Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
BOOKS INDIANS SHOULD READ- Chapter 3-Part 2
R. Nanjappa
Time as ally This is a great read, unlike any other book on motivation. In nine enchanting chapters, it tells us how to make time our ally to realise our dreams. It gives numerous examples of real life cases. Even if we had to work at some job for a living, it need not stand in the way of shaping our life the way we dream of. Those long years could actually turn out to be a preparation, in ways we cannot decipher! Only, we should not give up hope, or waste our time or talent but nurse it by due application and sustained effort.
I deliberately refrain form giving a summary of the ideas as I want our people. especially youngsters, to read the book first hand and be inspired. I will just give three quotes from the book:
“The universe is filled with examples which suggest that all good things take time… Yet in our fast-moving age, we begrudge the role of time and are embarrassed by the time it takes to do worthwhile things.”
“…..your success is more likely to occur the moment you stop looking for ‘great moments’ of motivation and instead give yourself the time to bring real things into being.”
“ major goals can and are often realised by anyone, as long as they are cast within appropriate time frames.”
Friends, don’t miss this book. Whatever the age we are at, we all can still do something! We can make life meaningful.
We have not wings, we cannot soar;
But we have feet to scale and climb
By slow degrees, by more and more,
The cloudy summits of our time.
The heights by great men reached and kept
Were not attained by sudden flight,
But they, while their companions slept,
Were toiling upward in the night.
– Henry Wadsworth Longfellow
Note:
What do we mean by greatness? It is not necessarily concerned with great wealth or public acclaim. It need not be confused with public leadership roles. Essentially, it has two dimensions: it is realising our inner urge or potential, and making a useful contribution to society. It is leading a fulfilled life, Self-actualization as Abraham Maslow said it.
“…..in thinking about time as a separate dimension of our lives, we rapidly slide into the view that time is finite and short, that it is in some sense our enemy, or at least a commodity in short supply. Yet time is none of these things. Time is a dimension of our life and experience. Time is an integral part of what we do and who we are.”
Time is no doubt precious, and non-renewable! Yet, how we waste our time in the pursuit of trivial things, and complain of ‘no time’ for really big things! Again, as Butler-Bowdon quotes Anthony Robbins:
” Most people overestimate what they can achieve in a year, but underestimate what they can achieve in a decade.”
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
மஹாபாரதம்
மஹா வீரனான கர்ணனின் மரணத்திற்கான காரணங்கள் என்னென்ன?
ச.நாகராஜன்
மஹாபாரதம் படிக்கப் படிக்கத் தெவிட்டாத அறநூல்! பேராசையும், அதிகார ஆணவமும், சூழ்ச்சியும் கொண்டோர் மிகுந்த உலகில் நல்லோர் படும் பாடு நாம் அறிந்ததே!
அப்படிப்பட்ட உலகில் மஹாபாரத காலத்தில் வியப்பூட்டும் ஒரு பாத்திரம் கர்ணன். அவனுக்கென்றே ஒரு பர்வத்தை வியாஸர் ஒதுக்குகிறார்.
கர்ணனைப் பற்றி யுதிஷ்டிரரின் புகழ் மொழிகள் இவை:
பதினாயிரம் யானை பலம் கொண்டவன்.
யுத்தம் செய்வதில் ஒப்பற்றவன்.
சிம்மம் போன்ற சௌரியமுள்ள நடை உள்ளவன்.
ஜயசீலன்.
மாறாத நியமம் உள்ளவன்.
திருதராஷ்டிரனுடைய மகன்களுக்கு ஆதாரமானவன்.
மானி.
கொடுமையான பராக்கிரமம் உடையவன்.
பகைவரைப் பொறுக்காதவன்.
எப்பொழுதும் சுறுசுறுப்புள்ளவன்.
ஒவ்வொரு யுத்தத்திலும் பாண்டவர்களை எறிந்தவன்.
அதிவேகமான அஸ்திரம் உள்ளவன்.
ஆச்சரியமான யுத்தம் செய்கிறவன்.
ஸமர்த்தன்.
ஆச்சரியமான பராக்ரமம் உள்ளவன்.
குந்திக்கு ரகசியத்தில் உண்டான புத்திரன்.
இப்படிப்பட்டவன் எனக்குத் தமையன் அல்லவா என்று கூறி வருந்துகிறார் தர்மர்.
யாரிடம் வருந்துகிறார்?
மஹாபாரதப் போர் முடிந்தவுடன் வியாஸர், நாரதர், தேவலர், தேவஸ்தானர், கண்வர் ஆகிய மஹரிஷிகளும், ரிஷிகளுடைய சிறந்த சீடர்களும் தர்மபுத்திரரிடம் வந்தனர்.அப்போது நாரதரிடம் கர்ணனைப் புகழ்ந்து தர்மபுத்திரர் கூறிய வார்த்தைகளே இவை.
கர்ணனின் வரலாறு முழுவதையும் தர்மபுத்திரருக்கு நாரதர் கூறி விளக்குகிறார். கர்ணனின் வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள் நமக்குத் தெரிய வருகிறது.
பிரம்மாஸ்திரத்தை எப்படியேனும் பெற வேண்டும் என்று நினைத்த கர்ணன் துரோணரிடம் சென்று அதைக் கேட்கிறான்.
ஆனால் அவர் மறுத்து விடுகிறார்.
அர்ஜுனனின் மீது கொண்ட பிரியத்தினாலும், கர்ணன் இதை எதற்காகக் கேட்கிறான் என்ற அவனது தீய எண்ணத்தை அறிந்ததாலும் துரோணர் அவனை நோக்கி, ”விதிப்படி விரதத்தை அனுஷ்டித்த பிராம்மணன் பிரம்மாஸ்திரத்தை அறிந்து கொள்ளத் தகுதியானவன். அல்லது மிகுந்த தவத்தை உடைய க்ஷத்திரியனும் தெரிந்து கொள்ளத் தக்கவன். வேறு எவனும் எவ்விதமும் இதைத் தெரிந்து கொள்ளத் தக்கவன் அல்லன்” என்று கூறுகிறார்.
ஏமாற்றம் அடைந்த கர்ணன் நேராகப் பரசுராமரிடம் சென்று தன்னை பிராம்மணன் என்று சொல்லி அஸ்திர வித்தைகளைக் கற்க ஆரம்பித்தான். பிரம்மாஸ்திரத்தையும் கற்றான்.
ஆனால் ஒரு நாள் அவன் தொடையில் தலை வைத்து பரசுராமர் உறங்கிய போது தொடையை ஒரு புழு வந்து துளைக்கத் தொடங்கியது.
தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பரசுராமர் எழுந்து விடக் கூடாதே என்று வலியைப் பொறுத்துக் கொண்டான் கர்ணன். ரத்தம் பொங்கியது. அந்த ரத்தம் பரசுராமரை நனைக்கவே அவர் எழுந்து கொண்டார். நடந்ததைப் பார்த்தார். இப்படி ஒரு வலியை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாதே, உண்மையைச் சொல் நீ யார் என்றார்.
கர்ணன் உண்மையைச் சொல்ல வேண்டியதாயிற்று. க்ஷத்திரியர்களுக்கு எதிரியான பரசுராமர் வெகுண்டு, “உனக்குச் சமமானவனுடன் யுத்தம் செய்யும் போது உனது வத (அழிவு) காலத்தில் மட்டுமே இந்த பிரம்மாஸ்திரம் உனக்குத் தோன்றக் கடவது” என்று சபித்து அவனை உடனே அங்கிருந்து போக உத்தரவிட்டார்.
இதே கால கட்டத்தில் ஒரு பிராம்மணனுடைய பசுவை அவன் தற்செயலாகக் கொன்று விடுகிறான். கோபம் கொண்ட பிராம்மணன் கர்ணனை நோக்கி, “ அட, பாவி! எப்பொழுதும் எவனுடன் நீ பகை கொண்டிருக்கிறாயோ, எவனை வெல்ல எப்போதும் நீ முயற்சிக்கிறாயோ அப்படிப்பட்டவனுடன் நீ யுத்தம் செய்யும் போது உன்னுடைய தேர் உருளையை பூமி விழுங்கப் போகிறது. சக்கரமானது பூமியால் விழுங்கப்பட்டவுடன் தடுமாறிக் கொண்டிருக்கும் உன் தலையை உன் எதிரியானவன் அறுத்துத் தள்ளப் போகிறான்” என்று சாபம் கொடுத்தார்.
ஆக இப்படிப்பட்ட பல சம்பவங்களை தர்மபுத்திரர் தெரிந்து கொள்கிறார்.
பின்னர் நாரதர் கர்ணனின் மரணத்திற்கான காரணங்களை வரிசையாக அடுக்குகிறார்.
தேவேந்திரனால் யாசிக்கப்பட்டவுடன் தேவர்களின் மாயையினால் குண்டலங்களையும் உடன் பிறந்த கவசத்தையும் கர்ணன் தானமாகக் கொடுத்து விட்டான்.
இப்படி கவசத்தையும் குண்டலங்களையும் இழந்த கர்ணன், பிராமணருடைய சாபத்தாலும், பரசுராமருடைய சாபத்தாலும், குந்திக்கு வரம் கொடுத்ததாலும், இந்திரனுடைய மாயையினாலும், ரதிகர்களைக் கணக்கிட்ட காலத்தில் அர்த்த ரதன் என்று அவனை பீஷ்மர் சொல்லி செய்த அவமானத்தாலும், சல்லியன் செய்த தேஜோபங்கத்தாலும், கிருஷ்ணரின் நீதியாலும் அந்த கிருஷ்ணர் பார்த்துக் கொண்டிருக்கையில் அர்ஜுனனால் யுத்தத்தில் கொல்லப்பட்டான்
இப்படிப் பல காரணங்களும் யுத்த களத்தில் ஒன்று சேர மாவீரனான மானி கர்ணன் கொல்லப்பட்டான்.
அவனை பீஷ்மர் ஒரு நாளும் அதிரதன் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு தேராளியின் சக்தியில் பாதியைக் கொண்ட அர்த்த ரதன் என்றே அவன் பீஷ்மரால் கணிக்கப்பட்டான். துரியோதனனிடம் ரதாதிரதர்களின் கணக்கைச் சொல்கையில் அவர் கர்ணனை அர்த்த ரதன் என்றே மதிப்பிட்டுச் சொல்லி விட்டார். இந்த அவமானம் அவனைப் பெரிதும் வருத்தியது; மனதைப் பாதித்தது.
குந்தியிடம் அர்ஜுனனைத் தவிர இதர பாண்டவரைக் கொல்ல மாட்டேன் என அவன் வரமும் தந்தான்.
ஆக இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து அவனை அழித்தது.
போரில் அஞ்சலிகம் என்னும் ஒரு சிறந்த பாணத்தை விடுத்து அவன் தலையை அறுத்தான் அர்ஜுனன்.
அது எப்படிப்பட்டது என்பதை வியாஸர் கூறுகிறார் இப்படி:
“அஞ்சலிகம் என்னும் பாணம் மகேந்திரனுடைய வஜ்ராயுதத்துக்கும் அக்னியுடைய தண்டத்துக்கும் ஒப்பானது. சூரியனுடைய உத்தமான கிரணத்துக்கு நிகரானது. மர்மங்களைப் பிளக்க வல்லது. ரத்தத்தினாலும் மாமிசத்தினாலும் பூசப்பட்டது. அக்னிக்கும் சூரியனுக்கும் ஒப்பானது. பூஜிக்கத் தக்கது. மனிதர்கள், குதிரைகள், யானைகளின் உயிரை வாங்க வல்லது. மூன்று அரத்னி அளவுள்ளது. ஆறு சிறகுகள் உள்ளது. வெகு விரைவாகச் செல்வது. உக்கிரமான வேகம் கொண்டது. இந்திரனுடைய வஜ்ராயுதம் போன்ற வீரியம் உள்ளது. அதி கோரமாகப் பரவுகின்ற காலாக்னி போன்றது. (சிவனுடைய) பிநாகத்துக்கும் (விஷ்ணுவினுடைய) சக்கரத்துக்கும் நிகரானது. பிராணிகளுக்கு பயத்தை உண்டு பண்ணி அழிப்பது.”
அடேயப்பா, இப்படி ஒரு வர்ணனையை வியாச பாரதத்தில் வியாஸர் நம் முன் வைக்கிறார். (கர்ண பர்வம் அத்தியாயம் 98வது அத்தியாயம்)
அந்த அஞ்சலிகம் பாய்ந்து சென்று கர்ணனுடைய தலையை அறுத்தது.
கீழே விழுந்தான் கர்ணன். அவனுடைய தேகத்தினின்று ஒரு தேஜஸானது ஆகாயத்தை வியாபித்துக் கொண்டு சூரியனைச் சென்று சேர்ந்தது.
உள்ளத்தில் நல்ல உள்ளம் கர்ணனின் உள்ளம் என்றாலும் சகவாச தோஷம் அவனை மரணத்திற்கு அழைத்துச் சென்றது!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from tamilandvedas.com
கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .
ஜூலை 2020 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு.
MODI NAMASKAR; NO INDIAN PM HAS DONE SUCH A NAMASKAR
July 2020
1-7-20 8267 அரசியல் சட்டம் பற்றிய ஒரு ஒப்பீடு! – 3 இந்தியா, அயர்லாந்து,
சீனா ஆகிய நாடுகளின் அரசியல் சட்டங்கள் – ஒப்பீடு
2-7-20 8271 பாரத ஸ்தலங்கள் – 6
2-7-20 8276 எஸ். நாகராஜன் கட்டுரை இண்டெக்ஸ் -1 (டிச 16,ஜன 17, பிப் 17)
3-7-20 8277 ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள்!
3-7-20 8282 எஸ். நாகராஜன் கட்டுரை இண்டெக்ஸ் -2 (மார் 17,ஏப் 17, மே 17)
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மாக்ஸ் முல்லர் (Max Muller) உளறலுக்கு தியோடர் கோல்ட்ஸ்டக்கர் (Theodor Goldstucker) என்ற யூத மத சம்ஸ்க்ருத அறிஞர் கொடுத்த பதிலில் ஒரு அரிய செய்தி உளது .
கர்ப்பிணிப் பெண்களின் வளைகாப்பு- ஸீமந்த சடங்கில் பிராணர்கள் முள்ளம்பன்றி முள்ளை (Quill of Porcupine) உபயோகிப்பது ஏன் என்று சிவபெருமான் ஞான ரஹஸ்ய காண்டம் என்னும் நூலில் கூறுகிறார்.
இந்துக்களுக்கு 2400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தும் தெரியாது; புஸ்த்தகமும் தெரியாது என்று சம்ஸ்க்ருத வரலாற்றுப் புஸ்தகத்தில் மாக்ஸ் முல்லர் உளறி இருந்தார். ஏனெனில் பாணினி இதைப்பற்றி ஒன்றுமே கதைக்கவில்லை என்று முல்லர் கதை அளந்தார். கோல்ட்ஸ்டக்கர் இதையெல்லாம் மறுத்து பாணினி நூலில் இருந்தே ஆதாரங்களைத் தந்தார் ; இந்துக்களுக்கு எழுதவும் தெரியும்; வேதங்களையும் பாணினி இலக்கண நூலான ‘அஷ்டாத்யாயி’யையும் எழுதியே வைத்தனர். ஆனால் வேதத்தை மட்டும் வாய்மொழியாகத்தான் கற்கவேண்டும் என்று விதித்து, புஸ்தகம் உள்ள இந்த நாளிலும் அதைக் கடைப்பிடிக்கின்றனர் என்று கோல்டஸ்ட்க்கர் கூறினார். இவ்வளவுக்கும் இதை கோல்ட்ஸ்டக்கர் சொன்ன நாளில் அசோகர் கல்வெட்டுகளோ சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரீக எழுத்துக்களோ கண்டுபிடிக்கப்படவில்லை !
மாக்ஸ்முல்லர் தனது பசையற்ற வாதங்களுக்கு குமாரில பட்டரின் மீமாம்ச வார்த்திக்க நூலை வம்புக்கு இழுத்திருந்தார் . அதாவது பாணினி நூலுக்கு 1500 ஆண்டு காலத்துக்குப் பின்வந்த புஸ்தகம். . அப்படியா சேதி? அப்படின்னா , நானும் ஒரு புஸ்தகத்தைக் காட்டறேன். அதில் சிவ பெருமானே எழுத்தின் மஹிமை பற்றி விதந்து ஓதியிருக்கிறார் , பாரும் ஐயா ! என்று கோல்ட்ஸ்டாக்கர் ஞான காண்ட சேஷ ரஹஸ்யம் என்னும் சிவ-பார்வதி உரையாடல் ஸ்லோகங்களை எடுத்துக் காட்டினார் . அதில் பார்வதிக்கு சிவ பெருமான் சொல்கிறார் :-
!அன்பே, ஆருயிரே, தேனே , கற்கண்டே, மயிலே, குயிலே, மானே, மரகதமே, மாணிக்கமே — இவை எல்லாம் சம்ஸ்கிருதத்தில் அம்பாளின் பெயர்கள் — என்று சொல்லாமல் சொல்லிவிட்டு)
“நான் இதுவரை எழுத்துக்கள் பற்றி உனக்குச் சொன்ன இலக்கண விளக்கங்களை யார் ஒருவன் பூர்ஜ பத்திரத்தில், கோரோசனை, குங்குமப்பூ கலந்த மஞ்சள் வர்ணத்தில் கழுத்தில் அல்லது கையில் அல்லது தலையில் முள்ளம்பன்றி முள்ளை வைத்து எழுதுகிறானோ அவனுக்கு நோய்களே இருக்காது . வேறு ஒருவரைக் கொண்டும் எழுத வைக்கலாம். மூன்று நாட்களில் நோய்கள் பறந்தோடிப் போகும். ஒரு புத்திசாலி மனிதன் இதை எழுதி தன்னிடம் வைத்திருந்து அதை போற்றிப், புகழ்ந்து பாதுகாத்து, படித்து வந்தால், மலடியிடம் கூட, என்னைப் போன்ற ஒரு ஆண் மகனைப் பெறுவான் .
ஒரு நாட்டில் யுத்தம் நடந்தாலோ, அரசனின் கொடுங்கோலாட்சி நடந்தாலோ , புலிகள் தாக்கும் பயம் இருந்தாலோ அல்லது அது போன்ற பயம் பீதி தரும் நிகழ்வுகள் நடந்தாலோ நான் மேலே சொன்ன எழுத்து இலக்கணத்தை நினைத்த மாத்திரத்தில் பயமும் பீதியும் பறந்தோடிப் போகும் . இதற்கு மேல் நன் உனக்கு என்ன சொல்ல முடியும் ?
( பிர்ச் Birch Tree Leaf என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பூர்ஜ மரத்தின் இலையை வடக்கிலுள்ளோர் எழுதப் பயன்படுத்தினர். தெற்கிலுள்ளோர் பனை மர இலையை/ ஓலையைப் பயன்படுத்தினர்).
கோல்ட்ஸ்டாக்கர் மேற்கோள் காட்டிய ஸ்லோகங்களில் இரண்டு ரஹஸ்யங்கள் இருக்கின்றன . கர்ப்பிணிப் பெண்களுக்கு சீமந்தம் – வளைகாப்பு நடக்கும் வீடுகளில் அய்யர் ஒரு முள்ளம் பன்றி முள்ளைக் கொண்டுவந்து கணவன் கையில் கொடுத்து, மந்திரம் சொல்லி, பெண்ணின் தலையில் வகிடு இழுக்கச் சொல்லுவார். அதாவது தலை முடி நடு வகிடு வழியாக முள்ளை அழுத்திக் கோடு கிழிக்கவேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் வைத்தியத்தில் கோரோசனை , குங்குமப்பூவும் உண்டு. எல்லா பிராமணர் வீடுகளிலும் இவை இருக்கும். அவற்றையும் மஞ்சளையும் பயன்படுத்தி இருப்பார்கள் .
பீஷ்மர் காலத்தில் அம்புப் படுக்கையில் உதயமான, அக்யு பஞ்சர் அக்யூ பிரஸர் , (Acupuncture, Acupressure) வைத்தியத்தை முள்ளம் பன்றி முள் மூலமாகப் பின்பற்றுகிறோம். அதே நேரத்தில் எழுத்துக்களின் அபார மந்திர சக்தியையும் போற்றிப் பாதுகாக்க இந்த ‘டெக்னீக்’கை சிவபெருமான் சொல்லிக் கொடுக்கிறார். எழுத்துக்களின் மந்திர சக்தி பற்றியும் 51 எழுத்துக்களும் அம்பாளின் உருவத்தில் உள்ளது பற்றியும் இந்த 51 சப்தங்களும் தமிழிலும் இருப்பது பற்றியும் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) நீண்ட உரை ஆற்றியுள்ளார். ‘தெய்வத்தின் குரல்’ புஸ்தகங்களில் (Seven Parts) படித்து அறிக .
கோட்ஸ்ட்க்கர் எழுதிய பதிலில் மகாபாரத அனுசாசன பருவத்திலும் குமாரிலரின் வா ர்த்திகத்திலும் வேதங்களை எழுதிப் படிக்ககூடாதென்பதை மாக்ஸ்முல்லரே காட்டியிருப்பதை சொல்லிவிட்டு வேதங்களைப் பிழைபட மாற்றிச் சொல்லுவோரையும் இது கண்டிக்கிறது என்கிறார் .
‘எழுதா மறையளித்த எழுத்தறியும் பெருமாள்’ (பெரிய புராணப் பாடல்) என்ற தலைப்பில் நான் முன்னர் எழுதிய கட்டுரையில் 2000 ஆண்டுக்கு முந்தைய சங்க இலக்கிய புலவர்களுக்கும் இது தெரியும் என்று காட்டியுள்ளேன் .
வாழ்க எழுத்து அதிகாரம்! வளர்க முள்ளம்பன்றி முள் வைத்தியம்!!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
எல்லா சினிமாக்களிலும், கட்டுரைகளிலும் வரும் இந்த மந்திரம் பிரதானமாகக் கருதப்படுகிறது .உண்மையில் சப்தபதி முடிந்தால்தான் கல்யாணம் முடிந்ததாக இந்து சட்டம் சொல்கிறது.
இந்த மந்திரம் சொல்லும்போதே ‘கெட்டி மேளம், கெட்டி மேளம்’ என்று கையை ஆட்டுகிறார்கள் . அப்போது நாம் வீசிப் போடும் பூவும் அட்சதையும் மணமக்களைத் தவிர , ஐயர் மற்றும் மாப்பிள்ளை, பெண் வீட்டாரின் சொந்த பந்தங்கள் தலையிலும் விழும்.
உடனே ‘டைனிங் ஹால்’ நோக்கி ஓடுவோம் ; இதில் வீடியோக்காரர், போட்டோகிராபர்கள் அட்டகாசம் வேறு ! மறுபடியும் தாலியைத் தொட்டுக்கொண்டு காமிராவையே பாருங்கள் என்று கட்டளையிடுவார்கள் . போட்டோவுக்காக இரண்டு தடவையா தாலி கட்ட முடியும்?
இந்த மங்களகரமான ஆரம்பத்துடன் ‘கல்யாண ஜோதிட’த்துக்கு வருவோம்.
ஆண் , பெண் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் முன் அவர்களுடைய ஜாதகங்கள்தான் ஒன்றை ஒன்று சந்திக்கும் ஜோதிடர் கைகளில் ! முதலில் வெவ்வேறு கோத்திரம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, வயது வித்தியாசம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா என்று பார்ப்பார்.
நட்சத்திரங்களில் மிக மிக உயர்ந்தவை என்று ரிஷி முனிவர்கள் தேர்ந்தெடுத்தது நான்கு நட்சத்த்திரங்கள் ஆகும் :–
மிருகஸீர்ஷம்
மகம்
சுவாதி
அனுஷம்
ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த நான்கு நடத்திரங்களில் ஒன்று இருக்குமானால் பொருத்தமே பார்க்கத் தேவையில்லை என்பது ஆன்றோர்வாக்கு !
எதற்கும் பொருத்தம் பார்த்துவிடலாமே? என்று கேட்பது பெற்றோர் வாக்கு ஆகும்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே நட்சத்திரம் இருந்தால் கல்யாணம் செய்யலாமா? என்ற கேள்வி எழும்.
அதற்கும் பதில் சொல்கிறார்கள் ஆன்றோர்கள்.
ஏக நட்சத்திரப் பொருத்தமுள்ளவை :–
ரோகிணி, திருவாதிரை, மகம், ஹஸ்தம்,
விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி .
இது தவிர மிக மிக முக்கியப் பொருத்தங்கள் இருக்கிறதா என்றும் பார்க்கவேண்டும். அது என்ன முக்கியப் பொருத்தம் என்று கேட்கிறீர்களா ?
தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு ஆகிய ஐந்தும் முக்கியமானவை.
மேற்கண்ட ஐந்தும் ஒரே நட்சத்திரப் பொருத்தம் உடைய ஜாதகத்தில் இருக்காதெனினும் கீழ் கண்ட விஷயங்களை பார்ப்பார்கள் :-
திசா சந்திப்பு – ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே திசை ஒரே நேரத்தில் நடக்கக் கூடாது.
பாவ சாமியம் – பாவ சாமியம் என்பது பெண்ணை விட, அரைப் பாகமாவது ஆணுக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
அவ்வளவுதான் ; பிறகு என்ன ?
மேள, தாளத்துடன் கல்யாணம்தான் .
ஆயினும் தற்காலத்தில் கல்யாணத்துக்கு முன்னே, செல் போனில் பேசிக்கொள்வதும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சந்திப்பதும் , 100 ஈ மெயில் பரிமாறிக்கொள்வதும் , போட்டோக்கள் — பல போஸ்களில் — பல வண்ண உடைகளில் அனுப்புவதும் நடக்கின்றன .
அதனால் என்ன ? நமக்குத்தான் லட்டு, அப்பளம் , வடை, பாயசம், போலி, தயிர்வடையுடன் அறு சுவை உண்டி கிடைக்கிறதே !!
(இதில் கண்ட விஷயங்களில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் ஈ மெயில் அனுப்புங்கள் . ‘பெர்சனல்’ கேள்விகள் இருந்தால் உங்கள் பெயரை வெளியிட மாட்டோம். பதில் மட்டும் ‘பிளாக்’கில் வரும் . பொதுவான கேள்விகள் இருந்தால் உங்கள் பெயர், ஊருடன் வெளியிட்டு பதில் தருகிறோம். ஜோதிடம் வளர்க ! ஜோதிடர் வாழ்க !!)
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
BOOKS INDIANS SHOULD READ- Chapter 3-Part 1
R. Nanjappa
NEVER TOO LATE TO BE GREAT MOST of us come from the great middle class. We lead small, insignificant lives! We have to study something – we do not have much choice, especially if we belong to the so called ‘forward ‘ communities! Then hunt for jobs. Here too there is not much choice! One has to take what comes along. And stick to it.
In recent years, the expanding IT sector offered job opportunities. But these jobs do not constitute a steady career, as in the old days. There is much job-hopping and mid-stream changes. Plus the constant pressure of keeping abreast of changes and learning new tricks. Happily, the youngsters have learned to live with such phenomena. But no one can say how long these trends will last, given the furious pace of technological change.
LOST DREAMS
The need to get some govt approved qualification and get a job weighs so heavy on the minds of youngsters that they have forgotten to dream and develop any greater vision! They have to choose subjects and select courses that have immediate market relevance. How many can afford to dream of being artists, poets, writers, inventors? Our educational system, still largely following the colonial contours, is directly linked to the job market; yet, it only delivers clerks! We still think of employment, not enterprise! And yet, surveys say that 50% of our graduates, including engineering graduates, are not employable!
The situation is made complex by the social changes that have taken place in the last 2-3 decades: especially the disintegration of the joint family which acted as a social safety net. Today a person cannot take for granted the support of an elder sibling or an uncle or other member of the extended family, till he is able to stand on his own.
Employment is not everything
Even if one has a steady, high paying job, one has to retire and then all the accumulated knowledge and so called experience count as nothing! When one looks back on a career of even 3+ decades, what can one count as one’s big achievements? Those working in a hierarchy can hardly out-perform the system. Exceptionally good things will be appropriated by bosses or stolen by others, or simply suppressed. In bureaucratic hierarchies, creativity will often invite trouble. It is safe to run with the pack. See what happens to our Administrative services: attracting so called bright people, it turns into a buffalo service- hard to move! As the famous Peter Principle states:
In a hierarchy every employee tends to rise to his level of Incompetence.
What people with middle class background fail to realise is that no matter how high they rise in a hierarchy, they can hardly call anything their own in their working space! They are basically time servers- one day they will be out! Official life is only a part of their total life, and for many these days, the retirement years can be quite long! They will feel an emptiness around them, in them, if they have failed to develop other aspects of their life and personality. Big sounding official designation is not the mark of true greatness or real achievement.
How we lose dreams
Most normal persons have dreamt of big things at some stage while young. Most of us have felt we are good at something sometime or other. But we become our own critics and dismiss them as unrealistic and unattainable. We race with time, anxious for quick employment, and settle to a routine as the system will shape or allow. While a job can often be an immediate necessity, it need not be a killer of dreams! We are under no orders to show quick results as for realising our dreams! While the job is for the belly, our dreams can be pursued to nourish our soul!
We may not all of us dream of becoming industrial tycoons or Narayana Murthys. But we are surely good at something? We surely love a subject? We do like an art or literature? What prevents us from pursuing these interests life long?
Timeframes
Most self-help and motivational books focus on the short-run, the quick results, offering quick-fix solutions for success here and now. But how many great people did really achieve their greatness in such quick fashion?
NEVER TOO LATE TO BE GREAT
Tom Butler-Bowdon has written a fascinating book dispelling the myth of quick success or short cut to greatness.
[Book cover shown here for purely educational purpose.
Published by Virgin Books, 2014. (Random House Group company.)Photo of my personal copy.]
The problem with modern life is the sense of urgency, haste or hurry that is forced upon us from all corners. Tom Butler-Bowdon quotes Richard Koch:
” Most people overestimate what they can achieve in a year, but underestimate what they can achieve in a decade.”
In fact, most of us in regular employment do not think of any achievement at all except playing the hierarchical musical chair!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
சம்ஸ்கிருதச் செல்வம்
உருவத்தைக் கண்டு எடை போடாதே!
ச.நாகராஜன்
சம்ஸ்கிருத சுபாஷிதங்கள் தொடர்ச்சியாக இன்னும் சிலவற்றை இங்கு காணலாம்:
குலானி சமுபேதானி கோபி: புருஷதோஷ்வத: |
குலசங்க்யாம் ந கச்சந்தி யானி ஹீனானி வ்ருத்தத: ||
எத்தனை ஆண் மக்கள் இருந்தாலும் சரி, எவ்வளவு குதிரைகளும் பசுக்களும் இருந்தாலும் சரி, குடும்பத்தில் நல்லொழுக்கம் இல்லையேல் அப்படிப்பட்ட குடும்பங்கள் குடும்பங்களாகக் கருதப்பட மாட்டாது.
Such families, though thery are in possession of (any number of ) male members, horses and kine, if found in lacking in good conduct, can not be counted among families.
(Translation by S. Bhaskaran Nair)
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பார் வள்ளுவரும்!
சில புலிகளின் முகம் மான் போலத் தோற்றமளிக்கும். சில மான்களோ புலிகளின் முகம் போன்ற தோற்றமளிக்கும். இந்த இயற்கையான உருமாற்றத்தால் வெளித்தோற்றத்தைக் கண்டு நம்புவது அபாயகரமாகும்.
Some tigers have faces resembling a deer, and some deer look like a tiger in the face; due to this metamorphosis of one’s natural form it is dangerous to trust appearances.
(Translation by A.A.R.)
ஆளைப் பார்த்து மயங்காதே, ஊதுகாமாலை என்பது தமிழ்ப் பழமொழி.
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பார் வள்ளுவரும்.
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. (குறள் 667)
ஆடம்பரமான அணிகலன்களுடன் வரும் ஒருவரை மதிக்கிறோம். எளிமையாக இருப்பவரை மதிப்பதில்லை. உருவத்தைப் பார்த்து கேலி செய்யாதே; பெரிய தேர் உருண்டு ஓடி வரும் போது அதற்கு இன்றியமையாத அச்சாணி மிகச் சிறிது தான் என்கிறார் வள்ளுவர்.
*
கே சோரா: கே பிஷுனா: கே ரிபவ: கேபி தாயாதா: | ஜகதகிலம் தஸ்ய வஷே யஸ்ய வஷே ஸ்யாதிதம் சேத: ||
யார் திருடர்கள்? யார் வதந்திகளைப் பரப்புவோர்?
யார் எதிரிகள்? யார் உறவினர்கள்?
எந்த ஒருவனுடைய மனம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறதோ அவனுக்கு அகில உலகமும் வசமாகும்!
Who are robbers? Who are tale-bearers
Who are enemies? And who are kinsmen?
To that man who has the mind under control the whole world comes under his sway.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from tamilandvedas.com
கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .
August 2016
1 -8-16 3025 கீதையின் மஹிமை : சிருங்கேரி ஆசார்யர்!(ஞான ஆலயம்