S.165.SOOTH SAYER -JYOTISHA , IN TAMIL ‘SOSIYAR’சோசியர்
S.166.S‘TAGNANT’ –THENGIYA ,THANGU தங்கிய, தேங்கிய நீர்
S.168.SHERMAN –SARMAN (அமெ ரிக்கா) சர்மன்
INDUS-SARASVATI VALLEY RESEARCH
S.169.SENORA, SIGNORA,/ITALIAN/SPANISH –SRI MAN— SRNGA VAN, SEER THIRU; KOMBAN; INDUS VALLEY GOD இத்தாலிய மொழியில் ஸெங்ஞ்ஓ ரா = ஸ்ரீமான்; ஸ்ரீ என்ற எழுத்துக்கு சம்ஸ்க்ருதம், தமிழில் கொம்பு உண்டு; சிந்து சமவெளி தலைவர்கள் தலையிலும் கொம்பு உண்டு நீ என்ன பெரிய கொம்பனா ? என்றால் நீ என்ன தலைவனா ? என்று பொருள்; சிந்து சமவெளி உருவத்தின் தலையில் இருப்பது எருமைக்கு கொம்பு; சம்ஸ்க்ருதத்தில் மஹிஷா = எருமை, மன்னன், அரசன் ; மஹிஷி = ராணி
S.170.SHEATH –CHADHA சதை , சதை ,தோல்
S.171.Shout sabda, sattham in Tamil சத்தம், சப்தம்
S.172.Shoal neer suzal சுழல் , சுழி
S.173.Stylus saalakaa in Sanskrit சாலகா
S.174.Shelter saththiram, choultry சத்திரம்
S.175.Sem semi— sem baagam Kural 1092செம் பாகம் (குறள் 1092) செமி= அரை
S.185.Sorcha, Irish language. Suvarchas, brightness Xerxes, Persian king ஐரிஷ் மொழியில் சொர்ச்சா = பிரகாசம் ; சுவர்ச்சஸ் /சம்ஸ். பாரசீக மன்னன் பெயரும் சுவர்ச்சஸ்; ஆபவன் தந்தை பெயர் தைர்ய ஸ்
S.186.Serrated –siraay சிராய் , சிராய்ப்பு போல
S.187.Shavings– Silambi சிலாம்பு
S.188.Soot smoke sediment suuttinal vanthathu சூட்டினால் தோன்றிய புகை
எகிப்தைத் தாக்கிய கடல் மக்கள் (SEA PEOPLE) திரையர் ஆக இருக்கலாம். அவர்கள் சேர நாட்டில் இருந்தோ, தமிழர்கள் வாழ்ந்த துறை (ட்றாய் ) நகரில் இருந்தோ சென்றிருக்கலாம். இது என் ஊ கமே.
ஏனெனில் கிரேக்க இதிகாசத்தில் உள்ளவை அனைத்தும் சம்க்ருதமும் தமிழுமே . இன்னொரு எடுத்துக் காட்டு. –ட்ரோஜன் ஹார்ஸ் என்னும் மரக் குதிரை தாக்குதல் சம்பவத்தில் துரகன் (ட்ரோஜன்) என்பது குதிரையை.. நல்ல ஜாதிக் குதிரைகள் வளர்க்கப்பட்ட இடம் துருக்கி= துரக ஸ்தானம் ; அங்கு கி.மு 1300 கல்வெட்டு/ புஸ்தகம் ஸம்ஸ்க்ருதத்தில் உளது.
துரக என்பதை மாற்றி எழுதினால் குதிரை = துரக ஆகும்.
S189…SEA PEOPLE IN EGYPT – TIRAIYAR/TAMIL WORD; TROY HARBOUR= THURAI /TAMIL WORD;
(TROJAN HORSE EPISODE –TROJAN= HORSE IN SKT IS TURAGA; TURKEY IS THE COUNTRY OF HORSES; KIKKULI’S HORSE MANUAL WITH SKT. INSTRUCTIONS DISCOVERED THERE; DATED 1300 BCE) IF YOU MIRROR TURAGA YOU GET KUTHIRA- HORSE IN TAMIL.)
S189…SEA PEOPLE IN EGYPT – TIRAIYAR/TAMIL WORD; TROY HARBOUR= THURAI /TAMIL WORD;
(TROJAN HORSE EPISODE –TROJAN= HORSE IN SKT IS TURAGA; TURKEY IS THE COUNTRY OF HORSES; KIKKULI’S HORSE MANUAL WITH SKT. INSTRUCTIONS DISCOVERED THERE; DATED 1300 BCE) IF YOU MIRROR TURAGA YOU GET KUTHIRA- HORSE IN TAMIL.)
சமீகர் என்ற பெயரில் இரு ரிஷிகள் உள்ளனர். இரண்டாவது சமீகரைப் பற்றிய சரித்திரம் இது.
மந்தபாலர் என்று ஒரு முனிவர் இருந்தார். இவருக்கு ஜரிதை என்ற சாரங்க பட்சியிடத்து நான்கு புத்திரர்கள் பிறந்தனர். அவர்களில் நான்காவது குமாரரின் பெயர் துரோணர். அவர் பட்சி உருவத்தில் இருந்தாலும் கூட வேதங்களை நன்கு கற்று உணர்ந்தார்.
துரோணர் தார்க்ஷி என்ற பெண்ணை மணந்தார். இந்த தார்க்ஷி என்பவவள் சம்பாதி என்ற கழுகு ராஜன், மேனகை என்ற அப்ஸரஸின் குமாரத்தியும் பெண் பட்சி உருவத்தை அடைந்தவளுமான ஒரு பெண்ணை மணந்து அவர்களுக்குப் பிறந்தவள் ஆவாள். துரோணரை மணம் செய்து கொண்ட தார்க்ஷி கர்ப்பமுற்றாள். அவள் மூன்றரை மாத கர்ப்ப காலத்தில் மஹாபாரத யுத்தம் மூண்டது.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பாரத யுத்தம் நடந்த குருக்ஷேத்திர போர் பூமிக்கு தவிர்க்க முடியாத ஊழ்வினைப் பயனாக அவள் சென்றடைய வேண்டியதாயிற்று.
அங்கே பகதத்தனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த கொடிய போரை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அர்ஜுனனின் வில்லிலிருந்து நீல நிறமுள்ள ஒரு பாணம் கிளம்பி தார்க்ஷியின் வயிற்றைக் கீறிக் கொண்டு சென்றது. அவள் வயிற்றில் இருந்த நான்கு முட்டைகள் சிறு பஞ்சு மூட்டை போல் கீழே பூமியில் விழுந்தன.
அதே சமயம் சுப்ரதிகா என்ற யானையின் மீதிருந்த பெரிய மணியும் பாணத்தால் அடிபட்டுக் கீழே விழுந்தது.
தெய்வாதீனமாக இந்த மணியானது கீழே விழுந்து கிடந்த முட்டைகளின் மீது விழுந்து அவற்றை நன்கு மூடிக் கொண்டது.
18 நாட்கள் நடந்த பாரத யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது. அப்போது தவ சிரேஷ்டரான மஹரிஷி சமீகர் அம்முட்டைகள் இருந்த இடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது மணிக்குள்ளாக இருந்த முட்டைகள் இருந்த இடத்திலிருந்து சப்தம் உண்டாயிற்று. இந்த சத்தத்தைக் கேட்டு ஆச்சரியமடைந்த சமீகர் அந்த மணியைத் தூக்கினார். உள்ளே பார்த்தால் அங்கு நான்கு பறவைக் குஞ்சுகள்!
அவர் ஆச்சரியத்திற்குள்ளானார்.
நடந்ததோ பெரிய யுத்தம். அதில் இந்தப் பட்சிகள் முட்டைகளாக இருந்த போதும், அவற்றைக் காப்பாற்ற யானையின் மீதிருந்த இந்த மணி கிழே விழுந்து இவற்றைப் பாதுகாப்பாக மூடிக் கொண்டிருந்தது தெய்வ கிருபையால் தான் என எண்ணுகிறேன் என்று அவர் எண்ணினார்.
இவற்றால் உலகத்திற்கு க்ஷேமம் உண்டாகும் என்று நினைத்த மஹரிஷி சமீகர் அவற்றைக் கவனமாய் போஷித்து வளர்க்கலானார். தனது சீடர்களிடம் அவற்றைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு ஆணையிட்டார்.
ஒரு மாதம் கழிந்தது. அந்தப் பறவைகள் சகல ஞானமும் நிரம்பியவையாக ஆயின.
அவைகள் சமீகரைப் பார்த்து, “ ஓ! பிதாவே! நாங்கள் தாயை இழந்து கீழே விழுந்து கிடந்த போது எம்மை நீவீரே காப்பாற்றினீர். எம்மைக் கருணையுடன் வளர்த்தீர்! நாங்கள் இப்போது வளர்ந்து எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்ளும் பக்குவத்தை அடைந்து விட்டோம். இனி நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டன.
சமீகர் அவற்றை சுதந்திரமாகப் போக அனுமதி அளித்தார்.
அவை விந்திய பர்வதம் அடைந்து அங்கே வேதங்களை ஓதுவதிலும், யோகத்திலும், தவம் செய்வதிலும் காலத்தைக் கழித்து வரலாயின.
இதே சமயம் ஜைமினி என்ற மஹரிஷிக்கு மஹாபாரத சரித்திர விஷயமாக நிறைய சந்தேகங்கள் தோன்றி இருந்தன. தனக்குண்டான சந்தேகங்களைத் தீர்க்கும் பொருட்டு அவர் மார்க்கண்டேய மஹரிஷியை அணுகினார்.
மார்க்கண்டேயரோ ஜைமினியிடம், ஞானவான்களாக உள்ள அந்த நான்கு பட்சிகளிடம் சென்று சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்.
ஜைமினி உடனே அந்த பட்சிகளிடம் வந்து தனது சந்தேகங்களைச் சொல்ல அவை அவரது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தன.
அந்த பக்ஷிகள் கூறிய அனைத்தும் மார்க்கண்டேய புராணத்தில் விரிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது.
ஊடக சுதந்திரம் என்றால் எந்தப் பத்திரிகை வேண்டுமானாலும் எந்த படத் தயாரிப்பாளர் வேண்டுமானாலும் ஹிந்து மதத்தையும், ஹிந்துக் கோவில்களையும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரையும் இழிவு படுத்தலாம் என்று அர்த்தமில்லை.
இப்படிப்பட்டவர்களை யாரும் சுட்டிக் காட்டுவதுமில்லை, தட்டிக் கேட்பதும் இல்லை.
ஓரிருவர் தட்டிக் கேட்டாலோ பத்திரிகை சுதந்திரம் என்ற பேரில் கம்யூனிஸ்டுகள், ஜிஹாதிகள், மிஷனரிகள் வருவார்கள். ஹ்யூமன் ரைட்ஸ் பேர்வழிகளும், சில எழுத்தாளினிகளும் எழுத்தாளர்களும் ‘தாங்கள் இதுவரை மறைந்திருக்கும் மர்மத்தை விடுவித்து’ உடனே ஓடோடி வந்து தட்டிக் கேட்போரை மட்டம் தட்ட ஆரம்பிப்பார்கள்.
இது ஜனநாயகம் தந்த ஒரு மோசமான கேலிக் கூத்து.
மூக்குத்தி அம்மன் என்று ஒரு படம். ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை இழிவு படுத்தும் வசனங்கள், ஒரு சிறு பெண் கிறிஸ்தவ மத சிலுவைக் குறியைப் போடுவதும் அவளை கர்த்தர் தேர்ந்தெடுத்துள்ளார் என்று ஒரு நன் வீர வசனம் பேசுவதும் என்ன ஒரு அநியாயம். அதே போல ஒரு முஸ்லீம் பெண்ணோ அல்லது ஒரு கிறிஸ்தவ பெண்ணோ கோவிலின் முன் சென்று கும்பிடுவது போல ஒரு காட்சியையாவது நீங்க்ள் பார்த்திருக்கிறீர்களா? அந்தப் பெண்ணை ஹிந்து தெய்வம் தேர்ந்தெடுத்து விட்டது என்று வீர வசனம் பேச விடுவார்களா?
‘எ சிடி ஆஃப் ட்ரீம்ஸ்’ என்று ஒரு டி.வி. சீரியல்! மோசமான காட்சிகள் ஒரு புறம் இருக்கட்டும், ஒரு இஸ்லாமியரை வீரனாகவும் தியாகியாகவும் காண்பிப்பது ஒரு புறம் இருக்கட்டும், ஒரு ஹிந்து குடும்பத்தில் அதிகார ஆசையினால் அண்ணன் தங்கை போட்டி ஏற்படுவது ஒரு புறம் இருக்கட்டும், கோவிலின் பிரகாரத்தில் பின் புறத்தில் உள்ள நீர்த்த்தொட்டியில் அண்ணனை தங்கை சாக அடிக்கும் காட்சி என்ன நியாயம்?
தட்டிக் கேட்க ஆளில்லை எனில் தம்பி சண்ட பிரசண்டன் தான்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஜோதிகளும், பூமி நாயகர்களும் வெளி நாட்டில் கோடிக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு ஹிந்து மதத்தை இழிவு படுத்தி, வாங்கிய பணத்திற்கு சரிக் கட்டும் காட்சிகளை எடுப்பது நியாயமா? வசனங்களைப் பேசுவது சரிதானா?
ஹிந்து மதத்தில் ஆசாரியர்கள் முன் வருவதில்லை, ஓரிரண்டு அப்பாவிகள் இதை எடுத்துச் சொன்னால் அவர்களுக்கு வரும் விபத்துக்கள் ஏராளம்!
மோடிஜி அரசும் முன் வருவதில்லை, பாதுகாப்பிற்கு, என்பது இன்னும் ஒரு துக்ககரமான விஷயம்.
தமிழ் படங்களில் ஏராளமான படங்களில் சண்டைக் காட்சிகள் கோவிலுக்கு முன்னால் படம் பிடிக்கப்படுவதை இணைய தள் ஆர்வலர்கள் தங்கள் ப்ளாக்குகளில் சுட்டிக் காட்டி வருகின்றனர். வரவேற்கத்தக்க ஒரு அம்சம் இது.
அவர்கள் கேட்கும் கேள்வி ; “எந்த ஒரு இந்தியத் தயாரிப்பாளராவது இதே சண்டைக் காட்சிகளை ஒரு மசூதியின் முன்னாலோ அல்லது ஒரு சர்ச்சின் முன்னாலோ இதே போல எடுப்பாரா, எடுக்கத் தயாரா என்பது தான்!
ஹிந்துப் பெயர்களைக் கொண்டுள்ள தயாரிப்பாளர்கள் இப்படி எடுப்பது அவர்கள் பெரிய கோழைகள் என்பதைக் காட்டுகிறது என்கிறார் விலாஸ்னி என்னும் ஒரு ஆர்வலர்.
அன்பர்கள் ஒருங்கிணைந்து இப்படிப்பட்ட படங்கள், சீரியல்கள் வந்தவுடன் தகுந்த நடவடிக்கை எடுக்க ஒரு பெரும் நிறுவனம் வேண்டும்.
ஹிந்துக்களை இழிவுபடுத்தியும் ஹிந்துக் கோவில்களை இழிவு படுத்தியும் இப்படி காட்சி, வசனம் அமைப்போர், பத்திரிகை சுதந்திரம், மனித உரிமைகள், சமத்துவம் என்ற பெயரால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முன் வந்தால் அதை சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எதிர்த்து அற நெறிகளைக் காப்பாற்ற ஒரு நிறுவனம் வேண்டும் என்பது தான் இன்றைய உண்மை.
இதில் அரசியல்வாதிகளும் போலி முதலைக் கண்ணீர் விடுபவர்களும் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்!
சமீபத்தில் வந்த தமிழ் சீரியலில் ஒரு கற்பழிப்பு காட்சி மிக மோசமாக சித்தரிக்கப்பட்டதை நீதி மன்றமே கண்டித்து தயாரிப்பாளரை மன்னிப்புக் கேட்கச் சொன்னது ஒன்று தான் நமது அரசியல் அமைப்பின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நீதி மன்றத்தின் மீதும் நமக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை சரி தான் என்பதை உறுதிப்படுத்துகிறது!
இந்தக் கட்டுரையில் உள்ளது ஓரிரு காட்சிகள் தான்! இன்னும் சுட்டிக் காட்டுவது என்று ஆரம்பித்தால்……?!
அன்பர்கள் தாங்கள் பார்த்த படங்களிலும் சீரியல்களிலும் வரும் ஹிந்து விரோத காட்சிகளைச் சுட்டிக் காட்டுவார்களா?
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
HERE IS A SUMMARY OF OUR BRODCASTS ON 22ND AND 23RD NOVEMBER 2020 FROM GNANAMAYAM, LONDON.
SUNDAYS FOR TAMIL
MONDAYS FOR HINDUISM
All the voice recordings are always available on Facebook.com/gnanamayam
On Sunday Mr Balasubrahmanyan of London recited the prayer. Mrs Daya Narayanan sang the song composed by Rajaji- Kurai Ondrumillai’
Thiruppugaz songs were sung by Mrs Jayanthy Sundar and her disciples Miss Sadhna Sainath and Miss Sahana Sainath, Miss Hiranmayi Raghavan and Mrs Geetha Ramesh.
Mr Nagarajan from Bengaluru answered question of a listener and explained the significance of Number 108 in various cultures. (His article is available in tamilandvedas.com).
Then Mrs Annapurani Panchanthan sang a devotional song.
Dr N Kannan’s Alvar Amutham was broadcast with his audi recording.
Dr Renuka Subrahmanyan’s Kalyana Pattu was broadcast . followed by Mrs Sarasvathy Chandrasekaran’s song. Later Mrs Panchanathan read Indra in Tolkappiam’ – an article written by Producer London Swaminathan. School girl Miss Sahana from Puduchery sang a song.
‘VAALKA THAMIL MOZI’ BY BHARATIYAR WAS PLAYED IN THE BEGINNING AND AT THE END.
xxxx
On Monday Miss Akshaya Sivaramakrishnan recited prayer song from Colombo, Sri Lanka.
World Hindu News Round up in English was read by Mrs Sujatha Renganathan. Followed by World Hindu Tamil News Bulletin by Mrs Vaishnavi Anand.
Chennai Kattukkuty Srinivasan’s talk was on the Planet Jupiter. He touched the astrological, scientific and mythological aspects of Guru also called Brhaspati. (His article is available in tamilandvedas.com).
Mrs Brhannayaki Sathyanarayanan from Bengaluru spoke on the sacred shrine at Tiruchendur. (Her article is available in tamilandvedas.com).
Being the birth day of Sri Sathya Sai Baba, Mrs Annapurani Panchanathan sang Sai Bhajans. Programme was concluded with Pudduchery Miss Sahana’s Kriti by Gopalakrishna Bharatiyar.
Two days programme gave lot of information on Vasihnavism, Planet Guru/Jupiter, Significance of Number 108, Tiruchendur Shrine and Tolkappiam.
Please Join us Every Sunday and Monday.
If u want to become a broadcaster, please write to us; all our services are free.
XXX
GNANAMAYAM BROADCASTS
IT IS A ONE HOUR BROADCAST FROM LONDON.
TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME
DAYS- MONDAYS AND SUNDAYS
MONDAYS FOR HINDUISM
SUNDAYS FOR TAMIL LANGUAGE
WHO DOES THIS?
I (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவம்பர் 23-ம் தேதி — திங்கட் கிழமை
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
அனைவர்க்கும் ஞான மயக் குழுவினரின் திருக் கார்த்திகை தீ பத் திருநாள் வாழ்த்துக்கள்
நவம்பர் 29-ம் தேதி திருக் கார்த்திகை தீபத் திருநாள் தினம் கொண்டாடப்படுகிறது.
எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.
உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
XXXX
முதலில் நீங்கள் ஆங்கிலத்தில் கேட்ட செய்திகளை சுருக்கமாகச் செப்பிவிட்டு தமிழ் நாட்டுச் செய்திகளை விரிவாக வழங்குகிறேன்.
இன்று நவம்பர் 23-ம் தேதி ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிறந்த நாளை உலகெங்கிலும் உள்ள அவரது பக்தர்கள் கொண்டாடுகின்றனர். லண்டன் உள்பட உலகின் பெரிய நகரங்களில் அகண்ட நாம பஜனை நடைபெறுகிறது
Xxx
முதலில் கேரள செய்திகள்
கேரளத்தில் சபரி மலை சாஸ்தா கோவில் வருமானம் மிகவும் குறைந்து விட்டது. கடந்த சில நாட்களில் கிடைத்த வருவாய் சுமார் பத்து லட்சம் ரூபாய்கள்தான் .சென்ற ஆண்டு இதே காலத்தில் மூன் ற ரரைக் கோடி ரூபாய் வருமானம் கிட்டியது . இதற்குக் காரணம் குறைவான பக்கதர்களை அய்யப்பன் கோவிலுக்குள் அனுமதிப்பதாகும் வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக 50,000 பக்தர்களுக்குப் பதிலாக 1000 முதல் 2000 பக்தர்களே ஒவ்வொரு நாளும் அனுமதிக்கப்படுகின்றனர்.
கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு கேரள அரசிடம் நிதி உதவி கோருகிறது. அத்தோடு பக்தர் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதியும் கோரியுள்ளது.
XXX
கேரளத்திலிருந்து யானைக் குழப்பம் பற்றிய சுவையான செய்தியும் கிடைத்துள்ளது.
கேரளத்தில் கோவில் விழா காலத்தில் அலங்கார யானைகள் அணிவகுப்பு நடைபெறும் ஆனால் இப்போது ஒரே ஒரு யானையை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று கொச்சி நகரிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மாவட்ட யானைகள் பராமரிப்புக் கண்காணிப்புக்கு குழுவின் தலைவர் ஐசக் இவ்வாறு ஒரே யானை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்
ஆனால் மூன்று யானைகளை த்ரிபுனித்துறை கோவில் விழாவில் பயன்படுத்த கலெக்டர் அனுமதித்துள்ளார் யானைக் குழப்பம் யானை அளவுக்கு நீடிக்கிறது.
XXXX
வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் நடைபெறும் சாத் பூஜை கள் இனிதே நிறைவேறின. இந்துப் பெண்கள் விரத மிருந்து நதிகளில் நீராடி சூரிய தேவனுக்கு அர்க்யம் கொடுப்பது முக்கிய சடங்கு ஆகும். இந்த ஆண்டு பாட்னா நகரில் கங்கை நதிக்குச் செல்லாமல் பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரும். துணை முதலமைச்சர் ரேணு தேவியும் வீட்டில் இருந்தவாறே சூரிய பகவானை வழிபட்டனர்.
XXXX
குருப் பெயர்ச்சிக் கொண்டாட்ட செய்திகள் இதோ
சென்ற 20-ம் தேதி முதல் குரு ப் பெயர்ச்சி பூஜைகள் தமிழ் நாட்டின் கோவில்களில் நடந்து வருகின்றன. குரு என்றும் வியாழன், பிருஹஸ்பதி என்றும் அழைக்கப்படும் ஜூப்பிட்டர் என்னும் கி ரஹம் சூரியனை சுற்றி வர 12 ஆண்டுகள் ஆகும் .ஒவ்வொரு ஆண்டும் இது வேறு ஒரு ராசிக்குச் செல்லுகையில் அரசியல், அலுவலகம், குடும்பங்களில் பெரும் மாறுதல்கள் ஏற்படும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் மக்கள் இதை கவனமாக பார்ப்பார்கள்.
மேலும் உலகிலேயே மிகப் பெரிய விழாவான கும்பமேளாவும் குருவின் இயக்கத்தைப் பொறுத்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இதற்கு இடையில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மினி அதாவது குட்டி கும்பமேளாக்கள் நடைபெறும். அப்படிப்பட்ட குட்டி மேளா புஷ்கரம் என்று அழைக்கப்படும் ஆந்திர மாநிலத்தில் உள்ள கர் நூல் நகரில் தூங்க பத்ரா நதியில் புஷ்கரம் துவங்கி விட்டது.
இந்த நதி செல்லும் மாநிலங்களில் இவ்விழா நடைபெறுகிறது.ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வேத கோஷ முழக்கத்திடையே பாரம்பர்ய முறையில் விழவைத் தவக்கிவைத்து பூஜை செய்தார். நதி மாதாவுக்கு புடவையும் அர்ப்பணித்தார். அவரது குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்தினர் என்பதால் வரவில்லை. இந்துக்களின் பெரிய யாக யக்ஞங்களை மனைவியுடன் தான் செய்ய முடியும். ஆனால் நதிக்கரையில் நடந்த யாகத்தில் ஜெகன், மனைவி இல்லாமல் பங்கு கொண்டார்..
இதற்கிடையில் கர்நூல் மாவட்ட நிர்வாகம் 23 நதித் துறைகளை ஏற்படுத்தி “பிண்ட பிரத நம்” கிரியைகளுக்கு வகை செய்துள்ளது . பல லட்சம் மக்கள் பங்கு கொள்ளும் இந்த 12 நாள் விழாவில் மக்கள், துங்க பத்ரா நதிக்குள் இறங்கி புனித ஸ்னாநம் செய்யக்கூடாது என்று தடை விதித்த நிர்வாகம், நதி நீரை ஷவர் SHOWER வழியாக மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளது .
பக்தர்கள் அருவி நீரில் குளி ப்பது போல நின்று குளித்து விட்டு அருகிலுள்ள கூடாரங்களில் உடை மாற்றிக் கொள்ளவும் இலவச உணவு பெறவும் ஏற்பாடுகள் உள்ளன. ஆயினும் வைரஸ் நோய் தடுப்பு விதி முறைகளைக் கடைப்பிடித்த பின்னரே பங்கு கொள்ள இயலும்.
XXX
பஞ்ச பூதத் தல ங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் கார்த்திகைத் தீ ப த் திருநாள் துவங்கி விட்டது . சுமார் 20 லட்சம் பேரைக் கவர்ந்திழுக்கும் இவ்விழா இந்த ஆண்டு வைரஸ் நோய் ஆபத்து காரணமாக சில ஆயிரம் பேராகச் சுருங்கிவிட்டது. மலை மீது நவம்பர் 29– ம் தேதி பெரிய தீபம் ஏற்றப்படும். ஆனால் கார்த்திகை நாளன்று கோவிலுக்குள்ளும் மலை மீதும் பக்தர்கள் செல்ல முடியாது.
இது ஒருபுறமிருக்க வீ டு தோறும் , வீதி தோறும் மக்கள் விளக்கேற்றி வழிபட ஆயத்தமாகி வருகின்றனர் சங்கத் தமிழ் நூல்களும் போற்றும் கார்த்திகை நாளன்று தமிழ் நாடு முழுதும் தீப ஜோதி விளக்குகளில் பிரகாசிப்பது கண் கொள்ளா க் காட்சி ஆகும் . இதை ஒட்டி மூன்று நாட்களுக்கு விளக்கு ஏற்றுவது. சொக்கப்பனை கொளுத்துவது தமிழ ர்களின் வழக்கம்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் 15 ம் தேதி குரு பகவானுக்கு பால், தயிர், நெய், இளநீர், சந்தனம், விபூதி போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல் சிதம்பரம் நகரின் மேற்கு பகுதியில் பதஞ்சலி முனிவர் பூஜித்து வழிபட்டு வந்த சவுந்தரநாயகி உடனாகிய அனந்தீஸ்வரர்கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன.
XXXX
தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16- ம் தேதி மாலை தனது குடுப்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றார். அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு வராக சுவாமி கோயிலிலும், ஹயக்ரீவர் கோவிலும் சாமி தரிசனம் செய்தார்.
அத்துடன் 17- ம் தேதி அதிகாலையில் நடைபெற்ற வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்ம ஆராதனையில் கலந்து கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
XXXXX
பாகிஸ்தானிலிருந்து ஒரு இனிப்பான செய்தி வந்துள்ளது 1300 ஆண்டுப் பழமையான இந்து க் கோவிலை இத்தாலிய பாகிஸ்தானிய தொல் பொருட் துறை அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர். இது சாஹி வம்சத்தாரால் விஸ்ணு பகவானுக்கு அமைக்கப்பட்ட கோவில். முன் காலத்தில் மஹாபாரத காந்தாரியைப் பெற் றெ டுத்த காந்தாரம் மற்றும் வட மேற்கு இந்தியாவை இந்து மத சாஹி மன்னர்கள் 200 ஆண்டுகளுக்கு ஆண்டனர். இப்போது அந்தப் பகுதிகள் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் நாடுகளில் உள்ளன.
வடமேற்கு பாகிஸ்தானில் Swat ஸ்வாட் மாவட்டத்தில் Barikot Ghundai பாரிகோட் குண்டாய் என்னும் ஊரில் இந்த விஷ்ணு ஆலயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
XXXX
ஜைனத் துறவியின் 151-வது ஜெயந்தி
ஜைனத்துறவி ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜின், 151-வது ஜெயந்தியை முன்னிட்டு 16-ம் தேதிஅமைதிக்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஜைனத் துறவியான ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ்( 1870-1954), எளிய வாழ்க்கையை வாழ்ந்து, பகவான் மகாவீரரின் போதனைகளைப் பின்பற்றி கல்வியைப் பரப்புவதற்காகவும், சமூக தீமைகளை எதிர்க்கும் வகையிலும் பல்வேறு கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பக்தி பாடல்களை படைத்தவர்., விடுதலைப் போராட்டத்திற்கும் தீவிர ஆதரவளித்தார்.
அவருடைய ஊக்குவிப்பால் கல்லூரிகள், பள்ளிகள், கல்வி மையங்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகின்றன
XXXX
லண்டனில் மீட்ட கோவில் சிலைகள் தமிழக போலீசிடம் ஒப்படைப்பு
லண்டனில் இருந்து 42 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட தமிழக கோவில் சிலைகளை மத்திய கலாசார துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் 17-ம் தேதி தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலத்தில் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து 1978ம் ஆண்டில் ராமர் சீதை லட்சுமணன் சிலைகள் திருடு போயின. இந்த சிலைகள் பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு கடத்தப்பட்டது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது.
திருடுபோன ராமர் உள்ளிட்ட மூன்று சிலைகளும் செப்டம்பரில் மீட்கப்பட்டன. அதன்பின் பிரிட்டன் அரசு சிலைகளை மத்திய அரசிடம் முறைப்படி ஒப்படைத்தது.
பின் மத்திய அமைச்சர் பிகலாத் சிங் படேல் கூறுகையில் ”பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 40க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளிட்ட கலைப் பொக்கிஷங்களை மீட்டுள்ளது” என்றார்.
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Read by SUJATHA RENGANATHAN .
XXX
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
ONE pm London Time and 6-30 Pm Indian Time Every Monday.
Even if you miss our live broadcast on Mondays, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’ — Read by SUJATHA RENGANATHAN .
Today 23rd of November is the Birth day of Sri Sathya Sai Baba and his devotees are celebrating his Jayanthi with 24 hour Akhanda Nama Bhajan all over the world. Sai Centres in London also have arranged Akhand Nama Bhajans.
Kartik Purnima Deepa Festival falls on 29th of November and Gnanamayam team extends its warmest greetings to every one. Nook and comer of Tamil Nadu WILL BE lit with earthen lamps just before the sunset on that day.
Xxx
CHHATH PUJA NEWS
Thousands of devotees gathered to offer morning prayers to the rising sun on the last day of Chhath Puja on Saturday. Most people across the country stuck to the traditional practice of offering prayers at river banks on the concluding day of the four-day Puja.
Lucknow’s Gomati river front, the Ganga banks in Varanasi and Patna and other places in Mumbai, Delhi and Bhubaneswar were abuzz with devotees despite the Covid-19 restrictions, according to news agency ANI. However, many devotees decided to stay back home to offer ‘arghya’ to the rising sun from temporary water bodies, made specifically for the festival inside their campuses.
Bihar chief minister Nitish Kumar too celebrated the festival at his official residence. He offered ‘arghya’ to the setting sun, a tradition he has been following since he became the Chief Minister 15 years back, Deputy chief minister Renu Devi also performed Chhath at her home town Bettiah.
XXX
PUSHKARAM FESTIVAL IN RIVER TUNGABHADRA
Andhra Pradesh Chief Minister Y.S. Jagan Mohan Reddy performs rituals during the inauguration of the Tungabhadra Pushkaram festival, at Sankal Bagh Pushkar Ghat in Kurnool district, ON Friday
Tungabhadra Pushkarams got-off to a tumultuous start amid chanting of vedic mantras as Chief Minister Y.S. Jagan Mohan Reddy formally opened the festivities at Sankal Bagh pushkar ghat IN KURNOOL on Friday. On arrival, he offered prayers to River Tungabhadra and gave Ganga Aarathi to the river besides silk saris.
Later, in traditional attire, he participated in a special yagam performed in the newly constructed yagasala near the pushkar
However, the absence of his family members did not go well with the onlookers.
The 12-day river Tungabhadra pushkaram FESTIVAL BEGAN ON Friday with the entry of Jupiter into ‘Makara Raasi’ The festival, dedicated to the worship of rivers, will be held for 12 days, and is expected to draw devotees from Telangana, Maharashtra and Karnataka.
This year, pilgrims will not be allowed to take a dip in the TUNGABHADRA river, but a row of showers has been installed at all pushkar ghats IN KUNOOL.
XXXX
NEWS FROM KERALA
Sabarimala temple’s daily revenue drops 97% to Rs 10 lakh; temple in acute financial crisis
The Sabarimala Ayyappa temple in Kerala is facing an acute financial crunch owing to Covid-19 as the average daily revenue from pilgrims during the initial days of pilgrimage fell from around Rs 3.5 crore to Rs 10 lakh, forcing the Travancore Devaswo…
Board that manages the temple to desperately seek relaxation in the restriction on the number of pilgrims as well as government’s financial assistance.
At present only 1,000 pilgrims are allowed on weekdays, 2,000 on weekends and holidays and 5,000 on special occasions like Mandala pooja day and Makaravilakku day.
Normally there used to be 50,000 pilgrims daily. It had even gone up to one lakh on some occasions like the first day of pilgrimage.
XXXX
Proposed Jagannath temple in London to get Neem wood from Bhubaneswar
Neem wood from Bhubaneswar will be used for carving the idols of the Trinity to be installed in the proposed Jagannath temple in London. The temple would be constructed on four acre of land by the Jagannath Temple Trust, UK.
At an international webinar to discuss the vision, objectives and roadmap for the temple, the Trust stated that Prof Sanjay Satpathy of Ravenshaw University has expressed willingness to provide the wood for making of the deities Lord Jagannath, Lord Balabhadra, Devi Subhadra and Lord Sudarshan.
Trustees said construction of the temple has the approval of Puri Shankaracharya Swami Nischalananda Saraswati.
XXXX
NEWS FROM OXFORD UNIVERSITY
Indian-origin student leads Oxford University meat-free campus drive
An Indian-origin student is among a group from the University of Oxford Student Union that is leading a drive towards a meat-free campus as part of wider initiatives to cut the university’s greenhouse emissions.
Vihan Jain from the university’s Worcester College joined two fellow students to draft a motion mandating the Student Union to lobby for a ban on beef and lamb in university catering services, which was recently passed with 31 votes to 9 and 13 abstentions.
The University of Cambridge has banned beef and lamb and reported a 33 per cent reduction in carbon emissions per kilogram of food purchased and a 28 per cent reduction in land use per kilogramme of food purchased. London School of Economics (LSE), Goldsmiths and the University of London are among other UK institutions to ban the sale of beef or lamb in campus outlets in recent years.
XXXXX
HERE IS AN INTERESTING FROM PAKISTAN
1,300-year-old VISHNU Temple was discovered by Pakistani and Italian archaeologists in Northwest Pakistan.
A Hindu temple, estimated to have been constructed around 1,300 years ago, has been unearthed by Pakistani and Italian archaeological experts at a mountain in Swat district of northwest Pakistan.
According to the reports, the archaeologist excavated a Hindu temple at Barikot Ghundai in Northwest Pakistan. Fazle Khaliq of Khyber Pakhtunkhwa Department of Archaeology said that the temple discovered is of God Vishnu.
The temple is estimated to have been built the Hindus 1,300 years ago during the Hindu Shahi period, the archaeologist said.
The Hindu Shahis or Kabul Shahis, a Hindu dynasty which ruled the Kabul Valley (eastern Afghanistan), Gandhara (modern-day Pakistan), and present-day northwestern India from 850-1026 CE may have built the Hindu temple in the region.
XXXX
TAMIL NADU RULING PARTY CLASHES WTH TEMPLE PRIESTS IN TIRUVANNAMALAI:
The Karthigai Deepam festivities at the popular Arunachaleswarar temple in Tiruvannamalai has begun with the traditional flag hoisting event marking the first day of celebrations, amid the pandemic induced restrictions on Friday.
The 14-day festivities started off with the temple’s flag hoisting ceremony
The premier event of the Deepam festivities, lighting of Maha Deepam is scheduled to be performed on the evening of 29 November at the Annamalaiyar hills. It will be preceded by lighting of Bharani Deepam in the morning.
“Owing to the Covid pandemic situation, the district administration has barred devotees entering into the temple premises on the Maha Deepam day.
Karthigai Deepam festivities in Tiruvannamalai, one of the major events in Tamil Nadu attracting a gathering of more than 10 lakh every year, is this time around being made a low key affair along with pandemic restrictions.
Sources said that the flag hoisting event witnessed ruckus after a local AIADMK leader engaged in a wordy duel with the authorities of HR&CE and Sivachariyars for hoisting the flag as per the time schedule even before the Minister had arrived, despite the fact that he was late to the temple.
Many religious Mutts across India have set up and are running protective shelters for cows and a sum of Rs 900 crore has been set aside under this scheme,
RSS HAS EXPRESSED ITS VIEW ON INERFAITH MARRIAGES.
Interfaith marriages should be registered under the Special Marriages Act so that women have equal rights, including in succession, according to a member of the RSS media team.
“The Rashtriya Swayamsevak Sangh (RSS) is not opposed to interfaith marriages but is against the exploitation of women in the name of marriage. They are forced to convert and lose their rights,” said Ratan Sharda, member of the national media team of the RSS and the author of ‘RSS 360’ on the controversial issue of ‘love jihad’.
XXX
HOW MANY ELEPHANTS SHOULD BE PARADED IN TEMPLE FESTIVALS HAS BECOME A COTROVERSY IN KERALA.
: The District Monitoring Committee for Captive Elephants Management and Maintenance has given conditional permission to parade one elephant during temple rituals. The committee, in its online meeting chaired by ADM Sabu K Isaac, also decided to discourage elaborate festivals in view of the Covid situation in the state.
Meanwhile, the permission given by the collector to parade three elephants at Tripunithura Poornathrayeesa temple for Vrischikotsavam has not been withdrawn.
XXXXX
THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –
READ BY SUJATHA RENGANATHAN.
TAMIL HINDUS CELEBRATE KARTIK PURNIMA ON 29TH NOVEMBER THIS YEAR.
WISH YOU ALL A VERY HAPPY KARTHIGAI DEEPA FESTIVAL .
S.100.SPE LEOLOGY –STUDY OF CAVES PHLE BILAM பில இயல் / குகை இயல்
S.101.SERAPIS. –SURABHI IN EGYPT செராபிஸ் /எகிப்து= சுரபி
ALSO SARABAM EIGHT LEGGED சரபம் ; IN EGYPT APIS IS DIVINE BULL; IN SANSKRIT SURABHI IS DIVINE COW; LIKE VEDAS PRAISED INDRA A BULL, EGYPTIANS CALLED GODS DIVINE BULL; VIRILE LIKE A BULL
S.102.SP EAR –EETTI ஈட்டி
S.104.S TONE —TEL, TALI தளி, டெல் /மத்திய கிழக்கில் , ஸ்தல
S.105.S UNDER—- SEVERE- THUNDI துண்டி
S.106.SPURIOUS—- PUURIYARKAL, TIRUKKURAL பூ ரியர்கள் = போலிகள் ; திருக்குறள் காண்க
S.107.SERENDIPITY /SRILANKA —SEREN OR SIMHALA DWIPA OR SAARANA DWIPA சாரண தீவு , சிம்ஹள தீவு
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
22-11-2020 அன்று லண்டனிலிருந்து இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பான தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை.
FOR VOICE RECORDING OF THIS TALK, PLEASE GO TO Facebook.com./gnanamayam
எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்?
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.இன்று நம் முன் இருக்கும் கேள்வி 108 என்ற எண்ணுக்கு ஏன் முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது தான். பதில் இதோ:
பாரத நாட்டில் 108 என்ற எண்ணுக்கு தனிப் பெருமை இருக்கிறது. இறைத் துதிகள் எல்லாமே பொதுவாக அஷ்டோத்திரங்களாக அதாவது 108 துதிகளாக அமைந்திருக்கின்றன. உபநிடதங்களுள் முக்கியமானவையாக 108 உபநிடதங்களே குறிப்பிடப்படுகின்றன.
வைணவ திவ்ய தேசங்கள் – திருப்பதிகள் – 108 தான்! சக்தி பீடங்களாக இமயம் முதல் குமரி வரை 108 தலங்கள் உள்ளன. கிருஷ்ணனின் தூய அன்புக்குப் பாத்திரமான கோபியர் 108 பேர்களே!
நேபாளத்தில் முக்திநாத்தில் உள்ள புனித தீர்த்தங்களின் எண்ணிக்கையும் 108 தான்! காஷ்மீர் சைவத்தின் படி தத்துவங்கள் 108.
நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள நாட்டிய அமைப்புகள் 108. சிவ தாண்டவத்தின் சிவனின் தாண்டவ பேதங்கள், கரணங்கள் 108 தான்! நந்திகேஸ்வரர் அமைத்த ‘பரதார்ணவ’ என்ற தாள சாஸ்திரம் 112 தாளங்களைத் தருகிறது என்றாலும் இதை 108 தாள சாஸ்திரம் என்றே குறிப்பிடுகின்றனர். ‘வஸ்து ரத்ன கோஸத்தின்’ படி மங்கலப் பொருள்கள் 108 தான்!
புத்த மதத்திலும் 108 என்ற எண்ணுக்கு அதிக மதிப்பும் மகிமையும் தரப்படுகிறது. ஜப்பானில் உள்ள ஜென் ஆலயங்களில் புத்தாண்டின் வரவை 108 முறை மணியை ஒலித்து வரவேற்கின்றனர்.
புத்த ஆலயங்களை அடைய 108 படிக்கட்டுகள் உள்ளன. இவை மூன்று முப்பத்தாறு படிக்கட்டுகள் கொண்டவையாக அமைக்கப்படுகின்றன! புத்தரின் இடது பாதத்தில் 108 புனிதக் குறிகள் அல்லது லக்ஷணங்கள் இருப்பதாக புத்த நூல்கள் குறிப்பிடுகின்றன.
புத்தரின் உபதேசங்கள் அடங்கிய நூல்களின் தொகுப்பு திபெத்திய புத்த பிரிவினரால் 108 பாகங்களாகத் தொகுத்து KANJUR என அழைக்கப்படுகிறது.
சீக்கிய மதத்தில் 108 மணிகள் அடங்கிய மாலையே உபயோகப்படுத்தப்படுகிறது.
பௌத்தர்களும் ஹிந்துக்களும் 108 மணிகள் அல்லது ருத்ராக்ஷங்கள் கோர்க்கப்பட்ட மாலைகளையே ஜபத்திற்குப் பயன்படுத்துகின்றனர். டாவோ புத்தமதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த மாலையை – சு சு (Su-Chu) என்று குறிப்பிடுவதோடு அதை மூன்று முப்பத்தாறு மணிகளாகக் கோர்த்து உபயோகிக்கின்றனர்.
ஜைன மதத்தில் ஐந்து விதமான புனித குணநலன்கள் முறையே 12,8,36,25,27 என்று குறிப்பிடப்படுகிறது. இதைக் கூட்டினால் மொத்தம் 108 குணநலன்கள் ஆகிறது!
இப்படி 108இன் உபயோகத்தை உரைக்கப்போனால் பெரும் பேருரையாக\ ஆகி விடும். அப்படி இந்த எண்ணுக்கு என்ன மகிமை? ஏன் நூறாகவோ அல்லது வேறு ஒரு எண்ணாகவோ இவை அனைத்தும் இருக்கக் கூடாது?
நம் முன்னோர்கள் காரணத்தோடு தான் 108 என்ற இந்த அபூர்வ எண்ணை புனிதமான அனைத்துடனும் சம்பந்தப்படுத்தி இருக்கிறார்கள்!
சூரியனுடைய குறுக்களவு பூமியின் குறுக்களவு போல 108 மடங்கு அதிகம் உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளினூடே சஞ்சரிக்கிறது. பன்னிரெண்டை ஒன்பதால் பெருக்கினால் வருவது 108. ஆகவே இவற்றால் பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு 108 என்ற எண்ணால் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே பூரணத்துவத்தைக் குறிக்கும் எண்ணிக்கையாக இந்து மதம் 108ஐக் குறிப்பிடுகிறது.
ஒரு நாளைக்கு நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை 21600. பகலில் 10800 இரவில் 10800. இதுவும் 108இன் மடங்கு தான்!
ஒரு நாள் என்பது 60 கதிகளைக் கொண்டது. ஒரு கதி என்பது 60 பலங்களைக் கொண்டது. ஒரு பலம் என்பது 60 விபலங்களைக் கொண்டது. ஆகவே ஒரு நாள் 21600 பகுதிகளைக் கொண்டதாக ஆகிறது. பகல் 10800, இரவு 10800 மொத்தம் 21600 பகுதிகள். இந்த 108 எண்ணிக்கையானது காலம் மற்றும் வெளியை அதாவது Time and Space ஐ – இயற்கையோடு இயைந்த லயத்தின் அடிப்படையில் இயங்க வழி வகுக்கிறது.
ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி ப்ரேமயானந்தர் இன்னொரு அற்புதத் தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறார்.
108 என்பது மந்திரங்களை உச்சரிக்க சரியான தெய்வீக எண்ணிக்கை என்பதை வராஹ உபநிடதத்தை மேற்கொள் காட்டி அவர் விளக்குகிறார்.
ஒவ்வொருவரது உடலும் அவரவர் விரலின் பருமனால் , கிடைமட்டமாக வைத்துப் பார்க்கும் போது, சரியாக 96 மடங்கு இருக்கிறது.
பரம்பொருள் என்னும் பரமாத்மன் ஒருவனின் நாபியிலிருந்து 12 விரல் அளவு மேலே இருக்கிறான். ஆக இந்த 96 மற்றும் 12 எண்களின் கூட்டுத் தொகையான 108 ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவ்தைக் குறிக்கிறது!
அதாவது 96 விரல் அளவு உள்ள மனிதன் 12 பாகங்கள் உள்ள பரமாத்மாவுடன் சேர்வதை 108 முறைப்படுத்துகிறது!
ஆகவே ஆன்மீகப் பெரியோர்கள் இறைவனின் நாமத்தை 108 முறை சொல்லும் போது அது படிப்படியாக உயர்நிலை பெற்று பரமாத்மனுடன் ஒன்றுபடுகிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்தனர்!
இதை இன்னொரு முறையாலும் பார்க்க முடியும்! சூரிய மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. அதாவது 12 பகுதிகளாக வான மண்டலம் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரபஞ்சம் என்னும் பரமாத்மனுடன் ஜீவாத்மா ஒன்று படுவதை 108 குறிப்பிடுகிறது.
ஸ்ரீசத்யசாயிபாபா 108 என்ற எண்ணிக்கை காரணம் இல்லாமல் அமைக்கப்படவில்லை என்று கூறி விட்டு அதற்கான காரணத்தை விளக்குகிறார்.
மனிதன் ஒரு மணிக்கு 900 முறை சுவாசிக்கிறான். அதாவது பகலில் 10800 முறை சுவாசிக்கிறான். ஒவ்வொரு சுவாசத்தின் போதும் சோஹம் – நான் அவனே – என்று சொல்ல வேண்டும். ஆகவே 216 என்ற எண்ணும் அதில் பாதியான 108 என்ற எண்ணும் மிக முக்கியத்துவம் உடையதாக ஆகிறது. மேலும் அது பனிரெண்டின் ஒன்பது மடங்கு! பனிரெண்டு சூரியனைக் குறிக்கிறது! ஒன்பது பிரம்மத்தைக் குறிக்கிறது!
அத்தோடு மட்டுமல்ல, ஒன்பதை எதனுடன் பெருக்கினாலும் வரும் எண்ணின் கூட்டுத்தொகை ஒன்பதாகவே இருக்கிறது.
9×8 =72; 7+2=9 இதில் ஏழும் இரண்டும் சேர்ந்தால் வருவது 9.
9 x 7 = 63; 6+3 = 9 .இதில் ஆறையும் மூன்றையும் கூட்டினால் வருவது 9
இதே போல அனைத்தும் ஒன்பதாக ஆகிறது. கடவுளை எதனுடன் பெருக்கினாலும் அதாவது இணைத்தாலும் அது கடவுளாகவே ஆகிறது.
ஆனால் மாயையின் எண் 8. இதோடு எதைப் பெருக்கினாலும் அது குறைகிறது!
2 x 8 = 16 ; 1+6 = 7 . இதில் ஆறையும் ஒன்றையும் கூட்டினால் வருவது 7.எட்டிலிருந்து ஒன்று குறைந்து ஏழாகிறது!
3×8 = 24 2+4 = 6 இதில் இரண்டையும் நான்கையும் கூட்டினால் வருவது 6.
4×8 = 32 3+2=5
இது போல மதிப்பில் குறைந்து கொண்டே போவது தான் மாயையின் சின்னம்!
தேவர்கள் அமிர்தம் கடைய எடுக்க பாற்கடலைக் கடைந்த காலமும் ஏறக்குறைய 10800 நாட்கள் தாம்! சரியாகச் சொல்லப் போனால் 10748 நாட்கள், 12 மணி, 18 நிமிடங்கள்!
ஸ்ரீயந்திரத்தில் உள்ள மூன்று கோடுகள் வெட்டுவதால் ஏற்படும் புள்ளிகளின் எண்ணிக்கை 54, ஒவ்வொன்றும் ஆண், பெண் – அல்லது சிவம் மற்றும் சக்தியைக் குறிப்பிடும் போது இரண்டு 54 (2×54) 108 – ஆகிறது. எல்லையற்ற சக்தியை, அருளை அது தருகிறது! உடலில் உள்ள சக்கரங்கள் 108. உடலிலே உள்ள வர்மப் புள்ளிகள் 108. இவற்றால் இறைவன் உணரப்படுகிறான்!
27 நட்சத்திரங்கள் நான்கு திசைகளினால் பெருக்கப்பட்டால் வருவது 108 என்றும், ஆகாயத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் மற்ற நான்கு பூதங்களான நிலம், நீர், தீ, காற்று ஆகியவற்றுடன் தொடர்பு ஏற்படுத்த வருவது 108 என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்
.
இது பூரணத்துவத்தைக் குறிப்பிடுகிறது.
கணித இயலில் 108 ஒரு அபூர்வமான எண்!
ஒன்றின் ஒரு மடங்கும், இரண்டின் இரு மடங்கும் மூன்றின் மும்மடங்கும் சேர்ந்தால் வருவது 108 (அதாவது 1 பவர் 1 x 2 பவர் 2x 3 பவர் 3 = 1x4x27 =108.
இதில் ஒன்று என்பது ஒரு பரிமான உண்மையையும், இரண்டின் மடங்கு இரு பரிமாண உண்மைகளையும், மூன்றின் மடங்கு முப்பரிமாண உண்மைகளையும் காட்டுகிறது. அனைத்தும் இணையும் போது வருவதே எல்லாமாகிய மெய்ப்பொருள் ஆகும்! இப்படி 108இன் மகிமையை உபநிடதங்களும், வானவியல் உண்மைகளும், கணித இயலும் வியந்து போற்றுகின்றன!
கரையில் இருந்து ஆராய்ச்சி செய்தால் கடலின் ஆழம் தெரியுமா என்ன என்று கேட்டு ஸ்ரீசத்யசாயிபாபா ‘ஆழ்ந்து மூழ்கத் தயங்கினால் உங்களால் முத்துக்களைப் பெறவே முடியாது’ என்கிறார்.
ஆகவே 108இன் பெருமையை உணர்ந்தால் மட்டும் போதாது, 108 முறையிலான ஜபமாலை உபயோகம், 108 திவ்ய தேச தரிசனம், 108 சக்தி பீட யாத்திரை உள்ளிட்ட அனைத்தையும் அவரவருக்கு உகந்த முறையில் இயன்ற வரையில் கடைப்பிடித்து மெய்ப்பொருளை அவரவரே உணர்வது தான் ஏற்றம் பெற்று உய்வதற்கான இனிய வழி ஆகும்!
26 Nov 2011 — They used 72,000 nails to fix them. Sathya Sai Baba’s interpretation. Sri Sathya Sai Baba went one step ahead of others in explaining the …