WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,997
Date uploaded in London – 20 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் 68 – குபேரன் மற்றும் சங்கரர் ஹனுமாருக்கு வரம் அளித்தது!
ச. நாகராஜன்
உத்தரகாண்டத்தின் முப்பத்தாறாவது ஸர்க்கமாக அமைவது ‘ஹனுமார் வரம் பெற்றுக் கொள்வது’ என்னும் ஸர்க்கமாகும்.
ஶ்ரீ ராமர் அகத்திய முனிவரிடம் ஹனுமாரின் வரலாறைச் சொல்லுமாறு கேட்க அவர் ஹனுமாருக்கு இந்திரன்,சூரியன், வருணன், யமன் உள்ளிட்ட தேவர்கள் ஒவ்வொருவராக வரம் கொடுத்ததைக் கூறி வருகிறார். அதில் குபேரன் அளித்த வரமும் சங்கரர் அளித்த வரமும் அவரால் இப்படி குறிப்பிடப்படுகிறது:
வரம் ததாமி சந்துஷ்ட அவிஷாதம் ச சம்யுகே | கதேயம் மாமிகா சைனம் சம்யுகே ந வதிஷ்யாமி || இத்யேதம் வரத: ப்ராஹ ததா ஏகாக்ஷிபிங்கல: ||
(உத்தர காண்டம் 36ம் ஸர்க்கம் ஸ்லோக எண் 16)
ததா – அப்பொழுது ஏகாக்ஷிபிங்கல: – பிங்களவர்ணமான ஒரு கண்ணை உடைய வரத: – குபேரன் சந்துஷ்ட: – மனம் மகிழ்ந்தவராய் ஏவம் – இப்படி ப்ராஹ – சொல்லியருளினார்: மாமிகா – ‘என்னுடையதான இயம் – இந்த கதா ச – கதையும் ஏனம் – இவனை சம்யுகே – போரில் ந வதிஷ்யதி – கொல்ல முடியாததாக இருக்கும் ச – அன்றியும் சம்யுகே – போரில் அவிபாதம் ஹி – சோர்வு அடையாதிருத்தலையும் வரம் இதி – ஒரு வரமாய் ததாமி – நான் அளிக்கிறேன்’
மத்தோ மதாயுதானாம் ச ந வத்யோயம் பவிஷ்யதி | இத்யேவம் ஷங்கரேணாபி தத்தோஸ்ய பரமோ வர: ||
(உத்தர காண்டம் 36ம் ஸர்க்கம் ஸ்லோக எண் 17)
அஸ்ய – இவனுக்கு ஷங்கரேண – பரமசிவனால் மத்த: அபி – ‘என்னாலும் மதாயுதானாம் ச – எனது ஆயுதங்களாலும் அயம் – இவன் ந வத்ய: – கொல்ல முடியாதவனாக பவிஷ்யதி – இருக்கக் கடவது’ இதி – என்கிற ஏவம் – இப்படிப்பட்ட பரம: – உத்க்ருஷ்டமான வர: – வரமானது தத்த: – தந்தருளப்பட்டது
ஆக வரிசையாக தேவர்கள் இப்படி ஹனுமானுக்குப் பல்வேறு வரங்களை அருளினர்.
**