Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Muslim Horse Killed; Tamil Horse Won துலுக்கன் குதிரை தோற்றது; தமிழன் குதிரை வென்றது (Post No.7632)
1850 ஆம் ஆண்டு தமிழை ரசித்துப்படிக்க ஒரு குட்டிக் கதை
முதலில் பழைய தமிழைப் படியுங்கள் . புரியாவிட்டால் நான் சொல்லும் கதையைப் படியுங்கள்.
ஒரு தமிழன் வெளியூர் செல்கையில் கட்டுச் சாதம் சாப்பிடுவதற்காக தனது குதிரையை குளத்தின் கரையில்,ஒரு மரத்தில் கட்டினான். அவ்வழியே வெளியூருக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு துலுக்கன் தனது குதிரையையும் அந்த மரத்தில் கட்டப் போனான்.
“டேய் அங்கே கட்டாதே ; என் குதிரை ரொம்ப பொல்லாதது” என்று பல முறை சொன்னான். அப்படியும் முரட்டுத் துலுக்கன் அதே மரத்தில் கட்டி விட்டு அவனது சாப்பாட்டு மூட்டையை அவிழ்த்தான். பொல்லாத தமிழ் குதிரை, துலுக்கன் குதிரையைக் கடித்துக் குதறி கொன்று போட்டது. துலுக்கன் சண்டைக்கு வந்தான். அவன் வே ட்டியைப் பிடித்து, எனக்கு நஷ்ட ஈடு கொடு என்றான் . தமிழன் தான் சொன்னதையே சொல்ல, அவனைத் துலுக்கன் மாஜிஸ்டிரேட்டிடம் அழைத்துச் சென்று தனது தரப்பை எடுத்துரைத்தான்.
தமிழன் தரப்பை வியாதிபதி கேட்ட போது அவன் வாய் மூடி மௌனியாக இருந்தான். அடப் பாவமே, இவன் ஊமை அல்லவா , உன்னிடம் பேசினான் என்றாயே? என்றார்.
துலுக்கன் சொன்னான் – ஐயோ அவனை நம்பாதீர்கள்; அவன் பாசாங்கு செய்கிறான். என்னிடம் இரண்டு முறை சொன்னான்- “மரத்தில் குதிரையைக் கட்டாதே” என்றான்.
மாஜிஸ்திரேட் சிரித்துக்கொண்டே “அப்படியா சொன்னான். அப்படியானால் உனக்கு அவன் நஷ்ட ஈடு எதுவும் தர வேண்டியது இல்லை. போ” என்றார்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
DEATH BED ANECDOTES
During his last illness a number of Pennsylvania politicians called upon Thaddeus Stevens (1792- 1868) to pay their respects and in the course of conversation one of him remarked on his appearance.
“Ah, gentlemen, he said, it is not my appearance that I am concerned about jut now, but my disappearance.”
xxx
CUTTING THROAT IS A HOBBY!
Serope Davies, said Lord Byron, is a wit and a man of the world and feels as much as such a character can do.
Davies was a great gambler and was always backing horses, and when at Cambridge, as a student , he had a peculiar habit of attempting to cut his throat after every Newmarket meeting when he lost.
Indeed so frequently did he amuse himself in this way that on one occasion the doctor who was sent for declined to hasten himself when he heard it was Serope’s throat that he was required to attend to, saying,
“There is no danger of him, I have sewn him up six times already”.
Serope Davies,was enabled to survive this little peculiarity over forty years and died a Serope Davies,death in Paris.
xxx
I AM GOING ON MY JOURNEY; DOCTORS HELPED ME
Sir Samuel Garth (1661-1719) , the London doctor, lay dying. The presence of officious friends troubled him; and when he saw his doctors consulting together, he raised his head from his pillow and said with a smile,
“Dear gentlemen! let me die a natural death”.
After he had received extreme unction, a friend approached him, and asked how he was feeling,
“I am going on my journey, was the answer.
They, pointing to doctors, have greased my boots already.
(unction= treatment with a medicinal oil or ointment)
Seven things could put an immediate stoppage to worry, viz –
An assembly of scholars,
The text of Mahabharata
Study of poetry
Instrumental music
Well accomplished song
A loving wife
And a suitable friend (Translation by Dr N.P.Unni)
ஏழு ‘ஸ்’காரம் இருந்தால் கவலையே இல்லை!
ஒருவனுக்கு ஏழு ஸகாரம் இருந்தால் கவலையே இருக்காது. அந்த ஏழு ‘ஸ’காரங்கள் எவை தெரியுமா?
ஸம்பத்
ஸரஸ்வதி
ஸத்யம்
ஸந்தானம்
ஸதனுக்ரஹ:
ஸத்தா
ஸுக்ருதஸம்பார:
செல்வம், நல்ல கல்வி, சத்யம், நல்ல புத்திரர்கள்,நல்லோரின் ஆசீர்வாதம், இருத்தல், புண்யத்தின் சேர்க்கை இந்த ஏழும் இருந்தால் கவலை தான் ஏது? இவை கிடைப்பது துர்லபம் தான்!
இதைக் கூறும் சுபாஷிதம் இதோ:-
ஸம்பத்ஸரஸ்வதி ஸத்யம் ஸந்தானம் ஸதனுக்ரஹ: |
ஸத்தா ஸுக்ருதசம்பார: ஸகாரா: ஸப்த துர்லபா: ||
The seven Sakaras (words beginning with the syllable ‘Sa’ are said to be Sampat (wealth),Saraswathi (learning), Satyam (Truth), Santhanam (Childern) Sadanugrah (blessing of the noble), satta (existence) and sukrutasambhara (collection of merit).
(Translation by Dr N.P.Unni)
மூர்க்கரை எப்படி அடையாளம் காண்பது?
மூர்க்கரை அடையாளம் காண ஒரு சுலபமான வழி உள்ளது. அவர்களின் ஆறு குணங்களைப் பார்த்தாலே போதும் அவன் மூர்க்கன் தான் என்பதை உறுதிப் படுத்த. அந்த ஆறு குணங்கள் எவை?
கர்வம்
கெட்ட வார்த்தைகள்
பகைமை
அனாவசியமான விதண்டாவாதம்
கடமையைச் செய்ய மறுப்பது
ஒரு செயலைச் செய்யும் போது அலட்சியமாகச் செய்வது
இதை விவரிக்கும் சுபாஷிதம் இது தான்:-
மூர்க சின்ஹானி பீடதி கர்வோ துர்வசனம் முகே |
விரோதி தீர்கவாதி க்ருத்யக்ருத்யம் ந மன்யதே ||
There are six characteristics for a wicked fellow – pride, nasty words, enemity, given to much talk, refusal to do duty, and carelessness in actions.
(Translation by Dr N.P.Unni)
தீயே இல்லாமல் உடலை எரிக்கும் ஐந்து விஷயங்கள்!
தீயே தேவை இல்லை. கீழ்க்கண்ட ஐந்து விஷயங்கள் உடலைத் தானே தஹித்து விடும்!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
புத்த மதத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாம் என்று அனுமதித்தவுடன் உணவு, உடை, நடத்தை (நடை உடை பாவனை) முதலிய பல விஷயங்களில் கேள்விகள் எழுந்தன. புத்தர் உயிருடன் இருக்கும் வரை அவரே பதில் கொடுத்ததாக பிற்கால நூல்கள் காட்டுகின்றன. அவர் இறந்தவுடன் ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்ற நிலை ஏற்பட்டவுடன் மூன்று முறை மஹா நாடு கூட்டி புதிய, புதிய விதிகளை இயற்றினர் . யார் புத்த பிட்சு? என்பதை ஒரு அறிஞர் குழு முடிவு செய்தது . மஹா நாட்டு பந்தல் வாசலில் அமர்ந்து கேள்வி கேட்டனர் . சரியான பதில் சொன்னவர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பிற்காலத்தில் எழுந்த புத்த மத நூல்களில் அந்த விதிகள் தொகுக்கப்பட்டன. அவைகளில் உள்ள உணவு, மருந்து விஷயங்கள் பற்றிய சுவையான செய்திகள் இதோ ….
விநயபீடகா நூல்களில் இருந்து இவை தொகுக்கப்பட்டன. இதைத் தொகுத்தவர் நாளந்தா மஹாவிஹார பேராசிரியர் சி. எஸ். உபாசிக் ஆவார்; அது பாலி மொழியில் உள்ளது.
அகடயூஸ
பாசிப்பருப்பை பாதி கொதிக்கவைத்த கஞ்சி. இதை புத்த பிட்சுக்களுக்கு மருந்தாகக் கொடுப்பதை புத்தர் அனுமதித்தார்
அந்தோ பக்கம் , அந்தோ உ த்தம் / பிண்டம்
பவுத்த விஹாரத்துக்குள் சமைக்கப்பட்ட உணவை பிட்சுக்கள் சாப்பிடக்கூடாது .
வெளியில் பிச்சை எடுத்தே சாப்பிட வேண்டும். விஹாரத்துக்குள் சேமித்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் பயன்படுத்துவது தவறு.
அம்ப பாண
மாம்பழச்சாறு சாப்பிடலாம். புத்தர் அனுமதித்த எட்டு வகைப் பழச் சாறுகளில் இதுவும் ஒன்று. இது ‘யாம காலிக’. அதாவது பகலிலும் இரவிலும் சாப்பிடலாம் .
பல காதநீய, பல பாஜக , பல பேஷஜ
எல்லா வகைப் பழங்களையும் சாப்பிட புத்தர் அனுமதித்தார் .
பாலி மொழி நூல்கள் குறிப்பிட்ட கறிகாய் ,பழங்களில் பலா , மா , தேங்காய் , புளி ,கத்தரிக்காய் முதலியன உள்ளன .
‘பல பாஜக’ என்பவர் சங்கத்துக்கு பழங்களை விநியோகிப்பவர் .
2700 ஆண்டுகளுக்கு முன்னர், இப்போதுள்ள பாகிஸ்தானில் பிறந்த, உலக மகா இலக்கண மேதை பாணினி , பலம் /பழம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார் . ஆனால் வேதத்தில் ‘பிப்பல’ என்ற சொல்லே உளது. இது ‘ஆப்பிள்’ (Pippala = Berries= Apple) போன்ற சொற்களைத் தோற்றுவித்தது . இதுவே பல /பழ ஆயிற்றா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். பாலி மொழி நூல்களில் “பல” (பழம்) மலிந்து கிடக்கிறது.
பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைச் சாப்பிட நான் உங்ககளை அனுமதிக்கிறேன்- பால், தயிர், மோர், நெய் , வெண்ணெய்.
இப்போது வெளிநாட்டில் பரவி வரும் (Vegan) வேகன் கொள்கை பழங்கால இந்தியாவில் கிடையாது. வெளிநாட்டில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு மாமிசம் , மருந்து ஊசி ஆகியன கொடுப்பதால் பலருக்கும் ‘லாக்டோஸ்’ (Lactose) (பாலில் உள்ள ஒரு பொருள்) ஒவ்வாமை வந்து விட்டது. ஆகையால் பால் பொருட்கள் எதையும் உபயோகிக்கக்கூடாது என்ற வேகன் VEGAN கொளகை பரவி வருகிறது. பழங்கால ரிஷிகள் பாலையும் தேனையும் கலந்த உணவையே சாப்பிட்டனர். ஒரு நாடு வளம் பொருந்தியது என்று சொல்ல, அந்த நாட்டில் “பாலும் தேனும் ஆறாக ஓடிற்று” என்ற சொற்றோடர் சம்ஸ்கிருத நூல்களிலும் பைபிளிலும் பயன்படுத்தப்பட்டது .
மண் சோறு சாப்பிடு (கரதின்னகாபாதோ)
ஏதேனும் ஒரு வீட்டில் பிச்சை கேட்டபோது அந்த வீட்டுப் பெண்மணி , புத்த பிட்சுவை மயக்குவதற்காக ஏதேனும் மாய மருந்துகளை , வசிய விஷயங்களைக் கலந்ததாகத் தெரிந்துவிட்டால் , அந்த மாய, வசியத்தை முறிக்க, கலப்பையில் ஒட்டியிருக்கும் ‘சேறு/ சகதி’யைக் கரை த்துக் குடிக்க வேண்டும் . இதன் பெயர் ‘சீதா லோலி’. சீதா தேவி இப்படிக்கு கலப்பையில் உழுகலனில் பிறந்ததால் அவளுக்கு ஜனக மாமன்னன் ‘சீதா’ என்று பெயரிட்டான் . ஒரு பூமியை யாகத்துக்காக செம்மைப் படுத்துகையில் மன்னன் வந்து ‘தங்க ஏர்’ கொண்டு அந்த இடத்தை உழுதல் பழங்கால வழக்கம் .
இந்து மஹா அதிசயம்
உலகில் இந்துக்களைப் போல இயற்கை நண்பர்கள் எவருமிலர் . ஸீதாவுக்கு ‘கலப்பை/ஸீதா’ என்று பெயரிட்டது போல பறவைகளால் வளர்க்கப்பட்ட சகுந்தலைக்கு பறவைப் பெண் (Shakuntala= Bird) என்று பெயரிடப்பட்டது. இதுபோல புராண இதிஹாசங்களிலும் , வேத ரிஷிகளின் பெயர்களிலும் 50 பெயர்கள் பறவைகள், மிருகங்களின் பெயர்கள் ஆகும் .
அரசமரம் – பிப்பலதான்
ஆந்தை – கௌசிகன்
ஆமை – காஸ்யபன்
காகம் – பரத்வாஜன்
வேணு – மூங்கில்
இப்படி ஐம்பது பெயர்கள் கிடைக்கின்றன.
இந்துக்கள் இயற்கையில் இன்பம் அனுபவித்தார்கள். காகத்துக்கும் ஆந்தைக்கும் மனிதர்களை போல மதிப்பு தந்தார்கள் .
இந்தப் பெயர்கள் பற்றிய எனது ஆராய்சசியைத் தனியே வரைவேன். தமிழிலும் ஆந்தை (பிசிர் ஆந்தை) காகம் (காக்கை பாடினியார் ) முதலியன உண்டு. தமிழ், சம்ஸ்கிருத பெயர் பட்டியலை பின்னர் தருகிறேன்.
சங்க இலக்கியத்தில், குப்தர்கள் கல்வெட்டுக்களில் 20க்கும் மேலான நாகர் (பாம்பு) பெயர்கள் இருக்கின்றன.
Xxx
குருடு , ஊமை ,செவிடு
குருடர்கள், செவிடர்கள், ஊமைகளை புத்த பிட்சுக்களாக ‘சன்யாசம்’ கொடுக்கக்கூடாது. அந்த மாதிரி நடந்தால் அதில் பங்கேற்போரும் தவறு செய்தவர்களே.
இணைந்த கை விரல் உடையோர், ஆறு விரல்கள் உடையோரையும் பிட்சுக்களாக்கக்கூடாது. நொண்டி, முடவன்,குள்ளன் ஆகியோரும் பிட்சுக்களாகத் தடை விதித்தார் புத்தர். பிராமணர்கள் பவுத்தர்களாக மதம் மாறியபோது அவருடைய முகம் பிரகாசத்தால் ஒளிவிட்டது.
பாலி மொழி அகராதியையும் புத்தமத அகராதியையும் ஆராய்ந்தால் ஆரிய – திராவிட மொழிக் கொள்கைளைத் தவிடு பொடியாக்கலாம் . தமிழும் சம்ஸ்கிருதமும் மிகவும் நெருக்கமானவை, ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை என்பதை நிரூபிக்கலாம். உலகிலுள்ள பழங்கால மொழிகளில் தமிழும் சம்ஸ்கிதமும் விரவிக் கிடப்பதைக் காட்டி இங்கிருந்தே நாகரீகம் பரவியது என்பதையும் காட்டலாம். திராவிடர்கள் மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வந்தவர்கள், ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்ற வெள்ளைக்காரன் கொள்கைக்கு முடிவு கட்டலாம் .
Xxx
புத்தர், பெண்களுக்கு எதிரானவர் என்பதை இந்தியாவின் ராஷ்டிரபதியாக இருந்த , உலகப் புகழ்பெற்ற தத்துவ வித்தகர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவரது தம்மபத மொழிபெயர்ப்பில் எடுத்துக் காட்டுகளுடன் தந்தார். (முன்னரே இதுபற்றி எழுதிவிட்டேன்) பிரதம சிஷ்யன் ஆனந்தன் கெஞ்சிக் கூத்தாடவே ‘தொலைந்து போ, பெண்களையும் புத்த பிட்சுணிகளாக்கு !’ ஆனால் ஒன்றைக் குறித்துக் கொள் ; எனது மதம் எக்காலம் வரை இந்தப் பூவுலகில் இருக்கும் என்று கணக்கிட்டேனோ அதில் பாதி காலத்தில் என் மதம் போய்விடும்’ என்றார் .
இன்றும் புத்த மத நூல்ளில் ஆண்களுக்கு ஒரு நீதி , பெண்களுக்கு ஒரு நீதி என்றே விதிகள் உள .
ஒரே ஒரு எடுத்துக் காட்டைக் காண்போம் .
ஆராம (தோட்டம் ,பூங்கா)
புராதன இந்தியாவில் மக்கள் இன்பத்துடன் வாழ்ந்தனர். நகரெங்கும் பூங்காக்களும் தோட்டங்களும் ஆயிரக்கணக்கில் இருந்தன. பீஹார் மாநிலத்தில் வைசாலி நகரில் 7000க்கும் அதிகமான தோட்டங்கள் (ஆராம)தோப்புகள், நந்தவனங்கள், பூங்காக்கள் இருந்தன. இவைகளுக்கு புத்த பிட்சுணிக்கள் போகக்கூடாது என்று புத்தர் தடை விதித்தார்.
புத்தர் சொன்ன எல்லாம், பிற்காலத்தில் மூன்று மஹாநாட்டுத் தீர்மானங்களின் அடிப்படையில் ‘‘த்ரி பீடகம்’ (மூன்று பெட்டிகள்) என்ற புஸ்தகங்களாக வெளியிடப்பட்டன. புத்தர் உலவியது முழுதும் இன்றைய இந்தியாவின் பீஹார் , உத்தர பிரதேச மாநிலங்களாகும் . பீஹார் என்ற பெயரே (புத்த) ”விஹார” என்ற சொல்லில் இருந்து வந்ததே !
Reference
kd.6.34.21 Then the Lord on this occasion, having given reasoned talk, addressed the monks, saying: “I allow you, monks, five products of the cow: milk, curds, butter-milk, butter, ghee. There are, monks, wilderness roads with little water, with little food; it is not easy to go along them without provisions for the journey. I allow you, monks, to look about for provisions for a journey: husked rice for him who has need of husked rice; kidney-beans for him who has need of kidney-beans; beans for him who has need of beans; salt for him who has need of salt; Vin.1.245 sugar for him who has need of sugar; oil for him who has need of oil; ghee for him who has need of ghee.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
பாக்யா, 2020 பிப்ரவரி 16ஆம் தேதியிட்ட இதழில், ‘அறிவியல் துளிகள்’ தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு இருபத்தி ஆறாம்கட்டுரை -அத்தியாயம் 442
ஒன்பது ஆண்டுகள் இந்தக் கட்டுரையுடன் முடிந்து விட்ட நிலையில் அடுத்த இதழில் அறிவியல் துளிகள் தொடர் பத்தாம் ஆண்டை ஆரம்பிக்கிறது.
கடந்த பத்தாண்டுகளின் ‘டாப் டென்’ கண்டுபிடிப்புகள்!
ச.நாகராஜன்
2020ஆம் ஆண்டு தோன்றி விட்டது. கடந்த பத்து ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் அறிவியல் உலகை உற்று நோக்கினால் லட்சக் கணக்கில் அறிவியல் கட்டுரைகள் பல நூறு கண்டுபிடிப்புகளைப் பற்றி உலகெங்கும் உள்ள நாடுகளில் வெளியாகியுள்ளன. இவற்றில் ‘டாப் டென்’ – தலையாய பத்தைத் தேர்ந்தெடுப்பது சற்று சிரமமான விஷயம் தான்.
இருப்பினும் நமக்கு முன்னால் வரும் பத்து கண்டுபிடிப்புகள் இதோ:
1) மனித குலத்தின் தோற்றம் : தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதனின் படிமங்கள் ஒரு புதிய உண்மையை அறிவிக்கின்றன. அதாவது மனிதன் 3,35,000 இலிருந்து 2,36,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்கிறான் என்பதே அந்தக் கண்டுபிடிப்பு! ரைஸிங் ஸ்டார் கேவ் என்னும் குகையில் கண்டுபிடிக்கப்பட்டது இது. இதே போல மூன்று கண்டுபிடிப்புகள் 2010, 2013, 2019 ஆகிய ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மனித குல வரலாற்றில் பிரமிக்க வைக்கும் ஒரு செய்தியைத் தந்திருக்கிறது!
2) பிரபஞ்ச தோற்றத்தின் ஆதாரம் :
2015 செப்டம்பரில் லிகோ மற்றும் வர்கோ ( LIGO and VIRGO) ஆகிய இரு நவீன சாதனங்கள் புவி ஈர்ப்பு அலைகளைக் கண்டுபிடித்தன. பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனே ப்ளாக் ஹோல் என்று ஒன்று இருக்கிறதா என்று சந்தேகப்பட்டு வந்தார். 2017இல் ஈவண்ட் ஹொரைஸன் டெலஸ்கோப் என்ற பிரம்மாண்டமான ஒரு டெலஸ்கோப் உலகெங்குமுள்ள பல்வேறு ரேடியோ டெலஸ்கோப்புகளை இணைத்தது. இது ப்ளாக் ஹோலைப் படம் பிடித்தது; 2019இல் அந்தப் படம் உலகெங்கும் வெளியிடப்பட்டது. ஆக ஐன்ஸ்டீன் சொன்னது சரி தான்!
3) உலகின் அதி வெப்பமான வருடம்
விஞ்ஞானிகள் 1912ஆம் ஆண்டிலேயே,” உலகில் இப்போது 2,000,000,000 டன்கள் நிலக்கரி எரிக்கப்படுகிறது. இப்படி இவை எரிக்கப்படும்போது 7,000,000,000 டன்கள் கார்பன் டை ஆக்ஸைட் வளிமண்டலத்தில் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. காற்று இப்படி அசுத்தமாகிக் கொண்டே போனால் உலகின் வெப்ப நிலை கூடுதலாகி மனிதன் வாழ முடியாத நிலை ஏற்படும்” என்று எச்சரித்தனர்.
இது உண்மையாகி விட்டது. கடந்த நூற்றாண்டுகளில் அதிகமான வெப்பமுடைய ஐந்து வருடங்களாக 2014 முதல் 2018 முடிய உள்ள வருடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 2016ஆம் ஆண்டு உலகின் வெப்பமான ஆண்டாகத் திகழ்கிறது. ஃபாஸில் ஃப்யூயல் எனப்படும் பெட்ரோலையும் டீஸலையும் உடனடியாகப் பயன்பாட்டிலிருந்து நிறுத்த வேண்டும்.
4) மரபணு எடிட் செய்யப்பட்ட குழந்தைகள்
2018ஆம் ஆண்டில் சீன ஆராய்ச்சியாளரான ஹே ஜியான்குயி தாங்கள் மனித மரபணுவை எடிட் செய்து அதை ஒரு பெண்ணின் கருப்பையில் பதிய வைத்து இரு பெண் குழந்தைகளை உருவாக்கியதாக அறிவித்தார். உலகெங்குமுள்ள விஞ்ஞானிகள் இதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆனால் சீனாவோ இந்தப் பெண்கள் ஹெச். ஐ. விக்கு கடும் எதிர்ப்பு சக்தியைத் தங்கள் உடலில் கொண்டுள்ளனர் என்றது. ஆனால் மற்ற விரும்பத்தகாத விளைவுகள் பற்றி ஒரு அறிவிப்புமில்லை. வேண்டாத இந்தக் கண்டு பிடிப்புக்கு உலகமே எதிர்ப்பைப் பதிவு செய்து விட்டது.
5) கோடிக் கணக்கில் உலகங்கள்
கோடிக் கணக்கில் உலகங்கள் இருக்கின்றன என்பதை அதிகாரபூர்வமாக அறிவியல் உலகம் கூறுகிறது. விண்வெளி டெலஸ்கோப்புகள் ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கும் உலகங்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை.
2018இல் ஏவப்பட்ட டெஸ் (TESS) என்னும் விண்வெளி டெலஸ்கோப் ஏராளமான உலகங்களைப் “பார்த்து” விட்டது. தனது பணிக்காலத்திற்குள் இன்னும் ஒரு 20000 உலகங்களை அது “பார்த்துச் சொல்லும்” என்று விஞ்ஞானிகள் பிரமிப்புடன் கூறுகின்றனர்!
6) டைனோஸரின் நிறம் என்ன?
1100 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோஸர்களின் நிறம் என்ன? 2017இல் ஒரு டைனோஸரின் படிமம் கண்டுபிடிக்கப்பட்டு ஆராயப்பட்டது. அதன் நிறம் சிவப்பு கலந்த பழுப்பு என்று கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. மனித குல பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தை ஆராய்வதற்கு இந்தக் கண்டுபிடிப்பு பெருமளவில் உதவுமாம்!
7) கிலோகிராம் பற்றிய துல்லியமான விளக்கம்
1000 கிராம் கொண்டது ஒரு கிலோ கிராம். இதைத் துல்லியமாக அளக்க வழியைக் கண்டுபிடித்து விட்டனர் விஞ்ஞானிகள். இது உலகெங்கும் மே, 2019 முதல் அமுலுக்கு வந்து விட்டது. இதே போல மின்சக்தி அளவீடான ஆம்பியர், உஷ்ணநிலை அளவீடான கெல்வின் ஆகியவையும் இனி துல்லியமாக அளக்கப்படும் முறையை விஞ்ஞானிகள் தெரிவித்து விட்டனர். இதனால் ஏற்படும் முதல் பயன் வியாதிகளுக்காகத் தயாரிக்கப்படும் மாத்திரைகள் இனி சரியான அளவில் துல்லியமாக உரிய உள்ளீடுகளுடன் தயாரிக்கப்படும்.
8) பழங்கால மனித மரபணுக்களின் தொகுப்பு
5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் மரபணுக்கள் பல்வேறு விதத்தில் மாசுபடுத்தப்பட்டு இருந்திருக்கக் கூடும். இப்போது பழங்கால மரபணுக்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து முறையாக ஒரு தொகுப்பைச் செய்து விட்டனர். இந்த மரபணுக் களஞ்சியம் ஒரு அரிய அறிவியல் தொகுப்பாகத் திகழும்.
9) எபோலா வைரஸுக்கு தடுப்பூசி
கடந்த பத்தாண்டுகளில் அபாயகரமான வைரஸாக இருந்தது எபோலா. முதல் கேஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின் இரண்டரை ஆண்டுகளுக்குள் இதனால் 28,600 பாதிக்கப்பட்டனர். அதில் 11,325 பேர் இறந்து விட்டனர். இந்த அபாயகரமான வைரஸுக்கு ஒரு புது தடுப்பூசி (Vaccine) கண்டுபிடிக்கப்பட்டு விட்டது!
10) கடவுள் துகளின் கண்டுபிடிப்பு
கடவுள் துகள் என்று பரபரப்புடன் கூறப்பட்ட துகள் பற்றிய் ஆராய்ச்சி சி.இ.ஆர். என் சோதனைச் சாலையில் நடைபெற்று வருகிறது. இங்கு ஹிக்ஸ் போஸான் என்ற துகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகமே அதைக் கொண்டாடியது.
2013இல் இதற்காக இரு அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஆய்வின் தொடர்ச்சி இன்னும் பல மர்மங்களை விளக்கும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
லட்சக்கணக்கான ஆய்வுப் பேப்பர்களில் வெற்றிகரமான முதல் பத்தைக் கண்டோம். இன்னும் இதே போல சுவையான கண்டுபிடிப்புகள் நூற்றுக் கணக்கில் உள்ளன.
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
ஹென்றி ஜார்ஜ் பெர்னார்ட் டான்ஜிக் (George Bernard Dantzig தோற்றம் 8-11-1914 மறைவு 13-5-2005) பிரபலமான அமெரிக்க கணித மேதை மற்றும் விஞ்ஞானி.
1939ஆம் வருடம் அவர் பெர்க்லியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் வகுப்பறைக்குச் சற்று தாமதமாகச் சென்றார். அங்கு கரும்பலகையில் புள்ளியியல் சம்பந்தமான இரு பிரச்சினைகள் எழுதப்பட்டிருந்தன. அது ஹோம் ஒர்க்கிற்காகத் தரப்பட்டது என்று எண்ணிய டான்ஜிக் அதை சில நாட்களிலேயே முடித்து புரபஸர் ஜெர்ஸி நெய்மெனிடம் (Jerzy Neyman) தந்தார்.
அசந்து போன புரபஸர், “அந்த இரண்டும் யாராலும் தீர்வு காண முடியாத பிரச்சினைகள் என்றல்லவா எழுதி வைத்தேன். அதற்கு தீர்வு கண்டு விட்டாயே” என டான்ஜிக்கைப் பாராட்டினார். பின்னால் ஆய்வுக்கான பட்டத்தைப் பெற தான் எந்த ப்ராஜக்டை எடுத்து ஆராய்வது என்று திகைத்திருந்த டான்ஜிக்கை, நீ ஏன் ஒரு ப்ராஜக்டை புதிதாக எடுத்து ஆராய வேண்டும். ஏற்கனவே தீர்த்திருக்கும் இரண்டு பிரச்சினைகளில் ஒன்றை எழுதிக் கொடு. அதையே ஆய்வுக் கட்டுரையாக எடுத்துக் கொண்டு உனக்கு டிகிரியைத் தந்து விடுகிறென் என்றார் புரபஸர் ஜெர்ஸி நெய்மேன்.
இந்த சம்பவம் பாஸிடிவ் எண்ணத்துடன் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டப்படும் சம்பவமாக அறிஞர் உலகில் இன்றளவில் பெரிதாகப் பேசப்படும் ஒன்று.
It seems to start with a fever, followed by a dry cough.
After a week, it leads to shortness of breath and some patients require hospital treatment.
The incubation period – between infection and showing any symptoms – lasts up to 14 days, according to the World Health Organization (WHO).
But some researchers say it may be as long as 24 days.
And Chinese scientists say some people may be infectious even before their symptoms appear.
How deadly is the coronavirus?
Based on data from 44,000 patients with this coronavirus, the WHO says:
81% develop mild symptoms
14% develop severe symptoms
5% become critically ill
The proportion dying from the disease, which has been named Covid-19, appears low (between 1% and 2%) – but the figures are unreliable.
Thousands are still being treated but may go on to die – so the death rate could be higher. But it is also unclear how many mild cases remain unreported – so the death rate could also be lower.
To put this into context, about one billion people catch influenza every year, with between 290,000 and 650,000 deaths. The severity of flu changes every year.
Can coronavirus be treated or cured?
Right now, treatment relies on the basics – keeping the patient’s body going, including breathing support, until their immune system can fight off the virus.
However, the work to develop a vaccine is under way and it is hoped there will be human trials before the end of the year.
Hospitals are also testing anti-viral drugs to see if they have an impact.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Vegan concept did not exist in ancient India. Hindu saints gave reception to everyone including saints and kings with honey and milk. Sanskrit literature and Bible used the phrase ‘country was so prosperous that honey and milk flowed like river’. Buddha also allowed all dairy projects in the Buddhist monasteries. Buddha banned recruiting lame, dumb, blind, dwarf people as monks. Any one with six fingers and joined fingers were also banned. If anyone recruits these people it is considered ‘Dukkata’, i.e. a fault. If a senior attended such a recruiting ceremony it was considered ‘Double Fault’.
Buddha was against women becoming monks. His chief disciple Ananda begged him several times and at last Buddha yielded to his request. But predicted that his religion would die halfway through its expected full life. We saw Buddhism wiped out from its land of birth like he predicted. Great philosopher and former President of India Sarvapalli Radhakrishnan gave a detailed report in his translation of Dhammapada about this.
Buddha allowed eight types of fruit juices. He also allowed meat if it is already killed, but not for the monk. Since Buddha allowed Tom, Dick and Harry and Juli, Samantha and Mary to become monks, there were lot of conflicts about What to eat, What to wear, What to say and how to behave. As long as he lived, he sorted out all the problems in day to day meetings. After his death each group claimed that they were right and framed their own rules. Three times the Buddhist councils met after his death and decided the ‘Constitution’ for the religion. Each time lot of amendments were passed. Emperor Asoka finalised everything 2300 years ago. And then came the Vinaya Pitaka. In one of the council meetings, entrants to the council hall were interviewed by a group of scholars. All the yellow clad fakes were thrown out of the place if they could not answer the basic questions.
Here are some interesting bits from a Pali language Dictionary:-
EAT MUD
‘Gharadinna kaabaadho’ means sickness arising out of taking something unpalatable to one’s system given by some house wife to seduce him/monk. Its antidote as prescribed by the Buddha was to drink Siitaaloli, i.e. a drink made out of the mud adhering to the plough.
Sita means plough. Rama’s wife also came from plough. When Emperor Janaka ploughed the land with a golden plough (it is a Vedic ceremony) , a baby girl was discovered and she was named SITA.
The Hindu wonder is about 50 names are found in Vedic literature with the names of plants or animals. They were nature lovers and environmentally conscious!
Sakuntala meant bird woman.
Bharatwaja meant Crow, Kausika meant Owl , Vedic Sarama meant Dog and Kasyapa meant Tortoise. We have over 50 names like this.
GORASA
Milk and milk products, such as curd/yogurt , sour-milk, butter, ghee are allowed for monks by the Buddha.
KHAADANIIYA
All kinds of eatables – five kinds of Bhojanas – odana/rice, sattu/nutrient flour, kummasa/junket, macha/fish, mamsa/meat
All kinds of yaamakaalika , i.e. eight kinds of fruit juices of madhu, muddika, saaluka, coca, moca, amba, jambhu and pharusaka.
All kinds of sattaahakaalika , i.e. ghee, butter, oil, honey and phaanita/molasses and All kinds of medicines (are allowed).
ANTOVUTTAKAM, ANTO PAKKAM
Any food or food material, which is not formally allowed by the Sanga stored inside the vihara should not be used by the monks. Food cooked inside the vihara can’t be eaten by monks. (They must beg and get food from the public).
AARAAMA
Aaraamas are pleasure parks. There were 7707 pleasure gardens in the city of Vaisali in Bihar. Bhikkunis/ women monks were not allowed to go there.
Indian State of ‘Bihar’ is derived from Vihara (of Buddhists)
AAVASATHA PINDA
Food prepared out of five kinds of cereals kept ready at a public place/aavasatha by a meritorious person. A monk can eat it only once. (Like Hindu Annadana)
PHALA- TAMIL OR SANSKRIT?
Word ‘Phala’ for fruit is found in 2700 year old Panini’s Ashtadhyayi and 2300 year old Buddhist Pali works and the meaning is fruit or seed. Tamils used this word with special letter ‘Za’. Though it is not a retroflex ‘La’ in Sanskrit and Pali it occurs in later but not Vedic literature. Pali works mentioned 8 types of phala rasa- fruit juices.
It is strange that Vedic literature did not use this ‘phala’. Rig Veda mentioned ‘pippala’ with the general meaning ‘berries’. Pippala became apple in English .
PHALA KHAADANIIYA
Buddha allowed all kinds of fruits for the monks to use as food. Some fruits are named – jack fruit/panasa, bread fruit/ labuja, palmyra fruit/ taala, coconut/ naalikera, mango/amba, rose apple/jambhu, ambaataka, tamarind/tintinika, maatulunga/kind of citrus, wood apple/kapiththa, gourd/alaabu, kumbhanda, timbaruutaka, tipusa/cucumber, vaitingana /aubergine, coca/ kind of banana, honey tree fruit/madhuka
All kinds of fruit juices including sugarcane juice are allowed.
Many other restrictions about dress are found in the DICTIONARY OF EARLY BUDDHIST MONASTIC TERMS compiled from Pali literature by Prof C S Upasik of Nava Nalanda Mahavihara, Bihar. 1975.