என் புருஷன் தான் ஒசத்தி! (Post No.15,901)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,901

Date uploaded in London – 22 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சுபாஷிதச் செல்வம்

என் புருஷன் தான் ஒசத்தி!

ச. நாகராஜன்

என் புருஷன் தான் ஒசத்தி! 

சதுர் சகி மே பர்த்தா யத் லிகதி தத் பரோ ந வாசயதி |

தஸ்மாத் அபி அதிக: மே ஸ்வயம் அபி லிகிதம் ஸ்வயம் ந வாசயதி ||

இரண்டு பெண்மணிகள் தமக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது முதலாமவள் சொன்னாள்: என் புத்திசாலி புருஷன் எழுதுவதை அவரைத் தவிர வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அதற்கு பதிலாக அடுத்தவள் சொன்னாள்: என் புருஷன் தான் இதுல ஒசத்தி. அவர் எழுதுவரை அவராலேயே புரிந்து கொள்ள முடியாது.

இது எப்படி இருக்கு!

இந்த சுபாஷிதத்தின் பொருள்: ஒரு பெண்மணி அடுத்தவளிடம் சொன்னாள்: “என் பிரியமான தோழியே!  என் கணவரானவர், அவர் எழுதுவதை அடுத்தவர் யாரும் புரிந்து கொள்ள முடியாதபடி எழுதும் திறமைசாலி!”  இதற்கு அடுத்த பெண்மணி கர்வத்துடன் பதில் கூறினாள்: “எனது புருஷன் இன்னும் அதிக திறமைசாலி. ஏனெனில் அவர் எழுதுவதை அவராலேயே புரிந்து கொள்ள முடியாது!”

இலக்கியம், இசை ஆர்வம் இல்லாதவன் மிருகம் தான்!

சாஹித்யசங்கீதகலாவிஹீன: சாக்ஷாத் பசு: புச்சவிஷானஹீன: |

த்ருணம் ந காதன் அபி ஜீவமான: தத் பாகதேயம் பரமம் பசூணாம் ||

எந்த ஒரு மனிதனுக்கு இலக்கியம், சங்கீதம் மற்றும் இதர கலைகளில் ஆர்வம் இல்லையோ அவன் கொம்புகளும் வாலும் இல்லாத மிருகத்திற்குச் சமானம். அந்த மனிதன் புல்லைத் தின்னாமல் இருப்பது மிருக உலகத்தின் அதிர்ஷ்டம் தான்!

பதினாறு வயது மகனை நண்பனாக பாவித்து நடத்து!

லாலயேத் பஞ்சவர்ஷாணி தச வர்ஷாணி  தாடயேத் |

ப்ராப்தே து ஷோடஷே வர்ஷே புத்ரம் மித்ரமிவாசரேத் ||

ஐந்து வருடங்கள் வரை குழந்தையை அன்புடன் வளர்க்க வேண்டும். அடுத்த பத்து வருடங்கள் தேவையென்றால் கண்டித்து தண்டனை கொடுத்து வளர்க்க வேண்டும். ஆனால் எப்போது அவன் பதினாறு வயதை அடைகிறானோ அப்போது மகனை நண்பனாக மதித்து நடத்த வேண்டும்.

குழந்தையைப் படிக்க வைக்காத தாயும் தந்தையும் எதிரிகளே!

மாதா சத்ரு: பிதா வைரீ யேன பாலோ ந பாடித: |

ந ஷோபதே சபாமத்யே ஹம்ஸமத்யே பகோ யதா ||

தங்கள் குழந்தைகளை சரியாகப் படிக்க வைக்காத தாய் குழந்தைக்கு எதிரி; தந்தை ஒரு பகைவன். அப்படிப்பட்ட குழந்தைகள் வளர்ந்த நிலையில் நல்ல அன்னங்களுக்கு இடையே அவலட்சமாண குஞ்சுகளாகக் காட்சியளிப்பது போல (சமுதாயத்தில்) இருக்கும்.

தர்ம வழியில் நின்று பொருள் சம்பாதிக்கும் ஒரு புத்திரனே உத்தமம்!

பஹுபிர்பத கிம் ஜாதை: புத்ரைதர்மார்தவர்ஜித: |

வரமேகம் பதி தரு: யத்ர விஸ்ரமதே ஜன: ||

தர்மத்தைக் கடைப்பிடிக்காமலும், பொருளைச் சம்பாதிக்காமலும் பல புத்திரர்கள் இருந்து என்ன பிரயோஜனம்? அதற்கு பதிலாக ஒரே மரமாகத் தனித்து சாலையோரத்தில் இருந்து வழிப்போக்கர்களுக்கு நிழலுடன் தங்குமிடம் அளிக்கும் மரமாக (தர்மத்தைக் கடைப்பிடிக்கும் பொருளைச் சம்பாதிக்கும்) ஒரே புத்திரன் இருப்பது சாலச் சிறந்தது.

**

Oldest Skanda -Kartikeya- Murugan Coins! (Post No.15,900)

Written by London Swaminathan

Post No. 15,900

Date uploaded in London –21 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Yaudheyas who ruled Northwest part of India had issued Skanda- Kartikeya -Murugan Coins 2000 years ago. They ruled Sapta Sindhu area (Punjab, Haryana regions) from 200 BCE to 300 CE. They issued various types of Skanda coins. The surprising thing is that they were the one who issued Skanda (Murugan in Tamil) coins with his Six Heads and his vehicle peacock. Later Gupta rulers issued such coins. Six Headed Skanda is called Shanmukha in Sanskrit and Aarumukham in Tamil. Adi Sankara who formed six groups of worship called Skanda worship Kaumaram because Kalidas made that name (Kumaara) popular 2200 years ago.

Sangam Tamil literature has one whole work written by a Brahmin poet named Nakkirar on Skanda and it is called Tiru Murugatruppadai. Anti God Dravidians dubbed it as a later interpolation, but Yaudheya coins explode such arguments. Added to this Patanjali’s Mahabhashya reference to Skanda, a commentary on world’s first grammar book by Panini known as Ashtadhyayi. In the 2200-year-old Mahabhasya, Patanjali gives us information about selling Murtis/figures of Skanda -Vishaka. This also gives credence to Sangam book Tiru Murugatruppadai.

Through this we come to know that the Skanda worship was popular from Himalayas to Kanyakumari 2000 years ago.

***

Who are Yaudheyas?

Panini  refers to them specifically as an Ayudhajivin Sangha—a community of warriors who lived by the profession of arms. He explains that the suffix “-ya” was used in Sanskrit to signify martial and warrior tribes, a linguistic detail that fits the Yaudheyas’ historical reputation as a formidable military force

The tribal republics or Janapadas like Audumbara, Kuninda and Yaudheya issued their coins in the name of their presiding deities-Mahadeva. Chitresvara and Brahmanya. The early tribal republics of the 2nd century B.C.E, refer to their names and places in Brahmi script. Some republics issued coins with their names and title Raja or Maharaja. Copper was used as the prime metal for such issues. A few tribes issued coins in silver too.

Monarchies like Surasena and Panchala that sprang up during this period were located in the Ganga-Yamuna plain. The kingdom of Panchala issued copper coins bearing the names of no less than 35 kings.

***

Gupta Coins on Skanda

The golden age of Indian history was the rule of Guptas. They were great worshippers of Vishnu and they called themselves Parama Bhagavatas. But the world famous poet Kalidasa changed them into Saivites. Kalidasa lived in the first or second century BCE. His work Kumarasambhava on the birth of Kumara/ Skanda made Guptas to name their children Skanda Gupta, Kumara Gupta etc.  They issued coins with Skanda with peacock.

Even Asvagosha , author of Buddha Carita in Sanskrit, compared Skanda with Buddha! According to Hindu literature in Tamil and Sanskrit, Skanda was a war god. He was the commander in chief of the Divine army. He married Indra’s daughter Devasena. In spite of his association with war, red colour and planet Mars, Asvagosha compared him to Buddha because of Kalidasa. In Raghuvamsa, Kalidasa compared three kings to Skanda. Tamils of Sangam age also followed Kalidasa and compared the kings with Muruga. Such was the influence of Kumarasambhava Kavya. Not only this, Tamil Sangam poets used the first ten slokas on Himalayas in Kumarasambhava, in their poems.

The greatest Art Historian of India Mr Sivaramanurti (Curator of Madras Museum) was a Sanskrit scholar. He argued Literature comes first Sculptures follow it like the Tamil saying Literature comes first Grammar follows it. He placed Kalidasa in Pre Gupta period,because Gupta coins show whatever Kalidasa said in his seven works.

***

Other coins on Muruga/Skanda/Kartikeya

Huvishka,successor of Kanishka, issued coins on all Hindu gods including Kartikeya around first century CE. Earlier rulers used pictures of Siva only. Huvishka used names in Mahabhashya such as Masena/ Mahasena , Skandakumaro Vizaka . His coins show that Skanda holding Trisula/trident like Shiva.

They spelt the names in strange ways

Shiva – oeso, uma – ommo

***

Yaudheya coins showed Skanda holding a spear; Vel in Tamil.

Kumara Gupta 415-450 CE issued beautiful Skanda coins in gold. The legend on his coin was Mahendrakumarah.

Gold coin issued by Chalukya Vikramaditya of Badami/Vatapi 655-681 CE has the figure of Kartileya. Peacock feather and snake are also seen.

Though  kanda Murugan is called Tamil God, we don’t have any ancient coin with Muruga!

As late as seventeenth century, king Ragunatha Nayak of Thanjavur displayed standing figure of Kartikeya in his coin.

Later Kanthirava Narasaraja Wodeyar (1638-56) of Mysore issued coins with Kartikeya seated on a peacock.

***

Maurya dynasty was named after Peacock (Mayura) growers. Asoka was very fond of peacock meat. Even after spreading Buddhism, he never stopped killing peacocks for food, but he ordered to kill lesser number of the birds. Their coins show peacock with its feather. Since India made peacock its national bird, we can even say that India’s national God is Lord Skanda, Mahasenatipati, Commander in Chief!

–Subham—

Tags- Oldest coin, on Muruga, Kartikeya, Skanda, Visaka, Shanmuka, Yaudheya, Gupta, Chalukya, Peacock ,

மிகப்பழைய முருகன்- கந்தன் -ஷண்முகன் நாணயம்! (Post.15,899)

Coins of Yaudheyas

Coin of Kumara Gupta

Written by London Swaminathan

Post No. 15,899

Date uploaded in London –21 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Research Article

உலகப் புகழ்பெற்ற முதல் இலக்கண நூலை எழுதிய  பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் யாதேயர் குடியரசினைக் குறிப்பிட்டுள்ளார் ; அவர்கள் யுத்தத்தினால் வாழ்ந்தவர்கள் என்பதால் யாதேயர்கள்

(யுத்தம் =போர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வெளியிட்ட நாணயங்களில் ஆறு தலைகளைக் கொண்ட ஆறுமுகன் உருவம் உள்ளது அந்த நாணயங்கள் 2000 ஆண்டுப் பழமையானவை .

பண்டைய இந்தியாவில், தற்கால பஞ்சாப்,ஹரியானா  (சப்த சிந்து) மற்றும் ராஜஸ்தான் பகுதிகளை மையமாகக் கொண்டு கி.மு 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 4-ஆம் நூற்றாண்டு வரை புகழ்பெற்றிருந்த ஒரு சுதந்திரமான போர்வீரர் குடியரசு (Ganasangha) ஆகும்.

‘யோதா’ (Yodha) என்றால் போர்வீரன் என்று பொருள். மகாபாரதத்தில் நகுலனால் வெல்லப்பட்ட பகுதியான ‘பஹுதன்யகா’ (Bahudhanyaka) என்பது யாதேயர்களின் நிலப்பரப்பைக் குறிப்பதாகும்.

அக்கால மன்னராட்சிகளுக்கு மாறாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பழங்குடி தலைவர்களால் நிர்வகிக்கப்பட்ட குடியரசு முறையைக் கொண்டிருந்தனர்.

2-ஆம் நூற்றாண்டு ஜுனாகத் பாறைக் கல்வெட்டில் (ருத்ரதாமன் கல்வெட்டு), யாதேயர்கள் “அனைத்து க்ஷத்திரியர்களிலும் வீரர்கள்” என்றும், எளிதில் அடிபணியாதவர்கள் என்றும் புகழப்பட்டுள்ளனர்.

இவர்களின் கடவுள் முருகன் (கார்த்திகேயன்) ஆவார். ரோதக் (Rohtak) பகுதி இவர்களின் நாணயங்களை அச்சடிக்கும் மையமாகத் திகழ்ந்தது. இவர்களின் நாணயங்களில் “யாதேய கணஸ்ய ஜய” (யாதேயர்களின் வெற்றி) என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

***

திருமுருகாற்றுப்படை என்னும் சங்க கால நூல் முருகனின் முழு வரலாற்றினைக் கூறுகிறது அதை நக்கீரன் என்ற பிராமணன்  எழுதினான் . சாமி பற்றி எழுதியதால் இது பிற்கால நூல் என்று சில திராவிட அசடுகள் – அரை வேக்காடுகள் -எழுதின ; ஆனால் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே யாதேயர்கள் (Yaudheyas) ஆறுமுகன் வடிவத்தை நாணயத்தில் பொறித்தார்கள்; இது நக்கீரரின் வருணனையை நிரூபிக்கிறது . ஆயினும் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின்  பழங்காலச்  சிலைகளோ பழைய ஓவியங்களோ, காசுகளோ நமக்கு கிடைக்காதது துரதிர்ஷ்டமே; வேல்போன்ற ஈட்டிகள் மட்டுமே கிடைத்தன ; அது உலகில் இல்லாத இடமே இல்லை.

மேலும் பாணினியின் அஷ்டாத்யாயீ இலக்கண நூலுக்கு உலகம் வியக்கும் உரையை 2200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய பதஞ்சலி முனிவரும் அவருடைய மகா பாஷ்ய நூலில் ஸ்கந்த, விசாகர் சிலைகள் விற்பனை பற்றிக் குறிப்பிலிட்டுள்ளார் ; இதுவும் நக்கீரர் நூலை சங்க கால நூல் என்பதைக் காட்டுகிறது .

****.

இந்தியாவின் பொற்காலம் எனப் புகழப்படும் குப்தர்காலத்தில் மன்னர்கள் ஸ்கந்த குப்தன்குமார குப்தன்(CE 415-450)

 என்று பெயர் வைத்துக் கொண்டனர். இவ்வளவுக்கும் குப்தர்கள் வைஷ்ணவர்கள் ; பரம பாகவதர்கள் ! இதற்குக் காரணம் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன் எழுதிய குமார சம்பவம் நூலாகும். அவர் முருகனின் புகழைத்  திக்கெட்டும் பரப்பினார் ; அதற்குப் பின்னர் புத்தசதரித்ததை முதல் முதலில் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய புத்த கோஷரும் கூட புத்தரை முருகனுடன் ஒப்பிட்டார் அந்த அளவுக்கு காளிதாசன் முருகன் புகழைப்  பரப்பினார் ; அது மட்டுமல்ல குமார சம்பவத்தில் முதல் பத்து சுலோகங்களில் அவர் இமய மலையைப் புகழ்ந்த இயற்கை வருணனையை சங்க காலப் புலவர்கள் அப்படியே தமிழ்ச் சங்கப் பாடல்களில் பயன்படுத்தினார்கள். 

***

பிற்கால முருகன் நாணயங்கள் —

கனிஷ்கருக்குப் பிறகு ஆட்சி செய்த ஹுவிஸ்கா, எல்லா இந்து தெய்வங்களுக்கும்  நாணயங்கள் வெளியிட்டார். அவர் முதல் நூற்றாண்டினைச் சேர்ந்தவர் சிவா – உமா நாணயங்கள்    வெளியிட்டார் அவர்க்கு முன்னர் கனிஷ்கார் சிவ பெருமான் நாணயங்கள் வெளியிட்டார்.

இவர்கள் சொல்லும் பெயர்கள் விநோதமானவை

சிவா – ஓசோ உமா – ஓம் மோ

ஹுவிஸ்கா அச்சடித்த நாணயங்களில் மாசேன = மஹாசேனஸ்கந்த குமாரோ- விசாகா – ஸ்கந்த குமாரவிசாகன் என்ற எழுத்துக்கள் உள. மேலும் அவர்கள் ஒரு மேடை மீது ஆபரணங்களைப் பூண்டு நிற்கிறார்கள்;  காலில் கைகளில் வளையங்கள், கழுத்தில் மாலை, தலைப்பாகை, இவற்றுடன் மெல்லிய ஆடைகளை அணிந்துள்ளனர்; முருகனின் ஒரு கை இடுப்பிலும் இன்னொரு கை, திரிசூலத்தை ஏந்திய வண்ணமும் உள்ளன ; சில நாணயங்களில் இடுப்பில் வாள், கதை காணப்படுகிறது ; ஈட்டியும் உளது; அதை நாம் வேல் என்று சொல்கிறோம்

யாதேயர்கள் மயிலையும் காட்டியுள்ளனர் .

யாதேயர்களைப் போல ஒளதும்பரர்களும் முருகன் நாணயங்கள் வெளியிட்டார்கள் ; குப்தர் கால தங்க நாணயங்களில்தான் அழகான முருகன் காணப்படுகிறார் ; மஹேந்திர குமார என்ற எழுத்துக்களை பொறித்துள்ளார்கள் ; முருகன் இந்திரன் படைகளுக்கு COMMANDER-IN-CHIEF கமாண்டர் இன் சீப் – சேனாபதி– என்பதும் இந்திரன் புதல்வி தெய்வானையை – தேவசேனா — மணந்தவர் என்பதும் புராணக்கதை .

பாதாமியை- வாதாபியைத் – தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த மேலைச் சாளுக்கிய மன்னன் முதலாம் விக்ரமாதித்யன் (சாளுக்கிய விக்ரமாதித்ய – CE 655-681) வெளியிட்ட தங்க நாணயத்தில் முருகன் பாம்பு, மயில் தோகையுடன் காட்சி தருகிறார் ; பிற்கால கர்நாடக அரசர் கல்வெட்டுகளில் இந்த தங்க நாணயத்தை மயூர கத்யான என்று குறிப்பிட்டுள்ளார்கள்

பதினேழாம் நூற்றாண்டு ரகுநாத நாயக்கர் காசில் மயி டன் முருகன் உள்ளார் .

மைசூர் நரசராஜா உடையார் – 1638-1656 CE வரை முருகன், மயில் நாணயங்களை பார்க்க முடிகிறது . மயிலை வளர்த்தவர்களை அரசன் ஆக்கி நந்த வம்சத்தை அடியோடு அழித்தான் சாணக்கியன் என்ற பிராமணன் ;இந்த மயிலை சந்திர குப்த மெளரியன் காலம் முதல் PUNCH MARKED COINS /முத்திரைக் காசுகளில் காண்கிறோம்; மயிலை இந்திய தேசீயப் பறவையாக அறிவித்ததன் மூலம் இந்தியாவின் தேசீயக் கடவுள் முருகன்தான் என்றும் சொல்லலாம் !

—SUBHAM—

TAGS- பழைய, முருகன், கந்தன், ஷண்முகன், நாணயம், யாதேயர்கள், ஆறுமுகன்

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-61; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்(Post.15,898)

Written by London Swaminathan

Post No. 15,898

Date uploaded in London –21 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 61

பத்ரிநாத்

அருள்மிகு பத்ரி நாராயணன் கோயில்

மூலவர்   பத்ரி நாராயணன்

தாயார்    அரவிந்தவல்லி

திருக்கோலம்   வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்

தீர்த்தம்   தப்தகுண்ட தீர்த்தம்

விமானம் தப்தகாஞ்சன விமானம்

தல விருட்சம்  பத்ரி (இலந்தை) மரம்

மங்களாசாசனம்     திருமங்கையாழ்வார், பெரியாழ்வார்

இருப்பிடம்- ‘பத்ரிநாத்’ ரிஷிகேசத்திலிருந்து சுமார் 297 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இமயமலைப் பகுதியில், அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.

இங்கு நாராயணனே குருவாகவும், சீடனாகவும் இருந்து எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார் என்றும், அவர் பத்ரி (இலந்தை) மரத்தடியில் அமர்ந்ததால் ‘பத்ரிகாசிரமம்’ என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். தப்தகுண்டம் என்னும் வெந்நீர் ஊற்றுக்கு எதிரே பத்ரி நாராயணன் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11000 அடி. ஆதி சங்கராச்சாரியார் அலக்நந்தா நதியில் பத்ரிநாராயணனின் கருங்கல் சிலையைக் கண்டுபிடித்து அதை கோயிலில் பிரதிஷ்டை செய்தார். நிறுவப்பட்டது: கி.மு.500 ஆம் ஆண்டு .

கோயிலுக்கு வடக்கே கங்கைக் கரையில் பிரம்ம கபாலம் என்ற இடம் உள்ளது. இங்கு பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தால் ஈரேழு தலைமுறைகளும் மோட்சமடைவதாக நம்பப்படுகிறது. கோயிலுக்கு எதிர்புறம் நரநாராயண பர்வதங்களும், வலப்புறத்தில் நீலகண்ட பர்வதமும் உள்ளது.

நாரதர் எட்டெழுத்து (அஷ்டாக்ஷரம் = ஓம் நமோ நாராயணா ) மந்திரத்தால் மகாவிஷ்ணுவை பூஜித்து அருள்பெற்ற ஸ்தலம். பீமனும், ஹனுமனும் சண்டையிட்ட கந்தமாதன பர்வதம் (தற்போது ஹனுமான்சட்டி) இங்கு உள்ளது.

பனிசூழ்ந்த இடத்தில் உள்ளதால் இக்கோயில் சித்ரா பௌர்ணமியன்று திறக்கப்பட்டு 6 மாத காலம் வழிபாடு நடைபெறும். பின்னர் தீபாவளி அன்று கோயில் மூடப்படும். இந்த 6 மாத காலத்தில்

திருமங்கையாழ்வார் 21 பாசுரங்களும், பெரியாழ்வார் 1 பாசுரமுமாக மொத்தம் 22 பாசுரங்கள் பாடியுள்ளனர்.

பாசுரம்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான பத்ரிநாத் (திருவதரியாச்சிரமம்) எம்பெருமான் மீது திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி பாசுரங்கள் பாடப்படுகின்றன.

ஆழ்வார் பாடியருளிய புகழ்பெற்ற பத்ரிநாத் பாசுரம் மற்றும் அதன் பொருள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உறிகள் போல் மெய்நரம்பு எழுந்து, ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி,நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று நடுங்கா முன்,அறிதியாகில் நெஞ்சம் அன்பாய் ஆயிர நாமம் சொல்லி,வெறிகொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே.

பாடலின் விளக்கம்:நம் உடலில் உள்ள நரம்புகள் வெளியே புடைத்து, சதைப்பற்று குறைந்து, உள்ளம் தளர்ந்து, முதுமை காரணமாக கண்கள் சுழன்று உடல் நடுங்கும் காலம் வருவதற்கு முன்பே, மனமே! எம்பெருமானின் திருநாமங்களை ஆயிரமும் சொல்லி, வண்டுகள் ரீங்காரம் செய்து பண்கள் பாடும் திருவதரி (பத்ரிநாத்) சென்று வணங்குவோம்.

 பெருமாள் தியானத்தில் இருந்தபோது, அவருக்கு நிழல் தருவதற்காக லட்சுமி தேவி ‘பத்ரி’ (இலந்தை) மரமாக மாறியதாக நம்பப்படுகிறது. இதன் தலைமை அர்ச்சகராக (ராவல்) கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரி பிராமணர் நியமிக்கப்படுவது 1,200 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமாகும்.

பத்ரிநாத் கோயிலுக்கு அருகே பக்தர்கள் புனித நீராடும் வெந்நீர் ஊற்று உள்ளது. தப்த குந்த் என்ற இயற்கையான வெந்நீர் ஊற்று, குணப்படுத்தும் சக்திகளைக் கொண்டது. பக்தர்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு அதன் நீரில் குளிக்கின்றனர்.

மேலும், இந்தியா-சீனா எல்லைக்கு அருகில் உள்ள கடைசி இந்திய கிராமமான மனா கிராமம், பத்ரிநாத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில் கம்பீரமான இமயமலையின் மத்தியில் அமைந்துள்ளது. பனி மூடிய சிகரங்கள் மற்றும் அலக்நந்தா நதியால் சூழப்பட்ட இந்த புனித தலம் இயற்கை அழகு உடையது.

சார் தாம் யாத்திரை

சார் தாம் யாத்திரையில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு முக்கிய இடமாகும். சார்தாம் – நான்கு புனிதத் தல யாத்திரை — என்பதில் இமய மலையிலுள்ள 4 புனிதத்தலங்கள் அடக்கம் .

சார் தாம் : பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி

பாண்டவர்கள் இமயமலைக்குச் செல்லும் இறுதிப் பயணத்தில் பத்ரிநாத் வழியாகச் சென்றனர்.

17 ஆம் நூற்றாண்டில், கர்வால் மன்னர்கள் சிலையை அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றினர், 1803 ஆம் ஆண்டு பூகம்பத்திற்குப் பிறகு ஜெய்ப்பூர் மன்னரால் இந்த கோயில் மீண்டும் கட்டப்பட்டது.

கல் மற்றும் மரத்தால் ஆன பாரம்பரிய கர்வாலி பாணி

அமைப்பு: கோயில் சுமார் 50 அடி உயரம் கொண்டது, தங்க கூரையுடன் உள்ளது.

: சிங்த்வார் என்று அழைக்கப்படும் பிரதான வாயில் பிரகாசமாக வர்ணம் பூசப்பட்டுள்ளது மற்றும் நுழைவாயிலில் விஷ்ணுவின் வாகனமான கருடன் என்ற பறவையின் சிலை உள்ளது.

ஏப்ரல்/ மே முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் கோயில் வழிபாட்டிற்காக திறந்திருக்கும். குளிர்கால மாதங்களில் சிலை ஜோஷிமத்தில் உள்ள நரசிம்மர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும்.

TO BE CONTINUED…………………..

TAGS- பத்ரிநாத், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-61; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், Part 61

பேராசையைத் தவிர்த்து வாழ்வது எப்படி? – சத்ய சாயிபாபா (Post No.15,897)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,897

Date uploaded in London – 21 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

14-6-26 தீபம் இதழில் வெளியான கட்டுரை!

பேராசையைத் தவிர்த்து நிறைவான வாழ்வு வாழ்வது எப்படி? – ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரை!

ச. நாகராஜன்

புலன்களைத் திருப்திப் படுத்தல், உலகியல் தரும் அனைத்தையும் பெறுதல், உலோகாயத லாபங்களைச் சேர்த்தல் ஆகியவற்றில் ஏற்படும் சபலங்களைத் தடுத்து நிறுத்துங்கள். உங்களின் தேவைகளுக்கு ஒரு எல்லையை வகுத்துக் கொள்ளுங்கள்.

ரகு மஹாராஜான் அரசாண்ட சமயத்தில் ஒரு மாணவன் தன் படிப்பை முடித்துக் கொண்ட சமயத்தில் தனது குருவிடம் அவர் தனக்கு போதித்த அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அவருக்கு என்ன குரு தக்ஷிணை வேண்டும் என்று கேட்டான். குரு அவனுடைய நன்றியைத் தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று சொன்னார். தான் சொன்னபடி வாழ்ந்து காட்டி தனக்கு கௌரவத்தை ஏற்படுத்தினால் அதுவே போதும் என்றார் குரு. ஆனால் சிஷ்யனோ அவர் தனக்குத் தேவையானதை சொல்லியே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினான். எவ்வளவு பணம் அல்லது எந்த விதமான பரிசு வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். ஆகவே அவனைத் திருப்திப் படுத்தவும் அவன் தொல்லையிலிருந்து மீளவும் குரு அவனிடம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு தொகையைக் கூறினார்.

“நீ என்னிடம் 16 கலைகளைக் கற்றுக் கொண்டாய். ஆகவே எனக்கு 16 லட்சம் தங்கக் காசுகளைத் தா” என்றார் அவர்.

இதைக் கேட்ட சிஷ்யன் அந்தப் பணத்தைச் சேகரிப்பதற்காக ரகு மஹாராஜாவிடம் சென்றான். நீ எது கேட்டாலும் அதைத் தருவேன் என்ற உறுதிமொழியை அவன் மஹாராஜா ரகுவிடம் பெற்றான். பின்னர் பதினாறு லட்சம் தங்கக் காசுகளைத் தருமாறு கேட்டான். இவ்வளவு பெரிய தொகையைக் கேட்ட ராஜா திகைத்தார். சக்கரவர்த்தியாக இருந்தாலும் கூட இவ்வளவு பெரிய தொகை அவரிடம் இல்லை.  ஆகவே தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக அவர் செல்வத்தின் அதிபதியான குபேரன் மீது போர் தொடுத்தார். தனக்கு வேண்டிய ஏராளமான தங்கக் காசுகளைக் கொண்டு வந்தார்.

““இதோ இருக்கின்ற அனைத்தையும் எடுத்துக் கொள்; உன் குரு கேட்ட அளவு அவருக்குக் கொடு. மீதியை நீயே வைத்துக் கொள்” என்று ராஜா அவனிடம் கூறினார். ஆனால் சிஷ்யனோ தான் குருவுக்குக் கொடுக்க வேண்டிய தக்ஷிணைத் தொகைக்கு அதிகமாக ஒரு காசு கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

“உனக்காகத் தான் இவ்வளவு செல்வத்தையும் கொண்டு வந்துள்ளேன். எடுத்துக் கொள்” என்று ராஜா வற்புறுத்த அந்த சபலத்திற்கு அடிமையாகாமல் தனக்கு வேண்டியதைப் பெறுவதில் மட்டும் உறுதியாக இருந்தான். அது தான் உண்மையான பேராண்மையாகும்.

‘அசந்துஷ்ட: த்விஜோ நஷ்ட:’ – திருப்தியில்லாத ஒரு மனிதன் நஷ்டம் அடைந்தவன் போலத் தான்! – என்பது வாக்கு.

இறைவனை நம்பி உனக்கு வருவதை ஏற்றுக் கொள்.’ அவன் உன்னுள்ளே இருக்கிறான்; உன்னுடன் இருக்கிறான். உனக்கு எவ்வளவு எப்போது கொடுக்க வேண்டும் என்பதை அவன் அறிவான். அவன் ப்ரேமை வடிவானவன்.

இதுவே என் தனித்துவம் – ப்ரேமை! ப்ரேமை என்பதே நான் கொண்டு வந்துள்ள விசேஷமான பரிசாகும். என்னுடைய கருணையானது வெளிப்படுத்தப்படும் ஒரு வழியாகும். அதுவே என்னுடைய எல்லாச் செயல்களுக்குமான அடிப்படை. கடவுள் எல்லா உயிர்களிலும் இருக்கிறான் என்று சொல்லப்படுகிறது. ஆம். அவன் ப்ரேமையாக அனைத்திலும் இருக்கிறான். ப்ரேமை இல்லாவிட்டால் உலகமானது துயரத்தின் கூடாரமாகி விடும். அது மீனுக்கு தண்ணீர் போல.

ஒரு தங்கக் கோப்பையில் நவரத்தினங்களைப் போட்டு அதில் மீனை வை; அது உயிருக்குப் போராடி தண்ணீருக்குள் பாயவே போராடும்.

லக்ஷ்மணன் குழந்தையாக இருந்த போது ஓ வென்று அலறி அழலானான். சுமித்ரா குழந்தையை ஏதோ பிசாசு பிடித்திருக்கிறது என்று நினைத்து பயப்பட்டாள். நேராக வசிஷ்டரிடம் ஓடினாள். “கொஞ்சம் விபூதியை குழந்தையின் நெற்றியில் தடவி விடுங்கள். கெட்ட பிசாசு ஓடி விடும்” என்றாள் அவள்.

வசிஷ்டருக்கு லக்ஷ்மணன் அப்படி அழுவதற்கான காரணம் நன்கு தெரியும். அவர் கூறினார் :” குழந்தையை ராமனுக்குப் பக்கத்தில் வையுங்கள். அவனது அழுகை நின்று விடும்.”

குழந்தையாக இருந்த போதும் ராமனை விட்டு ஒரு கணமும் லக்ஷ்மணனால் பிரிந்திருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் அதிகமாகத் தேவைப்படும். அதுவே அவருக்குச் சொந்தமான இடமாகும்.

அதனால் தான் விஸ்வாமித்திரர் தன் ஆசிரமத்திற்கு ராமரை அழைத்துச் சென்ற போது லக்ஷ்மணன் ராமரைப் பின் தொடர்ந்து சென்றான்.

சாதனா என்பது மொத்த விஷயத்தில் நான்கில் ஒரு பங்கு தான். விசாரம் என்பது அடுத்த மூன்று பகுதியாகும். டயபடீஸுக்கு இன்சுலின் ஊசியானது நான்கில் ஒரு பகுதி தான். மற்ற மூன்று பகுதிகள் – உணவுத் திட்டத்தில் கட்டுப்பாடு, உடல்பயிற்சி, மற்றும் உள்ள கட்டுப்பாடுகள். அதே போல நாமஸ்மரணம் என்னும் சாதனையை நான் பரிந்துரைக்கும் போது அதன் கூடவே தொடர்ந்து வரும் இன்னும் இரண்டு துணைச் செயல்களும் உள்ளன.

இறைவனின் நாமத்தைக் கூறும் போது  அந்தப் பெயரில் மனமானது நிலைநிறுத்தப்பட வேண்டும். அத்துடன் பாவசுத்தியும் (உணர்வுகளில் தூய்மை) மற்றும் அர்த்தவிசாரணையும் (பெயரில் ஆழ்ந்திருக்கும் அர்த்தத்தில் வாழ்வது) இருக்க வேண்டும். இந்தக் கூட்டு இணைதல் வெற்றியைத் தரும்.

27-3-1968 அன்று வெங்கடகிரியில் பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரை!

**

Part-24: Tirukkural Encyclopaedia- Chapter 12 (Kural 116-120) Post.15,896

Written by London Swaminathan

Post No. 15,896

Date uploaded in London –20 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 24

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book) Year 1931

7.Tamil Original

****

12. நடுவுநிலைமை – Equity or Impartiality

116.The creping thought  of inequity portend the ruin f a soul- A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

***

116.If one’s mind swerves from rectitude and contemplates evil deeds,

The inevitable consequence will be one’s own ruin– S M Diaz, I G of Police- SMD, Year 2000

***

116.
If, right deserting, heart to evil turn,
Let man impending ruin’s sign discern!
Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, “I shall perish.” – GUP

***
116.Of perdition let him be sure
Who leaves justice to sinful lure– Suddhananda Bharathiyar- SB

***

116.One should realise that any deviation from the path of equity will bring one’s own ruin- EVS Publishers, Singapore- EVS, Year 1986

***

116. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.

XXXXXXXXXXXXXXXXXXXXX

117.Poverty of the just is no badge of disgrace to the wise- ANM+2

***
117.In the eyes of the wisemen of the world, the low estate

Of a just man is no disgrace— SMD

***

117.
The man who justly lives, tenacious of the right,
In low estate is never low to wise man’s sight.
The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity. – GUP

***

117.The just reduced to poverty
Is not held down by equity.         .        – SB

***

117.The world will not look down upon an impartial manbecause  of his poverty- EVS

***

117. கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

118. The boast of the wise is a  mind steady as well poised pair of scales— ANM+2

***
118.To hold the scales even and fair is the ornament

Of those, who seek perfection in their rectitude— SMD

***

118.
To stand, like balance-rod that level hangs and rightly weighs,
With calm unbiassed equity of soul, is sages’ praise.
To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise. – GUP

***

118.Like balance holding equal scales
A well poised mind is jewel of the wise.         .        – SB

***

118.Like scales that always remain just and fair, wisemen remain impartial and do not take sides- EVS

***

118.As scales that, even poised, do weigh aright,

Unbending fairness wise men’s jewel is— H A Popley – HAP (not full book) Year 1931

***
118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

119. Where does justice reside, but in measured words springing fron an upright heart within?– ANM+2

***

119.If the mind is free from bias,

The words uttered are bound to be fair– SMD

***

119.
Inflexibility in word is righteousness,
If men inflexibility of soul possess.
Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind. – GUP

***
119.ustice is upright, unbending
And free from crooked word-twisting.        – SB

***

119.Impartiality is just pronouncement  arising from an unbiased mind- EVS

***

119. Fairness means freedom from all crooked speech,

If the mind, too, is free from crookedness- HAP

***
119. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

120. He is athriving trader among his tribe who jealously guards others interests as his own— ANM+2

***
120. If traders guard other people’s interest as their own their trade will surely flourish— SMD

***

120.
As thriving trader is the trader known,
Who guards another’s interests as his own.
The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own. – GUP
-***

120.A trader’s trade prospers fairly
When his dealings are neighbourly.        – SB

***
120.In trade, he who has consideration for others  and regards their money as his own will succeed in his business- EVS

***

120.To guard the things of others as their own,

This is good trade for those who traders are -HAP

***

120. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்

To be continued………….

Tags- Part-24, Tirukkural Encyclopaedia, Chapter 12, (Kural 116-120) Equity , Impartiality

Important Upanishad Mantras in English and Devanagari- Part 2 (Post No.15,895)

Written by London Swaminathan

Post No. 15,895

Date uploaded in London –20 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 Part 2

9

आसीनो दूरं व्रजति शयानो याति सर्वतः ।

कस्तं मदामदं देवं मदन्यो ज्ञातुमर्हति ॥ २१ ॥

āsīno dūraṃ vrajati śayāno yāti sarvataḥ |

kastaṃ madāmadaṃ devaṃ madanyo jñātumarhati || 21 ||

21. Sitting, he goes far; lying, he goes everywhere. Who else but me deserves to know the God, who is joyful and joyless. .(Katopanishad)

***

10

  In the Svetasvatara Upanishad Chapter 4 Verse 20,

na saṃdṛśe tiṣṭhati rūpam asya na cakṣuṣā paśyati kaścanainaṃ:

न संदृशे तिष्ठति रुपमस्य न चक्षुषा पश्यति कश्चनैनम् ।
हृदा हृदिस्थं मनस य एनमेवं विदुरमृतास्ते भवन्ति ॥२०

20) The form of Him stands not within the vision and none beholdeth Him by the eye; but by the heart and the mind, for in the heart is His station; who thus know Him, they become immortal.

OR

4-20. His form cannot be seen, no one perceives him with the eye. Those who through heart and mind know him thus abiding in the heart, become immortal. — Svetasvatara Upanishad

***

11

बृहच्च तद्दिव्यमचिन्त्यरूपं सूक्ष्माच्च तत्सूक्ष्मतरं विभाति ।
दूरात्सुदूरे तदिहान्तिके च पश्यन्त्विहैव निहितं गुहायाम् ॥ ७ ॥

bṛhacca taddivyamacintyarūpaṃ sūkṣmācca tatsūkṣmataraṃ vibhāti |
dūrātsudūre tadihāntike ca paśyantvihaiva nihitaṃ guhāyām || 7 ||

7. That shines as vast, heavenly, of unthinkable form and subtler than the subtle, much farther than the distant, near, also here, and seen fixed in the cavity, by the intelligent. (7) –Mundakopanishad

***

12

एष देवो विश्वकर्मा महात्मा सदा जनानां हृदये संनिविष्टः ।
हृदा मनीषा मनसाभिक्लृप्तो य एतद् विदुरमृतास्ते भवन्ति ॥4-17

4-17) This is the God, the mighty Soul, the Architect of all, seated for ever in the hearts of creatures and he is realised by the heart and the intellect and the mind; who know this, they become immortal.– Svetasvatara Upanishad

***

13

तदेजति तन्नैजति तद्दूरे तद्वन्तिके ।
तदन्तरस्य सर्वस्य तदु सर्वस्यास्य बाह्यतः ॥ ५ ॥

tadejati tannaijati taddūre tadvantike |
tadantarasya sarvasya tadu sarvasyāsya bāhyataḥ || 5 ||

5. It moves, it is motionless. It is distant, it is near. It is within all, it is without all this. (Isavasyopanishad)

***

14

आनन्दो ब्रह्मेति व्यजानात्। आनन्दाध्येव खल्विमानि भूतानि जायन्ते। आनन्देन जातानि जीवन्ति। आनन्दं प्रयन्त्यभिसंविशन्तीति।सैषा भार्गवी वारुणी विद्या। परमे व्योमन्प्रतिष्ठिता।स य एवं वेद प्रतितिष्ठति। अन्नवानन्नादो भवति। महान्भवति प्रजया पशुभिर्ब्रह्मवर्चसेन ंअहान्‌ कीर्त्या॥

Transliteration

ānando brahmeti vyajānāt| ānandādhyeva khalvimāni bhūtāni jāyante| ānandena jātāni jīvanti | ānandaṁ prayantyabhisaṁviśantīti |saiṣā bhārgavī vāruṇī vidyā | parame vyomanpratiṣṭhitā |sa ya evaṁ veda pratitiṣṭhati | annavānannādo bhavati| mahānbhavati prajayā paśubhirbrahmavarcasena ṁahān kīrtyā||

Meaning

He knew Bliss for the Eternal. For from Bliss alone, it appeareth, are these creatures born and being born they live by Bliss and to Bliss they go hence and return. This is the lore of Bhrigu, the lore of Varouna, which hath its firm base in the highest heaven. Who knoweth, getteth his firm base, he becometh the master of food and its eater, great in progeny, great in cattle, great in the splendour of holiness, great in glory. –Taitriopanishad

***

15

हिरण्मयेन पात्रेण सत्यस्यापिहितं मुखम् ।
तत्त्वं पूषन्नपावृणु सत्यधर्माय दृष्टये ॥ १५ ॥

hiraṇmayena pātreṇa satyasyāpihitaṃ mukham |
tattvaṃ pūṣannapāvṛṇu satyadharmāya dṛṣṭaye || 15 ||

15. The entrance of the True is covered as if by a golden vessel. Remove, O sun, the covering that I who have been worshipping “The True” may behold it. (Isavasyopanishad)

***

16

स तस्मिन्नेवाकाशे स्त्रियमाजगाम बहुशोभमानामुमां हैमवतीं तां होवाच किमेतद्यक्षमिति ॥ १२ ॥

 sa tasminnevākāśe striyamājagāma bahuśobhamānāmumāṃ haimavatīṃ tāṃ hovāca kimetadyakṣamiti || 12 || Kena-upaniṣad mantra 3.12:

12. He (seeing) a woman in that very space (where the Yakṣa had lately stood) came towards (her.) (She was) the very fair Umā, the daughter of the Himavat. He asked her “who was that Yakṣa?”– Kenopanishad

****

17

ना॒राय॒णप॑रो ज्यो॒ति॒रा॒त्मा ना॑राय॒णः प॑रः ।

ना॒राय॒णपर॑-म्ब्र॒ह्म॒ तत्त्व-न्ना॑राय॒णः प॑रः ।

nā̠rāya̠ṇapa̍rō jyō̠ti̠rā̠tmā nā̍rāya̠ṇaḥ pa̍raḥ ।

nā̠rāya̠ṇapara̍-mbra̠hma̠ tattva-nnā̍rāya̠ṇaḥ pa̍raḥ ।

Narayana is the supreme light; Narayana is the supreme self. Narayana is the supreme Brahman; Narayana is the supreme truth.—Mahanarayana Upanishad

OR

नारायण परो ज्योतिरात्मा नारायणः परः ।

नारायण परं ब्रह्म तत्त्वं नारायणः परः ।

नारायण परो ध्याता ध्यानं नारायणः परः ॥

 The Lord Narayana is the Supreme Absolute; Narayana is

 the Supreme Reality; Narayana is the Supreme Light; Narayana

is the Supreme Self; Narayana is the Supreme Meditator; Narayana

is the Supreme Meditation. .—Mahanarayana Upanishad

***

18

दिव्यो ह्यमूर्तः पुरुषः स बाह्याभ्यन्तरो ह्यजः ।अप्राणो ह्यमनाः शुभ्रो ह्यक्षरात् परतः परः ॥ २॥ Mundaka Upanishad (Chapter 2, Section 1, Verse 2

divyo hyamūrtaḥ puruṣaḥ sa bāhyābhyantaro hyajaḥ |aprāṇo hyamanāḥ śubhro hyakṣarāt parataḥ paraḥ || 2 ||

2. He is bright, formless, all-pervading, existing without and within, unborn, without prana, without mind, pure and beyond the avyakrita, which is beyond all.

****

19

अणोरणीयान् महतो महीयान् आत्मास्य जन्तोर् निहितो गुहायाम् ।

तमक्रतुः पश्यति वीतशोको धातुप्रसादान्महिमानमात्मनः ॥

aṇoraṇīyān mahato mahīyān ātmāsya jantor nihito guhāyām |

tamakratuḥ paśyati vītaśoko dhātuprasādānmahimānamātmanaḥ ||

Smaller than the smallest, greater than the greatest, the Self (ātmā) is hidden in the heart-cave of this creature… One who is free from desire… sees that glory of the Self through divine grace. It can only be perceived not by the senses,but by a pure mind free from desire, and only through divine grace. –Katha Upanishad .

****

20

श्रवणायापि बहुभिर्यो न लभ्यः

शृण्वन्तोऽपि बहवो यं न विद्युः ।

आश्चर्यो वक्ता कुशलोऽस्य लब्धा

आश्चर्यो ज्ञाता कुशलानुशिष्टः ॥ ७॥kathopanishad

śravaṇāyāpi bahubhiryo na labhyaḥ

śṛṇvanto’pi bahavo yaṃ na vidyuḥ .

āścaryo vaktā kuśalo’sya labdhā

āścaryo jñātā kuśalānuśiṣṭaḥ  1-2-7 kathopanishad

7 There are many who do not even hear of Atman; though hearing of Him, many do not comprehend. Wonderful is the expounder and rare the hearer; rare indeed is the experiencer of Atman taught by an able preceptor.

To be continued…………….

Tags- Part 2, Important, Upanishad Mantras

முக்கிய உபநிஷத மந்திரங்கள் – Part 2 (Post.15,894)

Written by London Swaminathan

Post No. 15,894

Date uploaded in London –20 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 2 (English version posted separately with meaning)

9

ஆஸீனோ தூரம் வ்ரஜதி  சயானோ யாதி ஸர்வத:

கஸ்தம் மதாமதம்  தேவம் மதன்யோ  ஞாதுமர்ஹதி- கடோபநிஷதம் 2-21

பரமாத்மன் இருந்தபடி எங்கும் செல்கிறார்; சயனித்தபடி எங்கும் போகிறார்; ஒளிவீசும் அந்த ஜோதியை , இன்பமும் துன்பமும் உள்ளானை , அது ஒன்றும் இல்லானை  என் போன்றவர்  அன்றி வேறு யார் அறிவார்?

आसीनो दूरं व्रजति शयानो याति सर्वतः ।

कस्तं मदामदं देवं मदन्यो ज्ञातुमर्हति ॥ २१ ॥

****

10

ந ஸம்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய  ந சக்ஷுசா  பச்யதி  கஸ்ச நைனம் 

ஹ்ருதா ஹ்ருதஸ்தம்  மனஸா ய  ஏனமேவம் 

விதுரம் ருதாஸ்தே பவந்தி- — ஸ்வேதாஸ்வதரோபநிஷதம் 4-20

இறைவனுடைய வடிவம் காட்சிக்கு வருவதில்லை; அவனை யாரும் கண்கொண்டு பார்த்ததில்லை; உள்ளத்தில் இறைவனை  அனுபூதியில் காண்பவர் மரணமில்லலாப் பெருநிலை எய்துகின்றனர்.

  In the Svetasvatara Upanishad Chapter 4 Verse 20,

na saṃdṛśe tiṣṭhati rūpam asya na cakṣuṣā paśyati kaścanainaṃ:

न संदृशे तिष्ठति रुपमस्य न चक्षुषा पश्यति कश्चनैनम् ।
हृदा हृदिस्थं मनस य एनमेवं विदुरमृतास्ते भवन्ति ॥२०

****

11

ப்ருஹத் தத் திவ்யம் அசிந்த்யரூபம்

ஸூக்ஷ்மாத்  ச தத் ஸூக்ஷ்மதரம் விபாதி

தூராத் ஸூதூரே  தத் இஹாந்திகே ச

பச்யத்ஸூ இஹ ஏவ நிஹிதம் குஹாயாம்

முண்டகோபநிஷத் 3-7  

பெரிய பொருளாக , தானே பிரகாசிப்பதாக, மனத்துக்கு எ ட்டாமல்  ஒளிர்வது பிரம்மம்; அது நுணுக்கத்திலும் நுணுக்கமானது; தூரத்திலும் அதிக தூரமானது ; இங்கே உடலுக்குள்ளும் அது இருக்கிறது. இம்மை வாழ்விலேயே  அதை சான்றோர்கள் உள்ளத்தில் காண்கின்றனர் .

बृहच्च तद्दिव्यमचिन्त्यरूपं सूक्ष्माच्च तत्सूक्ष्मतरं विभाति ।
दूरात्सुदूरे तदिहान्तिके च पश्यन्त्विहैव निहितं गुहायाम् ॥ ७ ॥

bṛhacca taddivyamacintyarūpaṃ sūkṣmācca tatsūkṣmataraṃ vibhāti |
dūrātsudūre tadihāntike ca paśyantvihaiva nihitaṃ guhāyām || 7 ||

****

12

ஏஷ தேவோ விச்வகர்மா மஹாத்மா ஸதா ஜனானாம்

ஹ்ருதயே சந்நிவிஷ்ட:

ஹ்ருதா மனீஷா  மனஸா அபிக்லுப்தோ ய ஏதத் 

விதுரம் ருதாஸ்தே பவந்தி

ஸ்வேதாஸ்வதரோபநிஷதம் 4-17

பிரபஞ்சத்தைப் படைத்து எங்கும் நிறைந்திருக்கும் தெய்வம் எல்லோருடைய உள்ளத்திலும் உறைகிறான் ; அவனை அன்பினாலும், அறிவினாலும் எண்ணத்தினாலும் அறிபவர்கள் அமிர்த சொரூபமாகிறார்கள் (மரணமில்லாப் பெரு வாழ் வினைப் பெறுகிறார்கள் )

एष देवो विश्वकर्मा महात्मा सदा जनानां हृदये संनिविष्टः ।
हृदा मनीषा मनसाभिक्लृप्तो य एतद् विदुरमृतास्ते भवन्ति ॥4-17

****

13

ததே ஜதி தன்னை ஜதி தத் தூரே தத் வந்திகே

ததந்தரஸ்ய ஸர்வஸ்ய தத் உ  ஸர்வஸ்யாஸ்ய பாஹ்யத :

இந்த பிரம்மம் அசைகிறது; அசையாதிருக்கிறது. இது அண்மையில் இருக்கிறது; இது தொலைவில் இருக்கிறது.  அனைத்திற்குள்ளும்  இது இருக்கிறது.  எல்லாவற்றுக்கும் வெளியிலும் இது இருக்கிறது. 

–ஈசாவாஸ்ய உபநிஷத் -5

तदेजति तन्नैजति तद्दूरे तद्वन्तिके ।
तदन्तरस्य सर्वस्य तदु सर्वस्यास्य बाह्यतः ॥ ५ ॥

tadejati tannaijati taddūre tadvantike |
tadantarasya sarvasya tadu sarvasyāsya bāhyataḥ || 5 ||

****

14

ஆனந்தோ ப்ரஹமேதி வ்யஜானாத்  

ஆனந்தாத்யேவ கல்விமானி பூதானி ஜாயந்தே

ஆனந்தேன ஜாதானி ஜீவந்தி

 ஆனந்தம்   ப்ரயன்த்யபிஸம்விசந்தி 

தைத்ரீயோபநிஷத் 3-6

ஆனந்தம் பிரம்மம் என்று (சாதகன்) தெளிவடைந்தான் ஆனந்தத்திலிருந்தே நிச்சயமாக உயிர்கள் தோன்றியுள்ளன பிறந்தவைகள்  எல்லாம் ஆனந்தத்திலேயே வாழ்ந்திருக்கின்றன ; இறுதியில்ஆனந்தத்திலேயே லயம் அடைகின்றன .

आनन्दो ब्रह्मेति व्यजानात्। आनन्दाध्येव खल्विमानि भूतानि जायन्ते। आनन्देन जातानि जीवन्ति। आनन्दं प्रयन्त्यभिसंविशन्तीति।सैषा भार्गवी वारुणी विद्या। परमे व्योमन्प्रतिष्ठिता।स य एवं वेद प्रतितिष्ठति। अन्नवानन्नादो भवति। महान्भवति प्रजया पशुभिर्ब्रह्मवर्चसेन ंअहान्‌ कीर्त्या॥

ānando brahmeti vyajānāt| ānandādhyeva khalvimāni bhūtāni jāyante| ānandena jātāni jīvanti | ānandaṁ prayantyabhisaṁviśantīti |saiṣā bhārgavī vāruṇī vidyā | parame vyomanpratiṣṭhitā |sa ya evaṁ veda pratitiṣṭhati | annavānannādo bhavati| mahānbhavati prajayā paśubhirbrahmavarcasena ṁahān kīrtyā||

***

15

ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முகம் 

தத் த்வம் பூஷன்னபாவ்ருணு ஸத்ய தர்மாய த்ருஷ்டயே

—ஈசாவாஸ்ய உபநிஷத் -15

மெய்ப்பொருளே! உன்னுடைய உண்மையான வடிவத்தை /சொரூபத்தை வட்டவடிவமான  பொன்போன்ற பிரகாசம்   மறைத்துக்கொண்டிருக்கிறது. இறைவா! உன்னுடைய உண்மையான  காட்சியைக் காண  நாடும் என் பொருட்டு  அந்தப் பொன் ஒளியை அகற்றியருள்வீராக.

हिरण्मयेन पात्रेण सत्यस्यापिहितं मुखम् ।
तत्त्वं पूषन्नपावृणु सत्यधर्माय दृष्टये ॥ १५ ॥

hiraṇmayena pātreṇa satyasyāpihitaṃ mukham |
tattvaṃ pūṣannapāvṛṇu satyadharmāya dṛṣṭaye || 15 ||

***

16

ஸ தஸ்மின்னேவாகாசே ஸ்திரியமாஜகாம

பகுசோபமானாம்  உமாம் ஹைமவதீம் தாம்

ஹோவாச கிம் ஏதத் யக்ஷம் இதி

கேனோபநிஷத் 2-12   

அதே இடத்தில் (அந்த யக்ஷனுக்குப் பதிலாக ) அழகு நிறைந்த  பெண் தெய்வம் ஹைமவதியாகிய உமாதேவியை அவன் (இந்திரன்) கண்டான்; இந்த யக்ஷன் யார்? என்று அவன் அமபிகையிடம் வினவினான்.

स तस्मिन्नेवाकाशे स्त्रियमाजगाम बहुशोभमानामुमां हैमवतीं तां होवाच किमेतद्यक्षमिति ॥ १२ ॥

 sa tasminnevākāśe striyamājagāma bahuśobhamānāmumāṃ haimavatīṃ tāṃ hovāca kimetadyakṣamiti || 12 || Kena-upaniṣad mantra 3.12:

****

17

 நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர:

நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயண பர:

மஹா நாராயண உபநிஷத் 13-4

நாராயணன் பரப்பிரம்ம தத்துவமாகிறான்; முழுமுதல் பொருள் நாராயணன்; பரஞ்ஜோதியாயிருப்பவன் நாராயணன். பரமாத்மாயிருப்பவன் நாராயணனே.

ना॒राय॒णप॑रो ज्यो॒ति॒रा॒त्मा ना॑राय॒णः प॑रः ।

ना॒राय॒णपर॑-म्ब्र॒ह्म॒ तत्त्व-न्ना॑राय॒णः प॑रः ।

nā̠rāya̠ṇapa̍rō jyō̠ti̠rā̠tmā nā̍rāya̠ṇaḥ pa̍raḥ ।

nā̠rāya̠ṇapara̍-mbra̠hma̠ tattva-nnā̍rāya̠ṇaḥ pa̍raḥ ।

****

18

திவ்யோ ஹ்யமூர்த்த: புருஷ:  ஸ பாஹ்யாப்யந்தரோ  ஹ்யஜ:

அப்ராணோ  ஹ்யமனா: சுப்ரோ ஹ்யக்ஷராத்பரத: பர:    

முண்டகோபநிஷத் – Mundaka Upanishad (Chapter 2, Section 1, Verse 2

பரமாத்மா சுயமாக ஒளிவீசுவது; வடிவமற்றது; பிறவாதது; தூயது; உள்ளும் புறமும் எங்கும் பறந்தது. பிராணனுக்கும் மனதுக்கும் அப்பாற்பட்டது. பிரளய நிலையில் இருக்கும் பிரக்ருதிக்கும் அப்பாற்பட்டது.

दिव्यो ह्यमूर्तः पुरुषः स बाह्याभ्यन्तरो ह्यजः ।अप्राणो ह्यमनाः शुभ्रो ह्यक्षरात् परतः परः ॥ २॥ Mundaka Upanishad (Chapter 2, Section 1, Verse 2

divyo hyamūrtaḥ puruṣaḥ sa bāhyābhyantaro hyajaḥ |aprāṇo hyamanāḥ śubhro hyakṣarāt parataḥ paraḥ || 2 ||

****

19

அணோரணீயான் மஹதோ மஹீயாயானாத்மாஸ்ய

ஜன்தோர்நிஹிதோ  குஹாயாம்

தமக்ரது: பச்யதி வீதசோகோ தாது ப்ரஸாதான்

மஹிமாத்மன:

கடோபநிஷத் 2-2 

अणोरणीयान् महतो महीयान् आत्मास्य जन्तोर् निहितो गुहायाम् ।

तमक्रतुः पश्यति वीतशोको धातुप्रसादान्महिमानमात्मनः ॥

aṇoraṇīyān mahato mahīyān ātmāsya jantor nihito guhāyām |

tamakratuḥ paśyati vītaśoko dhātuprasādānmahimānamātmanaḥ ||

****

20

ச்ரவணாயாபி  பகுபிர்யோ ந லப்ய: ச்ருண்வந்தோபி

பஹவோ யம் ந வித்யு:

ஆச்சர்யோ வக்தா  குசலோ(அ)ஸ்ய லப்தாச்சார்யோ

ஞாதா குசலானுசிஷ்ட :  

 கடோபநிஷத் 1-2-7

இறைவனைப் பற்றிக் கேள்வி ப்படுவதற்கே பலருக்கு வாய்ப்பதில்லை; கேள்விப்படுபவர்க்குள்ளும் பலர் அவரை அறிந்துகொள்ள இயலாதவர்களாய் இருக்கின்றனர்;  அவரை உள்ளபடி சொல்பவன் வியக்கத்தக்கவன் ; அவரை அடையப்பெறுபவன் திறமை சாலி;  அப்பேற்பட்டவன் சொல்ல, அதை அறிந்துகொள்ளும் சிஷ்யன் வியப்புக்குரியவனே !

श्रवणायापि बहुभिर्यो न लभ्यः

शृण्वन्तोऽपि बहवो यं न विद्युः ।

आश्चर्यो वक्ता कुशलोऽस्य लब्धा

आश्चर्यो ज्ञाता कुशलानुशिष्टः ॥ ७॥kathopanishad

śravaṇāyāpi bahubhiryo na labhyaḥ

śṛṇvanto’pi bahavo yaṃ na vidyuḥ .

āścaryo vaktā kuśalo’sya labdhā

āścaryo jñātā kuśalānuśiṣṭaḥ  1-2-7kathopanishad

To be continued…………………

Tags- முக்கிய உபநிஷத மந்திரங்கள் ,Part 2

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-60; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,893)

 Written by London Swaminathan

Post No. 15,893

Date uploaded in London –20 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 60

ராமபிரான் அவதரித்த இடம் அயோத்தி.


விஷ்ணுவின் அவதாரமான இராமர், இந்த அயோத்தியை தலை நகராகக் கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்ததாக வால்மீகி எழுதிய இராமாயண இதிகாசம் கூறுகிறது.

பிரம்மா உலகைப் படைத்தபோது, விஷ்ணு வைகுண்டத்தில் ஒரு பகுதியை அவருக்குக்  கொடுத்தார். பிரம்மா அந்தப் பகுதியை உலகின் ஒரு பகுதியாக உருவாக்கித் தன் மகன் ஸ்வாயம்புவ மனுவுக்கு கொடுத்தார். அதுதான் அயோத்தி. ஸ்வாயம்புவ மனுவின் புதல்வர் இக்ஷ்வாகு. இவர் பெயரில் உருவான இக்ஷ்வாகு வம்சத்தில் தசரதரின் மகனாகப் பிறந்தவர் ராமர்.

முக்தி அளிக்கும் ஏழு தலங்களான அயோத்தி, காசி, மதுரா, மாயா (ஹரித்வார்), துவாரகை, காஞ்சி, அவந்தி (உஜ்ஜைனி) இவற்றில் அயோத்தியே முதன்மையானது.

லக்னோவிலிருந்து 135 கிலோமீட்டரில்சரயு நதியின் தென்கரையில் அமைந்திருக்கும் அற்புதத் தலம் அயோத்தி. அயோத்தியில் பல ராமர் கோயில்கள் இருக்கின்றன.

****

கோவில் மசூதியாகி மீண்டும் கோயிலான கதை !

ஸ்ரீராமர் கோயில் இருந்த இடத்தின் மீது மீர்பாக்கி என்னும் பாபரின் படைத்தலைவரால் 1528ல் பாபர் மசூதி ஒன்று கட்டப்பட்டது. கலவரம் நடந்த பிறகு, ஆங்கிலேயர்கள் கட்டைப் பஞ்சாயத்து செய்து, ஒரு பகுதியில் மசூதியையும், இன்னொரு பகுதியில் கோயிலையும் அனுமதித்தார்கள். 1949ல் ஸ்ரீராம மூர்த்திகளை அங்கே பிரதிஷ்டை செய்தார்கள். 1992ல் அங்கே இருந்த மசூதியை ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் , லால் கிருஷ்ண அத்வானி தலைமையில் இடித்து மீண்டும் அங்கே ராமரை பிரதிஷ்டை செய்தனர்.

அயோத்தி பற்றியும் ராம ஜென்ம பூமி பற்றியும் தமிழ்நாட்டு மக்களுக்கு  அத்வானி போன்ற தலைவர்கள் முன்னின்று நடத்திய ‘ரத யாத்திரை’தான் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

****

அனுமன்/ குரங்கு அதிசயம்

பாபர் மசூதிக்குள் இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்தரவை 1986ல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், 1991ல் தனது சுய சரிதையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பூட்டியிருந்த கோயிலின் கதவைப் பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்த அந்த நாளன்றுஎனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத்அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலைபழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும்போலிஸ் கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால்எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு அச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்துகொண்டு அதனை வணங்கினேன்.

இது மட்டும் அல்ல, உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீ பராசரன் ராமருக்காக காலில் செருப்பு இல்லாமல் 92 வயதிலும் நின்று கொண்டு வாதாடினார். வெற்றி கண்டார் 

புதிய ராமர் கோயில்

5 பிப்ரவரி 2020 அன்று அயோத்தி இராமர் கோயிலைக் கட்டும் திட்டத்தை நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இக்கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா 5 -8- 2020 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பங்குபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடைபெற்றது. 22 ஜனவரி 2024 அன்று பிராண பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) செய்து கோவில் திறக்கப்பட்டது

புதிய கோயிலின் அமைப்பு

இது வட இந்தியக் கோவில் கட்டிடக்கலையின் நகரா பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பகவான் விஷ்ணுவின் அவதாரமான இராமரின் குழந்தை வடிவமான ராம் லல்லா கோயிலின் மூலவர் ஆவார். கோயில் வளாகத்தின் நடுவில் குழந்தை இராமர் வீற்றிருக்கும் கருவறை மற்றும் அதை சுற்றி சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, அன்னபூரணி மற்றும் அனுமன் ஆகிய தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறிய சன்னதிகள்.

கோவிலின் பிரதான அமைப்பு ஒரு உயர்ந்த மேடையில் கட்டப்பட்டு மூன்று மாடிகளைக் கொண்டது  இதன் நடுவில் உள்ள கருவறையைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் உள்ளன. . கருவறைக்கு மேல் 161 அடி உயர கோபுரம் . கோயில் வளாகத்தின் நடுவில் குழந்தை இராமர் வீற்றிருக்கிறார் .

கருவறை கோயில் மற்றும் அதைச்  சுற்றி சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, அன்னபூரணி மற்றும் அனுமன் ஆகிய தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறிய சன்னதிகள் உள;  சிவனின் அவதாரங்கள், விஷ்ணுவின் தசாவதாரங்கள், 64 சௌசத் யோகினிகள் மற்றும் சரசுவதி தேவியின் 12 அவதாரங்கள் ஆகிய சிலைகள் இருக்க்கின்றன  . கோவில் 10 ஏக்கரில் கட்டப்பட்டு ஏறத்தாழ 7 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பிரார்த்தனை கூடம், விரிவுரை கூடம், கல்வி மற்றும் அருங்காட்சியகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை போன்ற பிற வசதிகளுடன் கூடிய வளாகமாக உருவாக் கப்பட்டுள்ளது

ஆண்டுதோறும் இராம நவமி அன்று இராமர் நெற்றி மீது

மூன்று நிமிடங்கள் சூரியக் கதிர்கள் பட்டு திலகம் போல் ஒளிரும் வகையில்  கோயில் கட்டப்பாட்டிருக்கிறது . திருப்பதி பாலாஜி கோவிலுக்கு குவிவது போல அயோத்தி கோவிலுக்கும் தங்க வெள்ளி நகைகள் குவிந்தவண்ணமுள்ளன.

****

QUIZ அயோத்தி ராமர் கோவில் பத்து QUIZ (Post No.12,918)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,918

Date uploaded in London – –   15 JANURARY 2024               

xxxx

Quiz Serial No.92

1.ராமர் பிறந்த ஊர் அயோத்தி; அது எந்த மாநிலத்தில் எந்த நதியின்   கரையின் மேல் இருக்கிறது?

XXXX

2.ராமர் கோவில் மீது முஸ்லீம் மன்னன் பாபர் கட்டிய மசூதி அகற்றப்பட்ட பின்னர், 500  ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது?

XXXX

3.அயோத்தி நகருக்குள்ள இன்னொரு பெயர் என்ன ?

XXXX

4.அயோத்தி ராமர் கோவிலில் உள்ள சிலையைச் செய்தவர் யார்?

XXXX

5.ராமர், கிருஷ்ணர், வியாசர், திரெளபதி ஆகியோரிடையே உள்ள ஒற்றுமை என்ன?

XXXX

6.ராம பிரான் பிறந்தது நவமி திதியில்; புதிய கோவிலில் நவமி நாட்களில் நடைபெறும் பொறியியல் அதிசயம் என்ன?

XXXX

7. ராமர் கோவில் கோபுரத்தின் உயரம் என்ன?

xxxxx

8.ராமர் கோவிலில் எத்தனை கதவுகள் ?

XXXX

9.ராமர் கோவில் மணி எவ்வளவு பெரியது?

xxxx

10.ராமர் கோவில் த்வஜ ஸ்தம்பம் எத்தனை அடி உயரம் உடையது ?

xxxx

BONUS QUESTIONS

11. ராம பிரானின் வைர நெக்லஸ் (கழுத்துக்கு மாலை) எவ்வளவு பெரியது?

xxxx

12.சீதா தேவி பிறந்த ஜனக்பூர் நேபாளத்தில் உள்ளது. அங்குள்ள கோவிலும் மக்களும் அனுப்பும் பரிசுகள் என்ன?

xxxx

13.உலகிலேயே பெரிய ஊது பத்தியை / வர்த்தியை யார் அயோத்திக்கு அனுப்புகின்றனர் ?

xxxx

14.ராமர் கோவில் விளக்குகளில் மிகப்பெரியது எது?

xxxx

விடைகள்

1.உத்தர பிரதேசத்தில் சரயூ நதிக்கரையில் அயோத்தி நகரம் இருக்கிறது .

XXXX

2.அயோத்தி நகர ராமர் கோவில் கும்பாபிஷேகம் -ஜனவரி 22, 2024.

XXXX

3.அயோத்தி நகருக்குள்ள இன்னொரு பெயர் சாகேதம்; முஸ்லீம்கள் சூட்டிய பெயர் பைசாபாத்.

XXXX

4.மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய சிலை தான் அயோத்தி ராமர் கோவிலில் நிறுவப்பட உள்ளது .இந்த சிலையின் உயரம்  51 அங்குலம்;இதன் எடை என்பது 1.5 டன் ;. ராமரின் தலையில் கிரீடம் இருக்கும்.

xxxx

5. ராமர், கிருஷ்ணர், வியாசர், திரெளபதி ஆகியோர் கருப்பு நிறத் தோல் உடைய கருப்பர்கள் ; வியாசர் தவிர மற்ற மூவரும் பேரழகு வாய்ந்தவர்கள்; ஆரிய- திராவிட வாதம் பேசிய அரை வேக்காடுகளுக்கு இவர்களுடைய நிறம் செமை அடி கொடுக்கிறது.

xxxx

6.நவமி நாட்களில் ராம பிரானின் முகத்தில் சூரிய ஒளி விழும் வண்ணம் லென்ஸ்கள் மூலம் வடிவமைத்துள்ளனர் .ராமர் ஸூரிய குல / ரவி குல திலகம் என்பதை இது காட்டும்..

.XXXX

7.கோபுர உயரம் 161 அடி. கோவிலின் நீள அகலம் 380 அடிக்கு 250 அடிகள் ஆகும் (250 feet wide, 380 feet long and 161 feet (49 m) high கோவிலின் பரப்பளவு  2.77 ஏக்கர் ; கோவில் வளாகத்தின் பரப்பளவு 71 ஏக்கர் .

XXXX

8.ராமர் கோவிலில் 46 கதவுகள் இருக்கின்றன. அவைகளை 100 கிலோ தங்கத்தைக் கொண்டு முலாம் பூசுகின்றனர் .ராமர் கருவறையில் 12 அடி உயரத்திலும் 8 அடி அகலத்திலும் தங்க முலாம் பூசப்பட்ட கதவுகள்

XXXXX

9.உத்தர பிரதேச மாநிலம் ஜலேசரில் மிக பிரமாண்டமான மணி  ஒன்றை எட்டு வகையிலான உலோகத்தால் செய்துள்ளனர்.அந்த மணியின் எடை 2100 கிலோ ! இந்த மணியை தயார் செய்ய இரண்டு ஆண்டுகள் ஆனது.

XXXX

10. இந்தக் கொடி மரத்தின் (த்வஜ ஸ்தம்பம்) உயரம் 44 அடி. அதன் எ டை 5500 கிலோ. பித்தளையால் ஆனது . குஜராத்திலுள்ள ஆமதாபாத் நிறுவனம் இதை உருவாக்கியது.

xxxxx

BONUS QUESTIONS

11.சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 5000 அமெரிக்க வைரங்கள் மற்றும் இரண்டு கிலோ வெள்ளியை கொண்டு ராமர் சிலைக்கு நெக்லஸை உருவாக்கியுள்ளார். 40 கைவினைஞர்கள் 35 நாட்களில் இதைச் செய்து முடித்தார்கள்.

xxxx

12.ஜனகபுரி மக்களும் சீதை கோவிலும் 2 லாரிகள் நிறைய 3000 பரிசுகளை அயோத்திக்கு அனுப்பினர் . அவை வெள்ளிப் பாத்திரங்கள் , உலர்ந்த பழங்கள் , துணி மணிகள் ஆகும். இலங்கையில் சீதையை ராவணன், அசோக வனத்தில் சிறை வைத்தான். அங்கிருந்து புனித பாறை ஒன்றை இலங்கை நாடு அனுப்பிவைத்துள்ளது .

xxxx xxxx

13.குஜராத் வடோதரா நகரிலுள்ள நிறுவனம் 108 அடி நீளமுள்ள  ஊது பத்தியை / வர்த்தியை அயோத்திக்கு அனுப்பியிருக்கிறது. இதன் குறுக்களவு மூன்றரை அடி; எடை 3610 கிலோ.  இது 50 கிலோமீட்டர் தொலைவுக்கு வாசனையைப் பரப்பும் .

 xxxx

14.வதோதராவை சேர்ந்த அரவிந்த் பாய் மங்கள் பாய் பட்டேல் என்ற விவசாயி 1100 கிலோ எடையுள்ள ராட்சத விளக்கை வடிவமைத்துள்ளார். பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட இந்த விளக்கு 9.25 அடி உயரமும் 8 அடி அங்குலமும் கொண்டது . இதை ராமர் கோவிலுக்கு அனுப்பியுள்ளார்.

****

அயோத்தி அதிசயங்கள்

1.ராம நவமி அன்று அயோத்தி ராமர் விக்ரகம் மீது சூரிய பகவான் (சூரிய கிரணங்கள்) பொட்டு / திலகம் வைத்ததாகும் . ஆ னால் இது நவீன கால, விஞ்ஞானிகள் உருவாக்கிய அதிசயம். தமிழ் நாட்டிலோ 1000 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்துக்கள் கட்டிய கோவிலில் சூரிய ஒளி, சந்நிதிக்குள் புகுந்து விக்கிரகத்தை அலங்கரிப்பதை, ஆராதிப்பதைக் காண்கிறோம்  அப்போது நவீன கால கருவிகளே இல்லாமல் இந்து சமய சிற்பிகள் அந்த அதிசயத்தைச் செய்துகாட்டினார்கள்.. இந்து கட்டிடக் கலையின் உன்னத நிலைக்கு அது ஒரு சான்று.

2.சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ராமாயண ஓவியங்களை வரைந்து புஸ்தகம் வெளியிட்டனர். அந்த 70 படங்களை நான் இரு முறை இந்த பிளாக்கில் வெளியிட்டேன். இதைவிட அதிசயமான தங்கம்- நீலக்கல் (GOLD- LAPIZ LAZULI) பதித்த அதிசய  ராமாயணத்தைக் காசி மன்னர்  200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கினார். அதன் மதிப்பு தெரியாத திருடர்கள், அந்த தங்க ராமாயணத்தை பக்கம் பக்கமாகப் பிரித்து ஏலம்  விட்டுவந்தனர். தகவலறிந்த நல்லஎண்ணம் படைத்தோர் கிடைத்த பக்கங்களை மீட்டு பெங்களூர் மியூசியத்தில் வைத்துள்ளனர் .

3.இதனிடையே ராம பக்தர்கள் இருவர் , வட இந்தியா முழுதும் வீடுதோறும் முழங்கும் துளஸிதாஸ் ராமாயணத்தை தங்கத் தகடுகளில் எழுதி ராமர் பாதங்களில் அர்ப்பணித்துவிட்டனர் .

இதோ விவரங்கள்:–

தங்கத் தகடுகளில் ராம சரித மனஸ் (துளசிதாஸ்  ராமாயணம்)

முன்னாள் ஐ. ஏ .எஸ் . அதிகாரி சுப்ரமணியன் லக்ஷ்மி நாராயணன் சிறந்த ராம பக்தர். அவரும் அவருடைய மனைவி ஸரஸ்வதியும் (an ex-IAS officer, Subramanian Lakshminarayanan and his wife Saraswathy) இந்த பொக்கிஷத்தை ராமர் காலில் சமர்ப்பித்தனர் .

இதன் மதிப்பு சுமார் ஐந்து கோடி ரூபாய் ; இந்தப் புஸ்தகத்தில் எடை 151 கிலோ.மொத்தமுள்ள 10,902 பாடல்களையும் தங்க எழுத்துக்களில் பொறித்துள்ளனர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் லக்ஷ்மி நாராயணன், தனது வாழ்நாளில் சேகரித்த பணம் அனைத்தையும் இதில் செலவிட்டுவிட்டார் ; வரலாற்றில் அலையாத இடமும் பெற்றுவிட்டார் ; அவரது மனைவி ஸரஸ்வதி இதற்கு உறுதுணையாக நின்றார்.

ராமசரித மனஸ் புஸ்தகத்தில் 480 முதல் 500 தங்கப் பக்கங்கள் இருக்கின்றன. இதைத் தயாரிப்பதில் 24 காரட் தங்கமும், தாமிரமும் பயன்படுத்தப் பட்டது. புஸ்தகம் செய்யும் பணியை  அந்தத் தம்பதியினர் சென்னையிலுள்ள உம்மிடி பங்காரு நகைக்கடைஇடம் ஒப்படைத்திருந்தனர் .

தமிழ் நாட்டில் கம்ப ராமாயணம் புகழ்பெற்ற மாதிரி, வட இந்தியா முழுதும் ராமா சரிதா மனாஸ் என்ற பெயரில் துளசிதாஸ் கோசுவாமி எழுதிய ராமாயணம் புகழ்பெற்றதாகும். இதை அவர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அவந்தி (பேச்சு வழக்கு வட்டார இந்தி) மொழியில் எழுதினார்

இதிலும் ஆறு காண்டங்கள் —  பால அயோத்தியா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, உத்தர காண்டங்கள் இருக்கின்றன. புஸ்தகத்தின்  மொத்த எடையில் 140 கிலோ தாமிரமும் சுமார் ஏழு கிலோ தங்கமும் அடக்கம்.எழுத்துக்கள் 24  காரட் தங்கத்தல் இருக்கும்.

XXXX

சூரிய திலகம்

ராம நவமி விழாவின் முக்கிய நிகழ்வாக,  அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள பால ராமரின் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. இந்த அபூர்வ நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு வியந்தனர்.

அசாமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, இராமர் சிலையின் நெற்றியில் சூரிய திலகம் விழும் நிகழ்வை தனது ‘டேப்’ TAB மூலம் கண்டு களித்தார். பால ராமரின் சிலையின் நெற்றியில் விழும் சூர்ய திலகம் நம் வாழ்வில் ஆற்றலைக் கொண்டு வரட்டும் எனப் பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராம நவமி கொண்டாட்டத்தின் சிகர நிகழ்வான சூரிய அபிஷேக மகோத்சவம் இன்று (17-4-2024) நடைபெற்றது. நண்பகல் 12.01 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. பால ராமரின் நெற்றியில் சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு சூரிய ஒளிக்கதிர் விழுந்து திலகமிட்டது. நெற்றித் திலகத்தின் அளவு 58 மி.மீ. அளவுக்கு இருந்தது. பக்தர்கள் தெளிவாக காணும் வகையில் நகரம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. அயோத்தி ராமர் கோவிலின் கருவறைக்குள் சூரிய ஒளி நேரடியாக நுழைய வழி இல்லை. இதனால், கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் அடங்கிய ஒரு விரிவான வடிவமைப்பு மூலம் பால ராமராமரின் நெற்றியில் சரியாக விழும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் வானியற்பியல் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து, ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த அமைப்பை உருவாக்கி உள்ளனர

ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்று பால ராமரின் சிலையின் நெற்றியில் சூரியனின் கதிர்களை துல்லியமாக விழச்செய்யும் வகையில் ஆப்டோமெக்கானிக்கல் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரியனின் திசையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்களில் சிறிய மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும்.

****

பழைய அயோத்தி

யோகி பார்த்தசாரதி யோகி சிங்காரம்மா தம்பதியால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அம்மாஜி மந்திர்  என்ற கோவில்தான் திவ்ய தேசக் கோவிலாகக் கருதப்படுகிறது. அம்மாஜி என்பது சிங்காரம்மாவைக் குறிப்பிடுகிறது.

அம்மாஜி  மந்திர்

ராமஸ்வாமி கோவில் என்று அழைக்கப்படும் இந்தக் கோவிலில் லக்ஷ்மணர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோருடன் ராமர் எழுந்தருளி இருக்கிறார்.

கர்ப்பகிருஹத்துக்கு இடப்புறமாக இன்னொரு சந்நிதியில் ரங்கநாதர், ஆழ்வார்கள் இருக்கிறார்கள்.

மூலவர்: ஸ்ரீ ராமர், சக்ரவர்த்தித்த திருமகன் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார்: சீதாப் பிராட்டி

விமானம்: புஷ்பகலா விமானம்

புஷ்கரணி: பரமபத புஷ்கரணி, சரயு, நாகேஸ்வர தீர்த்தம், வைதேஹ்ய தீர்த்தம், சூரிய தீர்த்தம், ரத தீர்த்தம்.

பிரத்யக்ஷம் (காட்சி பெற்றவர்கள்): பரதன், தேவர்கள், முனிவர்கள்

அயோத்தி ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

பெரியாழ்வார் – 6 பாசுரங்கள்

குலசேகராழ்வார் – 4 பாசுரங்கள்

தொண்டரடிப் பொடியாழ்வார் – 1 பாசுரம்

திருமங்கை ஆழ்வார் – 1 பாசுரம்

நம்மாழ்வார் – 1 பாசுரம்

மொத்தம் 13 பாசுரங்கள்

பாசுரங்கள் இதோ:

முதல் ஆயிரம்- -பெரியாழ்வார் திருமொழி

உந்தி பறத்தல்

6. முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்

அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த

படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று

அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற

அயோத்தியர் கோமானைப் பாடிப் பற (311)

7. காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்

நீள்முடி ஐந்திலும் நின்று நடம்செய்து

மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்

தோள்-வலி வீரமே பாடிப் பற

 தூ மணிவண்ணனைப் பாடிப் பற (312)

8. தார்க்கு இளந்தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம்

நூற்றவள் சொற்கொண்டு போகி நுடங்கு- இடைச்

சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவள்

ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற

அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற (313) 

10.  காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு

ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்

நேரா அவன்தம்பிக்கே நீள் அரசு ஈந்த

ஆராவமுதனைப் பாடிப் பற

 அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற (315)

***

அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்   

4. வார் அணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்

தேர் அணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய்

கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கைதன்னிற்

சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் (320)   

8. மைத் தகு மா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம்

ஒத்த புகழ் வானரக்கோன் உடன் இருந்து நினைத் தேட

அத்தகு சீர் அயோத்தியர்கோன் அடையாளம் இவை மொழிந்தான்

இத் தகையால் அடையாளம் ஈது அவன் கைம் மோதிரமே (324)

****

கண்டம் என்னும் திருப்பதி

9. வட திசை மதுரை சாளக்கிராமம்

      வைகுந்தம் துவரை அயோத்தி

இடம் உடை வதரி இடவகை உடைய

      எம் புருடோத்தமன் இருக்கை

தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்

      தலைப்பற்றிக் கரை மரம் சாடிக்

கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக்

      கண்டம் என்னும் கடிநகரே (398)

முதல் ஆயிரம் – குலசேகராழ்வார் -பெருமாள் திருமொழி

தாலாட்டு

6. சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே

அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே

கற்றவர்கள்தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே

சிற்றவைதன் சொற் கொண்ட சீராமா தாலேலோ (723)

7. ஆலின் இலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே

வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே

காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கருமணியே

ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்திமனே தாலேலோ (724)

***

தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம்

1.740 அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்

      அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி

வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி

      விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்

செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்

      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்

எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை

      என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (740)

8. அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி

      அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்

தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி

      உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்

செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்

      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்

எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்

      பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே (747)

****

முதல் ஆயிரம் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்

திருப்பள்ளி எழுச்சி

4. மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்

      வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்

ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்

      இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை

வாட்டிய வரிசிலை வானவர் ஏறே

      மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம்

ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே

      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே. (919)

இரண்டாம் ஆயிரம் -திருமங்கை ஆழ்வார்

பெரிய திருமொழி

குழமணிதூரம்

8. கவள யானை பாய் புரவி தேரொடு அரக்கர் எல்லாம்

துவள வென்ற வென்றியாளன்-தன் தமர் கொல்லாமே

தவள மாடம் நீடு அயோத்தி காவலன்-தன் சிறுவன்

குவளை வண்ணன் காண ஆடீர்-குழமணிதூரமே (1874)

****

நான்காம் ஆயிரம் -நம்மாழ்வார் -திருவாய் மொழி

ஏழாம் பத்து

எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்

1. கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ

புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே

நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்

நல் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே? (3488)

—Subham—

Tags-

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-60; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் , அயோத்தி, ராமர் கோவில்

நரியைப் பார்ப்பது எப்போதும் நல்ல சகுனம் தான்! (Post No.15,892)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,892

Date uploaded in London – 20 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சுபாஷிதச் செல்வம்

நரியைப் பார்ப்பது எப்போதும் நல்ல சகுனம் தான்!

ச. நாகராஜன்

வெற்றிகரமான வாழ்க்கை வாழ உதவுவது சுபாஷிதத்தில் சொல்லப்படும் அறிவுரைகளே. இதோ சில சுபாஷிதங்கள்:

நற்குணங்களை வெளியே சொல்லாதே!

க்ரோதம் குர்யான் ந சாகஸ்மான் ம்ருது: ஸ்யான் நாபராதிஷு |           அர்தான் ப்ரூயான் ந சாஸஸ்து குர்பான் ப்ரூயான் ந சாத்மன: ||

ஒருவன் தனது கோபத்தை வீணாகக் காட்டக் கூடாது அல்லது குற்றம் புரிவோரிடம் பணியவும் கூடாது. ரவுடிகளிடம் தனது வளத்திற்கான வசதிகளைத் தெரியப்படுத்தக் கூடாது. தனது நற்குணங்களைப் பற்றி பேசவும் கூடாது.

மஹாபாரதத்தில் வரும் ஸ்லோகம் இது.

சகுனம் பலஹீனமாவது எப்போது?

க்ரோஷாதந்தர்பலீ தஸ்மாத் ஊர்த்வம் மந்தபலஸ்தத: |

ந ஜாத: சர்வதா யஸ்ய சகுன: ஸ்யாத் ச முத்யதே ||

ஒரு க்ரோச தூரத்தில் (இரண்டு மைல்களுக்குள்) சகுனமானது மிகவும் சக்தி  வாய்ந்ததாக இருக்கும். அதற்குப் பின்னர் அதன் பலன் பலஹீனமாகி விடும்.

அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லையெனில் அந்த தீய சகுனமானது வழிப்போக்கனின் மரணத்தையே குறிக்கும்.

இது சாரங்கதாரா பத்ததியில் இடம் பெறும் ஒரு ஸ்லோகமாகும்.

நரியைப் பார்ப்பது எப்போதும் நல்ல சகுனம் தான்!

கதிர்வாமா ப்ரயாணே து ப்ரவேஷே தக்ஷிணா சுபா: |

தத்ரஸ்தோ ந விலம்பேத ஷஸ்த: சர்வத்ர ஜம்புக: ||

ஒரு பிரயாணத்தில் இடமாகப் போவது மங்கலமானது (வெற்றியைத் தரும்).

வீட்டிற்குள் நுழையும் போது வலமாகச் செல்வது நல்லது. இப்படிப்பட்ட நேரங்களில் ஒருவன் நிற்கக் கூடாது. நரியானது எல்லா இடத்திலும் பார்ப்பதற்கு நல்ல சகுனம் தான்!

இது சாரங்கதாரா பத்ததியில் இடம் பெறும் ஒரு ஸ்லோகமாகும்.

பக்த ஜனப்ரியன் யார்?

க்லேசக்ஷமஸ்ததா யஸ்ச விஜிதாத்மா ஜிதேந்த்ரிய: |

கூடமந்த் ரஸ்ச தக்ஷஸ்ச ப்ராக்ஞோ பக்தஜனப்ரிய: ||

தனக்கு வரும் துன்பங்களை எவன் ஒருவன் சகித்துக் கொள்கிறானோ, சுயக்கட்டுப்பாடுடன் தனது இந்திரியங்களை ஜெயிக்கிறானோ, ரகசியங்களை மிக கவனமாகப் பாதுகாத்து செயல்களில் திறமை கொண்டவனாக இருக்கிறானோ, அவனே புத்திசாலி. பக்த ஜனங்களுக்கு அவனே பிரியமானவன்.

விஷ்ணுதர்மோத்தரத்தில் வரும் ஸ்லோகம் இது.

விதியை புறம் தள்ளுவர் தைரியசாலிகள்!

க்லீபா ஹி தைவமேவைகம் ப்ரஷஸ்சந்தி ந பௌருஷன் |

தைவம் புருஷகாரேண க்னந்தி ஷூரா: சதோத்யமா: ||

கோழைகள் விதியையே புகழ்வார்கள்.  எடுத்த காரியத்தில் முயற்சி செய்யமாட்டார்கள். தைரியசாலிகளோ எப்போதுமே செயலில் ஈடுபடுபவர்களாக இருப்பதால் விதியை தங்களது ஆண்மைத் திறத்தால் புறம் தள்ளுவார்கள்.

அக்னிபுராணத்தில் வரும் ஸ்லோகம் இது.

மருத்துவ சிகிச்சையின் பலன்கள்!

க்வசித் தர்ம க்வசித்மைத்ரி க்வசிதர்த: க்வசித் யஷ: |

கர்மாண்யாஸ: கவசிச்சேதி சிகித்ஸா நாஸ்தி நிஷ்பலா ||

சில சமயம் தர்மம் செய்ய உதவுகிறது; சில சமயம் நல்ல பெயரை எடுக்க உதவுகிறது; சில சமயம் பணம் சம்பாதிக்க உதவுகிறது; சில சமயம் புகழை அடைய உதவுகிறது; சில சமயம் நல்ல அனுபவம் பெற உதவுகிறது. இப்படியாக மருத்துவ சிகிச்சையானது பலனில்லாமல் இருக்கவே இருக்காது.

வைத்யாகித சுபாஷிதாவளியில் வரும் ஸ்லோகம் இது.

**