தமிழில் சொற் பிரேளிகை, பொருட் பிரேளிகை  கவிதைகள் (Post No.10,997)

WRITTEN BY B. KANNAN, DELHI

Post No. 10,997

Date uploaded in London – –    17 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பிரஹேலிகா–பிரகேளிகை

Written By B.Kannan,Delhi

அன்புடைய தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்

பிரபலக் கவிஞர்கள் தாங்கள் எடுத்துரைக்க விரும்பும் பொருளை, படிப்பவர்கள் நேரடியாகப் புரிந்துகொள்ள வைக்காமல் மறைத்து வைத்து, அதே சமயம் வெளிப்படையாக வேறு பொருள் படக் கூறுவது ஓர் இலக்கியப் பாணியாகும். இவ்வுத்தியைச் சம்ஸ்கிருதத்தில் “பிரஹேலிகா” “பிரேளிகை”(புதிர்) என்பர். (புரை (=சிக்கல்) + எளி (=சுளுவாகு) + கை = புரேளிகை > பிரேளிகை = சுளுவாக்கப்படும் சிக்கல் எனப்படும். “பிரகேளிகை”( புதிர் விளையாட்டு) என்றும், தமிழில் “விடுகவி” எனவும் அழைப்பர். வாசகரின் உய்த்துணர் திறனுக்கும், சிந்தனையாற்றலுக்கும் தூண்டுகோலாகவும் சவாலாகவும. இருக்கவல்லது. மேலும்,

இவ்வகை இலக்கியம் கவியின் கற்பனாசக்திக்கும்,சொற்களைச் சரியாகக் கையாளும் அவர்களது திறமைக்கும் எடுத்துக் காட்டாக விளங்குகிறது. இயல்பான எழுத்து அல்லது இயல்பு நவிற்சிக்கு மாறாக வார்த்தை அலங்கார அணியில் எழுதும் முறையான வக்ரோக்தியும் மற்றொன்று. வக்ர + உக்தி எனப் பிரிவுபட்டுக் கோணற்கூற்றுமுறை, மறைமுகக்கூற்று, எனப் பொருள்படும். அதாவது எதையும் நேராகப் பேச்சு வழக்கிலுள்ளது அல்லது அறிவுநூல்களில் உள்ளது போன்ற முறையில் அல்லாமல் சுற்றி வளைத்து அழகுபடுத்திக் கூறுதல் என்பதாகும்.இதுவும் ஏறக்குறைய இவ்வகையைச் சேர்ந்ததே.

இவை சொற்பிரேளிகை, பொருட்பிரேளிகை என இருவகையில் அறியப்படுகிறது. சித்திரக் கவியின் ஓர் அங்கமாகும் இவ்வணி அலங்காரம்.

சொற்பிரேளிகை. கிட்டத்தட்ட விடுகதை போல்தான். ஒரு சொல் மறைந்திருக்கும், கண்டு பிடிக்க வேண்டும். வீட்டில் பாட்டிமார்கள் இருந்தால் “மரக்கால்” கணக்கில் இப்படிக் கேட்டி ருக்கக் கூடும்!

முதலில் தமிழில் பார்ப்போம்……. (இணையத்தில் கண்டெடுத்தது)

விதையிருக்கும் ஆனாலோ கனியு மன்று

      வீச்சிருக்கும் அரிவாளோ இல்லை, உள்ளே

பதமுடைய பண்கொஞ்சும் குயிலோ இல்லை

       பாவாணர்க் குறவாகும், ஆனால் அஃதோ

இதமுடைய எழுத்தாணி  தானு மன்று

       இடைவிட்டுக் கதைசொல்லும் , பாட்டி யன்று

எதுவெனவே நீர்கணித்துச் சொல்க, இன்றேல்

       இதிலிரண்டால் உமைக்கடித்துக் குதற வைப்பேன்.

விடை –கவிதை   

இடையெழுத்து வி போனால் கதை என்றாகும்

இதிலிரண்டு-  கவி   கவி அதாவது குரங்கு . குரங்கை ஏவிக் கடிக்க வைப்பேன் என்பது பொருள்.

இதோ இன்னுமொன்று:

வாரணமாய் முழங்கிடனும் யானை யன்று                    

வான்கிளர் நீர் த் தெனி னுமொரு பறவை யன்று              

சீரிய தாய் வரும்போங்கா லுடைய தன்று

செந்நாவா யுறி னுமுண வண்ப தன்று                      

மாரிபெயச் செய்திடினுந் தேவு மன்று                          

வண்மகர ராசியுறு மங்கு லன்று                               

தேருமெவர் தோய்ந்திடினும் வேசை யன்று                    

தென்னகுலை யூருளதென் செப்பு வீரே -( மயில்வாகனப் பிள்ளை- நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து)                         

பெரிதாகப் பிளிறினாலும் யானை இல்லை

வானை நோக்கி எழுந்தாலும், பறவையல்ல

வந்துகொண்டே இருக்கும் ஆனால் அழிவில்லை,

நாவும், வாயும் இருந்தாலும்  உண்பதற்கு அல்ல

மழை பெய்ய வைத்தாலும் தேவனல்ல

மகரராசியானாலும் வானத்தில் அல்ல

வெப்பத்தால் சிவந்தாலும் (சிவப்புச் சாயம் கலந்தாலும்) செம்பருத்திப் பூவல்ல

தென்னங்குலையும் என் மேல் உருளும்,நான் யார் சொல்லுங்கள்!

நீர்த்து–தன்மை உடையது /  நீரை உடையது

நாவாய்– நாவும், வாயும் / மரக்கலம்

மகரராசி– 12 ராசிகளுள் ஒன்று / சுறாக் கூட்டம்

விடை–கடல் / சமுத்திரம்

சம்ஸ்கிருதத்தில்…

वृक्षाग्रवासी न च पक्षिराजः

त्रिणेत्रधारी न च शूलपाणिः ।

त्वग्वस्त्रधारी न च सिद्धयोगी

जलं च बिभ्रन्न घटो न मेघः ॥

மரத்தின் மேல் குடியிருப்பேன், ஆனால் பறவை அல்ல,

மூன்று கண்கள் உண்டு, ஆனால் பரமசிவன் அல்ல

மரவுரி தரித்திருப்பேன், ஆனால் துறவி அல்ல

சுற்றி வளைத்து நீர் தேக்கியிருப்பேன், ஆனால் குடுவையோ, மேகமோ அல்ல

அப்படியென்றால் நான் யார்? —-தேங்காய் / இளநீர்

XXXX

பொருட்பிரேளிகை

ஒரே விடைதான் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் பொருள் ஒத்துப்போக வேண்டும்.

கோ தினகு லேச்சரத்தே கொங்கைப் பற்றி வாய்ப்புகுத்திச்

சாதிவய தோடுபயஞ் சார்முறைநா-ணீதியின்றி

யெல்லினும்யார் நின்றாலு மெவ்வுறுப்புந் தொட்டுநகைத்

தல்லசொலிக் கொஞ்சுவரே யார்? ( மயில்வாகனப் பிள்ளை- நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து)

இதுவே எளிய தமிழில்…….

கொங்கை பிடித்திழுப்பான், கூடவே வாய்புதைப்பான்

எங்கேயும் முத்த-இதம் பெறுவான் – சங்கையின்றி

ஆடையும் இன்றி அலைவான், இதைப்பார்த்துப்

பீடையெனத் திட்டப் பெறான் 

விடை

ஆண்குழந்தை, பாலன் என்றும் சொல்லலாம், பாலகன் என்னலாம்.

ஆனால் பொருள் ஒன்றுதான். எனவே இது பொருட்பிரேளிகை.

दन्तैर्हीनः शिलाभक्षी निर्जीवो बहुभाषकः ।

गुणस्यूतिसमृद्धोऽपि परपादेन गच्छति ॥

பற்கள் கிடையாது ஆனால் கடிப்பேன், கற்களைச் சாப்பிடுவேன், உயிர் இல்லை ஆனால் உரக்கச் சத்தம் போட்டுப் ‘பேசுவேன்’ பல குணாதிசயங்கள் என்னிடமுண்டு, பிறர் உதவியால் நடப்பேன், நான் யார்?

விடை: பாதேயம், செருப்பு, ஜோடு (புதுச் செருப்பு கடிக்கும், சரக், புரக் என்று தேய்த்துச் சத்தமிடும், சடக் சடக் என்று குதிகாலில் அடித்துக் கொள்ளும்)

சரி விளையாடியது போதும், தீவிரமாகத் தலைப்புப் பொருளுக்குள் போவோமா?

முத்துக்குமாரசேகரர் என்ற இயற்பெயரைக் கொண்ட முத்துக்குமார கவிராயர் அம்பல வாணப்பிள்ளைக்கும் சிங்க விதானையார் மகளுக்கும் மகனாக யாழ்ப்பாணம், உடுவிலில் பிறந்தார். சிறு வயது முதல் தந்தையரிடம் தமிழ் கற்று புலமை பெற்றார் என்பர். இவர் கவிபாடும் வன்மையில் மிகச் சிறந்தவர். இவர் கவிகளைக் கேட்டுணர்த்த கற்றோர் இவரைக் கவிராசர் என்று அழைத்தனர். சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் இவருக்கு பேரர்.ஆவார். சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் இவரும் ஆறுமுக நாவலரும் மற்றும் சங்கரபண்டி தரும் யாழ்ப்பாணத்தில் கிறித்து மதத்தினரின் போலிப் பிரசாரத்துக்கு, மக்களை மயங்கி வருந்தாது தடுத்தனர் என்றும் இவர்களின் கண்டனங்களால் கிறித்துவ மதக் கொள்கைகள் வலியிழந்து தடுமாறியது என்று பின்வருஞ் செய்யுளில் மதுரை வித்துவான் சபாபதி முதலியார் கூறியுள்ளார்…

முத்துக் குமார கவிராசா சேகரன் மொய்யமரிற்

றத்தித் தட்க்குண்டு நாவலர் தாவச் சவிமடித்து

சித்தங் கெடவுட றாமொத ரேந்தரன் சிதைந்தபைபிள்

செத்துக் கிடக்குது பார்சிவ சங்கரன் றெம்முனைக்கே,

இவர் தனிப்பாடல்கள் பல இயற்றியிருந்த போதிலும் அவை அச்சு வடிவில் வெளிவரவில்லை என்பது மனவருத்தத்தையே அளிக்கிறது. எல்லாமே செவிவழி வந்ததாகவே உள்ளன. இவரது பேரர் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் “முத்தக பஞ்ச விஞ்சதி” என்னும் பெயரில் 25 செய்யுட் கள் அடங்கிய  நூலாக வெளியிட்டார். இவை தில்லை நடராசர், நல்லூர் முருகன் மற்றும் மாவை எனும் மாவிட்டபுரம் முருகன் மீது பாடப்பட்டவை ஆகும். அவையெல்லாம் பிரேளி கையின் உப்பிரிவாகக் கருதப்படும் “நாமாந்தரிதை” அலங்கார அணியைச் சேர்ந்ததாகும்.

நாமாந்தரிதை என்பது கருதியபொருளை வேறு பெயர்களில் மறைத்து வைப்பதாகும். தமிழி லக்கியச் சோலையில் இவ்வகையில் அமைந்த மனங்கவரும் மலரையொத்தப் பாக்கள் பல உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த கொட்டம்பட்டி கருப்பையா நாவலர், ஈழம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கவிஞர்கள் முத்துக்குமார கவிராயர், சேனாதிராயர் முதலியார், க. மயில்வாகனப் புல வர் ஆகியோர் இயற்றியுள்ளச் சில நாமாந்தரிதைப் பாடல்களைப் பார்க்கப் போகிறோம்….

பாத்திரப் பெயர்கள்:

பன்னி ரண்டு கரகந் தனையெட்டு

   பானை யைத்துண் டதரக் குயவனை

 முன்னி ரண்டு குடங்கையி லேந்தியை

  முட்டி முட்டிமல் லார்மாவச் சாடியைப்

 பொன்இ ரண்டு பெறும்பெருஞ் செட்டியைப்

  போற்று வீர்புல வீர்சக ரந்தனை

 முன்னர் வைத்த கலசம்பத் தும்பெறீஇ

  முதன்மை சால்பெரு வாழ்வுறன் மெய்ம்மையே

          (சுன்னாகம் முத்துக்குமார கவிராயர், தனிப்பாடல்)

உரை: பன்னிரண்டு கர கந்தனை– 12 கைகளையுடைய கந்தசாமியை,

எள், துப்பு, ஆனைஐ துண்டம், அதரம் குயம் அனை முன் இரண்டு குடங்கையில் ஏந்தியை–எள் பூ, பவளம், யானையையும் முறையே நிகர்த்த மூக்கு, அதரம், முலை முதலியவற்றை உடைய உமையம்மையால்

முன்பே உள்ளங்கை இரண்டினாலும் ஏந்தி வளர்ந்தருளப் பட்டவரை,

முட்டி முட்டி மல்லார் மாவைச் சாடியை– பலமுறை எதிர்த்துப் போராடி வலி நிறைந்த மாமர வடிவாய் நின்ற சூரபத்மனைச் சம்ஹாரம் செய்தருளியவரை,

பொன் இரண்டு பெறும் பெரும் செட்டியை– தெய்வானை, வள்ளி ஆகிய இருவரையும் தேவியராகப் பெற்றுக்கொண்ட பெரியச் செட்டியை,

புலவீர் போற்றூவீர்– புலவர்களே போற்றுங்கள்,

சகரந்தனை முன்னர் வைத்த கலசம் பத்தும் பெறீ இ– சகல சம்பத்துக்களையும் பெற்று,

முதன்மை சால் பெருவாழ்வுறன் மெய்ம்மையே– முதன்மை நிறைந்த பெருவாழ்வினை அடைவது நிச்சயம்.

இதில் குறிக்கப்பட்டுள்ள நாமங்களான கரகம்,பானை, குடம், முட்டி, சாடி, கலசம், சால் என்பவை பாத்திரப் பெயர்கள்

துப்பு=பவளம், துண்டம்=மூக்கு, குயம்=ஸ்தனம், அனை=அன்னை, குடங்கை=உள்ளங்கை

கரகத்தைப் பானையைச் சாடியைச் சட்டியைத் துதித்தால்(ஆறுமுகன்) 16பேறும் பெற்றுச் சுகமுடன் வாழலாம் எனப் பொருள் கொள்க.

வேறொரு சான்று. இதில் 12 ராசிப் பெயர்களின் மூலம் சொல்ல வேண்டிய விஷயம் சொல்லப்படுகிறது.

மேடமுகைப் பவன்றாதை யிடப மேறி

 மிதுனவடி கடகமுழந் தாள்கொள் சிங்கா த்

தேடுனெழிற் கன்னி துலா நிகர்த்த நீதி

 சிறந்தயன்றன் செய்யவிருச் சிக்கங் கொய்தா

னாடுநலத் தன்னை தனு நிகர்கொ ணொற்றி

 நவின் மகரக் குழைக்கும்ப முலைசேன் மீனங்

கூடுவிழி யுடையவடன் கொழுநன் யாரே ற்

 குலவுமெழி னகுலைநகர் க் கோயி லானே — ( புலவர் மயில்வாகனப் பிள்ளை பாடல்)

மேடம் உகைப்பவன் தாதை– ஆட்டுக்கிடா வாகனத்தை மிக விரும்பும் கந்தவேளின் தந்தை

இடப மேறி– ரிஷப வாகனம் ஏறும்

மிதுன அடி- உபய பாதம், இரு கால்களும்

கடக முழந்தாள் கொள்–நண்டு போன்ற முழ்ந்தாள்

சிங்காத் தேடு எழிற் கன்னி–குறையில்லா அழகுடையப் பெண்

துலா நிகர்த்த நீதி சிறந்த என்றன்– தராசுமுள் போல் இடம் பெயராமல் சிறந்த நீதி வழங்கும்

செய் அவிர் உச்சிக் கம் கொய்தான்– செவ்விய, பிரகாசமான உச்சித் தலையை அறுத்த வயிரவர்

நாடு நலத் தன்னை–பூமியை ரக்ஷிக்க

தனு நிகர் ஒற்றி–வில்லின் உதவியால்

நவின் மகரக்குழை– அழகான சுறாமீன் போன்ற காதணியைத் தரித்தவள்

கும்ப முலைசேன்–கலசம் (அ)யானையின் மத்தகம் போன்ற ஸ்தனங்களையுடைய

மீன கூடுவிழி யுடையவடன் கொழுநன் யாரே– மீனின் அழகியக் கண்களை உடைய உமையவளின் பதியே

குலவு எழின் குலைநகர்க் கோயிலானே- எழில் நிறைந்த நகுலை நகரில் கோயில் கொண்டுள்ள நகுலேச்சுரரே!

ஈழத்துத் தமிழ்க் கவிஞர்களின் கைவண்ணம் இப்படியென்றால், நம் தமிழகப் புலவர்களின் ”நாமாந்தரிதை” திறமை அவர்களுக்குச் சிறிதும் குறைந்ததில்லை என்பதை அடுத்துக் காண இருக்கிறோம்….. (தொடரும்)

TAGS-  சொற்பிரேளிகை, பொருட்பிரேளிகை,  கவிதைகள், பிரஹேலிகா

சிரிக்காவிட்டால் விடமாட்டேன்! (Post No.10,996)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,996

Date uploaded in London – –   17 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 80

Kattukutty

சிரிக்காவிட்டால் விடமாட்டேன்!

ஒரு காட்டுக்கு 5 பேர்வேட்டையாட போனார்கள்.

மூன்று பேரை சிங்கம்அடித்து கொன்று தின்றுவிட்டது.

பாக்கி 2 பேரை விட்டு விட்டது…….

ஏன்?…

அவுங்க இரண்டு பேரும் LION CLUB மெம்பர்களாம்!!!

டாக்டர் – சே இவ்வளவு கஷ்டப்பட்டும் பேஷன்டை பிழைக்க

வைக்க முடியல்லியே?

Assistant – ஏ லூசு டக்டர்! நீ பண்ணினது ஆபரேஷன் இல்லே,

போஸ்ட் மார்ட்டம்!!!

தலைவர் ஏன் மேடல வைச்சு இந்த அடி அடிக்கிறாங்க???

ஓட்டப் பந்தயத்துல முதலாவதாக வந்த பெண்ணுக்கு

“ஓடு காலி “ ன்னு பட்டம் கொடுத்தாராம்!!!

ஆபரேஷன் தியேட்டர்ல என்ன கலாட்டா???

பேஷன்டுக்கு பதிலா ரெஸ்ட் எடுத்துக்கிட்ருக்கற டாக்டரை தவறுதலாந்தூக்கிட்டு வந்துட்டாங்களாம்!!!

தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு…….

ஏன்? இப்ப கட்சி   ஊர்வலத்திலிருக்கற எல்லோருக்கும்

குவாரட்டருக்கு பதிலா “டானிக் பாட்டில்” தராராம்!!!

டாக்டர், இந்த மருந்துக்கு சைட் எபக்ட் இருக்காதுன்னு

சொன்னீங்க…..ஆனா இப்ப வயிறு வீங்கிப் போச்சே???

வயிறு நடுவுலதானே இருக்கு சைட்ல இல்லேல்ல……..

போகாதே, போகாதேன்னு நவகிரக சன்னதிலிருந்து தொண்டர்கள்

எதுக்கு கோஷம் போடறாங்க???

தலைவரோட ராசிக்கு சனி எட்டுல போறாராம், அதை நிறுத்தத்தான்

போராட்டம் நடத்துறாங்க!!!

காதல் ஒரு மழை மாதிரி,நனையும் போது சந்தோஷம்,

நனைந்த பின் ஜலதோஷம்!!!

அவர் பிருமாண்டமான பல்டாக்டர்! பல் செட்டுக்கூட தோட்டா

தரணியைத்தான் கூப்பிடுவார்என்றால பார்த்துக்கோயேன்!!!

கவிதை என்பது வார்த்தை தொகுப்பு!

காதல் என்பது வயசுக் கொழுப்பு!

திருடன்-1 டேய் ! நாம் திருடின பணத்தை எண்ணாம கூட ஒளிச்சு

வச்சிருக்கோமே???

திருடன்-2 அதுனால என்ன…. நாளைக்கு பேப்பர்ல வருமில்ல

அப்ப பாத்துகலாம்?…..

மனைவி – நம்ம பையன் வளர்ந்து என்னவாக வேண்டுமன்னு

ஆசை ப் படுறீங்க???

கணவன் – என்னவேணாலும் ஆகட்டும், ஆனா யாருக்கும்

புருஷனாக மட்டும் ஆக க்கூடாது. நான் பட்ட கஷ்டம்

என்னோடு போகட்டும்…….

மனைவி – உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லா இருக்குன்னு

ஏன் பொய் சொன்னீங்க???

கணவன்-எனக்கு பொண்ணு பார்க்கும்போது உண்மையைச்

சொன்னானா அவன்???

பியூன்- மணி ஆறாகுது இன்னும் வீட்டுக்குப்போகலியா?

அதிகாரி – இன்னைக்கு வருமானம் ஒண்ணு கூட இல்லே

வீட்டுக்கு போனா மானம் போகும்……

ஏட்டையாவை ஏன் அரெஸ்ட் பண்றாங்க???

ஆர்வக்கோளாறுல “மாமூலுக்கு வருமான வரி விலக்கு உண்டு”

அப்டீன்னு எழுதி ஸ்டேஷன் வாசல்ல போர்டு எழுதி வச்சாராம்!

திருடன் – எப்போது இந்த புடவை எடுத்தே??? தீபாவளிக்கா ?

பொங்கலுக்கா?

மனைவி – கடைக்காரர் குனிஞ்சு பில. போடும்போது!’

ரிடையர் ஆகும்போது அவருக்கு பணமுடிப்பும் அருகம்புல் கட்டும்

கொடுக்கிறார்களே. ? ஏன்?

இந்த கம்பேனிக்கு அவர் மாடா உழைத்தாராம் அதுக்கு!

சார் சாப்பிட்டாச்சா பில் போடலாமா?

வேண்டாம், க்ரைண்டர்ல அரிசியப் போடுங்க…….

நீ என்ன பேஸ்ட் யூஸ் பண்ற?

பாபூஸ் பேஸ்ட்

என்ன சோப் யூஸ் பண்ற?

பாபூஸ் சோப்

அது என்ன புது பிராண்டா?

இல்ல என் ரூம் மேட் பெயர்!

24 மணி நேரமும் திறந்தே இருக்கும் கடை எது?

சாக்கடை!

நோயாளி – என கண்ணுக்கு சித்திர் குப்தன் தெரிகிறான் டாக்டர்…..

டாக்டர், ஆபரேஷன் நடக்கட்டும் எம்தர்மனே தெரிவார் பார்!

முதலாளி -ஏற்கனவே மகளுக்கு காது குத்தல், மகனுக்கு மொட்டை,

மாமியாருக்கு கருமாதின்னு ஏகப்பட்ட லீவு எடுத்துட்டே, இப்ப என்ன

காரணத்திற்காக லீவு கேக்கப்போற?

வேலைக்காரன் – நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன், அதற்காக

லீவு வேண்டும் முதலாளி!

அந்தப் படம் பயங்கர சண்டைப் படம்!

அதுனால என்ன?

டிக்கட் வாங்கும்போதே மூஞ்சில ஒரு குத்து விட்டு தான் டிக்கட்

கொடுக்கறாங்க…….!

கம்ப்யூட்டர் சென்டர் திறப்பு விழாவில தலைவர் மானத்த

வாங்கிட்டார்………

எப்படி?

ஆன் லைன் மாதிரி பெண் லைன் வசதி செய்யறதுக்கும் ஏற்பாடு

செய்யறேன்னு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்!

***

Tags- ஞான மொழிகள் – 80

திருடனுக்கு பிடித்த ராகம் எது? மாணவர்களுக்கு பிடித்த ராகம் எது? (Post No.10,989)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,989 (Missed Number)

Date uploaded in London – –   17 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 81

Kattukutty

(இது முழுக்க முழுக்க கடிஜோக்ஸ் – ஏற்கனவே நீங்கள் படித்தாககக் கூட இருக்கலாம். இருந்தாலும் ரசிக்கவும்)

வரதட்சிணையா two wheeler கேட்டது தப்பாப் போச்சு

மாட்டு வண்டிய கொடுத்து அனுப்பியிருக்காங்க?

திருடனுக்கு பிடித்த ராகம் எது?

“சுருட்டி”

மாணவர்களுக்கு பிடித்த ராகம் எது?

“காப்பி”

மிகவும் மக்கான ஊர் எது?

“மா மண்டூர்”!

கப்பல் ஏன் ஆடுது?

அது “தண்ணில “ இருப்பதால்’!

சலூன்காரருக்கு பிடித்த காய் எது?

“கத்தரிக்காய்”!

எலிக்கு பிடிக்காத படிப்பு எது?

“பொறியியல்”!

நோயாளி -ஆபரேஷனுக்கு பிறகு பீஸ் வாங்கிகங்க!

டாக்டர் -யாருகிட்ட?

உலகத்திலேயே எந்த நாட்டிலுள்ள மக்கள் சிரிக்கவே மாட்டாங்க?

“சிரியா”

ராவணன் காதலித்து தோத்து போனா அதுக்கு என்ன பெயர்?

ஒரு தலைக்காதல்

இல்லை ……. பத்து தலை காதல்!

புள்ளிமான் உடம்புல புள்ளி இருக்கும்,

கன்னுக் குட்டி உடம்புல கண்ணு இருக்குமா?…

‘வெட்டி’ சம்பளம் வாங்கரவரு யார்?

டெய்லர், பார்பர்

ரயில் நிதானமில்லாம தள்ளாடி தள்ளாடி்வருகிறது ஏன்?

அது “சரக்கு”ரயில்!

தண்ணீரிலிருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?

அப்படி எடுக்கல்லன்னா குளிக்கும்பொது ஷாக் அடிக்குமே!

மண்டேல போடறது DYE!

மண்டைய போட்டா அது DIE!

பரம்பரையா உட்கார்ந்து சாப்பிட பைசா இருந்தாலும்,

பாஸ்ட் புட் கடையில நின்னுகிட்டு தான் சாப்பிடணும்!

நீண்ட நாள் வாழ என்ன வழி?

வேறன்ன சாகாமல் இருப்பதுதான் !

டீ மாஸ்டர் என்னதான் டீ “லைட்டா”போட்டாலும்

அதுலேர்ந்து வெளிச்சம் வராது!

பவர்கிளாச எவ்வளவு நேரம் வச்சாலும்

அது கூலிங் கிளாஸ் ஆகாது!

என்னதான் திருவள்ளுவர் 1330 குறள் சொன்னாலும்,

அவரால ஒரு குரலில்தான் பேச முடியும்!

காதலி அடிச்சா வலிக்கும்,

பிரண்ட்ஸ் அடிச்சா வலிக்கும்,

சரக்கு அடிச்சா வலிக்குமா?

ஒரு அரசனுக்கு வந்த இரண்டு புறாக்களுக்கும்

கால்கள் இல்லை?

என்ன மந்திரி இது?

இதுதான் ‘Missed call” அரசே!

என்னதான் நாம அனுப்பற மெஸேஜ் அட்டு பழசாயிஇருந்தாலும்

உங்க மொபைல்ல நியூ மெஸேஜ் ரிசீ வ்டு ன்னு தான் வரும்!

ஒருவர்- என்னப்பா ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை பிச்சை

எடுக்க வரே?

பிச்சை -இந்த ஏரியாவ இரண்டு லட்சத்திற்கு ஏலம்

எடுத்திருக்கேங்க!

இந்த முறை நம்ம கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு

என்ன தருவாங்க?

அல்வா தருவாங்க!

தலைவரை உங்ங்க வீட்டு பிள்ளைன்னு சொன்னது தப்பாப்போச்சு

ஏன்.

எல்லார் வீட்லயும் போய் “பாக்கெட் மணி”கேக்குறார்!

என்னதான் கம்ப்யூட்டர்வ விண்டோவுலே  (COMPUTER WINDOWS) உலகமே தெரிஞ்சாலும்

எதிர் வீட்டு விண்டோவுல பொண்ணு தெரியமா?

ஏம்மா பிச்சை எடுக்க நீ வந்துருக்கே? உன்புருஷன் எங்கே?

பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சிங்கப்பூர் போயிருக்கரம்மா!

டைம் இஸ் கோல்ட் TIME IS GOLD  ன்னா ஏன் ஒத்துக்க மாட்டேங்கறே?

அத அடமானம் வைக்க முடியாதே?

ஜனவரி 14க்கும், பிப்ரவரி 14 க்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி 14!

அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி 14!

மாங்கா மடையனை சிங்கம் கடிச்சா என்ன செய்யும்?

சே புளிக்குதுன்னு துப்பிடும்.

என் மகனும் கரண்டும் ஒண்ணு,

இரண்டுமே வீட்டில இருக்கறதில்லே?

உங்க சின்ன குழந்த எப்படி அந்த சேரில் ஏறிச்சு?

அது “ஈஸி” சேராச்சே!

என்னதான்பூமி சூரியனை சுத்தி வந்தாலும்

பூமிக்கு சூரியன் பிக்கப் ஆகாது!

ரத்த வங்கிக்கு போனா ரத்தம் வாங்கலாம்,

இந்தியன் வங்கிக்கு போனா இந்தியா வாங்க முடியுமா?

அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பொண்ண காதலிக்கும்போது நீங்க அடிமை,

அதுவே அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா

நீங்க கொத்தடிமை!

காந்திஜி சாகரதுக்கு முன்னாடி எப்படி இருந்தார் தெரியுமா?

ஏன் தெரியுமே, உயிரோடு இருந்தார்!

லாரில கரும்பு ஏறினா காசு!

கரும்புல லாரி ஏறினா ஜூஸு!

பேப்பர போடுறவன் பேப்பர்காரன்,

பால் போடுறவன் பால்காரன்,

அப்ப பிச்சை போடுறவன் பிச்சைக்காரனா?

அதிரடி மெகா சீரியல் எடுக்கப்போறாங்களாமே, என்ன தலைப்பு?

இதுவாடா முடியும்!

சிகரட் குடிச்சா கேன்ஸர் வரும்ன்னு சொல்றாங்களே

அது உண்மையாடா?

தெரியல்லடா மாப்ளே, நான் குடிச்சா புகைதான் வருது!

நேற்று ஏன் லீவு?

ஒரு சேஞ்சுக்காக வீட்டிலேயே தூங்கிட்டேன்!

எல்லா மொழியும் பேசக்கூடியது எது?

எதிரொலி!

**

 TAGS- ஞான மொழிகள் – 81

மனம் என்னும் மாயம்! – 2 (10,995)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,995

Date uploaded in London – –     17 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மனம் என்னும் மாயம்! – 2

ச.நாகராஜன்

மூளை தான் மனமா?

இல்லை!

மனித தேகமானது தோல், சதை, ரத்தம், மாமிசம், எலும்பு, மலம், சிறுநீர், கேசம், நகம் உள்ளிட்ட பலவற்றின் சேர்க்கையே.

நன்கு சோதித்தால் இவை தவிர மற்ற எதுவும் உடலில் காணப்படவில்லை என்பதால் இவை மட்டுமே ஸ்தூல தேகம் எனப்படுகிறது.

 மூளையும் இந்த ஸ்தூல தேகத்தில் அடக்கம் என்பதும் பெறப்படுகிறது.

மூளை தான் மனம் என்று ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொண்டால் மூளை உள்ள போதெல்லாம் மனத்தின் தொழில் ஏற்பட வேண்டும்.

உறங்கும் போதோ, மயங்கி இருக்கும் போதோ (அதாவது ஸுஷூப்தி மற்றும் மூர்ச்சை காலங்கள்) மூளை இருந்தாலும் அது வேலை செய்யவில்லையே.

அதே போல ஒருவர் இறந்து விட்ட போதும் மனம் செயல்படக் காணோம்.

ஆகவே ஸ்தூல சரீரம், -மனித தேகம் – தான் மனம் என்பது சரியல்ல.

உண்மையில் மனம் என்பது தேகத்திலிருந்து வேறானது என்றும், அது ஸ்தூல சரீரத்தில் ஒரு ஆற்றல் போல உள்ளது என்றும், சங்கல்பம், காமம், நிச்சயம், ஊஹம் முதலியவற்றைச் செய்யும் ஒரு சூக்ஷ்ம வஸ்து என்றும் அறிய முடிகிறது.

மனதின் தோற்றமானது மூன்று விதமாக உள்ளது.

உணர்ச்சி, எண்ணம், தீர்மானம் (Feelings, Thought, Will) ஆகியவையே மனதின் தோற்றங்கள்.

இந்த மூன்றில் எது ஏற்பட்டாலும் மனித மூளை கொஞ்சம் சலிக்கிறது.

மனம் தொழில்படுகின்ற போது மூளையில் சலனம் ஏற்படுவது உண்மை.

மூளை என்பது தலையில் உள்ள ஒரு பாகம். இதில் சலனம் ஏற்படும் போது எண்ணம் உள்ளிட்டவை ஏற்படுகிறது.  மனம் வேலை செய்யும் போது மூளை சலனப் படுகிறது என்பதும் உண்மையே.

மனம் காணப்படாத ஒரு சூக்ஷ்ம வஸ்து என்பதால் அதன் தொழிலும் சூக்ஷ்மமாகவே இருக்கிறது.

ஒரு சைக்கிளில் செல்கிறோம். காலால் மிதித்து அதை உந்துகிறோம். சைக்கிளும் காலும் ஒன்று என்று சொல்ல முடியுமா?

கடிகாரம் செயல்படும் போது மணிகாட்டி முள்ளும் விநாடி முள்ளும் நிமிஷம் காட்டும் முள்ளும் சலிக்கின்றன. அதனால் கடிகாரத்தில் உள்ள சக்கரங்களும் மணி, நிமிஷம், வினாடி காட்டும் முள்ளும் ஒன்று என்று சொல்ல முடியுமா?

சக்கர இயக்கம் வேறு; முள்களின் இயக்கம் வேறு.

முள்களின் இயக்கம் நம்மால் காணப்படுகிறது. சக்கர இயக்கங்கள் காணப்படவில்லை.

இவை இரண்டும் வேறு என்பது போலவே மூளை இயக்கமும் மனதின் இயக்கமும் வேறு வேறு தான்!

ஒரு நீதிபதியும் அவர் உட்கார்ந்து விசாரிக்கும் ஆசனமும் போலத் தான் மனமும் மூளையும் உள்ளது.

கோர்ட்டில் நீதிபதியின் ஆசனம் எப்போதும் உள்ளது. ஆனால் நீதிபதி அதில் அமர்ந்தால் தான் விசாரணை நடக்கும்.

அதே போல மூளை எப்போதும் இருக்கிறது என்றாலும் அந்த மூளையில் மனம் நின்று இயக்கம் ஏற்படவில்லை எனில் எண்ணம் உள்ளிட்டவை உண்டாவதில்லை. மனம் வந்து இயக்கம் ஏற்படும் போது உணர்ச்சி முதலியன ஏற்படுகின்றன.

ஆதலால் மூளையும் மனமும் வேறு வேறு என்பது உறுதிப்படுகிறதில்லையா!

         ***    

Tags-   மனம், மாயம், மூளை

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 54 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம் (Post.10,994)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,994

Date uploaded in London – –    16 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 54 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம்

மத்வ்யபாஸ்ரயஹா 18-56 என்னிடம் சரண் புகுந்து

மதுசூதன  1-35 கிருஷ்ணனின் மற்றொரு பெயர்

மத்யம் 10-20  நடு , மத்திய பகுதி

மனவஹ 10-6  மனுக்களும்

மனவே 4-1  மனுவுக்கு

மனஸா  3-6  மனத்தால்

மனஸஸ்து  3-42  மனத்தினும்

மனஹ 1-30  மனம்

மனஹ ப்ரஸாதஹ 17-16 மனத்தின் தெளிவு ; தெளிந்த மனம்

மன ப்ராணே ந்த்ரிய க்ரியாஹா  18-33

மனஹ ஷஷ்டானி  15-7  மனத்துடன் கூடிய  ஆறு இந்திரியங்கள்

மனீஷிணஹ 2-51  அறிஞர்

மனீஷிணாம் 18-5 விவேகிகளுக்கு; அறிஞர்களுக்கு

மனுஷ்ய லோகே 15-2  மானிட உலகில்

மனுஷ்யாணாம் 1-44  மனிதர்களுக்கு

மனுஷ்யாஹா 3-23   மனிதர்கள்

மனுஷ்யேஷு 4-18  மனிதர்களுள்

மனோகதான் 2-55  மனத்தில் அடங்கிய

மனோரதம் 16-13  ஆசை

மந்தவ்யஹ 9-30 கருதற்குரியவன் 20 WORDS

மந்த்ர ஹீனம் 17-13  மந்திரத்தில் குறைபாடுகளுடன்

மந்த்ரஹ  9-16  மந்திரம்

மந்தான் 3-29  மூடர்களை , மந்த புத்தி உடையோர்

மன் மனா 9-34  என்னிடம் மனத்தை வைத்தவனாகவும்

மன் மயாஹா 4-10 என் மயமானவர்களும்

மன் யதே 2-19   நினைக்கிறானோ

மன்யந்தே 7-24 கருதுகின்றனர்

மன்யஸே 2-26  நினைத்தாய்

மன்யே 6-34 கருதுகின்றேன்

மன்யேத 5-8  எண்ண வேண்டும்

மம 1-7 என்னுடைய

மயா 1-22 என்னால்

மயி 3-30  என்னிடத்தில்

மரணாத்  2-34  மரணத்தைக் காட்டிலும்

மரீசி  10-21  (மருத் தேவர்களுள்) மரீசி

மருதஹ 11-6 மருத் தேவர்கள்

மருதாம் 10-21 மருத் தேவர்களுள்

மர்த்ய லோகம் 9-21  மனித உலகை

மர்த்யேஷு 10-3  மனிதர்களுள்

மலேன 3-38 அழுக்கால் 40 WORDS

மஹதஹ 2-40 பெரிய

மஹதா 4-2 பெரிய

மஹதி 1-14   பெரிய

மஹதீம் 1-3  பெரிய

மஹத் ப்ரஹ்ம 14-3 பெரிது; எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியது

மஹத் யோனிஹி 14-4 எல்லா உயிர்களின் பிறப்பிடம்

மஹர்ஷயஹ 10-2  மகரிஷிகளும்

மஹர்ஷி ஸித்த ஸங்காஹா 11-21

மஹர்ஷிணாம் 10-2  மகரிஷிகளுக்கும் 

மஹாத்மனஹ 11-12 மஹா புருஷனுடைய          50 WORDS

மஹாத்மா 7-19 மஹாத்மா – மனிதர்களில் உயர்ந்தோன்

மஹாத்மானஹ 8-15   மஹான்கள்

மஹானுபாவான் 2-5  போற்றுதலுக்குரிய பெரியோர்

மஹான்  9-6  அளவு கடந்ததும்

மஹா பாப்மா 3-37  பெரிய/ மஹா பாவத்தை தோற்றுவிப்பது

மஹா பாஹோ 2-26   பெருந்தோளா

மஹா பூதானி  13-5  பஞ்ச பூதங்கள்

மஹா ரதஹ -1-4   பெரிய (தேர்) வீரர்கள்

மஹா சங்கம் 1-15   பெரிய சங்கு (பெளண்ட்ரம் )

மஹாசனஹ 3-37  பெருந்தீனி வேண்டுவது

மஹிமானம் 11-41 பெருமையை

மஹீ க்ருதே  1-35   பூமியால்

மஹீ க்ஷிதாம் 1-25  அரசர்களுக்கு

மஹீ பதே 1-20 மஹா ராஜா

மஹீம்  2-37  பூமியை       65 WORDS

65 words added from this index 54

TO BE CONTINUED ………………………………..

Tags –பகவத் கீதை, சொற்கள், இண்டெக்ஸ் 54, Gita index 54,

பணமே உனக்குத் தான் எத்தனைப் பெயர்கள்!!!(Post No.10,993)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,993

Date uploaded in London – –   16 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள் – 79

Kattukutty

பணமே உனக்குத் தான் எத்தனைப் பெயர்கள்…

அர்ச்சகருக்குக் கொடுத்தால் தட்சணை என்றும்…

கோயில் உண்டியலில் செலுத்தினால் காணிக்கை என்றும்…

யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை என்றும்…

கல்விக் கூடங்களில் கட்டணம் என்றும்…

திருமணத்தில் வரதட்சணை என்றும்…

திருமண விலக்கில் ஜீவனாம்சம் என்றும்…

விபத்துகளில் இறந்தால் நஷ்டஈடு என்றும்…

ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்

தர்மம் என்றும்…

நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் தானம் என்றும்…

திருமண வீடுகளில் பரிசாக மொய் என்றும்…

திருப்பித் தர வேண்டும் என

யாருக்காவது கொடுத்தால் அது

கடன் என்றும்…

திருப்பித் தர வேண்டாம் என

இலவசமாகக் கொடுத்தால் அது

அன்பளிப்பு என்றும்…

விரும்பிக் கொடுத்தால்

நன்கொடை என்றும்…

நீதிமன்றத்தில் செலுத்தினால்

அபராதம் என்றும்…

அரசுக்குச் செலுத்தினால்

வரி என்றும்…

அரசுப் பொது தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது நிதி என்றும்…

செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது சம்பளம் என்றும்…

தினமும் கிடைப்பது கூலி என்றும்…

பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது ஓய்வூதியம் என்றும்…

சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும்

லஞ்சம் என்றும்…

கடன் வாங்கினால் அத்தொகைக்கு

அசல் என்றும்…

வாங்கியக் கடனுக்குக் கொடுக்கும் போது வட்டி என்றும்…

தொழில் தொடங்கும் போது போடும் அதற்கு முதலீடு என்றும்…

தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு இலாபம் என்றும்…

குருவிற்குக் கொடுக்கும் போது

குருதட்சணை என்றும்…

ஹோட்டலில் நல்குவது

டிப்ஸ் என்றும்…

இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் பணத்திற்கு மாற்றாக

வேறொன்றும் இப்புவியில் இல்லை…

இந்தப் பணம் என்ற காகிதத்தைப் பெற…

சிலர் அன்பை இழக்கின்றனர்…

சிலர் பண்பை இழக்கின்றனர்…

சிலர் நட்புகளை இழக்கின்றனர்…

சிலர் உறவுகளை இழக்கின்றனர்…

சிலர் கற்பை இழக்கின்றனர்…

சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்…

சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்…

சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்…

சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்…

சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்…

***

பாடல்களில் பூக்களைத் தேடுங்கள் Post 10,992)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,992

Date uploaded in London – –   16 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள் – 78

Kattukutty

பாடல்களில் பூக்களைத் தேடுங்கள்

1.______கன்னங்கள் தேன்மலர் சின்னங்கள்

2._____மலருக்கு கொண்டாட்டம்

3.______ என் மன்னன் மயங்கும்

4._____மலர் மேலே மொய்க்கும்

5._____பூவின் நறுமணத்தில்

6. சந்திரனைத் காணாமல் ___ முகம் மலருமா

7.____ _____ பூச்செண்டு மரகத மாணிக்க

8._____தண்டு காலெடுத்து

9.______பூ முடிச்சு தடம் பார்த்து

10.______பூ திரியெடுத்து

வெண்ணையிலே நெய்யெடுத்து

11._____மலரே ராஜகுமாரி

12. மலரே _____ மலரே தலைவன் சூட

13._____புஷ்பங்களே ராகம் பாடு

14.______அவள் வீற்றிருப்பாள் புகழ்

ஏற்றிருப்பாள்

15.______ ஆறழு நாளா நான் போகும்

16._______ சிறு மைனாவே எங்க ராசாத்தி

17._____ _____ மனசுக்கேத்த _______

காம்போ கறுப்பு கைப்படாத _______

18.____ பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே

19.______ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும்

வந்தாச்சு

20.______ பாதக் ____

உயர் மறையெலாம் புகழும்

21.____பூ பல்லக்கு போவதெங்கே

22. இங்கு ரெண்டு _____ தொட்டுக்கொள்ளும்

காமன் பண்டிகை

23. முள்ளில்லா ______

முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்

24. சூரியன் போகும் திசையினில் எல்லாம்

வளையும் ______

25._______ பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க

எல்லா விடைகளும் தெரிந்தால் எழுதுங்கள்; உங்கள் பெயருடன் வெளியிடுவோம்

***

 tags- ஞானமொழிகள் – 78, பாடல்களில் பூக்கள்

மனம் என்னும் மாயம்! – 1 (Post No.10,991)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,991

Date uploaded in London – –     16 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மனம் என்னும் மாயம்! – 1

ச.நாகராஜன்

மனம் ஒரு மாயம்.

அதை முழுவதுமாக அறிவியல் இன்னும் அறியவில்லை.

ஆனால் நமது சனாதன தர்மம் அதை ஆராய்ந்து அதன்

தத்துவத்தை விளக்கியுள்ளது.

அறிவியல் ரீதியாகவும் சனாதன தத்துவ வாயிலாகவும்

மனதிற்குள் சற்றுப் புகுந்து ஆராய்வோம்.

மனதைப் பற்றி முற்றிலுமாக அறிந்து விட்டால் அதை வசப்படுத்த முடியும்.

மனம் என்பது என்ன? அது எப்படி இருக்கிறது? எங்கு இருக்கிறது?

மனதை எவராலும் கண்ணால் காண இயலாது.

உடலில் உள்ள எந்த அவயவங்களும் மனதைக் காணவில்லை.

மனம் நமது ஸ்தூல சரீரரத்தை அதாவது உடல் சார்ந்த ஒன்றே

தான் என்பது நாத்திகர்களின் முடிந்த முடிவு.

மனம் என்று தனியே ஒன்று இல்லை என்பது அவர்களின் வாதம்

இது சரியா?

பூமி (ப்ருதிவி), அப்பு (நீர்), தேஜஸ் (அக்னி) வாயு ஆகிய நான்கு பூதங்களும் தேகத்தின் வாயிலாகப் பரிணமிக்குமாயின்  அந்த தேகத்தில் அறிவு சக்தி பரிமளிக்கிறது.

விருப்பம், வெறுப்பு, சங்கல்பம், சந்தேகம், நிச்சயம், ஊகம்

ஆகியவை அந்த சக்தியினால் ஏற்படும் செயல்கள்.

மனத்தை எந்த இந்திரியத்தாலும் காண முடியவில்லை என்பதால்

அது சூக்ஷ்மமான ஒரு வஸ்து என்று கூறுவதும் ஒத்துக்கொள்ளத் தக்க ஒன்று அல்ல. இப்படி சூக்ஷ்ம வஸ்து என ஆத்திகர்கள்

கூறுவர்.

மனம் என்பது நான்கு பூதங்களின் பரிணாம விசேஷமாகிய

ஸ்தூல தேகத்தின் குணமே ஆகும். மரணகாலத்தில் அது குலைந்து அழிந்து போகின்றது என்பது நாத்திகர் வாதம். இது சரியல்ல.

சரி, ஒரு வாதத்திற்காக இதை சரி என்று வைத்துக் கொண்டால் ஸுஷூப்தி காலத்திலும் மூர்ச்சை அடைந்த காலத்திலும் அந்த

அறிவு சக்தி இருக்க வேண்டுமல்லவா? ஆனால் அப்படிப்பட்ட சமயங்களில் ஒரு விதமான அறிவு சக்தியையும் காணோம்.

தேகம் உண்டானது முதல் மரணம் வரையிலும் அந்த அறிவு சக்தியாகிய குணம் இருக்குமெனில் மரணத்தை விட வேறாக இருக்கும், தினந்தோறும் நடக்கும், ஸுஷூப்தி காலத்திலும்

மூர்ச்சை அடைந்த காலத்திலும் அந்த அறிவு சக்தி ஏன் காணப்படவில்லை?

ஆகவே நாத்திகர்களின் இந்த வாதம் அடிபட்டுப் போகின்றது.

இல்லை, இல்லை, மூளை தான் மனம் என்று சிலர் சொல்வர்.

இது சரியா? சற்று ஆராய்வோம்!

***  

தொடரும்Tags – மூளை, மனம், மாயம்

கெளடில்யரின் அர்த்த சாஸ்திர பொன்மொழிகள் (Post No.10,990)

கெளடில்யரின் அர்த்த சாஸ்திர பொன்மொழிகள் (Post No.10,990)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,990

Date uploaded in London – –    15 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

FESTIVAL DAYS- 12- VAIKASI VISAKAM, 13- KANCHI PARAMACHARYA JAYANTHI, 21- INTERNATIONAL YOGA DAY.

FULL MOON DAY – 14; NEW MON DAY- 28;  EKADASI-10, 24

AUSPICIOUS DAYS – JUNE 1,3,9, 10, 17,23, 27

ஜூன் 2022 நற்சிந்தனை காலண்டர்

பண்டிகை நாட்கள் – ஜூன் 12- வைகாசி விசாகம், 13- காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஜெயந்தி, 21- சர்வ தேச யோகா தினம்

அம்மாவாசை -28; பெளர்ணமி -14; ஏகாதசி விரத நாட்கள் -10,24

சுப முகூர்த்த நாட்கள்- JUNE 1,3,9, 10, 17,23, 27

xxx

ஜூன் 1 புதன் கிழமை

ரக்ஷேத் ஸ்வ தேஹம் ந  தனம்,  கா ஹ்யநித் யே  தனேதயா?

ஒருவனுடைய உடலைத்தான் காக்கவேண்டும்; உடைமையை அல்ல ; நித்தியமில்லாத செவத்தைப் பற்றி கவலைப்படுவதேன்

xxx

ஜூன் 2 வியாழக்  கிழமை

சமவ்யாயா மோ யோகக்ஷேமயோ ர் யோனிஹி

அமைதியும் தொழில்களும் தான் பாதுகாப்புக்கும் பொது நலனுக்கும் ஆதாரம் ஆகும்

xxx

ஜூன் 3 வெள்ளிக்  கிழமை

ந ச அகாமஹ   புருஷோஸ்தி

ஆசையில்லாத மனிதனே இல்லை

xxx

ஜூன் 4 சனிக்  கிழமை

நக்ஷத்ரமதி ப்ருச்சந்தம் பாலமர் தோ நிவர்த்ததே

அர்த்தோஹ்யர்த்தஸ்ய நக்ஷத்ரம் கிம்  கரிஷ்யந்தி தாரகாஹா ?

எப்போதும் ஜோதிடம் பார்ப்பவனை விட்டு செல்வம் பறந்தோடிப்போகும் ; அவன் செயல் சிறுபிள்ளைத்தனமானது ; செல்வமே செல்வத்துக்குரிய நக்ஷத்ரம் ; ஆகாயத்திலுள்ள தாரகைகள் என்ன செய்யும்?

xxx

ஜூன் 5 ஞாயிற்றுக்  கிழமை

சாஸ்த்ராவித ஹஷ்டகர்மா கர்மசு விஷாதம் கச்சேத்

(ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது)- அனுபவ அறிவு இல்லாத படிப்பாளி காரியத்தை நிறைவேற்ற முடியாமல் தவிப்பான்

xxx

ஜூன் 6 திங்கட்  கிழமை

ந த்வே வார்யஸ்ய தாஸ பாவஹ

நல்ல பண்பாடுமிக்க ஆளை (ஆரியனை)அடிமை(தாசன்) ஆக்கக்கூடாது

XXX

ஜூன் 7 செவ்வாய்க்  கிழமை

பரஸ்பர ஸாதகா  ஹி சக்தி தேச காலாஹா

இடம், காலம், அதிகாரம் ஆகியன ஒன்றுக்கு ஒன்று உதவி செய்யும்

ஒப்பிடுக – குறள் – கருவி, காலம், இடம்

xxx

ஜூன் 8 புதன் கிழமை

கார்ய சாமத்யார்த்தி  புருஷ ஸாமர்த்யம் கல் ப்யதே

செயலில் காட்டும் திறமையை வைத்தே ஒருவன் எடைபோடப்படுகிறான் .

xxx

ஜூன் 9 வியாழக்  கிழமை

இந்த்ரஸ்ய ஹி  ஸப்ரணமதி யோ பலீயசோ  நமதி

அதிகாரத்தில் உள்ளவனை வணங்குவது, இந்திரனை வணங்குவதற்கு சமம் ஆகும் .(இந்திரனைப் போல வரம் தருவார்கள்)

XXX

ஜூன் 10 வெள்ளிக்  கிழமை

ஸ்திர கர்மா நாஸமாப்ய கர்மோ பரமதே 

உறுதியான தொழிலாளி (அரைக் கிணறு தாண்ட முடியாது)  ; காரியத்தை முடிக்கும் வரை அவன் விடமாட்டான். ஒப்பிடுக- கருமமே கண்ணாயினார் பாடல்

XXX

ஜூன் 11 சனிக்  கிழமை

காஷ்டம் ஹ்யக்நி ரவஹிதோ வசதி

கட்டைக்குள் தீ வசிக்கிறது ; (விறகில் தீயினன் )

(எந்தப் புற்றில் எந்தப் பாம்பு வசிக்குமோ!)

XXX

ஜூன் 12 ஞாயிற்றுக்  கிழமை

நதீ  பாத்ருகம் ஹி ஸ்வாஜீவம் அபாக்ஷயஸ்சாபதி பவதி

ஆற்று நீர் பாசனமுள்ள பூமி, வாழ்க்கைக்கு வழிவகுக்கும்; கஷ்ட காலத்தில் ஆதரவும் தரும் ; ஒப்பிடுக- குறள் -துப்பார்க்குத் துப்பாய ……

XXXX

ஜூன் 13 திங்கட்  கிழமை

சித்தமநித்யம் ஹி  மனுஷ்யாணாம்

(மனம் ஒரு குரங்கு) மனிதனின் மனம் மாறிக்கொண்டே இருக்கும்

XXX

ஜூன் 14  செவ்வாய்க்  கிழமை

அசூசயோ ஹி காரவஹ

கொல்லன், தச்சன், கொத்தன் போன்றோர் பொதுவாக நேர்மையில்லாதவர்கள் .ஒப்பிடுக- சிலப்பதிகாரம்- பொற்கொல்லன்

XXX

ஜூன் 15 புதன் கிழமை

தைவ மானுஷம் ஹி கர்ம லோகம் யாபதி

கடவுளும் மனிதனும் சேர்ந்துதான் உலகத்தை நடத்துகிறார்கள்

ஒப்பிடுக – பகவத் கீதை – கர்மண்யேவ திகாரஸ்தே ; வினையே ஆடவர்க்குயிரே – குறுந்தொகை

XXX

ஜூன் 16 வியாழக்  கிழமை

ப்ரணிபாதேன ப்ராஹ்மணஸ்வ பரோஅபீஹாரயேத்

வணங்குதல் மூலம் அறிஞர் பட்டாளத்தைக்கூட வென்று விடலாம்

XXX

ஜூன் 17 வெள்ளிக்  கிழமை

ஸுமஹதாப்யர்த்தேன ந கஸ்சன் சரீர விநாசமிச்சேத்

பெரும் செல்வமே கிடைப்பதாயினும் , யாரும் சாவதற்கு ஆசைப்படுவதில்லை

XXX

ஜூன் 18 சனிக்  கிழமை

ஸாமான்யா ஹி பதி ஸித்திஸ்சாஸித்திஸ்வ

வெற்றியும் தோல்வியும் எல்லா பாதைகளிலும் வரக்கூடியதே

XXX

ஜூன் 19 ஞாயிற்றுக்  கிழமை

தாத்ருஸா ஹா தாத்ருசைரேவ  போத்தப் யாஹா

(பாம்பின் கால் பாம்பறியும்). ஒரு இனத்தைச் சேர்ந்தவர் அவர் இனத்தை எளிதில் அடையாளம் காண்பர் .

XXX

ஜூன் 20 திங்கட்  கிழமை

பராக்ரமோ ஹி  வ்யஸன மபஹந்தி

வீரத்தைக் காட்டினால்தான் தொல்லைகளை அடக்கமுடியும்

XXX

ஜூன் 21 செவ்வாய்க்  கிழமை

கர்மபலோ ப போகானாம் க்ஷேமா ராக்ஷனஹ சமஹ

கிடைத்தவற்றை தொல்லைகளின்றி அனுபவிக்கும்போதுதான் சாந்தி ஏற்படும்

XXX

ஜூன் 22 புதன் கிழமை

விக்ரமாதிகோபி ஹஸ்தினமிவ லுப்தகஹ ப்ராக்ஞஹசூரமதி சந்ததே

வீரதீரத் செயல்களில் கூட புத்திமான் பலவான் ஆவான்; பெரிய யானையை வேடன் கொன்றுவிடுகிறானே

XXX

ஜூன் 23 வியாழக்  கிழமை

விரக்தா யாந்த்யமித்ர வா பர்த்தாரம் க் நந்தி  வா ஸ்வயம்

மக்களுக்கு அதிருப்தி உண்டானால் எதிரிகளை நாடுவர் அல்லது ஆட்சிசெய்வோரை அழிப்பர் .ஒப்பிடுக ரஷ்யப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி

XXX

ஜூன் 24 வெள்ளிக்  கிழமை

புத்ரார்த்தா  ஹி  ஸ்திரியஹ

பிள்ளைகளைப் பெற்றுத் தருவதற்கு பெண்கள் அவசியமே

XXX

ஜூன் 25 சனிக்  கிழமை

ஸஹஸ்ரேஷு ஹி முக்யோ பவத்யேகோ  ந வா

ஆயிரம் பேரில் ஒரு தலைவன் கிடைப்பது அரிதிலும் அரிது

XXX

ஜூன் 26 ஞாயிற்றுக்  கிழமை

த்ருவம் ஹி ஸாக்ஷிபிஹி ஸ்ரோதவ்யம்

சாட்சிகள்  உண்மையை உரைக்கவேண்டும்

xxx

ஜூன் 27 திங்கட்  கிழமை

கர்மா ரம்பாணாம் யோகாராதனஹ வ்யாயாமஹ

செயல்கள் தான் வெற்றியைக் கொணரும் (வாய்ச்சொல், திட்டம் மட்டும் போதாது )ஒப்பிடுக – குறள் – வினைத் திட்பம்

XXX

ஜூன் 28  செவ்வாய்க்  கிழமை

ஏகம் ஹன்யாத் ன வாம் ஹன்யாதிஷுஹூ க்ஷிப்தோ தனுஷ்மதா

ப்ராக்ஞ்நேன மதிஹி க்ஷிப்தா ஹன்யாத் கர்பஹதானபி 

வில் வீரன் விடுத்த அம்பு ஒருவனைக் கொல்கிறதோ இல்லையோ , புத்திசாலி மனிதன் போடும் திட்டம் கர்ப்பத்தில் உள்ள சிசுவைக் கூடக் கொன்றுவிடும் .ஒப்பிடுக – மஹாபாரதம் – பிரம்மாஸ்திரம்

XXX 

ஜூன் 29 புதன் கிழமை

பலம் ஹி சித்தம் விகரோதி

பலமே மனிதனின் மனத்திற்கு ஆதாரம்; பலம் வந்துவிட்டால் மனது மாறும் ;ஒப்பிடுக – பலவீனனால் ஆத்மாவை அறிய முடியாது- உபநிஷதம்

XXX

ஜூன் 30 வியாழக்  கிழமை

அஸாரம் ஹி பால ப்ராதிபாவ்யம்

வயது குறைந்தவனின் வாக்குமூலம் பயனற்றது

xxx

BONUS QUOTE

ஸுகோபருத்தாஹா ஹி புத்ரா ஹா பிதரம் நாபித்ருஹ்யந்தி 

பிள்ளைகளுக்கு சுக போகத்தைக் கொடுத்துவிட்டால், அப்பாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்க மாட்டார்கள்

—SUBHAM—

TAGS-  கெளடில்யர், அர்த்தசாஸ்திரம், சாணக்கியன், பொன்மொழிகள்,

சும்மா, சும்மா, சும்மா (Post No.10,988)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,988

Date uploaded in London – –   15 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 77

Kattukutty

நண்பர் ஒருவர் மனநல மருத்துவர்.

அவரிடம்

”ஏன் டாக்டர், ஒருத்தருக்கு பைத்தியம் குணமாயிடுச்சான்னு எப்படிக் கண்டு பிடிப்பீங்க?” என்று கேட்டேன்.

“சின்னச் சின்ன டெஸ்ட் இருக்கு அதுக்கு” என்றார்.

“for example?”

“ஒரு பக்கெட் நிறைய தண்ணி வச்சிட்டு பக்கத்துல ஒரு ஸ்பூன், ஒரு மக் ரெண்டும் வச்சிடுவோம். போய் அந்த பக்கெட் தண்ணியை காலி பண்ணுன்னு சொல்வோம்”

“ஓ.. புரியுது. குணமாகாத ஆளா இருந்தா ஸ்பூன்ல தண்ணியை எடுத்து எடுத்து வெளில ஊத்தி காலி பண்ணிகிட்டு இருப்பான், சரியா?”

“எக்ஸாட்லி. உங்க கிட்ட சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?”

“நான் மக்குல எடுத்து மள மளன்னு காலி பண்ணுவேன்”

“இது மாதிரி கேஸ்களை நாங்க செமின்னு சொல்வோம்”

“என்ன டாக்டர் இப்படிச் சொல்லிட்டீங்க! அப்ப குணமானவன் என்ன பண்ணுவான்?”

“பக்கெட்டை எடுத்துக் கவுத்துட்டுப் போய்கிட்டே இருப்பான்”

*முன்னாள் நிதியமைச்சர் நெடுஞ்செழியன் (சும்மா) என்ற தலைப்பில் நீண்ட நேரம் பேசினார்(மலரும்நினைவு) மேலும்படியுங்கள்*

xxx

சும்மா

சும்மா இதைப் படியுங்கள். நிச்சயம் நீங்கள் அசந்துதான் போவீர்கள்!!*

உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து, இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன!

தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறது.

சும்மா== சொல்லுவோம் தமிழின் சிறப்பை!!

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த ‘சும்மா’

அது சரி ‘சும்மா’ என்றால் என்ன??*

பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த ‘சும்மா’!!

“சும்மா” என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை நாம் அடிக்கடி கூறும் இந்த”சும்மா”எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்.

1. கொஞ்சம் “சும்மா” இருடா?

(அமைதியாக/Quiet)

2.கொஞ்ச நேரம் “சும்மா” இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறிக் கொண்டு/Leisurely)

3.அவரைப் பற்றி “சும்மா” சொல்லக் கூடாது!

(அருமை/in fact)

4.இது என்ன “சும்மா கிடைக்கும்னு நினச்சியா?

(இலவசமாக/Free of cost)

5. “சும்மா” கதை அளக்காதே?

(பொய்/Lie)

6. “சும்மா” தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள் –

(உபயோகமற்று/Without use)

7. “சும்மா” *”சும்மா” கிண்டல் பண்ணுறான். (அடிக்கடி/Very often)

8.இவன் இப்படித்தான்.. சும்மா சொல்லிக்கிட்டு இருப்பான்.

(எப்போதும்/Always)

9.ஒன்றுமில்லை*”சும்மா” சொல்கின்றேன்-

(தற்செயலாக/Just)

10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை “சும்மா” தான் இருக்கின்றது*

(காலி/Empty)

11.சொன்னதையே *”சும்மா” சொல்லாதே.

(மறுபடியும்/Repeat)

12.ஒன்றுமில்லாமல் “சும்மா” போகக் கூடாது- (வெறுங் கையோடு/Bare)

13. “சும்மா”தான் இருக்கின்றோம்-

(சோம்பேறித் தனமாக/ Lazily)

14.அவன் *”சும்மா” ஏதாவது உளறுவான் –

(வெட்டியாக/idle)

15.எல்லாமே “சும்மா” தான் சொன்னேன்-

(விளையாட்டிற்கு/Just for fun)

*நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த “சும்மா”

என்கிற ஒரு சொல். நாம் பயன் படுத்தும் இடத்தின் படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது* (என்றால் அது “சும்மா” இல்லை!)

சும்மா. வாவது சிந்தித்தீர்களா இதனை..?

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை.

ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்.

இந்த சும்மா என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்குப் பிடித்து இருந்தால் சும்மா ஒரு Forward பண்ணுங்க.

]**

Tags-  ஞான மொழிகள் – 77