மலடிக்குத் தெரியாது பிரசவ வேதனை!(Post.16,040)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,040

Date uploaded in London – 1 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சுபாஷிதச் செல்வம்

மலடிக்குத் தெரியாது பிரசவ வேதனை!

ச.நாகராஜன் 

புல் கட்டினால் யானையையும் கட்டலாம்!

 பஹூனாமப்யசாராணாம் சமவாயோ ஹி தாருண: |

த்ருணௌம்தீயதே ரஜ்ஜுவர்த்யந்தே மத்ததந்தின: || 

பலவீனமான பல பொருள்கள் ஒன்று சேர்ந்தால் விளைவு பயங்கரமாக இருக்கும். புல்லினால் ஆன ஒரு கயிறானது மதம் பிடித்த யானையையும் கூட கட்டி அடக்கி விடும்.

வித்வானே வித்வானை அறிந்து கொள்ள முடியும்! 

வித்வானேவ ஹி ஜானாதி வித்வத்ஜனபரிஸ்ரமம் |                      நஹி வந்த்யா விஜானாதி குர்வீ ப்ரசவவேதனாம் ||

ஒரு வித்வானே இன்னொரு வித்வானின் உழைப்பைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு மலடியால் ப்ரசவ வேதனையை ஒரு போதும் அறிந்து கொள்ள முடியாது!

இலக்கணத்தைக் கற்றுக் கொள்! 

யத்யபி பஹு நாதிஷே ததாபி புத்ர பட் வ்யாகரணம் |                      ஸ்வஜன: ஸ்வ்ஜனோ மாபூத்சகலம் ஷகலம் சக்ருச்சக்ருத் ||

 ஓ, மகனே! அதிகம் படிக்கவில்லை என்றாலும் கூட இலக்கணத்தைக் கற்றுக் கொள். ஸ்வஜனம் என்பதை (சொந்த உறவினர்) ஸ்வ்ஜனா (நாய்) என்றோ சகலம் (எல்லாவற்றையும்) என்பதை ஷகலம் (கொஞ்சம்) என்றோ சக்ருத் (ஒருமுறை) என்பதை சக்ருத் (மலம்) என்றோ கூறிவிடக்கூடாது அல்லவா?

முனிவருக்கும் எதிரிகள் உண்டு! 

முனேரபி வனஸ்தஸ்ய ஸ்வானி கர்மாணி குர்வத: ||                  தத்ராபி சம்பவந்த்யேவ மித்ரோதாஸீநஷத்ரவ: ||

 காட்டில் இருந்து தனது கடமைகளைச் செய்யும் ஒரு முனிவருக்குக் கூட நண்பர்கள், சமமாக இருப்பவர்கள், எதிரிகள் இருக்கக்கூடும். 

நான்காம் காலகட்டத்தில் நான் என்ன செய்வது?

 ப்ரதமே நார்ஜிதா வித்யா த்விதீயே நார்ஜிதம் தனம் |                    த்ருதீயே ந தபஸ்தப்தம் சதுர்தே கிம் கரிஷ்யஸி ||

 முதலாம் ஆஸ்ரமத்தில் (காலகட்டத்தில்) கல்வியைக் கற்கவில்லை. இரண்டாவது ஆஸ்ரமத்தில் பணத்தை சம்பாதிக்கவில்லை. மூன்றாம் ஆஸ்ரமத்தில் தவம் புரியவில்லை.  நான்காவது ஆஸ்ரமத்தில் நான் என்ன செய்வது?

(அந்தந்த காலகட்டங்களில் உரியதைச் செய்வாயாக என்பதே இதன் உள்ளர்த்தம்.)

**

Leave a comment

Leave a comment