ராம நாம மஹிமை! – 2 (Post No.14,365)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,365

Date uploaded in London – –9 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராம நாம மஹிமை! – 2

6-4-2025 ஶ்ரீ ராமநவமி தினத்தன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

ராம நாம மஹிமை! – 2

ச. நாகராஜன்

நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள்

பன்னிரெண்டு ஆழ்வார்கள் அருளிய பாடல்களில் ராமரைத் துதித்துப் போற்றும் பாடல்கள் ஏராளம் உள்ளன.

நாலாயிர திவ்ய ப்ரபந்தத்திலிருந்து சில பாடல்கள்:

ஶ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த பெருமாள் திருமொழியில் வரும் பாடல்:

மன்னுபுகழ்க் கௌசலைதன் மணி வயிறு வாய்த்தவனே!

தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்து வித்தாய்

செம்பொன்சேர் கன்னி நன் மாமதிள் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே!

என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ.

                           பாடல் எண் 719, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

ஶ்ரீ திருமழிசைப்பிரான் அருளிச் செய்த திருச்சந்த விருத்தம்

ஊனில் மேய ஆவி நீ உறக்கமொடு உணர்ச்சி நீ

ஆனில்மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ

வானினோடு மண்ணும் நீ வளங் கடற் பயனும் நீ

யானும் நீ அதன்றி எம்பிரானும் நீ இராமனே!

                           பாடல் எண் 845,  நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

ஶ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி

பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்

இரவும் நன் பகலும் துதிசெய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை

குரவமே கமழும் குளிர்பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால்

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத திருவல்லிக்கேணி கண்டேனே

                           பாடல் எண் 1077, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி

நீள்கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான்

தாள்கள் தலையில் வணங்கி நாள்கடலைக் கழிமினே

                           பாடல் எண் 2736, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?

புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்றின்றியே

நற்பால் அயோத்தியில் வாழும் சராசம் முற்றவும்

நற்பாலுக்கு உத்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே!

                           பாடல் எண் 3381, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

Aurobindo

 It was not at all Rama’s business to establish the spiritual stage of that evolution—so he did not at all concern himself with that. His business was to destroy Ravana and to establish the Ramarajya—in other words, to fix for the future the possibility of an order proper to the sattwic civilised human being who governs his life by the reason, the finer emotions, morality or at least moral ideals, such as truth, obedience, cooperation and harmony, the sense of humour, the sense of domestic and public order, to establish this in a world still occupied by anarchic forces, the Animal Mind and the powers of the vital Ego making its own satisfaction the rule of life, in other words, the Vanara and the Rakshasa. This is the meaning of Rama and his life-work and it is according as he fulfilled it or not that he must be judged as Avatar or no Avatar.

……Finally it was Rama’s business to make the world safe for the ideal of the sattwic human being by destroying the sovereignty of Ravana, the Rakshasa menace. All this he did with such a divine afflatus in his personality and action that his figure has been stamped for more than two millenniums on the mind of Indian culture and what he stood for has dominated the reason and idealising mind of man in all countries — and in spite of the constant revolt of the human vital is likely to continue to do so until a greater Ideal arises

MAHATMA GANDHIJI

GANDHIJI  stated, “I have accepted all the names and forms attributed to God as symbols denoting one formless omnipresent Ram. To me, therefore, Ram described as the Lord of Sita, son of Dasharatha is the all powerful essence whose name, inscribed in the heart, removes all suffering, mental, moral and physical.”

விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் சிவபிரான் கூறுவது:

ஆயிரம் திரு நாமங்களுக்கு ராம நாமம் சமம்!

ஶ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஶ்ரீ ராம நாம வரானனே

ஶ்ரீ ராமரின் உறுதி மொழி

இறுதியாக ஶ்ரீ ராமர் அளிக்கும் உறுதி மொழியைப் பார்ப்போம்.

ஸக்ருʼதே³வ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே |
அபயம்ʼ ஸர்வபூதேப்யோ த³தா³ம்யேதத்³ வ்ரதம்ʼ மம ||

       (வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம் 18.34)

 “நான் உன்னைச் சேர்ந்தவன்” என்று ஒருமுறை கூறி விட்டால் என்னிடம் வந்து அடைக்கலம் புகுவோர் யாராயினும், அவர்களுக்கு உலகத்தின் அனைத்து உயிர்களிடமிருந்தும் அபயம் அளிப்பேன். இதுவே எனது விரதம்”.

ஜெய் ஶ்ரீ ராம்.

நன்றி வணக்கம்.

***

2 Pictures of 2500 Indian Stamps!- Part 2 (Post.14,364)

Written by London Swaminathan

Post No. 14,364

Date uploaded in London –  8 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

part two

I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

The stamps posted here are MINT (not used); so  more valuable.

I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

–Subham—

Tags– Pictures ,2500 Indian Stamps, Part 2

Tropical Rain Forest Pictures from Australia (Post.14,363)

London swaminathan at the top of the hills.

Written by London Swaminathan

Post No. 14,363

Date uploaded in London –  8 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

My grandsons, son, my wife and my dautgher in law were  far ahead of me.

I visited one or two rain forests in New South Wales state of Australia. We, in a group, walked through the rain forest in the early weeks of 2025. Our destination was a water fall up above the mountains. Though I struggled to climb, I achieved the target with the help of encouraging words from my relatives and friends. In fact, taking pictures along the route lifted my spirit.

I took  lots of pictures in Minnamurra Rain forest. Some of them are already posted in my blogs. Here I post more pictures.

****

A rainforest is a forest characterized by high annual rainfall, typically receiving over 70 inches (180 centimetres) of rain per year, and is known for its dense, lush vegetation and rich biodiversity.

Rainforests are defined by their consistently high levels of precipitation, which supports the growth of a wide variety of plants and animals.

The abundant rainfall and warm temperatures create an environment where trees and other plants thrive, leading to a dense, often multi-layered canopy.

Rainforests are known for their incredible biodiversity, meaning they are home to a vast array of plant and animal species, many of which are found nowhere else on Earth.

Tropical Rainforests: These are found near the equator in the tropics, characterized by warm temperatures and high humidity.

Rainforests play a crucial role in regulating the Earth’s climate, absorbing carbon dioxide and releasing oxygen, and are vital for maintaining the planet’s biodiversity.

Some of the world’s largest rainforests include the Amazon rainforest in South America and the Congo rainforest in Africa.

Rainforests are forests characterized by a closed and continuous tree canopy, moisture-dependent vegetation, the presence of epiphytes and lianas and the absence of wildfire. Liana is a woody climbing plant that hangs from trees, especially in tropical rainforests.

Epiphyte is a  plant that grows on another plant, especially one that is not parasitic, such as the numerous ferns, bromeliads, air plants, and orchids growing on tree trunks in tropical rainforests.

The lianas reminded me of Tarzan and Phantom comics. Tarazon used to jump from one tree to another with the help of giant climbers (lianas).

Walking through the forests gives utter peace. But the cicadas’ noise is unbearable in some places. The smell of the green plants is very pleasant.

Few of us saw the rare lyre birds in the forest. Animals re not seen in daytime. It took three hours for us to complete the trip -up and down. Thank God, there is no monkey problem in the forests!

Because the forests become dark without sunlight no one is allwed after 4 pm.

I carried London Mitraseva bag to many palces giving wide  publicity to the charity.

Giant woody climbers (lianas)

The trees are 150 feet tall. you can epiphytes.

Ephiphytes on Trees

 Minnamurra Rain forest 

–subham—

Tags- Tropical Rain Forest, Pictures ,Australia

சிந்துவெளி நாகரீகத்தில் ஏன் திராவிட எலும்புக்கூடுகள் கிடைக்கவில்லை ? (Post.14,362)

Vedic Rishi in Indus-Sarasvati Valley

Written by London Swaminathan

Post No. 14,362

Date uploaded in London –  8 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரீகத்தில் திராவிட எலும்புக்கூடுகளே கிடைக்கவில்லை! கிடைத்த எல்லாம் பஞ்சாபியர்  போல வாட்ட சாட்டமாக இருக்கின்றன. அதாவது குட்டையான திராவிடர்கள் இல்லை;  மக்களின் உயரத்தை எலும்புக்கூடுகள் மூலம் அறிகிறார்கள்.

ஆண்களின் உயரம் சராசரி Male Average Height: 5’9″ (176 cm)

சுமார் ஆறு அடிகள்!

பெண்களின் உயரம் சராசரி – Female Average Height: 5’5″ (166 cm)

****

பெண்களே அதிகம் !

கிடைத்த எலும்புக்கூடுகள்- 260

பெண்கள் -ஆண்கள் விகிதாசாரம்  122-100

122 பெண்கள் இருந்தால் நூறு ஆண்கள்தான் இருந்திருக்கிறார்கள்!

டி என் ஏ DNA  சோதனை

அங்குள்ள எலும்புக்கூடுகள் மரபணுக்களை Deoxyribonucleic Acid (DNA) சோதித்தத்தில் அவர்கள் பாரசீகம் எனப்படும் ஈரானியர்கள் என்பது தெரிகிறது . அவர்களுக்கும் திராவிடர்களுக்கும் தொடர்பே இல்லை என்பதை இதுவும் காட்டுகிறது .

What race were the Indus Valley people?

Genetically, the ancient Indus Valley people were composed of a primarily Iranian hunter-gatherers (or farmers) ancestry, with varying degrees of ancestry from local hunter-gatherer groups.

Tiger Goddess  in Indus-Sarasvati Valley

மூன்று குற்றவாளிகள்

ஜான் மார்ஷல், மார்ட்டிமர் வீலர், எர்னஸ்ட் மகே என்ற மூன்று வெள்ளைக்காரர்கள் சிந்துவெளி நகரங்களான மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்களை அகழ்வாராய்ச்சி செய்து அவசரப்பட்டு தத்துப்பித்து என்று உளறினார்கள். அவர்கள் கூறிய அனைத்தும் அபத்தம், சுத்த கட்டுக்கதை என்பது இப்போதைய ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மொஹஞ்சசதாரோவில் ஒரே இடத்தில் முப்பதுக்கும் மேலான எலும்புக்கூடுகள் கிடைத்தவுடன் இந்திரனே குற்றவாளி என்று உளறினார்கள்  இது பொய் என்பது அவர்களுடைய டி என் ஏ , DNA, சோதனையில் தெரிந்துவிட்டது .

அது திராவிட நாகரீகம் என்றும் உளறினார்கள்; இப்போது அவர்கள் ஆரியர்களான  ஈரான் நாட்டுகாரர்கள் என்பது தெரிந்துவிட்டது

அங்கு லிங்கம் வழிபட்டது என்று சொன்னார்கள்; அவை லிங்கம் யோனி கற்கள் இல்லை என்றும் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள்

அங்கு பசுபதி முத்திரை கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார்கள்; அது போல மிருகங்கள் சூழ்ந்த தெய்வ உருவம் துபாய் , பஹ்ரைன் முதலிய இடங்களிலும் கிடைத்துள்ளன. அதுமட்டுமல்ல அயர்லாந்து தெய்வம், க      ண்டெர்ஸ்ட்ர்ப் பாத்திரம் ஆகியவற்றிலும் இது போல பசுக்கள்/ பிராணிகள் சூழ்ந்த தெய்வங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அவை ஆரிய தெய்வங்கள் என்றும் தெரிய வந்துள்ளன.

Two Ghosts in Indus- Sarasvati River Civilization 

பெண்கள் தொகை ஏன் அதிகம், ஈரானிய, DNA

 மரபணு ஏன் இருக்கிறது என்பதற்கெல்லாம் சப்பைக்கட்டுகளே அதிகம்; உண்மை தெரியாது ஆரியர் தாக்குதலில் திராவிட ஆண்கள்தான் அதிகம் இறந்திருக்க வேண்டும்; அங்கோ   திராவிடர்களும் இல்லை! அதிக ஆண்களும் இல்லை!!

பொதுவாக தொல்பொருட் துறை அறிஞர்கள், கிடைத்ததை அப்படியே மக்கள் முன் வைப்பார்கள்; பிறகு அதே காலத்திய விஷயங்களை ஒப்பிட்டு இப்படியும் இருக்கலாம் என்பார்கள் ஆனால் மூன்று முட்டாள்களும் இதைச் செய்யத் தவறினர்; உளறிக்கொட்டி கிளறி மூடினார்கள்.

இதற்குப் பின்னர் — நீண்ட இடைவெளிக்குப் பின்னர்– சோவியத் பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள் இது திராவிட மொழி அமைப்பினைச் சேர்ந்தது என்றார்கள்; அதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

மூன்று வெள்ளைக்கார முட்டாள்கள எல்லோரையும் திசை திருப்பி விட்டதால், இன்று வரை யாராலும் எழுத்துக்களை  படித்து அறிய  முடியவில்லை.

****

African Black Womani  n Indus- Sarasvati River Civilization 

இதனால் கிடைக்கும் பாடம் என்ன?

திராவிட- ஆரிய என்ற இன வாத சொற்கள் சம்ஸ்க்ருத, தமிழ் இலக்கி யத்தில் இல்லை. ஆரியர் என்பதை இமயமலை முனிவர்களுக்கும் சிவிலைஸ்ட் – நாகரீகம் மிக்கோர் – என்பதற்கும் வேதங்களும் சங்கத் தமிழ் நூல்களும் பயன்படுத்தியுள்ளன . பிற்காலத்தில் வடக்கு என்பதற்கும் இந்தச் சொல் பயன்பட்டது .

எல்லாவற்றையும் விட வேடிக்கை!!! தமிழனுக்கு சிந்து நதியே தெரியாது ; கங்கை நதியை நிறைய இடங்களில் போற்றும் சங்கப்புலவர்களுக்கு சிந்து என்ற பிரதேசமே தெரியாது ; சிந்து- சரஸ்வதி நதிகள் வேதங்களில் மட்டுமே உள்ளன.

இந்த ஆரிய -திராவிட என்ற மாக்ஸ்முல்லர்- கால்டு வெல் கும்பலின் சொற்களை மறந்து சிந்துவெளி எழுத்துக்களை ஆராய்ந்தால் உண்மை வெளிப்படும்.

இதுவரை நான் சிந்துவெளி நாகரீகம் பற்றி இருபது- முப்பது  புஸ்தகங்களைப் படித்துவிட்டேன். இவர்களில் சிறந்த புஸ்தகம் எழுதிய அஸ்கோ பர்போலாவையும் ASKO PARPOLA-  DECIPHERING THE INDUS SCRIPT லண்டனில் சந்தித்து அவரது சொற்பொழிவினைக் கேட்டேன்; அவர் எழுதிய புஸ்தகத்தைப் புகழ் ந்துவிட்டு “வாட் ஐஸ் தி லேட்டஸ்ட் நியூஸ்” WHAT IS THE LATEST NEWS?   என்றும் கேட்டேன்; இதுவரை ஒன்றும் இல்லை என்றார் .

அவர் எழுதிய புஸ்தகத்தில் கடைசி பக்கத்தில் எழுதிய விஷயம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது

“ஒருவேளைநமது காலத்தில்இந்த சிந்து சமவெளி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கமுடியாமலேயே போய்விடலாம்”.

நாட்டைப் பிரிக்க எண்ணிய மூன்று வெள்ளைக்காரர்களும், நாட்டைக் கைப்பற்ற எண்ணிய சோவியத் கம்யூனிஸ்ட்டுகளும்,  சொன்ன ஆரிய திராவிட வாதங்களை மறந்து ஆராய்ந்தால் ,உண்மை வெளிப்படலாம். இதுவரை ஐம்பதுக்கும் மேலான கோணங்களில் இந்த எழுத்துக்களுக்கு விளக்கம் கூறியுள்ளார்கள்.

FATHER HERAS COMEDY

காமடி – நகைச்சுவை வேண்டும் என்போர் ஹீராஸ் பாதிரியார் சொன்ன மொழிபெயர்ப்புகளைப் படிக்கலாம். அவர் எப்படியாவது தமிழர்களை கிறிஸ்தவ மதத்தில் சேர்த்துவிடலாம் என்று எட்டுக்கட்டினார்; அவர் பாச்சா பலிக்கவில்லை .

பாபா அணுசக்தி கேந்திர BARC  விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியும்  வற்றிப்போன சரஸ்வதி நதியின் நாசா NASA  விண்வெளி அமைப்பு புகைப்படங்களும்,  இவை தமிழர்களுக்கு எல்லாம் முந்தியவை என்பதைக் காட்டுகின்றன.

இறுதியாக தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும்,  சிந்துவெளிக்கும் முந்திய கற்கால நாகரீகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன மத்திய பிரதேசத்தில் நடுக்காட்டிற்குள் பல்லாயிரம் ஆண்டுப் பழமையான பீம்பேட்கா பழங்குடி மக்களின் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த இடத்திற்கு பழங்குடி மக்கள் சூட்டிய பெயர் பீமனின் பாறைகள்!

****

லண்டன் சுவாமிநாதன் எழுதிய முந்தைய கட்டுரைகள்


சிந்து சமவெளி | Tamil and Vedas

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

சிந்து சமவெளி எழுத்துக்களை இதுவரை யாராலும் படிக்க முடியவில்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன் கப்யூட்டரில் போட்டுப் பார்த்து இது திராவிட வகை மொழியாக இருக்கலாம் என்று பின்லாந்து, சோவியத் ஆய்வாளர் கள் சொன்னார்கள். இதுவரை அது ருசுப்பிக்கப்படவில்லை.

சிந்து சமவெளி கட்டுரைகள்

Tamil and Vedas

https://tamilandvedas.com › சிந…

·Translate this page

5 Mar 2020 — ஆல்பா என்பது கிரேக்க மொழியின் முதல் எழுத்து ஒமேகா என்பது கடைசி எழுத்து. கிறிஸ்துவுக்கு கிரேக்க மொழி தெரியாது ; பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவனுக்கு தமிழும் தெரியாது; சம்ஸ்கிருதமும் தெரியாது; அந்த இரண்டு மொழிகளும் ஜீசசுக்கும் …

“சிந்து சமவெளி” நாகரீகம் பெயரை மாற்றுக!!!

Tamil and Vedas

https://tamilandvedas.com › சிந…

·Translate this page

29 Mar 2014 — ஹரியானா மாநிலத்தில் ஹிஸ்ஸார் மாவட்டம் உள்ளது. அங்கே ராகிகாரி என்னும் இடத்தில் இரண்டு பெரிய மணல் மேடுகள் உள்ளன. இவைகளை முறையாகத் தோண்டத் துவங்கிவிட்டனர். இது வரை சிந்து சமவெளி எழுத்துகளுடன் சில சின்னங்கள் கிடைத்திருக்கின்றன …

சிந்து சமவெளியில் இந்திரன்!

Tamil and Vedas

https://tamilandvedas.com › சிந…

·Translate this page

6 Sept 2014 — தேள்— ஒரு மர்ம தெய்வம்! சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012 சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13) கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை …

சிந்து சமவெளியில் அரசமரம்

Tamil and Vedas

https://tamilandvedas.com › சிந…

·Translate this page

16 Aug 2013 — சிந்து சமவெளியில் பல விநோதமான விஷயங்களைப் பார்க்க முடிகிறது. புலிப் பெண் முத்திரை, பேய் முத்திரை, ஆடு, நரபலி முத்திரை, சப்தமாதா முத்திரை, மிருகங்கள் சூழ்ந்து நிற்கும் (பசுபதி) ஒரு கடவுள் முத்திரை, யானை மீது இந்திரன் போல …

சிந்து சமவெளி: பிராமணர் தொடர்பு!

Tamil and Vedas

https://tamilandvedas.com › சிந…

·Translate this page

10 May 2014 — சிந்துவெளி பிரதேசத்தில் பிராமணர் செல்வாக்கு எவ்வளவு இருந்தது என்பதை ஆராய்வதே இக்க் கட்டுரையின் நோக்கம். சிந்து சமவெளி என்றும் சரஸ்வதி நதி தீர நாகரீகம் என்றும் அழைக்கப்படும் மொஹஞ்சதாரோ ஹரப்பா நகர நாகரீகம் யாருடையது என்று …

சிந்து சமவெளியில் இருப்பது சூரியனா இந்திரனா …

Tamil and Vedas

https://tamilandvedas.com › சிந…

·Translate this page

20 Feb 2020 — இப்போது இந்த ஜூபிடர் என்னும் சக்கரத்தாழ்வாரை சிந்து சமவெளி யானை மீதான உருவத்துடன் ஒப்பிடுவோம் ; அவர் தலை மீது காட்டப்பட்ட சக்கரத்தை சூரியன் என்று கொள்ளுவோம். கிணற்றில் கல் விழுந்துவிட்டது………….. INDRA. புதிருக்கு விடையும் …

சிந்து சமவெளி மன்னர்கள் பெயர் எப்படி …

Tamil and Vedas

https://tamilandvedas.com › சிந…

·Translate this page

6 Nov 2014 — சிந்து சமவெளியில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு யாரோ ஆட்சி செய்துள்ளனர். அதுவும் பல நகரங்களில் பலர் ஆட்சி செய்திருக்கவேண்டும். பழைய சுமேரிய, இந்திய நாகரீக வரலாற்றைப் பார்க்கையில் இது தெரிகிறது. இந்தியாவில் 56 தேச மன்னர்கள் …

சிந்து சமவெளியில் கந்தர்வர்கள்!!

Tamil and Vedas

https://tamilandvedas.com › சிந…

·Translate this page

17 Apr 2015 — சிந்து சமவெளிக்கும் கந்தர்வர்களுக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு. இது பற்றி நான் எழுதிய நீண்ட ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கத்தை மட்டும் இங்கே தருகிறேன். soma filter. சிந்து சமவெளி சோமரச வடிகட்டி. 1.கந்தர்வ …

சிந்துசமவெளி

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

சிந்து சமவெளி நாகரீகத்தில் எண் (7) ஏழும் எண் (3) மூன்றும் அதிகமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்விரு எழுத்துக்களும் இந்து மதத்தில் ஆன்மீக விஷயங்களில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சிந்து சமவெளியில் ஏழு பெண்கள் நிற்கும் ஒரு முத்திரை ” …


சிந்து சமவெளியில் மக் டொனால்ட்!

Tamil and Vedas

https://tamilandvedas.com › சிந…

·Translate this page

16 Feb 2015 — Research Article No.1653; Dated 16th February 2015. சிந்து சமவெளி நாகரீகம்- சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் 25 கட்டுரைகளுக்கு மேல் எழுதிவிட்டேன். நான் வலியுறுத்துவது …

சிந்து சமவெளியின் “கொம்பன்” யார்? (Post No. …

Tamil and Vedas

https://tamilandvedas.com › சிந…

·Translate this page

12 Apr 2021 — this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. சிந்து சமவெளி நாகரீகம் என்றும் சரஸ்வதி நதிக்கரை …

சிந்து சமவெளி, கில்காமேஷ் காவியம், உத்தர …

Tamil and Vedas

https://tamilandvedas.com › சிந…

·Translate this page

1 Feb 2019 — Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

சிந்து சமவெளி பாடகர்கள்: ஹாஹா, ஹூஹூ!!

Tamil and Vedas

https://tamilandvedas.com › சிந…

·Translate this page

28 Oct 2014 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. சிந்து சமவெளி பாடகர்கள்: ஹாஹா, ஹூஹூ!! … சிந்து சமவெளி தகல்களுடன் ஒப்பிட்டால் மேலும் பல உண்மைகள் வெளியாகும்.

சிந்து சமவெளி | Tamil and Vedas | Page 2

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

20 Oct 2014 — ஆயிரக் கணக்கான தமிழ் கல்வெட்டுகள் ஸ்வஸ்தி என்ற மங்களச் சொல்லுடன் தான் துவங்கும். சிந்து சமவெளியில் நிறைய ஸ்வஸ்திகா முத்திரைகள் கிடைத்துள்ளன. வட இந்திய பிராமணர்கள் பூணுல் போடுகையில் சிறு பிள்ளைகளின் தலையை மொட்டை அடித்து தலையில் …

சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி

Tamil and Vedas

https://tamilandvedas.com › சிந…

·Translate this page

1 Nov 2012 — சிந்து சமவெளியில் ஒருமுத்திரையில் ஒரு ஆள் ஒரு தெய்வத்தின் முன்னால் மண்டிபோட்டு உடகார்ந்திருக்கிறார். அவர் பக்கத்தில் பூதாகரமான ஒரு

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

2 Aug 2016 — சிந்து சமவெளியிலும் ஏராளமான செங்கற்கள் இருப்பதும் யாக குண்டம் 10,800 செங்கற்களைக் கொண்டமைக்கப்படுவதும் இரண்டு நாகரீகங்களும் ஒன்றே என்றும் புலப்படுத்தும். சிந்து சமவெளியில் காளைகளும் , வேதங்களில் பசு மாடுகளும் …

சிந்துவெளி

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

சிந்து சமவெளி நாகரீகம் என்றும் சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் என்றும் அழைக்கப்படும் நாகரீகம் தொடர்பான அகழ்வாய்வுகளில் அவர்கள் பின்பற்றிய

ரிக் வேதத்தில் ஹரப்பா நகரம்?

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

1 Nov 2014 — கிழக்கு பஞ்சாபில் ராவி நதிக்கரையில் ஹரப்பா நகரம் இருக்கிறது. இப்போது இது பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கிறது. இதுவும் மொஹஞ்சதாரோ என்னும் நகரமும் சிந்து சமவெளி நாகரீகத்தின் மிகப்பெரிய இரண்டு நகரங்கள் ஆகும்.

சிந்துவெளி மர்மங்கள்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

10 May 2014 — சிந்துவெளி பிரதேசத்தில் பிராமணர் செல்வாக்கு எவ்வளவு இருந்தது என்பதை ஆராய்வதே இக்க் கட்டுரையின் நோக்கம். சிந்து சமவெளி என்றும் சரஸ்வதி நதி தீர நாகரீகம் என்றும் அழைக்கப்படும் மொஹஞ்சதாரோ ஹரப்பா நகர நாகரீகம் யாருடையது என்று …

round

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

27 Jan 2015 — … சதுரத்துக்குள் சதுரம் உள்ளது போல முதல் எழுத்துக்கள் உள்ளன. இதுவும் மதிப்புமிக்க, திறமை மிக்க மன்னன், அரண்மனை அல்லது தலை நகரம் (மொஹஞ்சதாரோஹரப்பா) என்னும் பொருளிலேயே பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

புதிய சிந்துவெளி நகரம்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

29 Mar 2014 — அதாவது முந்தைய பெரு நகரங்களான ஹரப்பாமொஹஞ்சதாரோ நகரங்களைவிடப் பெரியது. … முதலில் மொஹஞ்சதாரோ, ஹரப்பாவைத் தோண்டியதால் சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நாகரீகம் என்று பெயர் சூட்டினர்.

Pujya

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

27 Jan 2015 — … ஒரு சதுரத்துக்குள் சதுரம் உள்ளது போல முதல் எழுத்துக்கள் உள்ளன. இதுவும் மதிப்புமிக்க, திறமை மிக்க மன்னன், அரண்மனை அல்லது தலை நகரம் (மொஹஞ்சதாரோஹரப்பா) என்னும் பொருளிலேயே பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

சரஸ்வதி நதி

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

அதாவது முந்தைய பெரு நகரங்களான ஹரப்பாமொஹஞ்சதாரோ நகரங்களைவிடப் பெரியது. … இதுவரை இரண்டாயிரம் இடங்களில் இந்த மாதிரி சின்னங்கள் கிடைத்துவிட்டன. முதலில் மொஹஞ்சதாரோ, ஹரப்பாவைத் தோண்டியதால் சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நாகரீகம் என்று பெயர் சூட்டினர்.

பஹ்ரைன்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

12 Apr 2021 — இவைகள் அனைத்தும் இந்து மதம் தொடர்பான முத்திரைகளே என்று பெரும்பாலான் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தானிலுள்ள மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்களில் கிடைத்த முத்திரைகளில் மிகவும் முக்கியமானது “பசுபதி” முத்திரையாகும். “ …

ஜாகோபி

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

1 Jun 2015 — மொஹஞ்சதாரோ ஹரப்பாவில் பெரிய அகலமான மதில் சுவர்கள் கி. … ஒரு வேளை சேர, சோழ, பாண்டியர்கள் 1800 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மோதிக் கொண்டது போல ஹரப்பாவும், மொஹஞ்சதாரோவும் சண்டை போட்டார்களா?

சிந்துவெளி

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

இவைகள் அனைத்தும் இந்து மதம் தொடர்பான முத்திரைகளே என்று பெரும்பாலான் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தானிலுள்ள மொகஞ்சதாரோ, ஹரப்பா

பசுபதி

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

31 Mar 2021 — பாகிஸ்தானிலுள்ள மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்களில் கிடைத்த முத்திரைகளில் மிகவும் முக்கியமானது “பசுபதி” முத்திரையாகும். “பசுபதி”

சிந்து வெளி: தமிழர்கள் அறிவைச் சோதிக்க இதோ ஒரு பரீட்சை(Post.9443)

Post No. 9443

Date uploaded in London – –31 MARCH  2021     

—subham—

Tags-சிந்துவெளி நாகரீகத்தில் , திராவிட எலும்புக்கூடுகள், சரஸ்வதி நதி ,ஆரிய ஈரானியர்கள் , டி ஏன் எ சோதனை முடிவுகள் 

ராம நாம மஹிமை! – 1 (Post No.14,361)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,361

Date uploaded in London – –8 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

6-4-2025 ஶ்ரீ ராமநவமி தினத்தன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது. 

ராம நாம மஹிமை! – 1

ச. நாகராஜன் 

உலகெங்கிலுமிருந்து இந்த ஞானமயம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே வணக்கம், நமஸ்காரம்.

 ராளமான நூல்கள் ராம நாமத்தின் மகிமையையும் ராமாயண இதிஹாசத்தின் பெருமையையும் எடுத்துரைக்கின்றன.

அனைத்தின் சாரமும் கூறுவது: எல்லையற்ற மகிமை கொண்டது ராம என்ற இரண்டெழுத்துத் திருநாமம் என்பதைத் தான்.

சில நூல்களிலிருந்தும் சில பெரியோர்களின் வாக்கிலிருந்தும் எடுத்துத் தொகுக்கப்பட்ட ராம நாம மகிமை மற்றும் ராமாயணத்தின் பெருமை பற்றி இங்கு பார்க்கலாம்.

வால்மீகி

யஸ்து பூஜ்யந்தே நித்யம் ராமாயணமிதம் நர: I

சுபுத்ர பௌத்ரௌ லபதே வைகுண்டே ஸ்தானமக்ஷயம்II

 உத்தரகாண்டம் 110ம் ஸர்க்கம் ராமாயணத்தில் 23998ம் ஸ்லோகம்

இந்த ராமாயணத்தை பிரதி தினமும் எவனேனும் ஒரு மனிதன் பிறரைப் படிக்கச் செய்கிறான் என்றால் அவன் புத்திரர்கள் பௌத்திரர்கள் இவர்களை உடையவனாய் வைகுண்டத்தில் புனர்ஜன்மமில்லா நிலையைப் பெறுகிறான்.

யம் யம் காம்யதே காமம் ஸ்ருவன் ராமாயணம் நர: I

தம் தம் நித்யமாப்னோதி ராகவஸ்ய ப்ரஸாதத: I I

 உத்தரகாண்டம் 110ம் ஸர்க்கம் ராமாயணத்தில் 23999ம் ஸ்லோகம்

ராமாயணத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் மனிதன் எந்தெந்த மனோரதத்தை விரும்புகின்றானோ அததையே ஶ்ரீ ராகவரது அனுக்ரஹத்தால் நிச்சயமாய்ப் பெறுகிறான்.

துளஸிதாஸர்

துளஸிதாஸரின் ராமசரித மானஸில் இருவரிகள் கொண்ட 6700 ஸ்லோகங்கள் உள்ளன.

அவர் கூறுகிறார்:

ஹே ரகுநாதா! உன்னுடைய ராம நாமத்தை வந்தனம் செய்கிறேன், அக்னி, சூரியன், சந்திரன் ஆகிய மூவருக்கும் ஹேது பீஜாக்ஷரங்களான “ர”, ‘ஆ” “ம”  என்கிற மூன்று எழுத்துக்களின் ரூபமாக நீர் இருக்கிறீர் அல்லவோ! அந்த ராம நாமம் பிரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் ஸ்வரூபமாக இருக்கிறதல்லவா? அந்த நாமமே வேதத்திற்குப் பிராணன் அல்லவா?

“ஹே, பிரபு, நீர் நிர்குணர் என்றும், குணரஹிதர் என்றும் சொல்லப்படுகிறீர். உம்மையே உமக்கு உபமானமாகவும் உமக்கே உரியதும், மிக்க அழகானதும், காதுக்கு இனிமையானதும், கண்களுக்கு இன்பமாகவும், மனத்திற்கு குளிர்ச்சியாகவும் ஆகிய எல்லாம் ஒன்று சேர்ந்து  குணக்கடலாகவும் நீர் விளங்குகிறீர் அல்லவா?

பால காண்டத்தில் 137வது ஸ்லோகம்

எந்த மஹாத்மாவினுடைய உள்ளம் சதா திருமாலாகிற ஶ்ரீ ராம பதாப்ஜங்களில் அனுரக்தமாக லயம் அடைகிறதோ, அந்த மஹாத்மா தான் ஸர்வக்ஞன். அவனே யாவற்றையும் நிச்சய புத்தியினால் அறிந்தவன். அவனுக்குத் தான் எது நியாயம், எது அநியாயம் என்று கலக்கமின்றித் தெரியும். அவன் தர்மாத்மா. அவன் ஸகல புருஷார்த்தங்களையும் மிச்சமின்றி அடைந்தவன். அவன் தான் இகத்திலும், பரத்திலும், சகல கல்யாண குணங்களின் சேர்க்கையுள்ள புண்ய ராசி; அவனே குணோத்தமன். அவனே பரம ஞானி. அவனே குலத்தின் நாயகன். அவனே பூமிக்கு விலக்ஷணமான ஆபரணம். அவனே பண்டிதன். ஹ்ருதி வேத்யனை அறிந்த  மஹா வித்வான். அவனே பவித்ரமான தானங்களைச் செய்த வள்ளல். அவனே தர்ம பாராயணன். அவனே யாவராலும் போற்றத் தகுந்த குலீனன்

 உத்தர காண்டத்தில் 841வது ஸ்லோகம்

கம்பர்

ராம நாம மஹிமை பற்றிக் கூறுவது:

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்

கவிச் சக்கரவர்த்தி கம்பர் – கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14

நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீடு அயல் வழியுமாக்கும் வேரியன் கமலை நோக்கும்

நீடிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய வாகை 

சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே

–    கவிச் சக்கரவர்த்தி கம்பர்

தியாகராஜ ஸ்வாமிகள்

திருவாரூரில் பிறந்த வால்மீகியின் அம்சமாகக் கருதப்படும் தியாகராஜ ஸ்வாமிகள் ஏராளமான தனது கீர்த்தனைகளில் ராம ரஹஸ்யத்தை விண்டுரைக்கிறார்.

அவர் கூறுவதில் ஒன்று:

ஹே ராமா! உன் நாமத்திற்கு ஜய மங்களம். உன் ரூபத்திற்கு ஜய மங்களம். ஆஞ்சநேயர் பற்றிப் போற்றும் உன் பாத கமலங்களுக்கு நமஸ்காரம். பட்டு வஸ்திரங்கள், நவரத்தினங்கள், நவமுக்தாஹாரங்கள் ஆகிய எல்லாவற்றுடனும் விளங்கும் உனது வக்ஷஸ்தலத்திற்கு ஜய மங்களம்.

என்னை மோஹிக்கச் செய்வதும், நளினமானதும் மந்தஸ்மிதமான முக மண்டலத்திற்கு நமஸ்காரம். பங்கஜாக்ஷியான சீதையைத் தழுவின உன் கரங்களுக்கு நமஸ்காரம்.

சுருள் சுருளாக அலைபோல திரண்டு வருவதும் எனது பாபக் கூட்டங்களை அழிப்பதுமான கரும் கேசக்கொத்துக்களுக்கு,  நெற்றியில் தொங்கும் ஊர்த்வ புண்டரங்களுக்கு,  முகுடாமணிக்கு,, புருவ நெற்றிக்கு,, உனது செப்புவாய் இதழ்களுக்கு, எனது தாபங்களை அடக்கின அம்ருத தாரையாகிய ஸத்யவாக்குக்களுக்கு, ப்ரணவாகாராமான விமானத்திற்கும்,, ஈஸ்வர ஜீவாத்மாவைச் சேர்த்து வைக்கும் உன் அஸ்யுத பாதரக்ஷைகளுக்கும், நாங்கள் அடிக்கடி நமஸ்காரங்கள் செய்கிறோம்.

ஶ்ரீ ராம நாமத்தின் மஹிமையைப் பற்றி அவர் கூறுகிறார்:

மனஸா!

ஶ்ரீ ராம பஜன, பர லோக ஸாதனமே

ஸ்மர, லோப, மோஹ, ஆதி பாபுலனு ஸ்மரியஞ்சதே;

ஜனன ஆதி ரோக பயாதுலசே,

ஜகமந்து கல்கு துராஸலசே,

தனய ஆதி பாந்தவுல ப்ரமசே, தகலனு ஈது

கிருதியின் பொருள்:

ஓ, மனமே!

இராம பஜனை  மறுமைக்குச் சாதனம்

காமம், பேராசை, மயக்கம் ஆகிய பாவிகளை நினையாதே..

பிறவி முதலாக நோய்கள் என்னும் பெரிய பயங்களிலும், உலகினில் ஏற்படும் தீய ஆசைகளிலும், மனைவி மக்கள் முதலாக சுற்றமெனும் திகைப்பினிலும் (ராம நாமம்) சிக்க விடாது.

ராமதாபினீ உபநிடதம் விளக்கும் ராமநாம மஹிமை!

நூற்றெட்டு உபநிடதங்களில் ஒன்றான ராமதாபினீ உபநிடதம் ராம நாம மஹிமையைப் பற்றி நன்கு விளக்குகிறது.

இது அதர்வண வேதத்தில் உள்ள 31 உபநிடதங்களில் ஒன்று.

இதில் உள்ள சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.

ஶ்ரீ ராமபூர்வதாபின்யுபநிஷத் என்ற முதல் பகுதியில் வருவது:

யதைவ வடபீஜஸ்த்த: ப்ராக்ருதச்ச மஹாத்ரும:!

ததைவ  ராமபீஜஸ்த்தம் ஜகதேதச்சராசரம் ||

பொருள் : எப்படி ஒரு ஆலின் விதையில் ப்ராக்ருதமான ஆலமரம் உறைகிறதோ, அப்படித்தான் ராம என்னும் பீஜத்தில் இந்த சராசர ப்ரபஞ்சம் உறைகிறது.

ஶ்ரீ ராமோத்தரதாபின்யுபநிஷத் என்ற இரண்டாம் பகுதியில் வருவது:

ஓம் யோ வை ஶ்ரீ ராமசந்த்ர: ஸ பகவான் அத்வைத ப்ரமானந்தாத்மா பூர்ப்புவஸ்தஸ்மை வை நமோ நம: |

பொருள் : எவர் ஶ்ரீ ராமச்சந்திரரோ அவர் தான் பகவான். இரண்டற்ற பரமானந்த ஆத்மா. பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் எல்லாம் அவரே. அவரை மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.

**

Pictures of 2500 Indian Stamps!- Part 1 (Post.14,360)

Written by London Swaminathan

Post No. 14,360

Date uploaded in London –  7 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

The stamps posted here are MINT (not used); so  more valuable.

I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

–Subham—

Tags– Pictures ,2500 Indian Stamps, Part 1

London Swaminathan’s New TAMIL book/s on Tirumanthiram! (in two volumes)

London Swaminathan’s New TAMIL book/s on Tirumanthiram! (in two volumes)

London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are readily available in Pustaka.co.in

Enjoy reading them.. Two Tamil books are printed in two separate volumes.

Here is my latest book:

லண்டன் சுவாமிநாதனின் இரண்டு தொகுதி திருமந்திரம் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

முன்னுரை

திருமூலர் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் திருமந்திரம்  என்ற நூலை எழுதினார் அதிலுள்ள மூவாயிரம் செய்யுட்களில் அவர் தொடாத ஆன்மீக விஷயமே இல்லை . மந்திரம், தந்திரம், எந்திரம், யோகம், ஞானம்,  அஷ்டமா சித்திகள் ,உபநிஷத மஹா வாக்கியங்கள் , அத்வைத சித்தாந்தம், சைவ சித்தாந்தம், அய்யனார் வரையுள்ள இந்துக் கடவுள்கள் என்று ஒரு கலைக்களஞ்சியமே எழுதிவிட்டார். சுமார் பத்து சதவிகித பாடல்களில் ஓம்கார விளக்கம் தந்துள்ளார். மேலும் காயத்ரீ மந்திரத்தை விதந்து ஓதியுள்ளார். ஆன்மீக உண்மைகளை விளக்க வருகையில் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போலவே தாவரம், விலங்குகளையும் பயன்படுத்தியுள்ளார்.

ஆயினும் இரும்பைத் தங்கம் ஆக்கும்-பரிசனவேதி, அஷ்டமா சித்திகள் ஆகியன பற்றி அவர் கூறியதை செய்து காட்டும் பெரியோர்கள் இப்போது இவ்வுலகில் இல்லை. ஆயினும் அந்த விஷயங்களைப் பாதுகாப்பது நமது கடமை;  எதிர்காலத்தில் ஒரு ஆதி சங்கரர் தோன்றி மீண்டும் நமது பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டுவார்.

திருமந்திரத்துக்கு சைவ வழியில் உரை எழுதியோர் ‘சிவ போதையில்’ உரை எழுதியதால் யாருக்கும் எளிதில் விளங்காது. அது மட்டுமல்ல. அதில் நிறைய பிழைகளும் உள்ளன. நல்ல வேளையாக டாக்டர் பி நடராசன் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பு நம் உதவிக்கு வருகிறது. பாடல்களின் பொருள் விளங்கவேண்டும் என்ற ஆர்வத்தில் நூல் முழுதும் அவரது ஆங்கில மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தியுள்ளேன். அவருக்கு நன்றி. பாடல்களுக்கு மட்டும் சைவ சித்தந்த நூல்பதிப்புக்கழக வெளியீட்டைப் பயன்படுத்தியுள்ளேன். நன்றி உரித்தாகுக.

நான் ஏன் எழுதினேன் ?

திருமூலர் ஆன்மீக செயதிகளைத் தருகையில் நிறைய புவியியல் தாவர வியல், வானவியல், இயற்பியல் உவமைகளை பயன்படுத்துகிறார். இவைகளை எல்லாம் அறிவியல் அறிந்தோர் ரசித்துப் படிக்கலாம். வேதங்களைப் போலவே ஏராளமான பாடல்களில் மறைபொருளில் பேசுகிறார். இவைகளைப்  படித்துவிட்டு வெள்ளைக்காரர்கள் வேதங்களை மொழிபெயர்த்து இருந்தால் பிழைகளைத் தவிர்த்து இருக்கலாம். திருமூலர் பசுக்களை எவ்வளவு விதங்களில் பயன்படுத்துகிறார் என்று பார்த்தால், அரவிந்த மகரிஷி வேதங்களுக்குச் சொன்ன  பொருள்தான் சரி என்பது விளங்கும். சுருக்கமாகச்  சொல்லவேண்டுமானால் இந்துக்களின் பரிபாஷையை மறைமுகமாக, மரத்தை மறைத்தது மாமத யானை முதலிய செய்யுட்கள் மூலம் உலகிற்குக் காட்டியுள்ளார்  நான் அறிவியல் நோக்கில் கண்ணோட்டமிட்டது எனது சொந்தக் கருத்துக்கள். அவைகளைப் படித்து உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

செப்டம்பர் 2024

Swami_48@yahoo.com

Swaminathan.santanam@gmail.com

பொருளடக்கம்

அறிவியல் நோக்கில் திருமந்திரம் – ஆராய்ச்சிக்  கட்டுரைகள் (book title)

1.அதிசய தாவரங்கள்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள்

2.மேலும் பல அதிசய தாவரங்கள்   

3.பலாப்பழமும் ஈச்சம் பழமும்!

4.கோரை,ஆரை,சூரை!

5.மூத்திரம் குடிப்பது நல்லது!

6.சூ மந்திரக் காளி வசியம்!   

7.எட்டும் இரண்டும், காயத்ரீ மந்திரமும்

8.மாம்பழம், அத்தி,  நாவல், வாழைப்பழம்!

9.வாழைப்பழம் வாழ்க!

10.நெல் உவமையும் பயிர் உருவகமும் !

11.தினையும் பனையும்!

12.அன்னம், ஆமை, குயில், காகம்!

13.திருமந்திரத்தில் யானை!

14.திருமந்திரத்தில் மேலும் யானைகள்!

!15.பல்லியும் பாம்பும்!

16.கருட மந்திரம் செய்யும் அதிசயம் !

17.பூனையிடம் அகப்பட்ட கிளி! நாயாய்ப் பிறப்பவர் யார்?

.18.திருமந்திரத்தில் அணுகுண்டு

****

19.இரும்பைத் தங்கம் ஆக்கலாம்

20.திருமந்திரத்தில் லென்ஸூம் கண்ணாடியும்

21.திருமந்திரத்தில் வானிலை இயல் புவியியல்

22.கடல் தீ பற்றி திருமூலர் தரும் அதிசய செய்திகள்

23.உலகம் உருண்டை

24.காடு வளர்ப்போம்! கவின் சோலை அமைப்போம்!!

25 ஏழு கடல், 8 எட்டு மலை, 9 கண்டம் பற்றி திருமூலர்

26.திருமூலர் தரும் நோய்கள் பட்டியல்

27.இருதய நோய் பற்றி திருமூலர்

28.திருமந்திரத்தில் பழமொழிகள்

29.திருமந்திரத்தில் அற்புதச் சொற்கள்

30.திருமந்திரத்தில் ஞானானந்தம், ஞான விளக்கொளி,

ஞான நெறி, ஞானக் கூத்து

31.திருமூலரும் தீர்க்கரேகையும்

32.வடக்கில் அடங்கிய வையகம்!

33.திருமந்திரத்தில் அப்பட்டமான செக்ஸ் பாடல்

34.திருமூலரின் அழகிய சொல்லாக்கம்

35.திருமந்திரத்தில் மஹாவாக்கியம்

36.திருமூலரும் ஆதிசங்கரரும்

38.திருமந்திரத்தில் 18 பாஷை மர்மம்

39.திருமந்திரத்தில் ஜோதிடம்

40.பாரதி, திருமூலர், பரமஹம்சர்- வர்ணங்கள் ஒப்பீடு

41.திருமந்திரத்தில் கலர்கள் நிறங்கள்

42.யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை

43.திருமந்திரத்தில் காயத்ரீ மந்திரமும் ஓம்கார விளக்கமும்!

44.திருமூலர் சித்தர் இல்லை; ஆதி சங்கரரரின் சீடர்!

45.பன்றியாய் பிறப்பாயாகுக; திருமூலர் சாபம்!

46.திருமூலர் காட்டும் அதிசய ஐயனார் கோவில்!

47.திருமந்திரத்தில் முருகன்

48.திருமந்திரத்தில் சம்ஸ்க்ருதம், தமிழ்

49.திருமந்திரத்தில் குறளும் கீதையும்

50.நாஸ்தீகர்களுக்கு பயங்கர எச்சரிக்கை

*****

அட்டைப்படத்திலுள்ள திருமூலர் படம் திருவாவடுதுறை ஆதீன நூல்களிலிருந்து எடுக்கப்பட்டது. 

 

About the Author and the Book

Title-  அறிவியல் நோக்கில் திருமந்திரம் – ஆராய்ச்சிக்  கட்டுரைகள் (book title)

IN TWO PARTS

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – September  2024

Subject – Religion

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 9000 articles in English and Tamil and 137+2 Tamil and English Books

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malysia, Singapore, Italy and Greece

*****

காந்திஜிக்குப் பிடித்த சர்ப்பகந்தி மூலிகை (Post.14,359)

Written by London Swaminathan

Post No. 14,359

Date uploaded in London –  7 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

ஆங்கிலத்தில் பாம்புக்கு இரண்டு சொற்கள் உண்டு; ஸர்பண்ட், ஸ்னேக்    ; இரண்டு  சொற்களும் சர்ப்ப, (ஸ்) நாக என்ற  ஸம்ஸ்க்ருதச் சொற்களின்  மருவு. இது இதைக் காட்டுகிறது? உலகிலேயே பாம்பு பற்றி அதிகம் அறிந்தவர்கள் இந்துக்களே. சர்ப்ப கந்தி என்ற மூலிகையின் பெயரில் இந்த சர்ப்பம் வருவதால் இதை எழுதுகிறேன் .

மூலிகை மஹிமை

இந்த ரவுல்பியா செர்பென்டினா மூலிகையை இந்துக்கள் 2500ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திவருகிறார்கள்; காந்திஜியும் தினமும் இதை பயன்படுத்திவந்தார் .

இதன் தாவரவியல் பெயர் – Rauwolfia Serpentina  ரவுல்பியா செர்பென்டினா ; இதிலுள்ள ரசாயனப் பொருட்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது; மனக்கவலையைக் குறைத்து நல்ல தூக்கத்தையும் அளிக்கிறது.

இந்த மூலிகையின் ஸம்ஸ்க்ருதப் பெயருடன் ரவுல்பியா எப்படி ஒட்டிக்கொண்டது ?

லியனார்ட் ராவுல்ப் LEONARD RAWOLF என்ற ஜெர்மானியர் இதை சரக சம்ஹிதையில் கண்டார். இதன் அபூர்வ குணங்களை அறிந்து மேலை உலகத்துக்கு  1558-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார் . அதனால் இந்தப் பெயர் ஏற்பட்டது .

இதன் தமிழ்ப் பெயர் என்ன ?

பாம்புக்களா

சர்ப்பம் என்னும் பாம்புக்கும் இந்த மூலிகைக்கும் என்ன சம்பந்தம் ?

பாம்புக்கடியைப் போக்கும் மூலிகையாக சரகர் இதைக்கு றிப்பிட்டுள்ளார்

சர்ப்பகந்தி இந்தியா எங்கும் வளர்கிறது இதே வகையைச் சேர்ந்த மேலும் நூறு மூலிகைகளையும் தற்காலத்தில் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர்  இதை அமெரிக்கர்களும் பயன்படுத்தத் துவங்கினர் 

காந்திஜி ஏன் பயன்படுத்தினார் ?

இது மன அமைதியை உண்டாக்கி வேதாந்த சிந்தனையில் ஈடுபட உதவியதால் சர்ப்பகந்தி கஷாயத்தை அவர் அருந்தினார்.

இந்த மூலிகையில் ரெஸெர்பின் என்னும் ரசாயன உப்பு Reserpine  அல்கலாய்ட்ஸ் இருக்கிறது; இது நரம்பு மண்டலத்தின் பணியை சமணப்படுத்தி இருதயத் துடிப்பைக் குறைக்கிறது ; முதலில் இதைஎடுத்துக் கொள்வோருக்கு தலைவலி,  தவறான இருதயத்  துடிப்பு வரும். ஆனால் போகப் போக சரியாகிவிடுகிறது

Rauwolfia serpentina (L.)  is also known as Indian snakeroot belongs to the Apocynaceae family.

இதற்கு இந்திய ஸ்னேக்ரூட் என்ற பெயரும் உண்டு. இது தாவரவியலில் அபோசயநேசி குடும்பத்தைச் சேர்ந்தது.

இதில் முப்பது வகையான ரசாயனப் பொருட்கள் உள.

இந்தியாவில் இதற்குப் பல பெயர்கள் உண்டு; அவையாவன

India    Arpa, avulpori, badgo, chandra, covannamilpori, dhan-barua, korengdabai, paathal garda, patalgaruda,saneggara, sarpa jhar, sarpangandh, vado

இதை ஹோமியோபதி மருத்துவத்திலும் பயன்படுத்துகிறார்கள் .

ஏற்றுமதி

சென்ற ஆண்டு ஏற்றுமதி புள்ளிவிவரத்தின்படி இந்தியாதான் இதை அதிகம்  ஏற்றுமதி செய்துள்ளது. இதை அதிகம் வாங்கிய நாடுகள் – ஜெர்மனி, பாகிஸ்தான், இலங்கை ஆகும்

இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஏற்றுமதியில் நிற்பது ருமேனியா  இந்தியா 202  கப்பல்களில் அனுப்பியது ருமேனியா 13 கப்பல்களில்தான் ஏற்றுமதி செய்தது

இது இந்தியா முழுதும் பயிரிடப்பட்டாலும் இமயமலை அடிவாரத்தில்தான் அதிகம் வளர்க்கப்படுகிறது தென்னாட்டிலும் மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் இதை வளர்க்கிறார்கள்.

இதைக் கடையில் வாங்கி சாப்பிடலாமா?

நிறைய கடைகளில் இது கிடைத்தாலும் டாக்டர்களின் ஆலோசனையில்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடக்கூடாது; ஒருவரின்  இருதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகியவற்றை முறையாக அளந்து ,அறிந்து , பின்னர் அவர்கள் ஆலோசனை வழங்குவார்கள் .

–subham—

Tags- காந்திஜி,  பிடித்த,  சர்ப்பகந்தி மூலிகை , பாம்புக்கடிக்கு, ரத்த அழுத்தம், மன அமைதிக்கு, ரவுல்பியா செர்பென்டினா,

RAM NAVAMI GNANAMAYAM BROADCAST PROGRAMME FOR SUNDAY 6-4 -2025

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

6-4-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி 

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

 PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team: Master Akash Ramesh sang.

***

World Hindu News in Tamil  was presented by Vaishnavi Anand from London and Gomathy Karthikeyan from Chennai.

***

Mrs. Brahannayaki Sathyanarayan spoke on  Vaduvur Sri Kothandaramaswamy Temple

***

Bengaluru S Nagarajan spoke on the Greatness of Sri Rama.

****

Special Ram Navami Songs by

Sathyarthi Chandrasekaran (Senior NRPSI Tamil Interpreter (12904); Japanese,English Translator;

Online Tutor (Tamil; Japanese; English; South-Indian Classical Music)

AND

Miss Gowri Karthikeyan, Akash Ramesh sang on Lord Rama .

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர் ஆகாஷ்  ரமேஷ் பாடினார்

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் மற்றும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயன்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர்

திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

தலைப்பு –வடுவூர்  ஸ்ரீ  கோதண்டராமஸ்வாமி கோவில் பற்றி பேசினார்

*****

பெங்களூர் எஸ். நாகராஜன்

ராமரின் பெருமை- பற்றி பேசினார்

****

இன்றைய ராம நவமி சிறப்பு நிகழ்ச்சி:

ஸ்ரீ ராமர் மீதான பாடல்கள், கீர்த்தனைகள், கிருதிகள்

பாடுவோர்- சத்யார்த்தி சந்திரசேகரன் ( ஜப்பானிய- தமிழ் – ஆங்கில  மொழிபெயர்ப்பாளர், ஆன் லைன் சங்கீத ஆசிரியர்) மற்றும் செல்வி கெளரி கார்த்திகேயன்ஆகாஷ்  ரமேஷ் .

****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM ,6-4-2025, Ram Navami BROADCAST ,SUMMARY

சுவிட்சர்லாந்து நாட்டில் புதிய கோவில் (Post No.14,358)

Written by London Swaminathan

Post No. 14,358

Date uploaded in London –  7 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 6-4-2025

 ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும்   வாசித்து வழங்கும் செய்தி மடல்

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் ஆறாம் தேதி 2025-ம் ஆண்டு

****

நேயர்கள் அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துக்கள்

முதலில் ராம நவமி பற்றிய செய்திகள்

மேற்கு வங்க மாநிலத்தில் ராம நவமி

மேற்கு வங்கம் முழுவதும் இன்று ஒரு கோடிக்கும் மேலான  இந்துக்கள் பங்கேற்கும் 2 ஆயிரம் ராம நவமி பேரணிகள் நடக்கின்றன . இதை இருபது இந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது

மாநில பாஜக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி இது பற்றிய தகவல்களை வெளியிட்டார் ,

கடந்த வருடம் ஆயிரம் ராம நவமி பேரணிகள் நடைபெற்றன. இதில் 50 ஆயிரம் இந்துக்கள் கலந்து கொண்டனர். இந்த வருடம், ஒரு கோடிக்கும் மேலான  இந்துக்கள்  2 ஆயிரம் பேரணிகளில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த பேரணிக்கு நிர்வாகத்திடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை. கடவுள் ராமரை பிரார்த்தனை செய்ய எங்களுக்கு அனுமதி வேண்டியதில்லை. நாங்கள் அமைதி காப்போம். ஆனால், மற்றவர்களை அமைதிகாக்க வைப்பது நிர்வாகத்தின் வேலை. இந்த வருட இறுதிக்குள் தன்னுடைய தொகுதியில் சோனாசுரா என்ற இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்றும் சுவேந்து அதிகாரி கூறினார்

சென்ற ஆண்டு ராம நவமி ஊர்வலம் மீது தாக்குதல்கள் நடந்தன ; ஆகையால் மேற்கு வங்க அதிகாரிகள் பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்கள்.
****

ராம ரத யாத்திரைக்கு தடை : அப்பட்டமான ஹிந்து விரோதம் – எச்.ராஜா குற்றச்சாட்டு!

ராம ரத யாத்திரைக்கு காவல்துறையும், தமிழக அரசும் அனுமதி மறுப்பது அப்பட்டமான ஹிந்து விரோதம் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கோவையில் 58 அப்பாவி ஹிந்துக்களை வெடிகுண்டு தாக்குதல் நடத்தி படுகொலை செய்த கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி அல்உமா பாஷாவின் மரணத்தை தொடர்ந்து 2000 காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்தது என்றும்  தமிழகத்தின் பெருநகரங்கள் தோறும் கலாச்சார சீரழிவுக்கும், போதைப்பொருள் பரவலாக்கலுக்கும் வழிவகுக்கும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கும் தமிழக காவல்துறை என்று எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான PFI இயக்கத்துக்கு ஆதரவாக விசிக மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்த மாநிலம் முழுவதும் அனுமதி அளித்த தமிழக காவல்துறை, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் ஷாகீன் பாக் என்கிற பெயரில் கூடாரம் அமைத்து பல நாட்கள் இஸ்லாமிய இயக்கங்கள் தொடர் போராட்டம் நடத்த தமிழக காவல்துறை அனுமதி அளித்தது என்று எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் அயோத்தியாபட்டினத்தில் ராம நவமி தினத்தன்று ராம ரத யாத்திரை நடத்த ராம பக்தர்களுக்கு காவல்துறையும், தமிழக அரசும் அனுமதி மறுப்பது அப்பட்டமான ஹிந்து விரோதம் என எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

மதசார்பற்ற அரசு என்று சொல்லிக்க்கொண்டு ஹிந்துக்களுக்கு மட்டுமே விரோதமாக செயல்படும் முதல்வர் ஸ்டாலினின்  திராவிட மாடல் அரசு. மண்ணின் மைந்தர்களான ஹிந்துக்களை அகதிகள் போல நடத்தும் தமிழக அரசின் ஹிந்து விரோத போக்கும் தமிழக காவல்துறையின் ஹிந்து விரோத நடவடிக்கைகளும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.

*****

திருவாரூர் ஆழித் தேரோட்டம்

திருவாரூரில் நாளை ஏப்.7-ம் தேதி நடைபெற உள்ள ஆழித் தேரோட் டத்துக்கு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும், திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா, கடந்த மார்ச் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரசித் தி பெற்ற ஆழித்தேரோட்டம் நாளை ஏப்ரல் 7-ம் தேதி பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடை பெறவுள்ளது.


ஆசியாவிலேயே பெரிய தேர்:

அலங்கரிக்கப்பட்ட நிலையில் 350 டன் எடை கொண்டதாகவும், 96 அடி உயரம் கொண்டதாகவும் உள்ள இந்த ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக விளங்குகிறது.

இந்த தேரோட்ட நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

உள்ளூர் விடுமுறை:

தேரோட்டத்தையொட்டி ஏப்.7-ம் தேதி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

****

தென்காசி கோவில் கும்பாபிஷேகம் நடத்த கோர்ட் அனுமதி

தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீக்கியுள்ளது.

நாளை ஏழாம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

கோவிலின், புனரமைப்பு பணிகளை முழுமையாக முடிக்கும்வரை கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நேற்றுமுன்தினம் விசாரித்த ஐகோர்ட்டு மதுரைக்கிளை, காசிவிசுவநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நிறைவடைந்து, யாகசாலை பூஜைகள் துவங்கிவிட்டன.

இந்த சமயத்தில் கும்பாபிஷேகத்தை தடை செய்வது சரியாக இருக்காது என்று வாதிட்டார். மேலும், கோவில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டன. கும்பாபிஷேகத்தை நிறுத்துவதற்கான எந்த தேவையும் இல்லை. ஐ.ஐ.டி. குழு ஆய்வு செய்யப்பட்டும் என்று வாதிட்டார். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுகொண்ட ஐகோர்ட்டு மதுரைக்கிளை, தென்காசி காசிவிசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியது.

*****

முருகன் தலங்களில் பங்குனி உத்திரத்   திருவிழா ஆரம்பம்

பழனி மற்றும் கழுகுமலை முதலிய தலங்களில் பங்குனி உத்திரத்   திருவிழா ஆரம்பம் ஆகிவிட்டது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம் . இந்த விழாவின் போது, பக்தர்கள் கொடுமுடியில் இருந்து புனித நீர் எடுத்துச் சென்று, மலைக்கோயிலில் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

ஏப்ரல் 10-ஆம் தேதி,  வள்ளிநாயகி அம்மனுடன் திருமுருகன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதன் பிறகு, மணக்கோலத்தில் வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி உலா வருவார்.

இதே போல

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர பிரமேற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

10-ம் தேதி காலை வைரத் தேரில் சுவாமி கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானை,  விநாயகர் பெருமான் ஆகியோர் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது  12-ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

****

மருதமலை கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

முருகனின் ஏழாம் படை வீடு என்று பக்தர்களால் அழைக்கப்படும் கோவை மாவட்டம் மருதமலையில் சுப்பிரமணியசாமி கோயிலில் மகாகும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதனால் கோயில் படிக்கட்டுகள், மலைப்பாதைகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் பிரசித்திபெற்ற மருதமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. பக்தர்களால் முருகப்பெருமானின் ஏழாவது படைவீடு என இந்த கோவில் அழைக்கப்பட்டு வருகிறது.

கும்பாபிஷேகம் ஏப்ரல் 4 ஆம் தேதி  காலை நடைபெற்றது.

பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் மலைப்படிக்கட்டுகள், அடிவார பகுதியில் ஆங்காங்கே பெரிய அளவிலான எல்.இ.டி L E D திரைகள் அமைக்கப்பட்டு, அதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

******

உத்தரகோச மங்கை கோவில் கும்பாபிஷேகம்

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 4 ஆம் தேதி  காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

உத்திரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி திருக்கோவில், உலகின் பழமையான சிவன் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.  இங்கு மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.

மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.

இங்குள்ள இலந்தை மரம் பழங்காலம் தொட்டு இன்றும் பூத்துக்குலுங்குகிறது. இங்குதான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக கல்வெட்டுக்கள் உள்ளன.

மரகத நடராசர் சிலை உள்ள ஆலயம். இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது.

****

சுவிட்சர்லாந்து நாட்டில் புதிய கோவில்

சுவிட்சர்லாந்து ஓல்ரன் திறிம்பார்க்  தலத்தில்  கோயில் கொண்டுள்ள  அருள்மிகுஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை  ஏப்ரல் 11.ஆம் தேதி  நடைபெறுகிறது அம்பிகை அடியார்கள் கும்பாபிஷேக கிரியைகளை தரிசித்தும் பூர்ணாகுதி  மற்றும் மண்டலாபிஷேக உபயங்களை ஏற்றும் அம்பிகையின் திருவருளை பெற  வேண்டும் என்று கோவில் நிர்வாகிகள் வேண்டுகின்றனர்.

நன்கொடை அனுப்புவதற்கான பாங்கு கணக்கு விவரங்கள் எங்கள் இரண்டு பிளாக்குகளிலும் நாளை வெளியாகும்.

****

மத்தியப்பிரதேசத்தில் கோவில் நகரங்களில் மதுபானத்துக்குத் தடை

மதுபானத்திற்கு கோவில் நகரங்களில் மத்திய பிரதேச அரசு விதித்த தடை ஏப்ரல் முதல் தேதி முதல் செயல்முறைக்கு வந்துவிட்டது

மத்திய பிரதேச அரசு, மாநிலம் முழுவதும் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு முக்கிய படியாக, 19 முக்கிய நகரங்களில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மோகன் யாதவ் இந்த முடிவை  முன்பே அறிவித்து இருந்த தார். முதல் கட்டமாக ஆறு நகராட்சிகள், ஆறு நகர பேரூராட்சிகள் மற்றும் ஆறு கிராம பஞ்சாயத்துகளில் மது விற்பனை தடை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மாநிலத்தின் 19 மத வழிபாட்டுத் தலங்களில் மது விற்பனையைத் தடை செய்வதற்கான மத்தியப் பிரதேச அரசின் முடிவு குறித்து துணை முதல்வரான ஜெகதீஷ் தேவ்தா சில கருத்துகளைப் பகிர்ந்ததார் .

“இந்த முடிவுக்கு மரியாதைக்குரிய முதல்வருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசாங்கம் படிப்படியாக மது விலக்கை நோக்கி நகர்ந்து வருகிறது. பொருளாதார இழப்புகள் ஏற்படும் என்றாலும், இது ஒரு பாராட்டத்தக்க நடவடிக்கை”, என்று கூறிநார்

தடை அமல்படுத்தப்படும் நகரங்கள்: உஜ்ஜைன், மைஹார், டாடியா, பன்னா, மண்டலா, முல்தாய், மந்த்சௌர், ஓர்ச்சா, சித்ரகூட், அமர்கண்டக், மகேஷ்வர், ஓம்காரேஷ்வர், மண்டலேஷ்வர், சல்கான்பூர், பந்தக்பூர், குண்டல்பூர், பர்மன்கலா, லிங்கா, பர்மன்குர்ட் போன்ற பகுதிகளில் முதல் கட்டமாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது  *****

ஹிந்து கடவுள் குறித்து அவதுாறு: கேரள கம்யூ., எழுத்தாளரால் சர்ச்சை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே ஹிந்து கடவுளை மா.கம்யூ., ஆதரவு எழுத்தாளர் சீயான்குமார் அவதூறாக பேசியதாக பா.ஜ., மா.கம்யூ., தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

அருமனை அருகே புண்ணியம் பகுதியில் மா.கம்யூ., சார்பில் விளையாட்டுப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த மா.கம்யூ., ஆதரவு எழுத்தாளர் சீயான் குமார் பரிசு வழங்கி பேசினார்.

அப்போது ஹிந்து கடவுள் குறித்து அவர் அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்து திரும்பிய எழுத்தாளரின் காரை பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் வழிமறித்தனர். மா.கம்யூ., தொண்டர்களும் அங்கு திரண்டனர்.

இரு தரப்பினரும் பரஸ்பரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது கைகலப்பு ஏற்பட்டது. இதில் ராபின்சன் 30, என்பவர் காயமடைந்தார். தகவலறிந்து வந்த அருமனை போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்

விழாவில் பேசப்பட்ட ஆடியோ பரிசோதிக்கப்படும் என்றும், அதில் ஹிந்து கடவுள் பற்றி அவதூறு பேசியிருந்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டி.எஸ்.பி., உறுதி அளித்தார். இதையடுத்து இருதரப்பினரும் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

****

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் வெளியீடு

பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகளுக்காக உலக நாடுகள் இந்தியாவை எதிர்நோக்கி இருப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ‘சிவதாண்டவ ஸ்தோத்திர’ நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அனைவரிடமும் தெய்வீகத்தை காண வேண்டும் என்பதே நமது கலாச்சாரம் என்று அவர் குறிப்பிட்டார்.

நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே நன்மை பயப்பதாகவும் அவர் கூறினார். உலகை கட்டியெழுப்ப அவை மிகப் பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறிய மோகன் பகவத், நமது வேதங்களை மறுகட்டமைப்பது அவசியம் என்றும் சுட்டிக் காட்டினார்.

*****

சோழர் கால கற்றளி கண்டுபிடிப்பு

முதலாம் பராந்தகச் சோழர்  காலத்தில் எழுப்பிய 1100 ஆண்டு பழமையான கற்றளிக் கோயில் கட்டுமானங்கள் கல்வெட்டுகள் சிற்பங்கள் புதுக்கோட்டை   பெருங்களூர் அருகே மாந்தாங்குடி கிராம எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெருங்களூர் அருகே, புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையருகே மாந்தாங்குடி எடுத்தடிமேட்டில்  முதலாம் பராந்தகச் சோழரின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் எழுப்பப்பட்ட கற்றளிக் கோவிலின் சிற்பங்கள், கட்டுமான சிதிலங்கள், கல்வெட்டுகள் ஆகியன புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

கற்றளி என்றால் கல்லால் கட்டப்பட்ட கோவில் என்று பொருள்.

முற்கால சோழர் கலைப்பாணியில் முருகன், துர்க்கை, பிரம்மா மற்றும் இடுப்பளவு உடைந்த நிலையில் ஒரு சிற்பம், மூன்று நந்தி சிற்பங்கள், யாளி வரிசை, ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டின் துண்டுப் பகுதி ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும்   வாசித்த செய்தி மடல்

அடுத்த ஒளிபரப்பு

ஏப்ரல் 13- ம் தேதி லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும்

வணக்கம்.

—subham—

Tags- ஞானமயம் , உலக இந்து செய்திமடல், 6-4-25