வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்!- Part 2 (Post 12,656)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,656

Date uploaded in London –  31 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்!

இரண்டாம் பகுதி

ச.நாகராஜன்

அப்பரின் அருள் வாக்கு

தலம் தலமாக சிவபிரானை தரிசித்து வந்த அப்பர்பெருமான் தில்லைக்கு வந்தார். அங்கு அவர் பெற்ற தரிசனம் அவருக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்

பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை

என்னம் பாலிக்கும் ஆறு கண்டு இன்புற

இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே

என்று அவர் பாடி அருள்கிறார்.

இங்குள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தினம் தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

ஆக தினம் தோறும் அன்னாபிஷேகம் செய்யும் பெருமையைப் பெறுகிறது தில்லைத் திருத்தலம்!

கண்ணனின் அருள் வாக்கு

கண்ணபிரான் கீதையில் (அத் 3 – 14) அன்னாத் பவந்தி பூதானி என்று கூறுகிறார். அன்னத்தினாலேயே பௌதிக உடல்கள் வளர்கின்றன என்பது இதன் பொருள்.

அறநெறிகளை  அறிந்து உணர்ந்த நமது பழம் பெரும் மன்னர்கள் ஆங்காங்கே அன்ன சத்திரங்களை அமைத்து பசிப்பிணி போக்கியதை நமது ஏடுகள் எடுத்துரைக்கின்றன.

நமது ஆலயங்களிலும் பண்டு தொட்டு இன்று வரை அன்னதானம் சிறப்பாக நடை பெற்று வருவது கண்கூடு.

ஆழாக்கு அரிசி அன்ன தானம்; போய் வருகிற வரைக்கும் புண்ணிய தானம் என்பது தமிழ்ப் பழமொழி.

இரு கதைகள்

அன்னதானத்தின் சிறப்பை விளக்கும் பல கதைகள் நமது இதிஹாஸ புராணங்களில் உண்டு. கர்ணபரம்பரைக் கதைகளும் பல உள்ளன.

இரு சம்பவங்களை இங்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

இளம் வயது குருகுலத் தோழர்களாக விளங்கியவர்கள் ஏழை குசேலரும் மன்னர் பரம்பரையைச் சார்ந்த கண்ணபிரானும்.

குருகுல வாசம் முடிந்த பின்னர் ஏழை குசேலர் வறுமையால் வாடலானார். ஆனால் கண்ணனோ மன்னனாக ஆகி அரசாட்சி செய்ய ஆரம்பித்தான்.

ஒரு நாள் ஒரு சிறு மூட்டையில் அவலை எடுத்துக் கொண்டு சென்று தன் பால்ய கால நண்பனைப் பார்க்கச் சென்றார் குசேலர்.

குசேலர் அன்புடன் கொடுத்த ஒரு பிடி அவலை ஆசையுடன் ஏற்றுக் கொண்டு உண்டான் கண்ணன். பலன்? குசேலரின் ஏழைக் குடில் மாட மாளிகை கூட கோபுரம் கொண்ட பெரும் வீடாக ஆகியது.

இதுவே அன்ன தான பலன்.

அடுத்தது கர்ணனைப் பற்றிய சம்பவம்.

பெரும் தான வீரனாக விளங்கிய கர்ணன் இறந்த பின் சொர்க்கத்திற்குச் சென்றான். அங்கு அவனுக்கு பசி தீரவில்லை.

அதன் காரணத்தைக் கேட்ட போது கண்ணபிரான் பதிலாகக் கூறியது : “நீ அனைத்து தானங்களையும் செய்தாலும் அன்னதானம் செய்யவில்லை. உனது விரலை வாயில் வைத்துக் கொள்”

உடனே கர்ணன் விரலை வாயில் வைக்க அவனது பசி தீர்ந்தது.

வியப்புடன் காரணத்தைக் கேட்க கண்ணன் கூறினான்: “ஒரு நாள் ஏழை ஒருவன் பசியினால் வாடி உன்னிடம் வந்து அன்ன சத்திரம் எங்கே இருக்கிறது என்று கேட்க நீ உன் விரலால் அதோ அங்கே இருக்கிறது என்று அன்ன சத்திரம் இருக்கும் திசையை நோக்கி உன் விரலைக் காட்டினாய். அந்த நற்பயனால் உனக்கு அந்த விரலை வாயிலே இட்டவுடன் உன் பசி போயிற்று. அன்ன தானத்தின் மகிமை அப்படிப்பட்டது!” என்று பதில் கூறினான்.

இன்று அன்னதானம் உலகின் இன்றியமையாத தேவையாகி விட்டது.

ஏனெனில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாடி வதங்குவோரின் எண்ணிக்கை 53 நாடுகளில்  மட்டும் முப்பத்திஐந்து கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டி விட்டது.

ஆகவே இந்த ஐப்பசி பௌர்ணமி நன்னாளில் உலகில் உள்ள  அனைவருக்கும் அன்னம் கிடைக்க நமது சிவாலயங்களில் வேண்டிக் கொள்வோம்..

தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன்;

அனைவருக்கும் அன்னம் தந்து அவன் அருள் பாலிப்பானாக!

***

November 2023 Calendar- Ma Ananda Mayee Quotes (Post No.12,655)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,655

Date uploaded in London – –  –  30 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

November Festivals – 12 –Deepavali/ Diwali; 13- Kantha Sashti Vrata begins;  18- Skanda Vrat ends , 23- Sathya Sai Baba Birth Day; 26- Kartikai Lamp Festival in Tamil Nadu;

November Auspicious Days –  16, 19, 29.

New moon day -13; Full moon day – 27; Ekadasi Hindu Fasting Days -8, 23

(Quotations of Sri Anandamayi Ma; April 30, 1896 – August 27, 1982)

November 1 Wednesday

Joys and sorrows are time-born and cannot last. Therefore, do not be perturbed by these. The greater the difficulties and obstructions, the more intense will be your endeavour to cling to His feet and the more will your prayer increase from within. And when the time is ripe, you will gain mastery over this power.

xxxx

November 2 Thursday

In RAMA (GOD), who is the dispeller of all sorrow, there is arama — rest and ease; where RAMA is not, there is vyarama — discomfort and disease

xxxx

November 3 Friday

It is impossible to continue on the spiritual path without some inner experience occurring.

xxxx

November 4 Saturday

The whole of manifestation is but a display of GOD’s divine power — GOD Itself as vibhuti (creative power).

xxxx

November 5 Sunday

Forgetting that GOD is the sole Beloved, one has come to love sense objects.

xxxx

November 6 Monday

If you examine yourself, you will see. There is beauty in the birds and in the animals. They too eat and drink like us, mate and multiply; but there is this difference: we can realize our true nature, the Atman. Having been born as human beings, we must not waste this opportunity.

xxxx

November 7 Tuesday

At least for a few seconds every day, we must enquire as to who we are. It is no use taking a return ticket over and over again. From birth to death, and death to birth is ‘samsara.’ But really we have no birth and death. We must realize that.

xxxx

November 8 Wednesday

Precious gems are profoundly buried in the earth and can only be extracted at the expense of great labour.

xxxx

November 9 Thursday

Exert yourself to the limits of your power, however feeble. He is there to fulfill what has been left undone.

xxxx

November 10 Friday

Unconditional surrender to Him is the best solace for man.

xxxx

November 11 Saturday

God’s name is He Himself – The name and the named are identical.

xxxx

November 12 Sunday

The more one thinks of one’s Ishta (beloved Deity), the firmer will one’s faith in Him grow.

xxxx

November 13 Monday

You will have peace only if you rise above worldly desires.

xxx

November 14 Tuesday

There is nothing in this world, yet everyone is madly pursuing this nothing – some more, some less.

xxxx

November 15 Wednesday

Man is no other than the Self; but he wrongly thinks of himself as a separate individual centered in his body and identified by a particular name.

xxxx

November 16 Thursday

Love and serve your consort and children as Divine manifestations. Perform all work as God’s service. Do not allow your mind to wander here and there. Endeavor to make it one pointed. Have one single end in view.

Xxxx

November 17 Friday

All sorrow is due to the fact that many are seen where there is only one. Duality is pain. So long as man does not wake up to his identity with the one, the round of birth and death continues for him.

xxxx

November 18 Saturday

Try to treat with equal love all the people with whom you have relations. Thus the abyss between ‘myself’ and ‘yourself’ will be filled in, which is the goal of all religious worship.

xxxx

November 19 Sunday

Ever afterward, though the dance of creation change around me in the hall of eternity, I shall be the same.

xxxx

November 20 Monday

Do not set your hopes on anything less than supreme beatitude.

xxxx

November 21 Tuesday

Everything originates from light and everything in its essence is light, even You.

 xxx

November 22 Wednesday

The quest after truth and to be Truthful is a human beings duty. Do your utmost to become anchored in Truth and spend much time in the contemplation of the Lord in a quiet secluded place.

xxxx

November 23 Thursday

The life in the world is to be on the way to Self- Realization.

xxxx

November 24 Friday

Everyone thirsts for peace, but few people understand that perfect peace cannot be obtained as long as the inner soul is not filled with the presence of God.

Xxxx

November 25 Saturday

Man’s mind is clouded by worldly ties. But there is no cause for despair. With purity, unflinching faith and burning eagerness go ahead and you will realize your true Self.

xxxx

November 26 Sunday

Happiness that depends on anything outside of you, be it a wife, a child, money, fame, friends cannot last. But if you find happiness in God who is everywhere, all pervading, who is your own self, that is real happiness.

Xxx

November 27 Monday

Renunciation is the giving up of the idea of separateness, not the giving up of things.

xxxx

November 28  Tuesday

With earnestness, love and goodwill carry out life’s everyday duties and try to elevate yourself step by step. In all human activities let there be a live contact with the Divine and you will not have to leave off anything. Your work will then be done well and you will be on the right track to find the Master.

xxxx

November 29 Wednesday

Just as a mother nourishes her child with all possible care and affection and makes him grow up into a healthy boy and a handsome youth, so you will find the subtle touches of the Divine Mother shaping your inner life and making you reach your full height and stature.

xxxx

November 30 Thursday

Sense enjoyment acts like slow poison. You are driven thereby towards death. Therefore, it is man’s duty as a human being to get into the current that leads to immortality.

–subham—

Tags- November 2023, calendar, Ma Anada mayee, quotations

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – 4 (Post No.12,654)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,654

Date uploaded in London – –  –  30 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – 4

நான்கு மொழிகளில் பர்த்ருஹரியின் நீதிசதகம் – 4

பர்த்ருஹரி ஸ்லோகம் 10

Slokam 10

शिरः शार्वं स्वर्गात्पशुपतिशिरस्तः क्षितिधरं

म्हीध्रादुत्तुङ्गादवनिम् अवनेश्चापि जलधिम् ।

अधो‌உधो गङ्गेयं पदम् उपगता स्तोकम्

अथवाविवेकभ्रष्टानां भवति विनिपातः शतमुखः ॥ 1.10 ॥

சிரஹ சார்வம் ஸ்வர்காத் பசுபதி சிரஸ்தஹ க்ஷிதிதரம்

மஹீத்ராத்துங்காத் அவனேஸ்சாபி ஜலதிம்

அதோ அதோ கங்கா ஸேயம் பதம் உபகதா ஸ்தோயம்

விவேக ப்ரஷ்டானாம் பவதி விநிபாதஹ சதமுகஹ 1-10

கங்கை நதி ஆகாயத்திலிருந்து சிவன் தலையில் விழுந்து, பின்னர் மலையில் விழுந்து, பூமியில் விழுகிறத்து. கடலில் கலப்பதற்காக கங்கை நதி மேலும் மேலும் இறங்கி வருகிறது; அத்தோடு அதன் பெயர் மறைந்து ‘கடல்’ என்று ஆகிவிடும். இது போலவே ஒருவர் விவேகத்தை இழக்க, இழக்க நூறு வழிகளில்  கீழே விழுவார்.(1-10)

அதாவது புத்தி தடுமாறினால் 100 வழிகளில் வீழ்ச்சி நிச்சயம் என்பது பர்த்ருஹரியின் கூற்று.

வள்ளுவன் மனம் போன போக்கில் போகாதவனே அறிவாளி என்பார்:-

சென்ற இடத்தில் செலவிடா தீதொரீ இ

நன்றின் பால் உய்ப்பதறிவு – 422

பொருள்

மனம் போன போக்கில் போகாமல் தீயதிலிருந்து விலகி நின்று, நல்ல விஷயங்களில்  ஈடுபடுவதே அறிவு/ விவேகம்.

ஆகாயகங்கை அரண் முடியில் வந்ததன்பின்

வாகா யிமயமலையிடத்தில் — ஓகோவித் 

தொல்லுலகில் பாதலத்தில் தோய்ந்தது தம் வாய்ப்பிழந்தோர்

பல்விதமாம் பாடுபடுவர் -10

xxxxx

Slokam 11

மூர்க்கர்கள் முட்டாள்கள்முட்டாள்கள் மூர்க்கர்கள். 

பர்த்ருஹரி சொல்கிறார்—
शक्यो वारयितुं जलेन हुतभुक्च्छत्रेण सूर्यातपो
नागेन्द्रो निशिताग्कुशेन समदो दण्डेन गोगर्दभौ ।
व्याधिर्भेषजसङ्ग्रहैश्च विविधैर्मन्त्रप्रयोगैर्विषं
सर्वस्यौषधम् अस्ति शास्त्रविहितं मूर्खस्य नस्त्यौषधिम् ॥ 1.11 ॥ 

சக்யோ வாரயிதும் ஜலேன ஹுதபுக் ச்சத்ரேண சூர்யாதபோ

நாகேந்த்ரோ நிசிதாங்குசேனஸம்தா தண்டேன கோ கர்தபௌ

வ்யாதிர் பேஷஜ ஸங்க்ரஹைர்ஸ்ச விவிதைர் மந்த்ரப் ப்ரயோகைர் விஷம்

ஸர்வஸ்யௌஷதம் அஸ்தி சாஸ்த்ரவிஹிதம் மூர்க்கஸ்ய

நஸ்த்யௌஷதிம் 1-11

shakyo vaarayitum jalena hutabhuk chchhatrena sooryaatapo

Naagendro nishitaankushena samado dandena gourgardabhah

Vyaadhirbheshajasangrahaishcha vividhaih mantraprayogairvisham

Sarvasyaushadhamasti shaastravihitam moorkhasya naastyaushadham 1.11

Fire can be put out by water. An umbrella can be used as protection from the sun. The rutty elephant can be controlled with an ankush (a weapon with a sharp hook at one end used by a mahout). A cow or donkey can be herded with a stick. A disease can be treated with medicines. Poison can be counteracted by chanting mantras. There is a remedy for everything prescribed in the shaastras. But there is no remedy for the fool.-11

பொருள்

நெருப்பை நீரால் அணைக்கலாம்;

சூரிய ஒளியை குடையால் மறைக்கலாம்;

அங்குசத்தால் யானையை அடக்கலாம்;

மாடு, கழுதையை குச்சியால் அடக்கலாம்;

நோய்களை மருந்தால் தீர்க்கலாம்;

விஷக்கடிகளை மந்திரம் மூலம் நீக்கலாம்;

இவை எல்லாவற்ரையும் நூல்கள் செப்புகின்றன.

ஆனால் முட்டாள்தனத்துக்கு மருந்தே இல்லை.

அங்கிக்குத் தண்ணீர் அருக்கற்குக் கைக்குடையாம்

பொங்குகரிக் கங்குசமாம் போரேற்றுக் – கிங்கொருகோல்

நோயரவுக் கோடதியாம் நொய்யமன  மூர்க்கரை நாம்

தூய்மை செயற்கில்லை மருந்து –11

Xxxx

Slokam 12

साहित्यसङ्गीतकलाविहीनः
साक्षात्पशुः पुच्छविषाणहीनः ।
तृणं न खादन्नपि जीवमानस्
तद्भागधेयं परमं पशूनाम् ॥ 1.12 ॥

ஸாஹித்ய சங்கீத கலா விஹீனஹ

ஸாக்ஷஆ த் பசூ ஹு புச்சவிஷாண ஹீனஹ 

த்ருணம் ந காதன்னபி ஜீவமானம்

தத் பாகதேயம் பரமம் பசூ னாம் –12

இலக்கியத்தையும் இசையையும் விரும்பாதவன் மிருகம்தான்;

அவனுக்கு கொம்பும் வாலும் இல்லை;

புல்லைத் தின்னாவிட்டாலும் அவனுக்கும் மாட்டுக்கும்

வித்தியாசம் இல்லை.

மணியருமை யோரான் மதிப்பைக் குறைத்தால்

மணிக்குக்குறைவு வருமோ-  அணி பொருள் யாப்

பாசிரியன் தான் வருந்த யார் மதியா னேனுமந்த

ஆசிரியற்  கேது குறையாம் – 12

(தமிழ்ப் பாடல் இங்குள்ள சம்ஸ்க்ருத ஸ்லோக த்தின்  மொழி பெயர்ப்பு அல்ல.)

-FOR SLOKA TEN GO TO SWAMIINDOLOGY.BLOGSPOT.COM

–subham—

Bhartruhari’s ,Nitisataka, in Tamil, Hindi, English and Sanskrit , part- 4,

திரவுபதி அம்மன் கோவில்- இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற ……..Part 43 (Post No.12,653)

Temple at Pandiruppu

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,653

Date uploaded in London – –  –  30 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 43

93. முத்துமாரி அம்மன் கோவில் , கொழும்பு

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில்  சுமார் 170 வருடங்களாக முத்துமாரி அம்மன் கோவில், இயங்கி வருகிறது  தமிழ்நாட்டிலுள்ள கோவில்பட்டி தாலுகா,  எருக்கன்குடி அம்மன் கோவில் நிலத்தின் மண்ணை  இங்கு கொண்டு வந்து  கோவில் கட்டினர்; சைவப்பெரியார் காளியன் செட்டி குப்பமுத்து என்பவர் முயற்சியில் கோவில் நிறுவப்பட்டது . அரச சுவடிகள் திணைக்கள ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன..திருவிளங்க நகரத்தார் எனப்படும் வணிக வைசிக செட்டியார் சமூகத்தவர்களின் பரிபாலனத்தின் கீழ் 1864 ஆம் ஆண்டு முதல் இவ்வாலயம் இயங்கி வருகின்றது. 1954 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

1963 ஆம் ஆண்டு முதல் தைப்பூசத் திருவிழாவை ஆடிவேல் போன்று ஐந்து தினங்கள் கொண்டாடி வந்தனர். அம்பிகை ரதத்தில் எழுந்தருளி கப்பிகாவத்தை சிவன் ஆலயத்தில் மூன்று மூன்று தினங்கள் எழுந்தருளி மீண்டும் கொட்டாஞ்சேனைப் பதியை வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து 1967 முதல் மாசிமக உற்சவத்தையும் சிறப்பாக ஆரம்பித்துள்ளனர்.

அண்மையில் புதிய கோபுரங்கள் கட்டப்பட்டு 2022ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

கருவறையில் முத்துமாரி அம்மனும் பிரகாரங்களில் விநாயகர், விஷ்ணு, நடராஜர், கண்ணகை அம்மன், சிவன், பார்வதி, சுப்ரமண்யர் சந்நிதிகளும் உள்ளன . ரங்கநாத மூர்த்தியின் சயன கோல சுதை உருவத்தையும் தரிசிக்கலாம் இவை தவிர  நாகர், பைரவர் , நவக்கிரக தேவைதைகளும் இருக்கிறார்கள்.

ஆகம விதிகளின்படி நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் பக்தர்கள் வந்தாலும் வெள்ளிக்கிழமைகளில்  மிகப்பெரிய கூட்டம் சேருகிறது.

XXXXX

94.மட்டக்களப்பு திரவுபதி அம்மன் கோவில்

பாண்டவர்களுடன் தொடர்புடைய கதைகள் இலங்கையிலும்  பிரபலமாகியுள்ளன .

பஞ்ச கன்யா என்று  இந்துக்கள் வழிபடும் பத்தினிகளில் திரௌபதியும் ஒருவர். இந்துக்கள் தினமும் காலைல சொல்லும் பிராத ஸ்மரண ஸ்லோகத்தில்

அஹல்யா, த்ரௌபதீ,சீதா,தாரா மண்டோதரி ததா

பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் சர்வ பாப விநாசனம்  –

என்று சொல்லி வழிபடுகின்றனர் . இலங்கையில் திரௌபதை அம்மன் வழிபாடு கிழக்கு இலங்கையில் மட்டக்களப்பு வட்டாரத்தில் பரவலாகக் காணப்படுகிறது . இதை கொங்கு நாட்டிலிருந்து வந்த தாத்தன் என்ற முனிவர் அறிமுகப்படுத்தினார். முதலில் மட்டக்களப்பு வட்டார பாண்டிருப்பு கிராமத்தில் த்ரௌபதீ வழிபாடு துவங்கியது. இப்போது ஆரையம்பதி, பழுகாமம், மட்டக்குழி , புதூர், புளியந்தீவு  ஆகிய இடங்களில் ஆலயங்கள் இருக்கின்றன . இவை தவிர புத்தளம் மாவட்டத்திலுள்ள உடப்பு திரவுபதி அம்மன் கோவிலு ம் பிரசித்திபெற்ற  ஆலயங்களில்  ஒன்றாகும்.

கல் முனைக்கு வடக்கில்  பாண்டிருப்பு கிராமம் இருக்கிறது ;தாதன் என்ற முனிவர் வந்து இறங்கியதை அறிந்து , எதிர்மன்ன சிங்கம் என்ற குறுநில மன்னர் அவரைச் சந்தித்தார். மஹாபாரதக் கதையை அவர் சொல்லக்கேட்டு, அவர் சொற்படி , கொக்கட்டிமரம் சூழ்ந்த சோலையில் அம்மனுக்கு ஆலயத்தை எழுப்பினார். ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்களுக்கு நடக்கும் விழாவில் தீக்குழி இறங்கும் சடங்கும் உண்டு. 18 பர்வங்களின் கதை பாராயணம் செய்து முடிக்கும் கடைசி நாளில்  20 அ டி நீள தீக்குழியில் பக்தர்கள் இறங்கி நடப்பார்கள்.  பஞ்ச பாண்டவர்கள் ஐவர் மற்றும் திரவுபதி போல வேடம் தரித்த 6 பெரும் தீ மிதித்து நடந்த பின்னர் ஏனைய பக்தர்களும் தீ மிதிப்பர். கடலில் ஸ்நானம் செய்வது, தீக்குளித்தோரிடம் புனித சாம்பல் வாங்குவது ஆகியனவும் இந்த வைபவத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் ஆகும்.

மகாபாரதத்தில்  திரெளபதி தேவியே  தீ யிலிருந்து வந்ததாகவே சொல்லப்பட்டுள்ளது. அவள்  யாக குண்டத்தில் தோன்றியவள் கற்புக்கரசிகளில் அருந்ததிக்கு நிகரானவர்.

கண்டி மன்னன் விமல தரும சூரியன் 1594-1604 , இந்த தீ மிதி வைபவத்தைக் கண்டு வியந்து, கோவிலுக்கு நிலபுலங்களையும் தானம் செய்தான் இதிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்னரே கோவில் இருந்ததை அறிகிறோம்.

XXXXX

95.உடப்பு திரெளபதி அம்மன்- விஷ்ணு கோவில்

Draupadi Templt at Sri Lanka

இலங்கையின் வடமேற்கில் புத்தளம் இடம்பெறுகிறது. அந்த

மாவட்டத்தில் உள்ள சிற்றூர் உடப்பு கிராமம்; இங்கு  திரெளபதி அம்மன் ஆலயம், ஸ்ரீ வீரபத்ர காளியம்மன் கோயில், ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில், குளத்தடி ஐயனார் கோவில், கந்தசுவாமி கோவில்,  ஐயப்ப சுவாமி கோவில் ஆகிய கோவில்கள் இருக்கின்றன.

இந்த ஊரிலுள்ள திரெளபதி அம்மன் கோவிலின் சிறப்பு என்னவென்றால் மகாபாரதம் தொடர்பான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளும் நடை பெறுவதாகும் . அத்தோடு தீ மிதிப்பு, தீக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இது ஜூலை- ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் 18 நாள் உற்சவத்தின் முத்ததாய்ப்பாக அமைகிறது .

உடப்பு கிராம மக்களின் முன்னோர்கள் இந்தியாவிலிருந்து வந்தனர் . மன்னாரில் தரை இறங்கிய அவர்கள் தென் திசை நோக்கி நடந்து வந்து இந்த இடத்தில் குடியேறினர்.. இது புவனேக பாஹு மன்னனின் காலத்தில் நடந்தது.

முதலில் சந்தன மரத்தால் ஆன திரவுபதி உருவம் பூஜிக்கப்பட்டது.1907ம் ஆண்டில் அதற்குப்பதிலாக அம்மனின் கற்சிலையை பிரதிஷ்டை செய்தனர். பின்னர் மகாபாரதம் போற்றும் கிருஷ்ண பரமாத்மாவின் சிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று செல்லப்பா குருக்கள் ஆலோசனை வழங்கினார். 1912 முதல் கிருஷ்ணனை மூலஸ்தானத்தில் வைத்துவிட்டு திரெளபதி அம்மனை அர்த்த மண்டபத்தில் விஷேச ந்நிதியில் வைத்து வணங்கி வருகின்றனர் . அங்கே விநாயகர், முருகன் ஆகியோரும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.

ராஜ கோபுரமும், கலை வேலைப்பாடுமிக்க தூண்களும் கோவிலுக்கு மெருகூட்டுகின்றன. கோபுரத்தில் கிருஷ்ண லீலைகளை விளக்கும்

சிற்பங்கள்  காணப்படுகின்றன. ஆகஸ்ட் மாதம் நடக்கும் உற்சவத்தின் கடைசி நாளில் நடக்கும் பூக்குழி (தீ மிதி) வைபவத்தைக் காண அந்த வட்டார மக்கள் எல்லோரும் உடப்பு கிராமத்துக்கு வந்துவிடுவார்கள் .

–subham—

Tags- திரவுபதி, திரெளபதி, கோவில், பூக்குழி, தீக்குழி , தீமிதி வைபவம், பாண்டிருப்பு, உடப்பு

வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்! – 1 (Post No.12,652)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,652

Date uploaded in London –  30 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

 இந்த 2023 ஆண்டு ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் அக்டோபர் 28ஆம் நாள் நிகழ்வதை ஒட்டிய சிறப்புக் கட்டுரை! 27-10-23 மாலைமலர் இதழில் வெளி வந்த கட்டுரை இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்!

முதல் பகுதி

ச.நாகராஜன்

தானத்தில் சிறந்த தானம் அன்னதானமே என புராணங்களும் மஹாபாரத இதிஹாஸமும் கூறுவதோடு அந்த தானத்தின் எல்லையற்ற மகிமையையும் எடுத்துக் கூறுகின்றன.

ஐப்பசி பௌர்ணமியின் சிறப்பு

ஐப்பசி பௌர்ணமியன்று சிவாலயங்களில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் நடத்தப்படுகிறது.

முதலில் சம்பிரதாய முறைப்படி நடத்தப்படும் புனித தீர்த்தம், பசும் பால், நெய், இளநீர், கரும்புச் சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாங்காய்ச் சாறு, சாதம், மஞ்சள் ஆகியவற்றால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறும். இதில் அன்னாபிஷேகம் சிறப்பாகக் கருதப்படுகிறது.

சிவலிங்கம் முழுவதும் அன்னாபிஷேகத்தால் மூடப்பட்டு உச்சியில் காய்கறிகளால் அலங்கரிக்கப்படுகிறது.

 பௌர்ணமியன்று இது நடத்தப்படுவதன் காரணம் என்ன?

அதற்கு ஒரு புராண வரலாறு உண்டு.

முன்பொரு காலத்தில் பிரம்மன் தன்னை சிவனுக்கு நிகராக நினைத்து கர்வம் கொண்டான். அந்தக் கர்வத்தைப் போக்க சிவபிரான் பிரமனின் ஒரு தலையைக் கிள்ள, அந்தக் கபாலம் அவர் கையில் ஓடாக ஒட்டிக் கொண்டது.

 பிரம்மனின் சிரத்தைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் சிவனைப் பற்றிக் கொண்டது.

எப்போது அவர் கையில் உள்ள கபால ஓடு அன்னத்தால் நிரம்புகிறதோ அப்போது தோஷம் நீங்கும் என்று தோஷ நிவர்த்தி ஏற்பட ஈசன் காசிக்குச் சென்று அன்னபூரணி கையால் அன்னத்தைப் பெற்று தோஷம் நீங்கப் பெற்றான்.

 சிவபிரான் அன்னபூரணியிடமிருந்து அன்னம் பெற்ற நாள் ஐப்பசி பௌர்ணமி ஆகும். ஆகவே அந்த நாளில் யார் ஒருவர் ஈசனின் அன்னாபிஷேகத்தைத் தரிசிக்கிறாரோ, யார் ஒருவர் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்கிறாரோ அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அன்னம் கிடைக்கும்; கர்மவினைகளும் அகலும் என்பது உள்ளிட்ட பல நற்பயன்களும் சித்திக்கும் என்று ஆனது.

அன்னாபிஷேக பலன்கள்

அன்னாபிஷேகத்தில் சிவனுக்கு இடப்படும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு சிவலிங்கமே.

தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்தத் திருநாள் அபிஷேகம் பக்தர்களைப் பரவசப்படுத்தும். திருநாள் பிரசாதத்தை உட்கொள்வதால் அனைத்து நற்பலன்களும் கிட்டும்.

நற்பலன்களில் சில:

1) ஆயுள் முழுவதும் இல்லத்தில் அன்னம் இருக்கும்.

2) கர்மவினைகள் கழியும்.

3) சிறுவர்களுக்கு நினைவாற்றல் கூடும்.

4) வணிக சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.

5) மகப்பேறு இல்லாதோர்க்கு மகப்பேறு கிடைக்கும்.

6) உழவு செழிப்பதோடு அனைத்து தானியங்களும் கிடைக்கும்.

உழவர்கள் தங்கள் இல்லத்தில் அன்னாபிஷேகம் செய்யும் பிள்ளைகள் இருந்தால் பல தலைமுறைகளுக்கு அன்னத்திற்கு பஞ்சமே இருக்காது என்று நம்புவது நமது மரபாகும். நல்ல மழையை எதிர்பார்ப்பது போல அப்படிப்பட்ட பிள்ளைகள் தமக்குப் பிறக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகின்றனர்.

அன்னம் என்பது உயிர் வாழும் மனிதருக்கு அடிப்படைத் தேவையாகும்.

இதன் அதிபதி சிவபிரானே.  இயற்கையின் பஞ்ச பூதங்களுக்கும் அதிபதி அவரே. இந்த இயற்கையின் பஞ்ச பூதங்களினால் தான் நெல்மணி நமக்குக் கிடைக்கிறது. நிலத்தில் விதை விதையிடப்பட, வானம் நீர் பொழிய, அங்கு நீர் பாய்ச்ச, சூரிய ஒளி (வெப்பம்) பயிர்களின் மேல் பட, வாயுவின் சேர்க்கையால் நெல் மணி நமக்குப் பூரணமாகக் கிடைக்கிறது.

இந்த அன்னமே உலகில் வாழ் உயிர்களுக்கு உணவாக ஆகி ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தருகிறது.

ஆகவே தான் அன்னாபிஷேகத்தின் மகிமையை அனைத்து அறநூல்களும் போற்றிப் புகழ்கின்றன.

அன்ன தானத்தின் சிறப்பு பற்றி நாரதர் கூறியது

பீஷ்மரிடம் தர்மபுத்திரர் தானங்களுள் சிறந்த தானம் எது என்ற தன் சந்தேகத்தைக் கேட்க அதற்கு பீஷ்மர் தான் நாரதரிடம் இது பற்றிக் கேட்டு தக்க பதிலைப் பெற்றதாகக் கூறி அந்தப் பதிலை விரிவாகக் கூறுகிறார் (அநுசாஸன பர்வம் 98வது அத்தியாயம்).

அதில் உள்ள சில முக்கிய கருத்துக்களை இங்கு பார்க்கலாம்:

 “உலக வாழ்க்கை என்பது அன்னத்தைப் பொறுத்ததே. அன்னதானத்திற்கு ஒப்பான தானம் முன்னுமில்லை; பின்னுமில்லை.

அன்னத்திலே தான் உயிர் இருக்கிறது. ஆகவே யார் ஒருவன் அன்னத்தை தருகிறானோ அவன் மறுமைக்கான புதையலைப் புதைத்து வைத்தவனாகிறான்.

தானம் பெற வந்த அனைவருக்கும் பேதம் பார்க்காது அன்னதானம் செய்தல் வேண்டும். அன்னமிடும் போது அதை ஏற்பவரின் ஊர், குலம், ஓதல், ஆசாரம், பெயர் உள்ளிட்ட எதையும் கேட்கக் கூடாது.

அறம்,பொருள், இன்பம் ஆகிய அனைத்தும் அன்னத்தினாலேயே வருகின்றன. பூலோகமும் தேவலோகமும் அன்னத்தினாலேயே தான்.  அன்னம் ஒழிந்தால் தேகத்திலுள்ள ஐம்பூதங்களும் பிரிந்து போகின்றன. பலசாலியும் கூட அன்னமில்லாவிட்டால் பலத்தை இழக்கிறான்.” – என்று இப்படி மிக விரிவாக அன்னதானப் பெருமையை நாரதர் விவரிக்கிறார்.

***

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit -3 (Post No.12,651)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,651

Date uploaded in London – –  –  29 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நான்கு மொழிகளில் பர்த்ருஹரியின் நீதி சதகம் – 3 ; Part 3

Slokam 7

பர்த்ருஹரி எழுதிய நீதி சதகத்தில் முட்டாள்கள் வாய் திறக்காமல் இருப்பது நலம் பயக்கும் என்று மொழிகிறார்.

வான் புகழ் வள்ளுவமுனும்  தமிழ் வேதம் என்று புகழப்படும் திருக்குறளிலும் அதையே செப்புவார்:-

கல்லாதவரும் நனிநல்லர் கற்றார் முன்

சொல்லாதிருக்கப் பெறின் (குறள் 403)

கற்றறிந்த மக்கள் முன்னிலையில், கல்லாத முட்டாள்கள் வாய் திறவாமல் மவுனம் காத்தால் அந்த இடத்தில் அவர்களும் நல்லவர்களாகத் தோன்றுவார்கள்.

स्वायत्तम् एकान्तगुणं विधात्रा
विनिर्मितं छादनम् अज्ञतायाः ।
विशेषा‌अतः सर्वविदां समाजे
विभूषणं मौनम् अपण्डितानाम् ॥ 1.7 ॥

ஸ்வாயத்தம் ஏகாந்த்ஹிதம் (குணம்) விதாத்ரா

விநிர்மிதம் சாதனமக்ஞதாயாஹா

விஷேஷதஹ ஸர்வவிதாம் ஸமாஜே

விபூஷணம் மௌனம் அபண்டிதானாம்

—பர்த்ருஹரி நீதி சதகம்1-7

ஒருவனுடைய அறியாமையை மறைப்பதற்காக மூடர்களுக்கு மௌனம் என்னும் வரத்தை பிரம்மா அருளியிருக்கிறார். விஷயம் தெரிந்த அறிஞர்களிடையே முட்டாள்களின் அணிகலன் (ஆபரணம்) இந்த மௌனம்தான் (1-7).

முட்டாள் கள் பேசினால் அவர்கள் குட்டு வெளிப்படும் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொன்ன கதை ஆகிவிடும்.

மூடறியாமை தனை மூடுவதற்கே பிரமன்

பீடுபெறு மோனம் பிறப்பித்தான் மூடரெலாம்

மூதுணர்ந்தோர் முன்னிலையில் மோனஞ் சாதித்தலே

தீதிலழ காகுஞ் சிறந்து — 7

xxxxxxxx

Slokam 8


यदा किञ्चिज्ज्ञो‌உहं द्विप इव मदान्धः समभवं
तदा सर्वज्ञो‌உस्मीत्यभवदवलिप्तं मम मनः
यदा किञ्चित्किञ्चिद्बुधजनसकाशादवगतं
तदा मूर्खो‌உस्मीति ज्वर इव मदो मे व्यपगतः ॥ 1.8 ॥

யதா கிஞ்சிஜ்ஜோஹம் கஜ (த்விப) இவ மதாந்தஹ ஸமபவம்

ததா ஸர்வஞோஸ்மீத்யபவதவலிப்தம் ம்ம மனஹ

யதா கிஞ்சித்கிஞ்சித்புதஜன ஸகாசாதவகதம்

ததா மூர்க்கோஸ்மீதி ஜ்வர இவ மதோ மே வ்யபகதஹ

–பர்த்ருஹரி நீதி சதகம் 1-8

எனக்கு கொஞ்சம் அறிவு இருந்த போது நான் யானை போல மதம் பிடித்து அலைந்தேன்; அந்த நேரத்தில் நான் அனைத்தும் அறிந்தவன் என்று நினைத்தேன்; ஆனால் அறிஞர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விஷயத்தைக் கிரஹித்தபோது, நான் அறிவிலி என்பது விளங்கியது; காய்ச்சல் விலகுவது போல எனது கர்வமும் விலகி ஓடியது (1-8).

இதோ வள்ளுவரின் கூற்று

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு — குறள் 1110

நல்ல அணிகளை அணிந்த இந்தப் பெண்ணை பொருந்தும் தோறும்,

அந்த இன்பத்தின் மஹிமை தெரிவது எப்படி இருக்கிறதென்றால், நூல்களை படிக்கப் படிக்க இவ்வளவு காலம் நம் அறியாமையைக் காண்பது போல இருக்கிறது.

கொஞ்ச மதியானான் குஞ்சரம் போலேமாந்து

விஞ்சும் விவேகியென மேவினேன் — மிஞ்சு மதி

உத்தமற் பால் பெற்றபின்னர் உள்ளகந்தை விட்டறிந்தேன்

எத்தனை நாள் மூடனாமென்று -8

Xxxxxx

Slokam 9

कृमिकुलचित्तं लालाक्लिन्नं विगन्धिजुगुप्सितं
निरुपमरसं प्रीत्या खादन्नरास्थि निरामिषम् ।
सुरपतिम् अपि श्वा पार्श्वस्थं विलोक्य न शङ्कते
न हि गणयति क्षुद्रो जन्तुः परिग्रहफल्गुताम् ॥ 1.9 ॥

க்ருமிகுலசிதம் லாலாக்லின்னம் விக்ன்ந்திஜுகுப்ஸிதம்

நிருபமரஸ்ம்ப்ரீத்யா காதன்னராஸ்திநிராமிஷம்

ஸுரபதிம் அபி ஸ்வா பார்ஸ்வத்வம்  விலோக்ய ந சங்க்தே

ந ஹி கணயதி க்ஷுதோ ஜந்துஹு பரிக்ரஹFபலகுதாம் 1-9

கிருமிகள் உடைய , சதைப் பற்றில்லாத, காய்ந்த நாற்றமுள்ள அழுக்கான எலும்புத் துண்டை நக்கும் நாய் தனது எச்சிலை அதில் ருசித்துவிட்டு, எலும்புதான் சுவை தருகிறது என்று நினைப்பது போல(1-9).

புழுத்த கழுதையின் புல்லெலும்பை நாய்தன்

கழுத்தை மிகநீட்டிக் கடிக்கும் – வழுத்துஞ் சீர்த்

தேவேந்திரன் வரினும் தேராது கீழுயிர்கள்

ஆவா வா புன்மையுணரா – 9

  Tags – Bhartruhari , Nitisataka , part-3 ,முட்டாள்கள் , மவுனம்கர்வம்,

New Tamil Lesson 11 Verb Kel கேள் Ask or Listen (Post No.12,650)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,650

Date uploaded in London – –  –  29 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

picture line

இது வகுப்பு அறை= Ithu Vakuppu Arai = This (is) a Class Room
அவர் கணக்கு/ கணித ஆசிரியர் = Avar Kanakku Aasiriyar= He (is a ) Maths Teacher
அவர் போர்டில் எழுதுகிறார்.= avar Bordil Ezuthukiraar = Avar, in the board, writes
குழந்தைகள் படிக்கிறார்கள் = Kuzanthaikal Padikkiraarkal = Chikdren Studying (learning)

 xxxxx

கேள்= KEL has got two meanings in Tamil.ASK and LISTEN TO

1.            நான் தினமும் ரேடியோவில் செய்தி கேட்பேன்.

Naan dinamum radiovil seythi ketpen

I, every day/ daily, radio in (on the radio), News, listen.

Everyday I listen to news on the radio.

தினமும் Sanskrit word, so Dinamum;

ரேடியோவில்-  Radio + in; but in English we say on radio;

கேட்பேன்.= KETPEN = will listen to in Tamil future form; but in Tamil it is equivalent to present tense, because anything you do habitually is put is future in Tamil; but in English you only present tense I listen to

2.            அவன் உன்னைக் கேட்டால் நீ சொல்

Avan Unnaik Kettaal, Nee Sol

He , you, if ask, you, tell;

If he asks you you tell;

கேட்டால் KETTAAL Conditional; Kett+ AAL  = Kettaal

உன்னை= You in Accusative form UNN+ AI = UNNAI;

3.            அவன் தமிழ் புஸ்தகம் வேண்டும் என்று கேட்டிருந்தான்

Avan, thamiz pusthakam, Vendum Endru Kettu Irunthaan

He, Tamil Pustakam, want ,  that , had asked/told

He had asked/told  me  that he wanted a Tamil book.

4.            கடன் கேட்பது கெட்ட பழக்கம்

Kadan, ketpathu, ketta , pazakkam

Loan asking bad habit .

Borrowing is a bad habit.

கடன் = kadan.

கேட்பது Ketpathu = asking for = verbal noun.

5.            நீ நல்ல கேள்விகளைக் கேட்டாய்.

Nee, nalla, kelvikalaik, kettay.

You, good, questions, asked .

You asked good questions .

6.            நான் சொன்னால் அவன் கேட்க மாட்டான்

Naan , sonnaal, avan, ketkamaattaan

I, if say, he, wouldn’t listen .

He wouldn’t listen (to me), if I say (it).

If I say it , he wont listen (to me).

7.            அவன் கட்டாயம் உன்னைக் கேட்பான்.

Avan , Kattaayan, unnaik, ketpaan.

He, certainly / definitely / surely/ you will  ask.

He would certainly ask you.

He would certainly question / challenge you (is also possible)

8.            யார் கடன் கேட்டாலும் கொடுக்காதே.

Yaar , kadan, kettaalum, kodukkaathe.

Who(ever) ask loan, don’t give.

Whoever it may be, never give loan (to anyone)

கேட்டாலும் = even ask.

Kettaal = conditional +um= and or even or too

Whenever you use WHATEVER,WHOEVER, WHEREVER,HOWEVER you use this form;  that is conditional form of that verb+UM

Vanthaalum = even if come

Sonnaalum = even if say

Saappittaalum = even if eat

9.            ஒரு நிமிடம் இருங்கள். இதைக் கேட்டுவிட்டுப் போங்கள்.

Oru, nimidam, irungal; ithaik kettuvittup Pongal.

One , minute, wait; this, after listening go .

Wait a minute (please); listen to it and then go.

Kettuvittu = converbial form; meaning is after doing ……..

10.          அவர்கள் மூன்று புஸ்தகம்தான் கேட்டார்கள்.

Avarkal, moondru, pustakam only, asked.

They asked for only  three books.

புஸ்தகம்தான்= emphatic or only = thaan

11.          அது கேட்கிற பொம்மையைக் கொடு

Athu, ketkira, bommaiyaik , kodu

That, asking, toy, give.

Athu = that; though it is used only for lower things, Indian Tamils call children THIS, THAT.

But it is quite opposite in Sri Lanka. They give respect AVAR (he with respect or she with respect)

கேட்கிற= ketkira = present participle,

கேட்ட = ketta = past participle,

கேட்கும் = ketkum = future participle,

12.          நீ அப்பா பேச்சைக் கேட்டகாவிட்டால் அவருக்கு கோபம் வரும்.

Nee, appaa, pechchaik, ketkaavittaal, avarukku, kopam, varum .

You, father , saying, if not listen, to him, anger, would come.

If you don’t listen to what father says, he would be angry.

london swaminathan pesukiraar; ellorum ketkiraarkal = london swaminathan speaks; all listen (to him)

To be continued…………………………………………….

Tags- New, Tamil lesson, part 11, listen, ask

கோப்பாய் முத்துமாரி –இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 42 ( Post No.12,649)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,649

Date uploaded in London – –  –  29 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 42

90.கோப்பாய் முத்துமாரி அம்மன் கோவில்

யாழ்ப்பாண நகரிலிருந்து 6 மைல் தொலைவில் கோப்பாய் முத்துமாரி  அம்மன் கோவில் இருக்கிறது. நாச்சிமார் கோவிலாகத் துவங்கிய இந்த ஆலயம் பிற்காலத்தில் முத்துமாரி  அம்மன் கோவிலாக உருமாறியது . கர்ப்பக்கிரகத்திலுள்ள அம்மன் உட்கார்ந்த நிலையில் கிழக்கு நோக்கி இருக்கிறாள். இது தவிர உற்சவ மூர்த்தியும் இருக்கிறது. விநாயகர், சுப்ரமண்யர், பைரவர் சந்நிதிகளும் இருக்கின்றன.எல்லா இந்துப் பண்டிகைகளும் இங்கே அனுசரிக்கப்படுகின்றன .பெரிய மரங்களும் வயல் வெளிகளும் உள்ள இடம் என்பதால் இயற்கை அழகும் சேர்ந்து அமைதியைக்  கொடுக்கிறது பெளர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. மார்ச் மாதம் வருட உற்சவம் நடக்கிறது . கோவில் தற்காலக் கட்டிடம் என்றாலும் யாழ்ப்பாண மன்னர்கள் இங்கே கோட்டை கட்டி அவ்வப்போது தாங்கினார்கள் என்பதால் இது வரலாற்றில் இடம் பெறுகிறது. அவர்களும் வழிபட்ட கோவில் என்பதை ஊகித்து அறியலாம்.

xxxx

91.வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவில்

அற்புதங்கள் நடைபெறுவது ஏன் ?

இந்த ஆலயம் சிவன் கோவிலுக்கு அருகில் சாலையின் குறுக்கே அமைந்துள்ளது. பொதுவாக இந்த வட்டாரம்  குலோத்துங்க சோழனின் அமைச்சர், தளபதி கருணாகரத்  தொண்டைமானுடன் தொடர்புடையது.1070-1118. அதாவது ஆயிரம் ஆண்டுகள் பழமை உடைத்து. 1795-ம் ஆண்டில்  கோவில் கட்டப்பட்டது . இந்தியாவிலுந்து வந்த சிற்பிகள் கட்டிய கோவில் இது.  புண்ணிய மணியகாரனால்  கற்கோவில் எழுப்பப்பட்ட செய்தியையம்  , 15 நாள் சித்திரைத் திருவிழா நடந்த செய்தியையும் 1864ம் ஆண்டு  அரசினர் அறிக்கையிலிருந்து அறிகிறோம்.

கோவிலின் தோற்றத்தின் பின்னால் ஒரு சுவையான கதையும் உண்டு.

ஒரு முதிய  மாது , இந்தியாவிலிருந்து புறப்பட்ட படகில் ஏறிக்கொண்டு தன்னை வல்வெட்டித்துறையில் இறக்கி விடுமாறு கேட்டுக் கொணடாளாம் அவர்களும்  அவ்வாறே செய்தனர்., கரை இறங்கிய மாது, திடீரென்று மறைந்துவிட்டாளாம். ஆக முத்துமாரியே இப்படி வந்தாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மனிதர்களாகிய நாம், பிரமுகர் ஆகிவிட்டால், நம்மை அறிமுகப்படுத்த விசிட்டிங் கார்ட் அல்லது பிசினஸ் கார்ட்  VISITING CARD OR BUSINESS CARD ஒன்றை எடுத்துச் சென்று கொடுக்கிறோம். இறைவனும் இப்படி ஒரு பிஸினஸ் கார்ட் வைத்துள்ளார். அதுதான் அவர் செய்யம் அற்புதச் செயல்கள் MIRACLES. அதைப்பார்த்தவுடன் நாம் அவருடைய மகிமையை அறிகிறோம்.

சத்யா சாய் பாபாவிடம் SATHYA SAI BABA  அவர் செய்த அற்புதஹங்கள் பற்றிக் கேட்ட பொழுது அவரும் ‘இவை என் விசிட்டிங் கார்ட்’ என்று சொன்னார்.

ஆக , விசிட்டிங் கார்டுக்குப் பின்னாலுள்ள மனிதரிடத்தில் நம் என்ன காண்கிறோமோ அந்த நிலையை அடைய வேண்டும். வெறும் விசிட்டிங் கார்ட்/ அற்புதங்கள் பற்றி மட்டும் பேசிக்கொண்டே  இருக்கக்கூடாது என்பதுதான் இதன் தாத்பர்யம்/ உட் கருத்து .

XXXXXX

92.மாத்தளை முத்துமாரி அம்மன் கோவில்

இலங்கையில் மத்திய மலைநாட்டில்  மாத்தளை நகரம் இருக்கிறது. கண்டி நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவு . இலங்கையில் நடைபெறும் தேர்த் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தமானது மாசி மாதம் நடக்கும் மாத்தளை பஞ்ச ரத  பவனி ஆகும். 5 தேர்களில்  5 மூர்த்திகள் பவனி வருவதால் பஞ்ச ரதம் எனப்படுகிறது . மலையகத் தமிழர்களின் காவல் தெய்வமாக முத்து மாரி அம்மன் அருள் புரிகிறார். இந்தியாவிலியர்ந்து 200,  300 ஆண்டுகளுக்கு முன்னர் பிழைப்பு தேடி வந்த தொழிலாளர்களின் முயற்சியில்  எழுந்தது இந்த ஆலயம் .

கண்டி மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கருப்பண்ணர் என்பவர்  ஆசியில் தோன்றிய கோவில் பின்னர் சுப்பையா பிள்ளை என்பவரால் போற்றி வளர்க்கப்பட்டது . பெயர்தான் முத்துமாரி கோவிலே தவிர இங்கு இல்லாத தெய்வங்கள் இல்லை. இந்துக்களில் உள்ள எல்லா சமூகத்தினர் மட்டுமின்றி இலங்கையிலுள்ள எல்லா சமூகத்தினர் பங்கேற்கும் தேர்த் திருவிழாவை நாடே அறியும்  .

பஞ்ச முக விநாயகர், பழனி ஆண்டவர் முதல் ஸ்ரீரெங்கநாதர் வரை  எல்லா தெய்வங்களையும் ஒரு சேர வணங்க  வழி செய்யும் ஆலயம் இது.  மதுரைவீரன், காத்தவராயன், கருப்பண்ண சாமி என்ற தெய்வங்களை இங்கு மட்டுமே காண முடியும் . கோவில் பூஜைகளையும் விழாக்ளையும் அறங்காவலர் சபை அற்புதமாக நடத்திவருகிறது .

கட்டிடக்  கலையிலும் கோவில் முன்னணியில் நிற்கிறது. 108 அடி ராஜ கோபுரம். வண்ண வண்ண சுதைகள் நிறைந்த கோபுரம்.

XXXXX

தென் இந்திய வணிகர்கள் இந்தக்  கோவில் கட்டடங்களுக்குப் பேருதவி செய்தனர் .பின் 1852 ஆம் ஆண்டு தியாகராஜ செட்டியாரால் கட்டப்பட்டது.

பிள்ளையார், மீனாட்சியுடன் சோமசுந்தரேஸ்வரர், முருகன், முத்து மாரியம்மன் மற்றும் சண்டேசுவரி ஆகிய தெய்வங்கள் ஐந்து தேர்களில் நகரினை வலம் வந்து மக்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

மாசிமக திருவிழா ஆரம்பமானதுடன் மாத்தளை நகர் விழாக்கோலம் பூண்டு மிக அழகாக காட்சியளிக்கும். . மக்கள் வீடுகள் மற்றும் கடைகளை வாழைமரம்,தோரணம் கொண்டு அலங்கரித்து தேர் திருவிழாவிற்கு ஆயத்தமாவர்.

கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா, தைமாத பிரம்மோற்சவம், மாசிமகம், நவராத்திரி, பௌர்ணமி செவ்வாய் என்பன மிக விசேடமாகவும் மகாசிவராத்திரி, குடமுழுக்கு பூஜைகள், விளக்கு பூஜைகள், ஐயப்ப பூஜைகள் என்பனவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றன.  அத்தோடு, வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை போன்ற விசேட தினங்களில், அம்பாளுக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இடம்பெறுகின்றன.

1955 ஆம் ஆண்டளவில் அமரர் குமாரசுவாமி தலைமைப் பதவியை ஏற்றிருந்த காலகட்டத்தில் இவ்வாலயம் முன்னேற்றம் கண்டது. வேதாகம முறைப்படி விஸ்தரிக்கப்பட்ட ஆலயத்தின் பிரகாரத்தில் பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து மூலஸ்தானமும் விஸ்தரிக்கப்பட்டு அர்த்த மண்டபம், மஹா மண்டபம் எனப் பல மண்டபங்களும் நிர்மாணிக்கப்பட்டன. மற்றும் ஆலய சுற்றுப் பிரகாரத்தில் பிள்ளையார் வள்ளி தெய்வானை, சமேத முத்துக்குமார சுவாமி ஆலயம் என்பன 1960 ஆம் அமைக்கப்பட்டதோடு 1963 ஆம் ஆண்டு ஈசான மூலையில் ஸ்ரீ முத்து மீனாட்சி சமேத சோம சுந்தரேச்வரர் ஆலயம் நிர்மாணிக்கப் பட்டது. மேலும் நடராஜர் சபை, முப்பெரும் தேவியர், ஸ்ரீ தேவி, பூதேவி, சமேத ஸ்ரீ ரங்கா நாதர் எனப் பல பரிவார மூர்த்திகளும் அமைக்கப் பட்டு 1963 ஆம் ஆண்டு கும்பாபிஷேகப் பெருவிழா நடந்தது.  நேரம் தவறாது காண்டாமணி ஓசையுடன் கூடிய ஐந்து கால பூஜை இன்றும் நடைபெறுகிறது.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக மாத்தளை மா நகரில் பஞ்சரத பவனியை எழுப்பி சரித்திரம் படைத்தது  1983 ஆம் ஆண்டு  ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது சித்திரத்தேரும் ஏனைய ஐந்து தேர்களும் விஷமிகளால்  எரி யூட்டப் பட்டன.. மீண்டும் அம்பிகையின் அனுக்கிரகத்தால் 1992 ஆம் ஆண்டு ஐந்து சித்திரத் தேர்களை கட்டினார்கள் 1993ல் மீண்டும் தேர் விழா துவங்கியது.

—SUBHAM—–

Tags. அற்புதங்கள் நடைபெறுவது ஏன் ? முத்துமாரி அம்மன் கோவில் , மாத்தளை, கோப்பாய், Part 42, வல்வெட்டித்துறை

இலங்கையில் செட்டியார்கள் கட்டிய கோவில்கள் (Post No.12,648)

London Murugan Temple chief priest Sri Naganatha Sivnm started the event of Nagrathar Chettiyar Makara Nonbu by firing the first shot.in London on 28-10-2023. London Swaminathan was the Chief Guest.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,648

Date uploaded in London – –  –  29 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்து மததத்திற்கு நகரத்தார் செய்த சேவை என்ற தலைப்பில் பேசுவதற்கு லண்டன் நகரத்தார் சங்கத்தினர் என்னை அழைத்திருந்தனர் .இந்த நிகழ்ச்சி 28-10-2023ல் லண்டன் முருகன் கோவிலில் நடந்ததது. நான் நான்கு விஷயங்களை எடுத்துக்கொண்டேன். அதில் இலங்கையில் நகரத்தார் சமூகத்தினர் செய்த கோவில் பணிகள் பற்றி நான் சொன்ன விஷயங்கள் பின் வருமாறு :—

(இதுவரை நன் சேகரித்த விஷ்யங்களையே அளித்துள்ளேன். இன்னும் ஏராளமான தகவல்கள் விடுபட்டிருக்கலாம். அவர்கள் நடத்தும் கோவில்களில் தேவார திருவாசக பள்ளிகள் நடத்தப்படுகின்றன; தமிழ்ப் பள்ளிகளையும் நடத்துகிறார்கள் ; பல நூல்களை வெளியிடுகிறார்கள். தமிழ் அறிஞர்களை அழைத்து சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்கிறார்கள். கோவில்களில் அவர்கள் பெயர்களில் கட்டளைகளை உருவாக்கி பூஜைகள் நடக்கவும் உதவி செய்கிறார்கள் )

Chief Guest London Swamiathan addressed over 00 Chettiyar people

இலங்கையில் இந்திய வணிகர்கள் நிறைய கோவில்களுக்கு பொருளுதவி செய்து மாபெரும் கோபுரங்களை எழுப்பினர். மலேசியா முதலிய இடங்களில் அவற்றை எழுதிவைத்ததுபோல இலங்கை விஷயத்தில் நகரத்தார் சேவை பற்றி யாரும் தொகுத்து எழுதியதாகத் தெரியவில்லை. ஆகையால் முதலில் நான்  ஏற்கனவே தொகுத்தும் எழுதியும் வைத்துள்ள தகவல்களைத் தருகிறேன்.

40.வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவில் , யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள இந்த சிவன் கோவிலுக்கு செட்டியார் கோவில் என்ற பெயரும் உண்டு; காரணம், வைத்திலிங்க செட்டியார் என்பவர் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கோவில் இது . இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் இலங்கையில் இந்துமதம் தழைக்க வித்தூன்றிய ஆறுமுக நாவலர்,  முதலில் சமயச் சொற்பொழிவு ஆற்றிய கோவில் இதுதான்

இந்தியாவிலிருந்து வந்த கோபால செட்டியார்  வணிகம் மூலம் பெரும் பொருளை ஈட்டினார். இதனால் அப்போது ஆட்சி செய்துவந்த ஹாலந்து நாட்டு டச்சுக்காரர்களிடம் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது  அவருடைய மகன்தான் வைத்திலிங்க செட்டியார். அவரும் முத்துக்குளித்தல் முதலிய தொழில்கள் மூலம் பெரும் பொருள் ஈட்டினார். மேலும் தனது செல்வத்தை தர்மப்பணியில் செலவிட்டார். கூழங்கைத் தம்பிரான் கூறியபடி சிவன் கோவிலை   எடுப்பித்தார். அங்கே வைத்தியநாதனையும் தையல் நாயகியையும் பிரதிஷ்டை செய்தார்.

வண்ணார்பண்ணை கோவில் உருவான வரலாறு சுவையான வரலாறு. போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவ வெறியர்கள் இலங்கையிலுள்ள 4000 கோவில்களில் பெரும்பாலானவற்றை தரை மட்டமாக்கி அந்தக் கற்களைக் கொண்டு சர்ச்சுகளையும் கோட்டைகளையும் கட்டினார்கள். நெதர்லாந்து/ ஹாலந்து நாட்டிலுள்ள கிறிஸ்தவர்ளுக்கு மதவெறி கொஞ்சம்  குறைவு . ஆகையால் இந்துக்  கோவில்களைக் கட்டுவதற்கு அனுமதித்தார்கள். ஆனால் அதற்கும் பணம் வசூலித்துவிடுவார்கள் ; வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்காரர்கள் அல்லவா !

பனங்காமம் நல்ல மாப்பாண வன்னியனை தேசத் துரோகக் குற்றத்தின் கீழ் பிடித்து சிறையில் அடைத்தனர் டச்சுக்காரர்கள் . வைத்திலிங்க செட்டியார் தனது செல்வாவாக்கைப் பயன்படுத்தி விடுதலை செய்தார். அதற்கு நன்றி பாராட்டும் முகத்தான்,  அவர் 20,000 பனை மரங்களை கோவில் கட்டுவதற்கான வேலைகளுக்கு அளித்தார் . அவரை விடுதலை செய்யசெட்டியார் கொடுத்த தொகை 1200 டாலர். அது அக்காலத்தில் பெரும் தொகை . டச்சுக்காரர்கள் எவ்வளவு கில்லாடிகள் என்பதை அறிய இது உதவும் .

மாப்பாண வன்னியன் பனை மர நன்கொடையோடு நிற்கவில்லை. வைத்திய நாத சுவாமி- தையல் நாயகி அம்மனின் நித்திய பூஜைக்காக துணுக்கை வட்டாரத்திலுள்ள ஒரு கிராமத்தையும் கோவிலுக்கு தானம் செய்தார் அதன் நெல்வயல்களும் குளமும் கோவிலுக்குச் சொந்தமாயின.

xxxxx

43.காரைநகர் சிவன் கோவில்ஈழத்து சிதம்பரம் யாழ்ப்பாணம்

ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் கோவில்  யாழ்ப்பாண நகரிலிருந்து 10 மைல் தொலைவில் , காரை  நகரில்  திண்ணபுரம் பிரிவில்  அமைந்துள்ளது. பழங்கால ஐயனார் கோவில் இருந்த இடத்தில் இக்கோவில் கட்டப்பட்டது . வன்னி மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், 1518-ம் ஆண்டில், தமிழ் நாட்டிலிருந்து வந்த முத்து மாணிக்கம் செட்டியார்  இப்போது கோவில் இருக்கும் இடத்திற்கு அருகில் ஐயனாரை வழிபட கோவில் கட்டினார். 1618-ம் ஆண்டில் இதை சூறையாட கிறிஸ்தவ மதவெறியர்கள் போர்ச்சுகல் நாட்டிலிருந்து வந்தனர். தெய்வீக ஆற்றலால் கோவில் தப்பித்ததாம். அவர்களைத் தொடர்ந்து வந்த ஹாலந்து நாட்டு கிறிஸ்தவ வெறியர்கள் 1658-ம் ஆண்டில் கோவிலைத் தரை மட்டம் ஆக்கினர்.

Banana Tree Cutting 

One more shot by another priest, followed by Nagarathar Children and elders.

xxx

கேப்டன் கார்டன்  கோவில்/ தீவுக்கோவில் The Captain’s Garden Kovil, is located on Kovil Street, Colombo

இது கொழும்பு நகரில் உள்ள கோவில்

டச்சுக் காரர்கள் ஆட்சிக்காலத்தில், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர், கோவில் கட்டப்பட்டது . தென்னிந்தியாவிலிருந்து வியாபாரம்  செய்ய வந்த வணிகர்கள் இந்தக் கோவிலைக் கட்டினார்கள். ஒரு டச்சுக்கார அதிகாரிக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. இங்குள்ள பிள்ளையாரை வணங்கினால் குழந்தை பிறக்கும் என்று கேள்விப்பட்டு வணங்கினார். அந்த தம்பதியருக்கு குழந்தை பிறந்தவுடன், அவர் ஏக்கர் கணக்கில் நிலத்தை தானம் செய்யவே, செட்டியார்கள் அங்கே கோவிலை எழுப்பினார்கள் .

 Xxxxx

கேதீஸ்வரம் ஆலயம்

கேதீஸ்வரம் ஆலயம் இருந்த இடத்தையும் அந்த இடத்தை சுற்றியுள்ள 43 ஏக்கர் நிலப் பகுதியையும் திரு. இராம.அரு.பழனியப்ப செட்டியார், அன்றைய பிரித்தானிய அரசிடம் விலைக்கு வாங்கினார். கொழும்பு நகர நகரத்தார் சமூகத்தினர், மற்றும் மலேசியாவில் உள்ள பக்தர்கள் ஆகியோரும் ஈழத் தமிழர்களுடன் சேர்ந்து கோவிலை ஆகம முறைப்படி அமைத்தனர். அங்கு பூஜைகள் நடக்கவும் அவர்கள் உபயம் ஏற்படுத்தினார்கள். இன்று நேரம் தவறாது சீரும் சிறப்புடனும் வழிபாடுகள் நடக்கின்றன. கொழும்பு நகர நாட்டுகோட்டை நகரத்தார் சார்பாக விசேஷ காலங்களில் அபிஷேக ஆராதனைகளும் சிறப்புற நிகழ்ந்து வருகிறது

Xxxx

வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவில் , திருகோணமலை மாவட்டம்

மகாவலி கங்கை நதியின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் சித்திரவேலாயுத சுவாமி கோவில் உள்ளது.  திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் வழியில் பாதி தூரத்தில் அமைந்துள்ளது. கதிர்காமத்துக்குப் பாத  யாத்திரை செல்லுவோர் தங்கிச் செல்லும் இடம் இது.

இந்தக் கோவிலின் தோற்றம் சுவையான கதை ஆகும். நல்லை நாத செட்டியார் என்பவர். தமிழ் நாட்டிலுள்ள திருநெல்வேலியிலிருந்து ஆண்டு தோறும் கதிர்காம யாத்திரை செய்துவந்தார். அவர் திருகோண மலைக்கு வந்து அங்கிருந்து யாத்திரையைத் துவங்குவார். பாதி தூரத்தில் உள்ள வெருகலில் எல்லோரும் தங்கி விட்டு கதிர்காம யாத்திரையைத் துவக்குவது போல செட்டியாரும் தங்கினார்.

  . அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் முருகப்பெருமான் தோன்றி அங்கு ஒரு ஆலயம் அமைக்க கட்டளையிட்டார். இதற்கான பொருளும் அவரிடம் வந்து சேரும் என்றும் கனவில் உரைத்தார். கோவில் கட்டுவதற்குத் தேவையான பணம் புதையலில் கிடைக்கும் என்றும் கூறி, முருகன் மறைந்தார் ; இறைவன் சொன்னபடியே அவருக்குப் பொக்கிஷமும்  கிடைத்தது .செட்டியார் ஆலயம் அமைக்க திரவியம் எடுத்த இடம் இப்பொழுதும், திரவியம் எடுத்த இடம் என்னும் பெயரால் அழைக்கப்படுறது..

xxxxx

செட்டிகுளம் சந்திர சேகரன் கோவில்

மதவாச்சி – மன்னார் சாலையில் மதவாச்சியிலிருந்து 15 மைல் தூரத்தில் விநாயகர் சிலை வழிபாட்டில் உள்ளது . சாலைக்கு அப்பால் குளமும், வவ்வாலை என்னும் இடமும் உள்ளன

மதுரை நகரைச் சேர்ந்த ஒரு செட்டியார் கப்பல் உடைந்துபோய், முத்துக்குளிக்கும் மீனவர்களுடன் இவ்வூரில் கரை சேர்ந்தனர். இது நடந்தது.  கி  .பி. 247ம் ஆண்டில்.வீர நாராயண செட்டியார் என்ற பெயர் உடைய அவர் வவ்வாலையில் சந்திரசேகரனுக்கு கோவில் கட்டினார்.  என்று VANNI MANUAL, J P LEWIS வன்னி மானுவல் எழுதிய ஜெ.பி. லூயிஸ் குறிப்பிடுகிறார்

Xxxxx

மாத்தளை முத்துமாரி அம்மன் கோவில் கோபுரம் கட்டுவதற்கு தியாகராஜ செட்டியார் பொருளுதவி செய்தார்

XXXX

கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில்—

கோவில்பட்டி தாலுகா இருக்கன்குடியிலிருந்து பூமியிலிருந்து  மண்  எடுத்து வந்து இந்தக் கோவிலைக்  கட்டினர்

இலங்கையில் வாழ்ந்த திருவிளங்க நகரத்தார் எனப்படும் வணிக வைசிக செட்டியார் சமூகத்தவர்களின் பரிபாலனத்தின் கீழ் 1864 ஆம் ஆண்டு முதல் இவ்வாலயம் இயங்கி வருகின்றது.

Xxxxx

நயினாதீவு நாகபூஷணி அம்பாள் கோவில்

பிற்காலத்தில் வீராசாமி செட்டியார் என்பவர் ஏழு பிரகாரங்கள் சூழ அம்பாளை நிறுத்தி கோவில் கட்டினார் என்று தல வரலாறு செப்புகிறது; செட்டியார் கட்டிய கோவிலை 1620-ம் ஆண்டில் போர்ச்சுகீசியர்கள் உடைத்தபோதும் அம்பாள் விக்கிரகத்தை மறைத்து வைத்திருந்தனர் 1882-ம் ஆண்டில் அம்பாள் விக்ரகம் நாகபூஷணி என்ற பெயரில் பிரதிஷ்டை ஆனது. ஒவ்வொரு கட்டிடமும், சந்நிதிதியும் உருவாக பல பக்தர்கள் பொருளுதவி செய்தனர்

— subham—-

From another website:–

தமிழகத்தின் செட்டி நாட்டிலிருந்து 1760 ஆம் ஆண்டுளுக்கு முன்பே வர்த்தக நோக்குடன் இலங்கைக்கு வந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் தமது சொந்தச் செலவில் நாட்டின் பல நகரங்களில் கோயில்களைக் கட்டி நிர்வகித்து வந்தார்கள். செட்டியார்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த கொழும்பு, காலி, கதிர்காமம், கண்டி, திருகோணமலை, மாத்தளை, யாழ்ப்பாணம், கம்பளை, இரத்தினபுரி, குருணாகல், புசல்லாவை, நாவலப்பிட்டி, நீர்கொழும்பு, மாதம்பை, புத்தளம் ஆகிய நகரங்களில் கோயில்களை அமைத்தார்கள்.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் கதிர்காமக் கந்தன் ஆலய உற்சவத்திற்காகக் கொழும்பிலிருந்து வருடா வருடம் யாத்திரை சென்று வந்தார்கள்.

கொழும்பு செட்டியார் தெருவில் 1939 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயம், முதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்துடன் இணைந்து ஆடிவேல் விழாவினை நடத்துகிறது.

—- subham—–

Tags – இலங்கை, நகரத்தார், செட்டியார், கோவில்கள், சுவாமிநாதன் உரை, மகரநோன்பு, லண்டன் முருகன் கோவில், மாநோன்பு. London Temple

மாரதான் நம்பிக்கை! நடந்தவை தான் நம்புங்கள் (Post No.12,647)

picture- Terry Fox in Marathon of Hope

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,647

Date uploaded in London –  29 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 8

ச.நாகராஜன்

நதியைக் கடக்க அடம் பிடித்த யானை!

நேபாளத்தில் ஒரு சம்பிரதாயம் உண்டு.

ஒரு அரசன் இறந்து போகும் போது அவனது ஆவியை பத்திரமாகக் கடைத்தேறச் செய்ய ஒரு சடங்கு உண்டு.

அதன் படி புனித நதியான பாக்மதி ஆற்றை ஒரு யானை கடக்க வேண்டும். அப்படி அது கடந்தால் அந்த அரசனது ஆவி அதன் முதுகின் மீது உட்கார்ந்து பத்திரமாகச் சென்று கடைத்தேறும்.

ஆனால் இளவரசர் தீபேந்திராவின் ஆவி கடைத்தேறும் சம்பவத்தில் நடந்ததோ வேறு. தீபேந்திரா – பிறப்பு : 27-6-1971; மரணம் : 4-6-2001.

1971ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி திடீரென்று தீபேந்திரா தனது அரண்மனையில் தந்தை மன்னர் பீரேந்திரா, தாயார் ராணி ஐஸ்வர்யா, தம்பி, தங்கை மற்றும் அரண்மனை குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றார். பின்னர் தன்னையும் சுட்டுக் கொண்டார். ஆனால் மூன்று நாட்கள் கோமாவில் இருந்து அவர் பின்னர் இறந்தார். அந்த மூன்று நாட்களும் அவரே அரசராக இருந்தார்,

சம்பிரதாய வழக்கப்படி யானை பாக்மதி ஆற்றில் இறங்கியது. ஆனால் அது முன்னேறிப் போக மறுத்தது.

கோபமடைந்த மக்கள் அழுகிய பழங்களை அதன் மீது வீசி எறிந்தனர். செருப்புகளயும் வீசினர். அது அடியும் வாங்கியது.

உடனே கோபத்தால் சீறி பிளிறி திரும்பி கூட்டத்தை நோக்க மக்கள் அலறி அடித்து ஓடினர்.

பிறகு ஒருவாறாக சகதி நிறைந்த பாக்மதி ஆற்றை அது கடக்க வைக்கப்பட்டது.

நேபாளத்தில் நடந்த அதிசய நிகழ்ச்சி இது.

மாரதான் நம்பிக்கை!

உலக பிரசித்தி பெற்ற மாரத்தான் ஓட்டம் உலகின் தலையான வீரர்களை அடையாளம் காட்டும் ஒன்று.

இந்தப் பெயரில் அதிசயமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.

கனடாவைச் சேர்ந்த டெர்ரி பாக்ஸ் (Terry Fox) 1977ஆம் ஆண்டு அவரது 18ஆம் வயதில் அவரது வலது கால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டார்.

மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலைத் துண்டித்தனர் நிபுணர்கள்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் அதற்கான ஆராய்ச்சிக்காக அவர் ஒரு நிதி திரட்ட எண்ணினார்.

செயற்கைக் கால் ஒன்று பொருத்தப்பட்டவுடன் ஓட்டத்தின் மூலமாக இந்த நிதியைத் திரட்ட வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.

1980ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி தனது திட்டத்தை அவர் செயல்படுத்த ஆரம்பித்தார்.

தனது திட்டத்திற்கு அவர் மாரதான் ஆஃப் ஹோப் (Marathon of Hope) என்று பெயர் கொடுத்தார். கனடாவில் நியூபவுண்ட்லேண்டிலிருந்து (Newfoundland) அவர் தனது ஓட்டத்தை ஆரம்பித்தார்.

தினமும் சுமார் 42 கிலோமீட்டர் தூரம் ஓடி 143 நாட்களில் 5373 கிலோமீட்டர் தூரத்தை ஓடிக் கடந்தார். அப்போது அவரது புற்றுநோய் அவரை மீண்டும் பாதித்தது. அதனால் அவர் தனது ஓட்டத்தை நிறுத்த வேண்டி வந்தது.

ஆனால் அவரது இந்த சாகஸ செயலைப் பார்த்து வியந்த கனடிய மக்கள் அவரது திட்டத்திற்கு ஏராளமாக நிதி உதவி அளித்தனர்.

ஆனால் அனைவரும் துக்கப்படும்படி புற்று நோயால் அவர் 1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 22 தான்!

அவரது நம்பிக்கையை நிஜமாக்கும் வண்ணம் கனடிய மக்கள் ஆண்டுதோறும் ‘டெர்ரி பாக்ஸ் ரன்ஸ்’ என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சி விரிவாக்கப்பட்டு கனடா மற்றும் 58 நாடுகளில் ஆண்டு தோறும் நடக்க ஆரம்பித்தது.

லக்ஷக்கணக்கான டாலர்கள் சேர ஆரம்பித்தது. இந்த நிதி கான்ஸரை தீர்க்க உதவும் ஆராய்ச்சிக்கு அளிக்கப்பட்டது.

இந்த டெர்ரி பாக்ஸ் ரன்ஸ் நிகழ்ச்சியை நடத்தும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

***