Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
BOOKS INDIANS SHOULD READ – 22
R. Nanjappa
THE COLLECTED WRITINGS OF DHARAMPAL-4.
Chapter 9 – Part 1
Indigenous Indian Education in the Eighteenth Century.
We saw in the previous post that the British colonial powers gathered lot of information
and statistics about the actual state of Indian education prevailing in the areas under
their administration. But their purpose was not to understand, improve or build upon it,
but supplant it. Two impulses drove them: to evangelise, using education; and to Westernise
(which would achieve the same result indirectly, as expressed by T.B.Macaulay.)
While the administrators in London initially welcomed the survey and the reports, initiated
by Governor Sir Thomas Munro, they dismissed them as of no consequence upon receipt.
The enormous amount of statistical and other information thus obtained merely gathered dust.
But they make interesting, and essential reading even today. Dharampal has included all
this material in his book, and has also provided statistical tables and analysed them.
We shall now look at qualitative aspects of the reports.
CASTE-WISE REPRESENTATION. Brahmins did NOT dominate
Contrary to popular perception, and consistent propaganda by vested interests, the
proportion of the twice-born [Brahmins and Vysyas] students was quite low. It was lowest
in the Tamil speaking areas, from 10% in North Arcot to 23% in Madras, while Sudras and
other castes ranged from 70% in Salem to 84% in Tinnevelly. This was more or less
representative of the whole country. In Malayalam speaking Malabar, the twice-born students constituted less than 20%,
Muslims 27%, the Sudras and others constituted 54%. In Kannada speaking Bellary, Brahmin and Vysya students constituted 33%, while the
Sudras and others constituted 63%. In Oriya speaking Ganjam, the Brahmin and Vysya students formed 35%, while the Sudras
and others formed 63%.
It is in the Telugu speaking areas that the Brahmin students formed a major portion, from 24%
in Cuddapah to 46% in Vizagapatam. Vysya students formed 10.5% in Vizagapatam to 29%
in Cuddapah. Sudra students formed 35% in Guntoor to over 41% in Cuddapah and Vizag. In Andhra, the Brahmin boys took up Vedic studies, after learning reading and writing in the
general schools.
LANGUAGES TAUGHT
Local languages predominate
The language of the area predominated. But there were also schools teaching languages
such as Grantham, Hindvee ( Hindustani), Persian. Coimbatore had 10 schools teaching Persian.In North Arcot, 365
schools taught Tamil, while 201 schools taught Telugu. Bellary had equal number of Kannada
and Telugu schools, and also 23 Marathi schools. In Madras Presidency there were 10
schools teaching English, 7 of them in Arcot.
AGE OF ENROLLMENT, SCHOOL TIMINGS AND DURATION OF STUDIES
The boys entered school generally at the age of 5 in the case of Brahmins, at 6 to 8 in the
case of others. Duration of study varied from 5 to 15 years, 5 or 6 years being common. The
Collector of Madras reported:
“It is generally admitted that before they attain their 13th year of age, their
acquirements in the varied branches of learning are uncommonly great.”
The schools functioned generally from 6AM till sun set with two breaks for lunch.
HIGHER LEARNING There were institutions of higher learning, though these were not called ‘colleges’. A total of
1094 were reported in Madras Presidency. Rajhamundry had 279, Coimbatore 173,
Guntoor 171, Tanjore 109, North Arcot 69, Salem 53,Chingleput 51, etc
LEARNING BY PRIVATE TUITION
The practice of learning by private tuition was widespread. The Brahmin boys generally
learned the Vedas and allied subjects only by private tuition. In the Malabar, Theology & Law,
Metaphysics, Astronomy, Ethics, Medical Sciences were taught by private tuition. It is
generally Sudra students who took up Astronomy and Medical sciences. British doctors
determined that it was the Barbers who excelled in surgery. Brahmin boys formed a very small portion of those engaged in higher studies, and they only
specialised in Theology, Metaphysics, Ethics and Law.
மேலே கண்ட தலைப்பை பார்த்து பயப்பட வேண்டாம் இந்த கை கால் போற விஷயமல்லாம் நமக்கல்ல, நட்சத்திரங்களுக்காம்…….
காலற்ற,உடலற்ற,தலையற்ற நாட்கள் என்றால் என்ன ???
தலையற்ற நாட்கள் கார்த்திகை, உத்திரம், உத்திராடம்.இந்த மூன்று நடசத்திரங்களும் ஒரு ராசியில் முதல் பாதத்தில் ஆரம்பித்து மற்ற மூன்று பாதங்களும் மற்றொரு ராசியில் முடிகின்றன. இந்த நட்சத்திரத்தன்று மனை முகூர்த்தங்களோ,வெளி நாடு செல்லவோ கூடாது.
உடலற்ற நாட்கள் மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் இந்த மூன்று நடசத்திரங்களும் ஒரு பாதி ஒரு ராசியிலும் மறு பாதி இன்னனொரு ராசிலும் வருவதினால்
உடலற்ற ராசிகள் எனப்படும். இந்த நட்சத்திரத்தன்று ,வயிறு சம்பத்தப் பட்டவியாதிகளுக்கு மருந்து சாப்பிட ஆரம்பிக்கக் கூடாது.
காலற்ற நாட்கள் புனர் பூசம் விசாகம்,பூரட்டாதி, இந்த மூன்று நட்சத்திரங்களும் முக்கால் பாகத்தை ஒரு ராசியிலும் கால் பாகத்தை இன்னொரு ராசியிலும் வருவதினால் இவை காலற்ற நாட்கள் எனப்படும்
இந்த 9 நட்சத்திர தினங்களன்றும் மனைவியுடன் புணரக்கூடாது வெளி நாட்டு பயணங்களும் செல்லக் கூடாது.
மிக முக்கியமாக விவசாயிகளக்கென்றே சில நாட்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப் பட்டிருக்கிறது.அவையாவன
கீழ் நோக்கு நாள் அல்லது அதோ முக நட்சத்திரங்கள்
பரணி, கிருத்திகை, ஆயில்யம்,மகம்,பூரம்,விசாகம்,மூலம் பூராடம், பூரட்டாதி மேற்கண்ட நட்சத்திரங்களில் செய்யக் கூடியவை மஞ்சள்,கருணை, சேனை, போன்ற கிழங்கு வகைகள் அதாவது மண்ணின்கீழ் வளரக்கூடிய எல்லா பயிர்களும் மற்றும் கிணறு தோண்டுதல், குளம் வெட்டல், காய்கறிகளின் விதை நடுதல் போன்ற காரியங்கள் செய்ய மிகமிக நல்ல நாட்களாம்.
சம நோக்கு நாள் அல்லது திரியங் முக நட்சத்திரங்கள்
அஸ்வினி,மிருகசீரிஷம்,புனர் பூசம் அஸ்தம்,சித்திரை, சுவாதி,கேட்டை ரேவதி ஆடு, மாடு,குதிரை, யானை, போன்ற நாற்கால் பிராணிகளை வாங்குதல், விற்றல், உழவு,மேலும் வாசற்கால் வைக்க வீட்டிற்கு தளம் போட, சாவை போட ஆரம்பிக்க மிகமிக நல்ல நாட்களாம்
மேல் நோக்கு நாள் அல்லது ஊரத்வ முக நட்சத்திரங்கள்
ரோகிணி, திருவாதிரை, பூசம்,உத்திரம்,உத்திராடம்,திருவோணம் அவிட்டம், சதயம்,உத்ரட்டாதிமேல்நோக்கி வளரக்கூடிய தென்னை, பனை,மற்றும் எல்லா, செடி, மர, வகைகளும் நடுவதற்கு உதந்த நாள். மேலும் வீடு கட்ட, காம்பவுண்டு சுவர் அமைக்க வியாபாரம் தொடங்க, பதவி உயர்வு கேட்க மிகமிக நல்ல நாட்களாம்.
மல மாதம் ஒரே மாத த்தில் இரண்டு அமாவாசையோ, இரண்டு பவுர்ணமியோ அல்லது, ஒரு மாத த்தில், ஒரு பவுர்ணமியோ, அமாவாசையோ கூட வராமலிருந்தாலோ அது மல மாதமாம் அந்த மாதத்ததில் திருமணமோ, மற்றும் எந்த நல்ல காரியங்களும் செய்ய விலக்காம்
இத்துடன்பஞ்சாங்க விளக்கங்கள் முடிந்தது. மேலும்; ஏதாவது விளக்கம் தேவை என்றால் நான் விளக்க முயற்சிக்கிறேன்
இதுகாரும் நீங்கள் படித்த 5 பாகங்களை உபயோகப்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துகிறேன். இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி வணக்கம்
tags – மல மாதம், மேல் நோக்கு நாள், பஞ்சாங்க ரகசியங்கள் —-5;
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
திருநெல்வேலியிலிருந்து திரு R.C.ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஆரோக்கிய மாத இதழ் ஹெல்த்கேர்.
இது ஜூலை 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
அற்புத சிகிச்சை முறை அகு பிரஷர்! – 1
ச.நாகராஜன்
தொன்று தொட்டு இருந்து வரும் வர்ம வைத்தியம்!
இன்றைய நாட்களில் உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் அல்லோபதி மருத்துவமே அடிப்படை மருத்துவமாக உலகம் ஏற்றுக் கொண்டு விட்டது. இது அல்லாத மற்ற மருத்துவ முறைகள் மாற்று மருத்துவம் என்ற பெயரைப் பெற்று விட்டன.
அல்லோபதி வைத்தியம் தோன்றிய காலம் சமீப காலமே. ஆனால் தொன்று தொட்டு இருந்து வந்த மருத்துவ முறைகள் மாற்று மருத்துவமானது காலக் கொடுமையே!
என்றபோதிலும் உடலில் அறுவைச் சிகிச்சை போன்றவை வியத்தகு முறையில் முன்னேறி இருப்பது அறிவியல் வளர்ச்சியினாலேயே என்பதை எவரும் மறுக்க முடியாது.
பழைய மருத்துவ முறைகளையும் அல்லோபதி மருத்துவத்தையும் நன்கு அறிந்த ஒரு டாக்டர் அபாரமான அபூர்வமான குணப்படுத்தும் சக்தியைக் கொண்டிருப்பார்.
அவருக்கு சித்த மருத்துவம், மூலிகைகளின் ஆற்றல், வர்ம வைத்தியம் அல்லது அகு பிரஷர், அகு பங்சர், ஹொமியோபதி, யோக சிகிச்சை, மந்திர ஆற்றல் சிகிச்சை, மலர் மருத்துவம், முத்ரா விஞ்ஞானம் போன்றவை தெரிந்திருந்தால் அவர் டாக்டர் என்ற நிலையிலிருந்து மாறி வியக்கத் தகும் மகான் நிலைக்கு உயர்கிறார்.
அகு பிரஷர் என்ற மாற்று மருத்துவம் பழைய காலத்தில் இந்தியாவில் இருந்து வந்த ஒரு மருத்துவ முறையே.
உடலில் இருக்கும் வர்மப் புள்ளிகளையும் சக்தி நாளங்களையும் அறிந்து அதன் மூலம் உடல் நோய்களை அறிபவர் வர்ம வைத்தியம் தெரிந்தவர்.
கரத்தாண்டகக் கலை!
இதில் எனது ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்பது ஒரு சுவையான தகவல்.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் இருந்த போது, கராத்தே பற்றியும் யோகா பற்றியும் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அந்த நண்பர் கரத்தாண்டகம் என்பதைப் பற்றிக் கூறி இது கராத்தேயை விட சக்தி வாய்ந்தது, எதிராளியின் வர்மப்புள்ளியைத் தாக்கும் கலை என்றார்.
இந்தக் காலத்தில் இதை யார் தெரிந்து வைத்திருக்கப் போகிறார் என்று நான் கூறிய போது அவர் கரத்தாண்டகம் கணபதியை உங்களுக்குத் தெரியுமா என்றார்.
தெரியாது என்ற பதிலைக் கேட்டவுடன் அவர் கரத்தாண்டகம் கணபதி அவர்களை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன் என்றார்.
அவரைச் சந்தித்தேன்.
வர்மப் புள்ளிகள் என்றால் என்ன, அவற்றை அறிவதால் என்ன பயன்கள் என்று கேட்ட போது பதில் சொல்லாமல் அவர் என் வலது கையை ஒரு இடத்தில் அமுக்கினார்.
அவ்வளவு தான், எனது நடு விரல் சடக்கென நிமிர்ந்து கொண்டது. என்ன செய்தாலும் அது இயல்பான நிலைக்கு வரவே இல்லை.
ஆச்சரியத்துடன் இது என்ன, எப்படிச் செய்தீர்கள் என்று கேட்டேன்.
உடனடியாக் கையில் ஒரு இடத்தை அமுக்கினார். இயல்பு நிலைக்கு விரல் வந்து தனது வழக்கமான இயக்கத்தை மேற்கொண்டது.
அவர் வர்மப் புள்ளிகளையும் அதன் ஆற்றல்களையும் உடலில் நோய் ஏற்பட்டால் அவற்றைக் கண்காணித்துச் சீர் படுத்துவதன் மூலம் நோய்களைக் குணப்படுத்தலாம் என்றும் கூறினார்.
அத்தோடு தற்காப்புக் கலையில் எதிராளி எந்த ஆயுதம் வைத்திருந்தாலும் வர்மப் புள்ளிகளைத் தாக்குவதன் மூலம் அவரைச் செயலிழக்க வைக்க முடியும் என்று கூறி விட்டு சில பயிற்சிகளைச் செய்து காண்பித்தார்.
வியந்தேன்.
அவரைப் பற்றி உடனடியாகக் கட்டுரை எழுதினேன். அது வெளியான இதழையும் அவருக்குக் கொடுத்தேன். மகிழ்ந்தார்.
அதிலிருந்து வர்மக் கலை பற்றிய ஆர்வம் அதிகரித்தது.
இப்போது அகு பிரஷர், அக்கு பங்சர் உலகெங்கும் பரவிய ஒரு மாற்று மருத்துவ முறையாகி விட்டது.
இதை அல்லோபதி சிகிச்சையுடன் இணைந்து செய்கின்ற போது அபார பலனைக் காண்பதாக நோயாளியும் அவருக்குச் சிகிச்சை அளித்த டாக்டரும் இணைந்து கூறுகின்றனர்.
அகுபிரஷர் பற்றிய சில அடிப்படை விவரங்கள்!
முதலில் அகுபிரஷரைப் பற்றி அடிப்படை கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1.அகுபிரஷர் வந்த நோய்களைப் போக்க வல்லது. வரும் நோயை அது தீவிரமாகுமுன் தடுக்க வல்லது.
2. உலகில் ஏராளமானோர் இப்போது அகு பிரஷர் சிகிச்சை முறையை மேற்கொண்டு அற்புதமான முறையில் குணமடைந்து விட்டதாகக் கூறுகின்றனர்.
3. உடலின் மேற்பகுதியில் உள்ள சில சக்திப் புள்ளிகளை அழுத்தி, தூண்டி விட்டு, செயல்பட வைப்பதே அகு பிரஷர் முறை. இது தொன்றுதொட்டு பழைய காலத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு முறை.
இந்தியா, சீனா, இன்னும் உலகின் பல பகுதிகளில் உள்ள பழங்குடியினர் கடைப் பிடித்து பயனடைந்த முறையும் கூட!
4. இதில் அற்புதமான ஒரு உண்மை – இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என்பது தான்.
5. 1972இல் சீனாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் இந்த முறை மீது அலாதி ஆவலை வெளியிட்டார். அவருடன் அவர் மனைவி ‘பேட்’ இதனால் கவரப்பட்டார். நாடு திரும்பியவுடன் நிக்ஸன் இதை அமெரிக்கர்களின் கவனத்திற்குக் கொண்டு வரவே இந்த சிகிச்சை முறை அங்கும் பரவலானது. இப்போது சீனா, இந்தியா, ஜப்பான், இலங்கை, கொரியா, இந்தோனேஷியா, மலாசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த சிகிச்சை முறை கையாளப்பட்டு வருகிறது.
6. அமெரிக்க டாக்டரான டாக்டர் வில்லியம் ஹெச். பிட்ஜெரால்டு DR William H. Fitzgerald – 1872-1942) இதை அறிவியல் முறையில் ஆராய்ந்தார். இது Zone therapy, Reflexology, Acu Pressure ஆகிய பெயர்களால் அறிமுகமாகியது. டாக்டர் வில்லியம் கனெக்டிகட்டில் உள்ள செயிண்ட் ஃபிரான்ஸிஸ் மருத்துவ மனையில் தொண்டை,மூக்கு பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்தார். இவர் தான் நவீன ‘ஜோன் தெராபி’யை அறிமுகப்படுத்தினார்.
7. டாக்டர் ஜோ ஷெல்பியும் அவரது மனைவியான டாக்டர் எலிஸபத் ஆன் ஷெல்பியும் இதில் ஆர்வம் காட்டினர். டாக்டர் ஜோ 12 அரிய புத்தகங்களை ஜோன் தெராபி பற்றி எழுதியுள்ளார். முதல் புத்தகம் 1917லும் கடைசி புத்தகம் 1942லும் வெளியானது.
8. அகு பிரஷர் சிகிச்சை உடலில் பாய்ந்தோடும் பிராண சக்தியை சமச்சீர் நிலையில் வைக்க வல்லது. இந்த பிராண சக்தியைத் தான் சீன மொழியில் சீ ஆற்றல் (Chi Energy) என்கின்றனர். உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும் அதை உடல் சக்தியே தீர்க்க வல்லது. இந்த இயற்கை சக்தியின் பாயும் ஆற்றலைப் புரிந்து கொண்டு தக்க முறையில் அதைப் பயன்படுத்தினால் தீர்க்க முடியாத வியாதியே இல்லை. இதை உரிய முறையில் செய்பவரே மிக அரிதாக இருக்கிறார்.
9. 5000 ஆண்டுகளுக்கு முன்பேயே கண்டு பிடிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்தக் கலை பற்றி முதலில் தீர்க்கமாக அறிந்து கொள்ள வேண்டும்; பின்னர் தகுந்த மருத்துவரை நாட வேண்டும்.
10. இந்தியாவில் இது எந்தக் காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு ஒரு சிறிய உதாரணத்தைக் கூறலாம்.
தொன்று தொட்டு பழைய காலத்திலிருந்தே அனைத்து இந்தியக் குடும்பங்களிலும் பெண்கள் காது குத்திக் கொள்வதையும் மூக்கு குத்திக் கொள்வதையும் அறிவோம். அங்கு துளைகள் மூடப்படாமல் இருக்க காதணிகளையும் மூக்குத்தியையும் அணிவதும் வழக்கமானது. அவர்களின் அழகும் பல்வேறு காதணிகளாலும் ஜொலிக்கு வைர மூக்குத்தியாலும் கூடியது! இந்த ரெப்ளக்ஸ் புள்ளிகள் இருக்கும் இடங்களையும் அவற்றை சமச்சீர் படுத்த வேண்டிய அவசியத்தையும் அறிந்த பழைய காலப் பெரியோர் கையில் வளைகள், விரல்களில் மோதிரம், கழுத்தில் தங்க நகை, காலில் மெட்டி, இடுப்பில் ஒட்டியாணம் போன்றவற்றை அணிய அறிவுறுத்தினர். இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை அகுபிரஷர் மீதான நவீன அறிவியல் ஆராய்ச்சி மூலம் அறிய முடிகிறது.
இன்னும் சில அபூர்வமான அரிய தகவல்களை அடுத்துக் காண்போம்!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com ச்
தாமிரம் பற்றிய சுவையான விஞ்ஞான , வரலாற்று விஷயங்கள்
பிரபஞ்சத்திலுள்ள 118 மூலகங்களில் ஏற்கனவே 26 மூலகங்கள் பற்றி எழுதினேன். இன்று 27 ஆவது ,, மூலகமாக தாமிரத்தை எடுத்துக் கொள்வோம் . தமிழில் இதை செம்பு (COPPER) என்று கூறுவோம். நாணயங்களிலும் மின்சாரக் கம்பிகளிலும்,,பிராமணர்கள் கோவில்களில் புழங்கும் பாத்திரங்களிலும் தாமிரம் இருப்பதால் இதை அறியாதோர் எவருமிலர். தங்கத்தில் இதைக் கலக்கக்கலக்க அதன் ‘காரட்’ குறைந்து கொண்டே வரும் .
முதலில் ஒரு சுவையான விஷயம். ஏழையானாலும் பணக்காரன் ஆனாலும் எல்லோருக்கும் ரத்தம் சிவப்பு நிறமே என்று வசனம் பேசுவோம்.அது உண்மைதான். ஆனால் நீல வர்ண ரத்தம் உண்டு என்பது பலருக்கும் தெரியாது. கடலில் வாழும் ராட்சச பிராணி ஆக்ட்டோபஸ் (OCTOPUS) . இதற்கு எட்டுக்கால்கள் இருக்கும். இதன் ரத்தம் நீல நிறத்தில் இருப்பதைப் பார்த்து விஞ்ஞானிகள் வியந்தனர். ஆக்சிஜன் என்னும் உயிர்வாயுவை எல்லா ‘செல்’களுக்கும் எடுத்துச் செல்ல ஹிமோக்ளோபின் (HAEMOGLOBIN) என்னும் சிவப்புப் பொருள் தேவை. இதனால்தான் மனிதர்களின் ரத்தம் சிவப்பாக இருக்கிறது. மனிதனை விட பலமடங்கு பெரிதாகவுள்ள ஆக்டொபஸுக்கும் ஆக்சிஜன் தேவைதான் . அதன் உடலில் ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் பணியை ஹீமோசயனின் (Hemocyanin) என்னும் நீல வர்ண ரசாயனப் பொருள் செய்கிறது .
இரண்டாவது சுவையான விஷயம் நாணயம் பற்றியது. அமெரிக்காவில் தங்கம் போன்று ஜொலிக்கும் ஒரு தாமிர நாணயத்தை வெளியிட்டனர். எவரும் அதை பயன்படுத்தாமல் பெட்டிக்குள் பூட்டிவைத்து பதுக்கிவிட்டனர்.
இதை 88 சதவிகித தாமிரம், 6 சதவிகித துத்தநாகம், 4 சதவிகித மாங்கனிஸ் 2 சதவிகித நிக்கலில் தயாரித்தனர் ; அட்டகாச ஜொலிப்பு! தங்கத்துடன் போட்டா போட்டி!!1500 கோடி நாணயங்கள் அச்சடித்தனர் . ஒரு சில மட்டும் வெளியே புழங்கின ; மற்றவை எல்லாம் ஒளிந்துகொண்டன !
மூன்றாவது சுவையான விஷயம் ஏற்கனவே எழுதியதுதான். தாமிரத்துக்கு பாக்டிரியாக்களைக் கொல்லும் சக்தி அதிகம் என்பது ஆஸ்பத்திரிகளில் உள்ள பித்தளை, வெண்கல கைப்பிடிகள் முதலியவற்றை மாற்றியதில் தெரிய வந்தது (கீழேயுள்ள பழைய கட்டுரை இணைப்பில் காண்க)
****
உடலுக்கு தாமிரம் தேவை
நமது பூத உடலுக்கும் தாமிரம் தேவைதான். ஆனால் எல்லா உணவுகளிலும் அது இருப்பதால் பஞ்சமே இல்லை. நமது உடலில் பத்து வகையான ஹார்மோன்களில் இது உள்ளது . உடலுக்கு ஒரு நாளைக்கு 2 மில்லி கிராம் போதும். தாமிரச் சத்து குறைந்தால் என்ன ஆகும் என்று சில தொண்டர்களை வைத்து ஆராய்ந்தனர். அவர்களுக்கு கொலஸ்ட்ராலும் , ரத்த அழுத்தமும் அதிகரித்தது; குளுகோஸை ஜீரணிக்க முடியவில்லை.
கடல் பிராணிகள், மாமிச உணவு எல்லாவற்றிலும் இது இருக்கிறது. சூரிய காந்திச் செடியின் விதைகள், பாதாம் பருப்பு , வால்நட், மற்றும் பிரேசில்நட் வகைளிலும் இது அதிகம் இருக்கிறது.
வில்சன் நோய், மெங்கே நோய் (Genetic Disease : Wilson’s Disease, Menke’s Disease)முதலிய மரபியல்/ பரம்பரை நோய்கள் உடையோருக்கு தாமிர ஏற்பு சக்தி இல்லை அல்லது குறைவு என காணப்பட்டது. எகிப்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே கண் நோய்களுக்கு தாமிர உப்புக்களை மருந்தாகப் பயன்படுத்தினர்.
****
வரலாற்றில் தாமிரம்
உலக வரலாற்றில் இது சிறப்பிடம் பெற்றுள்ளது. 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே இராக் நாட்டில் இதை பயன் படுத்தினர். இயற்கையாகவே இது உலோகமாக கிடைத்த இடங்களும் இருந்தன. மின்னசோடாவில் (USA) 420 டன் எடையுள்ள தாமிரக் கட்டி 1857ல் கண்டு எடுக்கப்பட்டது இதை உருக்குவதும், கம்பியாக நீட்டுவதும் எளிது என்பதால் நகைகள், ஆயுதங்கள், பாத்திரங்கள் செய்வதில் அதிகம் பயன்படுத்தப்பட்டது.
வெண்கலம் (Bronze) என்னும் கலப்பு உலோகத்தில் தாமிரம்தான் அதிக அளவு இருக்கும். ஆதி மனிதர்கள் கற்கால நாகரிக்கத்தில் இருந்து உலோக காலத்துக்கு முன்னேறினர் இதை வெண்கலம் காலம் (Bronze Age) என அழைப்பர்.கி .மு. 3000 முதல் கி.மு. 1000 வரையான காலம் இது; சிந்து-சரஸ்வதி, எகிப்திய, மெசப்பொட்டேமியா நாகரிக மக்கள் வெண்கலத்தைப் பயன்படுத்தினர்
கி.மு .280-ல் ரோட்ஸ் (The Colossus of Rhodes) நகர துறைமுக வாயிலில் சூரிய தேவனின் (Apollo) 35 மீட்டர் உயர வெண்களைச் சிலை இருந்தது. உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது ஒரு பூகம்பத்தில் கீழே விழுந்தவுடன் மக்கள் அதை வெட்டி எடுத்து பழைய பாத்திர, பழைய இரும்புக் கடைகளில் விற்றுவிட்டனர்.
சீனாவில் கி.மு 1000 முதல் மணிகள் (BELLS) செய்ய வெண்கலம் பயன்பட்டது. ஆனால் அது மேலை நாடுகளுக்கு வர 2000 ஆண்டுகள் ஆயின.
தாமிரக் கம்பிகளை வினிகர் என்னும் புளிச்சகாடியில் தொங்கவிட்டால் அதில் நீல நிற காப்பர் அசிட்டேட் படியும் . இதை நிறம் ஏற்றவும், களிம்பாகவும் மேலை நாட்டினர் பயன்படுத்தினர்
வெப்பத்தையும் மின்சாரத்தையும் விரைவில் கடத்துவதால் கெட்டில்கள், மின்சாரக் கம்பிகள் செய்யவும் பயன்பட்டன. இந்தியாவில் தாமிர சாசனங்கள் எழுதியது போல மேலை நாட்டில் இதில் வரைபடங்கள் தயாரித்தனர். வெள்ளி, தங்கத்துடன் கலந்து நாணயங்கள் உண்டாக்கினர்.
பச்சை நிறமுள்ள மாலகைட் (Malachite) என்னும் தாமிர தாது சலவைக்கல் போல பாலிஷ் செய்யப்பட்டு மேஜைகள், தூண்கள் ஆகியவற்றை அலங்கரிக்கின்றன. அதிகமான அளவு மின்சாரக் கருவிகள், கட்டுமானப் பணிகளுக்கும், வெண்கலம் தயாரிப்புக்கும் போய்விடும்.
தற்காலத்தில் இதை நிக்கல் உலோகத்துடன் கலந்து குப்ரோ நிக்கல் (Cupro-Nickel) நாணயங்களை அச்சடிக்கின்றனர்.
தாமிரம் கிடைக்கும் இடங்கள்
பிரிட்டனில் கார்ன்வால், அமெரிக்கா , கனடா , ஜாம்பியா, ஜைர் , ரஷ்யா , சிலி ஆகிய நாடுகளில் அதிகம் செம்பு கிடைக்கிறது இந்தியாவில் பல மாநிலங்களில் தாமிர தாது இருந்தாலும் ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் அதிகம் வெட்டி எடுக்கப்படுகிறது.
இதன் பெயர் உடைய நாடு சைப்ரஸ் (Cyprus) தீவு ஆகும். அந்த நாட்டை கிரேக்கர்கள் குப்ரோஸ்(Kupros) என்று அழைத்ததால் அதிலிருந்து குப்ரம், காப்பர் (Cuprum – copper) என்ற சொற்கள் உருவாயின .
தென் அமெரிக்காவின் சிலி (Chile) நாட்டில் பாக்ட்டீரியாக்களை பயன்படுத்தி இந்த உலோகத்தை எடுக்கின்றனர். தாமிர தாதுவை அரைத்து தூள் போல, பெரிய தொட்டிகளில் வைத்து வெப்பப்படுத்துவர். இரண்டு வகை பாக்டிரியாக்கள் அதை ஜீரணம் செய்து உலோகத்தைப் பிரித்துக்கொடுக்கும்.
அலுமினியத்தையும் தாமிரத்தையும் கலந்தால் தங்கம் போல பளபளப்பதால் அலங்காரப் பொருட்களில் அது இடம் பெறும் .தாமிரத்தையும் நிக்கலையும் கலந்தால் கடல் உப்பு நீர் அரிக்காது ஆகையால் கடலில் செல்லும் குழாய்களுக்கு உபயோகமாகிறது.
உங்களுடைய வீட்டை ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்தால் இந்த உலோகமோ அல்லது இது கலந்த கலப்பு உலோகமோ, பையில் ஒலிக்கும் காசுகளிலோ, பெண்களின் தங்க நகைகளிலோ இது ஒளிந்து கொண்டு இருப்பதை உணருவீர்கள் .மின்சாரக் கருவிகளைத் தவிர பூச்சி கொல்லி மருந்துகளிலும் இது இருக்கிறது
ரசாயன வகையில் இது ஒரு (Metal) உலோகம் . இதை எளிதில் கம்பியாக இழுக்கலாம்; தகடாகத் தட்டலாம். நாம் இழுத்த இழுப்புக்கு வரும் நமது நண்பன் இது.
ரசாயன குறியீடு – Cu
அணு எண் 29
கொதி நிலை- 1084 டிகிரி C
ஊருக்கு நிலை – 2567
இரண்டு ஐசடோப்புகள் இருக்கின்றன
தாவரங்களுக்கும் இது அவசியம் ;நோய்களைத் தடுக்கவும், விதை உற்பத்திக்கும் தேவைப்படுகிறது .
செப்பு என்னும் தமிழ்ச் சொல் சைப்ரஸ், குப்ரோஸ் என்பதிலிருந்து வந்ததா செம்மை நிறம் காரணமாக வந்ததா தாம்ர பரணி நதி , தம்பப்பண்ணி /இலங்கை) நாடுகளின் பெயர்கள் தாமிரத்திலிருந்து வந்தனவா என்பன ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.
27 May 2012 – Hindu saints have been using copper vessels for thousands of years. They keep water in it for drinking purposes. When Aluminium vessels …
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பஞ்சாங்க ரகசியங்கள் – 4
kattukutty
ஷடசீதி
ஷடசீதி, விஷ்ணு பதி , விஷு- என்றால் என்ன ??
நாம் பார்க்கும் பஞ்சாங்கத்தில், உதாரணமாக ஆனி மாதத்தை எடுத்துக் கொள்வோமே….ஆனி 1 ம் தேதி ஷட சீதி எனப் போட்டிருக்கும்
(பார்க்க சார்வரி வருட பாம்பு பஞ்சாங்கம் ஆனி மாதம் (15-07-2020) ஒன்றாம் தேதி)
அப்படி என்றால் என்ன ??? சிவனுக்கு “ஷடாங்கன்”என்று பெயர். ஒவ்வொரு ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதம் முதல் தேதியில் சிவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும். பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதம் முதல் தேதிகளிலும் ஷட சீதி புண்ய காலம் என்று போட்டிருக்கும்.
அதாவது அன்று சிவனையும் பாரவதியையும் வணங்கினால் சகல புண்ணியமும் கிடைக்கும்
விக்ஷ்ணுபதி
ஒவ்வொரு வருஷம் வரும் வைகாசி, கார்த்திகை, மாசி மாத முதல் தேதியில் விஷ்ணு பதி புண்ய காலம் என்று போட்டிருக்கும். அன்று விஷ்ணுவையும் லக்ஷ்மியையும் சேர்த்து வணங்கி வேண்டினால், மிக மிக புண்ணியமாம். ஏகாதசி விரதம் இருந்த புண்ணியமாம். கோ பூஜை செய்த விசேஷம்
விஷூபுண்யகாலம்
ஓவ்வொரு ஆண்டும் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதம் முதல் தேதி விஷு புண்ணிய காலம் என போட்டிருக்கும்.
மிக விசேஷமாக கொண்டாடுவது சித்திரை அதி காலை மூடிய கண்ணுடன் வந்து “கண்ணாடி மூலமாக” தெய்வத்தையும், பணம், வெள்ளரி பழம், ஆரஞ்சு, வாழை, பறங்கிக்காய் மற்றும் தேங்காய் காய்கறிகள் எல்லாவற்றையும் பார்ப்பார்கள். பார்த்து பெரியோர்களை வணங்கி பணம் பெறுவது வழக்கம். இதற்கு “விஷூக்கனி நோட்டம்”என்பார்கள். மற்ற ஆடி ஐப்பசி, மாதம் தெய்வதரிசனம் செய்வார்கள்.
தை மாதம் முதல்நாள் ஐயப்பனை சபரிமலை சென்று தரிசிப்பார்கள்;
இந்த மூன்று புண்ணிய காலங்களும் ஒவ்வொரு மாதமும் காலை 1.30 முதல் 10 மணி வரை மட்டுமே.
ரஜஸ்வலைநாள்
பெண்களுக்குப் போல நதிகளுக்கும் “வருடத்திற்கு மூன்று” நாட்கள் விலக்கு உண்டாம்.
அது ஒவ்வொரு வருடமும் ஆடி முதல் மூன்று நாட்களாம். அந்த மூன்று நாட்களில் யாரும் நதிகளில் குளிப்பதில்லை ,
பூஜை, திதி செய்வதற்கும் நீர் எடுப்பதில்லை. எல்லா நதிகளுக்கும் இந்த தீட்டு உண்டு,
ஆனால் பிரும்மபுத்ரா நதிக்கும் கங்கைக்கும் மட்டும் தீட்டு கிடையாது. உதாரணம்- பாம்பு பஞ்சாங்கம் சார்வரி வருடம் ஆடி மாதம் வியாழக்கிழமை 1 ம்தேதி, (16-07-2020)பார்க்கவும், ரஜஸ் வலை நாள் என்று போட்டிருக்கும்
கர்ண வேதை
சனி, செவ்வாய் கிரகங்கள் நின்ற நட்சத்திரங்களுக்கு 2, 15, 16, உள்ள நட்சத்திரங்கள் கர்ண வேதை எனப்படும். இந்த நாட்களில் காது குத்தக் கூடாது. அந்தக் காலத்தில் காது குத்தும் பழக்கம் இருந்தது.
சிறந்த முறையில் கல்வி பயில காது குத்துதல் மிக மிக அவசியம். உதாரணம் தற்சமயம் வரும் 10 ம், 12ம், வகுப்புப் பெண்களே முதலிடம் வருகிறார்கள். இப்போதாவது புரிகிறதா இரகசியம், நீங்கள் சொல்லலாம் அவர்கள் அழகுக்காக தோடு போட்டுக் கொள்வதாக.
கேரளாவில் தான் இந்தியாவிலேயே அதிகம் படித்தவர்கள். அங்கே ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, பிறந்த 28 ம் நாள் காதை குத்தி விடுவார்கள்
அமிர்தகடிகை (உத்திரகாலாம்ருதம்)
ஒவ்வொரு நாளும் ஒரு நட்சத்திரம் வருகிறது. வியாதி வந்தவர்கள் மருந்து சாப்பிடவென்றே சில நேரம் உண்டு. அந்த நேரம் பார்த்து மருந்து உண்டு பூரண குணமடைந்து நீண்ட நாள் வாழ்ந்தார்கள் அந்த நல்ல நேரம் தான் இது. எல்லாம் நாழிகையில் இருக்கும். இதை சூரியோதயத்திலிருந்து கணக்கிட வேண்டும். (ஒரு நாழிகை எனபது 24 நிமிடம் )
இஷ்டி(குமார சாமியம்)
இஷ்டி என்றால் யாகம் எனப் பொருள். இது அமாவாசை அல்லது பவர்ணமி கழிந்த இறுதிப் பகுதி அதாவது 4 வது பாகம் ஆகும். இது பிரதமை முதல் மூன்று பாகத்தைச் சேர்த்து ஹோமம் செய்யச் சிறந்த நேரம். சிறந்த பலனும் கிடைக்கும்!
IT is evident from the above that Brahmins did not dominate or monopolise
The education scene. The main beneficiaries were the Sudras.
The reports and the statements attached to them drawn up by the collectors under
instruction from the Governor are comprehensive, and also reveal qualitative aspects.
They cover the qualification of the teachers, how and how much they were paid, how the
poor students managed, the subjects covered , the number and types of books taught, etc. It has to be remembered that at that time people mostly followed their traditional
occupations, which they freely learnt at home (much as the apprentices did in England).
They did not have to pay for learning the trade or craft which was the means of livelihood.
Thus the nature of even indigenous schooling was academic, and did not affect their
professions. Only the Brahmins went on to study their religious literature because
they earned their bread thereby.
Why did this system disappear?
The British altered the general economic and financial arrangements drastically. The
village communities lost their financial independence due to centralisation. They lost
their cohesiveness and organic nature. They were unable to maintain the schools.
The economy and along with it the old professions declined, and could no more provide
sustenance. The Indian schools were left to die.
At the same time, the schools introduced by the British were unaffordable for most.
Gandhiji pointed this out in his 1931 address.
” The village schools were not good enough for the British administrator, so he came out
with his programme. Every school must have so much paraphernalia, building, and so forth.
Well, there were no such schools at all. There are statistics left by a British administrator,
which show that, in places where they have carried out a survey, ancient schools have
gone by the board, because there was no recognition….and the schools established after
the European pattern were too expensive for the people.
Too expensive for the people! That is why large sections of people (including Brahmins)
could not afford formal education in the schools run by the government. To this day, the
schools we have established after the European pattern remain expensive!
There are many qualitative aspects of the indigenous schools and interesting information
that the reports bring out. We may see them separately. In the meantime every educated
Indian ought to study these reports to know the truth first hand, and become free from the
falsehoods that have been dished out to us in our system, by the politicians, and through
the media.
Many Brahmins themselves have developed a defensive complex- a guilty conscience-
as if their forefathers had done something wrong by denying education to the other
communities. Dharampal’s book contains all the original reports which are full of actual
statistics. And they show that Brahmins did not control or dominate or monopolise
education, and that Sudras derived the maximum benefit under the indigenous
system. Brahmins mainly concentrated on religious education. General education was open
to all, and was supported by common village funds and charity, as we will see.
Indians in general were neither uneducated nor illiterate as the politicians and false
historians have been claiming. Indians should study this material in the original and
really understand things as they were. Only then can we call the bluff of the propagandist
முற்காலத்தில் கம்மியர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு காரை போட்டுக் கொள்ளக் கூடாது, நன்மை தீமை காலங்களில் இரட்டைச் சங்கு ஊதக் கூடாது, வெளியில் போகும் போது காலுக்குச் செருப்பு போட்டுக் கொள்ள கூடாது என்ற கடுமையான விதிகள் இருந்தன.
ஆனால் இந்த அநியாயத்தைப் பொறுக்காத கோனேர் மெய்கொண்டான் என்ற சோழன் இவற்றை நீக்கினான்.
நீக்கியதோடு மட்டுமல்லாமல் சாசனமாகப் பொறித்தான்.
கரூர் பசுபதி ஈஸ்வரர் கோவிலில் இந்த சாசனம் இருக்கிறது.
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ கோனேரின் மெய்கொண்டான் வெங்கால நாட்டுக் கண்மாளற்கு கரு-வது ஆடி மாதம் முதல் தங்களுக்கு நன்மை தீமைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி பேரிகை உள்ளிட்டவை கொட்டுவித்துக் கொள்ளவும் தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக் கொள்ளவும் சொன்னோம். இப்படி இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்வதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக் கொள்க. இவை விழுப்பாதராயன் எழுத்து.
இது தான் சாஸனம்.
S.I.I. V. III. P.I.P. 47 கோயமுத்தூருக்கு அடுத்த பேரூரிலும் இந்த சாஸனம் இருக்கிறது.
இந்தச் சமபவத்தைப் பெருமையாக கொங்கு மண்டல சதகம் தனது 90வது பாடலில் கூறுகிறது.
பாடல் இதோ:
இருப்புற்ற வீட்டுக்குச் சாந்திட்டுக் கொள்ள விரண்டுசங்கு
பொருள் : குடியிருக்கும் வீட்டுக்குக் காரை போட்டுக் கொள்ளவும், நன்மை மற்றும் தீமை காலங்களில் இரட்டைச் சங்கு ஊதவும், வெளியில் போகும் போது காலுக்குச் செருப்பு அணிந்து செல்லவும் இராஜ கட்டளை பெற்ற கம்மாளர் வாழ்வதும் கொங்கு மண்டலமே.
TAGS — கம்மியர், சாசனம், கரூர் பசுபதி ஈஸ்வரர் கோவில்