துளசிதாசரின்   கிஷ்கிந்தா காண்டம்    ஓர் ஆய்வு  –  26(Post.16,163)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 16,163

Date uploaded in London –   4 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

துளசிதாசரின்   கிஷ்கிந்தா காண்டம்    ஓர் ஆய்வு  –  26 

(ஆர்சேஷாத்ரிநாதன்)

 சர்கம் 3

तब हनुमंत उभय दिसि की सब कथा सुनाइ।

पावक साखी देइ करि जोरी प्रीति दृढ़ाइ॥4॥ 

அப்பொழுது  ஹனுமன் இரு பக்கத்துக் கதைகளையும்  இரு தரப்பினருக்கும் எடுத்துக் கூறி  அக்னியை சாட்சியாக வைத்து இருவருக்குமிடையே உள்ள நட்பை உறுதி செய்தார். 

துளசி தாசர் तब என்ற பதப் பிரயோகம் போடுகிறார். அதாவது எப்போது பரஸ்பரம் நட்பு கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வந்ததோ என்ற பொருள். அதாவது எப்போது இரு தரப்பு கதைகளையும் கேட்டு இருவருக்கிடையேயும் நட்பு மலர்கிறதோ என்ற பொருள். காரணம் பின்னல் இருவருக்கிடையே எந்தவித பிணக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக., அப்படி என்ன இருபக்க கதைகள்?. இராமன் சார்பாக ஹனுமன் சொன்னது வான்மீகத்தில்

 अयम् रामो महाप्राज्ञ संप्राप्तो दृढ विक्रमः |

लक्ष्मणेन सह भ्रात्रा रामोऽयम् सत्य विक्रमः || ४-५-२

इक्ष्वाकूणाम् कुले जातो रामो दशरथात्मजः |

धर्मे निगदितः च एव पितुर् निर्देश कारकः || ४-५-३

राजसूय अश्वमेधैः च वह्निः येन अभितर्पितः |

दक्षिणाः च तथा उत्सृष्टा गावः शत सहस्रशः || ४-५-४

तपसा सत्य वाक्येन वसुधा येन पालिता |

स्त्री हेतोः तस्य पुत्रोऽयम् रामः अरणयम् समागतः || ४-५-५

तस्य अस्य वसतो अरण्ये नियतस्य महात्मनः |

रावणेन हृता भार्या स त्वाम् शरणम् आगतः || ४-५-६

भवता सख्य कामौ तौ भ्रातरौ राम लक्ष्मणौ |

प्रगृह्य च अर्चयस्व एतौ पूजनीयतमौ उभौ || ४-५-७

“இவர் இக்ஷ்வாகு குல அரசன் தசரதனின் புதல்வன். தந்தையின் கட்டளையை ஏற்று மனைவியுடனும்  தனது தம்பியான இலக்ஷ்மணனுடனும் வனத்திற்கு வந்துள்ளார். இராவணன் இவரது மனைவியை கவர்ந்து சென்றுவிட்டான். தனது மனைவியைத் தேடி இங்கு வந்துள்ளார். இவர் சத்யசாந்தன். நேர்மையின் அவதாரம். தாங்கள் சீதையை தேடித் தர இவருக்கு உதவ வேண்டும்”

 இப்பொழுது சுக்ரீவன் தரப்பிலிருந்து இந்த விவரங்களைச் சொன்னான் ஹனுமன் “சுக்ரீவனை அவனது அண்ணன் வாலி நாட்டைவிட்டு துரத்தி விட்டான். அவனது ராஜ்ஜியம் அவனது மனைவி எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டதோடல்லாமல் அவரிடம் இன்னும் பகைமை கொண்டுள்ளான். வாலியைக் கண்டு பயந்து சுக்ரீவன் இங்கு தங்கியுள்ளான். சீதையைத் தேடித் தருவதில் இவன் உதவியாக இருப்பான். தாங்கள் அவனுக்கு வாலியிமிருந்து அவனது மனைவியை மீட்டுத் தருவதுடன் அரசையும் பெற்றுத் தரவேண்டும்.  

சுக்ரீவன் இராமன் உடன்படிக்கை

 பிறகு அக்னியை சாக்ஷியாக வைத்து ஒருவொருக்கொருவர் உதவி செய்வதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

काष्ठयोः स्वेन रूपेण जनयामास पावकम् |

दीप्यमानम् ततो वह्निम् पुष्पैः अभ्यर्च्य सत्कृतम् || ४-५-१४

तयोर् मध्ये तु सुप्रीतो निदधौ सुसमाहितः |

तो अग्निम् दीप्यमानम् तौ चक्रतुः च प्रदक्षिणम् || ४-५-१५

सुग्रीवो राघवः च एव वयस्यत्वम् उपागतौ |

ततः सुप्रीत मनसौ तौ उभौ हरि राघवौ || ४-५-१६

अन्योन्यम् अभिवीक्षन्तौ न तृप्तिम् अभिजग्मतुः |

त्वम् वयस्योऽसि हृद्यः मे हि एकम् दुःखम् सुखम् च नौ |

வால்மீகி சொல்வதாவது – ஹனுமான் இரண்டு சுள்ளிகளை எடுத்து அவற்றை ஒன்றோடொன்று உராயவைத்து நெருப்பை உண்டாக்கினான். பிறகு அதற்கு பூக்களால் பூஜை செய்து அதை இராமன் சுக்ரீவன் இருவருக்கும் இடையில் வைத்தான். பிறகு இராமனும் சுக்ரீவனும் அக்னியை வலம் வந்து நண்பர்களானார்கள். சுக்ரீவன் இராமனிடம் சொன்னான் “இனி நாம் நண்பர்கள். இருவரது சுக துக்கங்களும் ஒன்றுதான்.. இதே கருத்தைத்தான் ஆத்யாத்ம இராமாயணத்திலும் சொல்லப்பட்டுள்ளது

ततो हनूमान् प्रज्वाल्य तयोरग्निं समीपतः ।

तावुभौ रामसुग्रीवावग्नौ साक्षिणि तिष्ठति ॥ ४४॥

बाहू प्रसार्य चालिङ्ग्य परस्परमकल्मषौ

 இங்கு ஒரு கேள்வி எழலாம் . அக்னிக்கு இணையான சக்தி உள்ளவன் சூர்யன் . பிறகு அவனை ஏன் சாக்ஷியாக வைத்துக் கொள்ளவில்லை? இதற்கு உரையாசிரியர்கள்  சொல்வதாவது.  – இராமன் சூரிய வமசத்தைச் சேர்ந்தவன். சுக்ரீவன் சூரியனின் ஒரு அம்சம். தங்களைச் சார்ந்தவர்களைச் சாக்ஷியாக வைத்துக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்திலேயே சூரியனை சாட்சியாகக் கருதவில்லை.

**

Leave a comment

Leave a comment