அச்சன்கோவில் ஸ்வாமிஜி கிருஷ்ணா! ( Post No.6046)

Written by S Nagarajan


Date: 8 February 2019


GMT Time uploaded in London – 5-23 am


Post No. 6046

Pictures shown here are taken from SANTANAM SRINIVASAN’S PHOTO FILE. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ச.நாகராஜன்

சில நாட்களுக்கு முன்னர் (இதை எழுதும் தேதி 20-1-2019) மின்னஞ்சலில் ஒரு தகவல் வந்தது. அச்சன்கோவிலில் ஒரு பிரிட்டிஷ் அதிகாரி வேலை பார்த்த சமயத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அந்தச் சம்பவத்தில் ஐயப்பன் பிரிட்டிஷ்காரருக்கு தரிசனம் கொடுத்தாராம்!

எனக்கு வியப்பு மேலிட்டது.

ஏனெனில் ஸ்வாமிஜி கிருஷ்ணா ஆயக்குடியைச் சேர்ந்தவர். ஸ்வாமிஜி கிருஷ்ணாஆஃப் ஆய்க்குடி என்று அறியப்படுபவர். எங்களது குரு. மஹாகணபதியுடன் பிரத்யக்ஷமாகப் பேசக் கூடிய பெரும் தபஸ்வி. மகான்.சித்தர். அருளாளர்.

அவர் தான் அச்சன்கோவிலை ஸ்தாபித்தவர்.

ஆக பிரிட்டிஷ்காரர் எப்படி இங்கு வந்தார்?

காயத்ரி மந்திரத்தை ஒரு யுனிவர்ஸிடி புரபஸர் ஆராய்ந்து அதன் அபார மஹிமையைக் கண்டதாக ஒரு செய்தி மின்னஞ்சலில் பரப்பப்பட (இன்னும் இது பரப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது) இதை கிழி கிழி என்று கிழித்து நாத்திகவாதிகள் தங்கள் வலைத்தளங்களில் கட்டுரைகளை வெளியிட்டார்கள்; வெளியிட்டும் வருகிறார்கள்.  முதலில் மின்னஞ்சல் தகவலில் கூறப்படும் யுனிவர்ஸிடியே கிடையாது. அடுத்து அவர்கள் குறிப்பிடும் புரபஸரின் பெயர் எங்கும் எந்த யுனிவர்ஸிடியிலும் கிடையாது.

ஆக அதிக உற்சாகத்தினாலோ அல்லது தனக்குத் தானே வினை வைத்துக் கொள்வது போலவோ செய்யப்படும் இப்படிப்பட்ட செயல்கள் நமக்குத் தீங்கு தான் பயக்குமே தவிர நன்மை தராது.

இந்த நிலையில் அச்சன்கோவில் பிரிட்டிஷ் அதிகாரியைப் பற்றிச் சற்று வியப்புடன் தான் படித்தேன். அது கூறப்படும் கதையின் பாணி, இன்னும் கூட என்னை அதை உண்மை என நம்பச் சொல்கிறது!

சரி விஷயத்திற்கு வருவோம்.

இடம் தென்காசி.

தென்காசி கோவிலில் ஒரு கல்வெட்டு உண்டு. அது இது தான்:

யாராகிலும் இந்த தென்காசிமேவு திருவாலயத்து

வாராததொரு குற்றம் வந்தக்கால் அப்போது அங்கு வந்து

நேராகவே அதைத் திருத்திப் புரப்பார்களை

பாரோரறியப் பணிந்தேன் பராந்தக பாண்டியனே

கோவிலைக் கட்டிய மன்னன் பராந்தக பாண்டியன், “எதிர்காலத்தில் எப்போதாவது ஒரு சமயம் இந்த ஆலயத்திற்கு தீங்கு வந்தது எனில், அப்போது அதை நேராக்கிச் சரி செய்பவர்களுக்கு இப்போதே பராந்தக பாண்டியனான நான் பணிகிறேன்” என்கிறார்.

என்ன அற்புதமான உயர்ந்த மனம் அந்த மன்னனுக்கு.

பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னர் ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில் கோவிலுக்கு ஒரு தீங்கு வந்தது.

கோபுரத்திலேயே  விரிசல். திருப்பணி வேலை தொடங்கியது.ஸ்வாமிஜி கிருஷ்ணா ஆசி கூற திருப்பணி செவ்வனே நடைபெற்றது. கோவில் கும்பாபிஷேகத்தன்று அவர் தென்காசிக்கு கோவில் கும்பாபிஷேகத்திற்கென வருகை புரிந்தார்.

எங்கள் குடும்பம் ஸ்வாமிஜியுடன் நெருக்கமான குடும்பம். நான் அப்போது என் இளமைப்பருவத்தில் இருந்தேன்.

தென்காசிக்குச் சென்றாகி விட்டது – கும்பாபிஷேகத்திற்கென.

அங்கு காலையில் டிராவலர்ஸ் பங்களாவின் வெளி முற்றத்தில் நாற்காலிகளில் அமர்ந்து ஒரு சின்ன பக்தி அரட்டை.

நடுவில் கம்பீரமாக கேரள அரசின் டிரான்ஸ்போர்ட் டைரக்டர் திரு மாதவன் நாயர் அமரிந்திருந்தார். (இவரது பதவியின் பெயர் எனக்குச் சரியாகத் தெரியாது என்றாலும் உயர் அதிகாரியாக அப்போது இருந்தார்- முக்கியமாக போக்குவரத்துத் திட்டங்களை முடிவு செய்யும் உயர் பதவியில்!)

என்னைப் பார்த்து ஸ்வாமிஜியை எப்படித் தெரியும் என்றார். ஆஹா! இப்படிப்பட்ட கேள்விக்குத் தானே நான் காத்திருந்தேன்.

எங்கள் அனுபவங்களை விலாவாரியாக விவரித்தேன். பின்னர் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன் – “உங்களுக்கு எப்படி ஸ்வாமிஜியைத் தெரியும்?” என்று.

அவர் சாதாரணமாக பேசவே மாட்டாராம்.ரிஸர்வ்ட் டைப். உயர் அதிகாரிக்கே உரித்தான கம்பீரம் ; ஒரு மிடுக்கு; ஒரு அதிகார தோரணை.

ஆனால் எனது கேள்விக்கு மிகவும் சந்தோஷத்துடன் பதில் கூறலானார்.

அச்சன்கோவில் என்பது மலையில் உள்ள ஐயப்ப ஸ்தலம். பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட சிலை கால வெள்ளத்தில் பூமிக்கு அடியில் புதையுண்டு போனது.

ஸ்வாமிஜி கிருஷ்ணாவின் கனவில் ஒரு நாள் அந்த சிலையை ஸ்தாபிதம் செய்ய வேண்டுமென்ற ஆதேசம் வந்தது. அவர் கனவு தானே என்று அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் அதே கனவு வரவே, இதில் ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது என்பதை உணர்ந்து, பல ஆட்களுடன் ஆள் உயரம் வளர்ந்திருந்த கோரைப் புற்களை வெட்டியவாறே காட்டில் வழி செய்து கொண்டு கனவில் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று அங்கு தோண்டச் சொன்னார். (பதினெட்டு அடி ஆழம் என நினைக்கிறேன்) பூமியில் புதையுண்டு கிடந்த ஐயப்பன் சிலை வெளியில் எடுக்கப்பட்டு அச்சன்கோவிலில் ஸ்தாபிக்கப்பட்டது.

வருடம் தோறும் புஷ்பாஞ்சலி ஸ்வாமிஜியால் மிக பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட்டு வந்தது; அவர் மறைவிற்குப் பிறகு இன்றும் அது மிக மிக பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட்டு வருகிறது.ஐயப்ப பக்தர்கள் செல்லும் ஒரு முக்கிய ஸ்தலமாக இன்று விளங்குகிறது.

ஆரம்பத்தில் அங்கு செல்ல சரியான பாதை இல்லை. மண் பாதை; கரடுமுரடான பாதை.

அதற்குச் சரியான படி சாலை அமைக்க வேண்டுமென ஸ்வாமிஜி விரும்பியபோது அந்தக் கோரிக்கை மாதவன் நாயரின் கைக்கு வந்தது.

அவரோ கடுமையான ஆள். இந்த கடவுள்,ஸ்தலம் இதிலெல்லாம் அவ்வளவாக நம்பிக்கை இல்லாதவர். ஸ்வாமிஜி என்றால் அவ்வளவு தான் – அந்தச் சொல்லே கட்டோடு பிடிக்காது.

என்றாலும் கோரிக்கையை இன்ஸ்பெக்‌ஷன் செய்து முடிவு செய்து நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பில் இருந்ததால் அந்தப் பாதையில் ஒரு முறை வர ஒப்புக் கொண்டார்.

அவர் ஸ்வாமிஜியுடன் ஒரு ஜீப்பில் செல்லும் போது கிண்டலாக ஸ்வாமிஜியிடம், “இதுவோ காடு; இங்கு எதற்கு ஒரு பாதை? நீங்கள் தான் அற்புதங்கள் செய்பவர் ஆயிற்றே. ஒரு புலியைக் கொண்டு வாருங்களேன், இங்கு! இதன் முக்கியத்துவத்தை நான் நம்புகிறேன்” என்றார்.

இதைக் கூறிமுடித்தவுடன் அடுத்த வளைவில் கரடுமுரடான மண்சாலையை முழுதுமாக மறித்து ஒரு பெரிய புலி நின்று கொண்டிருந்தது.

பயந்து போன மாதவன் நாயர் அலறியவாறே ஸ்வாமிஜியிடம் புலியைப் பார்த்து விட்டேன், அதைப் போகச் சொல்லுங்கள் என்றார்.

புலியும் போனது.

கொஞ்ச தூரம் சென்றவுடன் மாதவன் நாயர், “ இது ஏதோ தற்செயலாக -அகஸ்மாத்தாக நடந்த ஒரு சம்பவம். காட்டில் புலிகள் இருப்பது சகஜம் தானே!

இன்னொரு முறை புலி வருமா என்ன?” என்று ஸ்வாமிஜியிடம் கூற அடுத்த வளைவில் சாலையை மறித்து ஒரு புதிய புலி நின்றது.

அந்தக் கணத்தில் அவர் மனம் மாறினார்.

“நான் அன்றிலிருந்து இன்று வரை ஸ்வாமிஜியின் அத்யந்த பக்தன்” என்று முடித்தார் மாதவன் நாயர்.

(அச்சன்கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் பின்னால்  ஒரு சமயம் எங்கள் குடும்பத்தினருக்குக் கிடைத்தது.

புஷ்பாஞ்சலியில் பங்கு கொண்டோம். அடடா, என்ன அற்புதமான ஸ்தலம்.

போகும் தார் பாதையோ வெகு ஜோர்.

மாதவன் நாயரை நினைத்துக் கொண்டேன் அப்போது.)

தென்காசி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பராந்தக பாண்டியனின் ஆசை வெகு காலம் கழித்து நிறைவெற்றப்பட்ட ஒரு பெரும் திருவிழாவில் பங்கு கொண்டது முதல் மகிழ்ச்சி.

அதில் ஸ்வாமிஜியின் மஹிமையைத் தெரிந்து கொண்டது  இரட்டிப்பு மகிழ்ச்சி.

ஆக  இது தான் உண்மை என நான் நினைத்துக் கொண்டிருக்க, மின்னஞ்சல் தகவல் வந்த போது நான் வியப்படைந்தது சரி தானே!

ஸ்வாமிஜியின் மஹிமை சொல்லில் அடங்காதது. ஏராளமான அற்புதங்களை நேருக்கு நேர் நாளுக்கு நாள் அனுபவித்து வந்ததால் அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் எப்போதும் ஸ்வாமிஜி பற்றிய பேச்சாகவே தான் இருக்கும்!

அது ஒரு அற்புதமான பொற்காலம்! மீண்டும் வருமா?

(போலித் தகவல்களை மின்னஞ்சலில் அனுப்பக் கூடாது; அப்படி ஒரு தகவலை அனுப்பினால் ஸோர்ஸ் – ஆதாரமும் தெரியப்படுத்தப்பட வேண்டும். இது எனது வேண்டுகோள்!)

அச்சன்கோவில் அரசே, சரணம் ஐயப்பா!

***

கொச்ச முச்ச கொச்ச முச்ச722019 (Post No.6045)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 7 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 20-46


Post No. 6045


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

15 ராகங்களின் பெயர்கள் குழம்பிப் போய் கிடக்கின்றன. நீங்கள் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கலாமே! 15 ராக மீன்களைக் கண்டு பிடியுங்கள்; திணறினால் விடையைக் கீழே காண்க

1.கா ய போ து  கா  ம்  தி லகு

2.  மாமாளயாளம் கௌ

3.தாளம்ரகேகௌ

4.ரணம்கராபசங்

5.ம்நீபரிலா

6.யைநாநாதமக்கிரி

7.மாவமயதித்

8.தி ஹ காம்   ரி போ

9.ந்ளம்இ தோ

10.கபுனா ராவளின்

11.ரம்ராஷ்சௌடி

12.பைசிரவிந்து

13.கல்மோயாணிகன

14.கடைம் நாட்பீர

15.குகககனலம்தூ

Xxxxxxxxxxxx answers

1.யதுகுல காம்போதி, 2.மாய மாளகௌளம்,3.கேதார கௌளம்,

4.சங்கராபரணம்,5.நீலாம்பரி,6. நாதநாமக்கிரியை,7.மத்யமாவதி,

 8.ஹரிகாம்போதி,9.இந்தோளம் ,10.புன்னாக வராளி,11.சௌராஷ்டிரம்

12.சிந்துபைரவி,13.மோகனகல்யாணி,14.கம்பீர நாட்டை,15.ககனகுதூகலம்

சுமேரியாவில் கல்லீரல் ஜோதிடம் (Post No.6044)


Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 7 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 19-52


Post No. 6044


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

My Old Articles:–

கல்லீரல் | Tamil and Vedas



  1.  

Translate this page

14 Apr 2017 – இது இதாலியில் ரோம் நகரைச் சுற்றியிருந்த எட்ருஸ்கன் (Etruscan) … வடிவங்கள்எட்ருஸ்கன் (Etruscan) நாகரீகத்தைவிட 1200 ஆண்டுகள் …

ஹிட்டைட்ஸ் | Tamil and Vedas



  1.  

Translate this page

போகஸ்கோய் (Bogazkoy) என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இத்தகைய வடிவங்கள்எட்ருஸ்கன் (Etruscan) நாகரீகத்தைவிட 1200 ஆண்டுகள் …

Tami and Sanskrit in Etruscan | Tamil and Vedas



  1.  

Posts about Tami and Sanskrit in Etruscan written by Tamil and Vedas. … A Bronze model of a sheep’s liver fromPiacenza (150 BC) gives 52 names of divinities, …

DIVINATION in The Vedas, Babylonian and Etruscan | Tamil and Vedas



  1.  

10 Apr 2015 – From my earlier article Etruscan-Hindu/Tamil Link posted on 28 July … A Bronze model of a sheep’s liver from Piacenza (150 BC) gives 52 …

-சுபம்–

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி722019 (Post No.6043)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 7 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 12-31


Post No. 6043


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. அடுப்பு  எரிக்கலாம்; நிலத்திலிருந்தும் கிடைக்கும்

3. மரம்

4. வேதங்களில் அதிகம்; புகழ் பெற்றது காயத்ரி—-

6. வெள்ளி போல தெர்மாமீட்டரில் பளிச்சிடும்

7. அகப்பை; உணவு பரிமாற உதவும்

8.நகரங்களில் போக்குவரத்து–——–அதிகம்

10.இருவருக்கோ ஒருவருக்கோ மட்டும் தெரிந்தது

11.– ஒப்பந்தம்

கீழே

1. வாழைப்பழத்துக்கு ஸம்ஸ்க்ருதச் சொல்

2. மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட தென்னவன்; அவன் பெயரில்  நூலும், தென்  காசி பக்கத்தில் ஊரும் உள்ளது

3.-கம்பம் என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்

5. படுக்கை  அறையில் சிறுவர் சிறுமியர் சண்டை போட உதவுவது

6.- சிறுவன் என்பதற்கான ஸம்ஸ்க்ருதச் சொல்

8. கல்யாணத்துக்கு —-தேடுகின்றனர்

9. சோஃபாவில், நாற்காலியில் சுகமாக அமர உதவுவது

10.சூரியன்

11.கீழிருந்து மேலே செல்க- உணவு

12.கபிலரின் நண்பன்; முல்லைக்குத் தேர் ஈந்தவன்

குறுக்கே

1.கரி- அடுப்பு  எரிக்கலாம்; நிலத்திலிருந்தும் கிடைக்கும்

3.தரு- மரம்

4.மந்திரம்- வேதங்களில் அதிகம்; புகழ் பெற்றது காயத்ரி—-

6.பாதரசம்- வெள்ளி போல தெர்மாமீட்டரில் பளிச்சிடும்

7.கரண்டி- அகப்பை; உணவு பரிமாற உதவும்

8.வசதி- நகரங்களில் போக்குவரத்து———-அதிகம்

10.ரகசிய- இருவருக்கோ ஒருவருக்கோ மட்டும் தெரிந்தது

11.உடன்பாடு- ஒப்பந்தம்

கீழே

1.கதலி- வாழைப்பழத்துக்கு ஸம்ஸ்க்ருதச் சொல்

2.சுந்தரபாண்டியன் —மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட தென்னவன்; அவன் பெயரில்  நூலும், தென்  காசி பக்கத்தில் ஊரும் உள்ளது

3.தம்பம்-கம்பம் என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்

5.தலையணை- படுக்கை  அறையில் சிறுவர் சிறுமியர் சண்டை போட உதவுவது

6.பாலகன்   — சிறுவன் என்பதற்கான ஸம்ஸ்க்ருதச் சொல்

8.வரன்  — கல்யாணத்துக்கு —-தேடுகின்றனர்

9.திண்டு- சோஃபாவில், நாற்காலியில் சுகமாக அமர உதவுவது

10.ரவி- சூரியன்

11.உண்டி–கீழிருந்து மேலே செல்க- உணவு

12.பாரி-கபிலரின் நண்பன்; முல்லைக்குத் தேர் ஈந்தவன்

STORY OF TAMIL DEVADASIS -PART 1, INTRO AND PARAVAI (Post No.6042)

Translated  by London swaminathan

swami_48@yahoo.com


Date: 7 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 8-59 am
Post No. 6042
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

My previous articles on Sundara’s miracles are :-

TIME TRAVEL by TWO TAMIL SAINTS | Swami’s Indology Blog



14 Feb 2012 – The boy, not only came alive intact but also aged to compensate for the lost two years. This is another instance of Time Travel by a Tamil saint.

Missing: saintsfrom ‎| ‎Must include: ‎saintsfrom

Miracles by the Blind & Oldest Organ Donation | Tamil and Vedas



1.      

25 Feb 2013 – Miracles by the Blind & Oldest Organ Donation God is great. … One of the great Four Saivaite saints,Sundarar, lost vision in one eye and went …

miracles | Tamil and Vedas



1.      

2.      

Translate this page

When we talk about religion, we believe in the miracles done by great saints. ….. from the miracle stories of Tamil Saints Sambandhar, Appar and Sundarar.

Teleportation Miracles in Hindu scriptures | Tamil and Vedas



1.      

2.      

Translate this page

6 Mar 2013 – Like other three saints he also did severalmiracles. One of the miracles involves teleportation.Sundarar was empty handed when he went to …

Aladdin’s Magic Lamp and Tamil Saints | Tamil and Vedas



1.      

2.      

Translate this page

9 Mar 2012 – Aladdin’s genie performed several miracles for him. … Sundarar, the last of the three Thevaram saints, was receiving paddy and pulses on a ..

பணம் இரட்டிப்பாகும் காலம் ! (Post No.6041)

Written by S Nagarajan


Date: 7 February 2019


GMT Time uploaded in London – 5-49 am


Post No. 6041

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

சென்னையிலிருந்து வெளியாகும் மாத இதழ் கோகுலம் கதிர். பிப்ரவரி 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

பணம் இரட்டிப்பாகும் காலம் !

ச.நாகராஜன்

r = வட்டி விகிதம்

     நிதி சம்பந்தமாக நமக்கு உடனடியாக மனக்கணக்காக ஒரு வரும்படியைக் கணக்கிட ஒரு எளிய சூத்திரம் உண்டு.

அது தான் சூத்திரம் 72.The Rule of 72 என்று இதை ஆங்கிலத்தில் கூறுவர்.

சூத்திரம் 72 என்பது மனதினால் போடக்கூடிய ஒரு எளிய வழியாகும்.

எடுத்துக்காட்டாக ஒரு கணக்கு:

6 சதவிகிதம் வட்டி தரப்படுகிறது.அப்படியானால் நான் போட்ட பணம் எப்போது இரு மடங்காகும்.

இங்கே தான் சூத்திரம் 72 நமக்கு உதவுகிறது

இரு மடங்காகும் வருடங்கள் =  72 / வட்டி விகிதம்

இங்கு 6 % வட்டி விகிதம் என்பதால் 72 / 6 = 12 வருடங்கள்.

இதே வட்டிவிகிதம் 12 சதவிகிதம் என்றால் விடை இதோ : 72 / 12 = 6 வருடங்கள்!

சரி எனக்கு நான்  போட்ட பணம் பத்து வருடங்களில் இரட்டிப்பாக ஆக வேண்டும்.

அப்போது இந்த சூத்திரம் உதவுமா? உதவும்.

72 / 10 = 7.2 %  அதாவது 7.2 % என வட்டி விகிதம் தரப்பட்டால் பத்து வருடங்களில் போட்ட பணம் இரட்டிப்பாகும்!

தேசத்தின் GDP (Gross Domestic Product) பற்றி ஒரு உத்தேச மதிப்பீடு போட வேண்டும்.

தேசத்தின் வளர்ச்சி விகிதம் 4 % ஆக இருந்தால் தேசத்தின் GDP எப்போது இரு மடங்காக உயரும்.

72 / 4 = 12 வருடங்கள் . 12 வருடங்களில் தேசத்தின் GDP இரு மடங்காக உயரும்.

இந்த வளர்ச்சி 4 % -லிருந்து 8 ஆக உயர்ந்தால் ஒன்பது வருடங்களிலேயே தேசத்தின் வளர்ச்சி இரு மடங்காகும். இது 4 %-லிருந்து 2 ஆகக் குறைந்தால் பதினெட்டு வருடங்கள் ஆகும் – தேசத்தின் வளர்ச்சி இரு மடங்காக!

விலைவாசி ஏறிக் கொண்டே இருக்கிறது. நம் கையில் உள்ள பணத்தின் மதிப்பு என்னவாகும்? இருக்கவே இருக்கிறது சூத்திரம் 72!

2 %லிருந்து 3 % ஆக விலைவாசி ஏறி விட்டது என்றால் 36 வருடங்களில் பாதியாக ஆகப் போகும் உங்கள் பணம், 24 வருடங்களிலேயே அந்த இழப்பை எட்டி விடும்!

கல்லூரியில் உங்கள் பையனோ அல்லது பெண்ணோ படிக்கும் போது பணம் கட்ட வேண்டி இருக்கிறது. வருடத்திற்கு 5 % என்ற விகிதத்தில் இது அதிகரிக்கிறது என்று உங்களுக்குத் தெரிய வருகிறது.

அப்போது 72 / 5 = 14.4 . அதாவது 14.4 வருடங்களில் கல்லூரிக் கட்டணம் இரு மடங்காகி விடும்!

ஒரு தேசத்தின் வளர்ச்சி திட்டத்தில் அங்கு பெருகி வரும் ஜனத்தொகையினால் என்ன ஏற்படும் என்று கண்டுபிடிக்கக்  கூட இந்த சூத்திரம் உதவும்.

சாதாரணமாக 2 % என்ற அளவில் உயரும் ஜனத்தொகை 3 % என்று ஆகி விட்டால் 36 வருடங்களில் நீங்கள் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை 24 வருடங்களிலேயே நிறைவேற்ற வேண்டி வரும்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

எல்லாம் ஒரு மனக்கணக்கு தான்! உங்கள் குடும்பத்தில், நண்பர்கள் வட்டாரத்தில் இதைச் சற்று அமுல் படுத்திப் பாருங்கள். நீங்கள்  ஒரு ‘Financial Wizard’ என்று பெயர் வாங்கி விட முடியும்!

இதைப் பற்றி இன்னும் சிக்கலான கணித விஷயங்கள் உண்டு. அதை கணித மேதைகளுக்கு விட்டு விடுவோம். இதன் பயனை நாம் அனுபவிப்போம்!

****

‘I write when the Spirits Command me’ – William Blake (Post No.6040)

Compiled  by London swaminathan

swami_48@yahoo.com


Date: 6 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 21-29
Post No. 6040
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.



William Blake, English mystic, poet and artist, said
I write when commanded by the spirits, and the moment I have written I see the words fly about the room in all directions. It is then published and the spirits can read. My manuscripts are of no further use I have been tempted to burn my manuscripts, but my wife wont let me.

Xxx

Shakespeare Imitation!


At the Garrick Club in London the witty librettist W S Gilbert was once making light of Shakespeare, to the horror of most of those surrounding him.
All right, then, said Gilbert in answer to their protests,
Let us take this passage for example
I would as lief be thrust through a quickest hedge,
As cry Plosh, to a callow throstle

Why that is perfectly clear, insisted one of his hearers, rising to the defence of the bard.
It just means this bird lover would rather get himself all scratched up in the thorny bush than disturb the birds song. What play is the passage from?
No play, said Gilbert, I made it up — and jolly good Shakespeare too.

Xxx


Boileau in presenting a poet to M. d ‘Hemery, addressed him,
Sir, I present to you a person who will give you immortality; but you must give him something to live upon in the meantime.

Xxx

Proof Reading !


On the subject of proof reading some authors are a menace to their publishers,
While others suffer from legitimate grievances. In one such instance the author , Ward Dorance, wrote to his publishers on the subject of proofs of his book,
In all the proof that has reached me windrow has been spelt Window, if, in ,the bound book windrow still appears as window, then neither rain nor hail, nor gloom of night nor fleets of riot squads will prevent me from assassinating the man who is responsible. If the coward hides beyond my finding, I shall step into Scribner’s and merely shoot up the place, Southern style

Xxx

Thomas Hardy

The import of Thomas Hardy’s birth was so little appreciated that he was thrown aside for dead. Presently he must have been so in fact, had not the nurse glancing up from attending the mother, cried out suddenly,
Dead! Stop a minute. He is alive enough sure!

Xxx Subham xxxx

வேத காலத்தில் ஆடல் பாடல் (Post No.6039)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 6 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 17-53
Post No. 6039
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பூமி துந்துபி | Tamil and Vedas



1.      

Translate this page

பூமி துந்துபி என்னும் ஒரு வாத்தியம் பற்றி வேத இலக்கியங்கள் சொல்லும். அதாவது பூமியில்பெரிய குழி வெட்டி அதன் மீது மிருகத்தின் …

முழா | Tamil and Vedas



1.      

Translate this page

((கட்டுரையின் மற்றொரு பகுதியில் ரிக் வேதத்தில் வரும் அதிசய வாத்தியம் ”பூமி துந்துபி”, ரிக்வேத கால ”ஆர்க்கெஸ்ட்ரா”, தமிழில் உள்ள …

–சுபம்–

காயங்களுக்கு தங்கமே மருந்து! (Post No.6038)

Written by S Nagarajan


Date: 6 February 2019


GMT Time uploaded in London – 6-06 am


Post No. 6038

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஹெல்த்கேர் மாத இதழில் டிசம்பர் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

தங்கமான விஷயம் -தசை காயங்களுக்கு தங்கமே மருந்து!

ச.நாகராஜன்

நவீன ஆய்வுகள் தங்கத்தின் சிறு துகள்கள் – நேனோ துகள்கள் – உடலில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக அமைவதோடு தசை மறுபடியும் உருவாக்க உதவுகிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளன! விஞ்ஞானிகள் தங்கத்தை தசையில் ஏற்படும் காயங்களுக்குப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கின்றனர்.

சாதாரணமாக தசையில் ஏற்படும் காயங்கள் ஆற சற்றுக் காலம் ஆகும். ஏனெனில் காயம் பட்டவுடன் தசையில் ஏற்படும் வீக்கம் வடிய சிறிது காலம் தேவை. அந்த வீக்கம் மீண்டும் பெரிதாகித் தொந்தரவு கொடுக்கவும் கூடும்.

தசையில் காயம் ஏற்பட்டு தசைப் பிடிப்பு என்று சொல்கிறோமே அது ஏற்பட்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை சமீபத்திய ஆய்வுகள் தருகின்றன. தங்கத்தின் சிறு துகள்களை  வீக்கத்தை வடிய வைக்கும் மருந்துகளுடன் சேர்ப்பதற்கான ஒரு வழியை விஞ்ஞானிகள் கண்டுள்ளனர்.

இதை ‘ப்ரொசீடிங்க்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் ஸயின்ஸஸ்’ இதழின் சமீபத்திய இதழ் வெளியிட்டுள்ளது.  காயமடைந்து இருக்கும் ஒரு தசைப் பகுதிக்கு  காயம் ஆறி அது மீண்டும் பழையபடி வளர்வதற்காக  ஆண்டி இன்ஃப்ளமேடரி சிடோகின் (Cytokine)  எனப்படும் இண்டர்ல்யூகின் 4 (Interlukin 4  – IL 4) என்ற ஊசி மருந்து இப்போது வழக்கமாகச் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதில் ஒரு விரும்பத்தகாத செயல்பாடும் உண்டு. அது வெகு வேகமாக உடைந்துபடும். ஆகவே பல முறை அதை உடலில் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இது தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினைக்குத் ‘தங்கமான ஒரு தீர்வாக’ நிஜ தங்கம் அமைகிறது!

வீக்கம் : பழைய மருந்து, புதிய நம்பிக்கையைத் தருகிறது.

இந்த ஆய்வானது வீக்கம் எப்படி உருவாகிறது, அதை எப்படி நிறுத்துவது என்பன போன்ற பல விஷயங்களில் அதிக தகவல்களைத் தருகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் விஸ் நிறுவனத்தில் உயிரியல் எஞ்சினியரிங் பிரிவும் ஜான் ஏ.பால்ஸன் ஸ்கூல் ஆஃப் எஞ்சினியரிங்கும் இணைந்து செயல்பட்டன. அங்குள்ள விஞ்ஞானிகள் ஐ எல் 4 உடன் தங்கத்தின் நேனோ துகள்களை இணக்கும் புதிய உத்தியைக் கண்டுபிடித்துள்ளனர்.

காயமடைந்த பகுதியில் உள்ள தசைத் திசுக்கள் தசையை மறுபடியும் உருவாக்கி ஐ எல் 4ஐ எங்கு அதிகம் தேவைப்படுகிறதோ அங்கு கொண்டு சென்று வைத்திருக்கும். இரத்த ஓட்டத்துடன் இணைந்து அலைந்து தனது சக்தியை இழக்கும் நிலை ஏற்படுவதை இது தடுக்கும்.  இந்த ஆய்வின் போது காயமடைந்த எலி ஒன்றின் மீது ஐ எல்-லுடன் நேனோ தங்கத் துகள் இணைக்கப்பட்ட ஊசி போடப்பட்டது. 15 நாட்களில் அதிகமான தசை ஃபைபர் எலிக்கு ஏற்பட்டது. தங்கத் துகள் சேர்க்கப்படாத ஊசி மருந்து போடப்பட்ட போது இந்த அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஆய்வை இணைந்து நடத்திய விஞ்ஞானியான டேவிட் மூனி (David Moony), “இந்த ஆய்வு வீக்கத்தை ஒழுங்குபடுத்தி, இயங்கும் திசுக்களை மறுபடி உருவாக்க சக்தி வாய்ந்த ஒரு முறையாக ஆகிறது” என்கிறார்.

மருந்தில் தங்கம்

மருத்துவ உலகில் தங்கம் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது புதிய செய்தி அல்ல!

தங்க சிகிச்சை என்பது மருத்துவர்களின் முதல் தேர்ந்தெடுப்பு சிகிச்சையாக என்றுமே அமைந்ததில்லை. ஏனெனில் மருத்துவ முன்னேற்றத்தினால் ஏற்பட்ட இதர மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் விஞ்ஞானிகள் முன் வைத்ததால், தங்க உப்புகளைப் பயன்படுத்துவது பல ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது.  ருமாடாய்ட் ஆர்திரிடிஸுக்கு இளம் குழந்தைகளுக்கும் வயது வந்தோருக்கும் நல்ல மருந்துகள் சில நோய்களின் மோசமான நிலைக்காகவே சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சில வீக்கங்களைக் கட்டுப்படுத்த தங்கத்தையும் தங்க உப்புகளையும் நிபுணர்கள் பயன்படுத்தி வந்த போது  ருமாடாய்ட் ஆர்திரிடிஸுக்கு நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய நிலை இருந்ததால், சில பக்கவிளைவுகளைக் கருத்தில் கொண்டு அவற்றைப் பயன்படுத்தவில்ல. 35 சதவிகித மருத்துவர் அந்த சிகிச்சையை ஒதுக்கி இருந்தனர்.

அதுமட்டுமின்றி இந்த சிகிச்சை முறையில் முன்னேற்றம் காண பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதன் பக்கவிளைவுகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இருந்தபோதிலும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தங்க சிகிச்சை பழைய தங்க உப்புகளைப் பயன்படுத்துவது போன்ற ஒன்று அல்ல. மையொக்ரைசின் (Myochrysine) போன்ற் மருந்துகள் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தியவையாகும்.  சில ஆய்வுகள் இந்த நேனோ துகள்கள் தங்க உப்புகளைப் போல விஷத்தன்மை கொண்டவை அல்ல என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. அதுவும் ஊசி மூலம் குறைந்த டோஸில் இவை கொடுக்கப்பட்டால் இவை எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.

எதிர்கால முன்னேற்றங்கள்

கோல்ட் தெராபி வயது வந்தோருக்கு தசையில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை முறையாக ஆகி விடும் நிலையில், நீண்ட கால நோயால் அவஸ்தைப்படுவோருக்கு இது எப்படிப் பயன்படுத்தப்படலாம் என்பது குறித்த ஆய்வுகள் தொடர்கின்றன.

ஆய்வுகளில் எலிகளின் தசைகளில் ஏற்படும் Muscular dystrophy –மஸ்குலர் டிஸ்ட்ராபிக்கு இதை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்த ஆராய்ச்சி இப்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது முன்னேற்றம் அடைந்து விட்டால் இதே நிலையில் உள்ள மனிதர்களுக்கு இந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்துவதைப் பற்றி ஆலோசிக்க முடியும்.

விஸ் நிறுவனத்தின் நிறுவன டைரக்டரான டாக்டர் டொனால்ட் இங்பெர், “நாங்கள் எப்போதுமே இன்னும் எப்படிச் சிறந்த முறையைக் கையாளலாம் என்பதையே எண்ணுகிறோம். இது போதும் என்ற நிலையை எப்போதுமே நாங்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஐ எல் 4 மருந்தை வீக்கமடைந்த திசுக்களுக்கு நல்ல முறையில் பயன்படுத்துவது மட்டுமல்ல, நீண்டகாலம் வீக்க வியாதியால் அவஸ்தைப்படுவோருக்கும் கூட இதைப் பயன்படுத்துவது எப்படி என்பதைக் கண்டுபிடிப்போம்” என்கிறார்.

இந்தியாவில் கழுத்து வீங்கி வீக்கத்தால் அவஸ்தைப்படுவோருக்குத் தங்க செயினைப் போட்டு விடுவது வழக்கம். கழுத்து வீக்கமடையும் வியாதிக்குத் தமிழகத்தில் ‘பொன்னுக்கு வீங்கி’ என்றே பெயர். தங்க சங்கிலியை மாட்டியவுடன் வீக்கம் குறைவதை அனுபவத்தால் நம் மக்கள் அறிந்திருந்தனர்.

கழுத்தில் தங்க சங்கிலிகளைப் பெண்கள் தவறாமல் மாட்டி இருப்பதால் அவர்களுக்குக் கழுத்து சம்பந்தமான வியாதிகள் எதுவும் தோன்றாது என்பதையும் நம் மக்கள் அறிந்திருந்தனர் என்பது வியப்பை ஊட்டும் ஒரு செய்தி.

இந்தியப் பண்பாட்டில் எந்த ஒரு அம்சத்திலும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது, இல்லையா!

***

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 522019 (Post No.6037)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 5 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 18-43
Post No. 6037
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் உள்ள 8 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது.

குறுக்கே

2. மருந்து

4. கெட்டவை என்பதன் எதிர்ப்பதம்

5.-துர்யோதணன் சகோதரர்களில் தீமைஅயி எதிர்த்த ஒரே ஆள்

6. துரத்து

7.- உலகம்

கீழே

1.  – நல்ல குரு வாரம் (இரண்டு சொற்கள்)

2– ஆத்திச் சூடி பாடியவரின் பாடல்கள்(இரண்டு சொற்கள்)

3. – பொற்கொல்லன்  மற்றும் அவனது மண் பாத்திரம்; நகை உருக்க தேவையான மண் கலயம் (இரண்டு சொற்கள்)

குறுக்கே

2.ஔ ஷதம்- மருந்து

4. நல்லவை – கெட்டவை என்பதன் எதிர்ப்பதம்

5.விகர் ணன்  -துர்யோதணன் சகோதரர்களில் தீமைஅயி எதிர்த்த ஒரே ஆள்

6.விர ட்டு= துரத்து

7.மன் பதை- உலகம்

கீழே

1.நல்ல வியாழன்  – நல்ல குரு வாரம் (இரண்டு சொற்கள்)

2.ஔவையார் கவிதை — ஆத்திச் சூடி பாடியவரின் பாடல்கள்(இரண்டு சொற்கள்)

3.தட்டான் சட்டி – பொற்கொல்லன்  மற்றும் அவனது மண் பாத்திரம்; நகை உருக்க தேவையான மண் கலயம் (இரண்டு சொற்கள்)