Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.
21-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் மங்கல மங்கையர் குங்குமம் பற்றிய கேள்விக்கு KATTUKKUTY அளித்த பதிலை இங்கு காணலாம்.
கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.
(இது பெண்களுக்கு மட்டுமல்ல……ஆண்களும் படிக்கலாம்)
பெண்களுக்கு அழகே நெற்றியில் ஒருபொட்டுதான்!!!!
அழகான பெண்களை வசியம் செய்து மயக்க மந்திரவாதிகள்
குறி வைக்கும் இடமே நெற்றிப் பொட்டுதான்…….
நெற்றியில் பொட்டு வைத்தால் எந்த மந்திரவாதியும் எதுவுமே
செய்ய முடியாது !!! மேலும் திருமணமானவர்கள் வகிட்டில்
பொட்டு வைத்திக்கொள்வார்கள் ஒன்று திருமணமானவள்
என்று அடையாளம் காட்ட. மற்றொன்று அந்த இடத்தில்
லட்சுமி வசிக்கிறாள், லட்சுமிகரமான முகத்திற்கு!!!
பெண் பார்க்கும் போதும் அந்தப் பெண் பொட்டுவைத்துக்
கொண்டதே லட்சுமிகரமாக இருக்கிறது……..
எந்த நடிகையை எடுத்துக்கொண்டாலும் சரி கன்னத்திலும்,
உதட்டிலும்,மூக்கிற்கு கீழேயும் ஒரு சின்ன கருப்பு “டாட்”
இருக்கும். அது திருஷ்டிப் பொட்டு!!!!!
அந்தக்காலத்தில் திருடர்களை முகத்தில் கரும் புள்ளி செம்புள்ளி
வைத்து கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் போவார்களாம்…….
சினிமாவில் இரட்டை வேடம் போட்ட கதாநாயகன் பொட்டு
வைத்திருந்தால்அண்ணன் , பொட்டு இல்லை என்றால் தம்பி………
இதெல்லாம் விட ஒரு காரியம் நடக்க வேண்டுமென்று வேண்டிக்
கொண்டு அனுமார் வாலில் ஆரம்பித்து தலை முடிய பொட்டு
வைப்பவர்கள் ஏராளம். இதற்கும் மேலாக வீட்டு வாசலில் கருப்பு
கரிப்பொட்டு இருக்கும், என்ன தெரியுமா??? பால்காரன் பால்
அளந்த கணக்கு…….
முதன்முதலில் பொட்டுக்கு “திலகம்”எனப் பெயர் வைத்தது
கம்பன் தான் . சீதையை “வனிதையர் திலகம்”என்று வருணிக்கிறார்.
பிறகுதான் திலகம் என்றால் உயர்வான பட்டம் என்றாயிற்று!!!!
இப்படியாக கதை பேசிக்கொண்டே போகலாம் பொட்டைப்பற்றி!!!
இந்த நாகரீக காலத்தில் ஜாதி மத இனம் பாகுபாடில்லாமல்
அனைத்து பெண்களும் பொட்டுக்கென்று அலைய ஆரம்பிக்க,
பொட்டுக்கென்று தனிக் கடைகள் , தனி டிசைன்கள் என புது புது
பொட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன.பொட்டோடு ஆபரணம்,
பொட்டோடு புடவை ……இன்னும் எல்லாம்………
எந்த முகத்திற்கு எந்த விதமான பொட்டுக்கள் என்று பார்ப்போமா???
உருண்டை முகம்
இவரகள் எப்போதும் நீளமான பொட்டுக்களையேஉபயோகிக்க
வேண்டும்.உருண்டை முகத்தை நீளமாக காட்டி அழகு தரும்.
இவரகள் நெற்றி குறுகலாக இருந்தால் அவர்கள் புருவ மத்தியில்தான் பொட்டு வைக்க வேண்டும்
முக்கோண வடிவமுள்ள முகம்
லக்கி கேர்ல்ஸ்!!!! இவர்களுக்கு எல்லா வகைப் பொட்டுக்களும்
பொருந்தும்.நெற்றி மட்டும் சற்று அகலமாக இருந்தால் நீளமான
பொட்டு….முக்கோண வடிவ பொட்டுகளும் இவர்களது தோற்றத்தை
எடுப்பாக காட்டும்.இவர்கள் புருவத்திற்கு மேல் ஒரு சென்டிமீட்டர்
உயரத்துக்கு மேல் பொட்டு வைத்தால் அழகுதான் போங்கள்!!!!
இதந வடிவமுள்ள முகம்
இவரகளுக்கு நீண்ட வடிவமுள்ள பொட்டுக்களே பொருந்தும்; மகத்தின் வடிவமட்டமின்றி
சரும் நிறம் பவடவை கலர் எல்லாம் பொட்டுடன் சம்பந்தபட்டத்துதான் ஆகையால் அவை
களுக்கும்பொருத்தமாகவே பொட்டு வைக்க வேண்டும்்மேலும்
கோதுமை நிற சரும்முடைய பெண்களுக்கு எல்லா நிற பொட்டுக்களும் பொருத்தமாக இருக்கும்
சதுர வடிவமுள்ள முகம்
இவர்கள்அகலம்அதிகமானபொட்டுக்களைஉபயோகிக்கலாம
இவர்கள வைக்கும் பொட்டுக்கள்நீளமானதாகவும்
அகலம் குறைந்ததாகவும் இருக்கக் கூடாது.உருண்டை மற்றும்
முட்டை வடிவமுள்ள பொட்டுக்கள் இவரகளுக்கு ஏகப் பொருத்தம்!!!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.
21-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் தாஜ்மஹால் தேஜோமஹாலயமாக இருந்ததா என்ற கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.
கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.
தாஜ்மஹால் தேஜோமஹாலயம் என்ற ஆலயமாக இருந்ததா?
ச.நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
இன்று நம் முன் உள்ள கேள்வி தாஜ்மஹால் தேஜோமஹாலயம் என்ற ஆலயமாக இருந்ததா?
கேள்வி சற்று சிக்கலான கேள்வி. இப்படி ஒரு கேள்வி உருவாவதற்குக் காரணம் பி.என். ஓக் என்னும் அறிஞரே. அவர் Tajmahal : The True Story”. என்னும் பரபரப்பூட்டும் ஒரு புத்தகத்தை 1969ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார்.
Rewriting the Indian History என்ற நிறுவனத்தை நிறுவியவர் அவர். அதன் தலைவரும் கூட அவர் தான்.
இந்திய சரித்திரத்தைத் திருப்பி எழுத வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது இயல்பே.ஏனெனில் நமது பாரத நாட்டின் வரலாற்றையும் நாகரிகத்தையும் திரித்து எழுதியவர்கள் ஆங்கிலேயர்கள். நாகரிகமற்றவர்கள் என்றும் கற்சிலைகளை வழிபாடு செய்பவர்கள் என்றும் இன்னும் பல விதங்களிலும் நம்மை ஏளனம் செய்து எழுதியதோடு பல பொய்யான தகவல்களைத் தங்கள் புத்தகங்களில் புகுத்தினர்; நிஜமான தகவல்களைத் திரித்து எழுதினர். உண்மையை மறைத்தனர்.
ஆகவே தான் உண்மையான வரலாற்றை உள்ளது உள்ளபடி எழுத வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.
பி.என். ஓக் என்று சொன்னவுடனேயே நமது நாட்டு அறிஞர்கள் பலர் ஏளனமாகச் சிரிப்பர். இவர்கள் அனைவரும் உண்மையை அணுகத் துணிவில்லாதவர்கள் என்பதோடு மெக்காலே மைண்ட் செட் கொண்டவர்கள்- மெக்காலே தந்த படிப்பின் படியான மனப்பான்மை கொண்டவர்கள் என்று கூறலாம்.
முதலாவதாக வரலாறு நமக்குக் கூறும் செய்தி பல கோவில்கள் முகலாயரின் படையெடுப்பால் அழிக்கப்பட்டன; சிதைக்கப்பட்டன; தரைமட்டமாக்கப்பட்டன; அழிக்கப்பட்ட சில இடங்களில் ஹிந்து மதமல்லாத வேறு வழிபாட்டு ஸ்தலங்கள் அமைக்கப்பட்டன என்பது தான்.
எடுத்துக்காட்டுகள் உண்டா? ஆயிரக்கணக்கில் உண்டு. உதாரணத்திற்குச் சில.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முகலாயர் படையெடுப்பால் அழிக்கப்படும் நிலை ஏற்பட்ட போது அம்மனின் சிலைக்கு முன்னால் ஒரு கற்சுவர் எழுப்பப்பட்டு அங்கு இன்னொரு சிலை வைக்கப்பட்டது; பின்னால் கற்சுவர் அகற்றப்பட்டு முன்பிருந்த மூல சிலையின் வழிபாடு மீண்டும் பெறப்பட்டது.
இன்னொன்று ஸ்ரீரங்கம் கோவில் அன்னியரின் படையெடுப்பால் அழிக்கப்படும் நிலை வந்த போது மூலவரின் சிலை அகற்றப்பட்டு ஊர் ஊராக எடுத்துச் செல்லப்பட்டதை வரலாறு அறியும்.
மதுரையின் அருகே உள்ள திருப்பரங்குன்றம் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று. அங்கு மாலிக்காபூர் படையெடுத்து வந்த போது சிறு படைப் பிரிவு ஒன்று கோவில் கோபுரத்தை இடிக்க கோவில் முன் கூடியது. இதைப் பார்த்த சித்தன் என்ற கூலி வேலை செய்யும் முருக பக்தர் விறுவிறுவென்று கோபுரத்தின் மீது ஏறினார். படை வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்க கோபுரத்தின் உச்சியில் ஏறிய அவர் தலை கீழாகக் கீழே விழுந்தார். அவரது சிதறிய உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாலிக்காபூர் வீரர்கள் அங்கிருந்து ஓடினர்.
வடக்கே, 1024ஆம் ஆண்டு கஜினி முகம்மதால் அழிக்கப்பட்ட சோம்நாத் பின்னால் 1951ஆம் ஆண்டு சர்தார் வல்லப் பாய் படேல், கே.எம்.முன்ஷி உள்ளிட்டவர்களால் புனருத்தாரணம் செய்யப்பட்டதை அனைவரும் அறிவோம். இது சமீப கால வரலாற்று நிகழ்வு.
இப்படிப் பல கோவில்கள்!
இந்த வரலாற்றுப் பின்னணியில் தாஜ்மஹால் பற்றி பி.என். ஓக் கூறியதைப் பார்ப்போம்.
பிரத்யக்ஷ சாட்சியாக அவர் கூறுவது தாஜ்மஹாலின் அமைப்பே. ஹிந்துக்களின் கோவில் அமைப்பின் படி நடுவே ஒரு சிகரமுள்ள குவிமாடமும் நான்கு பக்கங்களிலும் நான்கு சிறு மாடங்கள் காவலுக்காக அமைக்கப்படுவதும் பாரம்பரிய மரபு. இது தாஜ்மஹாலில் இருப்பதைக் காணலாம்.
உள்ளே பல இடங்களில் ஹிந்து கோவில்களில் உள்ள சிற்பங்கள் இன்றும் அழிக்கப்படாமல் இருப்பதைக் காணலாம். கோவில் டோமில் திரிசூலம் இருக்கிறது. கர்பகிரஹத்தின் வெளிப்புறச் சுவரில் ஓம் என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருக்கிறது.
தாஜ்மஹால் என்ற பெயரே முகலாய அரசவை ஆவணங்களிலோ அல்லது புத்தகங்களிலோ இல்லவே இல்லை. ஔரங்கசீப் காலத்தில் கூட இந்தப் பெயர் காணப்படவில்லை. ஆகவே பெயரிலேயே கோளாறு இருக்கிறது.
உலகில் உள்ள எந்த இஸ்லாமிய நாடுகளிலும் – ஆப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா முடிய மஹால் என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு கட்டிடத்தையும் காண முடியாது.
மும்தாஜ் மஹல் என்ற பெயரினால் இப்படி பெயர் சூட்டப்பட்டது என்பதும் ஒப்புக்கொள்ளக் கூடிய காரணமாக அமையவில்லை. ஏனெனில் மும்தாஜின் பெயர் மும்தால் உல் ஜமானி என்பதாகும். இரண்டாவதாக ஒரு பெண்மணியின் பெயரில் உள்ள முதல் எழுத்துக்களான மும் என்பதை விட்டு விட்டு தாஜ்மஹால் என்று பெயர் சூட்டுவது என்பது கற்பனை செய்தியாகும்!
ஒரு கல்லறையை எப்படி மஹால் என்ற சொல் குறிக்க முடியும். ஆகவே தாஜ் மற்றும் மஹால் என்பது சம்ஸ்கிருதத்தின் அடிப்படையிலான சொற்கள் ஆகும்.
தாஜ்மஹாலுக்கு வெளியே காலணிகள் கழற்றி வைக்கப்படுகின்றன. ஆலயத்தில் தான் இந்தப் பாரம்பரியப் பழக்கம் உண்டு. கல்லறைக்குச் செல்பவர்களோ காலணிகளை நிச்சயமாக அணிய வேண்டும்.
அடுத்ததாக ஷாஜஹான் தன் மனைவி முமுதாஜுக்கு கல்லறை அமைக்க வேண்டும் என்று இந்த இடத்தை ஜெய்பூர் மஹாராஜா ஜெய்சிங்கிடமிருந்து பெற்றான் என்பதை வரலாற்று ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
அங்கு தேஜோ மஹாலயம் என்ற சிவாலயம் இருந்ததை இந்த ஆவணங்கள் உறுதிப் படுத்துகின்றன.
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல, நூற்றிப் பத்து முக்கிய ஆதாரங்களைத் தரும் பி.என். ஓக் இதை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பரீசிலித்துப் பார்க்கலாம் என்கிறார்.
இந்த நிலையில் ஓக் அவர்கள் கூறிய கூற்று உண்மையா என்பதை ஒரு நிபுணர் கமிட்டி அமைத்து பரீசிலித்து உண்மையை உலகிற்கு அறிவிக்க முடியும்.
பழைய காலம் போலல்லாமல் இன்று கார்பன் டேடிங் சிஸ்டம் உள்ளிட்ட நவீன ஆய்வுமுறைகளும் சோதனைக் கருவிகளும் உள்ளன.
தேவையானது அரசியல் ரீதியிலான தடையை அகற்ற வேண்டும் என்பது தான்!
ஆகவே தாஜ்மஹால் தேஜோமஹாலயமாக இருந்ததா என்ற கேள்விக்கு பதில் : அறிஞர் பி. என். ஓக் தகுந்த ஆதாரங்களை முன் வைத்திருக்கிறார்.
இதை அதிகாரத்தில் இருப்போர் உரிய முறையில் ஆய்வு செய்து தங்கள் முடிவை அறிவிக்க வேண்டும் என்பது தான்!
இந்த வாய்ப்பினை நல்கியோருக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கும் உளமார்ந்த நன்றி கலந்த வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்.
23 Apr 2019 – ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)). 1980ல் பிரிட்டனில் தாஜ்மஹால் பொய் அம்பலம். லண்டனில் ராயல் கட்டிடக் கலைஞர் …
23 Apr 2019 – ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)). 1980ல் பிரிட்டனில் தாஜ்மஹால் பொய் அம்பலம். லண்டனில் ராயல் கட்டிடக் கலைஞர் …
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
THIS IS THE THIRD PART ; FIRST TWO PARTS WERE PUBLISHED IN THE PAST TWO DAYS.
தமிழ், சம்ஸ்க்ருத, ஆங்கில இலக்கண அகராதி – 3
ரூடி
குறியிட்டாளுதல் – பெயரிட்டு வழங்குதல் .
வடநூலார் காரணம் பற்றிப் பெயரிடுதலை ‘யோகம்’ என்றும்,
காரணமின்றி பெயர்வைத்து வழங்குதலை ‘ரூடி’ என்றும் கூறுவர் .
*****
பாகதம் -இழிசனர் வழக்கு
பிராகிருத மொழி, சமூகத்தின் கீழ் மட்டத்திலுள்ளோர் பேசும் மொழி.
சம்ஸ்க்ருதம் , சமூகத்தின் உயர் மட்டத்திலுள்ளோர் பேசும் மொழி.
அதாவது இலக்கிய வழக்கு, பேச்சு வழக்கு என்றும் பிரிக்கலாம்.
காளிதாசர் நாடகங்களில் பெண்களும், வேடர்கள், குயவர்கள், நகைச் சுவை நடிகர்கள் பாகதம்/பிராகிருதம் பேசுவர் .
அரசவை சம்பந்தப்பட்ட எல்லோரும் சம்ஸ்கிருதம் பேசுவர்
தமிழிலும் முற்காலத்தில் எழுந்த பாடல்களும் உரை நடையும் இலக்கிய வழக்கு .
பிற்காலத்தில் எழுத்தில் எழுதப்பட்ட நாட்டுப்புற பாடல்களும் பத்திரிக்கை நாவல்களும் பேச்சு வழக்கு.
திருவிளையாடல் என்னும் சினிமாவில் பல வேடங்களில் தோன்றும் சிவாஜி கணேசன் சம்ஸ்க்ருதம் போலவும் பிராகிருதம் போலவும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவத்தைக் காணலாம். நக்கீரனைக் கேள்வி கேட்கையில் இலக்கிய நடையிலும்/சம்ஸ்க்ருதம், விறகு வெட்டியாக வருகையில் கொச்சைத் தமிழ் நடையிலும் /பாகதம் பேசுவதை பார்க்கிறோம்.
ஒரே வித்தியாசம் தமிழில் மிகவும் பிற்காலத்தில் இந்த கொச்சைத் தமிழ் இலக்கிய வடிவம் பெற்றது. வடக்கிலோ அதற்கு முன்பாகவே கல்வெட்டிலும், நாடகத்திலும், கவிதையிலும் இடம் பெற்றது.
ஆயினும் பாகதம் புரியாத சம்ஸ்க்ருத அறிஞர் கிடையாது
ஆனால் சம்ஸ்க்ருதம் விளங்காத இழிசனர் உண்டு.
இதோ ச. தண்டபாணி தேசிகரின் கூற்று —
“சிறப்பெழுத்து –
தமிழிற்குரிய சிறப்பெழுத்து எ , ஒ என்னும் குற்றெழுத்துக்கள் வடமொழியில் இல்லாமை காண்க.
ஆயினும் இழிசனர் வழக்காகிய பாகத /பிராகிருத மொழியில் வழங்குகிறதென்பது .
வடமொழியிற் கூறப்படும் ஏனை எழுத்துக்கள், உயிருள்
ரு ,ரூ ,லு லூ , அம் , அ : என்பனவும், மெய்யுள் ஒவ்வொரு வருக்கத்தும் இடைநின்ற — மெலிந்தும், உரப்பியும், கனைத்தும்
சொல்லப்படுவனாகிய மும்மூன்றும் ,
ஸ , ஷ , ஹ , க்ஷ என்பனவுமாம் . அவை தமிழில் எழுத்தெனக்கொள்ளப்படா என்பது.”
*****
ஆஹ்னிகம் என்றால் என்ன ?
ஆஹ்னிகம் என்பதை தமிழில் ‘ஆனிகம்’ என்பர்.
இது ஸம்ஸ்க்ருத்ச் சொல்லின் சிதைவு
.
பதஞ்சலி முனிவர் தம் மாணாக்கர்களுக்கு ஒவ்வொரு நாளும் பயிற்றுவித்த பகுதிகளைப் பின்னர்,
ஒரு பிரிவாகக் கோத்தார் . ஆதலால் ‘ஒரு நாட் பாடம்’ என்பது ‘ஆனிகம்’ என்று அறிக .
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காசு பணம் மணி துட்டு துட்டு காசு பணம் மணி துட்டு! Kattukutty – ( கத்து குட்டி தொகுத்தது ) எந்த நாட்டுக்காரர்களும், எந்த மதத்துகாரர்களும், எந்த இனத்துக்காரர்களும் எந்த ஜாதிக்காரர்களும் நாஸ்திகர்களும் ஆஸதிகர்களும் விழுந்து விழுந்து கும்பிடும் ஒரே சாமி…… காசு பணம் மணி துட்டு “பாய் விரித்து படுப்பவரும் வாய் பிளந்து தூங்ககிறார் பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை” ஏன்??.ஏன்???ஏன்??? கையில டப்பு இல்ல நைனா………. உலகத்தையே “கட்ரோல்” பண்ணக்கூடிய ஒரே தெய்வம்!!! கைக்கு கை மாறும் பணமே, உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே, நாம் தேடும் போது வருவதில்லை, போகும்போது சொல்வதில்லை, உலகத்தில் பல பேர் பலவிதமாகக் கும்பிடும் கடவுளை நாம் “மகா லட்சுமி “என்கிறோம். இவ்வளவு தேவைப்படுகிற பணத்தைப் பற்றி 20 கேள்விகள். எங்கே பதில் சொல்லுங்கள் பார்ப்போம்??? 1)மகா லட்சுமி பிறந்த இடம்??? சமுத்திரம் (முதல் கேள்வி கஷ்டமாக இருந்தால் போட்டிக்கு வரமாட்டீர்கள்) 2)மகா லட்சுமியின் மகனின் பெயர் என்ன?… 3)மகா லட்சுமின் வாகனம் எது??? 4)மகாலட்சுமியைப் பற்றி வள்ளுவர் கூறும் குறள் என்ன??? 5) மகாலட்சுமி வசிக்கும் 13 இடங்கள் எவை எவை.??
என்ன சார் 5 கேள்விக்கே மூச்சு திணறுதா………. இன்னும் 15 இருக்கே……… சரி இனிமே கொஞ்சம் சுலபமா கேட்கிறேன்……….. 6)மகாலட்சுமிக்கு ஈடாக ஒரு தெய்வத்தை சொல்கிறோம் அவர் யார்??? 7.மகா லட்சுமியின் அக்கா பெயெரென்ன??ஒரு பெயர்ஜேஷ்ட தேவி மற்ற நான்கு பெயர்களைக் கூறு?? ஜேஷ்டா தேவி பிறந்த இடம்??? பிடித்தது???? ஜேஷ்டா தேவியின் கணவர் பெயரென்ன???? ஜேஷ்டாதேவியின் கொடியில் உள்ள பறவை எது??? ஜேஷ்டாதேவின் வாகனம் எது? போங்க சார் நீங்க லட்சுமித்தான் கேட்கப் போகிறீர்கள் என் நினைத்து வந்தோம் நீங்க அக்காளை பற்றியே கேடகிறீர்கள் நான் எப்படி பார்த்தேன் என்றால், இவளை புரிந்து கொண்டு இவளை தவிர்தால் இவ தங்கசியைப் பிடித்து விடலாமல்லவா???
12).மகா லட்சுமி வசிக்கும் மிருகத்தின் பெரென்ன???? எங்கே??? 13)மகா லட்சுமி சுமங்கலிகளிடம் எங்கே வசிக்கிறாள்??? 14)மகாலட்சுமி உதித்த மாதம் நட்சத்திரம் என்ன??? 15)மகா லட்சுமிக்கு உகந்த நாள் எது??? 16)வீட்டு வாசப் படி மேலே வைக்கப்படும் லட்சுமியின் பெயரென்ன?? 17)மகா லட்சுமியின் அப்பா பெயெரென்ன??? (இது கொஞ்சம் ட்ரிக்கான கேள்வி ஆனா பதிலிருக்கு) மகாலட்சுமிக்கு பிடித்த இலை எது??? இந்தியாவில் மகா லட்சுமிக்கு இருக்கும் பெர்ய கோவில் எங்கே உள்ளது 20.. மகா லட்சுமி வதம் செய்த அரக்கனின்பெயரென்ன??? ஒவ்வொன்றுக்கும் 5 மார்க் படப்போக்கிறீர்களா???? தேவையே இல்லை…. நீங்கதான் பதில் தெரிந்து கொண்டு விட்டீர்களே…….உங்கள் அனைவருக்கும் 100 / 100 !!! நீங்கள் மகா லட்சுமியின் பூரண அருள் பெற்று நீடூழி வாழ்க!!! நீங்கள் செய்ய வேண்டிய உதவி —இதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து……….. எப்படி??? tamilandvedas -ல் பங்கு பெறச்செய்து அவர்களையும் மகா லட்சுமியின் அருளுக்குப் பாத்திரமாகுமாறு செய்க!!! ******
Answers 1.சமுத்திரம், 2. சிக்லீதர் (One of her 18 sons) चिक्लीत Chiklita ॐ चिक्लीताय नम:। Om Chiklitaya Namah। 3. ஆந்தை 4.அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் (குறள் எண் 84) 5. தாமரையின் மத்தியில். யானையின் மத்தகத்தில், பசுவின் பின் புறம், வில்வ இலையின் பின்புறம், கோமுகியில், சுமங்கலியின் நெற்றி வகிட்டில், வலம்புரிசங்கில், பசுஞ்சாணத்தில், கோ மூத்திரத்தில், வெண்ணிற ஆடைகளில், தீப விளக்கில், கோ குளம்பு தூசியில், வெண் புறாவிடம் 6. குபேரன் 7.தவ்வை, தன்துரா, முகடி, மூதேவி. 8. பாற்கடல் சகதியில். பச்சை மிளகாயும் எலுமிச்சம் பழமும் வீட்டு வாசலில் அதை சாப்பிட்டு அப்படியே போய் விடுவாளாம் மூதேவி 9. கபிலர் 10.காகம் (காக்கா) 11.கழுதை 12. பசு. அதன் பின் புறம் 13.நெற்றிக்கு மேல் தலை வகிட்டில் 14.பங்குனி உத்திரம் 15.வெள்ளிக்கிழமை 16. கஜ லட்சுமி 17.சமுத்திர ராஜன் 18.வில்வ இலை 19.கோலாபூர் (Kolhapur) 20.கோலாஹான் –subham—
tags — காசு பணம் மணி துட்டு ,மகா லட்சுமி கேள்வி-பதில் ***
புத்த பிக்ஷு போ ஃபா சியாவோ (Mong Po Fa-chiao) சிறந்த பக்தர். சுங் ஷான் (Chung-Shan) என்ற இடத்தைச் சேர்ந்தவர் அவர். இன்று இது ஹோபெய் (Hopei) என்ற இடத்தில் உள்ள டிங் என்ற ஊராகும்.
புத்த மதத்தைச் சேர்ந்த சூத்திரங்களைச் சொல்ல அவருக்குப் பெரிதும் ஆசை. ஆனால் அவரிடம் குரல் வளம் இல்லை. அவரது குரல் கர்ண கடூரமாக இருந்தது. இதனால் அவர் வேதனைப் பட்டார்.
அவர் தன் சக பிக்ஷுக்களிடம், “குவாங் ஷியின் (Kuang-Shih-yin) எனது ஆசையை இந்த ஜென்மத்திலேயே பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் ஒரு முனைப்பட்ட மனதுடன் பிரார்த்தித்தால் அவர் அருள் புரிவார். என் பிரார்த்தனை உண்மையானதாக இருந்தால் நான் நல்ல குரலைப் பெற்று சூத்திரங்களைச் சொல்வேன். ஆனால் எனது பிரார்த்தனை உள்ளார்ந்த ஒன்றாக இருக்கவில்லை என்றால் போதிசத்வர் எனக்கு அருள் புரிய மாட்டார். சென்ற ஜென்மங்களின் பாவம், கெட்ட கர்மா என்று நினைக்க வேண்டியது தான்! நல்ல குரல் இல்லாமல், சூத்திரங்களைச் சொல்லாமல் இருப்பதை விட சாவதே மேல்” என்றார்.
சொல்லி விட்டு அவர் சும்மா இருக்கவில்லை. பிரார்த்திக்க ஆரம்பித்தார். சாப்பிடவும் மறுத்து விட்டார். ஒருமுனைப்பட்ட மனதுடன் அவர் பிரார்த்தனை தொடர்ந்தது.
மூன்று நாட்கள் கழிந்தன. அவர் உடல் மெலிந்தது. சக்தியில்லாமல் அவர் இருப்பதைக் கண்ட அவரது சீடர்கள் அவரிடம் சென்று, “இப்படி பிரார்த்தனை புரிவதை விட்டு விடுங்கள். இந்த ஜென்மத்தில் இப்படி குரலை மாற்றி நல்ல குரல் வளம் பெறுவது என்பது முடியாத காரியம். உண்ணாமல் இருந்தால் இருக்கும் ஆரோக்கியமும் கெட்டு விடும். சற்றேனும் உணவைச் சாப்பிடுங்கள்” என்றனர்.
ஆனால் போ ஃபா சியாவோ மறுத்து விட்டார். “என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்” என்று அவர் சொல்லி விட்டார்.
தன் உறுதியிலிருந்து அவர் தவறவில்லை. இன்னும் ஆறு நாட்கள் கழிந்தன. அவரால் நகரவே முடியவில்லை. சுவாசம் மட்டும் அவரிடமிருந்து வந்து கொண்டிருந்தது.
சீடர்கள் பயந்து போனார்கள். பெரிதும் வருத்தமடைந்த அவர்கள் அவரிடம் கெஞ்சிப் பார்த்தார்கள் – அப்படி பிரார்த்தனை புரிவதை விட்டு விடுமாறு.
அவர் இறக்கப்போவது நிச்சயம் என்று அவர்களுக்குத் தோன்றி விட்டது.
ஏழாவது நாள் காலை நேரம். திடீரென்று போ கண் விழித்தார். மிகவும் சந்தோஷமாக அவர் காணப்பட்டார்.
தன் சீடர்களை அழைத்த அவர், தன் பிரார்த்தனைக்கு நல்ல பலன் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
கொஞ்சம் நீர் கொண்டு வரச் சொன்னார். குளித்தார்.
பின்னர் மூன்று கதைகளை இனிய குரலில் கூற ஆரம்பித்தார்.
அவரது குரல் மிக ஓங்கி ஒலித்தது. கிராமத்திலிருந்த மக்கள் இந்த உரத்த இனிய குரலைக் கேட்டு ஓடி வந்தனர்.
அவர்களுக்கு ஒரே அதிசயம். யாருடைய குரல் இது என்று கண்டுபிடிக்க மடாலயம் நோக்கி ஓடி வந்த அவர்கள் தங்கள் கண்களை நம்ப முடியாமல் திகைத்தனர். சகிக்க முடியாத பிக்ஷு போவின் குரலா இப்படி இனிமையாக மாறி உள்ளது? திகைப்புடன் பிரமித்தனர் அனைவரும்.
இதற்குப் பின்னர் சுமார் ஐந்து லட்சம் வார்த்தைகளை அவர் பேசினார்.
இனிய மணி ஒலிக்கும் நாதம் போல அவர் குரல் அனைவரையும் காந்தம் போல ஈர்த்தது. எவ்வளவு நேரம் பேசினாலும் அவருக்கு களைப்பே ஏற்படவில்லை.
உண்மையான பிரார்த்தனை மூலம் என்ன பெற முடியும் என்பதை நேரடியாக விளக்கிக் காட்டிய அவரை மக்கள் பெரிதும் பக்தியுடன் நேசிக்க ஆரம்பித்தனர்.
அவர் மூன்றாம் சக்ரவர்த்தியான ஷி ஹு (Shih hu 334 – 349) ஆண்ட காலம் முழுவதும் இருந்தார். அவருக்கு அப்போது 90 வயதுக்கு மேல் ஆகி இருந்தது!
பிரார்த்தனையின் பலனை விளக்கும் போவின் இந்தச் சம்பவம் அனைவரையும் உத்வேகப்படுத்தும் ஒன்றாக அமைந்து விட்டது.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்ரீ மாதவ சிவஞான யோகிகள் அருளிச் செய்த தொல்காப்பிய சூத்திர விருத்தியை, திருவாவடுதுறை ஆதீனம் 1968-ல் வெளியிட்டது அதன் பிற்பகுதியில் ஆதீன மஹாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார்.
பிரத்தியயம் என்றால் என்ன ?
பிரகிருதி – இயல்பின் நிற்பது .
பிரத்தியயம் – பால், எண் , இடம், காலம், பொருள் இவற்றான் பிரக்கிருதியை
வேறுபடுத்தும் இடைச் சொற்கள்
பிராதிபதிகம் – வேற்றுமையுருபு முதலிய ஒன்றையும் ஏலாது . அவற்றை ஏற்கும் நிலையில் தனித்து நிற்கும் பெயர்ச் சொல் பொருளொடு கூடியும் வினைச் சொல்லன்றி முதலியவற்றை ஏலாது நிற்பது .
பிராதிபதிகம் என்னும் கருத்துடைய “அர்த்தவது தாது:” அப்பிரத்தியாயமாகித் திருத்தக நிற்பது பிராதிபதிகம் என்னும் பிரயோக விவேக உரைச் சூ த்திரத்தானும் அறிக
‘அர்த்தவது…..பிராதிபதிகம்’ என்பது வரையிலுள்ள பகுதி பாணினீய சூத்திரம்.
XXXX
தத்திதம் – பெயர்ச் சொல்லின் பொருள்பட வரும் விகுதி.
XXX
சுப் – என்பது வேற்றுமை உருபு
முதல் வேற்றுமை உருபாகிய ‘சு’ என்பதில் தொடங்கி ஏழாம் வேற்றுமை பன்மை உருபாகிய ‘சுப்’ என்பதன் இருபத்தொரு வேற்றுமையுருபுகளின் தொகுப்பால் உண்டாக்கிய பெயர் .
திங் – வினை முற்று விகுதி . இது ‘தி’ என்னும் ஒருமை விகுதியும் ‘அங்’ என்னும் பன்மை விகுதியும் கூட்டி அமைத்த குறியீட்டுத் தொகுப்புப் பெயர் ‘திங்’ என்பது
XXXX
ஆத்மனே பதம்
வடமொழியில் வினைச் சொற்கள், ஆத்மனே பதம் என்றும் பரஸ்மை பதம் என்றும் இருவகைப்படும் . அடித்தான் என்ற வழி , அடித்தலாகிய தொழிற்பயனையுறுவான் பிறன் ஆதலின் அது பரஸ்மை பதம் என்றும் அடித்துக்கொண்டான் .என்ற வழி , அடித்தலாகிய தொழிற்பயனையுறுவான் தான் ஆதலின் அது ஆத்மனே பதமாம் என்க.
((சுருக்கமாகச் சொன்னால் பிறர் செய்யும் செய்கை பரஸ்மை ; தமக்குத் தாமே செய்யும் செய்கை ஆத்மனே பதம் .))
பாணினி செய்த அஷ்டாத்யாயீ வியாகரண சூத்திரங்கட்குப் பதஞ்சலி முனிவர் செய்த அகலவுரை . இது ஆரிய வழக்கில் மாபாடியம் என்று அடைமொழியின்றியே வழங்கப்பெறும்.
அம் மாபாடியத்துக்கு கையட னார் , ‘பிரதீபிகா’ என்னும் பெயரால் விளக்க உரை எழுதினார். அவ்வுரையில் வேத மொழி வைதிகம் என்றும் , உலக மொழி லெளகிகம் என்றும் வழங்கப்பெற் றுள்ளது .
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
YOU ARE INVITED TO LISTEN TO OUR QUESTION AND ANSWERS ON HINDUISM (in tamil) AND WEEKLY ROUND OF HINDU EVENTS AROUND THE WORLD (in Tamil) VIA ZOOM OR FACEBOOK.COM/GNANAMAYAM
LIVE ON MONDAYS AT 14-00 HORS LONDON SUMMER TIME AND 18-30 IST. BUT YOU MAY SEE US 24 HOURS A DAY AT FACEBOOK.COM/GNANAYAMAYAM
14-9-2020 அன்று நடைபெற்ற facebook.com/gnanamayam கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ச.நாகராஜன் புனர்வசு பற்றிய கேள்விக்கு அளித்த பதில் இது. ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டன் நேரம் மதியம் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. அன்பர்கள் தங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டுகிறோம்.
வணக்கம்!
சென்ற வாரம் திரு சீனிவாசன் அவர்கள் ராமனின் புனர்வசு நட்சத்திரம் பற்றிச் சொன்னார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சில நட்சத்திரங்களே கடவுளின் பெயர்களாக வருகின்றன. அதில் ஒன்று புனர்வசு. இது பற்றி உங்கள் கருத்து என்ன? புனர்வசு பற்றி புராணக் கதைகள் உண்டா?
இதோ பதில்:-
27 நட்சத்திரங்களும் அபூர்வமான வரலாறுகளைக் கொண்டவை. வானத்தில் திகழும் இவை பற்றிய ஆச்சரியகரமான உண்மைகள் புராணங்களில் கதை வடிவமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
புனர்வசு 27 நட்சத்திரங்களில் 7வது நட்சத்திரமாகத் திகழ்கிறது.
புனர்வசு தேவதையானவள் மஞ்சள் நிறமுள்ளவள். ஸ்ருக், ஸ்ருவம், ஜபமாலை, கமண்டலம் ஆகியவற்றை நான்கு கரங்களில் தரித்திருப்பவள். அதிதி இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை.
ஸ்ரீராமருடைய நட்சத்திரம் என்பதால் இது விசேஷ பெருமையைப் பெறுகிறது.
புனர்வசுவின் நான்காம் பாதத்தில் ராமர் பிறந்ததால் அவர் ராசி கடக ராசியாக அமைகிறது.
புனரர்வசு என்பது புனர் மற்றும் வசு ஆகிய இரு சொற்களின் சேர்க்கையாகும்.
புனர் என்றால் மறுபடி திருப்பி வருவது. வசு என்பது ஒளி, செல்வம் உள்ளிட்ட அனைத்து நலன்களையும் குறிக்கிறது.
இந்த நட்சத்திர வடிவம் அம்புகள் அடங்கிய அம்பராவைக் கொண்டிருக்கிறது. இந்த அம்புகள் எல்லையற்ற ஆற்றல் கொண்டவை. யார் இதை உணர்ந்து ஆணயிடுகிறார்களோ அவர்களுக்கு இவை பலன் தரும்.
புராணத்திலே புனர்வசுவைப் பற்றி விளக்கமாகக் காண முடிகிறது. பிரம்மாவின் புதல்வர் மரீசி. அவரது புதல்வர் கஸ்யபர், அதாவது பிரம்மாவின் பேரர். தக்ஷ ப்ராஜாபதியின் மகளான அதிதியை கஸ்யபர் மணந்தார். அதிதி என்றால் எல்லையற்றவள் என்று பொருள். அளப்பரிய ஆற்றல் கொண்டவள் அதிதி. அதிதிக்கு ஸத்யம், தயாளம், பெருந்தன்மை, தூய்மை, அழகு, ராஜ கம்பீரம் உள்ளிட்ட பல குண நலன்கள் உண்டு. அதிதிக்கு 12 ஆதித்யர்கள் பிறந்தனர். இந்திரன், பாகன், வாயு, த்வ்ஷ்டா, வருணர், ஆர்யமான், பூஷா, மித்ரா, அக்னி, பர்ஜன்யா, விவஸ்வான், தினகர் ஆகியோர் இந்த 12 ஆதித்யர்கள்.
புனர்வசுவின் அதி தேவதையான அதிதியைப் பற்றி ஏராளமான புராணக் கதைகள் உண்டு. அதிதியின் 12 சகோதரிகள், அதிதிக்கு மஹாவிஷ்ணு வாமனனாகப் பிறந்தது, நரகாசுரன் அதிதியின் காதணிகளைத் திருடியது, புதனிடம் அதிதி சாபம் பெற்றது என இப்படி பல சம்பவங்களைப் புராணங்களிலும் ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களிலும் காணலாம்.
இழந்ததைப் பெறுவது, பிரிந்த கணவன் மனைவி திருப்பி ஒன்று சேர்வது, தூர தேசங்களில் பயணம் செய்தவர் திரும்பி வருவது இவை எல்லாம் புனர்வசு நட்சத்திரம் தரும் பலன்களாகும்.
ராமரின் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ஒரு முறை பார்த்தால் இந்த நட்சத்திரத்தின் பலன்கள் நன்கு தெரியவரும்.
ஒரு முறை கேட்டால் மட்டும் போதாது, மறுமுறை கேட்டால் அடைய முடியும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது புனர்வசு. எல்லையற்ற தன்மையையும் -limitless abundance – இது குறிக்கிறது.
மேலை நாட்டு வான சாஸ்திரத்தில் கேஸ்டர் மற்றும் போலக்ஸ் இந்த நட்சத்திரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.கேஸ்டர் ஒன்றை இழக்கச் செய்யும்; போலக்ஸ் அதை மீட்டுத் தரும்.
விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் 150வது நாமமாக வருவது புனர்வஸு என்ற நாமம்.
இதற்கு பாஷ்யம் அருளி இருக்கும் ஆதி சங்கரர் திருப்பித் திருப்பி உடல்களில் க்ஷேத்ரக்ஞனாக உறைபவர் விஷ்ணு என்று கூறி அருளுகிறார்.
பராசர பட்டரோ தனது பாஷ்யத்தில் மற்ற மூர்த்திகளிலும் தேவதைகளிலும் அந்தராத்மாவாக உறைபவர் விஷ்ணு என அர்த்தம் விளக்குகிறார்.
இதற்கு அடுத்து வரும் நாமம் உபேந்திரன் என்பதாகும். புனர்வஸு ராமாவதாரத்தையும் உபேந்திர என்னும் நாமம் கிருஷ்ணாவதாரத்தையும் குறிக்கிறது.
புனர்வசுவின் பெருமை எல்லையற்றது, அனைத்தையும் அளிக்க வல்லது, வேண்டியதை உடனே என்பதைக் காண்பிக்க புனர்வசு நட்சத்திரத்தில் ஜனித்த காமதேனுவைக் குறிப்பிடலாம்.
புனர்வசுவில் பிறந்த பெரும் மகான் பகவான் ரமண மஹரிஷி ஆவார். அப்பர் திருவாதிரைப் பதிகத்தைப் பாடி அருளியது போல, ரமண மஹரிஷியின் அணுக்கத் தொண்டரான முருகனார் ‘புனர்வசு வண்ணம்’ என்ற ஒரு பதிகத்தைப் பாடியுள்ளார்.
ஆயுர்வேதத்தை அருளிய புனர்வசு ஆத்ரேயா அக்னிவேசதந்த்ரா என்ற நூலை இயற்றிய அக்னிதேவரின் குரு ஆவார்.
புனர்வசு நட்சத்திரத்தை வானில் எப்படிக் கண்டு வணங்கலாம்? ஓரியன் கூட்டத்திற்கு வடகிழக்காக வட வானத்தில் உயரத்தில் இரு நட்சத்திரங்களைக் காணலாம். இவற்றில் கிழக்காக ஒளிர்வது போலக்ஸ் (Polux) என்னும் நட்சத்திரம். அதற்கு சற்று வடமேற்காக உள்ளது காஸ்டர் (Castor) நட்சத்திரம். இந்த இரட்டை நட்சத்திரங்களே புனர்வசு கூட்டமாகும். இதே ஓரியன் கூட்டத்தில் ப்ராசியன், சிரியஸ் ஆகிய நட்சத்திரங்களும் உண்டு. இவை பிரமிக்க வைக்கும் சுவையான தகவல்களைத் தருபவை; பூமியில் மனித நாகரிகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை.
புனர்வசு நட்சத்திரத்திற்கு இன்னும் ஒரு பெருமை உண்டு.
இந்த நட்சத்திரம் எந்தக் கிழமை, திதியில் வந்தாலும் அதற்கு மரண யோகம் இல்லை!
இப்படி புனர்வசுவின் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
சுருக்கமாகச் சொல்லப் போனால் வாழ்க்கையில் நம்பிக்கையைத் தரும் நட்சத்திரம் புனர் வசு. இழந்தது கிடைக்கும்; எல்லையற்ற ஆற்றல் மிக்க பாணங்களை எடுத்து அவற்றை விடுத்து வெற்றி பெறலாம். மீண்டும் மறு ஒளியைத் தரும் புனர்வசுவைப் போற்றுவோம்; வணங்குவோம்! ஒளி பெறுவோம்! உயர்வோம்!
அடுத்து இன்னும் ஒரு நிகழ்ச்சியில் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்.