முக்கூடற் பள்ளு பற்றி 10 கேள்விகள் (Post No.16,027)

 Written by London Swaminathan

Post No. 16,027

Date uploaded in London – 28 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

மிகப் புகழ்பெற்ற ஆற்று வெள்ளப் பாடல் முக்கூடற் பள்ளு நூலில் உள்ளது; அது என்ன பாடல்?

 2

முக்கூடற்பள்ளு நூலை இயற்றியவர் யார் ? அவர் எந்தக் காலத்தைச் சேர்ந்தவர் ?

3

முக்கூடல் என்றால் என்ன ?

4

பள்ளு என்ற பெயர் எதைக் குறிக்கிறது?

5

இந்த நூலில் முக்கிய கதாபாத்திரங்கள் யார் ?


6

பிள்ளையாருக்குப் பதிலாக திருமால் கடவுள் வாழ்த்தோடு துவங்கும் இந்நூலில் பெருமாளை ஆதரிக்கும் பாட்டு எது ?

7

முக்கூடற்பள்ளு  நூலில் ஒரு  பாடலில் என்னென்ன நெல்வகைகள் குறிப்பிடப்படுகின்றன ?

8

முக்கூடற்பள்ளு காட்டும் மாடு வகைகளின் பெயர்கள்?

9

முக்கூடற்பள்ளு  நூலில் ஒரு பாடலில் என்னென்ன உழவுக்  கருவி வகைகள் குறிப்பிடப்படுகின்றன ?

10

ஒரு பாடலில் திருமாலின் அடியார்கள் (ஆழ்வார்கள்) பத்துப் பேர் என்று கூறியதற்கு உரைகாரர் சொல்லும் விளக்கம் என்ன ?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

ANSWERS

1.ஆற்று வெள்ளம் நாளை வரத்

தோற்று தேகுறி- மலை

      யாள மின்னல் ஈழமின்னல்

      சூழமின்னுதே

நேற்று மின்றுங் கொம்புசுற்றிக்

காற்ற டிக்குதே-கேணி

      நீர்ப்படு சொறித்த வளை

      கூப்பிடு குதே

சேற்று நண்டு சேற்றில்வளை

ஏற்றடைக்கு தே-மழை

      தேடியொரு கோடி வானம்

      பாடி யாடுதே

**

2. என்னயினாப் புலவர்/ நயினார் புலவர் என்பவர் இயற்றினார் ??? அவரைப்பற்றி வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை . இது 17 ஆம் நூற்றாண்டு நூல். 

**

3.மூன்று நதிகள் கூடும் இடம் புனிதமான இடம்; கங்கா யமுனா சரஸ்வதி கூடும் திரிவேணி சங்கம் உலகலப்பு கழ்பெற்ற இடம். இதே போல பல முக்கூடல்கள் உள்ளன . இந்தப் பள்ளு நூலில் வரும் முக்கூடல் என்பது திருநெல்வேலி வடகிழக்கில் தண்பொருநை (தாமிரபரணி), சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடமாகும்.

**

4.பள்ளர்கள் என்பவர்கள் வயல்வெளிகளில் பயிர் தொழில் செய்யும் உழவர்கள் ஆவார்கள். அவர்களின் வாழ்க்கையை  எடுத்துக்கூறும் இலக்கியமாக பள்ளு இலக்கியங்கள் காணப்படுகின்றன. பள்ளு இலக்கியங்களில் குறிப்பிடத்தக்கது முக்கூடற் பள்ளு ஆகும். இது சிற்றிலக்கியங்களில் ஒன்று ஆகும்.

**

5.பள்ளன் மற்றும் அவனுடைய இரண்டு மனைவிகள் — மூத்த இளைய பள்ளிகள்

**

6.முக்கூடல் அழகர் திருவடிகளைக் கருதாத மனத்தை உடையோரும் உள்ளனர். அவர்களின் மனத்தைத் தரிசு நிலம் என்று எண்ணி, கொழுப் பாய்ச்சி உழுபவன் பள்ளன் ஆவான். சுருதிகள் போற்றும் எட்டு எழுத்துகள் (ஓம் நமோ நாராயணாய) வைணவத்தில் முதன்மை பெற்றவை. இந்த எழுத்துகளைப் பெரிய நம்பியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாத துட்டர்களின் காதுகளைப் பாம்புப் புற்றுகள் என்று கருதி வெட்டி எறிபவன் பள்ளன். பெருமானுடைய நூற்று எட்டுத் திருப்பதிகளையும் வலம் செய்து வணங்காதவர் கால்களை வடத்தால் பிணித்து ஏர்க்காலில் சேர்த்துக் கட்டுபவன் பள்ளன். திருவாய்மொழிப் பாசுரங்களைக் கல்லாதவர்களை இருகால் மாடுகளாக ஆக்கி ஏரிலே பூட்டித் ‘தீத்தீ’ என்று கோலால் அடித்து ஓட்டுபவன் பள்ளன். இவ்வாறாகப் பள்ளனின் பெருமை கூறப்பட்டுள்ளது. இதனைப் பின்வரும் பாடல் விளக்கக் காணலாம்:

ஒருபோதும் அழகர் தாளைக்

கருதார் மனத்தை வன்பால்

உழப் பார்க்கும் தரிசுஎன்று

கொழுப் பாய்ச்சுவேன்

சுருதி எண்எழுத்து உண்மைப்

பெரிய நம்பியைக் கேளாத்

துட்டர் செவி புற்று எனவே

கொட்டால் வெட்டுவேன்

பெருமாள் பதிநூற்று எட்டும்

மருவி வலம் செய்யார்தம்

பேய்க்காலை வடம் பூட்டி

ஏர்க்கால் சேர்ப்பேன்

திருவாய் மொழிகல்லாரை

இருகால் மாடுகள் ஆக்கித்

தீத்தீ என்று உழக்கோலால்

சாத்துவேன் ஆண்டே

**

7.முக்கூடற்பள்ளு காட்டும் நெல் வகைகள்

நூலில் (பாடல் 108) குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நெல் வகைகளின் பெயர்கள்:

சித்திரக்காலி

வாலான்

சிறைமீட்டான்

மணல்வாரி

செஞ்சம்பா

கருஞ்சூரை

சீரகச் சம்பா

முத்துவிளங்கி

மலைமுண்டன்

பொற்பாளை

நெடுமூக்கன்

அரிக்கிராவி

மூங்கில் சம்பா

கத்தூரிவாணன்

காடைக் கழுத்தன்

இரங்கல் மீட்டான்

கல்லுண்டை

பூம்பாளை

பாற்கடுக்கன்

வெள்ளை

புத்தன்

கருங்குறுவை

புனுகுச் சம்பா

**

8.மாடு வகைகளின் பெயர்கள்

குடைக்கொம்பன், குத்துக்குளம்பன், கூடுகொம்பன், மயிலை, மட்டைக்கொம்பன், கருப்பன், மஞ்சள்வாலன், வெள்ளைக்காளை, குடைச்செவியன், படைப்புப்பிடுங்கி.

***

9.உழவுக் கருவிகளின் வகைகள்

  • மேழி மற்றும் வளை மேழி: நிலத்தை ஆழமாக உழப் பயன்படும் ஏரின் முக்கிய அமைப்பு.
  • கலப்பை: பூமிக்கு அடியில் உள்ள மண்ணை மேல்புறமாகப் புரட்டப் பயன்படும் முதன்மைக் கருவி.
  • நுகம்: காளையின் கழுத்தில் மாட்டி ஏருடன் இணைக்கப் பயன்படும் மரத்தாலான கட்டமைப்பு.
  • கொழு: கலப்பையின் அடியில் மாட்டப்படும் கூர்மையான இரும்புப் பகுதி.
  • பரம்பு: உழப்பட்ட மண்ணைப் சமப்படுத்தப் பயன்படும் பலகைக் கருவி.
  • ஏர்க்கால்: ஏரின் நீளமான மரப்பகுதி.

**

10.பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வாரும் ஆண்டாளும் விடப்பட்டனர் ;.மதுர கவி என்பவர் நம்மாழ்வாரின் சீடர்தான் என்பதாலும் ஆண்டாள் பெண் என்பதாலும் குறிப்பிடப்படவில்லை.

–Subham—

Tags– உழவுக் கருவிகள், மாடு வககள், முக்கூடற்பள்ளு, நெல் வகைகள்ஆற்று வெள்ளம் நாளை வரத்,முக்கூடற் பள்ளு பற்றி 10 கேள்விகள்

Leave a comment

Leave a comment