Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-42; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15818)

Written by London Swaminathan

Post No. 15,818

Date uploaded in London –2 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

PART 42

திருவல்லா

திவ்ய தேசம்    திருவல்லவாழ் – ஸ்ரீ வல்லப க்ஷேத்திரம்

மூலவர்   கோலப்பிரான், திருவாழ் மார்பன், ஸ்ரீ வல்லபன்

தாயார்    செல்வத்திருக்கொழுந்து நாச்சியார், வாத்சல்ய தேவி

திருக்கோலம்   நின்ற திருக்கோலம்

திருமுகமண்டலம்   கிழக்கே திருமுக மண்டலம்

பாசுரங்கள்     

மங்களாசாசனம்     நம்மாழ்வார் 11 பாடல்கள் 

திருமங்கை ஆழ்வார் 11 பாடல்கள்

தீர்த்தம்   கண்டாகர்ண தீர்த்தம் பாம்பா நதி

விமானம் சதுரங்க கோல விமானம்

இக்கோயிலில் தினமும் கருடனுக்குச் செய்யப்படும் சிறப்பு வழிபாடும், பிரம்மாண்டமான கொடிமரமும் மிகவும் பிரசித்தி பெற்றவை.

கருடபுராணம், மத்ஸ்யபுராணம் போன்றவற்றில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

இந்த திவ்ய தேசம் ஸ்ரீவல்லப ஷேத்ரம் என்று மிகவும் பிரபலம். இங்கு எழுந்து அருளி இருக்கும் எம்பெருமான் பிரம்மச்சார்ய விரதம் அனுஷ்டிக்கிறார். மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தின் அன்றும், சித்திரை மாதத்து விஷு (வருடப்பிறப்பு) அன்றும் மட்டுமே, எம்பெருமானுக்கு திருமார்பு தரிசனம் என்பதால், இத்தலத்தில் அந்த இரண்டு தினங்கள் மட்டும் பெண்கள் சன்னதி சென்று வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற எல்லா நாட்களிலும், பெண்கள் சன்னதிக்கு வெளியில் இருந்து சேவிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

மாசி மாதம், பூச நட்சத்திரத்தில் ஆறாட்டு என்ற விழா நடைபெறுகிறது. இது ஒரு பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா ஆகும். மார்கழி திருவாதிரை அன்று சிவன் எம்பெருமானின் கோலத்தை காண வந்ததாக ஐதீகம், அதனால் இந்த திருத்தலத்தில் விபூதி பிரசாதமும் அளிப்பார்கள். கண்டாகர்ணனின் சிவபக்தியைக் குறிக்கும் வகையில், சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் விபூதி வழங்கப்படுகிறது.

மே மாதத்தில், ஒரு நாள் திருவிழா நடத்தப்படுகிறது, அருகிலுள்ள கோயில்களில் இருந்து 3 பகவதிகள் (காவில் கோயில் தேவதை, படப்பட் கோயில் மற்றும் ஆலம்துரத் கோவில்கள்) இந்த கோவிலுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். கோவில் வடக்கு வாசலில் இருந்து போத்திகளால் சிறப்புப் பல்லக்குகளில் இந்த தெய்வங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நாளில் மட்டுமே, இந்த கதவு திறக்கப்படுகிறது.

மற்ற கேரளக் கோயில்களைப் போலவே, இந்த திருக்கோவிலும் கர்ப்பகிரகம் வட்ட வடிவில் உள்ளது. கிழக்குப் பக்கம், வல்லபப் பெருமானின் சன்னதியும், இக்கோயிலுக்குப் பின்னால் சுதர்சன ஆழ்வாருக்கு ஒரு சிறிய சன்னதியும் உள்ளது.

இந்த திருத்தலத்தில் உள்ள பெரிய குளம் தானாகவே உண்டானது என்றும் இன்றும் கூட பூமிக்கு அடியில் இருந்து ஊற்றுக்கள் மூலம் இந்தக் குளத்திற்கு தண்ணீர் வருவதாகச் சொல்லப் படுகிறது. மலையாளத்து பாணியில் இந்த திருத்தலத்திலும் பக்தர்களுக்கு பூக்களும் சந்தனமும், பிரசாதமாக ஒரு இலையில் அளிக்கப்படுகிறது.

இங்கு உள்ள இன்னொரு ஆச்சரியமான விஷயம், 50 அடி உயரம் 2 அடி சுற்றளவும் உள்ள ஓங்கி உயர்ந்து நிற்கும் கருங்கல். இந்த கல் பூமிக்கடியில் இதே 50 அடி ஆழத்தில் சென்று இருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை. மேலும் இந்த சுற்றுப்புறத்தில் பாறைகளே இல்லை என்பது இன்னொரு தகவல். இந்த கல் தூணின் மீது பஞ்சலோகத்தால் உருவான ஒரு கருடாழ்வாரை வைத்து உள்ளார்கள். கருடாழ்வார் தமது ஒரு கரங்களையும் விரித்து உடனே புறப்படுவதை போல் உள்ளது. இந்தக் கல்தூண் துவஜஸ்தம்பத்திற்கு (கொடிக் கம்பம்) சற்று பின்புறம் அமைந்துள்ளது. நாலாம்பலம் (துவஜஸ்தம்பத்தைச் சுற்றியுள்ள பகுதிகள்) கிரானைட் கற்களால் ஆனது. த்வஜஸ்தம்பத்தின் உச்சியில் சுமார் 3 அடி உயரத்தில் கருடன் பஞ்சலோக சிலை உள்ளது. கோயில் மிகப் பெரியது, த்வஜஸ்தம்பமும் பெரியது.

மலையாள திவ்ய தேசங்களில், சுதர்சன ஆழ்வாருக்கு தனி சன்னதி இருக்கும் திருத்தலம் இது. அதே போல, துவஜஸ்தம்பத்திற்கு பொன் தகடு வேயப்பட்டுள்ளதும் மற்றொரு தனிச் சிறப்பாகும்..

இந்த கோவிலில் துர்வாச ரிஷியின் சிலை உள்ளது, மேலும் அவர் ஒவ்வொரு இரவும் பெருமாளுக்கு பூஜை செய்வதாக நம்பப்படுகிறது.

குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்கள் மக்கள் செல்வம் வேண்டி அவ்வப்போது கதகளி நிகழ்ச்சியை இங்கு ஏற்பாடு செய்வது வழக்கம். அந்நிகழ்ச்சியின் மூலமாக  எம்பெருமானிடம் புத்திரப்பேறு வேண்டுவது என்பது இதன் பொருள்.

ஸ்தல வரலாறு

சங்கரமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், இந்த திவ்ய தேசத்திற்கு வந்து ஏகாதசி விரதம் இருந்து துவாதசியன்று அதிதிகளுக்கு உணவு படைத்து அதன்பின் விரதத்தை முடிக்கும் பழக்கத்தை கொண்டு இருந்தாள். அப்படி அவள் இந்த விரதத்தில் அதில் மிகுந்த பக்தி சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தாள். தோலகாசுரன் என்னும் அரக்கன் ஒருவன் இந்த விரதத்திற்கு இடையூறு செய்து. துன்பம் விளைவிக்கவே, அந்த பெண், இந்த அரக்கனை வதம் செய்ய எம்பெருமானை வேண்டிக் கொண்டாள். எம்பெருமான் அவளுக்கு தெரியாமல் அந்த அசுரனை வாமன ரூபத்தில் வந்து, சக்ராயுதத்தை ஏவினார். அது அவனை பல துண்டுகள் ஆக்கியது. அப்படி வதம் செய்து அவசரம் அவசரமாக துவாதசி பாரணை (விரதம் முடிக்க) செய்யவரும் போது, எம்பெருமான் திருமார்பில் மறைத்து வைத்து இருந்த மகாலக்ஷ்மியை தரிசனம் செய்து, இந்த சிறுவன் எம்பெருமான் தான் என்று நிச்சயம் செய்து, அவனிடம் எம்பெருமானின் திருமார்பு தரிசனம் வேண்டி இந்த பெண் மோக்ஷம் பெற்றாள் என்பது வரலாறு. அவளின் வேண்டுகோளின்படியே எம்பெருமான் இங்கே, திருவாழ்மார்புடன் இன்றும் பக்தர்கட்கு அருள்புரிவதாக ஐதீஹம். இதனையொட்டியே திருவல்லவாழ் என்ற பெயர் இந்த திருத்தலத்திற்கு உண்டானதாக வரலாறு.

துர்வாசர் இந்த பெருமாளை பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்கிறார்கள். அவர் அப்படி செய்யும் போது 12000 வாழை பழங்கள் எம்பெருமானுக்கு சமர்பித்ததாகவும், அதே போல இன்றும் வருடம் ஒருமுறை இந்த விழா, பன்னீராயிரம் விழா என்று இந்த கோவிலில் கொண்டாடப்படுகிறது.

கேரளாவின் கோட்டயம் (Kottayam) மற்றும் செங்கன்னூர் (Chengannur) நகரங்களிலிருந்து சாலை மார்க்கமாக எளிதில் அடையலாம்.

மலை நாட்டு திவ்ய தேசங்கள் பதின்மூன்று :

திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா).

கொல்லத்திலிருந்து எர்ணாகுளம் செல்லும் புகைவண்டி மார்க்கத்திலும் திருவல்லா புகைவண்டி நிலையத்தை அடையலாம். அங்கு இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் இந்த திருதலம் உள்ளது. திருவல்லாவை தொடர்ந்து அதனை சூழ்ந்த மற்ற ஐந்து திவ்ய தேசங்களைச் சேவிக்கலாம்.

கோட்டயத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் செங்கனாச்சேரி

செங்கனாச்சேரியிலிருந்து 3 கீ.மி. தூரம் திருக்கடித்தானம்.

திருக்கடித்தானத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவல்லா.

திருவல்லாவிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவண்வண்டூர்

திருவண்வண்டூரிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் திருச்செங்குன்றூர்.

திருச்செங்குன்றூரிலிருந்து மேற்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் திருப்புலியூர்

***

பாசுரங்கள்

1808.  

தந்தை தாய் மக்களே*  சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற,*

பந்தம்ஆர் வாழ்க்கையை*  நொந்து நீ பழிஎனக் கருதினாயேல்,*

அந்தம்ஆய் ஆதிஆய்*  ஆதிக்கும் ஆதிஆய் ஆயன்ஆய,*

மைந்தனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!.  (2)     

1809.  

மின்னும்மா வல்லியும் வஞ்சியும் வென்ற*  நுண்இடை நுடங்கும்,*

அன்னமென் நடையினார் கலவியை* அருவருத்து அஞ்சினாயேல்,*

துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்குஆகி*  முன் தூது சென்ற*

மன்னனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

 1810.  

பூண்உலாம் மென்முலைப் பாவைமார்*  பொய்யினை ‘மெய் இது’ என்று,*

பேணுவார் பேசும் அப்பேச்சை*  நீ பிழை எனக் கருதினாயேல்,*

நீள்நிலா வெண்குடை வாணனார்*  வேள்வியில் மண் இரந்த,*

மாணியார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1811.  

பண்உலாம் மென்மொழிப் பாவைமார்*  பணைமுலை அணைதும் நாம்என்று*

எண்ணுவார் எண்ணம்அது ஒழித்து*  நீ பிழைத்து உயக் கருதினாயேல்,*

விண்உளார் விண்ணின் மீதுஇயன்ற*  வேங்கடத்துஉளார்,*  வளங்கொள் முந்நீர்-

வண்ணனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1812.  

மஞ்சுதோய் வெண்குடை மன்னர்ஆய்*  வாரணம் சூழ வாழ்ந்தார்,*

துஞ்சினார் என்பதுஓர் சொல்லை*  நீ துயர்எனக் கருதினாயேல்,*

நஞ்சுதோய் கொங்கைமேல் அம்கைவாய் வைத்து*  அவள் நாளை உண்ட,-

மஞ்சனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1813.  

உருவின்ஆர் பிறவிசேர்*  ஊன்பொதி நரம்புதோல் குரம்பையுள் புக்கு*

அருவிநோய் செய்துநின்று*  ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்,*

திருவின்ஆர் வேதம்நான்கு ஐந்துதீ*  வேள்வியோடு அங்கம் ஆறும்,*

மருவினார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1814.  

நோய்எலாம் பெய்ததுஓர் ஆக்கையை*  மெய்எனக் கொண்டு,*  வாளா-

பேயர்தாம் பேசும் அப்பேச்சை*  நீ பிழைஎனக் கருதினாயேல்,*

தீஉலாம் வெம்கதிர் திங்கள்ஆய்*  மங்குல் வான்ஆகி நின்ற,*

மாயனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1815.  

மஞ்சுசேர் வான்எரி*  நீர்நிலம் கால்இவை மயங்கி நின்ற,*

அஞ்சுசேர் ஆக்கையை*  அரணம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*

சந்துசேர் மென்முலைப்*  பொன்மலர்ப் பாவையும் தாமும்,*  நாளும்-

வந்துசேர் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1816.  

வெள்ளியார் பிண்டியார் போதியார்*  என்றுஇவர் ஓது கின்ற,*

கள்ளநூல் தன்னையும்*  கருமம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*

தெள்ளியார் கைதொழும் தேவனார்*  மாமுநீர் அமுது தந்த,*

வள்ளலார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1817.  

மறைவலார் குறைவுஇலார் உறையும்ஊர்*  வல்லவாழ் அடிகள் தம்மைச்,*

சிறைகுலாம் வண்டுஅறை சோலைசூழ்*  கோலநீள்ஆலி நாடன்,*

கறைஉலாம் வேல்வல*  கலியன்வாய் ஒலிஇவை கற்று வல்லார்,*

இறைவர்ஆய் இருநிலம் காவல்பூண்டு*  இன்பம் நன்கு எய்துவாரே.   (2)

2775.  

அன்னம் துயிலும் அணிநீர் வயல்ஆலி,*

என்னுடைய இன்அமுதை எவ்வுள் பெருமலையை,* (2)

கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை,*

மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்-

பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர்ஏற்றை,*

மன்னும் அரங்கத்து எம் மாமணியை,* (2) -வல்லவாழ்ப்-

3321.  

மான் ஏய் நோக்கு நல்லீர்!*  வைகலும் வினையேன் மெலிய*

வான் ஆர் வண் கமுகும்*  மது மல்லிகை கமழும்*

தேன் ஆர் சோலைகள் சூழ்*  திருவல்லவாழ் உறையும்-

கோனாரை*  அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?* (2)  

3322.  

என்று கொல்? தோழிமீர்காள்*  எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?*

பொன்திகழ் புன்னை மகிழ்*  புது மாதவி மீது அணவி*

தென்றல் மணம் கமழும்*  திருவல்லவாழ் நகருள்-

நின்ற பிரான்*  அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே?*   

3323.  

சூடு மலர்க்குழலீர்!*  துயராட்டியேன் மெலிய*

பாடும் நல் வேத ஒலி*  பரவைத் திரை போல் முழங்க*

மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும்*  தண் திருவல்லவாழ்*

நீடு உறைகின்ற பிரான்*  கழல் காண்டும்கொல் நிச்சலுமே?*     

3324.  

நிச்சலும் தோழிமீர்காள்!*  எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?*

பச்சிலை நீள் கமுகும்*  பலவும் தெங்கும் வாழைகளும்*

மச்சு அணி மாடங்கள் மீது அணவும்*  தண் திருவல்லவாழ்*

நச்சு அரவின் அணைமேல்*  நம்பிரானது நல் நலமே*.            

3325.  

நல் நலத் தோழிமீர்காள்!*  நல்ல அந்தணர் வேள்விப் புகை*

மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும்*  தண் திருவல்லவாழ்*

கன்னல் அம் கட்டி தன்னை*  கனியை இன் அமுதம் தன்னை*

என் நலம் கொள் சுடரை*  என்றுகொல் கண்கள் காண்பதுவே?*  

3326.  

காண்பது எஞ்ஞான்றுகொலோ?*  வினையேன் கனிவாய் மடவீர்*

பாண் குரல் வண்டினொடு*  பசுந் தென்றலும் ஆகி எங்கும்*

சேண் சினை ஓங்கு மரச்*  செழுங் கானல் திருவல்லவாழ்*

மாண் குறள் கோலப் பிரான்*  மலர்த் தாமரைப் பாதங்களே?*

3327.  

பாதங்கள்மேல் அணி*  பூந்தொழக் கூடுங்கொல்? பாவைநல்லீர்*

ஓத நெடுந் தடத்துள்*  உயர் தாமரை செங்கழுநீர்*

மாதர்கள் வாள் முகமும்*  கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்*

நாதன் இஞ் ஞாலம் உண்ட*  நம் பிரான் தன்னை நாள்தொறுமே?*

3328.  

நாள்தொறும் வீடு இன்றியே*  தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்*

ஆடு உறு தீங் கரும்பும்*  விளை செந்நெலும் ஆகி எங்கும்*

மாடு உறு பூந் தடம் சேர்*  வயல் சூழ் தண் திருவல்லவாழ்*

நீடு உறைகின்ற பிரான்*  நிலம் தாவிய நீள் கழலே?*   

3329.  

கழல் வளை பூரிப்ப யாம் கண்டு*  கைதொழக் கூடுங்கொலோ*

குழல் என்ன யாழும் என்ன*  குளிர் சோலையுள் தேன் அருந்தி*

மழலை வரி வண்டுகள் இசை பாடும்*  திருவல்லவாழ்*

சுழலின் மலி சக்கரப் பெருமானது*  தொல் அருளே?* 

3330.  

தொல் அருள் நல் வினையால்*  சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்*

தொல் அருள் மண்ணும் விண்ணும்*  தொழ நின்ற திருநகரம்*

நல் அருள் ஆயிரவர்*  நலன் ஏந்தும் திருவல்லவாழ்*

நல் அருள் நம் பெருமான்*  நாராயணன் நாமங்களே?*  

3331.  

நாமங்கள் ஆயிரம் உடைய*  நம் பெருமான் அடிமேல்*

சேமம் கொள் தென் குருகூர்ச்*  சடகோபன் தெரிந்து உரைத்த*

நாமங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் திருவல்லவாழ்*

சேமம் கொள் தென் நகர்மேல்*  செப்புவார் சிறந்தார் பிறந்தே*   

–SUBHAM—

TAGS- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-42; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருவல்லா

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-28; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,758)

Written by London Swaminathan

Post No. 15,758

Date uploaded in London –19 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்பாடகம்

திருப்பாடகம் (காஞ்சீபுரம்)

ஒன்பது திவ்ய தேசங்கள் பெரிய காஞ்சீபுரத்தில் உள்ளன. .

மூலவர் – பாண்டவ தூதர், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – ருக்மிணி, ஸத்யபாமா

தீர்த்தம் – மத்ஸ்ய தீர்த்தம்.

விமானம் – பத்ர விமானம், வேத கோடி விமானம்.

ப்ரத்யக்ஷம் – ஜனமேஜயன், ஹாரீத முனி.

ஜனமேஜயஹாராஜன் வைசம்பாயனரிடம் பாரத கதையைக் கேட்டு, ஸ்ரீ க்ருஷ்ணன் பாண்டவர்களுக்காக ஹஸ்தினாபுரம் தூது சென்று விச்வரூபம் எடுத்ததை கேள்விப்பட்டு, அதை நேரில் ஸேவிக்க விரும்பி காஞ்சி வந்து, அச்வமேதயாகம் செய்து, பூர்ணாஹ§தி ஆனதும் பகவான் பாண்டவதூத வேஷத்துடன் ஆவிர்பவித்ததாக புராண வரலாறு.

இங்கு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் எழுந்தருளி இருக்கிறார். மணவாளமாமுனிகள் மங்களாசாஸனம்.

மங்களாசாஸனம் -திருமழிசையாழ்வார் – 814, 815; திருமங்கையாழ்வார் – 1541, 2674 (127); பூதத்தாழ்வார் – 2275; பேயாழ்வார் – 2311; மொத்தம் 6 பாசுரங்கள்.

திருப்பாடகம்

   நின்ற தெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து

        அன்று வெஃகணை கிடந்தது எண்ணிலாத முண்ணெலாம்

   அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்

        நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே – (815)

                                – திருச்சந்தவிருத்தம் – 64

 பெருமானின் நின்ற திருக்கோலம் திரு ஊரகத்தில்;

 இருந்த திருக்கோலம் திருப்பாடகத்தில்;

 கிடந்த திருக்கோலம் திருவெஃகாவில்.

“இத்தலங்கள் எல்லாம் நான் ஜென்மம் எடுப்பதற்கு முன்பாகவே

எம்பெருமான் அர்ச்சா ரூபியாக எழுந்து அருளிய திருத்தலங்களாகும். எம்பெருமான் அர்ச்சா மூர்த்தியாகி இங்கு எழுந்து அருளிய காலங்களில் நான் பிறந்ததில்லை. இப்போது பிறந்துவிட்டேன். இந்த மூன்று திருக்கோலங்களையும் என் நெஞ்சினுள்ளேயே பெருமாளுக்கு அமைத்துக் கொண்டேன். அதனால் நான் இனி மறந்திலேன்”.

இவ்விதம் திருமழிசையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட

இத்தலம் பெரிய காஞ்சி புரத்தில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்தில் உள்ளது.

வரலாறு

     எம்பெருமான் கிருஷ்ணவதாரத்தில் பாண்டவர்கள் பொருட்டு

துரியோதனன் சபைக்கு தூது சென்றான். இந்தக் கண்ணன்தான்

பாண்டவர்களின் பெரிய பலம். இவனை அழித்துவிட்டால் பாண்டவர்களை எளிதில் வென்றுவிடலாம். என்று எண்ணிய துரியோதனன், கண்ணன் அமரக்கூடிய இடத்திற் கருகில் ஒரு நிலவறையை உண்டாக்கி அதன்மீது பசுந்தலைகள் இட்டு மூடி அதன் மீது ஒரு ஆசனத்தை அமைத்தான். இதில் கண்ணன் அமர்ந்தவுடன் இந்த ஆசனம் நிலவறைக்குள் விழுக அங்கிருக்கும் மல்லர்கள் கண்ணனை கொன்றுவிட வேண்டும் என்பது துரியோதனன் திட்டம். துரியோதனன் திட்டப்படி நிலவறை சரிந்துவிழ உள்ளே விழுந்த கண்ணன், நொடிப்பொழுதில் மல்லர்களை மாய்த்து விஸ்வரூபனாய் நின்றார்.

சிறப்புக்கள்

     1) அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள எம்பெருமான்களில் 25 அடி

உயரத்தில் பிரம்மாண்டமான ரூபத்தில் தன்னை ஏமாற்ற நினைப்பவர்களை ஏமாற்றி விடும் குறிப்பை உணர்த்தும் அழகுத் திருமேனியுடன் திகழும் இவ்வெம்பெருமானை 108 திவ்ய தேசங்களில் மட்டுமன்றி இந்தியாவில் கூட வேறெங்கும் கூட சேவிக்க முடியாது.

2.கர்ப்பக்கிரஹத்தின் குவிந்த அமைப்பும், அதனடியில் பிரம்மாண்டமான திருக்கோலத்தில் எம்பெருமான் வீற்றிருப்பதும் ரசித்துப் பார்க்கத் தக்கது.

     3) எம்பெருமானின் நின்ற அமர்ந்த கிடந்த திருக்கோலங்கட்கு

தொண்டை நாட்டில் உள்ள இந்த மூன்று ஸ்தலங்களே ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்ததெனச் சொல்லலாம்.

அ) வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத

   பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும் – நான்கிடத்தும்

   நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தானே

   என்றால் கெடுமாம் இடர்.

     என்ற பொய்கையாழ்வாரின் பாசுரத்தில் வெஃகாவைக் குறிப்பிட்டிருப்பது தொன்மைக்காலத்தே 108 திவ்ய தேசங்களில் மூன்று திருக்கோல எம்பெருமான்களை ஒரு சேரக் குறித்தால் அது இந்த தொண்டை மண்டலத்தின் முத்தலமேயென்பதில் ஐயமில்லை.

ஆ)  இசைந்த வரவமும் வெற்புங் – கடலும்

          பசைந்தங்கு அமுது படுப்ப – அசைந்து

     கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில்

          கிடந்திருந்து நின்றதுவு மங்கு – 2345

                      என்று பேயாழ்வார் உரைப்பதும்.

இ)   குன்றிருந்த மாட நீடும் பாடகத்தும் ஊரகத்தும்

     நின்றிருந்து வெஃகனைக் கிடந்ததென்ன நீர்மையே – 814

     என்று திருச்சந்த விருத்தத்தில் திருமழிசையாழ்வாரும் கூறியிருப்பதில் 108இல் உள்ள பிற ஸ்தலங்களை மூன்று திருக்கோலங்கட்கும் சுட்டவில்லை.

     ஈ) நின்றவாறும் அன்றியும் இருந்தவாறும் கிடந்தவாறும்

நினைப்பரியன. ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள் –

(திருவாய்மொழி 5.10.6)

     என்ற நம்மாழ்வாரின் மங்களாசாசனத்திற்கு

     திருவூரகத்தில் நின்றபடியும், திருப்பாடகத்திலே இருந்தபடியும்

திருவெஃகாவிலே கிடந்த படியுமாதல் – என்று ஈடு வ்யாக்யானம்

சுட்டியிருப்பதும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.

     காஞ்சி மண்ணில் முத்தீபம் போல் இலங்கும் இத்தலங்கள் தொண்டைமண்டலத்திற்கே தனிப்புகழ் ஏற்றுத் தந்தன வென்பதும் மறுக்க முடியாததாகும்.

     4) ஸ்ரீஇராமானுஜரிடம் வாதப்போரிலே தோற்றுப்போன யக்ஞ மூர்த்தி என்னும் அத்வைதி ஸ்ரீஇராமானுஜரின் உண்மை சொரூபம் தெரிந்து அவரிடமே சரணாகதியாகி அவரிடம் சீடரானார். அவருடைய பெயரை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று இராமானுஜர் மாற்றி அவரை விஷ்ணுவின் தொண்டராக்கி விஷ்ணுகைங்கர்யம் செய்ய வைத்தார். இந்த அருளாளப் பெருமாள் ஜீவித்திருந்தது இந்த திவ்ய தேசத்தில்தான். இங்கு அவருக்குத் தனி சன்னதியுண்டு.    

***

திரு ஊரகம்

திரு ஊரகம் (உலகளந்த பெருமாள் கோயில்) என்பது காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 50-வது திவ்ய தேசமான இத்தலத்தில், திருமால் பிரம்மாண்டமான 35 அடி உயர உலகளந்த பெருமாள் கோலத்தில் காட்சியளிக்கிறார். ஒரே கோயிலுக்குள் ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேச பெருமாள்கள் உள்ளனர்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திரு ஊரகம்

:மூலவர்: ஊரகத்தான் (உலகளந்த பெருமாள்)

தாயார்: அமுதவல்லி

சிறப்பம்சம்: பெருமாள் தனது இடது காலை வானத்திற்கும், வலது காலை மகாபலியின் தலையிலும் வைத்து உலகளந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

****

திரு நீரகம்

இது காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே அமைந்துள்ள நான்கு திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

இந்தக் கோயிலுக்குள் ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. ஒரே இடத்தில் இந்த நான்கு பெருமாள்களையும் தரிசிப்பது மிகுந்த சிறப்பாகும்.

திரு நீரகம் (காஞ்சீபுரம்) பெரிய காஞ்சீபுரத்தில் திரு ஊரகம், (உலகளந்தப் பெருமாள்) கோவிலிலேயே உள்ளது. .

மூலவர் – இல்லை

உத்ஸவர் – ஜகதீச்வரர், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – நிலமங்கைவல்லி.

தீர்த்தம் – அக்ரூர தீர்த்தம்.

விமானம் – ஜகதீச்வர விமானம்.

ப்ரத்யக்ஷம் – அக்ரூரர்.

குறிப்பு – மூலவர் எங்கிருக்கிறார்? பழைய கோவில் எங்கிருக்கிறது? தீர்த்தம் எங்குள்ளது? என்றெல்லாம் தெரியவில்லை. உலகளந்தப் பெருமாள் கோவிலின் வடபுறத்துப் ப்ராகாரத்தில் மிகச்சிறிய ஸந்நிதியில் உத்ஸவர் மட்டுமே எழுந்தருளியிருக்கிறார்.

மங்களாசாஸனம் – திருமங்கையாழ்வார் – 2059 – 1 பாசுரம்.

****

திருக்காரகம் பற்றி முன்னரே கண்டோம் ; ஒரே கோவிலில் உள்ள 4 தலங்களுக்கு ஒரே பாசுரம்தான்.

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்

நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி

ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய்

உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்

காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா

காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு

பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்

பெருமானுன் திருவடியே பேணினேனே.

~ திருமங்கையாழ்வார்

To be continued………………………….

Tags–திருப்பாடகம், திருஊரகம், திரு நீரகம், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-28; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள்

மரணத்தைக் கண்டு அஞ்சாதே – சத்ய சாயிபாபா அருளுரை! (Post.15,743)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,743

Date uploaded in London – 16 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

4-5-2026 கல்கி ஆன்லைன்இதழில் வெளியான கட்டுரை!

மரணத்தைக் கண்டு அஞ்சாதே –

புருஷனும் புருஷோத்தமனும் – ஶ்ரீ சத்ய சாயிபாபா

அருளுரை!

ச. நாகராஜன்              

22-10-1963 அன்று பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய அருளுரை!

வயதான ஒரு மனிதன் மரணப்படுக்கையில் இருந்தான். அவன் கன்னட 

தேசத்தைச் சேர்ந்தவன் என்று நினைக்கிறேன். கடைசி தருணம் வந்த போது 

அவனால் ஏதோ வார்த்தைகளை உளறத்தான் முடிந்தது. அவனது மகன்களால் 

அதை அறிந்து கொள்ள முடியவில்லை.  அவர்கள் உடனே ஒரு டாக்டரை 

அழைத்து கொஞ்சம் ஆக்ஸிஜனைக் கொடுத்து அவர் பேசுவது என்ன என்பதைப் 

புரிந்து கொள்ள வையுங்கள் என்று வேண்டினர்.  தான் சம்பாதித்த பணைத்தை 

எங்கே வைத்திருக்கிறேன் என்பதை அவன் சொல்ல முயல்வதாக அவனது 

பிள்ளைகள் அனுமானித்தனர்.  ஆகவே அவனது வார்த்தைகளைத் தெளிவாக 

அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவர்களால் ஒரே ஒரு 

எழுத்தை மட்டும் தான் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த எழுத்து ‘க’. ‘க’ என்றால் என்ன?

‘க’ என்றால் கனகாவா? அதாவது தங்கமா? அல்லது ‘கரு’வா? அதாவது  

கன்றுக்குட்டியா? அல்லது ‘க’ என்பது கஞ்சாவா? அல்லது கஸப்ரிகாவா அதாவது விளக்குமாறா? 

விளக்குமாறை அவர்கள் கொண்டு வந்து காண்பித்தபோது  அவன் தலையை 

அசைத்தான். இறந்தும் போனான். அவன் விளக்குமாறாகவே பிறப்பு எடுக்க 

நேர்ந்தது!

அவனைப் போல் நீங்கள் இறக்கக் கூடாது.  நீங்கள் பீஷ்மரைப் போல மரணம்    அடைய வேண்டும். சாந்திபர்வத்தை அவர் பாண்டவர்களுக்கு உபதேசிக்கும்   போது அவர் அம்புப்படுக்கையில் படுத்திருந்தார். கிருஷ்ணர் முன்னால் இருக்க  அவர் மரணம் அடைந்தார். கிருஷ்ணரின் இதயத்தில் புகுந்தார்.  மரணம் என்பது 

பயப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நல்ல சந்தோஷமான தருணங்களில் பேசக் கூடாத விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால் மரணம் என்பது நல்லதோ 

அல்லது கெட்டதோ இல்லை. உங்களுக்கு அதைப் பற்றிய விருப்பத் தேர்வே 

கிடையாது.  நீங்கள் அதை வரவேற்றால் அதைச் சீக்கிரம் பெற முடியாது. அதைக் கெட்டது என்று நினைத்துத் திட்டினால் அதைத் தவிர்க்கவும் முடியாது. 

அது பிறந்து விட்ட தருணத்திலேயே தவிர்க்கமுடியாததாக ஆகி விட்ட ஒன்று. 

பிறந்த தருணத்திலேயே சுடுகாட்டை நோக்கிய பயணமானது ஆரம்பித்து 

விட்டது.  சிலர் அதை சீக்கிரம் அடைகின்றனர். சிலர் சுற்றுப்பாதை வழியாகச் 

சென்று சற்று தாமதமாக அடைகின்றனர். மனிதனுக்கு மனிதன் இது ஒன்று தான் வித்தியாசம்.  ஆனால் மனிதனோ மரணம் என்பது  தூரத்தில் இருக்கும் ஒரு     துயரம் என்று நினைத்து நடக்கிறான். 

அண்டைஅயலாரில் ஒருவரின் குழந்தை இறக்கும் போது அவரிடம் சென்று அது ஒரு கனவு என்றும், குழந்தைகள் பிறப்பதும் இறப்பதும் அவர்கள் நமது           கொடுப்பினை என்றும் பழைய ஜென்ம  கடன்களை உணரும் தருணம் அது       என்றும் கூறித் தேற்றுகிறோம்.  ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையை இழந்து 

தவிக்கும் போது இதே வாதங்களால் உங்களைத் தேற்றிக் கொள்ள 

முடியவில்லை. இந்த ஆறுதல் மொழிகள் எல்லாம் மற்றவருக்கு மட்டுமே தான்!

அர்ஜுனன் கிருஷ்ணரை புருஷோத்தமா என்று அழைத்தான்.  ஏனென்றால் அவரே புருஷர்களில் உயர்ந்த புருஷராவார். புருஷா என்றால் உடல் என்ற – புரா- என்ற   நகரிலே – உள்ளவன் என்று அர்த்தம். ஒவ்வொரு உடலிலும் புருஷன் 

இருக்கிறான்.

 பிரபஞ்சம் அனைத்துமே புருஷோத்தமனைத் தன்னுள் கொண்டிருக்கிறது.     

ஆகவே இறப்பது எது என்றால் உடல் மட்டுமே தான்! அதன் உள்ளே இருக்கும்    புருஷன் அல்ல.  புருஷன் உங்களின் உள்ளே இருக்கிறான் என்ற நம்பிக்கை      உங்கள் தீய எண்ணங்களையும்,தீய நாட்டங்களையும் புலன்களையும் 

மனதிலிருந்து அகற்றி மனதைச் சுத்தமாக்குகிறது.  உள்ளிருக்கும் பானம் 

மட்டுமல்ல, பாத்திரமும் சுத்தமாக்கப்பட வேண்டும்.  அப்படி இல்லையென்றால்  எவ்வளவு நேரம் ஸ்மரணமும் தியானமும் செய்தாலும் கூட  அவை பலனைத் 

தராது.  

ஆகவே தான் வேதங்கள் பிராமணர்களிடம்  மிகக் கடுமையான 

விதிகளுடனும் ஒழுக்கக்கட்டுப்பாடுடனும் ஒப்படைப்பட்டது. அப்படிப்பட்ட 

ஒழுக்கக் கட்டுப்பாடுடன் மனம் சுத்தமாக்கப்படவில்லை என்றால் வேதங்களைக் கற்றுப் பயனில்லை.

…

பெருமை மிகு தமிழகத்தில் தொண்டமண்டலம்! (Post No.15,702)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,702

Date uploaded in London – 6 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலைமலர் 30-4-26 தேதியிட்ட இதழ் விளம்பர மலர் சிறப்பிதழாக வெளி வந்தது. பெருமை மிகு தமிழகம் என்பதை மையப்பொருளாகக் கொண்ட அந்த சிறப்பிதழில் பெருமை மிகு தமிழகத்தில் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், கொங்கு மண்டலம், பல்லவ மண்டலம் என நான்கு சிறப்புக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு ஒவ்வொன்றாகக் காணலாம்.

பாண்டிய மண்டலம் சோழ மண்டலம் கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து இப்போது கடைசி கட்டுரையான தொண்ட மண்டலம் வெளீயாகிறது. 

பெருமை மிகு தமிழகத்தில் தொண்டமண்டலம்! 

ச. நாகராஜன்

இறையனார் தலைமை வகித்து சங்கத் தமிழை வளர்த்ததை பாண்டி மண்டலம் விளக்குகிறது என்றால் தமிழ்ப் புலவன் பாயைச் சுருட்டு என்று சொன்னவுடன் திருமால் பாய் சுருட்டி செந்நாப் புலவனுடன் கிளம்பிய வரலாறைச் சொல்கிறது தொண்ட மண்டலம்.

‘கல்வியில் கரையிலாத காஞ்சி’ என்று அப்பர் பெருமானால் புகழப்பட்ட காஞ்சியின் பெருமை தான் என்னே!

திருமழிசை ஆழ்வாரின் சீடரான கனிகண்ணனை பல்லவ அரசன் தன்னைப் பாடுமாறு பணிக்க, கனிகண்ணன் மறுத்து விட்டான். இதனால் கோபமடைந்த அரசன் அவனை நாட்டை விட்டுப் போகுமாறு ஆணையிட்டான். இதை அறிந்த திருமழிசை ஆழ்வார் தானும் அங்கிருந்து கிளம்பலானார். தான் வழிபடும் தெய்வமாகிய மணிவண்ணன் மட்டும் ஏன் அங்கிருக்க வேண்டும் என்று எண்ணிய ஆழ்வார் காஞ்சிபுரத்தில் உள்ள திருவெக்கா கோவிலில் பாடினார் இப்படி:

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவன் யான் செல்கின்றேன் நீயும் உன்தன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்i 

திருமால் ஆதிசேஷன் என்ற தனது பாயைச் சுருட்டிக் கொண்டு கிளம்ப உலகமே திகைத்து அதிர்ந்தது. தன் தவறை உணர்ந்த மன்னன் ஆழ்வாரிடம் மன்னிப்புக் கேட்க, மனம் இரங்கிய ஆழ்வார்

கணிகண்ணன் போக்கொழிந்தான்! காமரு பூங்கச்சி

மணிவண்ணா! நீ கிடக்கவேண்டும்! – துணிவுடைய
செந்நாப் புலவனும் செலவொழிந்தான், நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்!!

என்று பாட திருமால் தன் இருப்பிடம் வந்து அனைவருக்கும் அருள் பாலிக்க ஆரம்பித்தார். சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயரையும் பெற்றார். தமிழ்ப் புலவனின் ஆற்றலை உலகம் உணர்ந்து கொண்டது. 

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவரே. 

கந்தபுராணத்தை இயற்றிய கச்சியப்ப சிவாசாரியார் காஞ்சிபுரத்தில் 

 அவதரித்தவர்.  குமரகோட்டத்தில் உள்ள முருகப் பெருமானின்                       அருளாணையுடன் அதை அவர் இயற்றினார். 10345 பாடல்கள் கொண்ட இந்த நூலுக்கு முருகப் பெருமானே ‘திகடச்       சக்கரச் செம்முகம்’ என்று அடி எடுத்துக் கொடுத்தார் என்பது வரலாறாகும். 

இன்னும் ஆதிசங்கரர் நிறுவிய காஞ்சி காமகோடி பீடம் இந்து மதத்தின் ஏற்றத்தைப் பறைசாற்றும் மடமாகும். சமீப காலத்தில் வாழ்ந்த இதன் 68வது பீடாதிபதி மகா பெரியவர் என்று உலகோரால் கொண்டாடப்பட்டார். இவர் அருளாசியைப் பெற கிரீஸ் ராணி உள்ளிட்ட மேலை நாட்டோரும் வருவது வழக்கமானது.

 காஞ்சிபுரம் பட்டு சேலைகள், வேஷ்டிகளுக்கும் கைவினைப் பொருள்களுக்கும் பெயர் பெற்ற இடமாகும். 

14ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் முருக பக்தர் அருணகிரிநாதர் ஆவார். இவர் 16000 திருப்புகழ் பாடல்களைப் பாடினார். நமக்கு இன்று

 கிடைத்திருப்பது 1334 பாடல்கள் மட்டுமே. இவர் திருவண்ணாமலை 

அண்ணாமலையார் கோவிலில் வாழ்ந்து முருகன் அருளால் பாடல்களை இயற்றினார். ‘யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர்

 தந்ததனால்’ என்ற இவரது வார்த்தைகளால் முருகனே இவரைப்

பாடல்களை இயற்ற வைத்தான் என்பது தெளிவு. 

திருவண்ணாமலையில் அருளாட்சி புரிந்த ரமண மகரிஷியை உலகம்   முழுவதும் போற்றியது. மேலைநாடுகளிலிருந்து ஏராளமானோர்         

ரமணாசிரமம் வந்து இவரை தரிசித்து அருள் பெற்றனர். குறிப்பாக பால்       பிரண்டன் எழுதிய ‘எ செர்ச் இன் சீக்ரட் இண்டியா’ என்ற நூல் இவரது            அருமைகளைக்  கூற உலகமே இவர் பால் ஈர்க்கப்பட்டது. 

இன்னும் திருவண்ணாமலையில் சேஷாத்ரி ஸ்வாமிகள் உள்ளிட்ட              ஏராளமான சித்தர்கள் வாழ்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

காஞ்சி வீரத்தின் விளை நிலமாகும். இங்கிருந்து ஆண்ட பல்லவ மன்னர்கள் உலகளாவிய அளவில் புகழ் பெற்றனர். மாமல்லன் என்று அழைக்கப்பட்ட பெரும் வீரன் மாமல்லபுரத்தில் அற்புதமான சிற்பங்களை வடிக்கச் செய்தான். இன்றளவும் அந்த அற்புதச் சிற்பங்களைக் காண உலகெங்குமிருந்து மக்கள் வருகின்றனர். அதன் பெருமையைப் பறை சாற்றுகின்றனர். 

தொண்ட மண்டலத்தில் உள்ள புலியூர் கோட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்த தெய்வப் புலவர் சேக்கிழார் 63 நாயன்மார்களின் வரலாற்றை பெரிய புராணம் என்ற நூலாக வடித்தார். தில்லையில் உலகெலாம் என்ற வார்த்தையை ஒலித்து இறைவனே நூலுக்கு அடி எடுத்துக் கொடுத்தான். இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இவர் விளங்கிப் பெருமை பெற்றார். குன்றத்தூர் சென்னையின் புறநகர்ப் பகுதியாக போரூர் அருகே உள்ள ஊராகும். 

சென்னையின் புகழ் அதன் பல்வேறு துறை விற்பன்னர்களால் உலகம்      முழுவதும் பரவிய ஒன்று.

கணினி சார் துறைகளைச் சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள், வாகனக் 

கட்டுமான உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், 

ரயில் பெட்டிகளின் வடிவாக்கத் தொழிலகம், கிரிக்கெட், செஸ்  உள்ளிட்ட விளையாட்டுகளில் உலகப் புகழ் பெற்ற வீரர்கள்… இப்படி சென்னையின் புகழ் பட்டியல் நீண்ட ஒன்று.

ஆயிரக் கணக்கான தமிழ் திரைப்படங்களை உருவாக்கிய சென்னை மாநகரம் ஆயிரக்கணக்கான திரைத்துறை சார்ந்த கலைஞர்களை உருவாக்கிய நகரமாகும். இசை, நடனம், நடிப்பு, கதை, வசனம், கேமரா உத்தி, வண்ணச் சேர்க்கை, உடை அலங்காரம் என அனைத்துப் பகுதிகளிலும் தன் முத்திரையைப் பதித்த துறை சென்னையின் திரைப்படத் துறையாகும்.

 உலகின் ஆகப் பெரிய கடற்கரைகளுள் இரண்டாவது இடத்தைக் கொண்டிருக்கும் மரீனா பீச் உலக பயணிகள் அனைவருக்கும் உற்சாகம் தரும் ஒரு கடற்கரையாகும்.

இது இந்திய சுதந்திரப் போரில் லட்சக் கணக்கான மக்களுக்கு விழிப்பூட்டும் மையமாகத் திகழ்ந்தது. இங்கு கூட்டங்களில் பேசாத தேசீயத் தலைவர்களே இல்லை எனலாம். 

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இங்கு நடக்கும் படித்திருவிழா முருக பக்தர்களை ஆயிரக்கணக்கில் ஈர்க்கும் மாபெரும் விழாவாகும். 

தொண்டமண்டலத்தில் உள்ள செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் , இராணிப்பேட்டை உள்ள மாவட்டங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி புகழ் பெற்றவையாகும். விரிப்பின் பெருகும்.

படிக்காசுப் புலவர் எழுதிய தொண்டைமண்டல சதகம் நூலில் உள்ள       100    பாடல்களையும் படித்து இதன் அருமை பெருமைகளை அறியலாம். 

இராமலிங்க சுவாமிகள் தொண்டைமண்டல சதகம் பற்றிய ஒரு ஆய்வுக்    கட்டுரையையே எழுதியுள்ளார். தனது ஆய்வின் முடிவில் அவர்        தொண்டை மண்டல சதகம் என்பது சரியல்ல தொண்டமண்டல  சதகம் என்ற பெயரே சரி என்று நிறுவி இருக்கிறார். 

இப்படிப் பெருமை மிகு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சிற்றூரும், பெரும் நகரமும் தமிழகத்தின் காலம் வென்ற சரித்திரத்தையும், பண்பாட்டையும், கலை உணர்வையும், வீரத்தையும், தேசீயப் பற்றையும். இலக்கிய வளத்தையும், காலத்திற்கேற்ற அதி நவீன அறிவியல் முன்னேற்றத்தையும் வெளிப்படுத்துவதைக் காணலாம். 

பெருமை மிகு தமிழகத்தின் பெருமைகளை முற்றிலுமாகச் சொல்ல முடியுமா என்ன?

வாழ்க தமிழ், வாழிய தமிழர், வாழிய பழம் பெரும் தமிழ்நாடு!

***

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-11;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,686)

Written by London Swaminathan

Post No. 15,686

Date uploaded in London –2 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திவ்யதேசம்          திருச்சேறை / பஞ்சஸார க்ஷேத்திரம்

மூலவர்-        ஸாரநாதன்    

உத்ஸவர் –     மாமதலைப்பிரான்   

தாயார்    –     ஸாரநாயகி /ஸார நாச்சியார் / பஞ்ச லக்ஷ்மி   

திருக்கோலம்-        நின்ற    

திசை –     கிழக்கு   

பாசுரங்கள் —    12   

மங்களாசாசனம்      திருமங்கையாழ்வார் 12

சாரநாதன் என்ற எம்பெருமான், சாரநாச்சியார் என்ற தாயார், சார புஷ்க்ரணி, சாரவிமானம் மற்றும் சார க்ஷேத்திரம் என்ற ஐந்தும் சேர்ந்து பஞ்ச சார க்ஷேத்திரம் என்று ஆயிற்று.

ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, மஹாலக்ஷ்மி, சார நாச்சியார் என்று ஐந்து தேவிகளுடன் எம்பெருமான் காட்சி அளிக்கிறார். இங்குள்ள மூலவர் தனது வலது கையில் பத்மம் வைத்துள்ள காட்சி பரமபதம் எனப்படும் வைகுண்டத்தில் எம்பெருமான் தனது வலதுகரத்தில் பத்மம் வைத்துள்ளதற்கு ஓப்பானதாகும்.

எம்பெருமான் காவிரி தாய்க்கு ப்ரத்யக்ஷம். குளக் கரையில் காவிரியம்மனுக்கு சன்னதி உள்ளது. காவிரித் தாயின் தவத்தின் பலனாக அவரது மடியில் பெருமாள் குழந்தையாகத் திகழ்ந்ததோடல்லாது, அவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, நிளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய ஐந்து தேவியருடன் காட்சியளித்தார்

ராஜகோபாலன் சன்னதி உள்ளது. புஷ்கரணிக்கு வடமேற்கு திக்கில் உள்ள ஆஞ்சநேயரும் அவசியம் தரிசிக்க வேண்டிய சன்னதி.

குடவாசலிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சேறை அமைந்துள்ளது .

கும்பகோணத்திற்கு குடத்தின் மூக்கு என்று சொல்வதை ஒட்டி, குடத்திற்கு வாசல், குடவாசல் என்ற அருகில் உள்ள ஊர். இந்த திவ்யதேசம், குடத்தின் சாரம், அதாவது மத்திய பாகம்.

மார்க்கண்டேயர் முக்தியடைந்த தலம் இது

திருச்சேறை, சாரநாதப் பெருமாள் (பஞ்சஸாரக்ஷேத்ரம்) மற்றும் செந்நெறியப்பர் (சிவன்) ஆகிய இரு முக்கிய கோவில்களைக் கொண்ட தலம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த (13 பாசுரங்கள்) மற்றும் தேவாரப் பதிகங்கள் (சம்பந்தர், அப்பர்) பாடியுள்ள சிறப்புமிக்க தலம்.

திருமங்கையாழ்வார் இந்த திவ்யதேச எம்பெருமானை பற்றி பாடும் போது, இந்த எம்பெருமானின் திருவடிகளை வணங்கும் எல்லா பக்தர்களையும், ஆழ்வார் தன்னுடைய தலையில் தாங்குவதாக கூறி உள்ளார். “செல்வத் தண்சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே” (பெரிய திருமொழி 7.4.1)

திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த

பெரியதிருமொழி

1578

கண்சோர வெங்குருதி வந்திழிய

        வெந்தழல்போல் கூந்தலாளை

மண்சேர முலையுண்ட மாமதலாய்

        வானவர்தம் கோவே என்று

விண்சேரும் இளந்திங்கள் அகடு உரிஞ்சு

        மணிமாட மல்கு

செல்வத் தண்சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின்

        என் தலைமேலாரே

கண்கள் சுழன்று சோரவும், வெப்பக் குருதி வெள்ளம் வெளிப்படவும், தீத்தழல்போல் சிவந்த கூந்தலுடைய பூதனையின் முலைப்பாலை குடித்து மடியச்செய்த பச்சிளம்பிள்ளையே ! வானவர் தலைவனே ! வானில் திரியும் இளம்பிறை வயிற்றைத் தொடும் மணி மாளிகைகள், செல்வம் வாய்த்ததுமாகிய திருச்சசேறை எம் பெருமானைத் தோழுவர்தம் திருவடிகளைத் தலைமேல் ஏற்பேன்.

 1579

அம் புருவ வரி நெடுங்கண்

        அலர்மகளை வரை அகலத்து அமர்ந்து

மல்லல் கொம்புருவ விளங்கனி மேல்

        இளங் கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம்

வம்பலரும் தண்சோலை

        வண்சேறை வானுந்து கோயில் மேய

எம்பெருமான் தாள் தொழுவார்

        எப்பொழுதும் என்மனத்தே இருக்கின்றாரே

அழகிய புருவத்துடன் நீள்விழிகளும் உடைய மலர்மகளைத் தனது திருமார்பில் வைத்தவன், தழைத்த கிளைகளில் விளங்கனிகளின் மேலே இனங்கன்றைக் குறுந்தடியாக எறிந்தவன், மணம் பரவியும் குளிர்ந்த சோலைகள் சூழும் திருச்சேறை திருக்கோயிலில் வாழ்கின்ற பெருமானுடைய திருவடிகளைத் தொழுவார்கள் எல்லோரும் எப்போதும் என் மனத்தில் வாழ்கின்றார்கள்.

1580

மீதோடி வாளெயிறு மின்னிலக

         முன் விலகும் உருவினாளை

காதோடு கொடி மூக்கு அன்றுடன் அறுத்த

         கைத்தலத்தா என்று நின்று

தாதோடு வண்டலம்பும்

         தண்சைற எம்பெருமான் தாளை ஏத்தி

போதோடு புனல்தூவும் புண்ணியரே

         விண்ணவரின் பொலிகின்றாரே

மேலே ஓங்கிய கோரைப்பல் மின்னலாய் ஒளிவிட, எதிரில் நிற்போர் அஞ்சி ஓடும் உருவுடைய சூர்பணகையைச் செவியோடு மூக்கையும் அறுத்துவிட்ட கைகளையுடைய இராமனே ! பூந்தாது கிண்டும் வண்டுகள் ஒலிக்கும் திருச்சேறை எம்பெருமானது திருவடிகளைப் போற்றி, மலர்களையும் புனித நீரையும் பரிமாறும் நல்வினைப்பேறு வாய்ந்தவர்கள் விண்ணவராய் விளங்குகின்றனர்.

 1581

தேராளும் வாள அரக்கன்

        தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழ

போராளும் சிலையதனால்

        பொருகணைகள் போக்குவித்தாய் என்று

நாளும் தாராளும் வரைமார்பன்

        தண்சேறை எம்பெருமான் உம்பராளும்

பேராளன் போ் ஓதும் பெரியோரை

        ஒருகாலும் பிரிகிலேன

தோ் நடத்த வல்லவனும் வாளை ஏந்தியவனுமான இராவணனின் இலங்கையைக் போரில் வில்லை ஏந்திக் கொடிய அம்புகளை ஏவி அழித்த இராமனே ! திருத்துழாய் மாலையுடன் விளங்கும் திருமார்புடையவனே, மேலுலங்களையும் காக்கும் பெருமையுடைய திருச்சேறை எம்பெருமானுடைய திருப்பெயர்களை ஓதிப் போற்றும் பெரியோர்களைக் கணப்போதும் நான் பிரியமாட்டேன்.

 1582

வந்திக்கும் மற்றவர்க்கும்

        மாசுடம்பின் வல்லமணர் தமக்கும் அல்லேன்

முந்திச் சென்று அரி உருவாய்

        இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்

சந்தப்பூ மலர்ச்சோலைத்

        தண்சேறை எம்பெருமான் தாளை

நாளும் சிந்திப்பார்க்கு என்னுள்ளம்

        தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே

இரணியன் வலிமையை அழித்த பெருமானுக்கே நான் உரியவன். வலிந்து வாது செய்யும் சமணர்க்கும், மற்றும் பெளத்தர்கட்கும் நான் உரியேன் அல்லேன். சந்தனமலர்ப் பொழில்கள் சூழந்த திருச்சேறை எம்பொருமானுடைய திருவடிகளை நாள்தோறும் எண்ணுவார்க்கு என் உள்ளம் தேன் அடர்ந்தது போல எல்லாக் காலமும் இன்புறுகின்றது.

 1583

பண்டேனமாய் உலகை அன்றிடந்த

        பண்பாளா என்று நின்று

தொண்டானேன் திருவடியே துணையல்லால்

        துணையிலேன் சொல்லுகின்றேன்

வண்டேந்தும் மலர்ப்புறவில்

        வண்சேறை எம்பெருமான் அடியார் தம்மை

கண்டேனுக்கு இது காணீர்

        என் நெஞ்சம் கண் இணையும் களிக்குமாறே

முன்னர் வராகமாய் உலகைக் குத்தியெடுத்த நீர்மையனே ! உன்னை துதித்துத் தொண்டானேன் நான் : தேவரீர் திருவடிகளே எனக்குக் காப்பு . இவை தவிர வேறு புகலிடம் இல்லை என்று உறுதியாக சொல்லுகிறேன். வண்டுகளைக்கொள்ளும் மலர்ச் சோலை சூழ்ந்த நிலங்களுடைய திருச்சேறையில் உறையும் எம்பெருமானின் அடியார்களைக் கண்ட இப்பேறு, என் கண்களையும் நெஞ்சையும் களிக்கச் செய்கிறது.

 1584

பைவிரியும் வரியரவில்

        படுகடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்

மைவிரியும் மணிவரைபோல்

        மாயவனே என்றென்றும் வண்டார் நீலம்

செய்விரியும் தண்சேறை யெம்பெருமான்

        திருவடியைச் சிந்தித்தேற்கு

என் ஐயறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம்

        என் அன்புதானே

திருப்பார்கடலிலே திருவனந்தாழ்வான் மேல் கண்வளரும் எளியோனே! என்றும் அருள் படர்ந்த நீலமணி மலை போல் திருமேனித் திருமாலே! பலகாலும் வண்டுகள் அமரும் கருநெய்தல் கழனிகளிலே மலரும் தண்சேறை எம்பெருமானை சிந்திக்கின்றேன். என் ஐம்பொறிகளால் விளையும் அறிவூற்றிப் பெருமானை தனக்கே ஆக்கிக்கொண்டு அடிமைப்பட்டவர்பால் என்னுடைய அன்பும் அடிமைப்படும்.

 1585

உண்ணாது வெங்கூற்றம்

        ஓவாத பாவங்கள் சேரா

மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்

        மென் தளிர்போல் அடியினானை

பண்ணார வண்டு இயம்பும்

        பைம்பொழில்சூழ் தண்சேறை யம்மான் தன்னை

கண்ணாரக் கண்டுருகிக்

        கையாரத் தொழுவாரைக் கருதுங்காலே

வானவரும் நானிலந்தோரும் கிட்டி வணங்கும் மெல்லிய தளிர் திருவடிகளை உடையவனை, வண்டுகள் பண் மலியப் பாடுகின்ற பசுஞ்சோலையுடைய திருச்சேறைப் பெருமானைக், கண்ணாரக் கண்டு வணங்கி, மனமுருகி கைகளைக் குவித்துத் தொழுபவர்களை நினைக்குமளவில், கொடிய செயலுடைய காலன் நம்மை வருத்தமாட்டான். நம்மை துன்புருத்தும் தீவினைகள் நம்மை அணுகமாட்டா.

 1586

கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால்

        போதொருகால் கவலை என்னும்

வெள்ளத்தேற்கு என்கொலோ

        விளைவயலுள் கருநீலம் களைஞர் தாளால் தள்ள

தேன் மணநாறும்

        தண்சேறை எம்பெருமான் தாளை

நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இதுகாணீர்

        என்னுள்ளம் உருகுமாறே

வயல்களில் முளைத்துள்ள நெய்தல் மலர்களைக் களைந்ததால் மணம் பரவும் திருச்சேறைப் பெருமானது திருவடிகளை நாள்தோறும் மனத்தில் வைத்து நினைப்பவரை எனது மனம் நெகுழும். இப்பேறு எவ்வாறு எனக்குக் கிடைத்தது. நான் இறைவனுக்குரிய உள்ளுயிரை எனது என்று நினைக்கும் கள்வன், வஞ்சக நெஞ்சினன், ஆதலால் துன்பப் பெருங்கடலில் அழுந்தியிருப்பவன். எனக்கும் இப்பேறு கிட்டும்.

 1587

பூமாண்சோ் கருங்குழலார் போல் நடந்து

        வயல் நின்ற பேடையோடு

அன்னம் தேமாவின் இன்னிழலில் கண்துயிலும்

        தண்சேறை யம்மான் தன்னை

வாமான் தோ்ப் பரகாலன்

        கலிகன்றி ஒலிமாலை கொண்டு தொண்டீர்

தூ மாண்சோ் பொன்னடிமேல் சூட்டுமின்

        நும் துணைக்கையால் தொழுது நின்றே

பூச்சூடிய கருங்கூந்தல் பெண்கள் போல் வயல்களிலே அன்னம் பெடையோடு உலாவி, தேமா மரத்தின் குளிர்ந்த நிழலில் உறங்குகின்ற திருச்சேறையில் உறையும் பெருமானைத் தாவிப்பாயும் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி, பகைவர்களை வெல்லும் கலிகன்றி ஆழ்வார் பாடிய பாடல்களைப் பாடும் பக்தர்களை அழகு மிக்க தூய பெருமானதுத் திருவடிகளின் மேலே கைகளைக் குவித்து வணங்குவீர்.

–Subham—

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-11;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருச்சேறை , பஞ்சஸார க்ஷேத்திரம்    

சங்க காலத்தில் விலைமாதர்களும் விபச்சாரமும் (Post No.15,666)

Written by London Swaminathan

Post No. 15,666

Date uploaded in London –28 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(ENGLISH VERSION OF Prostitution in Ancient Tamil Nadu; Parattaiyar or public women in Narrinai (Post No.15,663) WAS POSTED YESTERDAY)

உலகில் விபச்சாரமும் விலை மகள்களும் இல்லாத எந்த சமுதாயமும் இல்லை; கலாசாரமும் இல்லை ; எல்லா மத நூல்களிலும் இது குறித்த எச்சரிக்கைகள் உள்ளன . எனினும் சங்கத் தமிழ் பாடல்களிலும் அருணகிரிநாதர் யாத்த திருப்புகழ் பாடல்களிலும் இது சற்று தூக்கலாகக் காணப்படுகிறது . இதனால் இது குறித்து தமிழ் அறிஞர்கள் கதைக்கவே பயப்படுகிறார்கள் ; கே கே பிள்ளை எழுதிய ஆங்கில நூலில் நற்றிணையில் உள்ள விலைமாதர்கள் பாடல்களை எழுதி இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்கிறார் . எங்கள் குடும்ப நண்பரும் மதுரை வடக்கு மாசிவீதியில் எங்கள் வீட்டுக்கு அடுத்து வசித்தவரும் கம்பனும் மில்டனும் எழுதி டாக்டர் பட்டம் பெற்றவருமான டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன் (எஸ் ஆர் கே ) இது குறித்து மிக அருமையான விளக்கம் கொடுத்துள்ளார் :

“அகத்தினை இலக்கியம் உலக இயல் வாழ்வின் படப்பிடிப்பு இல்லை என்பதை இன்னும் ஒரு வகையிலும் ஊகிக்கலாம். சங்க காலத்தில் பரத்தையர் இருந்தனர் என்பதும் , மேல்வருக்க இளைஞர் பலர் பரத்தையர்களை நாடி இழிவுற்றனர் என்பதும் மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் முதலியவற்றால்  விளங்குவது மெய்யே . ஆனால் பரத்தைமை என்பது சிறுபான்மையோரைப் பிடித்த நோயே. மக்கட் தொகையுடன் ஒப்பிடும்போது விலைமகளிர் சிலரே . அவர்களும் பெரும்பாலும் புகார், மதுரை முதலிய பெரு நகரங்களிலே வாழ்ந்தனர் . ஆனால் அகத்திணை இலக்கியத் தலைவர்கள் மனைவியரை நீங்கி பரத்தையரை நாடிச் செல்வோராகக் காட்சி தருகின்றனர் . 966 கற்பியர் பாக்களில் 279 பரத்தையர் பிரிவுக்குரியனவாக உள்ளன. இது உண்மை வாழ்வின் வெளியீடு எனில் , குல மகளிர் பாதி, விலை மகளிர் பாதியாகப் பெண்குலம் அமைந்திருந்தது என்று தோன்றும். அத்தகைய இழிநிலை சமுதாயத்துக்கு ஒருபோதும் வாய்க்கவில்லை என்பது வெளிப்படை . எனவே அகத்திணை கற்பனையை சமுதாய வாழ்வின் சித்திரமாகக் கொள்வது பிழையே “.

— இந்தியப்  பண்பாடும் தமிழரும் – எஸ் இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை , 1971

தொல்காப்பியரும் திருவள்ளுவரும் கூட இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தமிழர்களை எச்சரிக்கின்றனர் .

***

இனி நற்றிணையில் வரும் பாடல்களில் விலைமகளிர் பற்றி வரும் இடங்களைக் காண்போம்.

எல்லாப் பாடல்களும் மருதத் திணையில் உள்ளவை  ;  அந்த திணையில் இப்படிப்படுவது ஒரு மரபு; ஒரு பாணி ; அதிலும் குறிப்பாக பரணர் பாடல்கள் மிகுந்திருப்பதையும் கவனிக்க வேண்டும் . இவை தவிர ஒரே ஆணுக்குப் பல விலைமாதர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவனை இழுத்த விஷயமும் , விபச்சகாரிகளிடையே ஆட்களை பிடிக்க நடந்த சண்டைகளும் ஒரு விலைமாதர் சேரி க்குள்  வேறு ஒருவள் வாடிக்கையாளரைப் பிடிக்க வந்த போது விரட்டிய செய்திகளும் ஏனைய அகப்பாடல்களில் கிடைக்கின்றன

***

நற்றிணை 30 ஒரே ஆண்மகனைச் சுற்றி பல விலைமாதர்கள் இழுபறி

கடலில் செல்லும் பாய்மரக் கப்பல் கவிழ்ந்ததால் மனம் கலங்கி, அதிலிருந்த ஒரே ஒரு மிதக்கும் பலகையைப் பலர் அவரவர் பக்கம் இழுப்பது போல உன்னை பரத்தையர் பலர் அவரவர் அணைப்புக்கு இழுத்துத் துன்புறுவதைப் பார்த்தேன்.

30. மருதம்

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், ”யாரையும் அறியேன்” என்றாற்குத் தோழி சொல்லியது.கொற்றனார் பாடல்

கண்டனென் மகிழ்ந! கண்டு எவன்செய்கோ?

பாணன் கையது பண்புடைச் சீறியாழ்

யாணர் வண்டின் இம்மென இமிரும்,

ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின்

மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்  5

கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி

கால் ஏமுற்ற பைதரு காலை,

கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன் வீழ்பு,

பலர் கொள் பலகை போல

வாங்க வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே.      

***

நற்றிணை Natrinai 100

பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச் சொல்லியது. பரணர் பாடல்.

பரத்தை சொல்கிறாள்: அவன் என் கூந்தலையும் கையையும் பிடித்து இழுத்தான். உன் மனைவியிடம் சொல்லிவிடுவேன் என்றேன். அவன் நடுங்கிப் போனான். அதை நினைத்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது.

பாடல் 100. மருதம்

உள்ளுதொறும் நகுவேன் தோழி! வள்உகிர்

மாரிக் கொக்கின் கூரல் அன்ன

குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்

தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்

வான் கோல் எல் வளை வௌவிய பூசல்   5

சினவிய முகத்து, ”சினவாது சென்று, நின்

மனையோட்கு உரைப்பல்” என்றலின், முனை ஊர்ப்

பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்

தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்

புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்    10

மண் ஆர் கண்ணின் அதிரும்,

நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.

***

நற்றிணை 20 பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன், ”யாரையும் அறியேன்” என்றாற்குத் தலைவி சொல்லியது; ஓரம்போகியார் பாடல்.

மனைவி சொல்கிறாள் ,“ஐய, நீயா ஒன்றும் தெரியாதவர்?

அவளா ஒன்றும் தெரியாத மடந்தை? அவளை நான் என் கண்ணால் பார்த்தேனே.உன்னுடைய மார்பிலே அவள் படுத்துக்கிடந்தாள். அதனால் உன்னுடைய பூ மாலையின் மணம் அவள் கூந்தலில் கமழ்ந்தது.

அந்தக் கூந்தலை அவள் உலர்த்திக்கொண்டு ஆடையையும் ஆட்டிக்கொண்டு ,.வளையல் ஓசை கேட்கும்படி கையை வீசிக்கொண்டு தெருவில் நடந்துவந்தாள். கண்களை விரித்து அங்குமிங்கும் (உன்னைத்) தேடிக்கொண்டு வந்தாள்.

ஆமாம். அவள் உன்னைத் தழுவவே இல்லை?  (தழுவியவள் என்னும் ஏளனக் குறிப்பு).

மருதம்

ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,

மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்

தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்

துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,

செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகில்,     5

பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,

சென்றனள் வாழிய, மடந்தை! நுண் பல்

சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்;

மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை,

பழம் பிணி வைகிய தோள் இணைக்    10

குழைந்த கோதை, கொடி முயங்கலளே.

***

நற்றிணை 380 Natrinai 380பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.;கூடலூர்ப் பல்கண்ணனார் பாடல்

பரத்தை வீட்டிலிருந்து மீளும் தலைவன் ,தன் வீட்டிற்குள் நுழைய முனைகிறான். பாணன் அவனுக்கு ஆதரவாகப் பேசுகிறான் அப்போது தோழி சொல்கிறாள்  “பயன் இல்லாத சொற்களைப் பேச வேண்டாம். சமையல் செய்த எண்ணெய் (தாளிக்கும்போது சிதறிய) பட்டு என் தலைவியின் ஆடை அழுக்காக உள்ளது. பால்

பருகும் குழந்தையின் வாயும் பட்டு,  நாற்றம் வீசுகிறது. தேரில் சென்று சிறந்த அணிகலன்களுடன் சேரியில் பகட்டும் மகளிருடன் வாழும் உன் தலைவனுக்கு என் தலைவி தகுந்தவள் இல்லை. அவனைக் கூட்டிக்கொண்டு ஒடி விடு” .

திணை மருதம்

நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு

மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும்,

திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற,

புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;

வால் இழை மகளிர் சேரித் தோன்றும்     5

தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால்

பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்

எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்;

கொண்டு செல் பாண! நின் தண் துறை ஊரனை,

பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப்  10

புரவியும் பூண் நிலை முனிகுவ;

விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே!

***

உன்னைத் தொட்டால் எச்சில்கலையைத் தொட்டதற்குச் சமம்; இங்கிருந்து ஒடு

நற்றிணை 350 Natrinai 350தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது.பரணர் பாடல்

நீ என்னை அணைக்காமையால் என் நலம் தொலையும்.

அப்படித் தொலைந்தாலும் தொலைந்துவிட்டுப் போகட்டும்.

நீ என்னை நெருங்க விடமாட்டேன். அப்படி உன்னை என்னிடம் நெருங்க விட்டால்,  என் கை என்னை அறியாமல் உன்னைத் தழுவிவிடும். அதனைத் தடுக்கும் வலிமை எனக்கு இல்லை.

உன் மார்போ, பரத்தை முலையைத் தழுவிய சந்தனத்தையும்,

தழுவியதால் வாடிய மாலையையும் உடையது. அது

பரத்தை உணவு உண்ட எச்சில் வட்டி போன்றது. என்னிடம் வராதே.

அவளைத் தழுவிய தோளுடன் என்னிடம் வராதே.

திணை மருதம்

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,

பழனப் பல் புள் இரிய, கழனி

வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்

தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்

தொல் கவின் தொலையினும் தொலைக! சார   5

விடேஎன்: விடுக்குவென் ஆயின், கடைஇக்

கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை

சாடிய சாந்தினை; வாடிய கோதையை;

ஆசு இல் கலம் தழீஇயற்று;

வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே!              

***

பக்கத்தில் வராதே, போ, போ !

நற்றிணை Natrinai 260 ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.பரணர் பாடல்

என்னை விரும்புபவன் போல நடித்துக்கொண்டு என்னை அணைத்துக்கொண்டு உறங்கும் பகைவன் நீ.

நான் உன் பழைய செயலை மறக்கமாட்டேன்;

அரசன் வயவன், பகைவர்களைப் போர்முனையில் அழித்தவன்.

அவன் தலைநகரம் இரும்பை. அது நீர்வளம் மிக்க ஊர்.

அந்த ஊர் போலத் தழைத்த என் கூந்தலில் சூடிய பூக்களை வாடச்செய்த பகைவன் நீ. அதனை நான் மறக்கமாட்டேன்.

இவ்வாறு பரத்தையிடம் சென்று வந்த தலைவனிடம் தலைவி கூறுகிறாள்.     

திணை மருதம்

கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை

பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ,

தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது

குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர!

வெய்யை போல முயங்குதி: முனை எழத் 5

தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன்

மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என்

ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த

முகை அவிழ் கோதை வாட்டிய

பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே!                               

***

நற்றிணை Natrinai 225 பரத்தை தலைமகள் கேட்கும்படி சொல்லியது;  கபிலர் பாடல்

முருகக் கடவுள் போன்ற வலிமையோடு தன் சினத்தால் போரிட்ட யானையின் வெள்ளைக் கொம்பு கரை படிந்து சிவப்பாக காணப்படுவது போலவும், வாழைப்பூ மொட்டு போலவும், மகளிரின் ஓதிக் கொண்டை போலவும், தோன்றும் முலை உடையவர் யாரேனும் ஆசைதீரத் தழுவியவர் உண்டோ,  தோழி! என்னிடம் அன்பு இல்லாதவனாக அவன் இருக்கிறானே, என்று காமக்கிழத்தி தன் தோழியிடம் கலங்கிக் கூறுகிறாள்.

திணை குறிஞ்சி

முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்

பொருத யானை வெண் கோடு கடுப்ப,

வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,

மெல் இயல் மகளிர் ஓதி அன்ன

பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை     5

இரந்தோர் உளர்கொல் தோழி! திருந்து இழைத்

தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்

பயந்து எழு பருவரல் தீர,

நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?

வன்புறை எதிர் அழிந்தது;

***

நற்றிணை 320 Natrinai 320 தெருவில் பொது மகளிர் நடமாட்டம்;  குடும்ப்பப்பெண்கள் அச்சம்

பரத்தையின் காதில் விழும்படி  சொல்லியது. கபிலர் பாடல்

துணங்கை விழா முற்றுப்பெற்றது. விழாவில் முழக்கிய முழவு மாட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது. என்ன நோக்கத்தோடு இவள் தன்னை அழகு படுத்திக்கொள்கிறாள், என்று கேட்கிறாயா?  (தலைவனுக்குத் தோழி சொல்கிறாள்)

தழை அணிந்த அல்குலை உடைய ஒருத்தி (பரத்தை)

தெருவில் நடந்து சென்றாள். அதற்காக, ஊரில் உள்ள மகளிர் அனைவரும் தன் கணவனுக்கு வைத்திருக்கும் காவலை

அதிகப்படுத்தினர். அவர்கள் நல்ல அழகிகள் தான் என்றாலும் தம் கணவன்மாரின் கவனம் தம்மிடம் திரும்புமாறு தம்மை அழகுபடுத்திக் கொள்கின்றனர்.

காரி அரசன் ஓரி அரசனைக் கொன்றுவிட்டு

தன் பகையாளி ஓரி நகரில் நடந்துசென்றபோது

ஊரே ‘கல்’ என்று ஆள் நடமாட்டம் இல்லாமல் கிடந்தது போல்

இந்த ஊரின் நிலைமை ஆயிற்று.

திணை மருதம்

”விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;

எவன் குறித்தனள்கொல்?” என்றி ஆயின்

தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,

இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்

ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில்,                5

காரி புக்க நேரார் புலம்போல்,

கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,

காவல் செறிய மாட்டி, ஆய்தொடி

எழில் மா மேனி மகளிர்

விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே.   

***

நற்றிணை 340 Natrinai 340 பரத்தை வீட்டிலிருந்து திரும்பிய  தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.நக்கீரர் பாடல்

மகிழ்ந! நீ உன் உடலுறவுக்காரி வீட்டிலிருந்து வந்துள்ளாய்.

அதனால் உன்னை நான் தழுவமாட்டேன். அதற்காக உன்னை நான் சினந்துகொள்ளவும் மாட்டேன். செழியன் ஊர் போல் வளமுடன் திகழ்பவள் நான். என் வளையல்களைக் கழலச் செய்தவன் நீ  .என்னைப் பிரிந்து உன் பரத்தையோடு வாழுங்காலத்து என் வளையல்கள் உன்னை நினைந்து கழன்றன.அப்படிப்பட்ட உன்மீது சினம் கொள்வேனா? மனைவி தன் கணவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.

திணை மருதம்

புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்

கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்

படை மாண் பெருங்குள மடை நீர் விட்டென,

கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை

அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி,        5

பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,

செஞ் சால் உழவர் கோல் புடை மதரி,

பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்

வாணன் சிறுகுடி அன்ன, என்

கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே!     

***

போ போ நீ யார்கிட்ட வேணுமானாலும் போ !

நற்றிணை 360 Natrinai 360

விழாவில்,  விறலிப் பெண்பாவை ஆடுவாள். அவள் போன்ற ஒருத்தியை, நேற்று இழுத்துப் புணர்ந்து  அவளது புத்தழகைத் துய்த்தாய். இன்று  இன்பம் தரும் மெல்லிய தோள் கொண்ட மகளிரைப் பெறுவதற்காகச் சென்றுகொண்டிருக்கிறாய். பெருமானே!

உன் பரத்தைமை சிறக்கட்டும்.

அங்குசத்தால் குத்தி யானைக் குருதியைப் பலக்குவோர் சோறு கொடுத்தால் அது அதைத் திண்ணாமல் வாரி இறைக்கும்; அந்தச் சோற்றுக் கவளம் பயனற்றுப் போவது கண்டு பாகர் வருந்துவது போல, நீ சில பெண்களுக்கு கொடுத்த  செல்வம் பயன் இல்லாமல் போவது கண்டு நீ வருந்துகிறாய். அது எனக்கு மகிழ்வாக இருக்கிறது.இந்த இல்லத்தில் இன்பத்தை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.இப்போது நீ விரும்பியவளிடம் செல். உன் பரத்தமை வாழ்க.

(தலைவி சொல்வது போலத்

தோழி தலைவனிடம் சொல்கிறாள்.)

திணை மருதம்

முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய

விழவு ஒழி களத்த பாவை போல,

நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வௌவி,

இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர்,

சென்றீ பெரும! சிறக்க, நின் பரத்தை!               5

பல்லோர் பழித்தல் நாணி, வல்லே

காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப,

கைஇடை வைத்தது மெய்யிடைத் திமிரும்

முனியுடைக் கவளம் போல, நனி பெரிது

உற்ற நின் விழுமம் உவப்பென்;               10

மற்றும் கூடும், மனை மடி துயிலே.

பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி, தலைமகள் குறிப்பறிந்து, வாயில் மறுத்தது; ஓரம்போகியார் பாடல்

***

பொது மகளிர் பற்றித் திருக்குறள்

வரைவின் மகளிர்

அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.1

கிடைக்கக்கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனியசொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.2

பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான தழுவுதல், இருட்டறையில், தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.3

பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்தமாட்டார்.4

இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.5

அழகு முதலியவற்றால் செருக்குக்கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளை, தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.6

நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறு பொருள்களை விரும்பிக் கூடும் பொதுமகளிரின் தோளைப் பொருந்துவர்.7

வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவர்க்கு அணங்கு தாக்கு (மோகினி மயக்கு) என்று கூறுவர்.8

ஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.9

இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரும் கள்ளும் சூதுமாகிய இம் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.10

–subham—

Tags-

சங்க காலத்தில், விலைமாதர்களும் விபச்சாரமும் , பொது மகளிர் , நற்றிணைப் பாடல்கள் , உண்மை நிலை என்ன? பொது மகளிர் பற்றித் திருக்குறள்

ராமாயணத்தில் வரங்கள் (54) விபீஷணனுக்கு பிரம்மா வரம் அளித்தது! (Post No.15,635)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,635

Date uploaded in London – 20 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (54) விபீஷணனுக்கு பிரம்மா வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் பத்தாவது ஸர்க்கமாக அமைவது ‘ராவணன் முதலியவர்கள் வரத்தைப் பெறுவது’ என்ற ஸர்க்கமாகும்.

அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமரிடம் ராவணனும் அவனது சகோதரர்களும் பெற்ற வரம் பற்றி விளக்க ஆரம்பித்தார். அவர்களில் விபீஷணன் பெற்ற வரத்தைப் பற்றி அவர் விளக்கமாக எடுத்துரைத்தார்.

விபீஷணன் பரிசுத்த மனம் உடையவனாய் ஐயாயிரம் வருடங்கள் ஒற்றைக் காலில் நின்று தவம் புரிந்தார். பின்னர் கைகளைத் தலைக்கு மேலே தூக்கியபடியே கும்பிட்டு இன்னும் ஐயாயிரம் வருடங்கள் தவம் புரிந்தார். அதுமட்டுமின்றி சூரிய பகவானையும் தியானம் செய்யலானார். இதனால் திருப்தி அடைந்த பிரம்மா விபீஷணன் முன் தோன்றி

பரிதுஷ்டோஸ்மி தர்மாத்மன்வரம் வரய சுவ்ரத|

உத்தரகாண்டம் பத்தாம் ஸர்க்கம், ஸ்லோக எண் 27

“தர்மத்திலேயே செலுத்திய புத்தியை உடைய உன்னால் பூர்ண திருப்தி அடைந்தேன். இஷ்டமானவற்றைக் கேட்டுக் கொள்” என்றார்.

பகவான்க்ருதக்ருத்யோஹம் யன்மே லோககுரு: ஸ்வயம் |           ப்ரீதேன யத்ஹி தாதவ்யோ வரோ மே ஸ்ருணு சுவ்ரத ||

சுவ்ரத – சிறந்த விரதமுடைய                                        பகவன் – பகவானே                                               லோக குரு – லோக குரு                                               ஸ்வயம் – தேவரீரே                                                ப்ரீதேன – ப்ரீதி கொண்ட உம்மால்                                       தாதவ்ய: – வரமளிக்க உரியவன்                                          யதி – என்கிறபடியால்                                               அஹம் – நான்                                               க்ருதக்ருத்ய – கிருதகிருத்யன் ஆகினேன்                                     மே – எனக்கு                                                       வர: – இஷ்டமான வரம்                                                 யத் – எதுவோ அதை                                                     ஸ்ருணு – கேட்பீராக

பரமாபத்கதஸ்யாபி தர்மே மம மதிர்பவேத் |                      அஷிக்ஷிதம் ச ப்ரஹ்மாஸ்த்ரம் பகவன்மதிபாது மே ||

பகவன் – பகவானே                                                      மம – நான்                                                          பரமாபத்கதஸ்ய – பரம ஆபத்திற்கு ஆளானவனாய்                      அபி – இருக்கையிலும் கூட                                     தர்மே – தருமத்தில்                                                மதி: – மனம்                                                    பவேத் – நிலை பெற்றிருக்க வேண்டும்                                  ச – அதுவும் தவிர                                               ப்ரஹ்மாஸ்த்ரம் -பிரம்மாஸ்திரமானது                                அஷிக்ஷிதம் – சிக்ஷையாகாதபடி                                                மே – எனக்கு                                                ப்ரதிபாது – விளங்க வேண்டும்

யா யா மே ஜாயதே புத்திர்யேஷு யேஷ்வாஸ்ரமேஷு ச |               ஸா ஸா பவது தர்மிஷ்டா தம் து தர்ம ச பாலயே || 

தம் – அந்த                                                            தர்ம ச – தர்மம் ஒன்றையே                                           பாலயே – நான் பற்றி வருகிறேன்                                          து – இன்னமும்  மே – எனது                                                  யா யா – எந்த எந்த                                                       புத்தி – அறிவு                                                       யேஷு யேஷு – எந்த எந்த                                                ஆஸ்ரமேஷு – அவஸ்தைகளில்                                            ஜாயதே – நாடியதாகிறதோ                                                  ஸா ஸா – அந்த அந்த                                                   ச – எல்லாமும்                                                       தர்மிஷ்டா – புண்ணியத்தை நாடியதாக                                   பவது – இருக்க வேண்டும்

ஏஷ மே பரமோதார வர: பரமகோ மத: |                                   ந ஹி தர்மாபிரக்தானாம் லோகே கிஞ்சன் துர்லப ||

உத்தரகாண்டம் பத்தாம் ஸர்க்கம் ஸ்லோக எண்கள் 29 முதல் 32 முடிய

பரமோதார – பரம தயாளுவே                                         லோகே – உலகில்                                        தர்மாபிரக்தானாம் – தர்மத்தில் இடைவிடாத ஆஸக்தி உடையவர்களுக்கு துர்லபம் – அடைய முடியாதது என்று                                       கிஞ்சன் ந – எதுவும் இல்லை                                           ஹி – என்கிறபடியால்                                                   மே – எனக்கு                                                         பரமக: – முடிவாய் விரும்பிய                                                  மத: – உத்தேசமாகிறது                                                     ஏஷ: வர: – இந்த வரம்

இப்படி விபீஷணன் சொன்னதைக் கேட்ட பிரம்மா, “தர்மிஷ்டனாகவே நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே இதுவும் ஆகுக” என்று வரம் அளித்தார்.

மேலும் அவர் கூறினார்: “ராக்ஷஸ யோனியில் பிறந்த உனக்கு அதர்மத்தில் புத்தி புகாதிருக்கின்ற காரணத்தால் உனக்கு சிரஞ்சீவித்வத்தை கொடுக்கிறேன்”.

யஸ்மாத் ராக்ஷஸயோனௌ தே ஜாதஸ்யாமித்ரநாஷன |                                          நாதர்மே ஜாயதே புத்திரமரத்வம் ததாமி தே

உத்தரகாண்டம் பத்தாம் ஸர்க்கம் ஸ்லோக எண் 34

அமித்ரநாஷன: – சத்ருக்களை சம்ஹரிப்பவனே                        ராக்ஷஸயோனௌ – ராக்ஷஸயோனியில்                               ஜாதஸ்ய தே – பிறந்த உனக்கு                                              அதர்மே – அதர்மத்தில்                                                 புத்தி ந ஜாயதே – புத்தி புகாதிருக்கும் காரணத்தால்                                தே – உனக்கு                                                             அமரத்வம் – சிரஞ்சித்வத்தை                                                    ததாமி – கொடுக்கிறேன்

இப்படியாக பிரம்மாவிடமிருந்து சிரஞ்சீவித்வத்தை விபீஷணன் வரமாகப் பெற்றார்.

  இத்துடன் ராமாயணத்தில் வரங்கள் – இரண்டாம் பாகம் முற்றிற்று

***

சங்க காலத் தமிழ் நாட்டில் உருவ வழிபாடு (Post No.15,628)

DEVI- GODDESS WORSHIP IN HARAPPA, MOHANJADARO சிந்து சமவெளியில் தேவி வழிபாடு

Written by London Swaminathan

Post No. 15,628

Date uploaded in London –17 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

HUMAN SACRIFICE IN INDUS VALLEY; 
சிந்து சமவெளியில் ஒரு தெய்வத்துக்கு நர பலி; கீழே சப்த மாதர்கள் 

கடவுளைக்க கல்லிலோ, உலோகத்திலோ, படத்திலோ ஓவியத்திலோ உருவமாக வழிபடுவது இந்து மதத்தில் மட்டுமே உள்ளது ; வேதத்தில் உருவங்கள் வருணிக்கப்பட்டாலும் சிந்து சமவெளியில்தான் ஆதாரங்கள் கிடைத்தன . ஒருவர் தேவியின் முன்னால் குனிந்து வணங்கி ஒரு (மனிதனின்) தலையை  காணிக்கையாக சமர்ப்பிப்பதைக் காண்கிறோம். கீழே சப்த மாதர்கள் (ஏழு கன்னிமார் ) இருப்பதையும் காண்கிறோம். சிவலிங்கங்கள் கண்டுபிடித்ததாக வெள்ளைக்காரர்கள் முதல் நாளிலேயே சொன்ன  தெல்லாம் தவறு என்று பிற்கால ஆராய்ச்சியாளர்கள்  சொல்லிவிட்டனர் ; அவைகள் லிங்கம் அல்ல யோனிகள் அல்ல என்றும் தாயக்கட்டடத்தில் வைத்து விளையாடும் காய்கள் GAMESMEN  என்றும் சொல்லிவிட்டார்கள்  ; பிராணிகள் சூழ்ந்த உருவத்தை பசுபதி முத்திரை என்று வெள்ளைக்காரர்கள் சொன்னதை மறுக்கும் விதத்தில் அயர்லாந்திலும் பஹ்ரைன் தீவிலும் பிராணிகள் சூழ்ந்து நிற்கும்  தெய்வங்களின் முத்திரைகள் கிடைத்தன ; ஆகையால் அது பசுபதி அல்ல ; பொதுவாக இறைவன் என்ற கருத்தும் உருவானது . ஹரப்பா, மொஹஞ்சசதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட தேவியர் சிலைகள் பாகிஸ்தான் மியூசியங்களில் உள்ளன. எது எப்படியாகிலும் யஜுர் வேதத்தில் சிவ பெருமானை வருணித்ததை அப்படியே புறநானூற்றிலும் தேவார திருவாசகத்திலும் காண்பதோடு நில்லாமல் சோழர்காலச் சிற்பங்களிலும் காண்கிறோம்; கோயில் வழிபாட்டு விக்கிரககங்களிலும் காண்கிறோம். ரிக்வேதத்திலேயே சிவ பெருமானின் உருவம் வருணிக்கப்பட்டதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் சொற்பொழிவில் குறிப்பிட்டுள்ளார் .

DEVI WOSHIP IN INDUS  VALLEY 

வேத காலத்தில் துவங்கி சிந்து சமவெளியில் வணங்கி இன்று பாரத நாடு முழுதும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் உள்ள இந்த உருவ வழிபாடு இன்றுவரை இந்து மத்தில் மட்டுமே உள்ளது .ஒரு காலத்தில் இந்த உருவ வழிபாடு உலகம் முழுதும் இருந்ததை முகமது நபிக்கும் முன்னதாக உள்ள காபா (மெக்கா) உருவத்திலும் கிறிஸ்தவ மத கன்னிமேரி சிலைகளிலும் காணலாம் ; ஆயினும் அவர்கள் உருவ வழிபாட்டினைப் போற்றுவதில்லை .

இதற்குப்பின்னர் சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் கடவுள் உருவங்களை பெருமளவில் உற்பத்தி செய்து  விற்றுப் பணம் சம்பாதிக்கலாம் என்று அரசாங்கத்துக்கு சாணக்கியர் யோஜனை தந்ததையும் காண்கிறோம் .

சங்க இலக்கியத்தில் பரிபாடலில் தெளிவான குறிப்பு ஒன்று கிடைக்கிறது ; ஒரு பட்டிக்காட்டான் திருப்பரங்குன்றத்துக்கு வந்தபோது ஒரு சமய ஓவியத்தில் பூனை இருப்பது வினோதமாக இருக்கிறதே என்று கிராமத்தானின் மனைவி கேட்கவே அவளது கணவன் “அடியே! உனக்கு இது தெரியாதா ? அஹல்யாவை மானபங்கப்படுத்திவிட்டு இந்திரன் பூனை போல சென்றானே” என்கிறான்.  அங்கே இந்திரனின் புராணக்கதை சித்தரிக்கப்பட்டது தெரிகிறது .

SO CALLED PASUPATI IN INDUS VALLEY 

காதா சப்த சதி என்னும் பிராகிருத மொழி காதல் தொகுப்பில் ராமாயண ஓவியம் வருகிறது; அண்ணன் மனைவி வீட்டில் தனியே இருக்கும் பொது தம்பியானவன் தவறான பார்வையில் அண்ணியைப் பார்த்தவுடன் அவள் ராமாயண ஓவியத்தைக் காட்டுகிறாள். “அதோபார் லட்சுமணன், அண்ணியின் (சீதையின்) கால்களை மட்டும் பார்த்த வண்ணம் நடக்கிறான்” என்று ; இந்த பிராகிருத நூல் சங்க காலத்தில் எழுந்ததே ; ஆனால் ஓவியம் இருந்த இடம்- ஆந்திரத்தில் கோதாவரி நதிக்கரை ஊரில்.

பதஞ்சலி முனிவர் , உலகப் புகழ்பெற்ற முதல் இலக்கண நூலான பாணினீயத்துக்கு உரை எழுதினார்; அதை மஹா பாஷ்யம் / பேருரை என்றே அழைப்பார்கள் . அதிலும் அர்த்த சாஸ்திரம் போல பல குறிப்புகள் கிடைக்கின்றன

2200 ஆண்டுகளுக்கு முன்னர் கருட ஸ்தம்பங்கள் நிறுவப்பட்டதை கரிகால் சோழன் யூப ஸ்தம்ப பாடலிலும் ககிரேக்க தூதன் மத்திய பிரதேச விதிஷா நகரில் நிறுவிய தூணிலும் காண்கிறோம்

புத்த மதத்தினர் கற்களில் உருவத்தை  சமைக்கும் வரை இந்துக்கள் களிமண்ணையும் பட ஓவியங்களையும் மட்டுமே பயன்படுத்தினர் இதனால் புத்தரின் காலத்துக்கு முந்திய ஓவியங்களோ உருவங்களோ கிடைக்கவில்லை; குஷானர் வெளியிட்ட நாணயங்களில் இந்து தெய்வங்கள் உள்ளன; அதற்கு முன்னர் வடமேற்கு இந்திய கிரேக்க மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் கிருஷ்ணன் பலராமன் உருவங்கள் உள்ளன . இந்தப்   பின்னணியில் பார்க்கையில் அடுத்து வந்த சங்க காலத்தில் உருவ வழிபாடு இருந்ததை இல்லுறைத்தெய்வம் என்ற குறிப்புகளில் காண முடிகிறது. 

குஷான மன்னர்களுக்கும் முன்னதாக யாதேயா வெளியிட்ட நாணயங்களில் முருகனின் ஆறுமுகங்களையும் ஆறு புள்ளிகளாக வடித்துள்ளனர் .

GHOSTS IN INDUS VALLEY SEALS

சங்க கால குறிப்புகளைக் காண்போம்: 

நடுகல் வழிபாடும் உருவ வழிபாடே ; இதைப்பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் நிறைய உள்ளன ; உலகம் முழுதும் நடுகற்கள் அல்லது இறந்தோரின் சின்னங்கள் இருந்தாலும் அவைகளை அவர்கள் பூத்தூவி வழிபட்ட செய்தி இல்லை ; தமிழ் நாட்டிலோ தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியம் வரை அதுபற்றிய ஆகம விதிகளை பார்க்கிறோம்.

சேர்ன் செங்குட்டுவன் இந்த விதி முறைகளைப் பின்பற்றி புனித இமய மலையில் கல்லெடுத்து புனித கங்கையில் நீராட்டி பத்தினிக்கு / கண்ணகிக்கு சிலை எடுத்தையும் அது  அந்த பத்தினி வழிபாடு இலங்கை முழுவதும் பரவியத்தையும் சிலப்பதிகாரத்திலும் இலங்கை நூல் குறிப்புகளிலும் காணலாம் .

நடுகல் வழிபாடு, பத்தினி வழிபாடுகள், காலப்போக்கில் அழிந்துவிட்டன; ஆனால் அந்தக்  காலத்தில் இருந்த கோவில்களின் நீண்ட பட்டியலை சிலப்பதிகாரம் தருகிறது .அந்தக்கோயில்கள்  இந்திரன் முதலான தேவர்களுக்கும் கூட எழுப்பப்பட்டன. கந்தழி வழிபாடு 


BALARAMA, KRISHNA IN INDO-GREEK COINS

தொல்காப்பிய சூத்திரம்

“கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”

(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

கதிர், தீ, மதி இம்மூன்றை வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்பட்டு வரும் என்பது இதன் பொருள்.

கொடிநிலை = சூரியன்

கந்தழி = நெருப்பு (அக்னி பகவான்)

வள்ளி = சந்திரன்

(இந்த விளக்கம் இளம்பூரணர் உரையை ஆதாரமாகக் கொண்டது. வேறு உரைகாரர் இதற்கு மாற்றுப் பொருள் கூறினாலும் வேத கால வருணனையும் இந்திரனையும் பழந்தமிழர்கள் வழிபட்டதாகக் கூறுவதால், அக்னி என்று இளம்பூரணர் எழுதிய உரையே நன்கு பொருந்தும் என்பது என் கருத்து).

மேலும் சிலர் கந்து என்பது கம்பம் போன்ற கல் என்றும் இதுவே சிவ லிங்க வழிபாடு ஆனதாகவும் கூறுகின்றனர் ; பிற்காலத்தில் கந்தழி என்று தெய்வீகப்   பாடல்களில் இல்லாததால் இந்தச் சொல் மர்மமானதாவே இருக்கிறது.

SIVA ON KUSHANA COIN; SKANDA/MURUGA ON YAUDHEYA COIN

இல்லங்களில்   உறையும் கடவுள்  பற்றிய குறிப்புகள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த, பிரார்த்தனை அறையில் இருந்த , படங்களையோ களிமண்  வடிவங்களையோ குறித்தாகக் கொள்ளலாம் . கல் கத்தா காளி /துர்கா பூஜையானாலும் சரி , மஹாராஷ்டிரா கணேஷ் சதுர்த்தி ஆனாலும் சரி, தமிழ் நாட்டு கிராம தேவதை கோவில்களானாலும் சரி மண்ணினால் உருவத்தைச் செய்து, வழிபாடு முடிந்தவுடன்  ஆற்றில் கரைப்பதை இன்று வரை காண்கிறோம் . ஆகவே நிரந்தரமாக வழிபடுவதற்கு சுவர் ஓவியமும் விழாக்காலங்களில் வழிபடுவதற்கு களிமண்  உருவங்களும் செய்யப்பட்டன எனலாம்; விஷ்ணுவின் ஓண  விழா முதல் சிவனின் ஆதிரை விழா , கார்த்திகை தீப   விழாக்குறிப்புகள்சங்க இலக்கியத்தில் இருப்பதால் உருவங்கள் இல்லாமல் இவை நடந்திராது .

TIGER GODDESS IN HARAPPA, MHANJADARAO IN PAKISTAN

இல்லத்து உறையும் தெய்வங்கள்

அணங்கு வழங்கும் அகல் அங்கண் என்ற மதுரைக்கு காஞ்சி 164 வரிக்கு இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரிடத்து என்று உரைகாரர் நச்சினார்க்கினியர் பொருள் கண்டுள்ளார் .

கோவிலில் உள்ள உருவங்களின் வீதி உலா என்று நான் கருதுகிறேன் ; இப்போது இதை நாம் சாமி/ பெருமாள்/ அம்மன்  புறப்பாடு என்கிறோம் .

கொழுங்குடிச் செல்வரும் பிறரும் மேவிய,

மணம் புணர்ந்து ஓங்கிய , அணங்குடை நல் இல் – மதுரைக் காஞ்சி 577-578 வரிகளின் பொருள் 

“வளம் மிக்க குடிப்பிறந்த செல்வரும் அவர் வழிச் சார்ந்த பிற செல்வர்களும் வாழும் இல்லங்கள் தெய்வங்களை உடையனவாக இருக்கின்றன” என்பதைக் காட்டுகிறது

இல்லத்தின் வாயில் நிலைகளிலும் தெய்வம் நிலைபெற்றிருப்பதாகக் கொண்டாடினர்.

தொல் வலி  நிலை இய, அணங்குடை நெடுநிலை

நெய்ப்படக் கரிந்த திண்பொரிக்கதவின் – மதுரைக் காஞ்சி 353/4

“வீட்டின் வாயிலில் தெய்வம் உறைவதைக்குறிப்பிட்டு அதற்கு நெய், ஐயவி என்னும் வெண்கடுகு சமர்ப்பிக்கப்பட்டதையும் உரைகாரர்  நச்சு. குறிப்பிடுகிறார்.

இன்றுவரை அரண்மனைக் கதவுகளில் , செட்டியார் வீட்டுக் கதவுகளில் கஜ லெட்சுமி உருவம் பொறித்திருப்பதைக் காணலாம் . மைசூர் அரண்மணிக் கதவுகளில் உள்ள கஜலட்சுமி உருவத்தைப் புகைப்படமும் எடுத்தேன் ; குபேரனின் நவ நிதிகளில் சங்கம் பதுமம் என்ற இரண்டை மட்டும் கதவில் பொறிக்கும் வழக்கமும் உள்ளது

மாலை நேரத்தில் இரும்புத் தகளிகளில் விளக்கேற்றி மலர் தூவி வழிபட்டதை நெடுநல்வாடை வரிகள்

வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத் தோள்,

மெத்தென் சாயல், முத்து உறழ் முறுவல்,

பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்,

மடவரல் மகளிர் பிடகைப் பெய்த

செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து,                                                

அவ்இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து,

இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ,

நெல்லும் மலரும் தூஉய், கை தொழுது,

மல்லல் ஆவணம் மாலை அயர        (36 – 44)

கருத்துரை

வெண் சங்கினால் செய்யப்பட்ட வளையல் கையினையுடைய பெண்கள், மூங்கிலைப் போன்ற தோளினை உடையர், மென்மையான மேனியுடையர், முத்துப் போன்ற பல்லுடையர், காதிலே அணிந்துள்ள அழகிய காதணிக்குப் பொருந்த மிக்க அழகுடன் கூடிய குளிர்ச்சியான கண்களையுடையர், பெண்மைக்குரிய பேதைமைத் தன்மையுடையர், இப்பெண்கள் பூந்தட்டில் இட்டு வைத்த மலரும் காம்பினையுடைய பிச்சி மலரின் அரும்புகள் இதழ் விரித்து மணம் வீசின.  அவை மலர்வதைக் கொண்டு மாலைக் காலம் வந்துவிட்டதை அறிந்தனர், இரும்பால் செய்யப்பட்ட விளக்கின் நுண்ணிய திரியினைக் கொளுத்தி, நெல்லும் மலரும் தூவிக் கைகளால் தொழுது தெய்வத்தை வணங்கினர். 

பெண் ஒருத்திக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அவளுடைய தோழி,  “வா, மனையில் உறையும் தெய்வத்தை வணங்கி  பலியையும் செலுத்துவோம் என்கிறாள்

”வல்லே வருக, வரைந்த நாள்!” என,

நல் இறை மெல் விரல் கூப்பி,

இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே! -அகநானூறு 282

***

HARAPPA AND MOHANJADARO IN PAKISTAN

வீடுகளின் சுவரில் பாவை/ பெண் தெய்வம்  உருவத்தை வரைந்து வெளிப்பட்டதை அகநானூறு 369 விளக்குகிறது :

கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை:

ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு,

மங்கையர் பல பாராட்ட, செந் தார்க்

கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல்

சேயிழை மகளிர் ஆயமும் அயரா;                        5

தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக்

காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப்

பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர,

இவை கண்டு, இனைவதன் தலையும், நினைவிலேன்,

கொடியோள் முன்னியது உணரேன், ”தொடியோய்!  அகநானூறு  369

பொருள்

செவிலித்தாய் இவ்வாறு சொல்லிப் புலம்புகிறாள். மகளே!

என் நிலைமையை எண்ணிப் பார். வளையல் அணியந்த மகளிர் முறை முறையாக வந்து உன்னைப் பாராட்டுவர். அவர்கள் இப்போது தவிக்கின்றனர். நீ ஊட்டாததால் நீ வளர்த்த கிளி பால் உண்ண மறுக்கிறது. மயில் போல் நடக்கும் உன் தோழிமாரும் விளையாடவில்லை. நீ நீர் ஊற்றாததால் நீ தாழியில் வளர்த்த செடிகளும் பூக்கவில்லை. அழகு தவழ வயிரம் பதித்து வைதிருக்கும் உன் சுவர் ஓவியத் தெய்வத்துக்கும் படையல் செய்யப்படவில்லை. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு நான் வருந்திக் கொண்டிருக்கிறேன். அத்துடன் பழைய நினைவுகள் பல என் நினைவுக்குச் சரியாக வரவில்லை”..

***

உலகப்புகழ் பெற்ற இலக்கணமான பாணினீயத்துக்கு, 2200 ஆண்டுகளுக்கு முன்னர் உரை எழுதிய பதஞ்சலி யானை குதிரை ஒட்டகம் போன்ற பொம்மைகளை பிரகிருதி என்றும் வழிபடக்கூடிய உருவங்களை அர்ச்சா என்றும் எழுதியுள்ளார் . இவைகளை புரோகிதர்கள்  பயன்படுத்தினர் . அவர்கள் வீடு வீடாக இவைகளை எடுத்துச் சென்றோ கோவில் போன்ற ஒரே இடத்தில் வைத்தோ சம்பாத்தித்தனர்; வாழ்வூதியம் பெற்றனர் . இவை தவிர தனிப்பட்டவர் வழிபாட்டிலும் அர்ச்சா என்னும் உருவங்கள் இருந்தன. சிவன், ஸ்கந்த/ விசாகன் ஆகியோரை அவர் குறிப்பிட்டுள்ளார் .

சாணக்கியன் யோசனையின் பேரில் மெளரிய மன்னர்கள் வணிக ரீதியில் கடவுள் உருவங்களை செய்து, விற்று  அரசாங்கத்துக்குப் பணம் ஈட்டித்தந்தனர் . ஆனால் வேறுபடுத்திக் காட்டுவதற்காக இந்தக் கடவுள் பொம்மைகளின் பெயர்களுடன் க என்னும் பின்னொட்டைச் சேர்த்தனர் ‘சிவக’. ‘விசாகாக’ .

PUNCH MARKED COINS

பாணினியின் , 6-3-26; 8-1-15 சூத்திரத்துக்கு உரை எழுதுகையில் ஸ்கந்த- விசாக ஜோடி மிகவும் வரவேற்றைப் பெற்றன என்கிறார். ஆக, முருகனின் இரண்டு உருவங்கள் ஜோடி ஜோடியாக விற்கப்பட்டது தெரிகிறது.

இன்னொரு சுவையான விஷயத்தையும் பதஞ்சலி தருகிறார் பாணினி சூத்திரம் 1-2-64 க்கு உரை எழுதுகையில் காஷ்யபரின் உருவங்களையும் மக்கள் வழிபட்டது தெரிகிறது ; வர்ணன், விஷ்ணு ஆகிய இருவருக்கும் காஷ்யபர் என்ற பெயர் உண்டு.

க்ஷத்ரியர்கள் கொட்டத்தை அடக்கிய பின்னர் பரசுராம அஸ்வமேத யாகம் செய்து, இந்த பூமியை காஷ்யபரிடம் கொடுத்தார் . இதனால் பூமாதேவிக்கு காஷ்யபி தேவி என்ற பெயரும் இருக்கிறது

தனபதி /வைஸ்ராவண /குபேர வழிபாடு, ராமர் /கேசவர், பலராமர்/ கிருஷ்ணர் வழிபாடும்,  பதஞ்சலி காலத்தில் நடந்தது

தெய்வம் தொடர்பான விழாக்களை மஹஸ், சம்சத் என்ற சொற்களால் பதஞ்சலி  குறிப்பிடுகிறார் .இந்திரன் , கங்கா , ராம கேசவ , தனபதி (குபேரன்) விழாக்கள் கோவில்களில் நடந்த போது  சங்கு, மிருதங்கம், பணவ  வாத்தியங்கள் ஒலித்தன . இந்த விஷயம் தேவாரம், திவ்யப் பிரபந்த பாடல்களிலும் வருகின்றது.

சுமார் 4000 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக உருவ வழிபாடு இருந்ததற்கான இலக்கிய, தொல்பொருட் துறை சான்றுகள் நம்மிடம் உள்ளன; இந்து மதத்துக்கு சனாதன மதம் என்று பெயரிட்டது பொருத்தமே!

–SUBAHM—

TAGS-சங்க காலம்,  தமிழ் நாடு,  உருவ வழிபாடு , ஹரப்பாவில் நரபலி , தேவி வழிபாடு , சிந்து சமவெளி நாகரீகம் 

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 47; இந்து மத கலைச்சொல் அகராதி-47 (Post No.15,580)

Written by London Swaminathan

Post No. 15,580

Date uploaded in London – 5 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version was posted yesterday; here is the Tamil version:

கனகாபிஷேகம்

கனகாபிஷேகம் என்பது 90 அல்லது 100 வயது நிறைவடைந்த தம்பதிகளுக்கு, தங்கக்காசுகளால் அபிஷேகம் செய்து, நடத்தப்படும் ஒரு விழா.

பொருள்: ‘கனகம்’ என்றால் தங்கம். தங்கக் காசுகளால் தம்பதியர் மீது அபிஷேகம் செய்வது.

காலம்: பொதுவாக 90-வது , சில சமயங்களில் 100-வது வயதிலும் இந்த விழா நடத்தப்படுகிறது.

ஞானிகள் அல்லது கலைஞர்களுக்குத் தங்கக் காசுகளால் செய்யப்படும் ஒரு சிறப்பு கௌரவ நிகழ்வாகும்.

சிவார்க்க மணி தீபிகை என்ற நூலை அப்பைய தீட்சிதர் இயற்றினார்; அதனால் மகிழ்ந்த  சின்னபொம்ம நாயக்கர், தீக்ஷிதருக்கு கனகாபிஷேகம் செய்தார். அந்தப் பணத்தைக் கொண்டு அவர் பார்வதி சமேத ஸ்ரீ காலகண்டேஸ்வரர் ஆலயத்தை அடையபலத்தில் நிறுவினார்.

60 வயதில் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம் கொண்டாடப்படுகின்றன.

அப்போது அந்தப் பெரியவர்களிடம் அனைவரும் ஆசீர்வாதம் பெறுவார்கள் ; காஞ்சி பரமாசார்ய சுவாமிகளுக்கு நடந்த கனகாபிஷேகத்தை நமது காலத்தில் பலரும் நேரில் கண்டார்கள்; இப்போதும் வீடியோ மற்றும் யூ ட்யூபில் காணலாம்.

***

கேனோபநிஷத்

கேனோபநிஷத், சாமவேதத்தைச் சேர்ந்த உபநிஷத் ஆகும்., தலவாகர  உபநிஷத் என்றும் இதற்குப் பெயர்.  ‘கேன’ (எவரால்) என்ற கேள்வியுடன் தொடங்கும் ஒரு முக்கியமான உபநிஷத் . ‘கேன’ என்றால் ‘எவனால்’ அல்லது ‘யாரால்’ என்று பொருள். மனம், வாக்கு மற்றும் புலன்கள் யாருடைய சக்தியால் இயங்குகின்றன என்ற கேள்வியுடன் இது துவங்குகிறது.

இது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பகுதிகள் பிரம்மத்தின் இயல்பை விளக்குகின்றன, அடுத்த இரண்டு பகுதிகள் தேவர்களின் வெற்றி மற்றும் ‘யக்ஷ தரிசனம்’ (தெய்வீக தரிசனம்) கதையின் மூலம் ஞானத்தை உணர்த்துகின்றன.

கண்களால் பார்க்க முடியாத, ஆனால் கண்களுக்குக் கண், காதுக்குக் காது, மனதிற்கு மனம் என எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கும் அந்த பரப்பிரம்மமே உண்மையான இறைவன் என இது போதிக்கிறது.  ஆதிசங்கரர் மற்றும் மத்வர் ஆகியோர் இந்த உபநிஷத்திற்கு உரைகள் எழுதியுள்ளனர்.

***

கேது கிரஹம்

உண்மையில் கிரகம் அல்ல ; வானத்தில் காண முடியாது; சாயா / நிழல் கிரகம் ஆகும் .

புனிதத் தலங்கள்: கேது – கீழப்பெரும்பள்ளம் – திருத்தொலைவில்லி மங்கலம். ராகு-கேது தோஷ நிவர்த்திக்காக, காளஹஸ்தி போன்ற தலங்களுக்கும் செல்லலாம்.

Astronomically, Ketu and Rahu denote the points of intersection of the paths of the Sun and the Moon as they move on the celestial sphere.

சூரியனும் சந்திரனும் சுற்றும் பாதைகளில் (கோடுகள்) ஒன்றை  ஒன்று வெட்டும் இடம் இது .

கேது, பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய சுவர்பானு என்ற அசுரனின் உடற் பகுதியாகும். மோகினி வடிவில் வந்த விஷ்ணு, அமுதம் அருந்திய அசுரனின் தலையை வெட்டியபோது, உடற்பகுதி கேதுவாகவும், தலைப்பகுதி ராகுவாகவும் மாறியது.

கேது சர்ப்பத்தின் தலையையும், மனித உடலையும் கொண்டதாக சித்தரிக்கப்படுகிறது. கேதுவின் அதிதேவதை கணேசர்

ஜோதிடத்தில் துறவு, மோட்சம், ஆன்மீகம் மற்றும் உலகியல் பற்றற்ற தன்மையுடன் கேது தொடர்புடையது. ஒருவரின் ஜாதகத்தில் கேது வலுவாக இருந்தால், அவர் சிறந்த அறிவாளியாகவும், தத்துவ ஞானியாகவும் அல்லது மருத்துவத் துறையில் வல்லுநராகவும் திகழ்வார் .

பொதுவான அர்த்தம்– கொடி, வால் நட்சத்திரம்.

***

கீசகன் 

பீமனால் கொல்லப்பட்ட விராட தேச படைத்தலைவன்.

விராட தேச ராணி சுதேஷ்ணையின் சகோதரன். மல்யுத்தத்தில் வல்லவன், பாண்டவர்களின் ஓராண்டு மறைவு வாழ்க்கையின் போது (அஞ்ஞாதவாசம்), திரௌபதி மாறுவேடத்தில் சைரந்திரி என்ற பெயருடன் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தாள். அவளைத் தவறான முறையில் கீசகன் அணுகியவுடன் பீமனுடன் சேர்ந்து திட்டம் போட்டாள்; இரவு நேரத்தில் தனியிடத்துக்கு வருமாறு சொல்லவே அவன் ஆசையுடன் வந்தான் .அங்கே படுத்திருந்த பீமனை திரௌபதி என்று எண்ணி அணுகியபோது பீமன் அவன் மீது பாய்ந்து சண்டையிட்டுக் கொன்றான்

***

கோலாட்டம்  / கும்மி

தென் இந்தியாவில் பெண்கள் ஆடும் நாட்டுப்புறக் கலை. பெண்கள் வட்டமாக நின்று ஒருவருடன் ஒருவர் கோல் எனும் குச்சிகளை அடித்து  பாடிக்கொண்டே சுற்றுவார்கள் கும்மி என்பதில் குச்சிகளுக்குப் பதிலாக கைகளை ஒருவருடன் ஒருவர் தட்டுவார்கள் அப்போது பாட்டும் தாளமும் இருக்கும் ; பொதுவாக தெய்வீக இந்துசமய கிராமீயக் கலை இது ; கோவில் திரு விழாக்கள்லங்களிலும் சம்பிரதாய பஜனைகளிலும் இன்றும் இடம்பெறுகிறது ; பெரும்பாலும் மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது.

குஜராத்திலும் டாண்டியாயென்ற பெயரில் நவராத்ரி காலத்தில் கோலாட்டம் ஆடுகிறார்கள் ; ராஜஸ்தானிலும் கோலாட்டம் உண்டு; தண்ட , கோல்  என்ற இரண்டு சொற்களுக்கும் கம்பு, குச்சி என்றே பொருள்.

***

கோவலன் / கண்ணகி

சிலப்பதிகாரம் என்னும் தமிழ் காப்பியம் கோவலன் / கண்ணகி கதையை எடுத்துரைக்கிறது; கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த இரு பெரும் வணிகர்களின்  புதல்வனும் புதல்வியும் ஆவார்கள் ; இருவரும் தீ வலம் வந்து இந்து சம்பிரதாயப்படி கல்யாணம் செய்துகொண்ட பின்னர் கோவலன், மாதவி என்னும் ஆடலரசியின் வலையில் வீழ்கிறான் ; பின்னர் கண்ணகியிடம் வந்தபோது , அவளும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று ஏற்று புதிய வாழக்கை நடத்துவதற்காக  மதுரைக்குச் செல்கிறார்கள் ; சாப்பாட்டுக்கு வழி தேடுவதற்காக கண்ணகி தன்னுடைய கால் சிலம்பினைக் கொடுக்கவே அவன் மதுரைக் கடைத்தெருவுக்குச் செல்கிறான்; அங்கே ராணியின் கால் சிலம்பினைத் திருடிய பொற்கொல்லன்,  கோவலனைத் திருடன் என்று பொய் சொல்லி பாண்டிய மன்னன் முன் நிறுத்தவே அவன் விசாரணை செய்யாமல் கோவலனுக்கு மரண தண்டனை கொடுத்துவிடுகிறான்; இதை அறிந்த கண்ணகி சீறி எழுந்து மன்னர்  அரசவைக்குள் புகுந்து தன்னுடைய சிலம்பில் மாணிக்கம் இருக்கும் , ராணி சிலம்பில் முத்துக்கள் இருக்கும் என்று சொல்லி சிலம்பினை உடைக்கிறாள்; மன்னனும் ராணியும் தவறை உணர்ந்து மாரடைப்பில் செத்து விழுகிறார்கள்; கண்ணகி தன்னுடைய ஒரு முலையைத் திருகி எறிந்து மதுரையில் உள்ள தீயோரை மட்டும் அழிக்க அக்கினி தேவனுக்கு கட்டளை இடுகிறாள்; பின்னர் சேர நாட்டுக்குச் சென்று கோவலனுடன் விமானத்தில் தேவலோகம் செல்கிறாள் இந்தக் காட்சியைக் கண்ட கானவர்கள், இந்த அற்புத நிகழ்சசியை சேர மன்னனுக்குத் தெரிவிக்கவே இளங்கோ அடிகள் சிலப்பதிகார காவியத்தில் நமக்கு இதை பாடல் வடிவில் தந்தார் பிற்காலத்தில் கண்ணகியை ஒரு முலை இழந்த திருமா பத்தினி என்ற பெயரில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் மக்கள் வணங்கினார்கள் .

***

கிருஷ்ண / கேசவ

கிருஷ்ண என்றால் கருப்பன் ; பிறப்பில் கிருஷ்ணன் கருப்புத் தோலுடனும் அவனுடைய அண்ணன் பலராமன் வெள்ளைத் தோலுடனும் பிறந்தார்கள்  .

கேசவ  என்றால் கேசி என்னும் அசுரனைக் கொன்றவன் என்றும் அலக்கான கேசத்தை / தலை முடியை உடையவன் என்றும் பொருள் ; விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனின் முழு லீலைகளையும் மகாபாரதத்திலும் பாகவத புராணத்திலும் காணலாம் .சம்ஸ்க்ருதத்தில் கிருஷ்ண என்பது ஆணின் பெயர்; கிருஷ்ணா என்ற நெடிலுடன் வந்தால் பெண்ணின் பெயர். திரவுபதியும் ஒரு கருப்பி; அவளுக்கு கிருஷ்ணா என்று பெயர் .

***

க்ரியா  யோகா

கிரியா யோகா என்பது மூச்சு மற்றும் உயிர்சக்தியை (பிராணன்) கட்டுப்படுத்துவதன் மூலம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி, ஆன்மீக வளர்ச்சியை விரைவுபடுத்தும் ஒரு  தியானம். இது பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), மந்திரம் மற்றும் முத்திரைகளின் ஒருங்கிணைந்த கலவையாகும்.

பாபாஜியால் புத்துயிர் பெற்று, லாஹிரி மஹாசயரால் பரப்பப்பட்டது, பின்னர் பரமஹம்ஸ யோகானந்தர் இதை  மேலை நாடுகளில் பரப்பினார் மன அமைதி , மன அழுத்தக் குறைவு, உடல் ஆரோக்கியம் ,ஆன்மீக ஞானம்  போன்ற தெய்வீக குணங்களை வளர்த்தல் இதன் நோக்கம் ஆகும். யோகதா சத்சங்க சொஸைடி (YSS) கிரியா யோகாவைப்ப பரப்புவதில் முதலிடம் வகிக்கிறது.

***

க்ருபாச்சார்ய  – க்ருபி  

இவர்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள் ; கானகத்தில் விடப்பட்ட இவ்விருவரையும் சந்தனு மஹாராஜா வளர்த்தார் ; கிருபாச்சார்யார் கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சகல ராணுவக் கலைகளையும் கற்பித்தார் . கிருபை , துரோணாச்சார்யாவை மணந்து அஸ்வத்தாமாவைப் பெற்றாள் . மஹாபாரத யுத்தத்தில் 11 படைத்தலைவர்களில் ஒருவர் க்ருபாச்சார்ய . கடைசி வரை வாழ்ந்த இவரை சப்த/ ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவர்  என்று இந்துக்கள் போற்றுவர் ; ஆயினும், யுத்தம் முடிந்தவுடன் பாண்டவர் கூ டாரத்துக்கு தீ வைத்த மூவரில் இவரும் ஒருவர் ; பின்னர் பாண்டவ வம்சத்தில் வந்த பரீட்சித்துக்கும் ஆசிரியர் ஆனார் .

****

கிரௌஞ்ச த்வீபம்

இந்துக்களின் புராண பூகோள சாஸ்திரப்படி ஏழு கண்டங்களில் ஒன்று ; இது ஒரு மலைக்கும் பெயர் ; அதை முருகன் உடைத்ததால் அவருக்கு  கிரௌஞ்ச பேதனார் என்ற பெயரும் உண்டு ; கிரௌஞ்ச என்பது கொக்கு/ நாரை வகைப் பறவைக்கும் ஒரு பெயர்; இதே போல வடிவத்தில் வியூகம் அமைத்த செய்தி மஹாபாரதத்தில் வருகிறது; வியூகம் என்றால் படை அணிவகுப்பு; தற்காலத்தில் கிரௌஞ்ச   த்வீபம்  என்பதைச் சிலர் அண்டார்ட்டிகா என்றும் கிழக்கு ஆப்ரிக்கா என்றும் ஐரோப்பாவை ஒட்டிய பகுதி என்றும் கற்பனையுடன் வருணிக்கின்றனர். கிரௌஞ்ச பறவை ஒன்றினை வேடன் வீழ்த்தியத்தைக் கண்ட வால்மீகி தனது சோகத்தால், ஸ்லோக மழை பொழிந்து ராமாயணத்தை நமக்கு அளித்தார். 

To be continued……………..

Tags- கிரௌஞ்ச த்வீபம், க்ருபாச்சார்ய ,க்ருபி, கிருஷ்ண, கேசவ

க்ரியா யோகா , கனகாபிஷேகம் , கண்ணகி, கேனோபநிஷத், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 47; இந்து மத கலைச்சொல் அகராதி-47, கீசகன், கோலாட்டம் கும்மி

Hinduism through 500 Pictures in Tamil and English 44; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-44 (Post.15,537)

 English version posted as Part 43

நவக்ரஹங்கள்

முதலில் சுவையான செய்திகள்

பொதுவாக வைணவ கோயில்களில் நவக்ரஹ சந்நிதிகள் இருக்காது அபூர்வமாக இருக்கும். மது ரையில் கூடல் அழகர் பெருமாள் கோவிலில் நவக்ரஹ சந்நிதி உண்டு.

சைவ நவக்ரஹ  ஸ்தங்களுக்கு நிகராக வைணவ நவக்ரஹ ஸ்தலங்களும் உண்டு. தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான சைவத் ஸ்தலங்களும் திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான வைணவ நவக்ரஹ ஸ்தலங்களும் இருக்கின்றன .

இதோ பட்டியல்

கோள்கள் —  சைவ தலம் –   வைணவ தலம்

சூரியன்- சூரியனார் கோயில்- ஸ்ரீவைகுண்டம்

சந்திரன் – திங்களூர் – வரகுணமங்கை- (NATHTHAM)

செவ்வாய்- வைத்தீஸ்வரன் கோயில்- திருக்கோளூர்

புதன்- திருவெண்காடு- திருப்புளியங்குடி

வியாழன் / குரு- ஆலங்குடி- ஆழ்வார் திருநகரி

சுக்கிரன் – கஞ்சனூர் – தென்திருப்பேரை

சனி – திருநள்ளாறு – பெருங்குளம்

ராகு- திருநாகேஸ்வரம்- இரட்டைத் திருப்பதி என்னும்

கேது – கீழப்பெரும்பள்ளம் – திருத்தொலைவில்லி மங்கலம்

***

கங்கை கொண்ட சோழபுரத்தில் அதிசயம்

கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள நவக்கிரஹ அதிசயம் பற்றி அதை படமாக வரைந்த பிரபல ஓவியர் சில்பி சொல்கிறார் :

“இங்கே அருமையான வேலைப்பாடுகளுடன் ஒரு நூதன அமைப்பு முறையில் ஒரே கல்லில் நவக்கிரகம் அமைந்திருக்கிறது . இதை வேறு எங்கிலும் காண முடியாது . நான்கு அடி சதுரத்தில் சூரிய பீடத்தைச் சுற்றி மற்ற கிரகங்கள் உள்ளன . சூரியனுள்ள இடம், தாமரை இதழ்களோடு கூடிய அழகிய சக்கரவடிவில் அமைந்திருக்கிறது

சனியின் தந்தையாகிய சூரியனுக்கு ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் ஏழு நிறங்க சூர்ய ஒளியில் இருப்பதாக விஞ்ஞானம் தெரிவிக்கறதல்லவா? அந்த ஏழு நிறங்களையும் புராணம் , ஏழு குதிரைகளாக சூரிய ரதத்தில் பூட்டிவிட்டது .

இந்த ரதத்தில் அருணன் சாரத்தியம் செய்ய , மற்ற எட்டுக் கிரககங்களும் எட்டுத் திக்குகளை அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றன.

சூரிய ரதத்துக்கு ஒற்றைச் சக்கரம்தான் உண்டு என்பர்;இங்கே சூரிய ரதத்துக்கு இரட்டைச் சக்கரங்கள் . பக்கத்தில் மகிஷாசுர மர்த்தினி  “***

1990- களில் நான் லண் டன் மேகம் பத்திரிக்கையில் எழுதியதையும் கீழே தருகிறேன்

கிழமைகளைக் கண்டுபிடித்தது இந்துக்கள் ! ஈர்ப்புவிசையாக் கண்டுபிடித்தது இந்துக்கள்!!

ஞாயிறு , திங்கள், செவ்வாய், புதன் , வியாழன், வெள்ளி , சனி என்ற ஏழு கிழமைகளும்  சின்னக் குழந்தைகளுக்கும் தெரியும். யார் இதைக் கண்டுபிடித்தார்கள் ? இந்துக்களே இதைக் கண்டு பிடித்தார்கள்!

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட

கண்டன் மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல்

அணிந்து என் உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்

வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.”

——(சம்பந்தர் தேவாரம் : 02.085.01)

—

பொருள் : மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் விடம் உண்ட கண்டனும் ஆகிய சிவபிரான் திங்கள், கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்தவனாய் மகிழ்ச்சியுடன்  வீணையை மீட்டிக் கொண்டு என் உளம் புகுந்த காரணத்தால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனுள்ள ஒன்ப

து கோள்களும் குற்றம் அற்ற நலத்தைச் செய்வனவாம். அவை அடியார்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும்.

— கோளறு திருப்பதிகம், தேவாரம்

இதைப்  பாடிய திருஞான சம்பந்தர் வாழ்ந்தது மஹேந்திர பல்லவன் காலத்தில்- நின்ற சீர் நெடுமாறன் என்னும் பாண்டியன் காலத்தில்; அதாவது கிபி (பொது ஆண்டு) 600. இதே வரிசையில் உலகமே இன்று கிழமைகளை வெளியிடுகிறது .

வியாழனையும் அதை அடுத்து  வரும் வெள்ளியையும் இணைத்துப்பேசுவது இந்துமதத்தில் தேவ குரு , அசுரர் குரு என்ற கச்ச தேவயானிக் கதைகளிலும், திருப்பாவையிலும் காணப்படுகிறது . சங்க இலக்கியத்திலும் இரண்டு குருமார்கள் (அசுரர், தேவர்களுக்கு) என்ற தகவல் உள்ளது

xxxx

புதிய ஆதாரங்கள்

திருஞான சம்பந்தர் சொன்ன அதே வரிசையை நாம் இன்று பயன்படுத்துகிறோம்.

அதற்கு முன்னர் எழுந்த தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமை என்ற குறிப்பு வருகிறது. அதன் காலம் கி பி 132 என்பது கடல் சூழ் இலங்ககைக் கயவாகு வேந்தனும் என்ற குறிப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது ரோமானியர் காலம்.

இந்துக்கள் மட்டுமே இன்றுவரை கிழமைகளுக்கு கிரகங்களின் பெயர்களை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் ஆங்கிலத்திலுள்ள ஏழு பெயர்களில் நான்கு கிரகங்கள் இல்லை. ட்யூஸ் டே Tuesday , வெட்னஸ் டே Wednesday, Thursday தர்ஸ் டே, Friday ப்ரை டே என்ற நான்கு கிழமைகளில் உள்ள டிர் , வோதன் , தோர் , பிறைக் என்பன நார்டிக் இன மக்களின் கடவுளர் ; கிரகங்கள் இல்லை. இவைகளை கிழமைகளின் பெயர்களில் நுழைத்தது ஆங்கிலோ சாக்ஸன் Anglo- Saxon  இனத்தினர். இதை ரோமானிய (லத்தீன் மொழி) இலக்கியங்களில் காண்பது இரண்டாம் நூற்றாண்டில்தான்! ஆனால் நம் சிலப்பதிகாரத்திலும், ஒரு கல்வெட்டிலும் அதற்கு முன்னரே கிழமைகள் வந்துவிடுகின்றன .

கிரேக்கர்களின் முதல் நாள் சனிக்கிழமை. அடுத்துவருவது வியாழன் , பின்னர் புதன் , சூரியன் …..

ஆக அவர்கள் கிரகங்களின் பெயர்களை இட்டாலும் வரிசை பிறண்டுள்ளதைக் காண்கிறோம் .

வீக் எண்ட் WEEK END  (வார இறுதி நாட்கள் ) என்றால் சனி ஞாயிறு ! ஆனால் மேலை நாட்டுக் காலண்டர்களில் சண்டே முதல் துவங்குவர் அல்லது பழைய கால கிரேக்க நாட்டில் சனிக்கிழமை முதல் நாள். ஒரே குழப்பம் !

நாம் ஒருவர்தான் ஞாயிறு துவங்கி சனியில் முடிக்கிறோம். நாம் ஒருவர்தான் வானில் உலவும் கிரகங்கள் பெயர்களை வைத்து இருக்கிறோம். ஆங்கிலப் பெயர்களில் நான்கு, கிரகங்கள் இல்லை .

 கிரகங்கள் என்றால் பிளாணட்ஸ் Planets என்று அகராதிகள் கூறும். அப்படியானால்  நாம் சொல்லும் சூரியனும் சந்திரனும் கிரகங்கள் இல்லையே, ராகுவும் கேதுவும் கிரகங்கள் இல்லையே என்று சிலர் கேள்வி எழுப்பலாம் ; கிரஹ என்றால் ஈர்ப்பு விசை= பிடிமானம்- கவ் வுதல் ; ஐசக் நியூயூட்டனுக்கும் முன்னரே நாம் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்ததால் வானில் உலவும் சூரியன் சந்திரன் முதலிய அனைத்துக்கும் நவ கிரஹங்கள் என்று பெயர் சூட்டினோம்; இதனால் தான் GRIP. GRAB கிரிப் , கிராப் , கிராவிடி Gravity என்ற ஆங்கிலச் சொற்களும் பாணிக்கிரஹணம் சந்திர, சூர்ய கிரஹணம் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொற்களும் புழக்கத்தில் உள்ளன )

தமிழர்களும் இதை அப்படியே மொழிபெயர்த்தனர் ; கோள் என்றால் பிடித்தல் , இழுத்தல், ஈர்த்தல்  என்று பொருள் ; கொள்முதல், கொள்ளவேண்டும் , கொள்கை என்பதில் இந்தப் பிடிப்பு என்ற கருத்து வருகிறது ஆகை யால் ஈர்ப்பு விசை என்னும் கிராவிட்டியைக் கண்டு பிடித்ததும் இந்துக்கள்தான் 

மீண்டும் கிழமைகளுக்கு வருவோம் .

ரோமானிய (லத்தீன்) கால காலத்திலிருந்து   வந்தது பிரெஞ்சு மொழி. அங்கு இன்றும் கூட ஆறு கிரகங்களின் பெயர்களைச் சொல்லிவிட்டு ஞாயிற்றுக் கிழமைக்கு திமான்ஸ்  Dimanche என்பர். அது சூரியன் தினம் இல்லையாம். கடவுள் தினமாம்.

சொல்லப்போனால் மேலை உலகம் முழுதும் ஒரே குழப்பம்.

கடிகாரங்களும் மணிக்கூண்டுகளும் இல்லாத கிராமவாசிகள் சந்திரனை வைத்தே நேரம் அறிவர். நாளையும் அறிவர். ஒரு மாதத்தை அமாவாசை முதல் 14 நாட்கள் பெளர்ணமி முதல் 14 நாட்கள் என்று பிரித்து எளிதில் நாளையும் (திதி), நேரத்தையும் அறிந்தனர். இதனால்தான் இன்றும் இந்துக்களின் பெரும்பாலான பண்டிகைகள் திதிக்கணக்கில் பெயரிடப்பட்டுள்ளன . ராம நவமி, ஜன்மாஷ்டமி , நாக பஞ்சமி , நரக சதுர்த்தசி (தீபாவளி), ஏகாதசி உபவாசம் என்று.

ஆகையால் நமக்கு நாள், கிழமை தெரிந்தும், திதிகளையே வழக்கத்தில் பின்பற்றினோம்.

நமக்கு அருமையான  ஆதாரம் நல்கிய இளங்கோ அடிகளுக்கும் , சம்பந்தருக்கும் நாம் என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.

Gangakonda chozapuram

தென் இந்தியாவிலுள்ள, எல்லாக் கோவியில்களிலும், குறிப்பாக சிவன் கோயில்களில் நவக்ரஹ சந்நிதிகள் இருக்கின்றன சிவபெருமானைச் சுற்றி வரும் பிரகாரத்தில் ஒன்பது வானவெளி கோளங்கள் இருக்கும் இவைகளை ஆங்கிலத்தில் பிளானெட்ஸ் என்று மொழிபெயர்ப்பது தவறு. கிரஹ என்ற சொல்லுக்கு ஈர்ப்புவிசை உடைய பொருள்கள், பற்றி இழுக்கக் கூடியவை என்று பொருள்

நக்ரஹங்களுக்கு நடுவில் சூரியன் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. சூரியனைச் சுற்றியே கிரகங்கள் வலம் வருகின்றன என்ற விஞ்ஞான உண்மையை இந்துக்கள் இதன் மூலம் உணர்த்தினர்; சூரியனுக்கு ஒரே சக்கர தேரும் ஏழு குதிரைகளும் இருக்கும் அவருடைய மனைவியார் சாயா உஷா;

இதுவும் விஞ்ஞான உண்மைகளே; சூரிய  உதயத்துக்கு முன்னர் வருவது உஷத் காலம் ஆங்கிலத்தில் DAWN டான் ; சூரியனுக்குப் பின்னால் வருவது சாயா/ நிழல்! இதை மனைவி என்று கூறுவதற்குக் காரணம் இது சூரியனுடன் முன்னாலும் பின்னாலும் வருவதே !

மகன்கள்- சனிக்கிரகம் மனுக்கள், யமன், ரேவந்த்

ஆதித்ய ஹ்ருதயம், நவக்ரஹ துதிகள், சூர்ய நமஸ்கார மந்திரங்கள்  முதலியவற்றில் இவைகளின் பெருமையை அறியலாம் . மேலும் பிராமணர்கள் தினமும் செய்யும் மூன்று வேலை சந்தியாவந்தனத்தில் சூரியனின் மந்திரங்கள் வருவதோடு ஒன்பது விண்  கலங்களுக்கும் தர்ப்பணம்  செய்யும் மந்திரங்களும் உள்ளன

இந்துக் குழந்தைகள் பிறக்கும்போதே கிரஹ நிலைகளை  வைத்து ஜாதகமும் கணிக்கப்படுகிறது .இவைகளை பற்றி சம்ஸ்க்ருத நூல்களில் உள்ள எல்லா விஷயங்களும் சங்கத் தமிழ் இலக்கியத்தில் வரும் 200 குறிப்புகளிலும் காணப்படுகின்றன தமிழர்களும் சப்த ரிஷி மண்டலம், பிரேக் சந்திரன், சூரியனிங் வெளிப்பட்டதை சங்கத் தமிழ் நூல்களில் ங்காண்கிறோம்

நவக்ரஹ துதியில் விஞ்ஞான உண்மைகள்

தமிழனுக்கு வானவியல் தெரியுமா?

கிரேக்கர்களிடமிருந்துதான் சில விஷயங்களை நாம் கற்றோம் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் எழுதியதைப் படித்ததுண்டு. அவர்கள் எழுதியன எல்லாம் தவறு என்பதற்குப் பல சான்றுகள் உண்டு.

முதலாவதாக, தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஒவ்வொரு கிரகத்துக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. புகழ்பெற்ற அமரகோஷம் என்ற வடமொழி நிகண்டிலும், தமிழ் நிகண்டுகளிலும் இவ்வாறு பல பெயர்களைக் காணும்போது உலகில் நாம் தான் இத்துறையில் முன்னேற்றம் கண்டோம் என்பது தெளிவாகிறது. உலகின் ஏனைய செம்மொழிகளில் இவ்வளவு பெயர்களை காண முடிவது இல்லை.

இரண்டாவது விஷயம், சம்ஸ்கிருத, தமிழ் நூல்களில் கிரகங்கள் பற்றி ஒரே கருத்து இருப்பதாகும். இமயம் முதல் குமரி வரை இப்படி சங்க காலத்திலேயே இருப்பது வியாழன், வெள்ளி கிரகங்கள் பற்றிய அடை மொழிகளில் (அந்தணர் இருவர்) என்ற குறிப்புகளில் இருந்து தெரிகிறது.

தனித் தமிழ் வெறி இல்லை. சம்ஸ்கிருதச் சொற்கள் தமிழ் நிகண்டுகளில் நிறைய பயன்படுத்தப்படுகின்றன.

மூன்றாவது, கிரகங்களுக்கு இட்ட பெயர்களே அதைப் பயிலுவோருக்குப் பல விஷயங்களைக் கற்பிக்கின்றன. ஒரு சில உதாரணங்களால் இதை விளக்குகிறேன். சனிக் கிரகத்துக்கு மந்தன், முடவன் என்ற வடமொழி, தமிழ் மொழிச் சொற்கள் இருக்கின்றன. சோதிடத்தில் பயன்படுத்தப்படும்— கண்ணுக்குத் தெரியக் கூடிய கிரகங்களில்—- சனிக் கிரகம்தான் சூரியனைச் சுற்ற அதிக காலம் எடுக்கிறது. ஒரு சுற்றுக்கு 30 ஆண்டுகள் ஆகும். இது விஞ்ஞான உண்மை. இதை விளக்கும் வகையில் நாம் பெயரிட்டோம். முடவன்/மந்தி என்ற பெயரால் சிறுவர்களும் இதை நினைவிற்கொள்ள முடியும். உலகின் ஏனைய செம்மொழிகளில் இப்படிப்பட்ட பெயர்களை காண முடிவது இல்லை.

மற்றொரு எடுத்துக் காட்டு, வெள்ளி கிரகத்துக்கு மழைக் கோள் என்று பெயர். புற நானூற்றில் நாலைந்து பாடல்களில் இந்தக் குறிப்பு வருகிறது. இதுவரை விஞ்ஞானிகள் கண்டு பிடிக்காத இந்த விஷயம் தமிழ் மொழி வடமொழி நூல்களில் மட்டுமே கானப்படும் உண்மை. எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் இதை உறுதிப்படுத்தும்போது நாம் மார்தட்டிக் கொள்ளலாம், —நாங்கள் அன்றே சொன்னோம்— என்று. வியாழன் கிரகத்தை “ஆண்டு அளப்பான்” என்று நிகண்டுகள் கூறும். அதாவது ஒரு ராசிக்கு ஒரு ஆண்டு வீதம் 12 ராசிகலையும் சுற்றிவர 12 ஆண்டுகள் ஆகும். மஹா மகம், கும்பமேளா முதலிய பண்டிகைகள் குரு சஞ்சாரத்தின் அடிப்படையில் அமைந்தவை. கிரகங்களின் பெயர்களில் இருந்தே விஞ்ஞானம்/ வான சாஸ்திரம் கற்கும் முறை நம்மிடம் மட்டுமே உள்ளது.

நாலாவதாக, கிரகங்களுக்கு நாம் இட்ட வர்ணப் பெயர்களும் நம்முடைய வான சாஸ்திர அறிவுக்குச் சான்று பகரும். சங்கத் தமிழில் சனிக் கிரகத்துக்கு மைம்மீன் என்று பெயர். இதையே வட மொழிகளில் “நீலாய” என்ற பதம் குறிக்கும். நீலம் என்பதை கருப்புக்கும் கரு நீலத்துக்கும் பயன்படுத்துவது உண்டு.

பொன் = வியாழன்

வெள்ளி = வெண்மை நிறம் உடைய வீனஸ்

செவ்வாய் = செந்நிறக் கோள்

பச்சை = புதன்

ஆங்கிலத்திலோ கிரேக்கத்திலோ இப்படி கலர் மூலம் எல்லா கிரகங்களையும் அழைப்பதில்லை.

ஐந்தாவதாக, நாம் சில புதிய விஷயங்களைக் கூறுகிறோம். இவை இரு மொழி நூல்களிலும் உள்ள உண்மைகள். இதுவரை விஞ்ஞானம் நிரூபிக்காத உண்மைகள். எதிர்காலத்தில் நாம் சொன்னது சரியே என்று நிரூபணமானால் நமக்கு (இந்துக்களுக்கு) நோபல் பரிசு கிடைக்கும். அவை என்ன? ஆறு மிகப் பெரிய உண்மைகள் என்று கீழே கொடுத்துள்ளேன்.

ஆறாவதாக, பிராமணர்கள் தினமும் முப்பொழுதும் செய்யும் த்ரிகால சந்தியாவந்தனத்தில் நவக்ரஹ வழிபாடு— ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக—- உள்ளது. இதை கிரேக்கர்கள் சொல்லி நாம் செய்தோம் என்றால் யார் நம்புவார்கள்?

ஏழாவதாக, ஞான சம்பந்தரின் கோளறு பதிகத்தின் முதல் பாடலிலேயே ஞாயிறு முதல் கிரகங்கள் ஒன்பதும் வருகின்றன. ஆக நம்மிடம் இருந்துதான், உலகமே இதைக் கற்றுக் கொண்டன என்பதற்கு அகச் சான்றுகளும், புறச் சான்றுகளும், நூற்றுக் கணக்கான இடங்களில் உள்ளன.

ஆறு மிகப் பெரிய உண்மைகள்

இந்துக்கள் உலக மக்களுக்கு ஆறு மிகப் பெரிய உண்மைகளை சொல்கின்றனர்:–

1.செவ்வாய் கிரகம், பூமியின் புதல்வன்

2.புதன் கிரகம் சந்திரனின் புதல்வன்

3.சனிக் கிரகம், சூரியனின் புதல்வன்

4.வெள்ளிக் கோளுக்கும் மழைக்கும் தொடர்பு உண்டு

5.சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)

6.சூரியனுக்கும் கண்களுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)

இது தவிர ஏழாவது உண்மையும் இருக்கிறது. சூரியனை சுற்றி வாலகீயர்கள் என்னும் 60,000 குள்ளமான முனிவர்கள் இருக்கின்றனர். இது பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதினேன்.

எட்டாவது உண்மை, குரு கிரகம் பற்றியும் அதன் கவன் கண் வீச்சு ஆற்றல் பர்றியும், அது எப்படி ராக்கெட்டுகளை எரிபொருள் இல்லாமல் விண்ணில் பறக்க வைக்கிறது என்பதையும் ஏற்கனவே தனிக் கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். குரு என்றாலேயே கனம் என்று பொருள். நவக் கிரகங்களில் பெரியது குரு என்பது விஞ்ஞான உண்மை என்பதையும் ஏற்கனவே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

இவைகளின் பொருள் என்ன?

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:

பூமியின் புதல்வன் செவ்வாய் என்று தமிழ் நிகண்டு, சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லும். பூமியும் செவ்வாயும் ஒரே நில அமைப்பை உடையவை என்று ஒரு பொருள் கொள்ளலாம். நமக்கு மிக அருகில் இருப்பதால் அங்குதான் முதல் “காலனி” அமைக்க விஞ்ஞானிகளும் முயற்சி செய்கின்றனர்.

இரண்டாவது அர்த்தம், ஒரு காலத்தில் பூமியின் மீது ஏதோ ஒன்று மோத செவ்வாய் கிரகம் “சுகப் பிரசவம்” ஆனது. அதாவது மோதலில் பிரிந்த/பிறந்த கிரகம் செவ்வாய்!

இதே போல சந்திரனின் மகன் புதன் என்பதற்கும் பொருள் சொல்லலாம். சந்திரனின் ஒரு துண்டுதான் புதன். இரண்டும் ஒரே அமைப்புடையவை. ஆனால் இவைகளை எல்லாம் எதிர்கால சோதனைகள்தான் சரியா தப்பா என்று சொல்ல முடியும். இன்னும் வான சாஸ்திர அறிஞர்கள் உறுதி செய்யாத விஷயங்கள் இவை. லண்டனிலும், அமெரிக்காவிலும் வெளியிடப்படும் வான சாஸ்திர மாத இதழ்களைப் படிப்போருக்கு புதுப் புது செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதனுடைய சுருக்கச் செய்திகள் இந்தியப் பத்திரிக்கைகளிலும் வெளிவருகின்றன. சுருங்க்சச் சொன்னால் விஞ்ஞானிகளே இன்னும் முடிவுக்கு வராத விஷயங்கள் இவை. ஆனால் ஒரு போக்கு தெளிவாகத் தெரிகிறது—நாம் சொன்னவை சரி என்ற செய்தி விரைவில் வரும் என்ற போக்கு அது!

என்னுடைய கருத்து:

இது சரியா? தப்பா? என்பதைவிட இப்படி யோசித்த மூளையை எண்ணி எண்ணி வியக்க வேண்டி இருக்கிறது. இப்படி ஒரு கிரகத்துக்கும் இன்னொரு கிரகத்துக்கும் முடிச்சுப் போட்டோமே. இதைச் செய்யக்கூட அதைப் பற்றிய அறிவும், தொடர் சிந்தனையும் தேவை. நாம் இதை எல்லாம் எழுதிய காலத்தில் உலகம் தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்தனர் மேலை நாட்டினர்!!!

நாமோ பூமியை எப்பொழுதுமே “பூகோளம்” (புவி உருண்டை) என்றுதான் பாடமே நடத்தினோம். கோப்பர் நிகசும், கலீலியோவும் கண்டுபிடித்ததாக மேலை நாட்டுக்காரர்கள் பெருமை பேசிய விஷயங்கள் ஆரியபட்டர், வராஹமிகிரர் எழுதிய நூல்களில் மட்டுமின்றி சங்கத் தமிழ் இலக்கியத்திலும், இதிஹாச புராணங்களிலும் உள்ளது.

கட்டுரைக்கான மேற்கோள்கள்

1.சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோர் சூர்யோ அஜாயத (புருஷசூக்தம் – ரிக்வேதம்)

இறைவனின் மனதிலிருந்து சந்திரன் உண்டானான்; கண்ணிலிருந்து சூர்யன் உண்டானான்.

2. செவ்வாய் கிரக பெயர்கள்:—அங்காரகன், மங்களன், மங்களப்ரதாயன், மகாபத்ராய, மஹீசுதன், மடிமகன்/படிமகன்,பூமி புத்ரன், பூமகன்

3. புதன் கிரகப் பெயர்கள்:—சௌம்யன், இந்துஜா, சோமஜாய, சந்திரன் மகன், அறிஞன், தேவன், புலவன், வானவன், அனுவழி, சவுமன், கணக்கன், சாமன், சிந்தை, தூதுவன், தேர்ப்பாகன், நற்கோள்,

நிபுணன், பச்சை, பண்டிதன், பாகன், புந்தி, மதிமகன், மாலவன், மால், மேதை, கூரியன்

4. வெள்ளி, சுக்கிரன், பார்கவன், ப்ருகன், ஸ்வேதாம்பரன், அசுர குரு, கௌடதேசஸ்விராய, ரஜதப்ரபாய, மழைக்கோள், புகர், பளிங்கு, உசனன், பிரசுரன்,சல்லியன், ஒள்ளியோன், சிதன்

5.சனி, நீலவர்ணன், நீலாஞ்சனநிபாய, க்ரூரன், சவுரி, கதிர்மகன், மைம்மீன், கெட்டவன், அந்தகன், காரி, கரியவன், கீழ்மகன், சந்தில், சாவகன், தமனியன், நீலன், நோய்முகன், பங்குபாதன், முடவன், மந்தன், முதுமகன், மேற்கோள், சாயாபுத்ர, காரியூர்தி, கருவிளங்கண்ணியன்.

வாழ்க நவக்ரகங்கள்!! வளர்க அவற்றின் அருட் பார்வை!!!

***

நான் கூறும் கருத்துக்கள் நவக்கிரஹ ஸ்துதியை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது; இதோ அந்த துதி

ஜபாகுஸுமா ஸங்காசம் …… நவக்கிரஹ துதி வரிகள்

ஜபாகுஸும ஸங்காஸம் காஶ்யபேயம் மஹாத்³யுதிம் |

தமோ(அ)ரிம் ஸர்வபாபக்⁴நம் ப்ரணதோ(அ)ஸ்மி தி³வாகரம் || (சூரியன்)

த³தி⁴ஶங்க²துஷாராப⁴ம் க்ஷீரோதா³ர்ணவஸம்ப⁴வம் |

நமாமி ஶஶினம் ஸோமம் ஶம்ப⁴ோர்மகுடபூ⁴ஷணம் || (சந்திரன்)

த⁴ரணீகா³ர்ப⁴ஸம்பூ⁴தம் வித்³யுத்காந்திஸமப்ரபம் |

குமாரமஶக்திஹஸ்தம் தம் மங்க³லம் ப்ரணமாம்யஹம் || (செவ்வாய்)

ப்ரியங்கு³கலிகாஶ்யாமம் ரூபேணாப்ரதிமம் பு³த⁴ம் |

ஸৌম்யம் ஸৌম்யகு³ணோபேதம் தம் பு³த⁴ம் ப்ரணமாம்யஹம் || (புதன்)

தே³வானாம் ச ருஷீணாம் ச கு³ரும் காஞ்சனஸந்நிபம் |

பு³த்³தி⁴பூ⁴தம் த்ரிலோகேஶம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம் || (வியாழன்/குரு)

ஹிமகுந்³த²ம்ருணாளாபம் தைத்யானாம் பரமம் கு³ரும் |

ஸர்வஶாஸ்த்ரப்ரவக்தாரம் பா⁴ர்க⁴வம் ப்ரணமாம்யஹம் || (சுக்கிரன்)

நீலாஞ்சனஸமாபா⁴ஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் |

சாயாமார்தாண்டஸம்பூ⁴தம் தம் நமாமி ஶனைஶ்சரம் || (சனி)

அர்த⁴காயம் மஹா‍வீர்யம் சந்த்ராதி³த்யவிமர்த³னம் |

ஸிம்ஹிகா³ர்ப⁴ஸம்பூ⁴தம் தம் ராகும் ப்ரணமாம்யஹம் || (ராகு)

பலாஶபுஷ்பஸங்காஸம் தாரகா³க்ரஹமஸ்தகம் |

ரௌத்³ரம் ரௌத்³ராத்மகம் கோ⁴ரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம் || (கேது)

****

Surya in Delhi Airport

Konark, Odisah

Navaratna ring based on Navagrahas 

அமரகோசத்தின் ஆசிரியர் அமரசிம்மன் சூரியனுக்கு 37 பெயர்களைச் சொல்லியிருக்கிறார். அவையாவன:–

(சம்ஸ்கிருத உச்சரிப்பு: சம்ஸ்கிருதத்தில் சொல்லுக்குப் பின்னே இரண்டு புள்ளிகள் ( : ) விசர்கம் இருந்தால் அதற்கு முந்திய உயிரெழுத்தைப் போல உச்சரிக்கவும்; எடுத்துக் காட்டு:– பாஸ்கர: = பாஸ்கரஹ, க்ரஹபதி: = க்ரஹபதிஹி, சித்ரபனு:= சித்ரபானுஹு)

அர்யமா = பித்ரு தேவதா, சூரியனின் பக்தர்கள்

ஆதித்ய: = அதிதி வம்சத்தில் வந்தவர்

த்வாதசாத்மா = 12 ஆன்மாக்களை (மாதங்களை ) உடையவன்

திவாகர: = நாள் என்பதை உருவாக்குபவன்

பாஸ்கர: = ஒளியூட்டுபவன் (பாஸ்பரஸ் என்ற மூலகத்தின் பெயரும் இதே பொருளுடைத்து)

அஹஸ்கர: = நாள் என்பதை உருவாக்குபவன்

ப்ரத்ன:= இருட்டை ஒழிப்பவன்

ப்ரபாகர: = ஒளியூட்டுபவன்

விபாகர: = ஒளியூட்டுபவன்

பாஸ்வான்= ப்ளியுடையவன்

விவஸ்வான் = பலவித ஆடைகளை உடையவன்

சப்தாஸ்வ = ஏழு குதிரைகளை உடையவன் (வானவில்லின் வண்ணங்கள்)

ஹரிதஸ்வ = பச்சைக் குதிரை உஅடையவன்

உஷ்ணரஸ்மி: = வெப்பமான கதிர் உடையவன் (பல பெண்களுக்கு ரஸ்மி என்று பெயர்; அதாவது கிரணம், கதிர் ஒளி)

விகர்தன: = பாலிஷ் செய்யப்பட்டவன், மெருகூட்டப்பட்டவன், விசேஷன கர்தவ்யம்

அர்க: = பூஜிக்கப்படதக்கவன் (அருகம் புல், தாமிரம், ஸ்படிகம், இந்திரன் என்றும் இச்சொல் பொருள்படும்)

மார்த்தாண்ட: = ‘இறந்த கோளத்தில்’ இருப்பவர்

மிஹிர: = வெளிவருபவன் (புத்தன் என்றும் இச்சொல் பொருள்படும்)

அருண: = சூர்ய சாரதி ( மற்ற பொருள்கள்= சந்த்யா ரகம், நிசப்தம், கபிலர், குஷ்டநோய், குணவான்)

பூஷா = புஷ்டியை ஏற்படுத்துபவன் (சூரியனிடமிருந்து ஆரோக்கியத்தைப் பெறு என்பது சம்ஸ்கிருத பழமொழி; இலவச வைட்டமின் ‘டி’ தருபவன்)

த்யுமணி: = வானில் தோன்றும்ரத்தினக் கல்

தரணி = சம்சாரக் கடலைக் கடக்கச் செய்வோன் (ஏனைய பொருள்= குமரி, படகு)

மித்ர: = சூரியன் (நண்பன்)

சித்ரபானு: = வண்ணக் கதிர் உடையோன்

விரோசன: = ஒளிவீசுபவன் 9மற்ற அர்த்தங்கள் = நிலவு, பிரஹலாதன் மகன்)

விபாவசு: = ஒளிதருபவன் (மற்ற பொருள்= ஒருவித நெகலஸ், பாவக)

க்ரஹபதி: = கிரகங்களுக்கு நாயகன்/தலைவன்

த்விஷாம்பதி:= ஒளிக்கு அதிபன்/தலைவன்

அஹர்பதி:= நாளுக்கு தலைவன் (அஹர் = பகல், பகலவன்)

பானு: = ஒளி

ஹம்ச: = சூரியன்

சஹஸ்ராம்சு: = 1000 கதிர் உடையோன்

தபன: = தபிக்கச் செய்பவன்(தபி = சூடேற்று; தப=தவ)

சவிதா= சூரியன்

ரவி: = சூரியன்

சுர: = பார்க்கக்கூடிய அனைத்தையும் தூண்டுபவன் (விழித்தெழச் செய்வான்)

சூர்ய: = சுர: என்பதைக் காணவும்.

 தமிழ்நாட்டில் தினமணி, தினகரன் போன்ற பத்திரிக்கைகள், ஆங்கிலத்தில் ‘சன்’ போன்ற பத்திரிக்கைகள் சூரியன் பெயரைத் தாங்கி வருகின்றன. உலகிலுள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் சூரியன் பெயரில் நாளேடுகள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரத்திலுள்ள 12 மந்திரங்களும் மீண்டும் பிரபலமாகி வருகின்றன.

பல ஆண்கள், பெண்களின் பெயர்களும் சூரியன் பெயரிலிருந்தும், ஒளி என்பதிலிருந்தும் வந்தவை.

சூரியனுக்கு ‘இனன்’ என்று ஒரு பெயர் உண்டு; அதிருந்து வந்ததே இன்கா நாகரீகம் என்று முன்பே எழுதியிருக்கிறேன்.

அம்சுமாலி (நீர்நிலைகளின் தலைவன்), பஹ: ( ஐஸ்வர்யம்) முதலிய வேறு 17 பெயர்களையும் அமர கோச உரைகாரர்கள் விளம்புவர்)

சூரியனுக்கு அருகாமையில் உள்ள மாடர, பிங்கள:, தண்ட: பற்றியும் அமரம் பேசும்; இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

சூர்ய சாரதியின் பெயர்கள்:- சூர்யசுத:, அருண:, அனூரு:, காஸ்யபி, கருடாக்ரஜ:

கிரணங்களின் பெயர்கள்:– கிரண:, உஸ்ர:, மயூக:, அம்சு:, கபஸ்தி:, க்ருணி:, க்ருஷ்ணி:, பானு:, கர:, மரீசி:, தீதிதி:

சூர்யப் பிரபைக்கான பெயர்கள்:- ப்ரபா, ருக், ருசி:, த்விஷ், பா:, சவி:, த்யுதி:, தீப்தி:, த்யுதிமதி, ரோசி:, சோசி:

தீப்தி போன்ற பெண்களின் பெயர்கள் இந்தப் பிரபை (ஒளி மண்டலம், ஒளிவட்டம்) யிலிருந்து வந்தவையே.

சூரிய வெப்பத்துக்கான பெயர்கள் முதலிய விஷயங்களையும் அமரம் உரைக்கும்.

****

ஆரோக்கியத்துக்கு சூரியன்

 சூரியனிடத்தில் ஆரோக்கியத்தைக் கேள்:

1).ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் – பூஜா ப்ரகாச:

சூரியனிடத்தில் ஆரோக்கியத்தைக் கேள்

(சூரியன் மூலம் வைடமின் ‘டி’ கிடைக்கிறது. கண், ஒளி பெறுகிறது. இதை அறிந்த முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே இப்படிச் சொல்லிவைத்தனர்; ஒப்பிடுக: கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரமா?)

***

).ஸ்யேம நு சூர்யமுச்சரந்தரம்  – ருக் வேதம்

தலைக்கு மேல் சூரியனை எப்போதும் காண்போமாக (நூறாண்டுக் காலம் நல்லபடி வாழ்வோமாக)

12).பஸ்யேமஸ் சரதஸ்சதம், ஜீவேம சரதஸ்சதம் – யஜூர், அதர்வ வேதங்கள்.

நூறாண்டுக் காலம் நாம் காண்போமாக; நூறாண்டுக் காலம் நாம் வாழ்வோமாக

(நூறாண்டுக் காலம் வாழ்க; நோய்நொடியிலாமல் வாழ்க)

To be continued……

Tags- நவக்கிரகம், சூரியன், நவக்ரஹ துதி, விஞ்ஞான உண்மைகள் , சுவையான செய்திகள், Hinduism through 500 Pictures in Tamil and English 44; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்–44