Written by London Swaminathan
Post No. 16,039
Date uploaded in London – 31 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
கீத கோவிந்தம் என்பது என்ன ? இதை யார் இயற்றினார் ?
2
இதில் அடங்கியுள்ள விஷயம் என்ன ?
3
இந்த நூலில் எத்தனை பிரிவுகள்? எத்தனை பாடல்கள் உள்ளன ?
4
இதை எங்கே கேட்கலாம் ?
5
இதை ஜெயதேவர் எங்கு பாடினார் ?
6
இந்த நூலின் பிரிவுகளுக்கு அவர் கொடுத்த 12 பெயர்கள் என்ன ?
7
ஜெயதேவர் செய்த சமயப் புரட்சி என்ன ?
8.
முதல் அஷ்டபதியின் சிறப்பு என்ன ?
9
இந்த கீத கோவிந்தம் நூலை மேலை உலகில் பரப்பியவர்கள் யார் ?
10.
கல்யாண அஷ்டபதி எது ?
விடைகள்
1.கீத கோவிந்தம் சம்ஸ்க்ருத பக்திப்பாடல் நூல்; இதை ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த கவிஞர் ஜெயதேவர் 12 ஆம் நூற்றாண்டில் இயற்றினார் . பஜனைகளுக்கும் கச்சேரிகளுக்கும் நாட்டியத்துக்கும் ஏற்றபடி ராகங்கள் உள்ள நூல்; இது இதன் தனிச் சிறப்பு. ஒரிஸா மாநிலத்தில் குர்தா மாவட்டத்தில் உள்ள பிராச்சி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கெந்துளிசாசன் என்ற இடத்தில் ஜெயதேவர் பிறந்தார்.
***
2.கிருஷ்ணருக்கும் கோபியருக்கும், குறிப்பாக ராதாவுக்கும் உள்ள காதல் விஷயங்கள் இதில் அடக்கம்; இது பக்திக் காதல், அதாவது ஜீவாத்மா, பரமாத்மாவுக்காக ஏங்கும் காதல் ; சினிமா பால்களைக் கேட்டால் காம உணர்ச்சி மிகும் ; இந்தக் காதல் பாடல்களைக் கேட்டால் காம உணர்ச்சிகள் மறையும்.
***
3.இந்த நூலில் 12 சர்க்கங்களும் 24 பாடல்களும் உள்ளன . சம்ஸ்க்ருத மொழியில் 8 சரணங்கள் உள்ளன. (இதனால் அஷ்டபதி எனப் பெயர் பெற்றது)
***
4.எல்லா சம்பிரதாய பஜனைகளிலும் அஷ்டபதிகளைக் கேட்கலாம் ; ராதா கல்யாணம் என்று இரண்டு மூன்று நாட்களுக்கு ராதா கல்யாணம் நடைபெறும் இடங்களில் 24 அஷ்டபதிகளையும் கேட்கலாம் .
***
5.இதை அவர் பூரி ஜகந்நாதர் கோவிலில் பாடியதாகவும் அவருடைய மனைவி பத்மாவதி, அதற்கேற்ப அபிநயம் செய்து ஆடியதாகவும் சம்பிரதாயத் செய்திகள் உள்ளன.
***
6.இதில் 12 ஸர்க்கங்கள் உள. கண்ணனுடைய த்வாதசாக்ஷரீ என்ற மஹா மந்திரத்தை மனசில் வைத்து 12 ஸர்க்கமாக அமைத்திருக்கிறார். ஒவ்வொரு ஸர்க்கத்திற்கும் அவர் வைத்த பெயர் மிக அருமையானவை. அர்த்த புஷ்டி நிறைந்தவை. அருள் சுரப்பவை.
ஸாமோத தாமோதரன்: உரலோடு கட்டிய தாய்க்கும் ஆனந்தம் அளிப்பவர்.
அக்லேச கேசவன்: ப்ரம்மாவையும் சிவனையும் கஷ்டப்படாமல் காத்தவர்.
முக்த மதுஸூதனன்: மோஹங் கொண்ட மது எனும் அரக்கனைச் சிக்ஷித்தவர்.
ஸ்நிக்த மதுஸூதனன்: மது கைடபருக்கும் தன் அழகைக் காட்டியவன்.
ஸாகாங்க்ஷ புண்டரீகாக்ஷன்: தன்னை நாடி பக்தர் வருவார்களா என விசாலமான கண்களால் பார்ப்பவன்.
த்ருஷ்ட வைகுண்டன்: அல்லது தன்ய வைகுண்டன்: வைகுண்ட இன்பத்தை எல்லோருக்கும் அறிவிப்பவன்.
நாகர நாராயணன்: க்ராமத்தில் கோபகோபியருடன் இருந்து பழகினாலும் நகரத்தில் உள்ளவர்க்கும் ஏற்றபடி நடப்பவர்.
விலக்ஷ்ய லஷ்மீபதி: பகவத் கருணையைக் கோரும் அனைவரையும் லக்ஷ்மீயாகப் பாவித்து மணப்பவர்.
முக்த முகுந்தர்: விசேஷ அனுபவத்தைத் தரும் ஸத்குரு.
சதுர சதுர்புஜம்: ஸகல புருஷார்த்தங்களையும் அள்ளி அளிக்கும் நான்கு கைகள் உள்ளவர்.
ஸாநந்த கோவிந்தர்: இடையர்க்கும் பூமியில் தோன்றிய அனைவருக்கும் ஆனந்தமளிப்பவர்.
ஸுப்ரீத பீதாம்பர: பக்தரது பக்தியால் பரம ஸந்தோஷமடைந்து பக்தரைப் பீதாம்பரதாரியாகச் செய்பவர்.
***
7. கீத கோவிந்தம் என்ற நூலினை நமக்கு அளித்த ஜெயதேவர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புத்தரையும் ஒரு அவதாரமாகச் சேர்த்தார். அதற்கு முன்னுள்ள அவதாரங்களை மட்டுமே நாம் ஆழ்வார் பாடல்களில் காண்கிறோம் ; பாகவதம் முதலிய நூல்களில் இருபதுக்கும் மேலான அவதாரங்களை குறிப்பிடப்பட்டாலும் தசாவதாரம் என்ற பத்து அவதாரக் கணக்கு ஆழ்வார் பாசுரங்களிலேயே வந்துவிட்டன . இவர் அதில் ஒரு அவதாரத்தை நீக்கிவிட்டு புத்தரைச் சேர்த்தார்.
***
8.இதில்தான் புத்தர் அவதாரம் ஆன செய்தி வருகிறது.
முதல் அஷ்டபதி –
ராகம் மாளவம்
ப்ரளய பயோதி ஜலே த்ருத வானஸி வேதம்
விஹித வஹித்ர சரித்ரம் அகேதம்
கேசவ த்ருத மீனஸரீர (ஜயஜக தீஸஹரே )
க்ஷிதிரதி விபுலதரே தவதிஷ்டதி ப்ருஷ்டே
தரணி தரண கிண சக்ர கரிஷ்டே
கேசவ த்ருத கச்சப ரூப (ஜயஜக தீஸஹரே )
வஸதி தஸன ஸிகரே தரணீ தவ லக்னா
ஸஸினி களங்க களேவ நிமக்னா
கேசவ த்ருத ஸூகர ரூப (ஜயஜக தீஸஹரே )
தவகர கமலவரே நகமத்புத ஸ்ருங்கம்
தளித ஹிரண்ய கஸிபு தனு ப்ருங்கம்
கேசவ த்ருத நரஹரி ரூப (ஜயஜக தீஸஹரே )
சலயசி விக்ரமணே பலிமத்புத வாமன
பத நக நீரஜ நித ஜன பாவன
கேசவ த்ருத வாமன ரூப (ஜயஜக தீஸஹரே )
க்ஷத்ரிய ருதிரமயே ஜகத பகத பாபம்
ஸ்னபயஸி பயஸி ஸமித பவ தாபம்
கேசவ த்ருத ப்ருஹுபதி ரூப (ஜயஜக தீஸஹரே )
விதரஸி திக்ஷுரணே திக்பதிகமனீயம்
தஸமுக மௌளி பாலிம் ரமணீயம்
கேசவ த்ருத ரகுபதி ரூப (ஜயஜக தீஸஹரே )
வஹசி விபுஷி விஸதே வஸனம் ஜலதாபம்
ஹலஹதி பீதி மிளித யமுனாபம்
கேசவ த்ருத ஹலதர ரூப (ஜயஜக தீஸஹரே )
நிந்தஸி யக்ஞ விதே அஹஹ ஸ்ருதி ஜாதம்
ஸதய ஹ்ருதய தர்ஸித பஸுகாதம்
கேசவ த்ருத புத்த ஸரீர (ஜயஜக தீஸஹரே )
ம்லேச்ச நிவஹநிதனே கலயஸி கரவாளம்
தூமகேதுமிவ கிமபி கராளம்
கேசவ த்ருத கல்கி ஸரீர (ஜயஜக தீஸஹரே )
ஸ்ரீ ஜயதேவ கவே: இத முதிதம் உதாரம்
ஸ்ருணு ஸுகதம் ஸுபதம் பவஸாரம்
கேசவ த்ருத தஸவித ரூப (ஜயஜக தீஸஹரே )
***
9.ஆங்கில மொழியில் – வில்லியம் ஜோன்ஸ் மொழிபெயர்த்தார் ;
பிரெஞ்ச்சு மொழியில் கிறிஸ்டின்லாசன் 1800-1876
ஜெர்மன் மொழியில் கவிஞரும் அறிஞருமான பிரீட்ரிக் ரூக்கர்ட் (Friedrich Rückert) .
***
(10). 22-வது அஷ்டபதி (ராதா வதன விலோகன…) ‘கல்யாண அஷ்டபதி’ என்று அழைக்கப்படுகிறது. இது ராதா-கிருஷ்ணர் திருக்கல்யாண வைபவத்தின் போது பாடப்படும் முக்கிய பாடலாகும்.;
பாடல் தொடக்கம்: “ஸா ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன…” மற்றும் “ராதா வதன விலோகன விகஸித…” எனத் தொடங்குகிறது.
இடம்: கீத கோவிந்தத்தின் 11-வது சர்க்கத்தில் இடம்பெற்றுள்ளது.;: வைணவத் திருமணங்கள் மற்றும் ராதா கல்யாண விழாக்களில் மங்கலப் பாடலாகப் பாடப்படுகிறது.
–SUBHAM—
TAGS- அஷ்டபதி, கீத கோவிந்தம், ஜெயதேவர் , 10 கேள்விகள்