Written by London Swaminathan
Post No. 15,995
Date uploaded in London – 19 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Ra என்று துவங்கும் சொற்கள்
ராகம் – சாயம் அல்லது வண்ணம் ஏற்றுதல் என்பது பொதுப்பொருள்; உணர்ச்சி, ஆசை, அன்பு , மகிழ்ச்சி, ஆர்வம் என்ற பொருள்களும் உண்டு. சங்கீதத்தில் பல வகையான மெட்டுகளில் பாடுதல். எடுத்துக் காட்டு- மோகன ராகம், தோடி ராகம்; தமிழில் பண் என்பார்கள் .
***
ராஜ – வேந்தன்; தமிழில் உள்ள அரசன் ஆங்கிலத்தில் உள்ள ரீகல், ராயல் என்பன சம்ஸ்க்ருத மொழியிலிருந்து பிறந்தவை.
***
ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன்
ராஜராஜ சோழன் மற்றும் அவருடைய மகன் ராஜேந்திர சோழன் ஆகிய இருவரும் பிற்காலச் சோழ மன்னர் வரிசையில் சிறப்பிடம் பெற்றார்கள் ; அவர்கள் வட இந்தியாவின் சில பகுதிகள் , இலங்கை, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஆடசியைப் பரப்பி சைவ சமயத்தையும் பரப்பினார்கள் ; தந்தை கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலைப் போல மகனும் கங்கை கொண்ட சோழபுரத்தில் பெரிய சிவன் கோவிலை எழுப்பினார் ; இவர்களது காலத்தில் இலக்கியம், ஓவியம் மற்றும் இசை ஆகிய கலைகள் வளர்ந்தன ; 400 நடனமாதர்களின் அழகிய பெயர்களுடன் உள்ள தஞ்சாவூர் கல்வெட்டு நடனம் போற்றப்பட்டதையும் காட்டுகிறது.
ராஜராஜான் – 985 CE to 1014.
ராஜேந்திரன் – 1012 to 1044 CE.
***
ரகுவம்சம்
காளிதாசன் எழுதிய ஏழு நூல்களில் மிகவும் நீண்ட காவியம் இது; சுமார் 1570 சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள்
19 சர்க்கங்களாக/ காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; இதைப் பின்பற்றி பல காவியங்கள் எழுந்தன; இவர் விக்ரமாத்தித்தான் என்ற மன்னரின் அவைப்புலவர்; அவர் 2100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டவர். குமாரதாஸ என்ற இலங்கைப் புலவர், தமிழில் ராமாயணம் இயற்றிய கம்பன் ஆகியோரும் இவரது செய்யுட்களை பின்பற்றினார்கள்; ரகு வம்ச காவியத்துக்கு நிறைய உரைகள் தோன்றியது இந்த நூலின் சிறப்பினைக் காட்டுகிறது .ஆதி கவி வால்மீகியைச் சில இடங்களில் குறிப்பிடும் காளிதாசன் காவியத்தால் தெரியவரும் மிகப்பெரிய உண்மை, வால்மீகியின் பால காண்டக் செய்திகள், உத்தர காண்டச் செய்திகள் சரியானதே என்பதாகும். ஆறு காண்டங்களில் ராமாயணத்தை, ரகு வம்சம் சுறுக்கித் தருகிறது . ராமனுக்கு முன்னாலும் பின்னாலும் ஆட்சி செய்த்மன்னர்களின் வரலாறும் உள்ளது. 1,250 உவமைகளும் 29 சூரிய வம்ச அரசர்களின் வரலாறும் இந்த நூலில் இருக்கின்றன
***
ராஜசூய யக்ஞம்
தர்மன் என்னும் யுதிஷ்டிரன் , அவருக்கு முன்னால் ஹரிச்சந்திரன், சங்ககாலத்தில் சோழ மன்னன் பெருநற்கிள்ளி ஆகியோர் செய்த வேள்வி இது; தங்களை முழுநிலப்பரப்புக்கும் சக்ரவர்த்தி என்று அறிவித்து அதை எல்லா மன்னர்களும் ஏற்கச் செய்யும் யாகம் இது . அப்போது ஏனைய மன்னர்கள் அனைவரும் கப்பம் செலுத்துவார்கள் ;யுதிஷ்டிரன் நடத்திய வேள்வியில் கிருஷ்ணரை அவமத்தித்த சிசுபாலன் தலையைக் கிருஷ்ணர் துண்டித்த நிகழ்ச்சி ராஜசூயத்தில் நடந்தது. சங்க காலத்தில் பாண்டிய, சேர மன்னர்கள் இருவரும் சோழ மன்னரின் ராஜசூயத்தில் கலந்து கொண்டதைப் பாராட்டி அவ்வையார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளது .
***
ரஜோ குணம் / ராஜஸம்
மனிதனுக்கு மூன்று வகையான குணங்கள் இருப்பதாக பகவத் கீதை முதலான நூல்கள் செப்பும்; சத்வ, ரஜஸ் தமஸ் என்னும் மூன்று குணங்களில் நடுவில் உள்ளது ரஜஸ் அல்லது ராஜஸ குணம் ஆகும் ; பகவத் கீதையில் 3 குணங்களையும் விளக்கும் ஸ்லோகங்கள் ஒரே அத்தியாயத்தில் விரிவாக உள்ளன ; ஆசை, அதிகமான செயல்பாடு, சுயநல வேலைகள் , பந்த பாசம் ஆகியன ரஜோ குணம் மேலுக்கு வரும்போது காணப்படும்
கீதையில் ரஜோ குண ஸ்லோகங்கள்
1. ரஜோ குணத்தின் இயல்பு (அத்தியாயம் 14, ஸ்லோகம் 7)
ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணா-ஸங்க-ஸமுத்பவம் |
தன்னிபத்நாதி கௌந்தேய கர்ம-ஸங்கேன தேஹினம் ||
பொருள்: அர்ஜுனா, அளவற்ற ஆசை மற்றும் பற்றுதலின் வடிவமாக ரஜோ குணம் உள்ளது என்பதை அறிவாயாக. இதுவே உலகாயத ஆசைகளைத் தூண்டி, ஆன்மாவை செயல் (கர்ம) பற்றுதல்களோடு பிணைக்கிறது.
2. ரஜோ குணத்தால் தூண்டப்படும் செயல்கள் (அத்தியாயம் 14, ஸ்லோகம் 12)
லோப: ப்ரவ்ருத்திராரம்ப: கர்மணாமஸமோ ஸ்ப்ருஹா |
ரஜஸ் ஏதானி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப ||
பொருள்: பரத குலத்தில் தோன்றிய அர்ஜுனா, ரஜோ குணம் அதிகரிக்கும்போது பேராசை, செயல்களில் தீவிரமான ஈடுபாடு, புதிய முயற்சிகள், அமைதியற்ற தன்மை மற்றும் பற்றுமிக்க ஆசைகள் ஆகியவை உண்டாகின்றன.
3. ரஜோ குணத்தின் பலன் (அத்தியாயம் 14, ஸ்லோகம் 16)
கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்விகம் நிர்மலம் பலம் |
ரஜஸஸ்து பலம் து:கம் அஜ்ஞானம் தமஸ: பலம் ||
பொருள்: நற்செயல்களின் (ஸாத்விகம்) பலன் தூய்மையானது என்று சான்றோர்கள் கூறுகின்றனர். ஆனால், ரஜோ குணத்தால் செய்யப்படும் செயல்களின் பலன் நிலையான துன்பமும், முடிவில்லா அலைச்சலுமே ஆகும்.
***
இராமலிங்க ஸ்வாமிகள்/ அருட்பிரகாச வள்ளலார்
சர்ச்சைக்குரிய இந்த சுவாமிகளை இன்றுவரை சைவ மடங்களும் ஆதீனங்களும் அங்கீகரிக்கவில்லை ; இவரைப் பற்றி நான் கு சர்ச்சைகள் சந்தேகங்கள் இருக்கின்றன .கருணையே வடிவானவர் , சிவ பெருமானையும் முருகனையும் அற்புதமான, எளிய தமிழ்ப்படல்களில் போற்றியவர் , வள்ளுவர் போல வெஜிட்டேரியன் உணவு மட்டுமே சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தியவர்; ஜாதி மத பேதங்களை வெறுத்தவர் என்பதை பொதுமக்கள் ஏற்கின்றனர் . 1823 ஆம் ஆண்டில் மருதூரில் பிறந்தார். வடலூரில் ஆஸ்ரமத்தை அமைத்தார் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்; விளக்கில் தெரியும் ஜோதியை இறைவனாக வழிபடலாம் என்றார் ; இவர் பாடிய கவிகள் திருவருட்பா நூலில் இடம்பெற்றுள்ளன . வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற இவரது வாசகம் உயிர்கள் அனைத்திலும் இவர் ஒரே விதமான கருணை உடையவர் என்பதை விளக்கும் .
1874 ஆம் ஆண்டில் வடலூருக்கு அருகிலுள்ள மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்தில் ஒரு அறையில் நுழை ந்து கட்தவைப் பூட்டச் சொன்னார் ; அவரது அன்பர்களும் அப்படியே செய்தனர்; பல நாட்களுக்கு வெளியே வராததால் அதிகாரிகள் வந்து கதவை உடைத்துத் திறந்தபோது அவர் அங்கு இல்லை! அவர் ஜோதி வடிவாகி மறைந்ததாக அன்பர்கள் சொல்லுவார்கள்; தைப்பூச ஜோதித் திருநாள் இன்று வரை பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது . இவர் ஏற்றிய அணையா அடுப்பு இன்றுவரை வருவோருக்கு 24 மணி நேரமும் அமுது படைத்து வருகிறது; ஏழு திரைகள் கொண்ட புதுமையான ஜோதி தரிசனக் கோவிலையும் வடலூரில் தாபித்தார்
நான்கு சந்தேககங்கள், சர்ச்சைகள் என்ன ?
1
துவக்க காலத்தில் இவர் தன்னுடைய பாடல்களைத் திருமுறைகள் என்று செப்பி அப்பர், சம்பந்தர் போல சம அந்தஸ்து கொண்டாடினார் ; இப்படிச் சொல்லக் கூடாதென்று இலங்கை சைவ அறிஞர் ஆறுமுக நாவலர் தலைமையில் போர்க்கொடி தூக்கினர் ; ராமலிங்கம் பின்வாங்காததால் வழக்கு கோர்ட் வரை என்றது ; இதனால் இவரை தீவிர சைவர்கள் ஏற்பதில்லை .
2
இரண்டாவது சர்ச்சை இவர் மாயமாக மறைந்தது பற்றியது. பூட்டிய அறையில் இவர் ஜோதி மயமாகவில்லை ; யாருக்கும் தெரியாமல், நண்பர்கள் கதவைத் திறந்தவுடன் இவர் பயந்து ஓடிவிட்டார் என்பது ஒரு வாதம்; ஏனெனில் அவரே கடைவிரித்தோம் கொள்வாரில்லை என்று சொல்லி தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது எதிர்த் தரப்பினரின் கூற்று.
3
மூன்றாவது விஷயம் விபூதி இல்லாத விகாரமான , அசிங்கமான வள்ளலார் படம் பற்றியது; ஐம்பது , அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவர் படத்தையும் வள்ளலார் படத்தையும் விபூதி இல்லாமல் பார்க்கமுடியாது ; இப்போது வள்ளுவர் படங்களில் விபூதியை அழித்த திராவிடர்கள், இவரையும் விபூதி இல்லாமல் காட்டிவருகின்றனர் ; அதாவது இவரை இந்து மதத்திலிலிருந்து விலகியவர் போலாக் காட்டுவது ; இந்த வேலையைக் கடவுளை எதிர்க்கும் திராவிட அரசியல்வாதிகளும் கிறிஸ்தவ அமைப்புகளும் செய்துவருகின்றன ; விபூதி இல்லாத வள்ளலார் படத்தை வெளியிடும் கும்பலை எளிதில் இனம் காணலாம் .
4
வள்ளலாரின் ஆஸ்ரமம், சபை உள்ள இடம் பெரிய மைதானம் கொண்டது ; இதைக் கமர்ஷியல் வளாகமாக மாற்றி பணத்தைச் சுருட்ட ஒரு கும்பல் கிளம்பியுள்ளது ; இதற்கும் திராவிட அரசியல்வாதிகள் அமோக ஆதரவு தெரிவித்தனர்.
இவைகளால் வள்ளலாரின் பேர் , ரிப்பேர் ஆகிவிட்டது. இந்துக்கள் விழித்துக்கொண்டு வள்ளலாரைக் காப்பாற்றாவிட்டால் திருவருட்பாவிலுள்ள முருகன், சிவன் துதிகளை இசைக்காவிட்டால் , விபூதி இல்லாத திராவிட பூச்சாண்டியாக வள்ளலார் காட்சி தருவார் ; எப்படியும் இவரை சைவ மடங்கள் ஏற்கப்போவதில்லை .
***
ராமானுஜர் Sri Ramanujacharya (1017–1137 CE)
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ராமானுஜர் விசிஷ்டாத்வைதம் என்னும் வைணவக் கொள்கையைப் பரப்பினார் . அவர் தமிழ் நாட்டின் ஸ்ரீபெரும்புதுரில் பிறந்து 120 ஆண்டுகள் வாழ்ந்தார்; ஆயினும் தமிழ் நாட்டில் அவரது எதிரிகள் தொல்லை கொடுக்கவே கர்நாடகத்துக்குச் சென்று இறுதிக் காலத்தைக் கழித்தார்; ஜாதிகுல வேறுபாடுகளைத் தகர்த்து அனைவரையும் வைணவர்களாக்கினார்; ஆனால் இவர் வைணவ குடும்பத்தில் பிறக்கவில்லை ! தென்கலை வைணவர்கள் போற்றும் அவர் பல நூல்களைச் செய்தார் ; பகவத் கீதைக்குப் பாஷ்யமும் செய்தார் . திருக்கோஷ்டியூரில் நம்பி என்னும் குருவிடம் உபதேசம் பெற்றார் ;அதை யாருக்கும் சொல்லக்கூடாது; சொன்னால் நரகத்துப் போவாய் என்று சொல்லியும் அவர் உபதேசித்த ஓம் நமோ நாராயணா மந்திரத்தைக் கோபுரத்தின் உச்சியிலிருந்து பிரகடனம் செய்ததாக வரலாறு உண்டு யாதவப்பிரகாசர் என்பவர் இவர் மீது பொறாமை கொண்டு இவருக்கு எதிர்ப்பினை உசுப்பிவிட்டார் ; கிருமிகண்ட சோழன் என்பவன் இவரை சைவ சமயத்துக்குத் திரும்பும்படி வலியுறுத்தி தொல்லை கொடுத்ததால் இவர் கருநாடகத்துக்கு ஓடி ஹோய்சாள மன்னரின் ஆதரவினில் வாழ்ந்தார் .
***
ராமாயணம்
காலத்தால் அழியாத காவியம் ராமாயணம் ; சுமார் 3000 இடங்களில் நூலாகவும் நாட்டுப்புறப் பாடலாகவும் , கவிதைகளாகவும், கிருதிகளாகவும் நாடகங்களாகவும் சினிமாப்பாடல்களாகவும், பொம்மலாட்டங்களாகவும் , நாட்டிய நடனங்களாவும், புறநானூறு, அகநானுற்றுப் பாடல்களாகவும், ஆழ்வார் பாசுரங்களாகவும் ராமன் போற்றப்படுகிறார் ; இதற்கெல்லாம் மூல காரணம் வால்மீகி முனிவர் சம்ஸ்க்ருதத்தில் எழுதிய மூல ராமாயணம் ஆகும் ; அதற்குப்பின்னர் கம்பன் போல, பல மொழிகளில் எழுதிய ராமாயணங்கள் இந்தோனேஷியா, தாய்லாந்துவரை கிடைக்கின்றன . கைகேயி என்ற சிற்றன்னை 14 ஆண்டுக் காலத்துக்கு நாடு கடத்தியபோது ராவணன் என்ற அரக்கன் சீதா தேவியைக் கடத்த அனுமன் என்னும் வானர தலைவன் மூலம் இலங்கைக்குப் பாலம் கட்டி ராவணனைக்கொன்று சீதையை மீட்ட கதை ஏழு கண்டங்களாக ராமாயணத்தில் 24000 ஸ்லோகங்களில் பாடப்பட்டுள்ளன . ராமாயணம் மஹாபாரதம் ஆகிய இரண்டும் இந்து இதிகாசங்கள் ஆகும் .
***
ரம்பா
Rambhā (रम्भा).—தேவலோக அப்சரஸ் அழகிகளில் ஒருத்தி ஊர்வசி திலோத்தமா, மேனகா ஆகியோருடன் பேசப்படும் பேரழகி ; சம்ஸ்க்ருதத்தில் வாழை மரம் வாழைத் தண்டுக்கும் இதே சொல்தான். ஆடல் பாடல்களில் சிறந்த அவள், விசுவாமித்திரர் சாபத்தால் ஒரு பிராமணர் மூலம் விமோசனம் கிடைக்கும் வரை பூமியில் வாழந்தாள். ராமாயணக் கதைப்படி, ராவணனால் மானபங்கம் செய்யப்பட்டாள்; அப்போது பிரம்மா கொடுத்த சாபத்தால் இராவணன் வேறு எந்தப் பெண்ணையும் தொட்டால் தலைவெடித்துவிடும் என்ற நிலை ஏற்பட்டது
கதாசரித்சாகரம் என்னும் கதைக்கடல் நூலிலும் ஒரு கதை உள்ளது.
To be continued………………………..
Tags- ராமா, ரம்பா, ராஜராஜ, ராமானுஜ, இராமலிங்க ஸ்வாமிகள், HINDU DICTIONARY, part 82;இந்து மத கலைச்சொல் அகராதி-82, ரகுவம்சம்1