சங்க இலக்கியத்தில் அமிர்தம், அமிழ்தம், இந்திரன் (Post No.9330)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9330

Date uploaded in London – –2 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

If u need this article in word format, please write  to us

சங்க இலக்கியத்தில் அமிர்தம், அமிழ்தம்

BY LONDON SWAMINATHAN

உலகிலேயே தலை சிறந்த இந்துக்கள் தமிழர்கள்தான். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திரன், அமிர்தம் பற்றிய குறிப்புகள் தமிழில் கிடைக்கின்றன.

இந்திரன் பற்றி சங்க இலக்கியத்தில் குறைந்தது ஐந்து இடங்களில் செய்திகள் கிடைக்கின்றன. பிற இடங்களிலும் தொல்காப்பியத்திலும் வேந்தன் முதலிய பெயர்களால் இந்திரன் பற்றிய குறிப்புகள் உள .தமிழர்கள் வாழ்வில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திரனும் அமிழ்தமும் இரண்டறக் கலந்துவிட்டனர் ; ஆண்கள்  பெயர்களில் மட்டும் இன்றி பெண்கள் பெயர்களிலும் அம்ருதா

tags —சங்க இலக்கியம், அமிர்தம், அமிழ்தம், இந்திரன், 

நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்! (Post No.5309)

Written by S Nagarajan

Date: 11 August 2018

 

Time uploaded in London – 7-00 AM  (British Summer Time)

 

Post No. 5309

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்!

 

ச.நாகராஜன்

 

அதிவீரராம பாண்டியன் இயற்றிய தமிழ்க் காவியமான நைடதம் சிருங்காரச் சுவை சொட்டச் சொட்ட எழுதப்பட்ட ஒன்று.

இதில் சுயம்வரப் படலம் குறிப்பிடத் தகுந்த ஒன்று.

திரிலோகத்தில் உள்ள அரசர்களெல்லாம் ஒருங்கு கூடி சுயம்வர மண்டபத்தில் வந்து சேர தமயந்தியின் தந்தையான வீமராஜன் மகிழ்ச்சியும் திகைப்பும் அடைந்தான்.

 

 

அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தன் மகளை மணம் செய விரும்புவது குறித்து மகிழ்ச்சி,

ஆனால் இவரை இன்னார் என்று நல்ல விதத்தில் அறிமுகப்படுத்தக் கூடியவர் இந்த மண்ணுலகில் இல்லையே என்பதை நினைத்து திகைப்பு.

 

 

நாரணனை மனம் உருக வேண்டினான். நாரணனோ பிரம்மாவை நோக்கி, ‘பிரம்ம தேவா!. இவர் இன்னின்னார் என்று கூற கலைமகள் அன்றி வேறு யார் இருக்கிறார்கள்” என்று கேட்டார். பிரம்மா கலைமகளை நோக்கி, “நீ சென்று அரசர் கூட்டத்தை தமயந்திக்கு இவர் இன்னார் என்று விளக்கி வருவாய்” என்று பணிக்க கலைமகள் சுயம்வர மண்டபம் வந்து ஒவ்வொருவரைப் பற்றியும் தமயந்திக்கு எடுத்துக் கூற ஆரம்பித்தாள்.

 

 

42 பாடல்களில் அரசர்கள் பற்றிய அறிமுகம் விளக்கப் படுகிறது.

தமயந்தியை மணக்க வேண்டி சுயம்வர மண்டபத்திற்கு வந்த இந்திரன், அக்கினி தேவன், யமன்,வருணன் ஆகியோரை விளக்கும் பாடல்கள் நளனுக்கும் இவர்களுக்குமாக அமைந்துள்ள சிலேடைப் பாடல்களாக அமைந்துள்ளன.

இந்திரனுக்கும் நளனுக்கும் சிலேடை:

 

கலை வளர்திங்க ளென்னக் கடிகமழ் கமலம் வாட்டுந்

திலக வாண் முகத் தாயிங்கு வைகிய சினவேற் காளை

வலனுடை வயிர வாளான் கற்பகமலிந்த தோளான்

பலபகைவரை முன்செற்ற பகட்டெழின் மார்பினானே.

 

இதன் பொருள் :- கலைமகளுடைய அருளும், நல்ல வாசனை பொருந்திய தாமரை மலரும் வாடி விடும்படியான, திலகமிட்ட சந்திரனைப் போன்ற முகத்தை உடைய தமயந்தியே! இங்கே இருக்கும் அரசன் கோபமும் வீரமும் ஒருங்கே பெற்றும், வலனைக் கொன்ற வெற்றியுடையவனும், வெற்றி மிகுந்த கூரிய வாளை உடையவனும், கற்பக மாலை சூடியவனும், மலை பிளக்கும் தோழனும், பகைவரை முதலில் ஜெயித்து  பெருமை பொருந்திய அழகிய மார்பினனுமான இந்திரன் ஆவான்.

இந்த அரசனின் வர்ணனை – கோபமும் வீரமும் ஒருங்கே பெற்றவன், கூரிய வாளை உடையவன், பகைவரை ஜெயித்தவன் ஆகியவை நளனுக்கும் பொருந்துபவை. ஆகவே இந்திரனையும் நளனையும் குறித்த சிலேடைப் பாடலாக இது அமைகிறது.

 

அக்னிதேவனுக்கும் நளனுக்கும் சிலேடை:

நகைமதி முகத்தாயீங்கு வைகிய நாமவேலான்

புகலுரும் வெகுளி யுள்ளத் தொருவினான் பொங்கி யார்த்த

பகையிருட் பிழம்பு சீக்கும் பலசுட ருமிழும் வாளான்

றகைமைசால் புலவ ரேத்துந் தால மேழுடைய கோவே

 

இதன் பொருள் :

சந்திர பிம்பம் போன்ற முகத்தை உடைய தமயந்தியே! (நகை மதி முகத்தாய்) இங்கு இருப்பவர் யார் எனில் சொல்ல முடியாத அளவு கோபமும் ஒளியும் பொருந்தியவனுமான அக்னி தேவன்.

இருளை ஒத்த பகைவரை தன் வாளால் வென்று பெருமை மிக்க புலவர்களால் சத்சத் தீவை உடையவன்.

 

 

தீவு தேவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அக்னியையே முதலாவதாக பூஜிப்பதாலும் அவர்களுக்கு வேண்டிய ஹவிர் பாகங்களை அக்னி மூலமாகப் பெறுவதாலும் வேதத்தில் அக்னியை மூலமாகச் சொல்வதாலும் இருள் பிழம்பை ஓட்டி ஒளி தரும் ஏழு நாவை உடையவன் ஆதலாலும் தேவர்களால் புகழப்படுவதாலும் அக்னி தேவன் இவ்வாறு புகழப் படுகிறான்.

 

 

அக்னியைக் கூறும் போது தேவர்கள் என்றும் நளனைக் குறிப்பிடும் போது புலவர்கள் என்று கூறுவதும் காண்க. தேவர்களும் புலவர்களும் சிலேடையாகக் கூறப்படுகிறது.

 

யமனுக்கும் நளனுக்கும் சிலேடை

அஞ்சன மெழுத லாற்றா தம்மவோ வென்று நையும்

வஞ்சிநுண் ணிடையா யிங்கு வைகிய நாமவேலா

னெஞ்சலி றருமன் றெண்ணி ரிருங்கட லுலக மெல்லாஞ்

செஞ்சவே யோசை போய தீதறு செங்கோல் வேந்தே

 

இதன் பொருள் : அஞ்சன மை எழுதும் போது அதன் கனம் கூடத் தாங்க மாட்டாது நைந்து போகும் நுண்ணிய இடையை உடையவளே! இதோ இருக்கின்றானே இவன் யம தருமன்! பயமுறுத்தும் வேல் படையை உடையவன். செவ்விய கால தண்டாயுதத்தைக் கொண்டு கடல் சூழ்ந்த உலகை புகழ் பரப்பச் செங்கோலால் ஆள்பவன்!

நளனும் இருங்கடல் உலகம் ஆள்பவன். செங்கோலால் ஆட்சி செய்து புகழ் பெற்றவன். ஆக ஈற்றடி இரண்டினாலும் நளனுக்கும் யமனுக்கும் சிலேடை புகலப்பட்டது.

 

வருணனுக்கும் நளனுக்கும் சிலேடை :

பாற்றிரை யமிரத மூறும் படரொளிப் பவளச் செவ்வாய்

கோற்றொடி மடந்தை யீங்கு வைகிய குலவுத் தோளான்

மகற்றருஞ் சிறப்பின் மிக்க வளங்கெழு புவன வேந்த

னாற்றிசை பரப்புஞ் சூழ்போ நலங்கெழு நேமி வேந்தே

 

இதன் பொருள் ; பாற்கடலில் தோன்றிய அமிர்தமென ஊறுகின்ற பவளச் செவ்வாயை உடையவளே! அழகிய வளையலை அணிந்துள்ளவளே! இங்கு  வந்திருப்பவன் நன்மை பொருந்திய கடல் அரசனான வருண தேவன்.

 

 

புவனம் என்றால் நீர் ; நீருக்கு அரசன் வருணன்

புவனம் என்றால் பூமி : பூமிக்கு அரசன் நளன்

நேமி என்றால் கடல். வருணனைக் குறிப்பது.

நேமி என்றால் சக்கரம். நளனைக் குறிப்பது.

ஆக வருணனுக்கும் நளனுக்கும் சிலேடை புகலப்பட்டது.

 

இப்படி இந்திரன், அக்னி, யமன், வருணன் ஆகியோரின் சிறப்பியல்புகள் அனைத்தும் ஒருங்கே கொண்டவன் என்று குறிப்பால் தமயந்திக்கு கலைமகள் சொல்லிக் கொண்டே வருகிறாள் என்பது சுவையான செய்தி!

அதிவீரராம பாண்டியனின் நைடதம் கற்போர்க்கு ஔடதம்.

***

 

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்! (Post No. 2662)

indra in thailand

Compiled by london swaminathan

 

Date: 25 March 2016

 

Post No. 2662

 

 

Time uploaded in London :–  12-10

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Already published in English; Tamil Translation: London swaminathan

 

எண்ணிய முடிதல் வேண்டும்;

நல்லவே எண்ணல் வேண்டும் – மஹா கவி பாரதி

 

வேத மந்திரங்கள், பாரதி பாடல்கள் முதலியவற்றில், ஆக்கபூர்வமான சிந்தனைகள் இருப்பதால் அவைகளைக் கேட்பதாலும், படிப்பதாலும் பலனுண்டு. ‘’பாஸிட்டிவ் திங்கிங்’’- ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்று சிந்திப்பதும், மகிழ்ச்சியுடன் இருப்பதும் வெற்றியை ஈட்டித் தரும். இதோ ஒரு குட்டிக்கதை!

தமிழாக்கம்- லண்டன் சுவாமிநாதன்

indra

இந்திரன், தேவ லோகத்திலிருந்து, பூமிக்கு வந்தான்; கொஞ்சம் வேடிக்கை பார்க்கத்தான்!

 

ஒரு காட்டின் வழியே செல்லுகையில், தனது தவறுகளுக்காக பிராயச்சித்தம் செய்யும் ஒருவன் ஒரு மரத்தின் அடிப்பகுதியாக மாறிவிட்ட காட்சியைக் கண்டான். அவன் இன்னும் தவம் செய்துகொண்டிருந்தான். இந்திரனைக் கண்டவுடன், நான் முக்தி (விடுதலை) பெற இன்னும் எவ்வளவு காலம் தவம் செய்ய வேண்டும்? என்று சோகமாகக் கேட்டான். உடனே இந்திரன், இன்னும் பத்து ஆண்டுகள் ஆகுமென்றான். அவன், இன்னும் பத்து ஆண்டுகளா? என்று கேட்டான். கேட்ட மாத்திரத்தில் அவன் நரகத்துக்குப் பறந்து போய்விட்டான்.

 

இந்திரன், அதே காட்டில், தொடர்ந்து பயணம் செய்கையில் இன்னுமொரு காட்சியைக் கண்டான். தனது தவறுகளுக்காக வருந்தும் வேறு ஒருவன், ஒரு மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடிக் கொண்டிருந்தான். அவனுக்குக் கொஞ்சம் ஆன்மீக தாகம் இருந்தது. இந்திரனைக் கண்டவுடன், நான் முக்தி (விடுதலை) பெற இன்னும் எவ்வளவு காலம் தவம் செய்ய வேண்டும்? என்று மகிழ்ச்சியுடன் கேட்டான்.

 

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தால் விடுதலை கிடைக்கும் என்று இந்திரன் சொன்னான்.

பூ! வெறும் ஆயிரம் ஆண்டுகள்தானா! என்று சொல்லிக்கொண்டே தாவிக்குதித்து மரத்தைச் சுற்றினான். அடுத்த நொடியில் அவன் ராக்கெட் வேகத்தில் சுவர்க்கத்துக்குப் போய்விட்டான்.

 

கண்ணன் கூறுவான்:–

உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானமவசாதயேத்

ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன (பகவத் கீதை 6-5)

தன்னைத்தானே ஒருவன் உயர்த்திக்கொள்ள வேண்டும்; தன்னையே தாழ்த்திக்கொள்ளக் கூடாது; நிச்சயமாக தானே ஒருவனுக்கு உறவினன்; தானே ஒருவனுக்குப் பகைவன் (பகவத் கீதை 6-5).

–சுபம்-

பிராமணர்களை இந்திரன் கொலை செய்தது ஏன்?

Indra (1)

கட்டுரையாளர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1071; தேதி:- 29 May 2014.
(இக் கட்டுரை ஏற்கனவே ஆங்கிலத்தில் என்னால் வெளியிடப்பட்டது)

வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே — பாரதியார்

உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் இந்திரனின் சாகச் செயல்கள்தான் அதிக இடத்தைப் பிடிக்கின்றன. நாலில் ஒரு பகுதி துதிகள் இந்திரனைப் (250 துதிகள்) பற்றியதே. தமிழினத்தின் மிகப் பழைய நூலான தொல்காப்பியமும் இந்திரனை , தமிழர் கடவுளாகப் போற்றுகிறது. கரிகால் சோழன் நடத்திய பெரிய விழா இந்திர விழா! ஆனால் சங்க இலக்கிய த்தின் 18 நூல்களில்– 27,000 வரிகளில்— இல்லாத ஒரு அபாண்டப் பொய்யை வெள்ளைக்காரகள் சொன்னதை இன்றுவரை பல தமிழக அறிவிலிகள் பரப்பி வருகின்னர்.

இந்திரன் என்பவன் ஆரிய இனத் தலைவன் என்றும் அவன் தஸ்யூக்கள் என்னும் கருப்பர்களைக் கொன்றதாகவும் வெளி நாட்டு ‘’அறிஞர்கள்’’ எழுதிவருகின்றனர். உலகிலேயே அதிகமான பழைய நூல்களைக் கொண்டது சம்ஸ்கிருத மொழி. தமிழைப் போல பன்மடங்கு இலக்கியம் உடைய, சம்ஸ்கிருத மொழியில் ஒரு நூலிலும் ஆரிய ,திராவிட இனவாதக் கொள்கை இல்லை.தமிழிலும் இல்லை.

வெளிநாட்டுக்காரர்கள் எழுதியதற்கு நேர் மாறான விஷயங்கள்தான் நம் இலக்கியத்தில் இருக்கின்றன.
1.அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் பிராமணர்களாகிய பிருஹஸ்பதியும் சுக்ராசார்யாரும்தான் ஆசிரியர்கள். இதை சங்க இலக்கியப் பாடல்களும் உறுதி செய்வதை ஏற்கனவே கொடுத்துவிட்டேன்.

2.அசுரர், தேவர், நாகர் முதலிய யாவரும் ஒரு தாய் வயிற்றுப் புதல்வர்கள்.
3.தஸ்யூகளைக் கொன்ற இந்திரன் பிராமணர்களையும் கொன்றான். அவன் இப்படிப் பிராமணர்களைக் கொன்றதை, இந்தியா முழுதும் உள்ள ஸ்தல புராணங்களும் ,ராமாயண மஹாபாரத, புராணங்களும் பக்கம் பக்கமாக எழுதி இருக்கின்றன. முப்பதுக்கும் மேலான அசுரர்களைக் கொன்ற இந்திரனின் மிகப் பெரிய வெற்றி– விருத்திராசுரனைக் கொன்றதுதான். அவன் ஒரு பிராமணன். அவனது அண்ணன் திரிசிரஸ் இந்திரனால் கொல்லப்பட்டான். அவனும் ஒரு பிராமணன்.

4.இந்திரனால் மானபங்கப்படுத்தப்பட்ட அஹல்யையும் பாப்பாத்தி.! இந்திரனால் எத்தி உதயப்பட்ட முனிவன் அகத்தியனும் பார்ப்பனன். இந்திரனைப் பிடித்துக்கொண்ட மிகப்பெரிய பாவம்—பிரம்மஹத்தி. அதாவது பிராமணனைக் கொன்றால் வரும் பாபம். இதற்காக அவன் இந்தியா முழுதும் சென்ற கோவில் குளம், ஆறு, மலை, ஏரி பற்றி உள்ள ஸ்தல புராணங்கள் ஆயிரம் ஆயிரம்!!

18 Banteay Srei Indra on Airavata, photograph by Anandajoti Bhikkhu
Indra in Cambodia

இவ்வளவு ஆதாரங்கள் இருக்கையில் வெள்ளைக்கார, வெளிநாட்டுக்கார ‘’அறிஞர்கள்’’ எப்படி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தார்கள்? அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். இந்து மத நூல்கள் கடல் போலப் பெருகியவை. மற்ற மத நூல்களையோ ஒரே மூச்சில் சில மணி நேரத்தில் படித்து முடித்து விடலாம். அவை எல்லாம் நேற்று வந்தவை. ஆனால் காலத்தைக் கடந்து நிற்கும் இந்து மதத்திற்கோ பல்லாயிரம் நூல்கள். ஆங்கிலம் படித்த ‘அரைவேக்காடு’கள், இந்துமத ராமாயணத்தையோ, மஹாபாரதத்தையோ ‘’ஒரிஜினலில் ‘’முழுக்க படித்ததே இல்லை. அவர்கள் படிப்பதெல்லாம் ஆங்கிலத்தில் எதிர்மறையில் எழுதப்பட்ட கட்டுரைகள் அல்லது வெற்று வேட்டுப் பட்டிமன்றங்கள்தான். மாதா, பிதா, குரு ஆகியவர்களை விட அதிகம் மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆங்கிலத்தில் எழுதப்படும் கட்டுரை யாளர்களே என்பது அந்த அறிவிலிகளின் ஏகோபித்த முடிவு.

இந்த பலவீனங்களை அறிந்த வேற்று மத, வெளிநாட்டு ‘’அறிஞர்கள்’’ இந்து மதத்தில் எந்தப் புத்தகத்தில் எந்த வரியை வேண்டுமானலும் எடுத்து எப்படி வேண்ண்டுமானாலும் ஒட்டுப்போட்டு என்ன வேண்டுமானாலும் எழுதி நம்மிடமே பி.எச்டி. பட்டம் வாங்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். பிரபல வெளிநாட்டுப் புத்தக பதிப்பாளர்கள் மூலம் கோடிக் கணக்கில் பணம் பெற முடியும் என்றும் தெரியும். அவர்கள் வேற்று மதங்களைப் பற்றி இப்படிப் புத்தகம் எழுதுவதும் இல்லை. எழுதினாலும் விற்காது. இந்து ஒருவன் தான் ஏமாந்த சோணகிரி! ஊருக்கு இளத்தவ பிள்ளையார் கோவில் ஆண்டி!!

நம்முடைய இலக்கியம், இலக்கிய கர்த்தாக்கள் ஆகியவர்களுக்கு அவர்களே பொய்மையான ஒரு காலத்தையும் எழுதி– ‘இது முதல், அது பின்னது’– என்று சொல்லவும் கற்றனர். நமது சங்கத் தமிழ் இலக்கியத்தையோ, தேவார திருவாசக, திவ்வியப் பிரபந்தங்களையோ வாழ்நாளில் தொட்டுப் பார்க்காத தமிழ் அஞ்ஞானிகள், கேள்விகளை மட்டுமே கேட்கப் பழகிக்கொண்டார்கள். இதனால் இந்திரன், பிராமணர்களைக் கொன்றதையோ, இராம பிரான் ராவணன் என்னும் பிராமணனைக் கொன்றதையோ பெரிது படுத்தாமல், இதற்கு எதிர்மறையான கருத்துக்களை மட்டும் பிரபலப்படுத்தினர்.

Bangkok_Indra_Erawan
Indra in Thailand

திரிசிரஸ், விருத்திரன் கொலை
த்வஷ்டா என்ற முனிவருக்கு திரிசிரஸ் என்ற மூன்று தலை உடைய முனிவர் பிறந்தார். அவர் ஒரு தவ சீலர், மகா முனிவர். தனது பதவிக்கு ஆபத்து வரும் என்று அஞ்சிய இந்திரன் அவரைக் கொன்றான். அவன் தந்தை கோபம் அடைந்து, விருத்திரன் என்பவனை யாகத்தீயில் உண்டாக்கினான். அவனைக் ‘’கடல் நுரை’’ மூலம் இந்திரன் கொன்றான். இதுதான் சுருக்கமான கதை. இருவரும் பிராமணர்கள். அவனைப் ப்ரம்மஹத்தி பற்றிக்கொண்டது.

வேதங்களில் பல விஷயங்கள் ரகசிய, சங்கேத மொழியில் சொல்லப்பட்டிருப்பதால் தமிழர்கள் வேதங்களுக்கு ‘’மறை’’ என்று அழகான பெயர் வைத்தனர். இங்கே விருத்திரன் என்பது மனிதனா, இயற்கை நிகழ்ச்சியா (வறட்சி) என்று பல அறிஞர்களுக்குக் குழப்பம். வேத, இதிஹாசபுராணம் முழுதும் வரும் இந்திரன் ஒருவரா? பலரா? என்பதிலும் எல்லோருக்கும் குழப்பம்.

இந்திரன் என்பது ஒரு ஆள் அல்ல, அது ஒரு ‘’டைட்டில்’’—அதாவது பிரதமர், ஜனாதிபதி, சக்ரவர்த்தி, மன்னர், தலாய் லாமா, சங்கராச்சார்யார், போப்பாண்டவர் என்பது போல அவ்வப்போது பதவிக்கு வருவோர் பெறும் பட்டமா என்பதும் விளக்கப்படவில்லை. மேலும் வேதம் முழுதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வெள்ளைக்காரர்கள் அவன் எப்போது வாழ்ந்தான் என்பதிலும் குழப்பம் அடைந்ததால் பேசாமல் இருந்து விட்டனர். அப்படி ஒரே இந்திரன் தான் என்று யாராவது நினைத்தால் உலகிலேயே அதிகமாக இலக்கியத்தில் அடிபட்ட பெருமை இந்திரன் ஒருவனுக்கே கிட்டும்!!

ஒரே இந்திரன் இவ்வளவு பாடல்களுக்கு முதற்பொருளாக அமைந்திருக்க முடியாது. இந்திரன் என்பது பல பொருள்களில் பயன்படுத்தப்பட்டிருக் கலாம் அல்லது இந்திரன் என்பது மன்னன் போன்ற ஒரு பட்டம். ஆகையால் யார் அந்தப் பதவிக்கு வருகிறார்களோ அவர் இந்திரன் என்றும் கொள்ளலாம்.

மூன்றுதலை திரிசிரஸ் என்பதெல்லாம் சில தத்துவங்களை விளக்கும் சொற்களாக இருக்கலாம். உண்மையில் இப்படிப்பட்ட விளக்கங்களை சாயனர், சங்கராசார்யார், பட்டபாஸ்கரர், அண்மைக் காலத்தில் ஆரிய சமாஜ ஸ்தாபகர் தயானந்த சரஸ்வதி ஆகியோர் கொடுத்துள்ளனர். வேதம் முழுதும் உள்ள விஷயங்களைக் கூறவே தேவாரமும் திருவாசகமும், திவ்வியப் பிரபந்தமும் பாடப்பட்டதாக அவற்றை யாத்தவர்களே திருவாய் மலர்ந்திருக்கின்றனர்.. இதற்குப் பின்னரும் வீம்பு பிடித்து நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான், நான் ஆரிய திராவிடச் சகதியில்— பன்றியைப் போல தொடர்ந்து உழல்வேன்— என்பவரை இறைவனே வந்தாலும் கரையேற்ற முடியாது!!
indra_td58
Indra in painting

Also read my other posts:-
Brahmins deserve an entry into Guinness Book of Records (Jan.26, 2012)

No Brahmins, No Tamil!! (Jan. 14, 2012)
Foreign Travel Banned for Brahmins! (26 Nov.2013)
Fall of Brahmin Kingdoms in Pakistan & Afghanistan (23 Mar.2014)
Indus valley –Brahmins connection (10th May 2014 ,Post No.1034)

Why did Indra kill Brahmins? (25th May 2014,Post No.1064)

உலகம் கெட்டுப்போனதற்கு பிராமணர்களே காரணம்? 4-3-2014 (885)
சிந்துசமவெளி—பிராமணர் தொடர்பு 10-5-14 ( 1033)
1500 ஆண்டு பிராமணர் ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14
பிராமணர்களை இந்திரன் கொன்றது ஏன்? 29-5-14 (1071)

தொல்காப்பியத்தில் இந்திரன்

Indra statue in Bali, Indonesia (tripholiday.net)

 

நாடு பிடிக்க வந்தவர்களும் மதத்தைப் பரப்ப வந்தவர்களும் பரப்பிவிட்ட பெரிய புரளி—தமிழ் கலாசாரம் வேறு, வடக்கத்திய கலாசாரம் வேறு என்ற புரளிதான். ஆனால் நாடு முழுதும் ஒரே கலாசாரம், ஒரே மதம் என்பதற்கு நூற்றுக் கணக்கான சான்றுகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னெழுதப்பட்ட தமிழ் நூல்களில் பளிச்செனத் தெரிகின்றன.

 

சங்க இலக்கியத்தின் 27,000 வரிகளைப் படித்தவர்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் இல்லாத தமிழ் நூல் இல்லை, இந்து மதக் கடவுள் பெயர் இல்லாத தமிழ் நூல் இல்லவே இல்லை என்பது சட்டென விளங்கும். தொல்காப்பியர் முதல் திருவள்ளுவர் வரை எல்லோரும் இப்படி இந்து மதக் கருத்துக்களை விளக்கியுள்ளனர்.

 

தமிழ் நூல்களில் மிகப் பழையது தொல்காப்பியம். கி.மு. முதல் நூற்றாண்டு அல்லது அதற்குப் பின்னர் எழுந்தது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். எனது கருத்தை காரண காரியங்களுடன் ‘தொல்காப்பியர் காலம் தவறு’ என்ற 5 பகுதிக் கட்டுரையில் எழுதியுள்ளேன். வேதத்தில் கூறப்பட்ட நாலு கடவுளர்களை தொல்காப்பியர் தமிழர் கடவுளாகக் காட்டியுள்ளார். அவரது தொல்காப்பியமே நான்கு வேதங்களையும் கரைத்துக் குடித்த மஹா மேதையான அதங்கோட்டு ஆசார்யர் முன்னிலையில் அரங்கேறியது என்று பனம்பாரனார் பகருவார்.

 

மாயோன் (மஹா விஷ்ணு), சேயோன் (சிவப்பு நிற கந்தன்= அக்னி தேவனின் இன்னொரு அம்சம்), வேந்தன் (இந்திரன்), வருணன் ஆகிய நால்வரும் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களுக்குரிய தெய்வம் என்று பொருளதிகாரத்தில் தெளிவாகக் கூறிவிட்டார்.

தொல்காப்பியர் மஹா அறிஞர். இந்திரன் என்பது அரசன் என்ற பொதுப் பெயராகும். அந்தப் பதவியில் அமருவோருக்கு அந்தப் பெயர். வெளி நாட்டு ‘அறிஞர்கள்’, இந்திரன் என்று ஏதோ ஒருவர் இருந்தது போல ஆங்கிலத்தில் எழுதிவிட்டனர். இந்திரன் ஒரு பாரதீயன் என்பதற்கு இன்னும் ஒரு சான்று அவனது யானை வாகனமாகும். யானை ஐரோப்பாவிலோ மத்திய ஆசியாவிலோ கிடையாது. ஆக இந்திர வழிபாட்டுக்காரர்கள் வெளி நாட்டினர் எனபதும் புரளி என்பது புரிகிறது.

 

இந்திரனை தீம் புனல் (இனிப்பான நீர்) உலகத்துக்கு, அதாவது வயலும் வயல் சார்ந்த இடத்துக்கும் அதிபதி என்கிறார் தொல்காப்பியர். இதே கருத்துதான் வேதத்திலும் புராணத்திலும் உள்ளது. இந்திரன் தான் விருத்திரனைக் கொன்று தண்ணீரை விடுவிக்கிறான். மழைக்கு முன்னும் பின்னும் தோன்றும் வானவில்லுக்கும் கூட இந்திரவில் என்றுதான் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பெயர்.

 

இந்திரனுடைய உலகத்தில் கிடைக்கும் அமிர்தம் (சம்ஸ்க்ருத சொல்) சங்க இலக்கியத்தில் முப்பதுக்கும் மேலான இடங்களில் பயன் படுத்தப்படுகிறது. கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி பாடிய புறம் 182-ல் இந்திரனுடைய அமிர்தமே கிடைத்தாலும் தனியாக உண்பவர் இல்லை என்கிறார். இதே கருத்து பகவத் கீதையில் இருப்பதை புறநானூற்றில் பகவத் கீதை (3-13) என்ற கட்டுரையில் ஏற்கனவே கொடுத்துவிட்டேன்.

 

புறம் 241-ல் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடலில் ஆய் அண்டிரனை வரவேற்க இந்திரன் காத்திருந்ததாகப் பாடுகிறார். போரில் இறந்தால் வீர சுவர்க்கம் கிடைக்கும் என்ற இந்தக் கருத்து பகவத் கீதையில் இருப்பதை எழுதி இருக்கிறேன். ஆய் அண்டிரன் எனபதே அஜேந்திரன் என்ற பெயரோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு உண்டு. இந்திரன், அண்டிரன், ஆண்ட்ரூ ஆகியன ஒரே மூலம் கொண்ட சொல்.

Indra riding Airavata, Laos (lazyhiker.com)

அருமையான இந்திரன் ஓவியம்

தமிழ்நாட்டில் இந்திரன் கதைகள், அமிர்தம் ஆகியன எவ்வளவு பிரசித்தம் என்பதை மேற்கூறிய விஷயங்கள் விளக்குகின்றன. இதைவிட வியப்பான விஷயம் 2000 ஆண்டுக்கு முன் திருப்பரங்குன்றத்தில் இருந்த ஓவியமாகும். பரிபாடல்-19 இதை அருமையாகச் சித்தரிக்கிறது. கூட்டம் கூட்டமாக அந்த ஓவியத்தைப் பார்ப்போர் ‘இதோ பார் பூனை வடிவில் இந்திரன்’, ‘அதோ பார் அகல்யை’, ‘இதோ கவுதம மகரிஷி’ என்றெல்லாம் பேசிக்கொள்வதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் பரிபாடல் கவிஞர். இந்து மதக் கதைகள் அவ்வளவு பிரபலம்!

 

வள்ளுவன் கிண்டல்

வள்ளுவனும் இந்திரனை விடவில்லை. ‘இந்திரனே சாலும் கரி’ என்று அஹல்யை கதையை உதாரணமாகக் கூறி (குறள் 25) புலன் அடக்கம் இல்லாத இந்திரனுக்கு நேர்ந்த கதியை எடுத்துக் காட்டுகிறார்.

இந்திரனுடைய தேவலோகம் பற்றி நிறைய குறிப்புகள் வருகின்றன. இந்திரனுடைய எல்லா அம்சங்களும் பரிபாடல், திருமுருகாற்றுபடையில் காணக்கிடக்கின்றன.

 

கரிகாலன் காலத்தில் கொண்டாடப்பட்ட மாபெரும் இந்திர விழாவை நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் அழகாகச் சித்தரிக்கிறது. இது பற்றி எனது இந்திர விழா கட்டுரையில் காண்க.

காஷ்மீர் முதல் கண்டி வரை இன்றும் தமிழர்கள் இந்திரன் பெயரைச் சூடுகின்றனர். ராஜேந்திரன், மஹேந்திரன், பாலேந்திரன், கஜேந்திரன், விஜயேந்திரன் என்ற பெயர்கள் குடும்பத்துக்குக் குடும்பம் காணப்படுகிறது.

 

அருந்ததி கதை, முப்புர தகனம், மகிஷாசுரவதம், சிவ பெருமான் விஷம் உண்டது முதலிய கதைகள் பழந்தமிழருக்கு அத்துபடி! சம்ஸ்கிருத சொல் இல்லாத சங்க இலக்கிய நூலோ, இந்து மதக் கதை, குறிப்பு இல்லாத சங்க நூலோ கிடையாது என்பது 27,000 வரிகளையும் படித்தவருக்கு தெள்ளிதின் விளங்கும். கடுரையாளர் (லண்டன் சாமிநாதன்) சங்கத் தமிழ் இலக்கியத்தைப் பன்முறை படித்து ரசித்தவர்.

எனது முந்தைய கட்டுரைகளையும் படிக்கவும்:

1.Indra Festival in the Vedas and Tamil Epics 2.Veera Matha in the Vedas and Tamil Literature 3.சங்க இலக்கியத்தில் வாகனங்கள் 4.வீரத்தாயும் வீரமாதாவும்  5.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்  6—10.தொல்காப்பியர் காலம் தவறு ( ஐந்து பகுதி கட்டுரை ) 11.Flags of Ancient Indian Kings 12.Hindu Vahanas in Kalidasa and Tamil Literature 13.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும் 14. ஐங்குறு நூறில் வேதக் கருத்துகள்

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள்: இந்தக் கட்டுரையை வேறு இடத்தில் பயன்படுத்துவதானால் ‘பிளாக்’-கின் பெயரையோ கட்டுரையாளர் (லண்டன் சுவாமிநாதன்) பெயரையோ வெளியிடுங்கள். பெயர் இல்லாமல் தங்கள் கட்டுரை போல வெளியிடுவது–தமிழுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் செய்யும் துரோகம் ஆகும்)