காதலை எழுதக் கற்றுக் கொடுக்கும் சாஸ்திரங்கள் (Post No..6414)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 20 May 2019

British Summer Time uploaded in London – 6-51 am

Post No. 6414

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

மே,2019 ஞான ஆலயம் இதழில் வெளியாகியுள்ள இரண்டாவது கட்டுரை!

பாரதீய விஞ்ஞானத்தின் பன்முகப் பரிமாணங்கள்! – இங்கு இல்லாதது எங்கும் இல்லை!

காதலை எழுதக் கற்றுக் கொடுக்கும் சாஸ்திரங்கள்!

ச.நாகராஜன்

புற ஆராய்ச்சிகளால் மேலை நாட்டினர் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் உள்ளுணர்வால் ரிஷிகளின்  அகத்தில் தோன்றும் பாரதீய விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு.

ஒரு கண்டுபிடிப்பை இன்னொரு கண்டுபிடிப்பு நிராகரிப்பது மேலை நாட்டு விஞ்ஞானம். ஆனால் சத்தியத்தின் அடிப்படையில் நித்தியமாக என்றும் உள்ள உண்மைகளைக் கண்டுபிடிப்பது பாரதீய விஞ்ஞானம்.

சுமார் நான்கு லட்சம் சம்ஸ்கிருத சுவடிகளும் ஏராளமான தமிழ்ச் சுவடிகளும் திறக்கப்படாமல் அப்படியே உள்ளன.

ஆனால் ஆங்காங்கே மிக அரிதாக ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தும் போது அவர்கள் தரும் அற்புதமான தகவல்களை அறிந்து வியக்கிறோம்.

எடுத்துக்காட்டாக இரண்டே இரண்டு ஆய்வுகளை மற்றும் இங்கே குறிப்பிடலாம்.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முனைவரான திருமதி கா.சத்தியபாமா தமிழ்ச்சுவடிகளை ஆராய்ந்து மாயச்சதுரம் அமைக்கும் முறைகளைச் சுவடிகள் கூறுவதைக் கண்டு வியந்து அதை விளக்கியுள்ளார்.

சம்ஸ்கிருத நூலான பீஜ பல்லவா என்பது கிருஷ்ண தைவக்ஞரால் இயற்றப்பட்டது. இது அல்ஜீப்ரா பற்றிய அழகான நூல். இதை ஆய்வு செய்து டாக்டர் சீதா சுந்தர் ராம், “பீஜபல்லவா ஆஃப் க்ருஷ்ண தைவக்ஞா – அல்ஜீப்ரா இன் ஸிக்ஸ்டீந்த் செஞ்சுரி இந்தியா – எ க்ரிடிகல் ஸ்டடி!”(Bijapallava of Krsna Daivajna – Algebra In Sixteenth Century India – A Critical Study by Dr Sita Sundar Ram) என்ற நூலை எழுதியுள்ளார்.

(287 பக்கம் உள்ள இந்த நூலை 2012ஆம் ஆண்டு ‘தி குப்புசாமி சாஸ்திரி ரிஸர்ச் இன்ஸ்டிடியூட்’,மைலாப்பூர், சென்னை – 600004 வெளியிட்டுள்ளது. நூலின் விலை ரூ 400/).

எண்ணி எண்ணி வியக்கிறோம் – எப்படி பழைய காலத்திலேயே இப்படி அரிதான விஷயங்களை பாரதீய விஞ்ஞானிகள் அல்லது ரிஷிகள் அல்லது அறிஞர்கள் எழுதியுள்ளனர் என்று! (ஏற்கனவே இது பற்றிக் கட்டுரைகளை எழுதி விட்டதால் இவர்களைப் பற்றி இங்கு விவரிக்கவில்லை)

இந்த வகையில் நம் கவனத்தைக் கவர்பவர் மஹாஸ்ரீ அனெகல் சுப்பராய சாஸ்திரி. இவரது வாழ்க்கை வரலாறு பிரமிப்பூட்டும் ஒன்று. இவரது அறிவோ நம்மைத் திகைக்க வைக்கிறது.

இளம் வயதில் சொல்லொணாத் துன்பம் அனுபவித்தவர் ஸ்ரீ சாஸ்திரிகள். ஒரு விதமான தோல் பற்றிய நோய் அவரைத் தாக்கவே அவர் கடும் துன்பமடைந்தார். ஒவ்வொரு இடமாகத் தவழ்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு நாள் தாகம் அதிகரிக்கவே நீர் அருந்த ஒரு குளத்திற்குச் சென்றவர் அதில் வீழ்ந்து விட்டார். அப்போது தான் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. ஒரு குகையில் தான் இருப்பதை அவர் கண்டார். அங்கு ஒரு மகான் அவர் மீது கருணை மிகக் கொண்டு அவரது நோயைத் தீர்த்து வைத்தார்.

அத்துடன் பல சாஸ்திரங்களை அவருக்கு உபதேசித்தார். அற்புதமான அந்த ஆற்றலைப் பெற்ற சாஸ்திரி அதை மக்களுக்கு விளக்க ஆரம்பித்தார். பரத்வாஜ ரிஷி அருளிய விமான சாஸ்திரம், சோலார் எனர்ஜி எனப்படும் சூரிய கிரணங்களின் ஆற்றலை விளக்கும் அம்சுபோதினி உள்ளிட்டவற்றை பெங்களூரில் உள்ள வெங்கடாசல சர்மாவிடம் கூற அவர் அதை எழுதிக் கொண்டு ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். மஹாஸ்ரீ அனெகல் சுப்பராய சாஸ்திரிகளைப் பற்றி பிரபல ஜோதிடர் திரு பி.வி.ராமனின் பாட்டனாரான. பி.சூரியநாராயண ராவ் (1856-1937) அவருடனான தனது சுவையான பிரமிக்க வைக்கும் அனுபவங்களை விரிவாக விளக்கியுள்ளார்.

ஸ்ரீ சுப்பராய சாஸ்திரிகள் விளக்கியுள்ள சாஸ்திரங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை மட்டும் இங்கே பார்ப்போம்:

அக்ஷரலக்ஷ சாஸ்திரம் : இதில் அகர முதலான எழுத்துக்கள், எண்கள், இலக்கணங்கள், மொழியின் வடிவம், அடையாளங்கள், குறியீடுகள் உள்ளிட்டவை – 14 லோகங்களிலும் உள்ளவை -விளக்கப்பட்டுள்ளன.

லிகித சாஸ்திரம் : எல்லா ஸ்லோகங்களையும் எப்படி எழுதுவதென்று விளக்கும் சாஸ்திரம் இது.

கணித சாஸ்திரம் : அனைத்து லோகங்களிலும் இன்று நிலவி வரும் கணிதத்தின் பல்வேறு விஷயங்களைத் தரும் இந்த சாஸ்திரத்தில் 18 சாஸ்திரங்கள் உள்ளன.

ஜோதிட சாஸ்திரம் : 64 விதமான ஜோதிட மற்றும் வானவியல் இரகசியங்களை விளக்கும் அபூர்வ சாஸ்திரம் இது.

நிருக்த சாஸ்திரம் : வேத வியாக்யானங்களை விளக்கும் சாஸ்திரம் இது.

வைசேஷிக சாஸ்திரம் : இதில் ஏழு வகை சாஸ்திரங்கள் உள்ளன. நியாய சாஸ்திரங்களும் இதில் அடக்கம்.

வேதாந்த சாஸ்திரம் : இதில் 132 வேதாந்த சித்தாந்தங்கள் அடங்கியுள்ளன. பூர்வ பக்ஷம், வேதாந்தம் ஆகியவற்றை விமரிசித்து விவாதித்து முடிவான முடிவைத் தருபவை இவை.

பட்ட சாஸ்திரம் : இதில் ஐந்து சாஸ்திரங்கள் உள்ளன. இவை நியாய சாஸ்திரத்துடன் ஒத்திருப்பவை.

பிரபாகர சாஸ்திரம் :  மூன்று பிரபாகர சித்தாந்தங்கள் விளக்கப்படும் இதில் நியாய சாஸ்திரங்களும் உள்ளன.

நியாய சாஸ்திரம் : இதில் 84 சாஸ்திரங்கள் உள்ளன. கதாதரரின் ஐந்து வேதங்கள், வைகானஸ தர்க்கத்தின் 42 வேதங்கள், கௌட தர்க்கத்தின் 60 வேதங்கள் இதில் விளக்கப்படுகின்றன.

வியாகரண சாஸ்திரம் : ஒன்பது வகை இலக்கணங்கள் விளக்கப்படுகின்றன இதில்.பாணிணீயம்,  மஹாவியாகரணம், ஐந்திரம்,சாந்திரம், சகதவாணம், ஸ்போட்டயாணம் முதலியவை பற்றி இதில் காணலாம்.

சப்த சாஸ்திரம் : ஒலியின் நுட்பம் பற்றிய விஞ்ஞானம் இது. ஆறு சாஸ்திரங்கள் இதில் உள்ளன.

தர்க்க சாஸ்திரம் : தர்க்க விஞ்ஞானம். இதில் உள்ள எட்டு சாஸ்திரங்கள்  84 (லாஜிக் எனப்படும்) தர்க்க விவாதங்களை அலசி ஆராய்கின்றன.

மீமாம்ஸ சாஸ்திரம் :  கர்மா எனப்படும் செயல் பற்றியது இது. அதாதோ தர்ம ஜிக்ஞாஸா என ஆரம்பிக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இதை இயற்றியவ்ர் ஜைமினி ரிஷி. ஜைமினி மீமாம்ஸை தத்வ தர்ம பிரகரணம், தர்மாபேத அபேதம்,சேஷசேஷீ பாவம், ப்ரயோஜக, ப்ரயோஜிக பாவம், கர்மா, அதிகாரி நிரூபணம்,சமன்யாதிதேசம், விசேபாதிதேசம், ஊஹா,பாதா, தந்திரம், ப்ரஸங்கம் ஆகிய 12 விஷயங்களை விளக்குகிறது. இப்போது புழக்கத்தில் உள்ளது இது தான்.

ஆனால் இது தவிர இன்னும் மூன்று சாஸ்திரங்கள் பிரமிக்க வைக்கும் பல இரகசியங்களை விளக்குபவை.

சந்தஸ் சாஸ்திரம் : கவிதை பற்றியது இது. யதி, (அதாவது எழுத்துக்கள் ஒத்திருக்க வேண்டும், இடையில் நிறுத்தங்கள் சரியானபடி அமைய வேண்டும்) கனம் (அதாவது அளவுடனான சீர்கள் பற்றிய கவிதா இலக்கணம்) மற்றும் பல்வேறு வகை கவிதா வடிவங்கள் பற்றியது இது. இதில் 12 சாஸ்திரங்கள் உள்ளன.

அலங்கார சாஸ்திரம் : அணிகள், மொழியின் அலங்காரங்கள் பற்றியது.உவமான, உவமேயம் உள்ளிட்டவை இதில் விளக்கப்படுகின்றன. இதில் 9 சாஸ்திரங்கள் உள்ளன.

இதிஹாஸம் : இதில் 32 இதிஹாஸங்கள் உள்ளன.

புராணம் : புராணங்கள் 18-இன் ரகசியங்க்ள் விளக்கப்படுகின்றன.

சில்ப சாஸ்திரம் : -சிற்பம், கட்டிடக்கலை பற்றியது இது. 32 சாஸ்திரங்கள் இதில் உள்ளன. 364  வகையான சிற்பங்கள் இதில் விளக்கப்படுகின்றன.

சுப சாஸ்திரம் : உணவு வகைகளைச் சமைக்கும் சமையல் சாஸ்திரம். 116 வகையான உணவு வகைகளை எப்படி சமைப்பது என்பதை இது விளக்குகிறது.

மாலினி சாஸ்திரம் : இரகசியமாக காதல் சங்கேதங்களை விளக்கும் சாஸ்திரம் இது. மலர்களில் எழுதுவது எப்படி, மாலைகள், பூங்கொத்துகள் வாயிலாக காதல் செய்திகளைப் பரிமாறுவது எப்படி என்பதை இது விளக்குகிறது. இதில் எழுதுவதற்கு விசேஷ தொழில்நுட்பம் தேவை. இதில் ஐந்து சாஸ்திரங்கள் உள்ளன.

ஜரிஹர சாஸ்திரம் : போர்களில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் தயாரிக்கப்படும் அனைத்து உலோகங்கள் பற்றியது இது. வெடிமருந்துகள், துப்பாக்கி குண்டுகள்,பீரங்கிகள், வில் அம்புகள் உள்ளிட்ட போர் சாதனங்களை விளக்கும் இதில் ஒன்பது சாஸ்திரங்கள் உள்ளன. நூறாயிரம் விதமாக சுடும் போர்முறைகள் இதில் விளக்கப்படுகின்றன.

பிரளய சாஸ்திரம்: இதில் 13 சாஸ்திரங்கள் உள்ளன. பிரபஞ்சத்தில் இருக்கும் ஓவ்வொரு உயிரினத்தின் ஆயுள் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை இது விளக்குகிறது. எப்படி உருமாற்றம் ஏற்படுகிறது, எப்படி இறுதி பிரளயம் ஏற்படுகிறது என்பதையும் இது விளக்குகிறது.

கால சாஸ்திரம் : பொருள்கள் அனைத்தும் எந்தக் காலத்தில் உருவாகின்றன, எப்போது அழிக்கப்படுகின்றன என்பது பற்றிய கால சாஸ்திரம் இது. அறுவடைகள், விதைப்பது எப்படி, வளர்ப்பது எப்படி என்பது பற்றியும் கால சாஸ்திரம் விளக்குகிறது.

மாயா வாத சாஸ்திரம் : 20 வகை மாஜிக் கலைகளை விளக்கும் சாஸ்திரம் இது. மாயமாக மறைவது, திருப்பி வருவது உள்ளிட்ட பிரமிக்க வைக்கும் வித்தைகள் இதில் விளக்கப்படுகின்றன.

இது தவிர மருத்துவ சாஸ்திரம் உள்ளிட்ட ஏராளமான சாஸ்திரங்களின் உள்ளார்ந்த இரகசியங்கள் பாரதீய விஞ்ஞானத்தில் உள்ளன.

அனைத்தையும் விளக்க ஒரு தனி நூலே தேவை.

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவெனில் அணுகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை நவீன விஞ்ஞானிகள் உருவாக்கியது பாரத தேசத்தின் புராதன நூல்களை வைத்தே தான் என்பதும் நியூமரலாஜி நிபுணரான சீரோ தஞ்சாவூரில் தான் இதைக் கற்றார் என்பதும் நவீன கால புத்தகங்கள் ஆதாரங்களுடன் விளக்க ஆரம்பித்துள்ளன என்பது தான்.

பண்டைய பாரதத்தின் மேன்மையை ஆராய்ந்து பல ஆய்வாளர்கள் இப்போது அதை வெளி உலகிற்கு கொண்டு வருவது ஒரு நல்ல சகுனம்!

வல்லரசாக பாரதம் மிளிரும் தருணம் வந்து விட்டது!

–subham–

WHO FEEDS MILLIONS OF BIRDS? (Post No.6413)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 19 May 2019

British Summer Time uploaded in London – 19–53

Post No. 6413

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Sanyasin story is from Sri Ramakrishna Paramahamsa’s teachings.

–subham–

SWAMI’S CROSSWORD 19519 (Post No.6412)

Written  by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 19 May 2019


British Summer Time uploaded in London -16-29

Post No. 6412

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ACROSS

1. – (8 letters) FIFTH DAY AFTER FULL MOON OR NEW MOON

5. – (5) SET OF RULES; DISCIPLINE

6. – (4) CHARIOT

8. – (6) MAN OF BUSINESS OR BEAST OF BURDEN

9. – (4 )HOPE;DESIRE; POPULAR GIRL NAME AMONG HINDUS

10. –(3) ENEMY, ANIMAL

11. – (5) FEVER, DISEASE

12. – (3) SHE GOAT, GRAND FATHER OF RAMA; UNBORN

13. – (3 )SEER

14. – (6) ENTIRE; WHOLE

15. – (8) YADAVA SATYAKI’S BROTHER, KILLED BY ASHVATTAMA IN SLEEP

DOWN

1.PANDYA- (3) SOUTHERN MOST KINGDOM

2. – (7) TEMPORARY INDRA CURSED BY AGASYA TO BECOME A PYTHON

3. – (8) ANOTHER NAME OF THIS HOLY CITY IS MAYA

4. –  (7) ONE OF THE SEVEN HLY CITIES OF HINDUS; LINKED TO KRISHNA

7. –(6) YELLOW JASMINE, DEER

–subham–

சைவ சமயத்தில் நான்கு (Post No.6411)

Written  by London Swaminathan
swami_48@yahoo.com


Date: 19 May 2019


British Summer Time uploaded in London -7-11 am

Post No. 6411

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

picture by Lalgudi Veda

பேரீச்சம்பழம் தரும் அற்புத ஆரோக்கியம் (Post No.6409)

Written  by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 19 May 2019

British Summer Time uploaded in London –  6-53  am

Post No. 6409

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் மாத இதழ் ஹெல்த்கேர். அதில் ஏப்ரல் 19 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

பேரீச்சம்பழங்கள் தரும் அற்புத ஆரோக்கியம்!

ச.நாகராஜன்

நாள் ஒன்றுக்கு மூன்றே மூன்று பேரீச்சம்பழங்கள்

ஒரு நாளைக்கு மூன்று பேரீச்சம்பழங்கள் வீதம் ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே உங்களின் ஆரோக்கியம் வெகுவாக மேம்பட்டு விடும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள். தொடர்ந்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் வந்து சேரும் என்பதை எண்ணிப் பார்த்தால் எவ்வளவு உற்சாகம் ஏற்படுகிறது!

பேரீச்சம்பழங்கள் நல்கும் பயன்கள் யாவை? இதோ படியுங்கள்

குடல் கேன்ஸர் வராது தடுக்கும்

ஜீரண அமைப்பில் நாம் சாப்பிடும் உணவு சரியாகச் செல்வதை உறுதி செய்வதோடு பேரீச்சம்பழங்கள் குடல்நாளம் (Gut) நன்கு இயங்குவதையும் உறுதி செய்கிறது. அத்துடன் அவை சரியாக இயங்குவதால் பெருங்குடலில் (colon)  கேன்ஸர் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.

அமெரிக்க உணவு மற்றும் சத்துணவு விஞ்ஞானப் பிரிவு (Department of Food and Nutritional Sciences) சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் பேரீச்சம்பழங்கள் சாப்பிடுவோரின் குடல் ஆரோக்கியம் வெகுவாக மேம்படுவதைத் தெரிவித்துள்ளது. பெருங்குடலில் கேன்ஸர் வருவதற்கான திசுக்களை உருவாகவிடாமல் செய்ய நல்ல பாக்டீரியாக்கள் அங்கு சேர்கின்றன.

உடனடி சக்தி சேரும் அது நீடித்தும் இருக்கும்

அடுத்து பேரீச்சம்பழத்தில் உள்ள இனிப்புச் சத்து, குளுகோஸ், ப்ரக்டோஸ், சக்ரோஸ் (Sugars, Glucose, Fructose and Surcose)  ஆகியவை உடனடியாக சக்தியைத் தருகிறது. அத்துடன் சக்தியைத் தருவதாக விளம்பரங்கள் கூறும் குளிர்பானங்கள் அல்லது எனர்ஜி பார் போலல்லாமல்  பேரீச்சம்பழங்களில் உள்ள பைபர் சத்து, பொட்டாசியம், மக்னீஷியம் விடமின்கள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளிட்டவை உங்கள் சக்தியை அப்படியே நீடித்து நிலை நிறுத்துவதோடு, ஏனையவை போல் திடீரெனக் குறைந்து உங்களைச் சோர்வடையச் செய்யாது.

 மலச்சிக்கல் பிரச்சினை தீரும்

      உங்கள் ஜீரண அமைப்பில் சாப்பிட்ட உணவுகள் மெதுவாக அழகாக சீராகச் செல்ல வேண்டும் என நீங்கள் விரும்பினால் அதை அடைய பேரீச்சம்பழங்கள் உதவும். ஒரு கப் பேரீச்சம்பழங்களில் 12 கிராம் பைபர் உள்ளது. இது நீங்கள் அன்றாடம் எடுக்க வேண்டிய பைபரில் 48 சதவிகிதம் ஆகும்.

சரியான பைபரை சரியானபடி சாப்பிட்டாலேயே மலச்சிக்கல் வராது; சரியானபடி மலம் வெளியே போக உதவும் இயக்கங்கள் சீராகும். இதைச் செய்ய உதவுவது பேரீச்சம்பழங்களே. பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் பிரசுரித்துள்ள ஆய்வறிக்கை ஒன்று ஒரு நாளைக்கு 7 பேரீச்சம்பழங்கள் வீதம் 21 நாட்கள் யார் ஒருவர் சாப்பிடுகிறரோ அவருக்கு மலச்சிக்கல் பிரச்சினை வருவதே இல்லை என்றும் மலம் போவது சீராக இருக்கும் என்றும் தெரிவிக்கிறது.

மூளை செயல்திறன் கூடும்; மனச்சோர்வு ஏற்படாது!     

பேரீச்சம்பழங்களில் விடமின் பி6 (Vitamin B6) இருப்பதால் செரொடோனின் மற்றும் நோரிபினப்ரைன் (erotonin and norepinephrine) ஆகியவை உடலில் உருவாகி மூளையின் செயல்திறன் கூடுகிறது. செரோடோனின் மூட் எனப்படும் மனநிலையைச் சீராக வைக்கிறது. நோரிபினப்ரைன் மன அழுத்தத்தைச் சீராக்குகிறது. ஆய்வுகள் விடமின் பி 6 குறைவாக இருந்தாலோ மனச்சோர்வு ஏற்படும் என்று தெரிவிக்கின்றன. ஆகவே உங்கள் மன அழுத்தம் சீராக இருந்து உங்கள் ‘மூடும் சரியாக இருக்கும் போது மூளை கூர்மையாக இயங்குகிறது. தகவல்களை நன்கு உள்வாங்கிச் சேர்த்து வைத்துக் கொள்கிறது.

ஆசனவாய் வீக்கம் வராது    

ஹெமொராய்ட்ஸ் (Hemorrhoids) என்பவை ஆசனவாயிலும் குதத்திலும் உள்ள நரம்புகளாகும். மலச்சிக்கலால் இவை வீக்கமடைந்து வீங்கி இருக்கும். மலச்சிக்கல் இங்கு அழுத்தத்தைத் தர ஜீரண மண்டலத்தின் கோடியில் உள்ள பகுதியில் கூட இந்த அழுத்தம் ஏற்படும். இது வலியைத் தரும் ஒரு நிலை. இதை நல்ல உணவுப் பழக்கத்தால் மாற்றி மலச்சிக்கல் ஏற்படுவதையே தடுத்து விடலாம்.

பல டாக்டர்களும் பைபர் அதிகம் இருக்கும்படியான உணவை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கின்றனர். பேரீச்சம்பழங்கள் உங்கள் ஹெமொராய்ட்ஸ் வீக்கத்தை ( அது இருப்பின்) சரி செய்து விடும்.

மனம் உடைந்து விட்ட நிலையில் அதைப் போக்கும்; உற்சாகம் தரும்!   

மனம் உடைந்து விட்ட நிலையில் உதவிக்கு வருவது பேரீச்சம்பழங்கள் தாம்.  ஆம், இது உண்மை! இதில் உள்ள பொட்டாசியம் கெட்ட கொலஸ்ட்ராலான எல்டிஎல் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் குருதிக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. வயதான பெண்மணிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிக பொட்டாசியமானது ஸ்ட்ரோக்கைக் குறைப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  மூளை நரம்புகள் சுருங்குவதால் ஏற்படும்  ischemic Stroke ஐயும் தடுக்கிறது.        

நலம் தரும் பேரீச்சம்ழங்களை உண்ணுங்கள்!

ஆகவே அதிகம் விலை இல்லாத, எங்கும் எப்பொழுதும் கிடைக்கக் கூடிய நல்ல பேரீச்சம்பழங்களை வாங்கி உண்ணுங்கள். அபாயகரமான வியாதிகள் வருவதைத் தடுத்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

—subham —

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி19519 (Post No.6410)

Written  by London Swaminathan
swami_48@yahoo.com


Date: 19 May 2019

British Summer Time uploaded in London -6-46 am

Post No. 6410

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.-(7 எழுத்துக்கள்) சங்க நூல்கள் 10 அடங்கிய தொகுப்பு

5.(2) பணிவான, அடக்கமான, துன்பம் தராத

6.(3)- சிறுவன், பியூன்

7.(2) இரவுப் பறவை

8.(4) சம்பந்தர் உயிர்ப்பித்த பெண்

11.(5)எண்ணையில் பொறித்து தயிரில் போட்டால் சுவை தரும்

13.(4) ஒருவருடைய இயற்கையான குணம் (வலமிருந்து இடம் செல்க)

13.(3) துக்கத்தின் எதிர்ப்பதம்

கீழே

1.(7 எழுத்துக்கள்)பழனியில் கிடைக்கும் பிரசாதம்இனிக்கும்

2.(5) சிறிய வெள்ளை மலர்; ஆண்டவனுக்குப் போடுவது

3. (3) சிறுவன்

4.ஏமாற்றுப் பேர்வழி; பொய்யன்; சென்னை வழக்கு (5)

8.(3) முந்தைய அல்லது கிழக்குப் பகுதி

9.(2)–மொழி அல்லது சுடுகாட்டுக்குத் தேவைப்படும் வாகனம்

10. மதுரையில் ஓடும் நதி (2) (கீழிருந்து மேல் செல்க)

12. புண்ணியத்தின் எதிரி; நடனத்தில் முக……. பற்றியும் பேசுவர். (3) –(கீழிருந்து மேல் செல்க)

–subham–

Four Givers of Immediate Results (Post No.6408)

Written  by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 18 May 2019

British Summer Time uploaded in London –  20-36

Post No. 6408

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))



4 Detrimental Factors – Haanikaaraka

Tattered clothes- detrimental to splendour- Kuvastram Tejas –

Bad wife – detrimental to home -Kubhaaryaa Grham

Unhealthy food-seed- Kubhojyam biijam
Bad son -Family- kuputre kulam


Kuvastram harate tejah kubharya harate grham
Kubhojyam haratebiijam kuputro harate kulam


Xxx


Botanical knowledge


Vanaspati-Non flowering trees bearing fruits
Vrksa-  Flowering trees
Viirudha – Creepers on ground
Ausadha – Herbaceous plants

Xxx



4 Actions for Happiness


Praatahsnaana -Taking bath before sunrise
Gosevaa – Protection of cows
Aaraama puspavatikaa- Relaxing in flower garden
Maataa pitaa susruusaa – Service to mother and father
—Citta vinodini 

Praatah snanam gavaam sevaa aaraama puspavaatikaa
Maataa pitaasca susruusaa saastraaya ca sukhaaya ca
Citta vinodini

Xxx


Equal sharers in merit or demerit

Kartaa — doer
Kaarayitaa — man behind such an action
Presekah —  sender
Anumodakah — one who approves

Karta karayita caiva presako hyanumodakah
Sukrutamduskrtam caiva catvarah samabhaginah
Xxx

Four Women who attained Salvation

Maitreyii
Sulabhaa 
Saarngii
Saandilii


Maitreyi sulabha sarngi sandili ca tapasvini
Stritve praptah param siddhimanya janma samadhitah
Xxx

Saadya phala dayaka
Givers of immediate results
Resolution of Gods – Devataanaam sankalpa
Obedience to the learned – Dhiimataa manubhaavam
Vidusaam vinayam- Humility of the accomplished
Paapakarmanaasa – destruction of wicked deeds


—Mahabharata, Udyoga Parva,33-71/72
Xxx

4 Officiating priests
Hotaa- Rig Veda
Adhvaryu-Yajur Veda
Udgaataa – Sama Veda
Braahmana – Atharva Veda
XXX

Common to Man and Animals


Aahaara – Eating
Nidraa -Sleep
Bhayam- Fear
Maithunam – Copulation 

Human beings excel in dharma, and if they lack it they are equal to animals.
Aharanidra bhayamaithunam ca samanya metat pasu birnaranam
Dharmohi teshamadhiko visesah dharmena hinah pasubhissamanah

Xxx  SUBHAM XXX

வெள்ளைக்காரர்கள் கொன்ற இந்தியர் எண்ணிக்கை- லண்டன் டைம்ஸ் மகிழ்ச்சி (Post 6407)

 Written  by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 18 May 2019

4 British Summer Time uploaded in London –  17-34

Post No. 6407

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

இறந்தவர் எண்ணிக்கை:-

சென்னை மாகாணம்- 3,000,000

மைசூர் மாகாணம் – 1,250,000

பம்பாய் மாகாணம்- 1,000,000

பிரிட்டிஷார் இந்தியாவிலுள்ள கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு அனுப்பிய பணம் எட்டு லக்ஷம் பவுன்கள்

ஆதாரம்- லண்டன் டைம்ஸ்

வசை பாடுவதை நிறுத்துவது எப்படி? (Post No.6406)

Written  by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 18 May 2019


British Summer Time uploaded in London –  17-10

Post No. 6406

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தங்கம் 4 வகை, பெண்கள் 4 வகை, பிரளயம் 4 வகை! (Post No.6405)

Written  by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 18 May 2019


British Summer Time uploaded in London –  16-19

Post No. 6405

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–subham–