WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,006
Date uploaded in London – 23 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் 69 – பிரம்மா மற்றும் விஸ்வகர்மா ஹனுமாருக்கு வரம் அளித்தது!
ச. நாகராஜன்
உத்தரகாண்டத்தின் முப்பத்தாறாவது ஸர்க்கமாக அமைவது ‘ஹனுமார் வரம் பெற்றுக் கொள்வது’ என்னும் ஸர்க்கமாகும்.
ஶ்ரீ ராமர் அகத்திய முனிவரிடம் ஹனுமாரின் வரலாறைச் சொல்லுமாறு கேட்க அவர் ஹனுமாருக்கு தேவர்கள் ஒவ்வொருவராக வரம் கொடுத்ததைக் கூறி வருகிறார். அதில் பிரம்மா மற்றும் விஸ்வகர்மா ஹனுமானுக்கு அளித்த வரங்கள் அவரால் இப்படி குறிப்பிடப்படுகிறது.
சர்வேஷாம் ப்ரஹ்மதண்டானாமவத்யோயம் பவிஷ்யதி | தீர்காயுஸ்ச மஹாத்மா ச இதி ப்ரஹ்மாப்ரவீதஸ்ச: ||
உத்தரகாண்டம் முப்பத்தாறாவது ஸர்க்கம் ஸ்லோக எண் 18
ப்ரஹ்மா – பிரம்மதேவர் அயம் – ‘இவன் சர்வேஷாம் – சகல ப்ரஹ்மதண்டானாம் – பிரம்மதண்டங்களுக்கும் அவத்ய: – கொல்ல முடியாதவனாகவும் மஹாத்மா ச – மஹானுபாவனாகவும் தீர்காயு: ச – தீர்க்காயுளை உடையவனாகவும் பவிஷ்யதி – இருக்கக் கடவது’ இதி – என்கிற வச: – ஆக்கினையை அப்ரவீத் – நியமித்தருளினார்
பிரம்மாவைத் தொடர்ந்து விஸ்வகர்மா இப்படிக் கூறலானார்:
விஸ்வகர்மா ச த்ருஷ்டைனம் பாலசூர்யோபமம் சிசும் | ஷில்பினாம் ப்ரவர: ப்ராதாத்வரமஸ்ய மஹாமதி: ||
மத்க்ருதானி ச சஸ்த்ராணி யானி திவ்யானி சம்யுகே | தைர்வத்யத்வமாபன்னசிரஞ்சீவி பவிஷ்யதி ||
உத்தரகாண்டம் முப்பத்தாறாவது ஸர்க்கம் ஸ்லோக எண்கள் 19,20
ஷில்பினாம் – சில்பிகளின் ப்ரவர: – தலைவனான விஸ்வகர்மா – விஸ்வகர்மா ஏனம் – இந்த பாலசூர்யோபமம் – பாலசூர்யனைப் போலிருக்கின்ற சிசும் – சிசுவை த்ருஷ்ட்வா – கண்ணுற்று அஸ்ய – ‘இந்த மஹாத்மன: – மஹாத்மாவுக்கு மத்க்ருதானி – என்னால் நிர்மிக்கப்பட்ட திவ்யானி – திவ்யமான சஸ்த்ராணி – சஸ்திரங்கள் யானி – எவைகளோ தை: – அவைகளால் சம்யுகே – போரில் அவத்யத்வம் – மரணமில்லாமையை ஆபன்ன: ச – அடைந்தவனாகவும் சிரஞ்சீவி ச – சிரஞ்சீவியாகவும் பவிஷ்யதி – இருக்கக் கடவது’ என்கிற வரம் – வரத்தை ப்ராதாத் – தந்தருளினார்
பிரம்மாவும், விஸ்வகர்மாவும் தங்கள் பங்கிற்கு இப்படி ஹனுமாருக்கு வரத்தை அளித்தனர்.
**