Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxx
சுபாஷித செல்வம்
விதி குறி வைத்து விட்டால் விடாது!
ச.நாகராஜன்
விதி குறி வைத்து விட்டால் விடாது!
கைவர்தக கர்ஷகரக்ரஹணச்யுதோபி
ஜாலே புனர்நிபதித: ஷபரோ வராக: |
ஜாலாத் புனர்விகலிதோ கிலிதோ பகேன
வாமே விதௌ பத் க்ருதோ வ்யஸநாக்னிவ்ருத்தி: ||
மீனவன் ஒருவன் கையிலிருந்து ஒரு மீன் தப்பியது. அது விழுந்த இடம் அவனது வலை தான்! அந்த வலையிலிருந்து அந்த அப்பாவி மீன் மீண்டும் தப்பியது – ஆனால் இந்த முறை அது ஒரு நாரையின் வாயில் விழ அது மீனை முழுங்கியது. விதி ஒரு மனிதனைக் குறி வைத்து விட்டது எனில் அவனது துன்பத்திற்கு முடிவே இல்லை.
கூரிய புத்தி வெற்றி தரும்!
கேசித் தைவாத் ஸ்வபாவாத் வா காலாத் புருஷகாரத: |
சம்யோகே கேசிதிச்சந்தி பலம் குஷலபுத்தய: ||
சிலர் தனக்குத் தேவையானதை,
விதியால் பெறுகின்றனர்.
சிலரோ இயற்கையாகவே தற்செயலாகப் பெறுகின்றனர்.
சிலரோ காலத்தினால் பெறுகின்றனர்.
சிலரோ மனித முயற்சியினால் பெறுகின்றனர்.
சிலரோ இவை அனைத்தும் சேர்ந்ததினால் பெறுகின்றனர்.
சிலர் தமக்கான வெற்றியை கூரிய புத்தியால் பெறுகின்றனர்.
பலாசமரத்தில் பாம்பு!
கேதாரகாஹசமயே க்ருஷ்ணசர்போ விலோக்யதே |
சேத் பலாசத்ருமாரூட: சுபிக்ஷம் ச வதேன ததா ||
வயல்வெளிக்கு ஒருவன் சென்று அதில் நுழையும் போது, பலாச மரத்தின் மீது அவன் ஒரு கருநாகத்தைக் கண்டால் அது காட்டும் சகுனம் என்னவெனில் அந்த வருடம் அவனுக்குச் செழிப்பான அறுவடை கிடைக்கும் என்பதைத் தான்.
சோகம் போக்கும் இரண்டு எழுத்துக்கள்! (மி, த்ர)
கேனாம்ருதமிதம் ச்ருஷ்டம் மித்ரமித்யக்ஷரத்வயம் |
ஆபதாம் ச பரித்ராணம் சோகசந்தாபபேஷஜம் ||
யார் இந்த அம்ருதம் போன்ற இரண்டு எழுத்துடைய மித்ர என்பதை உருவாக்கியது?! (மி-த்ர – நண்பன் என்று பொருள்) துன்பங்களுக்கு எதிராக பாதுகாக்கும், சோகம், துக்கம் ஆகியவற்றைப் போக்கும் இதை உருவாக்கியது யார்?
செய்ய வேண்டியது என்ன?
கே யூயம் நோ வயமபி ச வ: கே பவாமோ பவாப்தௌ
கர்மோர்மோணாம் விஷமவலநை: பேனவத் புஞ்ஜிதா: ஸ்ம: |
தத் க்ஷேபோய: க்ஷயிணி நிசயே சித்தமாதாய புத்ரா:
சர்வாரம்பைர்லகத ஜகதாமந்தராத்மன்யநந்தே ||
நீ யார் எங்களுக்கு?
நாங்கள் உனக்கு யார்?
இந்த கடல் போன்ற இந்த உலக வாழ்க்கையில் நாம் யார்?
நமது செயல்கள் வடிவில் அலைகளில் அடித்துச் செல்லப்படும் நுரைகள் போன்றவர்களே நாம்!
ஆகவே அழியக்கூடிய பொருள்களிலிருந்து மனதை இழுத்து விடுவித்து அதை முடிவற்ற பிரபஞ்ச ஆன்மாவின் மீது நிலை நிறுத்தி,
ஓ, குழந்தைகளே! அனைத்து முயற்சியையும் செய்து அதன் மேலேயே பற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
WHO AM I -நான் யார் என்ற விசாரத்தைச் செய்து பிரம்மத்தையே நினைத்து அதை அடை என்பது திரண்ட பொருள்.
மைத்ரீ சா ப்ரணயாத் ஸம்ருத்ததிரனயா த்யாகப்ரமாதாத்தனம்
37. A king is ruined by evil counsel, a Sanyasi by attachment and a child by indulgence. A Brahmin is ruined by not studying (the Vedas), a family by a wicked son and good conduct by serving an evil-doer. Modesty is lost by wine, cultivated land by neglect, and affection by a sojourn abroad. Friendship is destroyed by lack of solicitude, abundance by mismanagement, and wealth by careless spending.
வள்ளுவன் சொல்லுவான்,
நிலத்தியல்பால் நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பதாகும் அறிவு – 451
நல்ல மழை நீர் எந்த நிலத்தில் விழுகிறதோ, அதன் குணத்தை அடையும்; அது போல நல்லவர்கள் யாருடன் சேருகிறார்களோ அந்த குணத்தையே அடைவர் என்பான் வள்ளுவன்
ஆக வள்ளுவனும் பர்த்ருஹரியும் உரைப்பது ஒரே உண்மையையே!
கள் குடிப்பது பற்றி இந்துக்கள் அறைவது போல வேறு எவரும் பறைந்தது இல்லை. வள்ளுவனுக்குத் தெரியும்- தமிழர்கள் குடியால் அழிவர் என்று; ஆகையால் பத்துக் குறள்களில் பிட்டுப் பிட்டு வைக்கிறான். பர்த்ருஹரி ஒரே வரியில் சொன்னான்.
கள்ளுக் குடிப்பவன் ஒளியிழப்பர் (921)- அதாவது முகத்தில் தேஜஸ் போய்விடும்; மதிப்பும் மரியாதையும் அழிந்து விடும்
‘நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’- 926; என்ன அழகான வாக்கியம்; வள்ளுவனுக்கு இணை வள்ளுவனே! அவர்கள் நடைப்பிணங்கள் என்றும் அதே குறளில் சாடுகிறார்.
xxxx
SLOKA 38
தானம் போகோ நாசஸ்திஸ்த்ரோ கதயோ பவந்தி வித்தஸ்ய
யோன ததாதி ந புங்தே தஸ்ய த்ருதீயா கதிர்பவதி – 38
दानं भोगो नाशस्तिस्रो
गतयो भवन्ति वित्तस्य ।
यो न ददाति न भुङ्क्ते
तस्य तृतीया गतिर्भवति ॥ 1.38 ॥
பொருள்
“ஒருவனுடைய செல்வம் மூன்று வழிகளில் கரைகிறது; தானம் கொடுப்பதாலோ, தனக்குப் பயன்படுத்துவதாலோ, இழப்பதாலோ போய்விடும். முதல் இரண்டு வழிகளைப் பயன்படுத்தாதோருக்கு மூன்றாவது வழி திறந்தே இருக்கிறது”.-38
சாணை கடைமணியுஞ் சத்திரந் தேய்க்கை க்கழுந்து
பேணு மதி சூரனும் பீடார் மதம் பொழிந்து
மா ணு முடல் வாடகரு வாரண முங்கவி கார்த்திகையிற்
காணுமணல் மேடு திகழ் காணாரும் பூரணையில்
வானிலவும் நல்வழியிலன் வாய்ந்த தருமந்தன்னில்
நாணுதலி ல் செல்வமும் நன்று– 38
38. Charity, enjoyment, and ruin are the three ways of wealth to go spent. He who neither gives nor enjoys has the third course (left for his wealth).
பணத் தழிவுக்கோரருஞ்சற் பாத்திரதானம்
கணக்கின்றி தானுகர்தல் காணா -திணக்கமற்ற
கள்ளன் எடுத்தலென்று காசினியிற் கண்டவழி
உள்ளபடி மூவா உ ணர்ந்தெவரும் கொள்ளுவதால்
முன்னிரண்டிற் செல்லவிடான் மூன்றாம் வழிய தனில்
அன்னதிழப்பான் அயர்ந்து –38
xxx
பழமொழி 400 என்னும் தமிழ் நூல் இதை இன்னும் அழகாகச் சொல்லும்.
நாய் கையில் கிடைத்த தேங்காய் போல என்று
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் – தழங்கருவி
வேய்முற்றி முத்து திரும் வெற்ப அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம் –பழமொழி 216
பொருள்
“ஒலிக்கும் அருவிகளையுடைய மூங்கில் முதிர்ந்து முத்து உதிரும் மலை நாட்டையுடையவனே !
மற்றவர்க்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் உள்ளவன் பெற்ற செல்வம் நாய் பெற்ற தேங்காய் போன்றதன்றோ!”
நாயிடம் தேங்காய் கிடைத்தால் அதைப் பயன் படுத்தாமல் உருட்டிக்கொண்டு இருக்கும்.மற்றவர்களையும் நெருங்க விடாது.
ரத்தினக் கல்லை அறுத்து அறுத்து பட்டை தீட்டினாலும் ஜொலிக்கத்தான் செய்கிறது;
விழுப்புண் அடைந்தாலும் வெற்றி பெற்ற வீரனின் முகம் பெருமித ஒளி வீசுகிறது;
யானையானது மத நீர் அனைத்தும் வடிந்தும் கம்பீரமாகக் காட்சி தருகிறது;
நதியானது தண்ணீர் குறைந்த காலத்திலும் அழகுடன் தோன்றுகிறது;
அமாவாசைக்கு அடுத்த இரண்டாவது நாளிலும் நிலவு அழகாகத்தான் ஒளிர்கிறது;
காதலனுடன் கட்டிப் புரண்டு காலையில், களைப்புடன் எழுந்தபோதும் மனைவியின் அழகு குன்றவில்லை;
பணக்காரன், அவனது செல்வம் முழுதையும் தர்மம் செய்தபோதும் பொலிவுடன் திகழ்கிறான்.
39. A gem polished on a grindstone, a victor of a battle injured with weapons, an elephant weakened by rutting, a river’s sandy bed shrunken in autumn, the moon with a single digit left, a young woman weary with love sports and people whose wealth is reduced by giving to seekers – all these shine due to their emaciation.
இவற்றில் ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து ரஸிக்கலாம்.
இருந்தபோதும் கவிஞன் சொல்ல வரும் விஷயம், கையில் உள்ள எல்லாவற்றையும் தானம் கொடுத்தபோதும் செல்வந்தனுக்குப் புகழும் புண்ணியமும் எஞ்சி நிற்கும் என்பதாகும்.
காளிதாசனின் ரகுவம்ஸ காவியத்திலும், சங்க இலக்கியப் புற நானூற்றிலும் தானத்தினால் ஒருவனுக்கு ஏற்பட்ட வறுமையை புலவர்கள் புகழ்கிறார்கள்.
அதே போல ஒரு வீரனுக்கு உடலில் ஏற்பட்ட காயங்கள் அழகு தருமேயன்றி அழகைக் குறைக்காது என்பதையும் தமிழ், ஸம்ஸ்க்ருத நூல்கள் பன்முறை பகர்கின்றன.
பிராமணர்கள் எல்லோரும் பூணுல் போட்ட நாளிலிருந்து சந்தியாவந்தனம் செய்யவேண்டும் என்பது தற்போதுள்ள நடை முறை. இதை மூன்று வேளைகளில் செய்ய வேண்டும். அதுவும் 5 அல்லது 7 வயது முதல் சாகும் வரை செய்ய வேண்டும். அதுவும் காணாமல், கோணாமல் கண்டு கொடுக்க வேண்டும் . அதாவது சூரியனைக் காணாதபோது , உதய காலத்தில் செய்; நிழல் கோணாத நேரம், அதாவது பகல் 12 மணிக்கு செய்; சூரியன் மறையும் முன், அதாவது கண்டு , சூரியனைக் கண்டு, செய். இப்போது பிராமணர்கள் கல்யாணத்துக்கு முதல் நாள் கூட பூணுல் போட்டுக் கொள்கிறார்கள். அதற்கு முன்னர் 7 வயதில் போட்டுக்கொண்டாலும் சந்தியா வந்தனம் செய்வதில்லை. அப்படியே செய்தாலும் 3 வேளை காணாமல், கோணாமல், கண்டு சூரியனுக்கு நீர் (அர்க்யம்) கொடுப்பதில்லை. ஆனால் ராமாயண காலத்தில் பிராமணர் முதல் சூத்திரர் வரை சந்தியாவந்தனம் செய்ததாக வால்மீகி சொல்கிறார். சீதா தேவியும் சந்தியாவந்தனம் செய்தாராம். இந்த வியப்பான விஷயங்களைக் காண்போம்.
‘சந்தியா’ ‘வந்தனம்’ என்ற இரண்டு சொற்களும் தமிழிலும் உள்ளன. சந்திப்பு என்றால் இரண்டு, ஒன்றை ஒன்று பார்ப்பது; உதய காலத்தில் ஒரு சந்தி ; பின்னர் காலைப் பொழுது மதியத்தை சந்ததிக்கும் போதும், மதியப் பொழுது, மாலை நேரத்தைச் சந்ததிக்கும் போதும் மூன்று சந்திகள் ஏற்படும். தமிழிலும் கூட , அந்திப் பொழுது என்று சொல்வோம். வந்தனம் என்பது வணக்கம் என்பதுடன் தொடர்புடைய சொல். ஆக தமிழும் ஸம்ஸ்க்ருதமும் சிவ பெருமானின் உடுக்கை ஒலியிலிருந்து வந்தவைதான். இதை பாரதியாரும் பாணினியும் பாடி வைத்துள்ளனர் .
பாரதி பாடல் தமிழ்த்தாய்
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.
முன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் — பாரதி பாடல்
உடுக்கையின் இரு புறத்திலிருந்து வரும் ஒலியை இரு தரப்பினரும் சிறிது மாற்றிக் கேட்பதும் இயல்பே. நாய் லொள் , லொள் என்று குரைத்ததாக அல்லது வள் , வள் என்று குரைத்ததாக நாம் தமிழில் சொல்லுவோம். ஆயினும் ஐரோப்பிய மொழி ஒவ்வொன்றும் வெவ்வேறு சப்தத்தை நாய் குரைப்பதாக எழுதுகிறது. இதை கூகுள் google செய்து பாருங்கள்; வியந்து போவீர்கள் ஆகவே வணக்கம் என்பதும் வந்தனம் என்பதும் ஒன்றே .
சந்தியா வந்தனத்தில் மூன்று வேளைகளிலும் மூன்று தேவியரையும் வணங்குவோம் ; காயத்திரி,சாவித்திரி சரஸ்வதி என்ற 3 தேவியரையும் இருதயத்தில் ஆவஹித்து (மனதுக்குள் வரவழைத்து) காயத்ரி ஜபத்தை சொல்லுவார்கள். முன்னும் பின்னும் நீரையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.
உலகிலேயே மிகப்பெரிய செல்வம் தண்ணீர். நீரின்றி அமையாது உலகு என்று இந்து மதப் புலவன் வள்ளுவன் இயம்புவான். இந்துக்கள் இந்த பூமியில் பிறந்ததால் தண்ணீரை வைத்தே நல்ல , கெ ட்ட சடங்குகளை செய்வார்கள். தனது வாழ்நாளில் இந்தியாவுக்கே வராத, ஒரு இந்துவின் தினசரி சடங்கினையும் பார்த்திராத, மாக்ஸ்முல்லர் கும்பல், இந்துக்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லுவது அபத்தம் என்பது தண்ணீர் சடங்குகளை பார்த்தாலே புரியும். வெள்ளைக்காரன் தண்ணீரைத் தொடக்கூட மாட்டான. அவன் வசிப்பது குளிர்ந்த பூமியில்..
1.சூத்திரன் செய்த சந்தியாவந்தனம்
தசரதன் வேட்டைக்குப் போனான். அந்தக் காட்டில் ஒரு நதி ஓடியது. சிரவணன் என்ற சூத்திரப் பையன் அவனுடைய அப்பாவுக்காக அந்த ஆற்றில், குவளையில் தண்ணீரை மொண்டு எடுத்தான். அந்த சப்தத்தை யானை என்று எண்ணி தசரதன் அம்பினை எய்ய, அது சிரவணன் உடலில் பாய்ந்த்து. கதறி விட்டான் ; ஆ என்று அலறினான். மனிதன் குரலைக் கேட்டு வியப்பும் அச்சமும் மேலிட்ட தசரதன் வந்து பார்த்தபோது தான் செய்த தவறு புரிந்தது; அவன் தந்தை தாய் இருக்குமிடத்திற்கு தசரதனே தூக்கிச் சென்றான்.
பயந்து ஓடவில்லை. மேலை நாடுகளில் யார்மீதாவது கார் மோதினால் அவர்கள் ஒடி ஒளிந்து கொள்வார்கள். சாகும் தருவாயில் உள்ளவனுக்கு உதவ மாட்டார்கள்; ; அப்படி இல்லாமல் தசரதன் அங்கே சென்று வைசிய குலத்தில் பிறந்த தந்தையையும் சூத்திர குலத்தில் பிறந்த தயையும்ம் (ஆதாரம் வால்மீகி , அயோத்யா காண்டம், அத்தியாயம் 63) புத்திர சோகத்தை தணிவிக்கிறான். ஆயினும் அவர் தசரதனுக்கும் புத்திர சோகம் ஏற்படக்கடவது என்று சபிக்கின்றார் . அதற்கு முன்னர், சிரவவணன் நாள்தோறும் சந்தியா வந்தனம் தவறாமல் செய்தான் என்று குறிப்பிடுகிறார் ( இந்தக் கதை மஹாபாரதத்திலும் , புராணங்களிலும் வெவ்வேறு விவரங்களுடன் வருகிறது ). சிரவணனை, இந்திரனே நேரில் வந்து தேரில் அழைத்துச் செல்கிறான். அவனது தந்தையும் காட்டில் துறவி போல வாழ்ந்து வந்தார் என்பதும் குறிப்பிட்டது தக்கது .
2. பிராமண / க்ஷத்ரிய விச்வாமித்திரன்
ராமனையும் லெட்சுமணனையும் காட்டிற்கு அழைத்துச் சென்றவர் விச்வாமித்திர மகரிஷி; அவர் பிராமணர் அல்ல; பிறப்பில் க்ஷத்ரியர் ; மூவரும் காட்டில் இருந்த போது சந்தியா வந்தனம் செய்ததை வால்மீகி பாடி வைத்துள்ளார். ராமர், தாடகையைக் கொன்ற பின்னர், சீதையை மணந் ததை நாம் அறிவோம். விசுவாமித்திர மகரிஷி கடும் தவம் இயற்றி பிராமண ரிஷியாகி மாறி, வசிட்டர் வாயால் பிரம் ம ரிஷி ஆனதையும் நாம் படிக்கிறோம். அவர்தான் பிராம ணர் சொல்லும் காயத்ரீ மந்திரத்தையும் தந்தவர் .
3.தேரோட்டி சுமந்திரன்
தேரோட்டி ஜாதி என்றால் க்ஷத்ரியர்களுக்கும் தாழ்வான ஜாதி என்று மஹாபாரதத்தில் படிக்கிறோம். இதனால் கர்ணனை பாண்டவர் இகழ்ந்தவுடன். அங்கிருந்த துரியோதனன், உடனே அவனை அங்க தேச மன்னனாக அறிவிக்கிறான். இப்படிப்பட்ட ஒரு தேரோட்டிதான் ராமாயணத்தில் வரும் சுமந்திரன். கைகேயியின் சொற்படி ராம லட்சுமண, சீதை ஆகியோரை தேரில் ஏற் றிச் சென்ற சுமந்திரன் காட்டிற்குச் சென்று குதிரைகளைத் தேரிலிருந்து அவிழ்த்துவிட்டு சந்தியா வந்தனம் செய்கிறான்.; மறுநாள் கங்கைக் கரையில் சிருங்கி வேரபுரத்தில் இறக்கி விடுகிறான்
பிராமணர்கள் யார் என்று வில்லியம் ஹண்டர் சொல்கிறார் ,
“உலக வரலாற்றின் ஆரம்ப கட்டத்திலேயே தங்களுக்கு சட்ட திட்டங்களை வகுத்துக்கொண்டு கட்டுக்கோப்புடன் வாழ்ந்த ஒரு பிரிவினரை பிராமணர்கள் என்று அழைக்கின்றனர் . தன்னடக்கமும், தனி பண்பாடும் அதன் முக்கிய அம்சங்கள். அவர்கள் தங்கள் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டதாலும், இளம் வயதிலேயே கல்யாணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்றதாலும் , போர் முனைகளில் இளம் வயதிலேயே இறக்காததாலும் அவர்களுடைய மிகச் சிறந்த குணங்களை, மிக மிக அதிக அளவில் சந்ததிகளுக்கு விட்டுச் சென்றனர்” — ஸர் வில்லியம் வில்சன் ஹண்டர் (1840-1900)
SIR Willam Wilson Hunter, known for his work The Imperial Gazetteer of India
xxx
2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சங்கத் தமிழ் நூல்கள் பிராமணர் பற்றி செப்புவது யாதெனின்,
“இவர்கள் வீடுகளில் முத்தீ (Three different Fire Altars) வளர்த்து வழிபட்டனர் . வேதங்களை ஓதி வேள்விகள் செய்தனர். சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களை வழிபட்டனர். விவாதங்களில் பங்கு கொண்டனர் ; அவர்களுடைய வீடுகள் தூய்மையாகவும், எளிமையாகவும் இருந்தன.. இரண்டு மன்னர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டால், பிராமண தூதர்களை மட்டுமே அனுப்பி அறிவிப்புகளை வெளியிட்டனர் . நாய்களும் கோழிகளும் நுழைய முடியாத சுத்தமான தெருக்களில் வசித்தனர். மரக்கறி உணவை உண்டனர்.”
xxx
இதே காலத்திலும் இதற்கு முன்னரும் இலங்கையில் பிராமணர்கள் வசித்ததாக மிகவும் பழைய பெளத்த மத நூல்கள் எழுதியுள்ளன .
அசோகர், 2300 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட எல்லா கல்வெட்டுகளிலும் பிராமண, ஸ்ரமண என்றே எழுதினார். அதாவது பிராமணர்களையே முதலில் குறிப்பிட்டு விட்டு பெளத்த, சமணர்களைக் குறிப்பிடுவார்.
இலங்கையில் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயன் காலடி எடுத்தும் வைக்கும் முன்னரே பிராமணர்கள் வாசித்ததை இலங்கை வரலாற்று நூல்கள் காட்டுகின்றன.
பிராமணர் ஆட்சி Brahmin’s Rule in Sri Lanka
விஜயன் இறந்தவுடன் இலங்கையை ஆள தகுதியுடைய அரசர்கள் இல்லை. தமிழ் நாட்டிலிருந்து ஒரு க்ஷத்ரிய வம்ச மன்னரை அல்லது இளவரசரை கொண்டுவருவதற்கு அமைச்சர்கள் முடிவு செய்தனர். அப்போது ஓராண்டுக் காலத்துக்கு உபதிஸ்ஸ Upatissa 505- 504 BCE என்ற பிராமணர் தலைமையில் ஆட்சி நடந்தது. எப்போதுமே பிராமணர்தான் முதல் மந்திரியாக இருக்க முடியும் ..அந்தப் பிராமணர் அனுராதபுரத்துக்கு வடக்கிலுள்ள கம்பீரா நதிக்கரையில் உபதிஸ்ஸ காம என்ற கிராமத்தை உண்டாகிக்கினார் .
கிராமம்Grama என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை சிங்களத்தில் காம gama என்றும் ஆங்கிலத்தில் காம்Gham என்றும் உச்சரிப்பர் . பிரிட்டன் முழுதும் நிறைய ஊர்கள் காம் (Birmingham, Nottingham, Eastham etc) என்றே முடிவடையும்.
பாண்டுகாபயன் (437- 367 BCE) பதவி ஏற்கும் வரை அந்த கிராமமே தலைநகர் ; பின்னர் அனுராதபுரம் தலை நகர் ஆயிற்று.
நாகர் என்ற பெயரில் முடியும் 20 புலவர்கள் பழந் தமிழ் நாட்டில் வசித்தனர். அவர்களும் பிராமணர்களோ என்று எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இலங்கையை ஆண்ட ஸ்ரீ நாகன் (189- 209 CE) பிராமண குலத்தில் பிறந்தவன் அவன் 20 ஆண்டுகள் நாட்டை ஆண்டான் அதற்கு முன்னர் அவனுடைய மைத்துனன் குஞ்ச நாக, ஒரே ஆண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தான் .ஸ்ரீ நாகன், மகன் வொஹரிக திஸ்ஸ Voharika Tissa புதிய சட்டங்களை நடை முறைக்குக் கொண்டுவந்தான். உடலில் காயங்கள் ஏற்படுத்தினால் அதுவும் தண்டனைக்குரிய குற்றமே என்று சட்டம் கொணர்ந்தான் ( இது மனு ஸ்ம்ருதியிலும் உள்ளது ).
இந்த பிராமண ஆட்சி 50 ஆண்டுகளுக்கு நீடித்தது .
இதற்குப் பின்னர் சில நூற்றாண்டுகள் உருண்டோடின. சீனாவிலிருந்து வந்த தூதனை வரவேற்க இலங்கை மன்னன் 30 கப்பல்களுடன் ஒரு பிராமணனை அனுப்பினான். இது நடந்தது கிபி CE 607ல். சுமார் 140 ஆண்டுகளுக்குப் பின்னர் CE 746-ம் ஆண்டில் ஒரு பிராமணர் சீனாவுக்கு அனுப்பப்பட்டார். அவர் புத்த மத பிரக்ஞா சூத்திரத்தையும் 40 கட்டு பருத்தித் துணியையும் எடுத்துக் கொண்டு சென்றார்.
போர்ச்சுகீசிய ஆட்சிக்காலத்திலும் மன்னர்கள் பிராமண தூதர்களையே பயன்படுத்தினர். அவர்கள் சத்தியத்தை மீறாதவர்கள், லஞ்சம் கொடுத்து அவர்களை வசப்படுத்த முடியாது ; ரகசியத்தை வேறு யாருக்கும் சொல்லாமல் செயல்படுவர் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். ஏழாவது புவனேக பாஹு தன்னுடை பேரன் தர்ம பால ஆட்சிக்கு எந்த ஊறும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு பிராமணர் மூலம் லிஸ்பன் நகருக்கு பேரனின் சிலையை, அனுப்பிவைத்தார் . அங்கிருந்தவாறே போர்ச்சுகீசிய மன்னர் தனது பேரனின் பட்டாபிஷேகத்தை அங்கீகரிக்க இந்த ஏற்பாடு.
லிஸ்பன் Lisbon, Capital of Portugal , போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் .
Xxx
பிராமண ஆசீர்வாதம்
மன்னர்கள் தலை வணங்குவது இரண்டு முறைதான்; கோவிலில் இறைவனுக்கு முன், சிரம்தாழ்த்தி வணங்குவார்கள் ; பிராமணர்கள் மந்திரம் சொல்லி ஆசீர்வதிக்கும் பொழுது மன்னர்கள் , சிரம் தாழ்த்தி, கரம் குவித்து வணங்குவார்கள் ; இதை புறநானூற்றில் காண்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாட்டை ஆண்ட முதுகுடுமிப் பெருவழுதி இரண்டு முறை மட்டுமே தலை வணங்குவான் என்று புலவர் பாடுகிறார். நமது காலத்திலேயே யாருக்கும் தலை வணங்காத முதலமைச்சர் ஜெயலலிதா, துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி மற்றும் அவருடைய மனைவியின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதைப் பார்த்தோம்.
இவ்விஷயத்தில் முதலாவது இரண்டாவது ராஜ சிம்மர்கள் என்ன செய்தார்கள் என்பதையும் காண்போம் .
பிரம்ம ஶ்ரீ தண்டிபட்லா விஸ்வநாத சாஸ்திரி என்பவர் ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர். சிறந்த வேத விற்பன்னர். வியாகரணத்தில் நிபுணர்.
அவரை சில ஜெர்மானிய விஞ்ஞானிகள் 1938ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு வருமாறு அழைத்தனர். எதற்காக?
சில சம்ஸ்கிருத துதிகளில் உள்ள அர்த்தத்தைச் சரியாக விளக்குமாறு அவரை ஜெர்மனிக்கு அழைத்தனர்.
யஜுர் வேதம் மற்றும் அதர்வண வேதத்தில் உள்ள மந்திரங்கள் இவை.
இரண்டாம் உலக மகாயுத்தத்தில் போரில் பயன்படுத்த ராக்கட்டுகள் மற்றும் விண்ணில் ஏவும் ஆயுதங்களை எப்படித் தயாரிப்பது என்று ஜெர்மானிய விஞ்ஞானிகள் ஹிட்லரின் உத்தரவின் பேரில் தீவிரமாக ஆராய்ந்து வந்தனர். அவர்களுக்கு இப்படிப்பட்ட அபூர்வ ஆயுதங்களைத் தயாரிக்கும் முறைகள் விரிவாகவும் நுட்பமாகவும் ஹிந்து வேதங்களில் இருப்பதாகத் தெரிய வந்தது.
உடனே இதில் நிபுணர் யார் என்பதை ஆராய ஆரம்பித்தனர். விஸ்வநாத சாஸ்திரியைப் பற்றி அவர்கள் அறிந்தனர். அவர் இளமையிலேயே மேதையாக விளங்கியவர். தர்க்கம், இலக்கணம், மீமாம்ஸை உள்ளிட்ட அனைத்திலும் வல்லவர். யஜுர் வேதத்தில் கர்ம காண்ட பாகத்திலும் அதர்வண வேதத்தில் ப்ரயோக பாகத்திலும் அவர் தேர்ந்தவர்.
குறிப்பிட்ட சில ரகசிய மந்திரங்களின் உள் அர்த்தத்தை விளக்கமாகச் சொல்லுமாறு அவர் கோரப்பட்டார்.
நாஜிகள் தங்களது வி-8 ராக்கட்டுகளுக்கான பல்ஸ் ஜெட் எஞ்ஜின்களை (PULSE-JET ENGINES FOR V-8 ROCKET) முதலில் உருவாக்கியவர்கள். இதை ‘பஸ் பாம்ப்’ (BUZZ BOMBS) என்பார்கள்.
இந்த வகை ராக்கெட்டுகளை உருவாக்க இந்திய மற்றும் திபெத்தைச் சேர்ந்த அறிஞர்களால் மட்டுமே முடியும் என்பதை நாஜி விஞ்ஞானிகள் உணர்ந்தனர். ஆகவே ஆயிரத்திதொள்ளாயிரத்து முப்பதுகளில் அவர்கள் சரியான அறிஞரைத் தேட ஆரம்பித்து இறுதியில் விஸ்வநாத சாஸ்திரியே உகந்த அறிஞர் என்று முடிவு செய்தனர்.
அவரை ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றனர். அவர் அங்கேயே வாழ்ந்தார்.
அவரது படம் இன்னும் ஜெர்மனியில் பிராங்க்பர்ட் பல்கலைக்கழகத்தில் மாட்டப்பட்டிருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு சீனர்கள் லாஸாவில் சில சுவடிகளைக் கண்டுபிடித்தனர். அதில் விண்கலம் அமைக்கும் முறை பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. அவற்றை மொழிபெயர்க்க சண்டிகர் பல்கலைக் கழகத்திற்கு அந்தச் சுவடிகளை அனுப்பினர்.
லகிமா என்ற அமைப்பின் படி ஆன்டி கிராவிடேஷனல் எனப்படும் புவி ஈர்ப்பு எதிர் விசை எல்லா ஈர்ப்பு விசைகளையும் எதிர்த்து நிற்கும் வல்லமை படைத்தது.
சித்திகள் எட்டில் இந்த லகிமாவும் ஒன்று. இதில் வல்லவர்கள் புவி ஈர்ப்பு விசையை மீறி ஆகாயத்தில் உயர எழும்பலாம்; பறக்கலாம்.
இராமாயணத்தில் ஹனுமான் ஆகாயத்தில் உயர எழும்பி மிக அதிக வேகத்தில் பறந்ததை நாம் படிக்க முடிகிறது.
இந்திய விஞ்ஞானிகள் இதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. ஆனால் உலகளாவிய விதத்தில் பல நாடுகளின் விஞ்ஞானிகள் தங்களது கவனத்தை இந்திய சாஸ்திரங்களின் மீது செலுத்துகின்றனர்.
இப்படிப்பட்ட சம்பவங்களில் விஸ்வநாத சாஸ்திரி ஜெர்மனிக்கு அழைக்கப்பட்ட சம்பவமும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக அமைகிறது.
Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 12
பர்த்ருஹரி ஸ்லோகங்கள் 34, 35, 36
Sloka 34
सिंहः शिशुरपि निपतति
मदमलिनकपोलभित्तिषु गजेषु ।
प्रकृतिरियं सत्त्ववतां
न खलु वयस्तेजसो हेतुः ॥ 1.34 ॥
ஸ்லோகம் 34
சிங்கக் குட்டியானாலும் கூட அது மிகப் பெரிய யானையைத் தாக்க விரும்பும்; இளம் வயதானாலும் உயர்ந்த லட்சியத்தை அடைய ஆசைப்படுவது வீர தீரர்களின் செயலாகும். பெருமை அடைய, புகழ் பெற வயது ஒரு தடை இல்லை.-34
34. A lion, though young, attacks elephants whose wall-like cheeks are stained with rut. This is the nature of the brave. Age, indeed, is not the cause of valour.
சிங்கஞ் சிறிதேனும் சிந்தூரம் மேற் பாய்வதற்கு
பங்கமுறா தோ டுகின்ற பான்மை போல் — இங்குப்
பலமுளார் அஞ்சார் பராக்கிரமத்திற்குக்
குலவு வயதில்லையென்று கூறு–34
“தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?
சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ?
மாற்றம் காண்பதுண்டோ?”
என்ற திரைப் படப் பாடலை இது நினைவு படுத்துகிறது. இயற்றியவர் கண்ணதாசன்; படம்- பாகப் பிரிவினை
35. Let caste go underground, and all good qualities go further down. Let conduct tumble down a mountain, and noble birth be consumed by fire. May thunder strike instantly at bravery towards foes. Let wealth alone be ours, without with, all these virtues are but like blades of grass.
சாதியிழி ந்தென்ன சற்குணம் தாழ்ந்தென்ன
ஓதுமொ ழுக்கம் ஒழிந்தென்ன — தீதில்
குடி மடிந்தாலென்ன கொண்ட தொரு வீரம்
முடிந்தழி ந்தாலென்ன மூவா- நெடுஞ் செல்வம்
பெற்றிருந்தாற் போதும் – பெறாவிட்டால் மேற்சொன்ன
சற்குணமெலாமி ருந்தும் தாழ்வுண்டாம் –புற்குமவை
ஒவ்வாப் புகழான் உலக வழக்கென்றென்றும்
இவ்வாறு இருக்கும் இயல்பு –35
‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’
1961ம் ஆண்டு வெளி வந்த திரைப்படத்தின் பாடல் வரிகள்
‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’
மிகவும் பொருள் பொதிந்தவை. ஆயினும் இதை சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் பர்த்ருஹரியும், அதற்கு முன்னர் தெய்வப் புலவன் வள்ளுவனும் செப்பிவிட்டனர்.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகியாங்கு – குறள் 247
பணம் இல்லாதவர்களுக்கு இந்த உலக வாழ்வு இன்பமாக அமையாது. கருணையற்றவர்களுக்கு சுவர்க்க போகம் கிடைக்காது
பர்த்ருஹரி சொல்கிறார்,
பணம் இருந்தால் போதும்; குணம் உதவாது என்ற உலக நடைமுறையை பர்த்ருஹரி அழகாகப் பறைந்தார்.
பர்த்ருஹரி அடுத்த ஒரு ஸ்லோகத்திலும் இக்கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவார்:-
xxxxx
Sloka 36
यस्यास्ति वित्तं स नरः कुलीनः
स पण्डितः स श्रुतवान्गुणज्ञः ।
स एव वक्ता स च दर्शनीयः
सर्वे गुणाः काञ्चनम् आश्रयन्ति ॥ 1.36 ॥
யஸ்யாஸ்தி வித்தம்ஸ நரஹகுலீனஹ
ஸ பண்டிதஹ ஸச்ருதவான் குணக்ஞஹ
ஸ ஏவ வக்தா ஸ ச தர்சநீயஹ
ஸர்வ குணாஹா காஞ்சனமாஸ்ரயந்தி – 36
பணமுள்ளவன்தான் படித்தவன், ப்ரபு; அவன் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும்; அவன்தான் வழிகாட்டி; அவன் ஒருவனே அழகன்; பேச வல்லவன்; உண்மைதான்! எல்லா குணங்களும் தங்கத்திலே அடங்கிவிட்டது.
36. A man who has wealth is high-born and a scholar. He is learned and discerning. He alone is eloquent and handsome. All virtues depend on gold (wealth).
உலகிற் பணமுள்ளான் ஓங்கு குலமுள்ளான்
அலகில் புலமையுள்ளான் ஆன கலை ஞான
நிலவியுள் ளான் நீத்தி நெறியுள்ளான் சங்கப்
புலமையுள்ளான் பேரழகு பூண்டுள்ளான் என்று
பலரால் புகழப்படுவான் பணத்தான்
பல கு ணத்தான் என்பதனைப் பார்–36
இவ்வாறு பர்த்ருஹரி புலம்புவதின் உள் அர்த்தம் வெள்ளிடை மலை என விளங்கும். இது உலக நடைமுறை.
சங்க இலக்கியப் பாடலான குறுந்தொகையும்
இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு –பாடல் 120
பணம் இல்லாதவன் இன்பத்துக்கு ஆசைப்பட்டது போல என்று காட்டும்
பணம் இல்லாதவன் பிணம் என்று நாலடியார் செய்யுள் அறையும்:
ஒத்த குடிப் பிறந்த கண்ணும் ஒன்றில்லாதார்
செத்த பிணத்திற் கடை- பாடல் 281
திரைப்படம்: பணம் பந்தியிலே (1961)
பாடல்: பணம் பந்தியிலே -குணம் குப்பையிலே
இசை: கே.வி .மஹாதேவன்
பாடல் வரிகள்: கா .மு. ஷெரீப்
பாடியவர்: சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்
*******
பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே
இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே (பணம்)
ஒன்றும் தெரியாத ஆளானாலும் பணமிருந்தாலே
அவனை உயர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே (ஒன்றும்)
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை (என்ன)
உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்கமாட்டாதே (பணம்)
ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத்தான்
பணம் அகன்றுவிட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மைதான்
ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை (ஏழ்மை)
இதை எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை (பணம்)
உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்களுண்டு
அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு(மண்ணாய்)
நாளும் முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு.(பணம்)
C S Navaratnam in his book A short history of Hinduism in Ceylon (1964) writes,
December 13, 1893 is a Red Letter Day in the history of the Ceylon Hindus for on that day the jungle land to the extent of 40 acres, the old site of the temple of Tirukketiswaram ,was bought in public auction by the Nagarathar of Jaffna in spite of the opposition of Catholics. The Saiva Paripalana Sabhai through their treasurer S M Pasupathy Chettiyar spent large sums of money in 1894 to trace the old site of the temple and its premises. In 1903 a temple was built and the images were installed. From thence the temple was managed by the Nagarathar of Matota and from 1919 by the Nagarathar of Jaffna. Subsequently the temple came under the management of old and new Kathiresan temples of Colombo. Thus, the Chettiyars saved the most important Siva shrine of Hindus. (Tiukketheeswaram Shiva Temple was praised in Thevaram by Tiru Jnana Sambandar 1400 years ago. Later the Portuguese invaders destroyed over 1000 Hindu temples in Sri Lanka)
xxx
Nallainatha Chettiyar
Nallainatha Chettiyar’s name is associated with Chitra Velayutha Swami Kovil at Verugal near Trincomalee.
The story of how Nallainatha Chettiyar came to build this temple later is faithfully recorded in local tradition. The Chettiar , a merchant from Tirunelveli in Tamil Nadu, was making his pilgrimage to Kadirgamam, through Trincomalee, when he stopped for a night at Verugal, as all pilgrims do, even now.
During the night Murugan appeared before him and told Chettiyar to build him a proper temple. The Chettiyar was overjoyed at this divine manifestation; he soon became aware, where a hidden treasure could be discovered by him, with the proceeds of which a temple of Muruga Vel was erected in Verugal. On hearing about this through the Chettiar, the King of Kandy made endowments to the temple. And enriched Chettiyar also. Then the temple grew very fast.
The origin of Colombo Muthumari Amman Shrine commences in the year 1856, when some members of the Thiruvilanga Nagarathar Chetty community brought some token soil from their village at Irukkankudi in Kovilpatti area in Tamil Nadu, India and commenced the temple work. After vast improvements Kumbabishekam ceremony was done in 1954.
xxxx
A priest from the temple shooting arrows at the tree
Request to Chettiyars
London Swaminathan, before concluding his speech requested the chettiyar community to record their forefathers’ achievements abroad. A Facebook page lists over 50 towns in Burma and said that Hindu temples were built by Nagarathars in those towns. Except Yangoon (Rangoon) neither the town nor any Hindu temple is traceable oday. So it is very important that everything must be documented. If the elderly in a family can’t write anything, at least oral history must be recorded and posted in Nagarathar website or You Tube. This will perpetuate their memories and would help future researchers. Now there is more negative propaganda about chettiars and the interest rate they charged 100 or 200 years ago. At least the Brahmins repeat names of the family’s three generations in wedding ceremony and monthly ancestor ceremony. Tracing Family History is a big business in Western countries. I see lot of people coming to British library to trace their English parents. So, every family must draw a family tree, write down their community service or at least record Oral History by video or audio devices.
Earlier Mr Manikandan of London Nagarathar Sangam (L N S) introduced London swaminathan and welcomed him. At the end Mr Nachiappan thanked him. And swaminathan was adorned with a shawl.
The event was attended by about 150 people including children and women. Makara Nonbu was celebrated in the temple on behalf of L N S. Chief Priest Sri Naganatha Sivam performed Puja and began shooting the first arrow at the Banana tree in the hall. The tree was used instead of the traditional Vanni Tree. All the children and elders tried their hands with the arrows. The event began with a sumptuous lunch and Puja to goddess.
–subham—
Tags- Nagarathar, contribution, Hindu religion, in Sri Lanka, swaminathan talk
இலங்கைத் தீவின் 108 புகழ்பெற்ற இந்து ஆலயங்கள்- 51(Final Part)
126. யுத்த கணவ ராம – ராவண போர்க்களம்
ராமனும் ராவவணனும் சண்டையிட்ட இடத்தை யுத்த கணவ Yudhaganawa என்று சிங்களத்தில் சொல்கிறார்கள் . இது வஸ்கமுவ , Wasgamuwa என்னும் ஊரில் இருக்கிறது . இங்குதான் ராவணன் மகன் மேகநாதன் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்ததால் லெட்சுமணன் நினைவிழந்து கீழே விழுந்தான்; உடனே ஜாம்பவானின் ஆலோசனையின் பேரில் அனுமன் இமய மலைக்குச் சென்று ஸஞ்சீவினி பர்வதத்தைக் கொண்டுவந்தான். இதை மெய்ப்பிக்கும் வகையில் இமயமலை ஆல்பைன் வகைத் Alpine flowers தாவரங்கள் இங்கு வளர்கின்றன. இவை ஐஸ்கட்டி snowy regions உண்டாகும் மலை உயரத்தில் மட்டும் வளரக்கூடியவை
தமிழர்களின் மிகப்பெரிய முருகன் தலமான கதிர்காமத்தையும் கூட ராமாயணத்துடன் தொடர்பு படுத்துவர். ராமனின் படைகளுக்கு உதவுமாறு கதிர்காம முருகனை இறைவன் பணித்தாராம்.
127.ராமன் போட்ட அணுகுண்டு Dunuvila lake தனு விலா ஏரி
மஹாபாரதத்தில் கர்ணன், ராமாயணத்தில் மேக நாதன், இறுதியில் ராமபிரான் போட்ட பிரம்மாஸ்திரங்கள், அணு ஆயத்தங்கள் NUCLEAR WEAPONS என்று 15 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டுரை எழுதினேன். இவை வெவ்வேறு சக்தி உடைய அணுகுண்டுகள். ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா 2 அணுகுண்டுகளை வீசி பல லட்சம் அப்பாவி மக்களை படுகொலை செய்ததை உலகம் அறியும். அந்த குண்டுகள் கொசுவுக்கு சமானம். இப்போது அமெரிக்கா , ரஷ்யாவிடமுள்ள அணு குண்டுகள் இமய மலைக்குச் சமம். இது போல எதிரிக்குத் தக்க அணு ஆயுதங்களையே ராமன், கர்ணன், மேகநாதன் முதலியோர் பிரயோகித்தனர் . ராமபிரான் போட்ட அணுகுண்டு தனுவிலா ஏரி பகுதியிலிருந்து போடப்பட்டது “Dhunu” means “arrow” and “Vila” means “Lake,”. தனு என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் வில்லினைக் குறிக்கும். எல்லா என்பது நீர்நிலை/ ஏரி ; அப்போது ராவணன் போரினை லக்கலா ( Laggala is derived from the Sinhala term “Elakke Gala“, which means Target Rock) என்ற இடத்திலிருந்து வழி நட த்தினான் . சிங்களம் என்பதில் பாதி சம்ஸ்க்ருதம் பாதி தமிழ் இருப்பதை மொழி அறிந்தோர் அறிவர். இங்கு இலக்கு என்பதே லக்கல. உண்மையில் அதுவும் லட்சியம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து பிறந்ததே. ராவணன் அங்கிருந்தே ராமன் படைகளைக் குறிவைத்தானாம்.
பிரம்மாஸ்திரத்தினால் இறந்த ராவணனின் சடலம் யஹங்கல (Yahangala) என்னும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. (meaning “Bed Rock” in Sinhala. This is situated along the Mahiyanganaya – Wasgamuwa road. King Ravana’s body was kept upon this rock so his countrymen could pay their last respects to their dear departed king). இந்தப் பாறையை தொலை தூரத்திலிருந்தும் காண முடியும் .
128.ராமன் பூஜித்த லிங்கங்கள்
ராவணன் 50% பிராமணன்; ஆகையால் அவனைக் கொன்றதால் பிரம்ம ஹத்தி பாவம் ராமனைப் பற்றிக்கொண்டது அதைப் போக்குவதற்கு அவன் 4 இடங்களில் சிவ லிங்கங்களை ஸ்தாபித்து பூஜித்தான். அவைகளில் ஒன்று உலகப் பிரசித்திபெற்ற ராமேஸ்வரம் . ஏனைய மூன்றும் இலங்கையில் உள்ளன. அவை சிலாவம் அருகிலுள்ள மானா வாரி, திருக்கே தீஸ்வரம், திருகோணமலை . இவைகளை முந்தைய கட்டுரைகளில் விரிவாகப் பார்த்துவிட்டோம். மானாவாரி ராமலிங்கம் கோவில் முன்னேஸ்வரத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.. அத்தோடு ராமபிரான், முன்னேஸ்வரம் கோவிலிலும் வழிபட்டதாக ஐதீகம். .Chilaw, Manavari Temple is the first place where Lord Rama installed and prayed the Shivalinga. It is called as Ramalingam .
129.ராவணன் சிலை, திருகோணமலை
ராவணன் வெட்டு
திருகோணமலை கோவிலுக்கு வலது புறத்தில் ஒரு பெரிய பாறை வெட்டப்பட்டது போல, இரண்டு பகுதிகளாக நிற்கின்றன. இதை ராவணன் வெட்டு என்று அழைக்கிறார்கள் ; ராவணன் தன் வாளால் வெட்டியதால் பாறை பிளந்ததாக கதை. அருகில் ராவணன் சிலையும் உள்ளது ; இந்தப் பகுதி சுமார் 300 அடி ஆழம் உடையது; கடல் நீர் சுழற்சி காரணமாக அருகில் சென்றால் படகுகளையும் இழுப்பதாக மீனவர் கூறுவர் .
XXXXXX
அனுமன் கொண்டுவந்த சஞ்சீவி மலை 5 இடங்களில் விழுந்ததைக் கண்டோம். இதில் ஒரு இடத்தின் பெயர் தள்ளாடி. மலை யின் பாரம் தாங்காமல் அங்கு அனுமன் தள்ளாடியதால் இந்தப் பெயர் என்று சி.எஸ். நவரட்னம் 1964-ம் ஆண்டில் எழுதிய புஸ்தகத்தில் A SHORT HISTORY OF HINDUISM IN CEYLON கூறுகிறார். அந்த இடம் மன்னார் அருகில் உள்ளது.
HANUMAN- NIKUMBHA FIGHT FROM WIKIPEDIA
130.லெட்சுமணன் கோவில்
சபரகமுவவில் லட்சுமணன் வழிபாடு நடப்பதாக சி.எஸ் நவரட்னம் தன்னுடைய ஆங்கில நூலில் குறிப்பிடுகிறார். இது பற்றிய விவரங்கள் இல்லை ஆனால் சிங்கள பெளத்தர்களும் லட்சுமணன் பெயரை வைத்துக் கொள்கின்றனர். மேலும் பல கோவில்கள் புத்தமதமாக்கப்பட்டுவிட்டன. இந்துக்கோவில்களை இடித்து பெளத்த விஹாரங்களை மன்னர்கள் கட்டியதை மஹாவம்சம் என்ற நூலே பெருமையாக எழுதியுள்ளது.
ராவணனின் சகோதரன் கும்பகர்ணன். அவனுடைய மகன் நிகும்பன். கொழும்பு அருகிலுள்ள ஊரின் இன்றைய பெயர் நீர்க்கொழும்பு. இதுவே நிகும்பன் என்ற பெயரின் மரூஉ என்று CONVERTED CHRISTIAN சைமன் காசி செட்டி SIMON CASIE CHETTY (1807-1860) எழுதியுள்ளார் .
COBRA HOODED CAVE
131. பாம்பின் படத்துடன் உள்ள குகை Cobra Hooded Cave
சிகிரியா என்னும் மலை, குகை ஓவியங்கள் முதலியன இந்தியாவின் அஜந்தா குகை ஓவியம் போல பிரசித்தமானவை . அங்கு பாம்பு படம் விரித்தாடுவது போலத் தோன்றும் மலை முகடு Cobra Hooded Cave
இருக்கிறது . அங்குள்ள குகையிலும் சீதாதேவி சிறை வைக்கப்பட்டதாக கர்ண பரம்பரைக் கதைகள் சொல்லப்படுகின்றன. ‘Parumaka naguliya lene’.பருமக நகுலீய லேனே என்று எழுதி வைத்துள்ளனர். இதில் நகுலிய the word ‘naguliya’ refers to Sita என்பது சீதா தேவியைக் குறிக்கும் சொல் ஆகும்.
இவை தவிர மேலும் பல மலைக் குகைகளையும் ராமபிரான், ராவணன் ஆகியோருடன் தொடர்புபடுத்திப் பேசுவார்கள். இவைகளை ஆராய்வதைவிட இவை பற்றி பாமர மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நாம் போற்ற வேண்டும்; அது பக்தியையும் சுற்றுலாவையும் வளர்ப்பதோடு ராமாயணம் போதிக்கும் நற்குணங்களையும் தக்க வைக்கிறது . சொல்லாலும் கல்லாலும் வில்லாலும் புகழ் பெற்ற ராமாயணத்தைஎல்லாரும் போற்றுவதில் வியப்பும் உண்டோ !!
இலங்கையில் புகழ்பெற்ற 108 இந்து ஆலயங்கள் கட்டுரைத் தொடர் இத்தோடு முடிவடைகிறது 4000 கோவில்களில் ஒரு சிறு பகுதியையே கண்டோம். இதை எழுதி முடிக்கும் தருவாயிலே மேலும் பல கோவில்கள் உருவாகாகக்கூடும் .
பக்தி பெருகட்டும்; முக்தி கிடைக்கட்டும்
–சுபம்—
Tags- லட்சுமணன் கோவில், ராவணன் சிலை, ராவண போர்க்களம் , 108 Sri Lankan Temples, Final part, கட்டுரைத் தொகுப்பு நிறைவு, இலங்கைத் தீவின், 108 புகழ்பெற்ற, இந்து ஆலயங்கள்- 51,
ரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்ற இந்திய கவிஞர்.
அவர் தனது கீதாஞ்சலி மூலம் உலகப் புகழ் பெற்றார்.
வங்க மொழியில் இருந்த கீதாஞ்சலியை அவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய விரும்பினார். அப்படிச் செய்தால் அது உலக மக்களை அடையும் என்பது அவரது எண்ணம்.
இந்த மொழியாக்கத்தை வேறு யாரிடமும் செய்யச் சொல்லாமல் தானே அவர் செய்தார்.
தனது மொழியாக்கம் சரியானது தானா என்ற சின்னச் சந்தேகம் அவர் உள்ளத்தில் எழுந்தது.
ஆகவே அவர் தனது நண்பரான சி.எப். ஆண்ட்ரூஸை (C.F.Andrews) அணுகி தான் செய்த மொழியாக்கம் சரிதானா என்று சரபார்க்கச் சொன்னார்.
சி.எப். ஆண்ட்ரூஸை சிறந்த கல்வியாளர். ஆங்கில மொழி இலக்கணத்தை நன்கு அறிந்தவர். அவர் கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்பை முழுவதுமாகப் படித்துப் பார்த்தார்.
பின்னர் தாகூரிடம், “எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது, நான்கு இடங்களில் மட்டும் மாற்ற வேண்டும்” என்று சொல்லி நான்கு இடங்களைச் சுட்டிக் காட்டினார்.
உடனே தாகூரும் அந்த நான்கு இடங்களில் உள்ள வார்த்தைகளை மாற்றினார்.
இப்போது கீதாஞ்சலியின் ஆங்கில வடிவம் தயார்!
பிறகு அவர் லண்டனுக்கு முதன்முறையாகச் சென்றார்.
அங்கு கூடியிருந்த கவிஞர்கள் சம்மேளனத்தில் தனது கீதாஞ்சலியை வாசித்தார்.
அந்தக் கவிஞர்கள் கூட்டத்தை பிரபல ஆங்கிலக் கவிஞரான ஈட்ஸ் (Yeats) தான் ஏற்பாடு செய்திருந்தார்.
அனைவரும் கீதாஞ்சலியைக் கேட்டனர்.
பின்னர் தாகூர், “ஏதாவது மாற்ற வேண்டுமா? எல்லாம் சரியாக இருக்கிறதா? ஆங்கிலம் எனது தாய்மொழி இல்லை” என்றார்.
உடனே ஈட்ஸ், “எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. ஆனால் நான்கு இடங்களில் மட்டும் வார்த்தைகளை மாற்ற வேண்டும்” என்றார்.
பின்னர் அந்த நான்கு இடங்களை அவர் சுட்டிக் காட்டினார்.
என்ன ஆச்சரியம்! எது தப்பு என்று சி.எப். ஆண்ட்ரூஸ் மாற்றச் சொன்னாரோ அதே நான்கு மாற்றப்பட்ட வார்த்தைகளைத் தான் ஈட்ஸ் சுட்டிக் காட்டினார்.
தாகூர் உடனே தனது முந்தைய வார்த்தைகளை அங்கு போட, அதுவே சரி என்று அனைவரும் கூறினர்.
எப்படி இப்படி குறிப்பாக அந்த நான்கு வார்த்தைகளை மட்டும் ஈட்ஸ் கூறினார்?!
ஈட்ஸ் ஒரு கவிஞர். கவிஞர் உள்ளத்தை ஒரு கவிஞரே நன்கு அறிய முடியும். சி.எப். ஆண்ட்ரூஸ் கவிஞர் இல்லை. கல்வியாளர், இலக்கணவாதி. அவருக்குக் கவிதை ஓட்டம் புரியாது.
ஈட்ஸ் கூறினார் : ”அந்த நான்கு இடங்களில் மட்டும் கவிதை ஓட்டம் தடைப்படுகிறது. அங்கு ஃப்ளோ – FLOW – இல்லை என்றார்.
ஆக கவிஞன் ஒருவனே இன்னொரு கவிஞனின் உள்ளத்தை நன்கு அறிய முடியும் என்பது நிதர்சனமானது.
கீதாஞ்சலி தாகூருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.
ஆதாரம் : ஒஷோ எழுதிய Yoga : The alpha and omega நூல்.
என்னை விடுவி! என்னை விடுவி!!
சூபி யோகியான ஷேக் ஃபரீதை (Sheikh Farid) ஒரு சூதாடி அணுகினான்.
அவன் அவரிடம்,“சூதாட்டத்தை என்னால் விட முடியவில்லை. எப்படி அதிலிருந்து விடுபடுவது. அது என்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறதே! ஒரு வழி சொல்லுங்களேன்” என்று வேண்டினான்.
உடனே ஷேக் ஃபரீத் அருகிலிருந்த ஒரு கம்பத்தைக் கெட்டியாக தன் கைகளினால் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டார். பின்னர் கத்தினார் : “ஓ! என்னை விடுவி! என்னை விடுவி!” என்று அலறினார்.
இதைப் பார்த்த சூதாடி திடுக்கிட்டு ஆச்சரியப்பட்டான். அவன் அவரிடம், “ஐயா! கம்பம் உங்களைப் பிடிக்கவில்லை. நீங்கள் தான் சுற்றி வளைத்துக் கைகளினால் கம்பத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நினைத்தால் அரை நொடியில் கம்பத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள முடியும்” என்றான்.
கம்பத்திலிருந்து தன் கைகளை எடுத்தவாறே ஷேக் ஃபரீது கூறினார் அவனை நோக்கி, “அப்பனே! இதே போலத் தான், சூதாட்டம் உன்னைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. நீதான் அதை விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீ நினைத்தால் அரை நொடியில் அதை விட்டு விடலாம்” .
சூதாடி என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொண்டான்.