Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் உள்ள எல்லா நீதி நூல்களிலும் லெட்சுமி வசிக்கும் இடமும் அவளுடைய அக்காள் வசிக்கும் இடமும் சொல்லப்பட்டுள்ளன. திருவள்ளுவரும்கூட இந்த இரண்டு இந்து தெய்வங்களைப் பலமுறை சொல்கிறார். அதற்கு முன்பாக, நமக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அம்பலவாணக்கவிராயர் அறப்பளீச்சுர சதகத்தில் செப்புவதைக் காண்போம் tamilandvedas.com, swamiindology.blogspot.com
நீண்ட பட்டியலைப் படியுங்கள் –
நல்ல லட்சணமுள்ள குதிரையின் முகத்தில், அரசனிடத்தில் , பண்பாடு உடையவர் இல்ல த்தில், தாமரை மலரிடத்தில் , வில்வ மரத்தில், துளசியில், கற்புடைய பெண்கள் இடத்தில், கடலில், கொடியில், கல்யாண வீட்டு வாசலில், நல்ல நகரத்தில்,நல்ல நெற்பயிரில், ஒளி உமிழும் விளக்கில்,வலம்புரிச் சங்கில், நல்லோர் சொல்லும் வாக்கில் (சொல்லில்),பொய் பேசாதவர் இடத்தில் , புஷ்பங்கள் மலர்ந்த குளத்தில் , பால் குடத்தில் , யானையின் தலையில் மலர் மங்கைஅதாவது செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லெட்சுமி தேவி உறைவாள் (வசிக்கிறாள்).
இதில் மனிதர்களைத் தவிர மிருகங்களும் செடிகொடிகளும் , பால்குடம் போன்ற பொருட்களும் வருகின்றன. இந்துக்கள் இவைகளை சுப சின்னங்களாகக் காண்பர். மேலும் அத்தகைய இடங்களில் பாஸிட்டிவ் அலைகளை (Positive vibrations) அதிகம் இருக்கும். எடுத்துக் காட்டாக ஒரு கல்யாண வீட்டில் என்னதான் செலவானாலும், உள்ளுக்குள் என்னதான் கசமுசா இருந்தாலும், அங்கே உள்ள மேள தாள முழக்கமும், மந்திர கோஷமும், அறுசுவை உண்டியின் மணமும் நல்ல உணர்வு அலைகளைப் பரப்புகின்றன. வில்வம் , துளசி போன்றவை மருத்துவ குணம் உள்ள மரம், செடிகள்; தாமரை மலரோ இந்தியாவின் தேசீய மலர். லெட்சுமியும், சரஸ்வதியும் காயத்ரியும், பிரம்மாவும் அமரும் மலர்.
இனி லட்சுமியின் அக்காள் / தமக்கை /மூ தேவி / முகடி/ஜேஷ்டா தேவி/ தெவ்வை (திருக்குறள் 617,936) வசிக்கும் இடங்களை அம்பல வாணர் பட்டியலில் உள்ளவாறு படிப்போம்:-
சாப்பாட்டு ராமன்கள் , வாயாடிகள், பொய் பேசித் திரியும் பாவிகள் , ஆதரவற்ற அநாதைகள் , அழுக்கும் கந்தலும் உடைய ஆடைகளை அணிவோர் நாய் போலச் சீறும் பேய் மகள்கள் (துஷ்டைகள்) வாழும் வீடுகள் , தயிர்க்குடம் ,கழுதை , ஆட்டுமந்தை, பிணம் ஆகியனtamilandvedas.com, swamiindology.blogspot.com .
இவற்றில் பல சுகாதாரக் கேடானவை என்பது எல்லோரும் அறிந்ததே . இன்னும் சில, வெறி நாய் போன்ற பெண்கள் வசிக்கும் வீடுகள் முதலியன எதிர்மறை / நெகட்டிவ் (Negative vibrations) அலைகளைப் பரப்பும் இடங்கள் என்பதும் அனுபவத்தில் காணும் உண்மைகள். அங்கெல்லாம் போகக்கூடாது . போனால் குளிக்க வேண்டும். நெகட்டிவ் அலைகள் கரைந்து, நமக்கு ப்ரெஷ்னஸ்Freshness / புத்துணர்வு பிறக்கும்
இறுதியாக இலக்குமி பற்றி தமிழ் இலக்கியக் குறிப்புகளைக் காண்போம்.
திருக்குறளில் லக்ஷ்மி – 179, 519, 617, 920, 1101.இது தவிர பத்து குறட் பாக்களில் செல்வம், அழகு என்றும் பாடுகிறார் அவையும் லெட்சுமிகரமானவை என்பதை மேலே அம்பலவாணர் விளக்கிவிட்டார் .
சங்கத் தமிழ் இலக்கியத்தில் லக்ஷ்மி வரும் tamilandvedas.com, swamiindology.blogspot.com இடங்கள் —
புறம் 358, 395, 7. பரிபாடல், கலித்தொகை மற்றும் பத்துப்பாட்டின் 10 நூல்களில் நிறைய இடங்கள்.
ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்க்கையில் நடந்த ஏராளமான சம்பவங்களில் இன்னும் சில: tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரு டாக்டரின் கவிதை!
ஹரித்வாரில் பூரண்ஜி (ஸ்வாமி ராமா என்ற வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இவர் தான்!) ஸ்வாமியை மிஸ்டர் குதாதத் (Mr Khudadad) என்பவரிடம் அழைத்துச் சென்றார். குதாதத் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். பின்னால் இவர் டாக்டர் பட்டம் பெற்றார்.
அவரைச் சந்தித்த பின் ஸ்வாமி ராமா கூறினார்; “ஏன், இவர்களையெல்லாம் என்னிடம் அழைத்து வருகிறீர்கள்? அவர்கள் ஏற்கனவே ராமாவின் ஃபாஷனில் வந்து விட்டவர்கள்! அவர்களுக்கு கற்பிக்க ராமாவிடம் ஒன்றுமே இல்லை”
டாக்டர் குதாதத்திடம் அவர் கூறினார் : “ உங்கள் பெயரை ராமாவினால் புரிந்து கொள்ள முடியவில்லை. குதா (கடவுள் என்று பொருள்) தத் (கொடுக்கப்படது) என்பது குதா என்று இருந்தாலேயே போதுமே!”
உடனடியாக குதாதத் பதில் கூறினார் இப்படி; :கண்கள் உள்ளவர்களுக்கு இது; மற்றவர்களுக்கு அது (“For those who have eyes this, for others that)
இதைக் கேட்டதும் ஸ்வாமி ராமாவிற்கு ஒரே சந்தோஷம்.பெரிய புன்னகை ஒன்றை அவர் மிளிர விட்டார்.
பேட்டியால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த குதாதத் உடனேயே கவிதை ஒன்றை இயற்றினார்:
:ஓ, ஸ்வாமி ராமா! உங்கள் புன்னகை எவ்வளவு மர்மம் பொருந்தியதாக இருக்கிறது!
வாழ்வின் ரகசியம் அதில் உருவெடுக்கிறது”
(O, Swami Rama! How mysterious is thy smile,
The secret of life is manifest therein)
இந்த இருவரிப் பாடலில் ஸ்வாமி ராமதீர்த்தரின் முழு வாழ்க்கையுமே அடங்கி விட்டது!
முதலைகளுக்கு அஞ்சாத ராமதீர்த்தர்!
1905ஆம் ஆண்டு ஜனவரி மாதம்.
ஸ்வாமி ராமா கிஷன்கர் மாநில விடுதியில் (Kishangarh State house) தங்கியிருந்தார். பூரண் சிங்கும் அங்கு வந்து சேர்ந்தார்.
மிகவும் பிரசித்தி பெற்ற புஷ்கர் ஏரிக்கரையில் அது அமைந்திருந்தது. அந்த ஏரியோ ஏராளமான முதலைகள் நிறைந்த ஏரியாகும்.
ஸ்வாமி ராமா தன் கையில் ஒரு சிறிய மூங்கில் தடியை வைத்திருந்தார்.
பூரண் சிங்கிடம் அந்தத் தடியைக் காண்பித்த ஸ்வாமி ராமா, “இந்த மூங்கில் தடியை நீங்கள் பார்க்கவில்லையே! இது பிரமாதமானது. இது தான் ராமாவின் மந்திரக் கோல். முதலைகளை இது விரட்டி விடும். அது மட்டுமல்ல, ராமாவின் பென்சில், பேப்பர் எல்லாவற்றையும் இதில் வைத்து விடலாம்.
(ஸ்வாமி மூங்கிலின் உள்பக்கம் காலியாக இருப்பதையும் அதில் அவரது பேப்பர், பென்சில் இருப்பதையும் காண்பித்தார்). இது தான் ராமாவின் அனைத்துமே! ராமா தனது உடைமைகளை இப்படிச் சுருக்கிக் கொண்டு விட்டார்” என்று கூறிச் சிரித்தார். tamilandvedas.com, swamiindology.blogspot.com
மேலும் அவர் தொடர்ந்து கூறினார்;” ஒருவனின் பயணப் பெட்டி இப்படிச் சுருங்கி விட்டதென்றால் அவன் உண்மையிலேயே ஒரு ராஜா தான்! இந்த காலியிடத்திற்குள் அவன் தேவைகள் எல்லாம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்றால் அது பிரமாதம்”!
ஸ்வாமி ராமாவிற்கு ஒரு அறைக்குள் உட்கார்ந்திருப்பது என்பது பிடிக்கவே பிடிக்காது. “ராமாவிற்கு அறை என்றாலே பிடிக்காது. ஏனெனில் அது கல்லறை போல இருக்கிறது” என்பார் அவர்.
சூரிய வெளிச்சம் உள்ள மாடியில் தான் அவர் அமர்வார்!
முதலைகளை அண்ட விடாத மூங்கில் கம்பு!
ஒரு நாள் பூரண் சிங்கையும் புஷ்கர் ஏரியில் குளிக்க வருமாறு ஸ்வாமி ராமா அழைத்தார். முதலைகள் நிறைந்த அந்த ஏரியில் ராமா திரும்பி வரவேண்டுமே என்ற பாதி பயத்துடனும் தனது உயிர் நிலைத்திருக்க வேண்டுமே என்ற முழு பயத்துடனும் பூரண் சிங் இறங்கினார். பூரண் சிங்கிற்கு நீந்தத் தெரியாது.
முதலில் இறங்கிய ராமா, “ ராமா முதலில் போன பின் பின்னால் நீங்கள் நின்றவாறே அவருக்குப் பின்னால் குளித்தால் போதும்” என்று பூரண் சிங்கிடம் சொன்னார்.
முதலைகளுக்கு சரியான இரண்டு மாமிச பிண்டங்கள் வருகிறது என்றால் எப்படி இருக்கும்?
இரண்டு விரல்களால் மூக்கைப் பிடித்துக் கொண்டு நீரில் அமுங்கினார் ஸ்வாமி ராமா. tamilandvedas.com, swamiindology.blogspot.com
தனது மந்திரக்கோலை தனக்கு முன்னே நீரில அவர் மிதக்க விட்டார். ஏதோ அந்த மந்திரக்கோலை முதலைகள் தாண்டக்கூடாது என்று அவர் உத்தரவு போட்டது போல இருந்தது.
பின்னர் அவர் நீரிலிருந்து எழுந்து, “பூரண்ஜி! போகலாம், இதற்கு மேல் நெடுநேரம் நாம் இங்கிருப்பதை முதலைகள் விரும்பவில்லை” என்று கூறி விட்டு கரையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார். இருவரும் கரைக்கு விரைந்தனர்.
தனது மந்திரக்கோலை ஸ்வாமி ராமா மறக்கவில்லை. ஞாபகமாக அதைக் கையில் எடுத்துக் கொண்ட அவர், “நல்ல அருமையான ஆள், இவன்! ராமாவிற்கு மிகவும் சிரத்தையாக இவன் சேவை செய்கிறான்” என்றார்.
தண்ணீரைக் கண்டு அஞ்சாத நீச்சல்காரர் ஸ்வாமி ராமா!
ஆனால் அந்த ஜலத்திலேயே அவர் சமாதி நிகழும் என்று யார் தான் நினைத்தார்கள்?
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
MORE TAMIL FOLK TALES
A rich man used to feed his father with gruel from a broken potsherd. He treated his father very badly. His son saw this and took the potsherd away and hid it. Afterwards the rich man saw his father and asked
‘Where is the broken pot with which I feed you every day?
Did you throw it away?’ Saying this he thrashed him.
The boy, who hid it, came and said,
‘Don’t beat my grandfather. I was the one who took it. I am keeping it in a safe place so that I can feed you when you are very old’
.
When he heard this, he felt ashamed. Then he treated his father with respect.
Moral
You get back what you give others.
Xxx
Tasty Tamil Snack Vadai !
An innocent villager wanted to eat onion Vadais (fried salty doughnut snack of Tamil Community) and was longing for it for a long time. He saw an old woman making Vadai. He went to her house and gave the ingredients such as the lentil flour, oil, spices etc for frying Vadai. Seeing this gullible man, she told him to come back in a few hours’ time to take the Vadais. She promised him that she would make 15 Vadai s out of those ingredients. But that greedy and gluttonous woman ate 14 vadais and kept only one for him. When he saw this, he became angry and shouted,
Hey rogue of a woman , where are the other 14 Vadais?
I myself ate them, she said.
Ha! How did you eat so many Vadais at one go, you rogue? he asked.
I ate them just in this way, see, she said and put the remaining Vadai into her mouth.
The villager was tricked.
Xxx
I want a Wise Husband!
A certain woman waited for a long time in order that she might get a handsome and wise husband. Whilst she was waiting one day a handsome man came. She entered into conversation with him in order to ascertain whether he was wise also. At that time there was a clatter.
What is that? he asked.
She said, it’s a lizard.
Bring me one of its feathers to pick my ear, he said.
You fool! Has a lizard got feathers?
Go! So saying she sent him away.
After waiting a few days another man came.
To him she said a few days ago a fool asked me to bring him a feather from a lizard!!
At this he laughed and said
Oh Oh ! Perhaps he thought it was a tortoise; she thought he was the greater dunce of the two. She scolded and sent him away.
Moral – Don’t expect too much Handsomeness and Wisdom don’t go together.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Today is Shiva Ratri Day; holy day and fasting day for Hindus. They go to Shiva temples and do Milk Abisheka (bathing the Shiva Linga with milk). Shiva temples around the world are open all through the night. Priests recite Rudra Mantra/hymn during the bathing ritual. Devotees do Puja with trifoliate Vilva/Bilva leaves. Skipping meals completely for 24 hours or having only one meal in 24 hours is observed by the devotees.
The story behind Shiva Ratri explodes all the Aryan- Dravidian bluff spread by the westerners. They projected Shiva as Aryan. But the festival is based on a hunter hiding in the forest on top of a Vilva tree doing Bilva Archana without knowing all through the night. He attains salvation. All devotees follow the hunter.
Another great hunter called Kannappan of North Tamil Nadu attained salvation in 24 hours by doing Puja and donating both his eyes (which were restored later) . He lived 1500 years ago in Tamil Nadu. ( I have given full details about Hindus who made eye transplants in my article written years ago).Suh stories show that there is no Aryan or Dravidian. And the early Shiva Devotees of Tamil Nadu did not belong to Brahmin caste at all (Eg. Ms Mangayarkarasi, Ms Karaikal Ammaiyar, Madam Avvaiyar, Mr Appar etc)
Rudra in Zagreb, Croatia by Baba devotees of Europe.
What is Ati Rudram
Rudra Ekadasi: When Rudram is recited 121 times (11 priests recite it 11 times) it is Rudra Ekadasi. When Rudram is recited 1331 times (11X11X11) it is Maha Rudram When Rudram is recited 14641 times (11X 11X11X11) it is Ati Rudram Sri Sathya Sai Baba performed Ati Rudram in Chennai and Puttaparthi. It was the biggest Homam done in modern times. Later Shirdi Sai devotees organised one in Tiruvannamalai.
What is Rudram?
It is a hymn on Lord Shiva found in Yajur Veda. It is recited along with Camakam. Since Rudram is also known as Namakam, both are called Namakam -Chamakam.
In the Rudra section, Lord Shiva is praised as a great person doing various jobs. It means he controls every thing in the universe. We fid the Five Lettered Mantra – panchaksharam – OM NAMASIVAYA in Rudram. So Saivites consider it most important Mantra. Orthodox Hindus recite it every day. In temples, when the Abishekam is done to the idol, Rudram is repeated.
Ekadasa Rudram is conducted annually in London by Sri Subrahmanyam and his wife Gayathri.
Any Rudra Fire sacrifice should follow the starting rituals such as Sankalpa (saying the intention ), Puja, Nyasa, Anga, Panchamruta snana and Dhyana.
What are the benefits?
Siva’s metal cover/Kavasa from Vietnam
The scriptures say that one who does Ati Rudra is considered God. In our own time Sri Sathya Saibaba did it in Chennai and Puttaparthi. No other individual has done so.
Ati Rudra takes 11 days for the completion.
The benefit of repeating Rudram once frees one from Balarishta (one individual reciting it one time)
3 times …. From imminent difficulties
5 times from evil effects of planets
7 times from great fear
9 times gives the benefit of performing a Vajapeya Yajna and gives peace of mind;
11 times recitation will bring great wealth and favours from ruler or government
33 times recited, one can attain all the wishes; he will have no enemies.
77 times – enjoyment of great happiness
99 times – attainment of son, grandson, wealth and four Hindu goals- Dharma, Artha, Kama , Moksha
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் நேரம், காலம் (Notion of Time) பற்றிய உணர்வு உண்டா? என்ற கேள்வியை ஒரு நேயர் கேட்டவுடன், அதற்கு லண்டன் (Daily Mail) டெயிலி மெயில் பத்திரிகை 1-4-2006ல் பதில் வெளியிட்டது. அந்த ‘பேப்பர் கட்டிங்’கை குப்பைத் தொட்டியில் போடுவதற்கு முன்னர் மொழிபெயர்த்தால் என்ன? என்று தோன்றியது.அத்தோடு என் அனுபவத்தையும் சேர்த்துள்ளேன்; படியுங்கள்.
நாயின் மனது (The Mind of the Dog by J R H Smythe) என்ற ஒரு புஸ்தகத்தை நாய்கள் வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் ஜே .ஆர் .எச் .ஸ்மித் எழுதினார். அதில் அவருடைய நாய் ‘பென்’ (Ben) னுக்கு கிழமைகள் கூட தெரியும் என்கிறார். காட்டு மிருகங்களை வளர்க்கும் ஒருவரிடம் அதை விலைக்கு வாங்கி இருந்தார். ஒவ்வொரு வியாழக் கிழமையும் காலையில் பென் (Ben) காணாமற்போய் விடும். மாலையில் திரும்பி வந்து விடும். ஸ்மித்துக்கு இந்த மர்மம் புரியவில்லை. ஒரு நாள் பஸ்ஸில் பயணம் செய்தபோது பஸ் கண்டக்டர் அந்த நாயை அடையாளம் கண்டுகொண்டு அதன் புதிய எஜமானரிடம் பழைய கதை ஒன்றைக் கூறினார். நாயை முதலில் வளர்த்தவர் அந்த பஸ்சில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 9 மணிக்கு நாயுடன் புறப்படுவாராம். பக்கத்திலுள்ள கிராமத்திற்குச் சென்றுவிட்டு மாலை நேர பஸ்ஸில் சொந்த கிராமத்துக்குத் திரும்பி வருவாராம். ஏனெனில் பழைய மாஸ்டர் (Master) வியாழக்கிழமை மட்டும் பறவைகளைச் சுடுவதற்கு இப்படிச் செல்வராம். வியாழக்கிழமைகளில் அந்த நாய் ‘நாயாக உழைத்து’ மாஸ்டருக்கு உதவி செய்யுமாம். புதிய எஜமானர் விலைக்கு வாங்கிய பின்னரும் அந்த நாய்க்கு வியாழக் கிழமை வந்தவுடன் வெளியே கிளம்பி விடுமாம். இதுதான் காலையில் போய் மாலையில் திரும்பி வருவதன் மர்மம்.
நாய்க்கு காலண்டரில் தேதி பார்க்கத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் அதன் உடலுக்குள் உள்ள கடிகாரமும் காலண்டரும் வியாழக் கிழமை காலை ஒன்பது மணியை நினைவு படுத்துவது அதிசயமே.
டோக்கியோ நாய் ஹசிகோ Hachiko
ஹசிகோ என்ற உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய நாய்க்கு ஏன் டோக்கியோவில் ரயில் நிலையத்தில் சிலை வைத்து இருக்கிறார்கள் என்பது இந்த பிளாக்கில் பல முறை வெளி வந்து விட்டது. அதை வளர்த்தவர் இறந்த பின்னரும், ஒன்பது ஆண்டுகளுக்கு தன்னுடைய மாஸ்டருக்காக தினமும் ரயில் நிலையம் சென்று காத்திருந்த கதை பலரும் அறிந்ததே.
நான் 1986 டிசம்பர் 31ம் தேதி வரை இந்தியாவில் இருந்தேன். அத்தோடு என்னுடைய 16 ஆண்டு தினமணிப் பத்திரிக்கையின் சீனியர் சப் எடிட்டர் வேலை முடிந்து பி.பி.சியில் சேர்வதற்காக லண்டனு க்கு வந்தேன். மதுரையில் தினமணியில் வேலை பார்க்கும்போது, வாரத்தில் இரண்டு நாட்களைத் தவிர மற்ற நாட்கள் எல்லாம் இரவு ஒன்பது மணிவரை அலுவலகத்தில் இருப்பேன். இரவு எட்டு மணிக்கு எல்லோருக்கும் பெரிய பன் ரொட்டியும் தேநீரும் தருவார்கள். பெரிய பன் ரொட்டியை அலுவலத்தில் உள்ள பியூனுக்குகே கொடுத்து விடுவேன். இப்படிப் பலரும் கொடுக்க துவங்கியதால் அவனே வேண்டாம் சார் என்று சொல்லிவிட்டான். ஒரு நாள்
வீட்டில் மாடிக்குப் போய் காகங்களுக்கு அதை போடுவோமே என்று போட்டால், அதைச் சாப்பிட்ட காகம் என்ன பாஷையில் பேசியதோ தெரியவில்லை ஏராளமான காகங்கள் வந்து விட்டன. நானோ பறவை பிரியன். தினமும் இதைத் தொடர்ந்தேன் . நூற்றுக் கணக்கில் காலையில் காகங்கள் படை எடுக்கத் துவங்கிவிட்டன.
காலையில் நான் தாமதமாகப் போனால் அவை மொட்டை மாடியிலும் அருகிலுள்ள மரங்களிலும் காத்திருக்கும். நான் போன அடுத்த நிமிடத்தில் அவை அங்கே கூடிவிடும். இதை பார்க்கையில் அவைகளும் எதோ ஒரு வகை கடிகாரங்களை வைத்திருப்பதாகவே தோன்றுகிறது!! இப்பொழுதும் இது போல பல நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். சென்னை முதலி ய நகரங்களில் தானியத்தைச் சாப்பிட பல ஆயிரம் கிளிகள் வரும் அதிசயத்தைக் ( in You Tube) காண்கிறோம். அவைகளும் அருகிலுள்ள மரங்களில் இதற்காக காத்து இருக்கின்றன.
இது போல வீடுகளில் நாய், பூனை வளர்ப்போரும் பல கதைகளைச் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அவைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு வைக்காவிடில் நாம் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், யாருடன் பேசிக்கொண்டிருந்தாலும், அவை நம் அருகில் வந்து அன்பாக வாலை ஆட்டும். என்னை மறந்து விட்டாயா? என்று வாய் திறவாமலே கேட்கும்.
காக்காய் பிடித்த கதை
இறுதியாக காக்காய் பிடிப்பது எப்படி? என்று பார்ப்போம்.அந்தக் காலத்தில் பாட்டி, தாத்தாக்கள் தங்கள் பேரக் குழந்தைகளைக் கூப்பிட்டு டேய்! கால், கைகளைப் பிடித்து விடடா! உனக்கு காலணா தரேன். மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டு என்பர். இதன் காரணமாக, நமக்கு சினிமா போகக் காசு, ஹோட்டலில் சாப்பிட காசு என்று காசு வேண்டிய நேரத்தில் எல்லாம் , நாமே அவர்களிடம் சென்று ‘பாட்டி கால், கை பிடித்து விடட்டுமா?’ என்று கேட்போம், அவர்களுக்கும் விளங்கி விடும். இதுதான் காக் காய் (கால்+ கை ) பிடித்தல் என்பதாகும் . குல் லாப் போடுவது எப்படி என்பதை முன்னரே எழுதிவிட்டேன். ஞாபகம் இருக்கிறதா? ஒரு குல்லாய் வியா பாரி – குல்லா யுடன் மரத்தடியில் தூக்கம் – அவன் கூ டையில் இருந்த குல்லாய்களை குரங்குகளும் அணிந்தன ; அவன் குல்லாய் போட்டவுடன் அவைகளும் போட்டன. அவன் குல்லாயைத் தூக்கி எறிந்தவுடன் அவைகளும் தூக்கி எறிந்தன . அதாவது ‘ஆடுற மாட்டை ஆடிக்கறக்கனும் ,பாடுற மாட்டை பாடிக்கறக்கனும்’ .
ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்க்கையில் நடந்த ஏராளமான சம்பவங்களில் இன்னும் சில:
கணிதத்திற்கு தீர்வு காண்பேன், இல்லையேல் தலையைக் கொடுப்பேன்!
ஸ்வாமி ராமதீர்த்தர் ஒரு கணித மேதை. அவரைப் பற்றி பூரண் சிங், ‘ஸ்வாமி ராமா’ (Puran singh – Swami Rama) என்ற நூலை எழுதியுள்ளார். அதில் பூரண் சிங் ஸ்வாமி ராமதீர்த்தர் தன்னிடம் கூறியதாக எழுதிய சம்பவம் இது.
ஒரு முறை ஸ்வாமி உயர்கணிதத்தில் சில கடினமான கணக்குகளைத் தீர்வு செய்ய எடுத்துக் கொண்டார். ‘நாளை காலை சூரியன் உதிப்பதற்குள் அவற்றிற்கான தீர்வைக் காண்பேன்; இல்லையேல் என் தலையை உடலிலிருது வெட்டிக் கொள்வேன்’ என்று சபதம் பூண்ட அவர் தலையை வெட்டுவதற்காக ஒரு கூரிய கோடாரியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டார். இப்படிப்பட்ட சபதம் மிக மிகத் தவறானது தான்; ஆனால் இப்படிப்பட்ட கடுமையான ஒழுங்குக் கட்டுப்பாட்டைக் கொண்டதனால் தான் தனக்கு இருக்கும் அறிவு வந்தது என்றார் அவர். நள்ளிரவிற்குள் நான்கு கணக்குகளில் மூன்றிற்கு அவர் தீர்வைக் கண்டு விட்டார். நான்காவது கணிதத்திற்குத் தீர்வு கிடைக்கவில்லை.ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான்.
தான் போட்ட சபதத்திற்குத் தக, கோடாரியை எடுத்துக் கொண்டு வீட்டின் மாடிக்குப் போனார். அங்கு கூரிய கோடாரியைத் தன் தொண்டையில் வைத்து அறுத்துக் கொள்ள ஆரம்பித்தார். கோடாரி முனை கழுத்தில் பட்டு ரத்தம் வெளியேற ஆரம்பித்த தருணம்.
திடீரென்று ஆகாயத்தில் அந்தக் கணிதத்திற்கான தீர்வு எழுதப்பட்டிருப்பதை அவர் கண்டார். அதை எழுதிக் கொண்டார்.
அந்தக் கடினமான கணிதத்திற்கு அது தான் அபாரமான ஒரிஜினல் தீர்வாக அமைந்தது. அதை தனது கவர்ன்மெண்ட் காலேஜ் பேராசிரியர் முகர்ஜியிடம் காண்பித்தார். பேராசிரியர் பிரமித்துப் போனார்.
இதே போல பல முறை செய்து தான் கணிதத்தில் யாரும் பெறுதற்கரிய பெரும் நிலையை ராமதீர்த்தர் பெற்றார்.
விவேகானந்தரின் சொற்பொழிவு
1897ஆம் ஆண்டு. நவம்பர் மாதம். ஸ்வாமி விவேகானந்தரை சனாதன தர்ம சபாவின் சார்பில் சொற்பொழிவாற்ற லாகூருக்கு அழைத்தார் ராமதீர்த்தர். ஹாலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகியது. உடனே ஹாலை விட்டு வெளியேறி திறந்தவெளியில் அனைவரும் கேட்டுத் திருப்தியுறும் வகையில் விவேகானந்தர் பேசினார்.
அடுத்த சொற்பொழிவு வேதாந்தம் பற்றியது. ராமதீர்த்தரின் வேண்டுகோளின் பேரில் அந்தச் சொற்பொழிவை ஆற்றினார் ஸ்வாமி விவேகானந்தர். அது ஒரு சர்கஸ் மைதானத்தில் நடந்தது.
மின்னல் போன்ற பளீரென்ற சொற்பொழிவும், ஸ்வாமிஜியின் நா வன்மையும் கூட்டத்தை அப்படியே கட்டிப் போட்டது.
இந்தச் சொற்பொழிவைக் கேட்ட பின்னர் தான், சந்யாசியாக தான் ஆக வேண்டுமென்ற எண்ணத்தில் உறுதி கொண்டார் ராமதீர்த்தர். ஸ்வாமி விவேகானந்தர் போலவே அமெரிக்கா சென்று வேதாந்தத்தைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியதும் இதன் விளைவே தான்!
சண்டை போட வந்த மௌல்வி சாஹப்
1902ஆம் ஆண்டு. பிப்ரவரி மாதம்.
ஸ்வாமி ராமதீர்த்தர் ஃபைஜாபாத்த்திற்கு (Fyzabad) விஜயம் செய்தார். அங்கு சனாதன தர்ம சபா சார்பில் அவர் ஒரு சொற்பொழிவாற்றினார். இந்த சபை சாந்தி பிரகாஷ் என்ற சூரஜ் லால் பாண்டே என்பவரால் நிறுவப்பட்ட சபா.
இந்த சபை ஹிந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய அனைவரும் பங்கு கொள்ளக் கூடிய ஒரு பொதுவான சபா. தங்கள் தங்கள் மதக் கொள்கைகளை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு சபையாக இது அமைந்திருந்தது.
ஸ்வாமி ராமதீர்த்தரின் ஆணைப்படி அவரது சிஷ்யரான நாராயணா, ‘ஆத்மா’ என்ற பொருளில் பேசினார். சொற்பொழிவு முடிந்த பின்னர் கூட்டத்திற்கு வந்திருந்த மௌல்வி முகம்மது முர்டாஸா அலி கான் (Maulvi Mohammed Murtaza Ali Khan) பல ஆக்ஷேபணைகளை எழுப்பினார்.
ஸ்வாமி ராமதீர்த்தர் மறுநாள் வந்து ஆக்ஷேபணைகளுக்கு அவர் சமாதானங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.
மறுநாள் மௌல்வி குறித்த நேரத்திற்கு அங்கு வந்து சேர்ந்தார்.
வாதம் புரிவதற்காக அல்ல; வம்புச் சண்டைக்காக வந்தார்.
ஸ்வாமி ராமதீர்த்தரின் எதிரில் நேருக்கு நேர் அவர் உடகார்ந்தார்.
இருவரின் கண்களும் சந்தித்தன.
அவ்வளவு தான்! மௌல்வி தனது ஆக்ஷேபணைகள் அனைத்தையும் மறந்தார். அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிந்தது.
கைகளைக் கூப்பியவாறே அவர் ஸ்வாமி ராமதீர்த்தரை நோக்கி, “ஐயனே! மனித்து விடுங்கள் என்னை; உங்களை யார் என்று தெரியாமல் போய் விட்டது! என்னை மன்னித்து விடுங்கள்” என்றார்.
அன்று முதல் அந்த மௌல்வி இனம், ஜாதி கடந்த இறையன்புக்கு ஆளானார்.
இயற்கையும் ஸ்வாமிக்கு இசையும்!
பாபு சூர்ஜன் லால் பாண்டே ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து இப்படி விவரித்துள்ளார்;
ஒருமுறை ஸ்வாமி ராமதீர்த்தர் ஃபைஜாபாத்த்திற்கு (Fyzabad) விஜயம் செய்தார். அப்போது அங்கு தினமும் தவறாமல் மழை பொழிந்து கொண்டிருந்தது. கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வது என்பது இயலாத காரியமாக இருந்தது.
பாண்டே ராமதீர்த்தரிடம், “ காலநிலை மந்தாரமாக (Gloomy) இருக்கிறதே” என்றார்.
ராமதீர்த்தர் சிரித்துக் கொண்டே, “இதோ ராமா வந்தாகி விட்டதே; எதுவும் மந்தாரமாக இருக்காது. காலநிலையும் புன்னகை பூக்கட்டும் (Cheerful)” என்றார்.
உடனே மேகங்கள் விலகின. சூரியன் பளீரென வெளிச்சத்தைத் தர ஆரம்பித்தான்.
ஸ்வாமி ராமதீர்த்தர் தனது சொற்பொழிவுகளைத் தொடங்கினார்.
அவர் அங்கிருந்த வரை மழை பொழியவில்லை; சொற்பொழிவுகளுக்கு இடையூறு ஏற்படவே இல்லை!
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இப்படி இன்னும் ஏராளமான சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் உண்டு.
18th FEBRUARY IS THE BIRTHDAY OF SRI RAMAKRISHNA PARAMAHAMSA.
A disciple once asked Sri Ramakrishna how he was to conquer lust; for though he was passing his days in religious contemplation, evil thoughts were arising in his mind from time to time.
To him the Master said,
“There was a man who had a pet dog. He used to caress it, carry it about in his arms, play with it and kiss it. A wise man seeing this foolish behaviour of his, warned him not to lavish such affection on a dog. For it was after all, an irrational brute, and might bite him one day. The owner took the warning to his heart and putting away the dog from his arms, resolved never ever to caress it or fondle it.
But the animal at first could not understand the change in his master and would run to him frequently to be taken up and caressed. Beaten several times, the dog at last ceased to trouble his master anymore. Such indeed is your condition.
The dog that you have been cherishing so long in your bosom will not easily leave you, though you may wish to get rid of it. However, there is no harm in it. Do not caress the dog anymore, but give it a good beating whenever it approaches you to be fondled, and in course of time you will be altogether free from its importunities”.
Xxxx
SIR, I AM A BROOM STICK
There was a professional preacher who could rouse strong devotional feelings in the hearts of his listeners whenever he delivered religious discourses; but personally he was not a man of character. Pained at the kind of life he led, l asked him one day how it was that he moved so many hearts to devotion, while he himself lived such an unworthy life.
The man bowed and said,
“Yes, sir, ,the broom, though a contemptible thing, removes the dust and dirt on the floor and the street.”
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Prof P Sankara Narayana had done a marvellous job 100 years ago by bringing out an English – Tamil Etymological dictionary. He had already brought out English -Telugu dictionary as well. Probably he is the only one who had done two huge dictionaries in two languages.
Here etymology means the etymology of English words unlike the Dravidian Etymological Dictionary of Burrow and Emeneau which gives etymology of Tamil words.
But P Sankaranarayana’s work is huge with over 1300 pages priced only three rupees in 1911. That was the enlarged second edition. From his titles we know that he worked for the Presidency College in Madras. Like Mughal Emperor Akbar’s Din- Ilahi , P Sankaranaraya had his own religion called ‘Religion of Truth’. His book list includes his pet theme Religion of Truth. I could not find his profile in any website. Gregory James in his History of Dictionaries mentioned one P.Sankaranarayana Chettiar.
Probably he is a forgotten Chettiyar scholar and not much known lexicographer.
Let us salute him for his marvellous works.
I found the old dictionary in the British Library in London.
Please see the attached picture and some pages from the dictionary.
tags — lexicographer, English- Tamil, etymological, Dictionary, P Sankaranarayana, Chettiyar
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
A village singer who was not good at singing came to the capital city of the kingdom thinking that he could obtain a good gift from the king. He stayed in a rented house in a street far away from the palace. The next morning, he started practising singing in the rented house. A washerwoman in the next house cried out with a loud voice and wept. When he stopped singing, she also stopped weeping. Thus, it continued for a whole week. The singer lost his patience and sent for the washerwoman and said to her,
Why do you weep whenever I sing?
Sir, said the washer woman, whenever I hear your golden voice, I am reminded of an ass of mine which died last month, so I weep so saying she wept.
The singer was ashamed and returned to his village without seeing the king.
Therefore a foolish man who knows not his weakness will suffer disgrace in the world.
Most famous Tamil poetess Avaaiyaar compares Turkey and peacock…….
The turkey, having seen the wild peacock displays his noble plumage, takes himself to be one: and he too spreads his own ugly wings and struts about. Such is the recitation of a poem committed memory by an illiterate man.- Muuthurai of Avaaiyaar
There is a beautiful Tamil proverb echoing Avvaiyar’s verse
However high a house sparrow flies
It would never become a falcon/eagle
Most famous Tamil poet Tiru valluvar in his Tirukkural says,
Never extol yourself in any mood nor do any act that is good for nothing – Kural couplet 439
Another translation of the same couplet-
Never indulge in self- praise; nor you should go in
For activities that produce no good results – 439
xxx
Mozart’s retort
A lad once asked Mozart how to write a symphony. Mozart said, “you are a very young man. Why not begin with ballads?”
The aspirant urged, “You composed symphonies when you were ten years old.”
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரீ கத்தில் உள்ள ஒரு புதிர் மேலும் சிக்கலாகிவருகிறது. அங்கு யானை மீது ஒரு உருவம் நிற்கிறது. அதற்கு மேல் ஒரு சக்கரம் இருக்கிறது. அந்த உருவம் இரண்டு மிருகங்களை , அநேகமாக புலிகளை, சர்வசாதாரணமாக சமாளிக்கிறது tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
INDRA- JUPITER- TARANIS IN EUROPE
முதல் புதிர் அந்த உருவம் ஆணா , பெண்ணா? ஏன் எனில் பெண் என்றும் ஆண் என்றும் சொல்லும் அளவுக்கு அது தெளிவற்று இருக்கிறது.
நான் முன்னர் இரண்டு எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் அது இந்திரனே. அவன்தான் ஐராவதம் என்னும் யானையின் மீது பவனி வருவதை இந்து மத நூல்கள் சித்தரிக்கின்றன என்று எழுதிவிட்டு அவனுக்கு ‘சக்கர ‘ என்ற பெயர் இருப்பதால் மேலே சக்கரத்தைப் பொறித்துள்ளனர் என்று எழுதி இருந்தேன். அப்படி இல்லாவிடில் இந்தியாவை ஒரு குடைக்கீழ் ஆண்ட ஏக சக்ராதிபதி பரதன் என்னும் மன்னனாக இருக்கலாம் என்றும் சக்ர என்பது சக்ரவர்த்தி என்பதைக் குறிக்கலாம் என்றும் சொல்லி இருந்தேன். பாரதியார் கூட ‘சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினை தட்டி விளையாடி’ என்று பாடியிருப்பதையும் இந்த நாட்டிற்கே பாரத நாடு என்று நாம் இந்திய அரசியல் சாசனத்தில் பொறித்து வைத்து இருப்பதையும் உரைத்தேன். tamilandvedas.com, swamiindology.blogspot.com
இப்போது ஒரு அதிசயச் செய்தி!
INDRA WITH SURYA WHEEL IN INDUS
ரிக் வேதத்தில் சூரியன் பற்றி ஆராய்கையில் ஒரு அதிசயச் செய்தி கிடைத்தது. மூன்று பாடல்களில் சூரியனை இந்திரன் வென்றதாகவும் , அப்போது அவனுடைய தேர்ச் சக்கரத்தை திருடி வந்ததாகவும், வேறு எவரும் இந்த உலகில் இப்பேற்பட்ட செயலைச் செய்ததும் இல்லை, இனிமேல் செய்யவும் இயலாது என்றும் இந்திரனைப் புகழ்ந்து தள்ளிவிட்டனர்.
சூரியனின் சக்கரத்தை இந்திரன் திருடியதாக புராண, இதிஹாசங்களில் கதை இல்லை. நம்முடைய பாஷ்யக்காரர்களான ஸாயனர் போன்றோரும் விளக்கவில்லை. ஒருவேளை அவர்கள் காலத்தில் அது பிரபலமான கதையாக இருந்திருக்கலாம் அல்லது அழிந்து போன ஆயிரக் கணக்கான நூல்களில் இக்கதை இருந்திருப்பதால் அவர்களும் அதிகமாக கதைக்காமல் இருந்திருக்கலாம். tamilandvedas.com, swamiindology.blogspot.com
இதுபற்றி பாடலின் கீழ் அடிக்குறிப்பு எழுதிய (Griffith) கிரிப்பித் இது
சூரிய கிரகண த்தைக் குறிக்கலாம் அல்லது வானிலை , பருவ நிலை பற்றிய குறிப்பாக இருக்கலாம் என்கிறார்.
ரிக் வே தம் முழுதும் இந்திரன், விருத்திரன் என்ற அசுரனைக் கொன்றதை எல்லாப் புலவர்களும் விதந் தோதுவதைக் காண்கிறோம். விருத்திரா என்ற சம்ஸ்க்ருத ச் சொல் ‘வறட்சி’ என்று மருவியது. இந்திரன் பனி யை உருக்கி மழை பொழிவித்ததைக் குறிக்கும் முகத்தான் இப்படி புலவர் பெருமக்கள் பாடியிருப்பார்கள் என்கிறார். ஆனால் ஹில் பிராண்ட் என்ற ஜெர்மானிய சம்ஸ்கிருத அறிஞர் இது இந்திரனையே சூரியனாக வழிபட்டதாக இருக்கலாம் என்பர். tamilandvedas.com, swamiindology.blogspot.com
PASUPATI OR VISHNU IN INDUS
அங்குதான் எனது ஆராய்ச்சி வருகிறது.
சரஸ்வதி – சிந்து நதி நாகரீகத்தில் உள்ளது போலவே ஐரோப்பாவில் ஒரு உருவச் சிலை கிடைத்திருக்கிறது . அது ஒரு கையில் பெரிய சக்கரத்தை வைத்திருக்கிறது . மற்றொரு கையில் வஜ்ராயுதமும் இருக்கும்; அதன் கீழ் ஜூபிடர் (Jupiter) என்றும் எழுதி இருக்கிறது. ஜூபிடர் என்பதை இந்தியாவில் இந்திரன் என்று வழிபடுவதாக இந்தியா பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஸ்டிராபோ(Strabo) போன்ற அறிஞர்கள் எழுதி வைத்தனர். உலகிலுள்ள இந்தியவியல் அறிஞர்கள் இதை ஏற்கின்றனர்; அத்தோடு இதுவே கிரேக்க நாட்டின் சூஸ் (Zeus) என்னும் ஆகாயக் கடவுளாக பரிணமித்து இருக்கலாம் என்றும் சொல்லுவார்கள். சூஸ் என்னும் கடவுளை ரிக் வேதத்தில் உள்ள ஆகாயக் கடவுளான த்யவுஸ் (Dyaus) என்பவருடனும் tamilandvedas.com, swamiindology.blogspot.com ஒப்பிடுவர்.
ஆக இந்திரன்தான் ஜூபிடர் என்னும் ரோமானியக் கடவுள்- அவர் கையில் இருப்பது சூரியன் என்பதில் வெளி நாட்டாரிடம் கருத்தொற்றுமை உண்டு.
இப்போது இந்த ஜூபிடர் என்னும் சக்கரத்தாழ்வாரை சிந்து சமவெளி யானை மீதான உருவத்துடன் ஒப்பிடுவோம் ; அவர் தலை மீது காட்டப்பட்ட சக்கரத்தை சூரியன் என்று கொள்ளுவோம். கிணற்றில் கல் விழுந்துவிட்டது…………..
INDRA
புதிருக்கு விடையும் கிடைத்துவிட்டது; அது இந்திரனே ; மூன்று ரிக் வேதச் செய்யுட்கள் சொல்லுவது போல் , அவர் சூரியனின் ஒரு தேர்ச் சக்கரத்தை திருடி வந்ததும் உண்மையே . சம்ஸ்கிருத இலக்கியங்கள் சொல்லுவது போலவே தமிழ் இலக்கியமும் சூரியனின் ரதத்துக்கு ஏழு குதிரைகள் (வானவில்லின் ஏழு வர்ணங்கள் ) உண்டு என்றும் ஆனால் அவன் ரதத்துக்கு ஒரே சக்கரம்தான் என்றும் சொல்லும். அது ரிக்வேதத்திலும் சரஸ்வதி நதி தீர முத்திரையிலும் ஐரோப்பிய ஜூபிடர் சிலைகளிலும் இருப்பது
நான் இப்போது என் ஆராய்ச்சி முடிவுகளை சுருக்கி வரைகிறேன்.
1.சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரீகத்தில் காணப்படும் யானை மீதான உருவ முத்திரையில் இருப்பது இந்திரனே. அவர் தலை மீது பொறிக்கப்பட்ட சக்கரம் இந்திரன் திருடிவந்த சூரியனின் சக்கரமே. இதையே வெளிநாட்டார் ஜூபிடர் என்று ரோமானிய சாம்ராஜ்யத்தில் வணங்கி வந்தனர். அவர்கள் நம்மைவிட 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் சிலையைச் செய்ததால் சூரியனும் இந்திரனும் அவர்கள் காலத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கலாம்.
2. எனது இரண்டாவது முடிவு- இதற்கு முன்னர் சிந்து-சரஸ்வதி தீர முத்திரையில் உள்ளது போல ஒரு பசுபதி உருவம் ஹாலந்து நாட்டில் குண்டஸ்ட்ரப் என்னும் சதுப்பு நிலத்தில் கண்டு எடுக்கப்பட்ட வெள்ளி பாத்திரத்தில் இருப்பதை உலக அறிஞர்கள் ஒப்பிட்டு வியந்ததை நானும் எழுதி இருக்கிறேன். அத்தோடு அதே பாத்திரத்தில் கஜ லெட்சுமி உருவம், ஒரு சக்கர தெய்வம் ஆகியனவும் வெவ்வேறு பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளதையும் உலக அறிஞர்கள் ஒப்பிட்டுள்ளனர். tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதையும் இப்போது கிடைத்த இந்திரத் திருடன் -சூரிய தேர்ச் சக்கரக்கத்தையும் சேர்த்து வைத்துப் பார்த்தால் சிந்துவெளி- சரஸ்வதி நதி தீர நாகரிகம் வேதகால நாகரீ ரிகமே எனபது உறுதியாகிறது. இந்திரனையம் வருணனையும் வேதத்தில் உள்ள விஷ்ணுவையும் தொல்காப்பியரும் தமிழ்க் கடவுள் என்று பாடியிருப்பதால் தமிழர் நாகரீகம் வேதகால நாகரீகமே என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும்.
xxx
GAJA LAKSHMI IN GUNDESTRUP CAUDRON IN HOLLAND
இதோ நான் மேலே குறிப்பிட்ட மூன்று ரிக் வேத மந்திரங்கள்:–
ரிக் வேத துதி 1-175, மந்திர எண் 4, ரிஷி அகஸ்தியர் பாடியது–
இந்திரனே ! தலைவனான நீ , சூரியனின் தேர்ச் சக்கரத்தை திருடினாய். சுஷ்ணனைக் கொல்வதற்கு உன் ஆயுதத்தை எடு. காற்று போன்ற வேகமுள்ள குதிரையில் கடுகி ஏகு வாயாக ; குத்சனிடம் செல்”.
(இது முழுதும் tamilandvedas.com, swamiindology.blogspot.comபருவ நிலை பற்றிய வருணனைகள் என்பது உரைகாரர்கள் தரும் விளக்கம்)
ரிக் வேத துதி 4-30, மந்திர எண் 4, வாம தேவ கௌசிகன் பாடியது–
“இந்திரனே ! நீ அந்தப் போர்களில் குத்சனுக்காகவும் அவனுடைய நண்பனுக்காகவும் சூரியனின் தேர்ச்சக்கரத்தைத் திருடினாய் “.
(வாம தேவ கௌசிகன் பாடிய இப்பாடலில் நிறைய புரியாத விஷயங்கள் உள்ளன. இந்திரன் 100 கோட்டைகளை இடித்து வென்ற விஷயமும் வருவதால் வெளிநாட்டார் மிகவும் சிலாகிக்கும் மந்திரம் இது. இரண்டு மன்னர்கள் பெயரும் வரசினன் என்ற அரக்கர் பெயரும், பல்லற்ற தேவதை கரூலதி பற்றியும் வருவதால் பல ஊகச் tamilandvedas.com, swamiindology.blogspot.comசெய்திகளுக்கு இடம் தரும் கவிதை இது )
10-43-5 கிருஷ்ண ஆங்கிரசன் பாடியது
“ஒரு சூதாட்டத்தில் எப்படி ஒருவன் வெற்றிகளைக் குவிக்கிறானோ , அப்படி மகவானும் ஒரேயடியாக சூரியனை வென்றான்; இந்த வீர தீரச் செயலை உன்னைத் தவிர வேறு எவரும் செய்ய இயலாது. முன்னரும் செய்தது இல்லை; இப்போதும் செய்ய முடியாது”.
Books used —
The Rig Veda- Griffith’s Translation
A Classical Dictionary of Hindu Mythology , John Dowson
The Sun Gods of Ancient Europe by Miranda Green (1991)
Vedic Hymns by Edward J Thomas, 1923
Sun Goddess- Myth Legend and History , Sheena Mc Grath, (1997)
My Old articles on Indus- Sarasvati River Civilization-
ரிக் வேதத்தில் ஹரப்பா நகரம்? | Tamil …
tamilandvedas.com › 2014/11/01 › ரிக்-வே…
1 Nov 2014 – ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் மிகப் பழையது ரிக் வேதம் என்று உலகமே ஒப்புக் கொண்டுவிட்டது. அதில் .
சிந்து சமவெளியில் இந்திரன்! | Swami’s …
swamiindology.blogspot.com › blog-post_6
6 Sep 2014 – மூன்று ஆண்டுகளுக்கு முன், மே 29, 2011-ல் சிந்து சமவெளி … Two of them are just paper cutting figures of Dog and Dove. tamilandvedas.com, swamiindology.blogspot.com. London …
சிந்து சமவெளி … – Swami’s Indology Blog
swamiindology.blogspot.com › blog-post_6
6 Nov 2014 – சிந்து சமவெளி எழுத்துக்களை இதுவரை யாராலும் படிக்க முடியவில்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன் கப்யூட்டரில் போட்டுப் …
சிந்து சமவெளியில் பேய் முத்திரை
tamilandvedas.com › 2012/08/20 › சிந்து-ச…
20 Aug 2012 – சிந்து சமவெளியில் பேய் முத்திரை. லண்டன் சுவாமிநாதன் (English translation of this article has been posted earler). சிந்து சமவெளி நாகரீகம் என்றும் …
சிந்து சமவெளி: பிராமணர் தொடர்பு …
tamilandvedas.com › 2014/05/10 › சிந்து-ச…
10 May 2014 – எழுதியவர் லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண்:-1033 ; தேதி:- 10 மே 2014 சுமேரிய நாகரீகத்தில் துவக்க காலம் முதலே இரு மொழி …
சிந்து சமவெளியில் கந்தர்வர்கள் …
tamilandvedas.com › 2015/04/17 › சிந்து-ச…
17 Apr 2015 – சிந்து சமவெளியில் கந்தர்வர்கள்!! பிராணியின் கழுத்துக்குக் கீழே உள்ளது சோமரச வடிகட்டி. Research Paper No.1807; Date: 17th April 2015. Written by …
“சிந்து சமவெளி” நாகரீகம் பெயரை …
tamilandvedas.com › 2014/03/29 › சிந்து-ச…
29 Mar 2014 – சிந்து சமவெளி நாகரீகம் பற்றி நேற்று காலையில் … ஸ்ரீ அரவிந்தர், காஞ்சி மஹாபெரியவர் போன்றோர் அவர் தம் எழுத்துக்களில் …
சிந்து சமவெளியில் ஒரு புலிப் …
tamilandvedas.com › 2012/08/23 › சிந்து-ச…
23 Aug 2012 – இதுவரை சிந்து சமவெளி எழுத்துக்களுக்கு ஐம்பத்துக்கும் … உள்ள எழுத்துக்கள் இதுவரை எல்லோரும் ஒப்புக்கொள்ளும் …
லிங்கம் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › லிங்கம்
26 Jul 2013 – சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ‘பிளாக்’கில் எழுதுபவர்கள் … உள்ள எழுத்துக்களை இதுவரையும் யாராலும் படிக்க முடியவில்லை.
சிந்து சமவெளி மன்னர்கள் பெயர் …
tamilandvedas.com › 2014/11/06 › சிந்து-ச…
6 Nov 2014 – சிந்து சமவெளி எழுத்துக்களை இதுவரை யாராலும் படிக்க முடியவில்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன் கப்யூட்டரில் போட்டுப் …
சிந்து சமவெளி – Tamil and Vedas
tamilandvedas.com › 2014/05/10 › சிந்து-ச…
10 May 2014 – எழுத்து ஒன்றாக இருந்தாலும் மொழி வேறுபட முடியும். இனம் ஒன்றாக … சிந்து சமவெளி என்றும் சரஸ்வதி நதி தீர நாகரீகம் என்றும் …
சிந்து சமவெளியில் மக் டொனால்ட் …
tamilandvedas.com › 2015/02/16 › சிந்து-ச…
16 Feb 2015 – சிந்து சமவெளி நாகரீகம்- சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் பற்றி … அப்போதாவது அந்த சிந்து வெளி எழுத்தின் மர்மத்தைத் துலக்க …
வதி | Tamil and Vedas
tamilandvedas.com › tag › வதி
20 Oct 2014 – சிந்து சமவெளி எழுத்துக்களை யாரேனும் முழுக்க முழுக்க புதிய கோணத்தில் ஆராய்ந்தால்தான் அதன் உண்மைப் பொருள் ..