
Written by London Swaminathan
Post No. 16,007
Date uploaded in London – 23 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
56
ஸத்யேன லப்யஸ்தபஸா ஹ்யேஷ ஆத்மா
ஸம்யக்ஞானேன ப்ரஹ்மசர்யேண நித்யம்
அந்த: சரீரே ஜ்யோதிர்மயோ ஹி சுப்ரோ யம்
பச்யந்தி யதய: க்ஷீண தோஷா:
-முண்டகோபநிஷதம் 3-1-5
ஜோதிர்மயமானதும் தூயதும் ஆகிய இந்த ஆத்மாவானது சாத்தியத்தாலும் தவத்தாலும் மெய் ஞானத்தாலும் நெறியில் உறுதிபெற்ற பிரம்மசாரியத்தாலும் நிச்சயமாக அடையப்பெறுகிறது . மனது தெளிவு அடையப்பெற்ற துறவிகள் இந்த ஆத்மனைத் தங்கள் தேகத்தின் உள்ளேயே தரிசிக்கிறார்கள் .
सत्येन लभ्यस्तपसा ह्येष आत्मा सम्यग्ज्ञानेन ब्रह्मचर्येण नित्यम् ।
अन्तःशरीरे ज्योतिर्मयो हि शुभ्रो यं पश्यन्ति यतयः क्षीणदोषाः ॥ ५ ॥
Satyena labhyastapaso hyeṣa ātmā samyag-jñānena brahmacaryeṇa nityam |
antaḥ-śarīre jyotirmayo hi śubhro yaṃ paśyanti yatayaḥ kṣīṇa-doṣāḥ || Mundaka Upanishad (Chapter 3, Verse 1.5).
***
57
யதோகம் சுத்தே சுத்தமாஸிக்தம் தாத்ருகேவ பவதி
ஏவம் முனேர் விஜானத ஆத்மா பவதி கெளதம
கடோபநிஷதம் 4-15
கெளதமரே , தூய நீரைத் தூய நீரில் விட்டால் இரண்டும் எப்படி ஒன்றாகின்றனவோ , அங்கனம் பர ஞானம் பெற்ற முனியின் ஆத்மா பரமாத்மாவில் ஒன்றுபடுகிறது .
यथोदकं शुद्धे शुद्धमासिक्तं तादृगेव भवति |एवं मुनेर्विजानत आत्मा भवति गौतम || १५ || Katha Upanishad Chapter 2, Section 1, Verse 15.
yathōdakaṃ śuddhē śuddhamāsiktaṃ tādṛgēva bhavati |ēvaṃ munērvijānata ātmā bhavati gautama || 15 ||
***
58
வேதாந்த விக்ஞான ஸுநிஸ்சிதார்த்தா
ஸந்யாச யோகாத் யதய: சுத்த ஸத்த்வா:
தே ப்ரஹ்மலோகேஷு பராந்த காலே
பராம்ருதா: பரிமுச்யந்தி ஸர்வே
முண்டகோபநிஷதம் 3-2-6
வேதாந்த விசாரத்தின் முடிந்த குறிக்கோளாயிருக்கிற பரமாத்ம சொரூபத்தில் நன்கு நிலை பெற்றிருக்கிறவர்களே சந்நியாசிகள். துறவும் திருத்தொண்டும் கூடிய வாழ்வின் வாயிலாக அவர்களின் கருவி காரணங்கள் யாவும் புனிதமடைகின்றன. ஞானா க்கினியில் அவர்களின் உடலங்கள் யாவும் அழியப்பெற்றவர்களாகவும் ஜீவ போதத்தை இழந்தவர்களாகவும், பிரம்ம சொரூபத்தில் அவர்கள் மரணமில்லாப் பெருநிலை எய்துகின்றனர் .
वेदान्तविज्ञानसुनिश्चितार्थाः संन्यासयोगाद् यतयः शुद्धसत्त्वाः ।
ते ब्रह्मलोकेषु परान्तकाले परामृताः परिमुच्यन्ति सर्वे ॥ ६॥ Mundakopanishad 3-2-6
vedāntavijñānasuniścitārthāḥ saṁnyāsayogādayatayaḥ śuddhasattvāḥ |
te brahmalokeṣu parāntakāle parāmṛtāḥ parimucyanti sarve || 6 || Mundakopanishad 3-2-6
***
59
ந சக்ஷுஸா க்ரஹ்யதே நாபி வாசா
நான்யைர் தேவைஸ் தபஸா கர்மணா வா
ஞான ப்ரஸாதேன விசுத்த ஸத் த் வஸ் ததஸ்து
தம் பச்யதே நிஷ்கலம் த்யாயமான:
—முண்டகோபநிஷதம் 3-1-8
பரமாத்ம தத்துவமானது கண்களாலோ, வாக்காலோ, மற்ற இந்த்ரியங்களாலோ கிரஹிக்கப்படுவதன்று. கர்மத்தாலும் தவத்தாலும் அப்பர வஸ்துவை அறிந்துகொள்ள முடியாது . ஞான பிரசாதத்தால் ஒருவனது உள்ளம் தூயதாகிறது . அப்பொழுது தியானத்தின் வாயிலாக அவயவங்களற்ற அப்பரமனை (அனுபூதியில்) அவன் அடைகிறான் .
न चक्षुषा गृह्यते नापि वाचा नान्यैर्देवैस्तपसा कर्मण वा ।
ज्ञानप्रसादेन विशुद्धसत्त्वस्ततस्तु तं पश्यते निष्कलं ध्यायमानः ॥ ८ ॥
Mundaka Upanishad 3.1.8
na cakṣuṣā gṛhyate nāpi vācā nānyairdevaistapasā karmaṇa vā |
jñānaprasādena viśuddhasattvastatastu taṃ paśyate niṣkalaṃ dhyāyamānaḥ || 3-1-8 ||
***
60
ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ து
புத்திம் து ஸாரதிம் வித்தி மன ப்ரக்ரஹமேவ ச
–கடோபநிஷதம் 3-3
உடலை ரதம் எனவும் ஜீவாத்மனை அதில் பயணம் செய்பவன் எனவும் அறிக. இனி புத்தியை தேர் ஓட்டுபவன் என்றும் மனத்தைப் பிடி கயிறு எனவும் அறிந்து கொள்க .
இந்த்ரியாணி ஹயானாஹுர்விஷயான் ஸ்தேஷு கோசரான்
ஆத்மேந்த்ரிய மனோயுக்தம் போக்தேத் யாஹுர்மனீஷிண:
கடோபநிஷதம் 3-4
இந்த்ரியங்களைக் குதிரைகள் என்றும் , அவைகளை செலுத்தும் புலன்களை பாதைகள் என்றும் சொல்கிறார்கள்; உடல், புலன்கள், மனது ஆகியவர்களுடன் பொருந்தியுள்ள ஆத்மனை – அனுபவிப்பவன் என்று சான்றோர்கள் சொல்கிறார்கள்.
Atmanam rathinam viddhi shareeram rathameva tu,
Buddhim tu sarathim viddhi manaha pragrahameva tu.
Indriyani hayanyahur vishayansteshu gocharan, Katha Upanishad (1.3.3)
इन्द्रियाणि हयानाहुर्विषयाँ स्तेषु गोचरान् ।आत्मेन्द्रियमनोयुक्तं भोक्तेत्याहुर्मनीषिणः ॥ ४ ॥
indriyāṇi hayānāhurviṣayām̐ steṣu gocarān |ātmendriyamanoyuktaṃ bhoktetyāhurmanīṣiṇaḥ || 4 || Katha Upanishad (1.3.4)
TO BE CONTINUED……………………….
TAGS- முக்கிய உபநிஷத மந்திரங்கள்- 10, கடோபநிஷதம், முண்டகோபநிஷதம்