Foreigners from different countries attended the Durga Sapta Sati Purvanga workshop for four days in Wembley, London. They recited Durga Suktam, Devi Mahatmyam, Ratri Suktam, Kilaka Stotram etc for four days. I attended the concluding function along with the priest London Kalyanji. Sai devotees made good arrangement for the foreign delegates. Food was served all the four days for over 25 delegates. I gave my English books to the foreign delegates.
DURGA SAPTA SATI WORK SHOP IN LONDON WITH DEVOTEES FROM USA, GERMANY, CZECH, CROATIA, SINAGAPORE, UK, AND MANY OTHER COUNTRIES WAS HELD FOR FOUR DAYS AND IT CONCLUDED TODAY AT WEMBLEY 1-10-2013. LONDON KALYANJI DID THE PUJA FOR FOREIGNERS. LONDON SWAMINATHAN ATTENDED IT AND TOOK PICTURES.
–subham—
Tags —Durga Sapta Sati, London Workshop, Foreign delegates, London swaminathan
பிரிட்டனில் உள்ள சங்கமம் (Sangamam UK) என்ற தமிழ் அமைப்பின் ஆண்டுவிழா நேற்று ரெடிங் Reading நகரில் நடந்தது. 150 தமிழர்கள் பங்கு கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். தமிழக ஆளுநர் ரவி அவர்கள் On line ஆன் லைன் மூலமாக சிறப்புரை ஆற்றினார்.
ரெடிங் READING நகர் லண்டலிலிருந்து ஒன்றரை மணி தூரத்தில் உள்ளது.
வந்தவர்கள் அனைவரும் மூன்று குழுக்களாகப் பிரிந்து மூன்று தலைப்புகளில் விவாதம் நடத்தினர் பாரதம் ஒரே நாடு; அனைவரும் ஒரு தாய் மக்கள்; இந்து மதப் பண்பாடுகளைக் பாதுகாத்துப் பேணுவதில் தமிழர்களின் பங்கு தலையாய பங்கு என்பதை எல்லா குழுக்களில் பேசியோரும் வலியுறுத்தினர் .
நிறைய சிறுவர் சிறுமியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் , நடனம் இசைத்துறைகளில் தமிழர்கள கொடுத்த பங்களிப்பையும், பாரதப் பண்பாட்டையும் காட்டுவதாக அமைந்தன அவர்களுக்கு இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் முஸ்லீம், கிறிஸ்தவ சிறுவர், சிறுமியரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது . நானும் நிகழ்ச்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன்
Chief Guest London Swaminathan distributing certificates
சமீப காலமாக தமிழ்ப் பண்பாட்டையும் , இந்து மதத்தையும் அழி க்கப் புறப்பட்ட வாட்டிகன் VATICAN பக்தர்களுக்கும் தேச விரோத சக்திகளுக்கும் சாவு மணி அடிப்பது போல இருந்தது இறுதியில் கேட்ட சிறப்புரை. அதை நிகழ்த்தியவர் டாக்டர் ரவீந்திர சுரேங்கே . அவர் தமிழ் நாட்டில் பல்லாண்டுகள் வசித்த மராட்டியர். இப்பொழுது இங்கிலாந்தில் வசிப்பவர் . சங்கமம் அமைப்பில் முக்கியப்பொறுப்பு வகிப்பவர் .
அவர் சொற்பழிவில் சொன்னார்:
“முதலில் பஞ்சதந்திரக் கதை ஒன்றை சொல்கிறேன். அதன் நீதியைக் கடைசியில் பார்ப்போம் . ஒரு காட்டில் வேட்டை ஆடுபவன் பறவைகளைப் பிடிக்க வலை விரித்து அதன் கீழே தானியங்களைத் தூவியிருந்தான் எல்லாப் பறவைகளும் தானியத்ததைத் தின்னும்போது கால்கள் சிக்கிக் கொண்டன. ஒவ்வொரு பறவையும் பலம் கொண்ட மட்டும் சிறகடித்தும் வலையிலிருந்து மீள முடியவில்லை .
அதிலுள்ள ஒரு புத்திசாலிப்பறவை நாம் எல்லோரும் சேர்ந்து முயற்சிப்போம் என்று சொல்லி 3….2…1.. என்று சொன்ன மாத்திரத்தில் எல்லாப் பறவைகளும் சிறகுகளை அடிக்கவே வலை பிய்த்துக் கொண்டது; அனைத்தும் பறந்து சென்று, எலி அரசனின் உதவியை நாடின . எலிகள் அந்தப் பறவைகளின் வலைகளைக் கடித்துத் துண்டிக்கவே பறவைகள் விடுதலை பெற்றன .
இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன். ஒரு பெரிய காளை மாட்டின் மீது ஒரு கொசு வந்து உட்கார்ந்தது ; அது ஏதோ அந்தப் பெரிய மாட்டினுக்குத் தொல்லை கொடுப்பதாக நினைத்து பெருமைப்பட்டது; அந்த மாடு வாலை அசைத்தவுடன், அது மாட்டின் காதுக்கு அருகில் வந்து கிசு கிசுத்தது ; பார்த்தாயா உன் வால் அருகில் உட்கார்ந்தேன் ; உன் வாலை அசைத்தேன்.
மாடு சொன்னது; அப்படியா நீ உட்கார்ந்ததே எனக்குத் தெரியாதே; அந்த உணர்வு கூட எனக்கு இல்லையே என்று; கொசுவும் ஒன்றும் செய்ய முடியாது என்று பறந்து போயிற்று; இப்போது சிலர் இந்து மதத்தை ஒழிப்பேன் என்று கிளம்பியிருக்கிறார்கள். அவர்கள் பெரிய காளை மாட்டின் மீது உட்கார்ந்து பறந்தோடிப்போன கொசுக்கள் போன்றவர்கள். இந்து மதம் சனாதனம் ஆனது. அதாவது என்றும் இருப்பது இதை யாரும் அசைக்க முடியாது.
“நான் முதலில் தங்கிய வீட்டின் அருகில் தினமும் மலையில் சினிமா நடக்கும் கொட்டகை இருந்தது. அங்கு தினமும் ஒரு தமிழ்ப் பாடல் ஒலிக்கும் அதை ஆறு ஆண்டுகள் கேட்டுக் கேட்டு மனப்பாடம் ஆகிவிட்டது. அது பிள்ளையார் துதி. திரைப்படங்களும் கூட கணேஷ் வந்தனத்துடன் துவங்கியது, நாடு முழுதும் வழிபடும் தெய்வங்களும் ஒன்று என்பதைக் காட்டியது. துவக்கத்தில் எல்லாம் வேறு போலவும் நாம் புதிய இடத்திற்கு வந்து இருக்கிறோம் என்ற உணர்வும் இருந்ததது. அவர்கள் பேச்சில் பயன்படுத்திய ஸம்ஸ்க்ருத சொற்களைக் கேட்டபோது இன்னும் நெருக்கம் ஏற்பட்டது . இதே போல வரலாற்றைப் படித்தாலும் தமிழ் வணிகர்கள் சென்ற இடமெல்லாம் கோவில்களைக் கட்டியுள்ளனர். சீனாவில் கூட கல்வெட்டும் தமிழர் அமைத்த கோவிலும் உள்ளது
ராஜேந்திர சோழன் தென் கிழக்கு ஆசியாவில் பல இடங்களை வென்று இந்துப் பண்பாட்டினை அங்கெல்லாம் நிறுவினான் பல மொழிகளில் பாடும் பாடல்களும் பாரதத்தின் பல பகுதிகளின் சிறப்பை இணைத்துப் பாடுகின்றன.
சமீபத்தில் ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் வருத்தமுள்ள நிகழ்சசி நடந்தது. இறந்து போனவர் கேரளத்தைச் சேர்ந்தவர். இறுதிச் சடங்கை செய்ய வந்தவரோ பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சாஸ்திரி அவர் சொன்ன ஸ்லோகம் :
கங்கே ச யமுனே சைவ கோதாவரீ சரஸ்வதி.
நர்மதே சிந்து காவேரீ ஜலே அஸ்மின் ஸன்னிதிம் குரு.
गंगे च यमुने चैव गोदावरी सरस्वति |
नर्मदे सिन्धु कावेरी जले अस्मिन् सन्निधिं कुरु ||
இதிலும் பாருங்கள் ; கங்கை முதல் காவேரி வரை வருகிறது; ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக சொல்லும் ஸ்லோகங்களும் ஒரே நாடு ஒரே பண்பாடு என்பதைக் காட்டுகிறது .
இப்போது நான் முதலில் சொன்ன கதையின் நீதியை, செய்தியைக் காண்போம் எல்லாப் பறவைகளும் சேர்ந்து முயற்சித்தபோது அவைகளைக் கட்டிப் பிணித்த வலை பிய்ந்தது . அது போல இந்துக்கள் அனைவரும் சேர்ந்து முயற்சித்தால் அவர்களுக்கு யாரும் தீங்கிழைக்க முடியாது “
பல் மொழி வித்தகரான ரவீந்திர சுரேங்கே . இடை இடையே பல மொழிகளில் இருந்து பாடல்களையும் எடுத்துக் காட்டினார் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் சுவை ஊட்டும், உணர்ச்சியூட்டும் உரையாக அமைந்தது அவர்தம் சொற்பொழிவு .
ரெட்டிங் READING நகரில் நடத்திய தமிழர் விழா வந்தே மாதரம், பாரத வந்தே மாதரம் என்ற சங்கப் பாடலுடன் இனிதே நிறைவு அடைந்தது. காலை பத்து மணி முதல் மாலை 5 வரை நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகளும் பெரியோர்களும் அலுக்காமல் சலிக்காமல் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது
சங்கமம் சார்பில் அகில உலக தமிழ் சங்கமம் கோவையில் நடைபெற உள்ளது உலகத் தமிழர்கள் ஒன்று கூடும் மாபெரும் விழாவாக அது அமையும் என்பதில் ஐயமில்லை; கவர்னர், மத்திய அமைச்சர்கள் ஆகியோரும் அதில் பங்கேற்கவுள்ளனர்.
—subham—
Tags- ரெட்டிங் , சங்கமம், தமிழர் விழா, கவர்னர், ரவீந்திர சுரேங்கே
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 14
25.வெயிலுகந்த பிள்ளையார் கோவில், நல்லூர், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்திலுள்ள கைலாசநாத பிள்ளையார் கோவிலை நேற்று தரிசித்தோம் .
நல்லூரிலுள்ள புகழ் பெற்ற பிள்ளையார் , வெயிலுகந்த பிள்ளையார் ஆவார்.
பதிமூன்றாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய மன்னன் சிங்கை ஆரியன். அவன்தான் ஆர்ய சக்ரவர்த்தி வம்சத்தின் முதல் மன்னன். யாழ்ப்பாண நல்லூரை நிறுவி, நடுவில் முருகன் கோவிலை நிறுவிய காலத்திலேயே நான்கு திசைகளிலும் 4 கோவில்களைக் கட்டினான். கிழக்கு திசையில் அவன் கட்டிய கோவிலே புகழ்பெற்ற வெயிலுகந்த பிள்ளையார் கோவில் ஆகும். இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் மூலஸ்தானம் வரை சூரிய ஒளி செல்வதாகும். சூரிய பகவான் தினமும் விநாயகரை வழிபடுகிறார். சூரிய ஒளி தினமும் மேலே படுவதால் வெயில் உகந்த என்ற அடை மொழியுடன் சிறப்பிக்கப்படுகிறார்.
1621ம் ஆண்டில் மத வெறி பிடித்த போர்ச்சுகல் நாட்டின் கிறிஸ்தவர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பறினார்கள் . அவர்கள் இடித்ததுத் தள்ளிய 500 க்கும் மேலான இந்து ஆலயங்களில் இதுவும் ஒன்று.
ஆயினும் இந்து தர்மத்தின் ஒரிஜினல் ORIGINAL பெயர் சநாதன தர்மம்; அதை யாராலும் அழிக்க முடியாது. அதற்குச் சான்று யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில்கள். கிறிஸ்தவர்கள் இடித்த அத்தனை கோவில்களும் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றன ஆண்டுதோறும் விழாக்கள் நடத்தப்படுகின்றன
இப்போது நாயன்மார் கட்டுவில் உள்ள இந்தக் கோவிலில் பத்து நாள் உற்சவம் பங்குனி உத்தரத்தன்று தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடைகிறது.
Xxxxx
26. இணுவில் பரராஜ சேகர பிள்ளையார் கோவில்
யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் நகரிலிருந்து காங்கேசன் துறைக்குச் செல்லும் பாதையில் 4 மைல் தொலைவில் இணுவில் கிராமம் அமைந்துள்ளது . இங்கு குறைந்தது 15 கோவில்கள் இருக்கின்றன.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா தந்த அற்புத விளக்கங்கள்!
ச.நாகராஜன்
மஹேந்திர நாதர் தன்னை அணுகுவோரிடம் இறைவனைப் பற்றியும் அவனது அற்புத லீலைகளையும் பரமஹம்ஸரின் அருள் வாக்குகளையும் பற்றியே பேசுவார்.
தினசரி நடக்கும் உரையாடல்களில் அவர் திருவாய் மலர்ந்தருளும் ரகசியங்கள் எத்தனையோ!
காயத்ரி மகத்துவம்!
பரமஹம்ஸர் காயத்ரி மஹிமையைப் பற்றி கூறுவார் அடிக்கடி.
காயத்ரியானது சந்த்யாவை விட மேலானது. காயத்ரியை விட மேலானது ஓம்காரம். சந்த்யா காயத்ரியில் அடங்குகிறது. காயத்ரி ஓம்காரத்தில் அடங்குகிறது. அதாவது ஒருவர் காயத்ரியைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தால் அவருக்கு சந்த்யா தேவை இல்லை.தொடர்ந்து இடைவிடாமல் ஒருவர் ஓம்காரத்தை ஜபித்துக் கொண்டிருந்தால் அவருக்கு காயத்ரி தேவை இல்லை. காயத்ரி அதிகமாகி விடும். ஓம்காரத்தை ஒரு தடவை உச்சரித்தாலேயே கோடிக்கணக்கான சந்த்யாக்களின் மகிமை கிடைக்கிறது. ப்ரஹ்மத்தை உணர்ந்த ஒருவருக்கோ, சமாதியை அடைந்த பின்னர் ஒன்றுமே தேவை இல்லை.
ஓம்கார வழிபாடு கூட இருக்கவே இருக்கிறது. அ, உ, ம – இந்த மூன்று சப்தங்களும் ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிக்கிறது என்பது அனைவருடைய நம்பிக்கையுமாகும்.
அவை மனித மனத்தின் மூன்று நிலைகளையும் குறிக்கிறது. ஜாக்ருதி (விழிப்பு நிலை பிரக்ஞை) ஸ்வப்னம் (கனவு நிலை) மற்றும் சுஷுப்தி (கனவற்ற உறக்கம்)
அவை விஸ்வம்(பருப்பொருள்), தேஜஸ் (அறிவு) மற்றும் ப்ரக்ஞா (ஆன்மீகம்) ஆகிய மூன்றையும் குறிக்கிறது.
இப்படி தொடர்ந்து இன்னும் பல விளக்கங்களை மகேந்திரநாதர் குறிப்பிட்டார்.
நெப்போலியனின் துரதிர்ஷ்டமும் அவனது உயர்வும்
நெப்போலியனைப் பற்றி மகேந்திரநாதர் கூறியது இது:
ஒருவரும் துரதிர்ஷ்டத்தைக் கண்டு அஞ்சக் கூடாது.
நெப்போலியன் ஒரு படைவீரனாகத் தான் இருந்தான். திடீரென்று அவனுக்கு வேலை போய் விட்டது. அவனது வீட்டிலிருந்து அவனது தாயார் அவனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், “என் அருமைக் குழந்தாய்! நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன். தயவு செய்து பணம் அனுப்பவும்” என்று எழுதியிருந்தார்.
ஆனால் நெப்போலியனிடமோ பணமே இல்லை. தனது தாயாரின் கஷ்டத்தை அறிந்தவுடன் அவரால் அதைப் பொறுக்க முடியவில்லை.
தண்ணீரில் குதித்து உயிரை விட்டு விடலாம் என்று அவர் முடிவு செய்தார்.
ஆற்றங்கரைக்குச் சென்றார் அவர். நீருக்குள் குதிக்க இருந்த தருணத்தில் அவரது நண்பர் ஒருவர் அவரது சட்டையைப் பிடித்து இழுத்தார்.
“என்ன ஆச்சு உனக்கு நெப்போலியன்?உனது முகத்தை ஒருபோதும் இப்படி பார்த்ததே இல்லையே” என்றார் அவர்.
நெப்போலியன் தனது நிலைமையை நண்பரிடம் கூறினார். ஆனால் அதற்காகத் தற்கொலை செய்து கொள்ள விழைந்ததை மட்டும் கூறாமல் மறைத்தார்.
அவரது நண்பர் தனது மடியிலிருந்த இரண்டாயிரம் மதிப்புள்ள காசுகளை நெப்போலியனிடம் கொடுத்தார்.
நெப்போலியன் அதை தபால் அலுவலகம் சென்று தாயாருக்கு உடனடியாக அனுப்பினார்.
திரும்பி வந்து பார்த்தால் நண்பரைக் காணோம்.
பல வருடங்கள் ஓடின.
பின்னர் நெப்போலியன் இத்தாலி, எகிப்துக்குச் சென்றார்.
பெரிய தளபதி ஆனார்.
மெதுவாக அவர் முன்னேறினார். ஜெனரல் ஆனார். பின்னர் சக்கரவர்த்தி ஆகி விட்டார்.
ஒரு நாள் நகரில் மாபெரும் ஊர்வலத்தில் நடுநாயகமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இரு புறமும் மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது.
மக்கள் ஆரவாரித்து சக்கரவர்த்தியை உற்சாகமாக வரவேற்றனர்.
அப்போது நெப்போலியன் தனது பழைய நண்பர் கூட்டத்தின் நடுவில் இருந்ததைக் கவனித்தார்.
உடனே ஒருவரை அனுப்பி அவரைத் தன்னிடம் அழைத்து வரச் செய்தார்.
தன்னுடன் அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். நண்பரோ ஒரு முறை கூட அவருக்குத் தான் கொடுத்த பணம் பற்றிப் பேசவே இல்லை. மாறாக தனது பழைய நண்பர் இப்படி மாபெரும் சக்கரவர்த்தி ஆனதை எண்ணி மகிழ்ந்து பெருமைப்பட்டார்.
மிகவும் வற்புறுத்தி அந்த நண்பரை நெப்போலியன் ஒரு உயரிய பதவியில் அமர்த்தினார். அவருக்குப் பெரும் செல்வம் சேரும்படி செய்தார்.
இப்படி மகேந்திரநாதர் கூறி முடித்தவுடன் அருகில் இருந்த ஒரு பக்தர், “ஆஹா! அருமை! இதே போலத் தான் ஸ்வாமிஜி (விவேகானந்தர்)
கூட அல்மோராவில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற போது ஒரு வெள்ளரிக்காயைத் தந்து தன்னைக் காத்த ஒருவரை அடையாளம் கண்டு அவருக்கு பெரிய மரியாதையை அனைவருக்கும் முன் செய்து அவரை பரிசுகள் தந்து கௌரவித்தார்” என்றார்.
மகேந்திரநாதர் இது தான் உயர்ந்தோரின் குணம் என்று முத்தாய்ப்பாகக் கூறி முடித்தார்.
1.இந்தியாவில் எத்தனை வெந்நீர் ஊற்றுகள்(Hot Springs )இருக்கின்றன ?
xxx
2.இயற்கையின் அதிசயம் இந்த வெந்நீர் ஊற்றுகள் ; அவை எப்படித் தோன்றுகின்றன?
Xxx
3.இமய மலையில் யமுனை நதி உற்பத்தியாகும் யமுனோத்ரிக்குப் போகும் வழியில் என்ன வெந்நீர் ஊற்று இருக்கிறது?
Xxx
4. பத்ரிநாத் செல்லும் வழியிலும் சுட்டு நீர் ஊற்று இருக்கிறதா?
xxx
5.லடாக் பிரதேசத்தில் ஒரு பகுதியையே வெந்நீர் ஊற்றுகள் (ஹாட் ஸ்பிரிங்ஸ்) என்று அழைப்பது ஏன்?
xxxx
6. இந்தியாவில் அதிக வெந்நீர் ஊற்றுகள் உள்ள பகுதி எது ?
xxxx
7. இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 5 புகழ்பெற்ற சுடு நீர் ஊற்றுக்களின் பெயர்கள் என்ன?
xxx
8.இந்தியாவிலேயே அதிக வெப்பம் உடைய ஊற்று எது ?
xxxx
9.வெப்ப நீர் ஊற்றுகளில் குளிப்பது ஆரோக்கியம் தரும் என்பது உண்மையா?
xxx
10.வெப்ப நீர் ஊற்றுகளினால் சுற்றுலா வளர்கிறது; கடுங் குளிர்ப் பிரதேசங்களில் குளிப்பதற்கு உதவுகிறது; அதிலுள்ள கந்தகத் தன் மை ஆரோக்கியம் அளிக்கிறது; இவை தவிர அவைகளுக்குப் பயன் உண்டா ?
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 13
24.நல்லூர் கயிலாய நாத பிள்ளையார் கோவில்
பிள்ளையார், கணபதி, கணேசர், விநாயகர் , யானை முகன் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் பிள்ளையார் கயிலாயம் முதல் இலங்கையின் தென் கோடியில் உள்ள கண்டி நகர் வரை எங்கும் காட்சி தருகிறார். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் எல்லா நாடுகளிலும் பிள்ளையார் விக்கிரகங்கள் கிடைத்துள்ளன. இத்தாலி நாட்டுத் தலைநகர் ரோமாபுரியில் கணேஷ் என்பதை ஜானேஷ் (Janus) என்று வழிபட்டனர் ; ஜப்பானிலும் பிள்ளையார் கோவில்கள் உண்டு
சங்க இலக்கியத்தில் பதிகப் பகுதியில் மட்டும் பிள்ளையார் பற்றிய ஒரு குறிப்பு இருப்பதைப் பலரும் பிற்காலச் சேர்க்கை என்பர். ஆயினும் எனது ஆராய்ச்சியில் கபிலர் என்ற பிராமணப் புலவர் பெயரே பிள்ளையார் பெயர் என்பதைக் காட்டியுள்ளேன் . அந்தப் பார்ப்பனர்தான் சங்க இலக்கியத்தில் அதிகப் பாடல்கள இயற்றியவர். அவர் தனது புறநானுற்றுப் பாடலில் புல் , எருக்கம் , இலை , நீரைக் கொடுத்தாலும் இறைவன் மறுப்பதில்லை என்று பாடுகிறார்.
புறநானூறு பாடல் 106
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு,
மடவர் மெல்லியர் செல்லினும்,
கடவன், பாரி கை வண்மையே.
இது பகவத் கீதையின் பத்ரம் புஷ்பம் பலம் தோயம் — என்ற ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு என்பதும் அவர் குறிப்பிடும் புல் இலை எருக்கம் என்பது விநாயகர் வழிபாட்டில் மட்டுமே பயன்படும் அருகம்புல் எருக்கம் இலை , பூ என்பதும் நான் ஆராய்ச்சியில் கண்ட விஷயங்கள் ஆகும்.
மேலும் மஹேந்திர பல்லவன் (600 CE) காலத்தில் வாழ்ந்த அப்பரும் சம்பந்தரும் தேவாரத்தில் பிள்ளையாரைப் பல இடங்களில்……………………..
ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை உலகம் அறிய வழி வகுத்தவர் ‘எம்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மகேந்ந்திரநாத் குப்தா ஆவார்.
பரமஹம்ஸர் அவரை மாஸ்டர் என்று அழைப்பார்.
ஆகவே அவரை அனைவரும் மரியாதையுடன் மாஸ்டர் மஹாஷய் என்று கூறுவர்.
‘எம்’ என்றே அவர் அனைத்து ஆன்மீக விஷயங்களையும் எழுதுவது வழக்கம்.
அவருக்கு இன்னும் சில புனைப்பெயர்கள் உண்டு – மணி, மோஹினி மோஹன், பக்தர் – இப்படியெல்லாம் அவர் ராமகிருஷ்ண கதாம்ருதத்தில் அறிமுகப்படுத்தப்படுவார்.
1854ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அவர் பிறந்தார். அன்று நாக பஞ்சமி தினம். சதயம் அவரது நக்ஷத்திரம். எட்டுக் குழந்தைகளில் மூன்றாவதாக அவர் பிறந்தார்.
அந்தண குடும்பத்தில் பிறந்த அவர் ஒரு பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.
1873ஆம் ஆண்டு நிகுஞ்சா தேவி என்னும் அம்மையாரை அவர் மணந்தார்.
அபாரமான ஞாபகசக்தி உள்ளவர் எம். 1867ஆம் ஆண்டு முதல் டயரி எழுதுவதை அவர் வழக்கமாகக் கொண்டார். இப்படி ஒரு நாட்குறிப்பை தினமும் எழுத வேண்டும் என்று அவரிடம் யாரும் சொல்லவில்லை.
இதன் பலன் 15 ஆண்டுகள் கழித்துத் தான் தெரிய வந்தது.
1882ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி அவர் பரமஹம்ஸரை தரிசித்தார்.
தனது நாட்குறிப்பில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரை சந்திக்கும்போதெல்லாம் அங்கு நடப்பது அனைத்தையும் நாட்குறிப்பில் எழுதலானார்.
இதுவே ஶ்ரீ ராமகிருஷ்ண கதாம்ருதமாகப் பரிணமித்தது.
ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் 1836ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் நாள் அவதரித்தார். 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி சமாதி எய்தினார்.
மகேந்திரநாதர் ராமகிருஷ்ண கதாம்ருதத்தை முதலில் GOSPEL OF SRI RAMAKRISHNA என்று ஆங்கிலத்தில் 1897ஆம் ஆண்டு வெளியிட்டார்.
வங்காள மொழியில் இதன் முதல் பாகம் 1902லும் இரண்டாம் பாகம் 1904லும் மூன்றாம் பாகம் 1908லும் நான்காம் பாகம் 1910லும் ஐந்தாம் பாகம் 1932லும் வெளியானது.
பின்னால் ஏராளமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது.
இந்த கதாம்ருதத்தை உலகிற்கு அளிப்பதற்காகவே அவர் பிறந்தார் போலும்!
ஐந்தாம் பாகத்தின் முடிவை இரவு ஒன்பது மணிக்கு அவர் எழுதி முடித்தார்.
உடனே அவருக்கு தலைவலி ஆரம்பித்தது.
அவருக்குப் பிடித்த பாட்டை அவர் வாய் முணுமுணுக்க ஆரம்பித்தது;
“ஓ! குருவே! அம்மா, என்னை உன் மடியில் ஏந்திக் கொள்”
1932ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் தேதி சனிக்கிழ்மையன்று அவர் சமாதி எய்தினார்.
எழுபதாவது வயது முதல் அவர் மிஹிஜம் என்ற இடத்தில் ஒரு குடிலில் வசித்து வந்தார். இரு அறைகள் அங்கு இருந்தன. ஒன்றில் எம் வசித்தார். இன்னொன்று ஸ்டோர் ரூம். வாரந்தாவில் இரு சிறிய அறைகள் இருந்தன. ஒன்று சமையலறை. இன்னொன்று குளியலறை.
இங்கு தனது வாழ்நாள் இறுதி வரை அவர் தன்னைச் சந்தித்த பக்தர்களுக்கெல்லாம் ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றியும் பல அரிய ஆன்மீக விளக்கங்களையும் தந்து வந்தார்.
ஸ்வாமி விவேகானந்தரை அவர் சுக மஹரிஷியின் மறு அவதாரம் என்றே கருதினார்.
அன்னை சாரதா தேவியார் 1853ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி அவதரித்தார். அவர் 1920ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் நாளில் சமாதி அடைந்தார்.
பரமஹஸருடனும் அன்னை சாரதா தேவியாருடனும் அருள் பெற்று வாழ்ந்த நாட்களை மஹேந்திரநாதர் புனிதமாகக் கருதினார்.
மிகுந்த வேதனையுடன் அவர் சில சமயம் புலம்புவதுண்டு இப்படி:
“ அடடா! அன்னை போய் விட்டார். 35 ஆண்டுகள் நம்மை பாதுகாத்தார். ஐந்தே வருடங்கள் தான் ஶ்ரீ ராமகிருஷ்ணரின் அற்புதமான தெய்வீக பாதுகாப்பில் இருந்தோம். ஆனால் அன்னை 35 ஆண்டுகள் நம்மை நன்கு வளர்த்தார். அடடா! அவரும் போய் விட்டாரே!”
இதனால் அவர் மனதளவிலும் உடல் அளவிலும் பாதிக்கப்பட்டார்.
தனிமையில் வாழ மிஹிஜம் நோக்கி வந்து அங்கு வாழலானார்.
மஹேந்திர நாதர் இங்கு தன்னைப் பார்க்க வந்த பக்தர்களிடம் பேசியதை எல்லாம் ஸ்வாமி நித்யாத்மனானந்தா M-The Apostle & the Evangelist என்று ஆங்கிலத்தில் இரு பாகங்களாக வெளியிட்டுள்ளார்.
அற்புதமான ஆன்மீக ரகசியங்களை மஹேந்திரநாதர் விளக்கியுள்ளதை இதில் காணலாம்.
செப்டம்பர் 7, 2023 முதல் 11, 2023 வரை ஐந்து நாட்களுக்கு ஸ்ரீ லங்காவில் இருந்தேன் . எனக்கு பல்வேறு உதவிகளைச் செய்த அடையபலம் ஏ ஆர் விஸ்வநாத தீட்சிதர் , கொழும்பு நகரில் லார்சன் அண்ட் டூப்ரோ கம்பெனியில் சீனியர் மனேஜராகப் பணியாற்றுகிறார். வஜ்ரா ரோடு பிள்ளையார் கோவிலில் இருந்து ஒரு ஆட்டோவில் ஏறிக்குதித்து வேறு ஒரு கோவிலுக்கு விரைந்தோம். ஆனால் போகும்போதே கோவில் மாலை 7 மணிக்கு மூடப்பட்டுவிடும் என்று எச்சரித்தார் ; அப்படியானால் இன்னொரு நாள் பார்க்கலாமே ! என்ன அவசரம்? மணி 7 ஆகப்போகிறதே என்றேன். இல்லை ; அதில் வேறு ஒரு விஷயம் இருக்கிறது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கும் என்றார் . ஏற்கனவே அவர் துவாரகா, ஷண்முகா வெஜிட்டேரியன் உணவு விடுதிகள் பற்றிச் சொல்லி பசியைக் கிளப்பி விட்டிருந்ததால் அதுதான் அடிக்கப்போகும் அதிர்ஷ்டமோ என்று எண்ணிக்கொண்டே சென்றேன். ஆட்டோவும் ஒரு இருண்ட தெருவுக்குள் நுழைந்தது .நாங்கள் எதிர்பார்த்துச் சென்ற ஐச்வர்ய லட்சுமி அம்மன் கோவில் மூடப்பட்டிருந்தது Aishwarya Lakshmi Amman Temple is a Hindu temple located in Colombo. It is one of the 3909 Hindu temples in Sri Lanka. . அது கொழும்பு வெல்லவத்தைப் பகுதியில் தோன்றிய புதிய கோவில் ஆகும் . இலங்கையில் உள்ள 3909 இந்துக்கோவில்களில் அதுவும் ஒன்றாகும்
அங்கு தேவியருடன் எல்லா மூர்திதகளும் ஆஞ்சனேயரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கோவிலை 7 மணிக்கே மூடிவிடும் கா ரணம் தெரியவில்லை .
கோவிலுக்கு எதிரே கம்பவாரிதி ஜெயராஜ் வீடு இருப்பதாகவும் அவர் பெரிய தமிழ்அறி ஞர் என்றும் என் காதில் ஓதினார் விசுவநாதன்.
அடடா, எனக்கு யு ட்யூப் YOU TUBE மூலம் தெரிந்தவர் அவர் ; ஆனால் லண்டனில், முன்பின் சொல்லாமல் யார் வீட்டுக்கும் போய்ப் பழக்கமில்லையே; இது முறையா? என்றேன்.அதனால் என்ன அவர் அனுமத்தித்தால் தானே பார்க்கப் போகிறோம் என்று சமாதானம் சொன்னார். வீட்டிற்குள் தைரியமாக நுழைந்தோம். திரு ஜெயராஜின் செக்ரட்டரி போல செயல்படும் அன்பரிடம் , அடையபலம் விஸ்வநாதன் என்னை அறிமுகம் செய்துவைத்து பத்து நிமிடம் அவரைப் பார்க்க வந்திருப்பதாக சொன்னார். அவரும் எங்களை இருக்கையில் அமரச் சொன்னார். எதிர்பாராத விஜயம் என்பதால் கையில் பழமோ SWEET சுவீட்டோ வாங்கிச் செல்லவில்லை. பெரியவர்களை சந்திக்கும்போது ஒரு எலுமிச்சம் பழமாவது கொண்டு செல்ல வேண்டும். நல்ல வேளையாக, நான் எழுதிய புஸ்தகங்களில் ஏழு எட்டு என் பையில் இருந்தது .
அவரும் எங்களை சில நிமிடங்களுக்குள் உள்ளே அழைத்தார். அவருக்கு முறையான வணக்கம் செய்துவிட்டு நான் இலங்கை வந்த நோக்கத்தைச் சொல்லிவிட்டு என் புஸ்தகங்களை அன்பளிப்பாகக் கொடுத்தேன். அவைகளைப் பார்த்துவிட்டு ஒரு புஸ்தகத்தை ஆர்வ த்தோடு எடுத்துக்கொண்டு முகத்தில் வியப்புக்குறிகளுடன் பேசத் தொடங்கினார்.
என்னுடைய அந்த புஸ்தகத்தின் தலைப்பு –
இந்துமத நூல்களில் வெளி உலக வாசிகளும் காலப்பயணமும்
அதைப்பார்த்த அவர் நானும் இந்த விஷயம் பற்றித்தான் சிந்தித்துக்……
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 12
23. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
MAVIDDAPURAM KANDSWAMY TEMPLE
இலங்கையிலுள்ள பழைய கோவில்களில் மிகவும் கீர்த்தி வாய்ந்தது மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் . இந்த ஊரின் பழைய பெயர் கோவில் கடவை . இது யாழ்ப்பாணத்திலிருந்து பத்து மைல் தூரத்தில் இருக்கிறது. சோழ நாட்டுடனும் பாண்டிய நாட்டு மதுரையுடனும் நெருங்கிய தொடர்புடைய ஊர். குதிரை முகம் நீங்கிய, சோழ இளவரசி கோவிலைக் கட்டுவதற்கு மதுரை நகர சிற்பிகளைக் கொண்டு வந்தாள் . அவள் மூலமாக இந்த ஊருக்கு மா /குதிரை +விட்ட/ நீங்கிய + புரம் /ஊர் என்ற பெயர் வந்ததாம் . அதுமட்டுமல்ல அருகிலுள்ள காங்கேசன் துறைக்கும் அவள் மூலமே பெயர் உண்டாக்கியது காங்கேயன் என்பது முருகனின் ஸம்ஸ்க்ருதப் பெயர் . அந்த முருகன் சிலை கொண்டுவரப்பட்ட துறைமுகம் காங்கேசன் துறை ஆயிற்று.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வரலாறு
மருதப்பிரவீகவல்லி எனும் குதிரை முகமுடைய சோழ இளவரசிக்கு மா/குதிரை முகம் நீங்க முருகப் பெருமானின் பிரார்த்தனை உதவியது அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து ஆலயத்தைக் கட்ட மதுரை நகரிலிருந்து சிற்பிகளை வரவழைத்தாள் . கோவில், அவளுடைய காலத்துக்கு முன்னரும் இருந்தது. அவள் செய்தது முறையான கட்டுமானம் தான் .
திசை உக்கிர சோழன் என்பவனின் மகள் மருதப்பிரவீகவல்லி ; பிறவியிலேயே அவளுக்கு கோணல் மூஞ்சி; வைத்தியர்களால் குணப்படுத்த………………………
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
நடுங்கும் சீனா! வளரும் பாரதம்!!
ச.நாகராஜன்
சமூக ஊடகங்களிலிருந்து வந்த ஒரு செய்தி:
ஏன் ராகுல் காந்தி, சீனாவின் சார்பாக அதானியை எதிர்க்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதானி சீனாவின் ஆசைகளை வெகுவாகத் தகர்த்து விட்டார்.
அதானி சீனாவை இஸ்ரேலில் ஹைஃபா துறைமுகத்தில் (Haifa Port) தோற்க அடித்து விட்டார்.
சீனாவை கொழும்பு துறைமுகத்தில் தோற்க அடித்து விட்டார்.
சீனாவை எகிப்தில் தோற்க அடித்து விட்டார்,
ஆஸ்திரேலியாவில் நிலக்கரியை சீனா தோண்டி எடுப்பதைத் தோற்க அடித்தார்.
பெருவில் சீனா தாமிரத்தை எடுப்பதைத் தகர்த்தார்.
இந்தியா ஐரோப்பாவிற்கு நேரடியாகச் செல்லும் பாதை கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.
அதானி கிரிஸீல் உள்ள துறைமுகங்களான கவலா, வோலோஸ், அலக்ஸாண்ட்ரபுலி (Kavala, Volos, Alesandroupoli in GREECE) துறைமுகங்களைக் கையகப்படுத்துவதில் ஒப்பந்த விவாதத்தின் கடைசி கட்டத்தை எட்டியுள்ளார். கிரீஸில் உள்ள பிராஸ் துறைமுகத்தைப் (Greece’s Port of Piraeus) பயன்படுத்துவதைப் பற்றியும் இந்தியா பரிசீலித்து வருகிறது.
ஐரோப்பாவிற்கு இந்தியா நேரடியாகச் செல்வதில் கிரீஸ் ஒரு முக்கிய பங்கை வகிக்க இருக்கிறது – இந்த ஒப்பந்தம் முடிவடைந்தால்.
வணிகப் போக்குவரத்து மார்க்கம்
மும்பையிலிருந்து யுஏஇக்குச் – ஐக்கிய அரபு அமீரகத்திற்கு – (Mumbai to UAE) செல்வது ஏற்கனவே பாதுகாப்பான நேர் வழியாக உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சவூதி, சவூதியிலிருந்து ஜோர்டான், ஜோர்டானிலிருந்து இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்திற்கு ரயில் பயணம் – இப்படி வழி தயாராகி விட்டது.
ஹைஃபாவிலிருந்து கிரீஸுக்கு கப்பல் பயணம். அங்கிருந்து ஐரோப்போ, யூரேஸியா – இதற்கான பேச்சு வார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டது.
இந்த வணிக வழியானது நமது பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது வருடத்திற்கு முன்பு திட்டமிடப்பட்டது. இது சீனாவின் OBOR எனப்படும் – ONE BELT, ONE ROAD – ஒரு வளையம் ஒரே சாலை என்ற சீனாவின் திட்டத்திற்கான பதிலடி. சீனா 20+ வருடங்களாக இதை அனுபவித்து வருகிறது.
இது நமது நாட்டின் வணிகப் போக்குவரத்துச் செலவைக் குறைக்கும் இந்தியாவின் ஏற்றுமதி- இறக்குமதியை ஊக்குவிக்கும்.
அதானி சீனாவிற்கு எதிராக இந்தியாவிற்காக இதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறார்.
இன்னுமா புரியவில்லை? ஒரு மேப்பையும் பேனாவையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த இடங்களை எல்லாம் அதில் குறித்துக் கொள்ளுங்கள். என்ன தெரிகிறது. சீனாவின் குரல்வளை நெறிக்கப்படுகிறது, இல்லையா?!
யாரெல்லாம் சீனாவில் அதிக முதலீடு செய்திருக்கிறார்கள் என்று இப்போது பார்ப்போம் – 90 சதவிகிதம் அமெரிக்காவும் ஐரோப்பாவும் தான்!
ஆக இந்தியா வளர்ந்தால் யாருக்கு பண நஷ்டம்?
ஐரோப்பா, அமெரிக்கா, சீனா – இந்த நாடுகளுக்குத் தான்!
நமது நாடு முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது.
சேதம் ஏற்பட்ட பின் அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று திணறாமல்!
புரிகிறதா சூக்ஷ்மம்?!
***
நன்றி : ஆங்கில வார இதழ் TRUTH, KOLKATA Volume 91 Issue 22 dated 15-9-2023