Mendelssohn ‘s
friend Madame Frege sang to him a song with the words,
“Time marches on by night as well as day
And many march by night who fain would stay
Oh that has a dreary sound! The composer cried
with a shudder— but it is just what I feel “
He then suddenly rose, as pale as death, and
paced the room hurriedly, complaining that his hands were as cold as ice.
He died within a month.
Xxxx
BRAHMS WONDERED!
Robert Fuchs, a reminiscent composer, was present one day when a highly Brahmsian composition of his was played to Brahms, and nearly fainted with embarrassment when the Master, assuming innocent bewilderment, asked him: “But what piece of mine was that?”
Xxx
STOP THAT TERRIBLE MUSIC
Brahms attended a rehearsal of his clarinet
quintet, and was so touched that tears came to his eyes. To cover his emotion
he marched across the room, closed the first violin part and growled:
Stop the terrible music!
Xxx
MOZART
When Nietzsche one day observed to Wagner that
in Figaro, Mozart had invented the music of intrigue, Wagner replied:
“On the contrary! In Figaro Mozart dissolved the
intrigue in music.”
Xxxx
FATHER’S INTERFERENCE
While George Gershwin was at work on the
Rhapsody in Blue, his father thrust his head into the room.
“Make it good, George”, he counselled, it might
be important.
So, indeed, it proved as Pa Gershwin was able to
demonstrate irrefutably to a doubting Thomas.
“Of course it is a great piece ! Doesn’t it take
fifteen minutes to play?”
Xxx
MEISTER, MEISTER
Brahms hates to be called Meister /Master or
Tonkunstler/ musical artist, for, he contented,
You might as well call me Cobblemaster or Maker
of Clay Stoves and have done with it.
Xxx
VAT IS DAT?
The first time the musical instrument called “the Serpent “ was used at a London concert over which the German composer Handel presided, he was so much surprised at the coarseness of its tones that he called out sharply:
“Vat a devil is dat?”
On being informed it was the Serpent, he
replied,
ஆதிமூலமே என்று அழைத்த
கஜேந்திரன் ஒரு பாண்டிய மன்னனே!
ச.நாகராஜன்
ஆதிமூலமே என்று கஜேந்திரன் அழைக்க அந்த கஜராஜனை முதலையின் வாயிலிருந்து
பகவான் விஷ்ணு விடுவித்த கதை நாடறிந்த ஒன்று.
ஆனால் பலரும் அறியாத ஒரு விஷயம் அப்படி அலறிய கஜராஜன் ஒரு பாண்டிய
மன்னனே என்பதைத் தான்.
பாகவதத்தில் வரும் ஒரு சுவையான வரலாறு இது:
இந்திரத்யும்னன் என்பவன் பாண்டிய தேசத்து அரசனாக இருந்து செங்கோலோச்சிக்
கொண்டிருந்தான்.
அவன் சிறந்த விஷ்ணு பக்தன். மிகுந்த புகழ் பெற்றவன்.
பக்தி மார்க்கத்தைக் கடைப்பிடித்து வந்த அவன் ஒரு சமயம் மலைய
பர்வதத்தில் தவம் செய்து கொண்டிருந்தான். ஆத்ம ஞானியான அவன் யாருடனும் பேசாமல் மௌன
விரதத்தை மேற்கொண்டிருந்து பகவானைத் தியானித்துக் கொண்டிருந்தான்.
ஒரு சமயம் அகஸ்தியர்
தன் சீடர் குழாமோடு அவன் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.
பெரிய முனிவரான அவரை வரவேற்காமல் இந்திரத்யும்னன் தன் தவத்தில்
இருந்தான். அர்க்யபாத்திராதிகளால் அவரை பூஜிக்கவில்லை.
இதனால் கோபம் கொண்டார் அகஸ்தியர்.
“பெரியோர்களை வணங்காத இந்த அரசன் பிராம்மணனை அவமதித்து கஜம்
போல இருந்தமையால் இவன் ஒரு கஜம் ஆகக் கடவது” என்று சபித்து விட்டார்.
அந்த அரசனே மறு ஜென்மத்தில் கஜேந்திரனாய்ப் பிறந்து முதலையால்
பிடிக்கப்பட்டு விஷ்ணு பக்தி மேலிட ஹரியை தோத்திரம் செய்து அவரு அழைத்து, அவரால் காப்பாற்றப்பட்டான்.
விஷ்ணுவின் அருளால் அவன்
மோட்சத்தையும் அடைந்தான்.
ஆக கஜேந்திர மோட்சம் என்று நாம் கேட்டு வரும் கதையில் வரும்
கஜேந்திரன் இந்திரத்யும்னன் என்ற பாண்டிய ராஜனே!
பாண்டிய நாட்டிற்கும்
இந்த வரலாறுக்கும் இப்படி ஒரு தொடர்பு இருப்பது ஒரு சுவையான செய்தி தானே!
இந்த வரலாறு இன்னும் ஒரு அதிசய செய்தியைக் காலம் காலமாக வழங்கி
வருகிறது.
அது பற்றிய ஒரு சுவையான வரலாறும் உண்டு.
ஒரு அரசன், விஷ்ணு நம்மிடமிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்
என அறிஞர்களைக் கேட்க அவர்கள் சரியான விடை தெரியாமல் விழித்தனர்.
ஒவ்வொருவரும் ஒரு தூரத்தை உத்தேசமாகக் கணக்கிட்டுக் கூறினர்.
வானியல் அறிந்தோர் அந்த வானவியல் கணக்கையும் சொல்லிப் பார்த்தனர்.
மன்னன் திருப்தியுறவில்லை.
கடைசியில் பக்திமானான ஒரு சிறுவன் அரசனிடம் வந்தான். தனக்கு
அந்தக் கேள்விக்கு விடை தெரியும் என்றான்.
அரசன் அவனைச் சொல்லச் சொல்லவே அவன் கூறினான்-
“பகவான் இருக்குமிடம் கூப்பிடு தூரமே!”
“ஆதிமூலமே என்று கஜேந்திரன் கூப்பிட்டவுடன் அவன் ஓடி வரவில்லையா?
ஆகவே உள்ளன்புடன் பக்தியுடன் அவனை கூப்பிட்டால் அவன் அதைக் கேட்டு ஓடோடி வருவான். அவன்
இருப்பது கூப்பிடு தூரத்தில் தான்”, என்றான் சிறுவன்.
இந்த பதிலால் மன்னனும் அவையினரும் திருப்தி அடைந்தனர்.
காலம் காலமாக ஒரு பெரிய உண்மையைச் சொல்லும் புண்ய கதை கஜேந்திர
மோக்ஷம் ஆகும்!
2 Aug 2012 – Believe it or not it happened in Africa very recently. … The meaning of the word Gajendra Moksha is Gaja=elephant, Indra= the leader or the …
நெரூருக்குச்
சென்று சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசிக்க வேண்டும் என்று நீண்ட
நாட்களாக ஆசை. அது மார்ச் 27ம் தேதி (2019) நிறைவேறியது.
1957ல் வெளியான ‘ஜகத்குரு திவ்ய சரித்திரம்’ புத்தகத்தில் சதாசிவ பிரம்மேந்திராள்
நடத்திய அற்புதங்களைப் படித்ததும், மாதம் தோறும் லண்டனில் நடக்கும் பஜனையில் சதாசிவரின் அற்புதமான
பாடல்களைக் கேட்பதும் இதற்குக் காரணமாகும்.
நெருர்
என்னும் கிராமம் கரூர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அமைதியான சூழ்நிலையில் ஒரு சிவன்
கோவில், அதனருகில் பிரம்மேந்திராளின் ஜீவ
சமாதி. அதாவது சமாதியின் கீழ் அவர் இன்னும் அப்படியே இருந்து அருள் புரிகிறார்
என்பது பொருள்; ஏனெனில் உயிருடன் இருக்கும்போதே உடல்
சமாதியில் இறக்கப்பட்டு மேலே அதிஷ்டானம் எழுப்பப்படும்.
அங்கே
நாங்கள் காலை 11 மணி வாக்கில் சென்றதால் பூஜையையும்
காண முடிந்தது. எனது சகோதரர் பேராசிரியர் சூரிய நாராயணன் உள்பட சுமார் 25 பேர் இருந்தோம். சமாதியை அடுத்த சிவன்
கோவிலும் சிறியதுதான். இறுதியில் சர்க்கரைப் பொங்கல் விநியோகம்.
அங்குள்ள
சிறிய கடையில் புஸ்தகங்கள், பாடல் தகடுகள் (CDs), படங்கள் விலைக்குக் கிடைக்கின்றன. இது
வரை சதாசிவரின் அற்புதங்களை அறியாதோர் அறிய அவை உதவும்.
சதாசிவ
பிரம்மேந்திரரின் ஸம்ஸ்க்ருதப் பாடல்கள் மிகவும் சிறியவை. பல கர்நாடக இசைக்
கச்சேரிகளிலும் இடம்பெறுகின்றன. அவரது பாடல்கள் (பரம)ஹம்ஸ என்ற முத்திரையுடன் முடியும்.
சதாசிவ
பிரம்மேந்திராள்
சதாசிவ
பிரம்மேந்திராள் பற்றி நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை
இணைப்பையும் காஞ்சி பரமாசார்யாளின் விஜய இணைப்பையும் கீழே காண்க.
நீங்களும்
அவருடைய பாடல்களைக் கச்சேரியிலோ பஜனைகளிலோ கேட்டிருப்பீர்கள்: இதோ சில முதல்
வரிகள்:
பஜரே
கோபாலம், மானஸ…………..
ஸ்மர
வாரம் வாரம் சேதஹ…………….
ப்ரூஹி
முகுந்தேதி ரஸனே……………..
மானஸ
ஸஞ்சரரே ப்ரஹ்மணி………….
க்ரீடதி
வனமாலி கோஷ்டே………….
பஜரே
யதுநாதம் மானஸ…………..
ப்ரதிவாரம்
மானஸ…………..
பிபரே
ராம ரஸம்…………………
சிந்தா
நாஸ்திகில தேஷாம்…………………..
ஸர்வம்
ப்ரஹ்ம மயம் ரே ரே
காயதி
வனமாலி மதுரம்………………..
இன்னும் பல. இவைகள் அடங்கிய புஸ்தகங்கள் அதிஷ்டானத்தில் கிடைக்கும்
We were
lucky to go to Nerur Sadhasiva Brahmendral’s Jeeva Samadhi, which is 13
kilometres from Karur on 27th March 2019. We went there around 11
am, right at the Puja time. Even the priest who did the Puja told us many
people come at wrong time and see the Samadhi though the protective fence
around the enclosure. He told us whoever come at Puja time are the lucky ones.
About the great saint , I have written in 2013 and 2014; Please see the links
below.
Sringeri
Acharya and Kanchi Pramacharya have visited this place . Kanchi Paramacharya came to Nerur in 1923
after doing the Thadanga Prathista in Jambukeswara (Thiru Anaikka) Akilandeswari
Temple on 29-4-1923.
He stayed in
Nerur for a week . Sadhasiva’s guru was the 57th Kanchi
Shankaracharya Sri Parama Sivendra Saraswathy. Kanchi Paramacharya spent
several hours every day doing meditation inside the temple. Next to the Samadhi
is Shiva temple. Paramacharya arranged Puja at both the places.
Miracles of
Sadhasiva Brahmendra
1.He
surprised a Muslim who cut off his hand by just attaching it to his arm and
walked away as if nothing happened.
2.He
appeared in several places at the same time.
3.He took
some children to Madurai to see the festival by Teletransportation.
4.He
predicted his last day to his disciples. He told them that a Brahmin will bring
a Shiva linga the next day from Varanasi and he will enter Samadhi on that day
and then they can grow a Bilva tree over it and install the linga nearby and erect
a Shiva temple over it. It all happened
250 years ago.
Sadhasiva’s
brief and beautiful Sanskrit compositions are sung in music concerts and
Bhajans. All his compositions have his signature Mudra/seal ‘Paramahamsa’.
Since we
sing the Bhajans in our monthly congregations in London, I have been planning a
visit for very long. After reading the book Jagadguru Divya Charitam (Year
1957) by Ramachandrapuram S Sambaasiva Murthy I wished that I should have the
darshan. It is about Kanchi Paramacharya’s life. During his Vijaya Yatra he
visited Neur.
More in my
previous posts. See the pictures taken by me:–
Sweet Pongal Prasadam was given to everyone who attended the Puja. Books, CDs, Pictures etc are sold in the Adhistanam.
சென்னையிலிருந்து
வெளியாகும் தினசரியான மாலை மலர் பத்திரிகையில் 29-4-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பெரும் அபாயம்!
ச.நாகராஜன்
உலகின்
தட்பவெப்ப நிலை வெகு
வேகமாக மாறி வருகிறது.புவி
வெப்பமடைந்து வருகிறது.
புவி வெப்பம்
அடைவதால் பல்வேறு
உயிரினங்கள் அழிந்து
வருகின்றன; அவற்றின்
உறைவிடங்கள் மறைகின்றன;
சுற்றுப்புறச் சூழல்
அமைப்புகள் பாதிக்கப்படுகின்றன.பூமியை
எதிர்நோக்கியுள்ள அபாயங்களில்
மிகப் பெரிய
அபாயம் புவி வெப்பமாதலே
(Global
Warming) என்பதை விஞ்ஞானிகள்
உள்ளிட்ட அனைவரும்
ஒரு மனதாக
ஒப்புக் கொண்டுள்ளனர்.
சமீபத்திய
ஆய்வுகள் உலகின்
பல்வேறு இடங்களிலும்
உஷ்ணம் அதிகரித்து
வருவதையும் தட்பவெப்ப
நிலையில் சீரற்ற
மாறுபாடுகள் அதிகரிப்பதையும்
அறிவிக்கின்றன. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 22 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் மிக அதிகமான வெப்பத்தை உலகம் கண்டிருக்கிறது.
2015,2016,2017,2018 ஆகிய நான்கு ஆண்டுகள் அதிக வெப்பமுள்ள ஆண்டுகள் என விஞ்ஞானிகள்
தெரிவிக்கின்றனர்.
பசுமை வாய்வுகள் பற்றி ஆய்வு நடத்தும் வோர்ல்ட் மெடியோரோலாஜிகல்
ஆர்கனைசேஷன் (World
Meteorological Organisation – WMO) பசுமை வாயுக்களின் நச்சுப் புகை வெளியேற்றம்
2018இல் மிக அதிகம் என்று அறிவித்ததோடு 2019ஆம் ஆண்டிலும் உலக வெப்பம் கூடுதலாகவே இருக்கும்
என்று கருத்துத் தெரிவித்துள்ளது.
புவி வெப்ப உயர்வானது
இந்தியாவின் பருவநிலை மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை புதிய ஆய்வு
ஒன்றின் முடிவு சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. வருகின்ற இருநூறு ஆண்டுகளுக்குக்
கோடைகால பருவ நிலையில் இந்தப் பாதிப்பு தொடரக்கூடும் என்பதை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதி நவீன கணினி தொழில்நுட்பத்தின்
மூலமாக பருவநிலை பற்றிய ஆய்வை மேற்கொண்ட ஐரோப்பிய விஞ்ஞானிகளின் குழு சராசரியாக இந்தியாவில்
கோடைகாலத்தில் பெய்யும் மழையின் அளவில் இனி 40 முதல் 70 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புண்டு
என்று தெரிவித்துள்ளது.
1870ஆம் ஆண்டிலிருந்து
பெய்துள்ள மழை அளவை ஒப்பிட்டுப் பார்த்ததில் இப்படி மழை பெய்கின்ற வாய்ப்பும் குறைந்த
அளவிலேயே உருவாகும் என்பதையும் ஆய்வு தெரிவித்துள்ளது.
தட்பவெப்ப நிலை மாறுபாட்டால்
ஏற்படும் விளைவுகள் வாக்கர் சர்குலேஷன் (Walker Circulation) மூலமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மேலை ஹிந்து மஹாசமுத்திரத்திற்கு உயர் அழுத்தப் பகுதிகளைக் கொண்டு வருவது எல்
நினோ ஏற்படும் காலங்களில் மாறி அதனால் இந்தியாவில் பருவ மழை அளவு குறையும் நிலை ஏற்படும்
என்பதைத் தெளிவாக ஆய்வு குறிப்பிடுகிறது.
(எல் நினோ என்பது பருவநிலை சீரற்ற தன்மையைக் குறிக்கும் சொல்)
புவி வெப்பம் உயர்வதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சுப் புகையே.
வளி மண்டலத்தைக்
கார்பன் டை ஆக்ஸைடும் கார்பன் மானாக்ஸைடும் தாக்கி பல்வேறு விபரீதங்களை ஏற்படுத்துவதை
நாம் அனைவரும் அறிவோம். இதற்குக் காரணம் இந்த நச்சுப் புகைகளை வெளியேற்றும் வாகனங்களே.
ஆகவே வாகனங்களுக்கே உரிய நச்சுப்புகை கட்டுப்பாடு விதிகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே
இதைத் தடுக்க முடியும்.
தொல்படிம
எரிபொருள்களான நிலக்கரி,
பெட்ரோல் உள்ளிட்டவை
எரிபொருளாகப் பயன்படுத்தப்படும்
போது அது காற்றை
மாசுபடுத்துகிறது. சூரிய
கிரணங்களை மேகங்கள்
சூரியனிலிருந்து பிரதிபலிக்க
வைத்து அவை விண்வெளியை
அடையச் செய்கின்றன.
இது ஒரு அசாதாரண
விளைவை ஏற்படுத்துகிறது.
இது க்ளோபல்
டிம்மிங் (Global Dimming) என்ற
சொற்றொடரால் குறிப்பிடப்படுகிறது.
இந்த க்ளோபல்
டிம்மிங்கின் விளைவாக
குறைந்த வெப்பமும்
ஆற்றலும் பூமியை
அடைகிறது. முதலில்
இது நலம் பயக்கும்
ஒன்றாகத் தோன்றினாலும்
இதுவே ஆயிரத்தி
தொள்ளாயிரத்து எழுபதுகளிலும்
எண்பதுகளிலும் எதியோப்பியாவில்
ஏற்பட்ட பஞ்சத்திற்குக்
காரணம் என கண்டறியப்பட்டது.
ஏனெனில் வட துருவத்தில்
உள்ள பெருங்கடல்கள்
மழையை உருவாக்கும்
வண்ணம் உரிய வெப்பத்தைக்
கொண்டிருக்கவில்லை. ஆகவே இந்தப்
பஞ்சங்களினால் லட்சக்கணக்கில்
அங்கு மக்கள்
மடிந்தனர்.
க்ளோபல் டிம்மிங்கிற்குக்
காரணமாக அமையும்
கார்பன் டை ஆக்ஸைடு
போன்ற நச்சுப்
புகை வளி மண்டலத்தில்
கலப்பதைத் தடுப்பதே
இதற்குச் சரியான
தீர்வாக அமையும்.
க்ளோபல்
டிம்மிங்கைத் தடுப்பதன் மூலம்
தட்பவெப்ப நிலை சீரடைந்து
புவி வெப்பமயமாதல்
தடுக்கப்படும். மக்களின்
ஆரோக்கியம் மேம்படும்.
புவியை வெப்பமயமாக்கும்
கார்பன் தரும் சவாலைச் சமாளிக்க இன்னொரு வழி உண்டு.
ஒளிச்சேர்க்கை எனப்படும் போட்டோ சிந்தஸிஸ் (Photo Synthesis) மூலமாகவே ஆக்ஸிஜன் அதிகம் உள்ள பூமியின் வளி மண்டலம் அமைந்துள்ளது. ஆனால் அற்புதமான இந்த வளிமண்டலத்தை நச்சுப் புகையை அதிகம் கக்குவதன் மூலமாக மாசு படுத்துகிறோம். மரங்கள் இயற்கையாகவே கார்பனை உறிஞ்சி ‘இயற்கைச் சமநிலையை’ ஏற்படுத்தினாலும் கூட செயற்கையாக மனிதன் வெளிப்படுத்தும் கார்பன் இந்தச் சமநிலையை சீர்குலைக்கும் அளவு அதிகமாக இருக்கிறது.
கார்பன் அளவை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை ஆராய பன்னாட்டு
விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு குழுவை ஐரோப்பிய கமிஷன் அமைத்துள்ளது. இந்தக் குழு ஆப்பிரிக்காவில்
வளரும் இரோகோ (IROKO) என்ற ஒரு மரம்
மைக்ரோப்ஸ் (Microbes)
எனப்படும் சில நுண்ணியிர்களுடன் இணைந்து கார்பன் டை ஆக்ஸைடு கொண்டுள்ள புகையை சுண்ணாம்பாக
மாற்றுகிறது என்பதை நன்கு ஆய்ந்து கண்டுபிடித்துள்ளது.
புவி வெப்பமாதல் எனப்படும் குளோபல் வார்மிங் (Global Warming) அபாயத்தால் உலகெங்கும்
உள்ள காடுகள் தாங்கள் மண்ணில் சேமித்து வைத்திருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிட்டு
வரும் இன்றைய சூழ்நிலையில் இது தக்க ஒரு மாற்றாக அமையும் என்பது நல்ல செய்தி.
அமில மண்ணில் இந்த மரங்கள் நடப்பட்டால் மண்ணில் காணப்படும் கால்சியத்துடன்
கார்பன் டை ஆக்ஸைடைச் சேர்த்து ஒரு குறிப்பிட்ட கனிமத்தை இரோகோ மரங்கள் உருவாக்குகின்றன.
இதன் மூலம் கார்பன் டை ஆக்ஸைடு நச்சுப்புகையினால் மாசுபடுத்தப்படும் வளி மண்டலம் சுத்தம்
செய்யப்படுகிறது. சில வகை பாக்டீரியாக்களுடனும் காளான்களுடனும் இது உரிய முறையில் சேர்க்கப்பட்டால்
இந்த மரம் உருவாக்கும் கனிமம் சுண்ணாம்பாக மாறுகிறது. பொலிவியா, ஹைதி, இந்தியா ஆகிய
நாடுகளில் இப்போது கார்பன் சவாலைச் சமாளிக்க இந்த இரோகோ மரங்களை நட்டு சோதனை செய்யும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மரம் தொழிலகத் திட்டங்களுக்குப் பயன்படுவதோடு இதனால் உருவாகும்
சுண்ணாம்பின் மூலம் ஒரு ‘பயோ சிமெண்டை’ உருவாக்கவும் இப்போது
அறிவியல் ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பயோ சிமெண்ட் கட்டிடக் கலையில்
ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.
இரோகோ மரத்தை ஆப்பிரிக்காவின்
தேக்கு மரம் என்று ஆப்பிரிக்கர்கள் கூறுகின்றனர். அத்தோடு அதை வெட்டி வீட்டு உபயோகத்திற்காக
அனாவசியமாகப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவருக்கு துரதிர்ஷ்டம் வந்து சேரும்
என்பது அவர்களின் நம்பிக்கை.
இது போன்ற மரங்களை இனம்
கண்டும் பயோ சிமெண்ட் போன்றவற்றை உருவாக்கியும் கார்பன் சவாலைச் சமாளிக்க புது விதமாக
நவீன அறிவியல் முனைந்திருப்பது உலக மக்கள் அனைவரும் வரவேற்கும் ஒரு நல்ல செய்தி அல்லவா!
வாகனக் கழிவாக வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் மானாக்ஸைடு ஒரு நச்சு வாயு. சிகரட் புகைக்கும் போதும், மண்ணெண்ணெய் அடுப்புகளிலிருந்தும் கூட இந்த நச்சு வாயு வெளிப்படுகிறது.
அபாயகரமான இந்த
வாயு சுவாசத்தின்
போது உள்ளே
சென்றால் தலைவலி,
கிறுகிறுப்பு, தடுமாற்றம்,
நினைவாற்றல் இழப்பு,
வாந்தி எடுத்தல்,
சுவாசிப்பதில் சிரமம்,மார்பு
வலி, நினைவற்று
கோமாவில் இருத்தல்
போன்ற அபாயகரமான
விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆகவே
சுற்றுப்புறத்திற்குக் கேடு
விளைவிக்கும் வாகனப்
புகை வெளியேற்றத்தைத்
தடுப்பதும், வீட்டிலும்
வெளியிலும் புகை பிடிப்பதால்
ஏற்படும் கார்பன்
மானாக்ஸைடு வெளியேற்றத்தைத்
தடுப்பதும் வளி மண்டலத்தைச்
சுத்தமாக்க உதவும்
வழிகளாகும்.
கார், மோட்டார்சைக்கிள்,
ஸ்கூட்டர் போன்ற
வாகனங்களைக் குறைவாகப்
பயன்படுத்துவோம். ஆரோக்கியமான
சுற்றுப்புறச் சூழலுக்கும்,
இல்லச் சூழலுக்கும்
எதிரியான கார்பன்மானாக்ஸைடு
நச்சுப் புகையைத்
தவிர்ப்போம்; வாழ்வை
வளமாக்குவோம்!
உலக மக்களை
பயமுறுத்தும் இன்றைய
உடனடி அபாயம் புவி வெப்பமயமாதல் தான்! ஆகவே அதைத்
தடுப்பதே நமது உடனடி கடமை ஆகும்.
முயற்சிப்போம்; வெல்வோம்!
21-7-2002 அன்று ஆரம்பிக்கவிருந்த பன்னாட்டு சேவா மாநாடுகளின்
ஏற்பாடுகள் பிரமாதமாக நடந்து கொண்டிருந்தன.
அதைத் தொடக்கி வைக்க வேண்டியவர் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா.
ஆனால் அவரால் பேச
முடியாதபடி அவரது தாடைகள் வீங்கி இருந்தன. உணவு உண்ண முடியாது, பேசவும் முடியாது.
நிகழ்ச்சியின் பொறுப்பாளரான
திரு சீனிவாசனுக்கு பெரும் கவலை வந்து விட்டது.
ஆனால் பாபாவோ மாநாடு
ஏற்பாட்டைத் தொடருமாறு கூறி விட்டார்.
மாநாட்டில் அவரது
உரை பிரமாதமாக அமைந்தது. அதில் இறுதியில் என்ன நடந்தது என்பதை அவர் விளக்கிக் கூறினார்.
கழுத்து வீக்கத்தினால்
ஒரு சிறுவன் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். தாங்க முடியாத வலி. டாக்டரோ அது
தீர குறைந்த பட்சம் 20 முதல் 25 நாட்கள் ஆகும் என்று கூறி விட்டார்.
அவனை அழைத்த பாபா,
‘சாயி உன்னுடன் இருக்கையில் நீ ஏன் அழுகிறாய்’ என்று கூறி விட்டு
ஒரு இனிப்பை தன் அங்கை அசைவினால் வரவழைத்தார். அதை அந்தப் பையன் வாங்கி உண்டான்.
வலியை பாபா ஏற்றுக்
கொண்டார்.
சீனிவாசன் பாபாவை
எப்படி நீங்கள் உரை ஆற்றப் போகிறீர்கள் என்று கேட்ட போது “இது உடல் என்ற உணர்வு இருந்தால்
தானே வலியை நான் உணரப் போகிறேன். இது உனது உடல். அனைத்து உடல்களுமே என்னுடையவையே” என்று அருளினார்.
அவரது உரையின் ஒரு
பகுதி இதோ:
திரு சீனிவாசனை
நோக்கி அவர் கூறியது :“I feel the pain if I think that
this is My body. But this is not My body, it is yours.”
பின்னர் மாநாட்டில் கலந்து கொண்டோரை நோக்கி
அவர் கூறினார்:
“All your Bodies are mine. Hence I take your suffering upon
Myself. That is My duty. THIS is not My body, so I do not care for it. Not only
now, at any point of time, I do not care for any suffering. I practise whatever
I preach. That is why I say, My Life is
My message. It is not possible for all to
understand and realise My Divinity. I do not want to say it in public. I do not
indulge in advertisement. All that is Mine is yours and vice-versa. I have no
desires at all. All My desires are meant
to give you happiness. Greatness does not lie in preaching, it lies in
practice. A true acharya (preceptor) is one who practises and then
preaches. That is what I am doing.”
பாபாவின் இந்தச் சொற்களிலிருந்து அவரது தெய்வீகத் தன்மையை நன்கு புரிந்து கொள்ளலாம்.
அன்று அவர் ஆற்றிய
சொற்பொழிவில் கருத்துக்கள் சொல் ஜாலத்துடன் வெளி வந்தன; அனைவரையும் மகிழ்வித்தன.
“ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு உடல் உண்டு. இயற்கை ஒரு
கண்ணாடி. நீங்கள் இதில் பார்ப்பது உங்களது பிரதிபலிப்பையே அன்றி வேறல்ல. இன்று மனிதன்
சுயநலத்துடனும் சுய தேவையுடனும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறான். சுயநலம் சமூகத்தில்
முற்றிலுமாகப் பரவி விட்டது. தேஹாபிமானம் அதிகமாகிக் கொண்டே போகிறது. தேஷாபிமானம் குறைந்து கொண்டே வருகிறது. தேஹாபிமானத்தை
ஒருவன் விடும் வரையில் அவன் தெய்வாபிமானத்தை விருத்தி செய்து கொள்ள முடியாது.” என்றார் அவர்.
உரையின் ஆரம்பத்தில்
பாபா மனித வாழ்க்கையின் அஸ்திவாரங்களை விளக்கினார்.
“மனித வாழ்க்கையானது
சமதா (Samata -Euality),
சமைக்யதா(Samaikyata – Unity),
சௌப்ரத்ருத்வம் (Saubhratrutvam – Fraternity),
சௌஜன்யம் (Saujanyam
– Nobility)
ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
வாழ்க்கை என்னும் மாளிகைக்கு இவையே அஸ்திவாரங்களாக அமைகின்றன. இதில் எந்த ஒன்று இல்லாத
போனாலும் கூட வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடும். ஆகவே ஒவ்வொருவரும் இவற்றை வளர்த்துக்
காத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் மனிதத் தன்மை என்றால் என்ன என்பதை
ஒரு மனிதன் தெரிந்து கொள்ள வேண்டும்.