Written by London Swaminathan
Post No. 16,124
Date uploaded in London – 24 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
English version posted already
தைத்திரீய சம்ஹிதா— தைத்திரீய உபநிஷத்
தைத்திரீய சம்ஹிதா என்னும் வேதம் கிருஷ்ண யஜுர்வேத.த்தின் ஒரு பிரிவு. அதில் ஏழு பகுதிகளில் யாக யக்ஞங்கள் குறித்த மந்திரங்களைக் காணலாம். தைத்திரீய உபநிஷத், கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சேர்ந்த உபநிஷத் ஆகும், ஆத்மாவின் இயல்பு மற்றும் பிரம்மன் என்னும் இறைவனை உணர்வது, அடைவது எப்படி என்று விளக்குகிறது. இதற்கு ஆதி சங்கரர் பாஷ்யம்/ விரிவுரை வழங்கியுள்ளார். பஞ்ச கோஷங்கள் என்னும் உடலை மூடியுள்ள திரைகளை விளக்கும் உபநிஷத் இது . “சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா” (பிரம்மன் என்பதே சத்தியமானது, அறிவு , எல்லையில்லாதது ) என்ற இதன் வாசகம் மிகவும் பிரபலமானது . சத்ய சாய் பாபா பஜனைகளில் இது மிகவும் விரும்பிக் கேட்கும் பஜனை. அவரே பாடியுள்ளார் . இந்த உபநிஷதத்தை மூன்றாக பிரித்து வழங்கியுள்ளார்கள் ரிஷி முனிவர்கள்; அவையாவன —
• சிக்ஷா வல்லி: உச்சரிப்பு, உச்சரிப்புவியல் மற்றும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா உரை அடங்கிய பகுதி.
• ப்ரஹ்மானந்த வல்லி: பிரம்மனின் இயல்பு, பஞ்ச கோஷங்கள் எனப்படும் உடலை மூடியுள்ள ஐந்து திரைகளின் விளக்கம்.
• பிருகு வல்லி: பிருகு’என்ற ரிஷி முனிவர் தியானத்தாலும் ஆத்ம விசாரத்தாலும் எவ்வாறு பிரம்மனை அறிந்தார் என்பதை விளக்கும் பகுதி இது பிருகு’என்ற ரிஷி முனிவர் தியாகத்தாலும் ஆத்ம விசாரத்தாலும் இவ்வரசு பிரம்மனை அறைந்தார் என்பதை விளக்கும் பகுதி இது
***
தாள துவஜம் – கிருஷ்ண பரமாத்மாவின் அண்ணன் ஆன பலராமனின் கொடி. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இது புறநானூற்றில் உள்ளது; தமிழர்கள் அதி தீவிர இந்துக்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
தாடங்கம், தோடு முதலிய சொற்கள் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பிறந்தவை ; காஞ்சி சுவாமிகள் (1894-1994) அழகாக விளக்கியுள்ளார்
***.
தக்ஷக
நாகர் என்னும் பழங்குடி மக்களின் தலைவன் தக்ஷகன்.. காடு திருத்தி நாடாக்குவது அரசர்களின் கடமை ; கரிகால் சோழனும் இதைச் செய்தான்; இதற்கு முன்னுதாரணமாக கிருஷ்ணனும் அர்ஜுனனும் அறிவிப்பு வெளியிட்டுவிட்டு, காண்டவ வனத்தை தகனம் செய்தார்கள் ; அப்போது தஷகன் வெளியே இருந்ததால் உயிர் பிழைத்தான் . யாதவர்களுக்கும் நாகர்களுக்கும் நீண்ட கால பகைமை இருக்கையில் இது ஒரு முக்கிய சம்பவமாக அமைந்தது ; இதற்குமுன்னர் சமீக மஹரிஷியின் மீது பரீக்ஷித் என்னும் மன்னன் ஒரு பாம்பினை விளையாட்டாகத் தூக்கி எறிந்தான் ; அவனுடைய மகன் ஸ்ருங்கி , அப்பாவை அவமதித்தவனை ஏழே நாட்களில் கொல்வேன் என்று சபதம் எடுத்தான் . உடனே அரண்மனையில் செக்யூரிட்டியை அதிகப்படுத்தினார்கள் ஆனால் ஸ்ருங்கி, அரண்மனைக்குள் நாள் தோறும் செல்லும் பழக்கூடையில் ஒளிந்து கொண்டுசென்று பரீட்சித் மன்னனை வெட்டிச் சாய்த்தான். அந்த மன்னின் மகன் ஜனமேஜயன் ஆவான் ; அவன் சர்ப்ப யாகம் என்ற பெயரில் நாகா இன மக்களை வெட்டி வீழ்த்தினான் ; அப்போது ஜரத்காரு, ஆஸ்தீகர் என்ற இரண்டு ரிஷிகள் தலையிட்டு நாகா- யாதவ சமாதான உடன்படிக்கையை ஒப்புக்கொள்ள வைத்தனர் . பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த வரலாற்றுச் சம்பவத்தையும், உடன்படிக்கையையும் பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் நர்மதாயை நமஹ என்னும் மந்திரத்தில் சொல்லி வருகின்றனர் . அதே காலத்தில் மயன் என்ற நாகன் மட்டும் கிருஷ்ணனுடன் நண்பனாக இருந்தான் ; அவன் காணடவ வன எரியூட்டலுக்குப் பின்னர், தனது குழுவை அழைத்துக்கொண்டு பாதாள லோகததுக்குச் சென்றான் ; பாதாள லோகம் என்பது அமெரிக்கா ஆகும்; தென் அமெரிக்காவில் இவர்கள் குடியேறி மாயா நாகரீகத்தைத் தோற்றுவித்தனர் . பழக்க கூடைக்குள் ஒளிந்து கொண்டு தப்பிக்கும் தந்திரத்தைப் பிற் காலத்தில் வீர சிவாஜியும் பின்பற்றி ஒளரங்கசீப் என்ற வெறியனின் கண்ணில் மண்ணைத் தூவினான்.
***
தமஸ், தமோ குணம்
தமஸ் என்றால் இருள், அறியாமை .
மனிதனின் மன நிலையை இந்துக்கள் மூன்றாகப் பிரித்தார்கள் ; சத்வ குணம், ராஜஸ குணம், தமோ குணம் என்று ; மன அமைதியுடன் சாந்தமாக நல்லதையே மட்டும் நினைக்கும் பாசிட்டிவ் குணம் உயர்ந்த சத்வ குணம் ஆகும்; செயல் வேகம் நிறைந்த , ஆனால் நல்லதையும் கெட்டதையும் செய்யும் மன நிலை ராஜஸ குணம் ஆகும் . ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களளை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம் ; சுடு என்றால் சுடுவார்கள் ; நல்லது- கெட்டது பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை ; வெறித்தனமாக வேலை செய்து இன்பத்தை மட்டும் அனுபவிக்க காலத்தை விரயம் செய்வோரும் இவ்வகையே; மூன்றாவது வகை தமோ குணம்– மஹா சோம்பேறிகள் ; தூங்கித் தூங்கி காலத்தை நாசம் செய்யும் வகை; குடி, கூத்து, மாயை, மயக்கம் , வெட்டிப்பொழுது, எந்தக் காரியத்தையும் ஒத்திப்போடுவது என்பது இவர்களின் கொள்கை ; இந்த மூன்று குணங்களையும் பகவத் கீதையின் 14 ஆவது அத்தியாயத்தில் கிருஷ்ண பரமாத்மா விளக்குகிறார் .
***
தாம்ரபரணி
பொதிகை மலையில் உற்பத்தியாகி , திருநெல்வேலி வட்டாரத்தில் ஒடி, மன்னார் வளைகுடாவில் கலக்கும் ஜீவ நதி; அதாவது ஆண்டு முழுதும் தண்ணீர் ஓடும் ஆறு; பொருநை நதி என்ற பெயரில் இலக்கியங்களில் இந்த ஆற்றினைக் காணலாம். இதன் நீளம்
128 கிலோமீட்டர், (80 மைல்கள் ) மணிமுத்தாறு, சித்ரா நதி முதலிய ஏழு உபநதிகள் இந்த ஆற்றில் நீரைக் கொட்டுகின்றன ; ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி முதலிய புகழோங்கிய வைணவ தலங்கள் இதன் கரையில் அமைந்துள்ளன ; நவ திருப்பதி என்னும் நவக்கிரக தலங்கள், நவ கைலாசம் என்னும் சிவன் கோவில்கள் ஆகியனவும் இந்த நதி பாயும் வட்டாரத்தில் அமைந்துள்ளன. காவிரி, வைகை போனற நதிகளின் குறுக்கேயும் அவற்றுக்கு நீராய்க் கொண்டுவரும் உபநதிகளின் குறுக்கேயும் அணைகளைக் கட்டுவதற்கு முன்னர் எல்லா தமிழ் நாட்டு நதிகளும் ஜீவ நதிகளாகவே இருந்ததை இலக்கியங்களில் காண முடிகிறது .
***
தாண்டவம்
சிவ பெருமானின் கட்டளைகளுக்கு இணங்க தண்டு என்ற முனிவர் உருவாக்கிய நாட்டிய வகை இது என்று பரத முனிவர் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய நாட்டிய சாஸ்திர புஸ்த்தகத்தில் 14 ஆவது அத்யாயத்தில் உள்ளது.
ஒரு பிரம்மாவின் ஆயுள் முடிந்தவுடன் சிவ பெருமான் ஆடும் தாண்டவத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும்; பின்னர் புதிய பிரம்மாவுடன் க்ரியேஷன் என்னும் படைப்புத் தொழில் ஆரமபாகும்; இவ்வகை நடனம், ஆண்கள் மட்டுமே ஆடக்கூடியது பூமி, தண்ணீர், அக்கினி, வாயு, ஆகாசம் என்பன மீண்டும் உருவாகும் இந்த வரிசைக்கிரமம் புறநானூறு பாடல்களிலும் தேவாரத்திலும் அப்படியே உள்ளன .
சிவ தாண்டவ ஸ்தோத்திரம் , சம்ஸ்க்ருத மொழியில் உள்ள ஒரு அருமையான துதி; தாள நயம் மிக்கது ; இது தாண்டவ நடனத்தை மனக் கண்ணுக்கு முன்னே கொண்டுவரும்; சிவ பெருமான் வசிக்கும் கயிலாய மலையை ராவணன் ,அகந்தையால் அசைக்க முயன்றவுடன் சிவன் ஒரு அமுக்கு, அமுக்கினார் ; ராவணன் கதறி, சிவ பெருமானைப் போற்றி, இதைப் பாடியவுடன் சிவன் மனம் மகிழ்ந்து, அகம் குளிர்ந்து, ராவணன் மீது கருணை மழை பொழிந்து, ஒரு வரமும் கொடுத்து, இலங்கைக்கு அனுப்பினார் . ராவணன் நலல சிவ பக்தன்; ஆனால் அஹம்காரத்தின் மொத்த உரு ; ஆகையால் சிவன் பாடம் கற்பித்தார்.
***
தாரக அசுரன்
தேவர்களை எதிர்த்துப் போரிட்ட தைத்ய குல தலைவன்; இவனை ஒழிக்க முருகப்பெருமான் அவதரித்தார்; அவன் இறந்த பின்னர் அவனுடைய மூன்று புதல்வர்களான தாரகாக்ஷ , கமலாக்ஷ, வித்யுன்மாலி ஆகியோர் பழிவாங்கத் துடித்தனர்; விண்வெளியில் ஸ்பேஸ் ஸ்டேஷன்களும் அமைத்து தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் ; தேவர்கள் சிவனை வேண்டவே, அவர் இவர்களை பார்த்து சிரித்தார்; முன்று விண்வெளி ஸ்பேஸ் ஸ்டேஷன்களும் பூமியில் சாம்பலாய் விழுந்தன . சிவனின் நெற்றிக் கண் என்பது லேசர் ஆயுதம் . இந்த சம்பவத்தைத் தேவாரப்பாடல்களிலும் திருப்புகழ் பாடல்களிலும் படிக்கலாம்.
***
தாரா
(கற்பழிக்கப்பட்ட கதை)
Planet Jupiter and its four large moons.
தாரா என்பது மூவரைக் குறிக்கும் ; வாலியின் மனைவி; திபெத்திய புத்த மத தேவதை; பிருஹஸ்பதி என்றும் வியாழன் என்றும், குரு பகவான் என்றும் இந்துக்கள் போற்றும் ஜூப்பிட்டர் என்னும் கிரகத்தின் மனைவி பெயரும் தாரா தான் . கோடி கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த காஸ்மாலாஜிக்கல் விஷயத்தை– அதாவது சூரிய மணடலம் என்னும் சோலார் சிஸ்டம் உருவான கதையின் ஒரு பகுதி இது .
பிருஹஸ்பதியின் (குரு JUPITER அல்லது வியாழன் கிரஹம்) அழகான மனைவி தாரா ; அவளைச் சந்திரன் (நிலவு MOON அல்லது மூன்) கடத்தி சென்றான் ; உடனே வியாழன் போய், பிரம்மாவிடம் ஒரு COMPLAINT கம்பளைண்ட் / புகார் மனு கொடுத்தார் ; அவர் சமாதானம் செய்தவுடன் சந்திரன் , தாராவை விடுவித்தான் ; என்ன அநியாயம்? வீட்டுக்கு வந்த அந்த தாரா கர்ப்பவதி! பிள்ளைத் தாய்ச்சி !
“அடி போடீ , வெளியே” என்று பிருஹஸ்பதி / வியாழன் வெளியே விராட்டிவிட்டான் ; அவளுக்கு மிக அழகான குழந்தை பிறந்தது ; அதற்குப் புதன் என்று பெயரிட்டாள் ; அதன் அழகைக் கண்டு இருவரும் இது என் பிள்ளை ; எனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்கள் . இப்படி ஒரு புராணக்கதை .
இது உண்மையில் பல கோடி , பல பில்லியன், ஆண்டுகளுக்கு முன்னர் சோலார் சிஸ்டத்தில் — SOLAR SYSTEM சூரிய மணடலத்தில் நடந்த செயல் ! புதன் கிரஹம் MERCURY எப்படி உருவானது சந்திரன் எப்படி தோன்றியது என்பதை விளக்குகிறது .
அதாவது ஒரு குட்டி கிரஹம் அல்லது பெரிய வால் நட்சத்திரம் (COMET or ASTEROID) இன்னுமொரு கிரகத்தை அணுகும்போது மாற்றங்கள் நிகழும். இப்போது சூரிய மண்டலத்தில் புதன் முதல் புளூட்டோ வரை சுற்றும் கிரஹங்கள் ஆரம்பத்திலேயே இப்படி வரவில்லை.
குரு கிரஹத்துக்கு அருகில் இன்னுமொரு பெரிய கிரஹம் இருந்தது ; அதாவது தாரா என்னும் அழகி ! இப்போது பூமியைச் சுற்றிவரும் சந்திரன் அப்போது அந்த கிரகத்துடன் மோதியது (அதாவது தாராவை சந்திரன் கற்பழித்தான்) ; இந்த மோதலின் விளைவாக வேறு ஒரு குட்டி (புதன்) பிறந்தது . அந்தக் குட்டிப் பிள்ளை சூரியனுக்கு அருகில் இப்போது சுற்றி வருகிறது ! சந்திரனோ பூமிக்கு அருகில் வந்துவிட்டது . இதைக் கற்பழிப்புக் கதையாக– புதிய பிள்ளை பிறந்ததாகப் –புராணங்கள் எழுதின; அந்தக்காலத்தில் இதன் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும்.
சூரியனைச் சுற்றி நிறைய குட்டி கிரகங்கள் ASTEROIDS சுற்றி வருகின்றன ; இவை தவிர ஜூப்பிட்டர் என்னும் (வியாழன், குரு, பிருஹஸ்பதி ) மிகப்பெரிய கிரஹத்தைச் சுற்றி சந்திரன் போன்ற மிகப்பெரிய துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன . இந்த சந்திரன்களின் எண்ணிக்கை 115 .
To be continued……………….
Tags- தாரா ,
இந்து மத கலைச்சொல் அகராதி-103 HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 103, தைத்திரீய உபநிஷத்