
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,157
Date uploaded in London – 3 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் 72 – சிவபிரான் அரக்கன் மதுவிற்கு வரம் அளித்தது!
ச. நாகராஜன்
உத்தரகாண்டத்தின் அறுபத்தோராவது ஸர்க்கமாக அமைவது ‘லவணாஸுரனுடைய உபத்திரவத்தைத் தெரிவித்தல்’ என்னும் ஸர்க்கமாகும். ஒரு நாள் ஶ்ரீராமரைப் பார்க்க பல முனிவர்கள் பார்க்கவருடன் வந்திருந்தனர்.
பார்க்கவரை வரவேற்ற ஶ்ரீ ராமரிடம் அவர் லவணாஸுரனைப் பற்றியும் அவன் கொடுக்கும் தொல்லையையும் எடுத்துக் கூறி தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டினார்.
அதைப் பற்றிய வரலாறை இந்த ஸர்க்கம் தெரிவிக்கிறது.
ஸ மதுவீர்யஸம்பன்னோ தர்மே ச சுசமாஹித: | பஹுமானஸ்ய ருத்ரேண தத்தஸ்தஸ்யாத்புதோ வர: ||
உத்தரகாண்டம், அறுபத்தோராவது ஸர்க்கம் ஸ்லோக எண் 5
ஸ: – அந்த மது: – மதுவானவன் வீர்யஸம்பன்ன: – வீரிய சம்பன்னன் ச- அன்றியும் தர்மே- தருமத்தில் சுசமாஹித: – ஊக்கம் கொண்டவன் தஸ்ய – அவனுக்கு ருத்ரேண ச- ருத்திரதேவராலேயே பஹுமானாத் – அபிமானத்தால் அத்புத: – அற்புதமான வர: – வரம் ஒன்று தத்த: – தந்தருளப்பட்டது
சூலம் சூலாத்வினிக்ருஷ்ய மஹாவீர்யே மஹாப்ரபம் | ததௌ மஹாத்மா சுமீதோ வாக்யம் சைதத்துவாச||
உத்தரகாண்டம், அறுபத்தோராவது ஸர்க்கம் ஸ்லோக எண் 6
மஹாத்மா – மஹாத்மாவாகிய இவர் சுமீத: – உபகாரகுணமுடையவராகி சூலாத் – சிவபெருமானுடைய சூலத்திலிருந்து மஹாவீர்யே – சிறந்த வீரியம் உடையதும் மஹாப்ரபம் – சிறந்த ஜோதியை உடையதுமான சூலம் – சூலம் ஒன்றை வினிக்ருஷ்ய – பிரித்தெடுத்து ததௌ – சன்மானமாய்த் தந்தனர். ச- அன்றியும் ஏதத்- இந்த வாக்யம் – வாக்கியத்தையும் உவாச – திருவாய் மலர்ந்தருளினார் ஹ – காண்!
த்வாயயமதுலோ தர்மோ மத்ப்ரசாதாத்க்ருத: சுப: | ப்ரீத்யா பரமயா யுக்தோ ததாம்யாயுதமுத்தமம் ||
உத்தரகாண்டம், அறுபத்தோராவது ஸர்க்கம் ஸ்லோக எண் 7
த்வயா – உன்னால் அயம் – இந்த தர்ம: – தர்மமானது அதுல: -அத்வீதியமாய் அனுஷ்டிக்கப்பட்டது மத்ப்ரசாதாத் – என் அனுக்கிரகத்தால் சுப: – பாக்கியம் பெற்றதாய் க்ருத: – ஏற்பட்டு விட்டது பரமயா – அத்தியந்த ப்ரீத்யா – அபிமானத்தால் யுக்த: – அனுக்ரகம் செய்ய வேண்டியவனாகி உத்தமம் – உத்தமமான ஆயுதம் – ஆயுதத்தை ததாமி – சன்மானமாய் அளிக்கிறேன்
யாவத்சுரைஸ்ச விப்ரேஸ்ச ந விருத்யேர்மஹாசுர: | தாவஸ்சூலம் தவேதம் ஸ்யாதன்யதா நாஷமேஷ்யதி |
உத்தரகாண்டம், அறுபத்தோராவது ஸர்க்கம் ஸ்லோக எண் 8
மஹாசுர: – ஹே, மஹா அசுரனே! சுரை: ச – தேவர்களுடனும் விப்ரை: ச – பிராம்மணர்களுடனும் யாவத் – எவ்வளவு காலம் ந விருத்யே – விரோதம் ஏற்படவில்லையோ தாவத் – அதுவரை இதம் – இந்த சூலம் – சூலம் தவ – உன்னுடையதாக ஸ்யாத் – விளங்கும் அன்யதா – அப்படி இல்லாத பட்சத்தில் நாஷம் – கண்ணுக்குப் புலப்படாததாய் ஏஷ்யதி – மறைந்து விடும்
யஸ்ச த்வாமபியுஜ்வீத யுத்தாய விகத்ஜ்வர: | தம் சூலோ பஸ்மசாத்க்ருத்வா புனரேஷ்யதி தே கரம் ||
உத்தரகாண்டம், அறுபத்தோராவது ஸர்க்கம் ஸ்லோக எண் 9
ய: ச – “எவரேனும் யுத்தாய – யுத்தத்தில் விகதஜ்வர: – பயமின்றி த்வாம் – உன்னை அபியுஜ்வீத – விழுந்து தாக்கினால் தம் – அவனை சூல: – சூலமானது பஸ்மாசாத்க்ருத்வா – சாம்பலாக்கி தே – உனது கரம் – கையில் புன: – மறுபடியும் ஏஷ்யதி – வந்து சேரும்”
ஏவம் ருத்ராத்வரம் லப்த்வா பூய ஏவ மஹாசுர: | ப்ரணிபத்ய மஹாதேவ்ம் வாக்யமேததுவாச ஹ ||
உத்தரகாண்டம், அறுபத்தோராவது ஸர்க்கம் ஸ்லோக எண் 10
மஹாசுர: – மஹா அசுரன் ருத்ராத் – சிவனிடமிருந்து ஏவம் – இவ்வாறு வரம் – வரத்தை லப்த்வா – பெற்ற பின்னர் பூய ஏவ – மறுபடியும் மஹாதேவம் – மஹாதேவனை ப்ரணிபத்ய – பக்தியுடன் அடி பணிந்து நமஸ்கரித்து ஏதத் – இந்த வாக்யம் ஹ – வாக்யத்தையும் உவாச – மொழிந்தான்
சிவபிரானிடமிருந்து வரமாக சூலத்தைப் பெற்ற பின்னர் அரக்கனான மது இப்படி மேலும் மொழிந்தான்:
“தேவர்களுக்கும் தேவராய் இருக்கிறீர். ஆனபடியால் ஹே, பகவானே! இந்த இணையில்லாத சூலமானது எப்போதும் எனது வம்சத்துக்குரியதாய் இருக்க அனுக்ரகிக்க வேண்டும்.”
இதைக் கேட்ட சிவபிரான்,” இது இப்படி இருக்க முடியாது” என்று பதில் கூறி விட்டு மேலும் கூறினார்: “என்றபோதிலும் என் அனுக்ரகத்தால் விளைந்ததும் சிறந்ததுமான உன்னுடைய வேண்டுகோள் வீணானதாக ஆக வேண்டாம். உனது ஒரு புதல்வனை இந்த சூலமானது காத்துக் கிடக்கும். இந்த சூலமானது உனது ஒரு குமாரனுக்கு கையில் இருப்பதாய் இருக்கும். சூலத்தைக் கையிலேந்தியவனாய் எதுவரை இருக்கிறானோ அதுவரையில் எப்படிப்பட்ட பிராணிகளாலும் கொல்லப்பட முடியாதவனாக இருப்பான்.”
பின்னர் மது சிவனிடமிருந்து வரத்தைப் பெற்ற பின்னர் ஒரு சிறந்த மாளிகையை அமைத்துக் கொண்டான். அவனுக்கும் கும்பீனஸி என்பவளுக்கும் லவணன் என்ற மகன் பிறந்தான். அவன் கையில் சூலம் வந்தது. அவன் அனைவரையும் துன்புறுத்தலானான். அவனிடமிருந்து தம்மைப் பாதுகாக்க வேண்டி பார்க்கவரும் இதர முனிவர்களும் ஶ்ரீராமரிடம் வந்து முறையிட்டனர்.
இந்த வரம் சிவபிரானின் அபிமானத்தால் அரக்கன் மதுவிற்கு அளிக்கப்பட்ட வரமாகும்.
**