Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை AUGUST 15 ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./காணலாம்.
XXXX
நேயர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்
XXXX
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்-
58 பேருக்கு பணிநியமன ஆணை
அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 1972ல் சட்டம் கொண்டு வந்தார். தற்போதைய திமுக அரசு இதனை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சி எடுத்தது.
இதையடுத்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின்கீழ் பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உள்பட 58 அர்ச்சகர்களுக்கு பணிநியமன ஆணையை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 14- ஆம் தேதியன்று, வழங்கினார்.
மேலும் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், ஓதுவோர் உள்பட மொத்தம் 216 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.
தமிழில் அர்ச்சனை புதிதல்ல‘ : ஹிந்து அறநிலையத் துறை கமிஷனர் விளக்கம்
‘கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் முறை, புதிதாக வந்ததல்ல’ என, ஹிந்து அறநிலையத் துறை கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார்.
‘கோவில்களில், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய, சட்ட உரிமை உள்ளதா’ என்று கேள்வி எழுப்பிய, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவருக்கு, அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் அளித்துள்ள பதில்: தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம், புதிய திட்டம் இல்லை. இத்திட்டம், 1974ல் அறிமுகப்படுத்தப்பட்டு, 1996ல் புத்துயிர் பெற்றது. 1974, 1998 ஆண்டுகளில், இத்திட்டத்தை எதிர்த்து, பல வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில், 1992ல் புகார்தாரர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சார்பில் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. அதன்படி, கோவில்களில் ஆகம விதிப்படி சமஸ்கிருத வழிபாடு உள்ளது. அதேநேரம், ஒப்பற்ற தமிழ் பக்தி இலக்கியமான தேவாரம், திருவாசகமும் ஏற்கப்பட்டது. தமிழில் அர்ச்சனையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இருப்பினும், ஆகம ரீதியான அர்ச்சனைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோருக்கு, அந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Xxxx
பொங்கல் வைத்து தலையில் சுமந்து அம்மனுக்கு படைத்த கவர்னர் தமிழிசை
தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை, பொங்கல் வைத்து தலையில் சுமந்து, அம்மனுக்குப் படைத்து வழிபட்டார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராகவும் உள்ளார். தமிழகத்தில் ஆடிப் பண்டிகை கொண்டாடுவது போல் தெலங்கானாவில் “போனாலு” என்ற கலாச்சாரப் பாரம்பரிய விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் நிறைவு விழா ஆடி அமாவாசை அன்று நடக்கும். அந்நிகழ்வில் பங்கேற்க ஆளுநர் தமிழிசை தெலங்கானா சென்றுள்ளார்.
தெலங்கானா ராஜ்பவனில் ஆடி அமாவாசையன்று நடைபெற்ற போனாலு திருவிழாவில் பெண்கள் பொங்கல் வைத்து, தலையில் சுமந்து சென்று அம்மனுக்குப் படைத்து வழிபட்டனர்.
அதையடுத்து அவர் பாரம்பரிய முறைப்படி போனாலு பூஜையில் பங்கேற்றார். அவர் ராஜ்பவனில் பொங்கல் வைத்து, அதைத் தலையில் சுமந்து சென்று அம்மனுக்குப் படையலிட்டு வழிபட்டார்.
xxxxxxx
காஷ்மீரில் கீர்பவானி துர்கா கோவிலில் ராகுல் வழிபாடு
காஷ்மீர் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று, கந்தர்பல் மாவட்டத்தின் துல்முல்லாவில் உள்ள கீர்பவானி துர்கா கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார். அத்துடன் ஹஸ்ரத்பல் தர்காவிலும் பிரார்த்தனை செய்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமதுவின் மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காஷ் மீருக்கு வந்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை ராகுல் காந்தி திறந்து வைத்து தொண்டர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
XXXX
முதல்வர் மனைவி திருமலையில் வழிபாடு
திருப்பதி/திருமலை பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, ஆகஸ்ட் 8ம் தேதி காலை குடும்பத்தினருடன் வழிபட்டார்.
ஆகஸ்ட் 7-ம் தேதி இரவு குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர், காலை, ‘வி.ஐ.பி., பிரேக்’ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள், வேத ஆசீர்வாதம் செய்வித்து, சேஷ வஸ்திரம் அணிவித்து, தீர்த்தம், லட்டு பிரசாதங்கள் வழங்கினர்.
xxxxx
திருப்பதி கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானம் ரூ. 55.5 கோடி
திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.55 கோடியே 58 லட்சம் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் கிடைத்த வருமானம் குறித்து திருமலை, திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 5 லட்சத்து 32 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஜூலை மாத உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.55 கோடியே 58 லட்சம் கிடைத்தது. இ.உண்டியல் மூலமாக ரூ.3 கோடியே 97 லட்சம் கிடைத்தது. 35 லட்சத்து 26 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
7 லட்சத்து 13 ஆயிரம் பக்தர்களுக்கு தறிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கி உள்ளனர்.
Xxxx
வங்க தேசத்தில் அட்டூழியம்; 4 இந்துக் கோவில்கள் சூறை
வங்கதேசத்தில் நான்கு ஹிந்து கோவில்களை சூறையாடியதாக 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ருப்ஷா உபசிலா மாவட்டம் ஷியாலி நகரில், இரு மதத்தினர் இடையே சமீபத்தில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு கும்பல் அங்குள்ள ஹிந்து கோவிலுக்குள் புகுந்து கடவுள் சிலைகளை சேதப்படுத்தியது. இதையடுத்து ஷியாலி புர்பபரா பகுதிக்குச் சென்ற கும்பல் ஹரி மந்திர், துர்கா மந்திர், கோவிந்தா மந்திர் ஆகிய கோவில்களில் புகுந்து அங்கிருந்த கடவுள் சிலைகளை சூறையாடியது. அப்போதும் வெறி அடங்காமல் ஹிந்து சமூகத்தினரின் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தினர். இந்த வன்முறை தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து இமாம் மவுலானா நசிமுதின் கூறியதாவது:மசூதியில் தொழுகை நடக்கும்போது சிலர் பஜனை பாடல்கள் பாடி வந்தனர். அவர்களிடம் தொழுகை நடக்கும் போது பஜனை வேண்டாம் என்றேன். அப்போது ஒருவர் என்னை தள்ளியதால் வாய்த் தகராறு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டை ருப்ஷா உபாசிலா பூஜா உத்ஜபன் பரிஷத் பொதுச் செயலர் கிருஷ்ண கோபால் சென் மறுத்துள்ளார். ”இமாமை யாரும் தள்ளவில்லை. வாய்த் தகராறு முடிந்த பின் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர் கள் இங்கு வந்து கோவில்கள், கடைகள், வீடுகளை சூறையாடினர்,” என்றார்.
Xxxxxxx
ராமர் கோவில் கட்டுமானத்தை பக்தர்கள் பார்க்க அனுமதி
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, அடித்தளம் அமைக்கும் பணி 60 சதவீதம் முடிந்து விட்டது.
கோவிலின் கட்டுமான பணிகளை பார்க்க அனுமதிப்பது என ராமர் கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
இதற்காக, தற்காலிக கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு சுவர் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில், துவாரங்களுடன் கூடிய 15 அடி அகல இரும்பு வேலி போடப்பட்டுள்ளது. அந்த வேலிக்கு பின்னால் இருந்தபடி, கட்டுமான பணிகளை பக்தர்கள் பார்க்கலாம்
என்று அறக்கட்டளை நிர்வாகி சம்பத்ராய் தெரிவித்தார்.
Xxxx
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் முக்தி அடைந்தார்
77 வயதான மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் , உடல்நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது.
மதுரை ஆதீனத்தின் உயிர் வெள்ளிக் கிழமை இரவில் பிரிந்தது.
தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு தமிழக முதல்வர்.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
XXXX
மதுரை ஆதீனத்தின் புதிய 293வது குருமகா சன்னிதானம் தேர்வு.
ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் நியமிக்கபட்டுள்ளார். சிலநாட்கள் சென்ற பின்பு ஆதினப் பொறுப்பினை ஏற்க உள்ளார்.
xxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Compiled from popular newspapers of India
Read by BRAHANNAYAKI SATHYANARAYANAN
XXX
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
Read by BRAHANNAYAKI SATHYANARAYANAN
XXX
WE WISH YOU ALL A VERY HAPPY INDEPENDENCE DAY.
XXXX
Sri Aurobindo’s 150th birth anniversary celebrations at Auroville, Ashram TODAY
HERE IS SOME NEWS FROM PUDUCHERRY:
Auroville will bring together a programme to commemorate Sri Aurobindo’s 150th birth anniversary celebrations on August 15.
A live streaming of the function is organised, according to a release from the Auroville Foundation. Aurovillians participate in the invocation of Sri Aurobindo’s Gayatri Mantra at dawn.
A website has been specially created for the 150th year for event updates, articles, blogs and links dedicated to the exploration of Sri Aurobindo as the year progresses
Sri Aurobindo Ashram will also have a quiet celebration of the 150th birth anniversary of Sri Aurobindo today with darshan of the Samadhi.
Visitors will be allowed to the Samadhi and they will be presented a darshan day card which will have messages based on the philosophy of Sri Aurobindo and his spiritual collaborator Mirra Alfassa, known as the Mother of the Ashram.
XXXX
Centre grants Rs 55 crore aid for Simhachalam temple development in Andhra Pradesh
The Centre has sanctioned Rs 55 crore for the development of Simhachalam temple under the Pilgrimage Rejuvenation And Spiritual Augmentation Drive (PRASAD), ANDHRA PRADESH Minister for Tourism Muttamsetti Srinivasa Rao said on Friday. A Central team led by Under Secretary SS Varma arrived IN VISHAKAPATNAM on Friday to review PRASAD scheme proposals.
Speaking to media persons after a meeting with the Central team, the minister said they had sent proposals worth Rs 70 crore for the development of the temple as part of the temple tourism scheme and owing to the pandemic, there was a delay in approval. He said the plan to construct an underpass was shelved following suggestion of the Chinna Jear Swamy that it will be in violation of ‘Agama Sastra’. Hence, it has been decided to revive the steps route from Madhavadhara to Simhahachalam.
As part of the development of temple pushkarini for the convenience of devotees, a bathing ghat and changing rooms will be constructed. A queue complex on the model of Tirumala with a capacity of 2,000 people will be constructed atop Simhachalam.
A hall with all amenities for devotees will be constructed at the foothill. A walking track will be laid around the Simhachalam hill for the convenience of people who undertake circumambulation (giri pradakshina) on the occasion of Giri Pournami every year.
On Giri Pournami, thousands of people undertake a 32-km trek (pradakshina)
Union Tourism Under Secretary SS Varma said they will submit a report within 10 days. Earlier, the team led by Varma visited Simhachalam temple.
XXX
Onam: KTDC to hold payasam fests
The Kerala Tourism Development Corporation will organise payasam festivals across KERALA state from Wednesday as part of Onam celebrations. Expert chefs of KTDC would come out with delicious payasams without compromising on the traditional taste, quality and aroma of the dessert.
The payasam sale counter will be opened at KTDC Grand Chaithram at Thampanoor, IN THIRUVANANTHAPURAM from Wednesday till the Thiruvonam day on August 21 and will be working from 9 am to 9 pm.
Payasam counters will also be operated in other towns in Kerala.
Payasam is a sweet liquid with milk and spices served in Hindu festivals.
Xxx
Miscreants attack Hindu temples in Bangladesh
Miscreants attacked at least four Hindu temples, some shops and households belonging to the minority community in Bangladesh’s Khulna district, prompting police to arrest ten people and beef up security in the area, according to a media report.
The incident took place on Saturday LAST WEEK in Shiali village in Rupsha Upazila following a heated altercation between Hindu and Muslim residents on Friday night, the Dhaka Tribune NEWSPAPER reported.
According to local residents and victims, the miscreants first attacked the Shiali Mahasmashan temple.
They vandalised the idols in the temple and the crematorium.
From there, they went to the Shiali Purbapara area, where they vandalised the idols of Hindu gods and goddesses in Hari Mandir, Durga Mandir and the Govinda Mandir, the report said.
Six shops and two homes of the local Hindu community members were also vandalised, it said.
Krishna Gopal Sen, general secretary of Rupsha Upazila Puja Udjapan Parishad, said that at least 10 idols at four temples were vandalised during the attacks.
The Hindus were going towards the temple while singing kirtan during the Esha prayers, one of the five mandatory Islamic prayers, which led to the scuffle, said the local mosque’s Imam Maulana Nazim Uddin.
XXXX
8-yr-old Hindu boy becomes youngest person charged with blasphemy in Pak
An eight-year-old Hindu boy is being held in protective police custody in Pakistan after becoming the youngest person ever to be charged with blasphemy in the country, a media report said on Monday.
According to the Guardian news report, the boy’s family is in hiding and many of the Hindu community in the conservative district of Rahim Yar Khan in Punjab province, have fled their homes after a Muslim crowd attacked a Hindu temple after the boy’s release on bail last week.
On August 7, 20 people were arrested in connection with the temple attack.
The boy is accused of intentionally urinating on a carpet in the library of a madrassa, where religious books were kept, last month.
Speaking from an undisclosed location, a member of the boy’s family told the Guardian: “He (the boy) is not even aware of such blasphemy issues, and he has been falsely indulged in these matters. He still doesn’t understand what his crime was and why he was kept in jail for a week.
“We have left our shops and work, the entire community is scared and we fear backlash. We don’t want to return to this area. Blasphemy charges filed against a child have shocked even legal experts in Pakistan.
XXXX
77-year-old pontiff of the Madurai Aadheenam no more
The 77-year-old pontiff of the Madurai Aadheenam, Arunagirinatha Gnanasambantha Desika Paramacharya Swamigal, breathed his last at a private hospital IN MADURAI on Friday. He was undergoing treatment for respiratory illness.
The Madurai Adheenam, considered one of the oldest Saivite adheenams (Hindu monastery) in the State, is said to have been established more than a millennium ago and rejuvenated by Thirugnana Sambandar, one of the Nayanmars.
The pontiff was a native of Sirkazhi and joined the Dharmapuram Aadheenam as a disciple soon after his schooling. Since 1980, Arunagirinatha Swamigal, who was formerly a journalist with the DMK’s mouthpiece ‘Murasoli’, has been serving as the 292nd pontiff of the Madurai Aadheenam, which is the hereditary trustee of three temples in Thanjavur district.
With fugitive godman Nithyananda staking his claim as the successor of Arunagirinathar, the chambers of the Madurai Aadheenam, located near the Meenakshi Sundareswarar Temple, were sealed late on Thursday night by the pontiff of the Dharmapuram Aadheenam, Masilamani Swamigal from Mayiladuthurai.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்ரீ வெ.சந்தானம் அவர்களின் நினைவு தினம். அஞ்சலிக் கட்டுரை!
தெய்வத் தமிழ் கண்டவர்!
ச.நாகராஜன்
இன்று ஆகஸ்ட் 15. நமது சுதந்திர தினம். அந்த சுதந்திரத்தை வாங்கத் தங்கள் சுகபோகங்களைத் தியாகம் செய்து நாட்டிற்காக உழைத்த நல்லோர் பலர்.
அவர்களில் ஒருவர் எனது தந்தையார் தினமணி வெ.சந்தானம் அவர்கள். மதுரையில் அவர் தினமணி மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய காலம் ஒரு பொன்னான காலம். அது தெய்வீகமான காலம் என்றே சொல்லலாம்.
நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவர்கள் ஆத்திகவாதிகளை கேலி செய்வதும் கிண்டல் செய்வதுமாக இருந்த அந்த சமயத்தில் ஆன்மிகத்திற்கு என்று ஒரு ‘காலம்’ (COLUMN)வேண்டும் என்று நிர்ணயித்தவர். அதன்படியே தினமணி நாளிதழில் ஆன்மீகத்திற்கு ஒரு COLUMN தந்தார். சில சமயம் அது ஒரு பக்கமாகக் கூட மிளிர்ந்தது. காஞ்சி பரமாசார்யாள், சிருங்கேரி மஹா பெரியவாள் உள்ளிட்ட ஆன்மீகத் தலைவர்களின் உரைகள் ஒரு பக்கம், இன்னும் தேசம் தெய்வீகம் இரண்டும் இரு கண்கள் என முழங்கிய அஞ்சாநெஞ்சர் தேவர் திரு முத்துராமலிங்கத் தேவரின் அர்த்தமுள்ள உரைகள் ஒரு புறம், ஆங்காங்கே ஆன்மிக உரைகளை லக்ஷக்கணக்கான மக்களுக்கு ஆற்றி வந்த கிருபானந்த் வாரியார் உரைகள் ஒரு புறம் இன்ன பிற அறிஞர்கள், உபந்யாசகர்களின் உரைகள் ஒரு புறம் என்று அவற்றைத் தினமும் தினமணியில் பிரசுரித்து மக்களை ஆன்மீக சிகரத்தில் அவர் ஏற்றினார்.
தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள் நடத்திய திருமந்திர மாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றினார். திருப்புகழ், திருப்பாவை மாநாடுகளில் உரை நிகழ்த்தினார்.
பல்வெறு ஆன்மீக புத்தகங்கள் வெளி வர ஊக்கமூட்டினார். அவற்றில் சிலவற்றிற்கு முன்னுரையும் தந்தார்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க நாத்திகவாதிகள் தமிழைத் தவறாகச் சித்தரித்து நாத்திகத் தமிழாக மாற்றி அகநானூறே ஆடி வா, புறநானூறே பொங்கி வா என்று தமிழரைத் திசை மாற்றிய போது ‘தெய்வத் தமிழை’ தமிழர்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்று தெய்வத் தமிழைக் கண்டார்.
ஆம், மதுரையில் தெய்வத் தமிழ்ச் சங்கம் என்று ஒரு சங்கத்தை ஆரம்பித்து பிரம்மாண்டமான ஒரு விழாவை நடத்தினார். அதில் மதுரையின் பிரபல வழக்கறிஞர் திரு கே.லெக்ஷ்மிநரசிம்மன் உள்ளிட்ட பலரும் முனைப்பாக ஈடுபட்டனர். கல்லல் ராமநாதன் என்று ஒரு புகழ்பெற்ற இசைக் கலைஞர் வில்லுப்பாட்டு மூலம் ஆன்மீகத்தைப் பரப்பி வந்தார். அவரது மனைவியும் ஒரு இசைக் கலைஞர். இருவரும் இணைந்து தெய்வத் தமிழ் நிகழ்வுகளை வில்லுப்பாட்டாக இசைத்தனர். கூட்டம் வியந்து போற்றியது – தெய்வத் தமிழ் சங்கத்தை.
ஸ்ரீ சத்யசாயிபாபாவை கலியுக அவதாரமாக இனம் கண்டவர் அருளாளர் வெ.சந்தானம். அவர் மேல் தானாகப் பொங்கி வந்த கீர்த்தனைகளைத் தொகுத்தார். பாரதரத்னா திருமதி எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் சகோதரர் திரு எம்.எஸ்.சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான இசைக்கலைஞர்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவர். பல்வேறு ராகங்களில் அந்தக் கீர்த்தனைகளை இசைத்துக் காட்டுவர். பல இசைக்கச்சேரிகளில் பாடல்கள் அரங்கேறின.
அவற்றைப் பற்றி ஒரு இண்டர்வியூவில் ஸ்ரீ சத்யசாயிபாபா, ‘பாடலை நீ இயற்றும் போதே அதை நான் கேட்டு விட்டேன். பதங்கள் நாட்டியமாடி துள்ளி குதிக்கின்றன‘ என்றார்.
108 கீர்த்தனைகளின் தொகுப்பு பின்னர் நூலாக வந்தது.
ஸ்ரீ சத்யசாயிபாபா அவர் மேல் மாறா அன்பு கொண்டிருந்தார். சென்னையில் ஆபட்ஸ்பரியில் நடந்த மாபெரும் விழாவிற்கு உரை ஆற்ற அவரை அழைத்தார்.
தன்னை அவர் அழைத்திருக்க மாட்டார், அது கே.சந்தானம் என்ற நிபுணராக இருக்கக் கூடும் என்று அழைத்தவரிம் திரு சந்தானம் கூற, “இல்லை, இல்லை, நாங்கள் மிகத் தெளிவாகத் தான் கூறுகிறோம். பாபா, மதுரை தினமணி சந்தானத்தை அழையுங்கள்’ என்று ஆணையிட்டார் என்று கூறினர்.
ஒரு நாள், திரு ஆர்.ஆர்.ராமநாதன் செட்டியார் வீட்டிற்கு திடீரென வருகை புரிந்தார் பாபா அப்போது ஹாலில் அமர்ந்திருந்த எனது தந்தையாரைக் கண்ட அவர் மனம் மிக மகிழ்ந்து அவர் அருகே வந்தார். ஆசீர்வதித்தார்.
இப்படிப் பல நிகழ்வுகள்.
அச்சன்கோவிலை ஸ்தாபித்த ஆயக்குடி ஸ்வாமிஜி கிருஷ்ணாஜியைக் குருவாக ஏற்ற திரு சந்தானம் தினமும் காலையில் கணபதி ஹோமம் செய்வதை வழக்கமாகக் கொண்டார் – அவரது உபதேசத்தை அனுக்ரஹமாகக் கொண்டு.
அவருடனான அனுபவங்கள் ஒரு பெரும் புத்தக அளவில் எழுதக் கூடிய வியப்பும் பிரமிப்பும் தரக்கூடிய அற்புத நிகழ்ச்சிகளாக அமைந்தன.
இன்னும் ஸ்வாமி சாந்தானந்தா, அஷ்டபதி பாடி ராதா கல்யாணத்தைப் பரப்பிய புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான மகான்களுடன் மிக நெருக்கமாக அவர் இருந்தார். ஸ்வாமி சாந்தானந்தா வீட்டிற்கு வந்து பிக்ஷை ஏற்பார். கோபால கிருஷ்ண பாகவதர், அவரது மகன் சஞ்சீவி பாகவதர் உள்ளிட்டோர் இல்லத்திற்கு வருகை புரிவர்.
சிருங்கேரி மகா சந்நிதானம் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த ஸ்வாமிகள் ஒரு முறை சந்தானம் அவர்கள் இல்லத்திற்கு வருகை புரிந்தார். ‘என்ன வேணும், கேள்’ என்றார். ‘நானும் எனது குடும்பமும் இந்து மதத்தில் மாறாத பற்று கொண்டு அதன் உயர்வை அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று வரம் கேட்கவே, அருகிலிருந்த அனைவரையும் பரபரப்பாக அழைத்த அவர், “பாருங்கள், என்ன கேட்கிறார் பாருங்கள்’ என்று சொல்லி மகிழ்ந்து ஒவ்வொருவராக குடும்ப உறுப்பினர்களை அழைத்து அனுக்ரஹித்தார்.
இப்படி ஏராளமான உத்வெகமூட்டும் சம்பவங்கள் உண்டு.
திருப்பாவை கழகங்களையும் வடக்காடிவீதிதிருப்புகழ் சபையையும், பன்னிருதிருமுறை மன்றத்தையும் இன்ன பிற நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்தீக சபாக்களையும் வளர்த்தார். அங்கெல்லாம் சமயம் கிடைத்தபோதெல்லாம் சென்று ஆன்மீக உரைகள் ஆற்றினார்.
தெய்வீகமாக வாழ்ந்த அவர் தெய்வத் தமிழுக்காக ஆற்றிய பணியை அவர் மறைந்த இந்த நாளில் மனம் மெய் மொழிகளால் நினைத்து வியந்து சிரம் தாழ்த்தி கரம் கூப்பி அவருக்கு அஞ்சலி செய்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹரிஷி அரவிந்தர் – 2
ச.நாகராஜன்
அரவிந்தர் புதுவை வந்த தினத்திலிருந்து ஒரு அற்புதமான நட்பு அவருக்கும் மஹாகவி பாரதியாருக்கும் இடையே எழுந்தது. நட்பின் அபூர்வ விளைவுகளாக வேத ஆராய்ச்சி நடந்தது. அரவிந்தர் தமிழ்க் கவிதைகளை இரசித்து, ஆண்டாள், பாசுரத்தை (To the Cuckoo, I dreamed a dream) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பாரதியார் அவரை தினமும் சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். ஏராளமான வேத சூக்தங்களை பாரதியார் அரவிந்தரிடமிருந்து கற்றார்.
அரவிந்தர் மேல் பேரன்பு கொண்டிருந்த மகாகவி, அவரைப் புகழ்ந்து,
“ஆதிசிவன் மேலிருக்கும் நாகப் பாம்பே – எங்கள்
அரவிந்தப் பேர் புனைந்த அன்புப் பாம்பே! சோதிப்படத் தூக்கி நட மாடி வருவாய்! – அந்தச்
சோலை நிழலால் எமது துன்பம் ஒழிவோம்!” என்று பாடினார்.
பெரும்பாலும் மாலை நேரங்களில் அரவிந்தரை பாரதியார் சந்திப்பது தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் புதுவை வாழ்க்கை சகிக்க முடியாத ஒரு நிலை ஏற்படவே பாரதியார் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தார்.
கடைசியாக அரவிந்தரிடமிருந்து விடை பெறும் நாளும் வந்தது.
அந்த நாளைப் பற்றி பாரதியாரின் புதல்வியான சகுந்தலா பாரதி தனது நூலில் இப்படி விவரிக்கிறார்:
“ஸ்ரீ அரவிந்தரிடம் கடைசிமுறையாக் என் தந்தை விடை பெறப் போனபோது அவர்கள் தனியறையில் சம்பாஷணை நடத்தியதால் அதன் விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் விடைபெற்றுத் திரும்புகையில் ஸ்ரீ அரவிந்தரின் சாந்தி நிறைந்த ஞானவொளி வீசும் கண்கள் கண்ணீரால் மங்கியிருந்தன. என் தந்தையின் வீர விழிகளில் கண்ணீர் ததும்பி நின்றது. அது மட்டும் தான் நான் கண்டேன்.
ஸ்ரீ அரவிந்தரது ஆசீர்வாதத்தைப் பெற்று வீடு திரும்பினோம்.”
ஆங்கில சாம்ராஜ்யத்தையே ஆட்டுவித்த மகாவீரர், ஆன்மீக சிகரத்தில் ஏறி புதிய யோக சக்தியைப் பூவுலகில் இறக்கியவர் அரவிந்தர்.
தன் பாட்டுத்திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட வந்தவர் தமிழ்க் கவிஞர் பாரதியார். வாராது வந்த மாமணி. வீயாச் சிறப்புடையவர். இவர்களின் கண்களில் பிரிவினால் அரும்பியது நீர் என்றால் அது புனித நீர் அல்லவா!
கொடுத்த வைத்த புதுவை பூமி சரித்திரத்தில் புனித பூமியாக நிரந்தர இடம் பெற்று விட்டது! அரவிந்தருக்கு திவ்ய திருஷ்டி உண்டு. எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன்பே அவர் அறிவார். எழுத்தாளரான வ.ரா. எனப்படும் ராமசாமி தன்னிடம் வருவதை அவர் முன் கூட்டியே கண்டார். அதே போல புதுவை கவர்னராக வருபவரையும் அவர் முன்பாகவே கண்டார். இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் ஆகஸ்டு 15 1947. அவரது பிறந்த நாள் ஆகஸ்ட் 15. இது தற்செயலான ஒன்று இல்லை, தொடர்பு உண்டு என்றார் அவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினை என்பது செயற்கையான ஒன்று. அது போகவேண்டும். போகும் என்று தீர்க்கதரிசனமாக அவர் உரைத்துள்ளார். பாரத தேசத்தின் புகழோங்கிய மேன்மையை அது மீண்டும் பெறும் காலம் மிக சமீபத்தில் உள்ளது என்ற சத்திய வாக்கையும் அவர் அருளியுள்ளார்.
யோக சாதனையில் முழுவதுமாக இறங்கிய அரவிந்தர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு அதில் தீவிரமாக ஈடுபட்டார். 1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் நாள் அவர் சமாதியை அடைந்தார். அவரது பொன்னுடல் ஒளியுடன் அப்படியே தொடர்ந்து இருந்தது.நான்கு நாட்கள் கழித்து டிசம்பர் மாதம் ஒன்பதாம் நாளன்று அன்னையின் அருளுரையின் பேரில் அவர் உடல் ஒரு பேழையில் வைக்கப்பட்டு சமாதி எழுப்பப்பட்டது.
அரவிந்தர் மீண்டும் வருவார்
பிரம்மாண்டமான சக்தியை பூவுலகில் இறக்கும் பெரும் காரியத்தில் அவர் வெற்றி பெரும் தருணத்தில் அவர் முன்பாக பேரருள் சக்தி இரண்டு விருப்பத் தேர்வுகளை வைத்தது. ஒன்று அவர் தனிப்பட்ட முறையில் மேலான முக்தி நிலையை எயதலாம். இன்னொன்று அவர் புவியை மேம்படுத்துவதற்காக இறக்க முயலும் அருள் சக்தியை தற்போதைய உடலை விட்டு விட்டு இன்னொரு உடல் எடுத்தால் மட்டுமே முடியும்.
அரவிந்த மஹரிஷி தனது முக்தி நிலையை விரும்பவில்லை. மாறாகத் தன் உடலை உகுத்து விட்டு இன்னொரு முறை புவிக்கு வந்து, விட்டு விட்டுச் சென்ற பணியைப் பூர்த்தி செய்து பேரருள் சக்தியை இறக்கும் விருப்பத் தேர்வைத் தேர்ந்தெடுத்தார்.
அவரே கூறிய படி இன்னொரு முறை நான் தோன்றுவேன் என்ற அவரது வாக்கு பலிக்காமல் போகாது.
அரவிந்தம் மீண்டும் புவியில் மலரும். அப்போது ஜீவ ஒளியுட்ன புத்துலகம தோன்றி அனைவரும் மேலாம் நிலையை எய்துவர்.
அரவிந்தரைப் படிப்போம்
ஆரம்ப சாதகர்கள் அரவிந்தரின் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனித்து அவர் கூறிய யோக முறையை அனுஷ்டானத்தில் கொண்டு வருவதன் மூலம அவரது பணிக்கு அணில் சேது அணை கட்டுவதில் ஆற்றிய சேவை போன்று சேவையைச் செய்ய முடியும்.
அரவிந்தரின் யோக முறை தனி ஒரு முறை என்பதாலும் இது வரை அப்படி ஒரு முறையை யாரும் கடைப்பிடிக்கவில்லை என்பதாலும் அது ஒப்பற்ற ஒன்றாக இலங்குகிறது.
அந்த முறையை உலகிற்கு இந்தியாவே அளிக்க முடியும். அளிக்கும் என்பது அவரது வாக்கு.
1997ஆம் ஆண்டு அரவிந்த ஆஸ்ரமம் அரவிந்தரின் எழுத்துக்களைத் தொகுத்து வெளியிடும் பணியில் ஈடுபட்டது. அவரது எழுத்துக்கள் அனைத்தும் முறையே தொகுக்கப்பட்டு 36 தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இதை இணையதளத்திலிருந்து பிடிஎஃப் வடிவில் – PDF FORMAT இல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 37வது தொகுதி இந்த தொகுதிகளில் அடங்கி இருப்பவற்றிற்கான INDEX ஆக அமைகிறது.
பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட இந்த அரவிந்த இலக்கியம் படிப்போருக்கு ஆன்மீகத்தில் பல இரகசியங்கள் எளிதாகப் புரிந்து விடும்.
எடுத்துக்காட்டிற்காக அவர் கூறியவற்றில் ஒன்றே ஒன்றை – கடவுளரின் அர்த்தங்களை – அவர் விவரித்துள்ளபடி பார்ப்போம்.
கடவுளரின் அர்த்தங்களை அவரும் அன்னையும் (அரவிந்த ஆசிரம அன்னை) தெளிவாகக் கூறுகின்றனர்.
ஒரு பிரம்மாண்டமான மஹா சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்குகிறது. அதுவே ஆத்ய சக்தி.
பிரபஞ்ச இறைத்தன்மையின் மூன்று பெரும் சக்திகள் மற்றும் ஆளுமை கொண்டவர்களே பிரம்மா,விஷ்ணு, சிவன்.
உருவாக்கம், படைப்புக்குப் பின்னால் இருப்பவர் பிரம்மா.
படைப்பவர் விஷ்ணு
தவத்திற்கு சிவன்
தெய்வீக சக்தியே தேவி
சிங்கத்துடன் கூடிய துர்க்கையே தெய்வீக பிரக்ஞை
மஹாகாளி உயரிய மட்டத்தில் உள்ளவள். தங்க மயமாக ஜொலிப்பவள்.
கடவுளர் தெய்வீகப் பணிகளை ஆற்றுபவர்கள்.
விக்கினங்களை நீக்க கணேசர்.
வெற்றியைத் தர முருகன்.
பக்திக்கு ஹனுமான்.
தெய்வீக அன்புக்கு ஸ்ரீ கிருஷ்ணர்
முழு அன்புமயத்திற்கு ராதை.
இதை உணர்ந்து வழிபட்டால் வாழ்க்கையில் உயர்வு நிச்சயம். அரவிந்தரும் அன்னையும் இப்படி ஏராளமான ஆன்மீக இரகசியங்களைக் கூறி அருளியுள்ளனர்.:
எங்கும் நிறை சக்தி அரவிந்த சக்தி
நிரோத்பரன் ஒரு முறை அவரைக் கேட்ட கேள்விக்கு எந்த ஒருவர் ஆழ்ந்த சிரத்தையுடன் ஆன்ம ஞானம் சித்திக்க விரும்பினாலும் அது தானாகவே அவர் காதில் விழுந்து விடும் என்று கூறி அருளியிருக்கிறார்.
ஒரு மேம்பட்ட சக்திக்காக தன் உடலை உகுத்து எங்கும் பரவியிருக்கும் அவரின் அருள் அரவிந்த பகதர்களுக்கு மட்டுமே உரிய ஒன்று இல்லை; எல்லோருக்கும் எல்லோரிடமும் அவரது கருணை மழை பொழிந்து கொண்டே இருக்கும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர்களில் ஒருவர் பிரான்ஸைச் சேர்ந்த ஆல்பர்ட் காமு ALBERT CAMUS . அவருக்கு 1957-ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு கிடைத்தது .
வட ஆப்ரிக்காவிலுள்ள அல்ஜீரியா நாட்டில் ஒரு ஏழைத் தொழிலாளர் குடும்பத்தில் 1913-ல் காமு CAMUS பிறந்தார்.அக்காலத்தில் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் அல்ஜீரியா இருந்தது. இதுவே அவருடைய கதைகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.
காமூவின் தந்தை முதல் உலகப் போரில் கொல்லப்பட்டார்.அதற்குப் பின்னர் அவரை தாயார் வளர்த்தார். அப்போது அவர்கள் அல்ஜீரிய தலைநகரான அல்ஜீயர்ஸில் வசித்தனர். அவர் க்ஷயரோகம் என்னும் காசநோய் கண்டும் கூட, அல்ஜீயர்ஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் கற்று, அதில் பட்டம் பெற்றார் .
1942ல் பிரான்சுக்குச் சென்று நாஜி ஆட்சிக்கு எதிரான இயக்கத்தில் காமு சேர்ந்தார். பிரெஞ்சுப் படையில் சேர்ந்து இரண்டாவது உலகப்போரில் கலந்துகொண்டார்.பின்னர் பத்திரிகையாளராகி நாவலும் எழுதத் துவங்கினார்.
29 வயதில் STRANGER ஸ்ட்ரேஞ்சர்/ அந்நியன்/வெளியாள் என்ற நாவலை எழுதி வெளியிட்டார்.மனித வாழ்வின் பொருளற்ற , அவலம் நிறைந்த வாழ்வு பற்றிய கதை அது.
1934 ல் அவர் PLAGUE பிளேக்/ கொள்ளைநோய் என்னும் கதையைப் பதிப்பித்தார். அநீதிகளை எதிர்த்துப் போராடும்படி மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் கதை அது.
ஷான் பால் சாத்ர JEAN PAUL SATRE போன்ற இடதுசாரி எழுத்தாளர்களைப் போல அவர் புரட்சி செய்யச் சொல்லவில்லை. தார்மீகப் புரட்சி வேண்டும் என்று வாதாடினார். அரசியல் புரட்சியைவிட இது முக்கியமானது என்றார் . புரட்சிக்காரன் என்ற நாவலில் மக்கள் அவர்கள் செய்யும் செயல்களுக்கன தார்மீகப் பொறுப்பை ஈக்கவேண்டும் என்று சொன்னார்.
43 வயதில் அவர் கடைசி நாவலான தி ஃ பால் / வீழ்ச்சி என்ற நாவலை எழுதினார். முயற்சி செய்து, நடத்தை மூலமாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். தனி மனித முயற்சியின்போதும், சமுதாயத்தின் ஒரு அங்கம் என்ற நினைவு வேண்டும் என்கிறார்.
அவர் நாடகங்களை எழுதியபோதும் அவைகளுக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆல்பர்ட் காமு ஒரு விபத்தில் சிக்கி இறந்தார்.
பிறந்த தேதி – நவம்பர் 7, 1913
இறந்த தேதி – ஜனவரி 4, 1960
வாழ்ந்த ஆண்டுகள் – 46
அவர் எழுதிய நூல்கள்,
1938- CALIGULA
1942- THE STRANGER
1942- THE MYTH OF SISYPHUS
1944 – CROSS PURPOSE
1947 – THE PLAGUE
1948- STATE OF SIEGE
1951- THE REBEL
1956- THE FALL
1958- EXILE AND THE KINGDOM
–SUBHAM–
tags- நோபல் பரிசு, பிரெஞ்சு நாவல், நாடக ஆசிரியர் ,ஆல்பர்ட் காமு, Albert Camus
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹெல்த்கேர் ராஜா
13 Aug 2021, 20:57 (8 hours ago)
to me
அன்புடையீர், நமஸ்காரம்.
தங்களது கட்டுரையில் படித்த வரிகள்:
‘நான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தினமும் விநாயக கவசம் படித்து வருகிறேன். இதில் மரீசி முனிவர் ஒரு அருமையான லிஸ்ட் list கொடுக்கிறார்’.
விநாயக கவசம் காசிப முனிவர்
எழுதியது தானே அவரது தகப்பனார் தானே மரீசி முனிவர். சிறிது சந்தேகம் விளக்கம் வேண்டி நிற்கிறேன் சுவாமி.
MY REPLY
நல்ல கேள்வி
திருநெல்வேலி ஹெல்த் கேர் HEALTH CARE பத்திரிகை ராஜா அவர்களின் கேள்விக்கு லண்டன் சுவாமிநாதன் பதில்.
கவசங்கள் அனைத்தையும் தொகுத்து 20-11-1962ல் முன்னுரை எழுதிய சு.அ இராமசாமிப் புலவர், தனது வாழ்வில் நடந்த அற்புதங்களை 6 பக்கங்களில் எழுதியுள்ளார். அதைத் தனியாக பின்னொரு சமயம் எழுதுகிறேன்
முதலில் ஒரு அதிசய விஷயத்தைச் சொல்லிவிட்டு உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லுகிறேன்.
நான் வேலையிலிருந்து ஒய்வு பெற்று ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்பொழுது வயது 72-ஐத் தாண்டிவிட்டது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்திருக்கவேண்டும்.
நான் இரவு 9 மணி வாக்கில் பரடுக்கச் சென்றுவிட்டு காலை நாலு அல்லது நாலரை மணிக்கு எழுந்திருக்கும் பழக்கம் உடையவன் . நான் வசிக்கும் லண்டன் போன்ற மேலைநாட்டு நகரங்களில் படுக்கை அறைகள், மேல் மாடியிலிருக்கும். எனது படுக்கை அறையிலிருந்து காலை 4 மணிவாக்கில் கீழே காப்பி போட்டுக்குடிக்க இறங்கினேன். நமக்குத் தெரிந்த மாடிப்படிகள் தானே என்று, தினமும் மற்றவர்களைக் கஷ்டப்படுத்தாமல் இருப்பதாற்காக மின்சார விளக்குப் போடாமல் இறங்கினேன். ஒரு சின்னத்தப்பு செய்திருப்பேன். ‘தட தட’ என்று மாடிப்படியில் இருந்து உருண்டு விழுந்தேன். மாடியில் உறங்கிய எனது மனைவியும் மகனும் அலறிப்புடைத்துக்கொண்டு ஓடிவந்தனர். (லண்டனில் ஏதோ பூகம்பம் ஏற்பட்டுவிட்டது என்று எண்ணி!! பிரிட்டனிலும் அவ்வப்போது நில அதிர்வுகள் ஏற்படும். ஆனால் லண்டனில் எனக்குத் தெரிந்து 33 ஆண்டுகளில் ஏற்பட்டதில்லை ). நான் சிரித்துக்கொண்டே சமையல் அறைக்குள் புகுந்து காப்பி போடச் சென்றேன். விஷயத்தைக் கேட்டுவிட்டு அவர்களும் சிரித்துவிட்டு, சுகமாகத் தூங்கப்போய்விட்டார்கள். பந்து போல மாடியில் உருண்ட எனக்கு ஒரு சிறிது காயமும் இல்லை. அந்த அதிர்ச்சியும் இல்லை. காலையில் அவர்கள் தூங்கி எழுந்து வந்தவுடன் நான் சொன்னது: “நான் இவ்வளவு காலமும் படித்து வரும் விநாயக கவசம்தான் என்னைக் காப்பாற்றியிருக்கிறது” என்று.
இது போல சில சம்பவங்களை நூல் வெளியிட்ட ராமசாமிப்புலவரும் எழுதிவிட்டு இதை படிப்பவர்கள் ‘நகைக்கக்கூடும்’ என்றும் எழுதி இருக்கிறார்.
விநாயக கவசம் துவங்குவதற்கு முன்னர் அடைப்புக் குறிக்குள் உள்ள ஒரு பத்தியில் “முதலில் இக்கவசத்தை காசிப முனிவர் முற்கல முனிவருக்கு அருளிச் செய்தார். அவர் மாண்டவிய முனிவருக்கு அருளிச் செய்தார். அவர் மரீசி முனிவருக்கு அருளிச் செய்தார். அவர் பல முனிவர்கட்குத் திருவாய் மலர்ந்தருளினார் ………)
கவசம் முடிந்தவுடன் விநாயக கவசப் பலன் என்று மூன்று STANZAS பத்திகள் உள்ளன. பிற்கால கவச நூல்களில் இந்த 3 பாடல்களையும் வெளியிடவில்லை. அதில் கடைசி நான்கு வரிகள் கீழ்கண்டவாறு முடிகிறது .
“அன்புறுதி ஆசாரம் உடையார்க்கிக்
கவசத்தை அறைக அல்லார்க்கு
என்பெறினும் உரையற்க எனக்கிளந்து
மரீசீதன திருக்கை யுற்றான்” .
ஆக நீங்கள் சொல்லுவது சரியே. காஸ்யப முனிவர்தான் இதை இயற்றியிருக்க வேண்டும். அது பின்னர் மரீசி முனிவருக்குக் கிடைத்து, அவர் வாய் வழியாகக் கேட்டு, நாம் சொல்லிவருகிறோம்.
இது போன்ற புதிர்கள் பல நூல்களில் உள்ளன. ஆயினும் நாம் மூல புருஷனின் பெயரையே பயன்படுத்துகிறோம். புராணங்கள் அனைத்தையும் சுதர் அல்லது சுத முனிவர் நமக்குச் சொல்லியதாகப் படிக்கிறோம்.ஆயினும் அவற்றை வியாசரே எழுதியதாக பின்னர் சொல்கிறோம். மநு தர்ம சாஸ்திரத்தில் பிருகு முனிவர் சொல்கிறார் என்று 2600 ஸ்லோகங்கள் வந்த போதும் அதை இன்றுவரை மநு சொன்னதாகவே எழுதுகிறோம். ஆராய்ச்சியாளர்கள் மட்டும் இது ‘ஒரிஜினல் மநு நூல் அல்ல’; பிற்காலத்தில் அது பிருகு முனிவரால் அப்டேட் UPDATE செய்யப்பட்டது என்று சொல்லுகிறார்கள் . இந்திய அரசியல் சாசனம் அம்பேத்கார் தலைமையிலுள்ள குழுவால் 1950ல் உருவாக்கப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேலான திருத்தங்கள் செய்யப்பட்டபோதிலும் அதை 1950ம் ஆண்டு அரசியல் சாசனம் என்றே நாம் அழைக்கிறோம்.
இவைகளைப் பார்க்கையில் மரீசி முனிவர் சொன்னதாக விநாயக கவசம் முடிந்தாலும் கவசத்தில் வராத முன்னுரை காசிப முனிவர் சொன்னதாகக் கூறுவதால் நீங்கள் சொல்லுவது சரி. இதையும் அந்தக்கட்டுரையின் பிற்பகுதியில் சேர்த்துவிடுகிறேன். நன்றி.
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நம் கண் முன்னாலேயே வாழ்ந்து உலகை உயர்த்திய மகான்கள் ஏராளம். இவர்களில் அரவிந்தர் புதிய ஒரு பொன்னான உலகத்தை சிருஷ்டிக்கத் தன்னை அர்ப்பணித்த பெரும் மஹரிஷி!.
அரவிந்தப் புதிர்
சென்ற நூற்றாண்டு கண்ட பெரிய மஹரிஷி அரவிந்தர்.
ஆனால் அவரை உலகம் முழுதுமாக இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அல்லது புரிந்து கொள்ள முடியவில்லை.
அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதத் துடித்த ஒரு அன்பர் அவரை அணுகிய போது அவர் சொன்ன பதில்: என் வாழ்க்கை மக்கள் பார்க்கக் கூடிய அன்றாட வாழ்க்கை நிகழ்வில் இல்லை” என்று பதில் கூறினார்.
அது அகத்தின் மூலம் அண்ட பிரபஞ்சத்தில் ஏற்படுத்திய மகத்தான முன்னேற்றம் என்பதாலும் பிரம்மாண்டமான சக்தியை யோகத்தின் மூல்ம் பூமியில் இறக்க முயன்ற மஹா யாகம் என்பதாலும் அநத வாழ்க்கையை மேற்பார்வையாகப் பார்த்து உணர முடியாது;அதை எழுதி விவரிக்க முடியாது. அரவிந்தர் விடுவிக்க முடியாத ஒரு புதிர்!
அவரது அணுக்கத் தொண்டராக வாழ்ந்தவர் நிரோத் பரன்.
சுமார் 4000 கடிதங்களை அரவிந்தரிடமிருந்து பதிலாகப் பெற்றவர்.
103 வயது என்ற அதிசயமான நிறை வாழ்வை வாழ்ந்தவர் அவர்.
அவரிடம் அரவிந்தர் ஒரு சமயம் நான் காலத்திற்கு முன்பாகத் தோன்றிப் பிறந்து விட்டவன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அரவிந்த ஞானம்
அவரது ஞானம் யாராலும் அளக்க முடியாத அளவு எல்லையற்றது. அவர் தொடாத நல்ல பொருளே இல்லை. விளக்காத விஷயமே இல்லை.
அரவிந்த அன்னை ஒரு முறை இப்படிக் குறிப்பிட்டார்: “அவர் டைப்ரைட்டர் முன்னால் அமர வேண்டியது தான்; அனைத்து பிரம்மாண்டமான ஞானமும் தட தடவென அருவி போல அங்கு வந்து விழும்” என்றிருக்கிறார்.
அன்னை அவர்களே தன்னாலும் அவரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார். சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் அவருடன் ஆஸ்ரமத்தில் இருந்தாலும் அவரை முழுமையாகப் புரிந்து கொண்டவள் என்று சொல்ல முடியாது என்றிருக்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு பெரும் மஹரிஷியைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து அவரது நூல்களைப் படிக்க வேண்டும்; அவரது உபதேச மொழிகளை ஓர்ந்து உணர்ந்து கடைப்பிடித்தல் வேண்டும்.
அவரது அனுபவங்களும் அறிவுரைகளும் பொக்கிஷம் போல அப்படியே நமக்குக் கிடைத்துள்ளன என்பது இறைவனின் திருவருளாளும் நமது அதிர்ஷ்டத்தினாலும் என்றே கொள்ளலாம்.
அரவிந்த கோஷ் என்ற இயற்பெயர் கொண்ட மஹரிஷி அரவிந்தர் 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் கிருஷ்ண தன கோஷுக்கும் ஸ்வர்ணலதா அம்மையாருக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். தனது சகோதரர்களோடு டார்ஜிலிங் லோரெட்டோ கான்வெண்டில் சேர்ந்து படித்த அவர் 1879ஆம் ஆண்டு மேற்கல்வி கற்பதற்காக அவர்களுடன் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜில் சேர்ந்தார். 250 பேர் எழுதிய ICS தேர்வில் 11வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். ஆனால் கிங்ஸ் காலேஜில் பயிற்சிக்காக சேர்ந்த அவர் அதில் ஆர்வம் இன்றி வேண்டுமென்றே தானாகவே தகுதியை இழந்தார்.
இந்தியாவின் சுதந்திர உத்வேகம் அவரை உந்தவே அங்குள்ள ரகசிய சங்கத்தில் உறுப்பினரானார். 1893இல் இந்தியா மீண்ட அவர் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடலானார். அவர் திரும்பிய கப்பல் விபத்துக்குள்ளாகி அவர் மறைந்தார் என்ற ஒரு தவறான தகவலைக் கேட்ட அவர் தாய் ஸ்வர்ணலதா தேவி மனம் பாதிக்கப்பட்டு நோயாளியானார்.
இந்தியா திரும்பிய அரவிந்தர் பரோடா சம்ஸ்தானத்தில் பணியாற்ற ஆரம்பித்தார். ஏழு ஆண்டுகள் அங்கு பணி புரிந்த பின்னர் வங்காள தேசிய கல்லூரியில் முதல்வராகப் பணியாற்ற ஆரம்பித்தார். அப்போது கர்சான் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரிக்கவே ஒரு பெரும் எழுச்சி மக்களிடையே ஏற்பட்டது. இதனால் கொதித்த அரவிந்தர் இந்திய சுதந்திரப் போரில் தீவிரமாக ஈடுபடலானார். பல்மொழிகளில் வல்லுநர் என்பதாலும், ஏராளமான நூல்களைக் கற்றதனாலும் நுட்பமான அறிவைக் கொண்டிருந்ததாலும் தேசீய எழுச்சிக்கென பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார். 1905ஆம் ஆண்டு வந்தே மாதரம் என்ற இதழை ஆரம்பித்தார். சந்திரபாலருடன் பல்வேறு கூட்டங்களிலும் பேசலானார். அவரது பேச்சாலும் எழுத்தாலும் மிரண்டு போன ஆங்கில அரசு அவரை 1907இல் கைது செய்தது. மீண்டும் 1908இல் அலிப்பூர் குண்டு வீச்சுக் கேஸில் அவர் கைது செய்யப்பட்டு ஒராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு கிருஷ்ண தரிசனம் கிடைத்தது. அத்துடன் சிறையிலேயே விவேகானந்தரின் குரலை அவர் கேட்டார். இனி என்ன செய்ய வேண்டும் என்ற ஆதர்சமும் அவருக்குச் சிறையில் கிடைத்தது. சிறையில் யோக சாதனையில் அவர் ஈடுபட்டார்.
அரவிந்தர் எள்ளளவும் பயமின்றி கர்மயோகி என்ற ஆங்கிலப் பத்திரிகை மற்றும் தர்மா என்ற வங்கப் பத்திரிகை ஆகியவற்றின் வாயிலாக தேசீய உணர்வை எழுப்பலானார்.
மீண்டும் பிரிட்டிஷ் அரசு அவரை கைது செய்ய முனைவதாக அவருக்குத் தகவல் கிடைத்தது. 1910இல் அவருக்கு அந்தராத்மாவின் குரல் தெளிவாகக் கேட்டது – “பாண்டிச்சேரிக்குப் போ” என்ற அந்தக் குரலைக் கேட்டு அவர் புதுவை நோக்கிப் பயணமானார். பிரெஞ்சு காலனியாக இருந்த புதுவைக்கு அவர் வரவே அவர் மீதான கைது வாரண்டை பிரிட்டிஷ் அரசு ரத்து செய்தது.
அரவிந்தர் 1910ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி புதுவை வந்து சேர்ந்தார். மஹாகவி பாரதியார் அவரை வரவேற்றார். எளிமையான ஒரு வீட்டில் முதலில் தங்கி இருந்த அரவிந்தர் தனது யோக சாதனையை ஆரம்பித்தார். பிரம்மாண்டமான இறைசக்தியை பூவுலகில் இறக்க முனையும் அந்த சாதனை மஹாயோகம் – Integral Yoga – எனப்பட்டது.
நாளடைவில் அரவிந்தரின் யோக ஆற்றலால் ஈர்க்கப்பட்ட சாதகர்கள் ஏராளமாகப் பெருகவே ஒரு ஆசிரமம் அமைக்கப்பட்டது. பாரிஸில் பிறந்த மிரா அல்பாஸா என்ற பெயரைக் கொண்ட அன்னை தம் தியானத்தில் ஒரு மஹாபுருஷரைக் கண்டார். அவர் அரவிந்தரே என்பதை உணர்ந்த அன்னை புதுவையில் வந்து தங்க ஆரம்பித்தார். 1926இல் அரவிந்த ஆசிரமத்தையும் அவரே நிறுவியதோடு தான் சமாதியாகும் 1973ஆம் ஆண்டு வரை அதைத் திறம்பட நிர்வகித்தும் வந்தார். 1968ல் உலக சமாதானத்திற்காகவும் நலனுக்காகவும் ஆரோவில் என்ற ஒரு நகரையும் அன்னை உருவாக்கினார்.
அரவிந்தர் தனது ஆன்மீக சிந்தனைகளை 1914 முதல் 1921ஆம் ஆண்டு முடிய ஆர்யா என்ற இதழில் எழுதி வரலானார். சாவித்திரி என்ற மஹா காவியத்தையும் படைக்க ஆரம்பித்தார்.
அவரது சாவித்திரி காவியம் 24000 வரிகள் கொண்ட, மரணத்தை வெல்ல வழி வகுக்கும் ஒரு மஹா காவியம்.
தன் இறுதி வரை அவர் பலமுறை தன் அனுபவத்தில் ஏற்படும் மேம்பாடுகளுக்குத் தக அதை மாற்றி மெருகேற்றிக் கொண்டே இருந்தார்.
அந்தக் காவியம் படிப்பதற்கு சுவையானது; ஆனால் கஷ்டமானது. புரிந்து கொள்ளச் சற்று சிரமமானது. பலமுறை படித்தால் ஒரு சிறிது பொருள் புரியும்; ஆன்மீக முன்னேற்றம் அடைய வழி வகுக்கும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கவசங்கள் பற்றிய ஒரு புஸ்தகத்தின் முன்னுரையைப் படித்தபோது அதை வெளியிட்டவர் “காஞ்சி சுவாமிகள் கவசங்கள் வேதத்திலேயே உள்ளது” என்று கூறியிருக்கிறார் என்று எழுதி இருந்தது. இப்பொழுது ரிக்வேதத்தின் ஜம்புநாதன் அச்சிட்ட தமிழ் மொழிபெயர்ப்பில் ஏழு பாகங்கள் முடித்துவிட்டேன்; இன்னும் மூன்று பாகங்களைப் படிக்கவேண்டும் ஆயினும் காஞ்சி சுவாமிகள் சொன்னதுபோல ஆங்காங்கே குறிப்புகள் வருகின்றன.
பிராமணர்கள் தினமும் சந்தியாவந்தனம் என்ற வழிபாட்டை/ துதியை மூன்று முறை செய்யவேண்டும் . அதில் மத்தியானம் செய்யும் துதியில் ‘பஸ்யேம சரதஸ் சதம்’ என்ற மந்திரம் வருகிறது. அதில் ‘சரதஸ் சதம்’ என்ற சொல் 100 ஆண்டுகள் நான் சரத் ருது எனப்படும் மழைக்காலத்தை அனுபவிப்பேன் ஆகுக என்று வேண்டுவதாகும் . நீர் இன்றி அமையாது உலகு என்று வள்ளுவரும் திருக்குறளில் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் மழையைப் போற்றுகிறார். இதை பிராமணர்கள் தினமும் மந்திரமாகச் சொல்கின்றனர். அடுத்துவரும் மந்திரத்தில் நீரின் மந்திர சக்தியும் வருகிறது (ஆபோ ஹிஷ்டா மயோ …). இங்கே கவசம் பற்றி மட்டும் காண்போம்.
‘100 ஆண்டுக் காலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வாழ்க’ என்று வேண்டும் மத்தியான மந்திரத்தில் கண், காது ,மனம் புத்தி, உடல் வலு வேண்டும் என்ற கவசப் பகுதிகள் வந்து விடுகின்றன.
இன்னும் பல இடங்களில் எனக்கு எது வேண்டும் என்ற இடத்தில் கை , கால், பாதுகாப்பு பற்றிக் குறிப்பாக வேண்டும் மந்திரங்கள் வருகின்றன
நான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தினமும் விநாயக கவசம் படித்து வருகிறேன். இதில் மரீசி முனிவர் ஒரு அருமையான லிஸ்ட் list கொடுக்கிறார்.
அந்த LIST லிஸ்டில்
“மதி, ஞானம், தவம் ,தானம் , மானம் , ஒளி , புகழ் , குலம் , வண் சரீரம்
தானம், தான்யம், , மனைவி, மைந்தர்” என்ற வரிகள் வருகின்றன.
இந்த லிஸ்ட் ரிக் வேதத்தில் தனித்தனி மந்திரங்களில் வருகிறது.
ஆனால் ,
கந்த சஷ்டிக் கவசத்தில் எதிரிகளை எப்படி அழிக்க வேண்டும் என்ற வரிகள் வருகின்றன. அதில் உள்ள விஷயம் அப்படியே ரிக்வேதத்தில் வசிஷ்டர் சொல்லும் ஏழாவது மண்டல மந்திரத்தில் வருகிறது.
இதோ ஒப்பிட்டுப் பாருங்கள் :–
முதலில் உடல் உறுப்புகளைக் காக்கும்படி வேண்டிவிட்டு பின்னர் காலை முதல் இரவுவரை எல்லா நேரங்களிலும் காக்கும்படி வேண்டிவிட்டு இந்த வரிகள் வருகின்றன.:-
“காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
…………………………………………………
இதில் எல்லா நோய்களிலிருந்து பாதுகாப்பும் பாவ மன்னிப்பும் வேண்டப்படுகிறது
இந்திர சோமர்களே! தீமை செய்பவனை ஒழியுங்கள்; யாகத்தில் போடப்படும் அவிஸ் எரிந்து சாம்பல் ஆவதைப்போல உங்கள் கோபம் அவர்களை சாம்பலாக்கட்டும்.. கடவுளை எதிர்ப்போரையும், கோணல் பார்வையுடைவனையும் மனிதர் மாமிசத்தை உண்பவனையும் வெறுத்து ஒதுக்குங்கள்.
மந்திரம் 3
துஷ்டர்களை ஆழ்ந்த இருட் குகைக்குள் அமுக்கி வெளியே வரமுடியாதபடி செய்யுங்கள்
20.நாய்களோடு வரும் கபடர்களை இந்திரன் வஜ்ராயுதத்தினால் அழிக்கிறான்
21.வனத்தில் மரங்களை வெட்டும் கோடாரியைப் போல, மண் பானைகளை உடைப்பது போல எதிரிகளை இந்திரன் அழிக்கிறான்
7-104- 22
ஆந்தை போலும் ஆந்தைக் குஞ்சு போலவும் உள்ள அரக்கர்களை அழித்து விடு
நாய் போலவும் சக்ரவாகப் பறவை போலவும் உள்ள அரக்கர்களை அழித்து விடு
பருந்தைப்போல, கழுதையைப் போல உள்ள அரக்கர்களை அழித்து விடு
23. ஆணவம் பிடித்த தம்பதிகளை உஷா தேவி விலக்குவாளாகுக பூமியிலும் வானத்திலும் எங்களுக்குத் துன்பம் நேரிடக் கூடாது.
24.
ஆண் வடிவம் எடுத்து வரும் அரக்கனைக் கொல்.
மாயையில் மகிழும் அரக்கியைக் கொல்
கபடத்தால் துன்புறுத்துவோரை அழி
கொலை செய்வோரின் தலைகள் வெட்டப்படட்டும் .
அவர்கள் இனி சூர்யோதயத்தையே காணாமற் போகட்டும்
7-104-25
இந்திரனே, சோமனே ! இருவரும் விழித்து இருங்கள்; சுற்றுமுற்றும் பாருங்கள் .
இம்சையே செய்யும் அரக்கர்கள் மீது\ ஆயுதத்தைச் செலுத்துங்கள்.
கந்த சஷ்டிக் கவசத்திலும் ரிக் வேதத்திலும் அகமும் புறமும் உள்ள எதிரிகள், பகைவர்கள், நம்மைத் துரத்தும் தீய குணங்கள் ஆகியன அழிந்து சுபீட்சம் பரவ வேண்டும் என்பதே. இரண்டு துதிகளுக்கும் இடையே 3000 ஆண்டு இடைவெளி இருந்தாலும் உடல் நலம், மன நலம் வேண்டுவதிலும் நம் மனத்திலும் வெளியிலும் உள்ள பகைவர்கள் ஓடி ஒழிய வேண்டும் என்று கோருவதிலும் ஒற்றுமையைக் காண்கிறோம். அவர்களை நாம் அரக்கர் என்போம், பேய் பூதம் என்போம்.
கந்த சட்டிக் கவசத்தில் நீண்ட நோய்களின் பட்டியல் ஒன்று உளது. இது போல அருணகிரி நாதரின் திருப்புகழிலும் வியாதிகள் பட்டியல் உளது . இவைகளை சொல்லி அழியட்டும் என்று வேண்டும்போது நாம் நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பாசிட்டிவ் positive thoughts எண்ணமும் மேம்படுகிறது.