதத்தில் நிலை நாட்டிய ஸ்வாமி விவேகானந்தருக்கு நமது பக்தியுடனான பணிவான அஞ்சலியைச் செலுத்துவோம். அவர் போதித்த நமது மதத்தின் பெருமைகளை நினைத்துப் போற்றி அதைப் பாதுகாப்போம். நமது மதத்தின் அருமை பெருமைகளை உலகெங்கும் பரப்பி அனைவரும் உணரச் செய்வோம்!

***

ஆதாரம் : அத்வைத ஆஸ்ரமம்., கல்கத்தா வெளியிட்ட  Reminiscences of Swami Vivekananda என்ற நூல். (முதல் பதிப்பு  மே 1961; மேலும் பல பதிப்புகள் கண்ட நூல்) 430 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் கிழக்கு மற்றும் மேற்கைச் சேர்ந்த ஸ்வாமிஜியின் பக்தர்கள் மற்றும் அபிமானிகள் தெரிவிக்கும் சுவையான தகவல்கள் ஏராளம் உள்ளன.வாங்கிப் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல். ராமகிருஷ்ண மடம் கிளைகளில் கிடைக்கும்.

–subham–

பாரதி 97! – 3 (Post No.5416)

WRITTEN BY S NAGARAJAN

Date: 11 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-09 AM (British Summer Time)

 

Post No. 5416

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மஹாகவிக்கு அஞ்சலி

இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை!

பாரதி 97! – 3

 

ச.நாகராஜன்

 

  1. நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரைப் போட்டிக்கு அழைக்க நினைத்தவர்.

மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹாலுக்கு தாகூர் வருவதை அறிந்து அவருடன் கவிதைப் போட்டி நடத்த விரும்பினார். ஆனால் அந்த விஷயத்தைப் பற்றித் தொடராமல் அப்படியே விட்டு விட்டார். தாகூரின் பாடலையும் கட்டுரைகளையும் மொழி பெயர்த்து வெளியிட்டவர்.

  1. சுயசரிதை எழுதியவர்

தன் சுயசரிதையைக் கவிதை வடிவில் யாத்தவர்.

 

  1. சர்வ மதம் சமரஸம் கண்டவர்

அனைத்து மதங்களையும் மதித்தவர். அல்லா,அல்லா, அல்லா என்று பாடியவர்.ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் என்று ஏசு கிறிஸ்துவைப் பற்றிப் பாடியுள்ளார்.

 

  1. சிறந்த ரசிகர்

அனைத்துக் கலைகளையும் ரசிக்கும் சிறந்த ரசிகர். ஓவியர் ரவிவர்மா மறைந்ததை ஒட்டி இரங்கல் பா பாடினார்.சுப்பராம தீக்ஷிதர் மறைந்ததற்கும் இரங்கல் பா பாடியுள்ளார்.

 

  1. இயற்கை ஆர்வலர்

இயற்கையை ரசிப்பதில் அளவிலா ஆர்வம் கொண்டவர். பாஞ்சாலி சபதத்தில் சூரியாஸ்தமனம் பற்றி எழுதியுள்ளார். அநேக பாடல்கள் அவரது இயற்கை ஆர்வத்தை விளக்கும்.

70.நேரம் பயனுள்ளதாகக் கழிய விரும்பியவர்.

நேர நிர்வாகம் பற்றி மிகவும் அக்கறையுடனிருந்தவர். பொழுது வீணே கழிய சற்றும் இடங்கொடேன் என குறிப்பில் எழுதியவர்.சோம்பலின்றி தன் பணிகளைத் தொடர்ந்தவர்.

  1. நையாண்டி வல்லுநர்

எழுத்தாளர், நகைச்சுவை எழுத்தாளர் என்பதைத் தாண்டி நையாண்டி செய்வதில் வல்லுநர். ஒரு பெரிய நையாண்டி கதையையே எழுதியுள்ளார். கட்டுரைகளில் சரளமான நையாண்டி நடையைக் கையாண்டவர்.

 

  1. மதமாற்றம் எதிர்த்தவர்

மதமாற்றம் கண்டு பொங்கியவர். தனது அருமை நண்பர் சுரேந்திர நாத் ஆர்யா மதம் மாறியது கண்டு வருந்தி நொந்து அழுதார்.

 

  1. அழகிய கையெழுத்தைக் கொண்டவர்

சிறிய எழுத்துக்கள். இடம் விட்டு இடம் எழுதும் பாங்கு. அழகிய கையெழுத்தைக் கொண்டவர். அவரது கையெழுத்துப் பிரதிகள் இன்றும் காணக் கிடைக்கின்றன.

 

  1. நன்கு உடை அணிபவர்

சுத்தமான உடை.அழகிய உடை அணிய விரும்பியவர்.கோட்டு, தலைப்பாகை என அவரது கம்பீரமான உருவத்தை உடையால் இன்னும் மேம்படுத்திக் கொண்டவர்

 

  1. நண்பர்களை அரவணைத்தவர்

சுமார் 35க்கும் மேலான சீடர்களைப் புதுவையில் கொண்டிருந்தார்.ஏராளமான நண்பர்களைக் கொண்டிருந்தார். அவர்கள் அனைவரையும் வெகுவாக மதித்து நட்பு பாராட்டி வந்தார்.

 

  1. புதிய பாரதம் அமைக்க எண்ணியவர்

வலிமையற்ற தோளினாய் போ போ போ என்று நலிந்த பாரதத்தை விரட்டியவர் ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா என்றும் எதிரிலா வலத்தினாய் வா வா வா என்றும் புதிய பாரதத்தை வரவேற்று அழைத்தார். அவரது பாரதம் உலக நாடுகளில் மேன்மையுற்ற பாரதம். அதையே அவர் அமைக்க விரும்பினார்.

  1. வெளிதேச வாசம் வெறுத்தவர்

புதுவை வெள்ளைக்காரர் வசம் ஆகும் என்ற ஒரு நிலை வந்த போது பிரான்ஸில் குடியேறலாமா என்ற பேச்சு எழுந்தது. ஆனால் பாரதியார் அப்படி பிரான்ஸுக்குச் செல்ல விரும்பவில்லை. வெளிதேச வாசத்தை அவர் வெறுத்தார். சிறந்த சுதேசி.

 

  1. மாதாமணி வாசகம் வெளியிட்டவர்

தன் நூலான மாதா மணிவாசகத்தை தென்னாப்பிரிக்காவிலிருந்து வெளியிட்டவர்.

 

  1. ஆங்கில பத்திரிகாசிரியர்

தமிழ் பத்திரிகை ஆசிரியர் என்பதோடு பால பாரதம் என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கும் ஆசிரியராக ஆனார்.

 

80.தெய்வ அருள் பெற்றவர்

‘மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மாசக்தி வையத்தேவி’ என எழுதினார். விண்ணும் மண்ணும் தனி ஆளும் வீரை சக்தி நினதருளே என்றவர் அனைத்தும் சக்தி அருளினாலேயே நடக்கிறது என்று நம்பினார். அந்த சக்தியின் அனுக்ரஹத்தையும் பெற்றார்.

 

81.மரணம் வென்றவர்

காலா என் காலருகே வாடா, உன்னை சற்றே எட்டி மிதிக்கிறேன் என்றவர். சாகா வரம் அருள்வாய் -ராமா என்று பாடியவர்.பார் மீது நான் சாகாதிருப்பேன் என்று அறிவித்தவர்.

உண்மை தான்! தனது சாகா வரம் பெற்ற பாடல்களினால் இன்றும் வாழ்கிறார். என்றும் வாழ்வார்.

  1. சகல உயிர்களையும் நேசித்தவர்

தின்ன வரும் புலியையும் அன்போடு நேசிக்க உபதேசித்தவர்; குருவிகளுக்கு அரிசி மணிகளைப் போட்டு ஆனந்தித்தவர். காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று முழங்கியவர்.

 

83.வ.வே.சு. ஐயரால் பெரிதும் போற்றப்பட்டவர்

புதுவை வாழ்க்கையில் வ.வே.சு ஐயரின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். அவரது பாடல்களைக் கண்ட ஐயர் வெகுவாக அவரை வியப்புடன் போற்றினார். சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல் போன்ற அக்ஷர லக்ஷம் பெறும் பாடல்களை பாடுபவர் என்று முகவுரை எழுதி அவரது நூல்களை அனைவரும் வாங்கி அவரை ஆதரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

 

84.விவேகானந்தரின் பக்தர்

விவேகானந்தரின் பக்தராக விளங்கினார். அவரது ஜீவித சரித்திரத்தையும் எழுதியுள்ளார். விவேகானந்தரை ‘பாபேந்திரியம் செறுத்த எங்கள் விவேகானந்தப் பரமன்’ என்று போற்றிப் பாடியுள்ளார்.

 

85.ரமணரை தரிசித்த கவிஞர்

திருவண்ணாமலை சென்ற போது பகவான் ரமணரை தரிசித்தார். அங்கு அவர் முன் மௌனமாக அமர்ந்திருந்தார்; பேசவில்லை.

86.நாடக ஆசிரியர்

குட்டி நாடகங்களைச் சிறப்பாக எழுதியவர். ஜகத் சித்திரம் உள்ளிட்டவற்றில் அவரது நாடகம் எழுதும் வல்லமையைப் பார்க்கலாம்.

 

  1. தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்த நினைத்தவர்

தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதை மாற்றி அமைத்து அதை புதிய பாணியில் மாற்ற நினைத்தவர். அது பற்றி அறிவிப்பும் வெளியிட்டவர். ஆயின் முயற்சி தொடரவில்லை.

  1. பிரெஞ்சு தேசீய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்.

பிரெஞ்சு தேசிய கீதமான லா மார்ஸ்லே என்ற கீதத்தை   “ அன்னை நன்னாட்டின் மக்காள் ஏகுவம் மன்னு புகழ் நாள் இதுவே“ என்று தமிழில் மொழிபெயர்த்தார்.

 

ஆக வந்தேமாதரம் என்ற இந்தியாவின் தேசீய கீதத்தையும் பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதத்தையும் தமிழில் தந்ததால் இரு தேசங்களின் தேசீய கீதங்களையும் தமிழாக்கிய பெருமையைப் பெறுகிறார்.

 

 

  1. பாரதி பட்டத்தை பதினோரு வயதிலேயே பெற்றவர்.

இவரை மட்டம் தட்ட நினைத்த காந்தி மத நாதர் தந்த ஈற்றடியான, ‘பாரதி சின்னப் பயல்’ என்பதை ‘காந்திமதி நாதனைப் பார்; அதி சின்னப் பயல்’ என எழுதி அனைவரையும் இள வயதிலேயே  வியக்க வைத்தவர். இவரது கவிதா திறமையைக் கண்ட அறிஞர்கள் இவருக்கு பதினோரு வயதிலேயே – 1893ஆம் ஆண்டிலேயே – இவருக்கு பாரதி பட்டம் அளித்தனர்.

 

  1. புதிய கவிதா பாரம்பரியத்தை உருவாக்கியவர்

தனது புதிய கவிதா நடையினாலும், பொருளினாலும் தமிழில் புதிய கவிஞர்கள் பரம்பரையை உருவாக்கியவர். பாரதி காலம் தொட்டு இன்று வரை அவரது தாக்கம் இல்லாத கவிஞர் ஒருவர் கூட இல்லை.

91 பழையதையும் புதியதையும் இணைக்கும் பாலமாக இருந்தவர்

பெண் விடுதலை வேண்டியவர், ‘முன்னை அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து’ வாழ உபதேசித்தார். காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கை கொடுக்கச் சொன்னவர் மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழச் சொன்னார். பழமையைப் போற்றி அதில் உள்ள நல்லது அனைத்தையும் எடுத்துக் கொண்டு நவீன உலகின் சிறப்புக்களையும் ஏற்று வாழச் சொன்னவர். பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைக்க விரும்பியவர்.

 

 

  1. உலக அறிஞர்களின் தத்துவங்களைப் பாராட்டியவர்

லாவோட்சு, விட்மன், புத்தர் என உலக அறிஞர்கள் மற்றும் மகான்களின் தத்துவங்களை ஆங்காங்கே கட்டுரையில் தந்தவர். அரவிந்தர், தாகூர், காந்திஜி உள்ளிட்டோரின் சிறப்பான கருத்துக்களையும் தமிழில் தந்தவர்.

 

  1. புராணங்களைப் பரப்ப விரும்பியவர்

புராணங்களைப் பற்றி,’நன்று புராணங்கள் செய்தார்- அதில் நல்ல கவிதை பல பல தந்தார், கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்’ என்று பாடினார். ஆனால் புராணங்கள் என்று கட்டுரை எழுதி, (கற்பனை என்றாலும்) அவற்றை நாடெங்கும் பரப்ப வேண்டுமென்று அறிவுறுத்தினார். ஏனெனில், ‘புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை போதிக்கும் கட்டுக்கதைகள் அவை தாம்’ என்று காரணத்தையும் தெரிவித்தார். ஸ்வாமி விவேகானந்தரும் புராணங்களை நாடெங்கும் வெள்ளமெனப் பாய்ச்சுங்கள் என்று கூறியதை நோக்கினால் இருவர் கருத்தும் ஒன்றாகிறது.

 

  1. ஆங்கில கவிதை, கட்டுரை, நூல் எழுதியவர்

ஆங்கிலக் கவிதைகளை எழுதியுள்ளார். தனது கும்மிப் பாடலைத் தானே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். The Fox with the golden Tail என்ற ஆங்கில நூலை வெளியிட்டுள்ளார்.

 

  1. சிறை சென்ற தியாகி

1918 நவம்பர் 20ஆம் தேதி புதுவையிலிருந்து குதிரை வண்டியில் குடும்பத்துடன் புறப்பட்ட பாரதியார் பிரெஞ்சு எல்லையைக் கடந்தவுடன் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். கடலூர் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நவம்பர் 20 முதல் டிசம்பர் 14 முடிய சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

 

  1. ஏராளமான அதிசய அனுபவங்களைப் பெற்றவர்

வாழ்க்கையில் நம்ப முடியாத அதீத உளவியல் அனுபவங்களையும் அதிசய அனுபவங்களையும் பெற்றவர். கோவிந்தசாமி புகழ் என்ற கவிதையில். “ஒரு நாள் இறந்த எந்தை தன்னுருவம் காட்டினான், பின்னர் என்னைத் தரணிமிசை பெற்றவளின் வடிவம் உற்றான்’ என்று கூறி இறந்த தந்தையையும் தாயையும் கோவிந்த சாமி காட்டத் தான் பார்த்ததைக் கூறுகிறார். திருவனந்தபுரம் சென்ற போது மிருகக் காட்சிச் சாலையில் காவலாளி தடுத்த போதும் ஒரு சிங்கத்தின் அருகில் சென்று அதைத் தொட்டு, ‘அன்பு கொண்டோரை நீங்கள் ஒன்றும் செய்ய மாட்டீர்கள் என்பதை கர்ஜனை மூலம் தெரிவியுங்கள்’ என்று சொல்ல சிங்கம் கர்ஜித்தது. இப்படி ஏராளமான அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

  1. சிறந்த மனிதர்

மன்னுக்கு இதம் செய்பவர் மனிதர். அதாவது உலகிற்கு இதம் செய்பவர் என்ற அர்த்தத்திற்கு இலக்கணமாக வாழ்ந்த சிறந்த  வியக்க வைக்கும் மனிதர் மகாகவி பாரதியார்.

*

பாரதியாரின் புகழுக்கு முடிவில்லை. அவரது சிறப்பியல்புகளை

97 என்ற எண்ணுக்குள் கட்டுப்படுத்த முடியாது. இந்த எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவர் அவர். பாரதியார் திரு நாமம் வாழ்க. தேச பக்தியும் தெய்வ பக்தியும் வெல்க! வந்தேமாதரம்!! பாரத் மாதா கீ ஜெய்!!!

 

முற்றும்

 

குறிப்பு: மேலே கண்ட சிறப்புக்களை விளக்கும் விதத்தில் ஏராளமான பாடல்களையும் கட்டுரைகளையும் பாரதியார் படைத்துள்ளார்.பல அரிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.

 

இவற்றை இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள ஏராளமான பாரதியார் பற்றிய கட்டுரைகளில் காணலாம்.

(www.tamilandvedas.com பார்க்கவும்)

 

இந்தக் கட்டுரையாசிரியர் தொகுத்துள்ள பாரதி போற்றி 1000 என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ஆயிரம் பாடல்களிலும்

‘கொழ கொழ கண்ணே’ – எங்க அம்மா சொன்ன தமிழ் நர்ஸரி ரைம் (Post No.5415)

Compiled by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 10 September 2018

 

Time uploaded in London – 19-34 (British Summer Time)

 

Post No. 5415

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

கொழ கொழ  கண்ணே எங்க அம்மா சொன்ன தமிழ் நர்ஸரி ரைம் (Post No.5415)

 

இப்பொழுது ‘ட்வின்கிள் ட்வின்கிள் லிட்டில் ஸ்டார்’ (Twinkle twinkle Little Star) தெரியாத தமிழ்க் குழந்தைகள் கிடையாது. ஆனால் ‘நிலா நிலா ஓடிவா’ பாட்டோ, ‘கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு’ நர்ஸரி ரைமோ (Nursery Rhyme) தெரிந்த தமிழ்க் குழந்தை இருக்கிறார்களா என்பது ஐயப்பாடே.

 

நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோது (65 ஆண்டுக்கு முன்னால்) என்னுடைய தாயார் எங்களுக்கு ‘கொழ கொழ கண்ணே’ கதையைச் சொல்லுவார்கள். அதை ஒவ்வொரு நாள் இரவிலும் சொல்லச் சொல்லிக் கேட்போம். இது தஞ்சைப் பகுதியில் மட்டும் வழங்கியதா அல்லது மற்ற பகுதிகளிலும் வழங்கியதா என்று தெரியவில்லை. ஆனால் மாவட்டம் தோறும் பல குழந்தைகள் பாடல்கள் வழங்கியதை அறிகிறோம். 1899ம் ஆண்டு வெளியான விவேக சிந்தாமணி என்ற சென்னை மாத இதழைப்  பார்த்தவுடன் மஹா சந்தோஷம்.அதில் இன்று படித்த, முன்னொரு காலத்திலென் தாயார் சொன்ன குழந்தைப் பாட்டு இதோ.

 

‘கொழ கொழ  கண்ணே’ என்று துவங்கி

 

‘என் பெயர் ஈ, இது தெரியாதா’? என்று முடிவடையும் தமிழ் நர்ஸரி ரைம்.

 

 

 

 

 

 

FULL  RHYME

தமிழ் வாழ்க

 

–சுபம்–

லீட்னெர் காலமானார்- 1899-ம் ஆண்டு பத்திரிக்கைச் செய்தி (Post No.5414)

Compiled by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 10 September 2018

 

Time uploaded in London – 18-52 (British Summer Time)

 

Post No. 5414

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

1899ஆம் ஆண்டு மொழியியல் அறிஞர் டாக்டர் லீட்னர் இறந்தவுடன் விவேக சிந்தாமணியில்

ஒரு அனுதாபச் செய்தி வெளியானது.

 

இதோ அந்தச் செய்தி:–

 

Gottlieb Wilhelm Leitner or Gottlieb William Leitner M.A., Ph.D., L.L.D., D.O.L. (14 October 1840 – 22 March 1899) was a British orientalist.

 

WHAT DID I DISCOVER IN INDIA?– JAWAHARLAL NEHRU (Post No.5412)

Compiled by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 10 September 2018

 

Time uploaded in London – 17-53 (British Summer Time)

 

Post No. 5412

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

Quotes from Jawaharlal Nehru’s ‘Discovery of India’

Man’s dearest possession is life, and since it is given to him to live but once, he must so live as not to be seared with the shame of a cowardly and trivial past, so live as not to be tortured for years without purpose, so live that dying he can say, ‘All my life and my strength given to the first cause of the world- the liberation of mankind’ –Nicolai Ostrovsky
Xxxx

We in India do not have to go abroad in search of the past and the distant. We have them here in abundance. If we go to foreign countries, it is in search of the present. That search is necessary, for isolation from it means backwardness and decay.

Xxxx

Nearly five months have gone by since I took to this writing and I have covered a thousand hand written pages with this jumble of ideas in my mind. For five months I have travelled in the past and peeped into the future and sometimes tried to balance myself on that point of intersection of the timeless with time.

Xxx

On June 15th both were discharged ( Narendra Deva and Nehru) , 1041 days after our arrest in August 1942. Thus, ended my ninth and the longest term of imprisonment.

Xxx

What did I discover?
The discovery of India — what have I discovered.
It was presumptuous of me to imagine that I could unveil her and find out what she is today and what she was in the long past. Today she is four hundred million separate individual men and women, each differing from the other, each living in a private universe of thought and feeling. If this is so in the present, how much more difficult is it to grasp multitudinous past of innumerable successions of human beings. Yet something has bound them together and binds them still. India is a geographical and economic entity, a cultural unity amidst diversity, a bundle of contradictions held together by strong but invisible threads.

 

Overwhelmed again and again, her spirit was never conquered, and today when she appears to be the plaything of a proud conqueror, she remains unsubdued and unconquered. About her there is the elusive quality of a legend of long ago; some enchantment seems to have held her mind. She is a myth and an idea, a dream and a vision, and yet very real and present and pervasive. There are terrifying glimpses of dark corridors which seem to lead back to primeval night, but also there is the fullness and warmth of the day about her. Shameful and repellent she is occasionally, perverse and obstinate, sometimes even a little hysteric, this lady with a past, but she is very lovable, and none of her children can forget her wherever they go, whatever strange fate befalls them. For she is part of them in her greatness as well as her failings, and they are mirrored in those deep eyes of her that have seen so much of life’s passion and joy and folly, and looked down into wisdoms well.

Each one of them is drawn to her, though perhaps each one has a different reason for that attraction or can point to no reason at all, and each sees some different aspect of her many -sided personality. From age to age she has produced great men and women, carrying on the old tradition and yet ever adapting it to changing times.

 

What Tagore said………………

Rabindranath Tagore, in line with that great succession, was full of temper and urges of the modern age and yet was rooted in India’s past and in his own self built up a synthesis of the old and the new.’ I love India’, he said, ‘not because I cultivate the idolatry of geography, not because I have had the chance to be born in her soil but because she has saved through tumultuous ages the living words that have issued from the illuminated consciousness of her great ones’. So many will say, while others will explain their love for her in some different way.

 

Xxx SUBHAM xxx

இந்தியாவும் சுமேரியாவும் போற்றிய யாழ்! (Post No.5412)

Lyre player in South Kensington, London taken in August 2018

 

RESEARCH ARTICLE WRITTEN by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 10 September 2018

 

Time uploaded in London – 8-59 AM(British Summer Time)

 

Post No. 5412

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ARTICLE WRITTEN ON THE OCCASION OF A MEETING OGANISED IN FRANCE IN MEMORY OF SWAMI VIPULANANDAR IN SEPTEMBER 2018.

யாழ் என்ற இசைக் கருவியின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் ஒரு மனிதரின் பெயர் நினைவுக்கு வரும் என்றால் அவர் சுவாமி விபுலாநந்த அடிகள்தான். சுவாமி விபுலாநந்தர் நினைவைப் போற்றும் வகையில் மகாநாடு கூட்டியிருப்பதும் அவர் நினைவாக மலர் வெளியிடுவதும் போற்றுதற்குரிய பணிகள்.

 

 

சுவாமி விபுலாநந்தர் பற்றியும், யாழ் பற்றியும் விக்கிபீடியாவிலும் ஏனைய பத்திரிக்கைகளிலும் இணைய தளங்களிலும் ஏராளமான செய்திகள் உள. அவர் இலங்கையின் கிழக்குப் பகுதியில் 1892-ஆம் ஆண்டு பிறந்து, 1947-ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார். அதுவும் கரந்தைத் தமிழ் சங்கத்தின் சார்பில் திருக்கொள்ளம்புதூர் கோவிலில் அவரது யாழ் நூலை  5-6-1947-ல் அரங்கேற்றிவிட்டு ஆறே வாரங்களில் உயிர் நீத்தார்;  இப்படி இறந்தது, இந்த ஆய்வு நூலுக்காகவே இறைவன் அவரை பூவுலகிற்கு அனுப்பி வைத்தாரோ என்று எண்ணச் செய்கிறது.

 

 

ஏற்கனவே எல்லா கட்டுரைகளிலும் வந்த விஷயங்களை மீண்டும் அலசாமல் ஒரு சில ஆய்வு வினாக்களை எழுப்பி விடை காண முயல்கிறேன்

 

திருக்குறளில் யாழ்தான் வருகிறது; வீணை இல்லை. ஆனால் இரண்டாம் நூற்றாண்டு நூல் என்று பல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட சிலப்பதிகாரத்தில் முதல் முதலாக வீணையைக் காண்கிறோம். அதற்குப் பின்னர் தேவார காலத்திலும் கூட யாழ் பற்றி பாடப்பட்டுள்ளது. திருநீலகண்ட யாழ்ப்பாணரை நாம் அறிவோம்.

 

‘யாழ்’தான் வீணையா? அல்லது யாழின் உருவம் மாறி வீணையானதா? இந்துக் கடவுளரின் கைகளில் எல்லாம் வீணை மட்டுமே உளதே!

 

இயற்கையில் ஒரு விதி இருக்கிறது. உலகில் எதுவுமே மாறாமல் இருக்காது. பழைய கால பழக்க வழக்கமானாலும், பொருள்களானாலும் மாறிக்கொண்டேதான் வரும் (Change is inevitable). அப்படிப் பார்க்கையில் யாழ் போய் வீணை வந்தது என்றும் சொல்லலாம். அல்லது இந்தியா போன்ற பரந்த ஒரு நாட்டில் ஒரே நேரத்தில் வெவ்வேறு இசைக் கருவிகளும் இருந்திருக்கலாம்.

 

வேதத்தில் வீணையும், யாழும்!

ரிக்வேதத்தில் பாணன்

யாழ் (Harp or Lyre or Lute) இசைத்துப் பாடிய பாணர்கள் பற்றி சங்க இலக்கியம் முழுதும் காண முடிகிறது. இது உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்திலும் இருக்கிறது. பண் என்பதிலிருந்து பாணன் தோன்றி இருக்கலாம். ரிக் வேதத்தில் வாண (VAANA) என்ற சொல் ‘இசைக் கருவி மூலம் வரும் சங்கீதம்’ என்ற பொருளில் வந்துள்ளது. ‘வ’ என்ற எழுத்தும் ‘ப’ என்ற எழுத்தும் இடம் மாறுவதை இந்திய மொழிகளில் காணலாம். எல்லோருக்கும் தெரிந்த எடுத்துக் காட்டு வங்காளம்= பங்காளம்- பெங்கால்- பாங்க்ளாதேஷ். (WEST BENGAL, BANGLADESH= VANGA THESAM)

 

ஆக, வாண =பாண என்று மாறுவதில் வியப்பொன்றுமில்லை. ரிக் வேதத்தில் முதல் முதலாக ஸப்த ஸ்வரங்களைக் காண்கிறோம். பின்னர் இது உலகெங்கும் பரவியது. சுமேர், கிரேக்கம், தமிழ் இலக்கியத்திலும் காணப்படுகிறது. ரிக் வேதத்தை தற்போதைய ஆராய்ச்சிகள் கி.மு 1700-க்கு முன் என்று நிர்ணயித்துள்ளது. ஹெர்மன் ஜாகோபி, பால கங்காதர திலகர் ஆகியோர் கி.மு.6000 என்றும் சொல்லுவர்.

 

மேற்கோள் வரும் இடங்கள்:-

வாண- ரிக் வேதம் 1-85-10; 8-20-8; 10-97-8; 10-32-4

வாண- அதர்வண வேதம்- 10-2-17

 

ரிக்வேதத்தில் ஸப்த ஸ்வரங்கள் (SEVEN NOTES) – 10-32-4

 

மஹாவ்ரத சடங்குகளில் (MAHA VRATA CEREMONY) நூறு தந்திகளுடன் (நரம்புகளுடன்) உள்ள ‘சத தந்து’ (SATA-TANTU) என்ற யாழ் மூலம் இசை எழுப்பப்பட்டது பற்றி பஞ்சவிம்ச பிராமாணத்தில் காணலாம். அதற்கு முன் தைத்ரீய சம்ஹிதை (7-5-92) காடக சம்ஹிதை (24-5) ஆகியவற்றிலும் நூறு நரம்பு இசைக் கருவி குறிப்பிடப்படுகிறது.

 

 

‘சப்தவாணி’ (VAANIIS) என்ற சொல், ரிக் வேதத்தில் பல இடங்களில் வருகிறது. இதையும் ஏழு சுரங்கள் என்று கொள்வோரும் உண்டு (1-164-24; 3-1-6; 9-103-3 முதலியன).

மக்டொனல் போன்றோர் இது யாப்பிலக்கணச் சொல் என்பர்.

 

SOURCE FOR REFRENCES- VEDIC INDEX OF NAMES AND SUBJECTS, VOL.2, AA MACDONELL AND AB KEITH

 

Lyre player in Croatia

எனது கருத்து

பண், பாண, வாண முதலிய சொற்கள் சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் மூத்த இந்திய (Proto-Indian) மொழியிலிருந்து தோன்றியிருக்க வேண்டும். கிரேக்க மொழியிலும் ‘பண்’ என்ற தெய்வம் கிராமீய, கானக சங்கீதத்துக்குரிய தேவதை (PAN- GREEK GOD OF RUSTIC MUSIC) என்பதைக் காண்கையில் இரு உறுதியாகிறது

 

 

முதலில் தோன்றிய யாழ், வீணைக்கு வழி வகுத்திருக்கலாம். அல்லது இரண்டு வகை இசைக் கருவிகளும் ஒரே நேரத்தில் புழங்கி இருக்கலாம்

 

 

தமிழில் நாம் மகர யாழ், சகோட யாழ், பேரியாழ்,  செங்கோட்டி யாழ், நாரத யாழ், தும்புரு யாழ் முதலிய யாழ் வகைகளை சிலப்பதிகார உரை, கல்லாடம் முதலிய நூல்களில் காண்கிறோம். சங்க இலக்கியதில் ஆற்றுப் படை நூல்களிலும் காண்கிறோம்.

Tamil Yaaz from Tamil Kodi Magazine.

வேதத்தில் வீணை

 

யாழ் என்று கருதப்படும் ‘சத தந்து’ (நூறு நரம்பு இசைக் கருவி) வுக்குப் பின்னரே வீணை என்ற சொல் வேதத்தில் வருகிறது. வீணை வாசிப்போன் (வீணா வாத) என்ற சொல் தைற்றீய சம்ஹிதையில் (யஜூர் வேதம்) முதலில் வருகிறது. பின்னர் சதபத பிராமண நூலிலும் குறிப்பிடப்படுகிறது. புருஷமேத யாகத்தில் பலியிடப்படவேண்டிய பல மக்களில் வீணை வாசிப்போனும் ஒருவன் (‘பலி’ என்பது உண்மையில் உயிக்கொலை அல்ல; நாம் கடவுளுக்கு பிரசாதத்தை ‘நைவேத்யம்’ செய்வது போல அவர்களை யாக குண்டத்துக்கு முன் நிறுத்திவிட்டு பின்னர் உயிருடன் அனுப்பிவிடுவர்)

 

வீணையை தோல் உறை போட்டு மூடி வந்த குறிப்பும் வீணையின் தலை, வயிறு , தந்தி, என்று உறுப்பு உறுப்பாக வருணிக்கும் குறிப்புகளும் ஐதரேய ஆரண்யகத்தில் உள்ளன.

 

மேற்கோள் வரும் இடங்கள்:-

‘வீணா’- தைத்ரீய சம்ஹிதை 6-1-4-1; காடக சம்ஹிதை 24-5; மைத்ராயணீ சம்ஹிதை 3-6-8; சதபத பிராமணம் 3-2-4-6

‘வீணா வாத’- யஜூர் வேத வாஜசனேயி சம்ஹிதை 30-20; தைத்ரீய பிராமணம் 3-4-15-1

 

வீணையின் ‘தோல் உறை’, உறுப்புகள்- ஐதரேய ஆரண்யகம் 3-25; சாங்க்யாயன ஆரண்யகம் 8-9.

 

‘வீணா காதின்’ (வீணை வாசிப்போன்)- தைத்ரீய பிராமண 3-9-14-1; சதபத பிராமண 13-1-5-1 முதலிய இடங்கள்

 

இவை அனைத்தும் இசைக்குரிய முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. வீணை , யாழ் முதலிய கருவிகளை யாக யக்ஞங்களில் பயன்படுத்தியது அவர்கள் மிகவும் முனேறிய ஒரு நாகரீகத்தில் வாழ்ந்ததைக் காட்டுகிறது.

 

ஒர் குழுவுக்குத் தலைவனான ‘வீணா  கானகின்’ (ஆர் கெஸ் ட் ரா தலைவர்) பற்றியும் சதபத பிராமணம் சொல்கிறது!

 

 

சிங்கார வேலு முதலியார் வெளியிட்ட அபிதான சிந்தாமணியிலும் யாழ் பற்றிய விவரஙகள் உள.

 

சுமேரியாவில் யாழ்

சுமேரியா, அக்கடிய, ஹிட்டைட் (Sumerian, Akkadian, Hittite) கலாசாரம் தொரபாக கிடைத்த களிமண் பலகைகளில் க்யூனிபார்ம் எழுத்துக்களில் இசைக்குறிப்புகள் கிடைத்துள்ளன. அங்கும் நரம்பு, தோல், காற்று வகை வாத்தியங்கள் இருந்தன. ஊர் (Ur) என்னுமிடத்தில் (இராக்), மன்னனின் கல்லறையில் இசைக்கருவிகள் இருந்தன குறிப்பாக யாழ் போன்ற இசைக்கருவிகள் மாட் டின் முகத்துடன் (Bovine shape) வடிவமைக்கப் பட்டிருந்தன.கி.மு.2000 வாக்கில் சதுர, செவ்வக வடிவ (யாழ்) இசைக்கருவிகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு  ஹிட்டைட் பீங்கான் பானையில் ஆறு கருவிகள் வரையப்பட்டுள்ளன. இதிலிருந்து கி.மு.2300 முதல் நரம்புக் கருவிகளை அவர்கள் பயன்படுத்தியதை அறிகிறோம். ஏனைய குழல் வாத்தியங்கள் , மத்தளம் போன்ற தோல் கருவிகள் ஆகியனவும் சிலின்டர் முத்திரைகளில் வரையப்பட்டுள்ளன.

 

கி.மு 1800 முதல் பள்ளிக்கூட பாடங்களில் (Part of school curriculum) இசையும் இருந்தது. கோவில்களில் இசையும் கற்பிக்கப்பட்டது. இசைவாணர்கள் அரண்மனையிலும் இருந்தனர். அவர்களுக்கு ஒரு கண்காணிப்பு அதிகாரியும் (Superintendent) பதவியில் அமர்த்தப்பட்டார். அஸிரிய (Assyrian) குறிப்புகள் வெளி நாட்டு இசைவாணர்கள் பற்றியும் பேசுகின்றன.

 

 

சமயச் சடங்குகள், விழாக்கள், திருமணங்கள், மந்திர-தந்திரச் சடங்குகள் ஆகியவற்றில் இசை ஒரு  முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது. குருமார்கள் கூட இசைக்கருவிகளை வாசித்தது பற்றி அறிகிறோம். ஹிட்டைட் கலாசாரத்தில் ஆடல் பாடலுடன்    ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

இராக் நாட்டில் (மெஸபொட்டோமியா) சுமேரியன், அக்கடியன் ஆகிய இரண்டு முறைகளும் ஒரே நேரத்தில் வழக்கில் இருந்தன. சுமேரியன் முறையில் முறையான ராகங்கள் (Tunes, Patterns) இருந்தன. அக்கடியன் முறையில் ஏழு ஸ்வரங்கள், ஒன்பது நரம்புகள் கொண்ட இசைக்கருவிகள் உபயோகிக்கப்பட்டன. க்யூனிபார்ம் எழுத்துக் களிமண் பலகைகளில் சங்கீதக் (Notations) குறியீடுகளும் எழுதப்பட்டிருக்கின்றன.

Source:- Dictionary of the Ancient Near East, British Museum Publication.

Picture by Lalgudi Veda

எகிப்தில்

எகிப்திய ஓவியங்களிலும் யாழ் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கின்ற இசைவாணர்களைக் காணலாம். அவர்களும் இசைத் தெய்வங்களை வழிபட்டனர்.

பைபிளிலும் பல இசைக்கருவிகளின் பட்டியல் உள்ளது.

 

மாயன், சீன கலாசாரங்களில் ஆதிகாலத்திலேயே இசை முழக்கம் இருந்த போதும் யாழ் போன்ற கருவிகளைக் காண முடியவில்லை. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் கூட அவர்களுகே உரித்தான இசைக்கருவி ஒன்றைக் கண்டுபிடித்து இசைக்கின்றனர்

இந்திய சிற்பங்களில் வீணை தோன்றியது பிற்காலத்தில்தான். ஐந்தாவது நூற்றாண்டு குப்தர் காலத்தில் கூட யாழ் போன்ற இசைக் கருவிதான் உளது. ஆக தொல்பொருட் துறை சான்றின்படி (Archaeological evidence) நமக்குக் கிடைத்த பழைய சிற்பம் யாழ்தான்.

 

யாழ் இப்பொழுதும் உபயோகத்தில் உள்ளது. ஆகஸ்ட் மாடதம் லண்டனில் சவுத் கென்ஸிங்க்டனில் (South Kensington in London)  மியூஸியங்களுக்குச் செல்லும் பாதையில் ஒருவர் யாழ் போன்ற கருவியை வாசிப்பதைப் புகைப்படம் எடுத்தேன். குப்தர் கால சிற்பங்களில் யாழ் வாசிக்கும் பெண்மணி இருக்கிறாள். சுமேரியாவில் கிடைத்த சில பாகங்களைக் கொண்டு செயற்கையாக யாழை வடிவமைத்து மியூஸியங்களில் வைத்திருக்கின்றனர். எனவே உலகம் முழுதும் யாழ் அல்லது யாழ் போன்ற கருவிகளை மக்கள் இசைத்து மகிழ்ந்தது தெரிகிறது. இசை என்பது சர்வதேச தொடர்பு மொழி (Music is a universal language) . பிராணிகளையும் மயக்கும் இசைக்கு மயங்காதோர் யார்?

 

முடிவுரை

உலகம் முழுதும் இசை வழங்கியதும் தோல்,காற்று (குழல்), நரம்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டதும் பல நாட்டு வரலாறுகளைப் படிப்போருக்குத் தெள்ளிதின் விளங்கும். ஆயினும் இந்து சமய நூல்கள் மிகவும் தெளிவாக 100, 1000 தந்திகள் உள்ள இசைக்கருவிகள் பற்றிப் பகர்வதும், சரஸ்வதி முதல் வீணா தட்சிணாமூர்த்தி வரை இறைவன் கையிலும் இசைக்கருவிகளை ஏற்றி வைத்திருப்பதும், நாம் இக்கலையில் வல்லவர்கள், ஏனையோரைக் காட்டிலும் முன்னேறியவர்கள் என்பதைக் காட்டும்..

 

 

அதுமட்டுமல்ல; ஏழு ஸ்வரங்களை உலகிற்குக் கற்பித்தவர்கள் நாம்தான்.

இன்று பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், கிரேக்கத்திலும் யாழ் வடிவ இசைக்கருவிகள் புழங்குகையில் தமிழ்நாட்டில் மட்டும் அவை எப்படி சுவடே இல்லாமல் போயின என்பது கேள்விக்குறியாகத் தொக்கி நிற்கும். பழைய பரதக் கலைக்கு உறைவிடமாகத் திகழும் தமிழ் கூறு நல்லுலகத்தில் யாழ் மட்டும் நழுவி விழுந்தது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

 

இசைத்துறையில் ராகம் தாளம்  ஆகியவற்றை ஒப்பிட்டு, ஆழமாக ஆராய்ந்தால் இன்னும் பல புதிய செய்திகள் கிடைக்கலாம்.

–subham-

 

பாரதி 97! – PART 2 (Post No.5411)

WRITTEN BY S NAGARAJAN

Date: 10 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 7-52 AM (British Summer Time)

 

Post No. 5411

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மஹாகவிக்கு அஞ்சலி

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி .. ..

பாரதி 97! – PART 2

 

ச.நாகராஜன்

 

  1. ஜாதிகள் இல்லையென்றவர்

ஜாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று முழங்கியவர்

 

  1. ஆதி திராவிடர்க்கு பூணூல் போட்டு புரட்சி செய்தவர்

1913இல் கனகலிங்கம் என்ற ஆதி திராவிடர்க்குப் பூணூல் போட்டு புரட்சி செய்தார்.

 

  1. வானியல் நிபுணர்

வானத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் பாட்டில் கொணர்ந்தவர். வானில் சுழலும் கோளங்களை இறையுடன் இணைத்தவர்

  1. தேசீய ஒற்றுமை போதித்தவர்

முப்பது கோடி முகமுடையாள் உயிர்

மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்

செப்புமொழி பதினெட்டுடையாள், எனில்

சிந்தனை ஒன்றுடையாள்

என்றும் நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு என்றும் முழங்கியவர்.

 

  1. பெண் விடுதலை கேட்டவர்

பெண்ணுக்கு விடுதலை வேண்டும்  என்றும் பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்றும் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த பூமியில் என்றும் பாடி பெண்களை அடிமைகளாக நடத்தக் கூடாது என்று முழங்கியவர்.

 

  1. சிறந்த மொழிபெயர்ப்பாளர்

ஆங்கிலத்திலிருந்து அரவிந்தர் கவிதை உள்ளிட்டவற்றையும் மற்றும் ஏராளமான கட்டுரைகளையும் மொழி பெயர்த்தவர். பத்திரிகை துறையிலும் அவர் செய்த மொழிபெயர்ப்புப் பணி மிகச் சிறப்பான ஒன்று.

  1. வரலாற்று ஆசிரியர்

காங்கிரஸ் மஹாசபையின் வரலாற்றை எழுதியவர். சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட வரலாற்றுப் பின்னணி பாடல்களைப் புனைந்தவர்.

 

  1. புதிய தமிழ்நடையை உருவாக்கியவர்

சுவை புதிது பொருள் புதிது என எளிய நடையை உருவாக்கியவர். பாடல்களிலும் இனிய, எளிய, புதிய சந்தங்களைக் கையாண்டவர். கடினமான சொற்களை அறவே வெறுத்து நீக்கியவர்

 

  1. பலரால் பாராட்டப் பெற்றவர்

பிரான்ஸ் நாட்டு அறிஞர் பாரதியாரது பாடலை மொழிபெயர்த்தார். பரலி.சு.நெல்லையப்பர் அவரது பாடல்கள் எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கானோரால் பாடப்படுவதை நான் காண்கிறேன் என்றார். பல பெரியோராலும், அறிஞர்களாலும், கவிஞர்களாலும் பாராட்டப்பட்டவர்

  1. தமிழறிஞர் உ.வே.சாவைப் பாராட்டியவர்

உ.வே.சாமிநாதையரைப் பாராட்டிப் பாடல் புனைந்தவர். நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி இன்பவகை நித்தம் துய்க்கும் கதியறியோம் என்று மனம் வருந்தற்க; பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயிற் துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்குவாயே என்று பாடி அவரை வாழ்த்தியவர்

 

43.காங்கிரஸ் கூட்டங்களில் கலந்து கொண்ட செயல்வீரர்

காங்கிரஸ் மாநாடுகளில் ஆர்வத்துடன் பங்கு கொண்டவர். செயல் வீரர். பலரை சென்னைக்கு அழைத்து கூட்டங்களை ஏற்பாடு செய்தவர்.

 

  1. பகைமை பாராட்டாதவர்

பகைவருக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்று பாடியதோடு அதை வாழ்ந்து காட்டியவர். ஆங்கில துரையின் மனைவி இறந்த போது அதற்கு இரங்கல் தெரிவித்தவர்.ஏராளமான நிகழ்வுகள் அவரது பகைமை பாராட்டாத குணத்தைத் தெரிவிப்பவை.

 

  1. ராஜதந்திர நோக்குடையவர்

பிரிட்டிஷ் இந்தியா அடக்குமுறையை ஏவி விட்ட போதும், அவர் பாடல்களைத் தடை செய்த போதும் மனம் தளராமல் பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்ட புதுவைக்கு ராஜதந்திர நோக்குடன் வந்தார். அங்கும் பணியைத் தொடர்ந்தார்.

 

  1. அஞ்சாநெஞ்சர்

பிரிட்டிஷ் அடக்குமுறைக்குப் பயப்படாதவர். புதுவையிலிருந்து மீண்டும் சென்னைக்கு வருமளவு அவர் நெஞ்சில் உரமிருந்தது. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று முழங்கி அனைவரையும் அச்சத்திலிருந்து விடுவித்தவர்.

 

  1. தபஸ்வி

நீண்ட நேரம் தியானத்தில் அமர்ந்து தவம் இயற்றும் பாங்குடையவர். சொல் ஒன்று வேண்டும் என அனைத்து பிரச்சினைகளுக்குமான மந்திரச் சொல் வேண்டித் தவம் புரிந்தவர்.

 

  1. கொடையாளி

செல்வந்தர் இல்லை என்றாலும் தனக்கு வந்ததை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டவர். ஏழைகளுக்கு அளித்தவர்.

 

  1. வந்தேமாதரம் மந்திரத்தைப் பரப்பியவர்

பங்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம் பாடலை இரு முறை மொழிபெயர்த்தவர். வந்தே மாதரம் என்ற சொல்லை மந்திரச் சொல்லாக்கியவர்; தமிழ்நாடு முழுவதும் பரவக் காரணமானவர்.

  1. படிப்பாளி

புத்தகம் படிப்பதில் ஆர்வம் உடையவர். ஆய்வு செய்பவர். கிடைத்த பணத்தையெல்லாம் கொடுத்து புத்தகம் வாங்கி வந்த சம்பவமும் அவர் வாழ்க்கையில் உண்டு.

 

  1. விருந்தினரை உபசரிப்பவர்

தனது ஏழ்மை நிலையிலும் கூட வந்தோரை உபசரித்து உணவளிப்பவர். கபாலி சாஸ்திரி, வ.ரா. உள்ளிட்டோரை வரவேற்று உபசரித்தவர்; அரவிந்தரிடம் அவர்களை அழைத்துச் சென்றவர்.

 

  1. புதிய நெறி கண்டவர்

புதிய ஆத்திசூடி பாடி காலத்திற்கேற்றபடி நெறிகளை மாற்றியவர்.

 

  1. கல்வியாளர்

தேடு கல்வி இலாததொரு ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல் என்ற புரட்சிப் பாடலைப் பாடி வீடு தோறும் கலையின் விளக்கம் வீதி தோறும் இரண்டொரு பள்ளி என்ற லட்சியத்தை முன் வைத்த சிறந்த கல்வியாளர்.

  1. விஞ்ஞான ஆர்வலர்

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்பது உள்ளிட்ட ஏராளமான அறிவியல் திட்டங்களை மனக்கண்ணால் கண்டு பாடல்களில் அளித்தவர். ஜகதீஸ் சந்திர போஸ் உள்ளிட்டவர்களைப் பாராட்டியவர்.

 

  1. சக்தி உபாசகர்

சிறந்த சக்தி உபாசகர். காளியைப் பற்றி அவர் பாடிய பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்.

 

  1. கண்ணபிரான் பக்தியில் திளைத்தவர்

கண்ணனைப் பல கோணங்களில் கண்டவர். தீராத விளையாட்டுப் பிள்ளையாக, எஜமானனாக, சேவகனாக இப்படிப் பல கோணங்களில் கண்டு பாடல்களைத் தந்தவர்.

 

  1. நல்ல கனவு கண்டவர்

கற்பனையின் சிகரத்தில் ஏறி பல கனவுகளைக் கண்டவர். காணி நிலம் வேண்டும் என்பதில் ஆரம்பித்து சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்பது வரை அவர் கண்ட கனவுகள் ஏராளம்.

 

  1. நடைமுறை வேதாந்தி

ப்ராக்டிகல் வேதாந்தம் என்பதைக் கடைப்பிடித்தார். ஆவது ஆம். போவது போம் என்பது இருந்தாலும் முயற்சியைக் கை விடேல் என்றார்.  மனைவி,மக்கள் வாழ்வு எல்லாம் பொய்யா என்ன என்று கேட்டவர்.

  1. பாஞ்சாலி சபதம் இயற்றியவர்

மகாபாரதத்தின்  முக்கிய கட்டத்தை விடுதலையை மனதில் எண்ணி காவியமாக இயற்றியவர்.

 

  1. வேதாந்தமாக விரித்துரைக்க ஒரு குயில்பாட்டு கண்டவர்

காதல் காதல் காதல் என்ற அமர வரிகளுடன் உள்ள குயில் பாட்டில் வேதாந்தமாக விரித்துரைக்க யாதானும் சற்று இடமிருக்கிறதா என்று கேட்டு வேதாந்தப் பொருளை அதில் அடக்கியவர்.

 

  1. நடுநிலையாளர்

ஏழ்மையிலும் வளத்திலும் ஒரே மாதிரியாக இருந்தார். பகைவரிடமும் கூட அருள் நோக்கைக் கொண்டிருந்தார். சிறந்த நடுநிலை தலையங்கங்களையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.

 

  1. சிறந்த ஹிந்து

ஹிந்து வாழ்க்கைத் தத்துவத்தை மிகவும் மதித்து வாழ்ந்த சிறந்த ஹிந்து. கீதையின் பால் பற்று கொண்டவர். அதற்கு உரை எழுதியவர்.  பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்; பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான் என்று கீதையை  இரண்டே வரிகளில் சித்தரித்தவர்.

 

  1. பயணி

பல இடங்களுக்கும் பயணம் செய்து வாழ்க்கையின் பல அம்சங்களையும் அலசியவர். கல்கத்தா,சூரத், காரைக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, புதுவை, சென்னை என பாரதியார் சென்ற இடங்களைத் தொகுத்துப் பார்த்தால் அவர் வாழ்க்கையின் பயண அம்சங்கள் தெரிய வரும்.

  1. சிறந்த சித்தர்

எனக்கு முன்னே சித்தர் பலர் வந்தாரப்பா – யானும் வந்தேன் ஒரு சித்தன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பாரதியார் கண்ட சித்தர்கள் பலர். கோவிந்த சாமி உள்ளிட்ட பலரிடம் பழகியவர்; பல அனுபவங்களைப் பெற்றவர்.

 

அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்.

 

குறிப்பு: மேலே கண்ட சிறப்புக்களை விளக்கும் விதத்தில் ஏராளமான பாடல்களையும் கட்டுரைகளையும் பாரதியார் படைத்துள்ளார்.பல அரிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.

இவற்றை இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள ஏராளமான பாரதியார் பற்றிய கட்டுரைகளில் காணலாம்.  (www.tamilandvedas.com பார்க்கவும்)

இந்தக் கட்டுரையாசிரியர் தொகுத்துள்ள பாரதி போற்றி 1000 என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ஆயிரம் பாடல்களிலும் பாரதியின் சொல்லில் அடங்கவொண்ணா சிறப்புக்களைப் படித்து இன்புறலாம். (www.tamilandvedas.com பார்க்கவும்)

 

அத்துடன் மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் என்று இக்கட்டுரையாசிரியர் எழுதி வரும் தொடரில் உள்ள நூல்களைப் படித்தும் பாரதியாரின் சிறப்புக்களை உணரலாம். இந்த தளத்தில் இதுவரை 56 அத்தியாயங்களில் 56 நூல்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. (www.tamilandvedas.com பார்க்கவும்)