Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
டிசம்பர் 11. பாரதியாரின் பிறந்த தினம். அதையொட்டிய சிறப்புக் குறுந்தொடர் இது!
பாரதியாரின் ராகங்கள்! – 3
ச.நாகராஜன்
மஹாகவி பாரதியாரின் வேதாந்தப் பாடல்கள் அரிய பெரிய உண்மைகளை மிகத் தெளிவாக இனிய சொற்களால தருபவை.
அவற்றிற்கு அவர் அமைத்த இசையைக் காண்போம்.
மாயையைப் பழித்தல் – உண்மை யறிந்தவருன்னை
ராகம் – காம்போதி தாளம் – ஆதி
அச்சமில்லை – பண்டாரப் பாட்டு
ஜீவன் முக்தி – ஜயமுண்டு பயமில்லை மனமே
ராகம் – கமாஸ் தாளம் – ஆதி
நந்தலாலா – காக்கைச் சிறகினிலே
ராகம் – யதுகுல காம்போதி தாளம் – ஆதி
விடுதலை – வேண்டுமடி எப்போதும் விடுதல்
ராகம் – நாட்டை
குயில் பாட்டு
குயில் பாட்டில் இசையின் மகிமை பற்றி ஏராளமாகச் சொல்கிறார் பாரதியார்.
இதைப் பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிட்டு விட்டோம்.
ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ என்கிறார் மஹாகவி.
“கானப் பறவை கலகலவெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டு மிசைகளிலும்
ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்
நீலப் பெருங்கல் எந்நேரமுமே தான் இசைக்கும்
ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்
மானுடப் பெண்கள் வளரும் ஒரு காதலினால்
ஊன் உருகப் பாடுவதில் ஊறிடுந் தேன் வாரியிலும்
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல் இடிக்கும்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணம் இடிப்பார் தம் சுவை மிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாம் ஒலிக்கக்
கொட்டி இசைத்திடும் ஓர் கூட்டமுதப் பாட்டினிலும்
வேயின் குழலோடு வீணை முதலா மனிதர்
வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல் கருவி
நாட்டினிலும் காட்டினிலும் நாள் எல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறி கொடுத்தேன்.” என இப்படி அடுக்கடுக்காக பதினோரு வகைப் பாடல்களைக் குயில் பாட்டில் சுட்டிக் காட்டுகிறார்.
காதல் காதல் காதல்
இந்தப் பாடலுக்கு பாரதியார் தரும் குறிப்பு இது:-
ராகம் – சங்கராபரணம் ஏக தாளம்
ஸ்வரம் :
“ஸா – ரிமா – காரீ
பாபாபாபா – மாமாமாமா
ரீகா – ரிகமா – மாமா
(சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்க)
இதே பாடலில்,
“நாதம், நாதம், நாதம்,
நாதத்தேயோர் நலிவுண்டாயின்
சேதம், சேதம், சேதம்” என்றும்
“தாளம், தாளம், தாளம்,
தாளத்திற்கோர் தடையுண்டாயின்
கூளம், கூளம், கூளம்” என்றும்
“பண்ணே, பண்ணே, பண்ணே,
பண்ணிற்கோர் பழுதுண்டாயின்,
மண்ணே, மண்ணே, மண்ணே.” என்றும்
பாடி இசையமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.
பாரதியாரின் சங்கீதத் திறனாய்வை அவர் எழுதியுள்ள சங்கீத விஷயம் என்ற கட்டுரையில் படித்து வியக்கலாம்.
இப்படி ஏராளமான ராகங்களைத் தன் பாடல்களுக்கு அமைத்துத் தந்த மஹாகவி ஸ்வர அமைப்பிலும் சிறந்தவர் என்பதை அவரது பல வாழ்க்கை நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றன.
அன்பர்கள் பாடல்களைப் படிக்கும் போதும், பாடும் போதும் அவரது இசை அமைப்பையும் மனதில் கொண்டால் பாடல்கள் இன்னும் அதிகச் சுவையுடன் தேனாகத் தித்திக்கும் என்பதில் ஐயமில்லை.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நானும் எனது சகோதரர் நாகராஜனும் எழுதிய 150-க்கும் மேலான பாரதியார் பற்றிய கட்டுரைகள் எங்களுடைய இரண்டு பிளாக்குகளிலும் உள்ளன. அன்பர்கள் அனைவரும் படித்துப் பயன்பெறவேண்டும் ; 150+ கட்டுரைகளையும் கொடுக்காமல் ஆங்காங்கே எடுத்த தலைப்புகளை மட்டும் கொடுத்துள்ளேன். பாரதியார் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளும் இந்த பிளாக்கில் உள்ளன.
tamilandvedas.com
swamiindology.blogspot.com
ஞானமயம் சார்பில் சென்ற மாதம் பாரதி நினைவு நூற்றாண்டு விழா துவக்கியுள்ளோம். அவருடைய நூற்றாண்டு (Bharati Centenary Memorial Celebrations) நினைவுதினம் 2021 செப்டம்பரில் வருவதற்குள் குறைந்தது 54 பாரதி பாடல்களுக்கு புதிய ராகத்தில், இசையமைத்து பாட வேண்டும் என்பது எங்கள் நோக்கம். லண்டன் திருமதி ஹரிணி ரகு இசையமைத்துக் கொடுத்த ‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாரம் தோறும் எங்கள் ஒலிபரப்பில் இடம்பெற்றுவருகிறது அனைவரையும் இந்த திட்டத்தில் பங்கு கொண்டு புதிய ராகத்தில் பாரதியின் பயன்படுத்தாத பாடல்களை பயன்படுத்த அழைக்கிறோம்.
வாழ்க பாரதி! வளர்க தமிழ்!!
பாரதியார் நூற்றாண்டு விழாவினை ஒட்டி பாரதியார் பா நலம் வழங்க வருகிறார் சந்தானம் நாகராஜன்.
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதியார் பற்றிய கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி வரும் இவர் ஏராளமான கூட்டங்களில் பாரதியார் பற்றி விரிவுரை ஆற்றியுள்ளார்.
பாரதியார் பற்றிய புத்தகங்கள், அரிய கட்டுரைகள், பத்திரிகைகளை இவர் சேகரித்து வந்துள்ளார். பாரதியார் பற்றி எழுதப்பட்ட மிக முக்கியமான் அரிய நூல்களைப் பற்றி மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் என்ற தலைப்பில் 58 நூல்கள் பற்றிய கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். இவை அனைத்தும் www.tamilandvedas.com இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. செல்லம்மாள் பாரதி, சகுந்தலா பாரதி, வ.ரா., அமுதன், யதுகிரி அம்மாள், வெ.சாமிநாத சர்மா, ரா.அ.பத்மநாபன், கு.ப.ரா. சிட்டி, கல்கி, பி.ஸ்ரீ. பெ.நா.அப்புசாமி உள்ளிட்ட பலரது புத்தகங்கள், வானொலி உரைகள் பற்றிய அரிய விவரங்களை இந்தக் கட்டுரைகளில் காணலாம்.
பாரதியாரைப் போற்றிப் பாடிய கவிஞர்களின் கவிதைகளில் சிறப்பான ஆயிரம் பாடல்களை பாரதி போற்றி ஆயிரம் என்ற தலைப்பில் தொகுத்து அவற்றை www.tamilandvedas.com இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சங்கு சுப்ரமணியன், பாரதி தாசன், கண்ணதாசன் உள்ளிட்ட ஏராளமான கவிஞர்கள் பாரதியைப் போற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்பாக இது அமைகிறது.
30 Oct 2016 — Compiled by London Swaminathan Date: 30 October 2016 Time uploaded in London: 13-29 Post No.3303 Pictures are taken from various …
பாரதி நான் கண்டதும் கேட்டதும் …
tamilandvedas.com › 2015/11/10
10 Nov 2015 — பாரதி நான் கண்டதும் கேட்டதும்:பி.ஸ்ரீ. ப்ஹரடி2. எழுதியவர்:– ச.நாகராஜன். Date: 10 November 2015. Post No:2316. Time uploaded in London :– காலை- 4-56.
Chellammal | Tamil and Vedas
tamilandvedas.com › tag › chellammal
26 Aug 2015 — இத்தொகுப்பில் இடம் பெறும் இது புத்தகம் அல்ல. வானொலி உரை. மகாகவி பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மா பாரதி 1951ஆம் …
சிட்டுக்குருவி … – Tamil and Vedas
tamilandvedas.com › 2012/06/17
17 Jun 2012 — தேசிய கவி சுப்ரமண்ய பாரதி உயிர் வாழ்ந்த காலத்தில் மிகவும் வறுமையில் வாடினார். அவரது மனைவி சமைக்க அரிசி இல்லாமல் …
You’ve visited this page 2 times. Last visit: 08/12/20
பாரதி, திருவெம்பாவை பாடிய …
tamilandvedas.com › 2019/12/12
12 Dec 2019 — பாரதி, திருவெம்பாவை பாடிய சுவையான சம்பவம் (Post No.7333). COMPILED BY LONDON SWAMINATHAN. swami_48@yahoo.com. Date: 12 DECEMBER 2019. Time in London – 13-27.
பாரதி நூல்கள்-4 | Tamil and Vedas
tamilandvedas.com › tag › பாரத…
27 Aug 2015 — ஐயர், சுப்ரமணிய சிவா, பாரதியார் ஆகியோரிடையே நிலவிய நட்பை நன்கு உணர முடியும். திரு வி.க. ஆசிரியராக இருந்த தேசபக்தன் …
‘பாரதியும் திலகரும்’ (Post No.3428) | Tamil …
tamilandvedas.com › 2016/12/08
8 Dec 2016 — மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் என்று இது வரை 12 நூல்கள், கட்டுரைகள், வானொலி உரைகள் … சிட்டி ஆகியோர் எழுதிய நூல்; பாரதி நான் கண்டதும், கேட்டதும் – பி.ஸ்ரீ எழுதிய நூல்; பாரதி பிறந்தார் – கல்கி எழுதிய நூல்.
பாரதி நினைவுகள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › பாரத…
24 Aug 2015 — Time uploaded in London :– 10-10. ச.நாகராஜன். பாரதி நினைவுகள். பாரதி பற்றிய இந்த நூலை எழுதியவர் யதுகிரி அம்மாள். இதன் முதற் பதிப்பு …
மஹாகவி பாரதியார் பற்றிய …
tamilandvedas.com › 2016/12/09
9 Dec 2016 — பாரதி இயல். மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 14. பாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமியின் பல கட்டுரைத் …
10 Sept 2014 — எழுதியவர் லண்டன் சுவாமிநாதன் Post No.1278; Dated 10th September 2014. September 11 is Bharati Memorial Day. (( நிலாசாரலில் வெளியிட்ட தேதி 16-1-2012 ) …
உலகப் பெருங்கவிஞனான பாரதியாரின் பாடல்களை பாரதி நூற்றாண்டிலே நினைப்பது, போற்றுவது நமது கடமை!
பாரதியாரைக் கற்று விட்டால் உலகக் கவிஞர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்ட திருப்தி கிடைக்கும். அது மட்டுமின்றி அந்தக் கவிஞர்களையும் தாண்டிய புது கற்பனை ஒளியையும், சிறப்பையும், அவர்கள் சொல்லாத பல புது விஷயங்களையும் அதில் உள்ள நயங்களையும் நாம் காணலாம்.
ஒவ்வொரு பாடலும் ஒரு சுடர் விளக்கு. சில அமுதத் துளிகளை இங்கு பருகி மகிழ்வோம்.
முதலில் பாரதியாரின் ஒரிஜினல் கவித்திறனைப் பார்ப்போம்.
தேனை மறந்திருக்கும் வண்டும், ஒளிச்
சிறப்பை மறந்து விட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வையம் முழுதும் இல்லை தோழி! ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி.
இதில் வந்திருக்கும் யாரும் சொல்லாத சிறப்பான உவமைகள் அவரை கவிதை வானில் உச்சத்தில் ஏற்றி விடுகின்றன.
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்று கொஞ்சி அழைக்கும் கவிஞர், உன் கண்ணில் நீர் வழிந்தால் – என்னெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா, என்னுயிர் நின்னதன்றோ என்று சொல்லும் போது அதில் இருக்கும் உருக்கத்திற்கு உவமை உண்டா, என்ன?
காலைக் கதிரழகின் கற்பனைகள் பாட வந்த கவிஞன்,
தங்கம் உருக்கித் தழல் குறைத்து தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ என்கிறான். இது என்ன புது ரஸவாதம்! தங்கத்தை உருக்க வேண்டுமாம். பின்னர் அதன் வெப்பத்தை – சூட்டைத் தணிக்க வேண்டுமாம். அதைத் தேனாக்க வேண்டுமாம். பின்னர் எங்கும் பரப்ப வேண்டுமாம். அது காலைக் கதிரழகாம்! கற்பனையின் எல்லையையும் கடக்கிறான் கவிஞன். செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றான் அவன். காதிலே தேன் வந்து பாயும் உவமை ஒரு புறம் இனிமையைத் தர ஆடி வரும் தேனே என்று பிள்ளைக் கனியமுதை அவன் அழைக்கும் பாங்கு உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது!
ராமன் சீதை இலக்குவன் நடந்து செல்லும் காட்சியை வர்ணிக்க வந்த கம்பன் பாடுகிறான் இப்படி:
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி ஜோதியின் மறையப்
பொய்யோவெனும் இடையாளொடும் இளையானுடன் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்
ஐயோ! இவன் அழகை வர்ணிக்க முடியாது என்கிறான் கம்பன். ஐயோ என்னா பந்து வீச்சுடா என்று கிரிக்கெட் மைதானத்தில் பரம ரசிகன் விளையாட்டில் ஒன்றிக் கூறும் ஐயோவில் எத்துணை அழகு இருக்கிறது.
பாரதியோ ஐயோவை விட்டு விட்டு புதுச் சுவையை புதுச் சொல்லில் தருகிறான் குயில் பாட்டில்!
கண் எடுக்காது என்னைக் கணப்பொழுது நோக்கினாள்
சற்றே தலை குனிந்தாள். சாமீ! இவளழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன்.
மங்கை அவளின் ஒரு கணப் பார்வை. சற்றே தலை குனிந்த சமயம். சாமீ! இவளழகை எப்படிக் கூறுவேன் என்று கவிஞன் கூறும் போது கம்பனின் ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான் நம் முன் தோன்றுகிறது. ஐயோ, – சாமீ இதில் எது சிறப்பு மிக்க சொல் என்று யாரால் சொல்ல முடியும்?!
ஊழிக் கூத்தை பாரதி கண்டான், பாடினான்:
வெடிபடு மண்டத்திடிபல் தாளம் போட – வெறும்
வெளியில் இரத்தக் களியொடு பூதம் பாடப் – பாட்டின்
அடிபடு பொருள் உன் அடிபடும் ஒலியில் கூடக் களித்து
ஆடும் காளீ! சாமுண்டீ! கங்காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை!
எத்துணை அற்புதமான கூத்து! எத்துணை அற்புதமான வர்ணனை!
இனி உலகக் கவிஞர்களின் வரிசையிலே சிறப்பான இடத்தைக் கொண்டவன் பாரதி என்பதற்கும் சில உதாரணங்களைச் சுட்டிக் காட்ட முடியும்!
ஷெல்லி தாசன் என்று தன் பெயரைச் சூட்டிக் கொண்ட கவிஞன் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியிலே திளைத்தவன். To Sophia என்ற கவிதையில் ஷெல்லி
Thy Deep Eyes a Double Planet
என்று கூறுவதை சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ என்ற பாரதியின் அழியாத வரியிலே காண முடிகிறது. நமது பாரம்பரியத்திற்கு ஏற்றபடி டபிள் ப்ளானட் சூரிய சந்திரனாகிறது!
குரு கோவிந்த சிங்கின் கர்ஜனை உரையிலே,
சவா லாக் சே ஏக் லடாவூம் சிடியன் தே மை பாஜ துடாவூம் தபை குரு கோவிந்த சிம்ஹ நாம கஹாவூ (सवालाखसेएकलड़ाऊं, चिड़ियनतेमैंबाजतुड़ाऊं, तबैगुरुगोबिंदसिंहनामकहाऊं“)
என்று கூறுகிறார். சிடியா என்றால் சிட்டுக் குருவிகள் பாஜ என்றால் ராஜாளி சிட்டுக்குருவிகள் ராஜாளிகளாகும்!
சவா லாக் -ஒன்றே கால் லட்சம் பேருடன்- ஏக்- ஒரே ஒருவன் சண்டையிடுவான். அப்போது குரு கோவிந்த சிங்கின் பெயரை கேளுங்கள் என்றார்.
இதை, பாரதியார் மிக எளிதாக ‘ஈயை கருட நிலை ஏற்றுவாய்’ என்கிறார்.
இலங்கையிலே தங்க மயமான இலங்கையைக் கண்ட ராமர் லட்சுமணனிடம் இது எனக்கு பெரிதாகத் தெரியவில்லை; ருசிக்கவில்லை; பெற்ற தாயும் எனது தாய்நாடும் சுவர்க்கத்தை விடச் சிறந்ததாகும் என்கிறார்.
இதன் தமிழ் வடிவத்தை ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானிலும் நனி சிறந்தனவே’ என்று தருகிறான் நம் அருமைக் கவிஞன்.
வேத சூக்தங்களை அரவிந்தரிடமிருந்து கற்ற பாரதியார் அப்படியே அவற்றை தமிழ்க் கவிதைகளாகத் தந்துள்ளார்.
அக்னி ஸ்தோமம் என்ற கவிதையில் ரிஷிகள் எங்கள் வேள்விக் கூடமீதில் ஏறுதே தீ தீ தீ என்று வேள்வியைத் தொடங்குகின்றனர்.
இளையும் வந்தாள் கவிதை வந்தால் இரவி வந்தானே – இந்நேரம்
விளையும் எங்கள் தீயினாலே – மேன்மையுற்றோமே
என ரிஷிகள் ஆனந்தக் கூத்திடுகின்றனர்.
பிரெஞ்சு மொழியில் உள்ள தேசீய கீதத்தையும் கூட இரு விதமாக மொழி பெயர்த்துத் தந்திருக்கிறான் நம் கவிஞன்.
‘அன்னை நன்னாட்டின் மக்காள் ஏகுவம்
மன்னு புகழ் நாளிதுவே’ என ஆரம்பிக்கும் அந்த கீதம்!
ஏராளமான கவிஞர்கள் பாரதியை அண்ணாந்து பார்த்து வியக்கின்றனர்.
ஒரு பெரும் முயற்சியாக பாரதி போற்றி ஆயிரம் என்று ஆயிரம் பாடல்களைத் தொகுக்க ஆரம்பித்தேன். அந்த ஆயிரம் பாடல்களும் http://www.tamilandvedas.comஇல் பிரசுரிக்கப்பட்டன.
மரணத்தை வென்ற மகாகவியை கவியரசு கண்ணதாசன் பாடுகிறான் இப்படி;
சந்திரர் சூரியர் உள்ளவரையிலும்
சாவினை வென்று விட்டான் – ஒரு
சாத்திரப் பாட்டினில் பாரததேசத்தின்
தாய்மையை வார்த்து விட்டான்
இந்திர தேவரும் காலில் விழும்படி
என்னென்ன பாடி விட்டான் – அவன்
இன்று நடப்பதை அன்று சொன்னான் புவி
ஏற்றமுரைத்து விட்டான்
வங்கத்து நீரினை மையத்து நாட்டுக்கு
வாரிக் கொணர் என்றான் – அந்த
வானம் அளந்து விஞ்ஞானம் படைத்திட
வாரும் தமிழரென்றான்
சிங்க மராட்டியர் கற்பனைக்கீடொரு
சேரத்துத் தந்தமென்றான் – இந்த
தேச பெருமைக்கு ஆரம்பம் செய்தவன்
பாரதித் தேவன் என்பான்!
பாரதி எனும் பெயரைச் சொல்லு – கெட்ட
பயமெனும் பகைவனை வெல்லு
நேரினி உனக்கு நிகர் இல்லை – உடன்
நீங்கும் அடிமை மனத் தொல்லை என்கிறார் நாமக்கல் கவிஞர்.
பாரதிக்கு வாழ்நாள் முழுவதும் தாசனாக இருந்த பாரதிதாசன் பாரதியைப் பற்றி விரிவாகக் கூறுகிறார் இப்படி:
பைந்தமிழ் தேர்ப்பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிதைக் குயில்! இந்த நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம் பாட வந்த மறவன் புதிய
அறம் பாட வந்த அறிஞன் நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவ்ன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
என்கிறார்.
நான் தொகுத்த ஆயிரம் பாடல்களிலே ஒரு சிலவற்றைப் பார்த்தோம்.
பிரான்ஸென்னும் உயர்ந்த புகழ் நாட்டில் உயர் புலவோரும் பிறரும் ஆங்கே விராவு புகழ் ஆங்கிலத் தீம் கவியரசர் தாமும், சுவை புதிது நயம் புதிது, வளம் புதிது, சொற் புதிது, ஜோதி கொண்ட நவ கவிதை, எந்நாளும் அழியாத மஹா கவிதை என்று பாரதியார் கவிதையை வியந்து கூறியுள்ளனர். அதை இப்படி அவரே கூறி இருக்கிறார்.
இனி இதற்கு மேல் நாம் உரைக்க என்ன இருக்கிறது.
இந்தியர் தம் நெஞ்சினிலே தேசப்பற்றை ஊட்டினான்
வஞ்சக வெள்ளையரை நாட்டைவிட்டு ஓட்டினான்
தமிழர்க்குத் தமிழ் போற்றும் வழி காட்டினான்
புகழோங்கு பாரதத்தை நிலை நாட்டினான்
புதியதொரு பாதையைப் புவியினிலே காட்டினான்
புகழவோர் வார்த்தையிலை புகழுக்கே புகழ் ஊட்டினான்
புண்ணியன் சுப்பிரமணி பாரதியின் பெருமையினை
எண்ணியெண்ணி அவன்வழி நடப்போம் உயர்வோம்
கற்க கசடற பாரதி பாக்களை
நிற்க அதற்குத் தக
என்ற எனது இந்த அஞ்சலிச் சொற்களை பாரதியின் தாளில் சமர்ப்பித்து விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்!
இங்கெல்லாம் ஆரிய தேவி என பாரத தேவியைக் குறிப்பிடுகிறார் பாரதியார்.
அடுத்து எது ஆரிய நாடு என்பதைத் தெள்ளத் தெளிவாக பாரத தேவியின் திருத் தசாங்கத்தில் குறிப்பிடுகிறார். பாரத நாட்டின் எல்லையையும் வகுத்துக் கூறும் அருமையான பாடல் இது.
குரு கோவிந்தர் பாட்டில் ஆரியர் ஒரே ஜாதி அதாவது இந்த பாரத நாட்டில் வாழும் அனைவரும் ஆரிய ஜாதி என்றும் இதைப் பிளவு படுத்தி ஜாதிகள் பல பேசும் அனைவரும் மாய்க என்றும் கூறுகிறார்.
ஹிந்து இனம் ஒரே இனம் என்பது அவரது அடிப்படைக் கொள்கையாக அமைவதை இங்கு காண்கிறோம். பாடல் இது தான்:
சீடர்காள்! குலத்தினும் செயலினும் அனைத்தினும் இக்கணந் தொட்டுநீர் யாவிரும் ஒன்றே பிரிவுகள் துடைப்பீர்! பிரிதலே சாதல் ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி வகுப்பவர் வகுத்து மாய்க, நீர் அனைவிரும்
லாஜபதியின் பிரலாபம் என்ற பாடலில் வரும் வரிகள் இவை:
ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான் வீட்டுமனார் நாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு.
இங்கெல்லாம் ஆரிய நாடு என்றால் பாரதம் ஆரிய தேவி என்றால் அன்னை பாரத தேவி என்ற பொருளையே காண்கிறோம்.
தெய்வப் பாடல்களில் 3 இடங்களில் வரும் ஆரிய என்ற சொல்லும் சுயசரிதையிலும் ஞானப்பாடல்களிலும் கண்ணன் பாட்டிலும் குயில் பாட்டிலும் வரும் ஆரியர் என்ற சொல்லும் பண்பாடுள்ளவர் என்ற பொருளில் வருகிறது. அதே போல பாஞ்சாலி சபதத்தில் வரும் 7 இடங்களிலும் இதே பொருளே அமைகிறது.
ஆக பாரதியார் அப்படியே அடி வழுவாது இந்த பாரத நாட்டை ஆரியர் நாடு என்றும் பண்பாளரை ஆரியர் என்றும் அறநூல்கள் வழி நடப்பவரை ஆரியர் என்றும் கூறி இருக்கிறார்.
ஆரியம் என்ற சொல்லை வடமொழி என்ற பொருளிலும் பயன்படுத்தியுள்ளார்.
ஆரியன் என்பதை ஹிந்துக்கள் வழிபடும் இறைவன் என்ற பொருளிலும் பயன்படுத்தியுள்ளார்.
தேவாரம், பண்டைய இலக்கியம் கூறியதற்கு ஒரு படி மேலே போய், காலத்தால் பின்னால் தோன்றியதால் தெளிவாக ஹிந்து தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பாரத நாட்டை ஆரிய நாடு என்று அறிவிப்பதோடு தேசபக்தி இல்லாதோர் ஆரியர் அல்லர் என்றும் ஆரிய இனம் ஒரே இனம் என்றும் இதில் இன, ஜாதி போன்ற வேறுபாடுகளை வகுப்பவர் மாய்ந்து ஒழிக என்றும் கூறுகிறார்.
சுருக்கமாகச் சொல்லப் போனால் ஆரியன் திராவிடன் என்ற பொய்யான வாதங்கள் எல்லாம் அவர் பாடல்களால் பொடிப் பொடியாகிப் போகிறது. சங்க இலக்கியமும் தேவாரமும் சுட்டிக் காட்டும் நல்ல பொருளே அவர் பாடல்களிலும் அழுத்தமாக நிலைபெறுகிறது. வாழ்க பாரதி நாமம்!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
பாரதியார் தீபாவளி பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளைப் பற்றி கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளாரா? – 2
ச.நாகராஜன்
ஒவ்வொரு திங்களன்றும் இந்திய நேரம் மாலை 6-30க்கு – லண்டன் நேரம் பகல் 1.30க்கு ஒளிபரப்பாகும் ஹிந்து மதம் பற்றிய கேள்வி- பதில் நிகழ்ச்சி மற்றும் ஹிந்து ஆலயச் சிறப்புச் செய்திகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதை www.tamilandvedas.com நேயர்கள் நன்கு அறிவர். இதற்கு உலகெங்குமுள்ள அன்பர்கள் கேள்விகளை அனுப்பி வருகின்றனர்.
31-8-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் வந்த கேள்வி ஒன்று இது:
பாரதியார் தீபாவளி பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளைப் பற்றி கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளாரா?
இதற்கு பதில் அளிக்கும் பொறுப்பு எனக்கு வந்தது.
அந்தப் பதிலின் (உரையின்) சாரத்தின் தொடர்ச்சி இதோ:-
மகர சங்கராந்தி எனக் கொண்டாடும் சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் முக்கியமான ஒன்று. சூரிய ஸ்தோத்திரம் என்ற தலைப்பில் கவிதை ஒன்றை பாரதியார் இயற்றியுள்ளார்.
அவர் மஹாசக்தி பஞ்சகத்தைப் பாடியுள்ளார்.
ஜென்மாஷ்டமி அல்லது கண்ணனது பிறப்பைப் பற்றிக் ‘கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்’ என்று துவங்கும் பாடலைப் படைத்துள்ளார். அவரது கண்ணன் பாட்டுக்கள் குறிப்பிடத் தகுந்தவை.
நவராத்திரி பண்டிகையின் உட்பொருளை விளக்கும் விதமாக இரு கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். இரு கவிதைகளையும் படைத்துள்ளார்.
அவரது கட்டுரையின் சில பகுதிகளை இங்கு பார்ப்போம்:
“ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும் ஸரஸ்வதி என்றும் பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது.
ஹிமாசலந் தொடங்கிக் குமரி முனை வரை, வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம்.”
“சக்தி : நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி.”
“ஒவ்வொருவருக்கும் மூன்று விதச் சக்தி வேண்டும், 1.அறிவு. 2. செல்வம். 3. தைரியம். இந்த மூன்றும் நமக்கு இஹலோகத்திலே கிடைக்கும் படியாகவும், இதனால் பரலோக இன்பங்களும் சாத்தியமாகும்படியாகவும் நாம் தெய்வத்தை வழிபடுகிறோம்.”
“விக்ரமாதித்யன் வணங்கிய தெய்வம். காளிதாஸனுக்குக் கவிதை காட்டிய தெய்வம்; பாரத நாட்டு மஹாஜனங்கள் இன்னும் தலைமையாகக் கொண்டாடும் தெய்வம்; ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் சக்தியாக விளங்கும் லக்ஷ்மி தேவதை; சிவபிரானுடைய வலிமையாகத் திகழும் பார்வதி; பிரமதேவன் தலைவியாகிய சரஸ்வதி. மூன்று மூர்த்திகள், மூன்று வடிவங்கள், பொருள் ஒன்று, அதன் சக்தி ஒன்று.”
நவராத்திரிப் பாட்டு என்ற தலைப்பில்,
“மாதா பராசக்தி வையம் எலாம் நீ நிறைந்தாய்!
ஆதாரம் உன்னை அல்லால் ஆர் எமக்குப் பாரினிலே”
என்று தொடங்கும் பாடலையும்,
“உஜ்ஜயினீ! நித்ய கல்யாணீ!” என்று துவங்கும் பாடலையும் அவர் படைத்துள்ளார்.
இன்னொரு முக்கியமான சம்பவத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இந்தியா பத்திரிகை நடத்த ஆக்கமும் ஊக்கமும் பொருளுதவியும் தந்த மண்டயம் ஸ்ரீநிவாஸாரியார் பாரதியார் புதுவை வந்ததைத் தொடர்ந்து அவரும் சென்னையிலிருந்து புதுவைக்கு வந்தார்.
அவருக்கு யதுகிரி என்ற புதல்வி உண்டு. அவர் அப்போது சிறுமி. பாரதியார் தனது கவிதைகளை எல்லாம அவரிடம் பாடிக் காண்பிப்பார்.
யதுகிரி அம்மாள், பாரதியார் பற்றிய தனது நினைவுகளை, “பாரதி நினைவுகள்” என்ற நூலாக எழுதி வெளியிட்டுள்ளார்.
அதில் வரும் சம்பவம் இது.
ஒரு முறை சிவராத்திரி கொண்டாடும் சிவபக்தர்கள் பாரதியாரை அணுகி, சிவராத்திரி அன்று பஜனை செய்தவாறே ஊர்வலமாகச் செல்லும் எங்களுக்காக ஒரு கவிதை எழுதித் தாருங்கள் என்று கேட்டனர்.
உடனே பாரதியார் தந்த கவிதை தான் ‘முருகா முருகா முருகா’ என்ற அற்புதமான கவிதை.
‘முருகா முருகா முருகா
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறனும் தனமும் கனமும்’
என்ற பாடலைப் பாடிய பாரதியார், ‘20 பேர் கூட்டாகச் சேர்ந்து இதைப் பாடினால் பெரும் சக்தி பிறக்கும்’ என்றார்.
யதுகிரி அம்மாள் கூறும் இன்னொரு சம்பவம் மூன்று காதல் பாடல் பிறந்தது எப்படி என்பதை விவரிக்கிறது.
ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் புதுவை கடற்கரையில் பேண்ட் வாத்தியக்காரர்கள் பேண்ட் வாசிப்பது வழக்கம். ஒரு மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அவர்களைச் சுற்றி அனைவரும் கூடுவர். குழந்தைகள் கும்மாளம் போடும்.
ஒரு வியாழக்கிழமை பாரதியார், அவரது புதல்வி தங்கம்மாள் பாரதி, அவர் மனைவி செல்லம்மாள் பாரதி, யதுகிரி ஆகிய நால்வரும் கடற்கரைக்குச் சென்றனர்.
அந்த பேண்ட் வாத்திய சத்தம் பெரிதாக இருக்கவே பாரதியார், ‘சற்று அந்தப் பக்கம் போவோம்’ என்றார்.
உடனே தங்கம்மாள் பாரதி, “இந்த இசை எனக்குப் பிடித்திருக்கிறது, இது போல் நம்மால் பாட முடியுமா?” என்றார்.
பாரதியார், “ஏன் முடியாது, இதை நமக்குத் தக பாடிக் கொள்ளலாம்!” என்றார்.
உடனே தங்கம்மாள், “அப்படியானால் இந்த மெட்டில் எனக்கு சரஸ்வதி மேல் ஒரு பாட்டுப் பாடித் தாருங்கள்” என்றார்.
அப்போது உச்ச ஸ்தாயி முடிந்து இசை சற்று கீழ் ஸ்தாயிக்கு வந்தது.
உடனே, யதுகிரி, “இது எனக்குப் பிடித்திருக்கிறது. இது போல எனக்கு லக்ஷ்மி மீது ஒரு பாடல் பாடித் தாருங்கள்” என்றார்.
பாரதியார் உடனே, ‘லக்ஷ்மி மீது பாடல் தருகிறேன்’ என்றார்.
இதைக் கேட்ட செல்லம்மாள் பாரதி, “காசி, கல்கத்தாவில் எல்லாம் துர்க்கையை வலிமைக்காக வழி படுவது வழக்கம். நமது சங்கடங்கள் எல்லாம் தீரும். எனக்கு ஒரு பாடலை துர்க்கை மீது பாடுங்கள்” என்றார்.
பாரதியார் உடனே ‘சரி’ என்றார்.
மறுநாள் மாலை கொலுவில் யதுகிரி ஆரத்தி எடுக்கும் சமயம் உள்ளே நுழைந்த பாரதியார், “நீங்கள் கேட்ட பாடலை கொண்டு வந்திருக்கிறேன். பாடலாமா?” என்றார்.
பின்னர் பாட ஆரம்பித்த்தார்.
ஸரஸ்வதி மீது,
“பிள்ளைப் பிராயத்திலே -அவள்
பெண்மையைக் கண்டு மயங்கி விட்டேன்”
என்று தொடங்கும் பாடலையும்,
லக்ஷ்மி மீது
“இந்த நிலையினிலே- அங்கோர்
இன்பப் பொழிலின் இடையில் வேறொரு
சுந்தரி வந்து நின்றாள்”
என்ற பாடலையும்,
காளி மீது,
“பின்னோர் இராவினிலே – கரும்
பெண்மை அழகொன்று வந்தது கண் முன்பு”
என்ற பாடலையும் பாடினார்.
ஸரஸ்வதி மீதான பாடலை ஸரஸ்வதி மனோஹரி ராகத்திலும், லக்ஷ்மி மீதான பாடலை ஸ்ரீ ராகத்திலும் காளி மீதான பாடலை புன்னாகவராளி ராகத்திலும் அவர் அமைத்திருந்தார். பாடலைக் கேட்டோர் மெய் சிலிர்த்தனர்.
இப்படி பாரதியார் தொடாத பொருள் இல்லை;பாடாத தெய்வம் இல்லை.
அவர் பாடல்களையும் கட்டுரைகளையும் படித்தால் ஹிந்து பண்டிகைகளின் உட்பொருளை அறிந்து கொள்ளலாம்.
“வீரக் கனல் பொங்கும் வெற்றி மணிச் சிங்கம்
விண்ணாடு மண்ணாடு வியந்து பணி தங்கம்
கோரப் பகை அடிக்கும் கொடிய மணிக் கதிர்வேல்
கொடியவர்கள் கொட்டமழி நெடிய மணி நேமி
ஆருக்கும் அஞ்சாத ஆரமர் செல்வன்
அன்புக்கு என்பு தரும் அருளாளன் அண்ணல்
போருக்கு ரகுராமன் புலமைக்கு வாணி
பொற்புக்கும் நட்புக்கும் புண்ணியக் கண்ணன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
சுப்ரமண்ய பாரதியின் பெருமையை
என்னென்று சொல்வேன்” என்று ஹா.கி.வாலம் அம்மையார் பாரதியைப் போற்றிப் புகழ்கிறார்.
பாரதியார் நாமம் வாழ்க!
ஹிந்து தர்மம் வாழ்க!
என்று கூறி வாய்ப்பினை நல்கிய அனைவருக்கும் நன்றி கூறி,
அடுத்து இன்னுமொரு உரையில் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்!
இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி வாரந்தோறும் திங்களன்று இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும். தமிழ் நெஞ்சங்கள் மகிழ்ச்சியுடன் இதில் பங்கேற்க வேண்டுகிறேன்.
உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் பதிவு செய்யவும் வேண்டுகிறேன்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
பாரதியார் தீபாவளி பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளைப் பற்றி கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளாரா?
ச.நாகராஜன்
ஒவ்வொரு திங்களன்றும் இந்திய நேரம் மாலை 6-30க்கு – லண்டன் நேரம் பகல் 1.30க்கு ஒளிபரப்பாகும் ஹிந்து மதம் பற்றிய கேள்வி- பதில் நிகழ்ச்சி மற்றும் ஹிந்து ஆலயச் சிறப்புச் செய்திகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதை www.tamilandvedas.com நேயர்கள் நன்கு அறிவர். இதற்கு உலகெங்குமுள்ள அன்பர்கள் கேள்விகளை அனுப்பி வருகின்றனர்.
31-8-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் வந்த கேள்வி ஒன்று இது:
பாரதியார் தீபாவளி பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளைப் பற்றி கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளாரா?
பாரதியார் தீபாவளி பண்டிகை பற்றியும் இதர ஹிந்து பண்டிகைகளைப் பற்றியும் நிறைய கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். அநேகமாக ஒவ்வொரு சிறப்புப் பண்டிகைக்கும் உரிய கவிதையை அவரிடமிருந்து கற்கலாம்; உட்பொருளை விளக்கும் கட்டுரைகளையும் காணலாம்.
சில பண்டிகைகளைப் பற்றி மட்டும் இங்கு நாம் காணலாம்.
உலகில் பல்வேறு பழைய நாகரிகங்கள் தோன்றிய காலமும் அவை மறைந்த காலத்தையும் துல்லியமாக வரலாற்று அறிஞர்கள் சொல்கின்றனர். இப்படி பாபிலோனிய நாகரிகம், அஸிரிய நாகரிகம், எகிப்திய நாகரிகம், ரோமானிய நாகரிகம் தோன்றிய காலமும் மறைந்த காலமும் நமக்குத் தெரியும். ஆனால் ஹிந்து நாகரிகம் என்று பிறந்தது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய நாகரிகம் இது.
மஹாகவி பாரதியார் மிக அழகுற இதைச் சொல்கிறார்:
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் இவள்
என்று பிறந்தவள் என்று ணராத
இயல்பினளாம் எங்கள் தாய்.
இப்படி இந்தியத் தாயை – ஹிந்துத் தாயை – அவள் என்று பிறந்தவள் என்று யாராலும் கணிக்க முடியாத சிறப்பைக் கூறுகிறார்.
ஹிந்து மதம் ஒரு மதம் மட்டுமல்ல, ஒரு தத்துவமும் கூட, மதமும் தத்துவமும் மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என சாமர்செட்மாம் என்னும் மேலை நாட்டு எழுத்தாளர் தனது ‘Points of View” என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
(The Hindu Religion is not only a Religion but also a Philosophy, not only a religion and philosopy but it is a Way of Life.)
உண்மை. இதை மஹாகவி பாரதியார் வலியுறுத்தியதோடு அந்த வாழ்க்கை முறையைப் பண்டிகைகளின் வாயிலாகப் படம் பிடித்துக் காண்பித்தார்.
தீபாவளி பற்றிய அவரது கட்டுரை முக்கியமான ஒன்று.
பாரதியார் நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகையில், 1906-இல் அக்டோபர் 20-ஆம் தேதி இதழில் தலையங்கமாக வெளிவந்தது இந்தக் கட்டுரை. பின் ‘கலைமகள்’ பத்திரிகையில் 1941-இல் அக்டோபர் மாதம் வெளியாயிற்று.
கட்டுரை இது தான்:-
“நம் நேயர்களுக்கெல்லாம் கங்கா ஸ்நான பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அறிவிக்கின்றோம். சரீர சுத்தியுடன் மனோசுத்தியும் ஆத்மசுத்தியும் அவர்களுக்குப் பிராப்தியாக வேண்டுமென்று விரும்புகிறோம்
தற்காலத்திலே இந்து ஜனங்களின் ஆத்மாவைப் பற்றியிருக்கும் அழுக்குகளாகிய பயம், அதைரியம் முதலியவையெல்லாம் அகன்று போய், அவர்கள் ஒளி மிகுந்த உள்ளத்தவர்களாகி விளங்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை.
நமது நாட்டைப் பற்றிய நரகாசுரன் இறந்து போய்விட்டான். பகவானுடைய சக்தியும் எல்லா ஐசுவரியங்களுக்கும் ஆதாரமும் ஆகிய லட்சுமிதேவி நம்மீது கருணை கொண்டவளாகி நரகாசுரனை வதைத்துவிட்டாள்.
நாமெல்லோரும் அது பற்றிச் சந்தோஷமடைந்து மங்கள ஸ்நானம் செய்து, நல்லாடைகள் புனைந்து ஆனந்தவசமாகி இருக்கின்றோம்.
ஆனால் சிறுகுழந்தைகளைப் போல் விளையாட்டுக்கு ஸ்நானம் செய்தும், தீபங்கள் கொளுத்தியும் சும்மா இருந்துவிடாமல் நாம் செய்யும் செய்கையினது பொருளை நன்றாக அறிந்து காரியங்கள் செய்ய வேண்டும்.
எத்தனை தரம் கொன்றபோதிலும் மறுபடியும் மறுபடியும் உயிர் தளிர்ப்பது ராட்சதர்களுடைய சுபாவம். அவர்களுடைய மர்ம ஸ்தலத்தை அழித்த பிறகுதான் மடிவார்கள்.
அதுபோலவே லட்சுமிதேவி நரகாசுரனை வதைத்தவுடனேயே நாம் அவனுடைய மர்ம ஸ்தானத்தை அழித்து விடாமையால் அவன் மறுபடியும் தளிர்க்கத் தொடங்குகிறான். ஆதலால் நாம் இனியேனும் நரகாசுரனுடைய மர்ம ஸ்தலத்தை நன்றாக அறிந்து அதைத் தாக்காமல் இருப்போமானால் யாதொரு பிரயோஜனமும் கிடையாது.
தீபாவளி தினத்திலேகூட அந்நிய தேசத் துணிகள் வாங்கும் ஈசுவரத் துரோகிகள் நமது நாட்டிலே இருப்பார்களானால் நரகாசுரன் எவ்வாறு ஒழிவான்? லட்சுமிதேவி எப்படி ஜயமடைவாள்?
ஆரிய குமாரர்களே! ராட்சதர், அசுரர், பிசாசர் முதலான துர்க்குணங்களுடைய ஜன்ம விரோதிகளே! உங்களுடைய உண்மையான சுபாவத்தை அறிந்து கொள்ளுங்கள்.
Posted by me on 1-1-2016 (now posted with a different format and new pictures and additional matter)
Who is a Kududupai man?
A fortune teller as well as a bogey man; a magician cum beggar.
Kudukudu is the sound made by a kettle drum in the hands of a fortune teller in Tamil Nadu and other places of South India. They (always men) are fearsome and roam the streets at the dead of night. If they are not given food or money they curse the people. And the belief is that it will come true like a Gipsy’s curse. They worship the fearsome goddesses like Durga, Chandi, Suli, Veeri, Malayala Bjagavati. It is believed that they can do evil by invoking the powers of those goddesses. Mothers used to frighten the naughty children with the name of this person like a bogey man in the west. But Bharati, the greatest of the modern Tamil poets, use this man as a positive figure. But here also that there is a curse that if the learned do something wrong they will be utterly destroyed.
A NOVEL FORTUNE TELLER – POEM BY TAMIL POET SUBRAHMANYA BHARATI (1882-1921)
Post No. 5714
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
டிசம்பர் 2018 நற்சிந்தனை காலண்டர்
பண்டிகை நாட்கள் டிசம்பர் 11- பாரதியார் பிறந்த நாள்;16- மார்கழி மாதம் ஆரம்பம்;18- வைகுண்ட ஏகாதஸி, கீதா ஜயந்தி; 23-ஆருத்ரா தரிசனம்/திருவாதிரை; 25-கிறிஸ்துமஸ்
மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கு உருகார், வேறு ஒரு வாசகத்துக்கும் உருகார்.
பாரதியின் பாட்டில் மகிழார், வேறு ஒரு பாட்டிலும் மகிழார்.
தெவிட்டாத இன்பம்தரும் பாரதி பாடல்!
பாரதி பாடல்களில் தேவார மூவரையோ, திருவாசகம் தந்த மாணிக்கவாசகரையோ நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆயினும் சைவத் திருமுறைகளில் திருவாசகமே அவரது உள்ளத்தைக் கொள்ளைகொண்டது என்பதற்குப் பல சான்றுகள் உள.
மாணிக்கவாசகர் என்னென்ன செய்தாரோ அதை இவரும் செய்துள்ளார்.
ஓம்காரம்
திருவாசகத்தின் முதல் பாடலிலும் (சிவபுராணம்), கடைசி பாடலிலும் ஓம்காரம் ஒலிக்கும்
இதே போல பாரதியின் பாஞ்சாலி சபதமும் ஓம் காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும்
1.உய்ய என்னுள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என வோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே (சிவபுராணம்)
2.உய்யுநெறிகாட்டுவித்திட்
டோங்காரதுட்பொருளை (அச்சோபதிகம்)
இனி பாரதியார், பாஞ்சாலி சபதம் நூலைத் துவக்கி முடிக்கும் முறையினைக் காண்போம்:
1.ஓமெனப் பெரியோர்கள்- என்றும்
ஓதுவதாய் வினை மோதுவதாய்
தீமைகள் மாய்ப்பதுவாய் – துயர்
தேய்ப்பதுவாய், நலம் வாய்ப்பதுவாய்
–பாஞ்சாலி சபதத்தின் துவக்கப்பாடல்
2.ஓமென்றுரைத்தனர் தேவர்- ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்றுவானம்
–பாஞ்சாலி சபதத்தின் முடிவுப்பாடல்
xxxx
மாணிக்க வாசகர் குயில்பத்து பாடினார்
பாரதியார் குயில்பாட்டு பாடினார்.
xxxx
மாணிக்கவாசகர் அச்சோபதிகத்தில்
சாதல், காதல் என்று பாடுவது போலவே, பாரதியும் குயில்பாட்டில்
காதல் காதல் , காதல்
காதல் போயின் சாதல் என்று பாடுகிறார்.
ஆண்டவன் மீது திருப்பள்ளி எழுச்சி பாடினார் மாணிக்கவாசகர்.
பாரதமாதா மீது திருப்பள்ளி எழுச்சி பாடினார் பாரதியார்.
xxx
திருவண்டப் பகுதியில் மாணிக்கவாசகர் — எண்ணற்ற பலகோடி நட்சத்திர மண்டலங்களிருப்பது பற்றி பாடி வியக்கிறார்:
அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந்தன்மை வளப்பெருங்காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொருகோடியின் மேற்பட விரிந்தன
—திருவாசகம்
பாரதியும் ,
நக்கபிரானருளால் இங்கு
நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்
தொக்கன அணடங்கள் வளர்
தொகைபல கோடிபல் கோடிகளாம்
இக்கணக்கு எவர் அறிவார் – புவி
எத்தனை உளதென்பது யார் அறிவார்
என்று பாடி வியக்கிறார்.
xxxx
திருத்தசாங்கம் பாடினார் மாணிக்கவாசகர்.
பாரதியும் திருத்தசாங்கம் பாடினார்
இருவரும் கிளியிடம் பேசுவதாகப் பாடியிருப்பதால் சொற்களிலும் அதிக ஒற்றுமை கானப்படுகிறது
xxxx
மாணிக்கவாசகர் போற்றித் திரு அகவல் பாடினார்.
பாரதியும் “போற்றி அகவல், கபிலர் அகவல்” முதலியன பாடினார்.
இவையெல்லாம் மேம்போக்கான ஒற்றுமைகள். இன்னும் சொல்லாராய்ச்சியில் இறங்கினால் எந்த அளவுக்கு மாணிக்கவாசகரும் அவர்தம் திருவாசகமும் பாரதி மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அறியலாம்.