New Tamil Lesson 12 Verb EAT சாப்பிடு (Post No.12,666)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,666

Date uploaded in London – –  –  2 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

picture= AVAL SAAPPITUKIRAAL= SHE EATS

Infinitive = To eat = சாப்பிட

சாப்பிடு

1.            நான் காலை 7 மணிக்கு சாப்பிட்டுவிட்டேன்.

Naan , kaalai, 7 Manikku, saappittuvitten

I, morning , at 7, had eaten= I had eaten at 7 O Clock in the morning.

Difference between சாப்பிட்டேன்/saappitten and சாப்பிட்டுவிட்டேன் saappittuvitten.

சாப்பிட்டேன்= ATE; சாப்பிட்டுவிட்டேன்= had eaten or has eaten.

சாப்பிட்டுவிட்டேன்= compound verb; VIDU form of verbs.

7 Manikku = At 7; in Tamil, we add MANIKKU after the hours 1 2 3 4 5 upto 12. It is equivalent to at ………O’Clock in English.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

2.            நீங்கள் முதலில் சாப்பிடுங்கள். அப்புறம் பேசலாம்.

Neengal, Muthail, Saappidungal. Appuram Pesalaam.

You, First, Eat or please eat; Later, may talk.= Please eat first and we may talk later

பேசலாம்.= Potential form of a verb= MAY or CAN

பேச+ லாம்.; லாம்.= May or can

Vara Laam == may come

Poga Laam=  may go

Saappida Laam= may eat or can eat

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

3.            நான் சாதம் -சோறு சாப்பிடுகிறேன். இட்லி வேண்டாம்.

Naan, Saatham/Soru saappidukiren ; Idli Vendaam= I eat rice; don’t want Idli

Idli = Tamil fpod Steamed Riice cake.

வேண்டாம்.= don’t want

Meaning is I prefer cooked rice instead of Idli

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

4.            அவர்கள் எங்கள் வீட்டில் சாப்பிடுகிறார்கள்.

AvRGAL Engal, Veettil, Saappidukiraarkal= They , At our house, eat = They eat at our house

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

5.            அவர் அங்கே சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்?

Avar, Ange, Saappittuk kondirukkiraar?

He, There, Is eating? = There is he eating? (Look) He is eating there.

Ange = There. Remember the old lesson .

Inge= here; I van= he near by you; Ival= she near you; Ippadi= this way; ivvaaru= in this way; ippoluthu= now

If you replace இ with அ  or எ, meaning changes. One example:

இ ங்கே  = here ; அ ங்கே  =there;  எ ங்கே= where

இ (near by)ங்கே  இ வன் , இவள்  இது  இப்படி இவ்வாறு , இப்பொழுது

அ  (distance)

எ (question)

xxxxxx

6.            இங்கே சாப்பிடுகிற பெண் என்னுடைய பெண்.

Inge, Saappidukira, Pen, Ennudaiya, Pen

Here, Eating one, Girl, My, Girl (daughter)

The girl who is eating is my girl/ daughter.

சாப்பிடுகிற = Saappidukira = one who is eating= present participle

சாப்பிட்ட = sappitta = Past participle= one who ate

சாப்பிடும்= saappidum= Future participle ; or habitual (regularly) = the one who will be eating or one who regularly eats

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

7.            இது யார் சாப்பிட்ட தட்டு?

Ithu, Yaar, Saappitta Thattu?

This, Who, eaten, plate?

Who ate in the plate? Or Who had used this plate for eating? Who was the person who had eaten in the plate?

சாப்பிட்ட= saappitta = past participle

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

8.            அண்ணன் சாப்பிட்டான். ஆனால் அக்கா சாப்பிடவில்லை.

Annan, Saappittaan. Aanaal Akkaa Saappidavillai

Elder brother, ate. But elder sister Did not eat.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

9.            சாப்பிட்டதும் தூங்காதே. கொஞ்சம் நட.

Saappittathum, Thoongaathe

Ater eating, Don’t Sleep == don’t eat immediately after eating= Don’t sleep as soon as you eat

சாப்பிட்ட+ தும்= as soon as you eat.

Odiyaathum = as soon as (you) run

Vanthathum = as soon as come

Padiththathum = as soon as read

xxxxx

10.          நான் மாமிசம் மீன் சாப்பிடமாட்டேன்.

Naan, Maamisam, ,Meen, Saappida maatten=

I, Meat, Fish, wont eat.= I wont eat meat or fish

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

11.          அந்த நாய் எதையும் சாப்பிடும்..

Antha , Naay, Ethaiyum, Saappidum.

That, Dog, Anything, Would eat= That dog would anything.

Look at the use of UM after Interrogative/ Question forms

எதையும்= anything/ Ethaiyum

 எங்கேயும்= wherever- engeyum; also anywhere

எப்படியும்= whatever way = eppadiyum; also in any way

யாரையும்= anyone, Yaaraiyum= whoever I may be;

எப்பொழுதும்= always= Eppozuthum= at any time

To be continued………………………………………………

Tags- New Tamil , Lesson , Verb eat 12

இலங்கையில் 52 ராமாயண தலங்கள்; நாகர்கோவில் கப்பல் விழா- Part 46 (Post.12,665)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,665

Date uploaded in London – –  –  2 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 46

105.நாகர் கோவில் கப்பல் திருவிழா

தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களில் மரத்திற்குக் கீழே நாகர் சிலைகள் இருப்பதைக் காணலாம். இலங்கையில் நாகர் / பாம்பு சிலைகள் தனி சந்நிதிகளிலேயே காணப்படுகின்றன. இலங்கையில் நாகர் வழிபாட்டுக்குப் புகழ்பெற்ற ஊர் நாகர் கோவில் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோவில் போலவே ஊர்பெயரும் கோவிலும் உடைத்து.

இந்த ஊர் ஒரு காலத்தில் நாகர் ஆட்சியின் தலைநகராக இருந்திருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு;  இதை மெய்ப்பிக்கும் வகையில் பழங்காலக் காசுகளும் இந்த ஊரில் கிடைத்துள்ளன.

பருத்தித்துறை நகரிலிருந்து 12 மைல் தொலைவில் நாகர்கோவில் இருக்கிறது  இதன் அருகில் இருக்கும் வல்லிபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட தங்க கல்வெட்டில் நாகர் ஆட்சி பற்றியும் குறிப்பு உளது. அருகில் செம்பியன்பட்டு முதலிய ஊர்கள் இருப்பது ஒரு காலத்தில் நடந்த சோழர் ஆட்சிக்கும் சான்று பகர்கின்றன .

நாக தம்பிரான் சந்நிதியில் பாம்புடன் சிவன் இருக்கிறார். தம்பிரான் என்ற சொல்லை சிவபிரானுக்கும் பெரிய புராணத்தில் சேக்கிழார் பயன்படுத்துகிறார். கோவிலைச் சுற்றி நான்கு தீர்த்தங்கள் இருக்கின்றன  அவை பல வியாதிகளைக் குணப்படுத்தும் என்று  பக்தர்கள் நினைக்கிறார்கள். பாம்புக்கடிக்கும் பலவியாதிகளுக்கும் கைகண்ட மருந்தான மூலிகையும் இங்கே வளருகிறது

நாகர்கோவிலில் கப்பல் திருவிழா

புரட்டாசி மாதத்தில் இங்கு வரலாற்றுச் சம்பவம் ஒன்றினை நினைவுகூறும் கப்பல் திருவிழா நடக்கிறது பத்து நாள் உச்சவத்தில் முக்கிய விழா ஏழாம் நாள் இரவில் நடக்கும்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர், போர்ச்சுக்கீசிய வணிகர்கள் வந்து பொருட்களை விற்றனராம். தங்களுக்கு  ஊழியம் செய்ய 100 இளைஞர்கள் வேண்டும் என்று சொல்லி பொருள் ஆசை காட்டினராம். அதற்கு ஊர் மக்கள் இணங்கவில்லை. உடனே அவர்கள் வலுக்கட்டாயமாக 100 இளைஞர்களைப் பிடித்து கப்பலில் ஏற்றினர். உடனே அவர்கள் இறைவனை வேண்ட , ஆண்டவனே பாம்பு உருவத்தில் வந்து அதிசயம் நிகழ்த்தி பறங்கியரை அடி பணிய வைத்தார்.

கப்பல் தலைவன் பாய் மரத்தை அவிழ்த்து கப்பலை ஓட்டுவதற்கு முனைந்தபோது, விரித்த பாய் மரத்தில் ஒரு பாம்பு படம் எடுத்து ஆடியது. அதனை அவன் கத்தியால் வெட்டியவுடன் நூற்றுக்கணக்கான பாம்புகள் அங்கே நெளிந்து அவனை அச்சுறுத்தின. உடனே கப்பலில் இருந்த இளைஞர்கள் இது நாக தம்பிரானின் செயல் என்றும் தங்களை விடுவித்தால் பிரச்சினை தீரும் என்றும் அறிவுரை சொன்னார்கள். கப்பல் மாலுமியும் அதற்கு இணங்கியபோது பாம்புகளும் மறைந்தன. அப்போது முதல், பக்தர்கள் நூற்றாண்டுக் கணக்கில் இவ்விழாவினைக் கொண்டாடிவருகின்றனர்.

இந்த தல புராணத்தில் சுவையான கூடுதல் செய்திகளும் உண்டு. நாகர்கோவில் இளைஞர்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்று மாலுமி கேட்டபோது, அவர்கள் வெள்ளை நிற விபூதியை நெற்றியில் அணிந்திருப்பார்கள் என்று மக்கள் சொன்னார்கள். அதுமட்டுமின்றி அவ்வாறு வெண் பொட்டு ஆட்களை விடுவித்த பின்னரும் கப்பல் நகரவில்லையாம். கப்பல் அறை எண் 18-ல் ஒரு முதிய மாதுவை வேலை செய்ய பிடித்து அடைத்துவைத்துள்ளார்கள். அந்த மாது இந்த ஊரைச் சேர்ந்தவள் என்று ஊர் மக்கள் சொல்லவே அந்தப் பெண்மணியயையும் பறங்கியர்  விடுவித்தனர். கப்பலும் நகர்ந்தது.

கப்பல் உற்சவம் பற்றிய 2023 அறிவிப்பு

 24.09.2023 ஆரம்பமாகி , .11 தினங்கள் இடம்பெறும் உற்சவத்தில் , 29 ஆம் திகதி  பாம்பு திருவிழாவும், 30ஆம் திகதி கப்பல் திருவிழாவும், முதலாம் திகதி  வேட்டைத் திருவிழாவும், இரண்டாம் ஆம் திகதி சப்பர திருவிழாவும், மூன்றாம் திகதி  சமுத்திர தீர்த்தமும், புதன்கிழமை பட்டுத் தீர்த்தமும் இடம்பெறவுள்ளன.

இது விழாவில் வரிசைக்கிரமத்தில் என்ன என்ன நிகழும் என்பதை அறிவிக்கிறது தற்காலத்தில் பல ஊர்களில் நாக தம்பிரான் உற்சவங்கள் நடக்கின்றன.

xxx

இலங்கையில் 52 ராமாயண தலங்கள்

இலங்கையில் கன்னியா வெந்நீர் ஊற்றுகள், வில்லூண்டி தீர்த்தம், திருகோணமலை ராவணன் பாறை , பல அனுமார் தலங்கள் , சீதை கோவில், ராமர் பூஜித்த லிங்கங்கள் என 52 ராமாயண திருத்தலங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றைக் காண்போம். முதலில் அனுமார் கோவில்களில் துவங்குவோம் .

106.இலங்கையில் ஆஞ்சனேயர் கோவில்கள்

106.கொழும்பு நகர ஆஞ்சனேயர் கோவில் Panchamuga Anjaneyar Temple

கொழும்பு நகரத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் கல்கிசை  பகுதியில்  ஒரு அனுமன் கோவில் கட்டப்பட்டுள்ளது  1996ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்தக் கோவிளுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. ராமர், அனுமன், விநாயகர், முருகனுடன் சமண மதத்தைச் சேர்ந்த பார்ஸ்வநாதர் சிலையும் இருப்பது ஒரு சிறப்பு.

இரண்டாவது சிறப்பு ஆஞ்சனேயருக்கு தனியாக தேர்  உள்ள கோவில் இது. இங்கு நின்று அருள்புரியும்  ஆஞ்சனேயர் , பஞ்சமுக ஆஞ்சனேயர் ஆவார் .

Panchamuga Anjaneyar Temple location / access

No 3/11, Sri Bodhirukkarama Road, (Vihara Lane) Kalubowila, Dehiwela,

Xxxx

107 .இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்

நுவரெலியா மாவட்டத்தில் இறம்பொடை நகருக்கு அருகிலுள்ள மலை உச்சியில் அமைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.   இலங்கை சின்மயா மடாலயத்தினரால் நிருவகிக்கப்படுகிறது. ராம- ராவணன் யுத்தத்தில் ராமருக்கு உதவ ஒரு படை இங்கே  இருந்தது. ராமர் படை என்பது இறம்பொடை  என்று மருவி விட்டது.

இந்த ஆலயம் சுவாமி சின்மயானந்தரின் விருப்பத்துக்கேற்ப 2001 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் சுவாமிகள் இலங்கை வந்திருந்த போது, இந்த இறம்பொடையில் உள்ல வெவண்டன் மலைப் பகுதியைக் கண்டு, அதற்கு “இராம்போதை” (இராமர் பற்றிய அறிவு) என்ற பெயரையும் சூட்டி, மும்பையில் உள்ள குருகுல வேதாந்தக் கல்வி நிலையம் போன்று இலங்கையிலும் அதுபோன்ற ஆசிரமத்தை இவ்விடத்தில் அமைக்க வேண்டினார்..

1996 -ஆம் ஆண்டில் சுவாமி தேஜோமயானந்தர் இலங்கைக்கு வந்தபோது இவ்விடத்தில் பக்த அனுமன் ஆலயம் அமைக்க ஆசி வழங்கினார். 1997 ஆம் ஆண்டில் ஆலயத்துக்கான பூமி பூசை நடைபெற்றது. மகாபலிபுரத்தில் 18 அடி உயர அனுமர் சிலை வடிவமைக்கப்பட்டு 1999 ஆம் ஆண்டில் இவ்விடத்தில் பிரதிட்டை செய்யப்பட்டது. பின்னர் 2001 ஏப்ரல் 8 ஆம் நாள் குடமுழுக்கு நடைபெற்றது. பெளர்ணமி பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது. ஆன்மீகப் பணிகளுடன் கல்வி, சமூகப்பணிகளையும் ஆலயத்தினர் செய்து வருகின்றனர்.

To be continued…………………….

—subham—

Tags- கப்பல் திருவிழா , நாகர்கோவில், நாக தம்பிரான், இலங்கை,part 46, இராமாயண, தலங்கள் , அனுமார், கோவில், ஆஞ்சனேயர்

ஆர்டிகிள் 370 என்ன சொல்கிறது? (Post No.12,664)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,664

Date uploaded in London –  –  2 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

ஆர்டிகிள் 370 என்ன சொல்கிறது? 

ச.நாகராஜன் 

இந்திய அரசியல் சாஸனத்தில் ஆர்டிகிள் 370 ஒரு முக்கியமான பிரிவாக அமைகிறது.

இது என்ன சொல்கிறது என்பதை ஒவ்வொரு இந்தியனும் அறிய வேண்டியது கடமையாகும்.

ஆர்டிகிள் 1 மற்றும் ஆர்டிகிள் 370 மட்டுமே ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தும் என்று முதலிலேயே ஆர்டிகிள் 370 கூறி விடுகிறது.

அப்படியானால் இந்திய அரசியல் சாஸனத்தின் இதர பிரிவுகள்???

அங்கு செல்லாது என்று அர்த்தம்.

இனி ஆர்டிகிள் 370இல் உள்ள முக்கியக் அம்சங்களைப் பார்ப்போம்.

·         ஜம்மு-காஷ்மீர் குடிமக்களுக்கு இரட்டை குடியுரிமை உண்டு.

·         ஜம்மு-காஷ்மீரின் தேசீயக் கொடி இந்திய தேசியக் கொடியை விட வேறானது.

·         ஜம்மு-காஷ்மீரின் சட்டசபையின் ஆயுள் காலம் ஆறு வருடங்கள். ஆனால் இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களில் உள்ள சட்டசபையின் ஆயுள் காலம் ஐந்து வருடங்கள் மட்டுமே தான்!

·         ஜம்மு-காஷ்மீரில் உள்ள குடிமக்கள் இந்திய தேசீயக் கொடியை இகழ்ந்தால் அது குற்றமாகாது. அது போலவே இந்தியாவின் இதர தேசீய அடையாளங்களை இகழ்ந்தாலும் அது குற்றமாகக் கருதப்படமாட்டாது.

·         ஜம்மு-காஷ்மீர் குடிமக்களுக்கு இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் செல்லாது.

·         ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்த மட்டில் இந்திய அரசு மிகவும் சில ‘எல்லைக்குட்பட்ட’ விஷயங்களில் மட்டுமே சட்டங்களை இயற்ற முடியும்.

·         ஜம்மு-காஷ்மீரில் ஒரு காஷ்மீரிப் பெண் இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களைச் சேர்ந்த ஒரு ஆணை மணம் புரிந்தால் அந்தப் பெண்ணுக்கான காஷ்மீர் குடியுரிமை ரத்தாகி விடும்.

·         ஆனால் அதே காஷ்மீரிப் பெண் ஒரு பாகிஸ்தானைச் சேர்ந்த ஆணை மணம் புரிந்தால் அந்த ஆணுக்கு ஜம்மு-காஷ்மீர் குடியுரிமை கிடைத்து விடும்.

·         ஆர்டிகிள் 370 இருப்பதால் ஜம்மு-காஷ்மீரில் மட்டும் RTI எனப்படும் RIGHT TO INFORMATION சட்டப்படி செல்லுபடியாகாது. இதே போலத் தான் இங்கு RTE எனப்படும RIGHT TO EDUCATION மற்றும் CAG சட்டப்படி செல்லுபடியாகாது.

·         ஆர்டிகிள் 370 இருப்பதால் ஒரு பாகிஸ்தானிய ஆண் தனக்கு இந்தியக் குடியுரிமை வேண்டும் என்று நினைத்தால் அவன் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், அவ்வளவு தான்!

ஆனால் இது தற்காலிகமானது என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது.

ஆனால் பற்பல வருடங்கள் கடந்தும் கூட இந்த தற்காலிக சட்டப்பிரிவு அப்படியே இருந்து வந்துள்ளது.

இதை ஆழ்ந்து படிப்போர் இது பாரபட்சமான ஒரு பிரிவு என்பதை நன்கு உணர முடியும்.

இதையொட்டிய ஒன்று தான் 35A என்ற பிரிவு.

ஆகவே இந்த தற்காலிகத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பது தான் மோடி அரசின் முடிவு. இதுவே இந்திய மற்றும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் உள்ளார்ந்த ஆசையும் கூட.

இதற்கு முதற்படி எடுத்து வைத்தது மோடி அரசு.

இதன் படி 35A இன் பல அம்சங்கள் நீக்கப்பட்டு விட்டன!

இன்னும் சில அடிப்படை உரிமைகள் ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்த மட்டில் இந்திய மக்களுக்கு கிடையாது. அங்கு சொத்து வாங்க முடியாது. வணிக நிறுவனம் ஆரம்பிக்க முடியாது. இவை போன்ற சர்ச்சைக்குரிய பல அம்சங்கள் உண்டு.

ஆகவே முழுவதுமாக ஆர்டிகிள் 370 மற்றும் 35A திரும்பப் பெறப்பட வேண்டும்.

அது சீக்கிரமே வரட்டும் என்பது தான் இந்திய மக்களின் ஒட்டு மொத்த ஆசை.

இது வேண்டாம் என்று கூறும் சிலரை அரசியல் ஆதாயத்தைத் தேட நினைக்கும் தேச விரோத சக்திகளோ என்று மக்கள் சந்தேகப்படுவது இயல்பே!

***

ஆதாரம், நன்றி :- கல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழ் TRUTH – VOLUME 84 ISSUE – 5 (DATED 17-3-2017), KASHMIR,

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 6 (Post No.12,663)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,663

Date uploaded in London – –  –  1 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 6

பர்த்ருஹரி பாடல்கள் – பகுதி 6

SLOKA 16

हर्तुर्याति न गोचरं किम् अपि शं पुष्णाति यत्सर्वदा‌உप्य्

अर्थिभ्यः प्रतिपाद्यमानम् अनिशं प्राप्नोति वृद्धिं पराम् ।

कल्पान्तेष्वपि न प्रयाति निधनं विद्याख्यम् अन्तर्धनं

येषां तान्प्रति मानम् उज्झत नृपाः कस्तैः सह स्पर्धते ॥ 1.16 ॥

ஹர்துயாதி ந கோசரம் கிம் அபி சம் புஷ்ணாதியத் ஸர்வதாப்ய

அர்த்திப்யஹ   ப்ரதிபாதயமானம் ஐசம் ப்ராப்னோதி வ்ருத்திம் பராம்

கல்பாந்தேஷ்வ்பி ந ப்ரயாதி நிதனம் வித்யாக்யம் அந்தர் தனம்

யேஷாம் தான்ப்ரதி மானம் உஜ்ஜத் ந்ருபாஹா கஸ்தைஹை சஹ  ஸ்பர்ததே

கள்ளன் கொடுபோகான் கல்விச் செல்வத்தையது

கொள்ளை கொள்ள இன்பங் கொடுக்குமே –அள்ளக்

குறையாதழியாது  கூர்ந்தது பெற்றோரைத்

தறை யாளு வோனு மொவ்வான் சால்பு —16

திருடர்களால் காணமுடியாதது;

எப்போதும் பேரின்பம் நல்குவது;

கொடுத்தாலும் குறைவு படாமல் அதிகரிக்கும்;

யுகமுடிவிலும் அழியாதது எதுவோ அதுவே கல்வி.

மன்னர்களே! உங்கள் கர்வத்தை/ அகந்தையை கற்றோரிடம் காட்டாதீர். 

அறிவாளிகளுடன் யார் போட்டி போட முடியும்?

 இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்

வெள்ளதால் /வெள்ளத்தே போகாது வெந்தணலால் வேகாது

வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது

கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது

கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது

கல்வியென்னும் உள்ளத்தே பொருளிருக்க

உலகெல்லாம் பொருள்தேடி உழல்வதென்னே

XXXX

SLOKA 17

இன்னுமொரு பாடல்

अधिगतपरमार्थान्पण्डितान्मावमंस्थास्

तृणम् इव लघु लक्ष्मीर्नैव तान्संरुणद्धि ।

अभिनवमदलेखाश्यामगण्डस्थलानां

न भवति बिसतन्तुर्वारणं वारणानाम् ॥ 1.17 ॥

அதிகத பரமார்த்தான் பண்டிதான்மாவ மம்ஸ்தாஸ்

த்ருணம் இவ லகு லக்ஷ்மீர்நைவ தான் ஸம்ருணததி

அபிநவமதலேகா ஸ்யாமகண்டஸ்தலானாம்

ந பவதி பிஸந்துர் வாரணம் வாரணானாம்

எல்லோரிடமும் கருணை காட்டும் அறிவாளிகளை 

அவமதிக்காதீர்கள். செல்வம் என்பது புல்லுக்குச் சமம். அது கற்றோருக்கு அணைபோட முடியாது; மத நீர்ச் செறிவால்

முகம் கருத்த யானைகளை    தாமரை மலர்த் தண்டால் கட்டிப்போட யாரே வல்லார்?

உண்மை வித்துவான்களை  நீ உல்லிங்கனஞ் செய்யேல்

எண் மையதன்னார்க்குன் இருநிதியம் — நண்ணு மதைக்

கண்டுன் பாற் சேரார் கரியையொரு தாமரை நூற் 

கொண்டே கட்டலாகுமோ கூறு –17

xxx

SLOKA 18

இன்னுமொரு பாடல்

अम्भोजिनीवनविहारविलासम् एव

हंसस्य हन्ति नितरां कुपितो विधाता ।

न त्वस्य दुग्धजलभेदविधौ प्रसिद्धां

वैदग्धीकीर्तिम् अपहर्तुम् असौ समर्थः ॥ 1.18 ॥

அம்போஜினீவன விஹார விலாஸம் ஏவ

ஹம்ஸஸ்ய ஹந்தி நிதராம் குபிதோ விதாதா

ந த்வஸ்ய துக்தஜல பேதவிதௌ ப்ரசித்தாம்

வைதக்தீ கீர்த்திம் அபஹர்தும் அசௌ ஸமர்த்தஹ

பிரம்மாவுக்குக் கோபம் வந்தால் தாமரைத் தடாகத்தில் செல்லும் அன்னப் பறவைகளைத் தடுத்து மகிழ்ச்சியைக் கெடுக்கலாம். ஆனாலும் பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னத்தின் அபூர்வ சக்தியை விதியாலும் மாற்ற முடியாது.

அயன் சினந்தால் அன்னத்தை  அந்தாமரைமேல்

வியந்திருந்தானநன்றியதன் மேன்மைச் சுயங்குணமாம்

நீரினின்று பால் பிரிக்கும் நேர்மைதனை மாற்றுவனோ

தேரினிது  வித்துவான் திறம் —18


xxxxx subham xxxxxx

 Tags –Bhartruhari 6, Nitisataka 6

Sandhya Vandana is for all Castes according to Ramayana

Who can do Sandhya Vandana as per Ramayana?

October 31, 2023(Article lifted from HINDU POST)Thanks to Hindu post

Posted on 1-11-2023 by swami_48@yahoo.com

What is Sandhya Vandana?

The Sandhya Vandana ritual is performed for Devi Gayatri, Savitri, and Saraswati, thrice a day:

·         just before dawn

·         at noon

·         in the evening when the sun is half set

The steps in the ritual may differ as per the instructions of your kula-guru (family’s religious teacher). Generally, it includes performing pranayama, offering arghya to Surya, and chanting the Pranava mantra Aum with the Gayatri mantra. After the Sandhya Vandana ritual, the person can perform an Agnihotra or other prescribed yagnya and proceed with routine work. A person who regularly performs Sandhya Vandana with devotion obtains a healthy life.

Who can perform Sandhya Vandana?

1.   Son of a Vaishya and Shudra

While hunting, Dasharatha fatally hurt Shravana by mistake. Dasharatha then informed his aged parents. Shravana was the dutiful son who took meticulous care of his blind and dependent parents. Shravana’s Vaishya (merchant) father and Shudra (service-oriented) mother were grief-stricken because he was a devoted child and their only support. His sad ascetic father remarked that Shravana used to do his Sandhya Vandana and Yagnya rituals every day. He then cursed Dasharatha to die pining for his son. Indra himself came in an aerial chariot to take Shravana to Deva-loka.

·         Brahmana(s) and Kshatriya(s)

Rishi Vishwamitra took Shree Rama and Lakshmana to the forest to deal with the Rakshasa(s) who were disturbing their Brahmanical rituals. The trio performed the Sandhya Vandana rituals at dawn before traveling further. After many Rakshasa(s) were killed, they reached Videha, where Rama married Seeta.

·         Sumantra, a charioteer

Just before Rama’s coronation, Kaikeyi wished for his exile and her son Bharata’s kingship. Rama, Lakshmana, and Seeta decided to leave the lavish palace of Ayodhya. Dasharatha’s charioteer Sumantra escorted them out of the city towards the forest. In the evening, Sumantra unyoked the horses and performed his Sandhya Vandana rituals. The next day, he dropped them at Shringaverapura on the banks of River Ganga and returned.

·         Ravana, the son of a Brahmana and a Rakshasi

Ravana worshipped Bhagwan Shiva, who reluctantly granted him the Atma-linga. While carrying it, Ravana felt a tremendous urge to urinate due to Bhagwan Shiva’s powers of Maya. Ravana saw a young cowherd and asked him to hold the Atma-linga while he completed the job, which took quite a long time. The cowherd was Bhagwan Ganesha in disguise, who ran away with the Atma-linga, with Ravana in pursuit.

Further, Bhagwan Vishnu clouded the sun, making Ravana stop for his Sandhya Vandana evening prayers. The cowherd called out Ravana 3 times as pre-decided and put down the heavy Atma-linga. The furious Ravana hit out at the boy. When Bhagwan Ganesha appeared in his true form, Ravana apologized. Ravana then tried his best to dislodge the Atma-linga but failed.

·         Vali, the monkey king

Vali was the brave and strong ruler of Kishkindha. Once, he was reciting his Sandhya Vandana prayers at the confluence of 3 oceans in the south. Ravana had attacked him from behind, only to have Vali toss him all around the world. The Rakshasa swore that he would never attack Vali again and begged for his friendship which the vanara granted. Ravana was to later abduct Seeta, and Vali would kidnap his brother Sugreeva’s wife Ruma.

·         Seeta, the Queen of Ayodhya

When Hanuman was searching for Seeta, he reached the beautiful Ashoka Vatika. It was almost daybreak. Thinking she might come to a water stream for her Sandhya Vandana, he decided to wait on a nearby tree. There, he found and recognized Seeta since he had seen her fly past in the Pushpaka vimana. Later, Hanuman burned down Lanka and reported the events back to Rama. This led the vanara sena to construct the auspicious Rama Setu and the start of the war against the Rakshasa(s).

·         Hanuman, the vanara Dev

When Shree Ram and Lakshmana were hurt on the battlefield, Hanuman carried a mountain with the sanjeeevani herbs to cure them. While returning the mountain back, Hanuman took a break for his Sandhya vandana prayers. Later, Lakshmana killed Indrajit, who wanted to perform an Asuric yagnya, and Rama killed Kumbhakarna and Ravana.

1.   The royal couple

Rama and Seeta returned to Ayodhya and sat on the throne. Their daily routine concluded with the performance of the Sandhya Vandana ritual in the evening, having dinner, visiting temples for devotional worship, and resting at night.

Thus, Ramayana shows that a person from any of the 4 varnas (profession) or 4 varga (stages of life) can perform the Sandhya Vandana rituals.

(This article is part of an ongoing series on Ramayana by Shri Gaurang Damani and excerpted from his book “Untold Stories of Ramayana”.)

(Featured Image Source: Temples India Info)

xxxxxxx

ஐயனார் கோவில்கள் -இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 45

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,662

Date uploaded in London – –  –  1 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 45

இலங்கைத்  தீவிலுள்ள சுமார் 4000 கோவில்கள் பட்டியலும் எல்லோருக்கும் கிடைக்கிறது. ஆயினும் அதிலுள்ள பழமையான, முக்கியமான 108 ஆலயங்களை பற்றி எழுதத் துவங்கினேன். இன்னும் ஐயனார் கோவில்கள், ஐயப்பன் கோவில்கள் , நாச்சிமார் கோவில்கள், சப்த மாதா கோவில்கள், சீதா தேவி கோவில், ராமாயணத் தொடர்புள்ள கோவில்கள், நாகர் கோவில்கள்,பாபா கோவில்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவைகளில் முக்கியமானவற்றைக் காண்போம் .

103.சப்தமாதா கோவில் , இலங்கை

இலங்கையில் 7 கன்னிமார்கள் சப்தமாதா கோவில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் என்னும் இடத்தில் சப்த கன்னிமார் ஆலயம் உள்ளது. இங்கு ஜூஉலை மாதம் வருடாந்திர உற்சவம் நடக்கிறது. பக்தர்கள் கடற்கரைக்குச் சென்று தீர்த்தம் எடுத்துவந்து வழிபாடு செய்கின்றனர் .

பண்டத்தரிப்பு வட்டாரத்தில் கேணிக்கட்டு அருள்மிகு கன்னிமார் ஆலயம் இருக்கிறது.

ஒட்டுசுட்டான் – புதுக்குடியிருப்புக்கு இடையிலுள்ள மண்ணாக்கண்டல் பகுதியில் கோவில் இருப்பதை நவரட்ணம் தனது புஸ்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இவைகளில் பல,  நாச்சிமார் கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

வன்னி பிரதேசத்தில் 7 கன்னிமார்கள் வழிபாடு அதிகம் காணப்படுகிறது

xxxxxxx

வன்னியில் 7 வீர தெய்வங்கள்

ஹாலந்து நாட்டு ஒல்லாந்துப் படைகள் வன்னி குறுநில மன்னர்களையும் தளபதிகளையும் கொன்றபோது  அவர்களுடை மனைவியர் 7 பேர் தீக்குளித்து இறந்ததால் அவர்களை 7 வீர தெய்வங்கள் என்று வணங்கும் வழக்கமும் இருக்கிறது. ஆயினும் சப்த மாத்ரிகா சிலை கள் இதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவின் எல்லாப் பகுதியிலிருந்தும் கிடைப்பதால், இது ஆதிகாலத்திலேயே இங்கு இந்துக்களால் அறிமுகப்படுத்தகப்பட்டதும் தெரிகிறது.

மாற்றானின் கரம்பட்டு மாசுபடும் மானமதை

ஏற்காது மாதாக்கள் உயிரிழக்க சித்தமானார்

பொல்லாத நஞ்சுநிறை குன்றிமணி வித்துக்களை

செங்கல்லுடன் இடித்துத் துவைத்து கரந்தாங்கி ….

பேராறு மாதாக்கள் பணிப்பெண்ணுடன் சேர்ந்து

வீரா வேசமுடன் நஞ்சுண்டு  மடிந்தனரே …

கற்புமிகு மாதாக்கள் எழுவரையும் கைதொழுது

அற்புருக நின்றார்கள்  வன்னிவள நாட்டினர்

( வன்னி நாய்ச்சிமார் மான்மியம்)

அவர்கள் இறந்தபின்னர் தகனம் செய்யப்பட்டதால் தீக்குளித்தனர் என்ற சொல்லும் பொருத்தமாகவே உள்ளது.

Xxx

104. ஐயனார் கோவில்கள்

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் மிகப்பெரிய ஐயனார் உருவ சிலைகளையும் அருகில் குதிரைகளையும் காணலாம். தர்ம சாஸ்தா என்று ஐயனாரை அழைப்பதால்  சபரிகிரி ஐயப்பனுக்கும் ஐயனாருக்கும் தொடர்பு உண்டு; இருவரும் ஒருவரே என்று சொல்லுவோரும் உண்டு.

 கருணையே வடிவான சிவ பெருமான் பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்ததும் அவன் அதை சிவன் தலையிலேயே கை  வைத்து சோதிக்க எண்ணிய போது விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அவனை மயக்கியதும்  புராணக்கதைகளில்  வருகிறது.. அப்போது, சிவனுக்கும் மோகினிக்கும் பிறந்தவரே ஐயனார்  என்பது பிற்காலப் புராணங்கள் தரும் செய்தியாகும் ; கிராம மக்கள் வறட்சி நீங்கி, வளம் கொழிக்க ஐயனாரை  வணங்குகின்றனர் .

யாழ்ப்பாண அராலி  கிழக்கில்  இருக்கும் மலையாளங் காடு ஐயனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி உத்தர உற்சவம் நடைபெறுகிறது

வண்ணார் பண்ணை , அராலி, சுன்னாகம் , ஐயனார் கோவிலடி,வரணி  ஐயனார் கோவில்கள்  அருகிலுள்ள பெரிய கோவில்களாலும், கட்டிடங்களாலும் காண்பதற்கே அரியன ஆகிவிட்டன 

புத்தகளம் – அனுராதபுரம் வழியில் பழமையான அய்யநாயக்க தேவாலய (தப்போவ) கோவில் இருக்கிறது.  சிலாபம் வரையில் A12 மற்றும் A3 வீதிகளில் பிரதான வீதியில் மட்டும் ஏறத்தாழ இருபது  அய்யனார் /அய்யநாயக்க கோவில்களை காணலாம்

சிலாவம் அருகில் மாதம்பையில் உள்ள ஐயனார் கோவிலில் பெரிய குதிரையைக் காணலாம். சிங்களத்தில்  ஐயனார் என்பதை அய்யன என்பார்கள்.

மன்னார்- பூநகரி வழியில் உள்ள வெள்ளங்குளம் ஐயனார் கோவில் , அந்த வழியில் செல்லும் யாத்ரீகர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது. ஏராளமானோர் கற்பூரம் ஏற்றிவிட்டு, சதிர்  தேங்காய் போட்டுவிட்டுச் செல்வது வழக்கம்..

திருகோணமலை அருகில் பெரியகுளத்தில் ஐயனார் கல்லுக்கு ஆண்டுதோறும் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.

மட்டக்களப்பு வட்டாரத்திலும்  ஐயனார் கோவில்கள் இருக்கின்றன

–subham—

.tags- ஐயனார் , நாச்சிமார், 7 கன்னிமார், சப்த , மாதர், கோவில், நாச்சிமார் , வீர தெய்வங்கள்

சமநீதி பேசி சனாதனத்தை ஒழிப்பேன் என்னும் அரசியல்வாதிகள் அறிவார்களா? Post.12,661)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,661

Date uploaded in London –  –  1 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

சமநீதி பேசி சனாதனத்தை ஒழிப்பேன் என்னும் அரசியல்வாதிகள் அறிவார்களா?

ச.நாகராஜன்

ஹிந்து மதத்தில் ஏராளமான பிரிவுகளும், ஏற்றத் தாழ்வுகளும் இருப்பதாகப் பொய்க் கதை பேசித் திரியும் அரசியல்வாதிகள் ஏன் மற்ற மதங்களைப் பற்றிப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்?

சுயநலவாதிகள்! அதனால் தான்!

ஹிந்து மதத்தை ஆதாயமாக வைத்து அரசியல் பிழைப்பு நடத்த நினைக்கும் இவர்களை ஹிந்துக்கள் ஒதுக்க வேண்டும்; அரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.

இவர்களில் சிலர் நான் கிறிஸ்துவன் என்று மேடையிலேயே கர்வத்துடன் கூறிக் கொள்கிறார்கள்!

கிறிஸ்தவத்தில் பிரிவே இல்லையா?

இஸ்லாத்தில் பிரிவே இல்லையா?

பார்ப்போமா?

ஒரே கிறிஸ்து, ஒரே பைபிள், ஒரே மதம் – பிரிவே இல்லாத அபூர்வமான அதிசயமான சமநீதி பேசி அதைக் கடைப்பிடிக்கும் ஒரே உலக மதம் – கிறிஸ்தவம்! அடடா? அப்படியா?!

ஆனால் ரோமன் கத்தோலிக்கர்கள் சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் (Roman Caholic and Syrian Catholic Church) நுழைய மாட்டார்கள்!

இந்த இரண்டு பிரிவு கத்தோலிக்கர்களும் மார்தோமா சர்ச்சுக்குள் (Marthoma Church) நுழைய மாட்டார்கள்.

இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்த் சர்ச்சுக்குள் Pentecot Church)

நுழைய மாட்டார்கள்.

இந்த நான்கு பிரிவினரும் சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் (Salvation Army Church) நுழைய மாட்டார்கள்.

இந்த ஐந்து பிரிவினரும் செவந்த் டே அட்வெண்டிஸ்ட் சர்ச்சுக்குள் (Seventh Day Adventist Church) நுழைய மாட்டார்கள்.

இந்த ஆறு பிரிவினரும் ஆர்தோடாக்ஸ் சர்ச்சுக்குள் (Orthodox Church) நுழைய மாட்டார்கள்.

இந்த ஏழு பிரிவினரும் ஜோகோபைட் சர்ச்சுக்குள்  (Jacobite Church) நுழைய மாட்டார்கள்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

146 பிரிவுகள் உள்ளன கிறிஸ்தவ மதத்தில்.

ஒரு சர்ச்சை இன்னொரு சர்ச் ஆதரிக்காது. அனுமதிக்காது. உள்ளே நுழைய மாட்டார்கள் என்றால் நுழைய விட மாட்டார்கள் என்று அர்த்தம்!

இங்கு இப்படி இருக்கும் சமநீதி பற்றி நமது சனாதன ஒழிப்பு வீரர்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை?

பதில் யாருக்கும் தெரியாது? …. ஆனால் ஓட்டுப் போடும் நமக்குத் தெரிய வேண்டும்!

சரி இஸ்லாமுக்கு வருவோம்.

ஒரே அல்லா! ஒரே குர் ஆன்! ஒரே நபி!

ஏற்றத்தாழ்வு இல்லாத சமநீதி தத்துவம்; ஒரே மதம்!

இஸ்லாமில் முஸ்லீம்களில் ஷியாவும் சன்னியும் ஒருவரை ஒருவர் வெறுப்பது கண்கூடு. இதனால் ஏற்பட்ட போர்களையும் அதில் இறந்த இஸ்லாமியரையும் எண்ணிப் பார்த்தால் வருத்தமே ஏற்படும்.

உலகில் உள்ள மதக் கலவரங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் இந்த இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட அடிதடி, சண்டை, கலவரம் நம்மைத் திகைப்புறச் செய்யும்.

ஷியா பிரிவினர் சன்னி பிரிவின் மசூதிக்குள் நுழைய மாட்டார்கள்.

இந்த இரு பிரிவினரும் அஹமதியா பிரிவின் மசூதிக்குள் நுழைய மாட்டார்கள்.

இந்த மூன்று பிரிவினரும் சூபி மசூதிக்குள் நுழைய மாட்டார்கள்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

குறைந்தபட்சம் 13 பிரிவுகள் இஸ்லாத்தில் உள்ளன.

இந்தியாவில் ஆவணப்படுத்தப்பட்ட இஸ்லாமில் உள்ள ஜாதிகளின் எண்ணிக்கை 73!

இந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள், குண்டு போட்டு அழிக்கிறார்கள், கூண்டோடு ஒழிக்கிறார்கள்.

ஆஹா! ஒரே அல்லா! ஒரே குர் ஆன்! ஒரே நபி!

ஏற்றத்தாழ்வு இல்லாத சமநீதி தத்துவம்; ஒரே மதம்!

 இங்கு இப்படி இருக்கும் சமநீதி பற்றி நமது சனாதன ஒழிப்பு வீரர்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை?

பதில் யாருக்கும் தெரியாது? …..  ஆனால் ஓட்டுப் போடும் நமக்குத் தெரிய வேண்டும்!

இது போக சிலுவைப் போர்கள், சமீபத்தில் நடந்த குவைத் போர் இவற்றையும் சற்றுப் படித்து ஆராய வேண்டும்.

நல்ல கிறிஸ்தவர்களும், நல்ல இஸ்லாமியரும் இந்த போலிப் பசப்புவாதிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தங்களைப் பகடைக் காய்களாக அரசியல்வாதிகள் பயன்படுத்துவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்களை அரசியலை விட்டு அப்புறப்படுத்த இறைநம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்று சேர்ந்தால்…..

சொர்க்கம் பூமியில் உண்டாகும்!

***

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – 5 (Post No.12,660)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,660

Date uploaded in London – –  –  31 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 PICTURES ARE FROM COLOMBO MUSEUM; TAKEN BY LONDON SWAMINATHAN

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 5

SLOKA 13

येषां न विद्या न तपो न दानं
ज्ञानं न शीलं न गुणो न धर्मः ।
ते मर्त्यलोके भुवि भारभूता
मनुष्यरूपेण मृगाश्चरन्ति ॥ 1.13 ॥

 13. Those without learning, penance, charity, awareness, good conduct and righteousness, are animals roaming in human garb, and are a burden to this earth.

யேஷாம் ந வித்யா ந தபோ ந தானம்

ஞானம் ந சீலம் ந குணோ ந தர்மஹ

தே மர்த்யலோகே புவிபார பூதா

மனுஷ்ய ரூபேண ம்ருகாஸ் சரந்தி

தவமோ தானமோ இல்லாமல்

கல்வியோ ஞானமோ இல்லாமல்

குணமும் ஒழுக்கமும் இல்லாமல்

வாழ்பவர்களின் உருவம் வேண்டுமானால்

மனிதன் போல இருக்கலாம்;

ஆனால் அவர்கள் மனித ரூபத்தில் உலவும் மாடுகளே.

வள்ளுவனும் பர்த்ருஹரியும் ஒரே பார்வையுடையவர்கள்:-

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர் – குறள் 410 

நல்ல நூல்களைக் கற்று விவேகம் அடைந்தோர் மக்கள்;

அவைகளைக் கல்லாதவர் விலங்குகள்.

அணிபொருள் சொல் கற்றானை ஆதரியான் தானே

திணி பேதை என்னத் தெரிக்கும் == கணிகொள்

மணிக்கு மதியில்லான்  மதிப்பைக்குறைத்தால்

மணிக்குத் தாழ்வுண்டோ —13

சம்ஸ்க்ருத ஸ்லோகத்துக்கும் இந்தப்பாடலுக்கும் பொருத்தமில்லை

Xxxx

SLOKA 14

वरं पर्वतदुर्गेषु
भ्रान्तं वनचरैः सह
न मूर्खजनसम्पर्कः
सुरेन्द्रभवनेष्वपि ॥ 1.14 ॥

14. Roaming in unapproachable mountains in the company of forest-dwellers, is superior to the company of fools even if in the palaces of Indra’s heaven.

வரம் பர்வத துர்கேஷு

ப்ராந்தம் வனசரை ஸஹ

ந மூர்க்க ஜன ஸம்பர்க்கஹ

ஸுரேந்த்ர பவனேஸ்வபி

 பொருள்

முட்டாள்களுடன் மன்னனின் அரண்மனையில் வாழ்வதைவிட

காடுகளில் குகைகளில் வன விலங்குகளுடன் வாழ்வதே மேல்.

 கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிற்

கடும்புலி வாழும் காடு நன்றே- வெற்றி வேற்கை

கள்ளன் கொடுபோகான் கல்விச் செல்வத்தையது

கொள்ளை கொள்ள இன்பங் கொடுக்குமே –அள்ளக்

குறையாதழியாது  கூர்ந்தது பெற்றோரைத்

தறை யாளு வோனு மொவ்வான் சால்பு —14

சம்ஸ்க்ருத ஸ்லோகத்துக்கும் இந்தப்பாடலுக்கும் பொருத்தமில்லை

Xxxx

SLOKA 15

शास्त्रोपस्कृतशब्दसुन्दरगिरः शिष्यप्रदेयागमा
विख्याताः कवयो वसन्ति विषये यस्य प्रभोर्निर्धनाः ।

तज्जाड्यं वसुधादिपस्य कवयस्त्वर्थं विनापीश्वराः
कुत्स्याः स्युः कुपरीक्षका हि मणयो यैरर्घतः पातिताः ॥ 1.15 ॥

 15. The king, in whose territory well-known, learned people, whose words are embellished by the Shastras and hence pleasing, whose knowledge of sacred works is worthy of imparting to disciples, live in poverty – it speaks of the ruler’s ignorance indeed. Learned ones are masters even without wealth. The gem appraisers are to blame, and not the gems, if the latter are valued less than their real worth.

சாஸ்த்ரோபஸ்க்ருத சப்த ஸுந்தர கிரஹ சிஷ்யப்ரதேயாகமா

விக்யாதா ஹா கவயோ வசந்தி விஷயே யஸ்யப்ரபோநிர்தனாஹா

தஜ்ஜாட்யம் வஸுதாதிபஸ்ய கவயஸ்வர்தம் விநாபீஸ்வராஹா

குத்ஸ்யாஹா ஸ்யுஹு குபரீக்ஷகா ஹி மணயோ யைரர்கதஹ பதிதாஹா

 பொருள்

சீடர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும், புகழ்மிகு கற்றோரும் கவிஞர்களும் ஒரு நாட்டில் வறுமையில் வாடினால், ஏழ்மையில் உழன்றால், அந்த நாட்டு மன்னனே முட்டாள், உணர்ச்சியற்ற ஜடம்தான்;

பணமே இல்லாத போதும் கற்றோரும் அறிவாளிகளும் பெரியோரே, புகழுடையோரே. திறமையற்ற ஒருவன் ரத்தினக் கல்லுக்கு மட்டமாக விலையை மதிப்பிட்டால் அது ரத்தினத்தின்   பிழையன்று; பொற்கொல்லனின் பிழையே!

xxxx

குறள் 834835 

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்- 834 

நூல்களைக் கற்றும், அதிலுள்ள விஷயங்களை அறிந்தும், அதைப் பிறருக்கு எடுத்துரைத்தும் தான் மட்டும் பின்பற்றாத  முட்டாள் போல வேறு முட்டாள் உலகில் இல்லை. 

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான் புக்கழுந்தும் அளறு-835 

ஏழு பிறவிகளில் செய்யும் தவறுகளைச் செய்தால் கிடைக்கும் நரகத்தை, முட்டாளானவன் ஒரு பிறவியிலேயே செய்ய வல்லவன். 

உண்மை வித்துவான்களை  நீ உல்லிங்கனஞ் செய்யேல்

எண் மையதன்னார்க்குன் இருநிதியம் — நண்ணு மதைக்

கண்டுன் பாற் சேரார் கரியையொரு தாமரை நூற் 

கொண்டே கட்டலாகுமோ கூறு –15

சம்ஸ்க்ருத ஸ்லோகத்துக்கும் இந்தப்பாடலுக்கும் பொருத்தமில்லை

–சுபம்–

Tags- நான்கு மொழிகளில், பர்த்ருஹரி, நீதிசதகம் , Nitisataka, Part 5, Bhartruhari

15 மூலிகைகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.12,659)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,659

Date uploaded in London – –  –  31 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

தமிழ் மொழியை வளர்ப்போம் 3102023 –Part 8 (Post No.12,659)

ஒவ்வொரு மூலிகைக்கும் உள்ள  வெவ்வேறு மாற்றுப்பெயர்களையும் 1935ம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதியில் காணலாம். நீங்கள் மூலிகைப் பிரியராக இருந்தால் பதினைந்து மூலிகைகளையும்  கண்டுபிடித்துவிடுவீர்கள்

This is Part 8

தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

அக் + + + + + – சேம்பு

அக் + +  – நெருஞ்சி ,  நெருஞ்சில்

அக் + + + + + +  – சாமைப்பயிர்

அக் + + + + + + –  குங்கும மரம், குசும மரம், மஞ்சள்

அக் + + + + + +  – கோங்க மரம், , சமியாமை

அக்  + + + + +  – காட்டுப்பலா

அக்  + + +   – கடுக்காய்

அக்  + + + – தேற்றாங்கொட்டை , தேற்றாமரம்

அங்   + + – கற்றாழை

அங்   + + + + +  –  குறிஞ்சா

அங்   + + +  – நன்னாரி, கரும்பு

அங்+ + + – வாழை

அங்   + + + + +  – கொள்ளுப்பூண்டு

அங்  + + +  – குப்பைமேனி

அங்  + + +  – அழிஞ்சில் மரம்

XXXXXXXXXX

விடைகள்

அக்கிராந்தம் – சேம்பு

அக்கிலு – நெருஞ்சி ,  நெருஞ்சில்

அக்கினி கர்ப்பை – சாமைப்பயிர்

அக்கினிசேகரம் –  குங்கும மரம், குசும மரம், மஞ்சள்

அக்கினிமந்தம் – கோங்க மரம், , சமியாமை

அக்கினிமரம் – காட்டுப்பலா

அக்கோடம்  – கடுக்காய்

அக்கோலம் – தேற்றாங்கொட்டை , தேற்றாமரம்

அங்கணி – கற்றாழை

அங்கரவல்லி –  குறிஞ்சா

அங்காரிகை – நன்னாரி, கரும்பு

அங்கிஷம் – வாழை

அங்குசபிஷாரி – கொள்ளுப்பூண்டு

அங்குரம் – குப்பைமேனி

அங்கோலம் – அழிஞ்சில் மரம்

–SUBHAM—-

TAGS– 15 மூலிகை, தமிழ் மொழிவளர்ப்போம் , Part 8

மா ஆனந்தமயி பொன்மொழிகள்; நவம்பர் 2023 காலண்டர் (Post No.12,658)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,658

Date uploaded in London – –  –  31 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

நவம்பர் மாத பண்டிகைகள் – 12 –தீபாவளி; 13- கந்தசஷ்டி விரதம் ஆரம்பம் ; 18- சூர சம்ஹாரம் , 23- சத்திய சாயிபாபா பிறந்த தினம்; 26- திருக்கார்த்திகை;

நவம்பர் மாத முகூர்த்த தினங்கள் –  16, 19, 29.

அமாவாசை -நவம்பர்13; பெளர்ணமி – 27; ஏகாதசி -8, 23

(Sri Anandamayi Ma April 30, 1896 – August 27, 1982)

ஸ்ரீ ஆனந்தமயி  மா — பிறப்பு ஏப்ரல் 30, 1896 – சமாதி ஆகஸ்ட் 27, 1982

xxxxx

நவம்பர் 1 புதன் கிழமை

இன்பமும் துன்பமும் கால எல்லைக்குட்பட்டவை. அவை நீண்ட காலம் இராது ஆகையால் ஒருவர் அதனை எண்ணி கலங்க வேண்டியது இல்லை  கடவுள் பற்று அதிகரிக்க ,அதிகரிக்க  அடிமனத்திலிருந்து பிரார்த்தனையும் அதிகரிக்கும் . முதிர்ச்சி ஏற்படுகையில் , அந்த சக்தி உங்கள் வசப்பட்டுவிடும்.

xxx

நவம்பர் 2 வியாழக் கிழமை

ஆன்மீக வழியில் செல்லும்போது  உள்ளுக்குள்ளே சில அனுபவங்கள் தோன்றாமல் , அதில் நீடித்து இருக்கமுடியாது.

Xxxx 

நவம்பர் 3 வெள்ளிக் கிழமை

இங்கு தோன்றுவன எல்லாம் இறைவனின் தெய்வீக சக்தியின் காட்சிதான் — கடவுளே ஆக்க சக்திதான்.

Xxxx 

நவம்பர் 4 சனிக் கிழமை

இறைவன்தான் நம் காதலன் என்பதை மறக்கும்போது , ஏனைய புலன் இன்பத்தில் நாட்டம் ஏற்படுகிறது

xxxxx 

நவம்பர் 5 ஞாயிற்றுக் கிழமை

துன்பத்தை நீக்கும் ராம நாமத்தில்  அராம  ( அமைதியும் பதற்றமில்லாமையும்)  இருக்கிறது. ராமா இல்லாத இடத்தில் வ்யராம (நோயும், பதற்றமும் ) இருக்கிறது.

Xxxx

நவம்பர் 6 திங்கட் கிழமை

நமக்கு நாமே ஆத்ம சோதனை செய்துகொண்டால் , ஒரு விஷயத்தை அறியமுடியும்; பறவைகளும் மிருகங்களும் கூடத்தான் உண்டு களிக்கின்றன.குடும்ப வாழ்வு நடத்துகின்றன. ஆனால் மனிதன் மட்டுமே ஆத்மாவின் உண்மை நிலையை அறிய முடியும்.இந்த வாய்ப்பினை மனிதர்கள் நழுவ விடக்கூடாது.

xxxx

நவம்பர் 7 செவ்வாய்க் கிழமை

நாம் யார் என்பதை ஒவ்வொரு நாளும் சில வினாடிகளாவது சிந்தித்துப் பார்க்கவேண்டும்.மீண்டும் மீண்டும் ரிட்டர்ன் டிக்கெட் Return ticket வாங்கிக் கொண்டே இருக்கக் கூடாது; அதாவது ஜனன- மரணம் ; உண்மையில் இது நம்முடையது அல்ல ;அதை முதலில் உணரவேண்டும்.

Xxxx

நவம்பர் 8 புதன் கிழமை

பூமிக்கு அடியில் விலையுயர்ந்த ரத்தினங்கள் புதைந்து கிடக்கின்றன. ஆனாலும் கடின உழைப்பின் மூலமே அவைகளை அடைய முடியும்.

xxx

நவம்பர் 9 வியாழக் கிழமை

நீங்கள் எவ்வளவு பலவீனன் ஆனாலும்  எந்த அளவுக்கு உங்களால் அதிகமாக இயலுமோ அந்த அளவுக்கு முயற்சி செய்யுங்கள். மிச்சத்தை இறைவன் செய்துகொடுப்பான்.

Xxxxx

நவம்பர் 10 வெள்ளிக் கிழமை

இறைவனிடம் எந்த நிபந்தனையும் போடாது (பரிபூரண)  சரணாகதி அடைவதே மனிதனுக்கு ஆறுதல் தரும் அருமருந்து ஆகும்.

xxx

நவம்பர் 11 சனிக் கிழமை

இறைவனின் நாமமும், அவனும் ஒன்றே; அவன்தான் நாமம்.

Xxxx

நவம்பர் 12 ஞாயிற்றுக் கிழமை

ஒருவர் இஷ்ட தேவதையை அதிகமாக நினைக்க, நினைக்க,  அந்த அளவுக்கு தெய்வ நம்பிக்கையும் அதிகரிக்கும்.

xxxxx

நவம்பர் 13 திங்கட் கிழமை

உலக ஆசாபாசங்களுக்கும் மேலே சென்றால்தான் மன அமைதி கிட்டும்.

xxxx

நவம்பர் 14  செவ்வாய்க் கிழமை

மனிதன் என்பது ஆத்மா ; ஆனால் அதை அவன் தன்னுடனும், தன் பெயருடனும் தவறாக தொடர்புபடுத்திக் கொள்கிறான்.

xxxx

நவம்பர் 15 புதன் கிழமை

உங்களுடைய துணைவரையும் குழந்தைகளையும் தெய்வீக அம்சம் கொண்டவர்களாக நினைத்து செயல்படுங்கள் ; உங்கள் மனதை அங்குமிங்கும் சிதறவிடாதீர்கள்; ஒரே குறிக்கோளை வைத்துக்கொள்ளுங்கள்.

xxxx

நவம்பர் 16 வியாழக் கிழமை

ஒன்று இருக்கும் இடத்தில் இரண்டைக் காண்பதே எல்லாத்  துன்பங்களுக்கும் காரணம். இரண்டாகக் காண்பது வேதனை . ஒன்றாகக் காண்பதே காட்சி; அதை உணராத வரை  ஜனன- மரண சுழற்சி நீடிக்கும் .

xxxx

நவம்பர் 17 வெள்ளிக் கிழமை

நீங்கள் யாருடன் எல்லாம் தொடர்பில் இருக்கிறீர்களோ அவர்களிடத்தில் சமமான அன்பைக் செலுத்துங்கள்.அப்போதுதான் நான் என்பதற்கும் நீங்கள் என்பதற்கும் நடுவில்  உள்ள இடைவெளி  நிரப்பப்படும் . எல்லா சமய வழிபாடும் அதே லட்சியத்தை காட்டுகிறது.

xxxxx

நவம்பர் 18 சனிக் கிழமை

புலன் இன்பம் என்பது மெதுவாகக் கொல்லும் விஷம்; அது மரணத்தை நோக்கி நம்மைச் செல்ல வைக்கிறது ; ஆகையால் மரணமில்லாப்பெரு வாழ்வு நோக்கிச் செல்லும் வழியில் செல்லுவது மனிதனின் கடமை .

XXXXXX

நவம்பர் 19 ஞாயிற்றுக் கிழமை

நான் யார்? என்று சிந்த்தித்துப் பாருங்கள்; உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் ; விடை கிடைக்கும் .

XXXX

நவம்பர் 20 திங்கட் கிழமை

ஒரு பெரிய மரத்தைப் பாருங்கள் அதிலிருந்து வரும் விதைகள் மேலும் பல  மரங்களை உருவாக்குகின்றன. ஆனால் அவைகளில் தோன்றும் பழங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை .ஆயினும் அவற்றில் துடிக்கும் உயிர் சக்தி ஒன்றுதான்; ஆகையால் ஒரே ஆத்மாதான் எங்கும் நிறைந்துள்ளது.

XXXX

நவம்பர் 21  செவ்வாய்க் கிழமை

ஒவ்வொரு நாளும் நல்ல எண்ணம்,  பேரன்புடன் உண்மையாக உழையுங்கள்;.உங்களை படிப்படியாக முன்னேற்றுங்கள் ; எல்லாப் பணிகளிலும் தெய்வீக இருக்கட்டும்.அப்போது உங்கள் பணியும் சிறக்கும்

xxxx

நவம்பர் 22 புதன் கிழமை

ஒரு தாயார் தன்  மகனை எப்படி பாலூட்டி, சீராட்டி வளர்த்து அவனை எல்லாப் புகழோடும் விளங்கும் இளைஞன் ஆக்குகிறாளோ அவ்வாறே தெய்வீக அன்னையும் ஒருவனுடைய ஆன்மீக வாழ்வில் ஒருவனை முழு வளர்ச்சி அடைய வைக்கிறாள் .

XXXX

நவம்பர் 23 வியாழக் கிழமை

துறவு என்பது பொருட்களைத் துறப்பது அல்ல; வேறு வேறு என்ற வேற்றுமையை/ பிரிவினையைத்  துறப்பதே துறவு

xxx

நவம்பர் 24 வெள்ளிக் கிழமை

உலக பாசங்களால் மனிதனின் மனது களங்கமுற்றுள்ளது ஆயினும் கவலை வேண்டாம்.தூய்மையுடனும், பேரார்வத்தோடும் , நம்பிக்கையுடனும் முயன்றால் உள்ளே உறையும் ஆன்மாவை அறிவீர்கள் .

xxx

நவம்பர் 25 சனிக் கிழமை

வெளியே உள்ள, அதாவது மனைவி, மக்கள், பணம், புகழ் இவற்றால் கிடைக்கும் இன்பம் நீடித்து நிற்காது ; ஆனால் எங்கும் நிறைந்த, உன்னுள்ளேயும் உறையும் இறைவனிடத்தில் இன்பம் பெற்றால் , அது உண்மையான இன்பமாக அமையும் .

xxxxx

நவம்பர் 26 ஞாயிற்றுக் கிழமை

எல்லோரும் அமைதி பெறத் துடிக்கிறார்கள். ஆனால் இறைவன் என்பவன் உள்ளுக்குள்ளே இருக்கிறான் என்பதை அறியும் வரை பரி பூரண அமைதி கிட்டாது என்பது சிலருக்கே தெரிகிறது.

xxx

நவம்பர் 27 திங்கட் கிழமை

மனிதனின் கடமை சத்திய வேட்கையுடன் இருப்பதும், சத்தியத்தைக் கடைப்பிடிப்பதும் ஆகும் ‘உண்மை’-யில் நங்கூரம் பாய்ச்சி நிற்க இயன்ற   அளவுக்கு முயலுங்கள் ; தனிமையான இடத்தில் இருந்து தியானம் செய்யுங்கள் .

xxxx

நவம்பர் 28 செவ்வாய்க் கிழமை

எல்லாம் ஜோதியிலிருந்து தோன்றுகிறது; எல்லாம் ஜோதிமயம் ; நீங்களும் கூடத்தான்.

xxxx

நவம்பர் 29 புதன் கிழமை

நீங்கள் மிக உயர்ந்த லட்சியத்துக்குக் குறைவான எதையும் நாடாதீர்கள்.

xxxx

நவம்பர் 30 வியாழக் கிழமை

நான் பிறந்த போதும் இப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கிறேன்;முடிவே இல்லாத மண்டபத்தில் நடக்கும் படைப்பு  நடனம் மாறிக்கொண்டே இருந்தாலும் , நான் அப்படியே சாஸ்வதமாகவே இருப்பேன் (வெளியில் நடக்கும் மாற்றங்கள் என்னைப் பாதிப்பது இல்லை.

—-SUBHAM—-

TAGS- மா ஆனந்தமயி, பொன்மொழிகள், நவம்பர் 2023,  காலண்டர்