ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ் அகராதியிலிருந்து எடுக்கப்பட்ட “வை” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள்
வை+ + = விடியல், வைகுமிடம், தங்குகுதல், நாள், கழிதல்
வை+ + = விடியற்காலம்
வை + + = தமிழ் மாத வரிசையில் இரண்டாம் மாதம்,
வை+ + + + = திருமால் இருப்பிடம்
வை + = மதுரையில் ஓடும் நதி
வை + + + = மாட்டிற்கு மிகவும் பிடித்த உணவு
வை + + + = வணிகம் செய்யும் ஜாதி
வை + + + + = நவ மணிகளில் ஒன்று
வை + + + = விஷ்ணுவை வணங்கும் பிரிவு
வை+ + + = புராண நதி
வை + + + + = தமயந்தி , விதர்ப்ப நாட்டுப் பெண்
வை + + = சீதை , விதேக நாட்டுப் பெண்
வை + + + + = கள்ளக்காதலி
வை+ + + + = கருடன்
வை + + + + + + = சிவபிரானின் டாக்டர் கோலம்
வை + + + + -=குதிரை
வை + + + = பூமி, ஊர்தி, சிவிகை, தேர், எருது
வை + + + = விசேடமாகத் தோன்றுவது, செல்வம்
xxxxx
விடைகள்
வைகல்= விடியல், வைகுமிடம், தங்குகுதல், நாள், கழிதல்
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 33
66.சித்திர வேலாயுத சுவாமி கோவில். குமாரபுரம், முல்லைத் தீவு
முல்லைத்த தீவில் குமாரபுரம் என்ற கிராமத்தில் .சித்திர வேலாயுத சுவாமி கோவில் இருக்கிறது . வெட்டா பழங்குடி மக்கள் பகுதியில் இந்தக் கோவில் துவங்கியது; பழங்குடி மக்களும் வேல் மற்றும் வேலவனை வணங்கி வருகின்றனர் . அவர்கள் கம்புகளையும் இலை தழைகளையும் கொண்டு சிறு குடில்களில் இறைவனை வணங்குவர். காலப்போக்கில் அது பெரிய கோவில் ஆகிவிடும். வன்னி ஆட்சிக்காலத்தில் இருந்த மன்னர்கள், இத்தகைய இடங்களில் கோவில் கட்டினார்கள்.
இக்கோவில் கதிர்காமம் போன்ற பெருமையுடையதென தட்சிண கயிலாய மான்மியம் கூறுகின்றது. அந்நிய மதத்தினர் இந்துக்கோவில்களைத் தகர்த்து வந்த காலத்தில் இங்குள்ள விக்கிரகமும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது . அப்போது குமாரபுரம் ஜன நடமாட்டமின்றி காடாக மாறியது . பின்னர் 1915ல் வழக்கறிஞர் துரையப்பா , பரமசாமிக் குருக்கள் என்பவரிடம் கோவிலை ஒப்படைத்து திறம்பட கோவிலை நடத்திவைத்தார். 1955 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு நடைபெறும் கந்தர் சஷ்டி விழாவைக் காண்பதற்கு பெருந்திரளான பக்தர்கள் வருகின்றனர் .
Xxxx
67.வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவில் , திருகோணமலை மாவட்டம்
மகாவலி கங்கை நதியின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் சித்திரவேலாயுத சுவாமி கோவில் உள்ளது. திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் வழியில் பாதி தூரத்தில் அமைந்துள்ளது. கதிர்காமத்துக்குப் பாத யாத்திரை செல்லுவோர் தங்கிச் செல்லும் இடம் இது.
1889 ஆம் ஆண்டில் அகிலேச பிள்ளை எழுதி வெளியிட்ட கோணேச வைபவம் நூலில் இக்கோவில் பற்றி எழுதியுள்ளார். கும்பாபிஷேக மலரில் அருள் சுரக்கும் வெருகலம்பதி என்ற கட்டுரையில் எஸ் . கணபதி பிள்ளையும் நிறைய தகவல் தந்துள்ளார்.
முருகப்பெருமான் சூரபத்மனுடன் நடத்திய போரில் முருகனின் அம்பு ஒன்று இந்த ஊரில் விழவே , அதை வெட்டர்கள் எடுத்து வணங்கி வந்தனர். குளக்கோடன் மன்னர் ஆட்சிக் காலத்தில் அது கோவிலாக உருப்பெற்றது.
இந்தக் கோவிலின் தோற்றம் சுவையான கதை ஆகும். நல்லை நாத செட்டியார் என்பவர். தமிழ் நாட்டிலுள்ள திருநெல்வேலியிலிருந்து ஆண்டு தோறும் கதிர்காம யாத்திரை செய்துவந்தார். அவர் திருகோண மலைக்கு வந்து அங்கிருந்து யாத்திரையைத் துவங்குவார். பாதி தூரத்தில் உள்ள வெருகலில் எல்லோரும் தங்கி விட்டு கதிர்காம யாத்திரையைத் துவக்குவது போல செட்டியாரும் தங்கினார்.
. அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் முருகப்பெருமான் தோன்றி அங்கு ஒரு ஆலயம் அமைக்க கட்டளையிட்டார். இதற்கான பொருளும் அவரிடம் வந்து சேரும் என்றும் கனவில் உரைத்தார். கோவில் கட்டுவதற்குத் தேவையான பணம் புதையலில் கிடைக்கும் என்றும் கூறி, முருகன் மறைந்தார் ; இறைவன் சொன்னபடியே அவருக்குப் பொக்கிஷமும் கிடைத்தது .செட்டியார் ஆலயம் அமைக்க திரவியம் எடுத்த இடம் இப்பொழுதும், திரவியம் எடுத்த இடம் என்னும் பெயரால் அழைக்கப்படுறது..
கண்டி மன்னன் கோவிலுக்காக நிறைய தானம் செய்தான். செட்டியாரும் கோவிலைக் கட்டினார். சீரும் சிறப்புடனும் வழிபாடு நடந்த காலத்தில் போர்ச்சுக்கீசிய மத வெறியர்கள் கோவிலைத் தரைமட்டம் ஆக்கினர். பின்னர், பக்தர்கள் சேர்ந்து கோவிலை எழுப்பினர். ஆண்டு தோறும் ஆகஸ்ட்-செப்டம்பர் காலத்தில் வருடாந்திர விழா 18 நாட்களுக்கு நடைபெறும். கதிர்காம பாத யாத்திரை செல்லுவோர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததுபோல இந்த விழாவையும் தரிசித்து விட்டுச் செல்லுவார்கள் .
இந்தக்கோவிலில் காணப்பட்ட கல்வெட்டு பற்றி ஹுயூஜ் நெவில் Hugh Neville , Taprobane, 1887 எழுதியுள்ளார் . சுப்பிரமணியனுக்கு நமஸ்காரம் சொல்லிக் கல்வெட்டு துவங்குகிறது கோவிலின் தெற்குச் சுவரை கயிலாய வன்னியரும் மேற்குச் சுவரை சிம்மாபிள்ளையும் வடக்குச் சுவரை மட்டக்களப்புஊர், நீர்க்கொழும்பு கரையாரும் , கிழக்குச் சுவரை செட்டியார்களும் கட்டியதாக தெரிவிக்கிறது.
கோவில் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத சித்திர வேலாயுதப் பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
இங்கு மகா மண்டபத்தில் மகாவல்லி, கஜவல்லி சமேதராக ஆறுமுகப் பெருமான், உமையம்மை சமேத சந்திரசேகரர் சிலைகள் தெற்கு வாசல் நோக்கி உள்ளன. வசந்த மண்டபம் வேறாக உள்ளது.
பரிவார மூர்த்திகளான விநாயகருக்கும், பைரவருக்கும் தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவிலின் தென்புறத்தில் கதிர்காம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கருவறையான மூலஸ்தானத்தில் முருகன் திருவுருவமோ, வேலோ பிரதிஷ்டை செய்யப்படவில்லை. அட்சர மந்திரம் எழுதி வைக்கப்பட்ட பேழையே கருவறையில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.
இங்கு கதிர்காமத்தில் பூஜை நிகழ்வது போல் திரைமறைவிலேயே பூசை நடைபெறுகிறது. வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயிலுக்கு சற்றுத் தூரத்தில் காவடிப் பிள்ளையார் கோயில் உள்ளது. சித்திரவேலாயுத சுவாமி கோயிலுக்கு கிழக்கு திசையில் வீரபத்திரர் கோயில், தாமரைக்குளம், சூரன் கோட்டை என்பன அமைந்துள்ளன.
—subham—
TAGS–சித்திர வேலாயுத சுவாமி, கோவில், வெருகல், குமாரபுரம் ஆலயம்
எவ்வளவு நாள் வாழ்கிறோமோ அவ்வளவு நாள் சுகமாக வாழ வேண்டும். கடன் வாங்கியும் கூட நெய் சாப்பிட வேண்டும். உடல் சாம்பலாக ஆகி விட்டால் அது எப்படி தனது முந்தைய நிலைக்கு வர முடியும்?
அனுபவி ராஜா அனுபவி! இருக்கும் வரை வாழ்ந்து விடு, இரண்டினில் ஒன்று பார்த்து விடு! – இது வாழும் வகைக்கான ஒரு உபதேசம்!
பரோபகாரி உலகில் அரிதாகவே காணப்படுவர்!
பரோபகாரைகதிய: ஸ்வசுகாய கதஸ்ப்ருஹா: |
ஜகத்ஹிதாய ஜாயந்தே விரலா: சாதவோ புவி ||
மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட நல்லவர்கள், தங்களது மகிழ்ச்சி பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டார்கள்.இப்படிப்பட்டவர்கள் மிக அரிதாகவே உலகில் காணப்படுவர்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகலே அறிவு!
பஞ்சபி: சஹ கந்தவ்யம் ஸ்தாதவ்யம் பஞ்சபி: சஹ |
பஞ்சபி: சஹ வக்தவ்யம் ந துக்கம் பஞ்சபி: சஹ ||
ஐந்து பேரோடு சேர்ந்து ஒருவன் செல்ல வேண்டும். அவர்களோடு சேர்ந்தே இருக்க வேண்டும். அவர்களுடன் கூடவே பேச வேண்டும். ஆகவே அவன் துன்பப்பட மாட்டான்.
திருவள்ளுவர் கூற்றை இங்கு ஒப்பு நோக்கலாம்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார் – குறள் 140
நான்கு உபாயங்கள்!
சாம தான பேத தண்டமே எதிரியை வெற்றி கொள்வதற்கான நான்கு உபாயங்கள்!
யானைப் படை, குதிரைப் படை, தேர்ப் படை, காலாட் படை ஆகிய இந்த நான்கு பிரிவுகளே படையின் அங்கங்கள்!
இதைத் தெரிவிக்கும் சுபாஷிதம் இது:
சாமதானே தண்டபேதாவித்யுபாயசதுஷ்டயம் |
ஹஸ்த்யஸ்வரதபாதாதம் சேனாங்கம் ஸ்யாச்சதுஷ்டயம் ||
பசுவைப் பின்பற்றும் கன்று போல கர்மா தொடரும்!
பசு மந்தையில் தன் தாயைக் கண்டு தொடரும் கன்று போல நல்ல கர்மங்களோ அல்லது திய கர்மங்களோ, செய்த ஒருவனை (தவறாது) பின் தொடரும்.
கர்மா தியரி என்பதை உலகமெங்கும் உள்ள மக்கள் இப்போது அங்கீகரிக்கத் தொடங்கி விட்டனர்.
Hindu festival Navaratri is very popular among women. In South India women arrange a Doll Show called Golu and do Prasad/ spicy food everyday with pulses. They exchange gifts by mutual visits to different houses. Temples arrange big decorations and Sabhas arrange big musical concerts. In Gujarat and places where Gujaratis live Garba is organised. Wherever Bengalis live they celebrate the Durga Puja on a grand scale. In Mysore Dasarah attracts several thousand people. In North India Ram Lila is celebrated. Effigies of demons are burnt in bonfire. In short, it is celebrated all over India. No Sakti temple miss it. Tenth day is called Vijaya Dasami (Victorious Tenth Day) and one day before that Sarasvati Puja/ Ayudha Puja is celebrated
Here is a puzzle square with Goddess’ 9+1 forms. Find out their names in the puzzle. All names are bent, but not split except Siddhidhatri. Each name begins in the numbered square.
Picture of Goddess Sarasvati
M10
A
H
I
S
H
A
S
U
R
S 1
B2
R
A
H
M
A
C
H
A
H
K6
A
T
Y
A
Y
A
A
M
A
C 3
H
A
N
D
R
Y
R
A
I
K7
A
L
A
R
A
A
I
R
L
S9
I
D
D
A
G
N
N
D
A
H
I
I
R
T
A
I
I
H
P
D
H
A
A
T
N
A
I
U
K4
U
S
H
M
A
N
D
N
T
R
I
M8
A
H
A
I
G
O
W
R
I
T
R
I
A
S5
K
A
N
D
A
M
A
T
H
Answer
Devis Form during Ten Days:
· Day 1 – Shailaputri
· Day 2 – Brahamacharini
· Day 3 – Chandragathan
· Day 4 – Kushmanda
· Day 5 – Skandamata
· Day 6 – Katyanani
· Day 7 – Kaalaratri
· Day 8 – Mahagowri
· Day 9 – Siddhidatri
On the tenth day, she assumed the form of 10.Mahishasuramardhini and emerged victorious, making the defeat of evil.
Picture: Ten forms of Goddesses during Navaratri Festival.
ஏழாம் வேற்றுமை உருபு is called Locative in English. It is about Location; in, at, on the person
xxxxx
Case Suffixes
இல் =il
இடத்தில்= idaththil , இடம் = idam
xxxx
ராமனிடம் – raamanidam (with Rama or on Rama)
ராமனிடத்தில் – Raamanidaththil (On Rama)
xxxx
மேரியிடம் ஆங்கில புஸ்தகம் இருக்கிறது
Maryidam AAngila Pusthakam Irukkrathu= Mary has English book ; English book is with Mary
((Pusthakam is a Sanskrt word; Tamilized from is Puththakam; pure Tamil word is Nool))
Xxxxx
லதாவிதம் சம்ஸ்க்ருத புஸ்தகம் கிடைக்கும் = Lathaavidam Samskrutha Pusthakam Kidaikkum.
Sanskrit book is available with Lathaa.
(Note the word order; SOV= Subject Object Verb)
Xxxx
When it comes to places, we use ‘il’. Not ‘Idam’
திருநெல்வேலியில் பெட்டி வெல்லம் கிடைக்கும் = Thirunelveliyil Petti Vellam Kidaikkum
At Thirunelveli Boxed Jaggery available= You can get Boxed Jaggery (pieces) in Thirunelveli.
Xxxx
டில்லியில் பூசணிக்காய் அல்வா / Petha halwa पेठे का हलवा ஹல்வா கிடைக்கும் = Dilliyil Puusanikkay Alvaa/Halwaa Kidaikkum= In Delhi
Petha Halwa/Poosanikkaay Alwaa, Available (you can get)
KIDAIKKUM is an Impersonal verb . You can use it with all Subjects. No problem with PGN (person, gender, number)
xxxx
திருப்பதியில் எனக்கு 4 / நான்கு லட்டு வாங்குங்கள் – Thiruppathiyil Enakku Naangu Laddu Vaangungal = At thiruupathi (Balaji Temple) .To me. Four Laddu. Buy
Buy= வாங்கு
Buy = வாங்குங்கள் (Plural or Singular respectful) = Please buy me four Laddus at Tirupati
வாங்குங்”கள்” gives the sense of PLEASE as well.
Laddu – Indian Sweet
xxxx
அவனிடம் சாக்லேட் பெட்டியைக் கொடுக்காதே = Avanidam Chocolate Pettiyai Kodukkaathe= To him or At him Chocolate Box Don’t give= Don’t give him the Chocolate box
அவனிடம்= Avanidam = Avan/he+idam
Don’t Give = Negative Imperative
xxxx
என்னிடம் கொடு .= Ennidam Kodu= Give me
I already told all case suffixes go with oblique form of I, You என் , உன்
xxxx
யாரிடத்தில் 100 ரூபாய்க்கு சில்லறை இருக்கிறது ?= Yaaridaththil Nooru/100 Rupaaykku Sillarai irukkirath? = on whose person , for 100 Rupees, Change, is? = Who has got change for hundred Rupees?
இந்துக்கள் ஆண்டுதோறும் 4 நவராத்திரிகளைக் கொண்டாடுகிறார்கள் .
அவை
Chaitra Navaratri, சைத்ர நவராத்திரி
Aashaadha Navaratri, ஆஷாட நவராத்திரி
Sharadha Navaratri; சாரதா நவராத்திரி
Magha Navaratri. மாக நவராத்திரி
இந்த நாலில், வசந்த காலத்தில் வரும் நவராத்திரியும் மழைக்காலத்தில் வரும் சாரதா நவராத்திரியும் பிரபலமானவை.. தீபாவளிக்கு முன்னர் வரும் நவராத்திரி சாரதா நவராத்திரி.; மஹாளய அமாவாசை முடிந்த மறுநாள் துவங்கும் . நவராத்திரிக்குப் பின்னர் பத்தாவது நாள் விஜய தசமி. அதையே தசரா என்பர்.
இந்தப் பெரிய நவராத்திரி, வங்காள தேசத்தில் தேசீய விழாவாகத் தெருவுக்குத் தெரு கொண்டாடப்படுகிறது. பல இடங்களில் பெரிய மண்டபம் அல்லது ஹால் அல்லது தற்காலிக கொட்டகைகளில் துர்கா தேவியை படமாகவோ, மண்ணினால் செய்த பொம்மையாகவோ வைத்து வழிபடுவர். துர்கா தேவிக்கு 8 அல்லது 10 கரங்கள் இருக்கும்.
இவ்வாறு 10 கரங்கள் இருக்கும் உருவங்களில் பத்து கைகளிலும் ஏதேனும் ஒரு பொருள் அல்லது ஆயுதம் இருக்கும் அதன்பயனை அறிந்தால் துர்க்கைக்கு ஏன் 10 கரங்கள் என்பது விளங்கும்..
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் பத்து கரங்களில் அவள் வைத்துள்ள பொருட்கள் , பக்தர்களளுக்குப் பாதுகாப்பு வழங்கும்.
இதோ பத்து கரம்/ கைகள் உள்ள துர்கையைத் தரிசிப்போம்
1.ஒரு கையில் திரி சூலம் இருக்கும் சிவ பெருமானே இதை துர்க்கைக்கு அளித்தார்.. மூன்று முனைகள் உள்ள இந்த ஆயுதம் சத்வ, ராஜச, தாமச குணங்களைக் குறிக்கும் .
2.வாள் – இந்த வாளை துர்க்கைக்கு கணபதி அளித்தார்.. இது ஞானத்தைக் குறிக்கும் ; வாளின் கூர்மை போல புத்தி கூர்மை இருக்கும்.. மின்னும் அந்தவாள் ஞானப் பிரகாசத்தைக் குறிக்கிறது. பாரதியார் போனற கவிஞர்கள் ஞான வாள் பற்றிப் பாடி இருப்பதை அறிவோம்
“பொய்,கயமை,சினம்,சோம்பர்,கவலை,மயல், வீண்விருப்பம்,புழுக்கம்,அச்சம், ஐயமெனும் பேயை எல்லாம் ஞானம் எனும் வாளாலே அறுத்துத் தள்ளி….. (பாரதியார் பாடல்)
நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன் சிவன்வரின் நான் உடன் போவது திண்ணம் பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன் தவம்வரும் சிந்தைக்குத் தான் எதிர் ஆரே (Tirumanthiram)
எமன் வந்தால் ஞான வாளால் அவனை வெற்றி கொள்வேன். சிவன் வந்தாலோ தயக்கமின்றி அவரோடு போவேன். பிறவிப் பிணி தொடர்வதற்கான காரணங்களை முன்னரே துண்டித்து விட்டேன். இனி தவ வலிமை பெற்றவர்களுக்கு எதிராக யாராவது நிற்கமுடியுமா? எனக்கு எதிரி எவரும் இல்லை..
3.ஈட்டி – அக்கினி தேவன் கொடுத்த இந்த ஆயுதம் துர்க்கையின் இன்னும் ஒரு கையில் இருக்கிறது இது தீவிர சக்தியை, மஹா சக்தியைக் காட்டும் ஆயுதம். அதுமட்டுமல்ல; எது நல்லது, எது கெட்டது என்பதைப் பிரித்துப்பார்க்கும் விவேகத்தைக் குறிக்கும் .
4.இந்திரன் கொடுத்த வஜ்ராயுதம் துர்கா தேவியின் இன்னும் ஒரு கரத்தை அலங்கரிக்கிறது பலத்தின் , மன உறுதியின் அடையாளம் இது. அன்னையை வணங்குவோருக்கு மனோதிடத்தை, மன உறுதியை, எதையும் தாங்கும் இதயத்தை அன்னை அருளுவாள் என்பது இதன் தாத்பர்யம்.
5.வாயுதேவனும், சூரிய தேவனும் அருளிய வில்லும் அம்பும் ஒரு கரத்தில் இருப்பதைக் காணலாம். தீமையை வீழ்த்தும் சக்தியை இது அளிக்கிறது
6. துர்கா தேவியின் திருக்கரத்தில் இருக்கும் கோடாரி , விஸ்வகர்மாவால் கொடுக்கப்பட்டது புதிய விஷயங்களை, புதுமைகளைப் படைக்கும் ஆற்றலை துர்கா தேவி அளிப்பாள் என்பதை இது காட்டுகிறது .விஸ்வ கர்மாவின் வேலையே அதுதான்
7.சுதர்ஸன சக்கரம் – கிருஷ்ணன் கொடுத்த சுதர்ஸன சக்கரத்தின் சக்தி மஹத்தானது ; தீயோரை வீழ்த்திவிட்டு பூமராங் போலத் திரும்பி வந்து விடும். தென்னகத்தில் சக்கரத்தாழ்வார் என்னும் சுதர்ஸன சக்கரம் இல்லாத பெருமாள் கோவில் கிடையாது
8.கதாயுதம் – பீமன் கையில் கதாயுதம் இருக்கிறது. கிருஷ்ணன் கையில் கதாயுதம் உண்டு. அதனால் அவர்கள் வீழ்த்திய தீயோரின் எண்ணிக்கையை பாகவதம் , மஹா பாரதத்தில் படிக்கிறோம்.சத்தியத்தை நிலைநாட்டும் சக்தி அது
9.கத்தி அல்லது குத்து வாள் ஒரு கையில் ஏந்தியிருப்பாள் துர்காதேவி. இதுவும் தீயோரை அழிக்கும்.
10.சங்கு : துர்க்கையின் கையில் இருக்கும் சங்கு சுபச் செய்திகள் வருவதையும், தீமைகள் விலகுவதையும் நமக்கு நினைவுபடுத்தும். நம்பிக்கையை வளர்க்கும்; சங்கின் பயன் பற்றிப் பட்டினத்தாரும் பாடுகிறார்
முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை
நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்.– பட்டினத்தார் பாடல்
முதல் சங்கில் நமக்கு நம் தாய் பால் ஊட்டுவாள். நாம் குழந்தையாக இருந்தபோது “நான் பால் குடிக்க மாட்டேன், போ” என்று அடம் பிடிப்போம். நம் தாய் நமக்கு வேடிக்கை காட்டி நமக்கு அமுதூட்ட அந்த சங்கை வாயில் வைத்து ஊதி ஒலி எழுப்பி இருப்பாள்.
இரண்டாவது சங்கு திருமணத்தில் ஒலிக்கும் சங்கு. அந்தக் காலத்தில் எல்லார் வீட்டு திருமணங்களிலும் சங்கு ஊதி தாலி கட்டுவர்; இன்றும் வங்காளிகள் கல்யாணத்தில் இதைக் காணலாம் . ஆண்டாளும் கூட திருமணக் காட்சியை மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத,– என்று நாச்சியார் திருமொழியில் பாடுவதைப் படிக்கிறோம்.மூன்றாவது சங்கு? கடவுளே சொல்லக் கூடாது! அது நம் காதிலேயே விழாது. ஏனெனில் அது நமது இறுதி ஊர்வலச் சங்கு.
ஆக சங்கு என்பது நமக்கு நல்ல, தீய விஷயங்களைச் சொல்லும்.
பத்துக் கரங்களை உடைய துர்கா தேவி நமக்கு பத்து விதங்களில் அருள் புரிவாளாகுக.
–subham–
Tags- துர்கா, பத்து கரங்கள், 4 நவராத்திரி, பத்து ஆயுதங்கள்
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 32
64.பொலன்னறுவையில் 10 சிவன் கோவில்கள் , 5 விஷ்ணு கோவில்கள்
பொலன்னறுவை என்ற நகரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் நிலவிய சோழ சாம்ராஜ்யத்தின் தலை நகரமாக விளங்கியது அங்கு பலமுறை நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 10 சிவன் கோவில்களும் 5 விஷ்ணு கோவில்களும் , ஒரு காளி கோவிலும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன ; இவைகளில் பெரும்பாலானவை முழுதும் இடிந்து, அழிந்து போய், அஸ்திவாரம் அல்லது தூண்கள் மட்டுமே உள்ளன. இவைகளில் மிகவும் பழைய கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்கள் கட்டியது . அவர்க்குப் பின்னர் பாண்டிய வம்ச மன்னர்கள் சில கோவில்களைக் கட்டினார்கள் . சில ஆலயங்கள் கலிங்க மாகன் என்ற மன்னர் காலத்தவை .
இவைகளில் முழு அளவுக்கு உயர்ந்து நிற்கும் சிவாலயத்துக்கு இரண்டு 2 என்று தொல்லியல் ஆய்வாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இதில் கல்வெட்டும் இருப்பதால் வரலாற்று முக்கியத்துவமும் இதற்கு உண்டு. இங்கு தோண்டும் பணிகளை 1901ம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் துவக்கினார்கள் . பல சிவலிங்கங்களும் , சதுர அல்லது செவ்வக வடிவ ஆவுடையார் பகுதிகளும் கிடைத்தன. இந்த வடிவங்கள் சோழர் காலத்தவை என்பதைக் காட்டுகின்றன.
சிவன் கோவிலுக்கு அருகருகே விஷ்ணு கோவிலும், சிவன் கோவில்களில் செங்கல் கட்டிடத்தில் விநாயகர் சந்நிதியும் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது . சில கோவில்களில் சுப்ரமண்யர், பைரவர் சந்நிதிகள் இருந்த தடயங்களும் காணப்படுகின்றன.
சிவாலயம் எண் 1
பொலன்னறுவை நகருக்கு மிக அருகில் இருக்கிறது; சிறிய கர்ப்பக்கிரகம்; 60 அடிக்கு 40 அடி அளவில் மஹா மண்டபம். கருங்கல் கட்டிடம். நல்ல சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. இடிபட்ட சுவரில் அம்பாள் உருவம்;
இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சிவகாமி அம்மன் விக்ரகம், பொலன்னறுவை மியூசியத்தில் பாதுகாக்கப்படுகிறது . விநாயகர் , சுப்ரமணியர் , பைரவர் சந்நிதிகள் செங்கற்களால் ஆனவை . சிவலிங்கம் சிறியது . இங்கு புதைந்து போயிருந்த 3 அடி உயர நடராஜர், சோமாஸ்கந்த மூர்த்தி, 2 அம்பாள் விக்கிரகங்கள் , அப்பர் சிலை ஆகியன கொழும்பு மியூஸியத்தில் பாதுகாக்கப்பட்டன. இவைகள் சென்னை மியூசியத்திலுள்ள சோழர்கால ஐம்பொன் விக்கிரக அழகிற்கு வரவில்லை. தரம் குறைந்தே காணப்படுவதால் இங்கேயே செய்யப்பட்டிருக்கலாம் என்பது தொல்லியல் அறிஞர்களின் துணிபு
சிவாலயம் எண் 2
இதுதான் முழுமையாக உள்ள கோவில்
தொல்பொருட் துறை அனுமதியுடன் ஆனி உத்திரம், சிவராத்திரி உற்சவம் முதலிய வழிபாடுகள் மட்டும் நடைபெறும் இடம் இது . இங்கு சுவர்களில் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன ; கருங்கல் , சுண்ணாம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது மூன்றடுக்கு விமானம். ஏனைய சந்நிதிகள் செங்கல் கட்டிடங்கள் . மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையாரில் சிவலிங்கம்.
சிறிய கல்வெட்டு வானவன்மாதேவி ஈஸ்வரமுடையார் கோவிலில் உள்ள பள்ளி கொண்டார், அழகிய மணவாளர் பற்றிக் குறிப்பிட்டு ராஜேந்திர சோழனின் புகழ் பாடுவதால் காலத்தை அறிய உதவுகிறது.
இராஜேந்திரனின் தாயின் பெயர் வானவன் மாதேவி
இரண்டாவது கல்வெட்டு விளக்கு எரிக்க செய்த தானம் பற்றியது. சோழ மன்னன் அதி ராஜேந்திர தேவன் பெயர் காணப்படுகிறது .
சிவாலயம் எண் 5
இங்குதான் அதிக எண்ணிக்கையிலான ஐம்பொன் விக்கிரகங்கள் கிடைத்தன உடைந்த நிலையில் காணப்பட்ட லிங்கத்தை இப்போது ஒட்டிவைத்துள்ளனர் . 1908ம் ஆண்டில் இவை கண்டுபிடிக்கப்பட்டன பிற்காலத்தில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்த ஐம்பொன் விக்கிரகங்கள் –
ஆறு அடி உயர நடராஜர், , சிவகாமி அம்மன், காரைக்கால் அம்மையார், விநாயகர், மஹா விஷ்ணு,
மற்ற என்னுள்ள சிவாலயங்கள் அளவில் சிறியவை.
ராஜராஜ சோழனும், அவருடைய மகன் ராஜேந்திர சோழனும் இலங்கையின் பெரும்பகுதியை வென்று 1070, ஆண்டுவரை ஆண்டனர். ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்ட பின்னரும் அங்குள்ள ஆலயங்கள் அவர்களுடைய புகழ் பாடிய வண்ணமுள்ளன.
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐம்பொன் சிலைகளில் சில விநோதங்கள் உண்டு.
பொலன்னறுவையில் 1908ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட சோமாஸ்கந்த மூர்த்தியில் ஸ்கந்தன் இல்லை!
சோம +உமா+ஸ்கந்தன் = சோமாஸ்கந்தன் என்பதை நாம் அறிவோம்.
1960ம் ஆண்டில் பொலன்னறுவையில் கண்டுபிடிக்கப்பட்ட நடராஜர் மிகவும் வினோதமானது. நடராஜரின் பறக்கும் ஜடாமுடி இல்லை. திருவாச்சி வட்ட வடிவில் இல்லை ; காதணிகளும் இல்லை. இடது கரத்தின் கக்கத்தில் பைபோல தொங்குகிறது. உள்ளூர் கலைஞர்கள் முயற்சி போலும்! படங்கள் அனைத்தையும் 1964ம் ஆண் டில் சி.எஸ். நவரத்தினம் எழுதிய ஆங்கில புஸ்தகத்தில் A SHORT HISTORY OF HINDUISM IN CEYLON , C S NAVARATNAM, 1964 காணலாம்.
Xxxx
65.செல்வச்சந்நிதி முருகன் கோவில் , தொண்டைமானாறு
பல வினோதமான வழக்கங்களைக் கொண்ட கோவில் இது !
யாழ்ப்பாண நல்லூர் போலவே வேல்தான் மூலஸ்தானத்தில் வழிபடப்படுகிறது.
ஆனால் பூஜை முறையோ கதிர்காமம் போன்றது. வாயில் துணியைக்கட்டிக்கொண்டு மந்திரம் ஏதுமில்லாமல் வழிபாடு.
அது மட்டுமல்ல 65 ஆலம் இலைகளில் பிரசாதமாக அமுது படை க்கும் புது வழக்கம்!
ஆரம்பித்தவர் பெயரும் கதிர்காமர்; ஊரின் பெயரும் சின்னக் கதிர்காமம். ஒவ்வொரு வழக்கத்துக்கும் பின்னால் ஒரு நீண்ட கதை சொல்லப்படுகிறது..
சுருக்கமாகக் காண்போம்
கோவில் இருக்கும் இடம் — யாழ்ப்பாணத்திலிருந்து 20 மைல் தொலைவில் தொண்டைமான் ஆற்ற்றின் கரையில் உள்ளது.
கோவிலின் மற்ற பெயர்கள் — ஆற்றங்கரையான், சின்னக்கதிர்காமம், செல்லக்கதிர்காமம், கல்லோடை
ஆறு ஓடுவதால் தீர்த்தம், தலம் , மூர்த்தி என்ற முச்சிறப்புகளும் உண்டு .
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் , குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கருணாகரத் தொண்டைமானை உப்பு வாங்கி வர சோழ மன்னன் அனுப்பின்னான். உப்பு ஏற்றிய படகுகள் கடல் வரை செல்ல அவர் வெட்டிய கால்வாய் தொண்டைமானாறு ஆனது
எல்லா யாழ்ப்பாணக் கோவில்களையும் தரை மட்டம் ஆக்கிய ஹாலந்து நாட்டு, போர்ச்சுகல் நாட்டு மதவெறியர்கள் பழைய கோவிலை இடித்து நொறுக்கினர். மனம் நொந்து போன கதிர்காமர் என்ற பக்தர் கதிர்காமத்துக்கு யாத்திரை சென்றார். அங்கு அவருக்கு ஒரு வேல் கிடைத்தது. அதைப் பூவரசு மரத்தின் கீழே ஸ்தாபித்து வழிபட்டு வந்தார் . பக்தர் தொகை பெருகவே கோவில் கட்டிடங்கள் எழுந்தன . பக்தர்கள், வேண்டுதல் காணிக்கையாக அன்னதானம் செய்வதால் பக்தர்களுக்கு பிரசாதம் கிடைக்கிறது.. இதனால் வேல் முருகனின் பெயரே அன்னதான முருகன் என்றும் மாறியது .
பிராமண குருக்கள்கள் செய்யும் பூஜை முறைகள் இங்கு இல்லை ஆயினும் நித்திய பூஜைகளும் வருடாந்திர விழாவும் உண்டு.
உயர்ந்த மணிக்கூண்டு கோபுரமும் , கோவில் தேரும் கோவிலின் பெருமையை மேலும் அதிகரிக்கிறது.
FROM COLOMBO MUSEUM BOOK
—Subham—
Tags– செல்வச்சந்நிதி, முருகன் கோவில் , தொண்டைமானாறு, சின்னக்கதிர்காமம், செல்லக்கதிர்காமம்,, பொலன்னறுவை, கோவில்கள், சிவாலய 2, Ploannaruvai
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
திருமூலர் கண்ட தச நாதங்கள்!
ச.நாகராஜன்
மிக நுட்பமான ஒலி அல்லது ஓசை பற்றி இந்து மதம் தரும் செய்திகள் அபூர்வமானவை.
இவை இன்றைய விஞ்ஞானத்தால் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இனியும் கண்டுபிடிக்கப்பட முடியுமா என்பதும் சந்தேகமே. ஏனெனில் இவை லாபரட்டரி சோதனைகளால் கண்டுபிடிக்கப்பட முடியாது.
ஓம் என்ற ஒலியே ஆதி ஒலி அல்லது ஓசை என்றும் அது அண்டம் முழுவதும் பரவி உள்ள தெய்வீக ஒலி என்பதையும் இந்து மதமே கண்டுபிடித்து அறிவித்திருக்கிறது.
இந்த ஓசைகளை எப்படி இந்து மத ரிஷிகளும் மகான்களும் உணர்ந்தார்கள், இன்றும் அனைவரும் உணர முடியும் என்பதற்கும் அவர்கள் விடைகளை அளித்துள்ளார்கள்.
உள்முக தியானத்தால் மட்டுமே இந்த தெய்வீக ஓசையை அறிய முடியும்.
ஆன்மீக நுட்பங்களை விளக்கும் அற்புத யோகி திருமூலர்.
3000 பாக்களை அருளியுள்ள அவர் அவற்றில் இயற்கை இரகசியங்களையும் தெய்வீக இரகசியங்களையும் நுட்பமாக விளக்கி அருளியுள்ளார்.
திருமந்திரத்தில் 606,607 பாடல்களில் இவற்றைக் காணலாம்.
மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்க ஒண்ணாதே (பாடல் 606)
இதன் பொருள்:
தியானத்தில் அமர்ந்து நாம் உள்முகமாகச் செல்லும் போது சுழிமுனை நாடியின் அடி வாசலைத் திறக்கக் கூடிய அற்புத இடத்தை அடைவோம்.
அப்போது இன்னும் மேலே செல்லும் போது அதாவது வாசி மேலே செல்லும் போது பத்து வித ஓசைகள் அல்லது ஒலிகள் அல்லது நாதங்கள் கேட்கும்.
இவை தச நாதங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாடிக்கு நாத நாடி என்று பெயர்.
இதில் லயம் செய்த யோகி அல்லது சாதகன் அதை வெளியில் செல்லாமல் கட்டி விட்டால் சுழிமுனையின் உச்சி வாயிலுக்குச் சென்று விடுவான்.
சரி தச நாதங்கள் எவை?
(1) மணியோசை
(2) கடல் அலையோசை
(3) யானை பிளிறும் ஓசை
(4) புல்லாங்குழலோசை
(5) இடியோசை
(6) வண்டின் ரீங்கார ஓசை
(7) தும்பியின் முரலோசை
(8) சங்கொலி
(9) பேரிகை ஓசை
(10) யாழிசை
நன்கு தியானம் செய்து உள்முகமாகச் செல்பவர்களே இந்த ஓசை இன்பத்தைக் கேட்டு உணர முடியும்.
“நன்மணிநாதம் முழங்கியென் உள்ளுறு நண்ணுவதாகாதே”
“ஓசையில் இன்பம் மிகுத்திடுமாகாதே”
“சங்கு திரண்டு முரன்றேழும் ஓசை தழைப்பனவாகாதே”
என்ற திருவாசகத் தொடர்கள் மாணிக்கவாசகரின் தியான அனுபவங்களை விளக்கும் சொற்றொடர்களாகும்.
‘திருச்சிலம்போசை ஒலி வழியே சென்று
நிருத்தனைக் கும்பிடென்று உந்தீ பற
நேர்பட அங்கே நின்று உந்தீ பற (பாடல் 17)
என்று திருவுந்தியார் மாபெரும் ரகசியத்தை விளக்குகிறது
திருச்சிலம்பாகிய திருவருள் ஓசை ஒலியாகிய பிரகாசமான ஒலி வழியே செல்வாயாக; அங்கு ஐந்தொழில் திருக்கூத்தியற்றும் இறைவனைக் காண்பாயாக என்பது பாடலின் விளக்கமாகும்
வன்மையான ஓசையில் ஆரம்பித்து மென்மையான ஓசையான வீணை ஒலியில் பாடல் முடிகிறது.
வீணா நாதத்தில் இறைவனைக் காணலாம் என சங்கீத வித்வான்களும் மகான்களும் கூறுவதில் நுட்பமான இரகசியம் உள்ளது; அதை இந்தப் பாடல்கள் தெரிவிக்கின்றன.
நுட்பமாக நமது பயணம் உள்நோக்கிச் செல்லச் செல்ல நுணுகிய ஓசையைக் கேட்டு ஓம் என்ற மந்திரத்தில் லயமடைவோம்.
இந்த ஒலிகளை விஞ்ஞானம் ஆராய ஆரம்பித்தால் பௌதிக உண்மைகளையே விளக்க முடியும்.
மனித மனத்தின் ஆழத்திற்குள் சென்று மனித இயற்கையின் அடித்தளம் சென்று நாம் பெறுகின்ற ஆன்மீக அனுபவங்களை அதனால் விளக்க முடியாது.
ஆனால் யோகிகளும், மகான்களும், ரிஷிகளும் தமது உள்ளுணர்வால் ஓசையின் வகைகளையும், திறன்களையும் அதன் பலன்களையும் உணர்ந்து நமக்கு வெளிப்படுத்தும் திறன் ஒரு மாபெரும் அதிசயமல்லவா?
இதைத் தருவது ஹிந்து மதம் ஒன்றேயல்லவா?
உணர்வோம்; செயல்படுவோம்; ஓசை மஹிமையை உணர்ந்து அதில் லயப்படுவோம்.
Yesterday I posted all Hindu objects, Hindu Flags, Gods etc in the Colombo Museum. I visited the National Museum on 8th September 2023. All those interested in Hindu and Buddhist history of Sri Lanka must visit the museum .No one should miss the shop at the exit of the museum where you can buy good books and colourful post cards for a very reasonable price. I bought colour post card each for Rs. 6 (Indian money and Rs 20 in Sri Lankan money).
I bought the book Tamil Inscriptions in the Colombo National Museum.
Here are some more pictures:
Dancing Maks, swords, Budda statues
3 a – Buddha statues
3 b- Swords, Shields, Fans
3 C- Dance Masks
Once you go and stand in front of the folk dance scene in the room, a live show comes with lights.
You can watch this in sound and light show in the room.
The pictures are split into 3 a and 3 b and 3 c for uploading convenience.
Yesterday I posted all Hindu objects, Hindu Flags, Gods etc in the Colombo Museum. I visited the National Museum on 8th September 2023. All those interested in Hindu and Buddhist history of Sri Lanka must visit the museum .No one should miss the shop at the exit of the museum where you can buy good books and colourful post cards for a very reasonable price. I bought colour post card each for Rs. 6 (Indian money and Rs 20 in Sri Lankan money).
I bought the book Tamil Inscriptions in the Colombo National Museum.
Here are some more pictures:
Dancing Maks, swords, Budda statues
The pictures are split into 3 a and 3 b for convenience.