Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துறவிக்கு, வேந்தனுக்கு, வீரனுக்கு எவர் துரும்புக்குச் சமம்- Part 2 (Post No.14,483)
Part-2
பெண்போகம் ஒரு துரும்பு !கல்யாண ஊர்வலத்தில் மனம் மாறிய மாப்பிள்ளை!
நேமி என்பவர் சமுத்ரவிஜயன் என்ற மன்னரின் மகன். அவர் ஷௌரிபூர் என்ற சிறிய பிரதேசத்துக்கு மன்னர். நேமிக்கும் ராஜ்மதி என்ற இளவரசிக்கும் திருமணம் நிச்சயமாகியது. அவள் பவநகர் மன்னன் உக்ரசேனனின் மகள். ராஜா வீட்டுக் கல்யாணம் என்றால் கேட்கவா வேண்டும். ஊரே அலங்காரம் செய்யப்பட்டது. மேளதாள, தாரை, தம்பட்டையுடன் பெரிய மாப்பிள்ளை அழைப்பு ஏற்பாடாகியது!
யானை, ஒட்டகம், அலங்கரிக்கப்பட்ட மாடுகள் , ஆடல், பாடல் கலைஞர்களுடன் மாபிள்ளை நேமி ஊர்வலத்தில் வந்தார். அவர் வந்த ரதம் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இளவரசி ராஜ்மதி எனப்படும் ரஜூலை தோழிகள் கிண்டல் செய்த வண்ணம் இருந்தனர். அவள் அரண்மனை சாளரத்திலிருந்து, வழி மேல் விழி வைத்து, ஊர்வலத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கல்யாண மப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், அரண்மனையிலுள்ள கல்யாண மண்டபத்தை நெருங்கிவந்துவிட்டது.
அப்பொழுது ஒரே ஆடுமாடுகளின் கோழி, கௌதாரிப் பறவைகளின் ஓலம் கேட்டது. மாப்பிள்ளைக்கு சிறிய சந்தேகம். தனது தோழர்களிடம் இது என்ன இரைச்சல்? என்று கேட்டார். உடனே அவர்கள் அரசாங்க அதிகாரிகளிடம் கேட்க, அவர்கள் பெருமையுடன், எல்லாம் உங்கள் கல்யாண விருதுக்குத்தான்! இன்று கனஜோரான விருந்து கிடைக்கப்போகிறது– என்றனர்.
அதைக்கேட்ட மாப்பிள்ளை வண்டியிலிருந்து குதிக்கப் போனார். அவர்கள் எல்லோரும் என்ன ? என்ன ஆயிற்று? என்று வினவ, மாப்பிள்ளை எனக்குக் கல்யாணமும் வேண்டாம், கார்த்திகையும் வேண்டாம்; ரதத்தை கிர்னார் மலையை நோக்கிச் செலுத்துங்கள் என்று கட்டளையிட்டார். ரதம் எதிர் திசையில் செல்ல ஆரம்பித்தவுடன் மேளதாளங்கள் நின்றன. ஒரே பரபரப்பு. பெண் வீட்டாருக்கும் செய்தி பரவியது. ஊரே அமைதியில் ஆழ்ந்தது.
பாதி ஊர்வலத்தில் மனம் மாறிய நேமி, சமணமதத் துறவியாகப்போவதாக அறிவித்துவிட்டு கிர்னார் மலையில் சமணத் துறவிகளிடம் தஞ்சம் அடைந்தார்.
குஜராத்திலுள்ள கிர்நார் மலை பலவகைகளிலும் புனிதம் பெற்ற இடம். கண்ண பிரான் முதல் சமணத்துறவிகள் வரை எல்லோரும் பழகிய இடம். இப்பொழுது அசோகன், ருத்ரதாமன், குப்தமன்னரின் கல்வெட்டுகள் அந்த மலையை அலங்கரிக்கின்றன.
இளவரசி ரஜூலுக்கு முதலில் மன வருத்தம்; பெரிய ஏமாற்றம். 51 நாட்கள் வரை, ஒரு வேளை மணமகன், மனம் மாறிவிடக்கூடும் என்று காத்திருந்தார். ஆனால் வரவில்லை. சிறிது சிறிதாக அவர் மனதிலும் மாற்றம் உண்டானது. என்னை அடைவதைவிட ஒரு இன்பமான நிலையை என் கணவராவதற்கு இருந்த நேமி, அடையமுடியுமானால் அதே இன்பத்தை நானும் நுகர்வேன் என்று அவரும் கிர்நார் மலைக்குச் சென்று துறவி ஆனார்.
ரஜூல் என்ற ராஜ்மதி உடனே துறவியானதாகச் சில நூல்களும் சில காலத்துக்குப் பின்னர் துறவியானதாகச் சில நூல்களும் செப்பும். மேலும் இடைக்கால கவிஞர்கள் இதையே ஒரு காதல் காவியமாக மாற்றி விரகதாப பாடல்களும் எட்டுக்கட்டிவிட்டனர். நேமி- ராஜூல் மணமுறிவு, ஒரு புது வகை இலக்கியத்தையே படைத்துவிட்டது.
அதையெல்லாம் விட மிகப்பெரிய விஷயம் அந்த நேமி என்பவர்தான் சமணர்கள் போற்றும் 22ஆவது தீர்த்தங்கரரான நேமிநாதர். அவருக்குப் பின்னர்தான் வர்த்தமான மஹாவீரர் அவதரித்தார். அவர் புத்தருக்குக் கொஞ்சம் சீனியர்.
நேமிநாதரின் மற்றொரு பெயர் அரிஷ்ட நேமி. இவர் கிருஷ்ணருக்கு உறவினர் என்றும் அதே யாதவ குலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர், ரிக் வேதம் முதலிய நூல்களில் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர் பகர்வர். அவர் எந்தக் காலத்தைச் சேர்ந்தவரானாலும் போற்றுதலுக்குரிய புண்ணிய புருஷர் என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை.
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னது இவர் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. கொல்லாமை விரதம் பூண்டோருக்கு பிற தர்மம் தேவை இல்லை என்றும் வள்ளுவர் கருதுவார்.
இந்துமத யோகிகளும் சந்யாசம் ஏற்கையில் மனம் , மொழி, மெய் ஆகிய மூன்றினாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்ய மாட்டேன் என்று விரதம் ஏற்பர். வள்ளுவனும் இக்கருத்தைத் துறவறவியலில் கூறுவதைக் காண்க.
*****
துறவிக்கு வேந்தன் (ராஜா) துரும்பு; அவர் கோபப்பட்டால் பெரும் அரசுகள் கவிழும் என்று வள்ளுவரும் திருக்குறளில் எச்சரிக்கிறார்.
படம்–சொர்க்கத்திலிருந்து நகுஷன் விழுந்த கதை (see first part of this article)
சாது மிரண்டால் காடு கொள்ளாது!
தமிழில் ஒரு பழமொழி உண்டு. சாதுக்கள் கோபிக்கமாட்டர்கள். ஆனால் அவர்களுக்குக் கோபம் வந்தாலோ அரசாட்சியே கவிழ்ந்துபோகும்.
வித்யாரண்யர் அருளால், விஜயநகரப் பேரரசு தோன்றி தென்னாட்டில் முஸ்லீம் ஆட்சிக்கு சாவு மணி அடித்தது. மகாராஷ்டிரத்தில் சமர்த்த ராமதாஸ் அருளால் வீர சிவாஜி உருவாகி மொகலாய சாம்ரஜ்யத்துக்கு சாவு மணி அடித்தார். இதற்கு முன் சாணக்கியனின் கோபம் நந்த வம்சத்தை வேரறுத்து மௌரியப்பேரசை நிறுவியது.
பழங்காலத்தில் அகஸ்தியரைப் பகைத்த நகுஷன் அழிந்தான்; வேனன், சுமுகன் முதலிய கொடுங்கோல் மன்னர்கள் அழிந்து போனதை மனு நீதி சாத்திரம் பட்டியல் போட்டுத் தரும். வள்ளுவனும் தன் குறளில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைப் “பெரியாரைப் பிழையாமை” அதிகாரத்தில் கூறுகிறார்:
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியோடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து (898)
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து
வேந்தனும் வேந்து கெடும் (899)
பொருள்: குணத்தினால் உயர்ந்த பெரியோர்கள், ஒருவனை அழிக்க நினைத்தால், அவன் குலமே அழிந்து போகும்.
உயர்ந்த கொள்கையுடைய சான்றோர் வெகுண்டெழுந்தால், நாடாளும் அரசன் முறிந்து வீழ்வான்.
இதை விளக்கும் ஒரு சம்பவம் சீனாவில் நடந்தது:-
சின் வம்ச முதல் அரசன் (கி.மு.221-206), சீனாவின் ஒரு பெரிய நிலப்பரப்பை ஆண்டுவந்தான். அருகாமையிலிருந்த ஒரு சின்ன நாட்டின் பகுதியைத் தனக்குத் தரவேண்டுமென்று மிரட்டினான். அதை ஏற்க மறுத்த அந்த சிறிய நாட்டின் அரசன் ஒரு தூதரை சமாதானம் பேச அனுப்பினான். அந்தக் காலத்தில் தூது போவோர் பெரிய அறிஞர்களாக இருப்பர். இந்தியாவில் பிராமணர்கள் தூதர்களாகப் பணியாற்றியதை சங்க இலக்கியமும், தொல்காப்பியமும் கூறும்.
சீனாவில் சின் வம்ச அரசன், சின்ன நாட்டின் தூதரைப் பார்த்துச் சொன்னான்:
“ஓய் அறிஞரே! ஒரு மன்னனுக்குக் கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பது உமக்குத் தெரியுமா?
அறிஞர்: மன்னவா, எனக்குத் தெரியாது.
மன்னன்: ஒரு மன்னனுக்குக் கோபம் வந்துவிட்டால் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு லட்சக் கணக்கான சடலங்கள்தான் இருக்கும்.
அறிஞர்: ஒரு அறிஞருக்குக் கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பது தெரியுமா?
மன்னர்: ஹூம்! தொப்பியையும், காலணிகளையும் கழற்றி எறிவார். மண்டையை நிலத்தில் மோதி உடைத்துக் கொள்வார். இது என்ன தெரியாதா?
அறிஞர்: ஓ, அது முட்டாள்கள் செய்யும் வேலை.
இப்படிச் சொல்லிவிட்டு அந்த அறிஞர் அந்த மன்னனுக்கு முன்னோர் காலத்தில் நடந்த மூன்று சம்பவங்களை அருமையான கவிதை நடையில் பொழிந்து தள்ளினார். கொடுங்கோல் மன்னர்களை அந்த அறிஞர்கள் தீர்த்துக் கட்டியது பற்றிய கவிதைகள் அவை.
மன்னவா! அந்த மூன்று பேர் பட்டியலில் இன்று என் பெயரும் சேரப்போகிறது. இதோ உமக்கும் எனக்கும் உள்ள ஐந்து அடி இடைவெளியில் இரண்டே சடலங்கள்தான் இன்று இருக்கும். இதோ பார்! என்று சொல்லியவாறே அறிஞர் தன் வாளை உருவினார்.
மன்னன் நடுநடுங்கிப் போனார்.
மன்னர்: அறிஞரே நிறுத்துங்கள்;அவசரம் வேண்டாம். தயவுசெய்து அமருங்கள். இப்பொழுது எனக்கு விளங்கிவிட்டது. மிகப்பெரிய சாம்ராஜ்யங்களான ஹான், வெய் போன்றவை அழிந்த போதிலும் உமது நாட்டைப் போன்ற சிறிய நாடுகள் உயிர்பிழைத்தது எப்படி என்பது விளங்கிவிட்டது. உங்களைப் போன்ற அறிஞர்கள் இருப்பதால்தான் நுமது நாடு இன்னும் வாழ்கிறது”.
போஜன குதூகலம் என்ற பழம் பெரும் நூல் உணவு பற்றிய பலவித உண்மைகளைத் தெளிவாக விளக்கும் நூல்
அதில் இலந்தையைப் பற்றி வரும் பகுதி இது:
இலந்தை இனிப்பும் சற்று கசப்பும் புளிப்பும் உள்ளது. நன்கு பழுத்தது இனிப்பும் புளிப்புமே உள்ளது.
கபத்தையும், வாயுவையும், அதிசாரம், இரத்த நோய், களைப்பு, வரட்சி ஆகியவற்றையும் போக்கும். நல்ல சுவை உள்ளதாகும்.
இவை இலந்தையின் பொதுவான தன்மைகளாகும்.
இராஜபதரம் எனப்படும் பெரும் இலந்தை குளிர்ச்சியுள்ளது.
தாகம், பித்தம், வாதம் ஆகியவற்றைப் போக்கும். காமத்தைக் கொடுக்கும். வீரியத்தை வளர்க்கும். வறட்சி, களைப்பு ஆகியவற்றைப் போக்கும்.
பூபதரம் என்னும் நில இலந்தை குளிர்ச்சியுள்ளது. இவ்விலந்தையின் சுவை இனிப்பும் புளிப்புமாகும். இதனால் கபம், வாதம் ஆகியவை அகலும். உடலுக்குப் பத்தியமானது. செரிமானத்தையும் பசியையும் தரும். சற்று பித்தத்தையும் இரத்தப் பெருக்கத்தையும் கொடுக்கும். நல்ல சுவையுள்ளதாகும்.
சிறு இலந்தை இனிப்பும் புளிப்புமுள்ளது. பழுத்தது, கபத்தையும், வாதத்தையும் போக்கும். சுவை மிக்கது. பசையுள்ளது வயிற்றில் பூச்சியுண்டாக்கும். பித்தநோய், வாதம், வறட்சி ஆகியவற்றை அகற்றும்.
இலந்தையின் இலை மேற்பூச்சுக்குப் பயன் பட்டால் காய்ச்சலையும் எரிச்சலையும் போக்கும். தோலில் தோன்றும் கொப்புளங்கள் கட்டிகளைப் போக்கும். இதன் விதை கண் நோய்க்கு நல்ல மருந்தாகும்.
ஆக இப்படி போஜன குதூகலம் விளக்கும் இலந்தைப் பழத்தின் விலை மலிவோ மலிவு.
கை வண்டியில் தள்ளிக் கொண்டு வீட்டிற்கே வரும் இலந்தைப் பழத்தை வாங்கி உபயோகித்தால், ஆஹா, எத்தனை பயன்கள்!
இது போல அனைத்து கறிகாய்கள், பழங்கள், உணவு வகைகளை விளக்கும் நூல் போஜன குதூகலம்!
இதை இயற்றியவர் இரகுநாதஸூரி என்னும் அறிஞர் ஆவார். வடமொழியில் அவர் இயற்றிய நூலின் ஒரு பகுதியான திரவியகுண தகனம் என்னும் பகுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு போஜன குதூகலம் என்ற பெயரில் சரஸ்வதி மஹால் வெளியீடாக வந்துள்ளது
இரகுநாதஸூரி என்பவர் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் குருவாக விளங்கிய சமர்த்த ராமதாஸருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.
நூலில் 43 அத்தியாயங்கள் உள்ளன. அபூர்வமான விஷயகளை இந்த நூல் விளக்குகிறது. இவற்றைப் படித்தால் பிரமித்துப் போவோம்!
சைவ உணவு வகைகளோடு அசைவ உணவு வகைகளும் கூட இதில் விளக்கப்படுகின்றன!
நூலின் இறுதியில் அட்டவணையில் சுமார் 700 உணவுப் பொருள்கள் பற்றிய பட்டியலைக் காண்கிறோம். இத்தனை உணவுப் பொருள்களை இந்த நூல் விளக்குகிறது என்பது ஆச்சரியப்படும் விஷயம் தானே!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Pictures of 2500 Indian Stamps!- Part 30(Post No.14,476)
PART 30
Stamps posted today include 1986 STAMPS
CHAITANYA MAHAPRABHU, SWAMI SIVANANDA, SAINT RVIDAS, CONGRESS CENTENARY, CONGRESS PARTY PRESISENTS, INS VIKRANT, CHLDREN’S DAY, HIKING, TENTH ASIAN GAMES, INTERNATIONAL YOUTH YEAR, INTERNATIONAL YEAR OF PEACE, SXTH TRIENNALE, MUSIC COMPOSERS BACH, HENDEL, VEER SURENDRA SA, ALLURI SEETARAMA RAJU, SAGARMAL GOPA, AERIAL POST, AIR PLANES, HIKING, VOLLEY BALL, MAYO COLLEGE, BHIMSEN SACHAR, WORLD CUP FOOTBALL, MEXICO, MADRAS G P O, PARA COMMANDO, naval dockyard bombay, inpex 86, I N S VIkrant, Yakshi etc.,
–Subham—
Tags Part 30, 2500 Indian Stamps, YEAR 1986, CHAITANYA MAHAPRABHU, SWAMI SIVANANDA, SAINT RVIDAS, CONGRESS CENTENARY, CONGRESS PARTY PRESISENTS, INS VIKRANT, CHLDREN’S DAY, HIKING, TENTH ASIAN GAMES, INTERNATIONAL YOUTH YEAR, INTERNATIONAL YEAR OF PEACE, SXTH TRIENNALE, MUSIC COMPOSERS BACH, HENDEL, VEER SURENDRA SA, ALLURI SEETARAMA RAJU, SAGARMAL GOPA, AERIAL POST, AIR PLANES, HIKING, VOLLEY BALL, MAYO COLLEGE, BHIMSEN SACHAR, WORLD CUP FOOTBALL, MEXICO, MADRAS G P O, PARA COMMANDO , I N S Vikrant, yakshi etc.,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
What is A hell?
Scholars and commentators say there is no Hell anywhere in the Universe; but your physical or mental suffering is hell. But sometimes you wouldn’t know that you are in hell. Why? Because you don’t know anything better than that.
A pig enjoys dirty and muddy place. We know what stary dogs and stray pigs eat.
A poor man does not know anything about a palatial living. Only when he is taken there , he knows what he missed until then.
A hospital worker tests urine and poo of hundreds of patients. It is a hell for outsiders, not for that person. A doctor examines bottoms of the patients with piles and anus complaints; it is disgusting for the patients and his relatives.
Poo and urine of patients with chronic diseases are collected and disposed by nurses in hospitals and scavengers on the streets. It is a type of hell. All of us would have terrible fear or suffering or worries in our life; many of us would have excruciating mental or physical pain many times in our life . look at the statistics in encyclopaedias. That shows their fear, worries etc. there are the 21 hells described by our law books called Smrtis.
Medathithi, the most famous commentator on Manu Smriti , himself says it.
But there is another view supported by many Hindu saints. You will be born as an animal or a higher person according to the bad or good deeds you do in this birth. Abrahamic religions talk about eternal suffering in hell; but Hinduism talks about progress according to your good deeds / Karma in this birth.
***
Srila Prabhupada, the founder-acharya of the International Society for Krishna Consciousness (ISKCON), viewed hell as a temporary state of suffering in the material world, not an eternal punishment. He emphasized that hellish conditions result from sinful actions and the forgetting of one’s relationship with Krishna, the Supreme Personality of Godhead. However, he also clarified that for a devotee, heaven and hell are not different, as a devotee’s true home is with Krishna in the spiritual world.
****
Swami Vivekananda viewed hell as a temporary state, a stage on the path to liberation, rather than a permanent state of punishment. He emphasized the importance of living a fulfilling life in the present and focusing on realizing one’s true nature as Brahman, rather than dwelling on fear-based concepts of eternal damnation. He believed that the ultimate destiny of every being is to attain liberation, not to suffer eternally in hell.
****
Paramahamsa Yogananda on Hell
A visitor: “The Bible says that evildoers shall be punished, and the good, rewarded. Do you subscribe to this teaching?”
Paramhansa Yogananda: “Certainly. If we accept the principle of cause and effect in Nature, and of action and reaction in physics, how can we not believe that this natural law extends also to human beings? Do not humans, too, belong to the natural order?
“This is the law of karma. As you sow, so shall you reap. If you sow evil, you will reap evil in the form of suffering. And if you sow goodness, you will reap goodness in the form of inner joy.”
The visitor: “How specific is the law? In physics, the law of motion states that for every action there is an equal and opposite reaction. In Nature, effects are often very specifically, and not only vaguely, related to their causes.
“Yet we’ve been taught to view reward and punishment for human behaviour in more general terms. If we’re good, we’ve been told, we’ll go to heaven, and if we’re bad, we’ll go to hell. But people don’t think of themselves as reaping specific consequences for specific deeds.”
Yogananda: “The karmic law is exact. There is, furthermore, no question of suffering in hell for eternity. (How could the misdeeds of a few years on earth deserve eternal punishment? Could a finite cause have an infinite effect?)
****
Ma Anandamayi’s view aligns with the concept of karma, where actions in this life lead to specific outcomes in the next. If one leads a life of good deeds and devotion, they will experience positive results after death, potentially progressing towards a higher spiritual state. Conversely, if one lives a life of negative actions, they may experience consequences, which could involve further rebirths or less favorable circumstances in the afterlife.
No Fear of Hell:
In one instance, Ma Anandamayi reportedly stated that her devotees would never experience hell, emphasizing the power of God’s name and the protection it offers. This suggests a more nuanced understanding of hell, possibly viewing it as a state of suffering or hardship rather than a fixed, eternal punishment.
****
Swami Sivananda on Hell
The sinners do not go to Chandraloka. They go to Yama Loka or the world of punishment and after having experienced the results of their evil deeds come down to the earth.
Hells are places of torture for the evil-doers. The temporary abodes are Raurava, Maharaurava, Vahni, Vaitarani and Kumbhika. The two eternal hells are Tamisra (darkness) and Andhatamisra (blinding darkness). The seven hells are superintended by Chitragupta and others. Yama is the chief ruler in those seven hells also. Chitragupta and others are only superintendents and lieutenants employed by Yama. They are all under Yama’s government and suzerainty. Chitragupta and others are directed by Yama.If the entire Karmas bear fruit, there will be no cause for rebirth after life in heaven or hell or in animal-bodies because in these there is no means of Dharma or Adharma. Moreover, some sins like the killing of a Brahmin involve many births. Sri Madhvacharya writes in his Bhashya of Brahma Sutras that from the fourteenth year of age the Jiva does of necessity works, each of which would be the cause of at least ten births. How then can the entirety of Karmas lead to one birth alone?
****
Philosopher Sarvepalli Radhakrishnan generally held a view that is not a belief in a literal hell as a place of eternal punishment. He believed that there is neither eternal heaven nor hell, and that individuals have the potential for growth and improvement. He emphasizes that true immortality extends beyond survival, encompassing eternal life and the possibility for continuous development.
****
Osho views heaven and hell not as physical places, but as states of mind. He believes that being unconscious, acting without awareness, is living in hell, while being conscious and acting with awareness is living in heaven. He suggests that the secret is to cultivate continuous awareness, as this can lead to freedom from the cycle of hell and heaven.
****
In Buddhism, the concept of hell realms, known as “Naraka” or “hell realms,” is not a permanent destination but rather a temporary state of existence, a place of intense suffering. Buddhists generally believe these realms are not literal but rather reflect the consequences of negative karma and the suffering caused by attachment and delusion. The ultimate goal in Buddhism is not to be reborn in heaven, but to escape the cycle of rebirth altogether and achieve enlightenment (Nirvana), a state of freedom from suffering.
****
Jainism recognizes hell as a real realm of existence, called Naraka. It’s a place where souls experience suffering, and rebirth into hell is a consequence of past negative actions (karma). Unlike some beliefs, Jains don’t see hell as eternal punishment, but as a temporary state until the karma is fully worked through.
****
Sikhism does not believe in a literal physical hell. While Gurbani, the Sikh scripture, uses the terms “heaven” and “hell” in some passages, these are generally interpreted metaphorically. The true “hell” in Sikhism is a state of suffering and separation from God, experienced through ego, attachment to worldly things, and a lack of awareness of one’s true nature. Conversely, “heaven” is a state of bliss and oneness with God, achieved through devotion and righteous living.
***
TO BE CONTINUED……………………….
TAGS- Hell, real or not, scholars’ views, religions
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை 7
13. இவர்க்கு இது துரும்பு
தாராள மாகக் கொடுக்குந் தியாகிகள்
தமக்குநற் பொருள் துரும்பு,
தன்னுயிரை யெண்ணாத சூரனுக் கெதிராளி
தளமெலாம் ஒருதுரும்பு,
பேரான பெரியருக் கற்பரது கையினிற்
பிரயோச னந்துரும்பு,
பெரிதான மோட்சசிந் தனையுள் ளவர்க்கெலாம்
பெண்போகம் ஒருதுரும்பு,
தீராத சகலமும் வெறுத்ததுற விக்குவிறல்
சேர்வேந்தன் ஒருதுரும்பு,
செய்யகலை நாமகள் கடாட்சமுள் ளோர்க்கெலாஞ்
செந்தமிழ்க் கவிதுரும்பாம்.
வாராரும் மணிகொள்முலைவள்ளிதெய் வானையை
மணம்புணரும் வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
பொருள்
கச்சினாலிறுக்கப் பெற்ற மணிமாலை யணிந்த
முலைகளையுடைய வள்ளிக்குந் தெய்வயானைக்குங் கணவனே!, அளவு செய்யாமல்
வழங்கும் வள்ளல்களுக்கு நல்ல பொருள்கள் துரும்பு போலாகும்; தன்னுடைய உயிரைப் பொருளாக நினையாத வீரனுக்குப் பகைவரின் படைகளெல்லாம் ஒரு துரும்புக்குச் சமம், புகழ்பெற்ற பெரியோர்களுக்குத் தாழ்ந்த
மக்கள் கையாற் பயன்பெறுதல் துரும்புக்கு நிகராகும், உயர்ந்த வீடுபேற்றிலே நினைவுள்ளவர்களுக்குப் பெண்களாற் பெறும் இன்பம் துரும்புக்கு நேராகும்; எல்லாவற்றையும் வெறுத்துவிட்ட துறவிக்கு வெற்றியையுடைய அரசன் ஒரு துரும்புக்கொப்பாவான்.
நன்மை தருங் கலை வடிவமான நாமகளின் அருள்
பெற்றவர்கட்கெல்லாம் செந்தமிழிலே செய்யுள் செய்தல்
துரும்பெனலாகும்—குமரேச சதகம்
****
குருபாததாசர் சொன்ன துரும்புகளை உண்மையென நிரூபித்த சில சம்பவங்களைப் பார்ப்போம் :
துறவிக்கு வேந்தன் துரும்பு!
“போந்த உதாரனுக்குப் பொன் துரும்பு சூரனுக்குச்
சேர்ந்த மரணம் சிறு துரும்பு – ஆய்ந்த
அறிவோர்க்கு நாரியரும் துரும்பாமில்லத்
துறவிக்கு வேந்தன் துரும்பு”
பொருள்; வள்ளல் குணம்படைத்தவனுக்கு தங்கமும் துரும்பு போலாகும். வீரனுக்கு மரணம் துரும்பு; கற்று அதன் பயனாக ஞானம் அடைந்தவனுக்கு பேரழகிகளும் துரும்புதான். உலகையே துறந்தவனுக்கு அரசன் ஒரு துரும்புதான்.
யாருக்கு யார் துரும்பு. என்று அவ்வையாரின் இந்த செய்யுள் அழகாக விளக்குகிறது. எல்லோருக்கும் வாரி வழங்கும் உதார குணம் படைத்த வள்ளலுக்கு தங்கம் (பொன்) துரும்புக்குச் சமம். செத்தும் கொடுத்தான் சீதக்காதி பற்றிய கட்டுரையில் செத்த பிறகும் கல்லறையில் இருந்து தங்க மோதிரம் கொடுத்த கதையைப் பார்த்தோம். கர்ண மாமன்னன் தனது கவச குண்டலங்களைக் கழற்றிக் கொடுத்ததை அறிவோம்.
திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்தவர் ஏலேல சிங்கன். அவர் பெரிய வணிகன். எவ்வளவு தானம் செய்தும் பணம் சேர்ந்துகொண்டே இருந்தது. அவைகளை எல்லாம் தங்கக் கட்டிகளாக மாற்றிக் கடலில் எறிந்தாராம். அவைகளை சுறாமீன்கள் விழுங்கின. அவற்றைப் பிடித்த மீனவர்கள் மீன்களின் வயிற்றை அறுத்துப் பார்த்தபோது தங்கக்கட்டிகளில் ஏலேல சிங்கன் முத்திரை இருபதைப் பார்த்து மீண்டும் அவரிடமே சேர்ப்பித்தனர் என்றும் அறிவோம்.
“கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்” என்ற பெரிய புராண வரிகளையும் நினைவு கூறுதல் பொருத்தம்.
“ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டாவர்கள்
நாடும் பொருளான நட்பே பராபரமே”— என்பார் தாயுமானவர்.
“ சங்கநிதி பதும நிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்— என்பார் அப்பர்.
பகவத் கீதையில் கண்ணபிரானும் யோகிகளுக்கு “சமலோஷ்ட காஞ்சனம்” (ஓடும் பொன்னும் ஒன்றே) என்பார் (அத்தியாயம் 6—8, அத்தியாயம் 14-24)
வீரன் பற்றி சேக்ஸ்பியர்
வீரனாகப் பிறந்தவனுக்கு சாவு (மரணம்) என்பது துரும்புக்குச் சமம். –கோழைகள் பலமுறை சாகின்றனர்; வீரனுக்கோ ஒரே முறைதான் சாவு—என்று ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் பிரபல ஆங்கிலக் கவிஞர்–நாடக ஆசிரியர் சேக்ஸ்பியர் கூறுகிறார். அதாவது வீரனுக்கு ஒரே முறை மரணம். கோழைகளுக்கு ஆயிரம் முறை மரணம். வீரர்கள் இறந்தபின்னர் சுவர்க்கத்துக்குப் போகிறார்கள் என்று பகவத் கீதையும் புறநானூறும் கூறுவதை ஏற்கனவே ஒரு கட்டுரையில் கொடுத்துள்ளேன்.
“Cowards die many times before their deaths; The valiant never taste of death but once.”?— சேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸர் நாடகம்
விவேகனந்தர் – பெண்கள் கதை
கசடறக் கற்று அதற்குத் தக நிற்போருக்கு பேரழகிகளும் துரும்புக்குச் சமம். வெளிநாட்டில் இருந்தபோது, சுவாமி விவேகானந்தரை மயக்கி அவப் பெயர் உண்டாக்க எத்தனையோ பெண்களை அனுப்பிப் பார்த்தும் அவர் மயங்கவில்லை. இன்னொரு பணக்கார அமெரிக்க மாது தனது “சொத்து சுகம் அனைத்தும் தங்களுக்கே” என்று (கெட்ட எண்ணத்துடன்) அர்ப்பணித்தபோது ‘நன்றி, சகோதரி’ என்று சொல்லி உதறிவிட்டார். விசுவாமித்திரர் போன்ற தவ சீலர்களும் முதலில் மேனகைக்கு மயங்கி தனது தவம் எல்லாவற்றையும் இழந்து, பின்னர் மீண்டும் தவம் செய்து, வசிஷ்டர் வாயால் ‘பிரம்ம ரிஷி’ பட்டம் பெற்றனர்.
அலெக்ஸாண்டர்—இந்துத் துறவி கதை
துறவிக்கு வேந்தனும் துரும்பு என்பதற்கு அலெக்ஸாண்டர்-இந்துத் துறவி சந்திப்பு ஒரு நல்ல உதாரணம். நிர்வாணசாமியார்களுடன்அலெக்ஸாண்டர் என்ற எனது பழைய கட்டுரையில் இரண்டு சுவையான சம்பங்களை எழுதியுள்ளேன். இந்து மதத்தின் மீதும் இந்து சந்யாசிகளின் மீதும் பேரன்பு கொண்ட அலெக்ஸாண்டர் வலுக்கட்டாயமாக ஒரு இந்து சந்யாசியைக் கொண்டுபோக முயன்றபோது அவர் தீக்குளித்தார்.(மேல் விவரங்களை எனது கட்டுரையில் காண்க).
அகஸ்தியர்- நகுஷன் கதையும் நல்ல உதாரணமாகும். கடுமையான தவம் இயற்றி இந்திரன் பதவியை பெற்றவன் நகுஷன் என்னும் மாமன்னன். இவனை சப்தரிஷிகளும் சுமந்து செல்லும் அளவுக்குப் பேறு பெற்றான். ஒரு முறை பல்லக்குச் சமச் சீராகச் செல்லாததற்குக் காரணம் என்ன என்று கோபத்துடன் கேட்டான். அகஸ்த்ய மஹரிஷி குள்ளமாக இருப்பதால் பல்லக்கு ஆட்டம் கண்டது என்பதை அறிந்தவுடன் அவரை காலால் ஒரு உதைவிட்டு “வேகம் வேகம்” (ஸர்ப்ப ஸர்ப்ப) என்றான். சம்ஸ்கிருதத்தில் ‘ஸர்ப்ப’ என்றால் வேகம் என்றும் பாம்பு என்றும் இரண்டு பொருள் உண்டு. உதைபட்ட அகஸ்தியர், அரசனை ஸர்ப்பமாகப் போகக் கடவாய் என்று சாபம் இட்டார். அவன் பல்லக்கில் இருந்து பூலோகத்தில் விழுந்தான்; பாம்பாகப் பிறந்தான். இறுதியில் மன்னிப்புக் கேட்டபோது யுதிஷ்டிரன் (தர்ம புத்ரர்) மூலம் சாப விமோசனம் கிடைக்கும் என்று சொல்லி கோபம் தணிந்தார். துறவிக்கு வேந்தனும் துரும்பு அல்லவா?
திருவள்ளுவரும் இந்தக் கதையை மனதில் வைத்து,
“ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்” (899)
என்பார். உயர்ந்த கொள்கை உடையோர் கோபம் அடைந்தால் பெரிய மன்னர்களும் அரச பதவியை இழப்பர் என்பது இதன் பொருள். வேனன் போன்ற கொடியோர் அழிந்ததை புராணத்தில் அறிகிறோம்.
பிராமணத் த்வேஷிகளான நந்த வம்ச அரசர்களை , பார்ப்பான் சாணக்கியன் வேருடன் அழித்ததையும் வரலாற்றில் படிக்கிறோம். அவர் சாலையில் நடக்கும் போது ஒரு புல் தடுக்கியது. அதைப் பார்த்து நந்த வம்ச அரசன் சிரித்தான். இதனால் கோபம் அடைந்த உலக மகா அறிவாளி , சாணக்கியன், அந்தப் புல்லை வேருடன் பிடுங்கினாராம். இது போல உன் வம்சத்தையும் வேரறுப்பேன் என்று சொல்லிவிட்டு, மயில் வளர்க்கும் ஜாதியைச் சேர்ந்த சந்திர குப்தனைப் பயிற்றுவித்து மாபெரும் மகத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து அலெக்ஸாண்டர் படையையும் கூட மிரளவைத்தார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
27-3-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமாகியுள்ள சிறு கதை!
யூனிபார்மில் சிவப்புக் கறைகள் இருக்கலாமா?
ச. நாகராஜன்
அசோசியேஷனே அல்லோலகல்லோப் பட்டது!
பெரிய விழாவின் மத்தியில் ஒரு திருட்டு! எல்லோரும் ஸ்டேஜைப் பார்த்து இருந்த போது, அசோசியேஷன் ஆபீஸ் விழாக் கோலத்தில் திறந்திருக்க, உள்ளேயிருந்த ஆறு லட்ச ரூபாயைக் காணோம்.
செக்ரட்டரி அலறி விட்டார்.
ஆபீஸ் அருகில் இருந்த ஒரு வீடும் திறந்திருந்தது. அதில் பூஜை அறையில் இருந்த வெள்ளி விளக்கையும் காணோம்.
வட்டமான காம்ப்ளெக்ஸைச் சுற்றி இருந்த நான்கு கேட்டுகளையும் மூடச் சொல்லி விட்டார் செக்ரட்டரி.
வருடாந்திர விழா முடிந்து பரிசு கொடுக்கும் சமயத்தில் நடந்த இந்த திருட்டை எப்படிக் கண்டுபிடிப்பது? விழாவில் அனைவரும் தந்த கலெக்ஷன் பணம் போய் விட்டதே!
திடீரென்று மேடையின் மீது ஏறினார் ஒரு டிராஃபிக் கண்ட்ரோல் ஆபீஸர். அவரது யூனிபார்மே அனைவருக்கும் ஒரு தைரியத்தைத் தந்தது. யங் அண்ட் எனர்ஜடிக்!
“யாரும் பயப்பட வேண்டாம்! திருடனை உடனே கண்டுபிடித்து விடலாம்”. என்ற அவர் டிராபிக் அதிகமாக இருந்ததால் தான் உள்ளே வந்ததாகவும் அப்போது இதைக் கேள்விப்பட்டு சங்கடப்படுவதாகவும் கூறினார்.
இங்கிருந்து வெளியே போன ஒரு ஆளின் மீது எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அவன் கொஞ்ச தூரம் கூடப் போயிருக்க மாட்டான். யாராவது ஒரு ஸ்கூட்டரில் என் கூட வந்தால் பிடித்து விடலாம் அவனை” என்றார் அவர்.
அனைவரும் ஓகே, பலே, சபாஷ் என்றனர். பலரும் கூட வரத் தயாராயினர்.
அந்தச் சமயம் பார்த்து மேடையில் ஏறினான் டிராபிக் கண்ட்ரோலில் ஆபீஸராக வேலை பார்க்கும் சீனு.
அவனைப் பார்த்த ஆபீஸர், “கூட வருகிறீர்களா?‘வாருங்கள்” என்றார்.
மேடை மீது ஏறிய சீனு அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
அவன் கண் ஜாடை காட்ட கீழே இருந்து வந்த இன்னும் இரண்டு பேர் அவரைப் பிடித்துக் கொண்டனர்.
“இப்படி நமக்கு உதவி புரிந்த இந்த ஆபீஸருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அதோ அவர் ஓரத்தில் வைத்திருக்கும் பேக் பேக்கைத் திறந்து பாருங்கள் என்றான் சீனு.
அவசரம் அவசரமாக அங்கிருந்தோர் அதைத் திறந்து பார்க்க ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டு பன்னிரெண்டும் பார்ட் பார்ட்டாக பிரிக்கப்பட்ட குத்துவிளக்கும் இருந்தன.
‘ஆஹா’ என்று கூவினர் அங்கிருந்த அபார்ட்மெண்ட் சொந்தக்காரர்கள்.
சீனு கொடுத்த கயிறால் செக்ரட்டரி அந்த டிராபிக் ஆபீஸர் கையைக் கட்டினார்.
“எப்படிப்பா கண்டுபிடிச்சே, இவன் தான் திருடன்னு?”
“சார்! அவன் போட்டிருக்கிற யூனிபார்ம் என்னோடது. அதில் இருக்கும் இரண்டு சிவப்புக் கறைகளைப் போக்க லாண்டரியில் தர வீட்டு வாசலில் வைத்திருந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் லாண்டரிக்காரர் வந்து எடுத்துப் போவார். இங்கு ஒரே களேபரமாக இருக்கவே, அதைப் பயன்படுத்தி சாதகமாக என் டிரஸைப் போட்டு நாடகமாடி ஸ்கூட்டரில் தப்பிப் போகத் திட்டமிட்டு விட்டான் இந்த பலே திருடன். எனது சிவப்புக் கறைகள் இரண்டு இவனைக் காட்டிக் கொடுத்து விட்டன” என்ற சீனுவை அனைவரும் கை தட்டிப் பாராட்டினர்.
யாரோ ஒருவர் கூப்பிட்டதால் போலீஸ் வேன் கேட் வாசலில் வந்து நிற்க செக்ரட்டரி அதை அவசரமாகத் திறக்கச் சொன்னார்.
‘போலீஸ் நிஜமான போலீஸா என்று பாருங்கள்’ என்று அனைவரும் சொல்ல ஒரே சிரிப்பு!
திருடனைப் போலீஸ் கைது செய்ய, சீனுவை சூபர் ரியல் ஆபீஸர் என்றனர் அனைவரும்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் மே 4- ஆம் தேதி
உலக இந்து செய்திமடல்
****
Collected from popular newspapers and edited for broadcast.
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை மே 4- ஆம் தேதி 2025-ம் ஆண்டு
காஞ்சிபுரத்தில் புதிய சங்கராச்சாரியார் தீட்சை பெற்றார்
காஞ்சி சங்கர மடத்தின் 71-வது இளைய மடாதிபதியாக ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா பொறுப்பேற்றார்
காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதிக்கு சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என பெயர் சூட்டப்பட்டது.
2533 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அட்சய திருதியை நாளில் சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, சன்யாச தீட்சை வழங்கி ஆசி வழங்கினார். அதன்பின், இளைய மடாதிபதிக்கு சன்யாச தீட்சை வழங்கி, ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற பெயர் சூட்டப்பட்டது.
தீட்சை வழங்கும் நிகழ்ச்சி
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது மடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இளைய பீடாதிபதிக்கு தீட்சை வழங்கும் வழிபாடுகள் காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. காலை 6:00 மணியில் இருந்து, 7:30 மணிக்குள் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் உள்ள பஞ்சகங்கை தீர்த்தத்தில், இளைய மடாதிபதியான, சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மாவிற்கு 71வது மடாதிபதியாக சன்யாச தீட்சை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.தீர்த்த அபிஷேகம்
தீட்சை பெறுவதற்கு முன்பு திருக்குளத்தில் இறங்கிய கணேச சர்மா தனது கடுக்கண், மோதிரம், பூணூால், அரைஞாண் கயிறு ஆகியவற்றை துறந்து, மகிழ்ச்சியுடன் சந்நியாசத்தை ஏற்றார். அதன் பின் வேத மந்திரம் முழங்க காலை 6:30 மணிக்கு சன்யாச தீட்சை வழங்கினார் சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். தீட்சை வழங்கிய பிறகு காவி வஸ்திரம், கமண்டலம், தண்டத்தை ஸ்ரீகணேச சர்மாவுக்கு விஜயேந்திரர் வழங்கினார்.
தொடர்ந்து இளைய மடாதிபதி தலையில் சாளக்கிராமம் வைத்து, சங்கு தீர்த்ததால் அபிஷேகம் செய்து, பல்வேறு மந்திர உபதேசங்கள் செய்தார். காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றுள்ள கணேச சர்மாவுக்கு, ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று, பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நாமம் சூட்டினார். பின் இருவரும் இணைந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.
சந்நிதியில் தரிசனம்
தொடர்ந்து காலை 8.00 மணி முதல் 9.00 வரை ஸ்ரீ காமாட்சி அம்பாள் சந்நிதி மற்றும் ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் சந்நிதியில் தரிசனம் மற்றும் விஷேச பூஜைகள் நடந்தன. காலை 9 மணிக்கு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் இருந்து ஸ்ரீமடத்திற்கு ஊர்வலம் துவங்கியது. மடம் வந்தடைந்ததும் ஸ்ரீ மஹா திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வர சுவாமி சந்நிதியில் தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து பீடாதிபதிகள், ஸ்ரீ சங்கராச்சாரியார் மற்றும் ஸ்ரீ சுரேஷ்வராச்சாரியார் சந்நிதி, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா சுவாமிஜி மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் பிருந்தாவனத்தில் தரிசனம் செய்தனர்.
பிருந்தாவன் மண்டப மேடைக்கு சுவாமிகள் வருகை தந்தனர். வேத மந்திரம் முழங்க காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றார் ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அவருக்கு சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களின் பல்வேறு கோவில்களில் இருந்து வந்த பிரசாதங்களை இளைய பீடாதிபதி பெற்றுக்கொண்டார்.
பக்தர்களுக்கு தரிசனம்
மாலையில் பக்தர்களுக்குத் தரிசனம் தந்தார்கள்
விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி, டாக்டர் சுதா சேஷய்யன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச அய்யர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சிறப்பு ஏற்பாடுகள்
சன்யாச தீட்சை வழங்கும் நிகழ்ச்சியை காண வந்தவர்கள் கோவில் தெற்கு வாசல் வழியாக வந்து, நவராத்திரி மண்டபம் வழியாக மாடத்துக்கு வந்து, அங்கிருந்து திருக்குளத்தில் நடந்த நிகழ்ச்சிகளை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பார்வையாளர் மாடத்தில் 3 அகண்ட திரைகள் வாயிலாகவும் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் ஆகியோருக்கு திருக்குளத்துக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்த நகரும் தெப்பத்தில் அமந்து நிகழ்ச்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம், கச்சபேஸ்வரர் கோவில், பஜனை மண்டபம், காமாட்சி அம்மன் கோவில் மற்றும் சங்கர மடம் உள்ளிட்ட இடங்களில் இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு காமாட்சி அம்மன் கோயில் வளாகமும, சங்கர மடமும் வண்ண மின் விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பெயரில் திராவிட் ஏன்?
புதிய பீடாதிபதிக்கு பெற்றோர் வைத்த பெயரின் கடைசியில் தி ராவிட் என்ற வார்த்தை இருக்கிறது. பொதுவாக தமிழகத்தில் இருந்து வட இந்தியாவிற்கு குடி பெயர்பவர்கள், தங்கள் பெயருடன் தி ராவிட் என்ற வார்த்தையையும் சேர்த்துக்கொள்வர்.
இவரது முன்னோர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் வலங்கைமான் பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு குடி பெயர்ந்தவர்கள். அதனால் தான் அவரது பெயரிலும் தி ராவிட் என்ற வார்த்தை இருக்கிறது.
****
பொன்முடியின் பதவி பறிப்பு– இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி
தமிழக அமைச்சரவையில் பதவி வகித்த பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரின் பதவிகளும் பறிக்கப்பட்டன நீதி மன்றத்தின் கடுமையான விமர்சனம், எச்சரிக்கை ஆகியவற்றை அடுத்து தமிழ்நாடு முதல் அமைச்சர் ஸ்டாலின் இந்த நடவடிக்கையை எடுக்கும் நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டார்.
இந்து மதத்தையும் பெண்களையும் அமைச்சர் பொன்முடி வசைபாடியதால் இந்துக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடு முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர் . ஆகவே பொன்முடியின் பதவி நீக்கம் இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
***
பாரதத்தின் கலாச்சார பெருமை பற்றி நடிகர் ரஜினிகாந்த்
இன்றைய இளைஞர்கள் நாட்டின் கலாச்சாரம், பெருமைகள் குறித்து தெரியாமல் இருக்கிறார்கள். நாட்டின் உன்னதமான கலாச்சாரத்தை இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும் என்ற நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை கூறியுள்ளார்.
பாரத நாட்டின் பாரம்பரியம் ,கலாச்சாரம், அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளாமல் மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி இளைஞர்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்..
லதா ரஜினிகாந்த்தின் ஃபீஸ் ஃபார் சில்ட்ரன் (peace for children) அமைப்பு சார்பில் ‘பாரத சேவா’ என்ற புதிய அமைப்பின் அறிமுக நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
இந்த திட்டத்தை ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காணொளி மூலம் பேசிய ரஜினிகாந்த்,
செல்போன் யுகத்தில் இளைஞர்கள், பெரியவர்கள் என சிலர் நம் பாரத நாட்டின் பாரம்பரியம் ,கலாச்சாரம், அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளாமலேயே மேற்கத்திய கலாச்சாரம்நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறினார்.
ஆனால் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றக் கூடிய மக்கள் அதில் நிம்மதி இல்லை என்று சொல்லி பாரதத்தின் கலாச்சாரத்தை பின்பற்றிக் கொண்டிருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த்
தெரிவித்தார்.
****
கேதார்நாத், பத்ரி நாத் கோவில்கள் திறப்பு
இமயமலை மீதுள்ள கேதார்நாத் , பத்ரி நாத் ஆகிய இரண்டு புனிதத்தலங்களும் பக்தர்களுக்குத் திறந்துவிடப்பட்டன. இவை இரண்டும் ஆறு மதங்களுக்குத் திறக்கப்பட்டிருக்கும்; பின்னர் பனி பெய்வதால் ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும்
கேதார்நாத் சிவன் கோவில் மே மாதம் 2-ம் தேதி திறக்கப்பட்டது ; பத்ரிநாத் விஷ்ணு கோவில் இன்று திறக்கப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலத்தில் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்கள் உள்ளன .
கேதார்நாத் கோவில் சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகும் ; இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோவிலை கட்டியதாகவும் கருதப்படுகிறது.
பத்ரிநாத் அல்லது பத்ரிநாராயணா கோவில் என்று அழைக்கப்படும் கோவிவில் விஷ்ணு பிரதான கடவுளாகும். வைணவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இந்தக் கோவிலும் ஒன்றாகும்.
இவை இரண்டும் சார்தாம் எனப்படும் நான்கு புனித தலங்களுள் இரண்டாகும் . ஏனைய இரண்டு கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகும் ; ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பக்க்தர்கள் நான்கு தலங்களையும் ஒரே பயணத்தில் தரிசிப்பது வழக்கமாக இருக்கிறது
****
அடுத்ததாக அட்சய திருதியை செய்திகள்
ஒரே பந்தலில் எழுந்தருளி அருள்பாலித்த 12 பெருமாள்கள்!
அட்சய திருதியை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் 12 பெருமாளின் கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பகோணம் நகரைச் சுற்றிலும் 12 பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. அட்சய திருதியையொட்டி 12 கோயில்களிலிருந்தும் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்றனர்.
தொடர்ந்து டி.எஸ்.ஆர்.பெரிய தெருவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பந்தலில் 12 பெருமாள்களும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ரூ.12,000 கோடிக்கு தங்கம் விற்பனை!
அட்சய திருதியை ஒட்டி 12 ஆயிரம் கோடி ரூபாய்க்குத் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக அனைத்து இந்திய நகைக் கடை உரிமையாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அக்ஷய என்ற சமஸ்க்ருதச் சொல்லுக்கு அழியாதது என்று பொருள்; அந்த தினத்தில் எதைச் செய்தாலும் .எதை வாங்கினாலும் அதாற்கு அழிவு கிடையாது என்பது இந்துக்களின் நம்பிக்கை.
தங்கத்தின் விலை அதிகரித்துக் காணப்படும் நிலையிலும், அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண விற்பனை அதிகரித்தே காணப்பட்டது.
கடந்த ஆண்டு அட்சய திருதியையை ஒட்டி 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 20 டன் எடையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
இந்த ஆண்டோ இந்திய அளவில் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக வர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சென்னையில் காலை 6 முதல் தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நகை விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
****
மங்களூரு ஹிந்து ஊழியர் படுகொலை ; விஸ்வ ஹிந்து பரிஷத் பந்த் அறிவிப்பு
மங்களூருவில் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தட்சிண கன்னட மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டம், மங்களூரு அருகே ஹிந்து அமைப்பை சேர்ந்த சுஹாஸ்செட்டி என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். பஜ்பே பகுதியில் சென்றபோது மர்ம நபர்கள் , அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியாது. படுகொலை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
சுஹாஸ்செட்டி படுகொலையைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்தது.
தட்சிண கன்னட மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால் மங்களூரு நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
பெங்களூருவில் இருந்து வந்த நான்கு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதால் கேஎஸ்ஆர்டிசி பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
****
கோவிலை மறைத்து தி மு க BANNER பேனர் ; பக்தர்கள் கடும் அதிர்ச்சி
வேலூரில் கோவில் வழியை மறைத்து கட்சி விளம்பர பேனர் வைத்துள்ள திமுக-வினரால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் கஷ்டத்துக்குள்ளானார்கள்.
காட்பாடி அருகேயுள்ள காங்கேய நல்லூர் கிராமத்தில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
அங்குள்ள கிருபானந்தவாரியார் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் இந்த விநாயகர் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்
அந்த கோவிலின் வழியை மறைத்து திமுக விளம்பர பேனரை வைத்த திமுக-வினர், அதன் அருகேயே தண்ணீர்ப் பந்தலும் அமைத்துள்ளனர்.
இதனால் கோவிலுக்குள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளான பக்தர்கள், திமுக-வினர் இந்துக்களை அவமதிக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருவதாகக் குற்றச்சாட்டினர்.
****
மதுரையில் சித்திரைத் திருவிழா
நூறு உலக அதிசயங்களில் ஒன்று மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகும் . அங்கு நடக்கும் சித்திரைத் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. மீனாட்சி கல்யாணம், பின்னர் நடக்கும் தேர்த்திருவிழா,. அழகர்கோவிலில் இருந்து 13 மைல் நடந்து வரும் கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குதல் ஆகியன விழாவின் முக்கிய நாட்கள் ஆகும் ; இந்த விழாவில் மதுரை பெருமாள் கோவில் விஷ்ணு, திருப்பரங்குன்றம் முருகன் ஆகியோரும் பவனி வருவார்கள் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் சமய ஒற்றுமையை வளர்ப்பதற்காக மாமன்னர் திருமலை நாயக்கர் பல விழாக்களை இணைத்து இந்த பெரிய விழாவினை உருவாக்கினார்
லட்சக் கணக்கான மக்களை ஈர்க்கும் இந்த சித்திரைத் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கிவிட்டது.
மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 8-ம் தேதி காலை நடக்கிறது. அன்றிரவு மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் பவனி வருவார்.
மே 9 ம் தேதி மாசி வீதிகளில் சுவாமி, அம்பாள் திருத்தேரோட்டம் நடைபெறும்;
அழகர்கோவில் மலையில் இருந்து மே 10ம் தேதி கள்ளழகர், மதுரைக்கு புறப்படுகிறார். மே 12-ம் தேதி காலை அழகர் வைகையாற்றில் எழுந்தருளும் விழா நடக்கிறது.
****
ராமர் பாலத்தில் 1 கி.மீ., ‘வாக்கிங்’: கப்பல் நிறுவனம் சுற்றுலா ஏற்பாடு!
ராமர் பாலத்தில் 1 கி.மீ., துாரம் நடந்து சென்று தரிசிக்கும் வகையில், ஆன்மிக, கலாசார சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என, நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கும், ‘சுபம்’ என்ற தனியார் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன் கூறினார்.
நாகை-யில் இருந்து காங்கேசன் துறைமுகம் வரை, பிப்., 22 முதல் செவ்வாய்கிழமை தவிர்த்து, வாரம் ஆறு நாட்கள் பயணியர் கப்பல் இயக்கப்படுகிறது.
இருவழி கட்டணம், தற்போது 8,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பயணியரை மேலும் ஊக்குவிக்க, புதிய பேக்கேஜ் அறிவிக்கப்படுகிறது. இலங்கையில் ஐந்து இரவுகள், ஆறு நாட்கள் தங்குவதோடு, உணவு, தங்குமிடம், வாகனம் உட்பட ஒரு நபருக்கு 30,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், சிறப்பம்சமாக ராமர் பாலத்தில் ஒரு மணி நேரம் நடந்து செல்லலாம். ராமாயணத்துடன் தொடர்புடைய முக்கிய இடங்களை பார்வையிடும், கலாசார, ஆன்மிக சுற்றுலாவாக இது இருக்கும்.
நாகையில் இருந்து காங்கேசன் துறையை அடைந்து, அங்கிருந்து சீதாவனம், சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வாடிகா, ராவணன் குகைகள், பழங்கால பிரசித்தி பெற்ற கோவில்கள், புராண இடங்கள் மற்றும் ராமர் பாலத்தை பார்வையிடும் வகையில் சுற்றுலா அமையும்.
ஜூன் 1 முதல், 250 பேர் பயணிக்கும் வகையில், புதிய கப்பல் இயக்கப்பட உள்ளது. கப்பல், மூன்று மணி நேரத்தில் காங்கேசன் துறையை சென்றடையும்.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு
மே மாதம் 11 ஆம் தேதி
லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும்
வணக்கம்.
—SUBHAM—-
Tags- Gnanamayam, Hindu news, 4th May 2025, Vaishnavi Anand, broadcast