Books Indians Should Read -Chapter one – part 1 (Post N.8430)

WRITTEN BY R. NANJAPPA

Post No. 8430

Date uploaded in London – – – 31 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Books Indians Should Read

Chapter one – part 1
  The Clash of Civilizations

R. Nanjappa

Newspapers remain our main source of information on current affairs. However, not all of them are objective. Many represent some vested interests. They select the “news” they highlight and opinions and angles they project. They often mix news and views and so subtly try to influence public opinion. Our leading newspapers like The Hindu and The Times of India have of late become undisguisedly leftist, which do not give adequate space for differing views. [I have been a reader of Hindu for over 60 years, and of Times of India for over 40] They suppress or oppose the voice of Indian nationalism, and paint it in bad light. They adopt an openly anti-Hindu stance in the name of secularism, while not hesitating to exploit Hindu sentiments for their own profit!

Perhaps the biggest problem with newspapers is that they are shortsighted and obscure the long term perspectives. In the hunt for sensation, they suppress sense. They offer opinions, and not ideas. It is difficult to follow any event fully, or understand any issue adequately, on the basis of coverage in our newspapers. 


Books are necessary

It is therefore necessary for us to read books by knowledgeable writers. They may be academics, journalists or regular commentators or other public figures or interested writers. We may or may not agree with their views, or interpretation, but we may at least learn the facts. There are a few books which  are essential reading for Indians to appreciate the general socio-economic problems and trends as they emerge in the world, and affect India too in important ways.

Rise of the West: world through Western eyes

India and China were the leading lights of the world economy, contributing more than 70% of world GDP till the 18th century. But Europe has been on the ascendant from the middle of the 17th century, conquering and colonising the world. This happened on a wave of scientific advancement, technological innovations,  geographical discoveries, commercial exploitation of other peoples and their subjugation by military, religious and cultural imperialism.  The West imposed their interpretations on our history and culture, religion and philosophy. It is generally the Western way of economics and politics that prevails in the whole world today: separation of religion and state, secularisation of life, rising market economy and consumerism, etc. In the second half of the last century, many colonies became politically free, but continued with the same Western economic and cultural influences in the name of ‘modernisation’. Western ideas became global phenomenon, long before we knew of economic globalization.

West and East

The 20th century saw two challenges to Western hegemony in the form first of Soviet Union, and then Communist China. Though circumstances forced the US (and the democratic West) and USSR to be alongside each other in the Second World War, the world soon descended into the Cold War. With the collapse of the USSR, the cold war ended, the former USSR territory has disintegrated into fifteen independent countries.   

[ Alphabetically, the countries are: Armenia, Azerbaijan,Belarus, Estonia, Georgia, Kazakhstan, Kyrgyzstan, Latvia, Lithuania, Moldova, Russia, (11), Tajikistan, Turkmenistan, Ukraine, Uzbeksitan ] CC BY-SA 3.0 creative commons via Wikimedia commons.


China has emerged as an economic giant, adopting principles of capitalist production while continuing as a communist power. How do such matters affect India, which is also rising as an economic power?

Clash of Civilizations

Book Cover: 2016 Reprint

These issues are dealt with in this book. The author was a professor of political science at Harvard, and a thinker. Written in 1996, the book continues to be relevant today, as many of the developments anticipated in the book have actually taken place! 

The basic argument of Huntington is simple enough. The existence of the communist bloc had provided us the image of a world divided into the Democratic/Capitalist West and the Communist East. The collapse of the USSR has suddenly shown that the above division was but a temporary phase in the march of world history, dominated as it was by ancient civilizations!

Before the rise of colonial West, the world was divided on the basis of civilizations, and they all lived together. Colonialism imposed a different order but with its collapse, the old divisions are raising their head! Similarly, the Soviet Union controlled several ethnic-language-civilizational groups; with its collapse the old divisions have sprung into life again, dividing the countries and people along ethnic, religious and linguistic lines. For instance, the former Yugoslavia alone has split into seven countries along religious and ethnic lines! [Serbia, Croatia, Bosnia and Herzegovina, Slovenia, Montenegro, Macedonia, Kosovo. This is the power of civilizations Huntington speaks of! 70 years of brutal communist suppression could not stamp out the old civilizational instincts of the people under the USSR!]

                            To be continued


tags — books, Indians, read,

***

இராமானுஜரை ஆதரித்த கொங்கு பிராட்டியார்! (Post No.8429)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8429

Date uploaded in London – – –31  July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இராமானுஜரை ஆதரித்த கொங்கு பிராட்டியார்!

ச.நாகராஜன்

திரிபுவன சக்கரவர்த்தி என்றும் சுங்கம் தவிர்த்த சோழன் என்றும் பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன் என்றும் இப்படிப் பலவாறாகப் புகழப்படும் (முதலாம்) குலோத்துஙக் சோழன் அரசாண்ட காலம் அது.

அவன் வேண்டிக் கொண்டதால் தான் சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றி அரங்கேற்றினார்.

கி.பி. 1070ஆம் ஆண்டு பட்டம் தரித்த குலோத்துங்கன் 1119 முடிய அரசாண்டான்.

இதே காலத்தில் வாழ்ந்த இன்னொரு பெரும் அவதார புருஷர் இராமானுஜர்.

வைஷ்ணவத்தைப் பொறாத சில வித்வான்கள் சைவ வைஷ்ணவ வாத சபை ஒன்றை நடத்த வேண்டும் என்று தீர்மானித்தனர். அதில் வைஷ்ணவர்கள் தோல்வி அடைந்தால் ‘சிவனை அன்றி உயர்ந்தவர் வேறில்லை’ (சிவாத்பரேதரம் நாஸ்தி) என்று எழுதிக் கையெழுத்திட வேண்டும் என்று தீர்மானித்தனர்.

இந்த வாதில் கலந்து கொள்ள வைணவ ஆசாரியரான இராமானுஜர் வர வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.

இதை அறிந்தார் நடாதூராழ்வார். உடனே இதை இராமானுஜருக்கு அறிவிக்க வேண்டுமென்று தீர்மானித்து கூரத்தாழ்வானிடம் இதைச் சொன்னார்.

கூரத்தாழ்வான், இராமானுஜரிடம் சென்று அவரிடம், “அரசன் போக்கும் சரியில்லை. ஆகவே நீங்கள் வருவது உசிதமல்ல. நான் போய் வருகிறேன்” என்று சொல்லி விட்டு வாதுக்கான சபைக்குச் செல்ல ஆயத்தமானார். உடையவர் என்று போற்றப்படும் இராமானுஜரின் திரிதண்ட காஷாயாதிகளைத் தானே தரித்துக் கொண்டார்; கிளம்பினார். கூடவே பெரிய நம்பி உள்ளிட்ட இராமானுஜரின் சீடர்களும் சென்றனர்.

இராமானுஜரோ முதலியாண்டான் உள்ளிட்ட சீடர்களுடன் வெள்ளை உடையணிந்து மேல் நாட்டுக்குக் கிளம்பினார். நடந்தவாறே சென்ற அந்தக் குழு கொல்லி மலையை அடைந்தது.

கொல்லி மலைத் தொடரில், அங்கு லத்திவாடி (செருக்கலை) என்ற ஒரு கிராமத்தில் சில வேட்டுவர்கள் குழுவினரை வரவேற்று உபசரித்தனர். இங்கு நீங்கள் தங்கி இருக்கலாம் என்று கூறிய அவர்கள் அருகில் இருந்த ஒரு வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.

அந்த வீட்டில் இருந்த அம்மையார், அவர்களை வரவேற்று, முறைப்படி வணங்கி, “ உடையவரிடம் நான் சம்ஸ்காரம் பெற்றுள்ளேன். தளிகை (சமையல்) செய்கிறேன். அமுது செய்து அருளுங்கள்” என்றாள்.

குழுவினர் அந்த அம்மையாரிடம், “நீங்கள் எந்த இடத்தில் உடையவரைச் சேவித்தீர்கள்” என்று வியப்புடன் கேட்டனர்.

அதற்கு அந்த அம்மையார், “ இங்கு கொங்கு நாட்டில் பன்னிரெண்டு வருடம் பஞ்சம் ஏற்பட்டு வருந்திய காலத்தில் ஸ்ரீரங்கம் சென்று என் கணவருடன் வாழ்ந்து வந்தேன். அப்போது எம்பெருமானார் மாதுகர பிக்ஷைக்கு வருவதை மாடியிலிருந்து பார்த்தேன். உடனே கீழே வந்து பிக்ஷையிட்டு வணங்கினேன். சில காலம் கழித்து கொங்கு நாடு செழிப்புற்று விட்டது என்பதைக் கேள்விப் பட்டு உடையவரை அணுகி தாங்கள் அனுக்கிரகித்த மந்திரத்தை மறந்து விட்டேன், மீண்டும் உபதேசித்து அருள்க என்று வேண்டினேன். உடனே முறைப்படி சமாசிரணம் அருளப் பெற்றேன். நித்யப்படி பூஜைக்கு சுவாமிகளின் பாதுகை வேண்டுமென்று வேண்டினேன். அவரும் மகிழ்ச்சியுடன் அதைத் தந்தார். அதை இன்று வரை பூஜித்து வருகிறேன்” என்றார்

உடனே உடையவர், “அந்த மந்திரத்தைக் கொஞ்சம் சொல்” என்றார்.

சொல்லாவிடில் வைணவர்கள் தம் வீட்டில் புசிக்க மாட்டார்களே என்று எண்ணிய அந்த அமமையார் மெதுவாக அவர் காதில் உபதேச மந்திரத்தைக் கூறினார்.

வைணவர்கள், “உங்களுக்கு உபதேசித்தவர் இங்குள்ளவர்களில் இருக்கிறாரா பாருங்கள்” என்றனர்.

அனைவரையும் உற்றுப் பார்த்த அம்மையார் இராமானுஜரை நோக்கி, “தாங்கள் தான் என நினைக்கிறேன். ஆனால் அவர் திரிதண்டி காஷாயம் அணிந்திருந்தார். தாங்களோ வெள்ளை ஆடை அணிந்திருக்கிறீர்கள்” என்றார்.

அந்தப் பாதுகையை எடுத்து வாருங்கள் என்று இராமானுஜர் வேண்ட, அம்மையார் பாதுகையை ஏந்தி வந்தார்.

அதை அணிந்து பார்த்த இராமானுஜர் அது சரியாக இருப்பதைக் கண்டு தன்னுடைய பாதுகைகளே அவை என்பதைக் கண்டு கொண்டார்.

“இப்போது அனைவரும் அமுது அருந்த வாருங்கள்’ என்று அம்மையார் வேண்ட,இராமானுஜர், “ எனது பாதுகைக்கு நிவேதனமான அமுதை நான் உட்கொள்வது சரியல்ல” என்று உரைத்தார்.

ஏனையோரை அமுதுண்ணுமாறு பணித்த அவர் பாலுண்டு உறங்கினார்.

ஏனையோர் அமுதுண்டனர்.

பிறகு வீட்டுக் காரியங்களை முடித்த அம்மையார் தரையில் படுத்து உறங்க ஆயத்தமானார்.

அவரது கணவர், “ஏன் நீ தரையில் படுக்கிறாய்?” என்று வினவினார்.

“உடையவர் உள்ளிட்டோர் இங்கு எழுந்தருளியுள்ளார்கள். ஆனால் அவர மட்டும் உண்ணவில்லை.அதனால் வருத்தமுற்று இருக்கிறேன்”என்று பதில் சொன்னார் அம்மையார்.

“என்னால் ஏதேனும் ஆக வேண்டுமா?” என்று கேட்டார் கணவர்.

“சம்ஸ்காரம் செய்து கொண்டால் நாளை உணவு அருந்துவார்” என்றார் அம்மையார்.

மறுநாள் காலையில் சதிபதி இருவரும் முறைப்படி பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டனர். பிறகு அனைவரும் அமுதுண்டனர்.

அங்கேயே சில நாட்களைக் கழித்தார் இராமானுஜர்.

பிறகு திரிதண்டம், காஷாயம் அணிந்து மேற்றிசை நோக்கிக் குழுவினருடன் இராமானுஜர் கிளம்பினார்.

இப்படி இராமானுஜரை உபசரித்த கொங்கு பிராட்டியாரைக் கொண்டது கொங்கு மண்டலமே எனப் பெருமையுடன் கூறுகிறது 68ஆம் பாடலில் கொங்கு  மண்டல சதகம்.

பாடல் இதோ:

“சிவனே பரம்பிறி தில்லையெ னாதாற் சிரந்துணிக்க

உவந்தனன் சோழ னெனமறு வேடமா யோடிவந்து

கவன்றிடி ராமா நுஜன்றனைத் தேற்றியுங் காத்தளித்த

மவனகைக் கொங்கு பிராட்டிய ருங்கொங்கு மண்டலமே”

பாடலின் பொருள் :-

‘சிவபெருமான பரம் (துரிய மூர்த்தி), வேறு இல்லை’ எனக் கையெழுத்துப் போடாவிடில் சோழன் கழுத்தை வெட்டி விடுவான் என்று மாறுவேடம் அணிந்து வெளியேறி வந்த இராமானுஜரது பயத்தைப் போக்கி ஊண், உடை முதலிய அனைத்தும் கொடுத்து ஆதரவு தந்த கொங்கு பிராட்டியாரைக் கொண்டதும் கொங்கு மண்டலமே.

இந்த வரலாறைக் குறிக்கும் வகையில் ஐந்து தனியன்கள் உள்ளன. அவற்றின் பொருள் மட்டும் இங்கு தரப்படுகிறது. (மூல ஸ்லோகங்கள் தரப்படவில்லை- க்ரந்த எழுத்துக்களில் இருப்பதால்.)

தனியன்கள்

     ஸ்ரீரங்கத்திற் பாஷியஞ் செய்தருளிய உடையவருடைய தளிர்போன்ற
இரண்டு திருவடிகளை அடைந்து, அவர் பிக்ஷை கொள்ளத்தக்க வீட்டில்
இருந்து, தான் பிறந்த (கொங்கு) தேசத்துக்குச் செல்ல இச்சித்து அவருடைய
பாதுகைகளைப் பெற்ற லக்ஷ்மியென்னும் பெயரை உடைய அம்மையாரைத்
துதிக்கிறேன் நமஸ்கரிக்கிறேன். நினைக்கிறேன்.

     உடையவருடைய திருவடிக் குறியான பாதுகைகளைப் பூசிப்பவரும்,
அடிக்கடி உத்தமமான மந்திரத்தை ஜபிப்பவரும், தமிழ் வேதங்களின்
தத்வஞானச் சுடருற்றவருமான கொங்கு பிராட்டியாரை நான் தஞ்சமென்று
அடைகிறேன்.

     உடையவருடைய திருவடிக்குறியான பாதுகைகளைப் பூஜிப்பவரும், அடிக்கடி உத்தமமான மந்திரத்தை ஜபிப்பவரும், தமிழ் வேதங்களின் தத்துவ ஞானச் சுடருற்றவருமான கொங்கு பிராட்டியாரை நான் தஞ்சமென்று அடைகிறேன்.

 உடையவருடைய திருவடி சம்பந்தமுற்ற மனத்தராய்ப், பல சீஷர்கள்
கேட்கும் தத்வங்களைத் தெரிவிக்க வல்லராய், லக்ஷ்மீ நரசிம்மமூர்த்தியின்
திருவடிக்கமலத்தில் வீழும் வண்டு போலும் நேர்மை மிகுந்தவராயுள்ள
கொங்குப் பிராட்டியாரை நான் தஞ்சமாக அடைகிறேன்.

பிரபந்நாம்ருதம்

கிரிமி கண்டன் காரணமாய், ஸ்ரீரங்கத்தை உடனே விட்டு,
மேற்றிசையில் மேன்மையான கொங்கு தேசத்தை அடைந்த உடையவர்,
வேட்டுவர்களின் உபசரணையை ஏற்றுக்கொண்டு தெய்வச் செயலால்
ஏழாவதுதினம் *சேலாஞ்சலாம்பா (கொங்கு பிராட்டியார்) இல்லத்தை
அடைந்தனர்.

     உடையவர் கொங்குப் பிராட்டியாரது பேராதரவால், அரங்கநாதன்
சேவை பெறாத துக்கமும் அகன்று, சிஷியர்களுடன் சௌக்கியமாகச் சிலநாள்
அவர் திருமனையிலேயே வசித்தனர். (இவர் பதி கொங்கிலண்ணன் -
கொங்கிலாச்சான் எழுபத்துநான்கு வைணவ சிங்காசனாதிபதிகளில் ஒருவர்)

*

* அடிக்குறிப்பு :  சேல அஞ்சல = முன்றானை அது தெலுங்கில் கொங்கு .

அம்பா = லக்ஷ்மீ = அது பிராட்டி

பிரபந்நாம்ருதம் இயற்றியவர் தெலுங்கர். ஆதலால் கொங்கு என்னும் பதத்துக்குச் சேலாஞ்சல எனக் கொண்டார்.

tags-
 உடையவர் ,கொங்குப் பிராட்டி, இராமானுஜர் 

*****

மரம் பழமொழிகள் 5 கண்டு பிடியுங்கள் (Post No.8428)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8428

Date uploaded in London – 30 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போல

மரத்தை இலை காக்கும், மானத்தை பணம் காக்கும்

மரம் தன்னை வெட்டுகிறவனுக்கும் நிழல் கொடுக்கும்

மரம் வைத்தவன் தண்ணீர் வார்க்கமாட்டானா ?

மரம் ஏறு கிறவன்  XXX எத்தனை தூரம் தாங்குகிறது ?

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- ,  பழமொழிகள், மரம்

INDEX 26 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -26 (Post No.8427)

SAIVITE SAINT SUNDARA MURTHY SWAMIKAL
 Sundarar in Colombo Museum in Sri Lanka

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8427

Date uploaded in London – – –30 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

     இயற்கையின் கணித ரகசியம்- 1 from tamilandvedas.com

  இயற்கையின் கணித ரகசியம்- 1      from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

Sundarar prays for  eyesight

July 2014

   3-7-14   1145  புராணத் துளிகள் – 1 (இரண்டாம் பாகம்) 18 புராணங்களையும்

             நினவில் கொள்ள ஒரு ஸ்லோகம்!  

   4-7-14   1147     புராணத் துளிகள் – 2 (இரண்டாம் பாகம்) வியாஸரின் ஆசிரம்

             இருக்கும் இடம்!

 5-7-14   1150     புராணத் துளிகள் – 3 (இரண்டாம் பாகம்) லலிதா சஹஸ்ர நாம

             மஹிமை

  7-7-14   1154     புராணத் துளிகள் – 4 (இரண்டாம் பாகம்) பாகவத மஹிமை!

  8-7-14   1157     புராணத் துளிகள் – 5 (இரண்டாம் பாகம்) காயத்ரி மந்திரம் 

             கூறுவதால் ஏற்படும் பயன்!

  9-7-14   1160     புராணத் துளிகள் – 6 (இரண்டாம் பாகம்) சரஸ்வதி

             ஸ்தோத்ரம்/ஸ்துதி பற்றிய ஒரு தொகுப்பு!

10-7-14   1162    புராணத் துளிகள் – 7 (இரண்டாம் பாகம்) வைரம், தர்ப்பை பற்றி

             புராணம் என்ன சொல்கிறது?

11-7-14   1165     புராணத் துளிகள் – 8 (இரண்டாம் பாகம்) தூக்கம் வராத நான்கு

             பேர் யார்?

12-7-14   1167     புராணத் துளிகள் – 9 (இரண்டாம் பாகம்) பலன் தரும்

             யந்திரங்கள்!

13-7-14   1169     புராணத் துளிகள் – 10 (இரண்டாம் பாகம்) பீஷ்மரின் கடைசிப்

             பிரார்த்தனை!

14-7-14   1170     புராணத் துளிகள் – 11 (இரண்டாம் பாகம்) நாராயணன் என்று

             பெயர் வரக் காரணம்!

15-7-14   1172    கண்டோம், கண்டோம், கடவுள் துகளைக் கண்டோம்!

16-7-14   1174     அதிசய புருஷர் சுவாமி விவேகானந்தர்!

ON HIS WAY TO KAILASH

August 2014

   3-8-14   1211  ஜென் காட்டும் வாழ்க்கை நெறி – நிகழ் காலத்தில் வாழ்க!  

   6-8-14   1217     கவிதையை ரஸிப்போமா?(நிலாச்சாரல் 600வது இதழ் கட்டுரை!)

 8-8-14   1221     ஓஷோ கூறிய பக்காத் திருடன் கதை!

  9-8-14   1223     தமிழ் என்னும் விந்தை – 1 சதுரங்க பந்தம்

11-8-14   1227     தமிழ் என்னும் விந்தை – 2 சதுரங்க பந்தம்

16-8-14   1236     தமிழ் என்னும் விந்தை – 3 சதுரங்க பந்தம்

22-8-14   1243     தமிழ் என்னும் விந்தை – 4 சதுரங்க பந்தம்

30-8-14   1260     தமிழ் என்னும் விந்தை – 5 சதுரங்க பந்தம்

September 2014

   7-9-14   127̀1     தமிழ் என்னும் விந்தை – 6 சதுரங்க பந்தம்

14-9-14   1287     பொங்கி வரும் புனிதம்! கங்கோத்ரி ரகசியம்!!

24-9-14   1307     பட்சிகள் அருள் பெற்ற ஸ்தலங்கள்! (ஞான ஆலயம் செப்டம்பர்

             2014 கட்டுரை)

October 2014

13-10-14   1344     5000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர் கட்டிய விமானம்!

19-10-14   1356     அந்தரத்தில் நிற்பதை அனைவருமே கற்கலாம்! (பாக்யா

              கட்டுரை)

22-10-14   1363     விவேகானந்தரைச் சந்தித்த விஞ்ஞானிகள்! (பாக்யா கட்டுரை)

Handsome Sundarar getting ready for marriage

November 2014

  4-11-14   1389     தமிழ் என்னும் விந்தை – 7 சதுரங்க பந்தம்

21-11-14   1425     உபதேச மந்திரப் பொருளாலே, உனை நான் நினைந்து அருள்

              பெறுவேனோ?

25-11-14   1435    தமிழ் என்னும் விந்தை – 8 சதுரங்க பந்தம்

29-11-14   1445     தமிழ் என்னும் விந்தை – 9 சதுரங்க பந்தம்

29-11-14   1446     Fate and Free will – I

30-11-14   1447     தமிழ் என்னும் விந்தை – 10 சதுரங்க பந்தம்

December 2014

 2-12-14   1453    Fate and Free will – III and IV

  5-12-14   1460     சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசய மனிதர்கள் – 1 (பாக்யா

              கட்டுரை)    

  7-12-14   1464     சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசய மனிதர்கள் – 2 (பாக்யா

              கட்டுரை)    

  8-12-14   1467   Fate and Free will – V and VII

10-12-14  1472    மஹரிஷி கவிஞன் பாரதி!

 11-12-14   1477    Fate and Free will – VIII

 14-12-14  1484  தமிழ் என்னும் விந்தை – 11 சதுரங்க பந்தம்!

 15-12-14   1487     தமிழ் என்னும் விந்தை – 12 சருப்பதோபத்திரம் – 1

16-12-14   1490     சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசய மனிதர்கள் – 3 (பாக்யா

              கட்டுரை)    

17-12-14   1493    யானையை மார்பில் நிற்க வைத்த சாண்டோ ராமமூர்த்தி

             (பாக்யா கட்டுரை)    

18-12-14   1496     தமிழ் என்னும் விந்தை – 13 சருப்பதோபத்திரம் – 2

22-12-14   1505    தமிழகத்தின் விச்சுளி வித்தை (பாக்யா கட்டுரை)    

22-12-14   1505     Fate and Free will – IX and X

23-12-14   1510     இரண்டு நிமிடம் இதயத்துடிப்பை நிறுத்தியவர்!    

24-12-14   1512     தமிழ் என்னும் விந்தை – 14 சருப்பதோபத்திரம் – 3

25-12-14   1516     தமிழ் என்னும் விந்தை – 15 சருப்பதோபத்திரம் – 4

27-12-14   1522    Fate and Free will – XI and XII

28-12-14   1524     தமிழ் என்னும் விந்தை – 17 கூடசதுர்த்தம் – 2

29-12-14   1527     தமிழ் என்னும் விந்தை – 18 கோமூத்திரி – 1

30-12-14   1529     தமிழ் என்னும் விந்தை – 19 கோமூத்திரி -2

31-12-14   1532    தமிழ் என்னும் விந்தை – 20 மாலைமாற்று – 1 

Lord Siva came in the guise of an old Brahmin and challenged him 

tags — INDEX 26 ,எஸ்.நாகராஜன் கட்டுரை ,இன்டெக்ஸ் -26

Sundarar’s Two Wives 

to be continued……………………………………….

31 பெரிய புராணப் பொன்மொழிகள் (Post No.8426)

THE ‘GREAT’ FOUR ‘ IN TAMIL WORLD

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8426

Date uploaded in London – 30 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆகஸ்ட் மாத காலண்டர் 2020 (ஆடி -ஆவணி,சார்வரி வருடம்)

திரு ஞான சம்பந்தர் பிறந்தது முதல்,  மூன்றே வயதில் ஞானப் பால் உண்டு, ‘தோடுடைய செவியன்என்று பாடியது வரை, உள்ள நிகழ்வுகளை சேக்கிழார் பெருமான் அழகிய எளிய தமிழில் கவி பாடியுள்ளார். இதோ 31 எடுத்துக் காட்டுகள்

xxx

பண்டிகை தினங்கள்- ஆகஸ்ட் 2 பதினெட்டாம் பெ ருக்கு, ஆடித்தபசு  3- ஆவணி அவிட்டம்,யஜுர் உபா கர்மா , ரக்ஷா பந்தன்; 4- காயத்ரீ ஜபம், ரிக் உபா கர்மா ; 11- கிருஷ்ணன் பிறப்பு; ஜன்மாஷ்டமி ; 15- சுதந்திர தினம்; 22 விநாயக சதுர்த்தி, 31 ஓணம் பண்டிகை

பவுர்ணமி -3, அமாவாசை -18; ஏகாதசி விரத ம் – 15, 29

சுப முகூர்த்த தினங்கள் – ஆகஸ்ட் 21, 23,24, 28,30,31

TAMIL BOY WONDER, MIRACLE BOY, WHO COMPOSED POEMS AT THE AGE OF THREE

ஆகஸ்ட் 1 சனிக்கிழமை

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அழகு இல் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்

ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக் கிழமை

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கப்

பூத பரம்பரை பொலியய் புனித வாய் மலர்ந்தழுத

சீதவள வயல் புகலித் திருஞான சம்பந்தர்

பாத மலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம் -1904

ஆகஸ்ட் 3 திங்கட் கிழமை

உளம்கொள் மறை வேதியர்தம் ஓம தூமத்து இரவும்

கிளர்ந்த திருநீற்று ஒளியின் கெழுமிய நண்பகலும்  மலர்ந்து -1909

XXX

ஆகஸ்ட் 4 செவ்வாய்க் கிழமை

மரங்களும் ஆகுதிவேட்கும் தகையஎன மணந்துளதால்  –1911

XXX

ஆகஸ்ட் 5 புதன் கிழமை

தேமருமென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடுமால் -1912

XXX

JAINS AND BUDDHISTS WERE SUBDUED BY THE WONDER BOY SAMBANDAR

ஆகஸ்ட் 6 வியாழக் கிழமை

வானமுகில் கூந்தல் கதிர்செய்  வடமீன் கற்பின்

மனை வாழ்க்கைக் குலமகளிர் வளம்பொலிவ மாடங்கள்

XXX

ஆகஸ்ட் 7 வெள்ளிக் கிழமை

மடை எங்கும் மணிக்குப்பை, வயல் எங்கும் கயல் வெள்ளம்

புடை எங்கும் மலர்ப்பிறங்கல், புறம் எங்கும் மகப்பொலிவு

(மணிக்குப்பை- ரத்தினங்கள், கயல் – மீன் , பிறங்கல் – மலை, மகம் – யாகம்)

XXX

ஆகஸ்ட் 8 சனிக்கிழமை

பிரமபுரம், வேணுபுரம் புகலி பெரு  வெங்குரு நீர்

பொரு  இல் திருத் தோணிபுரம்  பூந்தராய்  சிரபுரம்  முன்

வரு புறவம் சண்பை  நகர்  வளர் காழி கொச்சை வயம்

பரவு திரு கழுமலம்  ஆம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால் -1917

(சீர்காழிக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே 12 பெயர்கள்!)

XXX

ஆகஸ்ட் 9 ஞாயிற்றுக் கிழமை

கவுணியர் கோத்திரம்  விளங்கச்

செப்புநெறி வழிவந்தார்  சிவபாத இருதயர் -1918                                                 

XXX

ஆகஸ்ட் 10 திங்கட் கிழமை

பகவதியார் எனப்போற்றும்  பெயருடையார்

கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார் -1919

XXX

ஆகஸ்ட் 11 செவ்வாய்க் கிழமை

அருக்கன் முதல்  கோள் அனைத்தும் அழகிய  உச்சங்களிலே

……..

திருக் கிளரும் ஆதிரை நாள் திசை விளங்க – 1925

XXX

ஆகஸ்ட் 12 புதன் கிழமை

அண்டர் குலம் அதிசயிப்ப , அந்தணர் ஆகுதி பெருக

வண் தமிழ்செய்  தவம் நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்ப – 1926

XXX

ஆகஸ்ட் 13 வியாழக் கிழமை

அசைவு இல் செழும் தமிழ் வழக்கே  அயல் வழக்கின் துறை வெல்ல -1927

XXX

ஆகஸ்ட்  14  வெள்ளிக் கிழமை

தவம் பெருக்கும் சண்பையிலே  தா இல் சராசரங்கள் எல்லாம்

சிவம் பெருக்கும் பிள்ளையார்  திரு அவதாரம் செய்தார் -1929

XXX

ஆகஸ்ட் 15 சனிக்கிழமை

சேய பொருள் திருமறையும்  தீந்தமிழும் சிறக்க வரும்

நாயகனைத் தாலாட்டு  நலம் பல பாராட்டினார் – 1947

XXXX

ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக் கிழமை

‘நாம் அறியோம் பரசமயம்  உலகிற் எதிர் நாடாது

போம் அகல’ என்று அங்கை தட்டுவதும் – 1949

XXX

GODDESS UMA FED HIM WITH HER MILK IN GOLDEN CUP

ஆகஸ்ட் 17 திங்கட் கிழமை

விதி தவறு படும் வேற்றுச் சமயங்கள்  இடை விழுந்து கதி தவழ – 1950

XXX

ஆகஸ்ட் 18 செவ்வாய்க் கிழமை

கிளர் ஒலி கிங்கிணி எடுப்பக் கீழ்மை நெறிச் சமயங்கள்

தளர் நடையிட்டு அறத்  தாமும்  தளர் நடையிட்டு அருளினார் -1953

XXX                                                                              

ஆகஸ்ட் 19 புதன் கிழமை

நீதி முறைச் சடங்கு நெறி  முடிப்பதற்கு நீராடத்

தாதையார் போம் பொழுது  தம் பெருமான் அருள் கூடச்

சோதி  மணி மனை முன்றில்  தொடர்ந்து அழுது  பின் சென்றார் -1959

XXXX

ஆகஸ்ட் 20 வியாழக் கிழமை

பிள்ளையார் தமைக் கரையில் வைத்துத் தாம் பிரிவு அஞ்சித்

தெள்ளுநீர் புகமாட்டார் – 1962

xxx

GOD SIVA SENT THE LITTLE BOY A PALANQUIN FULLY MADE UP OF PEARLS

ஆகஸ்ட் 21  வெள்ளிக் கிழமை

செம்மேனி வெண்நீற்றார்  திருத்தோணி சிகரம் பார்த்து

‘அம்மே அப்பா’ என்று என்று அழைத்தருளி  அழுதருள –1966

XXX

ஆகஸ்ட் 22 சனிக்கிழமை

தொழுகின்ற மலைக்கொடியைப்  பார்த்தருளித் துணை முலைகள்

பொழிகின்ற ‘பல் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு’ – என்ன – 1969

XXX

ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக் கிழமை

உமை அம்மை எதிர் நோக்கும்

கண்மலர் நீர்த் துடைத்தருளி கையில் பொன் கிண்ணம்  அளித்து

அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள் புரிந்தார் – 1971

XXX

ஆகஸ்ட் 24 திங்கட் கிழமை

யாவருக்கும் தந்தைத்தாய் எனும் இவர் இப்படி அளித்தார்

ஆவதனால் ஆளுடைய பிள்ளையாராய்  அகில

தேவருக்கும் முனிவருக்கும் தெரிவு  அரிய பொருளாகும்

தாவு இல் தனிச் சிவ ஞான சம்பந்தர் ஆயினார் – 1972

XXX

ஆகஸ்ட் 25 செவ்வாய்க் கிழமை

‘எப்பொருளும் ஆக்குவான் ஈசனே’  எனும் உணர்வும்

அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும் – 1974

XXX

Miracle Boy Sambandar does Time Travel and brings back a dead girl with 13 year growth from Parallel Universe

ஆகஸ்ட் 26 புதன் கிழமை

சிவபாத இருதயரும்  சிறு பொழுதில் …….

‘யார் அளித்த அடிசில் பால்  உண்டது நீ’ – என வெகுளா 1975

xxxx

ஆகஸ்ட் 27 வியாழக் கிழமை

‘எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு’ என்று

….

உச்சியினில் எடுத்தருளும் ஒரு திருக்கை விறல் சுட்டி -1976

XXX

ஆகஸ்ட் 28  வெள்ளிக் கிழமை

எல்லை இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை

மல்லல் நெடுந்தமிழால்  இம்மாநிலத்தோர்க்கு உரை சிறப்பப் – 1978

XXX

ஆகஸ்ட் 29 சனிக்கிழமை

செம்மை பெற எடுத்த திருத் ‘தோடுடைய செவியன்’  எனும்

மெய்மை மொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார்

தம்மை அடையாளங்களுடன் சாற்றித் தாதையார்க்கு

‘எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே’ என இசைத்தார் -1979

xxx

ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக் கிழமை

அருள் கருணைத் திருவாளன்  ஆர் அருள் கண்டு அமரர் எலாம்

பெருக்கவிசும் பினில்ஆ ர்த்துப் பிரசமலர் மலை பொழிந்தார் -1983

XXX

ஆகஸ்ட் 31 திங்கட் கிழமை

கந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும்

இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும்  இசை முழக்கும்

அந்தம் இல் பல் கணநாதர்  அர எனும் ஓசையின் அடங்க -1984

Sambandar cures Pandya King

tags— பெரிய புராண, பொன்மொழிகள், ஆகஸ்ட் 2020, மாத, காலண்டர்

–SUBHAM–

WHAT IS THE GOOD LIFE? – 2 (Post No.8425)

SOCRATES

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8425

Date uploaded in London – – – 30 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

WHAT IS THE GOOD LIFE? – 2

R. Nanjappa



The other remarkable figures who lived in the same time-frame were: Pythagoras, Aeschylus,Confucius,  Heraclitus, Pindar, Anaxagoras,Xenophanes, Themistocles. The world has obviously not been short of wise men from the olden days. But the greatest of them in the Classical period was Plato.

By English: Copy of Silanion Francais CC BY-SA 2.5 Creative commons via Wikimedia Commons.

 As depicted by Plato, Socrates had made ‘Know Thyself’ his main teaching. It formed the basis of his philosophical discourse.

Sting.CC By-SA 2.5 Creativecommons.org via Wikimedia Commons.

Good Life and Virtue

In Plato’s ‘Republic’, we see Socrates concerned with the idea of the ‘good life’. For him, the good life is based on virtue. Virtue comes from wisdom. This is not just a  knowledge of things, but knowing their very basis and rationale. Such wisdom automatically results in good conduct. Virtue is valuable in itself, and not as the means to something else. It is the duty of the rulers to guard the morality of the people and for this, they themselves should be properly trained in philosophy. This is the purpose of education.

In the beginning, we find Thracymachus claiming that immorality pays. It can be argued that it does. But for Socrates, the question whether “moral people have a better and more fulfilled life than immoral people” is very significant. Superficial views won’t do.Says Socrates:

 “we must look more closely at the matter since what is at stake is far from insignificant: it is how one should live one’s life.” (Republic, I, 352d.)

Education and the Good 

It is easy enough to say we should do good. But how to know what is good? For Plato, this is the function and purpose of education. Man is governed by mind. Mind has three parts. One part seeks desire- rather by instinct. There is the desire to preserve one’s sense of ego- which makes one feel separate from others, and perceive of one’s own as distinct from those of others. Then there is the part which seeks understanding and truth. It is possible for the mind to be ruled by one of the parts, especially for the baser parts to dominate. but the ideal is balance among the parts. This is where education is important: it should help to keep the baser parts in check, and prevent them from becoming dominant. Harmony among the parts is the aim of education, and it is also the manifestation of morality.

 Plato assumes that right education would automatically lead to proper conduct- choosing the good. It is not only what is good for oneself, but what is good for everyone else. Society teaches or enforces certain kinds of behaviour in the name of morality, which we follow due to external authority; but true morality is based on true belief which is obtained by education. But it is only philosopher’s education which results in true knowledge that translates into right conduct. The purpose of true education (higher training of the philosopher) is to know goodness, and the ruler knowing goodness would ensure it for the community. Thus moral education and goodness also result in good life for all. Such in bare outline is the main theme of Plato’s dialogues in ‘Republic’ delivered through Socrates. The dialogues meander through many issues, but we should not lose the main thread which is concerned with the good life- ie how we should live our lives. 

This is the point to which Socrates returns at the end of Republic. The dialogues conclude with Socrates saying:

There you are, then, Glaucon. The story has made it safely through to the end, without perishing on the way… Anyway, my recommendation would be for us to regard the soul as immortal and as capable of surviving a great deal of suffering, just as it survives all good times. We should always keep to the upward path, and we should use every means at our disposal to act morally and with intelligence, so that we may gain our own and the gods’ approval, not only during our stay here on earth, but also when we collect the prizes our morality has earned us…..And then, both here and during the thousand- year journey of our story, all will be well with us.

Such a state is possible only when the rulers are endowed with wisdom. Socrates says:

Unless communities have philosophers as kings or the people who are currently called kings and rulers practice philosophy with enough integrity,- in other words, until political power and philosophy coincide…there can be no end to political troubles, my dear Glaucon, or even to human troubles in general.

(Republic, V 473d)

So, it becomes the responsibility of the ruler to ensure community life based on morality, leading to goodness all round. Morality is not a mere individual virtue. Socrates asks pointedly:

Wouldn’t we say that morality can be a property of whole communities as well as of individuals?     (Republic, II, 368e).

May be, we cannot define the ‘good life’. But we can’t say we don’t know it. Or, all these masters have lived in vain!.

PLATO



Note:


1.The quotations from Republic here are from the translation of Robin Waterfield, published in the Oxford World’s Classics.
2. We may reflect on our own notion of Dharma and the king’s role to protect it, in the light of what Socrates says here.
3. Socrates assumes that right knowledge would result in virtuous conduct without any external force. This too is in accordance with our own notions. eg. Tirukkural says:
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
After acquiring knowledge worth acquiring, conduct yourself accordingly.TAGS- GOOD LIFE-2

பாரத ஸ்தலங்கள் – 9; மூர்த்தி தலங்கள், பஞ்ச ஸாதாக்கிய வைப்புத் தலங்கள் (Post No.8424)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8424

Date uploaded in London – – –30  July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பாரத ஸ்தலங்கள் – 9

(64 மூர்த்தி தலங்கள் மற்றும் பஞ்ச ஸாதாக்கிய வைப்புத் தலங்கள்)

ச.நாகராஜன்

முக்கிய குறிப்பு : கீழ்க்கண்ட ஸ்தலங்கள் மஹாமஹோபாத்யாய உ.வே.சுவாமிநாதையர் அவர்களால் குறித்து வைக்கப்பட்டுள்ள ஸ்தலங்களாகும். அவரது குறிப்புகள் இங்கு அப்படியே தரப்பட்டுள்ளது.)

29. சிவபிரானின் 64 மூர்த்தி ஸ்தலங்கள்!

சிவபிரானுக்கு அட்டாட்ட மூர்த்த நாமங்கள், அதாவது 64 திருநாமங்கள் உண்டு. இந்த மூர்த்திகளுக்கான 64 ஸ்தலங்களும் உண்டு.

அவை பின்வருமாறு:

1. திருவிடைமருதூர்      இலிங்க மூர்த்தி

2.  அருணாசலம்          லிங்கோத்பவர்

3. கொட்டையூர்          முகலிங்கர் (திருமாணிகுழிக்கு அடுத்ததாக உள்ள  

                         தலம் ஒன்று, கரிவலம் வந்த நல்லூர்)

4. சிதம்பரம்              திருமூலட்டானம், பிரகாரத்தில் ஐந்து பீடங்கள்-

                         சதாசிவம்

5. மஹாஸதாசிவம்      ஸ்ரீ கண்டர் (ரூபம்)

6. கோனேரிராஜபுரம்      மூர்த்தி உண்டு. உமா மஹேஸ்வரர்

7. காழி                   சுகாசனர்

8. இடைமருது (மருதம்)   உமேசர்

9. திருவாரூர்             (தியாகர்) ஸோமாஸ்கந்தர்

10.புகலூர்                 சந்திரசேகரர்

11.திருவாவடுதுறை, ஐயாறு ரிஷபாரூடர்

12. ரிஷபாந்திகர்

13.பெரும்புலியூர்            புஜங்கலலித மூர்த்தி (பாம்பின் மீதாடல்,

                           முயலகன் இல்லை) 

14.களக்காடு                புஜங்கத்திராஸர் (கொள்ளம்புத்தூருக்கு மேற்கே

                           ஒரு மைல்)  

15.கைலாஸம்              4 மர்ம ஸந்தியாந்ருத்தர்

16.சிதம்பரம்                ஸதாந்ருத்தர்

17.குடந்தைக் கீழ்க்கோட்டம் அம்பிகை தாளம் போட ஆடல், அரசிலை

                           தொங்கல்: அம்பிகைதானம்  

18.இமயம்                  கங்காதர மூர்த்தி

19.கேதாரம்                 கங்கா விஸர்ஜனர்

20.அதிகை                  திரிபுராந்தகர்

21.வீழி                     கல்யாணசுந்தரர்,திரைலோக்சி, பனசை

22.செங்கோடு               அர்த்தநாரீஸ்வரர்

23.வழுவூர், பெருஞ்சேரி, செங்காட்டங்குடி    கஜயுத்தர்

24. சாட்டியக்குடி             ஜ்வராபக்கனர்

25. வழுவூர்                  சார்த்தூலஹரமூர்த்தி, கீர்த்திவாஸேஸ்வரர்

26. கொள்ளம்புதூர் முதலிய 64   பாசுபத மூர்த்தி

27. சீகாழி, சிறுபுலியூர்      கங்காளேஸ்வரர்

28. சங்கர நாராயணர் கோவில்   சங்கர நாராயணர் – கேசவார்த்தர்

29. வழுவூர்                பிக்ஷாடனர்

30. திரிபுவனம் (சரப மூர்த்தி)   ஸிஹ்மக்நர்,  தாராசுரம்

31. திருவாப்பாடி            சண்டேசானுக்கிரஹர்

32. ஆலங்குடி முதல்   12 தக்ஷிணாமூர்த்தி

33. குறுக்கை          யோக தக்ஷிணாமூர்த்தி

34. வீணா தக்ஷிணாமூர்த்தி

35. கடவூர்      காலாந்தக மூர்த்தி

36. குறுக்கை     காமதஹனர்

37. திருவானை, சத்தி முத்தம், காஞ்சி       லகுனேஸ்வரர்

38. காசி முதல் 16 பைரவர்

39. காழி    ஆபத்தோத்தாரணர்

40. காழி     வடுகர்

41. க்ஷேத்திரபாலபுரம்    தனி பைரவர்

42. பெருந்துறை    வீரபத்திர மூர்த்தி

43. வெண்காடு அகோராஸ்திர மூர்த்தி

44. பறியல் தக்ஷயக்ஞ ஹத மூர்த்தி

45. திருக்கொள்ளம்பூதூர்   சிநாத மூர்த்தி – திருக்குடந்தை

46. பெருந்துறை, தேரழுந்தூர்     குருமூர்த்தி

47. பெருந்துறை, மதுரை, வீழிமிழலை   அசுவாரூடர்

48. வெண்காடு, கோட்டாறு, மருத்துவக்குடி  கஜாந்திகர்

49. விற்குடி     சலந்தரவத மூர்த்தி

50. இடைமருது    ஏகபாததிரி மூர்த்தி

51. இடைமருது    திரிபாததிரி மூர்த்தி

52. தப்பளாம்புலியூர்   ஏகபாத மூர்த்தி

53. காஞ்சி, இடைமருதூர்   கௌரீவரப்ரத மூர்த்தி

54. வீழிமிழலை   சக்கரதானஸ்வரூப மூர்த்தி

55. பூவனூர், மந்தரம்   கௌரீலீலாசமனுவிதர் – தேரழுந்தூர்

56. கொண்டீசுவரம், நஞ்சுண்டேசுவரம், மண்ணிப் படிக்கரை   விஷபாஹரணர்

57. நாகநாதம், பட்டீசுவரம்    கருடாந்திகர்

58. கண்டியூர்    பிரஹ்ம சிரச்சேதம்

59. கச்சபாலயம் (காஞ்சி)   கூர்ம ஸம்ஹாரம்

60. மச்ச ஸம்ஹார மூர்த்தி

61. பழமலை, காசி    வராஹ ஸம்ஹாரமூர்த்தி

62. உருத்திர கங்கை முதலியன பிரார்த்தனா மூர்த்தி

63. காசி   ரக்தபிக்ஷாப்ரதானர்

64. சாமி மலை, பேணு பெருந்துறை    சிஷ்ய பாவ மூர்த்தி

30. சிவபிரானின் பஞ்ச ஸாதாக்கிய ஸ்தலங்கள்!

1.  சிவ ஸாதாக்கியம்         மஹாகைலாஸம்

2.  அமூர்த்தி ஸாதாக்கியம்   பெருந்துறை

3.  மூர்த்தி ஸாதாக்கியம்     தில்லை நடராஜர்

4.  கர்த்துரு ஸாதாக்கியம்    ஸோம சுந்தரர்

5.  காம ஸாதாக்கியம்        காசி, கேதாரம்

tags- பாரத ஸ்தலங்கள் – 9;,64 மூர்த்தி தலங்கள்,

***

INDEX 25 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -25 (Post No.8423)

PICTURE POSTED ON FACE BOOK BY GEETHA SWAMINATHAN TODAY 29720

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8423

Date uploaded in London – – –29 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

     இயற்கையின் கணித ரகசியம்- 1 from tamilandvedas.com

  இயற்கையின் கணித ரகசியம்- 1      from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

 BONALU FESTIVAL IN SECUNDERABAD, ANDHRA EVEN YEARS AGO.

January 2014

    ஜனவரி          ஸ்வர்ண லோகம் – 23 மேலும் சில ஜென் கதைகள் -1

                                சம்ஸ்கிருதச் செல்வம் – 20

            சம்ஸ்கிருதச் செல்வம் – 21

            சம்ஸ்கிருதச் செல்வம் – 22

Februry 2014

                               சம்ஸ்கிருதச் செல்வம் – 23 கண்ணனின் பக்தி அறம் பொருள்

            இன்பம் முக்தி தரும்!  

            ஸ்வர்ண லோகம் – 24 மேலும் சில ஜென் கதைகள் – 2

            சம்ஸ்கிருதச் செல்வம் – 24 சூரிய உதயம், அஸ்தமனம் கண்டு  

            உத்வேகம் பெறலாம்!

  5-2-14    818 ?     ஸ்வர்ண லோகம் – 25 மேலும் சில ஜென் கதைகள் -3

  6-2-14    822        சம்ஸ்கிருதச் செல்வம் – 25 அறிவு வளரும் விதம்!    

  7-2-14    825     ராமாயண வழிகாட்டி- 15      

  9-2-14    829     ஸ்வர்ண லோகம் – 26 மேலும் சில ஜென் கதைகள் – 4

  9-2-14    830     சம்ஸ்கிருதச் செல்வம் – 26 ஐந்து பெயர்களின் பெயரைக்

            கூறாதே! ஐந்து விதமாகப் பேசாதே!

11-2-14    833    ஸ்வர்ண லோகம் – 27 வாழ்வையும் சாவையும் புரிந்து

            கொள்ளுங்கள்!

15-2–14  841     சம்ஸ்கிருதச் செல்வம் – 27 ஐந்து ‘ஜ’காரமும் ஐந்து ‘வ’காரமும்!

15-2–14  842     சம்ஸ்கிருதச் செல்வம் – 28  லலலலல ஐந்து ‘ல’கார மனைவி!

18-2–14  848 ?  சம்ஸ்கிருதச் செல்வம் – 29 மனைவிகளின் பெருமையும், லேக

            தோஷமும்!

19-2–14  851     சம்ஸ்கிருதச் செல்வம் – 30 பசுவும், பாம்பும்!

22-2–14  857     சம்ஸ்கிருதச் செல்வம் – 31 எது அழகு?

24-2–14  861     ராமாயண வழிகாட்டி – 16

26-2–14  867     சம்ஸ்கிருதச் செல்வம் – 32 அஹிம்சையே உயர்ந்த தர்மம்!

INDIAN NAVY

March 2014

  5-3-14    888     ராமாயண வழிகாட்டி- 19      

  6-3-14    889     அடியார்கள் வானில் அரசாள ஆணையிட்ட அற்புதர் சம்பந்தர்!

            (ஞான ஆலயம்  செப்டம்பர் 2013 கட்டுரை)!

13-3-14    904     கடவுளும் கம்ப்யூட்டரும்!

19-3-14    916    ராமாயண வழிகாட்டி- 20

25-3-14    930     கிருஷ்ணார்ஜுனர் – பரமஹம்ஸ விவேகானந்தர் அவதார

            ரகசியம்!

April 2014

   3-4-14    951     அபாய நோயிலிருந்து பிரபஞ்ச ஆற்றலால் மீண்டவர்!           

            (ஞான ஆலயம் ஜூன் 2013 கட்டுரை)

10-4-14    969     ராமாயண வழிகாட்டி- 21 ராமம் ஸத்ய பராக்ரமம்!    

17-4-14    984     ராமாயண வழிகாட்டி- 22 கோசலையின் ஆசீர்வாதம்!

18-4-14    986     ராமாயண வழிகாட்டி- 23 சீதை சொன்ன காகாஸுரன் கதை!

19-4-14    988A   ராமாயண வழிகாட்டி- 24 மண்டோதரியின் மாண்பு!

28-4-14  1007     ராமாயண வழிகாட்டி- 25

OUR SOLDIERS GUARDING US FROM CHINESE ATTACK 

May 2014

   2-5-14   1015  ராமாயண வழிகாட்டி- 26 ராமாயணம் தோன்றியது எப்படி?

 6-5-14   1024     இயற்கையின் கணித ரகசியம்- 1 (பாக்யா 11-4-14 அ.து. 163)

  7-5-14   1026     இயற்கையின் கணித ரகசியம்- 2 (பாக்யா 18-4-14 அ.து. 164)

  8-5-14   1029     இயற்கையின் கணித ரகசியம்- 3 (பாக்யா 25-4-14 அ.து. 165)

  9-5-14   1104     ஹனுமானுக்கும் ராமருக்கும் நடந்த போட்டியில் வென்றது

             யார்? (ஞான ஆலயம் ஏப்ரல் 2014 கட்டுரை)

11-5-14   1035     ஆன்ம ஞானம் பெற அதி சுலபமான வழி! (யோக வாசிஷ்டம்)    

17-5-14   1047     ராமாயண வழிகாட்டி- 27 ராமாயணம் சௌபாக்யம், பாபநாசனம்,

             வேத சமம்!

18-5-14   1049     வித்தியாசமான விஞ்ஞானி யுங் – 1 (பாக்யா கட்டுரை)

20-5-14   1053     வித்தியாசமான விஞ்ஞானி யுங் – 2 (பாக்யா கட்டுரை)

22-5-14   1057     வித்தியாசமான விஞ்ஞானி யுங் – 3 (பாக்யா கட்டுரை)

25-5-14   1063     வித்தியாசமான விஞ்ஞானி யுங் – 4 (பாக்யா கட்டுரை)

28-5-14   1069     வித்தியாசமான விஞ்ஞானி யுங் – 5 (பாக்யா கட்டுரை)

June 2014

   4-6-14   1084  சங்க இலக்கியத்தின் படி –  ஒவ்வொரு தமிழனும் ஒரு

             ஜோதிடனே!

   5-6-14   1086     சங்கத் தமிழ் முழங்கும் ஜோதிட உண்மைகள்!

11-6-14   1098     ஏற்றம் தரும் ஏலாதி – 1 (லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்

             2014)

 12-6-14   1101     ஏற்றம் தரும் ஏலாதி – 2 (லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்

             2014)

13-6-14   1104     நேராகப் படித்தால் ராமாயணம்; தலைகீழாகப் படித்தால் மஹா

             பாரதம்!

14-6-14   1106     சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிரகதீஸ்வர மாஹாத்மியம்!    

19-6-14   1117     ஒளியின் வேகத்தைத் துல்லியமாக உரைக்கும் ரிக்வேதம்!

             (ஞான ஆலயம் மே 2014 கட்டுரை)

INSPIRING TAMIL POET BHARATI ON T SHIRT

TO BE CONTINUED…………………………………………………………………….

TAGS – INDEX 25 ,எஸ்.நாகராஜன் கட்டுரை, இன்டெக்ஸ் -25,

ஆயிரம் இலக்கண நூல்கள்! 2000 வினைச் சொற்கள் !! (Post No.8422)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8422

Date uploaded in London – 29 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சம்ஸ்க்ருத மொழி பற்றிய வியப்பான தகவல்களைக் கேட்டால் இதுதான் உலகிலேயே பழைய மொழி என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்யலாம் . என்ன  ஐயா, ஆதாரம்? என்று பலரும் வினவலாம் . இதோ விடை பகர்வேன் .

உலகில் ஒரு இனத்தின் பெயர் இல்லாத ஒரே பழைய மொழி சம்ஸ்கிருதம். சீன  தமிழ், லத்தின், கிரேக்க, பாரசீக , எபிரேய மொழிகள் அந்தந்த இனத்தின் பெயரால் அமைந்தவை; அதாவது குறுகிய பூகோள எல்லைக்குட்பட்டவை ; சம்ஸ்கிருதம் உலக மக்கள் அனைவர்க்கும் சொந்தம்.

மேலும் பேச்சு மொழியான , அதாவது கொச்சசையான சம்ஸ்கிருதமான பிராக்ருதத்தில் அசோகர் கல்வெட்டுகளை வெளியிட்டார் . அவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த ருத்ரதாமன் (RUDRA DAMAN) என்ற மன்னன் துணிச்சலாக , மிக நீண்ட சம்ஸ்கிருத மொழி கல்வெட்டை கி.பி.150ல் வெளியிட்டான். அடுத்த நிமிடத்தில் வியட்நாமில் ஒரு சம்ஸ்கிருத கல்வெட்டு; அடுத்த நொடியில் போர்னியோ காட்டுக்குள் ஒரு சம்ஸ்கிருத கல்வெட்டு. என்ன அதிசயம்!! பல ஆயிரம் மைல்களுக்கு சம்ஸ்கிருதம் எதிரொலித்தது.

அதாவது ருத்ரதாமனின் எழுத்து பல லட்சம் சதுர மைல்களுக்குப் பரவ 150 ஆண்டுகள்தான் பிடித்தன. இந்தப் புதிருக்கு என்ன விடை ? உலகம் முழுதும் எல்லா அறிஞர்களுக்கும் சம்ஸ்க்ருதம் தெரியும் ; உண்மையில் அங்கு எல்லாம் அதற்கும் முன்னரே சம்ஸ்கிருதம் இருந்ததது. ஆனால் கற்களில் பொறிக்கவில்லை .

ஆனால்  இதைவிட அதிசயம் இப்போது துருக்கி நாட்டிலுள்ள , சிரியாவின் எல்லையிலுள்ள போகஸ்கொய (Bogazkoy) என்னும் இடத்தில் கி .மு 1380-ல் கைச் சாத்திடப்பட்ட ஒரு களிமண் கல்வெட்டு கிடைத்துள்ளது. அதில் ரிக்வேத மந்திரத்தில் என்ன வரிசையில் தெய்வங்கள் சொல்லப்பட்டதோ அதே வரிசையில் இந்திரன் மித்ரன் வருணன், நாஸத்யர்கள் (அஸ்வினி தேவர்கள்) எழுதப்பட்டுள்ளன. ஆகையால் இன்று உலகில் பயன்படும் மொழிகளில் சம்ஸ்கிருதக் கல்வெட்டே பழமையானது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தசரதன் கடிதங்கள் (Dasaratha or Amarna letters in Egypt) எகிப்தில் கிடைத்தன. கி.மு 1400 முதல் நிறைய சம்ஸ்கிருதப் பெயர்கள் கல்வெட்டில் கிடைத்திருக்கின்றன.

ஆக சம்ஸ்கிருதம் கல்வெட்டில் புகுந்தது கி.மு 1400ல். அப்போது , மோசஸ் சொன்ன பத்து கட்டளைகள்  பிறக்கவில்லை; கிரேக்க மொழி இலக்கியம் பிறக்கவில்லை; தமிழ் மொழி இலக்கியம் பிறக்கவில்லை ;லத்தின் மொழி இலக்கியம்  பிறக்கவில்லை. சீன மொழியில் தனிப்பாடல்கள் கொஞ்சமிருந்தன

இது ஒரு புறமிருக்க, ஒரு  நாட்டின் மொழி வளர்ச்சிக்கு சான்றாக இலக்கண ஆசிரியர்களும்  இலக்கண நூல்களும் இருக்க வேண்டும். நம் தாய் மொழியான தமிழில் தொல்காப்பியருக்கு சம காலத்தவராக 12 பேர் இருந்தனர். அவர்களுடைய நூல்கள் எல்லாம் அழிந்து போயின. ஆயினும் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொல்காப்பியர் அவர்களுடைய பெயர்களைச்  சொல்லாமல் 200 இடங்களில் “என்மனார், என்ப, மொழிப , மொழிமனார்” என்று கதைக்கிறார்  அதாவது பழைய இலக்கண ஆசிரியர்களின், குறிப்பாக அகத்தியரின் கூற்று .

பாணினி என்ற உலகப் புகழ் சம்ஸ்கிருத இலக்கண வித்தகர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததை கோல்ட்ஸ்டக்கர் (Theodor Goldstucker) என்ற யூத மத சம்ஸ்கிருத அறிஞர் நிரூபித்துள்ளார் . அவர் சம காலத்து கிறிஸ்தவ சம்ஸ்கிருத அறிஞரான மாக்ஸ் முல்லரை கிழி கிழி என்று கிழிக்கிறார் . இருவரும் ஜெர்மனியில் பிறந்தவர்களே . லண்டனில் வாழ்ந்தவர்கள்.

பாணினிக்கு முன்னர் 68 சம்ஸ்கிருத ஆசிரியர்கள் இருந்தனர். இவர்களின் பெயர்களை பர்னல் (Burnell) , மாக்ஸ்முல்லர் (Max Muller)  நூல்களில் காண்கிறோம் . பாணினி கூட பல சம்ஸ்கிருத ஆசிரியர் பெயர்களைச் சொல்கிறார். வடக்கத்திய ,கிழக்கத்திய மொழிப் பிரயோகங்களையும் ஆங்காங்கே சுட்டிக்காட்டுகிறார். இன்றுவரை சம்ஸ்கிருத மொழியில் ஆயிரம் இலக்கண நூல்கள் வந்துள்ளன . இவையெல்லாம் சம்ஸ்கிருதம்தான் உலகிலுள்ள மொழிகளில் பழமையானது என்பதைக் காட்டுகின்றன.

அப்படியானால் ரிக்வேதம் என்பது 6000 ஆண்டுகளுக்கு முந்தையது; மாக்ஸ்முல்லர் சொன்னது தவறானது என்று தெரிகிறது. ரிக் வேதத்தை வான சாஸ்திர குறிப்புகளின் அடிப்படையில் கி.மு 4000 முதல் கி.மு 6000 வரை பால கங்காதர திலகரும் (B G Tilak)  ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் (Herman Jacoby)  தேதி குறித்துள்ளனர்

அது போகட்டும் ; சம்ஸ்கிருதத்தில் 2000 வினைச் சொற்கள் இருந்ததை பாணினி கால நூல்கள் காட்டுகின்றன. ஆயினும் சுமார் 700 வருடங்களுக்குப் பின்னர் பாணினியின் புஸ்தகத்துக்கு பேருரை – மஹா  பாஷ்யம் — எழுதிய பதஞ்சலி முனிவர் காலத்தில் (150 BCE) சம்ஸ்கிருதத்தில் 800 வினைச் சொற்களே உபயோகத்தில் இருந்தன . இதைக் குறிப்பிடும் பதஞ்சலி முனிவர் ஏனைய 1200 வினைச் சொற்களை கற்பனை என்று கருதிவிடக்கூடாது என்றும் நம்மை எச்சரிக்கிறார் . அதாவது காலக்கிரமத்தில் நிறைய சொற்கள் வழக்கொழிந்து போகின்றன.

இதற்குத் தமிழிலும் எடுத்துக்காட்டுகள் உள . தமிழில் தொல்காப்பியருக்குப் பின்னர் சுமார் 20 இலக்கண நூல்கள் வந்தன. ஏன் ? மாற்றங்கள் ஏற்பட்டவுடன் அதை விளக்கவும் புது விதிகளை சொல்லவும் அவை உதவுகின்றன.

தொல்காப்பியர் நீண்ட உவமை உருபுப் பட்டியல்  தருகிறார். அதில் ‘போல’, ‘அன்ன’ (மாதிரி) என்ற சில சொற்களையே சங்க இலக்கியப் புலவர்கள் பயன்படுத்தினர். நிறைய உவமை உருபுகள் சங்க இலக்கியத்தின் 30,000 வரிகளில் இல்லை. திருக்குறளின் 2660 வரிகளில் இல்லை. இது எதைக் காட்டுகிறது?

தாங்கள் புதிய இலக்கண நூல்கள் இயற்றினாலும் பழங்காலத்தில் இப்படி எல்லாம் இருந்திருக்கிறது என்று காட்டுவது மரபு என்பதைக் காட்டுகிறது.

உலகில் முதல் முதல் சொற்பிறப்பியல் (Etymology) நூல் எழுதியவர் (Yaska) யாஸ்கர். இவரை வெள்ளைக்காரர்கள் கி.மு.850-ல் வாழ்ந்தவர் என்பர் . அவரே 400 வேத சொற்களுக்கு அர்த்தம் கிடைக்கவில்லை என்கிறார். இதை நமக்கு எடுத்துச் சொன்னவர் மொழியியல் அறிஞரான அரவிந்த மகரிஷி .

ஆக சம்ஸ்கிருதம்தான் உலகின் பழைய மொழி என்பதற்கு உலகின் மிகப்பழைய கல்வெட்டு, பாணிணிக்கு முந்தைய 68 ஆசிரியர்கள், 1000 சம்ஸ்க்ருத இலக்கண நூல்கள் , 2000 வினைச் சொற்கள் , யாஸ்கர் காலத்திலும் பதஞ்சலி காலத்திலும் வழக்கொழிந்து போன சொற்கள் பட்டியல் ஆகியன சான்று பகர்கின்றன.

இதற்கெல்லாம் ஆதாரம் வேறு எங்காவது இருக்கிறதா?

புறநானுற்றிலும் பிருஹத் ஆரண்யக – பெருங்  காட்டு –  உபநிஷத்திலும் இருக்கிறது

இருங்கோ வேள் பற்றிப் பேசும் கபிலர் , “உன்னைத் தெரியுமேடா ? உங்க அப்பனையும் தெரியுமேடா ! நீ 49 தலைமுறைக்கு முன்னர் கண்ணன் ஊரான துவாரகையிலிருந்து வந்தவன்தானேடா” என்று பாடுகிறார் (புறம் 201) . அதியமானைப் பாடிய அவ்வையாரும் “டேய் உன்னையும் தெரியும், உங்க அப்பனுக்கு அப்பனான சுப்பனையும் எனக்குத் தெரியும்டா; கரும்பைக் கொண்டுவந்தவர் உன் மூதாதையர்” என்கிறார்; ராமனின் சூரிய குல முதல் மன்னன் பெயர்  இக்ஷ்வாகு ; தமிழில் ‘கரும்புத் தடியன்’ அல்லது ‘வெல்லப் பாகு’ எனலாம்.

சிந்து -ஸரஸ்வதி நதி தீர  நாகரீகத்தில் சர்க்கரை கிடைத்திருப்பதால் இக்ஷ்வாகு அங்கே இருந்திருப்பார் ; அல்லது அவர்களின் வழிவந்தோர் சிந்துப் பிரதேசத்தை ஆண்டிருப்பர். மஹாபாரத யுத்தத்தில் பங்கு கொண்ட சிந்து தேச ராஜாக்கள் அனைவரும் சம்ஸ்கிருதப் பெயர்கள் உடையோர்தான் .

இதற்கு முந்தைய பெருங்காட்டு — பிருஹத் ஆரண்யக – உபநிஷத்துக்கு வெள்ளைத்தோல் அறிஞர்கள் சுட்டும் காலம் கி.மு 850. அவர்கள் யார் யார் இந்த உபனிஷத் ரகசியத்தை வழி வழியாகச் சொல்லிக் கொடுத்தனர் எனப்தில் சுமார் 60 தலை முறைகளைக் கூறுகின்றனர். அவ்வளவு தலைமுறைகளையும் பெயர் சொல்லி பட்டியல் போட்டுள்ளனர். பல ரிஷிகளின் பெயர்கள் வேறு எந்த இந்துமத நூலிலும் இல்லை ; அவ்வளவு பழமையானது ; ஒரு தலை முறைக்கு 30 ஆண்டுகள் வைத்தாலும் 1800 ஆண்டுகள்; அத்தோடு கி.மு 850ஜக் கூட்டினால் 2650 ஆண்டுகளுக்கு முன்னர் போய்விடுவோம். அதாவது சிந்து-சரஸ்வதி நதிக்கரை நாகரீகத்துக்குப் போய்விடுவோம்.

ஆக இலக்கிய, தொல் பொருட் துறை, வரலாற்றுச் சான்றுகள் (கி.மு 1500 வாக்கில் கடலில் மூழ்கிய துவாரகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது ) கிடைத்திருப்பதால் சம்ஸ்கிருதமே உலகின் பழைய மொழி என்று எவர் தலை மீது அடித்தும் சத்தியமாகச்  சொல்லலாம்  . காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) எழுதிய சம்ஸ்கிருதப் பாடல் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இனிய வாய்ப்பாட்டு மூலம் உலகெங்கும் ஒலித்ததும் டாக்டர் ராகவன் நமது காலத்தில் எழுதிய சம்ஸ்கிருதப் படைப்புகளும் , கர்நாடகத்தில் ஒரு பிரதேசம் முழுதும் சம்ஸ்கிருதத்தில் பேசுவதும். உலகம் முழுதும் சம்ஸ்கிருதத்தை மாணவர்கள் கற்பதும் , சம்ஸ்கிருதத் சொற்களை நீக்கினால் தமிழ் மொழியில் பாதி அல்லது முக்கால்வாசி பழந்  தமிழ் நூல்கள் அழிந்து போகும் , சிதைந்து போகும் என்பதும் சம்ஸ்கிருதம் உயிருள்ள மொழி, உலகின் மிகப்பழைய மொழி என்பதற்கு சான்று பகரும்

தமிழும் சம்ஸ்கிருதமும் இந்தியத் தாயின் இரு கண்கள்.

வாழ்க தமிழ், வளர்க சம்ஸ்கிருதம்

tags — ஆயிரம், இலக்கண நூல்கள்,  வினைச் சொற்கள் ,

வீடு பற்றிய 5 பழமொழிகள் கண்டுபிடியுங்கள் (Post No.8421)

WRITTEN BY LO

NDON SWAMINATHAN

Post No. 8421

Date uploaded in London – 29 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.வீட்டுக்கு வீடு  வாசற்படி.

2.கட்டியவனுக்கு ஒரு வீடு , கட்டாதவனுக்கு ஊரெங்கும் வீடு

3.கட்டின வீட்டுக்கு எட்டு வக்கணை

4.வீட்டைக் கட்டிப் பார், கலியாணம் செய்து பார்

5.வீடு பற்றி எரியும்போதா கிணறு வெட்டுவது?

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- ,  பழமொழிகள், வீடு