சாக்ரடீஸை கிண்டல் அடிக்கும் கிரேக்கர்கள்! (Post No.4140)

Written by London Swaminathan

 

Date: 8 August 2017

 

Time uploaded in London- 20-46

 

Post No. 4140

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நம்முடைய கண்ணோட்டத்தில் சாக்ரடீஸ் ஒரு சிந்தனைச் சிற்பி; பேரறிஞர்! ஆனால் அவர் காலத்திய கிரேக்க அறிஞர்கள் அவரை பைத்தியக்கரப் பயல் என்று சித்தரித்துள்ளனர். நான் ஏதென்ஸ் நகரில் ஆவலோடு வாங்கிய சீட்டுக் கட்டில் ஜோக்கர் கார்டில் சாக்ரடீஸ் உள்ளார். ஆனால் வேறு ஒரு கார்டிலும் சாக்ரடீஸ் படம் இருந்தது எனக்குக் கொஞ்சம் திருப்தி. இதைப் பார்க்கையில் சாக்ரடீஸ் பற்றி இரு வேறு கருத்துகள் உண்டோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆயினும் இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் நாடகங்கள் எழுதி புகழ் சேர்த்த அரிஸ்டோபனிஸ் என்பவர், எல்லா தத்துவ அறிஞர்களும் தீய கருத்துக்களைப் பரப்புவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் சாக்ரடீஸை பைத்தியக்காரன் என்கிறார்.

 

 

நம்மூர் அரசியல்வாதிகளைப் பார்க்கையில் சாக்ரடீஸ் பிழைக்கத் தெரியாத பைத்தியக்காரன்தான். கிரேக்கம் எனப்படும் கிரீஸ் நாட்டில் அக்காலத்தில் தூக்குத் தண்டனை, சிரச் சேதம் முதலியன கிடையா. எவருக்கேனும் மரண தண்டனை விதிக்கப்பட்டால் உன் கொள்கைகளைக் கைவிடுகிறாயா? அல்லது விஷத்தைக் குடிக்கிறாயா? என்று கேட்பர். அப்பாவி சாக்ரடீஸ் எனக்கு இருக்கும் ஒரே சொத்து என் கொள்கைதான்; அது என்னுடன் இருக்கட்டும் என்று சொல்லி விஷத்தைக் குடித்தார்.

அவரது ஆத்ம சிநேகிதனான கிரீட்டோ, தப்பித்துச் செல்ல வழிவகைளைக் கூறியும் சிறையிலிருந்து வெளியேற மறுத்துவிட்டார். கடைசியில் கிரீட்டோவை அழைத்து, “கிரீட்டொ! நான் வேண்டிக்கொண்ட தெய்வத்துக்கு ஒரு கோழியைப் பலி கொடுக்க மறந்து விடாதே” என்று சொல்லிவிட்டு ஹெம்லாக் என்னும் விஷத்தைக் குடித்தார். நிற்க.

 

இவரை நையாண்டி செய்து, நக்கல் அடித்த அரிஸ்டோபனிஸ், 40 நாடகங்களுக்கு மேல் எழுதினார். ஆனால் நம் கைகளில் சிக்கியது 11 நாடகங்கள்தான்.

இவருடைய வாழ்க்கைச் சரிதம் முழுதும் கிடைக்கவில்லை. ஆனால் ஏதென்ஸ் நகரில் பிறந்து 20 வயதுக்குள்ளேயே நகைச்சுவை நாடகங்களை எழுதத் துவங்கினார். இவரது  காலத்தில் ஏதன்ஸுக்கும் ஸ்பார்டாவுக்கும் 27 ஆண்டுகளுக்கு நடந்த போரில் ஏதென்ஸ் தோல்வி அடைந்தது. அத்துடன் மிகப்பெரிய கிரேக்க நாகரீகம் சீரழியத் தொடங்கியது. ஊழல் தலைவிரித்தாடியது. அவைகளக் குறை கூறியும் கிண்டல் செய்தும் நகைச் சுவை நாடகங்களை எழுதினார்.

 

இவருடைய நாடகங்கள் அங்கத நாடகங்கள் இரு பொருள்பட இருக்கும். இவரது புகழ்பெற்ற நாடகங்களில் ஒன்று தவளைகள் பற்றியது. ரிக் வேதத்தில் வரும் தவளைப் பாடலுடன் அதை ஒப்பிட்டு ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.

 

பிறந்த ஆண்டு- கி.மு.450

இறந்த ஆண்டு – கி.மு.385

 

My old article:

 Aristophanes, Vashistha and the Frog Song in the Rig Veda …

tamilandvedas.com/2016/12/15/aristophanes…

राजेंद्र गुप्ता Rajendra Gupta has left a new comment on your post “Aristophanes, Vashistha and the Frog Song in the R…”

 

XXXX

 

80 நாடகம் எழுதிய ஏஸ்கைலஸ்!

கிரேக்க நாடகத்தின் முன்னோடி இவர். ஏஸ்கைலஸ்– சோக நாடகங்களின் மன்னன். ஏதென்ஸ் அருகில் பிறந்தவர். அடிக்கடி இதாலிக்குச் சொந்தமான சிசிலி தீவுக்குப் போய் வந்தார். அங்கேதான் இறந்தார்.

 

மராத்தன் போரிலும் சலாமிஸ் போரிலும் பங்கேற்றவர்.

 

80 நாடகம் எழுதி 52 முறை முதல் பரிசு பெற்றவர் ஏஸ்கைலஸ் . ஆனால் நமக்குக் கிடைத்தவை ஏழே நாடகங்கள் தான்.

கிரேக்க புராணக் கதைகளைப் பயன்படுத்தி அரசியல் செய்திகளை அளித்தார். இவருடைய நாடகம் பற்றிய சிறப்பு என்னவென்றால் 2500 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் இவருடைய நாடகங்கள் மேடையில் நடிக்கப்படுகின்றன (நம்முடைய மஹாபாரத நாடகங்கள் இன்றும் இந்தோநேஷியாவில் நடப்பது போல).

 

இவரது காலத்தில் பாரசீகத்துடன் நடந்த சண்டையில் கிரேக்கம் வெற்றி பெற்றது. அதன் விளைவாக போர்க்கால துன்பங்களை இவரது நாடகத்தில் காணலாம்.

பிறந்த ஆண்டு- கி.மு. 524

இறந்த ஆண்டு – கி.மு.456

 

–Subham–

இளவயது மேதைகள் (Post No.4139)

PICTURE OF THOMAS FULLER

 

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 8 August 2017

 

Time uploaded in London:- 7-04 am

 

 

Post No.4139

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

 

பாக்யா 21-7-2017 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை (ஏழாம் ஆண்டு 22வது கட்டுரை)

 

மூன்று கறுப்பு நிற பீன்ஸ்களை வெள்ளை நிறமாக்க எத்தனை பீன்ஸ்கள் வேண்டும்?

ச.நாகராஜன்

 

 

‘அனைவருமே ஒரு இளவயது மேதை தோற்பதையே விரும்புகின்றனர். அப்போது தான் நாம் சாதாரணமாக இருப்பதைப் பொறுக்க முடிகிறது!” –  ஹரால்ட் ப்ளூம்

 

         மின்னல் வேகத்தில் கணக்குகளைப் போட்டு அனைவரையும் அயர வைத்த மேதைகளில் ஆப்பிரிக்காவில் 1710ஆம் ஆண்டில் பிறந்த தாம்ஸ புல்லர் (Thomas Fuller) குறிப்பிடத்தகுந்த ஒருவர். இவர் ஒரு நீகரோ. 1724இல் இவர் பிடிக்கப்பட்டு  அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியாவிற்கு அடிமையாக அனுப்பி வைக்கப்பட்டார். 1790ஆம் ஆண்டு இறக்கும் வரை அங்கேயே வாழ்ந்தார்.

 

 

இவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் மனதிற்குள்ளாக ஒன்பது இலக்கங்கள் கொண்ட இரு எண்களை உடனடியாகப் பெருக்கி விடையைக் கூறுவார்.

ஏதேனும் காலத்தின் ஒரு பகுதியைச் சொன்னால் உடனடியாக அதில் எத்தனை விநாடிகள் என்பதைச் சரியாகக் கூறுவார்.

ஒரு குவியலான சோளத்தையோ அல்லது இதர தானியத்தையோ காண்பித்து அதில் எத்தனை தானிய மணிகள் உள்ளன என்று கேட்டால் மிகச் சரியாக விடையைக் கூறுவார்.

 

இந்தத் திறமையைப் பார்த்த அனைவரும் வியந்தனர்.

இதே போல பல இளம் வயது கணிதம் போடும் மேதைகள் உண்டு.

 

ஆண்ட் ரே மேரி ஆம்பியர் (1775-1836) நான்கு வயதாகும் போதே மிக கஷ்டமான கணக்குகளைப் போட்டு அனைவரையும் அயர வைத்தார்.

 

கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் (1777-1855) மூன்று வயதிலேயே தந்தையின் வாராந்திர கூலி வழங்கும் தினத்தில் ஓவர் டைம் கூலி எவ்வளவு தர வேண்டும் என்பதைக் கணக்கிட்டு அனைவரையும் அயர வைத்தார். (திருஞானசம்பந்தர் மூன்றே வயதில், தமிழ் இலக்கணம் தவறாமல், பாடல் பாடியதையும் இங்கு நினைவு கூரலாம்)

 

டப்ளின் நகரின் ஆர்ச்பிஷப்பாகப் பின்னால் புகழ்பெற்ற ரிசர்ட் வேட்லி (1787-1863) நான்கு வயதில் பல கணக்குகளையும் போட்டுப் பார்வையாளரைத் திகைக்க வைத்தார். ஆனால் நாளடைவில் அவருக்கு இந்த சக்தி மெல்ல மெல்ல குறைந்தது.

 

 

       இன்னொரு பிரபல மேதை ஜெரா கால்பர்ன். இவர் அமெரிக்காவில் வெர்மாண்டில் 1812இல் பிறந்தார். இவர் ஒரு ஏழை விவசாயியின் மகன். ஆறு வயதிலேயே அமெரிக்கா நெடுக கணிதத் திறமை காட்ட “டூர் செய்தவர் இவர்.

லண்டனுக்கு எட்டாம் வயதில் இவரை அழைத்து வந்தனர். 8 என்ற எண்ணின் 16வது அடுக்கை – அதாவது 8 என்ற எண்ணை அந்த எண்ணாலேயே எட்டு முறை பெருக்கினால் வரும் எண் என்ன என்று இவரைக் கேட்ட போது 281,474,976,710,656 என்று உடனடியாக விடையைக் கூறினார்.

இவரது திறமையைப் பார்த்த பலரும் இவரைப் படிக்க வைத்தனர்.

 

 

இவர் பின்னாளில் மொழி இயலில் பேராசிரியராக ஆனார். இவர் தனது சுய சரிதத்தையும் எழுதியுள்ளார்.

சாதாரணமாக இப்படிப்பட்டவர்களின் திறமையைப் பரிசோதிக்கக் கேள்விகளைக் கேட்பவர்கள் இடக்கு மடக்காக கேள்வி கேட்டு அவரைத் திணற அடிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொள்வதுண்டு.

 

அதற்கு ஈடு கொடுத்து கால்பர்னும் அவர்களது “பாஷையிலேயே பதிலடி கொடுப்பதும் உண்டு.

நிகழ்ச்சி ஒன்றில் இடக்கு மடக்கு கேள்வியைக் கேட்க முயன்ற ஒரு பார்வையாளர், “மூன்று கறுப்பு நிற பீன்ஸ்களை வெள்ளை நிறமாக்க எத்தனை பீன்ஸ்கள் வேண்டும் என்று வேண்டுமென்றே கேட்டார்.

 

உடனடியாக கால்பர்ன். “மூன்று போதும். அவற்றை உரித்துப் பாருங்கள். உள்ளே வெள்ளையாக இருக்கும் என்று பதில் கூறினார்.

 

அரங்கத்தில் பார்வையாளர்களின் கரகோஷம் அடங்க வெகு நேரமானது.

 

இப்படி இன்னும் ஏராளமானோர் இள வயதிலேயே கடினமான கணக்குகளைப் போட்ட பட்டியலில் சேர்கின்றனர்.

இவர்களால் மட்டும் எப்படி அரிய ஒரு திறமையைப் பெற முடிந்தது, இதற்கு அறிவியல் ரீதியிலான விளக்கம் ஏதேனும் உண்டா?

ஆட்டிடையர்களாக இருந்த சிலருக்கு – எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு – அபூர்வமான இப்படிப்பட்ட கணிதத் திறமை வந்தது எப்படி?

 

இதற்கான விடையைக் காண்பதற்கு உரிய புள்ளிவிவரங்களும் தகவல்களும் போதுமானதாக இல்லை என்பதே அறிவியல் அறிஞர்களின் முடிவு.

படிப்பறிவு இல்லை என்றாலும் கூட இவர்கள் தங்களுக்குத் தாங்களே ஏதோ ஒரு முறையைக் கற்பித்துக் கொண்டனர் என்பது மட்டும் தெரிய வருகிறது

 

இப்போதுள்ள அதி நவீன சூப்பர் கம்ப்யூட்டர்களிம் நூறு இலக்க எண்ணை இன்னொரு நூறு இலக்க எண்ணால் பெருக்கி விடையைத் தர சில மைக்ரோ செகண்டுகளே ஆகிறது என்பது குறிப்பிடத் தகுந்தது.

என்றாலும் மனித மூளையின் மகிமையை விளக்கும் இள வயது மேதைகள் பற்றிய வரலாறு கணித ஆர்வலர்களால் தொகுக்கப்பட்டு அவர்களுக்குத் தர வரிசையும் கூடத் தரப்பட்டுள்ளது.

விந்தையான மனித மூளையின் திறமை தான் நம்மை எப்படி பிரமிக்க வைக்கிறது?!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

 

 பரிணாம தத்துவத்தை முதலில் கண்டுபிடித்த பிரபல விஞ்ஞானியான டார்வினின் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்ப்வங்கள் உண்டு.

அவர் ஒரு விசித்திரமான மனிதர். எதை எடுத்தாலும் ஆராய்ச்சி செய்து பார்ப்பது அவரது சுபாவம்.

 

 

விசித்திரமான மிருகங்களையோ பறவைகளையோ அவர் பார்த்தால் அதன் ருசி எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவல் கொள்வார். ஆமாம், அதைத் தின்றே பார்த்து விடுவார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் இருந்த போதுகோர்முட் க்ளப்’ (Gourmut Club) என்ற சங்கத்தில் அவர் உறுப்பினராக இருந்தார்.அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் வாரம் ஒரு முறை கூடுவர். சாதாரணமாக மெனுவில் இல்லாத மிருகங்களைச் சமைத்துச் சாப்பிடுவர். இப்படி பருந்து, நாரை போன்ற அயிட்டங்கள் அவர்கள் மெனுவில் புதிதாகச் சேர்க்கப்படும்.

 

ஆனால் ஒரு முறை பழுப்பு நிற ஆந்தை ஒன்றை அடித்துச் சாப்பிட்டார். அது அவரது ஆர்வத்தையே கெடுத்து விட்டது.

‘ஐயோஅதைப் பற்றி என்னால் பேசக் கூட முடியாது என்று அவர் நொந்து பேசினார். ஆனால் அந்த பழுப்பு ஆந்தையால் அவரை நோக அடிக்க முடிந்ததே தவிர அறுசுவை உணவின் பால் அவருக்கு இருந்த மோகத்தை மாற்ற முடியவில்லை.

 

ஒரு முறை அவர் பீகிளுக்கு (Beagle) பயணமானார். அப்போது அவர் ஆர்மடில்லோ என்ற தென்னமரிக்க விலங்கு ஒன்றைச் சாப்பிட்டுப் பார்த்தார். அத்துடன் என்ற எலி அணில் போன்ற கொறிக்கும் விலங்குகளில் ஒன்றான அகோடிஸ் (Agoutis)  என்பதைப் பிடித்துச் சாப்பிட்டார். அதன் சுவையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று வெகுவாகப் பாராட்டினார்.

 

  தென் அமெரிக்காவில் படகோனியாவில் அதி வேகமாக ஓடக்கூடிய சிறுத்தையை அடித்துச் சாப்பிட்டார். அங்குள்ள் ரியா பறவையின் சுவை அவருக்குப் பிடித்திருந்தது. அதில் தான் சாப்பிட்டது போக மீதி  இருந்த பகுதிகளை லண்டன்  மிருகக்காட்சி சொஸைடிக்கு அனுப்பினார். அந்தப் பறவைக்கு ரியா டார்வினி (Rhia Darwinii) என்று அவர் பெயரே சூட்டப்பட்டது!

கலபகோஸ் என்ற இடத்தில் உடும்புகளையும் ராட்ஸச ஆமைகளையும் சாப்பிட்டு மகிழ்ந்தார். ஆமையின் சுவை அவருக்கு மிகவும் பிடித்துப் போகவே 48 ஆமைகளைப் பிடித்து பீகிளிலிருந்து திருப்பிச் செல்லும் பயணத்தில் அவற்றைச் சாப்பிட்டார்.

இப்படி ஒரு விசித்திரமான, அதிசயத் தீனிக்கார விஞ்ஞானியை உலகம் பார்த்ததே இல்லை.

(ஆதாரம் தி லைஃப் அண்ட் லெட்டர்ஸ் ஆஃப் சார்லஸ் டார்வின்)

***

 

Aristophanes made fun of Socrates and Portrayed him a Mad Man! (Post No.4138)

Aristophanes made fun of Socrates and Portrayed him as a Mad Man! (Post No.4138)
Compiled by London Swaminathan

 

Date: 7 August 2017

 

Time uploaded in London- 21-07

 

Post No. 4138

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Aristophanes was the greatest comic playwright of ancient Greece. His comedies are the earliest roots of the film, theatre and television comedies we enjoy today. Other ancient writers list 40 plays by Aristophanes; only 11 of these have survived to the present.

 

Very little is known about the life of Aristophanes. Born in the city of Athens, he started writing before he was 20. Aristophanes lived through a period of great political and social change. For 27 years, Athens fought a bitter war  against its archival , the city of Sparta. The eventual defeat of Athens  brought to an end  the greatest period of ancient Greek civilization  and was followed by a time of political instability during which Athens was ruled by dictators and corrupt governments. Aristophanes wrote plays about the changes he saw going around him.

 

Born in the city of Athens he started writing before he was 20.  Aristophanes lived through a period of great political and social change. For 27 years Athens fought a war against its arch rival Sparta. The eventual defeat of Athens brought to an end the greatest of ancient Greek civilization and was followed by a time of political instability during which Athens was ruled by dictators and corrupt governments.

 

Many of Aristophanes’ plays are satires. He criticizes political leaders by making them seem ridiculous; often the leaders are out witted by the hero of the play, who is portrayed as an ordinary citizen.

Aristophanes also made fun of people such as philosophers, teachers and lawyers, whom he felt corrupted society. Nobody was safe from his sharp words even the most respected figures of the time are made to look foolish.

In his play the great Greek Philosopher and teacher Socrates is portrayed as a mad man who has an evil influence on the young people of Athens.

He wrote The Frogs in 405 BCE.

Frogs, or The Frogs is one of Aristophanes’ greatest comedies and is justly celebrated for its wit and keen commentary on Athenian politics and society. It is the last surviving work of Old Comedy and is thus also notable for heralding a passing era of literature. While it is a comedy, it is also a trenchant political satire and expresses Aristophanes’ views on Athenian democracy and the value of poetry.

 

Born in 450 BCE

Died in 385 BCE

Age at death 65

 

Publications

The Acharnians

The Knights

The Clouds

The Wasps

The Peace

The Birds

Lysistrata

Thesmophoriazusae

The Frogs

Plutus

 

Source: Who wrote What When? Reference Book

My old article:

 Aristophanes, Vashistha and the Frog Song in the Rig Veda …

tamilandvedas.com/2016/12/15/aristophanes…

राजेंद्र गुप्ता Rajendra Gupta has left a new comment on your post “Aristophanes, Vashistha and the Frog Song in the R…”

 

XXXX

 

 

FATHER OF TRAGEDY – AESCHYLUS WROTE 80 PLAYS!

 

Aeschylus was one of the greatest playwrights of ancient Greece. He is sometimes called the Father of Tragedy because he is said to have invented it as a form of theatre.

Little is known about Aeschylus’s life because he lived so long ago. Historians think that he was born at Eleusis near Athens. He made several trips to Sicily in Italy during his life time, and it is thought that he died there.

Aeschylus fought in two of the most famous battles of ancient history; the Battle of Marathon in 490 BCE and the Battle of Salamis in 480 BCE. Both were desperate struggles in which the democratic Greek city-states defeated armies of powerful Persian empire, which was trying to conquer them.  experience of these events can be seen in his vivid writing about war and suffering.

 

in Aeschylus’ a time the theatre was an important of community life. Regular play writing competitions were held and the winners were highly regarded. Aeschylus first entered one of these competitions in 472 BCE with his lay The Persians, and he won first prize. Over the course of his career, Aeschylus is thought to have written more than 80 plays, 52 of which won first prizes. Unfortunately, only seven of them survived.

Aeschylus’s plays have strong political messages. he used myths or old stories to make moral points about the events that he saw going on around him. They were so powerfully written that they are still performed today, almost 2500 years later!

Born in 524 BCE

Died in 456 BCE

Age at death: 68

Publications:

The Persians

Seven against Thebes

The Suppliants

Promethus Bound

Oresteia consisting of 3 plays:

Agamemnon

The Libation Bearers

Eumenides

–Subham–

 

கிரேக்கர்கள் நாடகப் பித்தர்கள் (Post No.4137)

Written by London Swaminathan

 

Date: 7 August 2017

 

Time uploaded in London- 16-00

 

Post No. 4137

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கிரேக்கம் எனப்படும் கிரீஸ் நாட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே நாடகங்கள் சிறப்பிடம் பெற்றன. இதற்கு அடுத்தபடி நாடகங்களுக்குப் பெயர்பெற்ற நாடு இந்தியா என்று சொல்ல வேண்டும். ஆனால் இப்போது கிடைக்கும் தகவல்களின் அடிப்படியிலேதான் இந்த தகவல். மேலும் அவர்கள் எழுதிய நாடகங்களில் சில நாடகங்களே கிடைத்துள்ளன. நம் நாட்டில் பாஷா எழுதிய 13 நாடகங்கள் கிடைத்துள்ளன. அதற்குப் பின்னர் காளிதாசன் எழுதிய மூன்று நாடகங்கள் கிடைத்தன.

காளிதாசனுக்கு முன்னர் வாழ்ந்த நீண்ட நாடக ஆசிரியர் பட்டியல் உள்ளது. இவர்கள் எழுதிய நாடகங்களின் பெயர் தெரியாது. மேலும் ஆதிகாலத்தில் நடனம் மூலம் நாடகங்கள் நடிக்கப்பட்டன. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் 11 கூத்துகளும் புராணக்கதைகளே. நடனம்- நாட்டியம் இவை இரண்டும் கலந்தே இருந்ததால் நாம் கிரேக்கர்களையும் விஞ்சி இருக்கக்கூடும்!

 

இரண்டு கிரேக்க ஆசிரியர்கள் மொத்தம் 220 நாடகங்கள் எழுதியதாகப் பிற்காலத்தில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

100 நாடகம் எழுதிய மெனாண்டர் (மீனேந்திரன்)

 

இவர் ஒரு நகைச்சுவை நாடக ஆசிரியர். இவரைப் பற்றி மற்றவர்கள் எழுதிய நூல்களிலிருந்தே தெரிந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக 1957ல் எகிப்தில் பேபைரஸ் புல் காகிதங்களில் இவர் எழுதிய நாடகத்தில் சில வசனங்கள் காட்சிகள் மட்டும் கிடைத்தன. இரண்டு ரோமானிய நாடக ஆசிரியர்கள் இவருடைய நாடகங்களைத் தழுவி நாடகங்கள் எழுதினர்.

 

பணக்கார குடும்பத்தில் பிறந்த மெனாண்ட (Menander) ரின் தந்தை ஒரு புகழ்பெற்ற அரசியல்வாதி என்றும் அறிகிறோம். அவரது உறவினர் ஒருவர், அக்கால நாடக ஆசிரியர்களின் நண்பர். இதன் மூலம் இவருக்கும் உத்வேகம் பிறந்தது.

 

இவர் பிறந்த ஆண்டு – கி.மு.342

இவர் இறந்த ஆண்டு- கி.மு. 291

 

இவர் பிறப்பதற்கு நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே

கிரேக்கர் வாழ்வில் நாடகங்கள் இரண்டறக் கலந்தன.

 

அவ்வப்பொழுது நாடகப் போட்டிகள் நடக்கும். ஆண்டுதோறும் ஒருவருக்குப் பரிசும் அளிப்பர். மெணான்டருக்கு முன் சோக நாடகங்களே எழுதப்பட்டன. அரிஸ்டோபனிஸ் (Aristophones)  என்பவர் பழைய பாணியில் எழுதினார். மெனாண்டர் புதிய பாணியில் எழுதினார்.

இவர் எழுதிய பாணியை பாமர மக்கள் ரசிக்க முடியாது. இவர் எழுதிய ‘மூர்க குணமுள்ள மனிதன்’ என்ற நாடகம் மட்டுமே கிடைத்தது. கோபம், குட்டை முடியுடைய பெண் முதலிய நாடகங்களின் துண்டுகள் மட்டுமே கிடைத்தன.

 

நூறு நாடகங்களை எழுதியும் எட்டே முறை மட்டுமே இவர் பரிசுகள் பெற்றார்.

 

120 நாடகங்கள் எழுதிய சோபோக்ளிஸ் (சோகக் க்ளேசன்)

 

இவர் ஏதென்ஸ் அருகிலுள்ள கொலனஸ் (Colonus) என்ற ஊரில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார். ஏஸ்கைலஸ் (Aeschylus) எழுதிய சோக நாடகங்களால் ஈர்க்கப்பட்டார். நாடகங்கள் மூலம் சமய மற்றும் அரசியல் விஷயங்கள் சித்தரிக்கப்பட்டன. கிரேக்க புராணக் கதைகளைக் கொண்டு அன்றாடப் பிர்ச்சினைகளை விமர்சித்தனர்.

 

சோபோக்ளிஸ் வாழ்ந்த காலத்தில் ஏதென்ஸ்  நகர அரசுக்கும் ஸ்பார்ட்டா நகர அரசுக்கும் இடையே (Peloponnesian பெலபொனேச்சியன்) யுத்தம் நடந்தது. இதனால் இவரது நாடகங்களில் தேசபக்தி சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. இவர் பிற்காலத்தில் சமாதானத்துக்காக வாதடினார். இவர் எழுதிய ஆண்டிகோனெ என்ற நாடகத்தில் போரினால் ஒருவர் மன நிலையில் எழும் தர்ம-அதர்மப் போராட்டம் பற்றி வெகுவாக சிலாகித்து இருந்தார். இத இவரது புகழை உச்சத்துக்கு இட்டுச் சென்றது. மக்கள்  இவரை தளபதியாகவும்,சட்ட சபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுத்தனர்.

இவர் பிறந்த ஆண்டு – கி.மு 496

இவர் இறந்த ஆண்டு- கி.மு. 406

 

ஆண்டுதோறும் நடைபெறும் நாடகப் போட்டியில் கி.மு.486ல் இவர் இடம்பெற்றார். அந்தப் போட்டியில் இவர் முதல் பரிசு பெற்றது ஏதென்ஸ் நகரத்தில் அதிர்வலைகளை எழுப்பியது. அது வரை பரிசுபெற்று வந்த புகழ்பெற்ற ஏஸ்கைலஸை (Aeschylus) இவர் தோற்கடித்ததே இந்த வியப்புக்குக் காரணம்; மேலும் அப்போது சோபோக்ளிசுக்கு வயது 27 தான்.

120 நாடகங்களை எழுதிய இவர் 24 முறை முதல் பரிசு வென்று சாதனை படைத்தார்.

 

இவர் எழுதிய நாடகங்களில் ஏழு மட்டுமே இப்பொழுது கிடைத்தன.

 

இவரைப் பற்றிய ஒரு சுவையான சம்பவம் உண்டு. தனது தந்தைக்கு வயதாகிவிட்டதால் வியாபாரத்தைச் சரியாக கவனிப்பதில்லை. ஆகையால் எல்லாப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்க வேண்டும் என்று சோபோக்ளிசுக்கு எதிராக மகன்கள் வழக்கு தொடுத்தனர். நீதி மன்றத்துக்கு அவர் வந்த போது அபோதுதான் எழுதி முடித்த ஈடிபஸ் அட் கொலனஸ் (Oedipus at Colonus) என்ற நாடகம் இருந்தது. அதைப் பார்காமலேயே ஒப்பித்துவிட்டு எனக்கு வயதுக் கோளாறு இருந்தால் இப்படிச் செய்ய முடியுமா? என்று கேட்டார். அதைப் பார்த்த நடுவர்கள் அசந்தே போய்விட்டனர். அவரை வழக்கிலிருந்து விடுவித்தனர்.

 

–subham—

 

 

ஔரங்கசீப் பயன்படுத்திய கங்கை நீர்! (Post No.4136)

Date: 7 August 2017

 

Time uploaded in London:- 6-51 am

 

 

Post No.4136

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

புனித கங்கை

 துக்ளக், அக்பர் ஆகியோர் போற்றிப் பயன்படுத்திய கங்கை நீர் பற்றிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரை வெளி வருகிறது.

ஔரங்கசீப் பயன்படுத்திய கங்கை நீர்!

 

ச.நாகராஜன்

 

 

முகலாய மன்னர்களில் ஹிந்து பண்பாட்டையும் ஹிந்துக்களையும் அதிகமாக வெறுத்த ஒரு மன்னன் ஔரங்கசீப் (பிறப்பு :14-10-1618 – மறைவு : 20-2-1707).

 

ஹிந்துக்களுக்கு இஸ்லாமின் பெயரால் அவன் ஆற்றிய கொடுமைகளை எழுத கை நடுங்கும். படித்தாலோ உள்ளம் பதறும்.

அப்படி ஒரு கோரமான பிறவி.

 

அவன் காலத்தில் பிரான்ஸை சேர்ந்த வைத்தியரும் யாத்ரீகருமான பெர்னியர் (Francois Bernier  பிறப்பு: 25-9-1620  மறைவு: 22-9-1688) இந்தியாவில் சுமார் 12 வருட காலம் தங்கி இருந்தார்.

ஔரங்கசீப்பைப் பற்றி அதிகாரபூர்வமான தகவல்களை அவர் தனது நூலான ‘டிராவல்ஸ் இன் தி முகல் எம்பயர்’ (Travels in the Mughal Empire) என்ற நூலில் தந்துள்ளார்.

 

அதில் ஒன்று ஔரங்கசீப் கங்கை நீரைப் பயன்படுத்தியது பற்றியது:

 

He (Aurangzeb) keeps in Delhi and Agra…. Kitchen apparatus, Ganges water and all the other articles necessary for the camp, which the Moghal has always about him, as in his capital, things which are not considered necessary in our kingdoms in Europe”

 

டெல்லியோ ஆக்ராவோ, அவர் (ஔரங்கசீப்) சமையலறை உபகரணங்கள், கங்கை நீர் மற்றும் இதர முகாமிற்குத் தேவையான சாமான்களை தலைநகரில் இருக்கிறார் போலவே தனக்குத் தேவையானவற்றை வைத்துக் கொள்கிறார். அவை ஐரோப்பாவில் உள்ள நமது அரசுகளில் தேவை என்று கருதப்படாதவை.

 

பெர்னியரும் கூட கங்கை நீரைப்  பயன்படுத்தியவரே. அதைப் பற்றி அவர் தனது பயண நூலில் தரும் தகவல்கள் இவை:

 

I shall not be exposed to any of these inconveniences and dangers, as my Nawab has with marked kindness ordered that a new loaf of his own household bread and a Sourai of Ganges water (with which, like every person attached to the court, he has laden several camels) should be presented to me every morning. A Sourai is that tin flagon of water covered with red cloth which a servant carries before his master’s horse.”

356ஆம் பக்கத்தில் அவர் கூறுவது இது:

 

“எனக்கு இது போன்ற அசௌகரியங்களோ அல்லது அபாயங்களோ வராது. ஏனெனில் நவாப் அதீதமான அன்புடன் எனக்கு அவருக்குத் தயாரிக்கப்படும் ரொட்டியையும் ஒரு சௌராய் கங்கை நீரையும் எனக்கு ஒவ்வொரு நாள் காலையும் தருமாறு ஆணையிட்டுள்ளார்.(அரசவையில் உள்ள ஒவ்வொருவருக்கும் பல ஒட்டகங்கள் உள்ளன) ஒரு சௌராய் என்பது தனது எஜமானனின் குதிரைக்கு முன்னால் ஒரு வேலையாள் ஏந்திச் செல்லும் சிவப்புத் துணியால் மூடப்பட்ட குவளையாகும்.

 

 

இதிலிருந்து நாம் அறிவது ஔரங்கசீப் மட்டுமல்ல, அவனது அரசவையில் இருந்த பிரபுக்கள் அனைவருமே கங்கை நீரைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது தான்.

 

லாகூரிலிருந்து 1665ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி எழுதிய தனது கடிதத்தில் பெர்னியர் மீண்டும் கங்கை நீரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

 

அவரது குறிப்பு:

 

The fruits, the sweet meats, the Ganges water, the saltpetre with which it is cooled and the betel are kept in four other tents.”  (page 365)

 

“பழங்கள், இனிப்பூட்டிய மாமிசம், கங்கை நீர், அதைக் குளிர வைக்கும் வெடியுப்பு மற்றும் வெற்றிலை ஆகியவை இதர நான்கு கூடாரங்களில் வைக்கப்பட்டுள்ளன.

 

ஹிந்து கலாசாரம். ஹிந்து மதம், ஹிந்துக்கள் – ஆகிய இவற்றை அறவே வெறுத்த முகலாயர்கள் – துக்ளக் முதல் ஔரங்கசீப் வரை – கங்கை நீரை விரும்பினார்கள்.

அதைத் தாங்கள் செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்றார்கள்.

 

 

தங்கள் சமையலுக்கு அதை மட்டுமே பயன்படுத்தினார்கள்.

அது மட்டுமல்ல, அரசாங்கத்தைச் சேர்ந்த செல்வந்தர்களும், பிரபுக்களும், உயர் அதிகாரிகளும் கூட கங்கை நீரையே பயன்படுத்தினர் என்பது மேற்கூறிய பல குறிப்புகளினால் தெரிய வருகிறது.

 

காலம் காலமாகத் தொன்று தொட்டு ஹிந்துக்கள் போற்றி வரும் கங்கா மாதாவை கடுமையான விதிகளை அனுசரிக்கும் இஸ்லாமியர்களும் போற்றி பயன்படுத்தினார்கள் என்பது சரித்திரம் தரும் உண்மை!

 

கங்கை போன்ற ஒரு புனித நதி உலகில் வேறெங்கும் இல்லை என்பதும் உண்மையே!!

***

 

 

 

 

 

A few Anecdotes about Tamil Savant U.Ve.Sa (Post No.4135)

Written by London Swaminathan

 

Date: 6 August 2017

 

Time uploaded in London- 18-40

 

Post No. 4135

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

There is an interesting story about Uthamadhanapuram, a village 3-5 km south of Papanasam in Thanjavur district.

A Maratha king who happened to camp nearby had his food and Thamboolam (betelnut and betelleaves) without knowing it was Ekadasi Day that day – a day of prayer and fasting. As an act of atonement, he established and Agraharam (Street for Brahmins) for 80 Vedic scholars, providing each a house and 10 Velis of land. He named it Uthamadhanapuram, evidently to show how greatly he valued the Dhana (gift)

It was this Uthamadhanapuram that gifted to the world the ‘Uthama’ (great soul) of Tamil learning, Mahamahopadhyaya Dr U V Saminatha Iyer.

xxx

Two of many incidents show what Tamil meant to U Ve. Saminatha Iyer. He had picthed upon a girl for his grandson> She was clever, good looking and good singer. But she did not sing any Tamil song nor did she know Tirukkural (Tamil Veda).

Saminatha Iyer asked her, with some disappointment: How can a girl who does not know Tirukkural become my grand daughter-in-law?”

The girl did acquire the qualification and entered his house triumphantly.

xxx

 

Once a friend wished hi many more years of life to see the arrival of his great grandson.

“I want to live for many years but not for that reason”, he said.

Pointing to the piles of palm leaves in the room, he said with an innocent smile “They are my children. I want to see them in print before I die. If I depart suddenly, I wish to be reborn in this Tamil Land to complete the work. But when I come here in rebirth, I wonder if these people (relatives) would let me in”.

xxxx

Saminatha Iyer needs no new honour. He was a legend in his day – titles and honours were heaped upon him. Mahakavi Bharati sang a verse in praise of him in which he wonders if the foreign rulers with no knowledge of Tamil, honour him with the title MAHA MAHOPADHYAYA, what would have been his fame if he had been born in the days of Pandya Kings!

Addressing him as the king of poets, he tells Saminathan that he may not have money or know the way to enjoy the pleasures of life, but he will live in the hearts of poets as long as Tamil lasts, with words of praise on their lips.

 

XXX

Born on 19 February 1855

Died in 1942

His Guru: Mahavidwan Meenakshisundaram Pillay

Posts held: Adheena Vidwan of Thiruvavadurai

Tamil Teacher at Kumbakonam College

Publications: 100 books including his Autobiography, Edited versions of Sangam Literature, Silappadikaram, Manimekalai and Jeevaka Chintamani.

 

Source:V Sundaram’s article in Indian Express dated 26 December 1994

 

‘வடதிசையதுவே வான் தோய் இமயம்’: புறநானூறு (Post No.4134)

Written by London Swaminathan

 

Date: 5 August 2017

 

Time uploaded in London- 17-46

 

Post No. 4134

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சங்க இலக்கியத்தில் 18 நூல்கள் உண்டு: பத்துப்  பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இரண்டிலும் 18 நூல்கள். இவைகளை பதினெட்டு மேல் கணக்கு நூல்கள் என்றும் பகர்வர். இவைகளில் எதைப் படிக்காவிடிலும் புறநானூற்றின் 400 பாடல்களைப் படித்தாலேயே தமிழர்களின் பெருமையை அறிந்து விடலாம். தமிழ்ப் பண்பாடு என்று எதுவும் கிடையாது என்பதும் விளங்கும். பாரதம் இப்பொழுது உலகில் ஏழாவது பெரிய நாடு. புற நானூற்றுக் காலத்திலோ பாரதம்தான் உலகின் மிகப்பெரிய நாடு. இவ்வளவு பெரிய நாட்டில் பிரதேசத்துக்குப் பிரதேசம் சில புதிய நம்பிக்கைகளும் புதிய வழக்கங்களும் இருப்பது இயல்பே. இது தனிப் பண்பாடு ஆகிவிடாது.

 

என் மனைவி திருநெல்வேலிக்காரி; நான் தஞ்சாவூர்க்காரன்; இருவரும் பிராமணர்கள்; அதிலும் ஒரே பிரிவு- வடமா; ஆயினும் கல்யாணம் நிச்சயமானவுடன் என்ன சீர் செட்டு, எப்படி கல்யாணத்தை நடத்த வேண்டும் என்பதில் விவாதம்!!! எங்கள் வழக்கம் இது, எங்கள் வழக்கம் அது என்று அங்கலாய்ப்பு; பின்னர் ஒரு காம்ப்ரமைஸ் Compromise– இது வேறு வேறு பண்பாடு அல்ல. திருநெல்வேலி அல்வா, பெட்டி வெல்லம், மணப்பாறை முறுக்கு போல சில சிறப்புகளே!

 

இமயம் பற்றியும் கங்கை பற்றியும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பல புலவர்கள் போகிற போக்கில் பாடித் திரிந்தது இந்த நாடு ஒன்று என்பதைக் காட்டும். அது மட்டுமல்ல. வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒன்றுபடுத்தினான் என்று பேசுவோரை முட்டாள்கள் என்றும் காட்டிவிடும். அவன் சாலையும் ரயில் பாதையும் போடுவதற்கு முன்னரே கரிகாலனும் ஆதி சங்கரனும் சேரன் செங்குட்டுவனும் இமயம் முதல் குமரி வரை வலம் வந்த நாடு இது .

 

இதோ முடமோசியார் என்னும் பெண்  புலவர் பாடிய பாடல்:

 

முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே!

ஆழ்க, என் உள்ளம்! போழ்க, என் நாவே!

பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே!-

நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி

குவளைப் பைஞ்சுனை பருகி, அயல

தகரத் தண் நிழல் பிணையோடு வதியும்

வடதிசையதுவே வான் தோய் இமயம்

தென் திசை ஆஅய்குடி இன்றாயின்,

பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே.

–பாடல் 132, முடமோசி

“யாவர்க்கும் முன்னால் நினைக்கப்பட வேண்டியவனான ஆய் வள்ளலை பின்னால்தான் நினைத்தேன். அவ்வாறு நினைத்த குற்றத்தால், என் மனம் அழிந்து போவதாகுக. மற்றவரைப் புகழ்ந்த என் நாவும் பிளவு படுவதாகுக. மற்றவர் புகழைக் கேட்ட என் செவியும் தூர்வதாகுக. நரந்தையையும், நறுமணமுள்ள புல்லையும் மேய்ந்த கவரிமான், சுனை நீரைக் குடித்து பெண்மானுடன் தகர மர நிழலில் தங்குகின்ற வடக்கில் உள்ள வானளாவி உயர்ந்த இமய மலையும் தெற்கிலுள்ள ஆய்க்குடியும் இல்லையானால் இந்தப் பரந்த உலகம் தலை கீழாகப் புரண்டுவிடும்”.

 

இப்படி இமய மலையையும் தெற்கிலுள்ள பொதியம் முதலிய மலைகளையையும் ஒப்பிடுவது பாரத ஒற்றுமையையும் பழங்காலத் தமிழர்களின் புவியியல் அறிவையும் காட்டுகிறது. கங்கை நதியையும் பல புலவர்கள் பாராட்டியுள்ளனர்.

 

புறம். பாடல் இரண்டில் முரஞ்சியூர் முடிநாகனார் “பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே” என்று பாடுகிறார்.

 

இதற்கு 600 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த அப்பர் பெருமான் “ஆயிர மாமுக கங்கை என்று வங்காளத்தில் கடலில் கலக்கும் கங்கை நதி பற்றிப் பாடுகிறார். வங்க தேசத்தில் கடலில் கலக்கும் கங்கை, 1000 கிளைகளாகப் பிரிகிறது. இவை எல்லாம் மேப் , அட்லஸ்(Map and Atlas) இல்லாத காலத்தில் நம்மவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது.

 

இவை எல்லாம் காளிதாசன் பாடல்களிலும் உள்ளன. பூமியை அளக்கும் அளவுகோல் என்று இமயமலையை வருணிக்கிறார் காளிதாசன். அதிசயப்படக்கூடிய பூகோள அறிவு இது!

 

–Subham–

 

அக்பர் விரும்பிய கங்கை நீர்! (Post No.4133)

Written  by S NAGARAJAN

 

Date: 6 August 2017

 

Time uploaded in London:- 5-23 am

 

 

Post No.4133

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

புனித கங்கை

 

அக்பர் விரும்பிய அமரத்தன்மை அளிக்கும் கங்கை நீர்!

 

ச.நாகராஜன்

 

 

முகலாய மன்னர்களில் சற்று வித்தியாசமான மன்னர் அக்பர். அவரது நிர்வாகம் பற்றிய விரிவான குறிப்புகளைத் தரும் நூல் அய்ன் -இ-அக்பரி. 16ஆம் நூற்றாண்டு நூல் இது.

இதன் பொருள் அக்பரின் அரசியல் சாஸனம் என்பதாகும்.

இதை எழுதியவர் அபுல் ஃபாஜி இபுன் முபாரக் என்பவர்..

அது அக்பரின் கங்கை நீர் மீதான விருப்பத்தையும் அதை அவர் எவ்வளவு மதித்தார் என்பதையும் நன்கு விவரிக்கிறது.

அதில் ஒரு பகுதியை ஆங்கிலத்தில் அப்படியே காணலாம்:

 

 

His Majesty (AKBAR) calls this source of life (Ganges Water) ‘the water of immortality’ and has committed the care of this department to proper persons. He does not drink much, but pays much attention to this matter. Both at home and on travels he drinks Ganges water.

Some trustworthy persons are stationed on the banks of that river who dispatch the water in sealed jars.

 

 

When the court was at the capital Agra and in Fattepore Seikree the water came from the district of Saran, but now that His Majesty is in the Punjab water is brought from Hardwar.

 

For the cooking of the food, rain water or water taken from Jumna and Chenab is used, mixed with a little Ganges water; On journeys and hunting parties, His Majesty from his predilection for good water appoints experienced men as water-tasters.”

 

 

அதிகாரபூர்வமான நூலான அய்ன் -இ -அக்பரி தரும் சுவையான தகவல்கள் இவை.

 

அக்பர் கங்கை நீரை அமரத்தன்மை அளிக்கும் நீர் எனக் கூறி வந்தார்.

 

நீரைக் கொணரும் பணியை பொறுப்பான ஆட்களிடம் அவர் ஒப்படைத்திருந்தார்.

 

அவர் அதிகம் நீர் பருகுவதில்லை என்ற போதிலும், நீர் பற்றி அதிக கவனம் செலுத்தி வந்தார்.

 

இல்லத்திலும் பயணங்களிலும் அவர் கங்கை நீரையே அருந்தி வந்தார்.

நம்பிக்கையான் ஆட்கள் கங்கை கரையில் இருந்தனர். அவர்கள் கங்கை நீரை சீலிடப்பட்ட ஜாடிகளில் வைத்து அனுப்பினர்.

 

ஆக்ராவிலோ அல்லது பதேபூர் சிக்ரியிலோ அரசவை நடக்கும் சமயங்களில் நீரானது சரண் மாவட்டத்திலிருந்து வந்தது.

ஆனால் இப்போது அவர் பஞ்சாபில் இருப்பதால் நீரானது ஹரித்வாரிலிருந்து கொண்டுவரப்படுகிறது.

 

சமைப்பதற்கு யமுனா அல்லது ஜீனாப் நதி நீரோ அல்லது மழை நீரோ கங்கை ஜலம் சிறிது அதில் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

 

 

பயணங்களிலும் வேட்டையாடச் செல்லும் போதும் நீருக்கு முக்கியத்துவம் தந்து தகுந்த நிபுணர்களை நீர் சுவையாக இருக்கிறதா என்பதைப் பார்க்க அவர் நியமிப்பார்.

 

மேற்கண்ட சுவையான தகவல்கள் அக்பர் கங்கை நீருக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்து வந்தார் என்பதை விளக்குகிறது.

 

 

யமுனை நீரோ இதர நீரோ – அதைப் பயன்படுத்த நேரும் போது கூட – அதில் சிறிது கங்கை நீரைச் சேர்ப்பது அவர் பழக்கம் என்பதை நோக்குகையில் கங்கையின் புனிதத்தை அவர் போற்றி வந்தார் என்பதும் புலப்படுகிறது. அத்துடன் அமரத்தன்மை அளிக்கும் நீர் என்று அவர் கங்கை நீரைப் போற்றியது அவருக்கு கங்கை பால் இருந்த மதிப்பையும் மரியாதையையும் நம்பிக்கையையும் தெரிவிக்கிறது.

இத்துடன் கங்கையின் புனிதம் பற்றிய தகவல்கள் நிற்கவில்லை.

 

 

ஔரங்கசீப் எப்படி கங்கை நீரை விரும்பினார் என்பதை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.

***

 

 

 

The Man Who Wrote 120 Plays! (Post No.4132)

Compiled by London Swaminathan

 

Date: 5 August 2017

 

Time uploaded in London- 15-38

 

Post No. 4132

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Menander 100 Plays

Menander was a Greek comic dramatist. Though he was known only by reputation, some fragments of his plays were discovered in 1957 in Egyptian papyrus. he lived between 342 BCE and 291 BCE. His comedies with their wit and ingenuity of plot often cornering domestic intrigue, were adapted by Roman comic dramatists Plautus and Terence.

 

Menander was born in Athens. into a wealthy family. Scholars think that his father was a general and prominent politician. Menander probably got his enthusiasm for the theatre from his uncle Alexis, who was a friend of several playwrights.

 

Not much is known about Menander’s life, and very little of his writing has survived. He is remembered because other writers, particularly the Roman writers Terence and Plautus, based many of their plays on his. For centuries after his death Menander was the most popular of ancient Greek writers.

 

Drama had been an important part of Greek society for hundreds of years before Menander was born. Regular competitions were held to find the best play., and almost everybody attended drama festivals to see the entrants. The earliest dramas were tragedies. Later, comedy became more popular and writers such as Aristophanes wrote plays in a style known as Old Attic Comedy (attic came from the region Attica in Greece). Menander became the leading representative of a more sophisticated style known as New Attic Comedy.

 

Although he wrote over 100 plays, Menander won drama prizes only eight times! His comedy was much more subtle and clever than audiences were used to and was not popular with the ordinary public. Though the work of later imitators, however Menander became the inspiration for a style of European drama called comedy of manners, which has been popular since the 17th century.

 

Publications

Only one of Menander’s plays survives in a complete form: ‘The Bad Tempered Man’, performed about 317 BCE. Fragments of other plays have been found. Their titles include ‘Anger’, ‘Afraid of Noises’, ‘The Unpopular Man’ and ‘The Girl with her Hair Cut Short’.

 

xxxx

Sophocles 120 Plays

Sophocles was one of the great playwrights of ancient Greece. He developed the art of tragic drama from the work of the first tragic playwright Aeschylus. Sophocles was born into a wealthy family at Colonus, near the city of Athens. He was well educated and mixed with some of the most powerful figures of his day.

 

Drama was an important part of ancient Athenian society. Plays were treated  as a kind of public political and religious discussion. Playwrights addressed important issues of the day by presenting stories from mythology that contained problems or dilemmas similar to the ones being faced by the city.

 

During Sophocles’ life time Athens fought a long and bitter war, called the Peloponnesian War, with its archival, the City of Sparta. Many of Sophocles plays reflect the patriotic mood of the Athenian people and later, their desire for peace. His play Antigone, which is about moral dilemmas faced by people in a war, so impressed the Athenians that they elected him to be a general in the army.

 

in 486 BCE Sophocles entered the most important Athenian drama competition of the year for the first time. Aeschylus, by then a well-established and respected figure, regularly won the competition, but amazingly the unknown Sophocles beat him to first place. The result caused great excitement in Athens. Sophocles over 120 plays in his life time and went to win the first prize 24 times. When he won for the first time he was only 27 years old. He is credited with having developed tragedy by introducing a third actor and scene painting and ranked with Aeschylus and Euripides as one of the three great tragedians. He lived at the time when Pericles ruled the City of Athens, a period of great prosperity.

 

In his tragedies, heroic determination leads directly to violence unless, as in Philoctetes and Oedipus at Colonus, it contains an element of resignation. Among his other works are a lost treatise on the chorus, and a large surviving fragment of one of his satyr-dramas, Ichneutai

Only seven of his plays survived to the present day.

Born 496 BCE

Died 406 BCE

Age at Death 90

Publications:-

450 BCE- Ajax

442 – Antigone

430 – Oedipus the King

420 – Women of Trachis

413 – Electra

409 – Philocteles

 

Published after he died

401 BCE – Oedipus at Colonus

 

Following anecdotes are from my old posts:

Sophocles (406 BCE) wrote tragedies to the end of his long life. On account of this zeal for writing he seemed to be neglecting his business affairs so his sons summoned him to court that a jury may pronounce him as incompetent to manage his estate on the ground of senility. Then the old man is said to have recited to his judges a play which he has just finished and had in his hands, the Oedipus at Colonous and to have asked whether the poem seemed the work of a man

In his dotage (old and weak period).  After his recitation he was freed by the vote of the jurors.

 

xxx

Words are more powerful than Swords!- Euripides

 

The power of pen is excellently illustrated by an incident in the war between the ancient Greeks and Romans. A group of Athenians were seized and held captive at Syracuse. To help pass the time they enacted many scenes from the plays of Euripides (480 BCE) . Their captors were so favourably impressed by the beauty of the verses that instead of treating their prisoners cruelly as was their custom, they persuaded them to continue their play acting and held them as their as honorary guests.

 

Upon their return to Athens, the former captives went to the home of Euripides and informed him of the effect of his plays upon the supposedly heartless men of Syracuse. So great was their gratitude toward the great dramatist they treated him as though he had actually rescued them in combat on the field of the battle.

 

—Subham–

 

கிரேக்க நாட்டில் இந்துச் சடங்கு! (Post No.4131)

Written by London Swaminathan

Date: 5 August 2017

Time uploaded in London- 13-14

Post No. 4131

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

சங்கரன் கோவில் கொடுங்கலூர் பகவதி கோவில், மதுரை மாரியம்மன் கோவில் முதலிய நூற்றுக் கணக்கான கோவில்களில் பக்தர்கள் ஒரு விநோத காணிக்கை செலுத்துவதுண்டு. உடல் உறுப்புகளில் ஏதாவது நோய் வந்தால் அது குணமாக அல்லது குணம் அடைந்ததற்கு நன்றி தெரிவிக்க அந்த உறுப்பின் உருவத்தை வாங்கி கடவுளுக்குப் படைப்பர். பொதுவாக வெள்ளியிலோ பித்தளையிலோ கண், காது, கால், கை உருவங்கள் இருக்கும். இதே போல குழந்தை பிறக்காதவர்கள் ஒரு குழந்தை உருவத்துடன் தொட்டில் வாங்கி மரத்தில் கட்டும் வழக்கமும் உண்டு. இந்த வழக்கம் சுமேரிய நாகரீகத்திலும் இருந்தது பற்றி எனது ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தேன்.

 

ஜூலை மாதக்  கடைசியில் (2017) குடும்பத்துடன் ஏதென்ஸ் நகரத்துக்குச் சென்று இருந்தேன். உலகப் புகழ்பெற்ற பார்த்தினான் (Parthenon) கட்டிடம் (அதீனா தேவியின் கோவில்) இருக்கும் குன்றுக்கு கீழே புகழ்பெற்ற ஆக்ரோபோலிஸ் மியூசியம் (Acropolis Museum) உள்ளது. அங்கு அரிய கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முதல் மாடிவரையுள்ள முக்கியப் பொருட்களைப் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று தடுத்துவிட்டனர். ஆகையால் மியூசியம் கடைக்குச் சென்று பட அட்டைகளையும் (Picture Cards)  பிரிட்ஜில் (Fridge) ஒட்டுவதற்கான மாக்னெட்/ காந்தங்களையும் வாங்கினேன். எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டின் நினைவாக அந்த நாட்டின் சின்னம் உள்ள பிரிட்ஜ் காந்தம் (Fridge Magnet) வாங்குவது என் வழக்கம். போட்டோ எடுக்கக் கூடாது என்று தடுத்ததால் பட அட்டைகளையும் வாங்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதுவும் நல்லதாகப் போயிற்று.

‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல’ நான் தேடிய ஆராய்ச்சி விஷயங்கள் கிடைத்தன. இந்துக்களைப் போலவே அவர்களும் ஒரு தேவதைக்கு செலுத்திய காணிக்கையின் படம் கிடைத்தது. அதில் கல்யாணம் ஆவதற்காக கன்னிப் பெண்கள் (கன்யா ஸ்த்ரீகள்) செலுத்திய நூற்கும் (Spinning Whorls) சுழல்கள் இருந்தன. நிம்ப் (Nymphe) என்னும் தேவிக்கு செலுத்தப்பட்ட காணிக்கை அவை.

 

தமிழர்கள் அணங்கு என்றும் சம்ஸ்கிருதத்தில் நங்கை (அங்கண், சுராங்கனி) என்றும் இளம் தேவதைகளை அழைப்பர். இந்தச் சொல் கிரேக்க மொழியில் நைம்ப், நிம்ப் (Nymphe, Nymph) என்று திரிந்துள்ளது. நீர் நிலைகள், மலைகள், காடுகள், மரங்களில் அணங்கு  இருப்பதாக சங்க இலக்கியங்களும் சம்ஸ்கிருத இலக்கியங்களும் செப்புகின்றன. கிரேக்கர்களும் இப்படி நம்பினர். கல்யாணம் ஆகாத பெண்கள் நம்மூரில் திருமணஞ்சேரி போன்ற தலங்களுக்குச் சென்று காணிக்கை, வேண்டுதல் செய்வது போல கிரேக்கத்திலும் (Greece) நடந்தது தெரிகிறது.

 

புதிய ஐடியாக்கள் (New Ideas)

 

ஒவ்வொரு நாட்டிற்குச் சென்று வந்த பின்னரும் நான் சில பிஸினஸ் ஐடியாக்(Business Ideas)  களை எழுதி வருகிறேன். இப்போது மனதில் தோன்றும் விஷயங்களை எழுதுகிறேன்:

1.ஏதென்ஸில் ஒரு கடையில் கிரேக்க தத்துவ அறிஞர் படங்களுடன் சீட்டுக் கட்டு ( Greek Philosophers Playing Cards) வைத்திருந்தனர். பிரித்துக் காட்டுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன் என்றேன். சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாடில், பிதகோரஸ், ஹோமர் என்று பல அறிஞர் படங்களையும் பல பொன் மொழிகளையும் பார்த்தவுடன் அதை இரண்டரை யூரோ கொடுத்து  வாங்கினேன். ஆனால் சாக்ரடீஸ் படத்தை ஜோக்கர் (Joker Card) கார்டில் போட்டது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. கிரேக்கர்களுக்கு சாக்ரடீஸ் மீது அவ்வளவு மதிப்பு!!

 

நாமும் இதே போல பல நல்ல விசயங்களுடன் சீட்டுக்கட்டுகள் தயாரிக்கலாமே. கோவில்கள், தலங்கள், அறிஞர்கள், பொன் மொழிகளுடன் சீட்டுக் கட்டுகள் (ஆங்கலத்தில்) தயாரித்தால் வெளி நாட்டினரும் வாங்குவர்.

 

ஐடியா 2

இன்னொரு கடை வாசலில் பொன்மொழிகள் அடங்கிய புக் மார்க்குகள்  (Book Marks) இருந்தன. இத் போல ராமகிருஷ்ண மடத்தில் விவேகாநந்தர் முதலியோரின் புக் மார்க் வாங்கி இருக்கிறேன். ஆனால் ஏதென்ஸில் நல்ல தரமான, வலுவான பிளாஸ்டிக் அட்டையில் 12 கிரேக்க அறிஞர்களின் படங்களுடன் அவர்களுடைய பொன்மொழிகள் கிடைத்தன. அதைப் பல மொழிகளில் மொழி பெயர்த்தும் தந்திருப்பதால் பல நாட்டினரும் வாங்குவர். நாமும் இப்படி பொன் மொழி அட்டைகளை ‘புக் மார்க்’ ஆக விற்கலாமே!

 

தரம் மிகவும் முக்கியம் இல்லாவிடில் வெளிநாட்டினர் வாங்க மாட்டார்கள். மூன்று புக் மார்க் ஒரு யூரோ வீதம் வாங்கினேன்.

 

ஐடியா 3

நான் எந்த நாட்டிற்குப் போனாலும் அந்த ஊரின் முக்கியப் படமுள்ள பிரிட்ஜ் மாக்னெட் (Fridge Magnets) வாங்கி, வீட்டில் பிரிட்ஜில் ஒட்டி வைப்பேன். இது போல பார்த்தினான் படமுள்ள மாக்னெட்டுகளை வாங்கினேன். இது நல்ல பிஸினஸ். வெளி நாட்டு மியூசியங்களில் காபிக் கடைக்கு அருகில் இப்படி கடை வைத்து அதில் பட அட்டைகள், பேனாக்கள், கீ செயின்கள், குழந்தைகளுக்கான டிராயிங் புத்தகங்கள், அறிவூட்டும் நூல்கள் என விற்கிறார்கள். நல்ல வியாபாரம் நடக்கிறது. நாமும் ஒவ்வொரு கோவிலிலும் நல்ல தரமான பொருட்களை விற்றால் நல்ல பணம் கிடைக்கும்.

முன்னொரு காலத்தில் நானும் இந்தியாவில் தொல்பொருட் துறை அலுவலத்துக்குச் சென்று கருப்பு வெள்ளைப் (Black And white) படங்களை வாங்கி இருக்கிறேன். அவைகளை எல்லாம் இப்போது பார்த்தால் அழுகையும் சிரிப்பும் வருகிறது. வெளிநாடுகளைவிட மிகவும் நல்ல கலைப் பொக்கிஷங்களை வைத்துக்கொண்டு அவைகளை விற்பனை செய்யும் திறன் இல்லையே என்று அழுகை. இப்படித் தரக் குறைவான படங்களை அவர்கள் விற்றதையும் அதை நான் வாங்கி பொக்கிஷம் போல வைத்திருந்ததையும் நினைத்து ஒரே சிரிப்பு.

 

ஏதென்ஸ் அக்ரோபொலிஸ் (Acropolis Museum in Athens) மியூசியத்தில் ஒரு யூரோவுக்கு இரண்டு (Picture Cards) அட்டைகள் வாங்கினாலும் அவைகளைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்; அப்படி நல்ல தரம்.

 

சுருக்கமாகச் சொல்லப் போனால், எல்லா சுற்றுலாத் தலங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட கடைகளும் காப்பிக் கடைகளும் இருக்க வேண்டும் அங்கே அந்தந்த ஊருக்கு ஏற்ற படங்களுடன் நூற்றுக்கணக்கான கலைப் பொருட்கள், படங்கள், பிரிட்ஜ் மாக்னெட், ஸ்டிக்கர்களை விற்க வேண்டும்.

 

–subham–