பாரதி பாட்டில் 16 நாடுகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,095)

Written by London Swaminathan

Post No. 16,095

Date uploaded in London – 16 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பாரதியார் உலக மஹா கவி என்பது அவன் பாடிய நாடுகளின் பட்டியலைப்  பார்த்தால் புரியும் :

இலங்கை, இந்தோனேஷியா , சீனா, ஜப்பான் , துருக்கி, ஈரான் (பாரசீகம்), பெல்ஜியம், ரஷ்யா, பிஜி,  இத்தாலி, எகிப்து, பிரிட்டன், கிரீஸ், புட்பகம், பிரான்ஸ், ஊணர் (HUNS 0R JEWS) தேசம்

***

FOR BHARATI POEMS IN TAMIL AND ENGLISH, PLEASE GO TO PROJECTMADURAI WEBSITE

1

பாரதி எகிப்து பற்றி என்ன பாடினான் ?

2

பாரதி இலங்கை பற்றி என்ன சொன்னான்? இந்தோனேஷியா பற்றி அவன் என்ன சொன்னான்?

3

பாரதி பசிபிக் கடல் தீவு பற்றிப் பாடினான் அது எந்தத் தீவு ?

4

பாரதியார் பாட்டில் ரஷ்ய நாடு வந்தது உண்டா ?

5

ரோமானியர் கிரேக்கர் பற்றி அவன் பாடியது என்ன ?

6

முஸ்லீம் நாடுகளை அவன் எங்கே குறிப்பிடுகிறான் ?

பாரசீகம் என்னும் ஈரான் நாட்டைப் பாரதியார் பாடினாரா ?

7

பெல்ஜியம் பற்றி அவன் பாடியது என்ன ?

8

எந்த நாட்டு இளவரசரை வரவேற்று புலவன் பாடினான்? அதில் எப்படி ஆங்கிலேயரைத் தாக்கினான் ? எந்த நாட்டு தேசீய கீதத்தை இசைத்துக்கொண்டே பாரதியார் புதுவையில் நடப்பார் ?

9

பாரதியாரின் கற்பனையூர்  கவிதை எந்த ஆங்கிலக் கவிஞனுடையது?

10

சீனர்களைப் பற்றி பாரதி என்ன என்ன சொன்னார் ? சீனா ஜப்பான் பற்றி எங்கே பாடினார்?

**************************************************

விடைகள்

1.சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு

‘மிசிரம்’ என்ற சொல் எகிப்து (Egypt) நாட்டைக் குறிக்கும்.

***

2.முன்னை இலங்கை அரக்கர் அழிய

முடித்தவில் யாருடை வில்? – எங்கள்

அன்னை பயங்கரி பாரத தேவி நல்

ஆரிய ராணியின் வில்.

(இன்னொரு பாட்டில் சிங்களம் வருகிறது)

மகாகவி பாரதியார் தனது ‘செந்தமிழ் நாடு’ (நாட்டின் பெருமை பேசும்) பாடலில் சாவகம் (ஜாவா தீவு) பற்றிக் குறிப்பிட்டுள்ளார்

:”சிங்களம் புட்பகம் சாவகம் ஆகியதீவு பலவினும் சென்றேறி – ஆங்குத்

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்றுசால்புறக் கண்டவர் தாய்நாடு!”

JAVA ISLAND IN INDONESIA–சாவகம் என்பது தற்காலத்தில் ஜாவா (இந்தோனேசியா) என அழைக்கப்படும் தீவு நாடாகும்.

NOBODY KNOWS WHERE PUSHPAKA IS !!

***

3.பிஜித் தீவில் (FIJI IN PACIFIC OCEAN) இந்தியர்கள் படும் கஷ்டங்களைப் பற்றி யாரோ ஒருவர் ஆங்கிலத்தில் பிரசங்கம் செய்திருந்தாராம். அதைப் பற்றி தமிழில் ஒரு கவிதை செய்யும்படி பாரதியாரைப் பத்திராதிபர்கள் கேட்டார்கள்.

4. கரும்புத் தோட்டத்திலே

ஹரிகாம்போதி ஜன்யம்

ராகம்- ஸைந்தவி

தாளம்- திஸ்ரசாப்பு

பல்லவி

கரும்புத் தோட்டத்திலே – ஆ!
கரும்புத் தோட்டத்திலே

சரணங்கள்

கரும்புத் தோட்டத்திலே – அவர்
      கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே! ஹிந்து
      மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்குகின்றனரே – அவர்
      துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்திதற் கிலையோ? – செக்கு
      மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக்

***

4.புதிய ருஷியா

(ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி)

மாகாளி பராசக்தி உருசியநாட்

      டினிற்கடைக்கண் வைத்தாள், அங்கே

ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி,

      கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்;

வாகான தோள்புடைத்தார் வானமரர்;

      பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர்

போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம்,

      வையகத்தீர், புதுமை காணீர்! 1

இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன்

      ஜாரெனும்பே ரிசைந்த பாவி

சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும்

      சான்றோரும்; தருமந் தன்னைத்

திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன்;

      பொய்சூது தீமை யெல்லாம்

அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந்

      தோங்கினவே அந்த நாட்டில்.

***

5. மாஜினியின் (OF ITALY) பிரதிக்கினை

பேரருட் கடவுள் திருவடி யாணை,
      பிறப்பளித் தெமையெலாம் புரக்கும்
தாரணி விளக்காம் என்னரு நாட்டின்
      தவப்பெய ரதன்மிசை யாணை.
பாரவெந் துயர்கள் தாய்த்திரு நாட்டின்
      பணிக்கெனப் பலவிதத் துழன்ற
வீரர், நம்நாடு வாழ்கென வீழ்ந்த
      விழுமியோர் திருப்பெய ராணை. 1

Italian nationalist, republican and leading intellectual champion of the movement for Italian unity – the Risorgimento or ‘resurgence’ – Giuseppe Mazzini was a popular figure

***

6.ஊணர் (HUNS 0R JEWS) தேசம் யவனர்தந் தேசம் (ROME& GREECE)

உதய ஞாயிற் றொளிபெறு நாடு (JAPAN);

சேண கன் றதோர் சிற்றடிச் சீனம் (CHINA)

செல்வப் பார சிகப்பழந் தேசம் (IRAN)

தோண லத்த துருக்கம் மிசிரம் (TURKEY AND EGYPT)

சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்

காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்

கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க. (வெள்ளைத்)

***

7.பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து

அறத்தினால் வீழ்ந்து விட்டாய்;
      அன்னியன் வலியனாகி
மறத்தினால் வந்து செய்த
      வன்மையைப் பொறுத்தல் செய்யாய்;
முறத்தினால் புலியைத் தாக்க்ம்
      மொய்வரைக் குறப்பெண் போலத்
திறத்தினான் எளியை யாகிச்
      செய்கையால் உயர்ந்து நின்றாய்! 1

****

8.மகா கவி சுப்பிரமணிய பாரதியார் இந்தியாவுக்கு வருகை தந்த பிரிட்டிஷ் வேல்ஸ் இளவரசரை வரவேற்று, “வேல்ஸ் இளவரசருக்குப் பரத கண்ட தாய் நல்வரவு கூறுதல்” என்ற தலைப்பில் 1906 ஜனவரி 29 அன்று [சுதேசமித்திரன்] இதழில் 46 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவைப் பாடியுள்ளார். அதில் முஸ்லீம் ஆட்சியையும் ஆங்கில ஆட்சியையும் அன்பிலா அந்நியர் ஆட்சி என்று தாக்கினான்.

வேல்ஸ் இலவரசருக்கு நல்வரவு

வருக செல்வ!வாழ்கமன் நீயே!

வடமேற் றிசைக்கண் மாபெருந் தொலையினோர்

பொற்சிறு தீவகப் புரவலன் பயந்த

நற்றவக் புதல்வ! நல்வர வுனதே!

மேதக நீயும்நின் காதலங் கிளியும்

என்றனைக் காணுமா றித்தனை காதம்

வந்தனிர்! வாழ்திர்! என் மனம்மகிழ்ந் ததுவே

செல்வகேள்! என்னரும் சேய்களை நின்னுடை

முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்

நெஞ்செலாம் புண்ணாய் நின்றனன் யாஅன்.

ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்

ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில. (700 YEAR MUSLIM RULE+300 YEAR BRITISH RULE)

**

Love for La Marseillaise: Historical accounts note that Bharathi memorized the French national anthem and would enthusiastically recite it while walking by the seaside in Puduvai (Pondicherry).

பாரதியாருக்கு மிகவும் பிடித்தது பிரான்ஸ் நாட்டின் தேசீய கீதம் La Marseillaise. .மார்சேய் (Marseille) நகரைச் சேர்ந்த  தொண்டர்கள் இப்பாடலை பாடிக்கொண்டே பாரிஸ் நகருக்குள் நுழைந்ததால், இது “ல மர்சியேஸ்” எனப் பெயர் பெற்றது.

***

9.ஜான் ஸ்கர் என்ற ஆங்கிலப் புலவன் நக்ஷத்ர தூதன் என்ற பத்திரிகையில் பிரசுரித்த  கவிதையின் மொழிபெயர்ப்பு

“The Town of Let’s Pretend” is a children’s poem written by John Scurr and published in January 1918 in the magazine The Herald of the Star. It is famous in Tamil literary history because the renowned Tamil poet Subramania Bharati translated it into Tamil as “Karppanaiyur” (The City of Imagination)

***

10.ஊணர் (HUNS) தேசம் யவனர்தந் தேசம் (ROME& GREECE)

உதய ஞாயிற் றொளிபெறு நாடு (JAPAN);

சேண கன் றதோர் சிற்றடிச் சீனம் (CHINA)

செல்வப் பார சிகப்பழந் தேசம் (IRAN)

தோண லத்த துருக்கம் மிசிரம் (TURKEY AND EGYPT)

சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்

காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்

கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க. (வெள்ளைத்)

The land of the Jews and Greeks,
The land of the rising sun,
Far off small-feet China,
And ancient rich Iran;
Turkey, and those other lands
Beyond the seas that part —
Bright shine the light all over
Of the goddess of learning and art!

XXX

Chinese philosopher Confucius (Kong Zi or Koshi or Kong Ja belongs to Sixth Century BCE, contemporary of Buddha and Mahavira.

Chinese philosopher Lao Tse (Lao Zi or Roshi or Noja ) also belongs to Sixth Century BCE, contemporary of Buddha and Mahavira.

பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!

புத்தமதம், சமணமதம், பார்ஸி மார்க்கம்

சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,

சநாதனமாம் ஹிந்துமதம், இஸ்லாம், யூதம்,

நாமமுயர் சீனத்துத் “தாவு” மார்க்கம்,

நல்ல “கண் பூசி” மதம் முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள்பல உளவாம் அன்றே

யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே.

XXX

ஈனப் பறையர்களேனும் -அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவரன்ருே? சீனத்தராய் விடுவாரோ? பிற தேசத்தார் போற்பல தீங்கிழைப்பாரோ? 

–SUBHAM—

TAGS- பாரதி பாட்டில் 16 நாடுகள், 10 கேள்விகள், பாரதியார் உலக மஹா கவி, இலங்கை, இந்தோனேஷியா , சீனா, ஜப்பான் , துருக்கி, ஈரான் (பாரசீகம்), பெல்ஜியம், ரஷ்யா, பிஜி,  இத்தாலி, எகிப்து, பிரிட்டன், கிரீஸ், புட்பகம், பிரான்ஸ், ஊணர் (HUNS 0R JEWS) தேசம்

Leave a comment

Leave a comment