மறக்கப்பட்ட மாபெரும் இந்தியப் போர்வீரன்! (Post.16,123)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,123

Date uploaded in London – 24 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மறக்கப்பட்ட மாபெரும் இந்தியப் போர்வீரன்! 

ச. நாகராஜன்

1965ம் ஆண்டு.

பாகிஸ்தானிய அதிபர் அயூப்கான் அவசரம் அவசரமாக சீனாவுக்குச் சென்றார். சீனா ஒரு புதிய போர்முனையை இந்தியாவுடன் உருவாக்க வேண்டும் என்ற வேண்டுகோளை சீனாவிடம் வைத்தார். இதனால் இந்தியா தோற்கடிக்கப்படும் என்றார் அவர்.

சீனா உடனே இந்தியாவிடம் அது தனது புதிய இரண்டு எல்லை நிலையங்களைக் காலி செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியது. எல்லையோரத்தில் இருந்த ஜெலப் லா மற்றும் நாது லாவில் உள்ள இந்திய வீரர்களை அங்கிருந்து வாபஸ் வாங்க வேண்டும் என்று அது வற்புறுத்தியது.

 சூடுபட்ட பூனை போல காங்கிரஸ் அரசு அதற்கு ஒப்புக் கொண்டு அந்த இரண்டு எல்லையோர காவல்நிலையங்களிலிருந்து உடனடியாக ராணுவ வீரர்கள் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.

 அந்தக் காலத்தில் தான் 1966ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் தேதியன்று

இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த லால்பகாதூர் சாஸ்திரி மர்மமான முறையில் தாஷ்கண்டில் மரணமடைந்திருந்தார்.

 எல்லையோரத்தில் இருந்த ஒரு காவல்நிலையம் அரசின் ஆணைப்படி காலி செய்யப்பட்டது.

உடனடியாக  ஒருதுளி ரத்தமும் சிந்தாமல் அதை சீனா எடுத்துக் கொண்டது.

நாது லாவில் இருந்த காவல்நிலையத்தை காலி செய்யுமாறு தலைமையக தலைமையாளரான மேஜர் ஜெனரல் பெவூர் தனது வீரர்களிடம் அறிவுறுத்தினார். ஆனால் ராணுவத்தில் மேஜர் ஜெனரல் சகத் சிங் அப்படிச் செய்யவேண்டாமென்று ஆணை பிறப்பித்தார். அது இரு நாடுகளுக்கும் பொதுவாக அமைந்த எல்லை நிலையம் என்பது அவர் கருத்து.

 அடுத்ததாக 65 இந்திய ராணுவ வீரர்கள் இறக்க நேர்ந்தது.

 நமது வீரர்கள் திறந்தவெளியில் பாதுகாப்பற்ற நிலையில் நிற்கும் போது சீன வீரர்களோ பாதுகாப்புடன் அங்கு நிலை கொண்டிருந்தனர்.

பாரதத்தின் தலைமை ராணுவ அதிகாரி கூட அங்கு துப்பாக்கி சூடு நிகழ்த்த அந்த நிலையிலும் அனுமதியை வழங்கவில்லை.

நமது வீரர்களின் உயிரைப் பாதுகாக்க இந்த ஆணையை இந்தியாவின் பிரதம மந்திரி ஒருவர் மட்டுமே பிறப்பிக்கமுடியும்.

ஒவ்வொரு நாளும் இந்திய வீரர்கள் இறந்து கொண்டே இருந்தனர். பிரதம மந்திரியோ எதிர்த்து சுடலாம் என்ற ஆணையைப் பிறப்பிக்கவில்லை.

பார்த்தார் மேஜர் ஜெனரல் சகத் சிங். “எதிர்த்துச் சுடுங்கள்” என்று அவர் ஆணையைப் பிறப்பித்தார் உடனே நமது வீரர்கள் சுட ஆரம்பித்தனர். சுமார் 300 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்காக சகத் சிங் தண்டனையை எதிர்நோக்க வேண்டியதாயிற்று. அவர் அந்த நிலையத்திலிருந்து மாற்றப்பட்டார்.

இந்த விதமாக நாது லா எல்லை நிலையம் காப்பாற்றப்பட்டது.

1967 செப்டம்பரில் சீன மக்கள் விடுதலை படைக்கும் நமது படைக்கும் இடையே நிகழ்ந்த போரில் நமது நிலையங்களான நாது லா மற்றும் சோ லா ஆகியவற்றை இந்தியப் படை பாதுகாத்து தங்கள் வசமே வைத்துக் கொண்டது.

 ஆனால் போற்றி புகழப்பட வேண்டிய மேஜர் ஜெனரல் சகத் சிங் பற்றி யாருக்குமே தெரியாது. மறக்கப்பட்ட மாவீரரான சகத் சிங்கைப் பற்றி

ஷயாரி வீடியோ இப்போது லக்கி கங்காதரராவ் ‘சகத் சிங் கி சோனியா கதா’ என்ற வெளியீட்டைச் செய்தபின்னரே அனைவரும் சகத் சிங் பற்றி அறிந்தனர்.

(Lucky Gangadharrao’s ‘Sagat Singh ki Sonia Gatha aired by Shayari Video)

Source : Kolkata English weekly Truth Volume 94 Issue no 17 Dated 7-8-2026

Thanks to Truth.

**

Leave a comment

Leave a comment