அஷ்டாவக்ர கீதை பற்றி 10 கேள்விகள் (Post.16,036)

Written by London Swaminathan

Post No. 16,036

Date uploaded in London – 30 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1      

அஷ்டாவக்ரகீதை என்னும் நூல் நமக்கு எங்கிருந்து கிடைத்தது?

2

இந்த நூலை எழுதியது யார் ?

3

பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள், 700 சம்ஸ்க்ருத மொழி ஸ்லோகங்கள்; இந்த நூலில் எத்தனை அத்தியாயங்கள்? எத்தனை சம்ஸ்க்ருத மொழி ஸ்லோகங்கள்?

4

பகவத் கீதையில் கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோக விஷயங்கள் உள்ளன; இந்த நூலில் என்ன இருக்கிறது ?

5

இந்த நூல் தோன்றியதன் பின்னாலுள்ள கதை என்ன ?

6

ராமகிருஷ்ண பரம ஹம்சருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் இந்த நூல் எப்படி உரைசலை ஏற்படுத்தியது ?

7

தமிழிலும் ஆங்கிலத்திலும் இதைப் படிக்க முடியுமா ?

8

திருவண்ணாமலையில் இருந்த புகழ்பெற்ற முனிவருக்கும் இந்த நூலுக்கும் என்ன தொடர்பு ?

9

அத்வைதம் என்றவுடன் ஆதி சங்கரர் தான் நமக்கு நினைவுக்கு வரும். இந்த நூலின் காலம் என்ன ?

10

இந்த நூலில் காணப்படும் உவமைகள் என்ன ?

**********************************

விடைகள்

1.அஷ்டாவக்ரகீதை என்னும் நூல் நமக்கு மஹாபாரத்திலுள்ள வன பருவத்திலிருந்து கிடைத்தது.

***

2.இந்த நூலை எழுதியது ஒருவரல்ல; ஜனகர் என்ற மன்னருக்கும் அஷ்டாவக்ரர் (எட்டு கோணல்) என்ற முனிவருக்கும் நடந்த உரையாடலை வனபர்வத்தில் லோசம முனிவர் சொல்ல, அதை நமக்கு வியாச பகவான் தொகுத்தளித்தார்.

***

3. அஷ்டாவக்ரகீதை நூலில் இருபது அத்தியாயங்கள் 298 சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் இருக்கின்றன.

***

4.இந்த நூலில் முழுக்க முழுக்க அத்வைத தத்துவத்தின் சிறப்பே பேசப்படுகிறது. இறைவனும் நாமும் ஒண்டு ; அந்த நிலையை அடைய மாயத் தோற்றங்களை அகற்ற வேண்டும்; அதற்கு தூய வாழ்வும் நல்ல தவமும் தேவை.

***

5.அஷ்டாவக்ரகீதை நூல் தோன்றியதன் பின்னாலுள்ள கதை மிக நீண்டது; சுவையானது ; சுருக்கமாகத் தருகிறேன்; கருவிலுள்ள குழந்தை கூட விஷயங்களைக் கிரகிக்கும் என்ற விஞ்ஞான உண்மையயையும், சவுண்ட் என்னும் ஒலி SOUND EFECT  அலை பற்றிய விஞ்ஞான உண்மையயையும் இந்தக்கதை விளக்குகிறது. அஷ்டாவக்ரரின் தந்தை கஹோலர் வேதம் கற்பிக்கும்போது தவறான உச்சரிப்பில் சொல்லவே , அவர் மனைவியின் கருப்பையில்  இருந்த குழந்தை எட்டு கோணலுடன் பிறந்தது ; இதற்க்கு காரணம் அவர் என்று குழந்தை சொன்னதில் கஹோலருக்குக் கோபம்; வருத்தம் ; காலம் உருண்டோடியது ; ஜனக மன்னர் சபையில் இருந்த வந்தின் என்ற அறிஞரை வாதத்தில் வென்றால் பொருள்கிடைக்கும் எண்டு எண்ணி மிதிலைக்குச் சென்றார்; தோல்வியே கண்டார் ; வாதத்தின் விதிப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பிற்காலத்தில் அதே சபைக்கு வந்து வந்தினைத் தோற்கடித்து தந்தையின் விடுதலையைப் பெற்றார் ; அந்த சமயத்தில் இருவரும் உரையாடவே  இந்த நூல் பிறந்தது.

***

6.ராமகிருஷ்ண பரம ஹம்சருக்கு இந்த நூல் மிகவும் பிடிக்கும்; அனல் சுவாமி விவேகானந்தருக்குஇந்த நூல் பிடிக்காது; ஒவ்வொரு முறை பட்டிக்கச் சொன்னபோதும் இரண்டு ஸ்லோகங்களைப் படித்துவிட்டு விவேகானந்தர் நிறுத்தி விடுவார். ஆயினும் ராமகிருஷ்ணர், விடாப்பிடியாக மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுவார் ; பின்னர் விவேகானந்தருக்கும் அதன் சிறப்பு விளங்கியது.

***

7.தமிழிலும் ஆங்கிலத்திலும் இதைப் படிக்க முடியும். தமிழில் 1937-ஆம் ஆண்டில் பாரத்வாஜ விஸ்வநாதன் (PLEASE GO TO Tamil Digital Library Website) மொழிபெயர்த்து வெளியிட்ட நூல் நன்றாக இருக்கிறது ; அவர் சம்ஸ்க்ருத மூலத்திலிருந்து மொழிபெயர்த்ததாகத் தோன்றுகிறது; ஏனையோர் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்து மொழிபெயர்த்தால் சுமார் தான் ; ஒரு உதாரணம் மட்டும் தருகிறேன்; 13- ஆவது அத்தியாய ஸ்லோகங்கள் அதனால் நான் மகிழ்சசியாக இருக்கிறேன்  (யதா சுகம் அஹம் ) என்று முடியும். இதை மொழியாக்கத்தில் காண முடியாது. ஆங்கிலத்தில் சுவாமி நித்ய ஸ்வரூபானந்தா சம்ஸ்க்ருத ஸ்லோகங்களுடன் ஆங்கில மொழிபெயர்ப்பும் தந்துள்ளார்; கல்கத்தா அத்வைத ஆஸ்ரம  வெளியீடு இது ; 1994 ஆம் ஆண்டில் எட்டாவது பதிப்பு வெளியாகியது.

***

8.திருவண்ணாமலையில் இருந்த புகழ்பெற்ற ரமண மகரிஷ க்கும் பிடித்தமானது இது; அவரே இதை மேற்கோள் காட்டிப் பேசி இருக்கிறார்.

***

9.அத்வைதம் என்றவுடன் ஆதி சங்கரர் தான் நமக்கு நினைவுக்கு வரும். உண்மைதான் ; அவருக்கும் முன்னதாகவே உபநிஷத்துக்களில் அத்வைதக் கருத்துக்கள் உள்ளன.அதையடுத்து வந்த மஹாபாரதத்தில் இது உள்ளதால் அவருக்கு மிகவும் முந்திய காலத்தில் இந்த நூல் தோன்றியது.

***

10. ஆதி சங்கரரின் விவேக சூடாமணியில் உள்ளத்தைப் போலவே கயிறு- பாம்பு, குடம்-ஆகாசம், கண்ணாடி -உலகப்  பிரதிபலிப்பு, முத்து- சிப்பி முதலிய உவமைகள் உள்ளன.

–Subham—

Tags- அஷ்டாவக்ர கீதை,  10 கேள்விகள் , ஜனகர், வந்தின், கஹோலர் , எட்டு கோணல் உடல்

Leave a comment

Leave a comment