Why did Hindu Gods lose their Heads? (Post No.4420)

Written by London Swaminathan 

 

Date: 21 NOVEMBER 2017

 

Time uploaded in London- 21–04

 

 

Post No. 4420

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Why did Lord Ganesh lose his head?

 Why did Lord Vishnu lose his head?

Why did Lord Brahma lose his head?

Why did Daksha lose his head?

Why did Bhrigu lose his head?

Daksha got goat’s head!

We have various versions of Daksha’s fire sacrifice in the Puranas and epics. In one of the versions Bhrigu loses his head. In another version Daksha himself lost his head. All this happened when he refused to invite Lord Siva for the sacrifice. Siva married Daksha’s daughter Sati.  Siva became angry and destroyed the Yaga. He decapitated Daksha and threw his head into fire. Later Siva was propitiated and he couldn’t find Daksha’s head. So he replaced it with that of a goat.

(We have goat headed figures in Indus valley civilisation)

 

Ganesh got Elephant’s Head

Ganesa is the god of wisdom and remover of obstacles. There is a variety of legends accounting for his elephant’s head. When his mother Parvati proudly asked Saturn to look at him he looked at him. Immediately Ganesa’s head was burnt to ashes. Brahma told Parvati in her distress to replace the head with  whatever she finds in the first place. Since she found only an elephant’s head , it was fixed on Ganesa’s head.

Another story is that Ganesh was guarding the bath room door of Parvati. Siva was refused permission. In his rage he cut off the head . When Parvati felt sad, Siva replaced it with an elephant’s head just to pacify her.

 

Brahma lost his head for lying

Again there are different versions about Brahma losing his head. One point is common in all these stories. Brahma had five heads and Siva also had five heads. And Brahma lost one. When Parvati got confused and went near Brahma thinking it was Siva, Lord Siva became angry and cut off one of the five heads to avoid future confusion.

 

Another version is Siva decapitated one of the 5 heads of Brahma, because he spoke disrespect fully. Now Brahma has only four heads.

 

Another version is that he was looking at his daughter Satarupa with bad intention and his head was cut off as a punishment.

 

All these Head losing stories are symbolic. They were told to illustrate certain points.

Why did Vishnu lose his Head?

There is a strange story of Vishnu losing head in Satapata Brahmana:

Satapata Brahmana (SB) belongs to the White (Sukla) Yajur Veda (Vajasaneyi Samhita). It consists of 100 sections (sata+path) and so it is known as the Satapata Brahmana. This is the most important Brahmana (SB) because it deals with various fire sacrifices, both minor and major. Most of the stories told in the Brahmana re symbolic. One of the stories is about Vishnu and ants.

The 14th book contains a legend concerning a contention among the gods in which Vishnu came off victorious. So it is customary to say ‘Vishnu is the luckiest (Sreshta) of the gods’ or ‘Vishnu is the most excellent of the gods’. Vishnu has brought into prominence for the first time. Earlier the legend of his three strides was known. The three stride episode is mentioned in the Satapata Brahmana also. Later the Puranas shifted this to the Vamana (Trivikrama) Avatar.

 

When Indra came to know that Vishnu won, he struck off his (Vishnu’s)  head in jealousy, says the SB. There is another version :-

 

The gods sent forth ants to gnaw the bow string of Vishnu. They did it out of jealousy. When Vishnu was standing leaning on the bended bow they sent the ants. They thought once the ants cut off the string, the bow will strike on Vishnu and knock him down. The string snapped as expected and sprang upwards, severed his (Vishnu’s) head from the body. The same legend appears in Taittiriya Aranyaka as well.

 

–Subham–

 

 

கடல் போல புத்தகங்கள்! அம்மாடியோவ்வ்வ்வ்வ்! (Post No.4419)

Written by London Swaminathan 

 

Date: 21 NOVEMBER 2017

 

Time uploaded in London- 8-16 am

 

 

Post No. 4419

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

சம்ஸ்கிருதத்திலுள்ள நீதி நூல்கள் கடல் போலப் பெருகி இருக்கின்றன. தமிழில் திருக்குறள் முதலிய 18 நூல்களில் நீதிகள் குவிந்து கிடப்பதை நாம் அறிவோம். அவ்வையின் ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன், அதி வீரராம பாண்டியனின் வெற்றி வேற்கை, முனைப்பாடியாரின் அறநெறிச்சாரம், பெயர் தெரியாமல் அழிந்துபோன் ஆசிரியர்கள் யாத்த விவேக சிந்தாமணி, நீதி வெண்பா, குமரகுருபரின் நீதி நெறி விளக்கம், பாரதியாரின் புதிய ஆத்திச் சூடி– இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் சம்ஸ்கிருதத்தில் உள்ள நீதி நூல்களை அடுக்க முடியாது; தொகுக்க முடியாது; வகுக்க முடியாது; பகுக்க முடியாது!! அவ்வளவு இருக்கின்றன. சுபாஷித ரத்ன பாண்டாகாரத்தில் பலசுவைப் பாடல்கள் இடையே நீதி ஸ்லோகங்கள் காணப்படுகின்றன; மஹாபாரதத்தில் அனுசாசன பர்வத்திலும், சாந்தி பர்வத்திலும் ஆயிரக் கணக்கில் நீதிகள் , பொன் மொழிகள் காணப்படுகின்றன. பஞ்ச தந்திரம், ஹிதோபதேசம் போன்ற கதைகள், சிறு வயதிலிருந்தே நீதிகளை போதிக்க உதித்த நூல்கள். இது தவிர நீதிக்காகவே — அதாவது நீதி நெறி பற்றிய ஸ்லோகங்கள் மட்டுமே அடங்கிய நூல்களின் பட்டியல்– நீண்ண்ண்ண்ண்ண்ண்ட பட்டியல்:-

சுக்ர நீதி

சாணக்ய  நீதி

விதுர நீதி

பர்த்ருஹரியின் நீதி சதகம்

காமாந்தகீய நீதிசார

வரருசி நீதிசார

 

கடகாபரண நீதிசார

 

வேதாளபட்ட நீதிப்ரதாப

பல்லட சதக (வல்லாளன்)

பில்ஹணரின் சாந்தி சதக

சம்புவின் அன்யோக்திமுக்தலதா சதக

குசுமதேவனின் த்ருஷ்டாந்த சதக

குமானியின் உபதேச சதக

நாகராஜாவின் பாவசதக

சங்கரரின் சதஸ்லோகி

சாணக்ய நீதி

சாணக்ய சதக

சாணக்ய ராஜநீதி

வ்ருத்த சாணக்ய

லகு சாணக்ய

சாணக்ய சார சங்ரஹ ராஜநீதி சாஸ்திர

கௌடில்யரின் அர்த்த சஸ்திரம் (சாணக்ய)

 

சதகம் என்றால் நூறு ஸ்லோகங்கள் என்று பொருள்; பதிகம் என்றால் பத்து பாடல்கள் கொண்டது.

இவைகளிலுள்ள விஷயங்களைக் காணும் முன் ஒரு ஆறு நூல்களின் தொகுப்பை மட்டும் காண்போம்.

சாணக்யர், கௌடில்யர், குடிலர் என்ற பெயரால் அழைக்கப்படும் பிராமணன் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே ஸ்தாபித்துவிட்டு குடிசையில் போய் அமர்ந்து கொண்டார். இவ்வளவுக்கும் அவர் அலெக்ஸாண்டரை நடுங்க வைத்த மௌரியப் பேரரசின் — மகத சாம்ராஜ்யத்தின் மந்திரி — பிரதம மந்திரி!

 

நந்த வம்ச அரசர்கள் — இந்து மத வேள்விகளைக் கிண்டல் செய்து, அவைகளுக்குத் தடை போட்டு வந்தனர்; விடை ஏதும் கிடைக்காமல் நாடு தவித்தது. ஒருநாள் ஐயர் குடுமியுடன், சாணக்கியர் நடந்து கொண்டிருந்தார். புல்லோ கல்லோ தடுக்கியவுடன் தடுமாறினார். கெக்கெக்கென்று சிரித்தனர் நந்த வம்ச அரச குடும்பத்தினர். தடுமாற்றத்தில் ஐயருக்கு குடுமி வேறு அவிழ்ந்து போயிற்று.!

 

 

உங்கள் வம்சத்தை வேரறுக்கும் வரை இந்தக் குடுமியை முடிய மாட்டேன் என்று சபதம் செய்தார். (துரியோதனனின் ரத்ததைக் கூந்தலில் தடவும் வரை தலை முடியைப் பின்ன மாட்டேன் என்று சபதம் செய்து வெற்றி கண்ட திரவுபதி போல).

 

மயில்களை வளர்க்கும் முரா வம்சத்தில் உள்ள சில வீரர்களுக்கு பஞ்ச தந்திரங்களையும் சாம,தான பேத, தண்ட அணுகுமுறைகளையும் கற்பித்தார். நவ நந்தர்களை நடு நடுங்க வைத்தார். சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டது. மௌரியப் பேரரசு உதய சூரிய ன் போலத் தொடுவானத்தில் தோன்றியது. அசோகன் காலம் வரை இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டது.

அந்த சாணக்கியர் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய அர்த்த சாஸ்திரம்தான் உலகில் தோன்றிய முதல் பொருளாதார நூல். வரி விதிப்பு, எவ்வளவு வரி என்பது முதல் படை அமைப்பு வரை அவர் பேசுகிறார்.

 

அவர் பேசாத பொருளாதார விஷயம், அரசியல் கொள்கை ஏதுமில்லை. ஐயர் குடுமியை முடிந்து கொண்டு நீதி வாக்கியங்களை உதிர்த்தார்; பின்னர் மொழிந்தார்; இறுதியில் மழை போலப் பொழிந்தார். அவர் எழுதியதாக அவர்  பெயரிலுள்ள ஆறு நூல்களை ஒரு வெளிநாட்டு அறிஞர் ( Ludwik Sternbach லுட்விக் ஸ்டேன்பாக்) ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளியிட்டார்.

 

சாணக்கிய சபதம் என்னும் நாடகம் தமிழ்நாட்டில் பலரால் இயற்றப்பட்டு, பலரால் நடிக்கப்பட்டும் இருந்தது; நூறு ஆண்டுகளுக்கு முன் வரை; வெள்ளைக்காரனுக்கு எதிராக போராட்டம் பெருகியவுடன் அவை எல்லாம் மறையத் தொடங்கின. பல தமிழ் நாடகங்கள் இன்றும் லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைக்கின்றன.

சாணக்கியர் பெயரில் உள்ள ஆறு நீதி நூல்கள்:-

  1. வ்ருத்த சாணக்ய

எளிய நடையில் உள்ளதை சாணக்ய நீதி தர்பண என்பர் (தர்பண= கண்ணாடி)

2.வ்ருத்த சாணக்ய

கடின நடையில் உள்ள நூல்

3.சாணக்ய நீதி சாஸ்த்ர

இதில் 109 கவிகள் உண்டு; வேறு ஒருவர் இதைத் தொகுத்து அளிப்பதாக முதல் ஸ்லோகத்திலேயே சொல்லிவிடுகிறார்.

4.சாணக்ய சார சம்க்ரஹக

இதில் 300 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன. இதுவும் வேறு ஒருவரால் தொகுக்கப்பட்டதே.  கங்கையையும் காசியையும் புகழ்வதால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.

 

5.லகு சாணக்ய

எட்டு அத்தியாயம் உடையது; ஒவ்வொன்றிலும் 10 முதல் 13 ஸ்லோகங்கள் வரை உள்ளன. இதை ஒருவர் கிரேக்க மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டதால் ஐரோப்பா முழுதும் பிரபலமாகியது.

6.சாணக்ய ராஜ நீதி சாஸ்த்ர

எட்டு அத்தியாயங்களில் 534 ஸ்லோகங்கள் இருக்கின்றன. திபெத்திய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது

இவை அனைத்தும் சாணக்யரால் எழுதப்பட்டவையா, சொல்லப்பட்டவையா என்று எவராலும் சொல்ல முடியவில்லை. ஆனால் சாணக்யர் என்றால் ‘ராஜ தந்திரம்’, ‘நீதி’ என்ற பொருள் வந்துவிட்டது

இவை தவிர ஏராளமான நீதி நூல்கள் சம்ஸ்கிருதத்தில் உண்டு. ஆன்மீக விஷயம் பற்றிச் சொல்லும் நீதி வாசகங்கள் அடங்கிய நூல்களும் உள்ளன. அவைகளைப் பொதுவாக இதில் சேர்ப்பதில்லை.

 

அடுத்த சில கட்டுரைகளில் சாணக்ய நீதியிலுள்ள விஷயங்களை தமிழ் நீதி நூல்களுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறேன்.

 

TAGS:– சாணக்கியர், நீதி நூல்கள், கௌடில்யர், நீதி சாஸ்திரம்

 

–சுபம், சுபம்–

கம்பன் பாட்டால் கல்லெலாம் மணி! ( Post No.4418)

Written by S.NAGARAJAN

 

 

Date: 21 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-39 am

 

 

 

Post No. 4418

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 8)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239; 5-10-17- 4272; 12-10-17 -4293; 13-10-17-4296; 14-10-17-4299; 30-10-17- 4349 ; 7-11-17 – 4373 ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

கம்பன் பாட்டால் கல்லெலாம் மணியேயான! கனியெலாம் கனகமான!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

 

Ram Navami in Kolkata

பாடல் 41

சைவம் வைணவம் மென்றிரு சமையத்தின் னிலையிற்

கைவந் தமத நூல்களோ கணக்கில கவியின்

மெய்வந் தேவிக சிக்குமிந் நூல்விர கறியார்

பொய்வந் தேறிடம் பொதிந்தனர் கவிப்புல னில்லார்

 

பாடல் 42

விரிந்த சாத்திரத் தொகை,கலைத் தொகுதி, வேற் றுமையே

தெரிந்தி லார்பலர், தெரிந்தவர் கலையினும் பிரிவாய்ப்

பொருந்தெ ழிற்கலை தொழிற்கலை வேற்றுமை பூட்டாரே

திருந்து சித்திர கலையுருங் கவிக்கலைத் தெரியார்

 

பாடல் 43

ஓவியம் சிற்ப மெனுமுயர் கலையினுள்

காவிய மென்னுங் கலைபயப் பதோகவி னின்பம்

தீவு காவியக் கலைவரு வேற்றுமை தெரிப்பின்

பாவி கத்துரு மொழிகொடு பண்ணலே மன்னி

 

பாடல் 44

இன்னும் வேறொரு வேற்றுமை காவியத் தியலும்;

முன்னங் கூறிய சிற்பமோ வியமமை முறையும்

முன்னும் பாவிக வுருவொரு கணநிலைத் தொகுக்கும்;

மன்னுங் காவியப் பொருளிறப் பெதிர்வினான்

 

பாடல் 45

காவிய மென்னுங் கடற்படு நூனிரை கணிப்பார்

ஓவி யக்கலை யுள்ளுறை நோக்குண ராதே

கூவிக் காட்டிய கொள்கையுங் கொள்கையாக் கொள்ளேம்;

மேவும் சித்திரம் விழியிலான் மதித்திடின் வினையென்?

 

பாடல் 46

ஆயினு மிஃதறிந்த் திலார் கித்தம் மதிமார்

தீய னுங்கிய சிந்தைய ராய்ச்செவிச் செறுத்தே

வாய னுங்கிய வாறுரை மதித்தனர் தமிழெந்

தாயு நுங்கிய தனியமு தலையெறி கடலை

 

Ram Navami in Bengaluru

பாடல் 47

கம்பன் பாவருங் கனிவினைக் கனிதா வியலா:

கம்பன் பாவருங் கடிமணம் மலர்தந்து கமழா;

கம்பன் பாவருங் கவினுரு கலைதந்து நிலையா;

கம்பன் பாவருங் கண்டிசை எண்டிசை காட்டா;

வேறு

பாடல் 48

அளப்பரு மான்ற தன்மை யாழ்ந்துகீழ் போகு நீர்மை

கிளப்பரு நளிர்மை யின்ன கெழுமிய குணத்தி நாலும்

களைப்பற வுயிர்கட் கோசைக் களிப்பையே யளிப்ப தாலும்

வளைப்புறு கடலுங் கம்பன் கவியென மருவிற் றன்றே

 

பாடல் 49

சவியுறத் தெளித லாலும் தவழ்நயம் தழைத் தலாலும்

புவியுறு முயிர்க்கு மேலாம் புலம்நின்று விளங்க லாலும்

கவினுறு பொருட்கோ ரெல்லை கதுவுறா விதுப்பி னாலும்

கவியுறு விசும்புங் கம்பன் கவியெனக் காட்டிற் றன்றே

 

பாடல் 50

தொல்லையிற் றொடர்ந்த ஞானத் தொகைவயின் வருத லாலும்

வல்லையில் வரம்பி லின்பம் மக்கட்கு வகுத்த லாலும்

ஒல்லையி லொன்றே யாகி யொப்புயர் வின்மை யாலும்

எல்லையிற் பொருளுங் கம்பன் கவியென இலகிற் றன்றே

 

பாடல் 51

சொல்வளம் பெரிதென் கோயான்? சொல்லினுட் டுளும்பு ஞான

எல்வளம் பெரிதென் கோயான்? நவையறு மணிகள் வீசும்

வில்வளம் பெரிதென் கோயான்! வியங்கியம் விழுமி தென்கோ?

பல்வளம் செறிந்து பண்ணாம் பரிமள மியன்ற பாவில்!

 

Ram Ram Seva Sangham in Chennai

பாடல் 52

அழகினை முடியக் காண வகிலத்துப் புலவ ரெல்லாம்

பழகிய நூலின் பண்பே பற்றியொன் றொன்றே  கண்டார்

பழையவா சனையிற் கம்பன் பைந்துணர் பூத்த பாவிற்

குழகெலா மொருங்கே கூடிக் குடியிருப் பதையுங் கண்டார்

 

பாடல் 53

பூவிடைப் பொலிவு நோக்கிப் பொற்றிரு நளினஞ் சார்ந்தாள்

சேவுடை சிவனார் சோதி திகழவே யுமையுஞ் சேர்ந்தாள்

நாவினின் றொலிக்குஞ் சொல்லி னயமெலா மடுத்த கம்பன்

பாவிலில் விருபண் பொன்றப் பாரதி பருகி வென்றாள்

 

பாடல் 54

வம்பவிழ் மலரில் வந்தோன் வகுத்தவர் கோடி யேனும்

கம்பனார் உதித்த பின்றான் கறுவிய கதமும் கொண்டான்

கொம்பெறும் வாணி தன்னாக் குடிச்செய ணீக்கி யன்னார்

பம்பிசை நாப்புக் காங்கே பணிசெய்து நிற்றல் கண்ட

 

பாடல் 55

கல்லெலாம் மணியே யான; கனியெலாங் கனக மான;

அல்லெலாம் ஒளியே யான; ஆறெலா மமுத மான;

புல்லெலாம் புலமே யான;  புகழெலாம் புகுத லான

சொல்லெலாம் தொகுத்துக் கம்பன் சூழ்ரச வாதச் சீரால்

 

பாடல் 56

வேறு

பல்வளத்தின் மாரிவான்ப டர்ந்துதாரை சோரலோ

எல்வளத்தி னெல்லிநூ றெழுந்துசோதி வீசலோ

பல்வளத்தி ராமன்வில் வழங்குமீனி வானிலோ

சொல்வளத்தின் பெற்றி முற்றச் சொல்லலாக வற்றதோ!

 

பாடல் 57

ஓடலாலு லாவலாலுள் ளோய் வுலைத் துற் சாகமே

மூடலால்மு ணுங்கலால்மு ழங்கலால்மு கந்தணி

சூடலால் சொலித்தலால் தொனித்தலாலுள் ளம்நெகிழ்

பாடலாலின் பத்துனாரிப் பாருளாரில் யாருளார்?

*

அழகிய இப்பாடல்கள் ஆழ்ந்த பொருளைக் கொண்டுள்ளதைக் கம்பனை நன்கு கற்றோர் உணர முடியும்.

கம்பனின் சொற்களை வைத்தே கம்பனின் இன்பத்தைக் காண்பிக்கும் பாடல்கள் இவை.

எளிதில் பொருள் விளங்கக் கூடியவை!

கோதாவரியைக் கண்ட கம்பன் சவியுறத் தெளிதலால் என்று ஆரம்பித்துக் கவிதையின் இலக்கணத்தைப் பகர்வான். அதே சவி (ஒளி) கம்பனின் கவிதையில் இருக்கிறது என்கிறார் கவிஞர் சிவராஜ பிள்ளை.

சொல் வளம் பெரிதா? சொல்லினுள் துளும்பும் ஞான ஒளி பெரிதா?

நமக்கும் விடை சொல்லத் தெரியவில்லை!

கல் மணியாக மாற, கனியெல்லாம் தங்கமாக மாற,இருட்டெலாம் ஒளியாக மாற, ஆறெல்லாம் அமுதமாக மாற, புல்லெலாம் புலமாக மாற, புகழ் எல்லாம் ஓடி வந்து  கம்பன் தன் பாட்டில்!

கம்பனைச் சுவைத்து மகிழும் கம்ப ரஸிகர் சிவராஜ பிள்ளை அவர்களின் பாடலை மேலும் சுவைப்போம்!

                                          -தொடரும்

***

கிரஹங்கள் நட்சத்திரங்கள் படைப்பு; மனு நீதி நூல்-பகுதி 3 (Post No.4417)

Written by London Swaminathan 

 

Date: 20 NOVEMBER 2017

 

Time uploaded in London- 21-18

 

 

Post No. 4417

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

முதலிரண்டு பகுதிகள் கடந்த இரண்டு தினங்களில் வெளியிடப்பட்டன.

 

கிரஹங்கள் நட்சத்திரங்கள் படைப்பு; மனு நீதி நூல்-பகுதி 3 (Post No.4417)

 

முதல் அத்தியாயம்

ஸ்லோகம் 21. அந்த பிரம்மானவர் வேதத்தில் சொல்லியபடி, அதனதன் அடையாளங்களுடன் மனிதனையும் பிராணிகளையும் படைத்தார். அதாவது படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் அதனதன் தொழில்கள், பெயர்கள், அடையாளங்கள் ஆகியவற்றை, வேதத்தில் சொல்லியபடி செய்தார்.

 

22.காமத்தை சுபாவமாகவுடைய இந்திராதி தேவர்களையும், சூட்சும ரூபமுள்ள சாத்திய தேவர்களையும், அழிவற்றதான யாகங்களையும், சராசரங்களையும் அந்தப் பிரபுவானவர் சிருஷ்டித்தார்.

 

  1. யாகங்கள் நிறைவேறும் பொருட்டு அக்னி, வாயு, சூரியன் ஆகியவற்றிலிருந்து ரிக், யஜூர், சாம வேதங்களை வெளிப்படுத்தினார். இவை அநாதியான வேதங்கள் (அதாவது ஆதி அந்தம் அற்றவை.)

 

24.பின்னர் காலத்தையும், காலத்தின் பிரிவான மாதங்களையும், நட்சத்திரங்களையும் நவக் கிரஹங்களையும், நதிகளையு, சமுத்திரங்களையும், மலைகளையும் மேடு பள்ளங்களையும் உண்டு பண்ணினார்.

25.தவம், வாக்கு, சுக துக்கங்கள் காம,  க்ரோதம் முதலியவற்றை, மக்களின் இனப்பெருக்கத்துக்காக உண்டு பண்ணினார்.

  1. கர்மத்தை அறிவதற்காக தர்மம், அதர்மம் மற்றும் அதைப் பின்பற்றுபவர்கள், அவர்களுக்கு வரக்கூடிய சுக துக்கங்களையும் உண்டுபண்ணினார்.

27.முன் சொன்ன பஞ்ச பூதங்களுடைய சூட்சுமமான தன்மாத்திரைகளால் இவ்வுலகம் கிரமமாக வளர்கின்றது. இந்த உலகம் சூட்சுமமாகவும், ஸ்தூலமாகவும் இருக்கிறது.

28.இறைவன் ஒவ்வொரு பிராணிக்கும் நிர்ணயித்த அதே குணங்களுடன் அவை மீண்டும் பிறந்து அதேபடி செயல்படுகின்றன.

29.கொலை செய்யும் குணத்தை சிங்கம் முதலிய மிருகங்களுக்குக் கொடுத்தார். மான்களுக்கு கொலையின்மையை அளித்தார். தயை என்னும் குணத்தை பிராமணர்களுக்கும், கொடுமை (போர்) என்பதை க்ஷத்ரியர்களுக்கும், குருவுக்குப் பணிவிடை செய்வதை பிரம்மசாரிகளுக்கும், அவர்களுக்கே மது மாமிச புசித்தல் எனும் அதர்மத்தையும், தேவர்களுக்கு சத்தியத்தையும், மனிதர்களுக்கு அசத்தியத்தையும் (பொய்) உண்டு பண்ணினார்.

 

30.வசந்தம் முதலிய பருவ காலங்கள் எப்படி மாறுதல் அடைகின்றனவோ அது போலப் பிராணிகளும் தம்தம் கர்மத்துக்குத்  தக்க  செய்கைகளைத் தாமே அடைகிறார்கள்.

 

எனது கருத்து:

டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு நேரடியான சான்றுகள் இல்லை. ஆயினும் இறைவன், தன்னுடைய விதையை முதலில் கடலில் வித்தித்தான் என்பது பரிணாமக் கொள்கையின் முதல் படியாக எடுத்துக் கொள்ளலாம். தசாவதாரத்தில் பரிணாமக் கொள்கை வரிசையாக இருப்பது போல இங்கு இல்லை.

 

மேலும் எதிர் எதிர் குணங்கள் இருந்தால்தான் (இன்பம்/துன்பம்; மகிழ்ச்சி- சோகம்) மனித இனம் வளர முடியும் என்பதையும் சொல்கிறார். எல்லோரும் ஒரே குணத்துடன் இருந்தால் வளராது என்று இப்படிப் படைத்தான். மின்சாரம் ஓடுவதற்கு பாஸிட்டிவ், நெகட்டிவ் மின்சாரம் (நேர்மறை, எதிர்மறை மின்சாரம் ) தேவைப்படுவது போல இது.

 

ஒவ்வொரு பிராணியும் அதே குணத்தோடு மீண்டும் மீண்டும் வரும் விஷயம் மரபியல் (Genetics) விஷயமாகும்

 

வேதம், யாக, யக்ஞம் ஆகியன ஆதிகாலம் தொட்டு  இருக்கின்றன. மனிதன், பிராணிகள் படைப்புக்குப் பின்னர் கிரஹங்கள், நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாக சொல்லுவது அறிவியலுக்கு முரணானது. ஆயினும் ஸ்லோகத்தின் அல்லது வாக்கியத்தின் வரிசைக் கிரமத்தை மாற்றுவதில் தவறு ஏதுமில்லை.

 

  1. But in the beginning he assigned their several names, actions, and conditions to all (created beings), even according to the words of the Veda.
  2. He, the Lord, also created the class of the gods, who are endowed with life, and whose nature is action; and the subtile class of the Sadhyas, and the eternal sacrifice.
  3. But from fire, wind, and the sun he drew forth the threefold eternal Veda, called Rik, Yajus, and Saman, for the due performance of the sacrifice.
  4. Time and the divisions of time, the lunar mansions and the planets, the rivers, the oceans, the mountains, plains, and uneven ground.
  5. Austerity, speech, pleasure, desire, and anger, this whole creation he likewise produced, as he desired to call these beings into existence.
  6. Moreover, in order to distinguish actions, he separated merit from demerit, and he caused the creatures to be affected by the pairs (of opposites), such as pain and pleasure.
  7. But with the minute perishable particles of the five (elements) which have been mentioned, this whole (world) is framed in due order.
  8. But to whatever course of action the Lord at first appointed each (kind of beings), that alone it has spontaneously adopted in each succeeding creation.
  9. Whatever he assigned to each at the (first) creation, noxiousness or harmlessness, gentleness or ferocity, virtue or sin, truth or falsehood, that clung (afterwards) spontaneously to it.
  10. As at the change of the seasons each season of its own accord assumes its distinctive marks, even so corporeal beings (resume in new births) their (appointed) course of action.

 

सर्वेषां तु स नामानि कर्माणि च पृथक् पृथक् ।

वेदशब्देभ्य एवादौ पृथक् संस्थाश्च निर्ममे ॥ 21

 

कर्मात्मनां च देवानां सोऽसृजत् प्राणिनां प्रभुः ।

साध्यानां च गणं सूक्ष्मं यज्ञं चैव सनातनम् ॥ 22

अग्निवायुरविभ्यस्तु त्रयं ब्रह्म सनातनम् ।

दुदोह यज्ञसिद्ध्यर्थं ऋच्।यजुस्।सामलक्षणम् ॥ 23  ॥

 

कालं कालविभक्तीश्च नक्षत्राणि ग्रहांस्तथा ।

सरितः सागरान् शैलान् समानि विषमानि च ॥ 24

 

तपो वाचं रतिं चैव कामं च क्रोधमेव च ।

सृष्टिं ससर्ज चैवैमां स्रष्टुमिच्छन्निमाः प्रजाः ॥ 25

 

कर्मणां च विवेकार्थं धर्माधर्मौ व्यवेचयत् ।

द्वन्द्वैरयोजयच्चैमाः सुखदुःखादिभिः प्रजाः ॥ 26

अण्व्यो मात्रा विनाशिन्यो दशार्धानां तु याः स्मृताः ।

ताभिः सार्धमिदं सर्वं संभवत्यनुपूर्वशः ॥ 27

 

यं तु कर्मणि यस्मिन् स न्ययुङ्क्त प्रथमं प्रभुः ।

स तदेव स्वयं भेजे सृज्यमानः पुनः पुनः ॥ 28

 

हिंस्राहिंस्रे मृदुक्रूरे धर्माधर्मावृतानृते ।

यद् यस्य सोऽदधात् सर्गे तत् तस्य स्वयमाविशत् ॥29

 

यथर्तुलिङ्गान्यर्तवः स्वयमेवर्तुपर्यये ।

स्वानि स्वान्यभिपद्यन्ते तथा कर्माणि देहिनः ॥30

 

 

–சுபம் சுபம்–

 

Miracles in the Life of Kerala King Kulasekara! (Post No.4416)

Written by London Swaminathan 

 

Date: 20 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-49

 

 

Post No. 4416

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

Alvars are Vaishnava saints of Tamil Nadu. They are 12 in number. They were the famous authors of Nalayira Divya Prabandham, a collection of 4000 divine poems praising Lord Vishnu. They stand on the same footing of sanctity as Tevaram of the three Tamil Saiva saints. Kulasekara was the king of Kerala and one of the 12 Alvars.

 

Though he discharged his duties as a king regularly he was deeply involved in practising the ancient customs. As part of it he used to listen to Ramayana every day from his Guru. When he was engaged in hearing the story, he came to the stage of Khara Vadha—Killing of demon Kharan by Rama single handily. When he came to know that Rama was fighting single all alone, he ordered his army to march to back up Rama. He also put on his armours and went forth to help Sri Ramachandra. Rama lived several thousand years before Kulasekara, but he travelled back in Time, only mentally.

 

There was another occasion when his Guru was narrating the portion of Ramayana where Rama began to cross the sea to Sri Lanka. Immediately he armed himself and went into the sea with his retinue of soldiers!

These incidents and his deep emotional involvement made the ministers to devise a plan to keep him away from the Vaishnava devotees. They want to get rid of them so that he would pay more attention to his royal duties. They deliberately removed the costly jewels from the deity he worshipped and attributed the theft to his Vaishnava devotees and the priest. But Kulasekara did not believe it because he had so much faith in them. He offered put his hand in a pot containing cobras. If the cobras did not bite, it was a monumental proof of the innocence of the Vaishnava devotees and the criminal offence of the ministers. The cobras did not harm him. The ministers realised his sincerity and begged for pardon.

 

Later he crowned his son as the king and retired to lead a life of penance and prayer. He made an extensive pilgrimage to all the Vaishnava temples in South India. When he reached Mannarkoil in Tirunelveli district his soul departed from his body. He is the one who composed the well known Mukundamala in Sanskrit in addition to his Tamil poems ‘Perumal Tirumozi’ in Divya Prabandham.

He was very fond of Tirupati Balaji known as Thiruvenkaathan or the Lord of the Venkata Hills. The Lord of the Seven Hills is known as Venkatachapathi. He made very strange requests to Him in a decad.

“Oh Lord, Make a fish in the stream of Venkata Hills. Change me in to a crane in the Holy Hills. Let me be a servant holding a plate for you. Or at least make me a bush, a pathway, a flower or anything in the hills. It was heart melting poems.

 

Hindus believe that the dust of devotees has more powers than the Lord himself. He wanted to be a part of the dust of millions of devotees marching to see the Lord up above the seven hills. He wanted to hear the reverberating slogans of ‘Govinda, Govinda’ from the devoted pilgrims. So he wanted to be an animate or inanimate thing on the hills. A novel idea! His intense devotion is expressed in the aptest and most beautiful words in his poems. Very often the Vaishnava singers sing his poems in public platforms and the listeners are visibly moved.

–Subham–

அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடமாட்டேன் ! (Post No.4415)

Written by London Swaminathan 

 

Date: 20 NOVEMBER 2017

 

Time uploaded in London- 13-15

 

 

Post No. 4415

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் சோழநாட்டில் திருமங்கை என்னும் ஊரில் பிராமண குலத்தில் உதித்தவர். சிறுவயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுச் செந்தமிழில் விளையாடினார். ஆழ்வார்கள் பாடிய அமுதப் பாசுரங்களைப் பருகினார். இராமானுஜர் நூற்று அந்தாதி பாடிய திருவரங்கத்தமுதனார் வம்சத்தில் தோன்றியவர். கோனேரி அப்பனையங்கார் இவரது பேரன். ‘குலத்தளவே ஆகுமாம் குணமென்னும்’ ஔவையார் மொழிக்கேற்ப, வைணவ குலத்தின் ஆசார அனுஷ்டானங்களை அப்படியே பின்பற்றி வந்தார். வீர வைஷ்ணவராகத் திகழ்ந்தார். பெருமாளின் அருளில் பிறந்த பிள்ளை ஆதாலால் பிள்ளைப் பெருமாள் ஆனார். ஆனால் பெற்றோர் சூட்டிய திரு நாமம்- ரங்கநாததாசன். மற்றொரு பெயர் மணவாளதாசன்.

 

சுமார்  400 ஆண்டுகளுக்கு முன்னர்   திருமலை நாயக்கர் (1623-1659)  காலத்தில் வாழ்ந்த  பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் , நாயக்கரின் அரண்மனையில் செய்த அற்புதத்தை முன்னரே எழுதியுள்ளேன் ( கீழே இணைப்பு முகவரி உள்ளது). இப்பொழுது அவர் செய்த மேலும் சில அற்புதங்களைக் காண்போம். தவ வலிமையாலும், சொல் புலமையாலும் அவர் பல அற்புதங்களைச் செய்தார்; யமகம், சிலேடை, திரிபு என பல வகைப் பாடல்களை பாட வல்லவரான அவர் அஷ்டப் பிரபந்தம் என்று அழைக்கப்படும் எட்டு அருமையான தமிழ் நூல்களை மொழி அன்பர்களுக்கு வழங்கியுள்ளார். “அஷ்டப் பிரபந்தம் படித்தவன் அரைப் பண்டிதன்” என்னும் சொல் வழக்கினால் அதன் பெருமை நன்கு விளங்கும். அதாவது, அத்துணை சிறிய அளவு படித்துவிட்டாலே பண்டிதன் என்னும் பாதையில் பாதி தூரம் சென்றவர் ஆகிவிடுவோம்.

 

பாலும் தேனும் அமுதும் கைக்கும்படி பாட வல்லவர். கவிநயம் உணர்ந்த புலவரெலாம் இவரை திவியகவியெனக் கொண்டாடும் சிறப்பு வாய்ந்தவர் (திவிய= திவ்ய = தெய்வப் புலவர்)

இவர் தொடர்பாக வழங்கும் இன்னும் ஒரு சொல் வழக்கு, “அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடமாட்டேன்” — என்பதாகும் இதற்கு இரு வேறு விளக்கங்கள் உண்டு.

ஐயங்காருக்கு ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டுள்ள அரங்கநாதனைப் பாடுவதிலே பேரின்பம் கிடைத்தது. ஆதலால் வேறு எவரையும் பாட மாட்டேன் என்ற பிடிவாதத்தில் இருந்தார். பார் புகழும் திருவேங்கடத்தானைப் பாடாத ஆழ்வார் இலையே; அவர் மீதும் உங்கள் செந்தமிழில் இனிய கீதம் இசைக்கக் கூடாதா? என்று அன்பர்கள் வேண்டினர். ஆனால் இவரோ மாட்டேன் என்று சொல்லிவிட்டார். திருப்பதி மலையில் வீற்றிருந்த வெங்கடாசலபதியைத்தான் இவர் மலை மேதுள்ள குரங்கன் என்று சொன்னார். இரு பொருள்படும் சிலேடைக் கவியில் வல்லவர் அல்லவா?

 

கிருஷ்ணமாச்சாரியார் சொல்லும் விளக்கம்

 

“ஒரு நாள் இரவில் இவர் கனவில் திருவேங்கடத்தான் தோன்றி எம்மையும் பாடுக என்றனன். அப்போது ‘மாட்டேன்’ என்று சொல்லி மறுத்து விட்டார் இதைத் தொடர்ந்து இவருக்கு கழுத்தில் கண்டமாலை தோன்றியது உடனே தம் தவற்றை உணர்ந்து திருவேங்கட மாலை, திருவேங்கடத்தந்தாதி என்று இரண்டு பிரபந்தங்களைப் பாடினார்; கண்டமாலை நோயும் காணாமற் போயிற்று!”

 

இது 1906 ஆண்டில் திவான் பகதூர் கிருஷ்ணமச்சாரியார் எழுதிய விளக்கம்.

இது சென்னை பல்கலைக் கழக பாடபுத்தகமாக அங்கீகரிக்கப்பட்டதால் இதுவே சரியான விளக்கம்.

 

சிலர் ஐயங்கார் குறிப்பிட்டது ‘மந்தி’ பாயும் வேங்கட மலை என்ற பொருள் அல்ல; குரங்கன் என்பது மானைக் (குரங்கம்) கையில் ஏந்திய சிவனைக் குறிப்பிட்டது என்பர். சைவர்கள் இவரிடம் வந்து சிவனைப் பாடும்படி கேட்ட போது இவ்வாறு சொன்னதாகக் கதை கட்டிவிட்டனர்.

 

 

இவருடைய கவிகளில் அப்பர் பெருமான், வள்ளுவப் பெருமான் ஆகியோரின் தாக்கத்தைக் காணலாம்.

“கற்றதனால் பயன் என் கொல் வாலறிவன்

நற்றாள் தொழா அர் எனின்” என்பான் வள்ளுவன்.

ஐயாங்காரோ 14 உலகம் சுற்றி வந்தாலும், பல நூல்கள் கற்றார் எனினும் அரங்க நாதனை வழிபடாவிட்டால் யாது பயன்? என்கிறார்:

கற்றாரெனினும் பதினாலுலகுங்

கண்டாரெனினுந் தண்டா மிருபற்

ற்றாரெனினுந்த் திருமாலடியார

ல்ரல்லாதவர் வீடில்லாதவரே

பொற்றாமரையாள் கணவன் றுயிலும்

பொற்கோயிலையே புகழ்வார் பணிவார்

மற்றாரெனினும் பெற்றாரவரே

வானோர் திருமாமணி மண்டபமே

–திருவரங்கக் கலம்பகம்

 

அரங்கனைப் புகழ்வார் மட்டுமே வைகுண்டத்திலுள்ள திருமாமணி மண்டபத்தைப் பெற்றவர்கள் என்பது இதன் பொருள்.

 

 

 

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து

    தரணியொடு வானாளத் தருவ ரேனும்

மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்

    மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்

அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்

    ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்

    அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே

 

என்று அப்பர் பாடினார் சிவபெருமான் மீது.

இதன் எதிரொலியை ஐயங்கார் பாடலில் காணலாம்:-

 

பாதியா யழுகிய கால்கையரேனும்

பழிதொழிலு  மிழிகுலமும் படைத் தாரேனும்

ஆதியா யரவணையா யென்பராகி

லவரன்றோ நாம் வணங்கு  மடிகளாவர்

சாதியா லொழுக்கத்தான் மிக்காரேனுஞ்

சதுர் மறையால் வேள்வியாற் றக்கோரேனும்

போதினான் முகன் பணியப் பள்ளி கொள்வான்

பொன்னரங்கம் போற்றாதோர் புலையர்தாமே.

 

 

இவர் பாடிய எட்டு நூல்கள் (அஷ்டப் பிரபந்தம்) பின் வருமாறு:

 

திருவரங்கத்தந்தாதி – 105 பாடல்கள்

திருவரங்கக் கலம்பகம் – 105

திருவரங்கத்து மாலை- 112

திருவேங்கட மாலை -103

திருவேங்கடத்தந்தாதி-101

அழகர் அந்தாதி- 101

108 திருப்பதி அந்தாதி-114

ரெங்கநாயகர் ஊசற்றிரு நாமப் பாடல்கள் -32

 

ஆகமொத்தம் – 773

 

இவர்  திரு நறையூர் நம்பி விஷயமாக மேக விடு தூது ( 205 பாடல்கள்), வீர வைணவ நிலையை நாட்டும் விடுதிக் கவிகள் 32  ஆகிய பாடல்களையும் பாடியிருக்கிறார்.

ஒருமுறை திருவரங்கத்துக் கோவில் பசு ஒன்று பொது நிலத்தில் மேய அதை சைவர்கள் பிடித்து வைத்துக்கொண்டனர். சிவன் மீது பாடல் பாடினால் அதை விடுவிப்போம் என்றனர். அவரும் சம்மதித்தார். அவர்கள் அருகிலுள்ள சிவத் தலமான திருவானைக் காவலைச் சேர்ந்தவர்கள். பசு இல்லாமல் விசுவ ரூப தரிசனம் தடைப்படுமே என்று அஞ்சிய ஐயங்கார் பாடலைப் பாடுவதாகவும் உடனே அதை விடுவிக்க வேண்டும் என்றும் நிபந்தனை போட்டார். அவர்கள் பாடலைப் பாடுங்கள் என்று சொன்னவுடன் மங்கை பாகன் என்று தொடங்கி பின்னர் முடித்துத் தருவதாகச் சொன் னார். பசுவும் விடுதலை பெற்றது பின்னர் அவர் பாடிய பாடலோ சிவனை விட உயர்ந்தவர் பெருமாள் என்று முடிந்தது! இதோ அந்தப் பாடல்:–

 

சிவனை விட உயர்ந்தவர்!

 

மங்கைபாகன் சடையில் வைத்த கங்கைநீர் யார்பதத்து நீர்

வன்சமேவு முனிவனுக்கு மைந்தனான தித்ல்லையோ

செங்கையாலிரந்தவன் பால மார கற்றினார்

செய்ய தாளின் மலரரன் சிரத்தினா தில்லையோ

வெங்கண் வேழமூலமென்ன வந்ததுங்கள் தேவனோ

வீறு வாண லமரில் அன்று விரலழிந்ததில்லையோ

அங்கண் ஞால முண்டபோது வெள்ளி வெற்பகன்றதோ

ஆதலா ரங்கனின்றி வேறு தெய்வமில்லையே

 

 

புராணக் கதைகளில் சிவனுக்கும் மேலாக விஷ்ணு செய்த விஷயங்களை உள்ளடக்கியது இப்பாடல்; கங்கை நீர் விஷ்ணுவின் பாதத்திலிருந்து சிவன் தலைமீது விழுந்தது. விஷ்ணு உல கையே உண்டபோது அதில் கயிலையும் சென்றது சிவன் கை  விரலில் சிக்கிய பிரம்மனின்  கபாலம்   விஷ்ணுவால் அகன்றது என்றெல்லாம் பாடித்தீர்த்தார்.

 

 

சுமார் எண்பது ஆண்டுக் காலம் வாழ்ந்த ஐயங்காரை, அவர் திருவரங்கத்தானை வழிபட்டுக் கொண்டிருக்கும்போதே ஒரு நொண்டிப் ப்சு மோதியது ; அவர் அங்கேயே உயிரைவிட்டு அரங்கன் திருவடிகளை அடைந்தார்.

சைவ- வைணவ சண்டை ஒரு புறம் இருக்க,செந்தமிழ்க் கடலில்  ஐயங்கார் இயற்றிய பல கவிதை முத்துக்கள், ஐயங்கார் மூலம் சேர்ந்தது என்றால் அது மிகையல்ல!

 

ஐயங்கார் செய்த அற்புதம்

ஐயங்கார் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ஐயங்கார்/

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் என்பவர் செய்த அற்புதம்பற்றி 1908 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்ப் பெயரகராதியில் ஈக்காடு இரத்தினவேலு …

 

–Subham–

திருப்புகழ் ஓதுதல் : ஒரு வழிகாட்டி (Post No.4414)

Written by S.NAGARAJAN

 

 

Date: 20 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-58 am

 

 

Post No. 4414

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

திருப்புகழ் பெருமை

திருப்புகழ் ஓதல் : ஒரு வழிகாட்டி (திருப்புகழ் கைட்)!

 

ச.நாகராஜன்

 

1

அருணகிரிநாதர் அருளியுள்ள திருப்புகழின் மஹிமையை முற்றிலுமாக யாராலும் உரைத்திடல் இயலாது.

திருத்தணிகையில் அவர் அருளியுள்ள திருப்புகழ் “வீ ர ஜெயத் திருப்புகழ் என்று கொண்டாடப்படுகிறது.

அந்தப் பாடல் வருமாறு:

 

 

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

    செகுத்தவ ருயிர்க்குஞ்               சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

    திருப்புகழ் நெருப்பென்               றறிவோம்யாம்

 

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்

    நிசிக்கரு வறுக்கும்                  பிறவாமல்

    நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்

நிறைப்புக ழுரைக்குஞ்                    செயல்தாராய்

 

தனத்தன தனத்தந் திமித்திமி  திமித்திந்

    தகுத்தகு தகுத்தந்                     தனபேரி

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்

    தளத்துட னடக்குங்                   கொடுசூரர்

 

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்

   சிரித்தெரி கொளுத்துங்

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்

   திருத்தணி யிருக்கும்                 பெருமாளே

 

அற்புதமான இந்தத் திருப்புகழை எத்தனை தரம் படித்தாலும், பயின்றாலும் அதன் முழுப் பொருளையும் பெருமையையும் உணர்ந்ததாக ஆக முடியாது!

 

அத்துணை பொருள் செறிந்த புகழ்ப் பாட்டு.

 

திருப்புகழை ஓதினால் நினைத்ததும் அளிக்கும்.

மனத்தையும் உருக்கும்.

 

பிறவாமல் நிசிக் கருவறுக்கும்.

அடுத்து வரும் சொற்றொடர் அற்புதமான ஒரு சொற்றொடர்

எதையும் எரிக்கும்! நெருப்பையும் கூட எரிக்குமாம் திருப்புகழ்

 

மலையைக் கூடப் பொடிப் பொடி ஆக்கி விடும்.

அப்படிப்பட்ட பெருமையை உடைய அற்புதமான திருப்புகழை ஓதும் செயலை எனக்குத் தருவாயாக, திருத்தணி உறை பெருமாளே என்கிறார் அருணகிரிநாதர்.

அவர் பாடிய திருப்புகழுக்கான பெருமையும் இதில் தான் உள்ளது; அது உரைக்கும் முருகனின் பெருமையும் இதில் தான் உள்ளது.

 

 

2

    இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பான், ஜெர்மனி ஆகிய பகை நாடுகள் இந்தியா மீது குண்டுகள் வீசும் அபாயம் ஏற்பட்டதால் மக்கள் மிகவும் பீதியுற்றனர்.

 

 

     அப்போது வள்ளிமலைத் திருப்புகழ் ஸ்வாமிகள் மக்களின் பீதியை அகற்ற திருப்புகழ் பாராயணக் குண்டு என்னும் நூலை 1942ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிட்டார்.

அந்த நூலின் முகவுரையில், “இத்திருப்புகழ்ப் பாராயணக் குண்டு ஜெர்மனி, ஜப்பான் குண்டுகளை அடக்கவல்ல பேராற்றல் வாய்ந்த எதிர் குண்டு. சூர சம்ஹார காலத்தும் முருகன் திருப்புகழ் வெற்றியே போர்க்களத்தில் முழங்கிற்று என்பது,

 

 

   “கஜரத பதாகிநி அரக்கர் துணி பட்டுவிழு

  களமுழுதும் வாழிய திருப்புகழ் முழக்குவன

கடிய குணத்த சினத்த ஸஹத்ர யோஜனை

     நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய

காத நூறாயிர கோடி வளைந்தன

   பூத வேதாளம அநேக விதங்களே

 

 

என வரும் பூத வேதாள வகுப்பால் ஏற்படுவதால், போர்க்களத்தும், மற்றும் எல்லாவிடத்தும் இறைவன் திருப்புகழை ஓதி எளிதில் ஸுகம் பெறலாம். திட புத்தியுடன் நித்திய பாராயணம் செய்தால் இத்திருப்புகழ்க் குண்டின் ஆற்றலையும் ப்ரபாவத்தையும் அநுபவத்தில் காணலாம் என்று இவ்வாறு ஸ்வாமிகள் அருளினார்.

அனைத்துத் துன்பங்களையும் விடுவிக்க வல்ல திருப்புகழ்த் தொகுப்பை ஸ்வாமிகள் அருளினார். அதைக் கீழே காண்போம்.

 

 

 

3

1.பாடும் பணி பெற – கந்தரனுபூதி – ஆடும் பரிவேல்

2.உயிர்க்கு ஆதரவு –  திருப்புகழ் –  உம்பர்தருத்தே

3.எழுந்தருள வேண்டுதல் – திருப்புகழ் – சென்றே இடங்கள்

4.கோள்கள் ஒடுங்க – கந்தரலங்காரம் – நாள் என் செயும்

  1. திருப்புகழ் நெருப்பு – திருப்புகழ் – சினத்தவர் முடிக்கும்
  2. தரிசனப் பாடல் – கந்தரலங்காரம் – ஓலையும் தூதரும்
  3. வேலும் மயிலும் துணை – கந்தரலங்காரம்-விழிக்குத் துணை
  4. வேலின் ப்ரபாவம் கூறி பகைவரை வெல்ல – வேல் வகுப்பு பருத்த முலை ; ஸுரர்க்குமுநிவரர்க்கும்; தருக்கி நமன்; திரைக்கடலை உடைத்து ; கந்தரலங்காரம்- தேரணியிட்டு;

வேல்வாங்கு வகுப்பு – திடவிய நெஞ்சுடை; அடவி படும்ஜடை;

வடவை இடும்படி;

 

 

  1. பிரார்த்தனை பாக்களின் அடிகள்
  2. கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும்

    என்றன் உள்ளத் துயரை ஒழித்தருளாய்

  1. அஞ்சா நெஞ்சாக்கம் தரவல பெருமாளே
  2. ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே
  3. இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே
  4. ஒருக்கால் முருகா பரமா குமரா உயிர்கா என ஓதருள் தாராய்
  5. நவர் வாட்டோமர சூலம் தரியாக் காதிய சூரும்

         தணியாச் சாகரம் ஏழும்      கிரி ஏழும்

        சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலும் நீலம்

         தரிகூத்தாடிய மாவும்         தினைகாவல்

       துவர்வாய்க் கானவர் மானும் சுரநாட்டாள் ஒரு தேனும்

           துணையாத் தாழ்வற வாழும்     பெரியோனே!

             துணையாய்க் காவல் செய்வாய்!

 

7.வேலுமயிலும் நினைத்தவர் தந்துயர் தீர அருள்தரு கந்த!

   

  1. பதினால் உல கத்தினில் உற்றுறு பக்தர்கள்

    ஏது நினைத்ததும் மெத்த அளித்தருள்    இளையோனே

  1. மொழியும் அடியார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு

          முனிய அறியாத தேவர்               பெருமாளே

  1. வேண்டிய போதடியர் வேண்டிய போகமது

      வேண்ட வெறாதுதவு               பெருமாளே

  1. வேல் எடுத்த ஸமர்த்தை உரைப்பவர்

       ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை அருள்வோனே

  1. அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன

          அவைதரு வித்தருள்          பெருமாளே

**

 

  

  1. நவக்ரஹ சேஷ்டை நீங்க- கந்தரனுபூதி – சேயவன் புந்தி

          கந்தரலங்காரம் – மயில் துணை -குசைநெகிழா

           கந்தரலங்காரம் – சேவல் துணை -படைபட்ட

11.மனக்கவலை நீங்க – கந்தரனுபூதி -எந்தாயும்

  1. அச்சமற்ற வாழ்வுற – கந்தரலங்காரம் – சேந்தனைக்
  2. தாழ்வின்றி வாழ கந்தரலங்காரம் – சேந்தனை
  3. நாம விசேஷப் பலன் – கந்தரலங்காரம் – முடியாத் துயர
  4. திக்பந்தனம் – கந்தரலங்காரம் – தடக்கொற்ற

குறிப்பு: சலங்காணும், மடங்கல் நடுங்கும், வேலன் வாய்த்த திருப்புகழ்,கருப்புகழாம்,ஏகாந்த வீரம் போற்றி ஆகிய பாடல்கள் மட்டும் இங்கு மேலே குறிப்பிடப்படவில்லை.

 

 

4

இந்தத் திருப்புகழ் பாராயணக் குண்டு யுத்த காலத்துக்கு மட்டுமானது அல்ல; தினசரி வாழ்க்கை என்னும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எந்தக் காலத்திற்கும் உகந்தது.

திருப்புகழைப் பாராயணம் செய்வோம்; இகபர சௌபாக்கியம் அடைவோம்.

*****

சுவர்க்கமும் பூமியும் உருவான வரலாறு; மனு நீதி நூல் – பகுதி 2 (Post No.4413)

Written by London Swaminathan 

 

Date: 19 NOVEMBER 2017

 

Time uploaded in London- 20-58

 

 

Post No. 4413

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

(First Part was posted yesterday)

முதல் அத்தியாயத் தொடர்ச்சி

ஸ்லோகம் 11. முதலில் ஒரு புருஷன் உருவாக்கப்பட்டான்; அவர்தான் பிரம்மா எனப்படுகிறார். அவரைப் படைத்தவரோ இந்த பிரபஞ்சத்துக்குக் காரணமானவர். சரீரம் இல்லாதவர்; வேதாந்தத்தினால் அவரை அறிவதால் அவரை ‘சத்’ (real) என்றும், கண் முதலிய புற உறுப்புகளால் அறிய முடியாமையால் ‘அசத்’ (unreal) என்றும் சொல்லுவர்.

12.பிரம்மாவானவர் ஒரு பிரம்ம வருஷம் வசித்து, மனத்தினாலேயே இந்த அண்டம் இரண்டாகும்படி, இரு துண்டுகளாக்கினார்.

 

13.மேல் பகுதியில் சுவர்க்கத்தையும், கீழ்ப்பகுதியில் பூமியையும் இடையில் ஆகாசத்தையும் உருவாக்கினார். எட்டு திக்குகளையும் சமுத்திரத்தையும் படைத்தார்.

14.அந்த பிரம்மாவானவர் மனத்தை (மனது) படைத்தார். அதை ‘சத்’(real) என்றும் ‘அசத்’ (unreal) என்றும் அறிக; ஞானத்தை உண்டு பண்ணுவதால் மனஸ், ‘சத்’ ஆகும்;  கண்ணுக்குத் த்ரியாமையால் ‘அசத்’ எனப்படும்; அத்தோடு நான் என்னும் அஹம்காரத்தைப் படைத்தார்.

 

  1. சிருஷ்டிக்கு முன்னமே, சத்வம் முதலிய மூன்று குணங்களையும் ஐந்து விஷயங்களைக் கிரஹிக்கக்கூடிய 5 ஞானேந்திரியங்களையும் வரிசைக் கிரமத்தில் உருவாக்கினார்.
  2. முன் சொல்லிய ஆகாயம் முதலிய ஐம்பூதங்களின் தன்மாத்திரைகளையும் அஹம்காரத்தையும் சூட்சுமமாய் அதன் அதன் நிலைகளில் அடக்கி–தன்னுடைய சக்தியையும் சேர்த்து– மானுடம், விலங்கு, பறவைகள் என்று உயிரினங்களைப் படைத்தார்.

17.பிரம்மாவினால் உண்டாக்கப்பட்ட ஐம்பூதங்களும், அஹங்காரமும் இந்த உடலில் சூட்சும ரூபத்தில் அடைந்ததால், உடலுக்கு ஸரீரம் என்று பெயர். சம்ஸ்கிருதத்தில் ‘ஆஸ்ரயந்தி’ (inhabit) என்றால் வசிக்கிறது’ உருவம் அடைகிறது (embody) என்று பொருள்; இந்த ஆச்ரயந்தியால் சரீரம் உருவானதாகச் சொல்புரட்டு செய்கிறார் மனு; பின் ஒரு ஸ்லோகத்தில் மனிதன் என்ற பெயர் எப்படி உருவானது என்றும் சொல் வித்தை செய்வதைக் காண்போம்.

  1. பஞ்ச பூதங்களும் அதனதன் குணங்களுடன், மனத்துடன் சூட்சுமமாக உள்ளே நுழைகிறது.

 

19.பஞ்ச தன்மாத்திரை, அஹங்காரம், மனது இந்த ஏழு விஷயங்களையும் சிருஷ்டிக்கும் வல்லமை படைத்தவர் கடவுள். பிறப்பு, இறப்பற்ற அவரிடமிருந்து அழியக்கூடிய இந்த உலகம் உண்டாகிறது.

 

20.ஐம்பூதங்களில் முதாலனது

ஆகாசம், அதன் குணம் சப்தம்;

இரண்டாவது வாயு-அதன் குணம் ஸ்பரிசம்/தொடும் உணர்ச்சி,

மூன்றாவது தீ/ தேயு- அதனுடைய குணம் உருவம்/ரூபம்; , நான்காவது- நீர்/அப்பு- அதனுடைய குணம்- சுவை /ரசம், ஐந்தாவது பிருதிவி (பூமி) -அதன் குணம்-  கந்தம்/வாசனை . ஒவ்வொன்றும் முந்தையவற்றின் குணங்களையும் சேர்த்துக்கொண்டு தன் குணத்தையும் உடைத்தாய் இருக்கும். அதாவது,  கடைசியாக உள்ள பூமிக்கு மொத்தம் ஐந்து குணங்கள் இருக்கும்.

 

என் கருத்து

 

பிற்கால புராணங்களிலும், பிற நாட்டு நூல்களிலும் மனிதனைக் களி மண்ணால் செய்து அதில் உயிரைக் கடவுள் ஊதினார், உடனே அது உயிருள்ள உருவமாயிற்று என்று எழுதி வைத்தனர். ஆனால் மனு, அறிவியல் முறையில் அணுகுகிறார். நம்முடைய உடம்பில் ஐந்து பூதங்கள் – நீர், நெருப்பு (உடல் சூடு), வாயு (மூச்சுக் காற்று), தண்ணீர் (உடலில் 70 சதவிகிதமும் பூமியின் பரப்பில் 70 சதவிகிதமும் உள்ளது), ஆகாசம் (வெற்றிடம் (மூக்கினுள், காதினுள்…..) உள்ளன. இவைகளைச் சேர்த்தால் மட்டும் உயிர் வந்துவிடாது. பிரம்மனின் சக்தி, “நான்” என்னும் உணர்வு இருந்தால்தான் அது அசையும் பொருளாக இருக்கும். நாம் இறந்தவுடன் பஞ்ச பூதங்களுடன் நம் உடல் கலப்பதும் கண்கூடு. ஆக , அறிவியல் முறையில் மனு, அணுகியுள்ளார்.

பஞ்ச பூதங்கள் மட்டும் இருக்குமானால், அது உயிரற்ற திடப் பொருளாகவும் இருக்கமுடியும்; ஆகையால் மனிதனாக இயங்க, அதனுள் மனஸ், நான் என்னும் உணர்வு, சத்வ ரஜோ, தமோ குணங்கள், ஞான இந்திரியங்கள் ஆகியன அவசியம் என்பது மனுவின் வாதம்.

 

மனம், உள்ளம், நெஞ்சம், இதயம், சிந்தனை ஆகியன ஒரு ஆழமான விஷயம். இதற்கு உடலில் ஒரு உறுப்பு இல்லை. ஆனால் உள்ளத்திலிருந்து—- என் இதயத்திலிருந்து——நெஞ்சத்தைத் திறந்து- சொல்கிறேன்— உணர்கிறேன் என்று சொல்லுவது வழக்கு—- இது எல்லா மொழிகளிலும் உண்டு. ஆனால் இதை எல்லாம் செய்வது மூளை என்பது அறிவியல் கூற்று. இந்துக்களோவெனில் மூளை மட்டும ல்  ல- மனஸ், அஹம்காரம் (அஹம் என்ற சம்ஸ்க்ருத சொல்லுக்கு நான் என்று பொருள்) ஆகியனவும் மனிதனின் செயல்பாட்டிற்குக் காரணம் என்று சொல்லுவர்.

 

சரீரம் என்ற சொல்லுக்குக் கொடுக்கும் விளக்கம், நாராயண என்ற சொல்லுக்குக் கொடுத்த விளக்கம், இனிமேல் மனித என்ற சொல்லுக்குக் கொடுக்கப் போகும் விளக்கம் எல்லாம், இந்துக்கள் சொல்லில் வல்லவர்கள், அவர்கள் அனைவரும் செல்லேர் உழவர்கள் என்பதைக் காட்டுகிறது. வேதத்திலேயே இது போன்ற சொல் ஜாலம், (Pun on Words) சொல் விந்தை, சொல் சர்கஸ் இருப்பதால் இந்து நாகரீகம் அறிவில் முதிர்ச்சி கண்ட நாகரீகம் என்பது தெளிவாகிறது.

  1. From that (first) cause, which is indiscernible, eternal, and both real and unreal, was produced that male (Purusha), who is famed in this world (under the appellation of) Brahman.
  2. The divine one resided in that egg during a whole year, then he himself by his thought (alone) divided it into two halves;
  3. And out of those two halves he formed heaven and earth, between them the middle sphere, the eight points of the horizon, and the eternal abode of the waters.
  4. From himself (atmanah) he also drew forth the mind, which is both real and unreal, likewise from the mind egoism, which possesses the function of self-consciousness (and is) lordly;
  5. Moreover, the great one, the soul, and all (products) affected by the three qualities, and, in their order, the five organs which perceive the objects of sensation.
  6. But, joining minute particles even of those six, which possess measureless power, with particles of himself, he created all beings.
  7. Because those six (kinds of) minute particles, which form the (creator’s) frame, enter (a-sri) these (creatures), therefore the wise call his frame sarira, (the body.)
  8. That the great elements enter, together with their functions and the mind, through its minute parts the framer of all beings, the imperishable one.
  9. But from minute body (-framing) particles of these seven very powerful Purushas springs this (world), the perishable from the imperishable.
  10. Among them each succeeding (element) acquires the quality of the preceding one, and whatever place (in the sequence) each of them occupies, even so many qualities it is declared to possess.

यत् तत् कारणमव्यक्तं नित्यं सदसदात्मकम् ।

तद्विसृष्टः स पुरुषो लोके ब्रह्मैति कीर्त्यते ॥ 11

 

तस्मिन्नण्डे स भगवानुषित्वा परिवत्सरम् ।

स्वयमेवात्मनो ध्यानात् तदण्डमकरोद् द्विधा ॥ 12

 

ताभ्यां स शकलाभ्यां च दिवं भूमिं च निर्ममे ।

मध्ये व्योम दिशश्चाष्टावपां स्थानं च शाश्वतम् ॥ 13॥

 

उद्बबर्हात्मनश्चैव मनः सदसदात्मकम् ।

मनसश्चाप्यहङ्कारमभिमन्तारमीश्वरम् ॥ 14॥

 

अहङ्कारम्] महान्तमेव चात्मानं सर्वाणि त्रिगुणानि च ।

विषयाणां ग्रहीतॄणि शनैः पञ्चैन्द्रियाणि च ॥ 15॥

 

तेषां त्ववयवान् सूक्ष्मान् षण्णामप्यमितौजसाम् ।

संनिवेश्यात्ममात्रासु सर्वभूतानि निर्ममे ॥ 16

 

सन्निवेश्य यन् मूर्त्यवयवाः सूक्ष्मास्तानीमान्याश्रयन्ति षट् ।

तस्माच्छरीरमित्याहुस्तस्य मूर्तिं मनीषिणः ॥ 17

 

यन् मूर्त्यवयवाः सूक्ष्मास्तानीमान्याश्रयन्ति षट् ।

तस्माच्छरीरमित्याहुस्तस्य मूर्तिं मनीषिणः ॥ 18॥

 

तदाविशन्ति भूतानि महान्ति सह कर्मभिः ।

मनश्चावयवैः सूक्ष्मैः सर्वभूतकृदव्ययम् ॥ 19॥

 

तेषामिदं तु सप्तानां पुरुषाणां महौजसाम् ।

सूक्ष्माभ्यो मूर्तिमात्राभ्यः संभवत्यव्ययाद् व्ययम् ॥ 20॥

 

आद्याद्यस्य गुणं त्वेषामवाप्नोति परः परः ।

यो यो यावतिथश्चैषां स स तावद् गुणः स्मृतः ॥ Bछ्.Sछ्॥

 

–Subham–

Science and Linguistics in Manu Smrti- Part 1 (Post No.4412)

Written by London Swaminathan 

 

Date: 19 NOVEMBER 2017

 

Time uploaded in London- 14-15

 

 

Post No. 4412

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Manu Smrti is the first Law book in the world. It is in Sanskrit. There are over 2650 couplets in 12 chapters in the book. Latest updated version belongs to 2nd century BCE. But my research shows that the original Manu Smrti was composed before 2000 BCE. There are internal evidences for such dating; they are as follows:

 

Manu is referred to in the oldest book in the world – The Rig Veda

Manu talks about Sarasvati river which existed around 2000 BCE

Manu never spoke about Sati- the widow burning

Many of Manu’s rules wouldn’t fit into a period around 2nd century BCE

And updated version has lot of interpolations.

Leaders like Gandhiji could easily spot them, which went contradictory to the true spirit of the book.

People like B R Ambedkar felt very angry and burnt the copies because of Anti Shudra references in the book.

But even a child could see the interpolated Anti Shudra verses as later interpolations.

One must read it in full and then weigh it pros and cons.

The subjects he deals with are of amazing variety.

He lived before Hammurabi (1810 BCE) and other law makers.

Following is the evidence for his knowledge in Science:

My comments on first ten slokas:

  1. He knew Big Bang (See Sloka 5, 6 and 7 given below)
  2. He knew water is the source of living beings and the first seed was in the waters (see sloka 8 given below).

 

  1. Pancha Bhuta (Five Elements) concept went from India to Greece and other parts (See sloka 6).

 

  1. Linguistics:

His interpretation of the name Narayana (Nara=water+ Ayana=dwelling place) shows that water is called Nara. Linguists like S K Chatterjee thought Neer/water found in the Rig Veda was a Tamil word. But it is found in Greek in the word Nereids (water nymphs).

When a word is found in the Greek language it would be considered Indo European (Sanskrit family). But I have listed 20 to 30 Tamil words in ancient Greek. This supports my pet theory that Tamil and Sanskrit are the parents of most of the ancient languages. Most of the words can be traced back to either Tamil or Sanskrit (see Sloka 10 given below)

 

॥ मनुस्मृति अथवा मानवधर्मशास्त्रम् ॥

 

अध्याय १

मनुमेकाग्रमासीनमभिगम्य महर्षयः ।

प्रतिपूज्य यथान्यायमिदं वचनमब्रुवन् ॥ Bछ्.Sछ्॥

 

भगवन् सर्ववर्णानां यथावदनुपूर्वशः ।

अन्तरप्रभवानां च धर्मान्नो वक्तुमर्हसि ॥ Bछ्.Sछ्॥

 

त्वमेको ह्यस्य सर्वस्य विधानस्य स्वयंभुवः ।

अचिन्त्यस्याप्रमेयस्य कार्यतत्त्वार्थवित् प्रभो ॥ Bछ्.Sछ्॥

 

स तैः पृष्टस्तथा सम्यगमितोजा महात्मभिः ।

प्रत्युवाचार्च्य तान् सर्वान् महर्षींश्रूयतामिति ॥ Bछ्.Sछ्॥

 

आसीदिदं तमोभूतमप्रज्ञातमलक्षणम् ।

अप्रतर्क्यमविज्ञेयं प्रसुप्तमिव सर्वतः ॥ Bछ्.Sछ्॥

 

ततः स्वयंभूर्भगवानव्यक्तो व्यञ्जयन्निदम् ।

महाभूतादि वृत्तोजाः प्रादुरासीत् तमोनुदः ॥ Bछ्.Sछ्॥

 

योऽसावतीन्द्रियग्राह्यः सूक्ष्मोऽव्यक्तः सनातनः ।

सर्वभूतमयोऽचिन्त्यः स एव स्वयमुद्बभौ ॥

सोऽभिध्याय शरीरात् स्वात् सिसृक्षुर्विविधाः प्रजाः ।

अप एव ससर्जादौ तासु वीर्यमवासृजत् ॥ Bछ्.Sछ्॥

 

तदण्डमभवद्धैमं सहस्रांशुसमप्रभम् ।

तस्मिञ्जज्ञे स्वयं ब्रह्मा सर्वलोकपितामहः ॥ Bछ्.Sछ्॥

 

आपो नारा इति प्रोक्ता आपो वै नरसूनवः ।

ता यदस्यायनं पूर्वं तेन नारायणः स्मृतः ॥ Bछ्.Sछ्

 

 

CHAPTER I

 

  1. The great sages approached Manu, who was seated with a collected mind, and, having duly worshipped him, spoke as follows:

 

  1. ‘Deign, divine one, to declare to us precisely and in due order the sacred laws of each of the (four chief) castes (varna) and of the intermediate ones.

 

  1. ‘For thou, O Lord, alone knowest the purport, (i.e.) the rites, and the knowledge of the soul, (taught) in this whole ordinance of the Self-existent (Svayambhu), which is unknowable and unfathomable.’

 

  1. He, whose power is measureless, being thus asked by the high-minded great sages, duly honoured them, and answered, ‘Listen!’

 

 

  1. This (universe) existed in the shape of Darkness, unperceived, destitute of distinctive marks, unattainable by reasoning, unknowable, wholly immersed, as it were, in deep sleep.

 

  1. Then the divine Self-existent (Svayambhu, himself) indiscernible, (but) making (all) this, the great elements and the rest, discernible, appeared with irresistible (creative) power, dispelling the darkness.

 

 

  1. He who can be perceived by the internal organ (alone), who is subtile, indiscernible, and eternal, who contains all created beings and is inconceivable, shone forth of his own (will).

 

  1. He, desiring to produce beings of many kinds from his own body, first with a thought created the waters, and placed his seed in them.

 

 

  1. That (seed) became a golden egg, in brilliancy equal to the sun; in that (egg) he himself was born as Brahman, the progenitor of the whole world.

 

  1. The waters are called narah, (for) the waters are, indeed, the offspring of Nara; as they were his first residence (ayana), he thence is named Narayana.

 

–to be continued……………..

 

 

 

அமெரிக்காவைக் கலக்கிய நாத்திகவாதி இங்கர்சால் (Post No.4411)


Written by London Swaminathan
 

 

Date: 19 NOVEMBER 2017

 

Time uploaded in London- 11-08 am

 

 

Post No. 4411

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

அமெரிக்காவின் சக்திவாய்ந்த பேச்சாளர் ராபர்ட் க்ரீன் இங்கர்சால் (1833-1899 ஆவார்). அவரது தந்தையோ கிறிஸ்தவ மதப் பிரசாரகர்; இவரோ கடவுளையும் பைபிளையும் எதிர்த்துப் பிரசாரம் செய்தவர். அவர் படிக்காத மேதை; கருணை வள்ளல்; மானுடத்துக்காகப் போராடியவர். அவருடைய பேச்சைக் கேட்கப் பெருங்கூட்டம் கூடும். ஆனால் பத்திரிக்கைகளோ அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்தன. அந்தக் காலத்தில் ஒரு டாலர் கட்டணம் கொடுத்து இவரது பேச்சைக் கேட்டனர். இது ரூ10,000 கொடுத்து ஒருவர் உரையைக் கேட்பது  போல!

 

அவரது வாழ்க்கையில் நடந்த சில சுவையான சம்பவங்கள் இதோ!

 

தந்தைக்குப் பிறந்த ஐவரில் இவரும் ஒருவர். ஆனால் அதிகம் படிக்கவில்லை; ஒரு வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்றதால் வழக்கறிஞர் ஆனார்.

சுவாமி விவேகாநந்தரின் உரையைக் கேட்டு வியப்புற்றவர் இவர். இவரை நாத்தீகவாதி (atheist) என்று சொல்லாமல் ஆக்ஞேயவாதி (agnostic) என்றும் சுதந்திர சிந்தனையாளர் என்றும் அமெரிக்கர்கள் அழைத்தனர். புத்தரும் ஒரு ஆக்ஞேயவாதி; அதாவது கடவுளைப் பற்றியோ சடங்குகளைப் பற்றியோ கவலைப்படாதே; தூய வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்பவர் ஆக்ஞேயவாதி.

 

இவர் பைபிளில் உள்ள பல கதைகளையும் நம்பிக்கைகளையும் கண்டித்தார். தான் கூறும் பைபிளின் ஒரு அத்தியாயத்தை எந்த கிறிஸ்தவ மதபோதகராவது ஞாயிற்றுக்கிழமை பிராரத்தனையில் அப்படியே படித்துக் காட்டினால் அவர்களுக்கு ஆயிரம் டாலர் தருவதாக சவால் விட்டார். அந்தக் காலத்தில் ஆயிரம் டாலர் என்பது மிகப்பெரிய தொகை! யாரும் அந்த சவாலை ஏற்கவரவில்லை. பைபிளில் பல அபத்தக் களஞ்சியம் இருப்பதாக அவர் சாடினார். மோசஸ் செய்த பிழைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டா?

 

ஒருமுறை இவர் பெரிய மண்டபத்தில் பேசிக்கொண்டிருந்தார். எள் போட்டால் எண்ணை ஆகிவிடும் அளவுக்குக் கூட்டம். ஊசி விழுந்தால் கூட சப்தம் கேட்கும் அளவுக்கு அமைதி. அப்படிப்பட்ட சூழ்நிலையில் எல்லோரும் ஆணி அடித்து சுவரில் மாட்டப்பட்ட படம் போல ஆடாமல் அசையாமல் சொற்பொழிவைச் செவிமடுத்த சமயம். ஒருவர் திடீரென்று எழுந்து அமைதியைக் குலைக்கும் வண்ணம், “அன்பரே உமக்கு ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டா?” என்று வினவினார்.

 

இங்கர்சாலும் சற்றும் தயங்காமல் “ஐயன்மீர்! எனக்கு ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டு; குறிப்பாக சோப்புப் போட்டுக் குளிக்கும் ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டு” என்று சொன்னார். உடனே பயங்கர கரகோசம் விண்ணைப் பிளந்தது!

 

 

ஞான ஸ்நானம் என்பது சர்ச்சுகளில் குழந்தைகளுக்கு பாதிரிமார்கள் செய்யும் புனிதச் சடங்கு; இதைத் தான் இங்கர்சால் கிண்டல் செய்தார்.

 

இங்கர்சாலின் பேச்சுகளில் சிரிப்பொலியும் கேட்கும்; அழுகை ஒலியும் கேட்கும்; நகைச் சுவையாகவும் உருக்கமாகவும் பேசவல்லவர் அவர். மக்களைச் சிந்திக்கத் தூண்டுபவர். ஆனால் தனக்குப் பிறகு ஒரு அமைப்போ, இயக்கமோ உருவாக விரும்பாதவர். சில அமெரிக்கர்கள், எழுத்தின் மூலம் சீர்திருத்தம் கொண்டுவந்தனர். இவர் பேச்சின் மூலம் சிந்தனையைத் தூண்டியவர்.

 

இந்திய பகுத்தறிவுவாதிகள் மாதிரி ஒழுக்கம் குறைந்தவர் அல்ல. நேர்மையானவர். இவர் தூயவர் என்பதால் இவர் சொல்லுக்கு மதிப்பு இருந்தது.

கோர்ட்டில்

 

ஒரு முறை, ஒரு சண்டையில், கோபத்தில் ஒருவரைக் கொன்றுவிட்ட ஒரு நல்லவரைக் கோர்ட்டில் வாதாடிக் காப்பாற்றினார். நீதிபதி முன்னே சென்று நின்று வாதாடத் துவங்கினார்: இப்பொழுது  ஒரு வீட்டின் வழியே வந்தேன்; உள்ளே நுழைந்தேன். பெற்ற குழந்தையைப் பக்கத்தில் போட்டுக்கொண்டு கண்ணீரும் கம்பலையுமாக இருந்த ஒருத்தியைப் பார்த்தேன்; தனது கணவர் ஒன்றும் அறியாத அப்பாவி; அவரைக் குழந்தையிடம் உடனே அனுப்புங்கள் என்று சொல்லி பெண்மணி அழுதாள்……………. இப்படி உருக்கமாக இங்கர்சால் தனது வாதத்தை முன்வைத்து முடிக்கும் முன்பாக திடீரென்று ஒரு ஜூரி (jury) கத்தினார், “அன்பரே அவரை உடனே விடுதலை செய்து வீட்டுக்கு அனுப்பிவிடுகிறோம்” என்று

 

அவருடைய பேச்சாற்றலைவிட நேர்மைக்குக் கிடைத்த பரிசு இது என்றே சொல்ல வேண்டும்.

 

அவருடைய வீட்டிலுள்ளோர் சொன்ன ஒரு விஷயம்! அவரிடம் நாங்கள் பணம் கேட்போம் . எதற்காக?, எவ்வளவு வேண்டும்? என்று கேட்டதே இல்லை. இதோ இந்த மேஜை டிராயரில் பணம் உள்ளது என்பார் . நாங்கள் எடுத்துக் கொள்வோம். இது போல நிறைய தர்ம கைங்கர்யங்களையும் அவர் செய்திருக்கிறார்.

 

மத எதிர்ப்பு என்பது இவரது தொழில் அல்ல. அது தன்னிச்சையாக வந்தது. வக்கீல் தொழிலில் நிறைய பேரும் புகழும் பணமும் வந்தது.

 

வால்ட் விட்மன்

வால்ட் விட்மன் (Walt Whitman) என்ற புகழ்பெற்ற அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், மானுட நண்பர் இவருக்கு மிகவும் நெருங்கிய நண்பர். ஒரு முறை அவரைச் சந்திக்கச் சென்றார். அவருடைய வீடும், அவர் இருந்த அறையும் அலங்கோலமாகக் காட்சி அளித்தது. “வால்ட், நீங்கள் வாழ்க்கையில் ஒரு தப்பு செய்துவிட்டீர்கள்; கல்யாணம் கட்டாமல் இருந்து விட்டீர்களே; வீட்டில் ஒரு இல்லத்தரசி இல்லையே” என்றார்.

 

வால்ட் விட்மன் இறந்தபோது இங்கர்சால் ஆற்றிய இரங்கல் உரை அமெரிக்காவையே அசத்திவிட்டது. அப்படிப்பட்ட பேருரை; இரங்கல் உரை என்றால் என்ன என்பதற்கு இலக்கணம் கற்பித்தவர்.

 

இங்கர் சால், ஷேக்ஸ்பியர் நாடகங்களைக் கரைத்துக் குடித்தவர்; பேசும்போதெல்லாம் செகப்பிரியரின் (Shakespeare) வாசனை சொற்களில் வீசும்.

 

பகுத்தறிவுவாதிகளில் ஒழுக்கமும் நேர்மையும் நிறந்தவர் என்பதால் இவருடைய சொற்பொழிவுகளுக்கு மகத்தான சக்தி இருந்தது. பகுத்தறிவு பேசி பணம் சம்பாதிக்கும் வர்கத்தில் சேராதவர்.

இங்கர்சால் புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது; என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

 

TAGS:– ராபர்ட் இங்கர்சால், நாத்திகவாதி, பேச்சாளர், அமெரிக்க

சுபம், சுபம்—-