சேர்ந்து ஒரே எண்ணம் கொண்டு உயர்வோம்! (PostNo.16,037)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,037

Date uploaded in London – 31 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 சுபாஷிதச் செல்வம்

சேர்ந்து ஒரே எண்ணம் கொண்டு உயர்வோம்! 

ச. நாகராஜன்

 விதி உதவாத நேரம்! 

சம்பதா சுஸ்திரம் மன்யோ பவதி ஸ்வல்பயாபி ய: |                   க்ருதக்ருத்யோ விதிர்மன்யே ந வர்தயதி தஸ்ய தாம் ||

எவன் ஒருவன் தனது குறைவான செல்வத்தைக் கொண்டு திருப்தி அடைகிறானோ, அவனுக்கு விதி அவனது செல்வத்தை அதிகரிக்காது, ஏனெனில் அவனே திருப்தியுடன் இருப்பதால்!

செல்வம் வரும், போகும்! 

கோபவாத: ஸ்துதிபதே யத்ஷீலேஷு சஞ்சலா: |                      சாதுவ்ருத்தானபி க்ஷூத்ரா விக்ஷிபந்த்யேவ சம்பத: ||

செல்வவளமானது சஞ்சலமானது என்பதால் கெட்டவரிடமும் பிரபுக்களிடமும் அது அவர்களைக் கைவிட்டுவிடும். ஆகவே அதைப் புகழ்வதற்கு எந்தக் காரணமும் இல்லை.

சேர்ந்து ஒரே எண்ணம் கொண்டு உயர்வோம்!

சமானி வ ஆக்ருதி: சமானா ஹ்ருதயானி வ: |                              சமானமஸ்து வோ மனோ யதா வ: சுசஹாசதி ||

நம் இருவருக்கும் ஒரே விதமான உணர்ச்சிகள் உள்ளன; நாம் ஒரே சிந்தனையைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆகவே சேர்ந்து வளமாக இருப்பதற்கு நாம் ஒரே மாதிரியாக எண்ணுவோம்.

ஒரு சகாவுக்கே பழக்க வழக்கம் நன்கு தெரியும்! 

சஹவாசி விஞ்ஞானாதி சஹவாசிவிசோஷ்டிதம் |                               பக: கோ வண்யர்ஸே ராம யேனாஹம் நிஷ்குலீக்ருத: ||

சேர்ந்து வாழும் ஒருவருக்கு சகாவின் பழக்கவழக்கம் தெரியும். ஓ, ராமா! எனது குடும்பத்தை அழித்த கொக்கை நீ புகழ்கிறாய்.

முழுவதையும் இழப்பதை விட பாதியை இழப்பதே மேல்! 

சர்வநாசே சமுத்பன்னே ஹார்தம் த்யஜதி பண்டித: ||                  அர்தேன குருதே கார்ய  சர்வநாஷோ ஹி து:சஹ: ||

எல்லாவற்றையும் இழக்க வேண்டிய நிலையில் புத்திசாலியான ஒருவன் பாதியை இழக்கவே முன்னுரிமை அளிப்பான். அவன் மீதி பாதியை வைத்து தனது இலக்குகளை அடைவான், ஏனெனில் முழுவதும் நஷ்டமாவதானது பொறுக்கவே முடியாது.

நண்பனின் உதவியே காரியத்தை முடிக்க உதவும்! 

சப்ரதிபந்தம் கார்யம் ப்ரபுரதிகந்து: சஹாயவானேவ |                  த்ருஷ்யம் தமஸி ந பஷ்யதி தீபேன வினா சச்க்ஷுரபி ||

ஒரு எஜமானனானவன் முட்டுக்கட்டைகள் அவனை குழப்பமடையச் செய்யும் போது ஒரு நண்பனின் உதவியைக் கொண்டு அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வான். கண்கள் இருந்தாலும் கூட  ஒரு விளக்கின் உதவியுடன் தான் அனைத்தையும் பார்க்க முடியும்.

**

Leave a comment

Leave a comment