ஸ்வாமி ராமதீர்த்தரின் குட்டிக் கதைகள் (in English & Tamil) – 1 (Post .7640)

Written by S Nagarajan

Post No.7640

Date uploaded in London – 2 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு சொற்பொழிவுகள் ஆற்றியவர் ஸ்வாமி ராமதீர்த்தர்.

ஏராளமான உவமைகளை அடுக்கடுக்காகச் சொல்வது அவர் வழக்கம். அறநெறி போதிக்கும் parables எனப்படும் குட்டிக்கதைகளை அவர் அடிக்கடி கூறுவதுண்டு. இந்தக் குட்டிக் கதைகள்  புரிந்து கொள்வதற்குச் சிரமமான பல பெரிய உண்மைகளை அனாயாசமாக விளக்கி விடும்.

உதாரணத்திற்கு ஒரு குட்டிக்கதையைப் பார்க்கலாம் :

ஆண்டி ஒருவர் தனது சணலால் ஆன கம்பளியை இழந்து விட்டார். ஆண்டியை சோதனை செய்வதற்காகவோ என்னவோ ஒரு கான்ஸ்டபிள் அதைத் திருடி விட்டார். போலீஸ் ஸ்டேஷன் அருகே தான் அந்த ஆண்டி வசித்து வந்தார். நேரடியாக போலீஸ் ஸ்டேஷன் சென்ற அவர் அங்கு இருந்த தானேதாரிடம் (போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பு அதிகாரி – பழைய கால பதவியின் பெயர் இது) புகார் அளித்தார்.

தானேதார் : எதை இழந்து விட்டீர்கள்?

ஆண்டி : என்னுடைய எல்லாமே போச்சு. முதலில் என் மெத்தை போச்சு.

தானேதார் : அப்புறம் வேற என்ன?

ஆண்டி : என்னோட படுக்கை

தானேதார் : அப்புறம் வேற என்ன?

ஆண்டி : என்னோட போர்வை

தானேதார் : அப்புறம் வேற என்ன?

ஆண்டி : என்னோட கோட்டு மற்றும் மேலங்கியும் போச்சு

தானேதார் : அப்புறம் வேற என்ன?

ஆண்டி : என்னோட தலகாணியும் போச்சு

தானேதார் : அப்புறம் வேற என்ன?

ஆண்டி : என்னோட தரை விரிப்பும் போச்சு

தானேதார் : வேற ஏதாவது உண்டா?

ஆண்டி : ஆமாம், உண்டு. என்னோட குடையும் போச்சு

தானேதார் : அவ்வளவு தானா, இன்னும் இருக்கா?

ஆண்டி : இருக்கு சார், என்னோட வேஷ்டி, அதுவும் போச்சு

தானேதார் : வேற ஏதாவது போச்சா, யோசனை பண்ணி சொல்லுங்க

ஆண்டி : அப்புறம்.. அப்புறம்.. அப்புறம்…

அருகில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள் விழுந்து விழுந்து சிரித்தார். ஆண்டியை நோக்கி ஏளனமாக அப்புறம்..அப்புறம் . அப்புறம் என்று கேலி செய்தார் அவர். “உன்னோட குடிசை ஒரு பெரிய வணிக கோடவுனா என்ன, எல்லாம் போறதுக்கு” என்றார் அவர்.

பின்னர் ஆண்டியினுடைய மெத்தையை அவர் மேல் தூக்கி எறிந்த கான்ஸ்டபிள் தானேதாரை நோக்கி, “சார்! இது மட்டும் தான் அங்கே திருடு போனது” என்றார்.

ஆண்டி அந்த மெத்தையைத் தன்னுடையது தான் என்று அடையாளம் காட்டி அதைப் பெற்றுக் கொண்டார். போலீஸ் ஸ்டேஷனிலிருந்து நகர ஆரம்பித்தார்.

ஆனால் தானேதார் அவரை அரெஸ்ட் செய்தார் – பொய் புகார் அளித்த காரணத்திற்காக!

ஆண்டி புன்முறுவல் பூத்தார். தான் ஒரு பொய்யையும் சொல்லவில்லை என்றார்.

மெத்தையை தன் மேல் போட்டுக் கொண்டு இதோ என் மெத்தை என்றார். பின்னர் அதைத் தரையில் விரித்து அதன் மேல் உட்கார்ந்து, “இதோ எனது படுக்கை” என்றார்.

பிறகு அதைத் தன் தலை மேல் விரித்துக் காண்பித்து, “இதோ, எனது குடை” என்றார்.

இப்படி ஒவ்வொரு விளக்கமாக அவர் கொடுத்துக் கொண்டே போனார்.

பிரபஞ்சத்தை சிருஷ்டித்த பிரம்மத்தை உணர்ந்த ஒருவனுக்கு பிரம்மம் தான் எல்லாமே! அவனது உறவெல்லாம் பிரம்மம் தான். அவனை ஆள்வதும் பிரம்மமே; ஆளப்படுவதும் பிரம்மமே. அவனது நண்பர்களும் பிரம்மமே, எதிரிகளும் பிரம்மமே. அவனது தந்தை, தாய், சகோதரன், சகோதர் எல்லாமே பிரம்மமே. அவனுக்கு பிரம்மம் தான் ஆண்டியினுடைய மெத்தை!

ஸ்வாமி ராமதீர்த்தர் பிரம்மத்தை எப்படி விளக்கி விட்டார் பாருங்கள், ஒரு சின்னக் குட்டிக் கதையின் மூலமாக!

இதை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோருக்காக ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது :-

The Fakir’s Gudri

A fakir lost his gudri (rags stitched together to form a quilt). It was stolen by a constable (in order, probably, to test the fakir). The fakir lived near the police station. He went and made a report to the police.

The Thanedar asked him, “What have you lost?”

The fakir replied, “ My all. First a quilt.”

Thanedar : “What else?”

The fakir : “My bed.”

Thanedar : “What else?”

The fakir : “My sheet.”

Thanedar : “What else?”

The fakir : “My coat and angarkha.”

Thanedar : “What else?”

The fakir : “My pillow.”

Thanedar : “What else?”

The fakir : “My carpet.”

Thanedar : “Anything else?”

The fakir :  “yes, My umbrella.”

Thanedar : “Is that all?”

The fakir : “No sir, also my dhoti.”

Thanedar : “Just recollect if you have lost anything else?”

The fakir : “And.. and.. and..”

The constable who was standing by, laughed at his long list, and abusing the fakir, said “And.. and.. and… as of thy cottage is a merchant’s godown..” and throwing the gudri at him said to the Thanedar, “Sir, this is all that was stolen.”

The fakir identified the gudri as his; took and walked out of the police station. But the Thandedar had him arrested for making a false report. The fakir smiled and said that he had not told a lie. He covered himself with the gudri and said, “Here is my quilt.” Spreading it on the ground, he sat on it and said, “This is my bed.”. Protecting himself from the son with it, he said, “Look, here is my umbrella.”. And so on.

To him who has realized Brahma the support of the universe, Brahma is all in all, his relations are Brahma, his ruler and his ruled are Brahma, his friends and enemies are Brahma, his father, mother, brother, and sister are Brahma. To him Brahma is the fakir’s gudri.

*****

Death is better than drinking Milk (Post no.7639)

Written by London swaminathan

Post No.7639

Date uploaded in London – 1 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

More Death bed Anecdotes

Cough Practice!

When Curran, the witty English lawyer of the eighteenth century, lay on his death bed, he was told by his physician that he coughed rather easier than before,

“In faith, so I think I ought , for I have been practicing all night”.

Xxx

Lord Holland

When Lord Holland was on his death bed, his friend George Selwyn called to enquire how his Lordship was, and left his card. This was taken to Lord Holland who said,

If Mr Selwyn calls again, show him into my room. If I am alive, I shall be glad to see him. If I am dead I am sure he will be delighted to see me.

Xxx

Politest Message

An old French Countess of the most exquisite politeness was about to breathe her last, when she received a call from acquaintance ignorant of her mortal illness. The answer sent down from the chamber of the departing sufferer was eminently unique.

“The Countess de Rouen sends her compliments to Madame de Calais , but begs to be excused , as she is engaged in dying”.

Xxx

Apologizing for Dying Late

Louis XIV lingered in a prolonged death bed agony, during the whole of which, the courtiers of his chamber were required to the in attendance. After some days of his slow decrease, the King opened his eyes and remarked faintly

“Gentlemen, I must apologise for being such an unconscionable time dying”.

Xxx

Death is better than drinking Milk

When John Donne, the English poet, was dying, the great physician Dr Simon Faxe told him he might be restored by cordials and drinking milk twenty days together; but the Dean loathed milk and passionately refused to drink it. Upon the doctor’s insisting, he did try it for ten days, then said he would rather die than continue since he didn’t fear death.

Xxx subham xxx

பாட்டி சுட்ட வடையும், விட்ட ஏப்பமும் (Post No.7638)

Written by London swaminathan

Post No.7638

Date uploaded in London – 1 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பழமொழிக் கதைகள் 

ஒரு ஊரில் ஒரு ஏமாந்த சோணகிரி இருந்தான்; அவனைப் பார்த்ததாலேயே அசல் கூமுட்டை என்பது தெரியும். அவனைப் பார்த்தால் எருதும் கூட மச்சான் முறை கொண்டாடும். tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்’ என்பது பழமொழி அல்லவா?

ஒரு நாள் அவனுக்கு சூடான வடை சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது. அந்தக் கிராமத்திலோ உடுப்பி ஹோட்டல், ஐயர் மெஸ் உணவு விடுதி, சரவண பவன் எதுவும் கிடையாது. அந்த ஊரில் வடை சுட்டு விற்கும் ஒரு  கிழவி இருந்தாள் ; அவளுக்கு இப்போதெல்லாம் (Business) ‘பிஸினஸ் கொஞ்சம (Dull) டல் . ஆகையால் பண முடை ; அந்த நேரத்தில் இந்த இளிச்சவாயன் போய், பாட்டி வடை சுட்டுத் தருவாயா ? உனக்கு என்ன கூலி ? என்று கேட்டான்.

“அட மவனே! உன்னைப் பார்த்து எவனாவது கூலி கேட்பானா? 15 வடைக்கு இவ்வளவு மாவு, எண்ணை , மற்றும் தேவையான மளிகை சாமான்களைக் கொண்டுவா , அதுவே போதும்” என்றாள்.

கெட்டிக்கார துஷ்ட! அவனும் மறு நாள் காலையில் அப்படியே கொணர்ந்தான் ; அதை வாங்கிக் கொண்ட கிழப் “பாட்டி மவனே! மத்தியானம் வாடா” – என்றாள் .

அவன் நாக்கில் ஜலம் ஊற மத்தியானம் திரும்பி வந்தான் ஒரு இலையில் அவனுக்கு பாட்டி, ஒரு வடையை வைத்து “சாப்பிடடா மவனே! “ என்று சொன்னாள் .

“ஏ கிழவி! என்ன, ஒன்னு தான் இருக்கு? மீதி வடை எல்லாம் எங்கே?” என்று சத்தம் போட்டான் .

“மவனே ; உப்பு போதுமா உரைப்பு போதுமா என்று ருசி பார்க்க நான்தாண்டா மிச்சத்தை  எல்லாம் தின்னேன்”  என்று கூசாமல் மொழிந்தாள் .

“அடிப் பாவி! கிழவி! எப்படி அவ்வளவையும் சில மணி நேரத்துக்குள் சாப்பிட்டாய் ? இது என்ன அக்கிரமம் ! அநியாயம்<” என்று திட்டிக்கொண்டே இருந்தான்.

அந்தக் கிழவி. இருந்த ஒரு வடையையும் வாயில் போட்டுக்கொண்டே “இப்படித்தான்டா சாப்பிட்டேன் என் அருமை மவனே !” என்று ஏப்பம் விட்டாள் .

Xxx

ஆமைக்கு இறக்கை உண்டா ?

ஒரு ஊரில் ஒரு ராஜா ; அவனுக்கு ஒரு பெண்ணரசி பிறந்தாள் ; பேரழகி ; வயதும் வந்தது . ராஜாவும் நல்ல இளவரசனைத் தேடினார் .

அப்பா, எனக்கு புத்திசாலியாகவும் அழகாகவும் உள்ள ஆண்மகன் வந்தால்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று சொல்லிவிட்டாள் . tamilandvedas.com, swamiindology.blogspot.com

செய்தி பரவியது. பலரும் வந்தனர். இளவரசி கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் போய்விட்டனர்  ஒரு நாள் ஒரு ஆண் அழகன் வந்தான் . அட இவன் நமக்கு வாய்த்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து கேள்விக் கணைகளைத் தொடுத்தாள் .

அந்த நேரத்தில் பல்லி சொல் கேட்டது .

அந்த அழகன் கேட்டான் – “இது என்ன க்ளிக் க்ளிக் (Click, click) சப்தம்?

அவள் சொன்னாள் – ஓ அதுவா , வேறு ஒன்றும் இல்லை, சுவற்றில் உள்ள பல்லி போட்ட சப்தம் .

அப்படியா , உடனே போய் எனக்கு ஒரு இறக்கையை பிய்த்துக் கொண்டு வா என்றான் .

அவன் சரியான முட்டாள் பயல் என்று தெரிந்தது. போய் வா மகனே போய் வா என்று வெளியே தள்ளி கதவை சாத்தினாள்

இன்னும் கொஞ்சம் நாட்கள் உருண்டோடின . இன்னும் ஒரு ஆண்மகன் வந்தான் . நம் நேரத்தை வீண் அடிக்காமல் இந்த ஆளுக்கு முதலிலேயே டெஸ்ட் (Test)  வைத்து விடுவோம் என்று நினைத்து சம்பாஷணையைத் துவக்கினாள் .

கொஞ்ச நாளுக்கு முன்னாலே ஒரு ஆள் வந்தான். பார்க்க நல்ல அழகு . ஆனால் பல்லி சொல் கேட்டும் அவனுக்கு பழக்கமில்லை. நான் பல்லி சப்தம் அது என்று சொன்னவுடன் , அப்படியா , அதிலிருந்து ஒரு இறக்கை கொண்டு வா என்றான் முட்டாள்- என்றாள்

இதை அவள் சொல்லி முடிப்பதற்குள் புதிதாக வந்த ஆண்மகன் வெடிச் சிரிப்பு சிரித்து விட்டு , tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஓ , அந்த முட்டாள் , அதை ஆமை என்று நினைத்து விட்டான் போல இருக்கு. அதான் ரெக்கை கேட்டிருக்கான் என்று சொல்லி மேலும் சிரித்தான்.

அவளும் போய் வா மகனே !போய் வா  ! என்று பாடிக்கொண்டே அவனை வெளியே தள்ளி கதவை சாத்தினாள்.

‘ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை’ என்ற பழமொழி  சரிதான் என்று முனுமுனு த்தாள் .

Xxx subham xxxx

tags ஆமைக்கு இறக்கை, பாட்டி சுட்ட வடை

தமிழில் பேசுங்கள், கணினி திரையில் எழுத்து வடிவில் அதைக் காணலாம்! (Post 7637)

தமிழில் பேசுங்கள், கணினி திரையில் எழுத்து வடிவில் அதைக் காணலாம்! (Post 7637)

Written by S Nagarajan

Post No.7637

Date uploaded in London – 1 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

காலிங் பெல் அடித்தது.கதவைத் திறந்தேன். திரு கணேஷ் கோபாலன் வந்திருந்தார். வரவேற்றேன்.

முன்பே வரப்போவதாகச் சொல்லி இருந்ததால் கணினியை (மாக் லேப்டாப் Mac LapTop) தயாராக வைத்திருந்தேன்.

அவரது மென்பொருளைக் காட்டினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று இருந்த பட்டியலிலிருந்து உங்கள் மொழியைத் தேர்ந்தெடுங்கள் என்றார். தமிழைத் தேர்ந்தெடுத்தேன்.

பேசுங்கள் என்றார் அவர்.

திரு கணேஷ் அவர்களை வரவேற்கிறேன். நல்வரவு என்றேன்.

என்ன ஆச்சரியம். நான் பேசப் பேச அப்படியே எழுத்துக்கள் கணினியில் தோன்ற ஆரம்பித்தன.

நல்ல ஒரு கண்டுபிடிப்பு.

இது எப்படி சாத்தியமானது என்று அவரைக் கேட்டேன்.

விவரித்தார்.

“ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இது சாத்தியமானது. பல ஆண்டுகள் டெக்ஸாஸ் இண்ஸ்ட்ருமெண்ட்ஸ் மற்றும் ஐ.பி.எம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய் அனுபவமும் எனது சகா அனந்த் நாகராஜ் அவர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டதும் தான்

இந்த மென்பொருள் உருவாகக் காரணம். தமிழில் பல்வேறு குரல்களை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் சேகரித்தோம். எந்தப் பிழையும் வந்து விடக் கூடாது என்பதால் பொறுமையுடனும் கவனத்துடனும் இதை உருவாக்கினோம். வெற்றி கிடைத்தது.”

“இதில் என்ன விசேஷ அம்சங்கள்?”

“முதலாவதாக துல்லியம். அப்படியே பேச்சு எழுத்தாக மாறுகிறது. இரண்டாவது விரைவு. பேசப் பேச எழுத்துக்கள் உருவாகும்.”

“இப்போது இது எங்கு பயன்பாட்டில் இருக்கிறது? யார் யாருக்கெல்லாம் இது உதவும்?”

“இப்போது போலீஸ் துறையில் இதைக் கொடுத்திருக்கிறோம்.

இதர பயன்பாடு பற்றி நீங்கள் தான் சொல்ல வேண்டும்….”

சற்று யோசித்தேன். பிறகு சொல்ல ஆரம்பித்தேன். சாதாரண இல்லத்தரசி முதல் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் வரை இது பயன்படுமே. செய்ய வேண்டிய வேலைகளை நினைத்த போதெல்லாம் கம்ப்யூட்டரில் சொல்லி விட்டால் அது எழுத்தாக மாற்றுகிறது. அதை பிரிண்ட் எடுத்தால் போதுமே. எழுத்தாளர்கள், ஸ்கிரிப்ட் ரைட்டர்களுக்கு இது பெரிய உதவி சாதனமாக இருக்கும். டப்பிங் கலைஞர்களுக்கு, தான் எதைப் பேசினோம், எந்த இடத்தில் தவறு வந்துள்ளது என்பதை பிரிண்ட் அவுட் சுட்டிக் காட்டி விடும்.

போலீஸ் விசாரணை, கோர்ட் விசாரணையின் போது வக்கீல்கள், சாட்சிகள் பேசுவது துல்லியமாகப் பதிவு செய்யப்படும். ஆகவே யாரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேச முடியாது. உண்மைகள் விரைவில் வெளிப்படும். பேசியதை பதிவு செய்து உடனுக்குடன் கையெழுத்து வாங்கி விடலாம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாமே.

சி.இ.ஓக்கள் மற்றும் ஏராளமானோருக்கு வேலையைப் பங்கிட்டுத் தர வேண்டிய நிறுவன உரிமையாளர்கள் முன்பே பேசி அதை உதவியாளரிடம் தந்து விடலாம்.

எனது பேச்சைக் கேட்டு கணேஷ் புன்னகை பூத்தார்.

“இன்னும் டிடிபி பப்ளிஷர்கள், டைரக்டர்கள் போன்றோரை விட்டு விட்டீர்களே. நினைத்த படி காட்சியை விவரித்து அதை அஸிஸ்டண்ட் டைரக்டர்கள், காஸ்ட்யூம் டிசைனர், செட்டை நிர்மாணிப்பவர்கள், பாடலாசிரியர், வசனகர்த்தா ஆகியோருக்குக் கொடுத்து விட்டால் திட்டமிட்டு காட்சிகளைப் படம் பிடிக்கலாம்; மீண்டும் மீண்டும் டேக் எடுக்காமல் செலவு குறையும், இல்லையா?”

“சரி, இதை உருவாக்க எப்படி நிதி கிடைத்தது?”

“சாம்சங் வெஞ்சர்ஸ் (Samsung Ventures) இதை உருவாக்க உதவும் வகையில் போதுமான நிதியை அளித்து உதவியுள்ளனர். எங்கள் நிறுவனத்தில் 30 பேருக்கு மேல் வேலை பார்க்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இது போன்ற ஆய்வுகளைச் செய்து புதிய மென்பொருளை உருவாக்க வழி வகுக்கிறோம்.”

“சரி,முக்கியமான விஷயத்திற்கு வருவோம். உங்கள் நிறுவனத்தின் பெயர் என்ன? உங்களுடன் எப்படித் தொடர்பு கொள்வது, அதைச் சொல்லுங்கள்”

“ எங்கள் நிறுவனத்தின் பெயர் ஞானி இன்னோவேஷன் பிரைவேட் லிமிடட். (Gnani Innovations Private Limited (gnani.ai)).

இதைப் பயன்படுத்த விரும்புவோருக்கு ஒரு வாரம் இலவசமாக இந்த மென்பொருளை அளிக்கிறோம். இதைப் பயன்படுத்தி திருப்தி அடைந்த பின்னர்  அவரவர் தேவைக்குத் தக்கபடி ஒரு வருடத்திற்கு 999 ரூபாயிலிருந்து பல்வேறு திட்டங்களின் படி அதற்குரிய தொகையில் இதைப் பெறலாம்.

இதைப் பெற விரும்புவோர் அணுக வேண்டிய எங்களது தளம் மற்றும் தொலைபேசி எண்ணைச் சொல்கிறேன்.

தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்  : கணேஷ் கோபாலன் மற்றும் அனந்த் நாகராஜ் (நிறுவனர்கள்)

நிறுவனம் : gnanidhwani.com (part of Gnani Innovations Private Limited), பெங்களூரு, இந்தியா

Website Url : https://gnanidhwani.com.

மின்னஞ்சல் தொடர்பு முகவரி : support@gnanidhwani.com

தொலைபேசி எண் : 91 – 9342510660

திரு கணேஷ் கோபாலன்

திரு அனந்த் நாகராஜ்

அதிசயமான ஒரு கண்டுபிடிப்பின் டெமோவைப் பார்த்தபின் சொன்னேன் இப்படி:

“இந்த நல்ல கண்டுபிடிப்பிற்கு நாடு முழுவதும் அந்தந்த மொழி பேசுவோரிடம் நல்ல வரவேற்பு இருக்கும். குறிப்பாக இந்திய மொழிகளில் ஃபாண்ட் பற்றிப் பல்வேறு சங்கடங்கள் உள்ளன. இப்படி பேசுவதை எழுத்து வடிவத்தில் மாற்றுவது பல புதிய பரிமாணங்களைச் சுட்டிக் காட்டுகிறது.உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!”.

 “நன்றி” என்று சொல்லி கணேஷ் எழுந்து விடை பெற்றார்.

ஆர்வமுள்ளோர் இதைச் சற்றுப் பயன்படுத்திப் பார்க்கலாம்

HOW MANY MAHABHARATA CHARACTERS CAN YOU FIND IN THE 100 WORDED SPIRAL? (post No.7636)

SPIRAL CROSSWORD MAHABHARATA

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No.7636

Date uploaded in London – 29 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

HOW MANY MAHABHARATA CHARACTERS CAN YOU FIND IN THE100 WORDED SPIRAL? (post No.7636)

To help you find the famous personalities I have given the first two letters of each person with the number where they are in the spiral. Answers are at the bottom.

1.AR, 7.BH, 12.CH, 23.DR, 31.EK, 39.FA, 46.GH, 57.IR, 64.JA, 74.KA, 82.LA,89.MA, 94.NA.

ANSWERS

1.ARJUNA, 7.BHIMA, 12.CHITRANGADA, 23.DRAUPADI, 31.EKALAVYA, 39.FALGUNA, 46.GHATOTKACHA, 57.IRAVANA, 64.JAYADRATHA, 74.KAURAVAS, 82.LAXMANA,89.MADRI, 94.NAHUSHA.

Painting while Dying, Singing while Dying! (Post No.7635)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No.7635

Date uploaded in London – 29 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Death bed scenes

Shortly before his death, Judge John Marshall Harlan of the U S Supreme Court became partly conscious and spoke his farewell words to those who were at his bedside,

“Good bye, I am sorry to have kept you all waiting so long”.

Xxx

Last Touch

A few hours before his death Marcel Proust asked his servant to bring to his bed a certain page from his manuscript wherein the death agony of one of his characters was described— because

I have several retouching to make here, now that I find myself in the same predicament.

He wrote like a maniac to the end.

Xxx

Painting while Dying!

Three days before Blake’s death he was working on the ‘Ancient of Days’. He sat bolstered up in bed , and tinted it with his choicest

colours and in his happiest style. He touched and retouched it— held it at arm’s length and then threw it from him, exclaiming,

There! That will do! I cannot mend it.

He saw his wife in tears…

Stay! Kate! Cried Blake, Keep just as you are—

I will draw your portrait— for you have ever been an angel to me

And so he did — and it was his last work.

Xxx

Singing while Dying!

Dr Arne, the Eighteenth-Century English composer, died as he had lived. His intimate friend ,Vernon , the favourite singing actor of Drury Lane Theatre described his end,

— I was talking on the subject of music with the doctor, who suffered much from exhaustion, when in attempting to illustrate what he had advanced, he in a very feeble and tremulous voice sang part of an air, during which he became progressively more faint until he breathed his last! Making, as our immortal Shakespeare expresses it

‘A swan like end, fading in music’.

tags-  death bed, Dr Arne, William Blake, Marcel Proust, 

Xxx subham xxx

31 முக்கிய சித்தர் பாடல்கள் (Post No.7634)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7634

Date uploaded in London – 29 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மார்ச் 2020 காலண்டர்

(மாசி மாதம் -விகாரி வருஷம்)

பண்டிகை நாட்கள் – மார்ச் 8 உலக மகளிர் தினம்; 8 மாசி மகம் 9 ஹோலி/காம தஹனம்; 14-காரடையான் நோன்பு; 25-யுகாதி புத்தாண்டு தினம்.

அமாவாசை-24; பௌர்ணமி-9; ஏகாதசி -5/6, 20

முகூர்த்த தினங்கள்– மார்ச் 5, 6, 12, 13, 22, 30

நந்த வனத்திலோர் ஆண்டி –  – அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தானொரு தோண்டி- அதைக்

கூத்தாடிக்  கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

—கடுவெளிச் சித்தர்

மார்ச் 1 ஞாயிற்றுக் கிழமை

நெளிந்து நெளிந்து  நெளிந்து   ஆடு பாம்பே சிவன்

சீர்பாதங் கண்டு தெளிந்து ஆடு பாம்பே!

–பாம்பாட்டிச் சித்தர்

XXX

மார்ச் 2 திங்கட்  கிழமை

நாதர் முடிமேல் இருக்கும் நாகப் பாம்பே

நச்சுப் பையை வைத்திருக்கும் நல்ல  பாம்பே

பாதலத்திற் குடிபுகும் பைங்கொள்  பாம்பே

பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே !

XXx

மார்ச் 3 செவ்வாய்க் கிழமை

எட்டு மலைகளைப்  பந்தாய் எடுத்து எறி குவோம்

 ஏழு கடலையும் குடித்து ஏப்பமி டுவோம்

மட்டுப்படா மணலையும் மதித்து விடுவோம்

மகராசன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!

XXX

மார்ச் 4 புதன் கிழமை

மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்

முந் நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்

தாண்டி வரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்

தார் வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!

XXX

மார்ச் 5 வியாழக் கிழமை

வேந்தன் செய்த சிருட்டிகள் போல வேறு செய்குவோம்

வேதனையும் எங்கள் கீழே மேவச் செய்குவோம்

நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்

நாங்கள் செய்யும்  செய்கை இதென்று ஆடுபாம்பே!

XXX

மார்ச் 6 வெள்ளிக் கிழமை

அறுபத்து நாலு கலையாவும் அறிந்தோம்

அதற்கு மேல் ஒரு கலையான தறிந்தோம்

மறுப்பற்றுச் சற்றுமில்லா மனமும் உடையோம்

மன்னனே ஆசான் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 7 சனிக் கிழமை

சீறுபு லி யானை யாளி சிங்க முதலாய்ச்

சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்

வீறு பெருங் கடவுளை எங்களுடனே

விளையாடச்  செய்குவோம் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 8 ஞாயிற்றுக் கிழமை

யானை சேனை தேர் பரியாவும் அணியாய்

யமன் வரும்போது துணை யாமோ அறிவாய்

XXX

மார்ச் 9 திங்கட் கிழமை

முக்கனியும் சர்க்கரையும் மோதகங்களும்

முதிர் சுவைப் பண்டங்களும் முந்தி உண்டவாய்

மிக்க உயிர் போன பின்பு  மண்ணை விழுங்க

மெய்யாகக் கண்டோம் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 10 செவ்வாய்க் கிழமை

வெயில் கண்ட மஞ்சள் போன்ற மாதர் அழகை

விரும்பியே மேல் விழுந்து மேவு மாந்தர்

ஒயில் கண்டே இலவு காத்து ஓடும்  கிளி போல்

உடல் போனால் ஓடுவாரென்று என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 11 புதன் கிழமை

மயில் என்றும் குயில் என்றும் மாணிக்கம் என்றும்

மானே என்றும் தேனே என்றும்  வான் அமுதென்றும்

ஒயிலான வன்ன மயிற் கொத்தவளென்றும்

ஓதாமற் கடிந்தோம் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 12 வியாழக் கிழமை

நாறு மீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்

நாளும்  கழுவினும் அதன் நாற்றம் போமோ

கூறும் உடல் பல நதியாடிக் கொண்டதால்

கொண்ட மலம் நீங்கா தென்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 13 வெள்ளிக் கிழமை

கோபம் என்னும் மதயானை கொண்ட மதத்தைக்

கூர்கொள் யுத்தி அங்குசத்தால் கொன்று விட்டேங்காண் 

தீபமென்னுஞ் சிற்சொரூபச் செய்ய பொருளை

சேர்ந்துறவு கொண்டோம் என்று ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 14 சனிக் கிழமை

மனமென்னும் குதிரையை வாகனமாக்கி

மதியென்னும் கடிவாளம் வாயிற் பூட்டி

சினமென்னும் சீனியின் மேற் சீராய் ஏறித்

தெளிவிடம் சாரி விட்டு ஆடுபாம்பே

Xxx

மார்ச் 15 ஞாயிற்றுக் கிழமை

உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி ?

உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி ?

புளியிட்ட செம்பிற் குற்றம் போமோ ?அஞ்ஞா னம்?

போகாது மூடருக்கென்று ஆடுபாம்பே !

xxx

மார்ச் 16 திங்கட்  கிழமை

சதுர் வேதம் ஆறுவகை சாத்திரம் பல

தந்திரம் புராணங்களை சாற்றும்  ஆகமம்

விதம் விதமானவான  வேறு நூல்களும்

வீணான நூல்களே என்று ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 17 செவ்வாய்க் கிழமை

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாது போல்

எண்திசை திரி  ந்துங் கதி எய்தல் இல்லையே

நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே

நாதன் பாதம் காணார்கள் என்று ஆடுபாம்பே !

xxxx

மார்ச் 18 புதன்  கிழமை

ஆயிரத்தெட்டித ழ் வீட் டில்  அமர்ந்த சித்தன்

அண்டமெல்லாம்  நிறைந்திடும் அன்புதச் சித்தன்

காயமில்லாது ஓங்கி வளர் காரண ச் சித்தன்

கண்ணுள் ஒளியாயினான் என்று ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 19 வியாழக் கிழமை

கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிடார்களே

விண்டவர்கள் ஒருகாலும் கண்டிடார்களே

கொண்டகோலம் உள்ள வர்கள்  கோள் நிலை காணார்

கூத்தாடி கூத்தா டியே நீ ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 20 வெள்ளிக் கிழமை

தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்

தனி மந்திரஞ் சொல்லுவார் பொருளை அறியார்

Xxx

மார்ச் 21 சனிக் கிழமை

ஓம்காரக்  கம்பத்தின் உச்சி மேலே

உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்

ஆங்காரக் கோபத்தை அறுத்து விட்டே

ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக்கொண்டே

Xxxx

மார்ச் 22 ஞாயிற்றுக் கிழமை

சூத்திரக் குடத்திலே பாம்பை அடைப்போம்

சுழுமுனைக் குள்ளேயே சுகித்திருப்போம்

Xxxx

மார்ச் 23 திங்கட் கிழமை

பஞ்ச கருவியைப் பலி கொடுப்போம்

சிவ்வுருவாகியே  நின்றோம் என்றே

சீர் பாதங் கண்டு தெளிந்து

Xxx

மார்ச் 24 செவ்வாய்க் கிழமை

தா ந்திமி திமி தந்தக் கோனாரே

தீந்திமி திமி திந்தக் கோனாரே

ஆனந்தக் கோனாரே – அருள்

ஆனந்தக் கோனாரே

–இடைக்காட்டுச் சித்தர்

Xxx

மார்ச் 25 புதன் கிழமை

மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே – முத்தி

வாய்த்ததென்று என்ணேடா தாண்டவக்கோனே

சி னமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே – முத்தி

சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே

Xxxx

மார்ச் 26 வியாழக் கிழமை

ஆறாதாரத் தெய்வங்களை நாடு

அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு

Xxxx

மார்ச் 27 வெள்ளிக் கிழமை

ஆதி பகவனையே பசுவே !

அன்பராய் நினைப்பாயேல்

சோதி  பரகதிதான் பசுவே !

சொந்தமது ஆகாதோ?

Xxx

மார்ச் 28 சனிக் கிழமை

மனம், வாக்கு, காயம் எனும் வாய்த்த பொறிக்கு எட்டாத

தினகரனை நெஞ்சசமத்தில் சேவித்துப் போற்றீரே

xxx

மார்ச் 29 ஞாயிற்றுக் கிழமை

பாலிற்  சுவை போலும் பழத்தில் மது போலும்

நூலிற் பொருள் போலும் நுண் பொருளைப் போற்றீரே

Xxxx

மார்ச் 30 திங்கட்  கிழமை

கை  விளக்குக் கொண்டு கடலில் வீழ்வார் போல்

மெய் விளக்குன்னுளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே

Xxx

மார்ச் 31 செவ்வாய்க் கிழமை

அன்னையைப் போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்

முன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே

Xxxx subham xxxx

ஒரு வெண்பாவில் மூன்று வெண்பா – திரிபங்கி! (Post.7633)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7633

Date uploaded in London – 29 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

ஒரு வெண்பா பாடுவது என்பதே மிகவும் கடினமான காரியம். தமிழுக்கு உரிய தனிப் பெருமை இந்த வெண்பா தான். உலகின் வேறு எந்த மொழிகளிலும் வெண்பா இல்லை.

சம்ஸ்கிருதத்தில் சிறந்த வல்லுநராய் கவி பாடும் கவிவாணர் கூட வெண்பா பாடுவது என்பது கஷ்டம் தான் என்று ஒப்புக் கொள்வர்.

தெலுங்குக் கவிராயர்களுக்கும் கூட இதே கருத்து உண்டு.

ஆக இப்படிப்பட்ட ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்களை அமைக்கும் திறன் படைத்த ஒரு கவிஞரை என்னவென்று கூறிப் புகழலாம்?

இப்படி ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்களை அமைப்பது திரிபங்கி – மூன்று வெண்பா எனப்படும்.

தமிழகத்தின் தலை சிறந்த கவிஞர்கள் இந்த திரிபங்கியை – மூன்று வெண்பாவை ஒரு வெண்பாவில் அடக்கி – பாடியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக இராமச்சந்திரகவிராயர் இயற்றிய ஒரு திரிபங்கியை இங்கே பார்க்கலாம்.

அருணாசலேஸ்வரர் மீது பாடிய வெண்பா இது.

தலைவியிரங்கல் என்ற துறையின் பால் வரும் வெண்பா இது.

சலமேதோ சங்கந்தா பூணாரந் தாமே

கலைதா நாற்புங்கவன் மால்காணாப் – புலவுடைய

கங்கரா கோணாகலா மதியக் கோடீர

சங்கரா சோணா சலா.

இதன் பொருள் :-

நாற் புங்கவன் மால் காணா – உயர்ந்த தேவனாகிய திருமாலும் காணாத

புலவு உடைய – புலால் நாற்றத்தை உடைய

கம் – பிரமகபாலத்தைத் தாங்கிய

கரா – கரத்தை உடையவனே

கோணா – மாறுபடாத

கலா மதியம் – ஒரு கலையாகிய சந்திரனை அணிந்த

கோடீர – ஜடாபாரத்தை உடையவனே

சங்கரா – சங்கரனே

சோணாசலா – அருணாசலனே

சலம் ஏதோ – (இந்தக்) கோலத்திற்குக் காரணம் ஏதோ

சங்கம் தா – சங்க வளையலைக் கொடு

பூணாரம் தா – ஆபரணங்களைக் கொடு

மேகலை தான் – மேகலையைக் கொடு

இந்த வெண்பாவில் கோணாகலாமதியம் என்பதனை கோன் ஆகு அல் ஆம் மதியம் எனப் பிரித்து கோணலாகிய இரவில் தோன்றும் பிறை சந்திரன் என்று இன்னொரு பொருளும் கொள்ளலாம்.

அருணாசலேஸ்வரருடைய பவனியைத் தரிசித்த பின்னர் வளையல் முதலியவற்றை இழந்த தலைமகள் அதைத் திருப்பித் தருமாறு வேண்டிக் கூறியது இது.

சோணாசலம் என்பதை சோணம் அசலம் எனப் பிரிக்க வேண்டும். இப்படிப் பிரித்தால் சிவந்த மலை என்ற பொருள் வரும்.

அருணாசலம் என்பதற்கும் இதுவே தான் பொருள்.

இப்போது சங்கந்தா என்ற வார்த்தையை ஆரம்பமாகக் கொண்டு இந்த வெண்பாவைப் படித்தால் ஒரு புதிய வெண்பா அர்த்தம் மாறாமல் வரும். ஆக இது இரண்டாவது வெண்பா.

பின்னர் பூணாரந்தா என்ற வார்த்தையை ஆரம்பமாகக் கொண்டு இந்த வெண்பாவைப் படித்தால் இன்னொரு புதிய வெண்பா அர்த்தம் மாறாமல் வரும். ஆக இது மூன்றாவது வெண்பா.

இராமசந்திர கவிராயர் சிறந்த புலவர் என்பதால் சிக்கலான சித்திர பந்தப் பாடல்கள் ஏராளமானவற்றைப் புனைந்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

தமிழில், ஆயிரக் கணக்கில் உள்ள இந்த சித்திர பந்தப் பாடல்களை முழுதுமாகத் தொகுப்பார் தான் இல்லை!

 tags – இராமசந்திர கவிராயர், வெண்பா, மூன்று , திரிபங்கி, 

–subham–

Muslim Horse Killed; Tamil Horse Won துலுக்கன் குதிரை தோற்றது; தமிழன் குதிரை வென்றது (Post No.7632)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7632

Date uploaded in London – 29 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Muslim Horse Killed; Tamil Horse Won துலுக்கன் குதிரை தோற்றது; தமிழன் குதிரை வென்றது (Post No.7632)

1850 ஆம் ஆண்டு தமிழை ரசித்துப்படிக்க ஒரு குட்டிக் கதை

முதலில் பழைய தமிழைப் படியுங்கள் . புரியாவிட்டால் நான் சொல்லும் கதையைப் படியுங்கள்.

ஒரு தமிழன் வெளியூர் செல்கையில் கட்டுச் சாதம் சாப்பிடுவதற்காக தனது குதிரையை குளத்தின் கரையில்,ஒரு மரத்தில் கட்டினான். அவ்வழியே வெளியூருக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு துலுக்கன் தனது குதிரையையும் அந்த மரத்தில் கட்டப் போனான்.

“டேய் அங்கே கட்டாதே ; என் குதிரை ரொம்ப பொல்லாதது” என்று பல முறை சொன்னான். அப்படியும் முரட்டுத் துலுக்கன் அதே மரத்தில் கட்டி விட்டு அவனது சாப்பாட்டு மூட்டையை அவிழ்த்தான். பொல்லாத தமிழ் குதிரை, துலுக்கன் குதிரையைக் கடித்துக் குதறி கொன்று போட்டது. துலுக்கன் சண்டைக்கு வந்தான். அவன் வே ட்டியைப் பிடித்து, எனக்கு நஷ்ட ஈடு கொடு  என்றான் . தமிழன் தான்  சொன்னதையே சொல்ல, அவனைத் துலுக்கன் மாஜிஸ்டிரேட்டிடம் அழைத்துச்  சென்று தனது தரப்பை எடுத்துரைத்தான்.

தமிழன் தரப்பை வியாதிபதி கேட்ட போது அவன் வாய் மூடி மௌனியாக இருந்தான். அடப் பாவமே, இவன் ஊமை அல்லவா , உன்னிடம் பேசினான் என்றாயே? என்றார்.

துலுக்கன் சொன்னான் – ஐயோ அவனை நம்பாதீர்கள்; அவன் பாசாங்கு செய்கிறான். என்னிடம் இரண்டு முறை சொன்னான்- “மரத்தில் குதிரையைக் கட்டாதே” என்றான்.

மாஜிஸ்திரேட் சிரித்துக்கொண்டே “அப்படியா சொன்னான். அப்படியானால் உனக்கு அவன் நஷ்ட ஈடு எதுவும் தர வேண்டியது இல்லை. போ” என்றார்.

துலுக்கன் தோற்றான்; தமிழன் வென்றான்.

1850ம் ஆண்டு கதை

ஒரிஜினல் தமிழில் படியுங்கள். சுவையாக இருக்கும்.

subham

நூறு எழுத்துக்களில் எத்தனை மூலிகைகள் உள்ளன? (Post No.7631)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7631

Date uploaded in London – 28 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 2822020

ஒவ்வொரு மூலிகைக்கும் துவங்கும்  எழுத்தும் அதற்கான எண்களும் இதோ –

1அதி….. 7.வல்…… 11.திப்….. 15.நா…. 19.கண்….. 27.சிறு….. 33. நெ…… 37.மி…. 40.அரு…. 46.ஆடா….. 50.ஆடு……58.குங்…… 64.குப் …….69. முட…… 76.கீழா….. 81.நில….. 86.பொன்…. 92.கடு….. 97. வி……….

விடை கீழே உளது………………………

Answers

1அதிமதுரம் 7.வல்லாரை 11.திப்பிலி 15.நாயுருவி 19.கண்டங்கத்திரி 27.சிறுவழுதுணை 33. நெருஞ்சி 37.மிளகு 40.அருகம்புல் 46.ஆடாதோடை 50.ஆடுதின்னாப்பாலை, 58.குங்கிலியம் 64.குப்பைமேனி 69. முக்கத்தான் 76.கீழாநெல்லி 81.நிலவேம்பு, 86.பொன்னாங்காணி 92.கடுக்காய், 97. வில்வம்

–subham–