HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 94; இந்து மத கலைச்சொல் அகராதி-94 (Post.16,063)

Written by London Swaminathan

Post No. 16,063

Date uploaded in London – 7 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சப்த ரிஷி

ஏழு ரிஷி முனிவர்கள் என்று பொருள் ; மனித இனத்தின் மூல புருஷர்கள் இவர்கள் ; இந்துக்கள் அனைவரும் , அவர்கள்வழியாக உலக மக்கள் அனைவரும், இவர்களின் வழிவந்தவர்கள் என்று கருதலாம் . அவர்களைக் கெளரவிக்கும் வகையில் வானத்தில் துருவ நட்சத்திரத்தைக் காட்டும், பட்டம் பறப்பது போன்ற வடிவத்தை உடைய, ஏழு நட்ச்சத்திரங்களை இந்தப்பெயர் கொண்டு இந்துக்கள் அழைத்தனர் .

ஏழு ரிஷிகள் பற்றி இரண்டு முக்கிய விஷயங்கள் :

தமிழர்கள் 2000 ஆண்டுகளாக இவர்களை வழிபட்டு வருகின்றனர் நற்றிணைப்பாடலில் (231) இந்தச் செய்தி உள்ளது . அந்த ஏழு முனிவர்களில் வசிஷ்டர் என்னும் முனிவரைச் சுற்றிவரும் அருந்ததியையும் தமிழர்கள் சங்க காலம் முதல் வழிபட்டு வருகின்றனர் ; அருந்ததி, வடமீன் , சாலினி என்ற பெயர்களில் சங்கப்பாடல்களில் அவள் இடம்பெறுவதோடு திருமண நாளன்று இரவில் அருந்ததிகாட்டல் என்ற  நிகழ்ச்சியும் இன்றுவரை உள்ளது.

மை அற விளங்கிய மணி நிற விசும்பில்

கைதொழும் மரபின் எழு மீன் போல,

பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய,

சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்

துறை புலம்பு உடைத்தே தோழி! பண்டும்,  5

உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,

பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக்

கானல்அம் கொண்கன் தந்த

காதல் நம்மொடு நீங்காமாறே.—- நற்றிணை-231

பிராமணர்கள் தினமும் மூன்றுமுறை செய்யும் சந்தியாவந்தன கிரியையில் இவர்களுடைய பெயர்களை சொல்லி பின்னர் காயத்ரீ ஜபம் செய்கிறார்கள் .

அந்த ஏழு முனிவர்கள்

அத்ரி, பிருகு, குத்ச, வசிஷ்ட. கெளதம, காஸ்யப, ஆங்கீரஸ– என்பதாகும் .

இவர்களில் இரண்டு நட்ஷத்திரங்களிலிருந்து ஒரு நேர்கோடு கிழித்தால் துருவ நடசத்திரம் தெரியும் .

இதே வரிசையில் ஏழு ரிஷிகளையும் பாணினி, தான் எழுதிய உலகத்தின் முதல் இலக்கண நூலான அஷ்டாத்யாயியில் குறிப்பதால் 2700 ஆண்டுகளாக இவர்கள் புகழ் கொடிகட்டிப்பறந்து வருவது புலனாகிறது .

இந்த சப்த ரிஷிகள் பற்றிய இன்னும் சில அதிசய விஷயங்கள் :

இந்துக்கள் பூமியின் வடபகுதியில் தான் முதல் முதலில் வாழ்ந்தார்கள் ; பின்னர்தான் தென்பகுதிக்குப் போனார்கள் என்பதாகும்; ஏனெனில் சப்த ரிஷிக்களை பூமியின் வட பகுதியில் வாழ்வோர் மட்டுமே காண முடியும் ; பின்னர் தென் பகுதிக்குப் போனதால் தென் பகுதியில் மட்டும் தெரியக்கூடிய விண்மீன் கூட்டத்துக்கு திரிசங்கு (Southern Cross) என்ற மன்னன் பெயரை இட்டார்கள் ; இதே போல பரிபாடல் குறிப்பிடும் அகஸ்திய (Canopus) நடசத்திரமும் தென் பகுதியை ஒட்டி உள்ளது .

அத்ரி மகரிஷி பெயரில் ஏட்ரியாட்டிக் கடலும்  , காஸ்யப மகரிஷி பெயரில் காஸ்பியன் கடலும் , கபிலாண்ராய  என்ற பெயரில் கலிபோர்னியாவும் இருப்பதை நாம் அறிவோம் . அட்லான்டிக் மஹா சமுத்திரம் என்ற பெயரில் அதல விதால பாதாள லோகம் இருப்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் . இவற்றில் கபில முனிவர் பெயரில் கலிபோர்னியா வந்ததை காஞ்சி மஹா சுவாமிகள் சுட்டிக்காட்டியுள்ளார் அதை ருசுப்பிக்கும் வகையில் ஆஷ் ஐலண்ட், ஹார்ஸ் ஐலண்ட் (CALIFORNIA =  KAPILA ARANYA; ASH ISLAND, HORSE ISLAND ) இருப்பதையும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார் இதை 10, 15  ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளேன்

சப்த ரிஷி நட்சத்திரக்கூட்டத்தை URSA MAJOR உர்சா மேஜர் = பெருங்கரடி என்று மேலை நாட்டினர் அழைத்தனர் உர்சா என்றால் கரடி என்று அவர்கள சொல்வர். ஆனால் இது மகா (மேஜர்) ரிஷி = ருக்/ ஷ / உற்சா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபே !

மஹாருஷாய = உற்சா மஹா.

 அதைவிட அதிசய விஷயம் திருக்குறளில்(850) உள்ளது:

 உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும். –850

இதில் வரும் அலகை என்பதற்கு பேய் என்று பொருள்;

சங்க இலக்கியத்தில் வேறு மூன்று இடங்களில் வந்தாலும் வேறு பொருள் தரப்படுகிறது ; இதை அல்கால் என்று அராபியர் சொல்கிறார்கள் 

Algol primarily means the Demon Star (an eclipsing binary star in Perseus) or an early computer programming language. [1, 2]

  • The Demon Star: Named from the Arabic phrase al-ghūl (the ghoul or demon).

Ursa Major is the Mizar and Alcor pair, located at the middle star in the handle of the Big Dipper. Known historically as the “horse and rider,” these two stars are easily spotted with the naked eye and sit approximately 83 light-years away from Earth. Naked-Eye Visibility: Mizar shines at magnitude 2.2 and Alcor at magnitude 3.9, making them distinct for people with normal vision.

The most famous double star in Ursa Major is the Mizar and Alcor pair, located at the middle star in the handle of the Big Dipper. Known historically as the “horse and rider,” these two stars are easily spotted with the naked eye and sit approximately 83 light-years away from Earth. [1, 2, 3]

  • Location: Second star from the end of the Big Dipper’s handle (Mizar is Zeta Ursae Majoris; Alcor is 80 Ursae Majoris). [1, 2]
  • Naked-Eye Visibility: Mizar shines at magnitude 2.2 and Alcor at magnitude 3.9, making them distinct for people with normal vision

Algol (β Persei): Known as the “Demon Star,” this famous variable star periodically dims and brightens as a companion star passes in front of it.

கல்யாணப் பெண் மாப்பிள்ளை ஆகியோரின் கண் பார்வையைச் சோதிக்கவும் அருந்ததி போல கற்புக்கரசியாக நீ கணவனைச் சுற்றிச் சுற்றி வரவேண்டும் என்றும் இந்தச் சடங்கினை உண்டாக்கினார்கள் . ஏனெனில் இந்த நட்சத்திரக்கூட்டத்தில் உள்ள அருந்ததி டபுள் ஸ்டார் DOUBLE STAR SYSTEM இரட்டை நடசத்திரம் ஆகும்; அதாவது ஒன்றை ஒன்று வலம் வரும்; இதை அராபியர்களும் பாரசீகர்களும் கண் பார்வை சோதனைக்குப் பயன்படுத்தினர் அதாவது இந்துக்களின் அருந்ததி காட்டல் நிகழ்ச்சியை அராபியர்களும் பாரசீகர்களும் பின்பற்றினர் ; ஆல்கால் என்பதை ஆல்கார்  என்றும் மாற்றினர்; ல =ர இடம் மாறும் என்பது மிகவும் தெரிந்த சம்ஸ்க்ருத இலக்கண விதி . ஆகையால் வள்ளுவர் குறிப்பிடும் அலகை என்பது அராபியர் வரை சென்றது ஆராய்ச்சிக்குரியது ஏனெனில் வள்ளுவர் தவிர வேறு யாரும் தமிழில் பேய் என்ற பொருளில் பயன்படுத்தவில்லை !

ஆல்கால் எனபதற்கு அராபியர் சொல்லும் பொருளிலும் கூளி வருகிறது “கூளி” என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் பேய் அல்லது பூதம் என்ற பொருளைத் தருகிறது. இதை பரணி நூல்களிலும் காணலாம்.

***

சரஸ்வதி

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
   வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை யின்பம் குலவு கவிதை
   கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
   ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
   கருணை வாசகத் துட்பொரு ளாவாள்.

தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்
   தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
   உயிரி னுக்குயி ராகிய தெய்வம்
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
   செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
   கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம்.

என்று பாரதியார் பாடிப்போற்றிய தெய்வம் கலைமகள் என்னும் சரஸ்வதி தேவி ஆவார் . குமரகுருபரர் சகல கலா வல்லி மாலைத் துதியைப்ப்பாடி  துலுக்க ராஜாக்களையும் வென்றார். கம்பன் சரஸ்வதி அந்தாதி பாடி கவிச்சக்கரவர்த்தி என்று பட்டம் பெற்றான்

வேத கால நதியின் பெயர்; கல்விக்கு அதிபதியான தெய்வத்தின் பெயர்; இவரைப் பாடாத தமிழ் ஸம்ஸ்க்ருதப் புலவர்கள் இல்லை;

சரஸ்வதி தேவி வெண்ணிற ஆடையுடன் நான்கு கைகளுடனும் வெண்தாமரை மலரின் மேல் பத்மாஸனத்தில் அமர்ந்து காட்சி அளிக்கிறார். அவர் கையில் வீணை இருக்கும் .

உலகின் மிகப்பெரிய விழாவான கும்ப மேளா நடைபெறும் பிரயாகையில், திரிவேணி சங்கமத்தில் இவள் இன்றும் பாதாள நதியாக வருகிறாள் ; கங்கா, யமுனா சரஸ்வதி நதிகள் கலப்பதால் முக்கூடல்- திரிவேணி சங்கம்— என்று பெயர் ; வேதகாலத்தில் கடல்போல ஓடியது ; அண்மைக்கால அணுசக்தி ஆராய்ச்சிகள் இவள் சிந்து வெளி நாகரீகத்துக்கும் முன்னால் ஒடியதைக் காட்டுகிறது; மனு ஸ்ம்ருதியிலும் இந்த நதியின் ஓட்டத்தைக்  குறிப்பிடுவதால் அதன் ஒரிஜினல் சிந்து வெளி நாகரீகத்துக்கு முந்தியது என்றும்  தெரிகிறது..

சரஸ்வதியின் துதியைப்படாத மாணவனோ கலை ரசிகனா சங்கீத வித்வானோ இல்லை; ஏனெனில் அவள் காமசூத்திரத்தில் வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய பெண்கள் சிலபஸில் வரும் 64 கலைகளுக்கும் அவளே அதிபதி ; இதைத் தமிழ்ப்புலவரும் பாடிப்போற்றினார்கள்.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என் அம்மை – தூய

உருப்பளிங்கு போல்வாள், என் உள்ளத்தின் உள்ளே

இருப்பள், இங்கு வாராது இடர்!

படிக நிறமும் பவளச் செவ்வாயும்

கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் – துடியிடையும்

அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்

கல்லுஞ்சொல் லாதோ கவி.

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் பூந்தோட்டம் என்னும் ஊரின் அருகில் அரிசிலாற்றங்கரையில் புகழ்பெற்ற கூத்தனூர் சரஸ்வதி கோயில் அமைந்துள்ளது.

பிரம்மாவின் மனைவி ; இவளுடைய பெயர்கள் அனைத்தும் சரஸ்வதி அஷ்டோத்திரத்தில் காணலாம் ; இன்று வரை அவை அனைத்தும் வட பெருங்கல் இமயம் முதல் தென் குமரி வரை பெண்கள் பெயர்களில் உள்ளன!

To be continued…………………………

TAGS- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 94; இந்து மத கலைச்சொல் அகராதி-94, சப்த ரிஷி சரஸ்வதி, நதி,ஆய கலைகள் , படிக நிறமும் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள், திரிவேணி சங்கம்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 91; இந்து மத கலைச்சொல் அகராதி-91 (Post.16,044)

Written by London Swaminathan

Post No. 16,044

Date uploaded in London – 2 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

91HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 91; இந்து மத கலைச்சொல் அகராதி-91

English version was posted yesterday. Here is the Tamil version.

சகுந்தலா

சகுந்தலா என்றால் பறவைப் பெண் என்று பொருள்; அதாவது கானகத்தில் பறவைகளால் வளர்க்கப்பட்டாள். இதிலிருந்துதான் நாம் பயன்படுத்தும் சகுனம் என்ற சொல் பிறந்தது. விஸ்வமித்திரனுக்கும் தேவ லோக அழகி மேனகாவுக்கும் பிறந்த பெண் குழந்தையை அவர்கள் காட்டில் விட்டுச் செல்லவே, கண்வர் என்ற முனிவர் அவளை வளர்த்து வந்தார். ஒரு நாள் துஷ்யந்தன் என்ற மன்னன் அவளைக் கண்டு கானகத்தில் அவளை கந்தர்வ முறையில் மணந்து கொண்டு நாட்டுக்குப்  போய்விட்டான் அவள் கர்ப்பமுற்று உலகத்தையே ஆண்டு இந்தியாவுக்குப் பாரதம் என்ற பெயரைத் தந்த பரதனைப் பெற்றுக்கொடுத்தாள்; அவளது முழுக் கதையை சாகுந்தலம் நாடகத்தில் காணலாம் 

சாகுந்தலம்

உலகப்புகழ்பெற்ற ஸம்ஸ்க்குக நாடகத்தை அபிக்ஞான சாகுந்தலம் என்ற பெயரில் காளிதாசன் எழுதி உலகையே வியக்க வைத்தான்;  இதை சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வில்லியம் ஜோன்ஸ், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதால் ஐரோப்பா முழுதும் பாரதத்தின் பெருமை பரவியது; சாகுந்தல நாடக சகுந்தலாவைக் காப்பி அடித்து ஷேக்ஸ்பியர் , டெம்பஸ்ட் என்னும் நாடகத்தில்  மிராண்டா என்ற கானகப் பெண்ணை உண்டாக்கினார். கானகத்தில் சகுந்தலாவை கர்ப்பவதியாக்கிவிட்டு நாட்டுக்குத் திரும்பிய துஷ்யந்தன் அவளை மறந்து விடுகிறான்; கண்வ முனிவர் சீடர்கள் புடை சூழ, அவளை அனுப்பிவைத்தபோது, அவளை யார் என்றே தெரியாது என்று சொல்லிவிடுகிறான் துஷ்யந்தன்; அவன் கொடுத்த மோதிரமும் ஒரு அசரீரியும் அவளை உண்மைபெண் என்று காட்டியவுடன் ஏற்கிறான் என்பது சாகுந்தல நாடகத்தின் கதை ; இதில் பறவைகள் , மான்களுடன் அவள் வாழ்ந்த அப்பாவிப் பெண் வாழ்க்கையும் குடும்பப்பெண் எப்படி நடக்க வேண்டும் என்ற கண்வ மஹரிஷியின் வசனமும், ஆஸ்ரம அழகும் அக்கால பாரதத்தின் அழகினை வருணிக்கிறது ; ஐரோப்பாவின் அறிஞர்கள், கவிஞர்கள் அனைவரும் காளிதாசனுக்குப் புகழாரம் சூட்டியதோடு சம்ஸ்க்ருத மொழியையும் பயிலத் துவங்கினார்கள்.  

சால்மலி த்வீபம்

புராணத்தில் பூமியை அல்லது அவர்கள் அறிந்த நிலப்பரப்பினை ஏழு தீவுகளாக , அதாவது கடல் சூழ்ந்த பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் அங்குள்ள தாவரம் அல்லது பறவையின் பெயரைச் சூட்டினார்கள்; அதில் ஒன்று சால்மலி த்வீபம் .சால்மலி என்றால் இலவம் பஞ்சு மரம்; அது பல நாடுகளில் காணப்படுவதால் இந்த இடத்தைக் கண்டு பிடிப்பதில் குழப்பம் நிலவுகிறது; இதைச் சுற்றி கரும்புக் கடல் உள்ளதாகவும் புராணங்கள் செப்புகின்றன ; சிலர் இதை ஆஸ்திரேலிய பகுதி என்றும் வேறு சிலர் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதி என்றும் எழுதியுள்ளார்கள் .

எனது கருத்து

புராணத்திலுள்ள இடங்கள் பெரும்பாலும் ஆசிய கண்டத்தையே குறிக்கிறது; ஒருவேளை ஆப்பிரிக்காவின்  கிழக்குப்பகுதியும் அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம் ; அமெரிக்கா , ஆஸ்திரேலியா போன்றவைகளை அவர்கள் பாதாள லோகங்களில் சேர்த்துவிட்டனர்; ஆகவே இவைகளைக் கண்டுபிடிப்பதில் நேரத்தைச் செலவழிப்பதை விட அவர்கள் ஏன் இப்படிப்பிரித்தார்கள் என்று ஆராய்வது நல்லது ; புராண பூகோளம் என்று ஆங்கிலத்தில் புஸ்தகங்களை எழுதியோரிடையேயும் ஒருமித்த கருத்து இல்லை ; சம்ஸ்க்ருத புராணங்களிடையேயும் ஒரே கருத்து இல்லை .

சாலாதூரா

உலகப்புகழ் பெற்ற, உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதி , உலகையே வியப்பில் ஆழ்த்திய சம்ஸ்க்ருத இலக்கண வித்தகன் பாணினிபிறந்த ஊர் இது இப்போது பாகிஸ்தானில் லாகூர் நகருக்கு அருகில் உள்ளது . பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னால் நூலை எழுதினார் ; அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் வந்த யுவான் சுவாங் என்ற சீன யாத்ரீகனும் பாணிணிக்கு சாலாதூரா நகரில் ஒரு சிலை நிறுவப்பட்டிருந்ததைக் குறிப்பிடுகிறான்

Xuanzang’s Record: Writing in CE 646, Xuanzang recorded visiting the town (calling it Suoluoduluo), noted that it was the birthplace of Pāṇini (the author of the Vyākaraṇa or Qingming-lun), and stated that a commemorative statue of Pāṇini still existed there during his visit.

***

சாம வேதம்

நான்கு வேதங்களில் சாம வேதம் மூன்றாவதாக வைக்கப்பட்டுள்ளது. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் என்பதை நான்மறை என்று சங்கப்புலவர்களும் போற்றியுள்ளனர் . பாரத நாட்டில் இசையை தோற்றத்தை மெய்ப்பிக்கும் நூல் இது; இதை இசையின் ஓதுவார்கள் வேத பண்டிதர்கள்; இதை அப்படியே காப்பி அடித்து புத்த பிட்சுக்களும் பாலி மொழி கிரந்தங்களை ஓதி வருகின்றனர்  ஒவ்வொரு யாக யக்ஞத்திலும் வேத பாண்டிதர்கள் சாமத்தை இசைப்பார்கள்; அந்த அளவுக்கு இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் இந்துக்கள்த்திலுள்ள மந்திரங்கள் முக்கால் வாசி ரிக்வேத மந்திரங்களே நூற்றுக்கும் குறைவான மந்திரங்களே புதியவை; ஆகையால் ரிக்வேத காலத்தையே இதற்கும் சூட்ட வேண்டும்; அதாவது 3500 முதல் 6000 ஆண்டு வரை பழமையானவை

ரிக் வேதத்தின் எட்டாவது ஒன்பதாவது மண்டல பாக்கள் இதில் இடம்பெறுகின்றன

மொத்தமுள்ள துதிகள் -1,771.

சாம வேதத்தில் பாரம்பரியமாக 1,000 சாகைகள் (கிளைகள்) இருந்ததாகக் கூறப்பட்டாலும், தற்போது கிடைத்து, புழக்கத்தில் உள்ள முக்கிய சாகைகள் மூன்று மட்டுமே ஆகும். அவையாவன: கௌதம சாகை, ரணாயனிய சாகை, ஜைமினி சாகை (தலவகார சாகை)

ஒவ்வொரு வேதத்திலும் சாகைகள் என்ற கிளைகள் உண்டு; அதாவது அந்தந்த ஆசிரியரின் பாணி அல்லது ஸ்டைல் அல்லது உத்தி என்று சொல்லலாம் அவ்வகையில் குஜராத்தில் கெளதும சாகாவும் மகாராஷ்டிரத்தில் ராணாயணீய சாகாவும் தமிழ்நாட்டில் ஜைமினீய சாகாவும் பயிலப்படுகின்றன 

Regional Schools (Sakhas): Preserved through oral traditions across different parts of India, notably the Kauthuma tradition in Gujarat, Ranayaniya in Maharashtra, and Jaiminiya in Southern India.

சாந்தோக்கிய உபநிடதம் மற்றும் கேன உபநிடதம்  ஆகிய இரண்டும் இந்த  வேதத்தைச் சேர்ந்தவை

***.

ஷம்பு

Śaṃbhu (शंभु).—a. சிவபெருமானின் பெயர்களில் ஓன்று; இன்பத்தை மகிழ்ச்சியை அளிப்பவர் என்பது பொருள்; சம்போ சங்கரா என்ற கோஷங்களை பஜனைகளில் கேட்கலாம் 

***

சமிதி – கமிட்டி

ரிக் வேதத்தில் காணப்படும் இந்தக்குழு அமைப்பினை நம் இப்போதும் கமிட்டி என்று சொல்லி வருகிறோம்; உண்மையான உச்சரிப்பு சமிதி; அதை ஆங்கிலத்தில் க உச்சரிப்புடன் சொல்லி வருகிறவம்; ரிக் வேதத்தில் சபா (அவை) சமிதி என்ற இரண்டு அமைப்புகளையும் பயன்படுத்தினர் 

இரண்டு குழுக்களிலும் உள்ள உறுப்பினர்கள் வேறுபட்டனர் . தமிழில் எண்பேராயம் ஐம்பெருங்குழு என்று இருந்ததைப் போல.

***

சாமுத்திரிகா லக்ஷணம்

உடலின் உறுப்புகள் எப்படி அமைந்துள்ளன என்பதைக்கொண்டு அவர்களின் குண நலன்களை, ஆரோக்கியம் , திறமை ஆகியவற்றைக் குறிக்கும் இந்துமத சாஸ்திரம் சாமுத்ரிகா லக்ஷணம்  என்று அழைக்கப்படுகிறது. தாமரை இதழ் போன்ற கண்கள், மீன் போன்ற கண்கள் , தாள் தோய் தடக்கை (ஆஜானுபாஹு) என்றெல்லாம் இலக்கியங்களில் காணலாம். ஆயினும் இவைகளின் பலன்களை சாமுத்ரிகா லட்சண நூல்களில் மட்டுமே காண முடியும் ; ஆளைப்பார்த்தால் ராஜா போல இருப்பான் என்று நாம் சொல்லும்போது நம் உள்ளத்தில் ராஜ களை என்பது ஊன்றியிருப்பது தெரிகிறது ; இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி நூல்கள் உண்டு ;பத்மினி வகைப் பெண்களுக்கு உடலில் இயற்கை மணம் உண்டு என்ற திருவிளையாடல் புராண வசனம் போன்றவை சாமுத்ரிகா லட்சணத்தின் ஒரு பகுதியே  

அகத்தியர் பெயரிலும் ரதி ரஹஸ்யம் என்ற பெயரிலும் நூல்கள் இருக்கின்றன ; உலகத்தில் பெண்கள் படிப்பதற்கு முதல் முதலில் சிலபஸ் போட்டவர்கள் இந்துக்களே ; அவள் கற்க வேண்டிய 64 கலைகளை வாத்ஸ்யாயன மகரிஷி காம சூத்திரம் என்னும் சம்ஸ்க்ருத நூலில் பட்டியலிட்டுள்ளார் அதில் ஒரு கலை- சாமுத்ரிகா லக்ஷணம் ஆகும் .

***

சந்தனம்

சந்தன மரம்—( Santalum album)—இந்த மரத்தின் எல்லா பகுதிகளும் மனம் நிறைந்தவை; இதன் எண்ணெய் , பொடி,  அரைத்த விழுது ஆகிய அனைத்தும் இறைவன் பூஜைகளில், அபிஷேகத்தில், குளிர்ச்சி தருவதற்காக மனித உடலில் பூசுவது வளாகம்; ஆயுர்வேத சிகிச்சைகளிலும் பயன்படும்; இறைவன் சிலைகளில் சந்தன விழுதை அப்பி பூஜை செய்வார்கள் மணம் தரும் இந்த மரக்கட்டைகள் தென்னிந்தியாவில் அதிகம் கிடைக்கிறது

***

சந்தான லட்சுமி

சந்தானம் என்றால் புத்திரப் பேறு ; அஷ்ட லட்சுமி என்னும் எட்டு லக்ஷ்மிக்களில் ஒருவர் சந்தான லக்ஷ்மி; அஷ்ட ஐசுவர்யங்களையும் வேண்டும்   துதிகளில் இவள் பெயரும் இடம்பெறுகிறது .

அஷ்ட லக்ஷ்மிக்களும் என்ன என்ன தருவார்கள் என்பது அவர்களுடைய பெயர்களிலேயே உள்ளது

•  ஆதி லக்ஷ்மி: ஆன்மீக செல்வம்; எதிலும் முன்னேற்றம்;

•  தன லக்ஷ்மி: செல்வம்; நீங்காத சம்பத்து;

•  தான்ய லக்ஷ்மி: அளவற்ற தானியம், உணவு, அமோக விளைச்சல்;

•  கஜ லக்ஷ்மி: ராஜ போகம் , அந்தஸ்து ;

•  சந்தான லக்ஷ்மி: குழந்தை பாக்கியம்;

•  தைர்ய லக்ஷ்மி (வீர லக்ஷ்மி): வீரம், பலம், துணிவு,

•  விஜய லக்ஷ்மி: வெற்றி;

•  வித்யா லக்ஷ்மி: கல்வி, அறிவு, புத்தி;

………

Tags- சந்தான லக்ஷ்மி, சகுந்தலா, பகுதி 91, Hindu Dictionary, அஷ்ட லக்ஷ்மி.

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 75; இந்து மத கலைச்சொல் அகராதி- 75 (Post.15,928)

Picture– 63 Nayanmars

Written by London Swaminathan

Post No. 15,928

Date uploaded in London –29 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

N words continued…………………..

நாயன்மார் / நாயனார்

சிவ பெருமானை வழிபட்ட 63  பெரியோர்கள் நாயன்மார் அல்லது நாயனார் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களில் மூவர் பெண்கள்; இவர்களுடைய கதைகளை சேக்கிழார் என்ற புலவர் அறிஞர் பெரியபுராணம் என்னும் நூலில் பாடியுள்ளார் ; இவர்களுடைய சிலைகளை பெரிய சிவன் கோவில்களின் பிரகாரத்தில் காணலாம். இந்த 63 பேரில் மாணிக்கவாசகர் இல்லாதது ஏன் என்று இன்று வரை விவாதிக்கப்பட்டுவருகிறது. 12 ஆழ்வார்களைப் போலவே இவர்களிலும் பல ஜாதிகளைச் சேர்ந்தோர் உள்ளனர் ; அப்பர் என்னும் திருநாவுக்கரசர் (600 CE) மற்றும் ஞான சம்பந்தர் காலம் நமக்குத் தெரிவதால் இவர்கள் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை பரப்பியது உறுதியாகிறது; இவர்களுடைய பாடல்களை பன்னிரு திருமுறைகளில் படிக்கலாம் . 63 பேரில் கண்ணப்ப நாயனார் என்ற வேடரின் கதை மிகவும் பிரபலமானது.

***

நாரதர்

தேவரிஷி என்று பெயர் பெற்றவர் நாரதர் ; பூலோகத்துக்கும் மேலோகத்துக்கும் இடையே பயணம் செய்த முதல் விண்வெளி வீரர் ; திரிலோக சஞ்சாரி என்று பெயர்பெற்றவர் ; கலகம் விளைவிப்பதில்மன்னன்; ஆயினும் நாரதர் கலகம்  நன்மையில் முடியும் என்ற வசனமும் பிரபலமானதே ; தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரத்தில் முதல் தடவையாக இவர் பெயர் வருகிறது ; இவர் வீணை என்னும் இசைக்கருவியைக் கண்டுபிடித்தால் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ இவரை நாரதர் வீணை என்று பாடியிருக்கிறார்; வீணையும் நாராயண நாராயண என்ற சொற்களும் இவரை அடையாளம் காட்டிவிடும்; பெரிய விஷ்ணு பக்தர் ; மஹாபாரதத்தில் வனவாசம் செய்த பாண்டவர்களை அவ்வப்போது கண்டு, தைரியத்தையும் நம்பிக்கையையும் ஊட்டியவர்;  துரியோதனனை அடக்கி வையுங்கள் என்று திருத ராஷ்டிரனுக்கும் அறிவுரை வழங்கினார். பிரம்மாவின் மனதில் உதித்த பத்து ரிஷிகளில் ஒருவர் ; பிரபஞ்த்தின் முதல் பிரம்மச்சாரி; இவர் போதித்த பாகவதத்தை வியாசர் அவருடைய பிள்ளையான சுகருக்குச் சொல்லிக்கொடுத்தார் ; நாரதர் பெயரில் பல நூல்கள் உள்ளன. இவர்கள் தேவரிஷி நாரதர் அல்ல ; நாட்டிய சாஸ்திரத்தைப் பரத முனி 6000 சம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் பாடியபோது இவரும் இருந்ததாக நாட்டிய சாஸ்திரம் பகர்கிறது ;

நாரத பக்தி சூத்திரம்

பக்தியின் இலக்கணத்தை விளம்பும் நாரத பக்தி சூத்திரம் என்ற நூலை சம்ஸ்க்ருத மொழியில் இவர் இயற்றினார். பக்தி என்றால்  என்ன, பக்தரின் நடை உடை பாவனை எப்படி இருக்கும், பக்தியால்  விளையும் நன்மைகள் என்னென்ன என்ற 84 சூத்திரங்களை உடைய நூல் நாரத பக்தி சூத்திரம் ஆகும்.

***

நரகாசுரன்

கிருஷ்ண பரமாத்வாலால் வதைக்கப்பட்ட அசுரர்களில் ஒருவன் ; பிரக் ஜோதிஷம் என்னும் அஸ்ஸாம் பகுதியை ஆட்சி செய்தவன் ; 16, 000 பெண்களை சிறை வைத்தவன்; இவன் இறந்த நாளை நரக சதுர்த்தி என்ற பெயரில் தீபாவளியாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். பூமாதேவியின் புதல்வன் ; வராஹ அவதாரத்தில் தர்த்தி என்ற பெயர்; தன்னுடைய புதல்வனுக்கு நீண்ட ஆயுளும் அதிக சக்தியும் கொடுக்கவேண்டும் என்று விஷ்ணுவிடம் பூமாதேவி வேண்டினாள்; மேலும் எந்த ஆண் மகனும் இவனைக் கொல்லமுடியாத சக்தி தர வேண்டும் என்றாள்; விஷ்ணுவும் இவன் அடுத்த யுகம் வரை வாழ்வான் என்று சொல்லி வரமளித்தார் . அவனோ பாணாசுரனுடன் சேர்ந்து அதிகார மமதையில் எல்லோரையும் கொடுமைப்படுத்தி வந்தான் ; சொர்க்க லோகத்தையும் வசப்படுத்த எண்ணினான் ; விஷ்ணுவானவர் கிருஷ்ணனாக அவதரித்தபோது  அவருடைய எட்டு மனைவிகளில் ஒருவரான சத்யபாமா பூதேவியின் அவதாரம் ஆக வந்தாள்; கிருஷ்ணர் அவளையும் அழைத்துக்கொண்டு நரகாசுரனுடன் மோதியபோது பூ தேவி ( சத்யா பாமா) அம்பினாலேயே அவன் அழிந்தான் ; கிருஷ்ணன் 16,000 பெண்களையும் துவாரகைக்கு அழைத்துச் சென்றார்

***

நிகும்ப

பல ராக்ஷஸர்களுக்கு இந்தப் பெயர் உண்டு

மஹாபாரத நிகும்பன் சுந்த–உபசுந்த என்ற ராக்ஷஸர்களுக்கு தந்தை; அவ்விரு ராக்ஷஸர்களும் திலோத்தமை என்ற தேவ லோக அழகி விஷயத்தில் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் கொன்று அழிந்தனர்.

வால்மீகி ராமாயணத்தில் வரும் நிகும்பன், வஜ்ரமாலா- கும்பகர்ணன் தம்பதியருக்குப் பிறந்தவன் . அவனுடைய அண்ணன் பெயர் கும்பன்; ராமாயணத்தில் அனுமனால் கொல்லப்பட்டான்

ராவணனுடைய படைத்தளபதிகள் ஒருவனுக்கும் இதே பெயர் ; புராணங்களில் பேய் பிசாசுகளுடன் தொடர்புடையது நிகும்ப வனம்; ராவணனின் மகன் மேகநாதன் என்னும் இந்திரஜித் இலங்கையிலுள்ள நிகும்ப வன குகையில் எதிரிகளை ஒழிக்கும் ஆபிசார யாகத்தை நடத்த முனைந்தபோது அதை அறிந்த லெட்சுமணன் அங்கு சென்று யாகத்தை நடைபெறாதவாறு தடுத்தான்.

***

நிமி 

தத்தாத்ரேயரின் புதல்வன்; அவருடைய மகன் இறந்தவுடன், அவன் சாந்தி அடைவதற்கான பல சடங்குகளை நிமி செய்தார்  ; அவைதான் இப்போது செய்யப்படும் சிராத்தம் என்னும் சடங்குகளுக்கு அடைப்படையாக அமைந்தது .

***

நிவாதக்கவச்ச, நீவாடகவச்ச The nivatakavachas (Sanskrit: निवातकवच,)

நிவாதக்கவச்ச என்றால் ஆயுதம் துளைக்க முடியாத கவசங்களை அணிந்தவர்கள் என்று பொருள் ; இப்போது அரசியல் தலைவர்கள் அணிந்து செல்லும் புல்லெட் ப்ரூப் சட்டை போன்றது; மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் நீவாடகவசர்கள் கடலுக்கு அடியில் வாழும் அசுர இனத்தவர், இவர்களை அர்ஜுனன் இந்திரன் உதவியுடன் போரிட்டு வென்றான்.

மஹாபாரதத் தகவல்

இதன் விவரமாவது; இவர்கள் தேவர்களுக்கு எதிரான தானவர்கள் ; தேவர்களின் நகரத்தை இவர்கள் ஆக்ரமித்தவுடன் சண்டை துவங்கியது; இவர்களின் எண்ணிக்கையோ முப்பது லட்சம்; அர்ஜுனன் விண்வெளியில் / சொர்க்க லோகத்தில் ஐந்து ஆண்டுகள் வசித்தான்; பிரிவுபசாரத்தின் போது தானவர்களை அழித்து விட்டுச் சென்றால் அதுவே பெரிய நன்றி என்று இந்திரன் பகர்ந்தான் ; ஸ்பேஸ் ஷட்டில் என்னும் விண்கலத்தின் பைலட் மாதலியுடன் அர்ஜுனனை பூலோகத்துக்கு அனுப்பினான் ; அர்ஜுனன் விண்வெளியில் கிடைத்த நவீன (லேசர்) ஆயுதங்களை பயன்படுத்தி தானவர்களை அழித்தான்.  அர்ஜுனன் போர் முழக்கத்தை தேவ தத்தம் என்ற சங்கினை முழக்கித் துவங்கினான் ; தானவர்கள் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிப் போனான் ; அப்போதுதான் ஸ்பேஸ் ஷட்டில் பைலட் மாதலி, ஏன் தெய்வீக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று வினவினான். அதன்பேரில் அர்ஜுனன் தேவலோக ஆயுதங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றான் .

ராமாயணத்தில் வரும் தகவலின் படி இவர்கள் பிரம்மாவிடம் பெற்ற வரத்தால் ராவணனாலும் இந்திரஜித்தாலும் தோற்க முடியாவார்களாக விளங்கினார்கள் ; இறுதியில் பிரம்மா தலையிட்டு சமரசம் செய்து வைத்தார் ; இந்த தானவர்கள் தலைநகர் மணிமதீ ; இவர்கள் காலகேயர் என்னும் அசுரர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டனர்.

****

நர நாராயண

PICTURE OF NARA NARAYANA

நர நாராயணர்கள் என்போர் விஷ்ணுவின் இரட்டை அவதாரம் என்றும் இரட்டையர் ரிஷிகள் என்றும் புராணங்கள் செப்புகின்றன;

இதன் கருத்து என்னவென்றால் தர்மத்தை நிலைநாட்டுவதற்கு மனித முயற்சியும் தெய்வீக அருளும் தேவை என்பதாகும்.

தட்சனின் மகளான மூர்த்திக்கும் தர்மத்துக்கும் பிறந்தவர்கள் இவர்கள் ;பத்ரிநாத்தில் நீண்ட காலம் தவம் இயற்றினர்

மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் என்னும் நரன் ஆகவும் கிருஷ்ணன் என்னும் நாராயணன் ஆகவும் தோன்றினார்கள்

சிற்பங்களில் நரனை இரு கைகள் உடையவராகவும் நாராயணனை நான்கு கைகள் உடையவராகவும் காட்டியுள்ளனர்.

***

நரசிம்ம/  நரசிம்மவாதாரம்

நரசிம்மவாதாரம் விஷ்ணுவின் நாலாவது அவதாரம் ஆகும்; விஷ்ணு பக்தனான பிரஹலாதன் என்னும் சிறுவனைக் காப்பாற்றுவதற்காக சிங்க முகமும் மனித உடலும் எடுத்து அவதரித்தார் . ஹிரண்யகசிபுவை கடவுளாக வணங்க மறுத்த பிரஹலாதன் கடவுள் அணுவிலும் மேரு மலையிலும் தூணிலும் துரும்பிலும் இருப்பான் என்று சொன்னான் ; மன்னன் ஹிரண்யகசிபு அரண்மனைத் தூணை எட்டி உதைத்து  கடவுளைக் காட்டு என்றான் ; பிரஹலாதன் என்ற சிறுவன் பிரார்த்திக்கவே தூண் வெடித்துப் பிளந்து சிங்க முகப் பெருமாள் வெளியே வந்து, ஹிரண்ய காசிபுவின் உடலைக் கிழித்து எறிந்தார். இந்தச் சிற்பமும் ஓவியமும் நிறைய கோவில்களில் உள்ளன  ; பக்தர்கள் அதை வழிபட்டு வருகின்றனர் ; முதல் மூன்று அவதாரங்களுக்கு அத்தகைய சிறப்பு இல்லை .

***

நாளந்தா

தற்போதைய பீஹார் மாநிலம் முற்காலத்தில் பாரத்தின் வலிமை வாய்ந்த மகத சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது; அதிலிருந்த நாளந்தா  உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகமாகத் திகழ்ந்தது ; பாட்னா என்னும் பாடலிபுத்ரத்திலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த இடம் இப்போது யுனெஸ்கோ பாரம்பர்ய கேந்திரமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.

தட்சசீலம், விக்ரமசீலம் முதலிய பல்கலைக்கழகங்களின் மாதிரியில் அமைக்கப்பட்ட இது புத்த விஹாரமாகவும் இருந்தது; சீனா, ஜப்பான் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மாணவர்கள் பயின்றனர்; வேதம் முதல் பெளத்தம் வரையான நூல்கள் பல்லாயிரக்கணக்கில் சேகரித்து வைக்கப்பட்ட உலகின் பிரம்மாண்ட லைப்ரரியும் இருந்தது; விஷ்ணு பக்தர்களான குப்தர்கள் பேராதரவு நல்கினார்கள் ; ஐந்தாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டுவரை கொடிகட்டிப் பறந்தது .

துருக்கிய ஆப்கானிய தில்லி சுலதான் வம்ச மதவெறியன் பக்தியார் கில்ஜி (Bakhtiyar Khilji of the Delhi Sultanate  ) படையெடுத்து வந்து பல்கலைக்கழகத்தை இடித்து நூலகத்துக்கு தீ வைத்தான் ; அந்த நூலகம் மூன்று மாதங்களுக்கு எரிந்து கொண்டிருந்ததை வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்தனர் ; பல்லாயிரக்கணக்கான சம்ஸ்க்ருத நூல்களின் பெயர்களை இன்று உரைகளில் காண்கிறோம்; ஆனால் நூல்கள் கிடைக்கவில்லை ;எல்லாம் அங்கே சாம்பலாயின.

Eyewitness Accounts: Tibetan monk Dharmasvamin visited the site in 1234 CE, nearly 40 years after Khilji’s campaign. He found the institution heavily ruined but still functioning, with a small fraction of about 70 monks being taught by a 90-year-old abbot.

பக்தியார் கில்ஜி தீவைத்து அழித்த 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தர்ம சுவாமி என்னும் திபெத்திய புத்த பிட்சு அங்கே வந்து கண்ட காட்சியை நமக்கு எழுதிவைத்துள்ளார் . 90 வயத்துக்கிழவனார் ஒருவர் பாடம் கற்பிக்க 70 மாணவர்கள் இருந்தனர் என்றும் பலக்லைக்கழகம் பயங்கர சேதம் அடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்   அதற்குப்பின்னர் அதை புனருத்தாரணம் செய்யும் முயற்சிகள் பலிக்க வில்லை; காரணம் மேலும் மேலும் முஸ்லீம்கள் படையெடுத்து அங்கிருந்த செல்வங்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர்; இப்போது அதே பேரில் புதிய பல்கலைக்கழகம் தோன்றியுள்ளது.

Tags- நாளந்தா, நரசிம்ம, நிவாதக்கவச்ச, நரகாசுர, நீவாடகவச்ச, நாயன்மார் , நிகும்ப,  HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 73; இந்து மத கலைச்சொல் அகராதி- 75, நாரதர், நரகாசுரன்

To be continued……………………

சுழற்சி பற்றிய அபூர்வமான ஹிந்து தத்துவம்!Post No 2626

circarro

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 13 March 2016

 

 

Post No. 2626

 

Time uploaded in London :–  7-15 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஹிந்து தத்துவம்

 

சுழற்சி பற்றிய அபூர்வமான ஹிந்து தத்துவம்!

 

ச.நாகராஜன்

 

சுழற்சித் தத்துவம்!

 

ஒரு ஹிந்து,  வாழ்க்கையைப் பற்றிய சரியான கண்ணோட்டத்துடன் ஆனந்தமாக அலட்டிக் கொள்ளாமல் வாழ முடிவது எப்படி? அது கூறும் சுழற்சி தத்துவத்தினால் தான்!

கல்பம் என்ற நீண்ட நெடும் காலம் கூட சுழற்சிக்கு உட்பட்டதே!

நான்கு யுகங்கள் தோன்றும்; நடக்கும்; உரிய காலத்தில் உள் வாங்கி ஒடுங்கும். பின் மீண்டும் தோன்றும்; மலரும்!

ஜீவன்களும் அப்படித் தான்! சுழற்சிக்கு உட்பட்ட ஜீவன்கள் மீண்டும் அதே போல அதே செய்கையைச் செய்து வாழும்; மறையும் மீண்டும் தோன்றும்!

 

 

விவேகானந்தரின் விளக்கம்

 

ஒரு முறை ஸ்வாமி விவேகானந்தர் வட கலிபோர்னியாவில் சீடர்களுக்கு கீதையின் சுலோகம் ஒன்றுக்கு உரை சொல்லி அதை விளக்கிக் கொண்டிருந்தார்.

 

அது கீதையில் 18ஆம் அத்தியாயத்தில் வரும் 61ஆம் சுலோகம்!

ஈஸ்²வர: ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருத்³தே³ஸே²ऽர்ஜுந திஷ்ட²தி |
ப்⁴ராமயந்ஸர்வபூ⁴தாநி யந்த்ராரூடா⁴நி மாயயா || 18- 61||

அர்ஜுந = அர்ஜுனா
யந்த்ராரூடா⁴நி ஸர்வபூ⁴தாநி = உடல் என்கிற எந்திரத்தில் ஏற்றி அனைத்து உயிர்களையும்
ஈஸ்²வர: = ஈசுவரன்
மாயயா ப்⁴ராமயந் = மாயையினால் சுழற்றிக் கொண்டு
ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருத்³தே³ஸே² = எல்லா உயிர்களின் உள்ளத்தில்
திஷ்ட²தி = நிற்கிறான்

இதன் திரண்ட கருத்து இது: அர்ஜுனா, எல்லா உயிர்களிலும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.

potter figure

ஒரு குயவனின் சக்கரத்தில் வைத்துச் சுழற்றுவது போல தமது மாயா சக்தியால் உயிரினங்களை இறைவன் சுழலச் செய்கிறார் என்ற கருத்தை ஸ்வாமிஜி நன்கு விளக்கி விட்டு இப்படிக் கூறினார்:” இப்போது நாம் காண்கின்ற இந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே ஏற்கனவே நடைபெற்றவை தான்! விளையாடுபவன் தாயக்கட்டையைக் குலுக்கி இடுகிறான். எண்கள் வருகின்றன. ஒரே விதமான சேர்க்கை பல நேரங்களில் வரலாம். வாழ்க்கையும் அப்படித்தான். சக்கரம் சுழலுகிறது. ஒரு முறை நிகழ்ந்ததே மீண்டும் நிகழ்கிறது. அதோ அந்தப் பானை, அந்த டம்ளர், இந்த வெங்காயம், இந்த உருளைக் கிழங்கு எல்லாம் ஏற்கனவே ஒரு முறை இதே இடத்தில் இப்படியே இருந்தன. இப்போது அந்தச் சேர்க்கையில் மீண்டும் இங்கே இருக்கின்றன. நாம் என்ன செய்யலாம், அம்மா! வாழ்க்கையின் சக்கரத்தில் நம்மை வைத்துச் சுழற்றுவது அவர் அல்லவா!”

 

 

 

 

சீதை காடு செல்லக் கூறும் காரணம்!

 

ஆனந்த ராமாயணத்திலில் இந்தக் கருத்தை விளக்கும் ஒரு அற்புதமான சம்பவம் இது:

 

ராமன் சீதையைக் காட்டுக்கு வர வேண்டாம் என்று கூறும் போது அவள் காட்டிற்கு வருவேன் என்பதை வலியுறுத்திக் கூறும் பல காரணங்களுள் ஒரு காரணம் இது:

 

“ஓ! ராமா! இது வரை நடந்த எந்த ராமாயணத்திலாவது சீதை இல்லாமல் ராமர் காட்டுக்குப் போயிருக்கிறாரா?”

 

 

கவி சமத்காரமாக இதை எடுத்துக் கொண்டாலும் கூட இது ஒரு அற்புதமான சுழற்சித் தத்துவத்தை வலியுறுத்தவே செய்கிறது.

 

circular2

கர்ம யோகம்

 

எல்லாமே நடந்தது தான் என்றால் அல்லது நடப்பது நடந்தே தீரும் என்றால் நாம் எதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

இருக்கும் இடத்தில் தர்மத்திற்கேற்ப உன் வேலையைச் செய்! அதில் பலனை எதிர்பார்க்காமல் கடமையை கர்ம யோகமாகச் செய் என்பது கண்ணனின் அருளுரை!

 

கீதை வலியுறுத்தும் தத்துவத்தை விளக்கும் விதமாக மாயக் கண்ணன் ஒரு கணம் கூட ஓய்வின்றி கர்மம் புரிகிறான்; எடுத்துக் காட்டாக விளங்குகிறான்!

நத்திங் டைஸ்!

 

  1. DUNNE என்பவர் எழுதிய ‘NOTHING DIES’ என்ற நூல் எதுவும் இறப்பதில்லை; யாரும் இறப்பதில்லை என்ற கருத்தை அழகுற விளக்குகிறது!

இறப்பது போலத் தோன்றும் ஒரு உயிர் இன்னொரு இடத்தில் வாழ்கிறது; அது மீண்டும் பூவுலகில் வருகிறது.

 

‘இந்த ஜனன மரணச் சுழற்சியை நீக்க முக்தி அடைவதை குறிக்கோளாகக் கொள்! நீண்ட நெடும் பயணத்தில் அனைவரும் ஒரு நாள் இந்த லட்சியத்தை எய்துவோம்’ என்கிறது  ஹிந்து மதம்!

 

என்ன ஒரு ஆறுதலான செய்தி!

 

 

 

இறந்தவரை மீட்ட சம்பவங்கள்!

 

இன்னும் ஒரு கண்ணோட்டத்தில் வாழ்கின்ற அனைவரும் அவர்கள் ஆற்றிய அனைத்துச் செயல்களும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

 

வல்லவர்கள் அந்த பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் எந்தக் காலத்திற்கு வேண்டுமானாலும் பயணப்படலாம்.

 

அதனால் தான் ஞான சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பிக்க முடிந்தது.

கிருஷ்ணர் குரு தக்ஷிணையாக சாந்தீபனி முனிவருக்கு அவரது புதல்வரை காலம் சென்றாலும் வளர்ந்த நிலையில் மீட்டுத் தர முடிந்தது.

சுந்தரர் முதலை வாய்ப்பட்ட சிறுவனை இரு வருடங்கள் கழித்து மீட்டாலும் உரிய வளர்ச்சியுடன் பெற முடிந்தது.

 

அற்புதமான இந்த சுழற்சித் தத்துவம் ஹிந்து மதம் ஒன்றுக்கே உரியது என்பது எவ்வளவு அற்புதமான விஷயம்!

 

சிந்திப்போம்; உரிய வினையை ஆற்றி உயர்வோம்!!

*******