சிவப்பிரகாசர் நூல்களில் 10 கேள்விகள் (Post.16,171)

Written by London Swaminathan

Post No. 16,171

Date uploaded in London – 6 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

சிவப்பிரகாசர் யார் ? அவர் எழுதிய  நூல்களில் நன்னெறி எதைப் பற்றிய நூல் ?

2

நன்னெறி நூலின் இரண்டு தனிச் சிறப்புகள் என்ன ?

3

அறநெறி நூல்கள் எல்லாம், நல்லோர் நட்பு- தீயோர் நட்பு பற்றி கூறுகின்ற ன ? இந்த நூலில் அவர் என்ன சொல்கிறார் ?

4

ஆதிசங்கரரும் திருவள்ளுவரும் கலப்படமற்ற தூய நன்மை பயக்குமானால்,பொய்யும் சொல்லலாம் என்று பாடிச் சென்றனர் ; சிவப்பிரகாசர் கொடுஞ் சொல்லும் இனிய சொல் என்கிறாரே! ஏன் ?

5

 சூரியனால் கடலினைப் பொங்கச் செய்ய முடியாது; ஆனால் சந்திரனால் கடலினைப் பொங்கச் செய்ய முடிகிறது; அதேபோல சுடும் சொற்களால் மகிழ்ச்சி பொங்காது. நிலவு போல குளிர்ந்த சொற்களால் மகிழ்ச்சி பொங்கும் என்ற அருமையான உவமை சொல்லும் பாடல் எது?

6

நெல்லுக்கு எல்லோரும் நீர் இரைப்பார்கள்; புல்லுக்கு யாராவது நீர் இரைப்பார்களா? என்று அவர் கேட்பது ஏன்?

7

சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய நூல்களின் பெயர்கள் என்ன ?

8

நம்முடைய உடலில் ஒன்பது துவாரங்கள் இருப்பதால் இதை நவத்வாரபுரி என்று சம்ஸ்க்ருத நூல்கள் விளம்புகின்றன; ஒரு ஓட்டை இருந்த பானையில்கூடத் தண்ணீர் நிற்பது இல்லையே! இந்த ஒன்பது துளை உடலில் உயிர் ஓடுவது எப்படி என்று வியக்கும் பாடல் எது?

9

இலக்கணம் கற்றவனே மொழி அறிஞன் என்று ஏன் சொல்கிறார் ?

10

முனிவர்கள் போலத் தவம் இயற்றுவோர் , பெண்களுக்கு முன்னால் இருப்பது ஆபத்து என்பதை எந்த உவமை மூலம் விளக்குகிறார் ?

**********************

விடைகள்

1.சிவப்பிரகாச சுவாமிகள் ஒரு பிரம்மச்சாரி. திருமணம் செய்யாமல் வாழ்ந்த அவர் 32 ஆண்டுகளே வாழ்ந்தார்; முப்பது நூல்களை இயற்றியுள்ளார் . சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் துறைமங்கலத்தில் வசித்தார் ; அவர் எழுதிய நூல்களில் நன்னெறி என்பது ஏனைய அற நூல்களைப்போல மக்களுக்கு நல்ல நெறிகளைப்  புகட்டும் நூலாகும்  அதில் நாற்பது பாடல்கள் உள்ளன.

***

2ஆசிரியர் சிவப்பிரகாசர் முதலில் மணலில் பாடல்களை எழுதினாராம்; அதை அவரது சீடர்கள் எழுத்து வடிவில் பாதுகாத்து நமக்கு வழங்கியது ஒரு தனிச் சிறப்பு;இரண்டாவது ஒரு பெண்ணை முன்னிலையில் வைத்து அவளுக்குச் சொல்லுவது போல அமைந்த பாடல்கள் இவை. இந்த வகைச் செய்யுட்களை ‘மகடூஉ முன்னிலை என்பார்கள்.

***

3.நல்லார் செயும்கேண்மை நாள்தோறும் நன்றாகும்

அல்லார் செயும்கேண்மை ஆகாதே – நல்லாய்கேள்

காய்முற்றின் தின்தீங் கனியாம் இளம்தளிர்நாள்

போய்முற்றின் என்ஆகிப் போம்.

காயானது முற்றினால் தின்பதற்குப் பயன்படும் இனிய கனியாகும். இளம்தளிர் முற்றினால் அது சருகாகிப் பயன்படாமல் போகும். இவை போன்றே நல்லவர் நட்பு நாள்தோறும் நன்கு வளர்ந்து நன்மையைத் தரும். தீயவர் நட்பு நாள்தோறும் தேய்ந்து துன்பம் தருவதாகவே இருக்கும் என்று சிவப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளார்.

***

4.மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல்இனிது ஏனையவர்

பேசுற்ற இன்சொல் பிறிதுஎன்க – ஈசற்கு

நல்லோன் எறிசிலையோ நல்நுதால் ஒண்கரும்பு

வில்லோன் மலரோ விருப்பு

உள்ளத்தில் கள்ளம் இல்லாதவர்கள் பிறருக்குத் தீமை செய்ய மாட்டார்கள். அவ்வாறு தீமை செய்யாத நல்லவர்கள் கொடிய சொல்லைச் சொல்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு காரணத்தால்தான் அவ்வாறு சொல்லியிருப்பார்கள். அந்தக் கொடிய சொல்லால் பிறருக்கு நன்மையே விளையும்.

***

5.இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்

வன்சொலால் என்றும் மகிழாதே-பொன்செய்

அதிர்வளையாய்! பொங்காது அழல்கதிரால் தண்என்

கதிர்வரவால் பொங்கும் கடல் (18)

***

6.  தக்கார்கே உதவுக

தக்கார்கே ஈவர் தகார்க்களிப்பார் இல்லென்று

மிக்கார்குதவார் விழுமியோர் – எக்காலும்

நெல்லுக்கு இரைப்பதே நீரன்றிக் காட்டுமுளி

புலலுக்கு யிரைப்ரோ போய்.

தகுந்தவர்களுக்குத்தான் தானம் செய்ய வேண்டும்; உதவி செய்ய வேண்டும். தகாதவர்க்கு தானம் கொடுப்பது புல்லுக்கு நீர் இரைப்பது போன்றதே .

***

7.அவர் எழுதிய நூல்கள் :-

பிரபுலிங்கலீலை

திருக்கூவப்புராணம்

சித்தாந்த சிகாமணி

வேதாந்த சூடாமணி

சிவப்பிரகாசவிகாசம்

சிவநாம மகிமை

தர்க்கபாஷை

சோணசைலமாலை

திருவெங்கையுலா

திருவெங்கை யலங்காரம்

திருச்செந்திலந்தாதி

திருவெங்கைக் கலம்பகம்

திருவெங்கைக்கோவை

சதமணிமாலை

நால்வர் நான்மணிமாலை

நிரஞ்சனமாலை

கைத்தலமாலை

அபிஷேகமாலை

வெங்கைக்கோவை

வெங்கைக்கலம்பகம்

நன்னெறி

கொச்சகக்கலிப்பா

இயேசுமத நிராகரணம்

தலவெண்பா

பிக்ஷாடன நவமணிமாலை

பழமலை அந்தாதி

சிவஞான பாலய சுவாமிகள் கலம்பகம்

சிவஞான பாலய சுவாமிகள் திருப்பள்ளியெழச்சி

சிவஞான பாலய சுவாமிகள் பிள்ளைத்தமிழ்

சிவஞான பாலய சுவாமிகள் தாலாட்டு

சிவஞான பாலய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது

இஷ்டலிங்கப் பெருங்கழிநெடில் விருத்தம்

இஷ்டலிங்கக் குறுங்கழிநெடில் விருத்தம்

இட்டலிங்க அபிடேகமாலை

திருச்செந்தினிரோட்ட யமகவந்தாதி

பெரியநாயகியம்மை ஆசிரியவிருத்தம்

பெரியநாயகியம்மை கட்டளைக்களித்துறை

***

8. உடம்பில் உயிர் அமைந்த வியப்பு.

வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில்

பொருந்துதல் தானே புதுமை – தீருந்திழாய்

சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது

வீதலோ நிற்றல் வியப்பு.

***

9. தமிழ் இலக்கணத்தைக் கற்றுக்கொள்ளாதவர்களுடைய அறிவு, கற்றார் அறிவுக்குமுன் செல்லாது: இலக்கணத்தை முறையாகக் கற்றறிந்த அறிஞர்களின் அறிவுக்கு முன்னால் செல்லுபடியாகாது (மதிப்பற்றதாகிவிடும்).அதாவது, ஒருவர் எவ்வளவுதான் பல நூல்களைப் படித்துப் பொது அறிவை வளர்த்துக் கொண்டாலும், மொழியின் அடிப்படைக் கட்டமைப்பான இலக்கணத்தைக் கற்கவில்லை என்றால், அவரது அறிவு அறிஞர்கள் அவையில் மதிக்கப்படாது என்பதாகும். கடல்போலப் பிரவாகம் எடுக்கும் கங்கை நதியானது, சிவன் தலைமுடிக்கு வந்தவுடன் அடங்கிவிடுகின்றதல்லவா ?

எழுத்தறியார் கல்விப்பெருக்கம் அனைத்தும்

எழுத்தறிவார்க் காணின் இலையாம் – எழுத்தறிவார்

ஆயும் கடவுள் அவிர்சடைமுடி கண்டளவில்

வீயும் சுரநீர் மிகை.

The learning of those who lack knowledge in grammar

is exposed as inadequate in the presence of the experts.

It is like the mighty river Ganges hiding itself

When it reaches our Lord’s crown of hair.

***

10. பகர்ச்சி மடவார் பயிலநோன்பு ஆற்றல்

திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம் – நெகிழ்ச்சி

பெறும்பூரிக் கின்றமுலை பேதாய் பலகால்

எறும்பூரக் கல்குழியுமே.

எறும்பு ஊர, ஊர கல்லும் தேயும் ; பெண்கள் முன்னிலையில் தவசீலர்கள் தொடர்ந்து இருந்தால் மனமும் தேயும்.

When ants crawl along a path long enough

Even a rock will be etched with its route

The presence of a woman if long continued

Will make even a sage to lose his resolve.

–SUBHAM—

TAGS– நன்னெறி, சிவப்பிரகாசர்,10 கேள்விகள்

Leave a comment

Leave a comment