ஆக்சிஜன் Oxygen என்னும் உயிர்வளி- 1 (Post No.11761)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,761

Date uploaded in London – –  9 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இதுவரை பிரியாடிக் டேபிள் (Periodic Table) எனப்படும் மூலக அட்டவணையிலுள்ள 118 தனிமங்களில் 46 மூலகங்களின் (elements) சுவையான கதைகளைக் கண்டோம். இன்று 47ஆவது தனிமத்தைக் காண்போம்.

கோவிட் என்னும் சீன வைரஸ் பல லட்சம் உயிர்களைக் காவு கொள்ளும் முன்பு, ஆக்சிஜன் என்றால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே தெரியும். பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டவுடன் பட்டி தொட்டிகளிலும் கூட ஆக்சிஜன் பெயர் அடிபட ஆரம்பித்துவிட்டது. முன்னர் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர்களில் மட்டும் இருந்த ஆக்சிஜன்  சிலிண்டர் இப்போது பல வீடுகளிலும் இடத்தைப் பிடித்துவிட்டது. ஏன் ?

ஆக்சிஜன்

நாம் உயிர்வாழ ஒவ்வொரு வினாடியும் ஆக்சிஜனை சுவாசித்துக் கொன்டு இருக்கிறோம். பொதுவாக சித்தர் பாடல்களிலும் பக்திப்  பாடல்களிலும்  காற்று என்று குறிப்பிட்டாலும் காற்றில் பல வாயுக்கள் உண்டு. அதிலுள்ள ஆக்சிஜனைப் பிரித்து எடுத்து, ரத்தத்தை சுத்திகரிக்க நுரையீரலும்  இருதயமும் நமக்கு உ தவுகிறது . இந்த விதியைத் தலை கீழாகச் செய்கின்றன தாவரங்கள். நாம்  வெளியிடும் அசுத்தக் காற்றான  கார்பன் டை ஆக்ஸைடை Carbon Dioxide அவைகள் சுவாசித்து நமக்கு சுத்தமான ஆக்சிஜனைத் தருகிறது. கடவுளோ, இயற்கையோ செய்த அற்புதமான ஏற்பாடு இது.

ஆக்சிஜன் என்ற சொல்லுக்கு, கிரேக்க மொழியில் அமிலத்தை உண்டாக்கும் என்று பொருள். இந்த பிரபஞ்சத்தில் ஹீலியம், ஹைட்ரஜன் என்ற இரண்டு மூலகங்களுக்கு அடுத்தபடியாக காணப்படுவது ஆக்சிஜன் .

ஒவ்வொரு நட்சத்திரமும் ஹைட்ரஜனை எரித்து ஹீலியம் வாயுவை உண்டாக்கும். பின்னர் ஹீலியம் எரிந்து கருகி கார்பன் உண்டாகும் . பின்னர் அந்த கார்பன் எரிந்து ஆக்சிஜன் வாயுவை உண்டாக்கும். ஒரு நட்சத்திரம் எவ்வளவு பெரிதாக இருக்கிறது, அதன் உள்ளே எவ்வளவு வெப்பமுள்ளது என்பதைப் பொறுத்து ஆக்சிஜன் உற்பத்தியாகும் ; அதிக வெப்பம், அதிக ஆக்சிஜன் தரும் .

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் பூமியிதான் அதிகம் ஆக்சிஜன் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக செவ்வாய், சுக்கிரன் கிரகங்களில் மிகச் சிறிதளவு காணப்படுகிறது

நீரின்றி அமையாது உலகு; நீரின்றி அமையாது நமது உடலும் ; அந்தத் தண்ணீர் என்பது ஆக்சிஜன்—ஹைட்ரஜன் கூட்டுப்பொருள் . நமது ரத்தம், எலும்பு, திசு எல்லாவற்றிலும் ஆக்சிஜன் இருக்கிறது.

ஆக்சிஜன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியாது. ஏனெனில் இது DNA டிஎன்ஏ முதலிய பொருள்களிலும் உளது. காற்று மண்டலத்தில் 17 சதவீதத்துக்குக் குறைந்தால் நம்மால் சுவாசிக்க முடியாது. 25 சதவீதத்துக்கு மேல் போனால் அருகிலுள்ள, எரியக்கூடிய பொருட்களை, எரித்துவிடும். முதல் முதலில் 1967 ஜனவரி 27ல் அமெரிக்கா மூன்று மனிதர்களை அப்பலோ விண் கலத்தில்  ஏற்றி  பூமிக்கு மேலே அனுப்பியது. அவர்கள் இருந்த கூட்டில் ஆக்சிஜன் .எரிந்து மூவரும் கருகி இறந்தார்கள்

அமெரிக்கா ஒரு ஆராய்ச்சி செய்தது. மனிதர்கள் நிலவு அல்லது செவ்வாய்க் கிரகத்தில் ஒரு BIO SPHERE பயோ   ஸ் பியர் கூண்டுக்குள் வசிக்க முடியுமா என்பது அந்த ஆய்வு. எட்டுப் பேர் அந்த கண்ணாடிக் கூண்டில் வசித்தனர். 30 டன் ஆக்சிஜன் .அதற்குள் செலுத்தப்பட்டது ; ஒரே மாதத்தில் அவர்களுக்கு மூச்சுத் திணறல் வந்தவுடன் வெளியே வந்தனர். விஞ்ஞானிகள் போட்ட கணக்கு தப்புக்கு கணக்கு. எப்படி ஆக்சிஜன் .மாயமாய் மறைந்தது என்பதை ஆராய்ந்தபோது அங்கே மண்ணிலுள்ள இரும்புச் சத்து ஆக்சிஜன் .வாயுவுடன் கூடி அதைக் கபளீகரம் செய்துவிட்டது!!

ஆக்சிஜன் வாயு நமது காற்று மண்டலத்தில் ஐந்தில் ஒரு பகுதிதான். இது தண்ணீரில் எளிதில் கரையக்கூடியதால் ஆறு, குளம், ஏரி , கடல் ஆகியவற்றிலும், நாம் உயிரினங்களைக் காண முடிகிறது .

xxxx

மருத்துவத்தில் ஆக்சிஜன்

மூளை செயல்பட ஆக்சிஜன் தேவை. ஆனால் துவக்க காலத்தில் எவ்வளவு ஆக்சிஜன் தேவை என்பது தெரியாததால் பலர் உயிரிழந்தனர். இப்போதெல்லாம்  நீருக்கு அடியில் செல்வோர் அணியும் முகமூடி, ஆஸ்பத்தியில் நோயாளிகள் அணியும் முகமூடி, குழந்தைகள் சிகிச்சைக்கான இன்குபேட்டர்கள் INCUBATORS  எல்லாவற்றிலும் சுமார் 30 சதவிகிதம் ஆக்சிஜன் கலந்த வாயு பயன்படுத்தப்படுகிறது.

xxxx

கண்டுபிடித்தது யார் ?

பலரும் இந்த வாயு குறித்து ஆராய்ச்சி செய்தனர். இப்ப்போது ஜோசப் ப்ரீஸ்ட்லி , கார்ல் வில்லியம் ஷீல், அந்தோணி லவாய்ச்சியர் ஆகிய மூவரும் இதைக் கண்டுபிடித்ததாக உலகம் ஒப்புக்கொள்கிறது . இவர்களுக்கு இடையே தொழில் முறை போட்டாபோட்டி, பொறாமை உண்டு. ஆகையால் ஒருவர் எழுதிய கடிதத்தை மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை. பதில் போட்டால் யார் முதலில் சரியான விடை சொன்னார்கள் என்று தெரிந்துவிடுமே!!

லண்டனில் 2000 ஆவது ஆண்டில் ஒரு சுவையான நாடகம் மேடை ஏறியது. இம்மூவரில்  யார் உண்மையான கண்டுபிடிப்பாளர், அவர்க்கு நோபல் பரிசு கொடுப்போம் என்று அறிஞர் குழு விவாதிக்கும் நாடகம் அது

இதற்கு முன்னர் ஆக்சிஜன் பற்றி 1791-ல் ஒரு கவிதை வெளியானது . அது மற்றொரு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது . பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  லவாய்ஸியர் ஆக்சிஜன் என்று பெயர் சூட்டியது ஆங்கிலேயர்கள் விரும்பவில்லை அதற்கு அமிலம் உண்டாக்கும் பொருள் என்று அர்த்தம். ஆனால் எதிரும் புதிருமாக எல்லோரும் சூடாக விவாதித்த நேரத்தில் சார்ல்ஸ் டார்விவினின் தாத்தா எராஸ்மஸ் டார்வின் ஆக்சிஜன் கவிதையை பொடானிக் கார்ட்டன் BOTANIC GARDEN என்ற புஸ்தகத்தில் வெயிட்டவுடன் எல்லா விவாதங்களும் அடங்கின.

To be continued………………………………..

 tags- ஆக்சிஜன் , உயிர்வளி, 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: