கம்பராமாயணத்தில் 260 கேள்விகள்; சாமுத்ரிகா லட்சணங்கள்! (Post.16,363)

Written by London Swaminathan

Post No. 16,363

Date uploaded in London – 1 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கம்ப ராமாயணத்தில் சுமார் 10,000 பாடல்கள் உள்ளன; அவ்வளவையும் படிப்பதற்கு எல்லோருக்கும் நேரம் கிடைக்காது; முழுக்க படிக்க வேண்டாம்; சுவையான பகுதிகளை மட்டும் தருகிறேன்; பால காண்டம், அயோத்தியா காண்டம்,  ஆரண்ய காண்டங்களை முடித்து இப்பொழுது கிஷ்கிந்தா காண்டத்தில் இருக்கிறோம் ; இதிலும் இதற்கடுத்த சுந்தர காண்டத்திலும் ஆஞ்சனேயரின் பெருமையைக் காண்கிறோம்; சுவையான பகுதிகள் என்பதைச் சொல்லத்தேவை இல்லை.

இதற்கு முன்னர் வெளியிட்ட 250 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும். கம்ப ராமாயணம் பற்றி நான் எழுதிய இரண்டு நூல்களையும் வாங்கிப் படிக்க முடிந்தால் படியுங்கள்.

251

“அடுத்தவன் பொண்டாட்டி மீது வாலி கை வச்சான்” என்று அனுமன் சொன்னதைக் கேட்ட மாத்திரத்தில் ராமன் எப்படிச் சீறினான் ?

252

ராமபிரான் விஷ்ணுவின் அவதாரம் என்று நிரூபிக்க அனுமன் காட்டிய சாமுத்ரிகா லட்சணங்கள் யாவை ?

253

அனுமனுக்கு அவனது தந்தை இட்ட கட்டடளை என்ன ? கம்பன் சொல்லும் புதிய செய்தி?!?!

254

“மை டியர் அனுமா! உன் ஐடியா என்னா ? “-என்று சுக்ரீவன் கேட்காமலேயே அனுமன் சொன்ன IDEA ஐடியா என்ன?

255

Good, Very Good! Give me a hug!

ஏழு மரங்களைத் துளைக்கும்படி ராமனை வேண்டுவோம் என்று அனுமன் யோசனை கூறியவுடன் நன்று நன்று ; குட் Good வெரி குட் Very Good என்று சொல்லி சுக்ரீவன், அனுமன் வெட்கப்படும் படி ஒரு Big Hug ஹக் கொடுத்தான் என்கிறான் கம்பன் ; பின்னர் நிறைய பாடல்களில் மராமரத்தை வருணிக்கிறான்; அதில் மரத்தை வேதத்துடன் ஒப்பிடுவது எப்படி?

256

All Number SEVENs got Scared!

ஏழு என்ற எண் உள்ள எல்லோரும் பயந்து நடுங்கியது ஏன் ?

257

ராமனின் வில்லாற்றலைக் கண்ட சுக்ரீவன் ராமபிரானை எப்படிப் புகழ்ந்து தள்ளினான் ?

258

துந்துபி என்ற பெரிய அரக்கனின் எலும்புக்கூட்டைக் கண்ட ராமன் என்ன சொல்லி ஆச்சரியப்பட்டான் ?

259

துந்துபியின் உடல் எவ்வளவு பெரியது என்று கம்பன் வருணனை செய்கிறான்?

260

Lakshman became Ronaldo playing Football!

கம்பன் வள வளவென்று பல பாடல்களில் வருணிக்கும் துந்துபியின் கதை என்ன ? இறுதியில் லெட்சுமணன் துந்துபி உடலை ரொனால்டோ புட் பாலை உதைப்பது போல, துந்துபியின் உடலை கால்பந்து விளையாடியது ஏன்?

***********

விடைகள்

251.இராமன் சினந்து, வாலியைக் கொல்வதாகச் சூளுரைத்தல்

பொய் இலாதவன் வரன்முறை

இம் மொழி புகல,

ஐயன், ஆயிரம் பெயருடை

அமரர்க்கும் அமரன்,

வையம் நுங்கிய வாய் இதழ்

துடித்தது; மலர்க் கண் –

செய்ய தாமரை, ஆம்பல் அம்

போது எனச் சிவந்த.

பொய் கூறுதலை அறியாத அனுமன் , சுக்கிரீவனைப் பற்றிய

செய்திகளைக் கூற, தலைவனும், ஆயிரம்  திருநாமங்களை உடைய தேவர்களுக்கு எல்லாம் மேம்பட்ட தேவனுமான இராமபிரானின்

உதடுகள் கோபத்தால் துடித்தன; அவனது கண்களாகிய

சிவந்த தாமரை மலர்கள்    செவ்வாம்பல் மலர் போலச் சிவந்தன.

வாலி சுக்கிரீவனின் மனைவியைக் கவர்ந்த செய்தியினையும் மறைக்காது உரைத்தமையால் ‘பொய் இலாதவன்’ என்றார்  கவிச் சக்ரவர்த்தி.

வையம் நுங்கிய – பிரளய காலத்தில் எல்லா உலகங்களுக்கும்

அழிவில்லாதவாறு திருமால் தன் வயிற்றில் உலகங்களை வைத்துக் காத்தார் என்பது புராணக்கதை.  இராமபிரான் வடிவு கொண்ட திருமால் ஆயிரம் பெயருடையவன் (விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஆயிரம் பெயர்கள் உள்ளன).

‘உலகம் ஏழினோடு ஏழும் வந்து

அவன் உயிர்க்கு உதவி

‘விலகும் என்னினும், வில்லிடை

வாளியின் வீட்டி,

தலைமையோடு, நின் தாரமும்,

உனக்கு இன்று தருவென்;

புலமையோய்! அவன் உறைவிடம்

காட்டு’ என்று புகன்றான்.

பதினான்கு உலகில் உள்ளோர் யாவரும் திரண்டு வந்து, வாலியின் உயிரைக் காப்பதற்கு உதவி புரிந்து என்னைத் தடுக்குமாயினும் என் வில்லில் பூட்டிய அம்பினால் அவனை அழித்து வானரங்களுக்குத் தலைவனாகும்  அரசாட்சியோடு- உனது மனைவியையும் உனக்கு இப்பொழுதே மீட்டுத் தருவேன்; அறிவில் சிறந்தவனே! அவன் வசிக்கும் இடத்தைக் காண்பிப்பாய்! என்று (சுக்கிரீவனிடம் இராமன்) கூறினான்.

முன் தண்டக வனத்து முனிவர்களிடத்தும் ‘சூர் அறுத்தவனும், சுடர்நேமியும், ஊர் அறுத்த ஒருவனும் வந்தாலும் , ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர், வேர் அறுப்பென், வெருவன்மின் நீர்’ (2652) என இராமன் கூறியுள்ளதை இங்கே நினைவு கூறுவது பொருத்தமாகும்.

************

252.சாமுத்ரிகா லட்சணம்

‘சங்கு சக்கரக் குறி உள,

தடக் கையில், தாளில்;

எங்கும் இத்தனை இலக்கணம்

யாவர்க்கும் இல்லை;

செங் கண் விற் கரத்து

இராமன், அத் திரு நெடு மாலே;

இங்கு உதித்தனன், ஈண்டு அறம்

நிறுத்துதற்கு; இன்னும்,

செறுக்கும்  வன்திறல் திரிபுரம்

தீ எழச் சினவிக்

கறுக்கும், வெஞ் சினக் காலன்தன்

காலமும் காலால்

அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர்

ஆடகத் தனி வில்

இறுக்கும் தன்மை, அம்

மாயவற்கு அன்றியும் எளிதோ?

(இராமனது) பெரிய கைகளிலும், பாதங்களிலும், சங்கு சக்கரங்களின் ரேகைகள் உள்ளன;  இத்தனைச் சிறந்த இலக்கணம் எவ்வுலகத்திலும் யார்க்கும் இருந்த தில்லை; சிவந்த கண்களையும், வில்லேந்திய கரத்தையும் உடைய இராமன் அப்பரம் பொருளாகிய திருமாலே ஆவன். இப்பொழுது அறத்தை நிலைநிறுத்துவதற்கு இவ்வுலகத்தில் அவதரித்துள்ளான்;

மேலும் . . . . யாவரையும் வருத்துகின்ற மிக்க வலிமை

உடைய முப்புரங்களும் நெருப்புப் பற்றி எரியும்படி சினங்கொண்டு, (மார்க்கண்டேயன் மீது) கொடிய யமனுடைய ஆயுள் காலத்தையும் காலினால் உதைத்து அழித்துவிட்ட மேலோனான சிவபிரான் கையாண்ட  பெரிய பொன்மயமான ஒப்பற்ற வில்லை முறிக்கின்ற செயல் அத்திருமாலுக்கு அல்லாது பிறர்க்கு எளிதாமோ? (ஆகாது).

கம்பன் அடிக்கடி சிவபெருமானையும் குறிப்பிட்டுப் புகழ்வது குறிப்பிட்டது தக்கது . இது அவனது சைவ- வைணவப் பொது நோக்கினைக் காட்டுகிறது

****

253.கம்பன் சொல்லும் புதிய செய்தி?! ?!

‘என்னை ஈன்றவன், ”இவ்

உலகு யாவையும் ஈன்றான் –

தன்னை ஈன்றவற்கு அடிமை செய்;

தவம் உனக்கு அஃதே;

உன்னை ஈன்ற எற்கு உறு

பதம் உளது” என உரைத்தான்;

இன்ன தோன்றலே அவன்;

இதற்கு ஏது உண்டு; – இறையோய்!

தலைவனே! என்னைப் பெற்ற தந்தையாகிய வாயுதேவன் (என்னை நோக்கி) ”இவ்வுலகங்களையெல்லாம் படைத்த பிரமனை

(தன் உந்திக்கமலத்தில்) ஈன்றவனாகிய திருமாலுக்கு  தொண்டு செய்வாயாக; அதுவே உனக்குத் தவமாகும்;  உன்னைப் பெற்ற எனக்கும் சிறந்த பதவி கிடைப்பதாகும்”; என உரைத்தான்  என்று

சொன்னான்;  இந்த இராமனே; அவன் – அந்தத் திருமாலாகும்.   இவ்வாறு யான் கூறுவதற்கு வேறொரு காரணமும் உண்டு. உடனே அந்த விஷ்ணுவை நான் எப்படி அறிவது , என்ன அடையாளம்?    என்று கேட்டேன் :

3862.  ‘துன்பு தோன்றிய பொழுது,

உடன் தோன்றுவன்; ”எவர்க்கும்

முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு

என்?” என்று இயம்ப,

”அன்பு சான்று” என உரைத்தனன்;

ஐய! என் ஆக்கை,

என்பு தோன்றல உருகின

எனின், பிறிது எவனோ?

அப்பெருமானை நான் அறிந்து கொள்வதற்கு உறுதியான வழி யாது?

என்று கேட்க ”யாவர்க்கும் துன்பம் ஏற்படும் காலத்தில்;  உடனே அத்துன்பம் தீர்க்க எதிரில் வந்து தோன்றுவான்;  அப்பரமனைக் கண்டதும் உனக்கு அவன்மாட்டு அன்பு உண்டாவதே தக்க சான்றாகும்” என உரைத்தனன் என்று சொன்னான்; (அதற்கேற்ப இப்பெருமானைக் கண்ட மாத்திரத்தில்) என் உடல் எலும்புகள் உருகின என்றால் இதற்கு மேல் வேறு சான்று எதற்கு?

*****

254.இராமனின் ஆற்றலைக் கண்டறிய அனுமன் சொன்ன ஐடியா / யோசனை

3863.  ‘பிறிதும், அன்னவன் பெரு

வலி ஆற்றலை, பெரியோய்!

அறிதி என்னின், உண்டு உபாயமும்;

அஃது அரு மரங்கள்

நெறியில் நின்றன ஏழில், ஒன்று

உருவ, இந் நெடியோன்

பொறி கொள் வெஞ் சரம் போவது

காண்!’ எனப் புகன்றான்.

ராமனின் ஆற்றலைக் கண்டுபிடிக்க நான் ஒரு யோசனை சொல்கிறேன் ; இடைவெளி விட்டு ,ஒரே வரிசையில் நிற்கும் ஏழு மராமரங்களை ஒரே அம்பினால் துளைத்துக்காட்டு என்று சொல்லுவோம் என்று அனுமன் சொன்னான் .

****

255.சாகை என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு; ஒன்று மரத்தின் கிளை ; இரண்டாவது வேதத்தின் கிளை/ பிரிவு; இதைக் கம்பன், சிலேடைப் பொருளில் அழகாகப் பயன்படுத்துகிறான்:

3871.  தீது அறும் பெருஞ்

சாகைகள் தழைக்கின்ற செயலால்

வேதம் என்னவும் தகுவன;

விசும்பினும் உயர்ந்த

ஆதி அண்டம் முன்பு அளித்தவன்

உலகின், அங்கு அவன் ஊர்

ஓதிமம், தனி பெடையொடும்

புடை இருந்து உறைவ.

(அம்மரங்கள்) அழிதல் இல்லாத

பெரிய கிளைகள்செழித்து வளர்கின்ற செயலால் வேதங்கள் என்று சொல்லவும் தகுதியுடையன;  வான மண்டலத்தினும் உயர்ந்து விளங்குவன; பழமையான அண்டங்களை முன்னே படைத்தளித்த பிரமனுடைய சத்தியலோகத்தில் அவன் ஏறிச் செல்கின்ற அன்னப்பறவை தனது ஒப்பற்ற பெடை அன்னத்தோடு அம்மரங் களில் வாழ்கின்றன!

வேதங்களின் சாகைகள் அழிவற்றனவாயும், அளவற்றனவாயும் இருத்தல் போல மரங்களின் கிளைகளும் அழிவற்றும், அளவற்றும் விளங்குகின்றன என்றார். செம்மொழிச் சிலேடை அணி பொருந்தியது.

****

256.ஏழு மராமரங்களை ராமன் அம்பு துளைத்தவுடன் ஏழாம் நம்பர் அணியிலிலுள்ள எல்லோரும் பயந்து நடுங்கினர் என்று அழகுபட வருணிக்கிறான் கம்பன் !

ஏழு வேலையும், உலகம்

மேல் உயர்ந்தன ஏழும்,

ஏழு குன்றமும், இருடிகள்

எழுவரும், புரவி

ஏழும், மங்கையர் எழுவரும்,

நடுங்கினர் என்ப –

‘ஏழு பெற்றதோ இக் கணைக்கு

இலக்கம்?’ என்று எண்ணி,

இப்பாடலில் ஏழு என்னும் எண்ணால் தொகுதியாய் உள்ள

பொருள்களை ஒன்று கூட்டிக் கூறியது ஒப்புமைக் கூட்ட அணி.  ‘ஏழு’ என்ற ஒரே பொருளை உடைய சொல் மீண்டும் மீண்டும் வருவதால் சொற்பொருள் பின் வருநிலை அணியும் பொருந்தியது.

ஏழு கடல்களும் மேலே இருக்கும்  உலகங்கள் ஏழும்ஏழு குல மலைகளும், ஏழு முனிவர்களும்,சூரியன் தேரை இழுத்துச் செல்லும் ஏழு குதிரைகளும், ஏழு கன்னியர்களும் இந்த அம்பிற்குக் குறி ஏழு என்னும் தொகைப் பொருள் அனைத்தையும் அழிக்குமோ  என்று நினைத்து அஞ்சி நடுங்கினர்.

ஏழு கடல்: உவர்நீர், கருப்பஞ்சாறு, மது, நெய், தயிர், பால், நன்னீர் இவற்றை உடைய கடல்கள்; மேல் ஏழு உலகம் : பூலோகம், புவர்லோகம்,சுவர்லோகம் ஐநலோகம், மஹாலோகம், தபோலோகம், ச த்தியலோகம் என்பன; ஏழு குன்றம் : கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஹேமகூடம்,கந்தமாதனம் என்பன.  இருடிகள் எழுவர் – அத்திரி, பிருகு, குத்ஸவர்,வசிட்டர், கௌதமர், காசியபர், ஆங்கிரஸர் எனப்படுவோர்; புரவி ஏழு -காயத்ரீ, உஷ்ணிக், அநுஷ்டுப், ப்ருஹதீ, பங்க்தி, த்ரிஷ்டுப், ஜகதி என்னும் சந்தசுகள். ஏழு மங்கையர் – பிராஹ்மி, மாகேச்வரி, கௌமாரி,நாராயணி, வாராகி, இந்திராணி, சாமுண்டி எனப்படுபவர்.

****

257.சுக்கிரீவன் இராமனைப் புகழ்ந்துரைத்தல்

I AM A DOG; YOU ARE THE GOD!

3883.  ‘வையம் நீ! வானும் நீ!

மற்றும் நீ! மலரின்மேல்

ஐயன் நீ! ஆழிமேல் ஆழி

வாழ் கையன் நீ!

செய்ய தீ அனைய அத்

தேவும் நீ! நாயினேன்,

உய்ய வந்து உதவினாய்,

உலகம் முந்து உதவினாய்!

நிலமும் நீயே! ஆகாயமும் நீயே! மற்றும் நீ பூதங்களாகிய நீர், காற்று, தீ என்பனவும் நீயே!  தாமரை மலரின் மேல் விளங்கும் பிரமதேவனும் நீயே!   பாற்கடல் மேல் பள்ளி கொண்ட சக்கரப்படை

தாங்கிய கையுடைய திருமாலும் நீயே!  சிவந்த நெருப்பினை ஒத்த  அந்த சிவபிரானும் நீயே!  உலகங்களை எல்லாம் முற்காலத்தில் படைத்தருளினாய்; நாய் போன்றவனாகிய நான் நற்கதி அடையும்

பொருட்டு என்னை நாடி வந்து அருள் புரிந்தாய்.

இராமனின் வில்லாற்றலை நேரில் கண்ட சுக்கிரீவன் ‘இவன் அனுமன் கூறியாங்கு முழுமுதற் கடவுளாகிய திருமாலின் அவதாரமே’ எனத் தெளிந்து இராமனைப் பலவாறு போற்றலாயினன்.  இராமன் மும்மூர்த்தியாய் விளங்கும் பரம்பொருளே என்பதைத் தண்டகாரணியத்து முனிவர்கள், விராதன், இந்திரன், கவந்தன், சவரி, வாலி ஆகியோர் இராமனைப் போற்றும் பாடல்களில் காணலாம்.

***

258 .துந்துபி என்ற பெரிய அரக்கனின் எலும்புக்கூட்டைக் கண்ட ராமன் ஆச்சரியப்பட்டான்

3887.  ‘தென் புலக் கிழவன் ஊர்

மயிடமோ? திசையின் வாழ்

வன்பு உலக் கரி

மடிந்தது கொலோ? மகரமீன்

என்பு உலப்புற உலர்ந்தது

கொலோ? இது எனா,

அன்பு உலப்பு அரிய நீ,

உரை செய்வாய்’ என, அவன்,

இந்த வறண்ட உடல் தெற்குத் திசைக்குத் தலைவனான யமன் வாகனமான எருமைக் கடாவோ? அஷ்ட திக் கஜங்களில் ஒன்றான யானை மடிந்து கிடக்கிறதோ?   கரை ஒதுங்கிய திமிங்கிலத்தின் எலும்பு உலர்ந்து கிடக்கின்றதோ? என்று வியந்து நீ  சொல்வாய் என்று இராமன் கேட்டவுடன், சுக்கிரீவன் (நிறைய பாடல்களில்) துந்துபி என்ற அரக்கனை வாலி கொன்று வீழ்த்திய கதையைச் சொல்கிறான்

*******

259 துந்துபியின் உடல் – கம்பன் வருணனை:

3886.  அண்டமும், அகிலமும் அடைய,

அன்று அனலிடைப்

பண்டு வெந்தன நெடும்

பசை வறந்திடினும், வான்

மண்டலம் தொடுவது, அம்

மலையின்மேல் மலை எனக்

கண்டனன், துந்துபி, கடல்

அனான், உடல்அரோ!

ஊழிக்கால இறுதியில் அண்டங்களும் உலகங்களும் வெந்ததை ஒத்தும்,மலையின் மேல் மற்றொரு மலை இருப்பது போன்றும், வான மண்டலத்தைத் தொட்டும் கடல்போல் பரந்தும் துந்துபியின் உடலின் எலும்புக்கூடு கிடந்தது.

****

260.Lakshman became Ronaldo playing Football!

260. துந்துபி என்ற அரக்கன் விஷ்ணுவைப் போருக்கு அழைத்தான் ; அவர் சிவனுடன் போர் செய் என்று அனுப்பினார்; அவன் சிவ பெருமானைச் சந்தித்தபோது இந்திரனுடன் போர் புரிவாயாகுக என்று அனுப்பினார்; குரங்கு இனத்தலைவனான வாலியுடன் சண்டை போடு என்று இந்திரன் அனுப்பினான்;  இறுதியில் வாலிக்கும் துந்துபிக்கும் இடையே நடந்த போரில் வாலி வெற்றிவாகை சூடி துந்துபியின் அசுர உடலைத் தூக்கி எறிந்தான் பிறகு என்ன நடந்தது ?

3899.  ‘முட்டி, வான் முகடு சென்று

அளவி, இம் முடை உடற்

கட்டி, மால் வரையை

வந்து உறுதலும், கருணையான்

இட்ட சாபமும், எனக்கு

உதவும்’ என்று இயல்பினின்,

பட்டவா முழுவதும்,

பரிவினால் உரைசெய்தான்.

முடை நாற்றமுடைய இவ்வுடற் பிண்டம் ஆகாயத்தின் உச்சியைத் தாக்கிச் சென்று  பெரிய இந்த மலையைவந்து அடைந்ததால்,  கருணை மிக்கவரான மதங்க முனிவர் (வெகுண்டு வாலிக்குக்) கொடுத்த சாபமும் எனக்கு இப்பொழுது உதவியாக இருக்கின்றது’ என்று நடந்த வரலாறு முழுவதையும் சொன்னான் சுக்கிரீவன்.

வாலி எறிந்த துந்துபி உடல் ருசியமுகமலையில் மதங்க முனிவர் தவஞ்செய்து கொண்டிருந்த ஆசிரமத்தில் விழுந்து அதன் தூய்மையைக் கெடச் செய்ததால் முனிவர் வாலிமேல் சாபமிட்டார்.  வாலி இம்மலைப்பகுதிக்கு வரின் தலை வெடித்து இறக்கக்கடவன் என்பதும், அவனைச் சேர்ந்த நண்பர்கள் வரின் கல்வடிவமாகக் கடவர் என்பதும் அவரிட்ட சாபமாகும். தான் இம்மலையில் பயமில்லாமல் வாழும் காரணம் இதுதான் என்றும் சுக்கிரீவன் இராமனுக்கு உரைத்தான்.

இலக்குவன் தந்துபின் உடலை உந்துதல்

ராமன் ஒரு தந்திரம் செய்தான் ; லெட்சுமணன் எவ்வளவு பலசாலி என்று காட்ட ஒரு ஐடியா செய்தான் ; சுக்ரீவன் போன்றோர் கடல்  போலப் பெரிது, மலை போலப் பெரிது என்று சொன்னதெல்லாம் என் தம்பிக்குக்கூட வெறும் கொசு தான் என்று காட்டுவதற்காக, “தம்பி இந்த எலும்புக்கூட்டினை ஒரு உதை கொடுத்து தூக்கி எறிந்து” கால் பந்து விளையாடு என்றான் ; லெட்சுமணும் ரொனால்டோ  புட் பாலை உதைப்பது போல ஒரு அடி அடித்தான் ; எலும்புக்கூடு பறந்தது !

3900.  கேட்டனன், அமலனும்,

கிளந்தவாறு எலாம்,

வாள் தொழில் இளவலை,

‘இதனை, மைந்த! நீ

ஓட்டு’ என, அவன்

கழல் விரலின் உந்தினான்;

மீட்டு, அது விரிஞ்சன்

நாடு உற்று மீண்டதே!

இராமனும் (சுக்கிரீவன்) சொன்ன வரலாறு முழுமையும் கேட்டு

வாளேந்திப் போர் செய்யும் தம்பி! ‘வீரனே! இந்த உடலை நீ அப்பால் தள்ளு’ என்று கூற, அந்த இலக்குவன் தன் கால் விரல்களால் தள்ளி எறிந்தான்;  அவ்வெலும்புக்கூடு மறுபடியும் பிரமலோகத்தை அடைந்து திரும்பி வந்து வீழ்ந்தது!

மராமரத்தை எய்து தன் வலிமையைக் காட்டிய இராமன், தன் இளவலின் ஆற்றலைச் சுக்கிரீவனுக்குக் காட்டத் துந்துபியின் உடலைத் தூக்கி எறியுமாறு கூறினன்.  முன்பு வாலி தூக்கி எறிந்த போது ஒரு முறை, பிரமலோகம் வரை சென்று வந்ததால் இங்கு ‘மீட்டு’ என்றார். வாலி கையால் சுழற்றி எறிந்த உடல்எச்சத்தை இலக்குவன் கால் விரலால் எற்றி வலிமைப் பெருமிதத்தைப்

புலப்படுத்தினான் என்பதை உணர்க. இச்செய்கையால், இலக்குவனும் இராமன் போலவே வலியவன் என்பதை உணர்த்தியவாறு.

–சுபம்—

Tags- கம்பராமாயணம்,  260 கேள்விகள்,சாமுத்ரிகா லட்சணங்கள், வாலி கதை, துந்துபி கதை , ஏழு மராமரம் , அனுமன் ஐடியா

S Nagarajan Article Index for October 2026 (Post No.16,362)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,362

Date uploaded in London – 1 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

S Nagarajan Article Index October 2026

1-10-26 16257 ராமாயணத்தில் வரங்கள் 77 –பிரஜைகளுக்கு ராமர் வரம்

அளித்தது!

2-10-26 16260 நவ திருப்பதிகள்! (25-9-26 மாலைமலர் கட்டுரை)         3-10-26 16264 சந்தோஷம் அடைவது எப்படி? 66 நாடுகளில் ஆராய்ச்சி!

மகிழ்ச்சிகரமான முடிவு! (27-9-26 தினமணி கட்டுரை)     4-10-26 16267 S Nagarajan Article Index September 2026                      5-10-26 16271 க்ரியாடின் (Creatine)  மனச்சோர்வை நீக்குமா (செப்டம்பர்

26 ஹெல்த்கேர் இதழில் வெளியான கட்டுரை)                       6-10-26 16274 புத்தரின் பிரம்மாண்டமான சிலைகள் உணர்த்தும்

தத்துவம்! (தினமணி கதிர் 27-9-26 கட்டுரை)                            7-10-26 16278 பெண்ணுரிமைக்காகக் கோடி கோடியாகப் பணத்தை

நன்கொடையாக அளிக்கும் அதிசயப் பெண்மணி!

(4–10-26 தினமணி கொண்டாட்டம் பகுதி கட்டுரை) 8-10-26 16282  எழுபது வயது (Septolescent) கோடீஸ்வரர்கள்!

9-10-26 16285 ஊதியம் முதல் சுகாதாரம் வரை: இன்னும் தீராத பெண்களின் 20 பிரச்சினைகள்! (5-10-26 மங்கையர் மலர் கட்டுரை) 10-10-26 16290 முஸ்லீம்கள் பற்றி அம்பேத்கர்! 11-10-26 16293 திருக்கோவலூர் உலகளந்த பெருமாள்! (5-10-26) மாலைமலர் கட்டுரை)                                                                                                           12-10-26 16297 மனிதன் இறைவனை அடைவதற்கான வழி – ஶ்ரீ சத்ய

சாயிபாபா அருளுரை (கல்கி 8-10-26 இதழ் கட்டுரை)           13-10-26 16300 லலிதா சஹஸ்ரநாமம்!                                                                    14-10-26 16304 ஆயுதம் வெட்டாது; தீ எரிக்காது; நீர் நனைக்காது; காற்று

அசைக்காது! அது என்ன? (சுபாஷிதம்)

15-10-26 16307 எல் நினோ தரும் எச்சரிக்கை! (14-10-26 மாலைமலர்

கட்டுரை)                                          16-10-26 16310 உங்கள் உடலில் எத்தனை பிரபஞ்சத் துகள்கள்

உள்ளன? (22-9-26 கல்க் –ஆன்லைன் கட்டுரை)

17-10-26 16314 டாக்ஸி டிரைவர்களும் ஆம்புலன்ஸ் டிரைவர்களும்       ஆல்ஜமைர் வியாதியால் அதிகம் பாதிக்கப் படுவதில்லை! ஏன்?   கல்கிஆன்லைன் 18-9-26 கட்டுரை)                                  18-10-26 16317 80 வயதில் இமயத்தை நான்காவது முறையாக வெற்றி     கொண்ட வீரர் (14-9-26 கல்கி இதழில் வெளியான கட்டுரை)         19-10-26 16321 சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுள்      முடிவடைகிறது (கல்கி 16-10-26 கட்டுரை)                           20-10-26 16324 பதினான்கு லோகங்களில் பாவம் செய்தாலும் அனைத்து பாவங்களையும் போக்கும் ஒரே ஒரு அபூர்வ நாமம்!    21-10-26 16327 ராகு கேது தோஷம் போக்கும் தலம் திருப்பாம்புரம்           (மாலைமலர் 17-10-26 கட்டுரை)                                    22-10-26 16330 லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 1                                              23-10-26 16333 லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 2                                                 24-10-26 16337 லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 3                                                25-10-26 16340 லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 4                                                 26-10-26 16343 லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 5                                               27-10-26 16346 ஒரு பிஸ்கட்டின் கதை! (22-10-26 கல்கி ஆன் லைன் இதழில் வெளியான கட்டுரை)                                      28-10-26 16349 விண்வெளியில் நடக்கும் எலி-பூனைச் சண்டை!              (24-10-26 கல்கி ஆன் லைன் இதழில் வெளியான கட்டுரை)         29-10-26 16352 ஆயிரம் பொன்மொழிகள் 221- 230                      30-10-26 16356 மூளைத் திறனைக் குறைக்கும் குப்பை! பிரின்ஸ்டன் ஆய்வு சொல்வது என்ன? (24-10-26 கல்கிஆன்லைன் கட்டுரை)       31-10-26 16359 லலிதா சஹஸ்ர நாமத்தில் பக்தி சம்பந்தமான நாமாக்கள் – 1***