ராமாயணத்தில் வரங்கள் 65  – இந்திரன் ஹனுமாருக்கு வரம் அளித்தது! (Post.15,994)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,994

Date uploaded in London – 19 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் 65  – இந்திரன் ஹனுமாருக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் முப்பத்தாறாவது ஸர்க்கமாக அமைவது ‘ஹனுமார் வரம் பெற்றுக் கொள்வது’ என்னும் ஸர்க்கமாகும்.

ஶ்ரீ ராமர் அகத்திய முனிவரிடம் ஹனுமாரின் வரலாறைச் சொல்லுமாறு கேட்க அவர் ஹனுமாருக்கு இந்திரன் வரம் கொடுத்ததையும் கூறுகிறார்.

பிரம்மாவால் ஸ்பரிசக்கப்பட்டு ஜீவனைப் பெற்ற ஹனுமாரைப் பார்த்த வாயுதேவன் முன் போல சஞ்சரிக்கலானார். அனைத்து உயிர்களும் மகிழ்ந்தன.

வாயுதேவனை இன்னும் மகிழ்ச்சியுறச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் பிரம்மா தேவதைகளை நோக்கி இப்படிச் சொல்லலானார்:

“இந்த சிசுவால் உங்களுக்கு ஆக வேண்டியதாயிருக்கிற ஒரு பெரும் காரியம் உண்டாகப் போகிறது. ஆதலால் எல்லோரும் இந்த வாயுவின் ப்ரீதி நிமித்தம் வரங்களை விதியுங்கள்” (ததத்வதத்வம் வரானசர்வே மாருதஸ்யாஸ்ய துஷ்டயே – உத்தர காண்டம் 36ம் ஸர்க்கம் ஸ்லோக எண் 9)

தத: சஹஸ்ரநயன: ப்ரீதியுக்த: ஷுபானன: |                            குஷேஷயமர்யீ மாலாமுத்க்ஷிப்யேதம் வசோப்ரவீத் ||                  

                         (உத்தர காண்டம் 36ம் ஸர்க்கம் ஸ்லோக எண் 10)

தத: – அதன் மேல்                                                 ஷுபானன: – அழகான முகமுடைய                                            சஹஸ்ரநயன: – ஆயிரக் கண்ணன்  (இந்திரன்)                                ப்ரீதியுக்த: – அன்பு கூர்ந்தவராய்                                      குஷேஷயமர்யீ – பொற்றாமரை                                             மாலாம் – மாலையை                                                     உத்க்ஷிப்ய – கழற்றிக் கையிலெடுத்துக் கொண்டு                                    இதம் – பின்வரும்                                                              வச: – ஆக்கினையை                                                அப்ரவீத் – நியமித்தருளினார்

மத்கரோத்ச்ருஷ்ட வஜ்ரேண ஹனுரஸ்ய யயா ஹத: |                     நாம்னா வை கபிஷார்தூலோ பவிதா ஹனுமானிதி ||   

                         (உத்தர காண்டம் 36ம் ஸர்க்கம் ஸ்லோக எண் 11)

கபிஷார்தூல – வானரோத்தமன்                                      அஸ்ய – இவனது                                                            ஹனு; – தாடை                                                             மத்கரோ ச்ருஷ்ட வஜ்ரேண – என் கையினின்று வீழ்ந்த வஜ்ராயுதத்தால்  ஹத: – அடியுண்டது                                                   யதா – என்னும் காரணத்தால்                                            ஹனுமான் – ஹனுமான்                                               இதி – என்கிற                                                                  நாம்னா வை – பெயராலேயே                                                  பவிதா – விளங்கட்டும்

அஹமஸ்ய ப்ரதாஸ்யாமி பரமம் வரமத்புதம் |                          இத: ப்ரப்ருதி வஜ்ரஸ்ய மமாவத்யோ பவிஷ்யதி ||                           

                    (உத்தர காண்டம் 36ம் ஸர்க்கம் ஸ்லோக எண் 12)

அஸ்ய – இவனுக்கு                                                                   அஹம் – நான்                                                                      அத்புதம் – அற்புதமும்                                                 பரமம் – ச்ரேஷ்டமுமான                                                     வரம் – ஒரு வரத்தை                                                 ப்ரதாஸ்யாமி – கொடுக்கிறேன்                                            இத ப்ரப்ருதி – இது முதல்                                                மம – எனது                                                              வஜ்ரஸ்ய – வஜ்ராயுதத்தினால்                                                  அவத்ய – கொல்ல முடியாதவனாக                                  பவிஷ்யதி – விளங்குவான்

இப்படியாக இந்திரன் குழந்தைக்கு ஹனுமான் என்ற பெயரை அளித்ததோடு தனது வஜ்ராயுதத்தால் கூட அழிக்க முடியாதபடி விளங்குவான் என்று வரத்தை அளிக்கிறார்.

இந்த வரம் கேட்காமல் இந்திரனே மனம் மகிழ்ந்து தந்த வரமாகும்.

**

Leave a comment

Leave a comment