யோக வாசிஷ்டம் கூறும் மனம் பற்றிய ரகசியங்கள்! (Post No.10,904)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,904

Date uploaded in London – –     29 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

யோக வாசிஷ்டம் கூறும் மனம் பற்றிய ரகசியங்கள்!

ச.நாகராஜன்

உலகின் எந்த நூலும் தராத  மனம் பற்றிய அதிசயமான ரகசியங்களை  யோக வாசிஷ்டம் தருகிறது

எப்படி ஒரு நடிகன் வெவ்வேறு பாத்திரங்களாக ஆகிறானோ அதே போல மனமும் வெவ்வேறு வேலைகளைச் செய்கிறது; வெவ்வேறு பெயர்களைப் பெறுகிறது.

விதவிதமான கடமைகளை ஒரு மனிதன் செய்யும் போது எப்படி வெவ்வேறு பெயர்களை எடுத்துச் செய்கிறானோ அதே போல மனமும் அதன் வெவ்வேறு செயல்பாடுகளால் வெவ்வேறு பெயர்களைக் கொள்கிறது.

ஒரு மனிதன் எப்படி குளித்தல், கொடுத்தல், வாங்குதல் போன்ற பல்வேறு வேலைகளைச் செய்கிறானோ அதே போல மனமும் வெவ்வேறு விதமான குணாதிசயங்களைக் கொண்டு செயல்படுகிறது.

வெவ்வேறு வேலைகளினால் வெவ்வேறு பெயர்களுடன் காரியகர்த்தாவாக வேலைகளைச் செய்ய வேண்டியதாகி இருக்கிறது. அப்படி அந்த வேலைகளைச் செய்யும் போது மனமானது ஜீவன் (தனிப்பட்ட பிரக்ஞை), ஆசை, செயல் என்ற பல பெயர்களால் விவரிக்கப்படுகிறது.

மனதிற்கான வெவ்வேறு பெயர்களை யோகவாசிஷ்டம் இப்படித் தருகிறது.

  1. மனம் : முழு பிரக்ஞையுடன் இருப்பது.
  2. புத்தி: ஒரு கருத்தை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் முடிவைப் பெறுவதால் இது புத்தி எனப்படுகிறது.
  3. அஹங்காரம் : “நான்” என்ற ஒரு எண்ணம் உள்ளே இருப்பதால் இது அஹங்காரம் எனப்படுகிறது.
  4. சித்தம் : (எண்ணம்) ஆராய்வதை விட்டு விட்டு ஒரு குழந்தை போல இருக்கும் போது இது சித்தம் எனப்படுகிறது.
  5. கர்ம : (செயல்) : ஒரு இயக்கமும் அந்த இயக்கத்தின் விளைவும் காரணமாக ஆகி செயல்படுவதால் இது கர்ம எனப்படுகிறது.
  6. கல்பனா : காகதாலீய நியாயம் என்று ஒன்று உண்டு.காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்தாற் போல என்று சொல்லுவோம்.  தானாகவே ஒன்றைக் கற்பனை செய்து கொள்வதால் இது கல்பனா என்ற பெயரைப் பெறுகிறது.
  7. ஸ்மிருதி (நினைவாற்றல்) ஒரு செயலை முன்னமே செய்தது போல காணும் போது அது ஸ்மிருதி எனப்படுகிறது.
  8. வாஸனா : (ஆசை அல்லது மனப்பதிவு) ஒரு ஆசை அல்லது மனப்பதிவு நுட்பமான ஒன்றாக அது மறைந்த போதிலும் மனப்பதிவாக இருக்கிறது. வார்த்தைகள் அவற்றின் அர்த்தம் அதன் சக்தி ஆகியவை எப்படி நுட்பமாக ஆகாயத்தில் கலந்து இருக்கிறதோ, மற்ற செயல்பாடுகள் இல்லாமல் போகிறதோ, அப்போது அது ஆசை எனப்படுகிறது.
  9. அவித்யா : (அறியாமை) ஆத்மனின் இயல்பான இயற்கை சுத்தமானது. இதை அறியாமல் இருக்கும் இன்னொரு நிலை தான் அவித்யா
  10.  மலம் : (அசுத்தம்) ஆத்மனை அழிக்கும் ஒன்றாக அமைவதே மலம். தனது இயல்பான சுயத் தன்மையை மறக்கடிப்பதே மலம்.
  11. மாயா (மாயை) என்றுமுள்ள சத்தை அசத்தாயும், அழியா ஆத்மனை அழியும் ஜீவனாகவும் காண்பிப்பதால் இது மாயா எனப்படுகிறது.
  12. ப்ரக்ருதி (இயற்கை) : பார்ப்பதை எல்லாம் ப்ரக்ருதத்வமாகக் காண்பிப்பதால் இது இயற்கை எனப்படும் ப்ரக்ருதி எனப்படுகிறது.
  13. ப்ரஹ்மோத்யாதி (ப்ரஹ்மா இத்யாதி) நுட்பமான எண்ண வடிவில் இருக்கும் உடலானதாக அமைவதால்  ப்ரஹ்மா எனப்படுகிறது.
  14. ஜீவ: (ஜீவன்) ஜீவனாக இலங்குவதால் இது (தனிப்பட்ட ஆத்மா) ஜீவன் எனப்படுகிறது.
  15. ஆதிவாஹிகதேஹ: ( நுட்பமான எண்ண வடிவிலான சரீரம்) இந்த மனோமயமான எண்ணம் ஒரு ஆரம்பத்தையும் முடிவையும் கொண்டது. உருவமில்லாதது. ஒரு குறையுமில்லாதது. ஆகவே இது ஆதிவாஹிகதேஹம் எனப்படுகிறது.
  16.  இந்திரியம் : (புலன்கள்) இது ஆன்மாவை ஆளும் இந்திரனை மகிழ்ச்சி கொள்ளச் செய்வதால் இது இந்திரியம் எனப்படுகிறது.
  17. புர்யஷ்டகம் ( எட்டு வித நகரம்) ஐந்து நுட்பமான பூதங்கள் (பஞ்ச பூதங்கள்) ஓசை, தொடுதல், வடிவம் , சுவை, வாசனை ஆகியவற்றை மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றுடன் சேர்ந்து எண்ணங்களின் சேர்க்கையாக இருப்பதால் இது புர்யாஷ்டகம் எனப்படுகிறது.
  18. தேஹபதார்த்தி : இது உடல் என நினைப்பதால் உடலாகிறது. குடம் என நினைப்பதால் அந்தப் பொருளாக ஆகிறது. ஆகவே இது தேஹபதார்த்தி எனப்படுகிறது.
  19. தர்சனானந்தரை சஹ மத பேத: (மற்ற கொள்கைகளுடன்  வேறுபடுதல்)

ஓ! ராமா! அஹங்காரம், மனம், புத்தி என இப்படி என்னால் உரைக்கப்பட்டது அனைத்தும் அவற்றின் இயற்கை குறித்து என்னால் உருவாக்கப்பட்ட வடிவங்களே.  தர்க்கவாதிகளால் இது வேறு வகையாகவும் சொல்லப்படுகிறது. சாங்கிய கொள்கையாளரால் வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. சார்வாகர்களால் (நாத்திகவாதிகளால்) இன்னும் வேறு விதமாகச் சொல்லப்படுகிறது.

என்று இப்படி மனம் பற்றிய ரகசியங்களை வசிஷ்ட மஹாமுனிவர் ராமருக்கு எடுத்துக் கூறுகிறார்.

இந்தப் பகுதியை நன்கு ஊன்றிப் படித்து மனதின் பல்வேறு இயல்புகளை அறிந்து கொள்ளலாம்.

***

TAGS– யோக வாசிஷ்டம்,  மனம், ரகசியங்கள்!

SIXTEEN PLACES WHERE PARSIS LIVED BEFORE GOING TO IRAN (Post No.10,903)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,903

Date uploaded in London – –    28 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Next to Rig Veda, Gathas of Zoroaster is the oldest book in the world. The language of the Gathas comes closer to Sanskrit than any other language. The very word Gatha is Sanskrit for song. It is in Prakrit and Tamil. Gatha travelled from Kanyakumari to Iran. Gatha Sapta Sati, the most famous Prakrit anthology and 30 Kathais of most famous Tamil epic Silappadikaram are known to all scholars.

Zrnd Avesta, Veda of Parsis list 16 places as their home. The sixteen places include the Aryana (Haryana? and Sapta Sindhu (later known as Punjab)

First let us look at the 16 places and then go to the comments:-

Even a cursory glance at the list shows big confusion and chaos; worlds like unknown , uncertain, ‘probabl’y are found in the explanations; and then five or six interpretations for each location; last but not the least it covers a vast area of India, Turkmenistan, Azerbaijan , Iran etc. We know that one cant jump from Punjab to Iran without crossing the lands in between. So it covers Iraq and other countries as well. The reason for these vast area is they spread the religion to all these places. Historically we find evidence as well. But the most important words are Aryan land (first in the list) and Sapta Sindhu (last but one in the list). For some scholars the first one is in Iran. All those scholars who support this believed in Aryans coming from Central Asia into India. Now it is found wrong because of the latest findings on River Sarasvati. The river Sarasvati is also found in other places with S=H. it shows clearly they named Hindu original place names wherever they went. We see it in Canada, USA, Australia, New Zealand, Pacific islands and South Africa. Wherever the white people went and plundered the native population, they named those places with some place names in Europe. So they assumed Indians also did that. I don’t need to give the long list. If you look at the place names in the above mentioned countries you can easily identify them.

The last one in the list of 16, is Rasa. The river Rasa which is found in Rig Veda is not identified. The Zoroastrian tradition talks about Hara mountain. The words in Su’mer’ and Pa’mir’, Kh’me’r (in Cambodia) are nothing but Meru, wherever Hindus went they named the rivers ‘Ganga’ and the mountain ‘Meru’. You can even see Meru in East Africa. You can see Ganga in the thick forests of Congo (Ganga) in central Africa or Me kong (Ma Ganga) of South East Asia. So it is a tradition to name the places of your origin. We find the word ‘Ganga’ in Sri Lankan rivers too.

So the unidentified Rasa river , the identified Sapta Sindhu Rivers, the mountain Hara (Kailash or Su Meru), all these point out to Greater India which included Afghanistan where from Mahabharata princess Gandhari and Ramayana Princess Kaikeyi came and married Hindu epic heroes.

In short, all the 16 places mentioned in the list are in Greater India. The people who believed in Aryan invasion , reversed (Ulta) everything.

 Another evidence comes from Manu Smrti. The oldest parts of Manu smriti belonged to the period when Sarasvati was flowing. One of the punishments mentioned in Manu smriti is to walk against the current of River Sarasvati. And that Manu Smriti also used the words Aryan land which is around Haryana/Aryana of today.

In short, the Parsis or Zoroastrians moved from this area to Iran and named places after their homeland India.

Here is what Manu says about Arya Bhumi

Aaryaavartaa – Manu 2-22/3; 10-34

“From the eastern sea to the western sea , the area  between the two mountains  is what wise men call the Land of the Aryans”.  So according to Manu, it was the vast land between the Vindhyas and Himalayas. During Vedic period there was no civilization in South India.

P L Bhargava gives linguistic evidence as well. We will look at it in the second part:-

Vendidad references[ (from Wikipedia)

The main Avestan text of geographical interest is the first chapter of the Vidēvdād. This consists of a list of sixteen

The list is as follows:

  1. Airyanem Vaēǰah = the homeland of Zoroaster and Zoroastrianism, near the provinces of SogdianaMargianaBactria, etc., listed immediately after it.[2] The historical location of Airyanem Vaejah is still uncertain
  2. Gava = Sogdiana;
  3. Mōuru = Margiana;
  4. Bāxδī = Bactria;
  5. Nisāya = a district between Margiana and Bactria. Most historians believe this location is Nisa modern day south of Turkmenistan.[11] some believe Neyshabur. perhaps Maimana;[12]
  6. Harōiva = AriaHerat;
  7. Vaēkərəta = Gandhāra;[13]
  8. Urvā = the exact location of Urva is unknown, some claim Ghazni;[14] Darmesteter believed it to be Urgench in modern day UzbekistanEdward Granville Browne believed it to be Tus in Khorasan Province of Iran (Vandid, darmesteter Page 68);
  9. Xnənta = la region defined as vəhrkānō.šayana- ”the dwelling place of the Vəhrkāna,” where Marquart placed the Barkánioi of Ctesias,[15] an ethnicon analogous with that of Old Persian Varkāna, the inhabitants of Hyrcania, the present Gorgān or, less probably, Hyrcania;[16]
  10. Haraxᵛaitī = Arachosia;
  11. Haētumant = the region of Helmand River roughly corresponding to the Achaemenian Drangiana (Zranka);[17]
  12. Raγa = or Raga, location is modern day in Rey in Tehran province, to be distinguished, given its position in the list[18] from Median Ragā and probably also from Raγa zaraθuštri- of Yashts 19.18;[19]
  13. Čaxra =locations is still uncertain, but DarmesteterDehkhoda, and Hassan Pirnia believe the location is Shahrud[20] Čarx between Ghaznī and Kabul, in the valley of Lōgar,[21] not Māzandarān, as Christensen thought;
  14. Varəna = most of historian believes location is Gilan.[22] also Bunēr,[23] the Varṇu of the Mahāmāyūrī, the ʿAornos of Alexander the Great, the homeland of FerΘraētaona/Frēdōn/Afrīḏūn;[24]
  15. Hapta Həndu = Sanskrit Sapta Sindhu, the area of Punjab;
  16. Raŋhā = Rasā in Vedic geography, at times mentioned together with Kubhā (Kabul) and Krumu (Kurram),[25] a river situated in a mountainous area, probably connected with the Indus River, not with the Jaxartes or with the Volga.[26]

One of the old, thorny problems in studies on Avestan geography is represented by Airyana Vaēǰah (Pahlavi: Ērānwēz), “the area of the Aryans” and first of the sixteen districts in Vd.

Airyana Vaēǰah onto the traditional one of a center of the world where the Peak of Harā rises. The fact that Airyana Vaēǰah is situated in a mountainous region explains its severe climate (Vd. 1.2.3 This is not surprising if we consider the analogy between the Iranian concept of the peak of Harā with the Indian one of Mount Meru or Sumeru. Peak of Harā (ttaira haraysä) in the Avestan tradition.

Look at the order of 16 places. Westerners say Aryana was in Iran. The last but  one is Sapta Sindhu in Punjab. But the chronology of Vedas and Gathas is in reverse order; that is the Rig Veda of Punjab is very old compared to Gatha language (Avestan); So they moved from Vedic land and lived in isolation in Iran for long and the Avestan language of Gathas was born.

I personally see the same in India. Vedic Hindus moved towards south and Tamil evolved. My research shows that any ancient word can be traced to Tamil or Sanskrit. Some words have missing links. Most of the key words can be traced. I already showed how V changes to P in ancient Tamil and Avestan. Tamil tradition says that Shiva sent Agastya to south to write a grammar for Tamil. Only when there is something in common, a person from Himalayas can write grammar for Tamil. Great poets like Kamban and Bharati mentioned Tamil -Agastya link. Kalidasa was the oldest poet to mention Pandya and Agastya link in Raghu Vamsa. So it is a 2100 year old belief.

P L Bhargava also explains it.

To be continued………………………………….

அகஸ்தியர் – லோபாமுத்ரா Sexy செக்சி உரையாடல் -1 (Post No.10, 902)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,902

Date uploaded in London – –    28 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் எட்டே இடங்களில் மட்டும் ‘அகஸ்த்ய’ என்ற பெயர் வருகிறது. அவர் இயற்றிய அல்லது அவரால் காணப்பட்ட துதிகள் ரிக் வேதத்தின் முதல் மண் டலத்தில் உள்ளன. அங்கு அவருடைய துதிகள் என்ற கணக்கில் 27 துதிகள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டுள்ளன. ( 1-165 முதல் 191 வரை).

அகஸ்தியரின் மனைவி பெயர் லோபாமுத்ரா; பேரழகி; பெரிய பணக்காரி; விதர்ப்ப நாட்டு ராஜகுமாரி. அகஸ்தியரோ உலக மஹா குள்ளன்; உலகிலேயே குட்டையான ஆள் என்ற பெயரில் ‘கின்னஸ் சாதனை’ புஸ்தகத்தில் பெயர் ஏற்றிவிடலாம் அவ்வளவு குள்ளம். அவர் ஆணழகனும் இல்லை.  இந்த சூழ்நிலையில் அவருடைய துதிகளில் ஒன்று மிகவும் பிரபலம் அடைந்து விட்டது அது ரிக்வேதத்தின் 1-179 ஆகும். அதில் ஆறு மந்திரங்கள் தான் உள்ளன. அதில் என்ன பெரிய செக்ஸ் இருக்கப்போகிறது என்று நினைக்காதீர்கள். அது பற்றி மஹாபாரதம் பெரிதாக பிரஸ்தாபிக்கிறது.

வேதங்களின் தாத்பர்யத்தை- உட்கருத்தை விளக்க வந்தவைதான் புராணங்கள் மற்றும் இதிஹாஸங்கள். ஏனெனில் வேதத்தின் பிற்பகுதியான பிராஹ்மண நூல்களிலும் மறைமுக மொழியில்தான் விளக்குவார்கள். புராண , இதிஹசங்கள்தான் நமக்குத் புரியும்படி பேசும்..

இதுபற்றி எல்லோரும் அறிந்த ஒரு ஸம்ஸ்க்ருத ஸ்லோகம் உண்டு :-

இதிஹாச புராணாப்யாம் வீதம் ஸமுபவ்ர்ம்ஹயேத்

விபேப் யல்பஸ்ருதாத்  வேதோ மாமயம் ப்ரஹரிஸ் யதி

இதன் பொருள்-

வேதத்தைக் கற்போர் இதிஹாச புராணம் மூலம் அதை விளங்கிக் கொள்ளவேண்டும்; ஏனென்றால் கொஞ்சம் படித்தவர்களால் தனக்கு ஆபத்து வரும் என்று வேதம் அஞ்சுகிறது

(எவ்வளவு உண்மை பாருங்கள் ! வெளிநாடுகளைச் சேர்ந்த 60 அரைவேக்காடுகள் வேதங்களை மொழிபெயர்த்தோ  விமர்சித்தோ கட்டுரைகள் எழுதியுள்ளனர். அத்தனையும் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்த கதைதான் !)

இதனால் SEXY DIALOGUE ‘செக்சி’ உரையாடலின் முழு விவரத்தை அறிய மஹாபாரதத்துக்குச் செல்ல வேண்டும்.

அகஸ்தியர் துதிகளில் போற்றப்படும் கடவுளர்: இந்திரன், மருத்துகள் , அஸ்வினி தேவர்கள், வானமும் பூமியும் (த்யவ்ஸ்/DYAUS – பிருத்வி), விச்வே தேவர்கள், அன்னம் / உணவு; ஆப :- தண்ணீர் , அக்கினி , ஆப்ரி, பிருஹஸ்பதி

அகஸ்தியரின் மற்ற பெயர்கள் – மான, மாந்தார்ய , மான்ய என்பனவாகும் ; ரிக் வேத 7-33 ல் அகஸ்தியர் பிறப்பு பற்றிய விஷயம் உள்ளது அதன்படி அவர் மித்ர – வருணன் ஆகியோரின் விந்துவிலிருந்து உருவானவர். வசிஷ்டரும் , அகஸ்தியரும் ஊர்வசி என்னும் அப்ஸரஸ் மூலம்  பிறந்தனர் என்றும் அறிகிறோம் .

பிற்கால இலக்கியங்களில் அகஸ்தியரின் சாதனைகள் பற்றி நிறைய உள்ளன வாதாபி என்ற அரக்கனைக்  கொன்றது, நஹுஷனை மட்டந்தட்டியது ,விந்திய மலையின் மேல், ரோடு ROAD ROUTE போட்டு  அந்த ப் பாதை மூலம் தென்னாட்டுக்கு வந்தது, கடல் நீரைக் குடித்தது (அதாவது கடல் வழிப்பாதை மூலம் தென் கிழக்காசியாவில் இந்து நாகரீகத்தை நிலை நாட்டியது)  , காவிரி நதியைத் திசை மாற்றி ஓடுவதற்கு அணை கட்டியது , தமிழ் மொழிக்கு இலக்கணம் வரைந்தது என்று பெரிய பட்டியல்!!

தமிழுக்கு அவர் இலக்கணம் இயற்றியதை பாரதி, கம்பன், பரஞ்சோதி முனிவர், சிவஞான முனிவர் முதலியோர் பாடியுள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் முன்னதாக கவி காளிதாசன், பாண்டிய மன்னனையும் அகத்தியனையும் இணைத்து ரகு வம்ச காவியத்தில் பாடியதுதான் 2100 ஆண்டுகளுக்கு முந்தைய முதல் குறிப்பு!!!

முதலில் உரையாடலைக் காண்போம் ; பின்னர் மஹாபாரதத்தைக் காண்போம்; பின்னர் அறிஞர் கருத்துக்களைக் காண்போம் :-

அகஸ்தியர் துதிகள் பற்றி சாயனர், வேங்கட மாதவா ஆகியோர் உரை எழுதியுள்ளனர் .

xxx

இதோ 1-179- 1/2 துதி

லோபா முத்ரா

நான் பல்லாண்டுக் காலமாக அல்லும் பகலும் அனவரதமும் உமக்கு பணிவிடை செய்தேன் ; களைத்தும் போனேன் ; முதுமை என்னுடைய மேனி அழகைப் பாதிக்கிறது இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? கணவர்கள், அவர்களுடைய மனைவியுடன் இன்புற்று இருப்பார்களாகுக

(இந்து மதத்தில் பெண்கள் பகிரங்கமாக ‘செக்ஸ்’ sex பற்றிப் பேச மாட்டார்கள்; ஆனால் குறிப்பால் உணர்த்துவார்கள் ; அதே போல லோபாமுத்ராவும் எல்லோரும் கணவனுடன் கூடிக் குலவட்டும் என்று பொதுப்படையாகப் பேசுகிறார்)

ரிஷிகளும்  தேவர்களும் சத்தியத்தைக் கடைப்பிடித்தார்கள். அவர்கள் காலத்தால் அழியாத சட்ட திட்டங்களை வகுத்தார்கள் ; அவர்கள் சொன்னார்கள்; செய்யவில்லை .கணவர்கள், அவர்களுடைய மனைவியுடன் இன்புற்று இருப்பார்களாகுக

அகஸ்தியர் பதில்

(அகத்தியர் பதிலை கிரிப்பித்  R T GRIFFITH  மொழி பெயர்க்க மறுத்துவிட்டார். ரொம்ப ‘செக்சி’ என்று கருதினார் போலும். அதை ஜம்புநாத அய்யர்  மேம்போக்காக மொழிபெயர்த்துள்ளார். திருக்குறளின் காமத்துப் பாலையும்  மொழிபெயர்க்க பறங்கித் தலை பாதிரிமார்கள் அஞ்சினர்; திருக்குறளை முழுக்க மொழிபெயர்த்தால்  தமிழன் பெயர் ‘ரிப்பேர்’ ஆகி விடும்; மானம் ‘விமான’த்தில் ஏறிவிடும்; தமிழன் கதி ‘சகதி’ ஆகிவிடும் என்று கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவந்தோர் அஞ்சினர். ரெவரென்ட் ஜி.யூ போப் மட்டும்  அதைத் தைரியமாகப் படித்துவிட்டு இதில் என்ன தவறு இருக்கிறது?  என்றார். இரண்டு மந்திரங்களை லத்தீன் மொழியில் கொடுத்துள்ளனர்.)

XXX

அகஸ்தியர் (RV 1-179-3)

நான் தவத்தை இயற்றுவதில் காலத்தைச் செலவிட்டேன். நாம் நம்முடைய விருப்பங்களை இப்போது அனுபவிப்போம். இருவரும்  சேர்ந்து செயல்பட்டால் வெற்றி பெறலாம்.

(குழந்தை பெறுவதற்கு இணையலாம் என்பதை பகிரங்கமாகக் கூறுகிறார். இதன் விளக்கம் விரசம் இல்லாமல் மஹாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது அதையும் காண்போம்.)

RV 1-179-4

அகத்தியர் தொடர்ந்து பேசுகையில் ஜெபத்திலும் இந்திரியக் கட்டுப்பாட்டி லும் இருந்தபோதும் காம எண்ணம் வந்தது ஆகையால் லோபாமுத்ரா கணவனுடன் சேருவாளாகுக.

RV 1-179- 5/6

கடைசி இரண்டு மந்திரங்கள் இருவரின்  உரையாடலைக்கேட்டு யாரோ (சீடன்??) எழுதியது போல அமைந்துள்ளது

அந்த சீடன் சொல்கிறான்:

மனிதர்கள் எல்லோரும் காமத்தின் வசப்பட்டவர்கள். இதோ என் அருகிலுள்ள சோம லத்தை செடியிடம் சொல்கிறேன். நான் செய்த பாவங்களை எல்லாம் அகற்றி விடுங்கள்

கடைசி மந்திரத்தில் அகஸ்தியர் தீவிரமாக குழந்தை பெறும் பணியில் இறங்கினார் . என்று வருகிறது

இது பற்றி மகாபாரதம் மேல் விவரம் தருகிறது. அதையும் வெளி நாட்டார் கருத்தையும் பார்ப்போம்.

இந்த துதி வரிசைக் கிரமப்படி இல்லாமல் கடைசியில், ரதி என்ற தலைப்பில், பிற்சேர்க்கைப் பகுதியில் வைக்கப்பட்டது. லத்தீன் மொழியில் உள்ள இரண்டு மந்திரங்களை ஆங்கிலத்தில் பின்னர் கொடுத்துள்ளேன் . தமிழ் சினிமா பாடல்கள் போல இரண்டு அர்த்தத்தில் இவை எழுதப்பட்டுள்ளன. லோபாமுத்ரையும் அகஸ்தியரும் குழந்தை பெறும் முயற்சியில் இறங்கினார்கள் என்பதே பொருள்.

The labour which the gods favour is not unprofitable: we conquer all our rivals and rivals.

We must overcome in this battle of a hundred trades, in which we move our two sides together, on both sides.

4 Cupid took me by that bull [the man] who despises me, whether he was born on either side, or on the other, on any side.

Lopamudra denies the bull [her husband] to him: that fool swallows the wise man gasping for breath.

செல்க்ஸ் பற்றிய கவிதை என்பதால் வெள்ளைக்காரப்பயல்கள் ஆயிரக்கணக்கில் இது பற்றி கட்டுரைகள் எழுதியுள்ளனர்  ஆனால் மஹாபாரதத்தில் முழுக்  கதை உள்ளது; இதை ஸ்லோகம் வாரியாக தானேஸ்வர்  சர்மா என்பவர் கொடுத்துள்ளார். இதோ அந்த ஸ்லோகங்க ளின் மொழிபெயர்ப்பு :–

தொடரும்…………………………………………….

tags – அகஸ்தியர் , லோபாமுத்ரா, Sexy , செக்சி,  உரையாடல் , ரிக்வேத,  1-179,

Life is like a Mirror. Smile at it and it smiles back to you (Post No.10, 901)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,901

Date uploaded in London – –   28 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

xxx

Making 100 friends is not a miracle. The miracle is make a

Single friend who will stand on your side even when 100s

are against you.

xxx

Life is like a mirror. Smile at it and it smiles back to you.

Xxx

If you can’t fly, RUN

If you can’t run, WALK,

If you can’t walk, CRAWL,

If you can’t-crawl,

But keep moving towards GOAL.

ALL THE BEST!!!

xxx

Getting comfortable with the uncomfortable,

Is the only way to grow.

Xxx

We dont always need advise. Sometimes

What we need is hand to hold and an ear to listen,

And a heart to understand.

Xxx

A nice person will always be in memory.

A better person will always be in dream,

But a sincere person will always be in heart!!!

xxx

Distance never kills a relation.

Closeness never builds a relation.

It is caring of one’s feelings that builds

Faith and maintain relation.

xxx

Some women take-up law and become lawyers

Other women lay down the law and become wifes !!!.

xxx

Patience and silence are two powerful energies.

Patience makes you mentally strong,

Silence makes you emotionally strong.

xxx

Good friends are like stars.

You don’t always see them.

But you know that they

are always there!!!

xxx

When people see my messages,

They think that I am addicted to

Messaging and I am free……..

But it is incorrect.

Actually I am addicted to holding

relationships !!!

***

இது எப்படி இருக்கு…..??? !!! (Post No.10,900)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,900

Date uploaded in London – –   28 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இது எப்படி இருக்கு…..???!!!

Compiled by Kattukutty

படித்தது…..ரசித்தது ..
சில பிஸினஸ் ரகசியங்கள்!


1

ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.

கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான். முட்டைகள் அனைத்தும் உடைந்துவிட்டன.

கூட்டம் கூடி விட்டது.
வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.:

பாத்து போக கூடாதா? ” ” என்னடா… கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?”

அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்.

அடடா…ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன் தானே பதில் சொல்லணும்?

எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார்.

அதோடு ” தம்பி
இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள்.

உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிக் கொள்’ என்றார்.

மக்களும் இவரது செய்கை, பேச்சை பார்த்துப் பணம் தந்தார்கள்.

முட்டை உடைந்ததை விட அதிக பணம் சேர்ந்து விட்டது. பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.

அப்போது ஒருவர் அந்த பையனிடம் ” தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளி கிட்டே என்ன பாடு படுவயோ? ” என்றார்.

பையன் சிரித்துக்கொண்டே சொன்னான். ” அந்த பெரியவர் தான் சார் என் முதலாளி”

xxx

.

2

பிசினஸ் தந்திரம்

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். ‘ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’ என்று கூவி, பழங்களை விற்க முயன்றார்.

எவரும் பழம் வாங்க முன் வரவில்லை.

சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். ‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்!’ என்று கூவினான்.

அவனுக்கு நல்ல விற்பனை!

மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், ‘ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’ என்று விற்க முயன்றார்.

பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார்.

அடுத்து, ‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்’ என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.

முதியவரை அருகில் அழைத்தவர், ”அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால் தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!” என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, ”போய்யா… அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான்.

‘ஆறு பழம் பத்து ரூபாய்’னு விற்றால்… சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது.

அதனால் நான், ‘ஐந்து பத்து ரூபாய்’னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, ‘ஆறு பழம் பத்து ரூபாய்’னு அவன் வந்து சொன்னதும்… ‘அடடே லாபமா இருக்கே’னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க.

அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!” என்றார் முதியவர்.

xxx

3

பிஸினெஸ் ரகசியம்

சித், ஹாரி என்ற சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனக்கு காது சரியாயகேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் சித்.

அது கப்ஸா, அவருக்கு பாம்புச் செவி. நன்றாகவே கேட்கும்!

கடைக்கு வரும் வாடிக்கையாளர் தேடிப்பிடித்து ஒரு ட்ரெஸ் எடுத்து அதன் விலையை சித்திடம் கேட்பார். சித் கடைக்கு பின்னால் துணி தைத்துக்கொண்டிருக்கும் ஹாரியிடம் ‘இந்த ட்ரெஸ் என்னப்பா விலை’ என்று கத்துவார்.

ஹாரி அங்கிருந்து ‘நாற்பத்தி இரண்டு டாலர்’ என்பார். சித் உடனே ‘எவ்வளோ’ என்று மீண்டும் கேட்பார். ‘நாற்பத்திரண்டு டாலர் டா செவிட்டு முண்டமே’ என்று ஹாரி பதிலுக்கு கத்துவார். சித் கஸ்டமரிடம் திரும்பி ‘இருபத்திரண்டு டாலர்’ என்பார். கஸ்டமரும் செவிட்டு காதிற்கு மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்துவிட்டு துணியோடு எஸ்கேப் ஆவார்!

நாற்பத்தி இரண்டு என்று கேட்ட மனதிற்கு இருப்பத்திரண்டு என்பது மிக சின்னதாய் தெரிகிறது. உடனேயே வாங்கவும் தோன்றுகிறது. இக்கதையில் ஒரு ட்விஸ்ட் உண்டு.

அந்த துணியின் உண்மையான மதிப்பு பதினைந்து டாலர்தான்!

xxx
4

ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு
மகானிடம் சென்று கேட்டான்:

“நான் திராட்சை சாப்பிடலாமா?”

மகான் சொன்னார்: “ஓ… தாராளமா”

“அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாமா?”

“ஓ.. பயன்படுத்தலாமே?”

“புளிப்புச் சுவைக்காக கொஞ்சம்
வினிகர் சேர்த்துக் கொள்ளலாமா?”

“அதிலென்ன சந்தேகம்?”

“அப்படீன்னா இதுவெல்லாம்
சேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது
மட்டும் தப்பு என்று
சொல்கிறார்களே?”

மகான் யோசித்தார். குறும்புக்கார
ஆசாமியிடம் கேட்டார்:

“இங்க பாருப்பா… உன் தலை மேலே
கொஞ்சம் மண் அள்ளிப் போட்டா
உனக்குக் காயம் ஏற்படுமா?”

“அதெப்படி ஏற்படும்?”

“தண்ணீர் ஊற்றினால்?”

“தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம்
ஏற்படும்?”

“மண்ணையும் தண்ணீரையும் கலந்து
சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில்
போட்டால்?”

“காயம் ஏற்படும்”

“நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்”
என்றார் மகான்..


                                                                                 ***

tags– பிஸினெஸ் ரகசியம், இது எப்படி இருக்கு



அப்பர் கேள்விகளும் பதில்களும்- 2 (Post No.10,899)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,899

Date uploaded in London – –     28 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அப்பர் குரு பூஜைதினம் – 24-4-2022

உரை – பகுதி 2

ச.நாகராஜன்

நாவுக்கரசர் நாவுக்கு மட்டும் அரசர் அல்ல; தமிழுக்கும் அரசர் அவரே! அற்புதமான அருள் பாக்களைப் பாடியவர் புரட்சிகரமான ஏராளமான கருத்துக்களையும் தேவாரத்தில் ஆங்காங்கே அள்ளித் தெளித்திருப்பதைப் பார்க்கலாம்.

எல்லோரும் மனிதப் பிறவியே வேண்டாம் என்று பாடி இருக்கும் போது அதற்கு மாறாக பூவுலகில் மனிதப் பிறவியும் வேண்டுகின்ற ஒன்று தான் என்று அவர் புரட்சிகரமாகக் கூறுகிறார். ஆனால் அதற்கான நிபந்தனை ஒன்றையும் அவர் விதிப்பதை அறியும் போது எவ்வளவு பெரிய பேரருளாளர் அவர், எவ்வளவு பெரிய சிவ பக்தர் அவர் என்பதை அறிய முடிகிறது.

புரட்சிக்கரசர்

சிதம்பர தரிசனம்

கோயில் என்றாலே அது சிதம்பர ஸ்தலத்தைத் தான் குறிக்கிறது.

ஆடல் வல்லானின் அற்புத தரிசனத்தைக் கண்ணுற்ற அப்பர் பாடுகிறார்:-

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,

பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்

இனித்தமுடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

என்ன ஒரு அற்புதமான தெய்வீகத் திரு உரு! வளைந்த புருவம், கொவ்வைச் செவ்வாய், அதில் முகிழ்கின்ற குமிண் சிரிப்பு, பவளம் போன்ற மேனி, அதில் தீட்டப்பட்டிருக்கும் அழகிய திருநீறு, இனித்தமுடைய அருள் தரும் பாதங்கள்!

ஆஹா! என்ன ஒரு அற்புதக் காட்சி!

இதைக் கண்டாலே முக்தி நிச்சயம்!

ஆக, இந்தக் காட்சியைக் கண்டு முக்தி பெற்று மீண்டும் மீண்டும் அவன் அருளால் பிறப்பு எடுப்போம். முக்தி பெறுவோம்.

அவன் ஆடல் விளையாட்டை நடத்தட்டும்; நாம் பிறந்து பிறந்து ஆடல் வல்லானின் தரிசனத்தைக் கண்டு கண்டு முக்தி அடைந்து அடைந்து மீண்டும் பிறந்து பிறந்து…..

என்ன ஒரு அற்புதமான கருத்து!

திருப்பாதிரிப்புலியூர் பதிகத்தில் புழுவாகப் பிறந்தாலும் உன் திருவடி மறவாதிருக்க வரம் தா என வேண்டுகிறார்:-

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே

வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே

தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்

செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே.

எல்லாப் பாடல்களிலும் அடிப்படைக் கருத்தாக இழை ஓடுவது சிவ சிந்தனையே!

‘ஒரு முறை அவனை நினைத்தாலே சிவ லோகம் நிச்சயம்;

ஆக அந்த நினைப்பு இருந்தாலே போதும்;

அதிலும் பிறக்கும் பொதெல்லாம் அவனை மறக்காமல், பிறந்து பிறந்து அவனை நினைந்து நினைந்து அவனைத் தரிசனம் செய்யும் சிவ மயமான சுகத்தை இன்னும் அதிகம் பெற வேண்டும்’ என்பது தான் அவரது பாடலின் அடி நாதக் கருத்து!

அடுத்து அவர் பாடல்களில் ஏனையோரின் பாடலில் காண முடியாத மாற்று யோசனைக் கருத்துகளை ஏராளம் காணலாம்.

எடுத்துக்காட்டிற்கு ஒன்று பார்ப்போம்.

காலன் மட்டும் அறிந்த கழலடி!

தரும தேவதையாகத் திகழும் யமனைக் கண்டால் எல்லோருக்கும் ஒரு வெறுப்பு. பயம். கவிஞர்களுக்கோ சொல்லவே வேண்டாம்.

பாரதியார் உட்பட அனைவருமே காலா என்னருகே வாடா, உன்னைக் காலால் சற்றே எட்டி மிதிக்கிறேன் என்ற அளவில் தான் பாடுவர்.

அப்பர் பிரான் சிவனின் காலால் யமன் எட்டி உதைக்கப்பட்ட சம்பவத்தை பற்பல பாடல்களில் எடுத்துக் கூறுவார்.

ஆனால் அவரே யமனின் அதி புத்திசாலித்தனத்தைப் பாராட்டி மகிழும் பாடலும் ஒன்று உண்டு.

யமன் எப்படி புத்திசாலித்தனமாக நடந்து கொண்டான்?

சிவனின் முடியைத் தேடி அலைந்த பிரம்மாவால் அதைக் கண்டுபிடிக்க முடிந்ததா? இல்லை. தோல்வி தான் மிச்சம்.

சிவனின் அடியைத் தேடிச் சென்ற விஷ்ணுவால் அடியைக் காண முடிந்ததா? இல்லை. தோல்வி தான் மிச்சம்.

ஆனானப்பட்ட பிரம்மா, விஷ்ணுவால் செய்ய முடியாத காரியத்தை எப்படிச் செய்வது?

யமன் யோசித்தான்.

மாற்றி யோசித்தான். ஒரு சின்ன தந்திரம் செய்தான்.

Alternative Thinking!!

அதன் விளைவாக சிவ பக்தனான மார்க்கண்டேயன் மீது ‘துணிந்து பாசக் கயிறை வீசினான்.

விளைவு, யாருமே பார்க்க முடியாத சிவனின் காலால் உதையுண்டான். சிவன் தரிசனம் சாத்தியமானது.

அந்தக் கழலடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் என்று சொல்லவும் வேண்டுமா?

பாடினார் அப்பரி:-

“மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று, கீழ் இடத்து

மாலும் அறிந்திலன் மால் உற்றதே வழிபாடு செய்யும்

பாலன்மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக்

காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழல் அடியே

    (ஆறாம் திருமுறை – தனித் திரு விருத்தம்- பவளவரைத் தடம் போலும் என்று தொடங்கும் பதிகத்தில் பதினொன்றாம் பாடல்)

காலன் மட்டும் அறிந்த கழலடி சிவனது அடி!

அறிதற்கு அறியா கழல் அடியை யமன் மட்டும் அறிந்ததை அப்பர் இப்படிப் பாராட்டுகிறார்.

இப்படி சுவை ததும்பும் 3066 பாடல்களை முறைப்படி ஓதி, பொருளை ஊன்றி உற்றுக் கவனித்து ஆய்ந்து ஓர்ந்து உணர்ந்தால் அப்படிப்பட்டவர் வேறு ஒரு நூலையும் படிக்க வேண்டிய அவசியமே இல்லை.

4,5,6 ஆகிய மூன்று திருமுறைகளை ஓதுவார், தமிழை அறிவார்; தமிழ் கூறும் தெய்வமான சிவனை அறிவார். அவனை அறிந்த அடியார் தம் பெருமையை அறிவார்.

சேக்கிழார் போற்றும் அப்பர்!

திருநாவுக்கரசு சுவாமிகள் புராணத்தை அற்புதமாகச் சித்தரிக்கும் சேக்கிழார் பெருமான் அவரது வரலாற்றை முடிக்கும் போது கூறும் இரு பாடல்கள் நம்மை நெகிழ வைக்கும்.

மண் முதலாம் உலகேத்த மன்னு திருத் தாண்டகத்தைப்

புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று

நண்ணரிய சிவானந்த ஞானவடி வேயாகி

அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார்.

வானவர்கள் மலர்மாரி மண்ணிறைய விண்ணுலகின்

மேனிறைந்த ஐந்து பேரியவொலியும் விரிஞ்சை முதல்

யோனிகளாயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி

தானிறைந்த சித்திரையிற் சதயமாம் திருநாளில்.

இந்த சுபகிருது வருட சித்திரை சதய நன்னாள் விழாவில்

நாவுக்கரசர் காட்டிய வழியைச் சிந்திப்போம். அவ்வழியில் நடப்போம். உயர்வோம். உய்வோம்.

இந்த நல்வாய்ப்பினை எனக்கு நல்கிய லண்டன் திரு கல்யாண்ஜி அவர்களுக்கும் ஆகப் பெரிய அறிஞர்களுக்கும் சிவானந்தத்தில் எப்போதும் திளைக்கும் சிவானுபூதிச் செல்வர்களுக்கும் என் நன்றியைக் கூறி விடை பெறுகிறேன்.

நன்றி வணக்கம்.

***

CHANAKYA’S QUOTATIONS; MAY 2022 CALENDAR (Post No.10,898)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,898

Date uploaded in London – –    27 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

XXX

Following 31 quotations are taken from Chanakya’s  work: Chanakya sutras.

FESTIVAL DAYS :- May 1- May Day; 2-Ramzan; 4- Agni nakshatra/ hot Summser begins; 6- Shankara Jayanthi; 15- Buddha Purnima; 28- Agni Nkashtra period ends.

New Moon day- 30;Full Moon Day- 15; Ekadasi Fasting Days- 12,26.

Auspicious Days in May- 4, 8, 13, 15, 25, 26

XXXX

MAY 1 SUNDAY

Sukasya moolam dharmah

Righteousness is the root of happiness

xx

MAY 2 MONDAY

Dharmasya moolam arthah

Wealth is root of righteousness

xx

MAY 3 TUESDAY

Arthasya moolam raajyam

The state is the root of wealth

xx

MAY 4 WEDNESDAY

Rajya moolam indriya jayah

Victory over senses is the root of the state

xx

MAY 5 THURSDAY

Indriya jaya moolam vinayah

Humility is the root of sense control

xx

MAY 6 FRIDAY

Vinayasya moolam vrdhdopa seva

Worship of elders is the root of humility

xx

MAY 7 SATURDAY

Vrdhdha sevayaa vignaanam

Wisdom results from the worship of elders

xx

MAY 8 SUNDAY

A vineetam snehamatrena na mantre kurvati

He should not take into counsel out of love, one who is impertinent

Xxx

MAY 9 MONDAY

Srutavantamupa dhaasudhdham mantrinam kurveeta

One who is learned and free from fraud should be made a minister.

Xxx

MAY 10 TUESDAY

Mantra moolaaha sarvarambaahaa

All things begin with counsel

Xxx

MAY 11 WEDNESDAY

Mantra rakshane kaaryam sidhdhir bhavati

Accomplishment of the task depends on guarding the secret of counsel.

Xxx

MAY 12 THURSDAY

Mantra visraavi kaaryam naasayati

One who lets out the counsel destroys the task

Xxx

MAY 13 FRIDAY

Pramaadhaad dwishataam vasamupayaasyati

Defection to the enemy takes place due to negligence

Xxxx

MAY 14 SATURDAY

Sarva dwaarebhyo Mantri rakshitavyah

Ministerial advice should be kept secret from all quarters

Xxxx

MAY 15 SUNDAY

Mantra sampadhaa raajyam vardhate

The country prospers by proper ministerial counsel

Xxx

MAY 16 MONDAY

Sreshta tamaam mantra guptimaahuh

The secrecy of ministerial counsel is of supreme importance

Xxxx

MAY 17 TUESDAY

Kaaryaandhasya Pradeepo mantras

Counsel is a beacon to the one blind of action

Xxx

MAY 18 WEDNESDAY

Mantra chakshusaa parichchidhraanyava lokayanti

Through ministerial eyes others’ weaknesses are seen

Xxx

MAY 19 THURSDAY

Mantra kale na satsarah kartavyah

At the time of taking ministerial advice there should be no quarrels

Xxxx

MAY 20 FRIDAY

Vignaanena aatmaanam sampaadayet

With wisdom one can prosper

Xxx

MAY 21 SATURDAY

Sampaaditaatmaa jitaatmaa bhavati

The prosperous one becomes the victorious one

Xxx

MAY 22 SUNDAY

Jitaatmaa sarvaartah samyujyate

The victorious one attains all the riches

Xxx

MAY 23 MONDAY

Artha sampath prakruti Sampadam karoti

Economic prosperity creates prosperity for the people

Xxx

MAY 24 TUESDAY

Prakruti sampadaa hyanaayakamapi raajyam neeyate

If the people are prosperous, even a leaderless state can be governed

Xxx

MAY 25 WEDNESDAY

Prakruti kopah sarva kopebhyo gareeyaan

People s fury is the greatest of the fury

Xxx

MAY 26 THURSDAY

Avaneetasvaa milaa bhaadasvaa milaabah sreyaan

To be without a master is better than having an arrogant master

Xxx

MAY 27 FRIDAY

Sampaadhyaatmaana manvichchet sahaayavaan

After equipping oneself fully, one should seek an ally

Xxxx

MAY 28 SATURDAY

Naasahaayasya mantra nischayah

One without an adviser has no certainty of counsel

Xxxx

MAY 29 SUNDAY

Naikam chakram paribhramayati

One wheel does not move the vehicle

Xxx

MAY 30 MONDAY

Sahaayah sama sukhadukkahah

The true aide serves alike, in prosperity and adversity

Xxx

MAY 31 TUESDAY

Mani pratimaani namaatmanidweetiyam mantramut paadayet

A self respecting ruler should appoint as counsellor,one who is inferior to him and respect s him

XXXX SUBHAM XXXX

tags – maxims, quotations, Chanakya

We are all Tourists and God is our Travel Agent (Post No.10,897)

Compiled BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,897

Date uploaded in London – –   27 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Days are too busy,

Hours are too fast,

Seconds are too few,

But there is always time for

Me to remember nice friends

Like you!!!

Xxx

Every day is a miracle

Every moment is a grace

Every heart beat is a blessing

Every breath is from the Lord

May the Lord bless us always!!!

Xxxx

Expecting & trusting is never wrong.

The only thing is you should know from

whom to expect and whom to trust.

xxxx

We are all tourists and God is our travel agent,

Who already fixed all our routes, reservations

And destinations.

So trust HIM and enjoy the trip called LIFE!!!

By TATA

We are here to heal and not to hurt,

To love and not to hate,

To create and not to destroy.

Xxxx

Who killed Who?

Watsup killed SMS,

E mail killed FAX,

You tube killed DVD

Uber killed YELLOW CAB,

Google killed DICTIONARY,

Social media killed MSM,

Net flix killed cable CHANNELS,

Wikipedea killed ENCYCLOPEDIA,

RAHUL KILLED STANDUP COMEDIANS!!!

xxx

Nobody else can create a miracle for you,

but your trust is the source of all miracles!!!

Happiness is not measured by the money you have,

it is Measured by the wonderful people in your life.

—subham—

பக்தியால் உணவு பிரசாதம் ஆகிறது, பட்டினி விரதம் ஆகிறது, இசை ……….. (Post No.10,896)

Compiled BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,896

Date uploaded in London – –   27 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள்   – 41

Kattu Kutty

மனிதனிடம் பக்தி கலக்கும்போது

உணவு……………… பிரசாதமாகிறது.

பட்டினி………………விரதமாகிறது.

தண்ணீர்…………….தீர்த்தமாகிறது.

இசை…………………கீர்த்தனையாகிறது.

இதயம்……………….கோவிலாகிறது.

செயல்………………..சேவையாகிறது.

பயணம்……………….யாத்திரையாகிறது.

மனிதன்………………புனிதனாகிறான்.

வார்த்தைகளில் ஏமாந்து போகாதீர்கள்,

காரணம் சொற்கள், ஞானம் பெற்றவர்களினால்

உருவாக்கப்பட்டவை அல்ல………

Xxxxx

சப்பாத்திக்கும், Naan க்கும் நடந்த ஓட்டப் பந்தயத்தில்

சப்பாத்திதான் ஜெயிச்சது.

ஆனா naan க்குத்தான் பரிசு கொடுத்துட்டாங்க…….

யாரு ஜயிச்சாங்கன்னு கேட்டப்ப சப்பாத்தி ‘நான்னு

சொல்லிச்சு !!!

Xxxxxx

விளம்பர அதிகாரி – உங்க புருஷனை காணலைன்னு சொல்றீங்க

ஆனா உங்க போட்டோவ போட்டு காணலேன்னு விளம்பரம்

கொடுக்கச் சொல்றீங்க???

பெண் – நான் காணாம போய்ட்டேன்னு தெரிஞ்சா என் புருஷன்

தன்னால வீட்டுக்கு வந்துடுவார் சார்!!!

xxxx

பரமசிவனுக்கு ஆபரணமாக விளங்கும் பாம்பைக் கண்டால்

அடிச்சே கொன்னுடறோம்.

விநாயகர் வாகனமாக இருக்கும் எலியை விஷம் வைச்சே

கொன்னுடறோம்

முருகன் கொடியில் விளங்கும் சேவலை மொத்தத்தையும்

விடறதில்லை.

இப்டி கடவுளர்களின் வாகனத்தையெல்லாம் ‘துவம்சம்’பண்ணிட்டு,

கடவுள் கிட்ட போய் நான் ஒரு ஈ எறும்புக்குக்கூட தீங்கு

நினைச்சதில்லன்னு பொய் வேற………

–subham—

tags- ஞான மொழிகள்   – 41

அப்பர் கேள்விகளும் பதில்களும்: குரு பூஜைதின உரை(Post.10,895)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,895

Date uploaded in London – –     27 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

26-4-22 சித்திரை சதய நன்னாள். அதையொட்டி ஞானமயம் சிறப்பு நிகழ்ச்சியை 24-4-22 அன்று நிகழ்த்தியது. அதில் ஆற்றிய உரை இது.

அப்பர் குரு பூஜைதினம் – 24-4-2022

உரை – பகுதி 1

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சைவ சமயம் உலகெலாம் தழைக்க வழி வகை செய்யும் சந்நிதானங்களே, பெரியோர்களே, அன்பர்களே, சந்தானம் நாகராஜன் அனைவருக்கும் வணக்கம்.

சித்திரை மாதம் சதய நக்ஷத்திர நன்னாள், அப்பர் பெருமானின் குரு பூஜை தினம். அதையொட்டி நடைபெறும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சைவ சமயம் தழைக்கச் செய்த அதிசய புருஷர்களுள் பெரும் நாவலராக 81 வயது வரை வாழ்ந்து அனைவருக்கும் நல்வழி காட்டிய சொல்லரசர் திருநாவுக்கரசர் ஆவார்.

16000 பதிகங்களை நாவுக்கரசர் பாடியிருப்பதாக உமாபதி சிவாசாரியார் குறிப்பிடுகிறார். ஆனால் நமக்குக் கிடைத்த நாவுக்கரசர் பொக்கிஷத்தில் 312 பதிகங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் உள்ள 3066 பாடல்கள் நம்மிடம் உள்ளன.

ஒவ்வொரு பாடலும் பல இரகசியங்களைத் தரும் பொக்கிஷம். அது மட்டுமல்ல, பெரும் அறிவாளிகளாலும் விடை தர முடியாத கேள்விகளுக்கு அவர் எளிதில் தனது பாடல்கள் மூலம் விடை தருகிறார்.

எந்தக் கேள்விக்கும் இதோ பதில் என்று அவர் தரும் பதில்களைப் பார்க்கும் போது அவர் எவ்வளவு பெரிய பேரருளாளர் என்பதும் தெரிகிறது; உலகில் பிறந்து உலகியலில் சிக்கி பல பிரச்சினைகளை எதிர் கொண்டு, மீள வழி தெரியாமல் தவிக்கும் சாமானியரின் மீது கருணை கொண்டு ரகசியங்களைப் பிட்டுப் பிட்டுத் தரும் அவரது கருணை உள்ளம் நம்மை மெய் சிலிரிக்க வைக்கிறது.

கேள்விகளும் பதில்களும்

உதாரணத்திற்கு சில சிக்கலான கேள்விகளைக் கேட்டு அதற்கு அவர் தரும் பதில்களைப் பார்ப்போம்.

1) ஞானம் எது? கல்வி எது?

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்

2) நன்னெறி காட்டுவது எது? நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

3) நமது வினைகள் ஓடிப் போக என்ன செய்ய வேண்டும்?

ஆடிப்பாடி அண்ணாமலை கை தொழ ஓடிப் போம் நமதுள்ள வினைகளே!

4) துன்பப் படுகிறேன், வினை விடவில்லை, பழைய வினைகள் படுத்துகின்றன, நான் என்ன செய்வது?

அல்லல் என் செயும்? அருவினை என் செயும்? தொல்லை வல்வினை தொந்தம் தான் என் செயும்? தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு எல்லை இல்லதோர் அடிமைப் பூண்டேனுக்கே

5) காக்கைக்கு உடலை இரையாக்குவார் யார்?

பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார் நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார் ஆக்கைக்கே இரை தேடி அலமந்து காக்கைக்கே இரையாகிக் கழிவரே

(ஆக்கை – உடல்)

6) இறைவனது திருவடி நீழல் எப்படி இருக்கும்/

மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே!

7) சுவர்க்கம் செல்ல வழி என்ன?

துளக்கில் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும்

8) மெய்ந் நெறி ஞானம் என்றால் என்ன?

விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானம் ஆகும்

9) நண்பன் யார்? அவனுக்கு என்ன கொடுப்பது?

கண் பனிக்கும்! கை கூப்பும்! கண் மூன்றும் உடை நண்பனுக்கு எனை நான் கொடுப்பன்!

10) நெஞ்சுக்கு உபதேசம் என்ன?

நக்கரையனை நாள்தொறும் நன்னெஞ்சே!

வக்கரை உறைவானை வணங்கு நீ!!

11) ஈசன் யார்க்கு எளியன்? யார்க்கு அரியன்? வஞ்சகர்க்கு அரியர் போலும், மருவினோர்க்கு எளியர் போலும்!

12) நன்நெறிக் கண் சேராதவர்கள் யார்? “துரிசு அறத் தொண்டு பட்டார்க்கு எளியானை, யாவர்க்கும் அரியான் தன்னை, இன்கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் தெளியானைத்,

திருநாகேச்சரத்து உளானைச் சேராதார் நன்நெறிக் கண் சேராதாரே!

13) கிரகமும், நட்சத்திரமும் சரி இல்லை, என்ன செய்வது?

“நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார், கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம்! குறிக்கொண்மினே!

(குறித்துக் கொள்ளுங்கள்)

14) இடர் தீர வழி? பொன் ஒத்த நிறத்தானும், பொருகடல் தன் ஒத்த நிறத்தானும் அறிகிலாப் புன்னைத் தாது பொழில் புகலூரரை ‘என் அத்தா’ என என் இடர் தீருமே!

15) பிறந்தவர்கள் என்று யாரைச் சொல்லலாம்? வஞ்சர் சிந்தையுள் சேர்விலாதார், கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்தப் பெற்றார் பிறந்தவரே! மற்றுப் பிறந்தவர் பிறந்திலரே!!

16) துயர் கெட வழி? கந்த வார் பொழில் நாகைக்காரோணனைச் சிந்தை செய்யக் கெடும் துயர், திண்ணமே!

17) யாருடைய செல்வத்தை மதிக்கக் கூடாது? ஏன்? சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும், மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம், மாதவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்!

18) யாரைக் கடவுளாக வணங்கலாம்? ஏன்?

அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய், ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும், கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளரே!

19) செத்துச் செத்துப் பிறப்பவர் யார்?

திருநாமம் அஞ்செழுத்து செப்பார் ஆகில் தீவண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில் ஒருகாலும் திருக்கோவில் சூழார் ஆகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில் அரு நோய்கள் கெட வெண்ணீறு அணியார் ஆகில் அளி அற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில் பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே!

20) குறை இல்லாமல் இருப்பது எதனால்? சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம், ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே!

இப்படி அள்ள அள்ள குறையாத பதில்கள் அப்பரின் பதிகங்கள் முழுவதும் நிரம்பியுள்ளன.

நம் கேள்விகளுக்கு உரிய பதில்கள் மட்டும் அல்ல அவை! அனைத்தும் அற்புதமான இரகசியங்கள்!

அப்பரின் சிரிப்பு
அப்பர் ஒரே ஒரு வேலையைத் தான், தன் முழு நேர வேலையாகக் கொண்டிருந்தார். அது தான் – இறைவனை அறிவது.
வால் அறிவனை அறிந்து விட்டால் மற்ற அறிவெல்லாம் வந்து விடாதா என்ன?
காட்டிலே, மேட்டிலே, கழனியிலே, கோவிலிலே என அங்கிங்கெனாதபடி கடவுளைத் தேடியவர் அவரைக் கண்டே விட்டார்.
எவ்வளவு உழைப்பு; எத்தனை காலம்!
கடவுளின் இருப்பிடத்தை அறிந்தவுடன் அவருக்கு சிரிப்புத் தான் வந்தது. அதை அப்படியே தமிழில் பாடலாகப் பதிவு செய்து விட்டார்.
பாடல் இது தான்:-
கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித் தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன் உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று வெள்கினேன் வெள்கி நானும் விலா இறச் சிரித்திட்டேனே!
கள்ளத் தொண்டில் நெடுங்காலத்தை அங்கும் இங்குமாய் அதிலும் இதிலுமாய்ப் போக்கினார் அப்பர். கள்ளத் தன்மை போய் தெளிவுற்றவன் ஆனார். அந்த நல்ல நிலையில் அவர் நாடியதைக் கண்டே விட்டார்.
நினைப்பவர்களில் உள்ளே இருந்து அவர்கள் நினைப்பதை எல்லாம் (உடனுக்குடன்) நீ அறிவாய் என்பதை கண்டு கொண்டேன் என்கிறார் அப்பர். இதை நினைத்தவுடன் அவருக்குச் சிரிப்பு தான் வந்தது. ஹஹ்ஹஹ்ஹாவென்று விலாப் புடைக்கச் சிரித்தாராம்.
உள்ளே இருப்பவனை வெளியில் தேடியதற்கு ஒரு சிரிப்பு; உள்ளே இருந்து ஒவ்வொரு கணமும் எண்ணுவதை அறிந்தவனை கள்ள மனத்துடன் யாரும் இதை அறிய மாட்டார்கள் என்று அனைத்தையும் செய்ததற்கு ஒரு சிரிப்பு…..
பாடலைப் படித்து சற்று சிந்தனையுடன் ஆழ்ந்து யோசித்தால் நாம் எதெற்கெல்லாம் சிரிக்க வேண்டும் என்று யோசித்தால் அதற்கே முதல் சிரிப்பு சிரிப்போம்.
நம் சிரிப்பின் வகை நூறையும் தாண்டி விடும்.
கஸ்தூரி மான் ஒன்று கஸ்தூரி வாசனை தன்னிடமிருந்தே வருகிறது என்பதை அறியாது வாசனையைத் தேடி ஒரு அடி முன்னே வைக்கும். அதன் உடலில் இருக்கும் வாசனையும் ஒரு அடி முன்னேறும். இப்படி அடி அடியாய்ப் பாய்ச்சல் பாய்ச்சலாய் அது கஸ்தூரியைத் தேடுமாம் – வாழ்நாள் முழுதும்!
அப்படி கஸ்தூரி மான் போல நெடுங்காலம் உத்தமனைத் தேடிய அப்பர், இறுதியில் இறைவன் அருளால் உள்ளேயே கண்டு கொண்டார் உத்தமனை! அப்போது தான் ஹஹ்ஹஹ்ஹா என்ற விலா எலும்பு ஒடியும்படியான சிரிப்பு வந்தது!
உடம்பு என்னும் மனை அகத்து உள்ளமே தகளி ஆக
மடம்படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பு அமர் காளை தந்தை கழல் அடி காணல் ஆமே
இதை விடத் தெளிவாக இறையைக் காணும் வழியை உரைக்க முடியுமா?
“உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையான உள்கினேன் நானும் காண்பான் உருகினேன்”
என்று நமக்காகத் தம் அனுபவத்தை அப்பர் இப்படி பதிவு செய்கிறார்.


    உரையின் அடுத்த பகுதி தொடரும்

Tags-அப்பர் , திருநாவுக்கரசர்