Nagarjuna’s Yogaratnamala gives tips for creating enmity, disease, madness and fear among enemies; since they are not useful to society, I avoid those couplets . There are very useful tips to cure poisoning by snakes and scorpions.
Many of the following suggestions or cures sound incredible; unless someone tries and proves it, they should be ignored. One may even think that someone is playing jokes or pranks on you.
xxxx
Take sandal, Nagakesar (Mesua ferrea), Madanaphala (Randia dumetorum) and Kushtha (Saussurea lappa). Powder these ingredients with rice water and prepare a paste. On application of this paste, the poisoning effect disappears.
xxxx
Collect the dung of a calf that was born on the same day and the root of Tagara and prepare a pill (Gutika) out of these two. After taking this pill , you may take poisonous things as much as you can, there should not be any reaction of the poisonous things at all.
xxxx
Prepare an ointment out of the fat of a frog and Dundhuba (two mouthed snake), Katakarohini (Picrorhiza kurroa, known as Kutki in Nepali) and the fruits of Slesmantaka Slesmantaka in India is the name of a plant defined with Cordia latifolia and apply it to your palm. On touching with this palm the poisonous effects soon disappear.
xxxx
Prepare a paste out of cow’s ghee, milk of Snuhi (Euphorbia nerufolia), blood of a peacock and bones of a Dundubha snake and apply it to the musical instruments. The sound of these musical instruments makes all poisonous things free from poison.
xxxx
Ghost buster Mantras
If you write the mantra Om Chakrahum Fut within a circle on a paper or Bhurjapatra and tie it in your hand or wrist all the devils will soon disappear. This mantra is called Bhuta damara mantra.
xxxx
Pounder together the horn of a cow, dung of a cat, nails of an elephant , the skin of a snake, the tail of a peacock, Vacha (Acorus calamus; Vasambu in Tamil), garlic, asafoetida (Perunkaayam in Tamil) and prepare an incense out of these ingredients. On application of this incense all sorts of devils disappear.
xxxx
Production of Body Light
Prepare a paste out of Bhunaga, Manashila (Arsenic Dioxide) and Harital (Arsenic Dioxide) with an oil extracted from the seeds of mustard. Then apply this oil to the whole body. The body shines bright in deep darkness of the night just like burning fire.
xxxx
Prepare a paste out of a glowworm, indragopa insect (Tambala Poochi in Tamil) and amalaka fruits (Nellikkay in Tamil). Add to it the oil extracted from the seeds of Sana (Senna?) and then apply the paste to the body of the images. There they shine very bright in the night.
xxxx
Prepare a paste out of root of white Karavira (Nerium odorum; arali in Tamil), insect of an Arka plant(Calotropis procera; Erukku in Tamil) and the thorns of a scorpion and apply it to your palm. On touching a person by the palm, a person becomes mad as if bitten by a snake.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
யாருக்கு ஓட்டு போடுவது?
ச.நாகராஜன்
2024 – பொதுத் தேர்தல்
ஏப்ரல் 19, 2024-ல் ஆரம்பிக்கிறது. ஜூன் மாதம் 4-ம் நாள் முடிவு தெரிந்து விடும்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல்.
யாருக்கு ஓட்டு போடுவது?
இது தான் நம் முன் உள்ள கேள்வி.
அரசியல்வாதிகளை நம்மால் நம்பமுடியவில்லை.
வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்.
பணத்தையும் கூடத் தான்!
வாக்குறுதிகளுக்கு மயங்குபவர் பலர்.
பணத்திற்கு கேரள மாநிலம் போன்றவற்றில் உள்ளோர் மயங்குவதில்லை.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ளோர் மயங்குகின்றனர். இதில் சத்தியம் வேறு வாங்கிக் கொள்கிறார்களாம்!
அடுத்து ஒரு ஃப்ரீ பாட்டில்.
ஏனென்றால் இந்த பாட்டில் சமாசாரத்தை உற்பத்தி செய்வதே அவர்கள் தாம்! ஆகவே கோடானு கோடி கொள்ளையில் ஒரு நாள், இரண்டு நாள் ஃப்ரீ விநியோகத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை.
ஆக யாருக்கு ஓட்டுப் போடுவது?
நேராக அப்பரிடம் போனால் பதில் சொல்கிறார்.
ஓட்டுப் போட மட்டுமல்ல, எல்லா வாழ்க்கை பிரச்சினைகளுக்கும் ஒரே பதில் தான் அவரிடம்!
சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து
தரணியொடு வான் ஆளத் தருவரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லராகில் அங்கம் எல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய் ஆ உரித்துத் தின்னும் புலையரேனும் கங்கைவார் சடைகரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளரே
சங்க நிதி, பதும நிதியை அளந்தவர் யார்? யாருமில்லை. அதையும் தரணி மற்றும் வானை ஆளும் அதிகாரமும் சேர்த்துக் கொடுத்தாலும் அவர்கள் செல்வம் மங்கும், அதிகாரம் நீங்கும் – அவர்களை மதிக்க மாட்டோம் – அவர்கள் மாதேவர்க்கு பக்தி செலுத்தாதவர் என்றால்.
ஆனால் அங்கம் எல்லாம் தொழுநோயால் குறைந்து பசுவை உரித்துத் தின்றால் கூட சிவபிரானுக்கு அவர்கள் அன்பர் ஆகில் அவரை நாம் கடவுளாக வணங்குவோம்.
ஓட்டுப் போட மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் பதில் இதில் உண்டு.
கடவுள் இல்லை என்று சொல்லும் மாபாதகர்களைப் பார்க்காதே, பேசாதே, எண்ணாதே, அவர்கள் கூறுவதைக் கேட்காதே, அவர்களை அண்டாதே!
ஆனால் கடவுள் பக்தி கொண்டவரிடம் சேர், பேசு அவர்களில் உங்கள் தொகுதியில் நிற்கும் நல்லவருக்கு ஓட்டுப் போடுங்கள்.
சரி, நம்மை பக்தர்கள் என்று இனம் கண்டு மிரட்டுவார்களே, அப்போது என்ன செய்வது?
ஒரு இன்ஸ்பெக்டர் 30 போலீஸ்காரர்களுடன் ஒரு பிஜேபி பெண்மணி வீட்டிற்குச் சென்று அராஜகமாய் அவருக்குத் தொந்தரவு கொடுத்ததை யூ டியூபில் பார்க்கவில்லையா?
பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு எவ்வளவு இடைஞ்சல் கொடுக்க முடியுமோ அவ்வளவை பத்திரிகைகள் மூலமாகவும் போலீஸ் மூலமாகவும்
திருடர்கள் முரடர்கள் கயவர்கள் மூலமாகவும் கொடுப்பதைப் பார்க்கவில்லையா?
நல்லவேளை சோஷியல் மீடியா என்று ஒரு இருக்கிறது. அதில் டி.ஆர். பாலு நான் சரஸ்வதி கோவிலை இடித்தேன், லக்ஷ்மி கோவிலை இடித்தேன் என்று சொல்வதையும் பார்க்க முடிகிறது.
இவர்கள் மிரட்டினால் என்ன செய்வது என்பதற்கும் அப்பரே பதில் சொல்கிறார்.
மாபெரும் மன்னன் அவரைக் கல்லில் கட்டி கடலில் போட்டான். ஆனால் அவர் மிதந்து வந்தார். இறைவன் எல்லா அயோக்கியரையும் எல்லாக் காலத்திலும் சும்மா விட்டு வைப்பதில்லை.
ஒரு நாள் அவர்கள் அழிந்தே ஆக வேண்டும்.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே
நமச்சிவாய நாமம் நல்லதையே செய்யும்.
சிவனையும், ராமரையும் இழிவு படுத்துவோரை, – கடவுள் இல்லை என்று சொல்வோரை ஒதுக்குவோம்.
ராமருக்கு கோவில் கட்டித் தொழுவோரை ஆதரிப்போம்.
யாருக்கு ஓட்டுப் போடுவது என்ற கேள்விக்கு விடை கிடைத்தே விட்டது.
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
மூலிகை Part 23
முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—23
கு
233. எலி கடிக்கு
குளப்பாயிலையை ஆவின் பாலில் அரைத்து உண்டு வந்தால் எலி கடி விஷம் கரப்பான் உடல் சுரப்பு கால் சுரப்பு சர்வ விஷ வீக்கம் இதுகள் தீரும்.
xxxx
செங்கருப்பான் கருங்கரப்பானுக்கு
குண்டலாத்தி என்று வழங்கும் சங்க ன் வேரை பசும்பாலில் அரைத்து அருந்தி வந்தால் தழுதணை சொரி தேமல் கிரந்தி செங்கருப்பான் கருங்கரப்பான் சிறு சிரங்கு பெருஞ் சிரங்கு யாவும் தீரும்.
xxxx
காதில் ஈப்புகுந்தால்
குப்பை மேனி இலையில் கொஞ்சம் நீர் தெளித்துகே கசக்கி காதில் இரண்டு மூன்று துளி சாறு பிழிந்தால் ஈ செத்து விழுந்து விடும்
இதுவுமது
குப்பை மேனிச் சாறு ம் கோலியவரைச் சாறு ம் சமனாய்க் கலந்து காதில் பிழிந்தால் ஈ சாகும்
xxxx
சிரா பீனிசத்திற்கு
குப்பை மேனி ஆடு தீண்டாப்பாளை அளிஞ்சிமுஞ்சி இவைகளின் சாறு வகைக்கு அரைப் படி நல்லெண்ணெய் படி 2 இவைகளைக் கலக்கி அடுப்பேற்றி மெழுகுபதமாய்க் காய்ச்சி வடித்து தலை முழுகி வந்தால் சி ராப் பீனிசம் தீரும் .
xxxx
உட்குத்து புற வீச்சும் தீர
குப்பைமேனி சிறுபுள்ளடி பொன்னாவாரை இவைகள் ஓரளவாயெடுத்து வே ப்பம் இலையில் உப்பு போட்டு இடித்துப்பிழிந்த சாறு விட்டு அரைத்து ஒருவேளைக்கு புன்னைக்காயளவு ஒருநாளைக்கு மூன்று தபா கொடுக்க நிவர்த்தியாகும் .
xxxx
குடல் வாதத்திற்கு
குரி ஞ்சானிலையை பிட்டவிழ்த்துப் பிழிந்த சாறு அரைக்கால் படி சுக்கு மிளகுஉள்ளி, கடுகு வெந்தியம் வகைக்கு விராகநிடை 1 வெதுப்பிப் பொடித்துப் போட்டு கலக்கி மூன்று நாள் கொடுக்க சாந்தியாகும் .
xxxx xxxx
பல ரோகந்தீர
குங்குமப் பூவை அரைக்கால் விராகநிடை எடுத்து பால் விட்டரைத்து அரைக்கால் படி பசும்பாலில்கலந்து குடித்து வந்தால் அண்டவாதம் உச்சிவலி கண்ணிலுண்டாகும் பூ கபம் கால் வலி சூலை தாகம் மேக ஜலம் விந்து நஷ்டம் ஜலதோஷம் சுரம் செவி நோய் பித்தம் மதுமேகம் இவரை தீரும் .பெண்களின் கர்ப்ப வலி ….திரரோகம் இவைகள் தீரும். நீடித்து சாப்பிட வேண்டியது .
xxxx xxxx
பேதி கட்ட
குடசப் பாலை மரத்தின் பட்டையை பாலில் அரைத்துக் காலையில் குடித்து வந்தால் பேதியைக் காட்டும். நீரிழிவு வாதம் இவை நிவர்த்தியாகும் .
xxxx
பொடி சிரங்கு
குடியாட்டுப் பூண்டென்னும் கொல்லை பல்லியைக் கொண்டுவந்து கொஞ்சசம் கெந்தகம் சேர்த்து அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் பொ டி சிரங்கு மாறும்.
xxxx
தினவு தீர
குதிரைக் குளம்பு என்னும் நிலக்கடம்புயிலை கொண்டுவந்து மிதமாயெடுத்து பாலில் அரைத்துக் கொடுத்தால் குதிரை நடை வாய்வு ஜென்னி தினவு தீரும். இதைக் கிஷாயம் மூலியமாவும் உபயோகிக்க வேண்டும் .
xxxx
243. கண் மயக்கம் தீர
குதிரைவாலிப்பூ ண்டு கொண்டுவந்து பாலில் அரைத்து அருந்திவந்தால் கண் மயக்கம் ஈளை கடுப்பு கழிச்சல் காசம் இவை சாந்தியாகும்
xxxx
பல வியாதிகள் தீர
குரிஞ்சான் கட்டையை சூரணித்துக் கரைகூட்டி திருக்கடிப்பிரமாண ம் எடுத்து தின்று வரவும். இப்படி நீடித்து தின்று வருவதால் தேகத்திலுள்ள காணா வியாதிகள் யாவும் தீரும்; நல்ல வலிவையுண்டாக்கும் .
xxxx
245. வாந்தியாக
குரிஞ்சான் வேரை அல்லது உலர்ந்தயிலையை போட்டி செய்து சுமார் 30 கிறையின் வரையில் உள்ளுக்கு க் கொடுத்து சுடு தண்ணீர் மிகுதியாய்க் குடித்தால் நன்றாய் வாந்தியாகும் .
xxxx
எச்சரிக்கை
சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் புழங்கும் சில சொற்கள் விஷயம் தெரியாதோரை திசை திருப்பிவிடும் குதிரைக்குளம்பு , கொல்லை பல்லி என்பன மூலிகைகளின் பெயர்கள்; மூலிகை அறிவு இல்லாதவர்கள் நிஜ குதிரை , நிஜ பல்லியைக் கொண்டுவந்தால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். அந்தக் காலத்தில் எல்லோரும் வைத்தியம் பார்த்துவிடக்கூடாது , விஷயம் அறிந்தவர்களே வைத்தியம் பார்க்க வேண்டும் என்பதற்காக பல சங்கேதச் சொற்களைப் பயன்படுத்துவார்கள்; சில மூலிகைகள் எப்படி உருவத்தில் தோன்றுகிறதோ அதை வைத்தும் பெயர்கள் உண்டாகும். உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் இப்படி சொல் வழக்கு உண்டு ஆங்கிலத்தில் ஒரு மரத்துக்கு குரங்கு மரம்MONKEY TREE என்ற பெயருண்டு. ஆனால் அதற்கும் குரங்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!
எனது மார்ச்-ஏப்ரல் 2024 இந்திய விஜயத்தின் போது கேரள மாநிலத்தின் தலைநகர் திருவநந்தபுரத்துக்கும் அருகிலுள்ள கோவலம் கடற்கரைக்கும் சென்றேன்.
ஏப்ரல் 5ம் தேதி (2024) அரை நாள் ஒய்வு கிடைத்தது. உடனே என்னுடைய பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாலஸ் மியூசியத்துக்கு காரை எடுத்துக் கொண்டு ஓடினேன். பாலஸ் மியூசியத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன.
புத்தன் மாளிகா–Puthen Maalika (New Palace) –அல்லது குதிர மாளிகா–Kuthira Maalika (Horse Palace) –என்பது முதல் பகுதி; அருகிலேயே மார்த்தாண்டவர்மா சித்ராலயம் இருக்கிறது. முதல் மியூசியத்தில் புகைப்படம் எடுக்கலாம். ஆனால் 70 ரூபாய் டிக்கெட்டுக்கு மேலாக 500 ரூபாய் கட்ட வேண்டும். நான் 500 ரூபாய் கட்டி முடிந்த மட்டும் புகைப்படங்கள் எடுத்தேன். திருவாங்கூர் சுவாதித்திருநாள் மஹாராஜா கட்டிய காட்சியகம் இது .இந்த மாளிகையில் மரத்தால் ஆன குதிரைகள் கூரையைத் தாங்கி நிற்பதால் குதிரை அரண்மனை என்ற பெயர் ஏற்பட்டது. புதிதாகக் கட்டப்பப்பட்டதால் புத்தன் அரண்மனை என்ற பெயர் ஒட்டிக்கொண்டது
கோவிலுக்கு அருகிலேயே இவை உள்ளன . மாலை 5 மணிக்கு மூட்டி விடுகிறார்கள்
xxxx
கேரளத்தில் மூன்று அரசாட்சிகள் இருந்தன; திருவாங்கூர், கொச்சி, மலபார் என்ற மூன்று பகுதிகளை மன்னர்கள் ஆண்டுவந்தனர்
மார்த்தாண்ட வர்மா சித்திராலயத்தில் திருவாங்கூர் ராஜ வம்ச வரலாறு இருக்கிறது . அங்கு அருமையான, அபூர்வமான புகைப்படங்கள் இருக்கின்றன. ஒரு படத்தில் நாட்டின் மூன்று பிரதமர்கள் இருக்கிறார்கள் ; ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி . சின்னப்பையனாக ராஜீவ் காந்தி. ; இதில் சிறப்பு என்னவென்றால் திருமதி இந்திரா காந்தி அழகாக கொண்டை போட்டுகொண்டு அதைச் சுற்றி தமிப் பெண்கள் போல மல்லிகைப்பூ சரத்தைச் சூடியுள்ளார் .
இன்னொரு படத்தில் எம் எஸ் சுப்புலட்சுமி , சதாசிவம் ஆகியோர் மிக இளம் வயதில் காட்சி தருகின்றனர். அதை மட்டும் நைசாக படம் எடுத்தேன்.
இந்த சித்திராலயத்திலுள்ள அரசர் படங்கள் குதிரை மாளிகையில் இருப்பதால் அவைகளை முன்னரே படம் எடுத்திருந்தேன்.
இங்கு எங்களுக்கு ‘கைடா’க வந்தவர் இது அரச குமாரியின் பள்ளிக்கட்டு என்று ஒரு திருமண போட்டோவைக் காட்டினார் ; பள்ளிக்கட்டு சபரி மலைக்கு என்ற வீரமணி பாட்டைக் கேட்டிருந்த எனக்கு வியப்பு மேலிட்டது ; பள்ளிக்கட்டு என்றால் அரசகுமாரியின் திருமணம் அல்லது ஒரு கிராமத்தை உருவாக்குதல் என்று மலையாளத்தில் பொருளாம்.
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
லண்டன் வந்த பிறகு, 1935ம் ஆண்டு ஆனந்தவிகடன் தமிழ் அகராதியைப் புரட்டிப் பார்த்தேன்; அண்மையில் வெளியான கிரியா தமிழ் அகராதியிலும் பார்த்தேன் ; பள்ளிக்கட்டு என்ற சொல்லே இல்லை ; இன்று வரை பள்ளிக்கட்டு சபரிமலைக்கு என்ற பாடல் வரிகளுக்கு அர்த்தம் புரியவில்லை . மலையாளச் சொல் என்பதால் நம்மவர்கள் விட்டு விட்டாலும் சபரிமலைக்கும் பள்ளிக்கட்டுக்கும் என்ன தொடர்பு? தெரிந்தால் சொல்லுங்கள்
இதோ குதிரை மாளிகையின் சிறப்புகள்
அரசவைக் கூடம் , மாளிகை முழுதும் மரத்தால் ஆனது. மேற்கூரைகள் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன . அவை அனைத்தும் தஞ்சாவூர் தச்சர்கள் (தர்மலிங்கம்??) கைவண்ணம் என்று உடன் வந்த ‘கைடு’ கூறினார் .ஜன்னல்கள் என்று நாம் சொல்லும் சாளரங்கள், மழை நீர் புகாத வண்ணம் , க்கா ற்று மட்டும் உள்ளே வரும் வகையில் அற்புதமாக முழுக்க முழுக்க மரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன
இங்கு அருமையான பளிங்குச் சிலைகளும் , பஞ்சலோக விக்கிரகங்களும் இருக்கின்றன. மன்னருக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த சீன, ஜப்பானிய ஜாடிகள், கோப்பைகள் பல வண்ணங்களில் மிளிர்கின்றன. தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம், , பீங்கான் பாத்திரங்கள் உள்ளன Rain Drum ரெயின் ட்ரம் என்னும் டமாரம் இருக்கிறது.
ரெய்ன் ட்ரம் Rain Drum என்றால் மழை டமாரம்; இதில் தவளை உருவங்கள் இருக்கும். இவைகள் மீது மழைத்துளிகள் விழும்போது தவளை எழுப்பும் ஒலி கேட்குமாம். இன்னும் ஒரு விளக்கம் இவைகளை வைத்தால் காலா காலத்தில் பருவ மழை பெய்யுமாம் ; தென் கிழக்காசிய நாடுகளில் இவைகளைக் காணலாம்.
இந்த மழை டமாரங்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவை. இப்போது புத்தமதக் கோவில்களிலும், அ ரண்மனைகளிலும் காணப்பட்டாலும் இவைகளுக்கும் புத்த மதத்தனுக்கும் தொடர்பில்லை. இவை வியட்நாமில் தோன்றி மற்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவின. கரன் டமாரங்கள் , தவளை டமாரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
பர்மிய கரண் இன மக்கள் இவைகளை வயல்களில் தொங்கா விடுகின்றனர்; இதனால் பயிர்களை பூச்சிகளை அளிக்காது என்று அவர்கள் நம்புகின்றனர். கிரஹப் பிரவேசத்தில் வீட்டில் ஒலித்தால் சுப மங்களம் ஏற்படுமாம். வறட்சிக்கு காலத்தில் இவைகளை முழக்கினால் மழை வரும் என்பதும் பர்மியர்களின் நம்பிக்கை.
டமாரத்தின் நடுவில் நட்சத்திரம் பொறிக்கப்பட்டிருக்கும்; அதிலிருந்து 8, 12, 16 என்ற இரட்டைப்படை எண்களில் கிரணங்கள் புறப்படும். டமா ரத்தில் தவளைகளுக்குப் பதிலாக வேறு பிராணிகள், தாவரங்கள் ஆகியனவும் பொறிக்கப்பட்டிருக்கும்
கதகளி நடனம் மலையாள பூமிக்கே உரித்தான நடன வகை. அதில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு வண்ணம், தலை முடி, கவசம் உண்டு. ஒரு அறை .முழுவதும் கதகளி நாட்டிய கதாபாத்திரங்களின் முழு உருவ சிலைகள் இருக்கின்றன .
படங்களை முதலில் காண்போம்:
-TO BE CONTINUED…………………
TAGS- திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள், Place Museum, Rare pictures-1, Thiruvananthapuram
Nagarjuna was the son of a wealthy Brahmin of Vidharba region. He was an expert in all branches of science, particularly chemistry. We can call him Father of Chemistry and Father of Alchemy; and Father of Magic as well.
He was born under an Arjuna Tree and his Guru was a Naga and hence he was called Nagarjuna.
His achievements according to Chinese, Tibetan and Indian historians were:
Finder of Gold Mines in South India
Founder of Mahayana Buddhism
Made gold out of base metals and wiped out famine
Built dykes to save Gaya from flooding
Wrote several books dealing with many different subjects.
Invented many medicines; Nagarjuna was the discoverer of several eye medicines and of the elixir of life which strengthens the weakening forces of men in old age. He prolonged the life of many kings.
xxxx
Described colouring and alloying metals; extraction of copper from pyrites, use of metal oxides as medicines.
Famous historian Dr Raghuvira says he belonged to the same age which produced the non rusting Iron Pillar of Delhi.
The earliest datable of account of Nagarjuna is given by Kumarajiva in 405 CE. Chinese Traveller I-Tsing places Nagarjuna in the First Century CE. So we can conclude that he lived 2000 years ago.
All his works were preserved in China and not India. Muslims burnt the libraries in Nalanda University and we lost all the literary treasures of India. Fortunately Chinse translated all his works when they came to study in Nalanda.
Nagarjuna was the Vice Chancellor of Nalanda University for some time. At an early age, at the suggestion of the High Priest Sri Saraha Bhadra of the Nalanda University, he entered Buddhist order. After Saraha Bhadra’s death he became the President (V.C.) of the University.
The Tibetan tradition preserved the name of his teacher Rahula. Chinese Traveller Hiuen Tsang mentioned one of his pupils Arya Deva.
Strange stories are told about this philosopher cum scientist:
“A legend relates that he was skilled in magic and was able thereby to prolong his own and a Southern Indian King’s life indefinitely. This caused great grief to the mother of the heir- apparent, who instigated her son to ask Nagarjuna’s for his own head. Nagarjuna complied with his request and cut his own head off with a blade of Kusa grass, nothing else has the power of injuring him “– Monier Williams- Buddhism , P.196
The following is a list of works ascribed to Nagarjuna:
In Medicine:
Rasa ratnakara,
Lauha sastra
Kaksaputa Tantra of Siddhanta Mangala
Arogya Manjari
Yoga Sara
Yoga Sataka
Rasendra Mangala
Rasakachaputa
Yoga Manjari
Varta mala
Cittanandapatisyasi
xxxx
In the Secondary Baudhdha Philosophy
Siddhanagarjuna or Madhyamika karika
Mukti swastika and its commentary
Vigrahavyavartini karika
Vigrahavyavartini karika Vrtti
xxxx
In Spiritual Knowledge
Prajnadanda
Tattvaprakasa
Paramarahsyartha
Samayamudra
xxxx
In Sexology
Ratisastra
xxxx
In Magic
Yogaratnamala ; also called Ascharya yogamala
xxxx
In Tantra
Taratantra
Kacchaputa Tantra
Siddha Camunda tantra
xxxx
In Therapy based on Tantra
Nagarjuna Cikitsa
Nagarjuniya Yoga
Nagarjunanjana
xxxx
In Art
Suhrlekha
xxxx
Many writers have pointed out that all these books were not written by one single author; may be written by others with the same name.
Caraka used only leaves, roots, barks etc. as medicines in the field of Cikitsa. Using Rasas for cikitsa was a new thing. Nagarjuna proposed many rasa cikitsa.
In India we find many scholars to have written so many books. Vyasa, Adi Shankara, Kshemendra and Bhojaraja have written several treatises. So Nagarjuna could have produced these works.
Cakrapanidatta and Vrnda, authors of medical treatises have referred to Nagarjuna in their books. They have referred to many prescriptions in their treatises. Several times he was called by the name of Muni.
xxxx
Even today Nagarjuna is well remembered in Tibet . Nagarjuna’s two famous quotations are:
“I shall draw out the world from poverty if I am successful in preparing the Rasa”.
“On getting success in the preparation of the Rasa, I shall make the world bereft of death and old age.
xxxx
It is amazing to see that one individual thought of wiping out poverty from the face of earth through his chemical preparations. In the West we see people inventing medicines to make more money; in India Siddhars and Vaidhyas did it for saving people without expecting any money.
–subham—
Tags – books, Nagarjuna, Quotes, Father of Chemistry , Father of Magic, Father of alchemy.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கங்கை மீது அணை – சரியா?
ச.நாகராஜன்
சுற்றுப்புறச் சூழலுக்கு மனிதன் செய்யும் கேடுகள் என்ற எனது முந்தைய கட்டுரையில் டாக்டர் கிருஷ்ண நாராயண் சென் (Dr krishna Narayan Sen) அவர்கள் குறிப்பிட்ட சில கருத்துக்களைத் தந்துள்ளேன்.
அவர் கங்கை மீது அணை கட்டுவது சரியா என்பதைக் குறித்த தனது கருத்தை அழகுற வெளிப்படுத்தியுள்ளார்.
அதை இங்கு கீழே தருகிறேன்.
ஒரு முறை ஜோஷி மடம் ஜகத்குரு சங்கராசாரியர் இப்படிக் குறிப்பிட்டார் : “எந்தப் பணியை நாம் செய்தாலும் அதில் நமக்கு பண லாபம் எவ்வளவு கிடைக்கிறது, ஆத்ம லாபம் எவ்வளவு கிடைக்கிறது என்று பார்த்தே செய்கிறோம். ஆனால் கங்கையின் மீது அணைகளைக் கட்டுவதால் இந்த இரண்டையுமே நாம் இழந்து விட்டோம்.”
ஒடி வரும் நீரைத் தடுத்துத் தேக்கி ஒரு அணையை உருவாக்குகிறோம். அது வெள்ளத்தைத் தடுக்கிறது, வயல்களுக்கு நீரைப் பாய்ச்ச வகை செய்கிறது, தொழிலகங்களுக்கு உதவுகிறது, மனிதனுக்கு நீரைத் தந்து உதவுகிறது, ஹைட்ரோ எலெக்ட்ரிக் ஆற்றலை உருவாக்கப் பயன்படுகிறது.
இவை எல்லாம் பேப்பரில் எழுதச் சரியானவை தான். ஆனால் நடைமுறையில் ஏராளமான பிரச்சினைகள் எழுகின்றன. சுற்றுப்புறச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. பல்லுயிர் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. செடி, கொடி, மலர்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன.
உலகின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட அணைகளால் 3,50,000 தாவரம் மற்றும் உயிரினங்களும் 110 லட்சம் மிருக இனங்களும் அழிந்து விட்டன என்று உத்தேசமாக மதிப்பிடப்படுகிறது.
மரங்கள், மிருகங்கள், நீர் வாழ் உயிரினங்கள் க்ரீன்ஹவுஸ் வாயு எனும் நச்சுப் புகையினால் உருமாறி அழிகின்றன. உயிர் பிழைத்திருக்கும் நீர் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பிற்காக வேறு இடத்தை நோக்கிச் செல்கின்றன.
இயல்பாகச் செல்லும் நீரோட்டம் பாதிக்கப்படுவதால் தாவர வகைகளும் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.
ஒரே இடத்தில் ஏராளமான நீர் தேக்கப்படுவதால் பூமியில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக பூகம்பம் ஏற்படுகிறது. அணையின் அடிப்பகுதியில் உள்ள பூமிப் பரப்பில் வெடிப்புகள் ஏற்படுகின்றன.
அஹ்மத் ஜொக்லஃப் என்னும் பல்லுயிர் இனப் பெருக்கம் பற்றிய ஐ நா அறிஞர் (AHMED DJOGHLAF, HEAD OF UN BIOLOGICAL DIVERSITY), ஒவ்வொரு மணி நேரமும் மூன்று உயிரினங்கள் அழிகின்றன – அதாவது ஒரு நாளுக்கு 72 உயிரினங்கள் அழிகின்றன- என்கிறார். அத்தோடு ஒவ்வொரு வருடமும் பல்லுயிர் இனப்பெருக்க அழிவால் 17000 ஹெக்டேர் காட்டு நிலங்கள் அழிக்கப்படுகின்றன. நீரை மாசுபடுத்துவதால் ஒவ்வொரு வருடமும் 4 கோடி குழந்தைகள் இறக்கின்றன. 10 கோடி நீர் வாழ் உயிரினங்கள் கடல் நீர் மாசுபடுவதால் ஒவ்வொரு வருடமும் அழிகின்றன. இது கடலில் சேரும் தொழிலகக் கழிவுகளால் ஏற்படும் அசுத்தத்தாலேயே பெரும்பாலும் ஏற்படுகிறது.
மூன்று பெரும் விஞ்ஞானிகள் கடவுள் மீதான நம்பிக்கை அறிவியல் முன்னேற்றத்துடன் இணைந்தே இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
அமெரிக்க அரசைச் சேர்ந்த மரபியல் விஞ்ஞானியான டாக்டர் பிரான்ஸில் எஸ் காலின்ஸ் (Dr Francis S Collins, renowned geneticist of American Government), ஹார்வர்ட் வானியல் பேராசிரியரான டாக்டர் ஓவன் ஜிஞ்ஜெரிச் (Dr Owen Gingerich, emeritus professor of Astronomy in Harvard) மற்றும் ஸ்டான்ஃபோர்ட் உயிரியல் வல்லுநரான டாக்டர் ஜான் ரப்கார்டன் (Dr John Roughgarden, Evolutionary biologist at Stanford) ஆகிய மூவரே இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.
உலகின் படைப்பானது தகுந்த மரியாதை செலுத்தப்பட வேண்டிய ஒன்று. அதன் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது மிகுந்த அவசியம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார் : “கடவுள் உலகத்தை எப்படிப் படைத்தார் என அறிய நான் விரும்புகிறேன். இந்த அல்லது அந்த நிகழ்வில் எனக்கு ஆர்வம் இல்லை. அவனது எண்ணங்களை அறிய விரும்புகிறேன். மற்றவை எல்லாம் வெறும் விவரங்களே”
(I want to know, how God created the world. I am not interested in this or that phenomenon. I want to know His thoughts, the rest are details.)
ஆக, பெரும் அறிஞர்களே கவலைப்படும் அளவு மனிதனின் சுயநலம் மிக்க செயல்பாடுகள் உள்ளன, அவை படைப்பின் அருமையை சிதைக்கின்றன என்பது தெளிவாகிறது.
ஒவ்வொருவரும் சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டில் கவனம் செலுத்தி அதைக் காத்தால் இயற்கை நம்மை வாழ வைக்கும்!
நான் இரசாயனவியல், பெளதீக இயல், தாவர இயல், பிராணியியல் படித்து பி.எஸ் சி பட்டமும் பின்னர் இரண்டு சப்ஜெக்டுகளில் எம்.ஏ. பட்டங்களும் பெற்றவன். ஆகையால் தத்துப் பித்து என்று உளறமாட்டேன் . உலக மஹா மேதை ஆல்பர்ட் ஐன்டைனுக்குத் தெரியாத விஷயங்கள் இந்துக்களுக்குத் தெரிந்திருந்தது ; ஆயினும் கிரேக்கர், சகரர், ஹூனர், மங்கோலியர், முஸ்லீம், கிறிஸ்தவர் படை யெடுப்புகளால் நமது அறிவியல் பொக்கிஷங்கள் அழிந்து விட்டன . அவை முன்னர் இருந்ததற்கான இலக்கியச் சான்றுகள் மட்டுமே இப்போது உள்ளன . ஒரு காலத்தில் நாஸா (The National Aeronautics and Space Administration = NASA ) போன்ற அமைப்புகள் இதைக் கண்டுபிடிக்கையில் நாங்கள் அன்றே இதைச் சொன்னோம் என்று பெருமை பேசலாம்.
one stone= Einstein
Apart from being a famous last name, einstein in German literally means ‘one stone’. The word is composed of ein which means one and stein which means stone or rock. The word is pronounced /aynshtayn/ .
ஐன்ஸ்டைன் (ஜெர்மன் மொழியில் இவர் பெயர் ஒரு கல் ; ஐந் = 1, ஸ்டைன் = கல்/ ஸ்டோன் ) என்ன சொன்னார்? ஒளியின் வேகம்தான் இந்த பிரபஞ்சத்தில் அதிக வேகம் உடையது ; ஒளி ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் செல்லும் Light from a stationary source travels at 300,000 km/sec (186,000 miles/sec). ஆனால் இந்த வேகத்தை மனிதர்கள் நெருங்கவே முடியாது ; ஏனெனில் அதற்கு பிரம்மாண்டமான சக்தி தேவை; அப்படிப்பட்ட சக்தியை உண்டாக்க பிரம்மாண்டமான சக்திக் கேந்திரம் தேவை ; அதை நம்மால் உருவாக்க முடியாது
ஆனால் மஹாபாரதம் , ரேவதி நட்சத்திரக் கதை , நம்மாழ்வார் பாடல் முதலியன இந்துக்களின் வெளி உலக யாத்திரை பற்றித் தெளிவாக உரைக்கின்றன ஒரே நாளில் கிருஷ்ணனும் அர்ஜுனனும் சொர்க்கலோகம் சென்று, இறந்து போன 10 பிராமணக் குழந்தைகைகளை மீட்டு வந்ததை நம்மாழ்வார் பாசுரம் எடுத்துரைக்கிறது . இறந்து போன குழந்தைகளை சுந்தரரும் சம்பந்தரும் மீட்டு வந்ததை தேவாரம் பாடுகிறது (இது பற்றி தனித்தனிக் கட்டுரைகளை முன்னரே எழுதிவிட்டதால் மீண்டும் சொல்லப் போவதில்லை )
வால்மீகி ராமாயணத்தில் THOUGHT POWERED SPACE SHUTTLE எண்ணத்தால் இயக்கும் ஸ்பேஸ் ஷட்டில் பற்றிக் காண்கிறோம் ; ஒரே நாளில் இலங்கையிலிருந்து ராமன் அயோத்தி செல்கிறார். மேலும் அந்த விண்கலம் எத்தனை பேர் ஏறினாலும் அதற்குத்தக்க விரிவடைகிறது . அதே போல அனுமனும் ஒரே நாளில் இலங்கையிலிருந்து இமயமலைக்குச் சென்று சஞ்சீவி மூலிகையைக் கொணர்ந்ததையும் காண்கிறோம்.
இவ்வாறு விரைவில் செல்ல, சில குளிகைகளை உலகம் புகழும் மந்திரவாதி நாகார்ஜுனா 2000 ஆண்டுகளுக்கு முன்னர் யோக ரத்ன மாலா நூலில் செப்பிய விஷயங்களைக் காண்போம் .
xxxx
இடுப்பில் கரிசலாங்கண்ணி (Bhringaraja (Eclipta alba) Karisilankanni ) மூலிகை, பொன் வண்டு, காக்க ஜங்கா சரபுங்கா , ஏல பலூக்கா மூலிகையைச் சுற்றிக்கொண்டு ஒரு மனிதன் காற்றினும் கடுகிச் செல்லலாம் .
xxxx
மதன பலா, சரபுங்கா , பூர்ஜ பத்ராவின் பட்டை ஒரே கலர் உடைய பசுவின் பாலில் பொடித்து காலில் பூசிக் கொள்ளவும; அ ப்படிச் செய்யும் மனிதன் களைப்பே தெரியாமல் ஒரே நாளில் நூற்றுக் கணக்கான மைல்கள் பயணம் செய்ய முடியும் .
XXXX
கிர்கலச , நக்தமாலை எலும்புகளை எடுத்து தம்பலப்பூச்சி, மயில் ரத்தத்தில் கலந்து ஒரு மாத்திரை செய்யவும்; அதை ஒரு சிறிய தங்கத்தினால் ஆன சின்னப் பெட்டியில் வைக்கவும்; அதை வாயில் அடக்கிக்கொண்டால் ஒரு மனிதன் ஒரே நாளில் 350 யோஜனை தூரம் செல்லலாம்.
வனலோசன, கரிசிலாங்கண்ணி வேர் ஆகியவற்றை ஆட்டு வெண்ணெயில் பொடித்து, காலில் பூசிக்கொண்டால் அந்த மனிதன் நினைத்த தூரம் செல்லலாம்.
அனுமன் இலங்கைக்குச் சென்றதும், சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவர இமய மலை சென்றதும் இப்படித்தான் போலும்!
குபேரனுடைய புஷ்பக விமானத்தை ராவணன் பறித்தான்.அதை ராவணன் மரணத்துக்குப் பின்னர் ராமன் பெற்றார்.அது நினைத்த மாத்திரத்தில் ஒரே நாளில் 4000 மைல் பயணம் செய்து ராமர் அணியை நந்திக் கிராமத்தில் இறக்கியது.
இவைகளை எல்லாம் படிக்கையில் அக்காலத்தில் விண்வெளிப் பயணம் சகஜம் என்றே தோன்றுகிறது.
XXXX
ஒரு துளை அல்லது உள்ளீடுள்ள குழாயில், உயிருள்ள தேனீக்களை அடைக்கவும்; அதை வானில் தூக்கி எறிந்தால் அது கீழே
விழாமல் பறந்து கொண்டே இருக்கும் !
இது போல மேலும் பல அதிசயங்களையும் தீ உண்டாக்கும் அதிசயங்களையும் நாகார்ஜுனா பகர்கிறார்