குரு பகவான் (Post No.8961)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 8961

Date uploaded in London – – 23 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

for Voice Recording of this talk on Gnanamayam, please go to

Facebook.com/gnanamayam

குரு பகவான்

Kattukutty

நவ கிரகங்களில், பெரியவரும், எப்பொழுதும், நல்லதே செய்பவரும்,

பெரிய ஞானியும்,ஆன குருவை வணங்கி ஆரம்பிக்கிறேன்.

பிரும்மா தனது படைப்புத்தொழிலைச் செய்ய தன் உதவிக்கு

9 பிரஜாபதிகளை நியமித்தார்.நவ பிரஜாபதிகள் எனப்படும் இவர்கள்

பிரும்மாவின், “மானஸ புத்திரர்கள்” எனப் படுவார்கள்.இவர்களில் மிகச் சிறந்தவரும் தபஸ்வியுமானவர் “ஆங்கிரஸர்” என்ற முனிவர்!!!

இவருக்கும் வசுதா என்ற இவரது மனைவிக்கும் பிறந்தவர் தான்

குரு பகவான். 64 கலைகளையும், நான்கு வேதங்களையும் கற்று கரை

கண்ட அவர் காசி சென்று 10,000 தேவ வருடங்கள் தவம் புரிந்தார்.

இவருடைய தவத்தை மெச்சி சிவ பெருமானே நேரில் காட்சி

தந்து, ‘நீ நித்ய ஜீவனாகி, இந்திரனுக்கு, குருவாகி, தேவர்களுக்கு

உதவி செய்வாய்’ என்று அருளினார்!

பிரும்மாவிற்கும் பிடித்தவனாகி,இவர்ஆலோசனைப்படி தேவர்கள்

நடந்து சிறப்பாக வாழ்ந்தனர்

குரு என்றால் என்ன அர்த்தம்???

கு – என்றால் இருள் என்று அர்த்தம்.

ரு -நீக்குவது எனப்பொருள் . இவர்அறியாமை, வறுமை, போன்ற

இருளை நீக்கி கல்வி செல்வம் , ஒழுக்கம் என்ற மூன்றையும்

கொடுக்கின்றார்.ஆகையினால் குரு பார்க்க கோடி குற்றம் நீங்கும்

என்ற பழமொழியும் உண்டு!!!

இவரைப்பற்றிய விவரங்கள்

இவர், நீண்ட நெடிய உருவத்தினர்.பொன்னிறமானவர்.

மஞ்சள் பட்டுடுத்தி புஷ்பராக மாலையையும், முல்லைப் பூவையும்

அணிந்தவர்.மந்தகாச புன்னகையுடன் எப்போதும் இருப்பவர்.

ஒரு கரத்தில் தண்டத்தையும், இரண்டாவது கரத்தில் கமண்டலத்தையும்,மூன்றாவதுகரத்தில்அட்சமாலையையும்,

நான்காவது கரம் அபயஹஸ்தத்துடனும் இருப்பவர்.இவரை

வைணவர்கள்,ஹயக்ரீவராகவும, சைவர்கள் தட்சிணாமூர்த்தியாகவும்

வழிபடுவதுண்டு.

புத்திர காரகனாகவும், ஜீவன காரகனாகவும் உள்ள இவர் மானிடர்

பிறக்கும் ஜாதகத்தில் குரு லக்னம், 5 அல்லது, 9 ல் இருந்தால்

போதும், அவர்கள மேதைகளாகவும்,ஞானிகளாகவும், ஆகிறார்கள்.

மற்றவர்களால் வணங்கப் படுவார்கள். மேலும் குருதிசை இளமையில்

வந்தால், கல்வியில் முதல் நிலையும், நடுவயதில் வந்தால் சகல

சௌபாக்கியங்களையம்,இறுதில் வந்தால்,செழிப்பான சந்ததிகளையும்,அந்தப்பகுக்குத்தலைவனாகும் தகுதியையும்

தருவார்!!!

இவரது வேறு பெயர்கள்

குரு, அந்தணன், அமைச்சன்,அரசன், ஆசான்,ஆண்டளப்பான்,

சிகண்டீசன், சீவன், சுரகுரு,தாராதிபதி, தெய்வ மந்திரி,நற்கோள்,

பிருஹஸ்பதி, பீதகன், பொன்னன்,மறையோன் வேதன்.

திரைலோக்கி, அல்லது ஏம நல்லூர்,என்ற இடத்தில், குரு பகவான்,

விரதம் இருந்து திரைலோக்கி அகிலாண்டேஸ்வரி அம்மனையும்,

சுந்தரேஸவர்ரையும், மல்லைப்பூவால் வழிபட்டு, தயிர்சாதம்

நிவேதனம் செய்து வழிபட்டார்,சிவ பெருயானே, ரிஷப வாஹனத்தில்

தரிசனம் கொடுத்து “ இப்பூவுலகில் வாழ்பவர்கள் திருமணம் செய்ய நல்ல காரியங்கள நடக்கவும் நீ காரணமாக இருப்பாயாக!!! என்று வரம் கொடுத்தார்.மன்மதனுக்கு உயிர் கொடுத்து ரதியுடன் சேர்த்து வைத்த இடமும் இதுவே!!! அன்று முதல் இப் பூவுலகில் யாரும்

திருமண வேளை வந்துவிட்டதா என்று  கேட்பதில்லை.

குரு பார்வை வந்து விட்டதா என்றே கேட்கிறார்கள்.

விஞ்ஞான விவரங்கள்

சூரியனிடமிருந்து வியாழன் என்ற குரு இருக்கும் தூரம் –

77கோடியே 83 லட்சத்து, 30 ஆயிரம் மைல்கள்

பூமியிலிருந்து தூரம்- 68, கோடியே,83 லட்சம் மைல்கள்

பூமிக்கு ஒரு சந்திரன் போல்  வியாழனுக்கு மொத்தம் – 16 சந்திரன்கள்

தன்னைத்தானே சுற்றிக்கொள்ள -10 மணி நேரமே ஆகிறது.

சூரியனைச் சுற்றி வர – 11 ஆண்டுகளும், 86 நாட்களும்

வியாழன் சூரியனின் வெப்பத்தை 51% எடுத்துக் கொள்கிறது !!!

வியாழன் பூமியை விட 318 மடங்கு பெரியது !!!

வியாழன் என்ற குருவைப் பற்றிய மற்ற விவரங்கள்

மனைவி. தாரை

மகன்கள். பரத்வாஜன், எம கண்டன், கசன்.

நிறம் – பொன்னிறம்

வஸ்திரம் மஞ்சள் பட்டு

ஜாதி – அந்தணர்

லிங்கம் – ஆண்

குணம் – சத்துவம்

உத்தியோகம் – மந்திரி

அதி தேவதை – இந்திரன்

ப்ரத்யதி தேவதை – பிரும்மா

திசை – வட கிழக்கு

பூதம் – ஆகாயம்

மொழி – ஸம்ஸ்கிருதம்

உடல் ஆதிக்கம்- சதை

அவஸ்தை யௌவனம்

அட்சரம்- ஒ

தேசம் – சிந்து தேசம்

வாகனம் – யானை

இஷ்ட காலம் – அதி காலை

ஸ்வபாவம் – ஸௌம்யம்

பிணி – வாதம்

ஆதி பத்யம் –  புத்திர காரகன்

பிறந்த தேசம் – அவந்தி

பிறந்த நட்சத்திரம் – அவிட்டம்

கோத்திரம் – ஆங்கிரச கோத்திரம்

உச்சம். கடகம்

நீசம் – மகரம்

சொந்த வீடுகள். தனுசு, மீனம்

பாரவை –  லக்னம், 5 7. 9.

நண்பர்கள் – சூரியன், சந்திரன், செவ்வாய்

விரோதிகள் –  புதன், சுக்கிரன்

சமம் –  சனி

குரு திசை – 16 வருடம்

நட்சத்திரங்கள். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

தானியம் –  கொண்டக்கடலை என்ற மூக்குக் கடலை

நிவேதனம்-  தயிர் சாதம்

சமித்து – அரசு

மிருகம் – மான்

பறவை – கௌதாரி

புஷ்பம் – முல்லை

ரத்தினம் – புஷ்ப ராகம்

உலோகம் – தங்கம்

ஆசனம் – நீண்ட சதுரம்

இயற்கை –  சுபர்

தைலம் – பசு நெய்

ஸ்தலங்கள்  – திருச்செந்தூர், ஆலங்குடி, திட்டை

மதுரை அருகில் உள்ள குருவித்துறை

திருவலி தாயம் ( பாடி),

பரிகாரம் –  கொண்டக்கடலை சுண்டல் பசு நெய்,

தயிர் சாதம் ஆலங்குடி கோவிலில் 24 நெய் விளக்கேற்றி, 24 முறை பிரதட்சிணம்.

குரு காயத்ரி –  ஓம் குரு தேவாய வித்மஹே பரம குருப்யோ

தீமஹி தன்னோ குரு ப்ரசோதயாத்

குரு ஸ்லோகம். தேவானாம்ச்ச ரிஷினாம்ச்ச குரும் காஞ்சன

சன்னிபம் புத்தி பூதம் த்ரிலோகேசம்

தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!!!

ரிக் வேதத்தில் குரு பகவானைப் பற்றிய வருணனை

குரு அக்னியைப் போல் சிவந்த அழகிய உருவம் படைத்தவர்.

பரிசுத்தமானவர். அவர் 7 வாய்களையும், மெல்லிய நாக்கையும்,

100 இறக்கைகளையும் உடையவர். கையில் இரும்பு கோடரியும்

உடையவர். “விஸ்வ ரூபா” என்னும் பசுவின் மீது ஆரோகணித்து

வருபவர் –  என இப்படி ரிக் வேதம் வருணிக்கிறது.

மகா மகம் – குரு ஒரு முறை சூரியனை சுற்றிவர 12 வருடங்கள் ஆகும்.அப்படி வரும்போது சிம்மத்தில் குரு மக நட்சத்திரத்தில்

வரும் காலத்தை “மகா மக காலம்” என்று சொல்லுவார்கள். அப்பொழுது உலகத்தில் ஆன்மீக மறுமலர்ச்சி உண்டாகும் .

அப்போது கும்ப கோணத்தில் உள்ள மகாமக குளத்தில் சகல

நதிகளும் இறங்கும்.அப்போது அந்தக் காலத்தில் அக்குளத்தில்

குளித்தால் சகல பாபங்களும், தோஷங்களும் விலகும். அந்தக்

காலத்தில் சுப காரியங்கள் நடத்தக் கூடாது.

குருவை வணங்கினால், குரு ஜாதகத்தில் நல்ல நிலைமையில்

இருந்தால் கிடைக்கும் நற்பலன்கள் :-

மந்திரி அல்லது அதற்கு சம மான பதவி,களங்கமற்ற களையான

முகம்,ஞானத்தை உணரும் தன்மை,சன்யாசி ஆகும் பாக்கியம்,

யானை மேல் போகும் கஜ கேசரி யோகம், விவேகம், வித்தைகளில்

வல்லுனத்தன்மை, சிம்மக் குரல், அனைவரையும் பணிய வைக்கும்

ஆற்றல்.

இதைக் கேட்ட அனைவரும் குருவை வணங்கி, கல்வி, நல்ல பதவி , பொன் பொருட்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவனை

வேண்டிக்கொண்டு விடை பெறுகிறேன்.

நன்றி வணக்கம்…….

tags – குரு பகவான், பிருஹஸ்பதி, jupiter 

****

ஆலயம் அறிவோம்! திருச்செந்தூர் (Post No.8960)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 8960

Date uploaded in London – –23 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

23-11-2020 திங்கள்கிழமையன்று லண்டனிலிருந்து இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட ஆலயம் அறிவோம் உரை.

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா

திருச்செந்தூர் வேலனுக்கு ஹரஹரோஹரா

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறும் தலம் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக அமையும் திருச்செந்தூர் ஆகும்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்தத் தலம் சென்னையிலிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தூரத்திலும் திருநெல்வேலியிலிருந்து 55 கிலோமீட்டர் தூரத்திலும் மதுரையிலிருந்து 182 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

‘கயிலை மலை அனைய செந்திற் பதி வாழ்வே’ என அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிடுவதால், இது கயிலை மலைக்கு நிகர் என்பதை அறிகிறோம். திருச்செந்தூரில் அருணகிரிநாதர் பாடி அருளிய, தித்திக்கும் 83 திருப்புகழ்ப் பாடல்கள், இந்தத் தலம் பற்றிய அரிய செய்திகளைத் தருகின்றன.

சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படை, புற நானூறு, அகநானூறு,தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் இந்தத் தலம் குறிப்பிடப்படுவதால், இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அடியார்களால் வழிபடப்பட்டு வந்த தலம் என்பது தெரிகிறது.

ஆறுபடை வீடுகளில் இந்தத் திருத்தலம் ஒன்று மட்டுமே கடற்கரைத் தலமாக அமைகிறது. மற்ற தலங்கள் குன்றின் மேல் முருகன் குடியிருந்து அருளும் தலங்களாகும்.

இதைப் பற்றிய புராண வரலாறு பிரமிக்க வைக்கும் ஒன்று.

தேவர்களைக் கொடுமைப் படுத்தி வந்தான் சூரபத்மன் என்னும் கொடிய அசுரன். அவனை அழிக்கும்படி தேவர்கள் சிவபிரானிடம் முறையிட அவர் அருள் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்து ஆறு பொறிகளை உருவாக்கினார். அந்த ஆறு பொறிகளே முருகன் திருவடிவமாயிற்று, சிவபிரான் சூரபத்மனை அழிக்க உத்தரவிட, அதையேற்ற முருகப்பிரான் இத்தலத்திற்கு வந்தார். அப்போது இங்கு வியாழ பகவான் தவமிருந்தார்.

அவரிடமிருந்து சூரபத்மனைப் பற்றிய அனைத்தையும் அறிந்து கொண்ட முருகப்பிரான், தனது சேனாபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் சென்று அவனைப் பணியச் செய்ய தூதனுப்பினார். கொடிய அசுரனான அவன் கேட்கவில்லை. உடனடியாக, அவன் பல்வேறு அண்டங்களில் வைத்திருந்த படைகளையும், அவனையும் அழித்து தேவர்களின் குறையைத் தீர்த்தார் முருகன்.

வியாழ பகவான் அவரை இத்திருத்தலத்தில் எழுந்தருளுமாறு வேண்ட, முருகன் செந்தில் பதி உறை செந்தில் ஆண்டவனாக இங்கு எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இங்கு மூலவர் பாலசுப்பிரமணியன்.

ஆதி சங்கரர் சிறிது காலம் இங்கு தங்கி இருந்து, புஜங்க ஸ்தோத்திரம் பாடி அருளியுள்ளார். மஹரிஷிகள் சுகர், அகத்தியர் உள்ளிட்ட ஏராளமான ரிஷிகள் வழிபட்ட தலம் இது.

சூரபத்மனை வதம் செய்த சுப்ரமண்யர், தம்மைச் சூழ்ந்து நின்ற பரிவாரங்களுக்கு, தன் பன்னிரு கரங்களால், விபூதி பிரஸாதம் கொடுத்து அருளினார். பகவானின் பன்னிரு கரங்களின் ஸ்தானத்தைப் பன்னீர் இலை பெற்று, இன்று திருச்செந்தூர் இலை விபூதி என்று, பக்தர்களின் கையில் தெய்வ பிரசாதமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தலத்தில் கடல் ஸ்நானமும், நாழிக் கிணறு ஸ்நானமும் செய்வது மரபு.

மஹாபாரதம் தரும் அதிசயச் செய்தி முருகனைப் பற்றி ஒன்று உண்டு.

Cause and Effect எனப்படும் காரண காரியம் என்பதில் ஒரு செயலைச் செய்த பின்னரே, அதனால் ஏற்படும் விளைவு ஏற்படும். மற்ற தேவர்கள் போர்களுக்குச் செல்லும் போது ஜெய தேவதை அவர்களுக்குப் பின்னால் செல்லும். ஆனால் முருகன் போரிடச் சென்ற போது ஜெய தேவதை முருகனுக்கு முன்னால் சென்றது; வெற்றியை போரிடும் செயலுக்கு முன்பேயே, விளைவாக உறுதி செய்தது.

முருகன் இருக்கும் இடம் எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என்பதாலேயே, வெற்றி வேலனைக் கொண்டாடி, அனைவராலும் வெற்றி பெற முடிகிறது.

கிழக்குப் பக்கம் கடல் அமைந்துள்ள படியால் திருச்செந்தூரில் முருகன் கிழக்குப் பார்த்து இருக்க, ராஜ கோபுரம் மேற்குப் புறத்தில் உள்ளது.

சீரலைவாய் என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் இந்தத் தலத்திற்கு, ஜெயந்தி நகரம், செந்திலாபுரி, திருச்செந்தூர் என பல பெயர்கள் உண்டு.

விழிக்குத் துணை திரு மென் மலர்ப் பாதங்கள்

மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்

முன்பு செய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்

பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே

என அருணகிரிநாதர் சுருக்கமாக முருகனின் அருள் பெறும் வழியை உரைக்கிறார்.

     காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும் திருச்செந்தூர் செந்திலாண்டவன் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.   

தோகை மேல் உலவும் கந்தன் சுடர்க் கரத்திருக்கும்

வெற்றி வாகையே சுமக்கும் வேலை

வணங்குவதே எமக்கு வேலை!       

           நன்றி. வணக்கம்.

tags- ஆலயம் அறிவோம், திருச்செந்தூர்,

அறிவியல் வியக்கும் ஸ்ரீ சத்ய சாயிபாபா! (Post No.8959)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8959

Date uploaded in London – – 23 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஸ்ரீ சத்ய சாயிபாபா – அவதார தினம் 23-11-1926 சமாதி: 24-4-2011

அவதார தினத்தில் அவரைப் போற்றி வணங்குவோமாக!

அறிவியல் வியக்கும் ஸ்ரீ சத்ய சாயிபாபா!

ச.நாகராஜன்

1

ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அன்றாட அருள் லீலைகள் அறிவியலை வியக்க வைப்பவை. ஏராளமான விஞ்ஞானிகள் அவரை தரிசித்துள்ளனர். அவரது லீலைகளை அவர்கள் நேரில் பார்த்து அனுபவித்து உணர்ந்து பிரமித்துள்ளனர்.

பல விஞ்ஞானிகள் தங்கள் அனுபவங்களைப் புத்தகங்களாக வெளியிட்டுள்ளனர். ஆயிரக் கணக்கில் கட்டுரைகளும் உலகெங்குமுள்ள பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

அறிவியல் அறிஞர்கள் ஒரு புறம் இருக்க இதர துறைகளைச் சார்ந்த நிபுணர்களும் அவரை சமீபத்தில் நெருக்கமாகக் கண்டு அவரது லீலைகளைக் கண்டு அனுபவித்துள்ளனர். சாமானிய மக்களோ எனில், கேட்கவே வேண்டாம்.

சில லீலைகளை இங்கு படித்து மகிழலாம்!

2

ஒரு பக்தர். அவர் ஒரு முறை பாபாவை ‘உயிருள்ள ஒன்றை’ சிருஷ்டித்துக் காட்டுமாறு வேண்டினார்.

பாபா உடனே ஒரு குட்டிக் குரங்கை அவர் முன்னாலேயே சிருஷ்டித்தார்.

அது மட்டுமல்ல; அவர் பையில் வைத்திருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து அந்தக் குரங்குக்குத் தருமாறு கூறினார். அவரும் அப்படியே வாழைப்பழத்தைக் குரங்குக்குக் கொடுக்க அது மகிழ்ச்சியிடன் அதை உண்டது! பக்தர், அது தனக்கு வேண்டாம் என்றும் அதை பாபாவே திருப்பி அனுப்பி விடலாம் என்று கூறினார்.

பாபா குரங்கை அழைத்து அதைத் தன் கையில் வைத்துக் கொண்டார்.

பூ! குரங்கைக் காணோம்!

3

டர்பனில் வாழ்ந்து வந்த பக்தர் கார்டன் செட்டி! (Gordon Chetty – Durban).பஜனைக்கு வரும் பக்தர்களை அழைத்து வருவதும் அவர்களை பஜனை முடிந்த பின்னர் திருப்பிக் கொண்டு போய் விடுவதும் அவர் மனமுவந்து செய்து வந்த சேவைகளில் ஒன்று.

அவரது ஸ்டேஷன்வாகன் வாகனத்தில் பெட்ரோல் தானாகவே அவ்வப்பொழுது நிரம்பிக் கொள்ளும். அத்துடன் மட்டுமல்ல, அது பெட்ரோல் டாங்கிலிருந்து நிரம்பிக்  கீழே வழிய வேறு ஆரம்பிக்கும்.

அக்கம்பக்கத்தில் வாழும் அண்டை அயலார் ஓடி வந்து அதை தங்கள் கேன்களில் நிரப்பிக் கொள்வர்.

உயிர் பிழைத்து மீண்டு வந்த ராதாகிருஷ்ணன் என்ற பக்தரைப் பற்றி சாயி பக்தர்கள் அனைவரும் அறிவர். ஒரு முறை அவர் பகவான் பாபாவுடன் காரில் சென்று கொண்டிருந்த போது காரில் பெட்ரோல் தீர்ந்து போனது. அருகில் எங்கும் பெட்ரோல் பங்க் இல்லை. பாபா டிரைவரை அழைத்து அருகிலுள்ள குளத்திற்குச் சென்று கொஞ்சம் தண்ணீரை எடுத்து வரச் சொன்னார்.

தண்ணீர் வந்தது. பாபா அதைத் தன் கையால் தொட்டார். அதை டாங்கில் நிரப்பச் சொன்னார்.

“இப்போது போகலாம், காரை எடு” என்றார் பாபா!

ஓ! கார் கிளம்பியது, அது தான் பெட்ரோல் நிரப்பி ஆயிற்றே! ஓட வேண்டியது தானே!!

4

இரண்டு அமெரிக்கர்கள் புட்டபர்த்தி வந்தனர். நீண்ட நெடும் விமானப் பயணம். பங்களூரிலிருந்து காரில் பயணம் வேறு. தங்கள் அறைகளில் நுழைந்த அவர்கள் ரிலாக்ஸ் செய்து கொள்ள மது பாட்டில்களைத் திறந்தனர்.

சியர்ஸ்!

ஆனால் என்ன ஒரு கோளாறு! மது பாட்டிலிலிருந்து வந்த திரவம் தண்ணீர் சுவையுடன் இருந்தது. அடுத்த பாட்டிலை திறந்தனர். அதுவும் தண்ணீர் போலவே இருந்தது.

அதற்குள் தரிசனத்திற்கான நேரம் வரவே அவர்கள் உடனடியாக தரிசனத்திற்கான கியூவில் சென்று சேர்ந்தனர். அவர்கள் அதிர்ஷ்டம் அவர்கள் உட்கார முன் வரிசை கிடைத்தது.

பாபா வந்தார். முதலில் பெண்கள் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று தரிசனம் தந்தார்.

பின்னர் ஆண்கள் அமர்ந்திருந்த பக்கம் வந்தவர் நேராக அந்த இரு அமெரிக்கர்க்ள் உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சென்றார்.

கண்களைச் சிமிட்டியவாறே அவர்களைப் பார்த்து, “சியர்ஸ்” என்றார்! அங்கிருந்து நகர்ந்தார்.

இயேசு கிறிஸ்து தண்ணீரை ஒய்னாக ஆக்கினார்!

ஆனால் இந்த பாபாவோ ஒயினை தண்ணீராக மாற்றினார்!!

5

பாபா மனிதனையே “பேக்ஸில்” அனுப்பிய சம்பவம் அறிவியல் அறிஞர்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒன்று.

ஆஸ்திரேலியாவிலிருது வந்த பக்தர் குழாம் ஒன்றை இண்டர்வியூவிற்காக அழைத்தார் பாபா. அங்கு என்ன நடந்தது என்பதை அனில்குமார் மல்ஹோத்ரா தனது புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.

நடந்தது இது தான்!

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தவர்களுள் ஒரு இளைஞரும் இருந்தார். அவர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள தன் வீட்டிற்குப் போகத் துடித்தார்.

பாபா குழுவினரை அங்கிருந்த சுவரைப் பார்க்கச் சொன்னார்.

அதில் வீடியோ காட்சியில் வருவது போல ஆஸ்திரேலியா மேப் தோன்றியது. பிறகு அந்த இளைஞரின் நகரம் தோன்றியது; பின்னர் அவர் வாழும் தெரு, பின்னர் அவரது வீடு தோன்றியது.

அந்த இளைஞரைப் பார்த்து, “உள்ளே போ” என்றார் பாபா. அந்த இளைஞரும் உள்ளே சென்றார்.

ஆஸ்திரேலிய குழுவினர் இண்டர்நேஷனல் கால் சென்டருக்கு விரைந்தனர். தங்கள் நண்பர் வீட்டிற்கு போனில் தொடர்பு கொண்டனர்.

நண்பர் தான் பேசினார்.”பத்திரமாக வந்து சேர்ந்து விட்டேன்” என்றார் அவர்.

6

இயற்கையை மீறியவர் பாபா – இயற்கையைப் படைத்தவன் நானே என்பார் அவர்.

என்றாலும் சொல்லால் சொல்வது வேறு; செயலால் அனுபவமாக அதை உணர்ந்து அனுபவிப்பது வேறு, இல்லையா!

நூற்றுக் கணக்கில் இப்படி அழகுற பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள் உள்ளன.

இந்த கட்டுரையில் மேலே கொடுக்கப்பட்ட சம்பவங்கள், Dr. Hiramalini Seshadri எழுதிய GOD – IN OUR MIST என்ற புத்தகத்தில் Avatar- The Magnet என்ற அத்தியாயத்தில் தரப்பட்டுள்ள சம்பவங்கள்!

அவதார புருஷரான பகவான் பாபாவை இந்த பிறந்த நாளில் போற்றி வணங்குகிறோம்!

****

GOD – IN OUR MIST – மூன்றாம் பதிப்பு – திருத்தி வெளியிடப்பட்ட ஆண்டு 2003 நன்றி: திருமதி டாக்டர் ஹீராமாலினி சேஷாத்ரி.

tags– அறிவியல் , சத்ய சாயிபாபா

PLEASE JOIN US TODAY– MONDAY 23-11-2020

PLEASE JOIN US TODAY– MONDAY 23-11-2020

TODAY’S MENU ON GNANA MAYAM BROADCAST

WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH BY SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUND UP IN TAMIL BY VAISHNAVI ANAND

DR R NAGASWAMY ON U VE SAMINATHA AIYAR

CHENNAI KTTUKUTY SRINIVASAN ON GURU BHAGAVAN- PLANET JUPITER

MRS BRHANNAYAKI ON TIRUCHENDUR SHRINE

XX

EVERY SUNDAY FOR TAMIL

EVERY MONDAY FOR HINDUISM

XXX

SAME TIME 1 PM LONDON TIME;

6-30 PM INDIAN TIME

XXX

WHERE ?  AT FACEBOOK.COM/GNANAMAYAM

Facebook.com/gnanamayam

XXX

V R HERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE

IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THHE SAME DAY, U CAN WATCH US.

SAME PLACE, SAME TIME  EVERY SUNDAY, EVERY MONDAY

THANKS FOR UR GREAT SUPPORT; LAST WEEK 1000 HITS IN FEW HOURS!!!

–SUBHAM–

TAMIL WORDS IN ENGLISH – PART 30 (Post No.8958)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8958

Date uploaded in London – –22 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

S.41.SQUARE—SATHURA, சதுர

S.42.S-WEAT –VIYARVAI வியர்வை

S.43.SUI– SWA, SONTHA ஸ்வ , சொந்த

S.44.S- UPER ,–UUPAR, UYARA, UPPARIKAI, உபரி , ஊபர் /ஹிந்தி உயர , உப்பரிகை

S.45.S UBTERRANEAN —ATHARA, ATHALA, THARAIKKUK KIZ    அ தர, சப் டெர்ரெனிய ன்=தரைக்கு க் கிழே ஆதார, அதர அதல

S.46.SYBARITE –AADAMBARA ஆடம்பர, KUBERA PURI,குபேர புரி

SYBARIT – ANCIENT GREEK TOWN IN SOUTHERN ITALY WITH LUCURYAND PLEASURE

S.47.SHAWL- சால்வை

S.48.SORROW- சோர்வு, சோகம் 

S.49.SYN, SYNTHESIS –SERU INAI சேர் , இணை

S.50.SUCCUBUS,CONCUBINE. SAKKALTHI சக்களத்தி

S.51.SALACIOUS PLACE –SALLAABAM சல்லாப வேலைகள்

S.52.SAY, SAID– SEPPU செப்பு

S.53.SONE.— சப்த,, த்வனி, போன் , சங்கத்வனி  SABDADWWANI PHONEY, DWANI TONE

.SANGADWAN

S.54. S -PEECH –PECHUI பேச்சு

S.55.S—TRATA, –STREET /THERU தெரு

S.56.SACK –SAKKU சாக்கு

S.57.SUGARCANDY– KARKANTU கற்கண்டு

S.58.SANGUINARY –SE NG KURUTHIசெங் குருதி

S.59.SLVER– VELLI, MIRRORED  வெள்ளி (எஸ் – வெள் /ர்)

S.60.SUBURB– UPA PURA. உப புர

S.61.SHIRT SATTAI SAREERA AADAIசட்டை

S.62.SHORT, –SIRIYA சிறிய கால் சட்டை

S.63.SOHAM/ —UPANISHAD– SO AM I ஸோஹம் == ச அஹம் — அவன் நானே

S.64. S MELL –MANAKKUM மணக்கும் சரித்திரம்

S.65.STORY –SARITHRAM சரித்திரம்

S.66.SILK –SILU SILU PU- சிலு சிலுப்பு

S.67.SAINT –SADHU, SANTH, சாது, சந்த்

S.68.SILENCE –SIVANEE ENA IRU சிவனே என்று கிட

S.69.SURROUND INGS- SUTRP PURA– சுற்றுப்புற

S.70.STABILITY, STABLE-STHIRAMAANA, STHIRA=URUTHI ஸ்திர மான ==உறுதி

S.71.SURRENDER – SARANAAGATHI சரணாகதி

S.72. SACRED – SUKRUTHA = SOCRATES,சுக்ருத – சாக்ரடீஎஸ்

S.73.SWAN – ANNA அன்ன

S.74.S CHIELD / SHIELD/ SCYLDING/ SJOLD/NORDIC LANGUAGES – KETAYA கேடயம்

S.75.SOGHUM –  SOLAM சோளம்

S.76.S PONGE – PANJU பஞ்சு  போல

S.77.SUPPER- SAAPPAAD/Uசாப்பாடு

S.78.SICK – SEEKKU சீக்கு

S.79.SE-PARATE – PIRI பிரி

S.80.S-OAR – UYAR, UYARAP POஉயர போ

TO BE CONTINUED…..

tags-  Tamil words-30

அழகு என்பது என்ன? (Post No.8957)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8957

Date uploaded in London – – 22 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ச.நாகராஜன்

அழகு என்பது என்ன? அதை எப்படி சூக்ஷ்மமாக விவரிப்பது?

‘ரமணீயதாம்’ என்பது அழகைக் குறிக்கும் சொல்!

எது க்ஷணத்திற்கு க்ஷணம் புதியதைக் காட்டி சோபிக்கிறதோ அந்த உருவமே அழகின் உருவம்!

க்ஷணே க்ஷணே யத் நவதாம் உபைதி தத் ஏவ ரூபம் ரமணீயதாயா:

                                                    சிசுபால வதம் 4-17

That is beauty which every moment strikes a new pleasing form.

“A thing of beauty is a joy forever; its loveliness increases” said the poet; its loveliness changes producing new pleasant sensations every time  a sense organ dwells on it.                   

English description by Sri N.V.Nayudu

***

அழகியின் குண லக்ஷணங்கள் யாவை?

தாக்ஷிண்யம் விரூபாமபி ஸ்த்ரியம் பூஷயார்த,

சுரூபாமபி அதாக்ஷிண்யம் தூஷயந்தி |

பார்க்க அழகாய் இல்லையென்றாலும் கூட, நளினம், உபசரிக்கும் பண்பு, மென்மையான நடை, உடை, பாவனைகள் ஆகியவையே ஒரு பெண்ணை அழகுள்ளவளாக ஆக்குகிறது. இந்த குணங்கள் இல்லையெனில் அவள் உருவத்தில் அழகாக இருந்தாலும் கூட உண்மையில் அழகி இல்லை!

Grace, Courtesy, and gentle manners adorn a woman even if she does not have good looks; lack of these qualities fouls her even if she is beautiful.

English description by Sri N.V.Nayudu

***     

ஊர்வசியின் அழகே அழகு!

அஸ்யா: சர்கவிதௌ ப்ராஜபதி: அபூத, சந்தோ நு காந்திப்ரத:

ச்ருங்கார – ஏக – ரஸ: ஸ்வயம் து மதனோ, மாஸோ நு புஷ்ப -ஆகர: |

வேதாப்யாஸ – ஜட: கதம் நு விஷய – வ்யாவ்ருத்த – கௌதூயிலோ

வே நிர்மாதும் ப்ரபவேத் மனோஹரம் இதம் ரூபம் புராணோ முனி: ||

                  காளிதாஸன் இயற்றியுள்ள விக்ரமோர்வசீயம் 1-8

அவளை எது உருவாக்கி இருக்கக் கூடும்?

ப்ரம்மா, அனைத்தையும் படைப்பவரா? அனைத்திலும் கவர்ச்சியைத் தரும் சந்திரனா?

புலனின்பம் தூண்டும் சாரம் அனைத்தையும் தரும் காதலின் தேவன் தானோ?

மலர்களைப் புஷ்பிக்கும் வசந்த காலமோ?

வேதம் விதிக்கும் நடைமுறைகளைப் பின்பற்றி மனதை அடக்கி, புலன்களை உள்ளிழுத்து வைத்திருக்கும் ஒரு முனிவர் இப்படிப்பட்ட ஒரு அழகிய உருவத்தை எப்படி உருவாக்கி இருக்க முடியும்?

காளிதாஸனின் இந்த கவிதையில் உள்ள நயம் அபாரமானது. ஒவ்வொரு வரியிலும் நு என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது அவனால். தனது எண்ணத்தைச் சொல்வதற்கு முன்னால் அவன் சந்தேகப்படுவதைச் சுட்டிக் காட்டுவது அந்த ‘நு’!

மஹாகவி பாரதியார், குயில் பாட்டில் பெண்ணழகை வர்ணிக்கும் பாடல் இங்கு காளிதாஸனின் கவிதை நயத்துடன் ஒப்பு நோக்கத் தக்கது!

“ஓர் வார்த்தை

கற்றவர்க்குச் சொல்வேன், கவிதைக் கனி பிழிந்த

சாற்றினிலே பண், கூத்து எனும் இவற்றின் சாரமெலாம்

ஏற்றி அதனோட இன்னமுதைத் தான் கலந்து

காதல் வெயிலிலே காய வைத்து கட்டியினால்

மாதவளின் மேனி வகுத்தான் பிரமன் என்பேன்” (குயில் பாட்டு-360,361,362)

Who could have created her?

Brahma, the supreme creator? The moon who bestows charm on every object?

The god of love himself with the essence of sensuality?

Spring with all its flowers bloom?

How could an old ascetic, with mind dulled by the austerities of Vedic practices and senses withdrawn from all objects, produce such a beautiful form?

Note the use of ‘NU’ in every line indicating doubt, about the assumption he starts with.

Bharathi, the Tamil poet, speculate on a lady’s body:-

“The juice crushed out of a masterly poetic composition, infused with the essence of song, dance and drama, with divine nectar added and warmed in the gentle sunshine of love – with these elements did the creator fashion her form?”

English description by Sri N.V.Nayudu

நன்றி :English rendering by Sri N.V,Nayudu –  from the book ‘Subhasita Collection Anthology’, published in 1992.

*******

tag–அழகு

PLEASE JOIN US TODAY– SUNDAY 22-11-2020

TODAY’S MENU ON ‘THAMIL MUZAKKAM’ BROADCAST

THIRUPPUGAZ BY JAYANTHY SUNDAR GROUP , DR RENUKA SUBRAHMANYAN’S KALYAANA PAATTU, BHARATIYAR SONGS, DR KANNAN’S ALVAR AMUTHAM, NAGARAJAN’S Q AND A; TAMIL DEVOTIONAL GEETHAM BY SARASVATHY CHANDRASEKARAN, ANNAPURANI MAAMI AND BALASUBRAHMANYAN PLUS LONDON SWAMINATHAN’S SPEECH; CO PRODUCED BY MRS VAISHNAVI ANAND AND SRI KALYANASUNDARA SIVACHARYA

EVERY SUNDAY FOR TAMIL

EVERY MONDAY FOR HINDUISM

XXX

SAME TIME ONE PM LONDON TIME;

6-30 PM INDIAN TIME

XXX

WHERE ?  AT FACEBOOK.COM/GNANAMAYAM

Facebook.com/gnanamayam

XXX

V R HERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE

IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THHE SAME DAY, U CAN WATCH US.

SAME PLACE, SAME TIME  EVERY SUNDAY, EVERY MONDAY

THANKS FOR UR GREAT SUPPORT; LAST WEEK 1000 HITS IN FEW HOURS!!!

–SUBHAM–

STAR QUOTATIONS FROM THE VEDAS (Post No.8956)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8956

Date uploaded in London – –21 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Vedic Hindus were keen observers of the sky. They recorded all the 27+1 stars even before the world started writing in their languages. Some parts of old testament were written in 9th century BCE. Zend Avesta of Persians came around that time. Latin and Tamil literature came vey late, just 2000 years ago.

Hindus differentiated stars from the planets; stars twinkle and planets don’t. Stars maintain relative distance and remain static, but planets move. Mahabharata beautifully describe the stars as

Nakshatra means the one which does not move- says Mahabharata- na ksharati iti nakshatra-

Shanti parva 290-36.

Rig Veda says,

One of the sages went on observing  the sky day and night, says ,

The pure and alert king Varuna presents a heap in the bottomless sky above the world. The rays of light  placed inside dome come down though the source or base in above—Rig Veda  1-27-7

Atharva  Veda 13-12-17 and 20-47-14 state that

The stars run away with the night, just like the thieves, for the sun to see the world.

The suns are powerful than the moon and the earth is greater than the moon. The moon is kept in the lap of stars- RV 10-85-2 and  AV  14-1-2

Rig veda mentioned some stars out of 27 stars.

Agha-Magha and Arjuni ; Revati ; Punarvasu ; Chitra ;

Tishya .

The word

Nakshatra is used in the Rig Veda  at 1-5o-2; 10-68-11; 7-86-1

Taitriya Samhita of  Black  Yajur Veda 4-4-10  gives all the names of the stars. This means that they observed the path of moon and recorded everything even before other cultures started producing literature. Black  Yajur Veda  is dated before 1000 BCE.

Here is the list; the deity of the ‘nakshatra’ is given in the bracket-

Kritika –-Agni ,

Rohini – Prajapati ,

Mrgasirsa –Soma ,

Ardra – Rudra ,

Punarvasu- Aditi,

Tisya –  Brhaspati,

Aslesa – S arpa,

Magha- P itr

Purva Phalguni – Aryama,

Uttara Phalguni-  Bhaga,

Hasta – Savitr,

Chitra – Indra,

Svati – Vayu,

Vishaka – Indra , Agni

Anuradha – Mitra,

Jyeshta – Indra

Vichrti –  Pitr,

Purva Ashada-   Aapa,

Uttara ashada- V isve Devaah,

Srona –  Vishnu,

Svavista- Vasu,

Satabhisaja – Indra,

Purva prostapada –  Aja Ekapada ,

Uttara Prostapada –  Ahirbudhnya,

Revati-  Pusan,

Asvayujau-   Asvinau,

Apabharani-  Yama.

Knowing that moon, sun and earth are in one line they named new moon day as Amaa vasya;

Amaa means together and Vaasya means residing .

xxx

Here are some more details from our previous posts-  

FROM OUR OLD POSTS IN THIS BLOG……………………………..

  1. Ashwini –Alpha, Beta –Aries அஸ்வினி
    2) Bharani – No 28,29,41 Taurus பரணி
    3) Krittika – Pleiades கார்த்திகை
    4) Rohini – Aldebaran Hyades, Alpha, Theta, Gama, Delta and Epsilon Taurus ரோஹிணி
    5) Mrigashirsha – Lambda, Phi 1, Phi 2, Orion மிருகசீர்ஷம்
    6) Aardraa –Betelgeaux – Alpha Orion திரு ஆதிரை
    7) Punarvasu – Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively புனர் பூசம்
    8) Pushya – Gama, Delta and Theta of Cancer பூசம்
    9) Ashlesha – Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra ஆயில்யம்
    10) Maagha – Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis மகம்
    11) Poorva Phalkuni – Delta and Theta Leo பூரம்
    12) Utra Phalkuni – Beta and 93 Leo உத்தரம்
    13) Hasta – Delta, Gama, Eta, Virgo ஹஸ்தம்
    14) Chitraa – Spica, Alpha Virgo சித்திரை
    15) Swaati – Arcturus – Alpha Bootes ஸ்வாதி
    16) Vishaakha – Alpha, Beta etc Libra விசாகம்
    17) Anuraadha – Beta, Delta, Pi –Scorpia அனுஷம்
    18) Jyestha – Antares Alpha, Sigma Tau Scorpio கேட்டை
    19) Mula – Scorpio, tail stars மூலம்
    20) Poorvaashadaa – Delta and Epsilon Sagittarius பூராடம்
    21) Uttaraashaada – Zeta and Omicron Sagittarius உத்திராடம்
    22) Shraavanaa – Altair – Alpha Aquila திரு ஓணம்
    23) Dhanishtha – Delphinus அவிட்டம்
    24) Shatabhisak – Lambda Aquarius சதயம்
    25) Poorva Bhaadrapada – Alpha and Beta Pegasus பூரட்டாதி
    26) Uttara Bhaadrapada – Gama Pagasus and Alpha Andromeda உத்திரட்டாதி
    27) Revathi – Zeta Piscum ரேவதி

Xxxxxxxxxxxx

Like we have Graha purusa and Vastu Purusa, Varahamihira gives us some information about Nakshatra Purusa:

The FEET of the stellar deity are represented by the star Mula

The LEGS by Rohini

The KNEES by Asvini

The THIGHS by two (Purva/Uttara) Asadas

The PRIVITIES by two Phalgunis (Purva/ Uttara)

The HIPS by Krittikas

The SIDES by Purva and Utthara) Bhadrapadas

The STOMACH by Revati

The BREAST by Anuradha

The BACK by Dhanista

The ARMS by Visakha

The HANDS by Hastha

The FINGERS by Punarvasu

The NAILS by Aslesa

The NECK by Jyeshata

The EARS by Sravana

The MOUTH by Pusya

The TEETH by Svati

LAUGHTER by Sathabishak

The NOSE by Magha

The EYES by Mrgasiras

The FOREHEAD by Chitra

The HEAD by Bharani and

The HAIR by Arudra

Hindus always describe Gods from Foot to Head and human beings from Head to Foot. It is seen in Sangam Tamil and more ancient Sanskrit literature.

12 signs of zodiac (12 Rasis) represent Kalapurusa (Time in the form of a Person). Likewise the 27 Nakshatras are distributed among the limbs of the Nakshatra purusa.

TAGS– 27 STARS, NAKSHATRA, QUOTATIONS, VEDAS

–SUBHAM–

TRI SANKU NAKSHATRA/ SOUTHERN CROSS IN THE SOUTH SKY

TAMIL WORDS IN ENGLISH – PART 29 (Post No. 8955 )

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8955

Date uploaded in London – –21 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part –29

S words

GENERAL RULES

IN TAMIL NO S OR SH OR KSH; SO FIRST ‘S’ IS LOST. IF YOU BEGIN FROM THE SECOND LETTER YOU WILL SEE TAMIL SPELLING

TOLKAPPIAM BANNED SA AS INITIAL LETTER.

EVEN SANGAM IN TAMIL SANGAM IS A SANSKRIT WORD!

S IS A VERY LONG LIST.

S.1.SNARE – NAAR IN TAM. நார்

S.2. SHARK-  SURAVU IN SANGAM TAMIL; SURAA IN MODERN TAM.; JAASAMGRAHA IN SKT சுறவு, சுறா மீன்

S.3.SWORD – VAAL; S IS LOST ; WORD BECOMES VAAL; D=L, வாள்

S.4.SIGN –  SAI KAI; MIRRORED IT WOULD BE KAI+ASAI= PURE TAMIL WORDS சை கை = கை +அசை

S.5.SAMANTHA/CHRISTIAN NAME- SAAMANTHI FLOWER, SAAMARTHYA = CLEVER IN SKT.; வலம் இடமாகத் திருப்பிப் படிக்கவும் சாமந்தி (கரிகால் சோழன் மகள் ஆதி மந்தி; அந்தி மந்தாரை ); சாமர்த்திய /புத்திசாலி

S.6.SHOULDER – THOL ; SH=T தோள்

S BECOMING T IN ENGLISH IS FOUND 1000s OF ENGLISH WORDS

SION – TION;  ENGLISH WORDS WITH TION SUFFUX ARE PRONOUNCED SION; EXAMPLES – EDUCATION, CONDITION, FRUTION, ACTION

S.7.SKEPTIC  — SOTHI/PROBE  சோதி=ஆராய்வு

S.8.SCIRE, SCIENCE –  ARI ; ARIVIYAL அறி , அறிவியல்

S.9.SKELERO – ULARNTHA/DRY; KATINA=HARD (SKT) உலர்ந்த, கடின

S.10. SKELETON – SK/ ELETON= ELUMPUK KUDU எலு ம்புக் கூடு

S.11.SCRUPULOUS – MIDDLE ENGLISH PEBBLE- KUURAN KAL, KUUZAAN KAL; MODERN MEANING ‘WITH DOUBTS’கூழாங் கல் ; கூ ரான் கல்

S.12. SCRUTA- KUULAM/KUPPAI= GARBAGE/RUBBISH கூளம் , குப்பை

S.13. SECT, SECTION – VETTU/CUT; SEKKU, SEKKU = CUT INTO PIECES (SEE KANTHA SASHTI KAVASAM)வெட்டு, செக்குச் செக்குச் செதிலாக – கந்த சஷ்டிக் கவசம்

S.14.SELENA/CHRITIAN NAME- MOON; NILAVU IN TAM. LUNAR IN LATIN=MOON; LUNA IN SKT= CUT, LOPPED, BITTEN OFF, NIBBLED நிலவு

S.15. SENTIRE /LATIN- FEEL, TASTE, SMELL, HEAR= SINTHI, SINTHANAI/THINK, THOUGHT  IN SKT/TAM; UNAR IN TAMIL MEANS FEEL, UNDERSTAND ETCசிந்தி, உணர், உணர்ச்சி, அறிக

ALSO SENSITIVE, SENSES, SENSE.

S.16.SEREPERE/LATIN/SERPENT- SAARAI, SARA SARA; SARPA/SNAKE IN SKT. சர சர, சாரைப் பாம்பு, ஸர்ப்ப

S.17.SITU, SITUS /LATIN – S- ITAM இடம்

S.18.SOCIUS, SOCIAL – SAKI, SAKAA IN SKT; SAMUUKA IN TAM./SKT சகி , சக , சங்க

S.19. SOVERE/ LATIN – TALAR, THAAZA IN TAM; S=T, SHALWAR KAMEEZ தளர், தாள , தாழ

S.20.SOPHIA /CHRISTIAN NAME – SAU IN SKT . AUSPISCIOUS; FORTUNE, BEAUTY, GOODNESS சவும்யா , செள = அதிர்ஷ்டம் , மங்களம்

S.21.SPECUL, SPECULATE –  UUKI/GUESS ஊகம் , ஊகி

S.22.SPREAD, SPRAWL, SPARAGERE/LATIN- PARAPPU, PARAVUபரப்பு, பரவு

S.23.SPLENDOUR, SPLENDERE/LATIN= PALA PALAPPUபள பளப்பு

S.24.SPOND, SPONS/LATIN- PLEDGE IN ENG; PANAYAM IN TAM.பணயம்

S.25. SPEIREIN – PAYIR SEY/CULTIVATEபயிர் செய்

S.26.STATUS, STOP – STHAPO IN SKT. ஸ்தபோ , ஸ்தம்பித்துப் போ

S.27.STELLA / STAR – TAARAA IN SKT; TAARAKAI தாரா , தாரகை

S.28.STEREO, SOLID-  THITA= THNMAI திண்மை

S.29.STOMA- MOUTH= VAAY வாய்

S.30.STOMACH -VAYIRU வயிறு

M= V

MRUGA=Vi RUGA/MANIKKA VASAGAR; MAARI=VAARI, MAANAM= VAANAM, MUZI=VIZI; MELAA=VIZAA

S.31.STHENS, STRENGTH, ASTHENOS, STRONG, STENTH= THINMAI திண்மை

S.32.STING – TUUNDU/GOADதூண்டு

S.33. STELLEIN, STOL/ LATIN – STHALAM IN SKT. THALI IN TAMIL, TEL. IN BABYLONIA.SUMERIAஸ்தல =தளி = டெல்

S.34.STREPTOS/LATIN- SCREW= THIRUGU IN TAM. THIRI/LAMP STRING  திருகு , திரி

S.35.STRING , STRAND – THIRI- NUL = LAMP THREAD WHICH IS TWISTED திரி நூல்

S.37.STRUCT, CONSTRUCT, STRUCTURE- KATTU கட்டு

S.38.STILUS, STYLUS – ELU—TTAANI எழு -த்தா ணி

S.39.STUMP, STEM , STYLOS/ STUMBLE – STAMBA/POLE/PILLAR ஸ்தம்ப / ஸ் கம்ப

STAMBA IN SKT= S–THUUN  IN TAM. ஸ்தம்ப == ஸ்/ தூண்

S.40. SUB –  UPA – NEAR, NEXT, ASSISTANT, DEPUTY IN SKT உப

EG. UPA NISHAD, UPA RASHTRAPATHI, UPA NAYANAM

UPA= UTHAVI, THUNAI IN TAM. ALSO ILA= YOUNG உப = உதவி

TO BE CONTINUED………………………………….

TAGS –  TAMIL WORDS -29

கோசர்கள் ஆண்ட கொங்கு மண்டலம்!(Post.8954)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8954

Date uploaded in London – – 21 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

கொங்குமண்டல சதகம்

கோசர்கள் ஆண்ட கொங்கு மண்டலம்!

ச.நாகராஜன்

தமிழை ஆதரித்தவர்களும், நல்ல மனமுடையவர்களுமான கோசர்கள் ஆண்டது கொங்கு மண்டலம் என கொங்கு மண்டல சதகம் நாற்பதாம் பாடல் பெருமையுறக் கூறுகிறது.

கோசர்கள் என்பவர்கள் படைப் பயிற்சியில் சிறந்த ஒரு வகுப்பினர். இவர்களை “இளம்பல் கோசர் விளங்கு படைகன்மாரிகலின ரெறிந்த வகவிலை முருக்கின், பெருமலைக் கம்பம் போலப் பொருநற் குலையா நின்வலன்” என புறநானூறு கூறுகிறது.

மனத்தொடு பொருந்திய மாறுபடாத சொல்லை உடையவர்கள் என்பது ‘பொதியிற்றோன்றிய நல்லூர்க் கோசர் நன்மொழி போல வாயாகின்றது’ என குறுந்தொகை கூறுகிறது.

இந்தக் கோசர்கள் ஒரு காலத்தில் கொங்கு நாட்டை ஆண்டிருக்கின்றனர். இதனை சிலப்பதிகாரம் ‘உரை பெறு கட்டுரையில்’ காண முடிகிறது.

‘அது கேட்டுக் கொங்கிளங்கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழிலென்றும் மாறாதாயிற்று’ என்பதற்கான உரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப் படுகிறது:

“அங்ஙனம் செழியன் நன்மை செய்து அவை நீங்குதலின், அதனைக் கேட்டு கொங்கு மண்டலத்து இளங்கோவாகிய கோசரும், நங்கைக்கு அங்ஙனம் சாந்தியும், விழவும் செய்தலால் அவை நீங்குதலோடே, மழைபெய்தற்றொழில் பெய்யும் நாளென்றும் வழுவாதாயிற்று”

இப்படிப்பட பெருமை வாய்ந்த கோசரைக் கொண்ட கொங்குமண்டலத்தை நாற்பதாம் பாடலில் கொங்கு மண்டல சதகம் இப்படிக் குறிப்பிடுகிறது:

பனிமிகு நீள்கடல் சூழ்மே தினியிற் பலருமெச்ச

இனிமை தருந்தமிழ் மாது களிப்புற் றெலாவணியுங்

கனிவுறப் பூண்டு வளர்ந் தோங்கச் செய்யுங் கருத்தொடுநன்

மனமிகு கோசரும் வாழ்ந்தாண் டதுங் கொங்கு மண்டலமே

இப்பாடலிலிருந்து பனி மிகு நீள் கடல் சூழ்ந்த பூமியைப் பலரும் போற்ற, இனிமை தரும் தமிழ் அன்னை தன்னைப் போற்றி ஆதரித்து நல்ல மனமுடைய கோசர்கள் ஆண்டதும் கொங்கு மண்டலம் என்பது தெரிய வருகிறது.

இப்படிப்பட்ட பாடல்களினால் தான் நமக்கு நம்முடைய பழைய சரித்திரம் தெரிய வருகிறது.

tags –கோசர், கொங்கு மண்டலம்

***