தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 2422020 (Post 7613)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7613

Date uploaded in London – 24 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.#

ACROSS

1.- (நாலு எழுத்துக்கள் ) 27 நட்சத்திரங்களில் முதலாவது.

4 – (5) கிரகங்களின் ‘ரிவர்ஸ் கியர்’

5- (2) மலேரியாவின் நண்பன் / வலமிருந்து இடம் செல்க

6.- (3) வாசலில் தொங்கும்; வரவேற்கும்;சுப சகுனம்

8- (5) ரயில் வண்டிப் பூச்சி ; கடித்தால் தடிப்பு

10- (3)இரவின் மறுபக்கம் / வலமிருந்து இடம் செல்க

DOWN

1. (6)ஆந்தை வீட்டுக்கு காகம் தீ வைத்ததைப் பார்த்து தன எதிரிகளுக்கு தீ வைத்தவன்

2. (4)கௌரவர் சபையில் உள்ள நீதிமான்; கண்ணனின் நண்பன்

3.- (7) சுண்டலுக்கு ஏற்றது ;பீன்ஸ், அவரை குடும்ப தாவரம்

7.- (3)கையில் பத்து, காலில் பத்து

– (3) ஆயுள், ஆரோக்கியம், தானம், தான்யம் குறைந்தால் வருவது / கீழிருந்து மேலே செல்க

10 (4)- தீ பாவளி  வந்தால் ‘டாம் டும் டம்’ சத்தம் போடும்./ கீழிருந்து மேலே செல்க

ANSWERS

1.அசுவினி , 4.வக்ரதிசை, 5.கொசு, 6.மாவிலை, 8.மரவட்டை , 10.பகல்

1.அசுவத்தாமா, 2.விதுரர், 3.மொச்சைக் கொட்டை, 7.விரல், 9.கவலை,10.பட்டாசு

–SUBHAM–

‘யோகா’ ஒரு சமுத்திரம் – 5 லட்சம் சுவடிகள் ! (Post No.7612)

Tevaram manuscript in British library

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7612

Date uploaded in London – 24 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

yoga in alphabet

ஞானஸ்ய காரணம் கர்ம, ஞானம் கர்ம விநாசகம்

பலஸ்ய கரணம் புஷ்பம், பலம் புஷ்ப விநாசகம்

ஞான மார்க ப்ரபோதினி

பழத்தை உண்டாக்கியது பூ ; அந்தப் பழமே பூவின் முடிவுக்குக் காரணம் ஆகிவிடுகிறது.

ஞானத்தை  உண்டாக்கியது கர்மவினையே ; அந்த ஞானமே  கர்மவினைக்கு முடிவுகட்டி விடுகிறது .

எளிய நடை ; அதி அற்புதமான தத்துவம் . இந்த நூல் வெளியாகவில்லை!! tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தியா தங்கத்துக்கும் வைரத்துக்கும் பெயர்பெற்ற இடங்கள். இதைக் கொள்ளையடிக்க கஜினி முகமது முதல் கொலம்பஸ் வரை புறப்பட்டதையும் கொலம்பஸ் மேற்கிந்தியத் தீவுகளில் இறங்கி அதுதான் இந்தியா  என்று பெயரிட்டதையும் இன்று வரை அந்த கரீபியன் கடல்  தீவுகளுக்கு மேற்கு இந்தியா (West Indies) என்று பெயர் இருப்பதும் நீங்கள் அறிந்ததே ; அதற்குப் பின்னர் 700 ஆண்டுகளுக்கு துலுக்கர்களும் 300 ஆண்டுகளுக்கு வெள்ளையர்களும் இந்தியாவைக் கொள்ளையடித்ததும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். tamilandvedas.com, swamiindology.blogspot.com

எனக்கும் உங்களுக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது . அதாவது இந்தியாவின் மஹத்தான பொக்கிஷம் ஒன்று உலக லைப்ரரிகளில் ஒளிந்துகொண்டிருக்கிறது . அது என்ன?

ஐந்து லட்சம் சம்ஸ்கிருத , பிராகிருத, பாலி மொழி சுவடிகள் ஆகும்.! ( இதில் தமிழ் சுவடிகளின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை.. ஏனெனில் இதை பெங்களூரைச் சேர்ந்த பாண்டுரங்கி எழுதிய கட்டுரையிலிருந்து தருகிறேன்.).

உலகிலுள்ள 215 கல்வி நிறுவனங்கள் ,  நூலகங்களில் ஐந்து லட்சம் சுவடிகள் இருப்பதாகவும் இதில் ஒரு லட்சம் சுவடிகள் ஜெர்மனி,பிரான்ஸ், பிரிட்டன், இலங்கை, நேபாளம் முதலிய நாடுகளில் உள்ள 40 ஸ்தாபனங்களில் இருப்பதாகவும் பாண்டுரங்கி புள்ளி விவரம் வெளியிட்டுள்ளார். (K T Pandurangi, The Wealth of Sanskrit Manuscripts in India and Abroad, Bangalore 1997 ) tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, பாரசீக மொழிகளில் உள்ள சுவடிகளை அவர் கணக்கில் சேர்க்கவில்லை. இதற்கு முன்னர் தியோடர் ஓப்ரக்ட்(Theodor Aufrecht)  , பிரான்ஸ் கீல்ஹான் (Franz Kielhorn) , ஜார்ஜ் பியூலர் (George Buhler) , செஸில் பென்டெல் (Cecil Bendell) , ஏ ஸி பர்னல் ( A C Burnell) , ஹர பிரசாத் சாஸ்திரி (Hara Prasad Shstri)  , ஆர்.ஜி.பண்டார்க்கர் (R G Bhandarkar)  , குப்புசுவாமி  சாஸ்திரி Mm Kuppuswami  Sastri) ,டாக்டர் வி.ராகவன் (Dr V Raghavan) , பி.கே. கோடே ( P K Gode)   முதலிய பல அறிஞர்கள் எடுத்த நன் முயற்சியால் சம்ஸ்கிருத, பாலி , பிராகிருத மொழி சுவடிகள் பற்றி தெரிய வந்தது. சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்ட புதிய கேட்டலாகஸ் கேட்டலகோரம் ( The New Catalogus Catalogorum, Department of Sanskrit, Madras University) ‘அட்டவணைகளின்  அட்டவணை’ ) புஸ்தகம் நமக்கு சுவடிப் பட்டியலைத் தருகிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

அது ஒரு கலைக்களஞ்சியம் . அதில் வெறும் சுவடிப்பட்டியல் மட்டும் இல்லாமல் அதிலடங்கிய விஷயம் , அதை எழுதியோர்,தொ குத்தோர் , பாஷ்யம் செய்தோர் முதலிய பல விஷயங்கள் உள .

இதற்கு அடுத்தாற்போல யோகா சம்பந்தப்பட்ட சுவடிகள் மட்டும் எவ்வளவு என்று ஆராயாப் புகுந்த கே.எஸ். பாலசுப்ரமணியன் ஒரு கட்டுரை (ஆங்கிலத்தில்) எழுதினார். அதில் கண்ட சுவையான விஷயங்களை மட்டும் புல்லட் பாயிண்டு (Bullet Points) களில் தருகிறேன்.

ராஜ யோகம், ஹட யோகம் லய யோகம், மந்த்ர யோகம் என பல பிரிவுகள் உண்டு. யோகம் பற்றிய புஸ்தங்களைத் தவிர ஆகம, பவுத்த, ஜைன நுல்களுக்கிடையேயும் யோக விஷயங்கள் வருகின்றன. ஆகையால் அவ்வளவையும் சேகரிப்பதே ஒரு பெரிய கடினமான பணி . tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆனால் யோகா என்பது மனிதனின் ஆன்மீக , உடல் ஆரோக்கிய , மன ஆரோக்கிய விஷயங்களுக்கு உதவுவதாலும் , இன்று உலகம் முழுதும் அதில் ஆர்வம் காட்டுவதாலும் கடினமான பணியைச் செய்துதான் ஆகவேண்டும் .

அடையாறு நூலகம் , தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் முதலிய இடங்களில் இன்னும் பல யோகா சுவடிகள் அச்சேறாமல் உள்ளன.

யோகா சுவடிகளில்  சுந்தரதேவ எழுதிய ‘ஹட சங்கேத சந்திரிகா’ முக்கியமானது . வேறு பல ஹடயோக நூல்களில் இல்லாத அரிய பல விஷயங்களை சுந்தரதேவ எழுதி இருக்கிறார் . இந்த சுவடியின் பிரதிகள் வேறு பல நகரங்களிலும் கிடைக்கின்றன; சுந்தர தேவ 1650-1750 இடையே வாழ்ந்தவர். அவர் பல்கலை வித்தகர்; காவ்ய, யோக, ஆயுர்வேத , வேதாந்த விஷயங்களில் வல்லவர். நூலின் அடிக்குறிப்பிலிருந்து அவர் காஸ்யப கோத்ரத்தைச் சேர்ந்த தென்னிந்திய பிராமணர் என்பதும் காசி மா நகரில் குடியேறியவர் என்றும் தெரிகிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

அவர் 90 வேதாந்த, வைத்ய, யோக ஆசிரியர்களின் நுல்களைக் குறிப்பிடுவதால் அவருடைய மேதா விலாசம் விளங்கும்; கே. எஸ் பாலசுப்ரமணியன் இதை ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்றார்.

சுந்தரதேவ குறிப்பிடும் பல யோக நூல்கள் இன்று காணக்கிடக்கில. அவை யாவை ?

விரூபாக்ஷ எழுதிய அம்ருத சித்தி யோக;

கோரக்சனாத எழுதிய அமருக ப்ரபோத;

யோக சம்க்ரஹ , எழுதியர் பெயர் இல்லை

பாதஞ்சல யோக சம்க்ரஹ – இது பதஞ்சலியின் யோக சூத்ரம் அல்ல ; இது வேறு. tamilandvedas.com, swamiindology.blogspot.com

சாயா  புருஷ யோக ;

சாயா  புருஷ லட்சண;

ஞான யோக ப்ரபோதினி ;

குண்டலினி பஞ்சகாதி நிரூபணம்;

ராஜ யோக சார;

சித்தாந்தசார ;

யோக ரஹஸ்யம்;

ஸ்வர சாஸ்த்ர சம்க்ரஹ.

இவை அனைத்துக்கும் எழுதியோர் பெயர் கிடைக்கவில்லை

பரமேஸ்வர யோகி எழுதிய பரமேஸ்வர யோகின் , சுவடி வடிவில் அடையாறு நுலகத்தில் உள்ளது.

தஞ்சாவூர்  சரஸ்வதி மஹாலில் இன்னும் வெளியிடப்படாத யோக நூல்கள் சுவடிகளாக உள்ளன . tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோகத்தைப் பயில்வோம்! சுக போகத்தை அடைவோம்!!

–subham–

ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 2 – சிவானந்த லஹரி(Post No.7611)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7611

Date uploaded in London – – 24 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 1 – பஜகோவிந்தம் – க்ட்டுரை எண் 7579 – வெளியான தேதி 16-2-2020

ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 2 – சிவானந்த லஹரி

ச.நாகராஜன்

2. சிவானந்த லஹரி

நூறு சம்ஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்டது சிவானந்த லஹரி.

லஹரி என்றால் அலை அல்லது பிரவாஹம். சிவனைக் குறித்த ஆனந்த அலை பிரவாஹமே சிவானந்த லஹரியாக அமைகிறது. சிவனைக் குறித்த ஸ்தோத்திர நூல் இது. ஒவ்வொரு செய்யுளிலும் சிவனின் அபார பெருமைகள் விளக்கப்படுவதால் பக்திப் பரவசத்துடன் இந்த துதியை துதிக்க முடியும்.

இதைப் பற்றி பெரியவாள் – காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்த சரஸ்வதி ஸ்வாமிகள் அருளியிருப்பது :

”சிவாநந்த லஹரீ” என்றால் ”சிவனை அல்லது சிவத்தை அநுபவிப்பதன் ஆனந்த வெள்ளம்” என்று அர்த்தம். காம தஹனம், கால ஸம்ஹாரம், திரிபுர ஸம்ஹாரம், தாருகாவனத்தில் பிக்ஷாடனம், பார்வதீ கல்யாணம், கைலாஸ தர்சனம், நடராஜ தாண்டவம், அடி முடி தேட நின்றது, கிராதனாக (வேடனாக) வந்தது முதலான லீலைகளைப் பண்ணின பரமேச்வரனின் அனந்த குணங்களையும், மஹிமைகளையும், அருளையும், சக்தியையும் அநுபவிப்பது, சிவன் என்ற மூர்த்தியை அநுபவிக்கிற ஆனந்த வெள்ளத்தைத் தருகிறது.

அதே சிவனை அமூர்த்தமாக உள்ளுக்குள்ளே அநுபவித்துக் கொள்ளும்போது அவனுக்கு ‘சிவம்’ என்று பெயர். [மாண்டூக்ய] உபநிஷத்தில் சொல்லியிருக்கிறபடி விழிப்பு, கனா, தூக்கம் இவற்றைத் தாண்டி, ஆத்மா ஏகமானதே என்கிற அறிவால் அறியத்தக்கவனாக, பிரபஞ்சங்கள் லயிக்கிற துரீய சாந்த நிலையில் அத்வைதமாக சிவனை அநுபவிக்கிறபோது அவனே “சிவம்” ஆகிறான். இப்படி இருவகைப்பட்ட, சிவனைக் குறித்த லீலானந்தம், சிவத்தைக் குறித்த ஆத்மானந்தம் இரண்டையும் வெள்ளமாகப் பெருக்குவதால் ”சிவாநந்த லஹரி”க்கு அந்தப் பெயர் ரொம்பப் பொருந்துகிறது.”

(முழு உரையையும் ஆசார்யாள் உரைகளில் படித்து அனுபவிக்கலாம்.)

இதிலுள்ள உவமைகள் மிக அற்புதமானவை.

நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்வதை ஆன்மாவைப் பண்படுத்துவதுடன் ஒப்பிடும் ஸ்லோகம் 40வது ஸ்லோகமாக அமைகிறது.

மாணவனாக இருந்தால் என்ன, கிரஹஸ்தனாக இருந்தால் என்ன, சந்யாசியாக இருந்தால் என்ன, அல்லது வேறு என்னவாக இருந்தாலும் தான் என்ன, ஒருவனது இதய கமலம் உன்னதாக ஆகும்போது, நீ அவனுடைவனாக ஆகிறாய் என்று 11ஆம் ஸ்லோகம் கூறுகிறது.

“மனம் ஒரு குரங்கு. அது மாயையென்னும் காட்டில் ஆசைகள் என்னும் கிளைக்கு கிளை எல்லா திசைகளிலும் தாவிக் குதிக்கிறது. ஓ, பிக்ஷுவே, உனக்கு அதை அர்ப்பணிக்கிறேன். அதை பக்தியால் கட்டி விடு.” – இப்படி 20வது ஸ்லோகம் கூறுகிறது.

சிவானந்த லஹரியில் சிவ பிரானின் ஏராளமான லீலைகளை எடுத்துரைக்கிறார் சங்கரர்.

யமனை காலால் உதைத்தது,மன்மத தகனம் உள்ளிட்ட ஏராளமான சரிதங்கள் ஆங்காங்கே ஸ்லோகங்களில் படித்து பரவசமடைகிறோம்.

பக்தி அமிர்தத்துடன் ஆன்ம உபதேசங்களை இந்த நூலில் அளிப்பதால் பகவான் ரமண மஹரிஷி இதிலுள்ள பத்து ஸ்லோகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை வரிசைப் படுத்தித் தந்துள்ளார்.

அந்த ஸ்லோகங்களாவன : 61,76,83,6,65,10,12,9,11, 91

இந்த ஸ்லோகங்களை சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ள அதில் வரும் முதல் வார்த்தைகளை இணைத்து ஒரு ஸ்லோகத்தையும் அவர் அருளியுள்ளார்:

அம்-பக் ஜன- கடோ-வக்ஷஸ்- நர-குஹா -கபீ- வது: |

ஆத்யா – தச சிவானந்த லஹரி ஸ்லோகா சூசிகா ||

பத்து ஸ்லோகங்களின் ஆரம்பத்தைக் கீழே காணலாம் :

ஸ்லோகம் 61 : அங்கோலம் நிஜ பீஜ ஸந்ததிரயஸ்காந்தோபலம் ஸூசிகா

ஸ்லோகம் 76 : பக்திர் மஹேஸ பத-புஷ்கரமாவஸந்தீ

ஸ்லோகம் 83 : ஜனன-ம்ருதி-யுதானாம் ஸேவயா தேவதானாம்

ஸ்லோகம் 6 : கடோ வா ம்ருத்பிண்டோऽப்யணுரபி ச தூமோऽக்னிரசல:

ஸ்லோகம் 65 : வக்ஷஸ்தாடன ஸங்கயா விசலிதோ வைவஸ்வதோ நிர்ஜரா:

ஸ்லோகம் 10 : நரத்வம் தேவத்வம் நக-வன-ம்ருகத்வம் மஸகதா

ஸ்லோகம் 12 : குஹாயாம் கேஹே வா பஹிரபி வனே வாऽத்ரி-ஸிகரே

ஸ்லோகம் 9 :  கபீரே காஸாரே விஸதி விஜனே கோர-விபினே

ஸ்லோகம் 11 : வடுர்வா கேஹீ வா யதிரபி ஜடீ வா ததிதரோ

ஸ்லோகம் 91 : ஆத்யாऽவித்யா ஹ்ருத்கதா நிர்கதாஸீத்-

98வது ஸ்லோகம் ஒரு அற்புதமான சிலேடை ஸ்லோகமாக அமைகிறது.

சிவானந்த லஹரி என்னும் கவிதையை தனது பெண்ணாக வர்ணிக்கிறார் ஆதி சங்கரர்.

கவிதையில் வரும் அலங்காரங்களே மணப்பெண்ணுக்கான அலங்காரம். (சர்வாலங்கார யுக்தாம்)

சரளபத யுதாம் – வார்த்தைகளே அழகிய நடையாக அமைகிறது.

சாதுவ்ருத்தம் –  அழகிய சந்தங்களால் அமைந்தது – பக்தியுடன் இருப்பது

சுவர்ணாம் – அழகு ததும்பியது

நல்லோரால் போற்றப்படுவது

இனிய நடையை உடையது

இலட்சியம் என்றே சொல்லக்கூடியது (இலட்சிய கவிதை- இலட்சிய பெண்)

கல்யாணி (மங்களமயமானவள்)

இப்படிப்பட்ட கவிதை என்னும் பெண்ணை கௌரிப்ரியா, ஏற்றுக் கொள் என்கிறார்.

ஒரு நல்ல கன்னிகையின் குணநலன்கள் :

ஓ, கௌரி ப்ரியா!

கன்னிகை போல இருக்கும் எனது கவிதையை ஏற்றருள்- அவள்

நல்ல அலங்காரங்களுடன் கூடியவள்,

அழகிய நடையை உடையவள்,

நற்குணங்கள் உடையவள்,

கவர்ச்சிகரமான நிறம் கொண்டவள்,

நல்லோரால் கொண்டாடப்படுபவள்,

இனிய விரும்பத்தகும் நடத்தை கொண்டவள்,

மற்றவருக்கு முன் மாதிரியாகத் திகழ்பவள்,

அனைத்து லட்சியங்களையும் கொண்டவள்,

ஜொலிக்கும் ஆபரணங்களை அணிந்தவள்,

நற்பண்புகளுடன் நடப்பவள்,

கையில் தனரேகையைக் கொண்டவள்,

அனைத்து நல்லனவற்றின் களஞ்சியமாகத் திகழ்பவள்

ஒரு நல்ல கவிதையின் குணநலன்கள் :

ஓ, கௌரி ப்ரியா

எனது கவிதை என்னும் பெண்ணை ஏற்றருள் ;

அது அனைத்து அணிகளையும் கொண்டது,

அழகிய அனைவரும் விரும்பும் பதங்களைக் கொண்டது,

இனிய இசையுடனான சந்தத்தைக் கொண்டது,

தேர்ந்தெடுத்த சொற்களால் ஒளிர்வது,

அறிவாளிகளால் புகழப்படுவது,

அனைத்து குணங்களையும் தன்னகத்தே கொண்டது,

பக்தியைப் பரப்பும் லட்சியத்தைக் கொண்டது,

முன்மாதிரியான கவிதையாக அமைவது,

அழகிய சொற்றொடர்களைக் கொண்டது,

மிருதுவாகவும் இனிமையாகவும் ஒலிப்பது,

ஒளிரும் கவர்ச்சியான பொருளைக் கொண்டது,

அனைவருக்கும் அனைத்து நலன்களையும் அளிக்க வல்லது,

முழுக் கவிதையின் பொருளையும் வார்த்தை வார்த்தையாகப் பொருள் பிரித்து, படித்து மகிழலாம்.

தேவர்கள் அனைவரும் உத்தமோத்தம பலம் என்று புகழும் (பெறுதற்கரிய உத்தம பலன் என்று புகழும்) சிவபிரானே, உன்னை எப்படிப் புகழ்ந்து போற்றுவது? (அது இயலாத காரியம்) என்று முடிக்கிறார் ஆதி சங்கரர் சிவானந்த லஹரியை.

சிவானந்த லஹரியின் ஆங்கில மொழிபெயர்ப்பை திரு T.M.P. Mahadevan , The Hymns of Sankara என்ற நூலில் அளித்துள்ளார்.

சிவ ஸ்தோத்திரமாகவும் அருமையான பக்தி இலக்கியமாகவும், உயரிய ஆன்மீக உபதேசங்களை அருள்வதாகவும், உயரிய கவிதைக்கான இலக்கணமாகவும், வேத, புராண, இதிஹாஸ சம்பவங்களை அடக்கியதாகவும் உள்ள சிவானந்த லஹரி பக்தர்களுக்கு ஒரு வரபிரசாதம் என்பதில் ஐயமில்லை.

ஜய ஜய சங்கர,

ஹர ஹர சங்கர!

***

உதவிக் குறிப்பு :

சிவானந்த லஹரியின் தமிழ் வடிவத்தையும் அருமையான ஆங்கில மொழிபெயர்ப்பையும் பல தளங்களில் பார்க்கலாம். யூ டியூபிலோ பல அறிஞர்கள், பக்தர்கள் விரிவுரைகளத் தந்துள்ளனர். அவரவருக்கு ஏற்ற வகையில் இவற்றை அனுபவித்து மகிழலாம். பரமாசார்யாளின் உரைகளும் இணையதளத்தில் இருப்பதால் அதிகாரபூர்வமான அந்த உரையை அடித்தளமாகக் கொண்டு ஆதி சங்கரர் நூல்களின் பயணத்தை அன்பர்கள் மேற்கொள்ளலாம்.  

Swami Cross Word 2322020 (Post No.7610)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7610

Date uploaded in London – 23 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ACROSS

1. (6 LETTERS)- all Indian freedom fighters are praised with this word – martyr, one who sacrificed one’s life for the country.

6. (4)- a town in Mahya Pradesh where ancient Saraswati temple was discovered inside a mosque.

8. (6)- feminine Hindu name; meaning jasmine flower

9. (6)- Wife of Vedic God Agni

10. (4)- God with one wife

DOWN

2. (8) particular type of Yogi who can walk on water and do such miracles

3. (5)- means half; for instance is other Half

7. (6)- one of the nine moods in dance and drama- Sanskrit word for laughter

4.(7)- river in Burma with Sanskrit name

5. (5)- one who is affectionate;beloved, dear; feminine name

Answers

1.Thyagi, 2.Hatayogi ,3 Ardha, 4. Iravati, 5.Priya 6. Dhar, 7.Hashya 8.Madhavi, 9.Agnayi, 10. Rama

subham

Oh, My God! Ramayana is Very, Very Heavy! (Post No.7609)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7609

Date uploaded in London – 23 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

MORE FOLK TALES  FROM VERY OLD BOOK WITH MY INPUTS

Venkaesa! Venkatesa !

There was a man in a village with moderate wealth. One night a thief had climbed and hidden himself in his loft. The owner of the house had got a hint of it but behaved as if he didn’t know it. He made a ruse.

Looking at his wife, he said,

My darling! You are pregnant; when the child is born whose name shall we give to it?

It may be as you like , said she.

Then we will give him the name Venkatesan and call him thus! My boy! Venkatesan!

So he called out the name loudly.

As this was his neighbour’s watchman’s name , he came quickly with his weapons and said,

Why did you call?

He made a sign that there was a thief in the loft.

The watch man seized him and bound him. In the meantime, the wealthy man called the police.

Xxx

Weight of Ramayana

In a bazaar street a person was discoursing upon Ramayana. Near by there lived a man who spent most of his time playing cards and gambling. He was very lazy to do any exercise. He was huge but stupid. At that time his wife, who is a devotee of Lord Rama,  thinking that wisdom would come to her stupid husband if he listens to the Ramayana discourse.

She asked him to go and attend the Ramayana talks. Accordingly he came and listened to the talk in the open ground of the temple. The breeze and the melodious songs in the musical lecture made him into fall into sleep. He started snoring. There was a good for nothing fellow who was among the listeners. He  saw him sleeping and snoring. His huge body attracted him to use it as a cushion seat. He slowly climbed on the man and sat comfortably. The lazy man carried him till the end of the discourse and after wards went home.

His wife saw him in the morning and asked him how the talk was. ‘Did you like it ? How was Ramayana?

“Oh dear. It was not at all light, it was very heavy; as heavy as a man, said he.

She asked him to explain.  He said, I slept halfway through the talk. Then when I woke up , I had severe body pain as if someone sat on my back all through the night. Immediately his intelligent wife realised what happened at the discourse. When she heard the full story, she was grieved at his stupidity.

Xxx subham  xxxx

புற நானூற்றின் கடவுள் வாழ்த்தில் சுவையான விஷயங்கள் (Post No.7608)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7608

Date uploaded in London – 23 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

கண்ணி கார்நறுங் கொன்றை ;காமர்

வண்ண மார்பின் தாருங் கொன்றை;

ஊர்தி வால் வெள்ளேறே ; சிறந்த

சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப;

கறைமிடறு அணியலும் அணிந்தன்று ; அக்கறை;

மறைநவில் அந்தணர் நுவலும் படுமே ;

பெண்ணுறு ஒருதிறன்  ஆகின்று ; அவ்வுரு த்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் ;

பிறை நுதல் வண்ணம் ஆகின்று ; அப்பிறை

பதினெண் கணமும் ஏத்தவும் படுமே

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய

நீரறவு அறியாக் கரகத்துத்

தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோர்க்கே

கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம்பாடிய பெருந்தேவனார் ;அவருடைய பெயர் மஹா+தேவன் ;

அதை அழகாக பாதித் தமிழ்ப் படுத்தி இருக்கிறார். மஹா = பெரு, பெரிய.

அவர் ஆதிகாலத்திலேயே மஹாபாரதத்தை தமிழில் பாடியவர்!

சிலர் தமிழில் முதலில் தூய தமிழ்ப் பெயர்கள் இருந்ததாகவும் தெலுங்கர்களும் பார்ப்பனர்களும் வந்து அதற்கு சம்ஸ்கிருதப் பெயர்களைக் கற்பித்ததாகவும் கதைப்பார்கள். அது தவறு. உண்மையில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத வடிவங்கள் ஏக  காலத்தில் புழக்கத்தில் இருந்ததாகவே கொள்ள வேண்டும்.

ஆனால் பிற் காலத்தில் வலிய பொருள் சொல்லப்போய், சிலர் அபத்தமாக மொழி பெயர்த்தும் இருக்கலாம்.புலவர் மஹாதேவன் புறநாநூறு தொகுக்கப்பட்ட நாலாம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

இதற்குப் பின்னரும் பல சான்றுகள் உள்ளன. திருவிளையாடல்  திரைப்படத்தில் வரும் ‘தருமி கவிதை சம்பவம் எல்லோருக்கும் தெரியும். இதை அப்பரும் தேவாரத்தில் பாடியிருப்பதால் அவருக்கு குறைந்தது 200, 300 ஆண்டுகளுக்கு முன்னராவது வாழ்ந்திருக்கவேண்டும் .

அப்பர் பாடலில் தருமி என்ற பிராமணனின் சம்ஸ்கிருதப் பெயரும் வருகிறது. ‘சங்கம்’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லும் வருகிறது .

சங்கம் என்ற சொல்லை வைத்துத்தான் இன்று வரை தமிழர்கள் பெருமை பேசுகிறோம். இறையனார் களவியல் உரை யின்படி மூன்று தமிழ்ச் சங்கங்களின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையுடைத்து. ஆனால் இந்த சங்கம் என்பது சம்ஸ்கிருதச் சொல் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே யில்லை .தொல்காப்பிய விதிப்படி “ச” எழுத்தில் தமிழில் சொற்களே துவங்க முடியாது  சங்க இலக்கியத்தின் சுமார் 30,000 வரிகளில் பரிபாடலில் ஒரே இடத்தில் ‘சங்கம்’ வருகிறது.

இதைவைத்து சங்கம் இல்லவே இல்லை அது பிற்காலக் கற்பனை என்று எவரும் சொல்வதில்லை.

ஆக உண்மையில் தமிழும் சம்ஸ்கிருதமும் ஒருவனின் இரு கண்கள் போல விருப்பு வெறுப்பின்றி பயிலப்பட்டன.

இன்னொரு எடுத்துக் காட்டையும் பார்ப்போம். திருவிளையாடல் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் பிராமணர் அல்ல. அவர் சொல்லும் எல்லா பாண்டிய மன்னர் பெயர்களும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இதைப் பார்க்கையில் தமிழ்ப் பெயர்களும் சம்ஸ்கிருதப் பெயர்களும் ஏக காலத்தில் வேறுபாடின்றி வழங்கின என்றே தெரிகின்றது. ஆக எவரோ ஒருவர் வந்து வேண்டுமென்றே அங்கயற்கண்ணி என்ற அழகான தமிழ்ப் பெயரை மீனாட்சி என்று மாற்றியதாக குற்றம் சாட்டுவதில் பசை இல்லை.

மேலும் பிராமணர் அல்லாத அப்பர், காரைக்கால் அம்மையார் கதைகளில் வரும் பெயர்கள் எல்லாம் புனிதவதி, திலகவதி, பரமதத்தன் என்று சம்ஸ்கிருதத்திலேயே உள்ளன. ஆக 1600 ஆண்டுகளுக்கு முன்னரே பிராமணர் அல்லாதாரும் இரு கண்களைப் போன்ற தமிழ்- சம்ஸ்கிருதப் பெயர்களையே வைத்துக் கொண்டனர் . சங்க இலக்கிய புலவர் பட்டியலில் நிறைய சம்ஸ்கிருதப் பெயர்கள  உள்ளன . சிலர் மட்டும் காமாக்ஷி என்பதை காமக்க்கண்ணியார் என்றும் விஷ்ணுதாசன் என்பதை விண்ணந்தாயன் என்றும் கண்ணதாசன் என்பதை தாயங்கண்ணன் என்றும் மாற்றிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

63 நாயன்மார் கதைகளைப் பார்த்தால் இன்னும் ஏராளமான உதாரணங்கள் கிடைக்கின்ற. இதுவரை வரலாற்று ஆதாரம் கிடைக்காத ஒரு மன்னரின் பெயர்  மூர்த்தி நாயனார். அவர் களப்பிரர் ஆட்சியை ஒட்டி வாழ்ந்தவர். அதாவது 1600 ஆண்டுகளுக்கு முந்தையவர்.

மேலும் இதற்குப்பின்னர் ஜடா வர்மன் என்ற அழகிய சம்ஸ்கிருதப் பெயர், சடையவர்மன் என்று கல்வெட்டுகளில் தமிழ்மயமாக்கப்படுவதைக் காண்கிறோம்.

முடிவுரை

1.தமிழ், சம்ஸ்கிருதப் பெயர்கள் விருப்பு , வெறுப்பின்றி பயன்பட்டன.

2.சிலர் சம்ஸ்கிருதப் பெயர்களை பாதி மட்டும் மொழிபெயர்த்தோ, முழுதும் மொழி பெயர்க்காமலோ பயன்படுத்தினர்.

3.ஆக அங்கயற்கண்ணியை மீனாட்சியாக மாற்றியதெல்லாம் ‘சூழ்ச்சி’ , ‘சதி’ என்று சொல்வதெல்லாம் பிதற்றலே. மேலும் மீனாட்சியின் தாயார் காஞ்சனமாலை, தந்தை மலையத்வஜன் , காஞ்சன மாலை யாதவ குலத்தில் வந்தவள் (சூரசேன மகாராஜன் புதல்வி)– என்று ஆராய்ச்சியை நீட்டிக்கொண்டே போகலாம்.

4.இரு மொழிகளும் இரு கண்களைப் போன்றவையே !

வாழ்க சம்ஸ்க்ருதம் ! வளர்க தமிழ் !!!

Tags  —  கடவுள் வாழ்த்து, பெருந்தேவனார், புறநாநூறு

—subham–

நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 2 (Post No.7607)

WRITTEN BY S Nagarajan

Post No.7607

Date uploaded in London – 23 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

சென்ற கட்டுரையின்  தொடர்ச்சி (சென்ற கட்டுரை எண் : 7517 வெளியான தேதி :31-1-2020)

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் மாத பத்திரிகை ஹெல்த்கேர்  பிப்ரவ்ரி 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

புத்தகச் சுருக்கம் : Perfect Digestion by Deepak Chopra

நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 2

(தீபக் சோப்ரா எழுதியுள்ள ‘பெர்ஃபெக்ட் டைஜெஸ்ஷன்”)

ச.நாகராஜன்

ஆயுர்வேதம் கூறும் பழைய அறிவுரை ஒன்று உண்டு! அது இது தான் :

சரியான உணவுத் திட்டம் இல்லாத மருந்து பயனற்ற ஒன்று; சரியான் உணவுத்திட்டம் இருந்தாலோ மருந்திற்கான அவசியமே இல்லை!

(Without proper diet medicine of no use, and with proper diet medicine is of no need!)

 ஆயுர்வேதம் அடிப்படையான ஆறு சுவைகளைக் கூறுகிறது.

அவையாவன :

இனிப்பு : ஜீனி, தேன், அரிசி, பாஸ்தா பால், க்ரீம், வெண்ணெய் போன்றவை

புளிப்பு : எலுமிச்சை, சீஸ், யோகர்ட், ப்ளம், வினிகர் போன்றவை

உப்பு : எந்த உப்பு உணவும்

உரைப்பு : மிளகாய், மிளகு, இஞ்சி, உரைப்பான பொருள்கள்

கசப்பு : சில கீரைகள் (பாகற்காய் உள்ளிட்டவை)

துவர்ப்பு : பீன்ஸ், மாதுளை, ஆப்பிள் உள்ளிட்டவை

அறுசுவைகளும் உணவுத்திட்டத்தை சமச்சீராக்குவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

இந்த ஆறு சுவைகளும் இருக்கும்படியான உணவுத்திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் ஆயுர்வேதத்தின் முதல் அறிவுரை.

எந்த உணவை நீக்க வேண்டும்? விடை சுலபமானது. எந்த உணவு உங்களைப் பிரச்சினைக்கு உள்ளாக்குகிறதோ, எந்த உணவு உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லையோ, அதை நீக்கி விட வேண்டும்.

ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் இன்னொரு உத்தி – ஆயில் மசாஜ்.

சரியான எண்ணெயைக் காய்ச்சி சற்று சூடான நிலையில் தலையிலிருந்து கால் வரை தேய்த்து மெதுவாக மசாஜ் செய்தல் வேண்டும்.

உடலில் 107 மர்ம (ஸ்தான) ங்கள் உள்ளன. இவற்றில் மூன்று முக்கியமானவை.

  1. சிர மர்மம் 2) ஹ்ருதய மர்மம் 3) பஸ்தி மர்மம்.

இவற்றுள் மூன்றாவதாக இருக்கும் மர்மம் தான் உடலின் பல இயக்கங்களுக்கு முக்கியமானதாக அமைகிறது.

இந்த மர்மத்தின் அடிப்படையில் தான் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்படும் உத்திகளும் அறிவுரைகளும் உள்ளன.

உடலைச் சீராக வைத்துக் கொள்ள சில உடல் பயிற்சிகள் உள்ளன. அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

யோக முத்ரா, உத்தியான பந்தம், வஜ்ராசனம், பவன முக்தாசனம், புஜங்காசனம் போன்றவற்றை (குரு மூலமாக) கற்றல் வேண்டும்.

ஜீரணம் என்பதில் உள்ள முக்கியமான அம்சம் உடல் மற்றும் உணர்ச்சி மீதான கட்டுப்பாடாகும்.

நீங்கள் உண்ணும் உணவு மட்டுமல்ல ‘நீங்கள்’ என்பது; உங்கள் உணவு உடலுக்குள் சென்ற பிறகு அங்கு என்ன நடக்கிறது என்பதும் முக்கியமானது.

உணவையும் அது உண்ணும் அனுபவத்தையும் ஒரு அருமையான விஷயமாகக் கருதி அனுபவித்தல் வேண்டும்.

வாயு சம்பந்தமான அனைத்து தோஷங்களையும், வியாதிகளையும் தவிர்க்க நீங்கள் உங்கள் உணவு மற்றும் உடல் மீதான  முழுக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.

ஆறு சுவைகளையும் கொண்ட உணவுத் திட்டம் மேலானது.

உடலின் இயக்கங்களின் மீது அழுத்தம் (Strain) இருக்கக் கூடாது. அப்படி அழுத்தம் ஏற்படுத்தும் உணவுகளை இனம் கண்டு தவிர்த்தலும், உடலில் அழுத்தம் ஏற்படும் இடங்களைக் காண்பதும் அதைத் தவிர்த்து வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதும் அர்த்தமுள்ளதாகும்.

இதைச் செய்தால் பூரண ஆரோக்கியம் கொண்டவர்களாக ஆவீர்கள்.

***

Why did the farmer weep in Jain temple?(Post No.7606)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7606

Date uploaded in London – 22 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

MORE TAMIL FOLK TALES

A farmer who kept ten yoke of oxen was getting a livelyhood by ploughing and cultivating. At that time having ploughed and reaped nothing but dust and empty ears the collector’s men levied the usual tax and took the money. Then he sold his ten yoke of oxen and bulls and grains and clothes and jewels to pay the tax. tamilandvedas.com, swamiindology.blogspot.com

Subsequently the collector came to collect  the balance of an old account. Without even looking at him,  The was ran away with a small cloth tied over his loins. He perceived another person coming along the road and being afraid entered a Jain temple which was there. Seeing the Jaina idol without any clothes for his loins , he said,

‘Father! I farmed with ten yoke of oxen and am running away with only a loin cloth . With how many oxen did you farm and come to utter ruins, for you have not even this small cloth? So, Saying he embraced the statue and wept.

Xxx

FOOL’S ASSOCIATION WILL RESULT IN GREAT LOSS

A fool went on a journey close behind a merchant . As they were going, it became very dark, the fool laid down to sleep in an open space on the road. The merchant laid down under the cover of a shrub which was near. tamilandvedas.com, swamiindology.blogspot.com

At that time the thieves going along that road struck their feet against the feet of the fool. One of the thieves asked ‘What is this? It’s like of a log of wood’. The fool became angry and said ‘go go.away, Could the wood in your house after tying five gold coins in its loins lay down to sleep in an orderly way?’

The thieves seized him and took away the money. One of them said to another, it may be fake coins; that is why he himself told us about the coins.’

The fool said, oh my god, it is my money. If you want to know whether it would pass the test or not, good, there is a merchant, show it to him. So he said pointing to the merchant. They seized 100 gold coins which the merchant had.

Thus, loss will come from associating with fools

Xxxx

BLIND MAN LOST HIS CHILD

A blind man had a child born to him.

When the child was a few days old one day the milk choked it and it died due to choking. The people in the village came to him and said,

Your child is dead. tamilandvedas.com, swamiindology.blogspot.com

How did it die, he asked.

Whilst it was sucking milk, they said.

What kind of thing is milk? he asked.

It is white, said they.

What is whiteness? he asked.

They said, it is like a swan, they said.

What kind of a thing is swan? said he.

Observe, said they, bending his arm.

He felt it and having ascertained that it was long and crooked, said

Alas! If this horrid milk entered the mouth of a child how could it live?

so saying he wept aloud. tamilandvedas.com, swamiindology.blogspot.com

Therefore, explaining things to stupid people only causes complete misunderstanding.

tags- blind man, choking, merchant, stupid, thief, jain statue, farmer ,loins

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 2222020 (Post No.7605)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7605

Date uploaded in London – 22 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

குறுக்கே

1. – மணப்பெண்

4. /வலமிருந்து இடம் செல்லவும்- திருமணம் ஆகாத பெண்; 12 ராசிகளில் ஒன்று.

5. – மயிர் நீப்பின் வாழாது

8. – சிவபெருமான் கையில் ஏந்தி பிச் சை எடுக்க உதவும்

10. – நிசும்பனின் சகோதரன்

xxxxx

கீழே

1. – நமஸ்தேயின் தமிழ் வடிவம்

2. – பழனி மலையின் மற் றொறு பெயர்; ஆண்களும் சூட்டும் பெயர்

6. – படகு; ஒரு மாநிலத்துக்கும் பெயர்

3. – கடல் என்பதற்கான ஸம்ஸ்க்ருதப் பெயர் இந்த மன்ன னிடமி ருந்து வந்தது

7. – சிலப்பதிகாரத்தில் வரும் புகழ் பெற்ற பிராமணன்

ANSWERS

குறுக்கே

1.வ து வை ,4.கன்யா  /வலமிருந்து இடம் செல்லவும்

5.கவரிமான்,8.கபாலம், 10.சும்பன்

xxxxx

கீழே

1.வணக்கம், 2.வையாபுரி, 6.வங்கம், 3.சகரன், 7.மாடலன் ,9.பாப

–Subham–

பணம் எங்கே நிலைத்து நிற்கும் ? (Post No.7604)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7604

Date uploaded in London – 22 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் உள்ள எல்லா நீதி நூல்களிலும் லெட்சுமி வசிக்கும் இடமும் அவளுடைய அக்காள் வசிக்கும் இடமும் சொல்லப்பட்டுள்ளன. திருவள்ளுவரும் கூட இந்த இரண்டு இந்து தெய்வங்களைப் பலமுறை சொல்கிறார். அதற்கு முன்பாக, நமக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அம்பலவாணக்கவிராயர் அறப்பளீச்சுர சதகத்தில் செப்புவதைக் காண்போம் tamilandvedas.com, swamiindology.blogspot.com

நீண்ட பட்டியலைப்  படியுங்கள் –

நல்ல லட்சணமுள்ள குதிரையின் முகத்தில், அரசனிடத்தில் , பண்பாடு உடையவர் இல்ல த்தில், தாமரை மலரிடத்தில் , வில்வ மரத்தில், துளசியில், கற்புடைய பெண்கள் இடத்தில், கடலில், கொடியில், கல்யாண வீட்டு வாசலில், நல்ல நகரத்தில்,நல்ல நெற்பயிரில், ஒளி உமிழும் விளக்கில்,வலம்புரிச் சங்கில், நல்லோர் சொல்லும் வாக்கில் (சொல்லில்),பொய் பேசாதவர் இடத்தில் , புஷ்பங்கள் மலர்ந்த குளத்தில் , பால் குடத்தில் , யானையின் தலையில் மலர் மங்கை அதாவது செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லெட்சுமி தேவி உறைவாள் (வசிக்கிறாள்).

இதில் மனிதர்களைத் தவிர மிருகங்களும் செடிகொடிகளும் , பால்குடம் போன்ற பொருட்களும் வருகின்றன. இந்துக்கள் இவைகளை சுப சின்னங்களாகக் காண்பர். மேலும் அத்தகைய இடங்களில் பாஸிட்டிவ் அலைகளை (Positive vibrations) அதிகம் இருக்கும். எடுத்துக் காட்டாக ஒரு கல்யாண வீட்டில்  என்னதான் செலவானாலும், உள்ளுக்குள் என்னதான் கசமுசா இருந்தாலும், அங்கே உள்ள மேள தாள முழக்கமும், மந்திர கோஷமும், அறுசுவை உண்டியின் மணமும் நல்ல உணர்வு அலைகளைப் பரப்புகின்றன. வில்வம் , துளசி போன்றவை மருத்துவ குணம் உள்ள மரம், செடிகள்; தாமரை மலரோ இந்தியாவின் தேசீய மலர். லெட்சுமியும், சரஸ்வதியும் காயத்ரியும், பிரம்மாவும் அமரும் மலர்.

இனி லட்சுமியின் அக்காள் / தமக்கை /மூ தேவி / முகடி/ஜேஷ்டா தேவி/ தெவ்வை  (திருக்குறள் 617,936) வசிக்கும் இடங்களை அம்பல வாணர் பட்டியலில் உள்ளவாறு படிப்போம்:-

சாப்பாட்டு ராமன்கள் , வாயாடிகள், பொய் பேசித் திரியும் பாவிகள் , ஆதரவற்ற அநாதைகள் , அழுக்கும் கந்தலும் உடைய ஆடைகளை அணிவோர் நாய் போலச் சீறும் பேய் மகள்கள் (துஷ்டைகள்) வாழும் வீடுகள் , தயிர்க்குடம் ,கழுதை , ஆட்டுமந்தை, பிணம் ஆகியன tamilandvedas.com, swamiindology.blogspot.com .

இவற்றில் பல சுகாதாரக் கேடானவை என்பது எல்லோரும் அறிந்ததே . இன்னும் சில, வெறி நாய் போன்ற பெண்கள் வசிக்கும் வீடுகள் முதலியன எதிர்மறை / நெகட்டிவ் (Negative vibrations) அலைகளைப் பரப்பும் இடங்கள் என்பதும் அனுபவத்தில் காணும் உண்மைகள். அங்கெல்லாம் போகக்கூடாது . போனால் குளிக்க வேண்டும். நெகட்டிவ் அலைகள் கரைந்து, நமக்கு ப்ரெஷ்னஸ் Freshness  / புத்துணர்வு பிறக்கும்

இறுதியாக இலக்குமி பற்றி தமிழ் இலக்கியக் குறிப்புகளைக் காண்போம்.

திருக்குறளில் லக்ஷ்மி – 179, 519, 617, 920, 1101.இது தவிர பத்து குறட் பாக்களில் செல்வம், அழகு என்றும் பாடுகிறார் அவையும் லெட்சுமிகரமானவை என்பதை மேலே அம்பலவாணர் விளக்கிவிட்டார் .

சங்கத் தமிழ் இலக்கியத்தில் லக்ஷ்மி வரும் tamilandvedas.com, swamiindology.blogspot.com இடங்கள் —

புறம் 358, 395, 7. பரிபாடல், கலித்தொகை மற்றும் பத்துப்பாட்டின் 10 நூல்களில் நிறைய இடங்கள்.

Tags  —  லெட்சுமி, மூதேவி,வசிக்கும் , இடங்கள்

–subham–